Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிளிநொச்சி இராணுவத் தலைமையகம் முன் “எமது நிலம் எமக்கு வேண்டும்” எனக் கோரி போராட்டம்:

Featured Replies

கிளிநொச்சி இராணுவத் தலைமையகம் முன் “எமது நிலம் எமக்கு வேண்டும்” எனக் கோரி போராட்டம்:

கிளிநொச்சி இராணுவத் தலைமையகம் முன் “எமது நிலம் எமக்கு வேண்டும்” எனக் கோரி போராட்டம்:

கிளிநொச்சி இராணுவத் தலைமையகம் முன் எமது நிலம் எமக்கு வேண்டும் எனும் கோரிக்கையுடன் ஜனநாயகத்திற்கான வடக்கு  இளைஞர்கள்  கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை  நடத்தியுள்ளனர்.

இன்று வெள்ளிக்கிழமை 22-07-2016 ஜனநாயகத்திற்கான வடக் இளைஞர்களால் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. காலை வவுனியாவிலும்,ஓமந்தையிலும்,மதியம் கிளிநொச்சி இரனைமடு படை  முகாமிலும், பரவிபாஞ்சான் பிரதேசத்திலும்  மாலை வலி வடக்கிலும் குறித்த போராட்டம் நடத்தபட்டுள்ளது.

காணிப்பிரச்சனையில் அரசியல் நாடகம் வேண்டாம்  இராணுவம் ஆக்கிரமித்துள்ள காணியை உடனடியாக விடுதலை செய்  எனும் கோரிக்கையுடன் வாய்களை கறுப்பு நிற துணிகளால்கட்டியவாறு ஊர்வலமாக கிளிநொச்சி இராணுவப் படைமுகாம் தலைமையகம் நோக்கி வந்தஇளைஞர் யுவதிகள் இரனைமடு கனகாம்பிகை கோவில் முன்பாக நின்று போராட்டத்தில்ஈடுபட்டனர்.

எமது வாழ்வாதாரத்தின் ஆதரமாக இருந்த நிலங்களில் இன்று இராணுவத்தினா் விவசாய பண்ணைகளையும, விலங்கு பண்ணைகளையும், வியாபார நிலையங்கைளையும் உல்லாச விடுதிகளையும் சிற்றுண்டிச்சாலைகளையும் என பல்வேறு வியாபார நோக்கங்களோடு நடத்தி வருகின்றனா் எமது மக்கள்  சொந்த காணிகள் இருந்தும் பொருளாதாரத்தில் நலிவுற்றவா்களாக வறிய நிலையில் வாழ்ந்து வருகின்றனா். எனவே எமது நிலம் எமக்கே வேண்டும் கோரிக்கை விடுத்துள்ள ஜனநாயகத்திற்கான வடக்கு இளைஞா்கள்

இராணுவ ஆட்சி வேண்டாம், வடக்கில் இராணுவ ஆட்சி தெற்கில் ஜனநாயகம். அதிகாமுடையது அரசாங்கமா இராணுவமா? பாடசாலைகள் முன் படை முகாம் எதற்கு? இராணுவமே நீங்கள் வியாபாரிகளா? பாதுகாப்பு படையினரா? வாக்குறுதிகளால் நீதி கிடைக்காது போன்ற வசனங்கள் எழுதப்பட்ட பதாதைகளை தாங்கியவாறு தங்களுடைய போராட்டத்தை முன்னெடுத்திருந்னா்.

போருக்கு பின்னர் மக்களுடைய காணிகள் மக்களுக்கு வழங்கப்படுமென முன்னாள்ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவும் தற்போதைய நல்லாட்சி அரசாங்கமும் தெரிவித்த போதிலும்தமது காணிகள் வழங்கப்படாமையினால் தாம் வீதிகளில் இறங்கி போராடவேண்டியநிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனா்.

