Jump to content

சிங்களம் தெரியுமா?

Recommended Posts

சிங்களம் தெரியுமா?

யாழ்ப்பாணத்தில் இருந்து காங்கேசன்துறை நோக்கிய மினிபஸ்ஸில் முதல் பஸ்சை சன நெரிசல் காரணமாக விட்டுவிட்டு அடுத்ததில் ஏறி முன் சீற்றில் ஜாலியா குந்தி இருந்த போது பள்ளி சீருடைகளுடன் ஒரு மாணவர் குழாம். ஒருவரை தவிர அனைவரும் மாணவிகள். அந்த மாணவனும் என்ன நினைத்தானோ அருகில் வந்து அங்கிள் இதில இருக்கலாமா என்று நான் ஏதோ மினிபஸ் உரிமையாளர் போல கேட்டான். நானும் பக்கத்தில் இருந்த குட்டி சீட்டை மடித்து அவனின் வருகைக்கு உதவினேன். 

வந்த குட்டியன் கேட்ட முதல் கேள்வியே தூக்கி வாரிப்போட்டது. 

சிங்களம் தெரியுமா?

விசரனின் ஒஸ்லோ முருகா கத்தல்தான் மண்டைக்குள்ள முதலில் வந்தது.

சிங்களத்தில் எண்ணவே தெரியாத என்னை இவன் எதுக்கு தமிழில சிங்களம் தெரியுமா என்கின்றான். நானும் புரியாத மாதிரி கதைக்க தொடங்கினேன்.

என்னத்துக்கு யூனிபோர்மொடே எல்லாரும் வாறிங்க?

நாங்க இராமநாதன் கல்லூரிக்கு ஒரு போட்டிக்கு போறம் 

எந்த பள்ளிக்கூடம்?

பண்டத்தரிப்பு இந்து கல்லூரி

உங்கள் பழைய அதிபர் சரவணமுத்துவை தெரியுமா எண்டு கேட்டபின்தான் நானே நாக்கை கடித்தேன். அவர் இளைப்பாறியே ஒரு 40 வருடமாவது இருக்கும்.

நீங்களும் பண்டத்தரிப்பு இந்துவா?

இல்லை எனது நண்பன் உங்குதான் படித்தான், அவனின் அப்பாதான் பழைய அதிபர் சரவணமுத்து.

அப்ப நீங்க எங்கு படித்தநீங்கள்?

யாழ் மத்திய கல்லூரியிலும் மகாஜனா கல்லூரியிலும்

எப்படி இங்கு படித்த ஒருவர் உங்கள் நண்பனானார்? 

இருவரும் மஹாஜனாவில் ஒன்றாக படித்தம். 

இப்போது நாம் வயதை மறந்து நண்பர்களாகினோம்

என்ன போட்டி இண்டைக்கு?

சிங்கள பேச்சு, அங்கிள் நான் பேசி காட்டுறேன் ஒருக்கா சரி பிழை பாக்குறீங்களா?

எனக்கு சிங்களம் தெரியாது அப்பன்

அப்ப உங்களுக்கு தமிழை தவிர வேறு பாஷையே தெரியாதா என்று மண்டையில் சுத்தியலால் அடித்தான்.

இல்லை தமிழ், ஆங்கிலம், நோர்ஸ்க் சரளமாக பேசவரும், எழுதவும், வாசிக்கவும் முடியும், டேனிஷ், சுவீடிஷ், மலையாளம் ஓரளவு புரிந்து கொள்ளவும் முடியும்.

பரவாயில்லை அங்கிள் நான் ஒருமுறை பேசுகின்றேன் சரி பாருங்கள் என்றபடி எனது பதிலுக்கு காத்திராமல் சிங்களத்தில் ஏதோ பேசினான். 

ஒண்ணுமே புரியாவிட்டாலும் அடிக்கடி தமிழ் என்ற வார்த்தை வந்து போனது. தலையை ஆட்டியபடி தமிழின் பெருமை பற்றி சிங்களத்தில் பேசினான் என்று நினைத்து ஆதரவாய் இருந்தேன்..

அப்பன் உங்கட ஹோல்ட் வந்துட்டுது என்று இடை நிறுத்தியபடி வென்று வர வாழ்த்துக்களையும் சொன்னேன்.

இவ்வளவு பாஷை தெரிஞ்ச உங்களுக்கு சிங்களம் தெரியாதென்று பொய்தானே சொல்லுறீங்க என்றபடி இறங்கினான். 

யாரோ காறி மூஞ்சியில துப்பின மாதிரி இருந்தது.

இல்லை, நானே குப்புற படுத்திருந்து முகட்டை நோக்கி துப்ப அது திரும்பி எனது மூஞ்சியில் விழுந்தது போலிருந்தது.

