Jump to content

20 ஆம் நூற்றாண்டின் ஈழத்துத் தமிழ்க் கவிதை வளர்ச்சியைப் புகட்டி நிற்கும் மகத்தான தொகுப்பு'


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

`20 ஆம் நூற்றாண்டின் ஈழத்துத் தமிழ்க் கவிதை வளர்ச்சியைப் புகட்டி நிற்கும் மகத்தான தொகுப்பு'

[17 - January - 2007] [Font Size - A - A - A] {தினக்குரல்}

தென் கிழக்கு ஆசியாவிலேயே மிகச்சிறந்த நூலகத்தை உடையதென்ற புகழை முன்னர் யாழ்ப்பாணமே தன் வசம் வைத்திருந்தது. இத்தகைய நிலைமை யாழ்ப்பாணம் பெறுவதற்கு அதற்கான தகுதியைக் கொடுத்தவை யாழ்ப்பாண மக்களின் கல்வியும் அவர்களது தீவிர வாசிப்புப் பண்பாடுமாகும்.

யாழ்ப்பாண மக்களின் வாசிப்பிற்குப் பசளையிட்டவை; அக்காலத்தில் அங்கு இயங்கிக் கொண்டிருந்த புத்தக சாலைகளெனில் அதற்கு மறுப்பிருக்காது. இத்தகைய புத்தகசாலைகளில் பூபாலசிங்கம் புத்தகசாலையுமொன்றாகும். இப்புத்தக நிலையங்கள் தரமான நூல்களையும் சஞ்சிகைகளையும் இறக்குமதி செய்தும் கொள்வனவு செய்தும் கிரமமாக வாசகருக்குக் கொடுத்து வந்தன. இதனால், நூல்கள், சஞ்சிகைகள் வரும் குறிப்பிட்ட நாட்களில் புத்தகசாலைகளின் முன் வாசகர்கள் குவிந்தனர். வாசிப்புக் கலாசாரம் ஆல் போல் தழைத்தது. மக்கள் வாழ்வு செழுமை கண்டது. இத்தகைய செயற்கரிய பணியை சோரவிடாது இன்றும் பூபாலசிங்கம் புத்தக நிலையம் செய்து கொண்டிருப்பது அறிவுசார் உலகத்தை உவக்க வைக்கின்றது. அது மட்டுமன்றி, இத்தமிழ் உழைப்பில் பூபாலசிங்கம் புத்தகசாலை வைர விழாக் கண்டிருப்பது முழுத் தமிழுலகையும் குதூகலத்தில் ஆழ்த்தியுள்ளது.

புத்தகங்கள், சஞ்சிகைகள் விற்பதில் மட்டும் தன் பணியை நிறுத்திவிடாது இந் நிலையம் புத்தக வெளியீட்டிலும் ஊக்கம் காட்டி வருவது, இந்நிலையத்தை தமிழ் மக்களோடு மிகவும் நெருக்கமாக்குகின்றது. ஐம்பதுக்கும் மேற்பட்ட இலக்கிய, அறிவுசார் நூல்கள் இதுவரை வெளியிடப்பட்டிருக்கின்றன. இது ஈழத்துப் படைப்பாளிக்கும் ஈழத்து இலக்கியத்திற்கும் செய்யும் பெருந்தொண்டு. கே. டானியல், தெனியான், செங்கை ஆழியான், தேவகாந்தன், ஜோர்ஜ் சந்திரசேகரன், கே. விஜயன் போன்ற முன்னணிப் படைப்பாளிகள் இதன்மூலம் பயன்கொண்டிருக்கின்றனர்.

