Sign in to follow this  
தனிக்காட்டு ராஜா

குறிஞ்சி மலர்கள்

Recommended Posts

குறிஞ்சி மலர்கள்

பாடசாலை என்பது ஒரு பிள்ளையை சமுதாயத்திற்கு எப்படி நற் பிறஜையாக கொடுக்க வேண்டும் என்பது  இப்போதுள்ள மக்கள் யாவரும் அறிந்ததே அப்படிபட்ட பாடசாலையில் ஆசிரியராக பணி புரிபவர்தான் நான் சந்திரன் மாஸ்டர்  இது வரையில் பல பாடசாலைகள் மாறிவிட்டேன் எதிலும் நிரந்தரமில்லை அது என் தொழிலுக்கு கிடைக்கும் உயர்வு என்பதைவிட எனக்கு கிடைக்கும் அரச பரிசுதான் அது அதிபர் ஊடாக முறைப்பாடு வலயத்திற்கு சென்று வலயம் என்னை இடம்மாற்றி விடுகிறது என்பதையும் விட தூக்கியெறிந்து விடுகிறது .சக ஆசிரியர்கள்  அதிபருக்கு விஸ்வாசமான ஆசிரியர்களுடன் முரண்படும் போது அதாவது அவர்கள் பாடவேளைக்கு போகவில்லை என்றால் அதை நான் கேட்கும் போது பிரச்சினையாகிவிடும் எனக்கு நேர்மையாக வேலை செய்யவேண்டும் எடுக்கும் சம்பள‌த்திற்க்காவது. இப்படி அடிக்கடி இடமாற்றம் . இதை நான் பெரிதாக எடுத்து கொள்வதில்லை  இட மாற்றம் பெற்ற நான் அன்று மலையகப்பாடசாலைக்கு ஆசிரியராக செல்கிறேன்.

மலையகம் என்ற சொல்லை சொல்லில் சொல்வதை விட பார்க்கும் போது ஆஹா என்ன அழகு விப‌ரிக்க வார்த்தைகள் தேடுகிறேன் தமிழ் வாத்தியாராகிய நானே  விண்னை தொடும் மலைகளும் வெளிச்சமிலா வானமும் ( வீடுகளும் ) உஸ்ணம் இல்லாத குளிர்காற்றும் உடம்பை இறுகவைக்கும் குளிர் உறங்காமல் விழ்த்து நின்று கொண்டிருக்கும் தேயிலை மரங்களால் நிறைந்து  பச்சை பசேல் என  இயற்கை எழில் கொஞ்சும் பகுதியாகவும்  இலங்கையின் ஏற்றுமதிக்கு பெயர் சொல்லும் பகுதியாகவும்  மிளிர்கிறது மலையகம். 
மலையகத்தில் உள்ள பாடசாலைக்கு இடமாற்றம் கிடைத்தது சந்தோசமே ஏனென்றால் இலங்கையில் படிப்பு விகிதத்தில் மிகவும் பிந்தங்கியுள்ள ஒரு இடம்  தான் மலையகம் அன்று பாட்சாலைக்கு முதன் முதலாக காலடி எடுத்து வைக்கிறேன்  எல்லாம் புதிய முகங்கள் பேச்சு மொழியில் கொஞ்சம் வித்தியாசம் இருந்தாலும்  எழுத்து  மொழி ஒன்று தானே  அன்று பாடசாலையில் வரவு இடாப்பில் கையொப்பமிட்ட நான்  அதிபரின் பணிப்புகமைய எனக்கு உயர் தரம் கலைப்பிரிவு  வழங்கப்பட்டது. வகுப்பு ஆசிரியராக வகுப்பு சென்றேன் கொஞ்சம் அதிர்ச்சி தான் என்றாலும் வகுப்பு முழுவதும்  நிரம்பி வழியும்  40, 50 மாணவர்களை பார்த்து பழகிய எனக்கு அங்கு வெறும் பதினைந்து மாணவ மாணவிகள் மட்டுமே வகுப்பில் வரவேற்றார்கள் என்னை . பரவாயில்லை இத்தனை மாணவர்கள் இருக்கிறார்களே என்ற திருப்தியில் வணக்கம் சொல்லப்பட்டு  அறிமுகம் தொடங்கியது   என்னை அறிமுகப்படுத்தினேன்  எனது பெயர் சந்திரன் பிறகு  மாணவர்களின் அறிமுகம் தொடங்கியது  ஒவ்வொருவரும் தங்கள் முளுப் பெயர்களையும் சொல்லி அறிமுகமானார்கள் அந்த அறிமுகத்தில்  தனது எதிர்க்காலத்தையும் சேர்த்து சொன்ன சித்தராவின் அறிமுகம் எனக்கு பிடித்திருந்தது படிப்பில் கெட்டிக்காரி சாதிக்கவேண்டும் என்பதை விட அவர்கள் ச‌மூகம் இந்த உலகில் மாற்றம் பெற வேண்டும் என்ற நினைப்பு அவள் அறிமுகத்தில் அவள் மனதில் புதைந்து கிடப்பதை என்னால் உணரமுடிந்தது. 
அவள் தான் அந்த வகுப்பில் முதலாம் பிள்ளை என்பதயும் தெரிந்து கொண்டேன். இப்படியான பிள்ளைகளை கண்டால் அவர்களை ஊக்குவித்து இந்த உலகில் பெயர் சொல்லும் பிள்ளையாக வளர விட எனக்கு ஆசை அதற்க்கான சகல உதவிகளையும்  நான் செய்வது வழமை . 
அவள் கொப்பிகளை பார்த்த போது ஒவ்வொரு பக்க‌ங்களிலும் வாசகங்கள் அவை செஞ்சை தொட்டு விடும் திருக்குறள் போல் எனக்கும் ஒலிக்கும் இரட்டை வரிகளில் இருக்கும் ஆயிரம் அர்த்தங்கள் 


சுடச் சுடச் தேநீர் குடியுங்கள் 
சுடும்போது  எங்களை நினையுங்கள் 
கணக்கு தீர்க்கலாம் தீர்க்க முடியாததே 
எங்கள் வாழ்க்கை கணக்கு 

வந்து பார்க்காதீர்கள் 
வாழ்ந்து பாருங்கள் 

கேட்க்காத பேச்சும் வேண்டாத ஏச்சும் 
காசு இல்லாமல் தினம் தினம் வேண்டிக்கொள்கிறோம் (கேட்கிறோம் )  

தேர்த்தல்  வந்தால் மட்டும் தேர் இழுக்க வருகிறார்கள் 
தேவை முடிந்த பின் தேர்கள் நடு வீதியிலே

