Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழக மீனவர்களைத் தடுக்க துப்பாக்கிச் சூடு நடத்துவதே ஒரே வழி! - மகிந்த அமரவீர

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறும் தமிழக மீனவர்களை தடுக்க துப்பாக்கிச் சூடு நடத்துவதே ஒரே வழி என்று  மீன்பிடித்துறை மற்றும் நீரியல்வள அமைச்சர் மஹிந்த அமரவீர, தெரிவித்துள்ளார்.  “இலங்கை அரசாங்கம் அதனை ஒருபோதும் அமுல்படுத்தாது என்ற தைரியத்திலேயே இந்திய மீனவர்கள் தொடர்ந்தும் அடாவடித் தனத்தை கைக்கொள்கின்றனர். இந்திய மீனவர்களை கைதுசெய்வதிலும் பார்க்க அவர்களை சுடுவது எமக்கு இலகுவான விடயம்.

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறும் தமிழக மீனவர்களை தடுக்க துப்பாக்கிச் சூடு நடத்துவதே ஒரே வழி என்று மீன்பிடித்துறை மற்றும் நீரியல்வள அமைச்சர் மஹிந்த அமரவீர, தெரிவித்துள்ளார். “இலங்கை அரசாங்கம் அதனை ஒருபோதும் அமுல்படுத்தாது என்ற தைரியத்திலேயே இந்திய மீனவர்கள் தொடர்ந்தும் அடாவடித் தனத்தை கைக்கொள்கின்றனர். இந்திய மீனவர்களை கைதுசெய்வதிலும் பார்க்க அவர்களை சுடுவது எமக்கு இலகுவான விடயம்.

   

இலங்கை கடற்படையினருக்கு இந்திய மீனவர்களை சுடுவதற்கான அனுமதியை மட்டும் நாம் வழங்கியிருந்திருந்தால் இலங்கை – இந்திய மீனவர் பிரச்சினைக்கு என்றோ தீர்வு கண்டிருக்கலாம். ஆனாலும், துப்பாக்கியால் சூடு நடத்தி யுத்தம் ஒன்றை தொடுக்கும் நோக்கம் இலங்கை அரசாங்கத்துக்கு இல்லை. அதற்கு உட்பட்ட வகையில் கலந்துரையாடல் மூலம் சுமுகமான தீர்வு காண்பதற்கே நாம் தொடர்ந்தும் முயற்சிக்கின்றோம் என்றும் அமைச்சர் அமரவீர கூறினார்.

இதேவேளை, இந்திய மீனவர் விவகாரம் தொடர்பில் கடற்படையினரின் செயற்பாடுகளை தடுத்து நிறுத்தவும் தளர்த்தவும் அரசாங்கம் எச்சந்தர்ப்பத்திலும் பணிப்புரை விடுத்ததில்லை என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

மீன்பிடி மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர நேற்று வட மாகாண மீனவ சங்கத் தலைவர்களுடன் விசேட சந்திப்பொன்றை கொழும்பு – 10, மாளிகாவத்தையிலுள்ள அமைச்சில் நடத்தினார். இச்சந்திப்பினையடுத்து ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவித்த போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தென்பகுதி மீனவர்கள் நல்லிணக்கத்தை குழப்பும் வகையில் வடக்கிலுள்ள மீனவர்களிடையே போலி பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்ற போதும் அவற்றை நம்பி ஏமாற வேண்டாமென்றும் இந்த அரசாங்கத்தில் இனி இனவாதத்துக்கு இடமில்லையென்றும் அமைச்சர் வடக்கு மீனவ சங்கத் தலைவர்களிடம் கேட்டுக்கொண்டார்.

இலங்கை – இந்திய மீனவப் பிரச்சினை தொடர்பில் பேச்சு நடத்துவதற்காக இந்திய அரசாங்கம் தன்னை புதுடில்லி வருமாறு அழைப்பு விடுத்துள்ளதாக சுட்டிக் காட்டிய அமைச்சர் அமரவீர, வடக்கு மீனவ சங்கங்களின் உறுதியான நிலைப்பாடே புதுடில்லியில் முன்வைக்கப்படுமென்றும் அதற்கு மேலதிகமாக அரசாங்கம் எவ்வித தீர்மானத்தையும் சுயமாக முன்வைக்காது என்றும் அமைச்சர் வடக்கு மீனவர்களிடம் வாக்குறுதி வழங்கினார்.

