Jump to content

சிங்களம் தெரியுமா?


Recommended Posts

சிங்களம் தெரியுமா?

யாழ்ப்பாணத்தில் இருந்து காங்கேசன்துறை நோக்கிய மினிபஸ்ஸில் முதல் பஸ்சை சன நெரிசல் காரணமாக விட்டுவிட்டு அடுத்ததில் ஏறி முன் சீற்றில் ஜாலியா குந்தி இருந்த போது பள்ளி சீருடைகளுடன் ஒரு மாணவர் குழாம். ஒருவரை தவிர அனைவரும் மாணவிகள். அந்த மாணவனும் என்ன நினைத்தானோ அருகில் வந்து அங்கிள் இதில இருக்கலாமா என்று நான் ஏதோ மினிபஸ் உரிமையாளர் போல கேட்டான். நானும் பக்கத்தில் இருந்த குட்டி சீட்டை மடித்து அவனின் வருகைக்கு உதவினேன். 

வந்த குட்டியன் கேட்ட முதல் கேள்வியே தூக்கி வாரிப்போட்டது. 

சிங்களம் தெரியுமா?

விசரனின் ஒஸ்லோ முருகா கத்தல்தான் மண்டைக்குள்ள முதலில் வந்தது.

சிங்களத்தில் எண்ணவே தெரியாத என்னை இவன் எதுக்கு தமிழில சிங்களம் தெரியுமா என்கின்றான். நானும் புரியாத மாதிரி கதைக்க தொடங்கினேன்.

என்னத்துக்கு யூனிபோர்மொடே எல்லாரும் வாறிங்க?

நாங்க இராமநாதன் கல்லூரிக்கு ஒரு போட்டிக்கு போறம் 

எந்த பள்ளிக்கூடம்?

பண்டத்தரிப்பு இந்து கல்லூரி

உங்கள் பழைய அதிபர் சரவணமுத்துவை தெரியுமா எண்டு கேட்டபின்தான் நானே நாக்கை கடித்தேன். அவர் இளைப்பாறியே ஒரு 40 வருடமாவது இருக்கும்.

நீங்களும் பண்டத்தரிப்பு இந்துவா?

இல்லை எனது நண்பன் உங்குதான் படித்தான், அவனின் அப்பாதான் பழைய அதிபர் சரவணமுத்து.

அப்ப நீங்க எங்கு படித்தநீங்கள்?

யாழ் மத்திய கல்லூரியிலும் மகாஜனா கல்லூரியிலும்

எப்படி இங்கு படித்த ஒருவர் உங்கள் நண்பனானார்? 

இருவரும் மஹாஜனாவில் ஒன்றாக படித்தம். 

இப்போது நாம் வயதை மறந்து நண்பர்களாகினோம்

என்ன போட்டி இண்டைக்கு?

சிங்கள பேச்சு, அங்கிள் நான் பேசி காட்டுறேன் ஒருக்கா சரி பிழை பாக்குறீங்களா?

எனக்கு சிங்களம் தெரியாது அப்பன்

அப்ப உங்களுக்கு தமிழை தவிர வேறு பாஷையே தெரியாதா என்று மண்டையில் சுத்தியலால் அடித்தான்.

இல்லை தமிழ், ஆங்கிலம், நோர்ஸ்க் சரளமாக பேசவரும், எழுதவும், வாசிக்கவும் முடியும், டேனிஷ், சுவீடிஷ், மலையாளம் ஓரளவு புரிந்து கொள்ளவும் முடியும்.

பரவாயில்லை அங்கிள் நான் ஒருமுறை பேசுகின்றேன் சரி பாருங்கள் என்றபடி எனது பதிலுக்கு காத்திராமல் சிங்களத்தில் ஏதோ பேசினான். 

ஒண்ணுமே புரியாவிட்டாலும் அடிக்கடி தமிழ் என்ற வார்த்தை வந்து போனது. தலையை ஆட்டியபடி தமிழின் பெருமை பற்றி சிங்களத்தில் பேசினான் என்று நினைத்து ஆதரவாய் இருந்தேன்..

அப்பன் உங்கட ஹோல்ட் வந்துட்டுது என்று இடை நிறுத்தியபடி வென்று வர வாழ்த்துக்களையும் சொன்னேன்.

இவ்வளவு பாஷை தெரிஞ்ச உங்களுக்கு சிங்களம் தெரியாதென்று பொய்தானே சொல்லுறீங்க என்றபடி இறங்கினான். 

யாரோ காறி மூஞ்சியில துப்பின மாதிரி இருந்தது.

இல்லை, நானே குப்புற படுத்திருந்து முகட்டை நோக்கி துப்ப அது திரும்பி எனது மூஞ்சியில் விழுந்தது போலிருந்தது.

தமிழ் தேசியம் பேசும் விண்ணர்களுக்கு சிங்களம் தெரியாது என்பது ஒரு பெருமையாக இருக்கலாம். இனவாதிகளுக்கு அது கர்வமாக கூட இருக்கலாம் - எனக்கு அவமானமாக இருக்குது.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

இன்னும் சிறிது காலம் பொறுங்கள்.உங்கள் ஆதங்கம் நிறைவேறும்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

ஜீவன் அந்தப் பையன் ஒரு காலத்தில் நன்றாக இருப்பான்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

வெளிநாட்டில் வெள்ளைக்காரன் மொழி படிக்கும் போது எங்களுக்கு ஏற்படாத கூச்சம் அவமானம் ஏன் சிங்களம் படிக்கும் சிங்களம் போது வருகுது. சிங்களத்துக்கு எங்கள் தமிழுக்கும் பல ஒற்றுமை உண்டு. இலகுவாக படிக்கலாம். என்ன மெல்லினமே இல்லாத மொழி என்பதால் தமிழ் போல் ஒரு இனிமை இல்லை. சிங்கள பாட்டு கேடடால் புரியும்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

நல்லகாலம் முகட்டை நோக்கி துப்பினதுடன் விட்டுவிட்டீர்கள் முகட்டை நோக்கி சத்தியெடுத்திருந்தால்  என்னவாகியிருக்கும் - அந்த சத்தியிலேயே முழ்கி செத்துவிட்டிருப்பீர்கள். சிங்களம் தெரியாமல் போனதற்கு நீங்கள் அவமானப்படவேண்டிய தேவையே கிடையாது. சிங்களத்தை ஒரு மொழியாக சுயவிருப்பத்தின் பேரில் கற்பதற்கும்  அம் மொழியை திணித்து நாட்டை சிங்களமயமாக்கலுக்கும் நிறையவே வித்தியாசமுண்டு என்பதையும் நீங்கள் புரிந்து கொள்ளவேண்டும். சிங்கள அரசியல்வாதிகளின் பேரினவாத போக்கும் இலங்கை சிங்களவர்களின் நாடு என்ற எண்ணமும் சிங்களவர்கள் மத்தியில் நீங்கி மொழிககளுக்கு சம அந்தஸ்து வழங்கப்படவேண்டும். வேற்று மொழியால் தாய்மொழி சாவதை எவருமே அனுமதிக்கமாட்டார்கள். தமிழ்ப்பிரதேசங்களில் உள்ள எத்தனையோ பெயர்பலகைகள்  அறிவிப்பு பதாகைகளில் தமிழ் தவிர்க்கப்பட்டு பிழையாக எழுதப்பட்டு அல்லது ஓரங்கட்டப்பட்டு சிங்களத்தையே பிரதான மொழியாக பயன்படுத்தப்பட்டு வருவதும் கண்டனத்துக்குரியது. 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, M.P said:

வெளிநாட்டில் வெள்ளைக்காரன் மொழி படிக்கும் போது எங்களுக்கு ஏற்படாத கூச்சம் அவமானம் ஏன் சிங்களம் படிக்கும் சிங்களம் போது வருகுது. சிங்களத்துக்கு எங்கள் தமிழுக்கும் பல ஒற்றுமை உண்டு. இலகுவாக படிக்கலாம். என்ன மெல்லினமே இல்லாத மொழி என்பதால் தமிழ் போல் ஒரு இனிமை இல்லை. சிங்கள பாட்டு கேடடால் புரியும்.