சித்தாராவும் தனது சந்தேகங்களை கேட்டும் தேடல் மூலமும் பெற்று தனது எதிர்காலத்தின் நோக்கை நிறைவு செய்து வந்தாள் சித்ரா.பகுதி நேர வகுப்புகளுக்கு செல்வதில்லை சித்தரா அனால் தனது செவிப்புலனால் அனைத்தையும் அறிந்து கொள்கிறாள்  பாடசாலை நாட்கள் தொடர்ந்தன சித்ரா பாடசாலைக்கு வருவது மிக குறைவாகவே இருந்தது பல மாணவர்களிடம் விசாரித்தேன்  அவள் வீடு மிக தூரத்தில்  இருப்பதாக சொன்னார்கள் .விடுமுறை நாளான அன்று அவள் வீடு தேடி செல்கிறேன் தலைக்கு ஒரு தொப்பி அது காதுகளை இறுக்கியவண்ணமும் ஒரு போர்வையுடனும் நடந்து செல்கிறேன் கரடு முரடான பாதைகள் கால்களில் குத்தும் முண்டுக்கற்களினாலேயே சென்றுகொண்டிருந்தது  அவள் வீட்டுக்கான பாதை கிட்ட தட்ட மூச்சு வாங்கும் நிலைதான் எனக்கு சுமார் 3 கிலோமீற்றர் நடக்கவேண்டும் இருபக்கமும் அடர்ந்த காடுகள்  கொழுந்து ப‌றிக்க  செல்லும் பெண்கள் கூடையுடன் ஊர்ந்து செல்லும் வண்டுகள் போல வரிசையாக கொழுந்து பறிக்க செல்கின்றனர்.
அந்த வானாந்தரத்தினுள் இருக்கும்  பயங்கரமான சம்பவங்கள்  அங்கு சென்ற சில நாளிலேயே முற்று முழுவதுமாக அறிந்து கொண்டேன் அது ப‌லருக்கும் தெரியவாய்ப்பில்லை அவைதான் இவை (மலையத்தினுள் மூழ்கி கிடக்கும் மர்ம‌ முடிச்சுகள் எனலாம் )

நாம் இன்று குடிக்கும் தேநீர்  கோப்பைக்குள் எத்தன பேரின் உடலில் உறிஞ்சப்பட்ட உழைப்பு உதிரம் தேநீராக வருகிறதென்பது பலருக்கு தெரியாது  ஏற்றத்தில் இருக்கும் தேயிலை கொழுந்தின்  வளர்ச்சி இற‌க்கத்தில் இருக்கும் இவர்கள் வாழ்க்கை வளர்ச்சி  இது எப்போது மாறும் என்ற கேள்வி மனதுக்குள் இருந்தாலும் இந்த மக்கள் அன்று வெள்ளைக்காரன் காலத்தில் 19ம் நூற்றாண்டில் அடிமைகாளாக தமிழ் நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டவர்களாக சொல்லப்படுகிறது அன்று எப்படி வாழ்ந்தார்களோ அதேபோல்   தான் பல ஆண்டுகள் கழிந்த நிலையிலும்.  அவர்களை வைத்து உழைக்கும் வர்க்க உல்லாச வாழ்க்கை இவர்களுக்கு தினம் தினம் உயிருடன்  ஊசலாடும் வாழ்க்கை  அட்டை பூச்சிகளுக்கு காசு பெறாமல் தினம் தினம் ரத்த தானமும் நுளம்பு கடியும் குளவி குத்தலும்  சிறுத்தை தாக்குதலும்  என்று வழக்கு தொடரமுடியாத வன ஜீவ ராசிகளின் தாக்குதல்கள்  தொடர்ந்த வண்ணமே உள்ளது.
இவர்களை வைத்து அரசியல் பிழைப்பு நடத்துபவர்கள் வாழ்கிறார்கள்  இதை யாரும் கண்டு கொள்வதில்லை அவர்களுக்கு தேவை இவர்க்ளின் உழைப்பு மாத்திரமே இவ்ர்களோ கொய்யும் கொழுந்தில் தான் வாழ்கிறார்கள் மழை , வெயில்  என்று பாராமல் கொழுந்து பறித்தாகவேண்டும்   அன்றய நாள்  கொய்யப்படும் நிறைக்கே படி ( காசு )  


