Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மத்தி , மாகாணத்தை புறக்கணிப்பதனை ஏற்க முடியாது. சி.வி.

Featured Replies

மத்தி , மாகாணத்தை புறக்கணிப்பதனை ஏற்க முடியாது. சி.வி.

 
மத்தி , மாகாணத்தை புறக்கணிப்பதனை ஏற்க முடியாது. சி.வி.

 

எங்கள் மத்தியில் எவ்வாறான அரசியல் ரீதியான அல்லது வேறு காரணங்களுக்கான வேற்றுமைகள் இருப்பினும் வடமாகாணத்தின் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எமது சபையை நிராகரித்து அல்லது ஓரங்கட்டி மத்தியானது தனக்குத் தகுந்தவாறு காரியங்களை எடுத்துச் செல்வதை நாம் எவருமே ஏற்றுக் கொள்ள மாட்டோம்.என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு கைதடியில் உள்ள பேரவைக் கட்டடத்தில் இன்று காலை நடைபெற்றது. அதன் போது சபையில் உரையாற்றிய போதே முதலமைச்சர் அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில் ,


எமது பிரதம செயலாளர் ஒரு முக்கியமான விடயமொன்றை எனது கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளார்.

அதாவது 05.07.2016ந் திகதிய மத்திய அரசாங்கத்தின் அமைச்சரவைக் கூட்டத்தில் கௌரவ ரிஷாட் பதியுடீன், கௌரவ ஃபயிசர் முஸ்தாபா, கௌரவ டி.எம்.சுவாமிநாதன் ஆகிய அமைச்சர்களைக் கொண்ட ஒரு செயலணி நியமிக்கப்பட்டுள்ளது என்றும், அதில் மத்திய அரசாங்க அலுவலர்கள் ஆறு பேரும், வடமாகாண பிரதம செயலாளரும், வடமேல்மாகாண பிரதம செயலாளரும், அங்கம் வகிக்க வேண்டும் என்றும் முடிவு எடுத்துள்ளதாகக் கூறினார்.

மேலும் மீள்குடியேற்றம் பற்றிய நிகழ்ச்சி நிரலில் பாரம் பரிய சிங்கள கிராமங்களும் உள்ளடக்க வேண்டும் என்றும் திருகோணமலை மாவட்டமும் அதில் உள்ளடக்கப்பட வேண்டும் என்றும் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

செயலணி அந்தந்த மாவட்டச் செயலர்களை உள்ளேற்க அதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அறிவித்தார். மேலும் செயலணி எடுக்கும் தீர்மானம் காலத்திற்குக் காலம் அமைச்சர் வாரியக் கருத்தொருமிப்புக்குக் கொண்டு வரப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளதை எனக்கு எடுத்துக் காட்டி இச் செயலணியில் வடமாகாண அரசியல் அலகு விடுபட்டுள்ளதாகக் கூறினார்.

மேலும் முன்னைய ஆளுநர் கௌரவ பள்ளிகக்கார இருந்த போது மாவட்ட ரீதியாக செயலணி இருக்க வேண்டும் என்றும் சகல அரசியல் கட்சிகளும் அதில் அங்கம் வகிக்க வேண்டும் என்றும் கூறியிருந்ததை எனது கவனத்திற்குக் கொண்டு வந்தார்.

உள்ளூரில் இடம்பெயர்ந்த மக்கள் மீண்டும் தமது பாரம்பரிய காணிகளில் அல்லது வீடுகளில் மீள்குடியேற்றப்பட வேண்டும் என்ற கருத்தை முன்னைய ஆளுநர் ஜனாதிபதிக்கான தனது கடிதத்தில் வலியுறுத்தியிருந்ததையும், எனது கவனத்திற்குக் கொண்டு வந்தார்.

எங்கள் மத்தியில் எவ்வாறான அரசியல் ரீதியான அல்லது வேறு காரணங்களுக்கான வேற்றுமைகள் இருப்பினும் வடமாகாணத்தின் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எமது சபையை நிராகரித்து அல்லது ஓரங்கட்டி மத்தியானது தனக்குத் தகுந்தவாறு காரியங்களை எடுத்துச் செல்வதை நாம் எவருமே ஏற்றுக் கொள்ள மாட்டோம்.