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/134272/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, நவீனன் said:

கிளிநொச்சி இராணுவத் தலைமையகம் முன் “எமது நிலம் எமக்கு வேண்டும்” எனக் கோரி போராட்டம்:

கிளிநொச்சி இராணுவத் தலைமையகம் முன் “எமது நிலம் எமக்கு வேண்டும்” எனக் கோரி போராட்டம்:

காணிப்பிரச்சனையில் அரசியல் நாடகம் வேண்டாம்  இராணுவம் ஆக்கிரமித்துள்ள காணியை உடனடியாக விடுதலை செய்  எனும் கோரிக்கையுடன் வாய்களை கறுப்பு நிற துணிகளால்கட்டியவாறு ஊர்வலமாக கிளிநொச்சி இராணுவப் படைமுகாம் தலைமையகம் நோக்கி வந்தஇளைஞர் யுவதிகள் இரனைமடு கனகாம்பிகை கோவில் முன்பாக நின்று போராட்டத்தில்ஈடுபட்டனர்.

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/134272/language/ta-IN/article.aspx

மக்கள் இன்னும் தெளிவாக இருக்கின்றார்கள்
ஆனால் இந்தப் போராட்டத்தையும்   அரசியல்வாதிகள் தங்களின் வெற்றியாக்கிவிடுவார்கள்

  • கருத்துக்கள உறவுகள்
வடக்கு இராணுவ முகாம்கள் முன்பாக இளைஞர்கள் ஆர்ப்பாட்டம்! Top News 
[Friday 2016-07-22 18:00]
வவுனியா, கிளிநொச்சி, யாழ்ப்பாணம் மாவட்டங்களில் உள்ள இராணுவ முகாம்களின் முன்பாக, இன்று இளைஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.வடக்குப் பிரதேசத்தில் இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள மக்களின் காணிகள் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரியே இளைஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வாய்களை கறுப்பு நிற துணிகளால் கட்டியவாறு ஊர்வலமாக வந்த இளைஞர் - யுவதிகள், வவுனியா குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள இராணுவ முகாமுக்கு முன்பாக நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதேவேளை இராணுவம் மக்களின் காணிகளை அபகரித்துள்ளமையினால் வடபகுதி மக்கள் பல்வேறு துன்பங்களை அனுபவிப்பதுடன் முகாம்களிலும் உறவினர்களின் விடகளிலும் வாழ வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

காணிப் பிரச்சினையில் அரசியல் நாடகம் வேண்டாம், இராணுவம் ஆக்கிரமித்த காணிகளை உடனடியாக விடுதலை செய், நல்லாட்சியே மாற்றத்தை நாம் தந்தோம் மறந்துவிட்டாய், போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளையும் தாங்கியிருந்தனர். சுமார் 30 நிமிடங்கள் வரை இராணுவ முகமுக்கு முன்பாக இடம்பெற்ற இப்போராட்டத்தை அடுத்து போராட்டக்காரர்கள், வடக்கு நோக்கி பயணித்தனர்.

அவர்கள் இன்று பிற்பகல் கிளிநொச்சி பரவிப்பாஞ்சான் இராணுவ முகாமிற்கு முன்பாகவும், இரணைமடு 57 ஆவது டிவிசன் தலைமையகம் முன்பாகவும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஒமந்தை பழைய சோதனைச்சாவடி மற்றும் திருவையாறு பகுதியிலுள்ள இராணுவ முகாம்களிற்கு முன்னால் ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டதாகவும், காங்கேசன்துறை இராணுவ முகாமிற்கு முன்னால் இந்தப் போராட்டம் நிறைவடையவுள்ளதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் தெரிவித்தனர்.

youth-protest-220716-seithy%20(1).jpg

youth-protest-220716-seithy%20(2).jpg

youth-protest-220716-seithy%20(3).jpg

youth-protest-220716-seithy%20(4).jpg

youth-protest-220716-seithy%20(5).jpg

http://www.seithy.com/breifNews.php?newsID=162070&category=TamilNews&language=tamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.