Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வரை யாழ்ப்பாணம் அனுப்பமாட்டோம்- சிங்கள மாணவர்களின் பெற்றோர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

jaffna-universityதமது பிள்ளைகளுக்கு அரசாங்கம் பாதுகாப்பு உத்தரவாதம் அளிக்கும் வரை, அவர்களை யாழ்ப்பாண பல்கலைக்கழகத்துக்கு அனுப்பப் போவதில்லை என்று, சிங்கள மாணவர்களின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பு ஒன்றில், யாழ். பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் சிங்கள மாணவர்களின் பெற்றோர் சிலர் கலந்து கொண்டனர்.

“யாழ்.பல்கலைக்கழகத்தில் நடந்த தாக்குதலை அடுத்து பல்கலைக்கழக நிர்வாகம் எடுத்த நடவடிக்கைகள் எமக்குத் திருப்தி அளிக்கவில்லை.

பல்கலைக்கழகத்தில் இருந்து சிங்கள மாணவர்கள், வவுனியா வரை பேருந்தில் கொண்டு வந்து விடப்பட்டனர். அதற்கு அப்பால் அவர்களின் பாதுகாப்பு பற்றி கரிசனை கொள்ளவில்லை.

மோதல்கள் நிகழ்ந்து 40 நிமிடம் கழித்தே,  பல்கலைக்கழக பாதுகாப்பு அதிகாரிகள் அங்கு வந்தனர்.

யாழ். பல்கலைக்கழகத்தில் பெரும்பான்மையாக கல்வி கற்கும் தமிழ் மாணவர்களுக்கும் சிங்கள மாணவர்களுக்கும் இடையில் எந்த பிரச்சினைகளும் இல்லை.

சில கலைப்பீட மாணவர்கள் மாத்திரமே தாக்குதலில் ஈடுபட்டனர்” என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.

யாழ். பல்கலைக்கழகத்தில் சிங்கள மாணவர்களின் பாதுகாப்பை அரசாங்கம் உறுதிப்படுத்தும் வரை தமது பிள்ளைகளை அங்கு அனுப்பப் போவதில்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்

இது தொடர்பான மனுவொன்றை தாம் யாழ். பல்கலைக்கழ துணைவேந்தர், சிறிலங்கா அதிபர், பிரதமர், உள்ளிட்டோருக்கு அனுப்பியுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

http://www.puthinappalakai.net/2016/07/22/news/17581

  • கருத்துக்கள உறவுகள்

இனக்கலவரம் நடந்து முடிந்து இரண்டு நாளில் தமிழன் கொழும்பில் பிழைப்புக்காகவும் ,கல்விக்காகவும் பாதுகாப்பு கேட்காமல் போய் நிற்பான்.......அப்படியே கபாலி டயலாக் சொல்ல வேணும் போல இருக்கு..:rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

 யார் இவர்களை பாக்கு, வெற்றிலை வைத்து அழைத்தார்கள். அரசியல் வாதிகளின் விளையாட்டுக்கு   உங்கள் பிள்ளைகளை  யாழ்ப்பாணம் அனுப்பி அவர்களை பகடைக்காய்களாக ஆக்க  வேண்டாம் என்று தான் நானும் உங்களை  வேண்டிக்கொள்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

அப்படியே அந்தச் சிங்கள மாணவர்களின் வாழ்விடத்திற்கு அண்மையில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு அவர்களை மாற்றிவிட்டால் ஒருவருக்கும் பிரச்சனை இல்லை

சிங்களக் காடையர்களுக்கு தமிழ் மண்ணில் இடமில்லை!

  • கருத்துக்கள உறவுகள்

அங்க அனுப்பாதீங்கோ 
வடக்கு தமிழர்கள் நிகழ்கால வீரர் சம்மந்தன் ஐயா தலைமையில் 
திரண்டு நிட்கிறார்கள். ஐயா ஒரு அஞ்சான் அதை வரலாறு சொல்லும்.

இந்த நேரத்தில் அங்கு நீங்கள் சிங்கள பிள்ளைகளை அனுப்படுவது 
பாதுகாப்பாக தெரியவில்லை.

முயறசி செய்து பொம்பிளை பிள்ளளைகளை அமெரிக்காவிட்க்கு அனுப்புங்கள்.
மிகுந்த பாதுகாப்பிட்கு நான் முயறசி செய்கிறேன். 
எல்லா மாணவர்களையும் கண்காணிப்பது கொஞ்சம் கடினம் எனபதால் 

இளைஞர்களை அவுஸ்தியரேலியாவிட்க்கு அனுப்பி விடுங்கள் 
புத்தன் அவர்கள் மேட்கொண்டு தேவையானதை செய்வார். 

9 hours ago, Maruthankerny said:

 

முயறசி செய்து பொம்பிளை பிள்ளளைகளை அமெரிக்காவிட்க்கு அனுப்புங்கள்.
மிகுந்த பாதுகாப்பிட்கு நான் முயறசி செய்கிறேன். 
 

ஆஹா!!!!எல்லாம் ஒரு plan பண்ணி தான் நடக்குது போல?????

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Maruthankerny said:

 

இளைஞர்களை அவுஸ்தியரேலியாவிட்க்கு அனுப்பி விடுங்கள் 
புத்தன் அவர்கள் மேட்கொண்டு தேவையானதை செய்வார். 

நான் அவுஸ்ரேலியா படைகளை யாழ்ப்பாணத்திற்கு அனுப்பி பாதுகாப்பு வழங்க ஏற்பாடு செய்கிறேன்....அவர்கள் இங்கு வந்தால் அவுஸ்ரேலியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும்.....tw_tounge_wink:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.