வெள்ளைக்காரன் நாடுகளில் நாங்கள் குடியேறிகள்!

அவர்கள் தங்கள் மொழியை எங்கள் மீது திணிப்பதில்லை! நாங்களாகவே எமது தேவைகளுக்காகப் படிக்கிறோம்! அவுசிலும் ஆங்கிலம் தெரியாத பலர் பல வருடங்களாக வாழுகின்றார்கள்! அவர்கள் மீது மொழி திணிக்கப் படுவதில்லை!

ஆனால் இலங்கையில் நாங்கள் பூர்வீக குடிகள்!

சொந்த மொழியில் எமது தேவைகளை நிறைவு செய்ய வகை செய்ய வேண்டியது எமது அரசின் கடமை!

சிங்கள மொழி எமதினத்தின் மீது பலவந்தமாகத் திணிக்கப் படுகின்றது! அது தான் பிரச்சனையே!

பல மேற்கத்தைய நாடுகளில்...சீனமொழி, இந்தி, உருது, தமிழ் போன்ற மொழிகளில் தொடர்பாடல் வசதிகள் செய்யப்பட்டுள்ளது!

சிங்களத்தை விடவும்...தமிழ் அதிக நாடுகளிலும், அதிக மக்களாலும் பேசப்படுகின்றது!

உங்கள் கருத்துப்படி...பார்த்தாலும்..சிங்களத்துக்கும் தமிழுக்கும் பல ஒற்றுமைகள் உண்டு! கரையோரச் சிங்களவர்கள் எல்லோரும் ஆதித் தமிழர்களே!

எனவே.. அவர்கள் ஏன் சிங்களம் படிக்கக் கூடாது?

 

எல்லா நாய்களும்... தங்கள் மொழியில் குரைக்கும் போது....தமிழ் நாய் மட்டும் எதற்காக இன்னொரு நாயின் மொழியில் குரைக்க வேண்டுமென நீங்கள் எதிர் பார்க்கின்றீர்கள்?

யூத நாய்கள்...உலக மொழிகளை அறிந்திருந்தும்...தங்கள் நாட்டில் யூத மொழியிலேயே குரைக்க விரும்புகின்றனவே? அது ஏன்?

எங்களைச் சிங்களத்தில் குரைக்கும் படி கூறும்  வேற்றுமொழி நாய்கள் தமிழில் குரைக்க ஏன் பின்னிற்கின்றன?

 

1548167_orig.jpg

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

"எனவே.. அவர்கள் ஏன் சிங்களம் படிக்கக் கூடாது? "  அவர்கள் ஏன் தமிழ் படிக்க கூடாது

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, M.P said:

வெளிநாட்டில் வெள்ளைக்காரன் மொழி படிக்கும் போது எங்களுக்கு ஏற்படாத கூச்சம் அவமானம் ஏன் சிங்களம் படிக்கும் சிங்களம் போது வருகுது. சிங்களத்துக்கு எங்கள் தமிழுக்கும் பல ஒற்றுமை உண்டு. இலகுவாக படிக்கலாம். என்ன மெல்லினமே இல்லாத மொழி என்பதால் தமிழ் போல் ஒரு இனிமை இல்லை. சிங்கள பாட்டு கேடடால் புரியும்.

புதுசா ஒரு நல்லிணக்க ஆதரவாளார் போல கிடக்கு....

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

ஒரு மொழியை ஒருவன் விரும்பி கற்கும் போது....இருக்கும் ஆர்வம் வேறு,
அந்த மொழியையையோ, மதத்தையோ திணிக்கும் போது.... அதில் வெறுப்புத் தான் ஏற்படும்.
அதில்... சிங்களமும், புத்த சமயமும் முதலிடம்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ஜீவன் சிவா said:

யாரோ காறி மூஞ்சியில துப்பின மாதிரி இருந்தது.

இல்லை, நானே குப்புற படுத்திருந்து முகட்டை நோக்கி துப்ப அது திரும்பி எனது மூஞ்சியில் விழுந்தது போலிருந்தது.

தமிழ் தேசியம் பேசும் விண்ணர்களுக்கு சிங்களம் தெரியாது என்பது ஒரு பெருமையாக இருக்கலாம். இனவாதிகளுக்கு அது கர்வமாக கூட இருக்கலாம் - எனக்கு அவமானமாக இருக்குது.

சிவா அண்ணை 
இப்பிடி முகத்தில் துப்ப்பிக்கொள்ளும்  அளவுக்கு சிங்களம் தெரியாதது ஒரு குறை இல்லை 
அத்துடன் இந்த மொழியை படிப்பதால் இந்த கேடு கேட்ட நாட்டில் மட்டுமே ஏதாவது புடுங்கலாம். 

தெரிந்து  வைத்திருந்தால் நல்லது ...ஆனால் கட்டாயம் இல்லை 

இவ்வளவு பாஷை தெரிந்தும் உங்களுக்கு தமிழ் தெரியவில்லையே என்று அந்த மாணவன் சொல்லியிருந்தால் நீங்கள் கவலைப்படுவதில் அர்த்தம் உண்டு 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

சிங்களத்துக்கு முதல் ஒழுங்காத் தமிழையும் அதற்கடுத்ததாக ஆங்கிலத்தையும் எல்லோரும் படிக்க வேணும் பாருங்கோ.  ஆங்கிலம் சர்வதேசமொழி.  இனிவாற காலத்தில சீன மாண்டரீனுக்கு மூன்றாவது இடத்தைக் கொடுக்க வேணும்.  அதுக்குப் பிறகு சிங்களம் படிக்க மூளையில இடமிருந்தாப் படிக்கலாம்.  இந்தியாவில தமிழ்நாட்டிலயும் இதே மாதிரி மூளையில இடமிருந்தா மட்டும் இந்தி படிக்கலாம்.

Link to post
Share on other sites

சிங்களவருக்கு தமிழ் தெரியாது. ஏனெனில் அவர்களுக்கு யாரும் புகுத்தவில்லை. தமிழர்களும் அப்படித்தான்.புகுத்தி சிங்களம் படிக்க வேண்டிய அவசியம் என்ன? விரும்பினால் யாரும் எந்த மொழியும் படிக்கலாம். இதில் சிங்களம் தெரியாததால் வெட்கித்தலை குனிய என்ன உள்ளது?

கனடாவில் அரச கரும மொழிகளாக ஆங்கிலமும் பிரெஞ்சும் உண்டு. ஆங்கிலம் பேச தெரிந்தவர் பிரெஞ் தெரியாததால் வெட்கி தலை குனியவில்லை. அதே போல் பிரெஞ் தெரிந்தவர் ஆங்கிலம் தெரியவில்லை என வெட்கி தலை குனியவில்லை. இது எமக்கும் பொருந்தும்.எமது தாழ்வு மனப்பான்மை தான் வெட்கித்தலை குனிய  காரணம் என நினைக்கிறேன்.