வடமாகாண இடம்பெயர்ந்த மக்கள் மட்டுமல்ல இந்தியாவில் இருந்து வருபவர்களையும் அவர்களின் பாரம்பரிய இடங்களில் குடியமர்த்தாது தான்தோன்றித்தனமாக மத்திக்கு உகந்த முறையில் அவர்களைக் குடியமர்த்தக்கூடிய ஒரு சந்தர்ப்பம் இந்தக் காரியத்தால் உருவாகியுள்ளது.

பெயருக்கு வடமாகாணசபை பிரதம செயலாளரை உள்ளடக்கி, மத்தியே மேற்படி காரியங்களைக் கொண்டு செல்ல உத்தேசித்துள்ளது. இது வடமாகாண மக்களின் கருத்துக்களை உதாசீனம் செய்வதற்கு ஒப்பாகும்.

எம்மிடம் கேட்காமல் எம்மக்களின் மீள்குடியேற்றம் நடைபெறுவது பொது மக்களுக்குப் பல பின்விளைவுகளைக் கொண்டுவரக் கூடியது.
இன்று சர்வதேச மட்டத்தில் இடம்பெயர்ந்த மக்கள் சம்பந்தமாகப் பல முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

முக்கியமாக பின்ஹெய்ரோ கோட்பாடுகளின் படி வெவ்வேறு காரணங்களினால் இடம்பெயர்ந்த மக்கள் தமது முன்னைய பாரம்பரிய இடங்களில் குடியமர்த்தப்பட வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இது பற்றி சில நாட்களுக்கு முன்னர் என்னைச் சந்தித்த சர்வதேச இடம்பெயர்வுகளுக்கான நிறுவன சர்வதேச நிபுணத்துவப் பிரதிநிதியுடனும் நான் பேசியிருந்தேன். மீள் குடியமர்வுகள் எம்முடன் இணைந்து சர்வதேச கொள்கைகளுக்கு அமைவாக நடைபெற வேண்டும் என்ற என் கருத்துக்களை  நிபுணர் ஏற்றுக் கொண்டு அவற்றை உறுதிப்படுத்துவதற்காகவே இலங்கை வந்துள்ளதாக அறிவித்தார்.

இந்தத் தருணத்தில் இவ்வாறான மத்திய அரசாங்கத்தின் உதாசீனமும், தான்தோன்றித்தனமும் கண்டனத்திற்கு உரியது. ஒரு பக்கம் சர்வதேசம் பாதிக்கப்பட்ட மக்களின் நலன வலியுறுத்துகிறது. மறுபக்கத்தில் மத்தியின் அதிகாரத்தை நிலைநாட்டுவதே குறிக்கோளாக இருந்து வருகின்றது.

செயலணியில் யார் யார் இடம்பெற வேண்டும் என்பதை விட மத்திய அரசாங்கம் செயலணியை உருவாக்க முன்னர் எம்முடன் பேசியிருக்க வேண்டும். 13வது திருத்தச் சட்டம் வந்த பின் எமக்குக் குறித்தொதுக்கப்பட்ட விடயங்கள் சம்பந்தமாக அல்லது உடன்பட்ட விடயங்களில் மத்தியானது மாகாணத்துடன் கலந்தாலோசித்து நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்ற கோட்பாட்டை உதாசீனப்படுத்தியே நடந்து வருகின்றது.

இதை நான் பலமுறை மத்திய அரசாங்க அமைச்சர்களுக்கும், வெளிநாட்டுப் பிரதிநிதிகளுக்கும் எடுத்துக்கூறியுளேன் என தெரிவித்தார்.

