Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நாம் பயன்படுத்தும்மெ மெமரி கார்டு பற்றி நாம் அறியாத தகவல்கள்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
இன்று நமது அழியாத நினைவுகளை பதிய வைக்க நாம் பயன்படுத்தும் முக்கியமான பொருள் தான் மெமரி கார்டு ஆகும். இது மொபைல் போன், டிஜிட்டல் கேமரா, ஜி.பி.எஸ். நேவிகேஷன் சாதனங்கள் மற்றும் டேப்ளட் கம்ப்யூட்டர்களில் இவற்றை ஒரு முக்கிய பகுதியாகவே நாம் இயக்குகிறோம். இதனை நாம் எல்லாரும் பயன்படுத்தினாலும், அதன் தன்மை, வகைகள் குறித்து அவ்வளவாக யாரும் தெரிந்து வைத்திருப்பதில்லை. சில தகவல்களை இங்கு காணலாம். செக்யூர் டிஜிட்டல் கார்டின் வரையறைகள் 1999ல் முடிவு செய்யப்பட்டன. மல்ட்டி மீடியா கார்டுக்கு மேலான வகையில் இதனை அமைத்தனர்.

இன்று நமது அழியாத நினைவுகளை பதிய வைக்க நாம் பயன்படுத்தும் முக்கியமான பொருள் தான் மெமரி கார்டு ஆகும். இது மொபைல் போன், டிஜிட்டல் கேமரா, ஜி.பி.எஸ். நேவிகேஷன் சாதனங்கள் மற்றும் டேப்ளட் கம்ப்யூட்டர்களில் இவற்றை ஒரு முக்கிய பகுதியாகவே நாம் இயக்குகிறோம். இதனை நாம் எல்லாரும் பயன்படுத்தினாலும், அதன் தன்மை, வகைகள் குறித்து அவ்வளவாக யாரும் தெரிந்து வைத்திருப்பதில்லை. சில தகவல்களை இங்கு காணலாம். செக்யூர் டிஜிட்டல் கார்டின் வரையறைகள் 1999ல் முடிவு செய்யப்பட்டன. மல்ட்டி மீடியா கார்டுக்கு மேலான வகையில் இதனை அமைத்தனர்.

   

இந்த கார்டின் அடிப்படைத் தன்மை எப்படி இருக்க வேண்டும் என்பதனை எஸ்.டி. கார்ட் அசோசியேஷன் என்னும் அமைப்பு முடிவு செய்கிறது. ஏறத்தாழ 400 பிராண்ட் பெயர்களில், எஸ்.டி. கார்டுகள் தயார் செய்யப்படுகின்றன. ஏறத்தாழ 8,000 மாடல் கார்டுகள் புழக்கத்தில் உள்ளன. செக்யூர் டிஜிட்டல் பார்மட் என்று சொல்லும் போது அதில் நான்கு வகையான கார்ட் பிரிவுகள் உள்ளன. அவை Standard Capacity (SDSC), the High Capacity (SDHC), the extended Capacity (SDXC), மற்றும் SDIO. இதோ அதை பற்றி மேலும் நீங்கள் அறியாத பல தகவல்கள்….

எஸ்.டி. கார்ட் என்பது ஒரு சாலிட் ஸ்டேட் டிவைஸ். இதில் நகரும் பகுதி என எதுவும் இல்லை. எலக்ட்ரிக்கல் சர்க்யூட்களையே இவை சார்ந்திருக்கின்றன. ஒரு எஸ்.டி. கார்டினை எத்தனை முறை எழுதவும் அழிக்கவும் செய்திடலாம் இவற்றைத் தயாரிக்கும் தோஷிபாவின் கூற்றுப்படி, 10,000 சுழற்சிகள் வரை ஒரு எஸ்.டி.கார்டில், டேட்டாவினைப் பதியலாம் மற்றும் அழிக்கலாம். ஒரு கார்டில் ஒவ்வொரு நாளும், ஒரு முறை டேட்டாவினை முழுமையாக அழித்து எழுதினாலும், 10,000 சுழற்சிகள் மேற்கொள்ள 27 ஆண்டுகள் ஆகும். எஸ்.டி. கார்ட்கள் மூன்று அளவுகளில் கிடைக்கின்றன. அவை standard SD (32 x 24 millimeters), miniSD (20 x 21.5 millimeters) and microSD (15 x 11 millimeters)

SD, SDHC and SDXC என்று குறிப்பிடுகையில், நாம் எஸ்.டி. கார்ட்களின் எந்த தன்மையைக் கொண்டு வேறுபடுத்துகிறோம்?