 

Link to post
Share on other sites

ஜீவன் சிவா,

இரண்டு நட்ட்களுக்கு முன்புதான் கொழும்பில் கடந்த பத்து வருடங்களாக இலக்கத்தகடு பெற்றுக்கொள்ளாத எனது மோட்டர் சைக்கிளுக்கு இலக்கத் தகடு பெற்றிருந்தேன் அதுவும் கொழும்பு ஆர் எம் பியில் எனக்குச் சிங்களத்தில் சுட்டுப்போட்டாலும் ஒரு சொல்லுகூட வராது. தவிர சிங்களம் தெரிந்திருந்தால் சிலசமயம் அலுவல் நடைபெற்றிருக்காது காரணம் மோட்டார் வாகனப் போக்குவரத்து இணை ஆணையாளர் இவ்விடையம் முடிய நிறைய நாட்கள் எடுக்கும் (கிட்டத்தட்ட மூன்று மாதங்கள்) எனக்கூற நான் பேந்தப்பேந்த முழிக்கிறதைப் பார்த்து பரிதாபப்பட்டு பழைய வர்த்தமாணியின் அறிவித்தலின் நகலை எடுத்து, அதில் எதையோ எழுதி, எனது விண்ணப்பத்துடன் இணைத்து, அலுவலை மனிசன் முடிச்சுக்கொடுத்திட்டுது.

சத்தியமாகச் சொல்லுறன் இவ்வளவுக்கும் ஒருசதமேனும் நான் இதற்காகக் கையூட்டுக்கொடுக்கவில்லை.

எனது எண்ணம் சிங்களம் தெரிந்தால் இது நடக்காது.

ஆனால் யாழ்ப்பாணத்தில் எல்லா டுயூட்டரிக் கொட்டில்களிலும் சிங்களம் பேச எழுதப் படிப்பிகிறார்கள். தவிர பாடசாலை மாணவர்கள் அனைவருக்கும் சிங்கள அறிவு சொல்லிக்கொள்ளும்படி உண்டு ஆளுக்காள் மாறுபடும்.

சிங்கள மொழித்தேர்வில் சித்தியடைந்த தமிழ் அரச உத்தியோகத்தர்களுக்கும் தமிழ் மொழி தெரிந்த சிங்கள அரச உத்தியோகத்தர்களுக்கும் மட்டுமே பதவி உயர்வு இங்கிரிமென்ட் இவைகள் கிடக்கும். தவிர மினிபஸ்சில் முன் சீட்டில் அமர்வதற்காக சிங்களம் அறிந்திருக்கத் தேவையில்லை.

Link to post
Share on other sites

இலங்கை பல்கலைக்கழகங்களில் கூட ஆங்கிலம் தான் பாட மொழி.

இங்க சிலர் நல்லா விடுப்புப் காட்டினம். tw_blush::rolleyes:

சிங்களவனே ஆங்கிலம் கதைக்கிறதில பெருமைப்படுறான். இவை என்னடான்னா...........................  தமிழர்களிடம் சிங்களத்தைப் புகுத்தினமாம்.

முதல்ல சர்வதேச மொழியை ஒழுங்காப் படிங்க. எல்லாரும் எல்லாரையும் புரிஞ்சு கொள்ளலாம். :rolleyes:

Link to post
Share on other sites

பல வருடங்களாக துபாயில் கேட்டுக் கேட்டு  புளித்துப்போன கேள்வி..!

இங்கே பெரும்பாலும் டாக்ஸிகளில் போகும்போது ஆசிய நாட்டவராக இருந்தால் கேட்கும் முதல் கேள்வி..

ஒருமுறை 'தெய்ரா துபாய்' செல்ல டாக்ஸியில் ஏறியவுடன் டாக்ஸி ஓட்டுநர் கேட்டது

"ஹிதர் ஹை..?"

நான் கேள்விக்குறியுடன் அவரின் முகத்தை நோக்க, மறுபடியும் அதே கேள்வி..!

"உங்கள் மொழியை புரிந்துகொள்ள முடியவில்லை..!" என அழுத்தமாக ஆங்கிலத்தில் கூறியவுடன் இறங்கினார்... "சாரி, நீங்கள் எங்கே போகவேண்டும்..?"

"நாஸர் ஸ்கொயர்..!" என்றேன்.

பின் சில நிமிடங்களில் நிலமை சகஜமானதும், சினேகமாக அவர் ஆங்கிலத்தில் தொடர்ந்தார்,

"உங்களுக்கு இந்தி தெரியாதா..?"

"தெரியாது"

"இந்தி உங்கள் நாட்டு மொழியல்லவா..?"

"இல்லை, எனது நாட்டு மொழி தமிழ்!"

"உங்கள் நாடு எது..? எங்கே இருக்கிறது..?"

"தமிழ்நாடு, சென்னை"

"தமிழ்நாடு, இந்தியாவுடான அங்கம் தானே? உங்கள் தேசிய மொழியான(?) இந்தியை ஏன் கற்றுக்கொள்ளவில்லை..?"

"60 வருடங்களுக்குமுன் இந்தியா என்ற நாடே இல்லை, ஆனால் என் தமிழ்ப் பகுதி, பல்லாயிரம் ஆண்டுகளாக தனித்துவமாக, தனி நாடாக இருந்தது..இப்பொழுதும் தொடர்கிறது..!"

"தமிழ்நாடு இந்தியாவின் ஒரு பகுதி. இந்தியாவின் பெரும்பான்மையான மக்கள் பேசும் பொழி இந்தி. இந்தியை படித்தால் இந்தியாவில் எங்கும் பிழைக்கலாம்..!"

(ஸ்ஸப்பா.. இம்மாதியான சிந்தனையைக் கேட்டுக்கேட்டு வெறுத்தே போச்சு!)

"தேவை இல்லை, ஆங்கிலத்தை படித்தால் உலகில் எங்கும் பிழைக்கலாம், உலகத்தின் சிறுபகுதிதான் இந்தியா. என் தொழிலிற்கு தேவைப்பட்டால் அரபியை படிப்பேனேயொழிய இந்தியை அல்ல. எந்த மொழியை கற்பது என்பது தேவையை பொருத்தது..இந்தி, 40சதவீத வட இந்திய மக்களால் மட்டுமே பேசப்படுகிறது..இப்போழுதும் இந்தி பேசாத மக்களிடம் அது வலிந்து திணிக்கப்படுகிறது..!"

"முடிவாக சொல்லுங்கள், நீங்கள் இந்தியன் இல்லையா..?"

"இல்லை, நான் தமிழன்..!"

பெரும்பாலும் இத்தோடு உரையாடல் முடிந்து வேறொரு பொருள் சம்மந்தமாக தொடரும்.

சில டாக்ஸி ஓட்டுநர்கள் மிக விவரமாக, "உங்கள் கடவுச்சீட்டில் என்ன எழுதியுள்ளது..?" என வளைத்துக் கேட்பார்கள்..!

"எழுதியுள்ளது இந்தியன், ஆனால் தமிழ்க் குடிமகனாக விரும்புகிறேன், அவர்களை கொடுக்கச் சொல்லுங்கள் ..! புதிய தமிழ்க் கடவுச்சீட்டை பெறத் தயார்..!" என முடித்துவிடுவேன்..