இத்தனை தூரம் கடந்து பாடசாலை வரும் அந்த மாணவின் நிலையை நினைத்தும் இந்த மக்களின் வாழ்க்கையை நினைத்தும்  அவள் வீட்டுத்தொகுதிக்கு நெருங்கினேன் லயன் வாழ்க்கை தொடர் வீடுகள் வயது முதிர்ந்த நிலையில் தள்ளாடுவது போல் இருந்தது  தகர கூரைகள் அதில் ஆயிரம் ஓட்டைகள்  தொடர் வீடுகள் உள்ளே போனால் திருமப முடியாது சமையல் அறை ,தூங்கும் அறை என்றெல்லாம் இல்லை எல்லாம் இதற்குள்ளே  எத்தனை பேரானாலும் இந்த கூட்டுக்குள்ளே வாழ வேண்டும்   இது தான் லயன்கள் என்று சொல்லபடுகின்ற வீடுகள். 
. அவளின் வீட்டின் கதவை விசாரித்த பின்பே  தட்டினேன் ஏனென்றால் நிரலில் பல வீடுகள் ஒரே மாதிரியானவை என்றபடியால்   அவளுக்கு ஆச்சரியம் என்ன சார்  இவ்வளவு தூரம் என்றாள்  உன்னை தேடித்தான் வந்தேன் பிள்ளை உள்ளே வாங்கோ சார் உள்ளே கூப்பிட்டாள் அவள் வீட்டை தலைவணங்கியே செல்ல வேண்டும் வீட்டுக்கு நிலையில்லை உள் நுழைந்தேன் அங்கே அவள் அம்மா படுத்த படுக்கையாக இருந்தார்  என்னால் உணர முடிந்தது குளவி தாக்கியதில் அவள் அம்மாவும்  காயப்பட்டிருப்பது அப்போதுதான் தெரிந்தது இது அவரகளுக்கு சாதரண ஒன்று தான்  ஆனால் அது வயது முதியவர்களை தாக்கும் போது அது உயிரிழப்பாக கூட அமையும் .அம்மாக்கு உடம்புக்கு முடியவில்லை இதனால் தான் சார் நான் பள்ளிக்கு  வரவில்லை  என்றாள் அப்பா எங்கே என்று கேட்க அப்பா இறந்து விட்டார் சார் நாங்கள் ஐந்து பேர் அம்மா அப்பா நான் தம்பி ஒன்று  தங்கை ஒன்று அப்பா தேன் எடுப்பதற்காக மரத்தில் ஏறும்போது சறுக்கி கீழே விழுந்து விட்டார் அடுத்த தம்பி தோட்ட முதலாளி வீட்டுக்கு வேலைக்கு கூட்டித்து சென்றார் அவன் படிக்கவும் இல்லை சம்பளமும் கொடுப்பதில்லை  அம்மாவும் அவரிடம் எதுவும் கேட்பதில்லை கேட்டால்   அவன் ஆண்பிள்ள  தானே என்று சொல்லுவா  அம்மா உழைத்து தான் சார் நானும் தங்கையும் படிப்பதாக கூறினாள் இனி அம்மாவால் முடியாது போல் தெரிகிறது அதனால் நான் பள்ளிகூடத்திற்கு வரமுடியாது என்றாள் சித்தரா அவள் அம்மாவோ உனக்கு பைத்தியமா பிள்ளை நீ படி உன்னை படிக்க வைப்பது தான் எனது லட்சியம் என்றாள். அவள் அம்மாவோ   
இல்லை பிள்ளை அப்படி சொல்லாத  நீ படித்தால்  தான் உன் குடும்பத்தை  நல்ல நிலைக்குக் கொண்டு வந்து என்று  நானும் சொல்ல அவள் அம்மாவும் ஆமாங்க துரை இவள படிக்க வச்சி வேற வேலையில சேர்க்கணும் என்று சொல்ல அவளோ இல்லையம்மா இனியும் உன்னால் முடியாதுதானே தங்கச்சி மட்டும் படிக்கட்டும் என்றாள் என் மனம் உள்ளே அவள் எதிர்க்காலத்தை எண்ணி சரிகிறது என் மனம்  .நானும் அப்படி நினைக்காதே நான் உனக்கு உதவியாக இருப்பேன் என்று சொல்லிவிட்டு அவள் அவள் வீட்டு செலவுக்காக சட்டைப்பையில் இருந்து 2000 ரூபா காசை செலவுக்கு வைத்துக்கொள்ளுங்கள் என்று  கொடுக்கிறேன்  வாங்க மறுத்துவிட்டார்கள் பரவாயில்லை அம்மா வைத்திய செலவுக்காவது வைத்துகொள் என்ற அவள் அம்மா தலையணையில்  வைத்து விட்டு  அவள் கூட்டை விட்டு (வீட்டை )  வெளியே வந்தேன்  குடிப்பதற்கு பீலி தண்ணீரும்  மின்சாரம் இல்லை  இருட்டில் சிமிளி விளக்கில் தொலைகிறது இவர்கள் வாழ்கையை எண்ணி பெருமூச்சுடன் அவ்விடத்தை வீட்டு அகல்கிறேன் .    இரண்டு வாரங்கள் கழித்து அவள் அம்மா தேயிலை கொய்த இடத்தில் விழுந்து மரணமாகிறாள் பாடசாலையில் பயின்ற மாணவி என்பதற்க்காக பாடசாலை மாணவ மாணவிகள் அதிபர் ஆசிரியர்கள்  அவள் வீடு சென்று அஞ்சலி செலுத்தி ஆறுதல் கூறி விட்டு  வந்தோம் இருந்தாலும் நன்றாக படிக்கும் ஒரு மாணவியை   இழக்க நான் விரும்பவில்லை  அவள் படிப்பை தொடரவேண்டும் என்று நிணைப்பில் அவள் பயில்வதற்க்கு தேவையான பொருட்களை  வாங்கி கொண்டு அவள் வீட்டுக்கு ஓட்டமும் நடையுமாக  செல்கிறேன்  அப்போது அவ்வழியாக தேயிலை கொய்ய  வரிசையாக பெண்கள் தங்கள் பெயர்களை பதிய நிற்கின்றனர் .

அப்போது ஒரு  குரல் வரிசையின் வழியே செவிக்கு வருகிறது எங்க சார் போறிங்க  என்னால் நம்பமுடியவில்லை சித்திரா விசித்திரமாக‌ தலையில் முக்காடும் முதுகில் பிரம்பு கூடையும் சாக்குபையை இடுப்பில் சுற்றி கட்டியவாறும்  தேயிலை பறிக்க செல்ல தயாராகி கொண்டிருந்தாள் .   வீட்டில் ஒருத்தருமில்லை சார்  அதான் உங்களை  இங்கே வைத்து கூப்பிட்டேன்  ஏன் பிள்ளை ஏன் என்று நான் வினவ  அவள் பதிலோ  எனக்கு இப்போ படிப்பு சோறு போடாது பறிப்பு தான் சோறு போடும் ஏன்றாள்  என்னால் அவள் கூற்றுக்கு பதில் சொல்ல முடியவில்லை  வாங்கி வந்த‌ பொருட்களை உன் தங்கைக்காக பயன் பெறட்டும் என்று கூறி  அவளிடம் அந்த பொருட்களை  கொடுத்துவிட்டு  பாடசாலைக்கு வந்து எனது சுய விருப்பின் பெயரில் இடமாற்ற கடிதத்தினை அதிபரிடம்  கொடுக்கிறேன் 
ஒளிராதா வாழ்க்கைகுள் மிளிர்ந்து கொண்டிருக்கும் கொழுந்துகள் இவை   
சாதாரண ஒரு தேநீர் கோப்பைக்குள் ஒளிந்து இருக்கும் சோகங்கள் யாருக்கும் தெரிவதில்லை நாம் சொல்வோம் சாயம் கூடியது  தேயிலை சரி இல்லை  என்று அனால் தேயிலை எத்தனை பேரை தேய்த்து  தேநீராகியது  என்று அந்த நொடியில் யாரும் நினைத்து பார்க்காத ஒன்று. 

மலையகத்தில் நடக்கும் சம்பவங்களை வைத்து  கறபனையாக       

 • Like 14

Share this post


Link to post
Share on other sites

குறிஞ்சி மலரை நுகர்ந்தேன். நன்றி முனிவர் ஜீ 

 • Like 1

Share this post


Link to post
Share on other sites
On 27/07/2016 at 5:59 AM, குமாரசாமி said:

குறிஞ்சி மலரை நுகர்ந்தேன். நன்றி முனிவர் ஜீ 

நன்றி குமார. சாமி அண்ணே தினமும் பத்திரிகையை வாசிக்கும் போதே மலையக மக்கள் படும் துன்பங்களை வைத்து எழுத தூண்டியது?

Share this post


Link to post
Share on other sites

முனிவரின் கதை எனது பழைய நினைவுகள் சிலவற்றைக் கிழறி விட்டது!