இப்பொழுது தமது வைர விழாப் பரிசாக 138 கவிஞர்களது கவிதைகள் அடங்கிய தொகுப்பொன்றைப் பூபாலசிங்கம் புத்தகசாலை வெளியிட்டுள்ளது. இவர்களது தமிழ் இலக்கியப் பணிக்கு இதுவொரு மைல்கல் எனலாம்! இந்நூலின் பெயர் "20 ஆம் நூற்றாண்டு ஈழத்துத் தமிழ்க் கவிதைகள்" ஆகும். ஈழத்துப் படைப்பாளிகள் தமது நூல்களை வெளியிட்டுத் தமது விரல்களைச் சுட்டுக் கொண்டிருக்கும் இச் சந்தர்ப்பத்தில் இதுவொரு துணிகர முயற்சிதான்!

இக்கவிதைத் தொகுதியின் வெளியீட்டு விழா கொழும்பு, தமிழ்ச்சங்க மண்டபத்தில் 13.01.2007 இல் நடைபெற்றது. பேராசிரியர் சி. தில்லைநாதன் தலைமை தாங்கினார்.

ஈழத்தின் பிரபல கர்நாடக இசைக் கலைஞர் ரி. கருணாகரனின் கடவுள் வாழ்த்துப் பாடலோடு விழா ஆரம்பமாகியது.

கொழும்பு, தமிழ்ச் சங்கத்தின் முன்னாள் தலைவர் குமாரசுவாமி சோமசுந்தரம் தம்பதியினர் மங்கள விளக்கேற்றினர்.

அண்மையில் அமரர்களான மூத்த எழுத்தாளர் தி. வரதராசன் (வரதர்), கவிஞர் வில்வரெத்தினம் மற்றும் அமரர்களான கலை இலக்கியவாதிகளுக்கு இரண்டு நிமிட மௌனாஞ்சலி செலுத்தப்பட்டது.

பேராசிரியர் தில்லைநாதன் தலைமையுரையில் கூறியதாவது;

சமூக முன்னேற்ற இலக்கிய வளர்ச்சியை இலக்காகக் கொண்டு பூபாலசிங்கம் புத்தகசாலையை அதன் இயக்குநர்கள் இயக்கினர். இப்புத்தகசாலை அக்காலத்தில் ஒரு நூலகமாகவே மக்களுக்குப் பயனைச் சொரிந்தது. இதன் நிறுவகர் பூபாலசிங்கம் அந்த வகையில் தான் தனது வர்த்தக நிலையத்தை நகர்த்தினார். நூல்களையோ, சஞ்சிகைகளையோ கொடுப்பார். ஆனால், பணம் கேட்கமாட்டார். இத் தொகுப்பை வெளியிட எடுத்த முடிவு மிகவும் பாராட்டுதற்குரியது. இந்நூலின் தொகுப்பாசிரியரான ஷ்ரீ பிரசாந்தன் முன்னர் நான் வகித்த பதவியையே வகிக்கிறார். இப்பதவி எனக்காகவே உண்டாக்கப்பட்டது. இருபதாம் நூற்றாண்டு ஈழத்துக் கவிதை பெருவளர்ச்சியைக் கண்டிருக்கிறது. இத் தொகுப்பின் மூலமாக ஈழத்துக் கவிதையின் வளர்ச்சி புகட்டப்பட்டுள்ளது. 1998 ஆம் ஆண்டில் இலங்கை அரசாங்கம் நூலொன்றை வெளியிடுவதற்காக என்னிடம் கட்டுரை கேட்டிருந்தது. அரச நெருக்கடிகளால் இம்முயற்சி பலிதமாகவில்லை. இக்கட்டுரை பின்னர் அவுஸ்திரேலியாவில் நூலாக்கப்பட்டது. அக்கட்டுரையின் உள்ளடக்கத்தை ஊடுபகலாக வைத்தே இத் தலைமையுரையை நிகழ்த்துகிறேன். இனக் கலவரங்கள் ஏற்பட்ட காலங்களில் கூட எமது கவிதை தடுமாறி, நிதானத்தை இழக்கவில்லை. சாதிப் போராட்டம் 1960 இல் எமது கவிதையில் இனங் காட்டத் தொடங்கியது. சமூகத் தொடர்பு கவிதை முன்னோடிகளாக பாவலர் துரையப்பாபிள்ளை, தங்கத்தாத்தா சோமசுந்தரப் புலவர் ஆகியோர் இனங்காணப்படுகின்றனர். அக்காலத்தில் இவர்கள் கவிதைப் போட்டிகளிலும் பங்குபற்றித் தமது கவிதாவீச்சை தமிழ் மண்ணில் மணக்க வைத்தனர். சமூக, சமய, ஒழுக்க வெளிப்பாடுகள் எமது கவிதைகளில் இடத்தைப் பெற்றன. சமூக ஏற்றத் தாழ்வுகளுக்கு எதிரான போராட்டத்திற்கான ஓர் ஆயுதமாகவும் எமது கவிஞர்கள் கவிதையைக் கையிலெடுத்தனர். தமிழின் பெருமை, பக்தி, காதல் என்பவற்றை உள்ளீடாகக் கொண்ட ஏராளமான கவிதைகளும் எம்மிடமுண்டு.

