Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

ஆளில்லா விமானம் மூலம் கிராமங்களுக்கு இணையவசதியினை வழங்க திட்டமிடும் பேஸ்புக்


Recommended Posts

ஆளில்லா விமானம் மூலம் கிராமங்களுக்கு இணையவசதியினை வழங்க திட்டமிடும் பேஸ்புக்

 

367A1D1600000578-3701815-An_infographic_

367A1D2F00000578-3701815-An_infographic_

முழுவதும் சூரிய மின்சக்தியில் இயங்கும் ட்ரோன் என்றழைக்கப்படும் ஆளில்லா விமானம் மூலம், வானிலிருந்து இணையதள வசதிகளை ஒளிக்கீற்று மூலம் அனுப்ப முடியும் என நம்பப்படுகின்றது.

தற்போது, அந்த ஆளில்லா விமானமானது அமெரிக்காவில் தனது முதல் சோதனைப் பயணத்தை முடித்துள்ளது.

பிரித்தானியாவின் கட்டுமானத்தில் உருவாகி வரும் பேஸ்புக்கின் இந்த ஆளில்லா விமானமானது சுமார் 90 மணி நேரம் வானில் பறந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

367A1D3700000578-3701815-The_plane_has_b

எனினும், பல பில்லியன் வாடிக்கையாளர்களின் இணைய தேவையினை பூர்த்தி செய்ய, வாரக்கணக்கில் இந்த இணைய விமானத்தை இயக்க, தொழில்நுட்ப ரீதியாக இன்னும் பெரிய அளவில் முன்னேற்றங்கள் மேற்கொள்ளவேண்டுமென சமூகவலைத்தளங்களில் மிகப் பெரிய நிறுவனமான பேஸ்புக் கூறியுள்ளது.

இதே போன்ற திட்டத்தை கூகுள் நிறுவனமும் செயல்படுத்துவதில் முயற்சித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