பல வருடங்களின் முன்னர் தியத்தலாவை இராணுவ முகாமுக்குக் 'கடேற்' பயிசிக்காகச் செல்லும் போது ' பண்டாரவளை' தாண்டியதும் எமது விழிகள் புகையிரதத்தின் வெளியேயே பார்த்துக்கொண்டிருக்கும்!  தென்னந்தோட்டங்கள் மறைந்து... சிரட்டை கட்டப்பட்டு... பால் கறக்கப் படுவதற்குக் காத்திருக்கும் பசுக்களின் நிரையைப் போல....றப்பர் மரங்கள் வரிசையாக நிற்கும்! அவை மறையத் தொடங்கத் தேயிலைத் தோட்டங்கள்...பச்சைப் பசேலெனத் தோன்றத் தொடங்கும்! அவற்றின் அழகை ரசிக்கும் வேளையில்...நீங்கள் சொல்லும் லயன் வரிசைகளைப் பார்க்க நேர்ந்தது!

அப்போது தான் வேலைக்கு அவர்கள் புறப்படும் நேரம் போல இருந்தது! வரிசையாகத் தோன்றிய லயன்களின் வாசல்களில்.. யன்னல்களின் தொங்கும் திரைகளைப் போல அழுக்கடைந்த துணிகள் மட்டுமே கதவுகளாகத் தொங்க...அந்த சின்ன வீடுகளிலிருந்து புகை வளையங்கள் வெளியே வந்து கொண்டிருந்தன! பின்னர் அவர்கள் தோள்களில் கூடைகளைச் சுமந்த படி தோட்டங்களை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தனர்! அவர்கள் வாய் நிறைய வெத்திலையைச் சப்பிக்கொண்டிருந்தார்கள்! பின்னர் தான் தெரிந்தது..அவர்கள் வெத்திலையைச் சுவைக்காகச் சாப்பிடவில்லை.. மருந்தாகச் சாப்பிடுகிறார்கள் என்று!

மலையட்டைகள் அவர்களது இரத்தத்தை உறிஞ்சும் போது...அந்தப் புகையிலை சேர்ந்த வெத்திலைச் சாயத்தை..அந்த அட்டை கடித்த இடத்தில் துப்புவார்களாம்! அவ்வளவு தான் அவர்களுக்குக் கிடைக்கும் மருந்து!

அவர்கள் வாழ்க்கை நிலையைப் பார்த்த பின்னர்... தேநீரை.. நான் குடிப்பதில்லை! எத்தைனையோ வருடங்கள் கடந்த பின்னரும்...நான் இன்று வரை தேநீர் அருந்துவதில்லை!   ( மிகவும் தவிர்க்க முடியாத சந்தர்ப்பங்களைத் தவிர)!

அழகிய தேயிலைப் பற்றைகளும்..அவற்றில் தவழ்கின்ற முகில்களும் எனக்கு மகிழ்ச்சியைத் தருவதற்குப் பதிலாக...இன்றும் துயர நினைவுகளையே தருகின்றன!

இன்றும் கூட அவர்களது நிலைமை மாறவில்லை என்பது.. மிகவும் வருத்தத்துக்குரிய செய்தியே! 

 

என்னைப் போலவே... சந்திரன் மாஸ்டரும் ஒரு 'கோழை' தான்...!

ஒரு பிரச்னையை எதிர்கொள்ளாது...எமது கண்களை மூடுவதால்..அந்தப் பிரச்சனைகள் தீர்ந்து விடும் என நினைப்பவர்கள் கோழைகள் தானே! 

Share this post


Link to post
Share on other sites
On 26.7.2016 at 7:47 PM, முனிவர் ஜீ said:

குறிஞ்சி மலர்கள்

சுடச் சுடச் தேநீர் குடியுங்கள் 
சுடும்போது  எங்களை நினையுங்கள்
 

கணக்கு தீர்க்கலாம் தீர்க்க முடியாததே 
எங்கள் வாழ்க்கை கணக்கு 

வந்து பார்க்காதீர்கள் 
வாழ்ந்து பாருங்கள் 

கேட்க்காத பேச்சும் வேண்டாத ஏச்சும் 
காசு இல்லாமல் தினம் தினம் வேண்டிக்கொள்கிறோம் (கேட்கிறோம் )  

தேர்த்தல்  வந்தால் மட்டும் தேர் இழுக்க வருகிறார்கள் 
தேவை முடிந்த பின் தேர்கள் நடு வீதியிலே

நெஞ்சை தொட்ட... யதார்த்தமான வரிகள்.
ஆக்கத்திற்கு,  நன்றி முனிவர் ஜீ.

Share this post


Link to post
Share on other sites
14 hours ago, புங்கையூரன் said:

முனிவரின் கதை எனது பழைய நினைவுகள் சிலவற்றைக் கிழறி விட்டது!

பல வருடங்களின் முன்னர் தியத்தலாவை இராணுவ முகாமுக்குக் 'கடேற்' பயிசிக்காகச் செல்லும் போது ' பண்டாரவளை' தாண்டியதும் எமது விழிகள் புகையிரதத்தின் வெளியேயே பார்த்துக்கொண்டிருக்கும்!  தென்னந்தோட்டங்கள் மறைந்து... சிரட்டை கட்டப்பட்டு... பால் கறக்கப் படுவதற்குக் காத்திருக்கும் பசுக்களின் நிரையைப் போல....றப்பர் மரங்கள் வரிசையாக நிற்கும்! அவை மறையத் தொடங்கத் தேயிலைத் தோட்டங்கள்...பச்சைப் பசேலெனத் தோன்றத் தொடங்கும்! அவற்றின் அழகை ரசிக்கும் வேளையில்...நீங்கள் சொல்லும் லயன் வரிசைகளைப் பார்க்க நேர்ந்தது!

அப்போது தான் வேலைக்கு அவர்கள் புறப்படும் நேரம் போல இருந்தது! வரிசையாகத் தோன்றிய லயன்களின் வாசல்களில்.. யன்னல்களின் தொங்கும் திரைகளைப் போல அழுக்கடைந்த துணிகள் மட்டுமே கதவுகளாகத் தொங்க...அந்த சின்ன வீடுகளிலிருந்து புகை வளையங்கள் வெளியே வந்து கொண்டிருந்தன! பின்னர் அவர்கள் தோள்களில் கூடைகளைச் சுமந்த படி தோட்டங்களை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தனர்! அவர்கள் வாய் நிறைய வெத்திலையைச் சப்பிக்கொண்டிருந்தார்கள்! பின்னர் தான் தெரிந்தது..அவர்கள் வெத்திலையைச் சுவைக்காகச் சாப்பிடவில்லை.. மருந்தாகச் சாப்பிடுகிறார்கள் என்று!

மலையட்டைகள் அவர்களது இரத்தத்தை உறிஞ்சும் போது...அந்தப் புகையிலை சேர்ந்த வெத்திலைச் சாயத்தை..அந்த அட்டை கடித்த இடத்தில் துப்புவார்களாம்! அவ்வளவு தான் அவர்களுக்குக் கிடைக்கும் மருந்து!

