Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ். பல்கலைக்கழக மோதல் : சபையில் சம்பந்தன் கோரிக்கை

Featured Replies

யாழ். பல்கலைக்கழக மோதல் : சபையில் சம்பந்தன் கோரிக்கை

 

 (ப.பன்னீர்செல்வம், ஆர்.ராம்)jaffna-university-clash-sri-lanka-parlia

யாழ். பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற தமிழ் சிங்கள மாணவர்களுக்கிடையிலான மோதல் சம்பவம் போன்று ஏனைய பல்கலைக்கழகங்களிலும் சில சம்பவங்கள் இடம்பெறுகின்றன. அவற்றின் பின்னணியில் அரசியல் நோக்கம் இருக்குமாயின் அவற்றுக்கு தீர்வு வழங்குவது தொடர்பில் அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித்தலைவருமான இரா.சம்பந்தன் சபையில் கோரிக்கை விடுத்தார். 

யாழ். பல்கலைக்கழகத்தில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற வரவேற்பு நிகழ்வில் மாணவர்களுக்கிடையில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பாக  பாராளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை கருத்து  வெளியிடுகையிலேயே  அவர்  மேற்கண்ட கோரிக்கையை  விடுத்தார்.

அவர் தொடர்ந்தும் கருத்து வெளியிடுகையில், 

பல்கலைக்கழகத்திற்கான புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வில் புரிந்துணர்வின்மை காரணமாக ஏற்பட்ட மோதலானது துரதிஸ்டவசமான சம்பவமொன்றாகும். அவ்வாறான புரிந்துணர்வின்மைகளை தவிர்த்துக் கொள்வதில் அனைவரும் உறுதியுடன் செயற்பட வேண்டும். எவ்வாறிருப்பினும், அந்த நிலைமையானது மிகவும் துரிதமாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு விட்டது. அதற்காக சகல மாணவர்களும் பல்கலைக்கழக அதிகாரிகளும் ஒத்துழைப்பு வழங்கியிருந்தனர். 

இத்தகைய மோதல் சம்பவங்கள் தொடர்வதற்கு இடமளிக்கக்கூடாது. அது எமது கடமையாகும். பல்கலைக்கழகம் மீண்டும் விரைந்து திறக்கப்பட்டு கல்வி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அதற்கான நடவடிக்கைகள் ஏற்கனவே எடுக்கப்பட்டு வருகின்றன. பல்கலைக்கழகத்தின் சில பிரிவுகள் ஏற்கனவே திறக்கப்பட்டுள்ளன.  சம்பவம் பற்றிய விசாரணைகள்; மேற்கொள்ளப்படுவதுடன், விசாரரணைகள் நிறைவடைந்ததும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும். 

இதுபோன்ற  விடயங்களை தவிர்த்துக் கொள்வதில் நாம் கவனத்துடன் நடந்து கொள்ள வேண்டும். ஏனைய பல்கலைக்கழகங்களிலும் இதுபோன்ற சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. இதில் எதையும் நான் குறிப்பிட்டு கூற விரும்பவில்லை. எனினும். அந்த சம்பவங்கள் பற்றியும் கவனத்தில் கொள்ள வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும். 

http://www.virakesari.lk/article/9259

 

 

 

 

யாழ்.பல்கலைக்கழக மோதல் : இனவாதத்தை தூண்ட ஒருவர் மாத்திரம் முயற்சித்தார் : சபையில் பிரதமர்

 

(ப.பன்னீர்சjaffna-university-clash-ranil.jpg

யாழ். பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தை அமைதி நிலைமைக்கு கொண்டுவர அனைத்து தரப்பினரும் ஆதரவு வழங்கினர். ஆனால் ஒருவர் மாத்திரம் இந்த சம்பவத்தை வைத்து இனவாதத்தை தூண்டுவதற்கு முயற்சித்தார் என  பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரவித்தார்.

யாழ். பல்கலைகக்கழத்தில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் இடம்பெறும் விசாரணைகளின் அறிக்கைகள் கிடைத்தன் பின்னரே அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி பேச முடியும் எனவும் குறிப்பிட்டார். 

பாராளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை யாழ்.பல்கலைக்கழக மோதல் சம்பவம் தொடர்பாக எதிர்க்கட்சி பிரதம கொறடாவும் ஜே.வி.பி.யின் தலைவருமான அநுரகுமார திஸாநயக்க எம்.பி எழுப்பிய கேள்வியின் பின்னர் அவ்விடயம் தொடர்பாக கருத்து வெளியிடுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

 விசாரணை அறிக்கை

மோதல் பிரச்சனை தொடர்பாக  நடைபெறும் விசாரணைகளின் அறிக்கைகள் கிடைத்ததும் அது தொடர்பான அடுத்த நடவடிக்கை பற்றி பேச முடியும். 

அநுரகுமார என்னுடன் பேசினார்

இந்த சம்பவம் இடம்பெற்றதும்  அநுரகுமார திஸாநாயக்க எம்.பி. என்னிடம் பேசினார். மாவை சேனாதிராஜா எம்.பி.  உயர்கல்வி அமைச்சர் சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் உள்ளிட்டோருடன் நான் பேசியிருந்தேன். இந்த சம்பவம் பற்றி சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் ஊடகங்களுடனும் பொலிஸாருடனும் பேசியிருந்தார்.

பெரும்பாலானோர் ஒத்துழைப்பு

என்னை பொறுத்த வரையில் இந்த சம்பவமானது சனிக்கிழமை மாலையாகும் போதே கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருந்தது. அதற்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் நன்றிகள். இந்த சபையிலுள்ள பெரும்பாலானோர் அன்று அமைதியை ஏற்படுத்தக் கோரியிருந்தனர். 

ஒருவர் மாத்திரம் முயற்சி

அன்றைய தினம் இந்த நாட்டிலுள்ள யாரும் இனவாதத்தின் நிமித்தம் செயற்பட்டிருக்கவில்லை. அதற்கு அனைவருக்கும் எனது நன்றிகள்'. எனினும் இந்த மோதல் சம்பவத்தை பயன்படுத்தி  இனவாதத்தை தூண்டுவதற்கு ஒருவர் முயற்சித்தார் என்றார்.

http://www.virakesari.lk/article/9261

 

 

 

 

மாணவர்களின் மோதலை அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் இருந்தனர் : சாட்சி உள்ளதாக தினேஷ் தகவல்

jaffna-university-clash-dinesh-gunawarde

யாழ். பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தின் போது மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் அதிகாரிகள் தவறியுள்ளனர். மேலும் மாணவர்கள் இடையே ஏற்பட்ட மோதலை கண்டுகொள்ளாமல் சில அதிகாரிகள் அங்கே நின்று கொண்டிருந்தனர். இதற்கான சாட்சி என்னிடம் உள்ளது என குற்றம் சாட்டிய ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்த்தன அவ்வாறான அதிகாரிகளுக்கு எதிராக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் வலியுறுத்தினார்.

பாராளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை யாழ்.பல்கலைக்கழக மோதல் குறித்து கருத்து தெரிவிக்கும் போதே தினேஷ் குணவர்தன எம்.பி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், 

யாழ்.பல்கலைக்கழகத்தில் இவ்வாறான மோதல்  சம்பவம் எதுவும் கடந்த  காலத்தில்  இடம்பெற்றிருக்கவில்லை. குறித்த தினமும் கூட வரவேற்பு நிகழ்வின் போது காலை கலாசார நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தன. பகல் உணவு வரை  அவ்வாறான எந்த சம்பவமும் இடம்பெற்றிருக்கவில்லை. பிற்பகல் 2 மணியளவில் தான் அடிப்படைவாத குழுவொன்று பல்கலைக்கழகத்தினுள் இனவாத நிலைமையை ஏற்படுத்துவதற்காக செயற்பட்டிருந்தது. 

