Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ்த்தேசியம் தடுமாறக்கூடாது: -பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்த்தேசியம் தடம்மாறினால் பரவாயில்லை. ஆனால் தமிழத்தேசியம் தடுமாறக்கூடாது என்று புளொட் தலைவரும் யாழ் மாவட்ட பாராளுமன்’ற உறுப்பினருமான த.சித்தார்த்தன் அவர்கள் தெரிவித்துள்ளார்.  மன்னார் பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் மன்னார் ஞானோதய மண்டபத்தில் நடைபெற்ற “தடம் மாறுகிறதா தமிழ்த்தேசியம்” எனும் தொனிப்பொருளில் கருத்தாய்வுநிலை, கருத்துப் பகிர்வுறவாடல் நிகழ்வில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.   தமிழ்த்தேசியம் தடம்மாறினால் பரவாயில்லை. ஆனால் தமிழ்த்தேசியம் தடுமாறக்கூடாது. ஏனென்றால், ஆரம்பத்தில் அகிம்சை என்ற தடத்தில் சென்றோம். பின்னர் ஆயுதப்போராட்டம் என்ற நிலையில் சென்றோம். தற்போது ஜனநாயகம், அகிம்சை என்ற தடத்திற்கு வந்திருக்கின்றோம்.

தமிழ்த்தேசியம் தடம்மாறினால் பரவாயில்லை. ஆனால் தமிழத்தேசியம் தடுமாறக்கூடாது என்று புளொட் தலைவரும் யாழ் மாவட்ட பாராளுமன்’ற உறுப்பினருமான த.சித்தார்த்தன் அவர்கள் தெரிவித்துள்ளார். மன்னார் பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் மன்னார் ஞானோதய மண்டபத்தில் நடைபெற்ற “தடம் மாறுகிறதா தமிழ்த்தேசியம்” எனும் தொனிப்பொருளில் கருத்தாய்வுநிலை, கருத்துப் பகிர்வுறவாடல் நிகழ்வில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். தமிழ்த்தேசியம் தடம்மாறினால் பரவாயில்லை. ஆனால் தமிழ்த்தேசியம் தடுமாறக்கூடாது. ஏனென்றால், ஆரம்பத்தில் அகிம்சை என்ற தடத்தில் சென்றோம். பின்னர் ஆயுதப்போராட்டம் என்ற நிலையில் சென்றோம். தற்போது ஜனநாயகம், அகிம்சை என்ற தடத்திற்கு வந்திருக்கின்றோம்.

   

ஆனால் நிச்சயமாக தமிழ்த்தேசியம் என்பது அறுபது வருடங்களாக தாய் குழந்தைக்கு பாலூட்டுவது போன்று எம் அனைவருக்கும் ஊட்டி வளர்க்கப்பட்ட விடயம். அது மாத்திரமன்றி தேசிய உணர்வு ஒவ்வொரு மனிதனுக்கும் தானாக உருவாகின்ற உணர்வாகும். ஆகவே அது தடுமாறுவதற்கு மக்கள் விடமாட்டார்கள். நாமும் நிச்சயமாக தடுமாற மாட்டோம்.

போராட்டங்கள் தடம் மாறுவதை இங்கு மட்டுமல்ல பல இடங்களிலும் பார்த்திருக்கின்றேன். பலஸ்தீனம், தென்னாபிரிக்கா உள்ளிட விடுதலைப் போராட்டங்களில் அவர்கள் வேறுவேறு தளங்களில் சென்றுதான் இறுதி வெற்றியைக் கண்டிருக்கின்றார்கள். ஆகவே, தமிழ்த்தேசியம் தடம் மாறுகிறதா என்பதை விடமும் தடுமாறுகிறதா என்பதே பொருத்தமானதாகவிருக்கும்.

நீங்கள் விட்ட பிழைககள் என்னவென இங்கு பலர் கேட்டிருக்கின்றார்கள். போராட்ட காலங்களில் தவறுகள் நடைபெறவில்லை எனக் கூறமுடியாது. அந்த தவறுகள் நடக்கின்றபோது தவறுவிடுகின்றோம் என கருதவில்லை. சில தருணங்களில் பாரிய தவறுகள் இழைக்கப்பட்டிருக்கின்றன. இயக்கங்களுக்குள் பிரச்சினைகள் காணப்பட்டிருக்கின்றன. மறக்க முடியாத பிரச்சினைகள் இருக்கின்றன. மறக்க முடியாது விட்டாலும் மன்னிக்கப்ப்டடன. அந்த வகையில் ஒற்றுமையாக செயற்படுவதன் மூலமாகத்தான் எமது இலக்கை நோக்கி பயணிக்க முடியும்.