அவர்கள் வாழ்க்கை நிலையைப் பார்த்த பின்னர்... தேநீரை.. நான் குடிப்பதில்லை! எத்தைனையோ வருடங்கள் கடந்த பின்னரும்...நான் இன்று வரை தேநீர் அருந்துவதில்லை!   ( மிகவும் தவிர்க்க முடியாத சந்தர்ப்பங்களைத் தவிர)!

அழகிய தேயிலைப் பற்றைகளும்..அவற்றில் தவழ்கின்ற முகில்களும் எனக்கு மகிழ்ச்சியைத் தருவதற்குப் பதிலாக...இன்றும் துயர நினைவுகளையே தருகின்றன!

இன்றும் கூட அவர்களது நிலைமை மாறவில்லை என்பது.. மிகவும் வருத்தத்துக்குரிய செய்தியே! 

 

என்னைப் போலவே... சந்திரன் மாஸ்டரும் ஒரு 'கோழை' தான்...!

ஒரு பிரச்னையை எதிர்கொள்ளாது...எமது கண்களை மூடுவதால்..அந்தப் பிரச்சனைகள் தீர்ந்து விடும் என நினைப்பவர்கள் கோழைகள் தானே! 

நன்றி புங்கையூரான் கருத்துக்கும் உங்கள் பழைய நினைவுக்கும்  இன்னும்  பல சோக  புதையல்கள் உண்டு மலையகத்தில் அடியில் 

உங்கள் கருத்துக்க‌ள் என்ற உளிகளே என்னை செதுக்கும் மீண்டும்  நன்றி 

12 hours ago, தமிழ் சிறி said:

நெஞ்சை தொட்ட... யதார்த்தமான வரிகள்.
ஆக்கத்திற்கு,  நன்றி முனிவர் ஜீ.

நன்றி தமிழ் சிறி அண்ணை உங்கள் கருத்துக்கும் 
தனிமையில் இருக்கும் போது சில கருத்துக்களை எழுதி அதை நடைமுறைக்கேற்றால் போல் எழுத்துக்களை இடுவது தான் அந்த  கொப்பிகளில் உள்ள வார்த்தைகள்  என்று சொல்லப்பட்டது 

உங்கள் கருத்துக்க‌ள் என்ற உளிகளே என்னை செதுக்கும் மீண்டும்  நன்றி

Share this post


Link to post
Share on other sites

நெஞ்சைத் துனளக்கும் படியாக எழுதியுள்ளீர்கள் முனிவர். லயன் வாழ்க்கையை எண்ணூம்போது கக்கத்தில் கருப்புக் குடையுடன் கங்கானியும் நினைவில் வந்து போகின்றார்....! நினறய எழுதுங்கள்...!  tw_blush:

Share this post


Link to post
Share on other sites
10 minutes ago, suvy said:

நெஞ்சைத் துனளக்கும் படியாக எழுதியுள்ளீர்கள் முனிவர். லயன் வாழ்க்கையை எண்ணூம்போது கக்கத்தில் கருப்புக் குடையுடன் கங்கானியும் நினைவில் வந்து போகின்றார்....! நினறய எழுதுங்கள்...!  tw_blush:

நன்று சுவி அண்ணை உங்கள் தூண்டு கோலுக்குtw_blush: 

வந்து பார்க்காதீர்கள் 
வாழ்ந்து பாருங்கள் 

அங்கே சுரண்டல் இருக்கும் வரைக்கும் மக்களின் வாழ்க்கை என்பது?? அட்டை உறிஞ்சும் ரத்தம் போலவே அவர்களது வாழ்க்கையும் இதை விட என்னால்  விபரிகக்க முடியாது அங்கே இரத்தம் குடித்து  கொழுப்பது அட்டை உறுஞ்சுவது மக்களின் .............................. :unsure:

Share this post


Link to post
Share on other sites

சுடச் சுடச் தேநீர் குடியுங்கள் 
சுடும்போது  எங்களை நினையுங்கள்

நல்ல கதை.

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

மலையகத்தில் சிறுவயதில் வாழ்ந்ததால் மலையக மக்களின் வாழ்க்கை முறை பற்றி நன்றாகவே தெரியும். அவர்களை போல் அருமையான மக்களை இன்று வரை கண்டதில்லை.

Share this post


Link to post
Share on other sites
7 hours ago, sOliyAn said:

சுடச் சுடச் தேநீர் குடியுங்கள் 
சுடும்போது  எங்களை நினையுங்கள்

நல்ல கதை.

நன்றி சோழியன் ஐயா கன நாள் இந்தப் பக்கம் வராத ஆளையும் இழுத்து வந்திருக்கு போல இந்த குறிஞ்சி மலர் நன்றி tw_blush:

1 hour ago, nunavilan said:

மலையகத்தில் சிறுவயதில் வாழ்ந்ததால் மலையக மக்களின் வாழ்க்கை முறை பற்றி நன்றாகவே தெரியும். அவர்களை போல் அருமையான மக்களை இன்று வரை கண்டதில்லை.

உன்மை தான் எனக்கு சில சந்தர்பம் கிடைத்தது அருமையான மனிதர்கள் இதனால் தான் என்னவோ இதுவரை ஏமாற்றப்பட்டுக்கொண்டு இருக்கிறார்கள் என்று அடிமனதில் தோன்றும் எண்ணம்:rolleyes: 

நன்றி நுணாவிலன் உங்கள் கருத்துக்கு tw_blush:

 • Like 1

Share this post


Link to post
Share on other sites
11 hours ago, sOliyAn said:

சுடச் சுடச் தேநீர் குடியுங்கள் 
சுடும்போது  எங்களை நினையுங்கள்

நல்ல கதை.

சோழியர் யாழ் முற்றத்தில்  மீண்டும் தவழ்வதை பார்க்கும் போது சந்தோசமாக இருக்கின்றது.  michael jackson dance emoticon

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

முனிவர் ஜி....  மலையக மக்கள் பாவப்படடவர்கள்
அவர்களுக்காக ஒரு வழிகாட்டி இன்னும் பிறக்கவில்லை
இங்கும் இல்லாமல் அங்கும் இல்லாமல் நடுத்தெருவில் அனாதைகளாக விடப்பட்டவர்கள்.

Share this post


Link to post
Share on other sites

சுடச் சுடச் தேநீர் குடியுங்கள் 
சுடும்போது  எங்களை நினையுங்கள்

 

கதை மிகவும் கனதியாக இருந்தது. கதை என்பதைவிட மலையக மக்களின் வாழ்வையும் உணர்வுகளையும் தந்த முனிவர் ஜீக்கு பாராட்டுக்கள்.

