Jump to content

துருக்கி ராணுவத்தின் பிடியில்


Recommended Posts

துருக்கி மக்களிடம் ஈழ மக்கள் பாடம் கற்க வேண்டும்!

Link to comment
Share on other sites

துருக்கி ராணுவ புரட்சியை முன்னின்று நடத்தியது யார்?

 
 
turkey1_2935841f.jpg
 

அமெரிக்காவில் வசிக்கும் முஸ்லிம் மதத் தலைவர் பெதுல்லா குலன்தான் துருக்கி ராணுவ புரட்சிக்கு காரணம் என்று அதிபர் எர்டோகன் குற்றம் சாட்டியுள்ளார்.

துருக்கியைச் சேர்ந்த பெதுல்லா அமெரிக்காவின் பெனிஸ்வேனியா மாகாணம் போகோனோ நகரில் வசிக்கி றார். பெதுல்லாவும் அதிபர் எர்டோகனும் ஒரு காலத்தில் நண்பர்களாக இருந்தனர். எர்டோ கனின் சர்வாதிகார போக்கால் 1999-ல் துருக்கியில் இருந்து பெதுல்லா வெளியேறினார்.

துருக்கி மட்டுமன்றி உலகம் முழுவதும் பெதுல்லாவுக்கு லட்சக்கணக்கான ஆதரவாளர் கள் உள்ளனர். கடந்த 2015-ம் ஆண்டில் பெதுல்லாவுக்கு நெருக்கமான 2 தொலைக்காட்சி நிறுவனங்கள், 22 தொழில் நிறுவ னங்களை துருக்கி அரசு கையகப்படுத்தியது. மேலும் துருக்கி ராணுவத்தில் பெதுல்லா வின் கருத்துகளால் ஈர்க்கப்பட்ட வீரர்கள் ஏராளம் உள்ளனர். அவர்கள் மீதும் துருக்கி அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

அந்த வகையில் அண்மையில் ராணுவ கர்னல் முகரம் கோஸ் என்பவர் பணியில் இருந்து நீக்கப்பட்டார். அவரது தலைமையில்தான் துருக்கி ராணுவ புரட்சி நடைபெற்றுள்ளது. இருதரப்பு மோதலின்போது அவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இதுதொடர்பாக துருக்கி அதிபர் எர்டோகன், இஸ்தான்புல் நகரில் நிருபர்களிடம் பேசியபோது, ராணுவ புரட்சிக்கு பெதுல்லாவே காரணம், அமெரிக்காவில் இருந்து துருக்கியை யாரும் ஆட்டிப் படைக்க முடியாது என்று பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.

துருக்கி ராணுவ மூத்த அதிகாரிகள் நிருபர்களிடம் பேசியபோது, அமெரிக்காவில் வசிக்கும் பெதுல்லா குலனை துருக்கிக்கு திருப்பி அனுப்ப வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

இதுகுறித்து அமெரிக்க அரசு வட்டாரங்கள் கூறியபோது, பெதுல்லா குலன் விவகாரத்தில் துருக்கி அரசிடம் இருந்து இதுவரை அதிகாரப்பூர்வமாக எவ்வித தகவல் பரிமாற்றமும் இல்லை என்று தெரிவித்தன.

அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படையில் துருக்கியும் உறுப்பினராக உள்ளது. பெதுல்லா குலன் விவகாரத்தால் இருநாடுகளுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் எழுந்துள்ளதாக அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.