எஸ்.டி. கார்ட் வளர்ச்சி, கெபாசிட்டி திறன் ஆகியவையே இந்த மூன்றின் வகைகளை வேறுபடுத்திக் காட்டுகின்றன.

ஒரு எஸ்.டி. கார்டின் வேகம் அதிகமாக இருந்தால், வீடியோ பதிவின் போது, டேட்டா அதிகமாக கைப்படுத்தப்படும்.

என்னும் தரத்தில் வேகம் இருந்தால், நொடிக்கு 312 எம்.பி. தகவல்கள் எழுதப்படும் மற்றும் படிக்கப்படும். இதனால், நிச்சயம் நல்ல தெளிவான வீடியோ பதிவு ஏற்படும்.

எஸ்.டி. கார்ட் வரையறையில், அதன் உள்ளார்ந்த சி.பி.ஆர்.எம். தொழில் நுட்பம் எதனைக் குறிக்கிறது?

இது Content Protection for Recordable Media (CPRM) என்று விரித்துச் சொல்லப்படுகிறது. ஒவ்வொரு எஸ்.டி. கார்டிலும் இந்த தொழில் நுட்பம் உள்ளது.

இதை மீண்டும் திறந்து இயக்கலாம் என்ற வகையில் உள்ளது. இதை மூடிவிட்டால், எழுதவோ, உள்ளிருப்பவற்றை மாற்றவோ முடியாது. மீண்டும் திறந்து, அழிக்கவும், மேலே எழுதவும் முடியும்.

எஸ்.டி. (SD) மற்றும் எஸ்.டி. எச்.சி (SDHC) கார்ட்களைக் காட்டிலும், எஸ்.டி. எக்ஸ்.சி. (SDXC) கூடுதல் கெபாசிட்டி திறன் கொண்டது.

இதே போல் தான் இவற்றின் மைக்ரோ எஸ்.டி. கார்ட் வகைகளும். மிகச் சிறிய microSDXC கார்ட், microSD and microSDHC கார்ட்களைக் காட்டிலும் அதிக கொள்ளளவு கொண்டது.

இதில் நாம் பெரிய எஸ்.டி.கார்ட் ஸ்லாட்டில், மைக்ரோ எஸ்.டி. கார்டை செலுத்தி, தகவல்களைப் படிக்க நம்மால் படிக்க அல்லது பார்க்க முடியும்.

http://www.seithy.com/breifNews.php?newsID=161870&category=CommonNews&language=tamil

