Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நல்லூர் சங்கிலியன் பூங்காவில் பனை அபிவிருத்திக் கண்காட்சி ஆரம்பம்

Featured Replies

வடமாகாண பனை அபிவிருத்தி வாரத்தை முன்னிட்டு நல்லூர் சங்கிலியன் பூங்காவில் பனை அபிவிருத்திக் கண்காட்சி இன்று ஆரம்பமாகியுள்ளது.

எதிர்வரும் 28ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இக்கண்காட்சியை வடக்கு முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் சம்பிரதாயபூர்வமாகத் திறந்து வைத்துள்ளார்.

வடக்கு மாகாண கூட்டுறவு அமைச்சுடன் பனை தென்னைவள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கங்களும் பனை அபிவிருத்திச் சபையும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள இக்கண்காட்சியில் 13 காட்சிக்கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

பனைசார் கைப்பணிப்பொருட்கள் மற்றும் பனை உணவுப்பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ள இக்கண்காட்சி தினமும் காலை 10 மணியில் இருந்து இரவு 8 மணி வரை இடம்பெறவுள்ளது.

கண்காட்சியில் பனைசார் உற்பத்திப்பொருட்களைக் கொள்வனவு செய்பவர்களில் தினமும் 5 அதிஸ்டசாலிகள் தெரிவு செய்யப்பட்டு கண்காட்சி இறுதிநாளில் அவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட உள்ளது.

அத்தோடு மாவட்ட ரீதியாகத் தினமும் மாலை 6 மணியில் இருந்து இரவு 8 மணி வரை கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

வடமாகாண கூட்டுறவு ஆணையாளர் மதுமதி வசந்தகுமார் தலைமையில் நடைபெற்ற கண்காட்சி திறப்பு விழாவில்,

வடமாகாண கூட்டுறவு அமைச்சர் பொ.ஐங்கரநேசன், கல்வி அமைச்சர் த.குருகுலராஜா, மாகாணசபை உறுப்பினர் வே.சிவயோகன், கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர்கள் பொ.மோகன், கனகம்மா நல்லதம்பி, உ.சுபசிங்க, கு.இரவீந்திரநாதன், அ.செபமாலை ஆகியோருடன் அதிக எண்ணிக்கையில் பொதுமக்களும் கலந்துகொண்டிருந்தார்கள்.

 
625.0.560.320.160.600.053.800.668.160.90
 

பனை இல்லாமல் தமிழ் இல்லை - தமிழர்கள் இல்லாமல் பனை இல்லை

தமிழை வளர்த்தது பனை. பனை இல்லாமல் இருந்திருந்தால் தமிழுக்கு இவ்வளவு வளங்களும் வந்து சேர்ந்திராது. தமிழை வளர்த்த பனையை வளர்ப்பது எமது கடமை என்று வடக்கு கூட்டுறவு அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர்,

தமிழுக்கு இலக்கணம் வகுத்த தொல்காப்பியம் ஓலைச் சுவடிகளிலேயே எழுதப்பட்டது, சங்க இலக்கியங்கள், பதினெண்கீழ் கணக்கு நூல்கள், தேவாரத் திருமுறைகள், சித்த மருத்துவ நூல்கள் என்று தமிழை வளப்படுத்திய அனைத்து நூல்களும் ஓலைச் சுவடிகள் வழியாகவே எங்களிடம் கையளிக்கப்பட்டன.

பனையே எல்லாமுமான வாழ்வாக தமிழருக்கு இருந்தது. பனையின் முடி முதல் அடி வரை எங்களுக்குப் பயன் தந்தது. வருடம் பூராகவும் பயன் தந்தது. மணற்காடாக இருந்த யாழ்ப்பாணத்தில் தமிழர்கள் குடியேறக் காரணமாக இருந்தது இந்தப் பனை வளம்தான்.

ஆனால், துரதிஷ்டவசமாக பனைத் தொழில் செய்வோரை குறிப்பிட்ட ஒரு சமூகமாக நாம் ஒதுக்கியதுபோல பனை மரத்தையும் ஒதுக்கிவிட்டோம்.

ஒரு காலத்தில் பருவத்துக்குப் பருவம் பசளைகளாகப் பயன்படுத்துவதற்காக ஓலைகள் வெட்டப்பட்டு தலைமுடி வெட்டப்பட்டதுபோல கம்பீரமாகக் காட்சியளித்த பனை மரங்கள் இன்று தீண்டுவாரற்று காவோலைகளுடன் தலைவிரிகோலமாகக் காணப்படுகின்றன.

இந்த நிலை மாறவேண்டும்.வடக்கின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பும் தூண்களில் ஒன்றாக மீண்டும் பனை மரங்கள் நிமிரவேண்டும். இதற்கு, பனை உற்பத்திகளைப் பயன்படுத்தவும் நவீன காலத்துக்கு ஏற்ப பனைசார் உற்பத்திகளை நுகர்வோரைக் கவரும் வகையில் அபிவிருத்தி செய்யவும் சகல தரப்பினரும் முன்வர வேண்டும் என்றும் தெரிவித்தார்.

http://www.tamilwin.com/statements/01/111789

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.