டாக்ஸி ஓட்டுநர் அமைதியாகிவிடுவார்..

இது ஒரு தொடர்கதை..!

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

ஒரு பெண் தான் காதலித்த ஆணோடு படுப்பதிலும் 
ஒரு காம வெறி பிடித்த வல்லுறவு கரனுடன் படுப்பதிலும் 

நிகழ்வது என்னவோ ஓன்றுதானே ?
என்றுதான் ............. இனி விட்டு கொடுப்பு வீரர்கள் 
வாய் வீச்சு தொடங்க போகிறது என்று நினைக்கிறேன்.


வல்லுறவு கொண்ட இராணுவத்தினர் மீது ஐ நா வில் வழக்குப்போட நிற்கும் 
தமிழர்களை நினைத்து ... வெட்க்கி தலை குனிகிறேன்! 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

எந்த மொழியையும் தேவைக்காகவும், சுய விருப்பத்திற்காகவும்தான் கற்கின்றோம்.. விருப்பமில்லாத எதையும் (மொழியாகட்டும், வேறு விடயங்களாகட்டும்) கற்பது இலகுவானதல்ல.

சிங்களவர்கள் தமிழர்களை மேலாதிக்கம் செய்யும்வரை பெரும்பாலான தமிழர்களுக்கு சிங்களம் படிப்பதில் நாட்டம் இருக்காது. அத்தோடு சிங்களம் திராவிடக் குடும்ப மொழியாக (மலையாளம், கன்னடம், தெலுங்கு போன்ற) இல்லாததால் அதன் அந்நியத்தன்மையே மொழியை அறியவிடுவதில்லை.

இதுபோன்ற காரணங்களால்தான் எமது தலைமுறை சிங்களத்தைக் கற்கவில்லை.

 

ஆனால் தற்போது இனங்களுக்கான ஐக்கியத்தையும், புரிந்துணர்வையும் உருவாக்க இலங்கைத் தேசியம் என்று ஒற்றைத் தேசியத்தை நிலைநாட்டும் செயற்பாடே நடக்கின்றது. இதற்கு தமிழர்கள் சிங்கள மொழியையும், சிங்களவர்கள் தமிழ் மொழியையும் தெரிந்துகொள்ளவேண்டும்தான். ஆனால் சிங்களவர்கள் தமிழர்களைப் படிப்பது நடக்காது. எனவே சிறுகச் சிறுக தமிழ் மொழி இல்லாமல் இலங்கை முழுவதும் சிங்களமாகவே மாறிவிடும்.

புலம்பெயர்ந்த எமது தலைமுறையும் தாம் வசிக்கும் நாடுகளின் மொழிக்காரர்கள் ஆகிவிடுவார்கள் (தமிழர்கள் என்ற அடையாளத்தோடு!).

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

சும்மா ஒரு பரபரப்புக்காக.......ஜீவன்  கந்தாந்தரட்ட போமஸ்துதி

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

நான் கூட கொழும்பு சென்றால் பே  பே பே பே என்று முளிக்கிறதுதான் ஏதோ ஆங்கிலம் அரைகுறை வேற கொஞ்சம் சிங்களத்தையும்  தூக்கி போடுவன் அவன் அவன் ட  மொழியை மறக்காமல் இருக்கும் வரைக்கும் பேசி விடுவேன்  ஹிஹிஹிஹி

சில நேரம் சைகை மட்டுமே  என்ன வாழ்க்கைகயடா இரு மொழி ஒரு நாடு ஆனால் இங்கே சிங்களவர்கள் தமிழ் கற்க வேண்டும் அதே போல் தமிழர்களும் சிங்களம் கற்க வேண்டும்  தேவைகளுக்காக சிங்கள பகுதிகளுக்கு செல்லும் போது ( இல‌ங்கையில் வசிப்போர் ):unsure:

Link to post
Share on other sites

தமிழ் பேசக்கூடிய சிங்கள மக்களை விடச் சிங்களம் பேசத் தெரிந்த தமிழர்களே இலங்கையில் அதிகம்.

56 இல் தனிச் சிங்களச் சட்டம்  சிங்கள அரசினால் திணிக்கப்பட்டதால்  மட்டுமே

தமிழர்கள் சிங்கள மொழியை வெறுக்க ஆரம்பித்தனர்.

இப்போது வெட்கித் தலை குனிய ஒன்றுமே இல்லை
சிங்கள மொழியைக் கற்காதவர்கள் வீரத்தமிழர்களே

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

எனக்கு தெரிந்து பொதுவாக கொழும்பையும் அதன் சுற்றுப்புறங்களிம் பிறந்து வளர்ந்த தமிழர்கள் சிங்களம் கதைக்க கூடியவர்களே.

இதற்கு காரணம் எங்களை சுற்றி வசிப்பவர்கள் சிங்களவர்கள் என்றபடியினால் நாங்களும் அவர்க‌ளுடன் இதயத்தால் இணந்து ஒன்றாக வாழத்தொடங்கிவிட்டதால் அவர்களும் எங்களை சக மனிதர்களாக மதித்து தாங்கள் சகோதர்களை போல நடத்துகின்றார்கள். அவர்கள் வீட்டில் எந்த நல்ல/கெட்ட விடயம் நடந்தாலும் நாங்கள் கலந்து கொள்வோம் அதுபோல் அவர்களும் எங்கள் வீட்டிட்க்கு வருவார்கள் எனவே எனது சிறுவயது முதல் அவர்களது மொழி நன்கு தெரியும். அவர்களுக்கும் தமிழ் தெரியும். இதனால் எங்களது அடையாளத்தை நாங்கள் ஒருபோது இழக்கவில்லை.

இலங்கையில் இரண்டு மொழிகள் உண்டு, தமிழ் அல்லது சிங்களம் உங்களுக்கு விருப்ப‌மானமொழியில் நீங்கள் கல்வி கற்கலாம். 
(இப்பொழுது பெரும்பாலும் எல்லோரும் ஆங்கிலத்தில்தான் கற்கின்றார்கள்), உயர்கல்வி ஆங்கிலத்திலேயே கற்பிக்கப்படல் வேண்டும்.
 
வடக்கு கிழ‌க்கை  சேந்தவர்களுக்கு சிங்களம் தெரியாமைக்கு காரணம் இலங்கையின் இனப்பரம்பலே. வடக்கில் தமிழர்கள் அதிகம் எனவே அங்கு பிறந்து வாழும் சிங்களவன் அழகாக தமிழ் க‌தைப்பான், அதேபோல் தெற்கில் வாழும் தமிழன் சிங்களத்தில் நன்கு உரையாடுவான். 

இங்கு யாரையும் யாரும் மேலாதிக்கம் செய்யவில்லை, அரசிய ல்வாதி ஊத்தைகள்தான் இந்த மாதிரியான மேலாதிக்கத்தையும் இனவெறியையும் பரப்புகின்றார்கள். மேலும் இனம் என்று வரும்போது எல்லோரும் இனவாதிகள்தான் இதில் தமிழர்கள் சிங்களவர்கள் என வேறுபாடில்லை.

ஓரு பேச்சுக்கு வைத்துக்கொள்வோம், இலங்கையில் தமிழர்கள் பெரும்பான்மையாகவும் சிங்களவர்கள் சிறுபான்மையாகவும் இருந்தால் என்ன நடக்கும்?  