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உலகின் மிக மதிப்பு மிக்க நோபல் பரிசை வெல்பவர்களுக்கான பணத் தொகை அதிகரிப்பு! உலகின் மிக மதிப்பு வாய்ந்த விருதான நோபல் பரிசு வெல்பவர்களுக்கு, நடப்பாண்டு முதல் 1 லட்சத்து 10 ஆயிரம் அமெரிக்க டொலர்கள் கூடுதலாக பரிசுத் தொகை வழங்கப்படும் என விருதுகளை மேற்பார்வையிடும் அறக்கட்டளை அறிவித்துள்ளது. நோர்வே நாடாளுமன்றத்தால் வழங்கப்படும் இந்த விருது அமைதி, இயற்பியல், பொருளாதாரம், இலக்கியம், மருத்துவம் மற்றும் வேதியியல் ஆகியத் துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு ஆண்டுதோறும் விருது வழங்கி கௌரவித்து வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டு நோபல் பரிசுகளை வெல்பவர்கள் கூடுதலாக 1 லட்சத்து 10 ஆயிரம் அமெரிக்க டொலர்களைக் பெறுவார்கள். இதற்கமைய பண பரிசு இந்த ஆண்டு 10 மில்லியன் க்ரோனர்களாக அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நோபல் அறக்கட்டளையின் தலைவர் லார்ஸ் ஹெய்கென்ஸ்டன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘எங்கள் செலவுகள் மற்றும் மூலதனம் முன்பு இருந்ததை விட முற்றிலும் மாறுபட்ட வழியில் நிலையான உறவில் இருப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. எங்களுக்கு ஊக்கமளிப்பதிலும், எதிர்காலத்திற்கான நம்பிக்கையை அளிப்பதிலும் பரிசு பெற்றவர்களின் சாதனைகளை கொண்டாடுவது இந்த ஆண்டு மிகவும் முக்கியமானது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. நோபல் அறக்கட்டளையின் நிதிநிலைமையைப் பொருத்து அவ்வப்போது பரிசுத்தொகையில் மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றது. 2012ஆம் ஆண்டின் தொடக்கத்திலிருந்து, அதன் முதலீட்டு மூலதனம் 3 பில்லியன் க்ரோனரிலிருந்து 4.6 பில்லியன் க்ரோனராக உயர்ந்துள்ளது. இது ஒவ்வொரு ஆண்டும் 9 சதவீதம் அதிகரிப்புக்கு அருகில் உள்ளது. முன்னதாக நோபல் அறக்கட்டளையின் நிதிநிலையை மேம்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட சிக்கன நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, கடந்த 2011ஆம் ஆண்டில் நோபல் பரிசுத் தொகை குறைக்கப்பட்டிருந்தமை நினைவுக்கூறத்தக்கது. இந்த ஆண்டு பல்வேறு பிரிவுகளுக்கான நோபல் பரிசு வரும் ஒக்டோபர் 5ஆம் திகதி முதல் அறிவிக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/உலகின்-மிக-மதிப்பு-மிக்க/
    • சீனாவில் சுமார் 16 ஆயிரம் மசூதிகள் தகர்ப்பு: அவுஸ்ரேலிய தன்னார்வ அமைப்பு தகவல்! சீனாவில் சுமார் 16 ஆயிரம் மசூதிகள் தகர்க்கப்பட்டுள்ளதாக அவுஸ்ரேலியாவில் இயங்கும் தன்னார்வ அமைப்பு தெரிவித்துள்ளது. அவுஸ்ரேலியாவின் (ASPI) புள்ளியியல் தன்னார்வ நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், ‘சீனாவின் வடக்கு மேற்கு பகுதிகளில் 16,000 மசூதிகள் சீன அதிகாரிகளால் இடிக்கப்பட்டுள்ளன. கடந்த மூன்று வருடங்களாக இந்த அழிப்பு நடவடிக்கைகளில் சீனா ஈடுப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவின், வடமேற்கு மாகாணங்களில், உய்குர் மற்றும் டர்கிக் மொழிகள் பேசும், 10 இலட்சம் முஸ்லிம் மக்கள், சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். மதம் தொடர்பான தங்கள் சம்பிரதாயங்களை கைவிட மறுத்ததற்காக, இவர்களுக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டதாக, அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. தன்னாட்சி அதிகாரம் பெற்ற சீனாவின் வடமேற்கில் உள்ள நிங்ஜியா மண்டலத்தில், டாங்ஜிங் கவுன்டியின் வெய்ஸு பகுதியில் ஹூய் இன முஸ்லிம்கள் அதிகமானோர் வாழ்கின்றனர். சீனாவின் ஜிங் ஜியாங் பகுதியில் உய்குர் இன முஸ்லிம்களுக்கு அடுத்த படியாக வெய்ஸு பகுதியில் ஹூய் இன முஸ்லிம்கள் வாழ்கின்றனர். இதனிடையே உய்குர் இன மக்களை, சீன மயமாக்க, ஆவணப்படுத்தப்பட்ட அதிகமாக முகாம் மற்றும் சிறைகளை சீனா இரகசியமாக வைத்துள்ளதாக அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயற்படும் கிழக்கு துர்கிஸ்தான் தேசிய விழிப்புணர்வு இயக்கம் கூறியுள்ளது. http://athavannews.com/சீனாவில்-சுமார்-16-ஆயிரம்-ம/
    • அசைவ சுவையில் ஒரு சைவக் கறி .......!   😁
    • வீட்டில் யாருக்காவது பிறந்தநாள் கொண்டாடும்போது எனக்கென்று தனியாக மனிசி செய்வது இதுதான். கனகாலமாக ஒரிஜினல் கேக்கின் ருசியே மறந்து போச்சு,அதனால் இது சுவையாக இருக்கும்......!  😁
    • போட்டியென்றால் இது போட்டி .....நையாண்டி மேளம் கேள்விப்பட்டிருப்பீர்கள் பார்த்திருக்கிறீர்களா பாருங்கள்..........!    👍
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.