367A1D2700000578-3701815-A_map_shows_the

http://www.virakesari.lk/article/9290

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • திருமலை எண்ணெய் குதங்களை மீள ஒப்படைக்குமா இந்தியா? ஆரம்பமானது பேச்சு திருகோணமலையில் அமைந்துள்ள எண்ணெய்க் குதங்களை மீளவும் பெற்றுக்கொள்வது தொடர்பில் பேச்சுவார்த்தைகள் இந்திய அரசாங்கத்துடன் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் உதய கம்மன்பில கூறியுள்ளார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் இன்றைய ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இதனைத் தெரிவித்தார். “திருகோணமலை எண்ணெய்க் குதங்களை மீண்டும் இலங்கைக்கு பெற்றுக்கொள்வது குறித்த பேச்சுவார்த்தைகள் தற்போது இந்திய அரசாங்கத்துடன் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அது குறித்து இப்போது பேசுவது பொருத்தமில்லை. இது பேச்சுவார்த்தைகளில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும். இந்திய அரசாங்கம் பேச்சுவார்த்தைகளில் ஒத்துழைப்புடன் செயற்படுகிறது. இந்திய தூதரகமும் எம்முடன் ஒத்துழைக்கின்றனர். இந்த எண்ணெய்க் குதங்கள் லங்கா IOC நிறுவனத்துக்கே வழங்கப்பட்டுள்ளன. எனினும், இது இந்திய அரசாங்கம் மற்றும் இந்திய – இலங்கை ஒப்பந்தம் ஆகியவற்றில் செல்வாக்கு செலுத்தும். அத்துடன், அரசியல் ரீதியான முக்கியத்துவம் இதில் காணப்படுகிறது. ஆகவே, நாம் முதலில் இந்திய அரசாங்கத்துடன் பேச வேண்டும். பின்னர் குறித்த நிறுவனத்துடனான பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க எம்மால் முடியும்” என்றார். இதேவேளை நல்லாட்சி அரசாங்கத்திலும் இந்த எண்ணெய் குதங்களை மீள பெற்றுக்கொள்ள பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோதிலும் அது தோல்வியில் முடிவடைந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.ibctamil.com/srilanka/80/151413
  • திலீபன் என்றால் யார் என்று தெரியாத ஒருவரிடம் திலீபனுக்குரிய மாண்பை கொடுப்பார் என எதிர்பார்ப்பது எமது முட்டாள்தனமே ☹️ திலீபனின் உண்ணாவிரதத்திற்கு நான் பாடசாலை மாணவனாகப் போயிருந்தேன். மாவீரர் வணக்கத்தில் கூட அப்படியானதொரு மனநிலை இருப்பதில்லை. முதுகில் குத்தப்பட்ட அவமானம், கோபம்...... இந்தியாவின் மீதான வெறுப்பிற்கு காரணங்களா இல்லை 😡
  • சீனாவில் பரவியுள்ள புதியவகை நோய் -உடன் அமுல்படுத்தப்பட்ட அவசரநிலை சீனாவின் யுனான் பிராந்தியத்தில் புபோனிக் பிளேக் நோய் என்ற புதியவகை நோய் பரவல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் நான்காம் நிலை அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனாவின் பாதிப்பிலிருந்தே உலக நாடுகள் மீளாத சூழலில் சீனாவில் புதிய புதிய நோய்கள் பரவுவதாக வெளியாகும் செய்திகள் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. இந்நிலையில் சீனாவின் யுனான் பிராந்தியத்தில் மெங்காய் பகுதியில் உள்ள சிறுவன் ஒருவனுக்கு புபோனிக் பிளேக் நோய் தொற்று இருப்பது தெரிய வந்துள்ளது. இதேவேளை சீனாவின் அண்டை நாடான மங்கோலியாவில் உள்ள 21 மாகாணங்களில் 17 மாகாணங்கள் புபோனிக் பிளேக் அபாயத்தில் இருப்பதாக அறிவித்துள்ளது. இதனையடுத்து புபோனிக் ப்ளேக் நான்காம் நிலை அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. சமீபத்தில் பிளேக் அதிகமாக பரவி வருவதாக உலக சுகாதார அமைப்பும் கூறியுள்ள நிலையில் இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. https://www.ibctamil.com/world/80/151409?ref=home-imp-parsely
  • திராவிட உளறல்கள்களுக்கு நேரடி பதில் | சுப வீரபாண்டியன் | guru murugan  
  • இலங்கையை சேர்ந்தவரின் நிறுவனத்தில் பணிபுரிந்த தமிழ் பெண்களுக்கு நேர்ந்த அவலம் தமிழகத்தில் இளைஞர் ஒருவரை தனிமையில் அழைத்து சென்ற பெண்கள் அவரை, தூக்கிப் போட்டு மிதித்த வீடியோ வைரலாகி வரும் நிலையில், அதன் பின்னணி குறித்து திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் இருக்கும் சிப்காட்டில் ஜே.ஜே மில்ஸ் மற்றும் கார்மெண்ட்ஸ் என்ற பனியன் நிறுவனம் இயங்கி வருகிறது. இலங்கையை சேர்ந்தவரின் நிறுவனமான இங்கு அவினாசி அடுத்த சூளையை சேர்ந்த சிவக்குமார் என்பவர் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிறுவனத்தில், வெளியூரை சேர்ந்த ஏராளமான பெண் ஊழியர்கள்தங்கி பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில், சம்பவ தினத்தன்று, மேலாளர் சிவக்குமார், கார்மெண்ட்ஸின் கணனி ஊழியரான மதுரையை சேர்ந்த சங்கீதா மற்றும் அவரது தோழி ஆகியோருடன் பல்லடம் அடுத்த பச்சான்காட்டுப்பாளையம் காட்டுப்பகுதிக்கு சென்றுள்ளார். அங்கு வைத்து சங்கீதாவும் அவரது தோழியும் சேர்ந்து மேலாளர் சிவக்குமார் மீது பெப்பர் ஸ்பிரே அடித்து அவர் நிலைகுலைந்த நேரத்தில் உதைத்து கைகால்களை கட்டிபோட்டு மிளகாய் பொடிதூவி அடித்து உதைத்துள்ளனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பல்லடம் பொலிசார், சிவக்குமார் மற்றும் அந்த இரண்டு பெண்களையும் காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்துள்ளனர். விசாரணையில் சங்கீதா, கார்மென்ட்ஸில் வேலைபார்க்கும் தனக்கு பிடித்த பெண்களிடம் செல்போன் நம்பரை வாங்கிக் வைத்துக் கொள்ளும் இவன் , அவர்களை சேலை அணிந்து வரச்சொல்லி வாரந்தோறும் முறைவைத்து வெளியிடங்களுக்கு அழைத்துச்சென்று பாலியல் அத்துமீறல்களில் ஈடுபடுவது வழக்கம். தனக்கு ஒத்துழைக்க மறுக்கும் பெண்களை வேலையை விட்டு வீட்டுக்கு அனுப்பி விடுவார் என்பதால் சில பெண்கள் தங்கள் குடும்ப வறுமையை நினைத்து இவன் மிரட்டலுக்கு அஞ்சி பாலியல் சீண்டல்களை வெளியில் சொல்ல இயலாமல் தவித்து வந்தனர். மற்ற பெண்களை போன்று தன்னிடமும், பாலியல் தொல்லை கொடுத்ததால், இனி இவன் எந்த பெண்ணிடமும் தவறாக நடக்க கூடாது என்பதற்காக, அவனை தனிமையில் அழைத்து சென்று, மிளகாய் பொடி அடித்து தூவி, கட்டிப் போட்டு உதைத்து, அதன் பின் பொலிசாருக்கு தெரிவித்ததாக கூறியுள்ளார். இந்த சம்பவத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோவை பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளார். ஆனால், சிவக்குமாரோ, பொலிசாரிடம், தான் அவர்களுக்கு வேலை கொடுக்கவில்லை என்ற ஆத்திரத்தில் தன்னை கடத்தி வந்து தாக்கியதாக தனது வழக்கறிஞரை வைத்து பொலிசாரிடம் கூறியுள்ளார். இதையடுத்து பொலிசார், பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டால், தங்களிடம் புகார் செய்யாமல் நீங்களே எப்படி நேரடியாக தாக்குதல் நடத்தலாம் என்று இரு பெண்களின் மீதும், சிவக்குமாரை அடித்து உதைத்ததாக வழக்கு பதிவு செய்துள்ளனர். அதன் பின், இரு பெண்களும் அளித்த புகாரின் பேரில் சிவக்குமார் மீதும் சாதாரண அடிதடி வழக்கு ஒன்றை பதிவு செய்த பொலிசார் 3 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ள சங்கீதா, மதுரை மாவட்ட ஆட்சியரை சந்தித்து, பல்லடம் காவல்துறையினர் பாலியல் தொல்லை கொடுத்த சிவகுமாருக்கு ஆதரவாக தங்களை மிரட்டி முதல் தகவல் அறிக்கையில் கையெழுத்து பெற்றதாக புகார் தெரிவித்துள்ளார். இதனால் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டால் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகலாம் என்று கூறப்படுகிறது. https://www.ibctamil.com/india/80/151411?ref=imp-news
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.