தமிழ் தேசியம் பேசும் விண்ணர்களுக்கு சிங்களம் தெரியாது என்பது ஒரு பெருமையாக இருக்கலாம். இனவாதிகளுக்கு அது கர்வமாக கூட இருக்கலாம் - எனக்கு அவமானமாக இருக்குது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் சிறிது காலம் பொறுங்கள்.உங்கள் ஆதங்கம் நிறைவேறும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜீவன் அந்தப் பையன் ஒரு காலத்தில் நன்றாக இருப்பான்.

Link to comment
Share on other sites

வெளிநாட்டில் வெள்ளைக்காரன் மொழி படிக்கும் போது எங்களுக்கு ஏற்படாத கூச்சம் அவமானம் ஏன் சிங்களம் படிக்கும் சிங்களம் போது வருகுது. சிங்களத்துக்கு எங்கள் தமிழுக்கும் பல ஒற்றுமை உண்டு. இலகுவாக படிக்கலாம். என்ன மெல்லினமே இல்லாத மொழி என்பதால் தமிழ் போல் ஒரு இனிமை இல்லை. சிங்கள பாட்டு கேடடால் புரியும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லகாலம் முகட்டை நோக்கி துப்பினதுடன் விட்டுவிட்டீர்கள் முகட்டை நோக்கி சத்தியெடுத்திருந்தால்  என்னவாகியிருக்கும் - அந்த சத்தியிலேயே முழ்கி செத்துவிட்டிருப்பீர்கள். சிங்களம் தெரியாமல் போனதற்கு நீங்கள் அவமானப்படவேண்டிய தேவையே கிடையாது. சிங்களத்தை ஒரு மொழியாக சுயவிருப்பத்தின் பேரில் கற்பதற்கும்  அம் மொழியை திணித்து நாட்டை சிங்களமயமாக்கலுக்கும் நிறையவே வித்தியாசமுண்டு என்பதையும் நீங்கள் புரிந்து கொள்ளவேண்டும். சிங்கள அரசியல்வாதிகளின் பேரினவாத போக்கும் இலங்கை சிங்களவர்களின் நாடு என்ற எண்ணமும் சிங்களவர்கள் மத்தியில் நீங்கி மொழிககளுக்கு சம அந்தஸ்து வழங்கப்படவேண்டும். வேற்று மொழியால் தாய்மொழி சாவதை எவருமே அனுமதிக்கமாட்டார்கள். தமிழ்ப்பிரதேசங்களில் உள்ள எத்தனையோ பெயர்பலகைகள்  அறிவிப்பு பதாகைகளில் தமிழ் தவிர்க்கப்பட்டு பிழையாக எழுதப்பட்டு அல்லது ஓரங்கட்டப்பட்டு சிங்களத்தையே பிரதான மொழியாக பயன்படுத்தப்பட்டு வருவதும் கண்டனத்துக்குரியது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, M.P said:

வெளிநாட்டில் வெள்ளைக்காரன் மொழி படிக்கும் போது எங்களுக்கு ஏற்படாத கூச்சம் அவமானம் ஏன் சிங்களம் படிக்கும் சிங்களம் போது வருகுது. சிங்களத்துக்கு எங்கள் தமிழுக்கும் பல ஒற்றுமை உண்டு. இலகுவாக படிக்கலாம். என்ன மெல்லினமே இல்லாத மொழி என்பதால் தமிழ் போல் ஒரு இனிமை இல்லை. சிங்கள பாட்டு கேடடால் புரியும்.

வெள்ளைக்காரன் நாடுகளில் நாங்கள் குடியேறிகள்!

அவர்கள் தங்கள் மொழியை எங்கள் மீது திணிப்பதில்லை! நாங்களாகவே எமது தேவைகளுக்காகப் படிக்கிறோம்! அவுசிலும் ஆங்கிலம் தெரியாத பலர் பல வருடங்களாக வாழுகின்றார்கள்! அவர்கள் மீது மொழி திணிக்கப் படுவதில்லை!

ஆனால் இலங்கையில் நாங்கள் பூர்வீக குடிகள்!

சொந்த மொழியில் எமது தேவைகளை நிறைவு செய்ய வகை செய்ய வேண்டியது எமது அரசின் கடமை!

சிங்கள மொழி எமதினத்தின் மீது பலவந்தமாகத் திணிக்கப் படுகின்றது! அது தான் பிரச்சனையே!

பல மேற்கத்தைய நாடுகளில்...சீனமொழி, இந்தி, உருது, தமிழ் போன்ற மொழிகளில் தொடர்பாடல் வசதிகள் செய்யப்பட்டுள்ளது!

சிங்களத்தை விடவும்...தமிழ் அதிக நாடுகளிலும், அதிக மக்களாலும் பேசப்படுகின்றது!

