Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கில் வளர்ந்து வரும் இனவாத மனோபாவத்தின் வெளிப்பாடு! - அனுரகுமார குற்றச்சாட்டு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
வடக்கில் வளர்ந்து வரும் இனவாத மனோபாவத்தின் வெளிப்பாடாகவே யாழ்ப்பாண பல்கலைக்கழக மோதல் சம்பவம் அமைந்திருப்பதாக ஜே.வி.பி தலைவர் அனுரகுமார திசநாயக்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார். “யாழ். பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற சம்பவத்தை சாதாரண பல்கலைக்கழக மாணவர்களுக்கிடையிலான மோதலாக எடுத்துக் கொள்ள முடியாது.

வடக்கில் வளர்ந்து வரும் இனவாத மனோபாவத்தின் வெளிப்பாடாகவே யாழ்ப்பாண பல்கலைக்கழக மோதல் சம்பவம் அமைந்திருப்பதாக ஜே.வி.பி தலைவர் அனுரகுமார திசநாயக்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார். “யாழ். பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற சம்பவத்தை சாதாரண பல்கலைக்கழக மாணவர்களுக்கிடையிலான மோதலாக எடுத்துக் கொள்ள முடியாது.

   

பொதுவாகவும், அரசியல் ரீதியாகவும் முரண்பாடான நிலைப்பாடுகளைக் கொண்ட இரு சமூகங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கிடையிலான மோதலாகப் பார்க்கவேண்டும். சமூகத்தால் கண்டிக்கப்படவேண்டிய இனவாதத்தைப் பின்னணியாகக் கொண்டதாக இது காணப்படுகிறது. சிங்கள மாணவர்கள் மீதான தாக்குதலானது வடக்கில் அதிகரித்துவரும் இனவாதத்தின் தொடர்ச்சியாகும். உடனடியாக ஏற்பட்ட பிரச்சினையல்ல. படிப்படியாக அதிகரித்து வந்த இனவாத மனோபாவத்தின் வெளிப்பாடாகவே இதனைப் பார்க்கவேண்டியுள்ளது.

இந்த நிலைமையானது சகல விதமான இனவாதத்துக்கும் உந்துசக்தியாக அமைந்துவிடும். பலர் தமது அரசியல் செயற்பாடாக இனவாதத்தையே கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு மோசடி பற்றியோ, வீண்விரங்கள் பற்றியோ, ஜனநாயகம் பற்றியோ அல்லது வேறு எதனைப்பற்றியோ பேசமுடியாது. இனவாதம் பற்றி மாத்திரமே அவர்களால் நன்குபேச முடியும். அவ்வாறான குழுக்களுக்கு இந்த நிலைமை உத்வேகமாக அமைந்துள்ளது.

வடக்கில் குண்டொன்று வெடிக்கும்வரை அல்லது அங்கு தாக்குதலொன்று நடைபெறும்வரை பகல் இரவு இன்றி காத்துக்கொண்டு இருக்கும் குழுக்களும் உள்ளன. அவர்களின் ஒரேயொரு அரசியல் நோக்கம் நல்லிணக்கமோ அல்லது மக்களின் ஒற்றுமையோ அல்ல. நாட்டு மக்களை எந்தநிலைக்குக் கொண்டு சென்றாவது தமது அதிகாரத்தைப் பெற்றுக்கொள்வதே அவர்களின் அரசியல் நோக்கு. அவ்வாறான குழுக்களுக்கு இந்தச் சம்பவம் வசதியாக அமைகிறது.

ஒரு இனவாதமானது மற்றுமொரு இனவாதத்தை ஊக்குவிக்கும் வகையிலேயே செயற்படும். அதேபோல, இனவாதம் மற்றுமொரு இனவாதத்தினால் ஒழிக்கப்படக்கூடாது. இதுபோன்ற சிறிய சம்பவங்கள் பாரிய யுத்தங்களுக்கு வழியமைத்தமையை நாம் கடந்த காலங்களில் அவதானித்திருக்கின்றோம். இவ்வாறான அனுபவங்களைக் கொண்டு இனவாதத்தை தூண்டும் சகல முயற்சிகளும் உடனடியாகவே தோற்கடிக்கப்பட வேண்டும். வடக்கிலோ தெற்கிலோ இவ்வாறான நிலைமையை ஊக்குவிப்பதற்கு பாராளுமன்றத்தில் உள்ள எவருக்கும் உரிமை இல்லை.

இவ்வாறான நிலையில் இதை மாணவர்களுக்கு இடையிலான மோதலாகக் கருதி விசாரணைகள், ஒழுக்காற்று நடவடிக்கைகளுடன் முடித்துக்கொள்ளாமல், வடக்கில் உருவாக்கியிருக்கும் இனவாத மனோபாவத்தை ஆரம்பத்திலேயே இல்லாமல் செய்ய வேண்டிய கடப்பாடு அரசாங்கத்துக்கும், அரசியல் கட்சிகளுக்கும், பொது மக்களுக்கும் ஊடகங்களுக்கும் உள்ளன என்றும் அவர் மேலும் கூறினார்.

http://www.seithy.com/breifNews.php?newsID=162024&category=TamilNews&language=tamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.