அந்த சம்பவத்தின் போது பொலிஸாரும் கூட காலம் தாழ்ந்துதான் சம்பவ இடத்திற்கு சென்றிருக்கின்றனர். இக்காலப்பகுதிக்குள் மாணவர்களின் பாதுகாப்புக்கு யாரும் இருந்திருக்கவில்லை. மாணர்வர்கள் தங்களது பாதுகாப்புக்காக தாங்களே செயற்பட வேண்டிய நிலைமையொன்றே ஏற்பட்டிருந்தது. 

பல்கலைக்கழக பொறுப்பாளர்கள் கண்களை திறந்து நடப்பதை பார்த்துக் கொண்டிருந்ததுள்ளனர். அதற்கான சாட்சியம் இருக்கிறது. இது பாரதூரமா நிலைமையாகும். பல்கலைகக்கழகம் என்பது பாடசாலை கிடையாது. அது பல்கலைகக்கழகம். எந்தவொரு கலாசார அல்லது இன அழிப்புக்கும் பூர்வாங்கம் ஏற்படுத்தவோ அவ்வாறான சம்பவங்களுக்கோ அரசாங்கம் இடமளிக்கக்கூடாது. 

மோதல் சம்பவத்தின் போது எந்தவொரு அதிகாரியும் தமது கடமையை நிறைவேற்ற தவறியிருந்தால் அவர்கள் தொடர்பில் நடவடிக்கை எடுப்பது பற்றி பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு கவனம் செலுத்த வேண்டும். மாணவர்கள் பாதுகாப்பாக கல்வி நடவடிக்கைகளை தொடர்வது உறுதி செய்யப்பட வேண்டும். தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் மாணவர்கள் மீண்டும் பல்லைகக்கழகம் திரும்ப நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இந்த சம்பவத்தை நாம் வன்மையாக கண்டிக்கிறோம் என்றார். 

http://www.virakesari.lk/article/9263

Edited by நவீனன்

இனவாதத்திற்கும் அநுரவிற்கும் இருக்கும் தொடர்பு என்ன?

அப்பாவி பொது மக்களை கொன்றொழித்த கடந்த காலத்தை மீண்டும் உருவாக்க முயலும் செயற்பாடே அண்மையில் யாழில் இடம் பெற்ற தாக்குதல் என அநுர குமார திசாநாயக்க குற்றம் சுமத்தினார்.

இன்று பாராளுமன்றத்தின் இரண்டாம் நாள் அமர்வு இடம் பெற்ற போதே இதனை தெரிவித்தார்.

நாட்டின் ஒற்றுமையை சீர்குழைக்கும் நோக்குடன் சிங்கள மாணவர்கள் தாக்கப்பட்டுள்ளனர். நாட்டின் அமைதியை கெடுக்கும் முகமாகவே இந்தத் தாக்குதல் திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பில் அரசு என்ன தீர்வினை பெற்று தந்திருக்கின்றது? இதற்கான விசாரணைகள் நடைபெறுகின்றதா? எப்போது தீர்ப்புகள் கொடுக்கப்படும்? போன்ற கேள்விகளையும் அநுர குமார திசாநாயக்க முன்வைத்தார்.

இவற்றிக்கு பதிலளித்த எதிர்க் கட்சித் தலைவர் இராஜவரோதயம் சம்பந்தன்,

நாட்டில் அனைத்து பல்கலைக்கழகத்திலும் இவ்வாறான மாணவ மோதல்கள் இடம் பெற்று கொண்டே தான் இருக்கின்றன.

எனினும் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற இந்த மோதல் சம்பவமானது, ஒரு சில அரசியல் வாதிகளினால் தனிப்பட்ட அரசியல் இலாபத்திற்காக நடத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பில் முறையான விசாரணைகள் இடம் பெற்று கொண்டே இருக்கின்றது. கூடிய விரைவிலேயே சம்பவத்தின் குற்றவாளிகள் அடையாளம் காட்டப்படுவார்கள்.

இலங்கையை இனவாதமற்ற நாடாக மாற்றுவதே எமது குறிக்கோள் எனவும் இரா.சம்பந்தன் பதில் அளித்திருந்தார்.