உங்கள் கருத்துப்படி...பார்த்தாலும்..சிங்களத்துக்கும் தமிழுக்கும் பல ஒற்றுமைகள் உண்டு! கரையோரச் சிங்களவர்கள் எல்லோரும் ஆதித் தமிழர்களே!

எனவே.. அவர்கள் ஏன் சிங்களம் படிக்கக் கூடாது?

எல்லா நாய்களும்... தங்கள் மொழியில் குரைக்கும் போது....தமிழ் நாய் மட்டும் எதற்காக இன்னொரு நாயின் மொழியில் குரைக்க வேண்டுமென நீங்கள் எதிர் பார்க்கின்றீர்கள்?

யூத நாய்கள்...உலக மொழிகளை அறிந்திருந்தும்...தங்கள் நாட்டில் யூத மொழியிலேயே குரைக்க விரும்புகின்றனவே? அது ஏன்?

எங்களைச் சிங்களத்தில் குரைக்கும் படி கூறும்  வேற்றுமொழி நாய்கள் தமிழில் குரைக்க ஏன் பின்னிற்கின்றன?

1548167_orig.jpg

Link to comment
Share on other sites

"எனவே.. அவர்கள் ஏன் சிங்களம் படிக்கக் கூடாது? "  அவர்கள் ஏன் தமிழ் படிக்க கூடாது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, M.P said:

வெளிநாட்டில் வெள்ளைக்காரன் மொழி படிக்கும் போது எங்களுக்கு ஏற்படாத கூச்சம் அவமானம் ஏன் சிங்களம் படிக்கும் சிங்களம் போது வருகுது. சிங்களத்துக்கு எங்கள் தமிழுக்கும் பல ஒற்றுமை உண்டு. இலகுவாக படிக்கலாம். என்ன மெல்லினமே இல்லாத மொழி என்பதால் தமிழ் போல் ஒரு இனிமை இல்லை. சிங்கள பாட்டு கேடடால் புரியும்.

புதுசா ஒரு நல்லிணக்க ஆதரவாளார் போல கிடக்கு....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு மொழியை ஒருவன் விரும்பி கற்கும் போது....இருக்கும் ஆர்வம் வேறு,
அந்த மொழியையையோ, மதத்தையோ திணிக்கும் போது.... அதில் வெறுப்புத் தான் ஏற்படும்.
அதில்... சிங்களமும், புத்த சமயமும் முதலிடம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ஜீவன் சிவா said:

யாரோ காறி மூஞ்சியில துப்பின மாதிரி இருந்தது.

இல்லை, நானே குப்புற படுத்திருந்து முகட்டை நோக்கி துப்ப அது திரும்பி எனது மூஞ்சியில் விழுந்தது போலிருந்தது.

தமிழ் தேசியம் பேசும் விண்ணர்களுக்கு சிங்களம் தெரியாது என்பது ஒரு பெருமையாக இருக்கலாம். இனவாதிகளுக்கு அது கர்வமாக கூட இருக்கலாம் - எனக்கு அவமானமாக இருக்குது.

சிவா அண்ணை 
இப்பிடி முகத்தில் துப்ப்பிக்கொள்ளும்  அளவுக்கு சிங்களம் தெரியாதது ஒரு குறை இல்லை 
அத்துடன் இந்த மொழியை படிப்பதால் இந்த கேடு கேட்ட நாட்டில் மட்டுமே ஏதாவது புடுங்கலாம். 

தெரிந்து  வைத்திருந்தால் நல்லது ...ஆனால் கட்டாயம் இல்லை 

இவ்வளவு பாஷை தெரிந்தும் உங்களுக்கு தமிழ் தெரியவில்லையே என்று அந்த மாணவன் சொல்லியிருந்தால் நீங்கள் கவலைப்படுவதில் அர்த்தம் உண்டு 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களத்துக்கு முதல் ஒழுங்காத் தமிழையும் அதற்கடுத்ததாக ஆங்கிலத்தையும் எல்லோரும் படிக்க வேணும் பாருங்கோ.  ஆங்கிலம் சர்வதேசமொழி.  இனிவாற காலத்தில சீன மாண்டரீனுக்கு மூன்றாவது இடத்தைக் கொடுக்க வேணும்.  அதுக்குப் பிறகு சிங்களம் படிக்க மூளையில இடமிருந்தாப் படிக்கலாம்.  இந்தியாவில தமிழ்நாட்டிலயும் இதே மாதிரி மூளையில இடமிருந்தா மட்டும் இந்தி படிக்கலாம்.

Link to comment
Share on other sites

சிங்களவருக்கு தமிழ் தெரியாது. ஏனெனில் அவர்களுக்கு யாரும் புகுத்தவில்லை. தமிழர்களும் அப்படித்தான்.புகுத்தி சிங்களம் படிக்க வேண்டிய அவசியம் என்ன? விரும்பினால் யாரும் எந்த மொழியும் படிக்கலாம். இதில் சிங்களம் தெரியாததால் வெட்கித்தலை குனிய என்ன உள்ளது?