இங்கு கருத்தெழுதும் பலர் சிங்கள மக்களுடன் சரியாக ஒன்றிணைந்து வாழவில்லை, அவர்களை சரியாக புரிந்து கொள்ளவில்லை. எத்தனை தமிழ் அரசியல்வாதிகள் தமிழர்களது நியாயமான போராட்டத்திற்கா காரணங்களை அடிமட்ட/பாமர/கிராம‌ சிங்கள மக்களிடம் சரியான முறையில் விளங்கப்படுத்தியுள்ளார்கள்? அல்லது கொண்டு சென்றுளார்கள்?

சிங்களவன் அடிக்கின்றான்/சிங்களவன் இன்வாதி/சிங்களவன் துவேசி
இதுதான் தமிழர்களின் கூப்பாடு. சிங்களவன் கொடியா என கத்தினால், அடோ உம்பகே ரடே உம்படம அனுராதபுரங் எயாட யன்ட பே, பலயங் ஹுத்தோ எனக் நாங்களும் திருப்பி கத்த வேண்டும்.

அதை விட்டிட்டு நாட்ட விட்டு ஓடுகிறது, பிறகு ஜெர்மனி நல்லம் இங்கிலாந்து சரியில்லை என அலட்டுவது. பிரான்சில் ஆங்கிலம் இல்லை என பிள்ளைகள் படிப்பிற்காக இங்கிலாந்து ஓடுவது,பிறகு brit-exit கோசம் போடுவது, போலிஷ்காரர் எல்லம் இங்கு வருகின்றார்கள் இங்கிலாந்து சரியில்லை என கனடா அல்லது அவுஸ் ஓடுவது, இப்படியே எதிலும் திருப்பதியற்று வாழ்க்கை முழுவது நாடோடிபோல் ஓடிக்கொண்டிருப்பர்கள்.

 
   
 

7 hours ago, ராசவன்னியன் said:

நீங்கள் தலைகீழ் நின்று தண்ணீர் குடித்தாலும் முதலாவது இந்தியரே, அதன் பிறகுதான் தமிழர். இந்தியர்கள் என்றாலே முதலில் ஞாபகம் வருவது சீக்கியர்களே. இந்தி பேசுபவர்கள் அல்ல‌

தமிழ்க் குடிமகனாக விரும்புகிறேன், அவர்களை கொடுக்கச் சொல்லுங்கள் ..! புதிய தமிழ்க் கடவுச்சீட்டை பெறத் தயார்..!" என முடித்துவிடுவேன்..

இந்த மாதிரியான எண்ணங்களே பாரிய மனித அழிவிற்க்கு காரணமாகியது


 

7 hours ago, ராசவன்னியன் said:

நீங்கள் தலைகீழ் நின்று தண்ணீர் குடித்தாலும் முதலாவது இந்தியரே, அதன் பிறகுதான் தமிழர். இந்தியர்கள் என்றாலே முதலில் ஞாபகம் வருவது சீக்கியர்களே. இந்தி பேசுபவர்கள் அல்ல‌

தமிழ்க் குடிமகனாக விரும்புகிறேன், அவர்களை கொடுக்கச் சொல்லுங்கள் ..! புதிய தமிழ்க் கடவுச்சீட்டை பெறத் தயார்..!" என முடித்துவிடுவேன்..

இந்த மாதிரியான எண்ணங்களே பாரிய மனித அழிவிற்க்கு காரணமாகியது


 

Link to post
Share on other sites
1 hour ago, colomban said:

நீங்கள் தலைகீழ் நின்று தண்ணீர் குடித்தாலும் முதலாவது இந்தியரே, அதன் பிறகுதான் தமிழர். இந்தியர்கள் என்றாலே முதலில் ஞாபகம் வருவது சீக்கியர்களே. இந்தி பேசுபவர்கள் அல்ல‌

தமிழ்க் குடிமகனாக விரும்புகிறேன், அவர்களை கொடுக்கச் சொல்லுங்கள் ..! புதிய தமிழ்க் கடவுச்சீட்டை பெறத் தயார்..!" என முடித்துவிடுவேன்..

இந்த மாதிரியான எண்ணங்களே பாரிய மனித அழிவிற்க்கு காரணமாகியது

நிச்சயம் அல்ல. இந்த இந்தியன் 'tag' அதிக தலைமுறைகள் நீடிக்காது என்றே தோன்றுகிறது.

தமிழன் என்ற எண்ணமே இன்னமும் இந்தியாவில் ஓரளவேனும் தனித்துவாமாக இருக்க உதவுகிறது.. எந்த உணர்வுமின்றி, விழிப்பின்றியிருந்தால் பீகாரிகள் மாதிரி நிச்சயம் பின் தங்கியிருப்போம்..

பாரிய மனித அழிவிற்கான முதல் காரணி தமிழர்களின் ஒற்றுமையின்மை. கேரளாக்காரன்களால் ஏன் தில்லியில் ஆளுமை செலுத்த முடிகிறதென்றால் அவர்களின் ஒற்றுமையே.அதை நீங்கள் வசிக்கும் கத்தாரிலும் காணலாம்..

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, ராசவன்னியன் said:

நிச்சயம் அல்ல. இந்த இந்தியன் 'tag' அதிக தலைமுறைகள் நீடிக்காது என்றே தோன்றுகிறது.

தமிழன் என்ற எண்ணமே இன்னமும் இந்தியாவில் ஓரளவேனும் தனித்துவாமாக இருக்க உதவுகிறது.. எந்த உணர்வுமின்றி, விழிப்பின்றியிருந்தால் பீகாரிகள் மாதிரி நிச்சயம் பின் தங்கியிருப்போம்..

பாரிய மனித அழிவிற்கான முதல் காரணி தமிழர்களின் ஒற்றுமையின்மை. கேரளாக்காரன்களால் ஏன் தில்லியில் ஆளுமை செலுத்த முடிகிறதென்றால் அவர்களின் ஒற்றுமையே.அதை நீங்கள் வசிக்கும் கத்தாரிலும் காணலாம்..

 

ராச வன்னியன் அண்ணை  இந்திய  தமிழர்களை இந்திய  வேறு மாநிலத்தவர் ஒரு பொருட்டாக நினைப்பதில்லை நான் வெளிநாட்டில் இருக்கும் போது பார்த்த ஒன்று உதாரணம் மலையாளி, பஞ்சாபி கேட்டா மதராசி என்பார்கள் ஏனென்றால் வெள்ளையன் இந்தியாவை பிடிக்க அவர்கள் தமிழ் நாட்டில் தானாம் கால் ஊன்றினார்கள் என்று சொன்னான் அது உன்மையா விளக்கம் த‌ரவும் :rolleyes:

Link to post
Share on other sites
18 minutes ago, முனிவர் ஜீ said:

ராச வன்னியன் அண்ணை  இந்திய  தமிழர்களை இந்திய  வேறு மாநிலத்தவர் ஒரு பொருட்டாக நினைப்பதில்லை நான் வெளிநாட்டில் இருக்கும் போது பார்த்த ஒன்று உதாரணம் மலையாளி, பஞ்சாபி கேட்டா மதராசி என்பார்கள் ஏனென்றால் வெள்ளையன் இந்தியாவை பிடிக்க அவர்கள் தமிழ் நாட்டில் தானாம் கால் ஊன்றினார்கள் என்று சொன்னான் அது உன்மையா விளக்கம் த‌ரவும் :rolleyes:

இல்லை முனி..