இந்திய மீனவர்களின் கோரிக்கைக்கு அமைய இலங்கை கடல் எல்லைக்குள் 75 நாட்களுக்கு மீன் பிடிப்பதற்கு இலங்கை அரசாங்கம் இதுவரை எந்தவொரு உடன்பாட்டுக்கும் வரவில்லை இந்நிலையில் இலங்கை அரசாங்கம் இந்தியாவுக்கு 75 நாட்களுக்கு மீன்பிடிக்க அனுமதி வழங்கியிருப்பதாக தென்பகுதியைச் சேர்ந்த இனவாத விஷமிகள் வடக்கில் போலிப் பிரசாரங்களை முன்னெடுத்ததன் காரணமாகவே வடக்கு மீனவர்கள் பதற்றமடைந்து உண்ணாவிரதத்துடன் கூடிய போராட்டங்களை நடத்த நேரிட்டமையை நான் அறிவேன். 75 நாட்களானும் வாரத்துக்கு 02 நாட்களானும் அதற்குரிய இணக்கப்பாட்டை வடக்கு மீனவர்களே எடுக்க வேண்டுமே தவிர அதனை மீறி அரசாங்கம் சுயமாக எவ்வித தீர்மானத்தையும் மேற்கொள்ளாது என்றும் அமைச்சர் கூறினார்.

“நான் மீன்பிடி அமைச்சராக பதவி ஏற்றதன் பின்னர் வழமையிலும் மாறான இறுக்கமான கெடுபிடிகளை அமுல்படுத்தி வருகின்றேன். நான் பதவிக்கு வந்தது முதல் கைப்பற்றப்பட்ட அனைத்து இந்திய படகுகளும் இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளன. இதற்காக எனக்கு இந்திய அரசாங்கம் பாரிய அழுத்தங்களை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்திலிருந்து படகுகளை விடுவிக்குமாறு எனக்கு தொலைபேசி அழைப்புகள் விடுக்கப்படுகின்றன. ஆனால் நான் எடுத்த இந்த நிலைப்பாட்டிலிருந்து சற்றும் விலகுவதற்கு தயாராக இல்லை. எனது கொடும்பாவியை இந்தியாவில் எரிக்கிறார்கள். நான் அதற்கு அஞ்சவில்லை. இது தமிழர்களின் அல்லது வடக்கிற்கு மட்டும் உரிய பிரச்சினையல்ல. இதனை இலங்கையின் பிரச்சினையாகவே எமது ஜனாதிபதி கருதுகின்றார். எனவே வடக்கு மீனவர்களின் கருத்துக்களை மீறி இந்தியாவுடன் எந்தவொரு விட்டுக் கொடுப்புகளையும் செய்ய நான் உடன்பட மாட்டேன்” என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

கடற்படையினரால் சுற்றிவளைத்து ஏன் ஒட்டுமொத்த இந்திய மீனவர்களையும் ஒரேயடியாக கைதுசெய்து இப்பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது என பலரும் கேட்கலாம். இவர்களை கைதுசெய்வது அத்தனை இலகுவான விடயமல்ல. இரும்பிலான ட்ரோலர் படகுகளில் ஒரே தடவையில் ஆயிரக்கணக்கில் வரும் இந்திய மீனவர்கள் செய்யும் அட்டூழியங்கள் ஏராளமானவை. அவர்கள் இலங்கை மீனவர்களின் படகுகளை இடித்து சேதப்படுத்துவார்கள். இலங்கை மீனவர்களை கதற கதற பலவந்தமாக இழுத்துச் செல்வார்கள். அதனால்தான் இவர்களை கைது செய்வதிலும் சுட்டு வீழ்த்துவது இலகுவானது என நான் கூறுகின்றேன். கடற்படை இந்திய மீனவர்களை விரட்டுவதற்காக மாத்திரம் ஒரு தடவைக்கு 200 மில்லியன் ரூபா எரிபொருளை செலவு செய்கின்றது. கடற்படைக்கு ஒதுக்கப்படும் பணத்தில் நான்கில் ஒரு பகுதி இந்திய மீனவர்களின் ஊடுருவல்களை தடுப்பதற்கான முயற்சிக்கே பயன்படுத்தப்படுகிறது என்றும் அமைச்சர் கூறினார்.

அத்துடன் வெளிநாட்டு மீனவர்களை கைதுசெய்வது தொடர்பிலான சட்டமூலத்தில் பல்வேறு திருத்தங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார். இதன்படி, தண்டப் பணத்தை அதிகரித்தல், படகுகளை பறிமுதல் செய்தல் கைதுசெய்யும் மீனவர்களை விடுவிக்க படகு உரிமையாளர்கள் நேரில் வருதல் போன்ற பல திருத்தங்கள் கொண்டுவரப்படுமெனவும் அமைச்சர் சமரவீர கூறினார்.

http://www.seithy.com/breifNews.php?newsID=162019&category=TamilNews&language=tamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.