குறித்த யாழ்ப்பாண மோதலினை பற்றி ஒரு சில அரசியல்வாதிகள் மீண்டும் மீண்டும் சுட்டிக்காட்டி இனவாதம் பற்றிய கருத்துகளை முன்வைக்கின்ற போதும். அரசு தரப்பிலும், பிரதமர் தரப்பிலும் அவை மறுக்கப்பட்டு கொண்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

http://www.tamilwin.com/parliment/01/111655

  • தொடங்கியவர்

யாழ். விவகாரத்தை வெறுமனே  ஒரு மோதலாக கருத முடியாது : சபையில் ஜே.வி.பி.  தலைவர்  

 

 

(ப.பன்னீர்செல்வம், ஆர்.ராம்)anura-kumara-dissanayaka--jaffna-univers

யாழ். பல்கலைக்கழகத்தில் சிங்கள மாணர்கள் மீது தமிழ் மாணவர்கள் குழுவொன்று நடத்திய தாக்குதலானது வடக்கில் வளர்ந்துவரும் இனவாத மனோபாவத்தின் தொடர்ச்சியென எதிர்க்கட்சி பிரதம கொறடாவும் ஜே.வி.பி. தலைவருமான அநுரகுமார திசாநாயக்க எம்.பி தெரிவித்தார். 

அதிகாரத்தை கைப்பற்றிக்கொள்ளவதற்காக இனவாதத்தை தூண்டிவிடுவதற்கும், இவ்வாறான சம்பவங்களை பயன்படுத்தி அரசியல் இலாபமடையும் இனவாதிகளுக்கு உத்வேகமளிப்பதுமாகவே இந்த  மோதல் சம்பவம் அமையுமெனவும்  அவர்  குறிப்பிட்டார்

பாராளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை 23இன் கீழ் 2 ஆம் இலக்க நிலையியற் கட்டளையின் கீழ் யாழ். பல்கலைக்கழகத்தில் கடந்த சனிக்கிழமை சிங்கள் தமிழ் மாணவர்களுக்கிடையில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் கேள்வி எழுப்பியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அனுரகுமார  மேலும் தெரிவிக்கையில்,

யாழ். பல்கலைகக்கழகத்தின் விஞ்ஞான பீடத்தில் புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு கடந்த 16 ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றபோது சிங்கள மற்றும் தமிழ் மாணவர்களிடையே ஏற்பட்ட மோதல் நிலைமை காரணமாக சில மாணவர்கள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்க வேண்டி ஏற்பட்டிருந்தது.

இது  பல்கலைக்கழகமொன்றில் இடம்பெற்ற சாதாரண மோதல் சம்பவமொன்றல்ல. அரசியல் மற்றும் சமூக ரீதியாக பாரதூரமான அபாய எச்சரிக்கையொன்றை ஏற்படுத்தும் வகையில் இரு இனக்குழுக்களை பிரதிநித்துவப்படுத்தும் மாணவர்களிடையே உருவான சம்பவமொன்றென்பதை புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. சமூகம் என்ற வகையில் கண்டிக்கத்தக்க மற்றும் தவிர்க்கப்பட வேண்டிய இனவாதத்தின் நச்சுத்தன்மையை இந்த சம்பவத்தின் பின்னணியில் காணமுடியும். 

குறிப்பாக யாழ். பல்கலைக்கழகத்தில் சிங்கள மாணவர்கள் மீது தமிழ் மாணவர்கள் குழுவொன்றினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலானது வடக்கில் வளர்ந்து வரும் இனவாத மனோபாவத்தின் தொடர்ச்சியாகும். இந்த நிலைமையானது அனைத்து இனவாதிகளுக்கும் உத்வேகத்தை அளிக்கும். தங்களது அரசியலுக்காகவும் எப்படியாவது அதிகாரத்தை கைப்பற்றிக்கொள்ளும் நோக்கத்திற்காகவும் செயற்பட்டுக் கொண்டிருக்கும் இனவாதிகளுக்கும் இது உத்வேகமளிப்பதாகவே அமையும்.

http://www.virakesari.lk/article/9267

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.