8 பேர் கிரிஸில் தஞ்சம்

புரட்சிப் படையைச் சேர்ந்த 8 மூத்த தளபதிகள் ஹெலிகாப்டர் மூலம் கிரீஸ் நாட்டின் அலெக்சாண்டோபோலிஸ் நகரில் நேற்று தரையிறங்கினர். கிரீஸ் போலீஸாரால் கைது செய்யப்பட்ட அவர்கள் 8 பேரும் கிரீஸ் நாட்டில் அரசியல் தஞ்சம் கோரியுள்ளனர். 8 பேரையும் தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று துருக்கி அரசு வலியுறுத்தியுள்ளது.

http://tamil.thehindu.com/world/துருக்கி-ராணுவ-புரட்சியை-முன்னின்று-நடத்தியது-யார்/article8862091.ece

Link to comment
Share on other sites

அதிபருக்கு ஆதரவாக நகர தெருக்களில் குழுமியிருக்கும் துருக்கிய ஆதரவாளர்கள்

 

ஆயிரக்கணக்கான துருக்கியர் பாடல்களை பாடி கொண்டும், தேசியக் கொடியை அசைத்து கொண்டும் அதிபர் ரசீப் தையிப் எர்துவானுக்கு ஆதரவாக இஸ்தான்புல் மற்றும் அங்காரா நகரத் தெருக்களில் குழுமியிருக்கின்றனர்.

160717061806_erdogan_640x360_epa.jpg
 

இஸ்தான்புல்லில் உள்ள முக்கிய சதுக்கங்களில் நிறைந்து காணப்படும் அவர்கள், தங்களுடைய மண்ணையும் ஜனநாயகத்தையும் படையினர் எடுத்துவிட முடியாது என்று கூறிக்கொண்டிருக்கின்றனர்.

இரவு முழுவதும் முக்கிய சதுக்கங்களில் குழுமியிருக்கும்படி துருக்கி அரசு அதன் ஆதரவாளர்களிடம் வலியுறுத்தி இருக்கிறது.

சனிக்கிழமை மதியத்திற்கு பிறகு பல சர்வதேச விமான நிறுவனங்கள் இடைநிறுத்தியிருந்த தங்களின் விமானச் சேவையை இஸ்தான்புல் நகருக்கு தொடங்கின.

http://www.bbc.com/tamil/global/2016/07/160717_turkey_streets

Link to comment
Share on other sites

மக்களின் புரட்சிக்கு அடிமையாகிய இராணுவ புரட்சி

துருக்கியில் நேற்று முன்தினம் (வெள்ளிக்கிழமை) இராணுவ புரட்சிக்கான முயற்சியாக இராணுவத்தில் ஒரு பிரிவினர் முயற்சியில் ஈடுபட்டனர்.

குறித்த புரட்சியினை மக்களின் சக்தியினை கொண்டு அரசாங்கம் வீழ்த்தி மக்கள் ஆட்சியினை மீண்டும் நிலையாற்றியது.

துருக்கி தொடர்ந்து 4 முறை இதுபோன்ற இராணுவ புரட்சிகள் ஏற்பட்டுள்ளது.

மே 27, 1960

துருக்கி வரலாற்றில் முதன் முறையாக கடந்த 1960 ஆம் ஆண்டில் ஜனாதிபதி செலல் பயர் மற்றும் பிரதமரான அட்னான் மென்டெரெஸ் ஆகிய இருவருக்கும் இடையில் அரசியல் முரன்பாடுகள் ஏற்பட்டன.

maxresdefault__3_.jpg

இதனை தொடர்ந்து மே 27 ஆம் திகதி 38 இராணுவ வீரர்கள் பிரதமரை பதவியில் இருந்து வீழ்த்தி, அரசியல் குற்றங்கள் புரிந்ததாக கூறி பிரதமருக்கு மரண தண்டனையும் விதிக்கப்பட்டது.

adnan-menderes.jpg

இதன்போது இராணுவ தளபதியாக பணியாற்றிய கெமால் குருசெல் ஆட்சியை கைப்பற்றினார்.

download__2_.jpg

மார்ச் 12, 1971

பின்னர், 1971 ஆம் ஆண்டு பிரதமரான சுலைமான் டேமிரியல் என்பவரின் ஆட்சியில் அந்நாட்டின் பணவீக்கம் 80 சதவிகிதத்தை நெருங்கியது. இதனால் அதிருப்தி அடைந்த இராணுவ தளபதி பதவியிலிருந்து விலகுமாறு பிரதமருக்கு ஆணை பிறப்பித்துள்ளார்.

suleyman-demirel-oldu-mu_1639883_720_400

ஆணை கிடைக்கப்பெற்ற சில மணி நேரங்களில் பிரதமர் தனது பதவியில் இருந்து விலகினார். இதனை தொடர்ந்து துருக்கி வலது சாரி கட்சியை சேர்ந்த அரசாங்கம் தற்காலிகமாக ஆட்சியை அமைத்தது.