தென்னிந்திய கவிதைப் போக்குகளுக்கு மாறாக மஹாகவி, முருகையன் ஆகியோர் கவிதைகளை யாத்தனர். பசுபதி, நுஃமான், மு. பொ. ஆகியோர் வித்தியாசமான கவிதைகளைத் தந்தனர். புதுவை இரத்தினதுரை,வானதி, கஸ்தூரி ஆகியோர் எதிர்ப்புக் கவிதைகளைப் படைத்தனர். குழுமங்களுக்குள் தம்மை அடக்காது வெளியில் நின்று கொண்டே சேரனும் முருகையனும் கவிதைச் சமர் புரிகின்றனர்.

தமிழோவியன், மலைத்தம்பி, மலைக்குருவி ஆகிய மலையகக் கவிஞர்களும் ஈழத்து கவிதைக்கு இருபதாம் நூற்றாண்டில் தமது பங்களிப்பைச் செய்துள்ளனர்.

தமிழ்ச் சிங்கள ஒருமைப்பாடு குறித்து தமிழரே முதன் முதலில் பேசினர். 1943 இல் ஜே.ஆர். ஜயவர்த்தனா சிங்களம் மட்டும் என்றபோது, அதை நல்லையா எதிர்த்து வாதாடினார். திருத்தம் சமர்ப்பித்தார். குறுக்கு வழிகளைக் கையாண்டே ஒருமைப் பாட்டிற்கான முயற்சிகளை முறியடித்தனர்.

வேந்தனார் கவிதையில் தமிழ்மொழி கையாளப்பட்டிருக்கும் விதம் அற்புதமானது. இந்நூலை மிக அழகாக வெளியிட்டிருக்கும் பூபாலசிங்கம் புத்தகசாலையின் இன்றைய நிர்வாகிகளுக்கு நாமெல்லாம் கடமைப்பட்டிருக்கிறோம். காய்தல், உலத்தல் அற்ற நிலையில் இந்நூலை விமர்சிக்க வேண்டும்.

காற்றில் எழுதாது புத்தகத்தில் எழுதுங்கள் என நூல் வெளியீட்டுத் துறையின் ஒரு பிரசாரகராக இலக்கிய உலகை வலம் வந்து கொண்டிருக்கும் மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவா வாழ்த்துரை வழங்கினார்.