கனடாவில் அரச கரும மொழிகளாக ஆங்கிலமும் பிரெஞ்சும் உண்டு. ஆங்கிலம் பேச தெரிந்தவர் பிரெஞ் தெரியாததால் வெட்கி தலை குனியவில்லை. அதே போல் பிரெஞ் தெரிந்தவர் ஆங்கிலம் தெரியவில்லை என வெட்கி தலை குனியவில்லை. இது எமக்கும் பொருந்தும்.எமது தாழ்வு மனப்பான்மை தான் வெட்கித்தலை குனிய  காரணம் என நினைக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜீவன் சிவா,

இரண்டு நட்ட்களுக்கு முன்புதான் கொழும்பில் கடந்த பத்து வருடங்களாக இலக்கத்தகடு பெற்றுக்கொள்ளாத எனது மோட்டர் சைக்கிளுக்கு இலக்கத் தகடு பெற்றிருந்தேன் அதுவும் கொழும்பு ஆர் எம் பியில் எனக்குச் சிங்களத்தில் சுட்டுப்போட்டாலும் ஒரு சொல்லுகூட வராது. தவிர சிங்களம் தெரிந்திருந்தால் சிலசமயம் அலுவல் நடைபெற்றிருக்காது காரணம் மோட்டார் வாகனப் போக்குவரத்து இணை ஆணையாளர் இவ்விடையம் முடிய நிறைய நாட்கள் எடுக்கும் (கிட்டத்தட்ட மூன்று மாதங்கள்) எனக்கூற நான் பேந்தப்பேந்த முழிக்கிறதைப் பார்த்து பரிதாபப்பட்டு பழைய வர்த்தமாணியின் அறிவித்தலின் நகலை எடுத்து, அதில் எதையோ எழுதி, எனது விண்ணப்பத்துடன் இணைத்து, அலுவலை மனிசன் முடிச்சுக்கொடுத்திட்டுது.

சத்தியமாகச் சொல்லுறன் இவ்வளவுக்கும் ஒருசதமேனும் நான் இதற்காகக் கையூட்டுக்கொடுக்கவில்லை.

எனது எண்ணம் சிங்களம் தெரிந்தால் இது நடக்காது.

ஆனால் யாழ்ப்பாணத்தில் எல்லா டுயூட்டரிக் கொட்டில்களிலும் சிங்களம் பேச எழுதப் படிப்பிகிறார்கள். தவிர பாடசாலை மாணவர்கள் அனைவருக்கும் சிங்கள அறிவு சொல்லிக்கொள்ளும்படி உண்டு ஆளுக்காள் மாறுபடும்.

சிங்கள மொழித்தேர்வில் சித்தியடைந்த தமிழ் அரச உத்தியோகத்தர்களுக்கும் தமிழ் மொழி தெரிந்த சிங்கள அரச உத்தியோகத்தர்களுக்கும் மட்டுமே பதவி உயர்வு இங்கிரிமென்ட் இவைகள் கிடக்கும். தவிர மினிபஸ்சில் முன் சீட்டில் அமர்வதற்காக சிங்களம் அறிந்திருக்கத் தேவையில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை பல்கலைக்கழகங்களில் கூட ஆங்கிலம் தான் பாட மொழி.

இங்க சிலர் நல்லா விடுப்புப் காட்டினம். tw_blush::rolleyes:

சிங்களவனே ஆங்கிலம் கதைக்கிறதில பெருமைப்படுறான். இவை என்னடான்னா...........................  தமிழர்களிடம் சிங்களத்தைப் புகுத்தினமாம்.

முதல்ல சர்வதேச மொழியை ஒழுங்காப் படிங்க. எல்லாரும் எல்லாரையும் புரிஞ்சு கொள்ளலாம். :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பல வருடங்களாக துபாயில் கேட்டுக் கேட்டு  புளித்துப்போன கேள்வி..!

இங்கே பெரும்பாலும் டாக்ஸிகளில் போகும்போது ஆசிய நாட்டவராக இருந்தால் கேட்கும் முதல் கேள்வி..

ஒருமுறை 'தெய்ரா துபாய்' செல்ல டாக்ஸியில் ஏறியவுடன் டாக்ஸி ஓட்டுநர் கேட்டது

"ஹிதர் ஹை..?"

நான் கேள்விக்குறியுடன் அவரின் முகத்தை நோக்க, மறுபடியும் அதே கேள்வி..!

"உங்கள் மொழியை புரிந்துகொள்ள முடியவில்லை..!" என அழுத்தமாக ஆங்கிலத்தில் கூறியவுடன் இறங்கினார்... "சாரி, நீங்கள் எங்கே போகவேண்டும்..?"