செப்டம்பர் 12, 1980

இரண்டு இராணுவ புரட்சிகளை தொடர்ந்து மூன்றாவது இராணுவ புரட்சி 1980 ஆம் ஆண்டு வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்ந்தமையால் ஆயிரக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டனர்.

இச்சம்பவங்களை தொடர்ந்து ‘அரசாங்கத்தை கலைத்து விட்டு இராணுவச் சட்டத்தை அமுல்படுத்துவதாக’ அந்நாட்டு இராணுவ தளபதி தொலைக்காட்சியில் அறிவித்தார்.

இதனை தொடர்ந்து கப்பற்படை தளபதியான புலென்ட் யுலுசு என்பவர் பிரதமராக பதவியேற்றுக்கொண்டார். கேனான் ஏவ்ரின் என்ற இராணுவ தளபதி ஜனாதிபதியாக பதவி ஏற்றார்.

பெப்ரவரி 28, 1997

பின்னர், 1996 ஆம் ஆண்டு இஸ்லாமிய கொள்கைகளை உடைய இஸ்லாமிய பொதுநலக் கட்சி ஆட்சியை பிடித்தது. ஆனால், இந்த கட்சியின் கொள்கைகளுக்கும் இராணுவத்தின் கொள்கைகளுக்கும் முரண்பாடுகள் ஏற்பட்டன.

இதனை தொடர்ந்து இராணுவம் தானாக முன்வந்து பல்கலைக்கழங்களில் மாணவிகள் முகத்திரை அணிவதற்கு தடை உள்ளிட்ட பல மாற்றங்களை கொண்டு வந்தது.

இறுதியாக, இராணுவத்தின் தலையீட்டால் அதிருப்தி அடைந்த பிரதமரான நெக்மேட்டின் எர்பகன் என்பவர் பதவியை இராஜினாமா செய்ததுடன் அடுத்த 5 ஆண்டுகளுக்கு அரசியலில் ஈடுப்பட தடையும் விதிக்கப்பட்டது.

ஜூலை 15, 2016

தற்போது 5 ஆவது முறையாக அரசை கைப்பற்ற துருக்கி இராணுவம் நேற்று முன்தினம்  நள்ளிரவில் முயற்சியை மேற்கொண்டது. 

அந்த நாட்டின் மிகப்பெரிய நகரமான இஸ்தான்புல் நகரத்தில் உள்ள பாஸ்போரஸ் ஜலசந்தி மீதுள்ள 2 பாலங்களில் யுத்த தாங்கிகளை நிறுத்தி, ஆட்சி கவிழ்ப்பு முயற்சியினை இரவு 7.20 மணிக்கு தொடங்கினர். இதனால் போக்குவரத்து திருப்பி விடப்பட்டது.

தலைநகர் அங்காராவிலும், இஸ்தான்புல் நகரிலும் அடுத்தடுத்து துப்பாக்கிச்சூடுகள், குண்டு வெடிப்புகள் நடந்தன. வீதிகளில் இராணுவத்தினர் அணிவகுத்தனர். அங்காரா நகரின் மீது இராணுவ விமானங்கள் தாழ்வாக பறந்தன.