வட இந்தியர்கள், தமிழர்களை அந்நியமாக பார்க்கக் காரணம், நாங்கள் இந்தியை உள்ளே விடவில்லை.. வட இந்தியர்களின் மொழியை, அவர்களின் ஆதிக்கத்தை துரத்திய/எதிர்க்கும் முதல்மாநிலம் இன்னமும் தமிழ்நாடுதான். அத்தோடு சமீபத்திய ராசீவ் காந்தியின் கொலையும், பழங்கால இ(ந்)திகாச கதையான இராவணன் - ராமன் மோதல்களும் காரணம்.

வெள்ளையன் இந்தியாவில் காலூன்றியது கல்கத்தாவில்தான்.. பின்னர்தான் 'இந்தியா' என சொல்லப்படும் பகுதிகளை ஆண்ட சிற்றரசுகளின் ஒற்றுமையின்மையை பயன்படுத்தி தன் ஆளுமையை தொடங்கினான். 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, புங்கையூரன் said:

வெள்ளைக்காரன் நாடுகளில் நாங்கள் குடியேறிகள்!

அவர்கள் தங்கள் மொழியை எங்கள் மீது திணிப்பதில்லை! நாங்களாகவே எமது தேவைகளுக்காகப் படிக்கிறோம்! அவுசிலும் ஆங்கிலம் தெரியாத பலர் பல வருடங்களாக வாழுகின்றார்கள்! அவர்கள் மீது மொழி திணிக்கப் படுவதில்லை!

ஆனால் இலங்கையில் நாங்கள் பூர்வீக குடிகள்!

சொந்த மொழியில் எமது தேவைகளை நிறைவு செய்ய வகை செய்ய வேண்டியது எமது அரசின் கடமை!

சிங்கள மொழி எமதினத்தின் மீது பலவந்தமாகத் திணிக்கப் படுகின்றது! அது தான் பிரச்சனையே!

பல மேற்கத்தைய நாடுகளில்...சீனமொழி, இந்தி, உருது, தமிழ் போன்ற மொழிகளில் தொடர்பாடல் வசதிகள் செய்யப்பட்டுள்ளது!

சிங்களத்தை விடவும்...தமிழ் அதிக நாடுகளிலும், அதிக மக்களாலும் பேசப்படுகின்றது!

உங்கள் கருத்துப்படி...பார்த்தாலும்..சிங்களத்துக்கும் தமிழுக்கும் பல ஒற்றுமைகள் உண்டு! கரையோரச் சிங்களவர்கள் எல்லோரும் ஆதித் தமிழர்களே!

எனவே.. அவர்கள் ஏன் சிங்களம் படிக்கக் கூடாது?

 

எல்லா நாய்களும்... தங்கள் மொழியில் குரைக்கும் போது....தமிழ் நாய் மட்டும் எதற்காக இன்னொரு நாயின் மொழியில் குரைக்க வேண்டுமென நீங்கள் எதிர் பார்க்கின்றீர்கள்?

யூத நாய்கள்...உலக மொழிகளை அறிந்திருந்தும்...தங்கள் நாட்டில் யூத மொழியிலேயே குரைக்க விரும்புகின்றனவே? அது ஏன்?

எங்களைச் சிங்களத்தில் குரைக்கும் படி கூறும்  வேற்றுமொழி நாய்கள் தமிழில் குரைக்க ஏன் பின்னிற்கின்றன?

 

1548167_orig.jpg

அண்ணை

அ விலிருந்தா??

அது தூங்குபவர்களுக்கு......