"நாஸர் ஸ்கொயர்..!" என்றேன்.

பின் சில நிமிடங்களில் நிலமை சகஜமானதும், சினேகமாக அவர் ஆங்கிலத்தில் தொடர்ந்தார்,

"உங்களுக்கு இந்தி தெரியாதா..?"

"தெரியாது"

"இந்தி உங்கள் நாட்டு மொழியல்லவா..?"

"இல்லை, எனது நாட்டு மொழி தமிழ்!"

"உங்கள் நாடு எது..? எங்கே இருக்கிறது..?"

"தமிழ்நாடு, சென்னை"

"தமிழ்நாடு, இந்தியாவுடான அங்கம் தானே? உங்கள் தேசிய மொழியான(?) இந்தியை ஏன் கற்றுக்கொள்ளவில்லை..?"

"60 வருடங்களுக்குமுன் இந்தியா என்ற நாடே இல்லை, ஆனால் என் தமிழ்ப் பகுதி, பல்லாயிரம் ஆண்டுகளாக தனித்துவமாக, தனி நாடாக இருந்தது..இப்பொழுதும் தொடர்கிறது..!"

"தமிழ்நாடு இந்தியாவின் ஒரு பகுதி. இந்தியாவின் பெரும்பான்மையான மக்கள் பேசும் பொழி இந்தி. இந்தியை படித்தால் இந்தியாவில் எங்கும் பிழைக்கலாம்..!"

(ஸ்ஸப்பா.. இம்மாதியான சிந்தனையைக் கேட்டுக்கேட்டு வெறுத்தே போச்சு!)

"தேவை இல்லை, ஆங்கிலத்தை படித்தால் உலகில் எங்கும் பிழைக்கலாம், உலகத்தின் சிறுபகுதிதான் இந்தியா. என் தொழிலிற்கு தேவைப்பட்டால் அரபியை படிப்பேனேயொழிய இந்தியை அல்ல. எந்த மொழியை கற்பது என்பது தேவையை பொருத்தது..இந்தி, 40சதவீத வட இந்திய மக்களால் மட்டுமே பேசப்படுகிறது..இப்போழுதும் இந்தி பேசாத மக்களிடம் அது வலிந்து திணிக்கப்படுகிறது..!"

"முடிவாக சொல்லுங்கள், நீங்கள் இந்தியன் இல்லையா..?"

"இல்லை, நான் தமிழன்..!"

பெரும்பாலும் இத்தோடு உரையாடல் முடிந்து வேறொரு பொருள் சம்மந்தமாக தொடரும்.

சில டாக்ஸி ஓட்டுநர்கள் மிக விவரமாக, "உங்கள் கடவுச்சீட்டில் என்ன எழுதியுள்ளது..?" என வளைத்துக் கேட்பார்கள்..!

"எழுதியுள்ளது இந்தியன், ஆனால் தமிழ்க் குடிமகனாக விரும்புகிறேன், அவர்களை கொடுக்கச் சொல்லுங்கள் ..! புதிய தமிழ்க் கடவுச்சீட்டை பெறத் தயார்..!" என முடித்துவிடுவேன்..

டாக்ஸி ஓட்டுநர் அமைதியாகிவிடுவார்..

இது ஒரு தொடர்கதை..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பெண் தான் காதலித்த ஆணோடு படுப்பதிலும் 
ஒரு காம வெறி பிடித்த வல்லுறவு கரனுடன் படுப்பதிலும் 

நிகழ்வது என்னவோ ஓன்றுதானே ?
என்றுதான் ............. இனி விட்டு கொடுப்பு வீரர்கள் 
வாய் வீச்சு தொடங்க போகிறது என்று நினைக்கிறேன்.

வல்லுறவு கொண்ட இராணுவத்தினர் மீது ஐ நா வில் வழக்குப்போட நிற்கும் 
தமிழர்களை நினைத்து ... வெட்க்கி தலை குனிகிறேன்! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எந்த மொழியையும் தேவைக்காகவும், சுய விருப்பத்திற்காகவும்தான் கற்கின்றோம்.. விருப்பமில்லாத எதையும் (மொழியாகட்டும், வேறு விடயங்களாகட்டும்) கற்பது இலகுவானதல்ல.

சிங்களவர்கள் தமிழர்களை மேலாதிக்கம் செய்யும்வரை பெரும்பாலான தமிழர்களுக்கு சிங்களம் படிப்பதில் நாட்டம் இருக்காது. அத்தோடு சிங்களம் திராவிடக் குடும்ப மொழியாக (மலையாளம், கன்னடம், தெலுங்கு போன்ற) இல்லாததால் அதன் அந்நியத்தன்மையே மொழியை அறியவிடுவதில்லை.