நாம் ஆரம்பம் முதலே சர்வதேசத்தை பிழையாக கணித்திருக்கின்றோம். இந்தியா தமது நலன்கள் எல்லாவற்றையும் விடுத்து எமது நலனுக்காக இங்கு வரவேண்டுமென எதிர்பார்ப்பு இருந்தது. பங்களாதேஷை உதாரணமாகக் கொண்டு இந்தியா மீதான அவ்வாறானதொரு அபிப்பிராயம் இருந்தது. தற்போதைய அனுபவங்களுக்கு பின்னர் இந்தியா அல்ல எந்த நாடாகவிருந்தாலும் அவர்கள் முதலாவதாக தமது நலன்களையே முன்வைப்பார்கள். அந்த நலன்களுக்குள்ளே எம்மை உள்வாங்க முடியுமா எனப் பார்ப்பார்கள். அவ்வாறில்லையேல் எம்மைவிட்டுச் செல்வார்கள்.

தவறுகள் காணப்படுகின்றன. அவை திருத்தப்பட வேண்டும். நாம் சரியான முறையில் ஒற்றுமையாக பயணிப்போமாகவிருந்தால் எமது பாதை இலக்கை நோக்கி சென்றடையும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

http://www.seithy.com/breifNews.php?newsID=161865&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

காலம் கடந்த ஞானம்.

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே சித்தார்த்தன் கூறிய விடயம் ஒன்றை நாம் கூர்ந்து கவனிக்க வேண்டும். ஆனால், நாம் அதனை கவனிப்பவர்களாகவோ அல்லது கேட்பவர்களாகவோ இருக்க மாட்டோம் என்பதில் உறுதியாக இருப்பவர்கள்.

சர்வதேச சமூகம் தனது நலன் சார்ந்தே எதனையும் முன் எடுக்குமே தவிர முழுமையாக எமது நலன் சார்ந்து எதனையும் எடுக்காது.

இந்தியா இன்று அல்ல இனி எப்போதுமே எமக்காக உதவ முன்வராது. அது தனது நலன் சார்ந்தே எதிர்காலத்தில் முடிவுகளை எடுக்கும்.

ஆகவே, நாம்தான் சர்வதேச அரசியல் நகர்வுகளுக்கு ஏற்ப எமது உரிமைகளை வென்று எடுக்க வேண்டும்.

துரதிர்ஷ்டவசமாக விடுதலைப் புலிகள் விட்ட தவறினையே தற்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் புலத்தில் உள்ள தமிழ் அமைப்புக்களும் விட்டுக் கொண்டு இருக்கின்றன.

2008 ஆம் ஆண்டு இறுதிக்கால கட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் அவர்கள் அமெரிக்காவில் உள்ள சிலரையும் மற்றும் பிற நாடுகளில் உள்ள தமிழ் அமைப்புக்களின் தலைவர்களை ஒன்று இணைத்து காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியாவையும் தெற்கு ஆசிய கொள்கைகளின் மையத்தில் உள்ளவர்களையும் சந்திக்கும் முயற்சியினை மேற்கொண்டு இருந்தார். அவர் காலமானதை அடுத்து அந்த முயற்சியினை பின்னர் விடுதலைப் புலிகளின் சர்வதேச விவகாரங்களுக்கான பொறுப்பாளராக இருந்த செல்வராசா பத்மநாதன் (கேபி) நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் உருத்திரகுமாரன் அவர்கள் ஊடாக முயற்சியினை மேற்கொண்டு வரும் வேளையில் அவரின் கைதோடு பின்னர் எந்த முன் எடுப்பும் நடைபெறவில்லை.

தற்போதும் எதுவும் கெட்டு விடவில்லை. தொடர்ந்து இந்தியாவினை நோக்கி எமது முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

இதனைத்தான் இறுதிக் காலத்தில் விடுதலைப் புலிகளின் முக்கிய பிரமுகர் க.வே.பாலகுமாரன், அரசறிவியலாளர் மு.திருநாவுக்கரசு உள்ளிட்டவர்கள் கூறி வந்தனர்.

எம்மவர்களை இனி தேவையே இல்லை என இந்தியா தன்னோடு வைத்து இருந்த வரதராஜப்பெருமாள், பரந்தன் ராஜன் ஆகியோரைக் கூட கை கழுவி விட்டு உள்ளது. தற்போது அவர்களால் கூட இந்திய மத்திய அரசினை கூட தொடர்பு கொள்வது கடினமாக இருக்கின்றது என அவர்களோடு நெருங்கியவர்கள் கூறி வருகின்றனர்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.