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/134257/language/ta-IN/article.aspx

மீள்குடியேற்ற செயலணிக்கு வடக்கு முதல்வர் ஆட்சேபனை

வடகிழக்கு தமிழர் தாயகத்தில் சிங்கள, முஸ்லிம் மக்களை குடியேற்றம் செய்ய மத்திய அரசாங்கம் உருவாக்கியிருக்கும் மீள்குடியேற்ற செயலணியை நாம் பார்த்துக் கொண்டிருக்க முடியாது என முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் கூறியுள்ளார்.

வடமாகாண சபையின் 57ம் அமர்வு இன்றைய தினம் நடைபெற்றிருந்தது.

இதன்போது மத்திய அரசாங்க ம் வடகிழக்கு மாகாணங்களில் குறிப்பாக திருகோணமலை பகுதியை மையப்படுத்தி, சிங்கள, முஸ்லிம் மக்களை மீள்குடியேற்ற மீள் குடியேற்ற செயலணி உருவாக்கப்பட்டுள்ளமை தொடர்பாக முதலமைச்சர் பிரேரணை ஒன்றை சமர்ப்பித்திருந்தார்.

இந்த பிரேரணையை முன்மொழிந்து முதலமைச்சர் மேலும் உரையாற்றுகையில்,

கடந்த 05.07.2016ம் திகதிய அமைச்சரவை கூட்டத்தில் அமைச்சர்களான சுவாமிநாதன், றிஷாட் பதியூதீன், பைசர் முஸ்த்தப்பா ஆகியோர் உள்ளடங்கலான 6 அமைச்சர்கள் மற்றும் வடமாகாண, வடமேல் மாகாண பிரதம செயலாளர்கள் கெண்ட செயலணி உருவாக்கப்பட்டிருக்கின்றது.

இந்தச் செயலணியின் நிகழ்ச்சி நிரலில் பாரம்பரிய சிங்கள கிராமங்களில் சிங்கள மக்களை மீள்குடியேற்றல் எனவும் விசேடமாக திருகோணமலை மாவட்டம் உள்ளீர்க்கப்பட வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

எனவே இதில் ஒட்டுமொத்தமாக வடமாகாண அரசாங்கத்தின் வகிபாகம் அறவே இல்லை.

வடமாகாணத்திற்கான முன்னைய ஆளுநர் பளிகக்ஹார ஜனாதிபதிக்கு மீள்குடியேற்ற நிலமைகள் தொடர்பாகச் சுட்டிக்காட்டுகையில், மாவட்டரீதியாக மீள்குடியேற்ற செயலணிகள் உருவாக்கப்படவேண்டும் எனவும் அதில் அர சியல் கட்சிகள் உள்ளீர்க்கப்படவேண்டும் எனவும் சுட்டிக்காட்டியிருந்தார்.

இதனை எமது பிரதம செயலாளர் எமக்கு சுட்டிக்காட்டியிருக்கின்றார்.

இந்நிலையில் மாகாணசபைக்குள் எமக்கு கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் எங்களுடைய மாகாண அரசாங்கத்தை ஓரங்கட்டிவிட்டு மத்திய அரசாங்கம் தமக்கு தகுந்தால்போல் காரியங்களை செய்து கொண்டிருக்க முடியாது.

மேலும் சிங்கள, முஸ்லிம் மக்களை மட்டுமல்லாமல் வடமாகாணத்தில் உள்ள தமிழ் மக்களையும், இந்தியா- தமிழகத்தில் உள்ள தமிழ் மக்களையும் கூட அவர்களுடைய பூர்வீக நிலங்களில் மீள்குடியேற்றம் செய்யவேண்டும்.

இந்நிலையில் ஒரு சாட்டுக்காக வடமாகாண பிரதம செயலாளரை செயலணியில் இணைத்துக் கொண்டு எங்களை ஓரங்கட்டிவிட்டு எங்களுடைய மாகாணத்தில் எங்களுடைய மக்களுக்கு அநீதி இழைக்கப்படுவதை சகித்துக் கொள்ள முடியாது.

