Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரதமரின் சிங்கப்பூர் செய்தி உலகுக்கு பறைசாற்றி நிற்கும் விடயம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
 
 
 

கசினோ சூதாட்டத்துக்கு எந்தவொரு முதலீட்டாளருக்கும் இனியொரு போதும் இடமளிக்கப் போவதில்லை என்ற உறுதியான நிலைப்பாட்டில் அரசு இருப்பதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கடந்த புதன்கிழமை சிங்கப்பூரில் வைத்து அறிவித்திருக்கிறார்.

சிங்கப்பூர் உட்பட சர்வதேச முதலீட்டாளர்களுக்கு இலங்கையில் முதலீடு செய்ய முன்வருமாறு அழைப்பு விடுத்த பிரதமர், கசினோ போன்ற சூதாட்டங்களுக்கு இடமளிக்கப்பட மாட்டாது என்ற உறுதியான நிலைப்பாட்டையும் தெரிவித்திருக்கிறார்.

இந்த அறிவிப்புக்கு நாட்டு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கின்றது.

சூதாட்டத்தின் மூலம் நாட்டில் ஏற்படக் கூடிய கலாசார சீரழிவுகளுக்குள் நாம் சிக்கி விடாமல் பாதுகாக்கப்பட வேண்டுமென்ற எதிர்பார்ப்புக்கு சாதகமான சமிக்ஞைகள் பிரதமரால் காட்டப்பட்டுள்ளன.

சூதாட்டத்துக்குப் பெயர் போன சிங்கப்பூரில் இருந்து கொண்டே இலங்கை அதன் நிலைப்பாட்டை வெளிப்படுத்தி இருப்பது எமது மனோதைரியத்தை வெளிப்படுத்தி இருப்பதாகவே கொள்ள வேண்டியுள்ளது.

கடந்த கால ஆட்சியின் போது முழுநாளும் சூதாட்டக் களமாக மாறும் நிலை உருவாகி இருந்தது. அவுஸ்திரேலிய கசினோ மன்னனாக வர்ணிக்கப்பட்ட ஜேம்ஸ் பாக்கர் கொழும்பை கசினோ நிலையமாக மாற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்ட போது நாட்டு மக்கள் ஒன்றுபட்டு அதனைக் கடுமையாக எதிர்த்ததன் விளைவாக அவர் தனது முயற்சியைக் கைவிட்டு நாட்டை விட்டே வெளியேறினார்.

அன்று அரசு சாதகமான சமிக்ைஞயை காட்டிய வேளையில் மக்களின் எதிர்ப்பு வெளிக்காட்டப்படாமலிருந்தால் இன்று இலங்கையும் சூதாட்டத்தில் சிங்கப்பூர், அவுஸ்திரேலியா, தாய்லாந்து போன்ற நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கலாம்.

கலாசார, ஒழுக்க விழுமியங்களைக் கொண்ட இலங்கைக்குள் கசினோ சூதாட்டம் வேரோடி இருந்தால் இன்று எமது நாட்டின் இளைஞர் சந்ததி பெரும் கலாசார சீரழிவுக்குள் சிக்குண்டு அழிவுப்பாதைக்கு இட்டுச் செல்லப்பட்டிருக்கலாம்.

அன்று மத அமைப்புகளும் சிவில் சமுக நிறுவனங்களும் ஒன்றுபட்டு கடுமையான எதிர்ப்பை வெளிக்காட்டியதன் விளைவாகவே ஜேம்ஸ் பாக்கர் முயற்சி வெற்றி பெறாமல் அவர் நாட்டை விட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டது.

அவ்வாறு இருந்த போதிலும் சிங்கப்பூர், தாய்வான், அவுஸ்திரேலியா, ஹொங்கொங் போன்ற நாடுகளின் சூதாட்டப் பெரும் புள்ளிகள் எமது நாட்டின் மீது கண்வைத்த வண்ணமே உள்ளனர்.

சிறிதளவான சாதக சமிக்ஞை கிட்டினால் உள்ளே நுழைத்து விடலாமென்ற எதிர்பார்ப்புடனேயே அந்த நாடுகள் அவதானித்துக் கொண்டிருக்கின்றன.