பூபாலசிங்கத்தின் நெஞ்சை விளங்கிக் கொண்டவன் நான். அவர் 30 ரூபா சம்பளத்திற்கு வேலை செய்தவர். அக்காலத்தில் மதிய போசனத்திற்கு 10 சதம் கொடுத்தோம். வரப்போகும் ஜூன் 27 இல் எனது எண்பதாவது அகவையைக் கொண்டாட இருக்கிறேன். தமிழ் எனது இளமையைப் பாதுகாக்கின்றது. லங்கா சமசமாஜக் கட்சி அன்று பலம் பொருந்திய இடதுசாரிக் கட்சியாக இருந்தது. கலாநிதிகள் என்.எம். பெரேரா, கொல்வின் ஆர்.டி. சில்வா, பேர்னாட் சொய்சா, எட்மன்ட் சமரக்கொடி ஆகியோர் அதன் கொள்கை வகுப்பாளர்களாக இயங்கினர். அதன் கொள்கை யாப்பு பத்திரிகையாகச் "சமதர்மம்" வெளிவந்து கொண்டிருந்தது. யாழ்ப்பாண பஸ் நிலையத்தில் அதை இரண்டு சதத்திற்கு விற்று இடதுசாரி இயக்கத்தை யாழ்ப்பாணத்தில் வளர்ந்தவர் தான் பூபாலசிங்கம். அன்று பொலிஸ் அத்தியட்சராக யாழ்ப்பாணத்தில் பதவி வகித்தவர் சிட்னி சொய்ஸா. அன்றைய யாழ்ப்பாணத்துக் காடை கடைப்புலிகளுக்கு இவர் சிம்ம சொப்பனமாக இருந்தார். தினசரி குதிரையில் யாழ். பஸாருக்கு வருவார். இடதுசாரிகளை இவருக்குப் பிடிக்காது. ஒரு சந்தர்ப்பத்தில் சமதர்மம் பத்திரிகையை விற்ற பூபாலசிங்கத்தைக் கைது செய்து ஒருநாள் முழுதும் விளக்கமறியலில் வைத்தனர். பூபாலசிங்கம் மூன்று கடைகளுக்கு மாறினார். இவைகள் தகரக் கொட்டில்கள்.

பூபாலசிங்கத்திடம் நம்பிக்கையும் சாதிக்க வேண்டுமென்ற துணிச்சலும் இருந்தன. இனப் பூசல்களால் அவரது கடையும் எரிக்கப்பட்டதை அன்று என்னால் ஜீரணிக்க முடியவில்லை. அது குறித்து பூபாலரிடம் ஆத்திரப்பட்டுச் சொன்ன பொழுது, அவர் சொன்னார். போனது போகட்டும் இன்றைக்கு நல்ல விடுவலைக் கயல் மீன் வாங்கிப் பொரித்துத் திண்ண வேண்டும் என.

நான் தினசரி மூன்று யாழ்ப்பாணத்து இளைஞர்கள் குறித்து நினைத்து நினைத்து வியப்பதுண்டு! இம்மூவரும் யாழ்ப்பாணத்திலிருந்து இடம்பெயர்ந்து கொழும்பிற்கு வந்தவர்கள். அங்கு செய்த தொழிலையே இங்கும் மேற்கொண்டனர். கம்பவாரிதி இ. ஜெயராஜ், பூபாலசிங்கம், ஷ்ரீதர்சிங், எனது மகன் திலீபன், ஆகியோரே அந்த மூவர் வாழ்க்கையில் நம்பிக்கை கொண்ட இவர்கள் தமது ஊக்கத்தில் மற்றவர்களது கண் தைக்கும் அளவிற்கு உயர்ந்து நிற்கின்றனர். கம்பன் கழகத்திற்கென காணி வாங்கி கட்டிடமெழுப்பிக் கம்பன் புகழ் பரப்புகின்றார் கம்பவாரிதி ஜெயராஜ். அக்னியோடு சங்கமித்த பூபாலசிங்கம் புத்தகசாலையை இன்று லண்டன், கொழும்பு என விரிவுபடுத்திவிட்டார் ஷ்ரீதர்சிங் பூபாலசிங்கம். செட்டிகேக் தங்கம் விற்கும் செட்டித் தெருவில் இன்று அழகிய மூன்று மாடிக் கட்டிடத்தை எழுப்பி புத்தக விற்பனை செய்கிறார் ஷ்ரீதர்சிங்கம். கலை, இலக்கிய முயற்சிகளுக்கு முன் நின்று உதவுகிறார். நவீன தொழில்நுட்பங்களோடு ஸ்டூடியோவொன்றை நடத்தி வருகிறார் திலீபன். அச்சகத் தொழிற்பாடுகளிலும் கரிசனை கொண்டிருக்கிறார். இம்மூவரும் சாம்பலில் இருந்து உயிர்பெற்று எழும் பீனிக்சின் வழித் தோன்றல்கள். அன்று பாடசாலை செல்லும் திலீபனுக்கு அப்பம் வாங்கிக் கொடுக்க காசு இல்லாமல் ஒளித்து மல்லிகைப் பணிமனைக்கு ஓடியவன் நான்.

