Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கீதா மீது ரணில் காதலா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
 
 
 

இரண்டாம் இணைப்பு

அரசாங்கத்தில் இணைந்து கொள்ளுமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க விடுத்த அழைப்பை ஏற்கவேண்டுமாயின் முதலில் பிரதமர் பதவியை மகிந்த ராஜபக்சவுக்கு வழங்க வேண்டும் என தான் கோருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார்.

அப்படி செய்தால், ரணில் விக்ரமசிங்கவும் ஆலோசகர் பதவியை வழங்கி அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்க தாம் நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக போட்டியிட ரணில் விக்ரமசிங்கவுக்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி கொடுப்பதாகவும் கீதா குமாரசிங்க மேலும் கூறியுள்ளார்.

முதலாம் இணைப்பு

அனைவரையும் விட பிரதமருக்கு என்மீது தனி விருப்பம் உள்ளது. இது தொடர்பில் யாரும் பொறாமைப்பட வேண்டாம் என்று கீதா குமாரசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

பாராளுமன்றத்தின் இன்றைய மூன்றாம் நாள் அமர்வின் போது நாடாளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்க இதனைத் தெரிவித்தார்.

பிரதமர் ரணில் குறித்து எனக்கு தகவல்கள் தெரிவிக்க முடியும். அந்த உரிமை எனக்கு உள்ளது எனவும் கீதா குமாரசிங்க கூறியிருந்தார்.

இதன் போது பாராளுமன்றத்தில் இரட்டை அர்த்த வார்த்தைகள் பிரயோகிக்க வேண்டாம், பாடசாலை மாணவர்களும் இங்கு வருகைத்தந்துள்ளனர் என்ற கண்டனங்களை பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்தார்கள்.

தொடர்ந்தும் கீதா குமாரசிங்க உரையாற்றுகையில், நாட்டில் விலைவாசி அதிகரிப்பாலும் வாழ்வாதார செலவீனத்தினாலும் பெண்களே அதிக துன்பத்தினை சந்தித்துள்ளனர், இவ்வாறான நிலை கடந்த காலங்களில் எப்போதும் காணப்படவில்லை என குற்றம் சுமத்தினார்.

இது தொடர்பில் பெண்கள் வீதியில் இறங்கிப் போராடினால் 5 வருடங்களில் அல்ல 2 வருட முடிவிலேயே தற்போதைய அரசு வீடு செல்ல வேண்டிய நிலையும் ஏற்படும் எனவும் கீதா குமாரசிங்க அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்தார்.

 

http://www.tamilwin.com/parliment/01/111778

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.