இறுதியில் சந்திரன் இடமாற்றம் கோருவது மிகவும் யதார்த்தமாக இருந்தது. தனி ஒருவரால் சமுதாய மாற்றத்தை இலவில் கொண்டுவரமுடியாது என்பது உண்மைதான். 

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

ஆழமான சிந்திக்க வைக்கும் கதை.

ஆனாலும் பரிதாபப்படுவதை தவிர வேறு என்ன தான் செய்ய முடியும்.

வெல் டண் முனி.

Edited by ஈழப்பிரியன்

Share this post


Link to post
Share on other sites
On 30/07/2016 at 4:07 AM, வாத்தியார் said:

முனிவர் ஜி....  மலையக மக்கள் பாவப்படடவர்கள்
அவர்களுக்காக ஒரு வழிகாட்டி இன்னும் பிறக்கவில்லை
இங்கும் இல்லாமல் அங்கும் இல்லாமல் நடுத்தெருவில் அனாதைகளாக விடப்பட்டவர்கள்.

அன்று முதல் இன்றுவரை வாத்தியார் அவர்கள் அப்படியே வாழ்ந்து கொண்டு வருகிறார்கள் 

உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி 

14 hours ago, கிருபன் said:

சுடச் சுடச் தேநீர் குடியுங்கள் 
சுடும்போது  எங்களை நினையுங்கள்

 

கதை மிகவும் கனதியாக இருந்தது. கதை என்பதைவிட மலையக மக்களின் வாழ்வையும் உணர்வுகளையும் தந்த முனிவர் ஜீக்கு பாராட்டுக்கள்.

இறுதியில் சந்திரன் இடமாற்றம் கோருவது மிகவும் யதார்த்தமாக இருந்தது. தனி ஒருவரால் சமுதாய மாற்றத்தை இலவில் கொண்டுவரமுடியாது என்பது உண்மைதான். 

நன்றி கிருபன் அண்ணா உங்கள் கருத்துக்கும் ஊக்கத்திற்கும் நன்றி 

 

14 hours ago, ஈழப்பிரியன் said:

ஆழமான சிந்திக்க வைக்கும் கதை.

ஆனாலும் பரிதாபப்படுவதை தவிர வேறு என்ன தான் செய்ய முடியும்.

வெல் டண் முனி.

நன்றி ஈழப் பிரியன் உங்கள் கருத்துக்கும் ஊக்கம் கொடுப்பதற்கும் இந்த ஊக்கம் தான் இன்னும் தரமான படைப்புகள் தருவதற்கு எனக்கு உதவும் 

இந்த கதையை தனது முகநூலில் இணைத்து வாசகர்களுக்கு வழங்கிய சுமேரியர் அவர்களுக்கும், 

தனிமரம் நேசன் அவர்களுக்கும் நன்றி தனிமரம் நேசனை இங்கே அழைக்கிறேன் உங்கள் கருத்தையும் எதிர்பார்த்து

Share this post


Link to post
Share on other sites
2 hours ago, யாயினி said:

குறிஞ்சி மலர்கள்...??

 
Sahana Sahana's photo.

யாயினி நன்றி மலரையும் இணைத்து விட்டீர்கள் கருத்துகளையும் எதிர்பார்த்து?

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

இன்று தான் வாசித்தேன்....இதுவரை மலையகமக்கள் இத்தனை கஸ்டங்களை அனுபவிக்கின்றார்கள் என்று எண்ணியதில்லை.

இக்கதை பல யதார்த்தங்களையும் படிப்பினைகளையும் வெளிக்கொண்டுவந்துள்ளது.

நன்றாக எழுதியுள்ளீர்கள். ...தொடர்ந்து எழுதுங்கள்!

Share this post


Link to post
Share on other sites
3 minutes ago, தமிழினி said:

இன்று தான் வாசித்தேன்....இதுவரை மலையகமக்கள் இத்தனை கஸ்டங்களை அனுபவிக்கின்றார்கள் என்று எண்ணியதில்லை.

இக்கதை பல யதார்த்தங்களையும் படிப்பினைகளையும் வெளிக்கொண்டுவந்துள்ளது.

நன்றாக எழுதியுள்ளீர்கள். ...தொடர்ந்து எழுதுங்கள்!

நன்றி தமிழினி உங்கள் கருத்துக்கும் 
 தொடர்ந்து எழுதுவேன் 

இதில் என்ன விசேடம் என்றால் மலையக மக்கள் இது வரையிலும் அப்படியேதான் வாழ்ந்து வருகிறார்கள் என்பது பலருக்கு தெரியாது 

Share this post


Link to post
Share on other sites
On 26/07/2016 at 11:17 PM, முனிவர் ஜீ said:

ஒளிராத வாழ்க்கைகுள் மிளிர்ந்து கொண்டிருக்கும் கொழுந்துகள் இவை

என்னை கேட்டால் மலையக மக்களுக்குத்தான் அதிக உதவி தேவை என்பேன். அவர்களை மனிதர்களாகவே எம்மில் பலர் பார்ப்பதில்லை. அவர்களை வீட்டுவேலைக்கும், கூலிகளாகவும் பார்த்த எம்மவர்க்கு - இனியாவது கருணை வரும் என்ற எதிர்பார்ப்புடன்.

தொடர்ந்து எழுதுங்கள் முனிவரே.

 • Like 1

Share this post


Link to post
Share on other sites
On 7/26/2016 at 11:17 PM, முனிவர் ஜீ said:

 

 

Quote

 

என்னை கேட்டால் மலையக மக்களுக்குத்தான் அதிக உதவி தேவை என்பேன். அவர்களை மனிதர்களாகவே எம்மில் பலர் பார்ப்பதில்லை. அவர்களை வீட்டுவேலைக்கும், கூலிகளாகவும் பார்த்த எம்மவர்க்கு - இனியாவது கருணை வரும் என்ற எதிர்பார்ப்புடன்.

தொடர்ந்து எழுதுங்கள் முனிவரே.

 

நன்றி ஜீவன் அண்ணை உங்கள் கருத்துக்கும்  உங்கள் எண்ணம் நிறைவேறவே நாங்களும் நினைக்கிறோம் நடந்தால் அது சந்தோசமே 

Edited by முனிவர் ஜீ

Share this post


Link to post
Share on other sites

யதார்த்தமாக நகரும் கதை. கதையென்பதைவிட உண்மை. பாராட்டுகள் முனிவர் ஜீ.

"சுடச் சுடச் தேநீர் குடியுங்கள் 
சுடும்போது  எங்களை நினையுங்கள்"

உள்ளத்தையெரிக்கும் கனதியான வரிகள். 
தனியொருவனால் குமுகாய மாற்றத்தை உடனே ஏற்படுத்த முடியாதென்பது உண்மைதான். ஆனால் சிற்றுளி கொண்டுதானே பெரும் சிலைகளே செதுக்கப்படுகிறது. 