நயினை நாகபூசனி அம்மனுக்கு பூபாலசிங்கம் செய்த தொண்டே இன்று அவரது நாமம் வாழவும் அவரது குடும்பம் செழிக்கவும் துணை நிற்கின்றது. அவரது வரலாற்றை தமிழ் மக்கள் படிக்க வேண்டும். அதை எழுதுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். பூபாலசிங்கத்தாரின் இன்னொரு மகன் ராஜன். அவரும் இன்று தனது சொந்தக் கட்டிடத்தில் தந்தையார் தொடக்கி வைத்த கற்றுக் கொடுத்த புத்தக விற்பனைப் பணியை மேற்கொண்டு வருகிறார்.

பூபாலசிங்கம் இறந்து இருபத்திரண்டு வருடங்கள் கடந்துவிட்டன. கடைசிவரை இடதுசாரியாகவே வாழ்ந்தார். பூபாலசிங்கத்தின் மற்றொரு பாயச்சலான புத்தக வெளியீட்டுத் திட்டத்தில் முதன்முதல் வெளியான நூல் "தங்கத்தாமரை".

அற்புதமான கவிஞன் மஹாகவி அவரது மகள் கவிஞர் ஔலை முதல் பிரதியைப் பெறுகிறார்.

ஷ்ரீ பிரசாந்தன் இன்று தனது பெறுமதியை உயர்த்தி இருக்கிறார். ஆபத்தான சிக்கலான பணியொன்றுக்குள் தனது தலையை நுழைத்துள்ளார். இது மிகவும் ஆபத்தான அலுவல். பகிரங்கமாக கிழிக்கப் போறான்கள். அவர் பணியில் நம்பிக்கை உண்டு. புதிய வரலாற்றை உருவாக்குவார். புதிய யுகத்தை உண்டாக்குவார். தனது வாழ்த்துரையில் டொமினிக் ஜீவா இப்படிச் சொன்னார். -

தொடரும்

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

இவ்வாறான வரலாற்று பதிவுகளை

எமக்கு தந்துதவியமைக்கு...

வடிவரசி ''கறுப்பிக்கு.

எனது இதய கனிந்த நன்றிகள்...

Link to comment
Share on other sites

யாழ்ப்பாணம் பூபாலசிங்கம் புத்தகசாலை உரிமையாளர் பூபாலசிங்கம் அவர்கள் ஒரு அற்புதமான மனிதர். எமது படைப்பாளிகளுக்கும், எமது இலக்கியங்களுக்கும் முன்னுரிமை கொடுத்தவர். வேறு பல இடங்களிலே எமது ஈழத்து படைப்புகள் அடியிலே வைக்கப்பட்டு, இந்திய சஞ்சிகைகள் அழுக்குப்படாமல் மேலே வைக்கப்பட்டிருந்த காலம் எனக்கு ஞாபகமிருக்கிறது. இதற்கு விதிவிலக்காக நமது படைப்பாளிகளின் படைப்புகளுக்கென்றே முக்கிய இடத்தில் வைத்து, எங்களைப்போன்றவர்களுக்கு செங்கை ஆழியான், செம்பியன் செல்வன், சட்டநாதன், சாந்தன், டொமினிக் ஜீவா போன்றவர்களை அறிமுகப்படுத்தி, நேசிக்கவைத்தவர். கலவரங்களின் போது அவரது புத்தகக்கடை எரிக்கப்பட்டத. ஆனால் அவர் சளைக்கவில்லை. இறுதிவரை அவர் துணிவுடனேயே வாழ்ந்து மறைந்தார். அவரது மகன் சிறீதர் சிங்கும் லாபநோக்கம் பாராது எமது படைப்பாளிகளை அரவணைத்து செல்கிறார் என்பது மிகுந்த சந்தோசத்தை தருகின்றத.