சர்வதேச மட்டத்தில் இடம்பெயர்ந்த மக்கள் அவர்களுடைய பூர்வீக நிலங்களில் மீள்குடியேற்றப்படவே ண்டும் என சுட்டிக்காட்டிவரும் நிலையில் இவ்வாறான செயற்பாடுகள் கண்டனத்திற்கு உரியவை.

அண்மையில் ஐ.ஓ.எம் அமைப்பின் நிபுணர் ஒருவரை சந்தித்தபோது மீள்குடியேற்றம் என்பது சர்வதேச மீள்குடியேற்ற நியமங்கள் அல்லது கொள்கைகளுக்கு அமைவானதாக நடக்கவேண்டும் என நான் கேட் டிருக்கின்றேன்.

இந்நிலையில் அதனை அவதானித்து உறுதிப்படுத்தவே தான் இலங்கை வந்திருப்பதாக அந்த நிபுணர் எனக்கு கூறியிருந்தார்.

எனவே மத்திய அரசாங்கம் இச்செயலணியை உருவாக்க முன்னதாக எங்களுட ன் பேசியிருக்கவேண்டும். அதனை விடுத்து சாட்டுக்கு சிலரை வைத்துக் கொண்டு தாங்கள் நினைத்தால்போல் தங்களுடைய எண்ணத்திற்கு மீள்குடியேற்றத்தை செய்யவே மத்திய அரசாங்கம் நினைத்துக் கொண்டிருக்கின்றது.

13ம் திருத்த சட்டத்தின் பிரகாரம் மாகாண அரசாங்கத்துடன் சில விடயங்கள் தொடர்பாக பேசி தீர்மானங்களை எடுக்கவேண்டும் என்பதை மத்திய அரசாங்கம் மறந்திருக்கின்றது.

இங்கே பேசிய சிங்கள மாகாணசபை உறுப்பினர் கேட்டிருக்கின்றார். சிங்கள, முஸ்லிம் ம க்களுக்கு மட்டும் மீள்குடியேற்றமா? தமிழர்களுக்கும் கொடுக்கவேண்டும் என.

அதனையே நாங்களும் கேட்டிருக் கின்றோம். இதனை நான் மாகாணசபையில் கொண்டு வந்தமைக்கான முக்கியமான காரணம் பல பிரதேசங்களில் எமக்கும் தெரியாமல் பல விடயங்கள் நடந்து கொண்டிருக்கின்றன.

நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள் கொண்டிருக்கின்றன. இதேபோல் 13ம் திருத்த சட்டத்தின் கீழ் மத்திய அரசாங்கம் மாகாண அரசாங்கத்துடன் சில அதிகாரங்களை பகிர்ந்து கொண்டிருக்கின்றது.

ஆனால் அவ்வாறு பகிரப்படுவதற்கு முன்னர் இருந்த நிலையினைப் போன்று மத்திய அரசாங்கம் நடக்கின்றது.

உதாரணமாக மகாவலி அதிகாரசபையினை குறிப்பிடலாம். எமது மக்களுக்கு பாதகமாக அல்லது அநீதியாக நடக்கும் சில சம்பவங்கள் எமக்கு மனவருத்தத்தை கொடுத்திருக்கின்றது.

இந்நிலையில் மாகாண அரசாங்கம் நாங்கள் எங்களுக்கான மீள்குடியேற்ற கொ ள்ளை ஒன்றை தயாரித்திருக்கின்றோம்.

அது தொடர்பாக நாங்கள் விரைவில் ஒரு கருத்தரங்கை வைத்து நாங்கள் மத்திக்கு அதனை தெரியப்படுத்துவோம் என்பதுடன் மத்திய அரசாங்கம் தனியே முஸ்லிம், சிங்கள மக்களை மீள்குடியேற்றுவதற்காக மாகாணசபையை ஓரங்கட்டி உருவாக்கிய செயலணியை நாங்கள் எதிர்கிறோம். அவ்வாறான செயலணி உருவாக்கப்பட்டதை நாங்கள் ஆட்சேபிக்கிறோம் என்றார்.

http://www.tamilwin.com/lifestyle/01/111683

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.