இதுபோன்ற காரணங்களால்தான் எமது தலைமுறை சிங்களத்தைக் கற்கவில்லை.

ஆனால் தற்போது இனங்களுக்கான ஐக்கியத்தையும், புரிந்துணர்வையும் உருவாக்க இலங்கைத் தேசியம் என்று ஒற்றைத் தேசியத்தை நிலைநாட்டும் செயற்பாடே நடக்கின்றது. இதற்கு தமிழர்கள் சிங்கள மொழியையும், சிங்களவர்கள் தமிழ் மொழியையும் தெரிந்துகொள்ளவேண்டும்தான். ஆனால் சிங்களவர்கள் தமிழர்களைப் படிப்பது நடக்காது. எனவே சிறுகச் சிறுக தமிழ் மொழி இல்லாமல் இலங்கை முழுவதும் சிங்களமாகவே மாறிவிடும்.

புலம்பெயர்ந்த எமது தலைமுறையும் தாம் வசிக்கும் நாடுகளின் மொழிக்காரர்கள் ஆகிவிடுவார்கள் (தமிழர்கள் என்ற அடையாளத்தோடு!).

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சும்மா ஒரு பரபரப்புக்காக.......ஜீவன்  கந்தாந்தரட்ட போமஸ்துதி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் கூட கொழும்பு சென்றால் பே  பே பே பே என்று முளிக்கிறதுதான் ஏதோ ஆங்கிலம் அரைகுறை வேற கொஞ்சம் சிங்களத்தையும்  தூக்கி போடுவன் அவன் அவன் ட  மொழியை மறக்காமல் இருக்கும் வரைக்கும் பேசி விடுவேன்  ஹிஹிஹிஹி

சில நேரம் சைகை மட்டுமே  என்ன வாழ்க்கைகயடா இரு மொழி ஒரு நாடு ஆனால் இங்கே சிங்களவர்கள் தமிழ் கற்க வேண்டும் அதே போல் தமிழர்களும் சிங்களம் கற்க வேண்டும்  தேவைகளுக்காக சிங்கள பகுதிகளுக்கு செல்லும் போது ( இல‌ங்கையில் வசிப்போர் ):unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் பேசக்கூடிய சிங்கள மக்களை விடச் சிங்களம் பேசத் தெரிந்த தமிழர்களே இலங்கையில் அதிகம்.

56 இல் தனிச் சிங்களச் சட்டம்  சிங்கள அரசினால் திணிக்கப்பட்டதால்  மட்டுமே

தமிழர்கள் சிங்கள மொழியை வெறுக்க ஆரம்பித்தனர்.

இப்போது வெட்கித் தலை குனிய ஒன்றுமே இல்லை
சிங்கள மொழியைக் கற்காதவர்கள் வீரத்தமிழர்களே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு தெரிந்து பொதுவாக கொழும்பையும் அதன் சுற்றுப்புறங்களிம் பிறந்து வளர்ந்த தமிழர்கள் சிங்களம் கதைக்க கூடியவர்களே.

இதற்கு காரணம் எங்களை சுற்றி வசிப்பவர்கள் சிங்களவர்கள் என்றபடியினால் நாங்களும் அவர்க‌ளுடன் இதயத்தால் இணந்து ஒன்றாக வாழத்தொடங்கிவிட்டதால் அவர்களும் எங்களை சக மனிதர்களாக மதித்து தாங்கள் சகோதர்களை போல நடத்துகின்றார்கள். அவர்கள் வீட்டில் எந்த நல்ல/கெட்ட விடயம் நடந்தாலும் நாங்கள் கலந்து கொள்வோம் அதுபோல் அவர்களும் எங்கள் வீட்டிட்க்கு வருவார்கள் எனவே எனது சிறுவயது முதல் அவர்களது மொழி நன்கு தெரியும். அவர்களுக்கும் தமிழ் தெரியும். இதனால் எங்களது அடையாளத்தை நாங்கள் ஒருபோது இழக்கவில்லை.

இலங்கையில் இரண்டு மொழிகள் உண்டு, தமிழ் அல்லது சிங்களம் உங்களுக்கு விருப்ப‌மானமொழியில் நீங்கள் கல்வி கற்கலாம். 
(இப்பொழுது பெரும்பாலும் எல்லோரும் ஆங்கிலத்தில்தான் கற்கின்றார்கள்), உயர்கல்வி ஆங்கிலத்திலேயே கற்பிக்கப்படல் வேண்டும்.
 
வடக்கு கிழ‌க்கை  சேந்தவர்களுக்கு சிங்களம் தெரியாமைக்கு காரணம் இலங்கையின் இனப்பரம்பலே. வடக்கில் தமிழர்கள் அதிகம் எனவே அங்கு பிறந்து வாழும் சிங்களவன் அழகாக தமிழ் க‌தைப்பான், அதேபோல் தெற்கில் வாழும் தமிழன் சிங்களத்தில் நன்கு உரையாடுவான். 