3652986E00000578-0-Witnesses_photographe

அதைத் தொடர்ந்து அங்கு இராணுவ புரட்சிக்கான முயற்சி நடைபெறுவதாக பிரதமர் பினாலி யில்டிரிம் அறிவித்தார். இராணுவத்தில் உள்ள ஒரு பிரிவினர் புரட்சி முயற்சியில் ஈடுபட்டிருப்பதாகவும், அரசு படைகள் பதிலடி தருவதற்கு அழைக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

36532A6B00000578-3692693-image-a-74_1468

குறித்த இராணுவ புரட்சி தொடங்கிய ஒரு மணி நேரத்தில் இராணுவ பிரிவு ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதில், ‘நாட்டை அமைதிக்கான அமைப்பு வழிநடத்துகிறது. ஊரடங்கும், இராணுவ சட்டமும் அமல்படுத்தப்படும்; அரசியல் சட்ட ஒழுங்கையும், ஜனநாயகத்தையும், மனித உரிமைகளையும், சுதந்திரத்தையும் நிலை நாட்டுவதற்காகத்தான் இந்த புரட்சி’ என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இராணுவ புரட்சி முயற்சிக்கு மத்தியில், துருக்கியின் ஜனாதிபதி தய்யீப் எர்டோகன் பாதுகாப்பாக இருப்பதாக தகவல் வெளியானது. அதுமட்டுமின்றி புரட்சி நடைபெற்றிருப்பதாக இராணுவ தரப்பில் வெளியான தகவல், இராணுவ தலைமையின் அங்கீகாரத்தை பெறாத ஒன்று என கூறப்பட்டது. பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டன.

3658391B00000578-0-image-m-14_1468716660

இராணுவ புரட்சிக்கான முயற்சி தீவிரமாக நடைபெற்றுக்கொண்டிருந்த வேளையில், அந்த நாட்டின் ஜனாதிபதி எர்டோகன், மார்மாரிஸ் என்ற சுற்றுலா தலத்தில் ஓய்வு எடுத்துக்கொண்டிருந்தார். புரட்சி முயற்சி பற்றி தகவல் கிடைத்ததும், அவர் தனது கையடக்கத்தொலைபேசி வழியாக நாட்டு மக்களுக்கு செய்தி விடுத்தார்.

 

 

அது தொலைகாட்சியில் ஒளிபரப்பானது. அதில் அவர், இராணுவ புரட்சியை எதிர்த்து மக்கள் கிளர்ந்தெழ வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். பின்னர் அவர் அங்கிருந்து இஸ்தான்புல் நகருக்கு புறப்பட்டார். அவரது அழைப்பை ஏற்று நாட்டு மக்கள் களத்தில் இறங்கி கிளர்ச்சியாளர்களுடன் சண்டையிட்டனர். இதனால் பல இடங்களில் இராணுவத்தினர் கிளர்ச்சியை கை விட்டு சரணடைந்தனர்.

அங்காராவில் உள்ள ஜனாதிபதி மாளிகை, பாராளுமன்ற கட்டிடம் கடுமையாக தாக்கப்பட்டன. பாராளுமன்ற வளாகத்தில் குண்டுவெடிப்பும் நடந்தது. அமைச்சர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு சென்றனர்.

36588DCF00000578-0-image-a-15_1468707181

பாராளுமன்றம் பெரும் சேதம் அடைந்தது. இஸ்தான்புல் பொலிஸ் தலைமையகத்தின் வெளியே துப்பாக்கிச்சண்டை நடந்தது. விமான நிலையத்தின் வெளியே இராணுவ யுத்த தாங்கிகள் நிறுத்தப்பட்டிருந்தன.

இஸ்தான்புல் நகரின் மையத்தில் உள்ள தாக்சிம் சதுக்கத்தில் கடுமையான துப்பாக்கிச்சண்டையும், குண்டுவெடிப்புகளும் தொடர்ந்து நடைபெற்றன. 

நள்ளிரவு 12.45 மணிக்கு இராணுவ புரட்சிக்கு முயற்சித்த பிரிவில் ஒரு குழு, பொலிஸ் படைகள் முன் சரண் அடைந்தது.