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • கல்லடி 😂 | Husband vs Wife | Sri Lanka Tamil Comedy   
  • எனக்கு சுவியர்தான்... அப்படி கடந்து போயிருப்பாரோ என்று சந்தேகமாக இருக்குது. 🤣
  • வியட்நாம் போரில் புலிட்சர் பரிசு வென்று உலகின் மனதை உலுக்கிய 'Napalm Girl' 'கிம்'மின் ஒளிப்படம் நினைவில் வருகிறது. அந்தப் படத்தை எடுத்த Nick Ut ம் ஒரு சமூகப் போராளியே. அப்போராளியின்  இடத்தில் அபிர்சனா தயாளகுருவை வைத்துப் பார்க்கிறேன். வாழ்த்துக்கள் தாயே !
  • இனவாதிகளை ஏமாற்றிய ‘ஈஸ்டர்’ ஆணைக்குழு    -எம்.எஸ்.எம். ஐயூப் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ, 2010 ஆம் ஆண்டு கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை நியமித்த போது, நியூயோர்க் நகரத்தைத் தளமாகக் கொண்ட ‘ஹியூமன் ரைட்ஸ் வொட்ச்’ நிறுவனம், அறிக்கை ஒன்றின் மூலம் இவ்வாறு குறிப்பிட்டிருந்தது. ‘தமது மோசமான மனித உரிமைகள் வரலாற்றைப் பற்றியும் பரவலாக இடம்பெறும் தண்டனையற்ற குற்றங்களைப் பற்றியுமான சர்வதேச விமர்சனங்களைத் திசை திருப்புவதற்காக, எவ்வித ஒழுங்குமற்ற ஆணைக்குழுக்களை நியமிக்கும் வரலாறொன்று இலங்கைக்கு இருக்கிறது. 1948ஆம் ஆண்டு சுதந்திரம் அடைந்தது முதல், குறைந்த பட்சம் அவ்வாறான 10 ஆணைக்குழுக்களையாவது இலங்கை நியமித்துள்ளது. அவற்றில் ஒன்றாவது குறிப்பிடத்தக்க பயனைத் தரவில்லை’. சர்வதேச மன்னிப்புச் சபையும் இந்த விடயத்தைப் பற்றி, 2009ஆம் ஆண்டு ஒரு புத்தகத்தை வெளியிட்டு இருந்தது. ‘Twenty Years of Make-Believe – Sri Lanka’s Commissions of Inquiry’ என்ற பெயரிலான அந்தப் புத்தகத்திலும் இலங்கையின் அரசாங்கங்கள் மனித உரிமைகள் விடயத்தில் நடந்து கொள்ளும் முறை விமர்சிக்கப்பட்டு இருந்தது. இலங்கை அரசாங்கங்கள் ஆணைக்குழுக்களை நியமிப்பதன் நோக்கம், புத்தகத்தின் பெயரிலேயே கோடிட்டுக் காட்டப்படுகிறது.  இலங்கையில் Law and Society Trust என்ற அமைப்பு, 2012ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம், இதே விடயத்தைப் பற்றி, ஒரு புத்தகத்தை வெளியிட்டு இருந்தது. ‘A Legacy to Remember – Sri Lanka’s Commissions of Inquiry – 1963- 2002’ என்ற பெயரிலான அந்தப் புத்தகத்தில், முன்னாள் பிரதமர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கவின் கொலை தொடர்பான ஆணைக்குழு முதல், 2002ஆம் ஆண்டு வரை, பல்வேறு அரசாங்கங்கள் நியமித்த ஆணைக்குழுக்கள், எவ்வாறு வெறும் கண்துடைப்புகளாக மாறின என்பது எடுத்துக் காட்டப்பட்டு இருந்தது. இலங்கையில் ஆணைக்குழுக்கள், நேர்மையான நடவடிக்கைகள் அல்ல என்பதையும் வெறும் அரசியல் நோக்கம் கொண்டவை என்பதையும், இந்நூல் தெளிவாக உணர்த்துகிறது.  ஆயினும், 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி, அதாவது அவ்வாண்டின் உயர்த்த ஞாயிறு தினம், மூன்று உல்லாசப் பிரயாண ஹோட்டல்கள் மீதும், மூன்று தேவாலயங்கள் மீதும், முஸ்லிம் பயங்கரவாதக் குழுவொன்று நடத்திய தாக்குதல் தொடர்பாக விசாரணை செய்வதற்காக, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்த ஆணைக்குழு, முன்னைய ஆணைக்குழுக்களை விட ஓரளவுக்கு வேறுபட்டதாகும். பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில், அந்தத் தாக்குதல் விடயத்தில் தாம் பொறுப்புதாரர் அல்ல என்று நிரூபிக்கும் நோக்கம், மைத்திரியிடம் இருந்திருக்கலாம். ஆனால், தாக்குதலின் பின்னணி என்ன என்பதை, ஆணைக்குழு மூலம் அறியும் உண்மையான நோக்கமும் அவரிடம் இருந்திருக்கலாம்.  உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பான இந்த ஆணைக்குழு, தம்மை நியமித்தவருக்கு எதிராகவே குற்றவியல் விசாரணை நடத்த வேண்டும் என்று பரிந்துரை செய்த, உலகில் ஒரே ஆணைக்குழு என்ற வகையில், வரலாற்றில் இடம்பிடிக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால், தமது இறுதி அறிக்கையை ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கும் போது, மைத்திரியே ஜனாதிபதியாக இருந்திருப்பாரேயானால், ஆணைக்குழு அவ்வாறானதொரு பரிந்துரையைச் செய்யுமா என்பதும் சந்தேகமே.  இதுவரை நியமிக்கப்பட்ட ஆணைக்குழுக்கள் அனைத்தும், அப்போதைய ஜனாதிபதியை ஆத்திரமூட்டாத வகையிலேயே தமது அறிக்கைகளைத் தயாரித்துள்ளன. அதேவேளை, பல ஆணைக்குழுக்கள் அப்போதைய ஜனாதிபதிக்குத் தேவையான முறையில், அவரைத் திருப்திப்படுத்தும் வகையில், தமது அறிக்கையைத் தயாரித்துள்ளன.  உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பான ஆணைக்குழுவும், ‘ஒரே நாடு; ஒரே சட்டம்’ என்ற அடிப்படையில், நாட்டில் சட்டம் அமைய வேண்டும் எனப் பரிந்துரைத்துள்ளது. ‘ஒரே நாடு; ஒரே சட்டம்’ என்பது, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் சுலோகமாகும். எனவே அது, தற்போதைய அரசாங்கத்தை திருப்திப்படுத்த மேற்கொள்ளப்பட்ட பரிந்துரையாகும்.  ஆணைக்குழு, நாட்டிலுள்ள அனைவரையும் ஏமாற்றத்துக்கு உள்ளாக்கியுள்ளது. தாக்குதலுக்குப் பின்னால், தாக்குதலை நடத்திய ஸஹ்ரான் ஹாஷிமுக்கும் தலைமை தாங்கிய ஒருவர் இருந்திருக்கலாம் என்றும் அவர்களுக்கு பணம் முதலானவற்றை வழங்கியவர்கள் இருக்க வேண்டும் என்றும் பலர் நம்பினர்.ஆனால் ஆணைக்குழு, ‘ஸஹ்ரானே தாக்குதல் நடத்திய குழுவின் தலைவர் என்றும் தெமட்டகொட வர்த்தகரான முஹம்மத் இப்ராஹீமின் இரு மகன்களான இன்சாப்,  இல்ஹாம் ஆகியோரே அக்குழுவுக்குத் தேவையான நிதி வசதிகளைச் செய்து கொடுத்துள்ளனர்’ என்றும் குறிப்பிட்டுள்ளது. இன்சாப், இல்ஹாம் ஆகிய இருவரும் தாக்குதல்களின் போது உயிரிழந்தனர். http://static2.tamilmirror.lk/assets/uploads/image_02b3471dfb.jpg ஓர் இயக்கத்தின் தலைவர், ஆரம்பத்திலேயே தற்கொலை செய்து கொள்வதில்லை என்ற அடிப்படையிலேயே பலர், ஸஹ்ரானுக்கு மேலாக மற்றொரு தலைவர் இருந்திருக்க வேண்டும் என்று வாதிடுகின்றனர்.  ஆனால், இந்தப் பயங்கரவாத குழுவுக்கு ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும் என்றோ, தனி நாட்டை அடைய வேண்டும் என்றோ, எவ்வித நோக்கமும் இருந்ததாக ஆதாரம் இல்லை. அவர்கள், பிற சமயத்தவரைக் கொலை செய்து, சுவர்க்கம் செல்லலாம் என்ற இஸ்லாத்துக்கு முரணான, மிருகத்தனமான, மூட நம்பிக்கையில் செயற்பட்டதாகவே தெரிகிறது. எனவே, இது போன்ற ஒரு குழுவின் தலைவரே, ஆரம்பத்தில் தற்கொலை தாக்குதல் நடத்த முன் வரலாம். ஆயினும், அவர்கள் தற்கொலைக் குண்டு தயாரிக்கும் தொழில்நுட்பத்தை, எவ்வாறு பெற்றனர் என்பது ஆராயப்பட வேண்டிய விடயமே. தாக்குதலுக்குப் பின்னால் இயங்கியவர்களை அம்பலப்படுத்தி, அவர்களுக்குத் தண்டனை வழங்க வேண்டும் என, கொழும்பு பேராயர்  கார்டினல் மல்கம் ரஞ்சித் ஆண்டகை, கடந்த இரண்டு வருடங்களாக, அரசாங்கத்தை வலியுறுத்தி வருகிறார்.