இங்கு யாரையும் யாரும் மேலாதிக்கம் செய்யவில்லை, அரசிய ல்வாதி ஊத்தைகள்தான் இந்த மாதிரியான மேலாதிக்கத்தையும் இனவெறியையும் பரப்புகின்றார்கள். மேலும் இனம் என்று வரும்போது எல்லோரும் இனவாதிகள்தான் இதில் தமிழர்கள் சிங்களவர்கள் என வேறுபாடில்லை.

ஓரு பேச்சுக்கு வைத்துக்கொள்வோம், இலங்கையில் தமிழர்கள் பெரும்பான்மையாகவும் சிங்களவர்கள் சிறுபான்மையாகவும் இருந்தால் என்ன நடக்கும்?  

இங்கு கருத்தெழுதும் பலர் சிங்கள மக்களுடன் சரியாக ஒன்றிணைந்து வாழவில்லை, அவர்களை சரியாக புரிந்து கொள்ளவில்லை. எத்தனை தமிழ் அரசியல்வாதிகள் தமிழர்களது நியாயமான போராட்டத்திற்கா காரணங்களை அடிமட்ட/பாமர/கிராம‌ சிங்கள மக்களிடம் சரியான முறையில் விளங்கப்படுத்தியுள்ளார்கள்? அல்லது கொண்டு சென்றுளார்கள்?

சிங்களவன் அடிக்கின்றான்/சிங்களவன் இன்வாதி/சிங்களவன் துவேசி
இதுதான் தமிழர்களின் கூப்பாடு. சிங்களவன் கொடியா என கத்தினால், அடோ உம்பகே ரடே உம்படம அனுராதபுரங் எயாட யன்ட பே, பலயங் ஹுத்தோ எனக் நாங்களும் திருப்பி கத்த வேண்டும்.

அதை விட்டிட்டு நாட்ட விட்டு ஓடுகிறது, பிறகு ஜெர்மனி நல்லம் இங்கிலாந்து சரியில்லை என அலட்டுவது. பிரான்சில் ஆங்கிலம் இல்லை என பிள்ளைகள் படிப்பிற்காக இங்கிலாந்து ஓடுவது,பிறகு brit-exit கோசம் போடுவது, போலிஷ்காரர் எல்லம் இங்கு வருகின்றார்கள் இங்கிலாந்து சரியில்லை என கனடா அல்லது அவுஸ் ஓடுவது, இப்படியே எதிலும் திருப்பதியற்று வாழ்க்கை முழுவது நாடோடிபோல் ஓடிக்கொண்டிருப்பர்கள்.

7 hours ago, ராசவன்னியன் said:

நீங்கள் தலைகீழ் நின்று தண்ணீர் குடித்தாலும் முதலாவது இந்தியரே, அதன் பிறகுதான் தமிழர். இந்தியர்கள் என்றாலே முதலில் ஞாபகம் வருவது சீக்கியர்களே. இந்தி பேசுபவர்கள் அல்ல‌

தமிழ்க் குடிமகனாக விரும்புகிறேன், அவர்களை கொடுக்கச் சொல்லுங்கள் ..! புதிய தமிழ்க் கடவுச்சீட்டை பெறத் தயார்..!" என முடித்துவிடுவேன்..

இந்த மாதிரியான எண்ணங்களே பாரிய மனித அழிவிற்க்கு காரணமாகியது

7 hours ago, ராசவன்னியன் said:

நீங்கள் தலைகீழ் நின்று தண்ணீர் குடித்தாலும் முதலாவது இந்தியரே, அதன் பிறகுதான் தமிழர். இந்தியர்கள் என்றாலே முதலில் ஞாபகம் வருவது சீக்கியர்களே. இந்தி பேசுபவர்கள் அல்ல‌

தமிழ்க் குடிமகனாக விரும்புகிறேன், அவர்களை கொடுக்கச் சொல்லுங்கள் ..! புதிய தமிழ்க் கடவுச்சீட்டை பெறத் தயார்..!" என முடித்துவிடுவேன்..

இந்த மாதிரியான எண்ணங்களே பாரிய மனித அழிவிற்க்கு காரணமாகியது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, colomban said:

நிச்சயம் அல்ல. இந்த இந்தியன் 'tag' அதிக தலைமுறைகள் நீடிக்காது என்றே தோன்றுகிறது.

தமிழன் என்ற எண்ணமே இன்னமும் இந்தியாவில் ஓரளவேனும் தனித்துவாமாக இருக்க உதவுகிறது.. எந்த உணர்வுமின்றி, விழிப்பின்றியிருந்தால் பீகாரிகள் மாதிரி நிச்சயம் பின் தங்கியிருப்போம்..