3658E07E00000578-3693828-image-m-3_14687

அதிகாலை ஒரு மணிக்கு இஸ்தான்புல் வந்து சேர்ந்த ஜனாதிபதி எர்டோகன், விமான நிலையத்தில் ஆதரவாளர்கள் மத்தியில் பேசினார். அப்போது அவர், “நடந்து கொண்டிருப்பது தேசத்துரோகமும், கிளர்ச்சியும் ஆகும். அதை நடத்துகிறவர்கள், அதற்கான கடும் விளைவை சந்திப்பார்கள்” என எச்சரித்தார்.

36531CD300000578-3692693-image-a-67_1468

கோல்கக் என்ற கடற்படை தளத்தில் ஒரு போர்க்கப்பலை அரசு எதிர்ப்பு கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றி விட்டதாக கிரீஸ் இராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன. இரவில் நடந்த மோதல்களில் மட்டுமே 104 கிளர்ச்சி படையினர் கொல்லப்பட்டனர் என தகவல்கள் கூறுகின்றன.

365758E500000578-3692693-image-a-6_14686

நேற்று காலையிலும் சிறிது நேரம் பல இடங்களில் தொடர்ந்து துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்டுக்கொண்டே இருந்தது.

இறுதியில் இராணுவ புரட்சி முயற்சியை மக்கள் முறியடித்து விட்டதாகவும், ஜனாதிபதியும், அரசாங்கமும் நாட்டின் பொறுப்பில் உள்ளதாகவும் வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியது.

3655493000000578-3693268-image-a-108_146

“நிலைமை முழுக்கட்டுப்பாட்டுக்குள் வந்து விட்டது, அரசு படைத்தளபதிகள் மீண்டும் பொறுப்புக்கு வந்து விட்டனர்” என்று காலை 10.20 மணிக்கு பிரதமர் யில்டிரிம் அறிவித்தார்.

3658725100000578-0-image-a-21_1468707442

“இராணுவ புரட்சி முயற்சியினால் நடந்த மோதல்களில் 161 பேர் கொல்லப்பட்டனர், 1,440 பேர் காயம் அடைந்தனர். புரட்சி முயற்சியில் ஈடுபட்ட  இராணுவ அதிகாரிகள், வீரர்கள் என 3000 பேர் கைது செய்யப்பட்டனர்” என பிரதமர் யில்டிரிம் அறிவித்தார்.

இருப்பினும் 265 பேர் பலியாகி உள்ளதாக கடைசியாக கிடைத்த தகவல்கள் கூறுகின்றன.

365758E500000578-3692693-image-a-6_14686

இந்த புரட்சி முயற்சிக்கு அமெரிக்காவில் பென்சில் வேனியா மாகாணத்தில் தங்கியுள்ள துருக்கி மத குரு பெதுல்லா குலன் என்பவர் தான் காரணம், அவர் பல்லாண்டு காலமாக ஆட்சி கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்டுள்ளார் என பிரதமர் யில்டிரிம் குற்றம் சாட்டினார்.

ஆனால் இதில் சதி எதுவும் இல்லை என மறுப்பும் வந்துள்ளது.

“துருக்கி மக்கள் அமைதி காக்க வேண்டும்” என்று அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவும், உலகத்தலைவர்களும் கேட்டுக்கொண்டுள்ளனர். ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு மக்கள் ஆதரவுக்கரம் நீட்ட வேண்டும் என்றும் அவர்கள் வேண்டிக்கொண்டுள்ளனர். 

3657F75F00000578-0-image-a-1_14687048787

3657EA9B00000578-0-image-a-3_14687049499

3655A2B100000578-0-Rebel_leader_General_

3658B24900000578-0-image-a-13_1468707083

3657E09600000578-3693268-image-a-17_1468

3657E3EE00000578-3693268-image-a-22_1468

http://www.virakesari.lk/article/9079

Link to comment
Share on other sites

துருக்கி ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி: தடுப்புக் காவலில் 6 ஆயிரம் பேர்

160717095523_turkey_arrest_624x351_afp.j

 

துருக்கியில் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் படையினரை சுற்றி வளைக்கும் முயற்சியில் பாதுகாப்பு படையினர் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர்.

இன்று காலை ராணுவ தளங்கள் சோதனையிடப்பட்டுள்ளன.