அவர், அக்கருத்தை வெளியிடும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், தாக்குதலுக்குப் பின்னால் இருந்தவர்களைப் பற்றி, அவர் ஏதோ அறிந்து வைத்திருக்கிறார் அல்லது, குறிப்பிட்ட சிலரைச் சந்தேகிக்கிறார் போல் தெரிந்தது. ஆனால், ஆணைக்குழு அவ்வாறு எவரையும் குறிப்பிடவில்லை.  எனவே, இப்போது கத்தோலிக்க மக்கள் விரக்தியடைந்துள்ளனர். எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமையை ‘கறுப்பு ஞாயிறு’ எனப் பிரகடனப்படுத்தி இருக்கின்றனர்.  ஸஹ்ரானின் மனநோயாளர்களான பயங்கரவாதக் குழுவைத் தவிர்ந்த, ஏனைய இலங்கை முஸ்லிம்கள் மீதான சகல குற்றச்சாட்டுகளில் இருந்தும், அவர்களை ஆணைக்குழு விடுவித்துள்ளது. முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன், இதில் சிக்கலாம் எனப் பலர் நினைத்தனர். கர்தினாலும் அவ்வாறு சிந்திப்பதாகக் கடந்த காலத்தில் தெரிந்தது. ஆனால், சந்தேகநபர் ஒருவரைப் பற்றி, அப்போதைய இராணுவத் தளபத் மஹேஷ் சேனாநாயக்கவிடம் தொலைபேசியில் வினவியதைத் தவிர, அவருக்கு எதிராக ஆணைக்குழு எவ்வித குற்றச்சாட்டையும் சுமத்தவில்லை.  கடந்த வருடம், ஐந்து மாதங்களாக இரகசிய பொலிஸ் தலைமையகத்தில் தடுத்து வைக்கப்பட்டு, குற்றச்சாட்டுகளை நிரூபிக்க ஆதாரம் இல்லை என விடுவிக்கப்பட்ட ரிஷாட்டின் சகோதரர் ரியாத்தைப் பற்றியும், மேலும் விசாரணை நடத்த வேண்டும் என்று மட்டுமே ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. ஆனால், அதற்காக ஆணைக்குழு மேலதிக ஆதாரங்களை வழங்கவில்லை. ரிஷாட்டும் முன்னாள் மாகாண ஆளுநர்களான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், அஸாத் சாலி ஆகியோரும் பயங்கரவாதத்துக்கு உதவி புரிவதாகக் கூறி, அவர்கள் வகித்த பதவிகளில் இருந்து நீக்குமாறு கோரி, அத்துரலியே ரத்தன தேரர் 2019ஆம் ஆண்டு மே மாதம், தலதா மாளிகை வளவில் உண்ணாவிரதம் இருந்தார். ஆனால், அவர்களுக்கு எதிராகவும் ஆணைக்குழுவின் அறிக்கையில் பெரிதாக எதுவும் இல்லை. உண்மையிலேயே, இந்த மூன்று அரசியல்வாதிகளையும் விமல் வீரவன்ச, ரத்தன தேரர் போன்ற பேரினவாதிகளும் ஊடகங்களுமே பயங்கரவாதிகள் ஆக்கின. அந்தப் பிரசாரத்தை மக்கள் நம்பினர். இப்போது, ஆணைக்குழுவுக்கு ஆதாரமில்லாமையால் அவர்களைத் தாக்குதலோடு தொடர்புபடுத்தாது விட்டுவிட்டுள்ளது.  ஆயினும், மக்களைச் சமாதானப்படுத்துவதற்காக ரிஷாட், முன்னாள் இராணுவத் தளபதிக்கு தொலைபேசி அழைப்பொன்றை எடுத்தமை தொடர்பாக, விசாரணை நடத்த வேண்டும் என்று கூறியிருக்கிறது. அந்த விடயம் ஆணைக்குழுவின் பொறுப்புகளில் சேர்ந்த விடயமல்ல. இப்போது ஜனாதிபதி, இந்த ஆணைக்குழு அறிக்கையைப் பரிசீலித்து, எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளைத் தீர்மானிப்பதற்காக சமல் ராஜபக்‌ஷவின் தலைமையில், ஆறு பேர் கொண்ட அமைச்சரவைக் குழுவொன்றை நியமித்துள்ளார். அந்தக் குழுவில், இத்தகைய பாரிய பொறுப்பொன்றை நிறைவேற்றக் கூடிய நிபுணத்துவ அறிவுள்ளவர்கள் இருப்பதாகத் தெரியவில்லை. இறுதியில் மக்களின் பணத்தில், கோடி ரூபாய் செலவில் நடத்தப்பட்ட ஆணைக்குழு, என்ன செய்தது என்ற கேள்வி மட்டுமே மீதமாகியுள்ளது?   Tamilmirror Online || இனவாதிகளை ஏமாற்றிய ‘ஈஸ்டர்’ ஆணைக்குழு
  • அரசியலுக்காக இரணைத்தீவு தெரிவு செய்யப்பட்டுள்ளது     “முஸ்லிம் மக்களுக்கு எதிரான ஒடுக்குமுறையை ராஜபக்ச அரசாங்கம் இன்னும் கைவிடவில்லை. வலது கையில் கொடுப்பது போல நடித்துவிட்டு, அதனை இடது கையால் பறிக்கும் நயவஞ்சக அரசியலையே முன்னெடுத்து வருகின்றது.” – என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினருமான வேலுகுமார் சுட்டிக்காட்டினார். ஜனநாயக மக்கள் முன்னணியின் கண்டி மாவட்ட அலுவலகத்தில் இன்று (03) நடைபெற்ற விசேட கலந்துரையாடலொன்றில் பங்கேற்று கருத்து வெளியிடுகையிலேயே அவர் இந்த விடயத்தை சுட்டிக்காட்டினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “ கொரோனா வைரஸின் கோரத்தாண்டவத்தை எவ்வாறு விரைவில் கட்டுப்படுத்தி, நாட்டை இயல்பு நிலைக்கு கொண்டு வர முடியும் என உலக நாடுகள் கவனம் செலுத்திய நிலையில், கொரோனாவில் கூட அரசியல் நடத்தி, பேரினவாதிகளை திருப்திப்படுத்தும் முயற்சியில் இந்த அரசாங்கம் ஈடுபட்டது. கொவிட் – 19 தொற்றினால் உயிரிழப்பவர்களை அடக்கம் செய்வதற்கு உலகில் சிறு பரப்பளவுடைய நாடுகள் கூட அனுமதி வழங்கிய போதும், அதற்கு இலங்கை அரசாங்கம் அனுமதி வழங்கவில்லை. முஸ்லிம் மக்களின் மத உரிமை மறுக்கப்பட்டதுடன், நம்பிக்கையும் சிதைக்கப்பட்டது. தொழில்நுட்பக்குழு என ஒன்றைக் காரணம் காட்டி தனது குறுகிய அரசியல் நோக்கங்களை ஆளுந்தரப்பு நிறைவேற்றிக் கொண்டது. மக்களின் வலி, வேதனையில் கூட ‘அரசியல் சிற்றின்பம்’ கண்டனர். இந்நிலையிலேயே ஜெனிவாத் தொடரும் ஆரம்பமானது. முஸ்லிம் அமைப்புகள் இவ்விடயத்தை சர்வதேசம் வரை கொண்டு சென்றிருந்தன . இதனால் சர்வதேச அழுத்தங்களை சமாளிப்பதற்காகவும், முஸ்லிம் நாடுகளின் ஆதரவை பெறுவதற்காகவும் ஜனாஸாக்களை அடக்கம் செய்ய முடியும் என்ற அறிவிப்பை பிரதமர் விடுத்தார். பிரதமரின் இந்த அறிவிப்பைக் கூட மொட்டு கட்சி உறுப்பினர்கள் நிராகரித்து அரசியல் செய்தனர். இதற்கிடையில் இம்ரான் கான் வந்து சென்ற பிறகு வர்த்தமானி அறிவித்தல் வெளியானது. அத்துடன் இப்பிரச்சினை தீர்ந்துவிடும் என மக்கள் கருதினர். ஆனால் தமிழ், முஸ்லிம் மக்களுக்கிடையில் வலுப்பெற்ற நல் உறவை சீர்குலைக்கும் வகையில் தற்போது ‘இடத்தேர்வு’ பிரச்சினையை அரசு கிளப்பிவிட்டுள்ளது. அடக்கம் செய்வதற்கு பல இடங்கள் இருந்தும் அரசியலுக்காக இரணைத்தீவு தெரிவு செய்யப்பட்டுள்ளது. தமிழ், முஸ்லிம் மக்களுக்கிடையில் பகைமையை உருவாக்கும் செயலே இது . எனவே, பொருத்தமான இடங்களில் சடலங்களை அனுமதிப்பதற்கு இடமளிக்க வேண்டும். மாறாக ஒரு இடம் என அறிவித்து, இது விடயத்தில் மேலும் இழுத்தடிப்பு செய்யக்கூடாது.” – என்றார் வேலுகுமார்.   அரசியலுக்காக இரணைத்தீவு தெரிவு செய்யப்பட்டுள்ளது (adaderana.lk)
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.