Share this post


Link to post
Share on other sites

முனிவர்ஜீ,நீங்கள் எந்தப் பாடம் படிப்பிங்கிறனீங்கள்? கணக்கா?...உங்கள் அனுபவப்பதிவுகளை தொடர்ந்தும் எழுதுங்கள்.

Share this post


Link to post
Share on other sites
On 8/2/2016 at 9:54 AM, முனிவர் ஜீ said:

யாயினி நன்றி மலரையும் இணைத்து விட்டீர்கள் கருத்துகளையும் எதிர்பார்த்து?

இப்போது எல்லாம் நான் கணணிக்கு வருவதில்லை ஒரு குட்டி ஐபாட் வைத்திருக்கிறேன் அதன் மூலம் ஏதாச்சும் தட்டிப் பார்த்துட்டு போய் விடுவது வழமை.. மன்னிக்க வேண்டும்..அதனால் தான் உங்கள் ஆக்கங்களைப் பார்த்தாலும் உடன் வர கருத்து எழுது முடிவதில்லை..

 

உண்மையாகவே குறிஞ்சி மலரை இணைத்தது தலைப்பு ஏற்றால்போல் இருக்கட்டுமே என்று தான்..கதை இவ்வாறு இருக்கும் என்று நிச்சயமாக தெரியாது...சொறி முனி.....அதிகமாக நான் வெறும் தேனீரோடு தான் காலத்தைக் கடத்துவது 

சுடச் சுடச் தேநீர் குடியுங்கள் 
சுடும்போது  எங்களை நினையுங்கள்,,,,,,,பகிர்வுக்கு நன்றி என்பதை விட  படித்துக்கு கொண்டு இருக்கும் போது மனதுக்குள் ஏதோ செய்தது,செய்கிறது...இப்படியாக படிப்பதற்கு கஸ்ரப்படும் மாணவ,மாணவிகள் இருந்தால் அறியத் தாருங்கள்  நான் சொல்லலோடு நிற்க மாட்டேன் முனி என்னால் முடிந்ததை செய்து முடிப்பது வழமை...உண்மையாக வறுமைப்பட்ட பிள்ளைகளை அடையாபடுத்துங்கள்..அத்தோடு நினைத்தவுடன் வேலை இடமாற்றம் செய்வதையும் சற்று குறைத்தால் நன்று முனி சிறு மன அபிப்பிராயம் மட்டுமே.

கடந்த காலங்களில் மலையகத்தில் ஏற்பபட்ட மண் சரிவின் பின் மலையகத்தை சேர்ந்த    கொழும்பில் வானொலித்துறையில் பணி புரியும் ஒரு சில உறவுகளை முகப் புத்தகத்தில் இணைத்து வைத்திருந்தேன். அவர்களுடாக அங்குள்ள விடையங்களை அறிந்து கொள்ளலாம் என்ற நோக்கில் தான்..ஆனால் காலப் போக்கில் அந்த உறவுகளை இப்போ என் முகப் புத்தகத்திலும் காணவில்லை..
 