துருக்கி அரசை எதிர்த்து செயல்பட்டதற்காக மேலும் பல நீதிபதிகள் மற்றும் அரசு வழக்குரைஞர்களை தடுப்பு காவலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

160716185047_surrendered_turkish_soldier

 

துருக்கி முழுவதும் கட்டுபாட்டிற்குள் வந்துவிட்டதாகவும், ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்ட மேலும் சிலர் சரணடைய வேண்டி உள்ளதாகவும் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளர்.

இதுவரை சுமார் 6 ஆயிரம் பேர் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளதாக துருக்கியின் நீதித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவை சார்ந்த துருக்கி மதகுரு ஃபேதுல்லா ஹியூலெனை இவர்கள் பின்பற்றினார்கள் என குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

160717090503_cn_fethullah_gulen_640x360_  ஃபேதுல்லா ஹியூலென்

துருக்கி ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சிக்கு ஃபேதுல்லா ஹியூலென் திட்டமிட்டார் என அரசு குற்றஞ்சாட்டுகிறது.

ஆனால், ஹியூலென் இதை மறுத்துள்ளார்.

ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்டோர் மீதான விசாரணையில் துருக்கி அரசானது அதன் சட்ட திட்டங்களுக்கு மதிப்பளித்து செயல்பட வேண்டும் என்று துருக்கி அதிகாரிகளை அமெரிக்கா வலியுறுத்தி உள்ளது.

http://www.bbc.com/tamil/global/2016/07/160717_turkey_coup_6000_arrest?ocid=socialflow_facebook

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
துருக்கியில் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் படையினரை சுற்றி வளைக்கும் முயற்சியில் பாதுகாப்பு படையினர் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர். இன்று காலை ராணுவ தளங்கள் சோதனையிடப்பட்டுள்ளன. துருக்கி அரசை எதிர்த்து செயல்பட்டதற்காக மேலும் பல நீதிபதிகள் மற்றும் அரசு வழக்குரைஞர்களை தடுப்பு காவலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.துருக்கி முழுவதும் கட்டுபாட்டிற்குள் வந்துவிட்டதாகவும், ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்ட மேலும் சிலர் சரணடைய வேண்டி உள்ளதாகவும் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளர். இதுவரை சுமார் 6 ஆயிரம் பேர் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளதாக துருக்கியின் நீதித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

துருக்கியில் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் படையினரை சுற்றி வளைக்கும் முயற்சியில் பாதுகாப்பு படையினர் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர். இன்று காலை ராணுவ தளங்கள் சோதனையிடப்பட்டுள்ளன. துருக்கி அரசை எதிர்த்து செயல்பட்டதற்காக மேலும் பல நீதிபதிகள் மற்றும் அரசு வழக்குரைஞர்களை தடுப்பு காவலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.துருக்கி முழுவதும் கட்டுபாட்டிற்குள் வந்துவிட்டதாகவும், ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்ட மேலும் சிலர் சரணடைய வேண்டி உள்ளதாகவும் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளர். இதுவரை சுமார் 6 ஆயிரம் பேர் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளதாக துருக்கியின் நீதித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

   

அமெரிக்காவை சார்ந்த துருக்கி மதகுரு ஃபேதுல்லா ஹியூலெனை இவர்கள் பின்பற்றினார்கள் என குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.துருக்கி ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சிக்கு ஃபேதுல்லா ஹியூலென் திட்டமிட்டார் என அரசு குற்றஞ்சாட்டுகிறது. ஆனால், ஹியூலென் இதை மறுத்துள்ளார்.ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்டோர் மீதான விசாரணையில் துருக்கி அரசானது அதன் சட்ட திட்டங்களுக்கு மதிப்பளித்து செயல்பட வேண்டும் என்று துருக்கி அதிகாரிகளை அமெரிக்கா வலியுறுத்தி உள்ளது.

http://www.seithy.com/breifNews.php?newsID=161712&category=WorldNews&language=tamil

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.