இந்த எதிர்பார்ப்பின் ஒரு சந்தர்ப்பமாக கடந்த வாரத்தில் சிங்கப்பூருக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கடந்த புதன்கிழமை சிங்கப்பூர் முதலீட்டாளர்களைச் சந்தித்த போது, நல்லாட்சி அரசாங்கம் நாட்டின் அபிவிருத்திக்கான வேலைத்திட்டத்தை முன்னெடுத்து வருவதாகவும் அதனுடன் சிங்கப்பூர் முதலீட்டாளர்களையும் கைகோர்க்குமாறும் அழைப்பு விடுத்தார்.

இச்சந்தர்ப்பத்தில் சிங்கப்பூர் முதலீட்டாளர் ஒருவர் கடந்த ஆட்சிக் காலத்தில் கசினோவை ஆரம்பிக்க அளிக்கப்பட்ட ஆதரவைப் போன்று இன்றைய அரசும் கசினோவை ஊக்குவிக்குமா எனக் கேள்வி எழுப்பினார்.

அந்த முதலீட்டாளர் தனது கேள்வியை முடிக்கு முன்னரே பிரதமர் ரணில் உடனடியாக, கசினோ வர்த்தக நடவடிக்கைகளுக்கு ஒருபோதும் இடமளிக்கப்பட மாட்டாது எனவும் நாட்டை அபிவிருத்தி செய்ய கசினோ சூதாட்டத்தை அனுமதிப்பது நல்லாட்சி அரசாங்கத்தின் கொள்கையல்ல எனவும் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

நாட்டை அபிவிருத்தி செய்ய கசினோ சூதாட்டத்தை நம்பி இருக்க முடியாது. எமது நாட்டு கலாசார, பண்பாடுகளுக்கு அது பொருத்தமானதுமல்ல என்பதையும் அவர் குறிப்பிட்டுக் காட்டியுள்ளார்.

இலங்கை பல்வேறுபட்ட மத, கலாசார பின்புலம் கொண்ட ஒரு நாடாகும். நாட்டில் ஒழுக்க விழுமியங்கள் பேணப்பட வேண்டுமென்பதில் எமது மக்கள் விழிப்புடன் இருக்கின்றனர்.

எதிர்கால சந்ததியினர் நல்லொழுக்கம் கொண்ட கலாசாரப் பின்னணியில் தலைசிறந்த சமூகமாக உயர வேண்டுமென்பதில் மக்கள் இன்னும் காணப்படுகின்றனர்.

கடந்த காலத்தில் காணப்பட்ட கலாசார சீரழிவு காரணமாக மக்கள் எதிர்கொண்ட அழிவு நிலை மீண்டும் ஏற்படக் கூடாது என்பதில் மக்கள் மிக கரிசனை கொண்டவர்களாகக் காணப்படுகின்றனர்.

ஆன்மிகப் பண்புகளுடன் சிறந்த நற் பிரஜைகள் உருவாக வேண்டுமென்பதில் சமயங்கள் சார்ந்த அமைப்புகள் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன. நல்லாட்சி அரசும் இவ்விடயத்தில் மிகவும் கண்ணும்கருத்துமாகவே இருக்கின்றது.

கலாசார சீரழிவை ஏற்படுத்தக் கூடியதான முதலீடுகளுக்கோ, செயற்பாடுகளுக்கோ இடமளிக்கப்பட மாட்டாது என்ற அரசின் உறுதியான நிலைப்பாடு வரவேற்கப்படக் கூடியதாகும்.

கசினோ போன்ற சூதாட்டங்களால் கிடைக்கக் கூடிய கோடிக்கணக்கான பணத்தை இழக்க நேரிட்டாலும் பரவாயில்லை. எமது எதிர்கால சந்ததியினர் கலாசார சீரழிவுக்குள் சிக்குண்டு அழிவுக்குள் தள்ளப்படாமலிருப்பதே எமது மக்களின் எதிர்பார்ப்பாகும்.

அபிவிருத்தி நடவடிக்கை என்ற பெயரில் மீண்டும் கலாசார சீரழிவு முயற்சிகள் நாட்டுக்குள் எந்த வழியாலும் நுழைந்து விடாமல் அவதானத்துடனேயே சகலரும் இருக்கவேண்டும்.

பிரதமரின் சிங்கப்பூர் செய்தி இதனையே முழு உலகுக்கும் பறைசாற்றி நிற்கின்றது.

 

http://www.tamilwin.com/politics/01/111728

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.