பாரிய மனித அழிவிற்கான முதல் காரணி தமிழர்களின் ஒற்றுமையின்மை. கேரளாக்காரன்களால் ஏன் தில்லியில் ஆளுமை செலுத்த முடிகிறதென்றால் அவர்களின் ஒற்றுமையே.அதை நீங்கள் வசிக்கும் கத்தாரிலும் காணலாம்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, ராசவன்னியன் said:

ராச வன்னியன் அண்ணை  இந்திய  தமிழர்களை இந்திய  வேறு மாநிலத்தவர் ஒரு பொருட்டாக நினைப்பதில்லை நான் வெளிநாட்டில் இருக்கும் போது பார்த்த ஒன்று உதாரணம் மலையாளி, பஞ்சாபி கேட்டா மதராசி என்பார்கள் ஏனென்றால் வெள்ளையன் இந்தியாவை பிடிக்க அவர்கள் தமிழ் நாட்டில் தானாம் கால் ஊன்றினார்கள் என்று சொன்னான் அது உன்மையா விளக்கம் த‌ரவும் :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, முனிவர் ஜீ said:

இல்லை முனி..

வட இந்தியர்கள், தமிழர்களை அந்நியமாக பார்க்கக் காரணம், நாங்கள் இந்தியை உள்ளே விடவில்லை.. வட இந்தியர்களின் மொழியை, அவர்களின் ஆதிக்கத்தை துரத்திய/எதிர்க்கும் முதல்மாநிலம் இன்னமும் தமிழ்நாடுதான். அத்தோடு சமீபத்திய ராசீவ் காந்தியின் கொலையும், பழங்கால இ(ந்)திகாச கதையான இராவணன் - ராமன் மோதல்களும் காரணம்.

வெள்ளையன் இந்தியாவில் காலூன்றியது கல்கத்தாவில்தான்.. பின்னர்தான் 'இந்தியா' என சொல்லப்படும் பகுதிகளை ஆண்ட சிற்றரசுகளின் ஒற்றுமையின்மையை பயன்படுத்தி தன் ஆளுமையை தொடங்கினான். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, புங்கையூரன் said:

வெள்ளைக்காரன் நாடுகளில் நாங்கள் குடியேறிகள்!

அவர்கள் தங்கள் மொழியை எங்கள் மீது திணிப்பதில்லை! நாங்களாகவே எமது தேவைகளுக்காகப் படிக்கிறோம்! அவுசிலும் ஆங்கிலம் தெரியாத பலர் பல வருடங்களாக வாழுகின்றார்கள்! அவர்கள் மீது மொழி திணிக்கப் படுவதில்லை!

ஆனால் இலங்கையில் நாங்கள் பூர்வீக குடிகள்!

சொந்த மொழியில் எமது தேவைகளை நிறைவு செய்ய வகை செய்ய வேண்டியது எமது அரசின் கடமை!

சிங்கள மொழி எமதினத்தின் மீது பலவந்தமாகத் திணிக்கப் படுகின்றது! அது தான் பிரச்சனையே!

பல மேற்கத்தைய நாடுகளில்...சீனமொழி, இந்தி, உருது, தமிழ் போன்ற மொழிகளில் தொடர்பாடல் வசதிகள் செய்யப்பட்டுள்ளது!

சிங்களத்தை விடவும்...தமிழ் அதிக நாடுகளிலும், அதிக மக்களாலும் பேசப்படுகின்றது!

உங்கள் கருத்துப்படி...பார்த்தாலும்..சிங்களத்துக்கும் தமிழுக்கும் பல ஒற்றுமைகள் உண்டு! கரையோரச் சிங்களவர்கள் எல்லோரும் ஆதித் தமிழர்களே!

எனவே.. அவர்கள் ஏன் சிங்களம் படிக்கக் கூடாது?

எல்லா நாய்களும்... தங்கள் மொழியில் குரைக்கும் போது....தமிழ் நாய் மட்டும் எதற்காக இன்னொரு நாயின் மொழியில் குரைக்க வேண்டுமென நீங்கள் எதிர் பார்க்கின்றீர்கள்?

யூத நாய்கள்...உலக மொழிகளை அறிந்திருந்தும்...தங்கள் நாட்டில் யூத மொழியிலேயே குரைக்க விரும்புகின்றனவே? அது ஏன்?

எங்களைச் சிங்களத்தில் குரைக்கும் படி கூறும்  வேற்றுமொழி நாய்கள் தமிழில் குரைக்க ஏன் பின்னிற்கின்றன?

1548167_orig.jpg

அண்ணை

அ விலிருந்தா??

அது தூங்குபவர்களுக்கு......

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.