Link to comment
Share on other sites

கட்டுரையில் குறிப்பிடப்படும் ஷ்ரீ பிரசாந்தன் என்பவர் யார்? கம்பன் கழக முக்கிய உறுப்பினர்களில் ஒருவரா? அல்லது வேறு ஒருவரா? யாருக்காவது தெரியுமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வாறான வரலாற்று பதிவுகளை

எமக்கு தந்துதவியமைக்கு...

வடிவரசி ''கறுப்பிக்கு.

எனது இதய கனிந்த நன்றிகள்...

எப்படி வன்னிமைந்தன் என்னை பார்க்காமலே இப்படி சொல்லிட்டிங்களே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கட்டுரையில் குறிப்பிடப்படும் ஷ்ரீ பிரசாந்தன் என்பவர் யார்? கம்பன் கழக முக்கிய உறுப்பினர்களில் ஒருவரா? அல்லது வேறு ஒருவரா? யாருக்காவது தெரியுமா?

நீங்கள் குறிப்பிட்ட ஷ்ரீ பிரசாந்தன் என்பவர் பற்றி இணையத்தில் தேடி பார்த்தேன் விபரங்கள் அறிய முடியவில்லை. கிடைத்தால் அறியத்தருவன்

Link to comment
Share on other sites

எப்படி வன்னிமைந்தன் என்னை பார்க்காமலே இப்படி சொல்லிட்டிங்களே

கறுப்பி அக்கா,

வடிவு என்று வெறும் வெளி உடல் அழகைப் பார்த்து சொல்லத்தேவையில்லை. வெள்ளைத் தோல்களில் கறுப்புத்தோலை விட விசேடமாக ஒன்றும் இல்லை. ஆனால் வெள்ளைத்தோல் உடம்பினருக்கு கறுப்புத்தோல் உள்ளவர்களை விட சூரியக்கதிர்களினால் புற்று நோய் வருவதற்கு வாய்ப்புக்கள் அதிகம். நீங்கள் உண்மையில் கறுப்புத்தோல் உள்ளவர் என்றால் இதை நினைத்து மகிழ்ச்சியடைய வேண்டும்.

நானும் எனது வாழ்க்கையில் நிறைய வெள்ளைத்தோல் உடையவர்களைச் சந்தித்து உள்ளேன். ஆனால் அழகானவர்கள் என்று அவர்களைக் கூறமாட்டேன். ஏனென்றால் நான் சந்தித்த வெள்ளைத்தோல் போர்த்தியவர்களில் சுமார் 65% ஆனோரின் உள்ளம் ஒரு மலசலகூடம். குப்பைத்தொட்டி.

எனவே உங்கள் உள்ளம் புனிதமாய் இருந்தால் உங்களை வடிவுக்கரசியென்ன, அழகு ராணி, அழகுதேவதை, அழகினரசி என்றெல்லாம் பெயர் வைத்துக் கூப்பிட முடியும். :D

Link to comment
Share on other sites

  • 1 year later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

'குட்டி ஜெயராஜ்' என்று யாழ்ப்பாணத்தில் அழைக்கப்பட்டவர்தான் இந்த பிரசாந் என்று நினைக்கிறேன்.

இந்தப் புத்தகத்தை இணையத்தில் வாங்கும் வசதி ஏதாவது உள்ளதா?

பூபாலசிங்கம் புத்தகசாலை இணையத்தில் விற்பனை செய்கிறதா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் சென்ற ஆண்டு இலங்கை சென்றபோது பெற்றாவில் உள்ள பூபாலசிங்கம் புத்தகசாலையில் இந்தப் புத்தகத்தை வாங்கினேன். மிகவும் நல்ல புத்தகம். அதில் போராளிக் கவிஞர்களின் கவிதைகளும் உண்டு.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.