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

 • Topics

 • Posts

  • தென் சீனக் கடலை ஆக்கிரமிக்க சீனாவும் அமெரிக்காவும் துடிப்பது ஏன்?- அதிரவைக்கும் பின்னணி! தென் சீனக் கடல் சீனாவினால் ஆக்கிரமிக்கப்படுவதை, அமெரிக்கா விரும்பவில்லை. சீனாவின் அண்டை நாடுகளும் விரும்பவில்லை. உலக வல்லரசுகள், கொரோனா வைரஸின் கோரப் பிடியில் சிக்கி சீரழிந்துவரும் நிலையில், அமெரிக்கா-சீனா இடையேயான பொருளாதாரப் போர், ஆதிக்கப் போராக உருமாறி, ஆசியக் கண்டத்தை அச்சுறுத்திவருகிறது. கொரோனா பிரச்னையில், சீனாவை கடுமையாகச் சாடிவரும் அமெரிக்கா, தற்போது அந்நாட்டை ராணுவரீதியாக ஒடுக்கவும் திட்டமிட்டுள்ளது. இதை உணர்ந்த சீனா, தென் சீனக் கடல்மீது தனது அதிகாரத்தை நிலைநாட்ட ராணுவ நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. இரு வல்லரசுகளின் ஆதிக்கப் போரால் தென் சீனக் கடல் கொந்தளித்துள்ளது. சமீபகாலமாக, அமெரிக்காவின் போர்க்கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள், தென் சீனக் கடல் பகுதியில் சர்ச்சைக்குரிய வகையில் நுழைந்துள்ளதாலும், சீனாவின் போர் விமானங்கள் அப்பகுதியில் வட்டமிடுவதாலும், பதற்றம் அதிகரித்துள்ளது.   தென் சீனக் கடல்மீது சீனா ஆதிக்கம் செலுத்துவதை அமெரிக்கா விரும்பவில்லை. சீனாவின் அண்டை நாடுகளும் விரும்பவில்லை. ஏனெனில், மலேசியா, வியட்நாம், பிலிப்பைன்ஸ், தைவான் எனப் பல நாடுககள் தென் சீனக் கடல்மீது சொந்தம் கொண்டாடுகின்றன. பல காலமாக அமெரிக்கா தென் சீனக் கடலை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. இதற்கு முக்கியக் காரணம், தென் சீனக் கடல் முழுக்க கொட்டிக்கிடக்கும் எரிவாயு, எண்ணெய் உட்பட பல இயற்கை வளங்கள். இக்கடல், உலகின் முக்கியமான கடல் போக்குவரத்துத் தடங்களில் ஒன்று. உலகின் மூன்றில் ஒரு பங்கு கப்பல் போக்குவரத்து தென் சீனக் கடல் வழியாகத்தான் நடைபெறுகிறது. சமீபகாலமாக, சீனா இந்தக் கடல் பகுதியைச் சொந்தம் கொண்டாடினாலும், இதுவரை இந்த அளவுக்கு கடுமையாக சீனா நடந்துகொண்டதில்லை. கொரோனா பிரச்னையில் சீனா உள்நாட்டிலும் உலகத்தின் பார்வையிலும் குற்றவாளியாக நிறுத்தப்பட்டுள்ளது. இந்த இக்கட்டான சூழலைப் பயன்படுத்தி, அமெரிக்கா சீனாவை ஒடுக்க முனைந்துள்ளது. தனது அதிகாரத்தை நிலைநாட்டவும், இழந்த பெயரை மீட்கவும் சீனாவுக்குத் தேவை ஒரேயொரு வெற்றி. தனது ஆளுமையை நிலைநாட்ட எப்போதும் சீனா பிரயோகிக்கும் ஒரே அஸ்திரம் ஆக்கிரமிப்பு அல்லது அச்சுறுத்தல். தற்போது, தென் சீனக் கடலிலும் இதே அஸ்திரத்தைப் பயன்படுத்தியுள்ளது. இந்த ஆண்டு தொடக்கத்திலிருந்து, கொரோனா வைரஸ் சீனாவை புரட்டிப்போட்டபோதிலும், தென் சீனக் கடலில் தனது செயல்பாடுகளை சீனா குறைத்துக்கொள்ளவில்லை. சர்வதேச விதிமுறைகளை மீறி, சீனா தென் சீனக் கடல்மீது செயற்கை திட்டுகள் அமைத்து, இரு புதிய ஆராய்ச்சி நிலையங்களை அமைத்துள்ளது. அந்தப் பகுதியில் பாதுகாப்பு குழிகள் மற்றும் ராணுவ விமான ஓடுபாதைகள் அமைத்தது. இதன்மூலம் 100 கிமீ சுற்றளவுள்ள பகுதிமீது உரிமை கொண்டாடி வருகிறது. கடந்த ஜனவரி முதல் சீனாவின் கடலோர காவல்படை கப்பல்கள், தென் சீனக் கடல் பகுதியின் சர்ச்சைக்குரிய பகுதியில் வலம் வரத்தொடங்கியதும், அப்பகுதியில் மீன்பிடிப்பவர்களைத் துன்புறுத்தி விரட்டியதும், வியட்நாமின் மீன்பிடிப் படகை சீனா கண்காணிப்பு கப்பல் மூழகடித்தது என அனைத்தும் தனது பலத்தைக் காட்டுவதற்காகத்தான். ஏற்கெனவே, ஒரு சர்வதேச தீர்ப்பாயம் நீர்வழி உரிமை தொடர்பாக சீனா முன்வைத்த கோரிக்கைகளை நிராகரித்தது. ஆனால், பெய்ஜிங் இதற்கு அலட்டிக்கொள்ளவில்லை. சீனா வேண்டுமென்றேதான் இப்படி நடந்துகொள்கிறது. பிரச்னையைத் திசைதிருப்பவும், அமெரிக்காவால் ஓரளவுக்கு மேல் எதுவும் செய்ய முடியாது என்றும் தனது அண்டை நாடுகளுக்குக் காட்டவும்தான் சீனா இப்படிச் செய்கிறது என்கிறார்கள், ராணுவ நிபுணர்கள். நாங்கள் நினைத்ததைச் செய்வோம் என்பதைக் காட்டும் வகையில், மேலும் பல பகுதிகளை ஆக்கிரமித்தது. அமெரிக்காவுக்கு இந்தக் கடல் பகுதிமீது எந்த உரிமையும் இல்லாதபோது, அந்தப் பகுதியை சீனா ராணுவமயமாக்குவதை அது விரும்பவில்லை. தனது நட்பு நாடுகளின் பாதுகாப்புக்கும், பொருளாதாரத்திற்கும் அச்சம் ஏற்படும் என்பதால், சீனாவை ஒடுக்க நினைக்கிறது. சீனாவைச் சுற்றியுள்ள நாடுகள் மற்றும் தீவுகளைத் தங்கள் வசம் கொண்டுவந்து, ஒரு சங்கிலித்தொடர் போல அமைத்து, சீனாவுக்கு ஒரு நிரந்தர அச்சுறுத்தலை உருவாக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது நேரடியாகவோ அல்லது ராணுவரீதியாகவோ சீனாவை அடக்குவது அவ்வளவு எளிதல்ல என்பது அமெரிக்காவுக்குத் தெரியும். சமீப காலமாக, சீனாவின் ராணுவம் அசுர வளர்ச்சி அடைந்துள்ளது. கடந்த 1991ல் வளைகுடா மற்றும் ஆப்கானிஸ்தான் போர்களில் அமெரிக்கா கவனம் செலுத்தியபோது, அந்தச் சூழலைத் தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட சீனா, தன்னுடைய ராணுவ பலத்தை பிரயோகித்து, அண்டை நாடுகளை அடக்கி, தென் சீனக் கடல்மீது கோலோச்சத் தொடங்கிவிட்டது. அதனால், அமெரிக்கா தனது ராஜ தந்திர அணுகுமுறைகள் மற்றும் ராணுவ நடவடிக்கைகளில் மிகப்பெரிய மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது.   சீனாவைச் சுற்றியுள்ள நாடுகள் மற்றும் தீவுகளைத் தங்கள் வசம் கொண்டுவந்து, ஒரு சங்கிலித்தொடர் போல அமைத்து, சீனாவுக்கு ஒரு நிரந்தர அச்சுறுத்தலை உருவாக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. முதல் கட்டமாக, விமானம்தாங்கிக் கப்பல்கள் தெற்கு பசிபிக் கடலில் நிலை நிறுத்தப்பட்டன. தைவானுக்கு நவீன ஏவுகணைகளைத் தர முன்வந்துள்ளது. அமெரிக்காவின் நீர்மூழ்கிக் கப்பலை தென் சீனக் கடலில் நிறுத்தியது. கடந்த ஆகஸ்ட்டில் நவீன ஏவுகணைகளை உற்பத்திசெய்ய, 5,000 கி.மீ தூரம் செலுத்தக்கூடிய ஏவுகணைகள் உற்பத்திக்குத் தடை விதிக்கும் உடன்படிக்கையிலிருந்து அமெரிக்கா வெளியேறியது. இதனால் நவீன ஏவுகணை உற்பத்தி செய்வதில் அமெரிக்காவுக்கு இருந்த தடை விலகியது. வான்படையை பலப்படுத்தினால் சீனாவை அடக்க முடியும் என்றும் அமெரிக்கா நம்புவதால், பி 21 ஸ்டெல்த் விமானங்களைப் பயன்படுத்தவும், சூப்பர் ஹார்னெட் ஜெட்டுகளைப் பயன்படுத்தவும் திட்டமிட்டுள்ளது. அரசியல் லாபத்திற்காகவும், தங்களது அதிகாரத்தை நிலைநிறுத்தவும், இரு நாட்டுத் தலைவர்களாலும் முன்னெடுக்கப்பட்டுள்ள இந்த அரசியல் விளையாட்டால், இரு நாடுகளுக்கும் பெரிய அளவில் நீண்ட கால பலன் எதுவும் இருக்காது. மொத்தத்தில், பல நாடுகளின் அமைதிக்குப் பங்கம் மட்டுமே ஏற்படும் என்பதை இரு நாடுகளும் உணரவேண்டிய தருணம் இது. https://www.vikatan.com/government-and-politics/international/us-china-governments-on-tug-of-war-for-south-china-sea        
  • உன்னையத்தான்... சொல்லி இருப்பாரு...😀