Jump to content

யாழ் உறவை யாழில் கண்டேன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Paanch said:

தேன் சரியில்லை அம்மா வேண்டாம். அம்மாவின் முகத்தில் கோபமும் கவலையும் தெரிந்தது.

தொடர் நன்றாகச் செல்கின்றது, பாஞ்ச் !

தேன் விக்கும் அம்மா நல்லவராக இருந்த படியால்.. தப்பித்தீர்கள்!

இதுவே யாழ்ப்பாணம்  சின்னக்கடை...மீன் கடையாக இருந்திருந்தால்....!

நினைக்கவே 'குலைப்பன்' எடுக்குது!

Link to comment
Share on other sites

  • Replies 67
  • Created
  • Last Reply
8 minutes ago, புங்கையூரன் said:

தொடர் நன்றாகச் செல்கின்றது, பாஞ்ச் !

தேன் விக்கும் அம்மா நல்லவராக இருந்த படியால்.. தப்பித்தீர்கள்!

இதுவே யாழ்ப்பாணம்  சின்னக்கடை...மீன் கடையாக இருந்திருந்தால்....!

நினைக்கவே 'குலைப்பன்' எடுக்குது!

சாவகச்சேரிச் சந்தையில் அரிசி அளந்து விக்கிற கதை தெரியுமா புங்கையூரன் அவர்களே! குலப்பனென்ன கழுத்தில் கயிறுபோடும் அளவிற்கு அங்கிருக்கும் சனத்தின்முன் மானமே போய்விடும். :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாஞ் தொடருங்கள் நானும்  வாசித்"தேன்"

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, Paanch said:

 

 

 

 

மலர்ந்த அந்த அம்மாவின் முகம் எங்கள் இதயத்தைத் தொட்டது. என் அம்மாவைப் பார்த்ததுபோல் இருக்கிறது என் மனைவி கூறினார்.

 

 

இன்னொரு தாயின் முகத்தில் தன் தாயைக்காணும்  பக்குவம் எல்லோருக்கும் இருக்காது. உங்கள் பயணத்தை தொடருங்கள்  பாஞ்ச அண்ணை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்சிறீ,

'பனிச்சங்கேணி தேன்' சாப்பிட்ட மயக்கத்தில் இருக்கும் ஐயாவை எழுப்பி, மீதி அனுபவத்தை எழுத கூட்டி வாருங்கள்...!vil_biereallemand.gif

Link to comment
Share on other sites

மேலும் என் பதிவைத் தொடர ஊக்கம்தந்த ரதி,   அக்னியஷ்த்ரா,   Athavan CH,   Gari,   நந்தன்,   ராசவன்னியன்,   வாத்தியார்,   putthan,   MEERA,   suvy,   ஆகிய அனைத்து உறவுகளுக்கும் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

என் மனதில் உதித்ததை எழுதியபோது எழுந்த உறுத்தல், சில உறவுகளை வெகுண்டெழ வைத்துச் சங்கடங்கள் தோன்றியபோது, அதனைத் தவிர்த்து உதவிட முன்வந்த நெடுக்காலைபோவன் அவர்களுக்கு நன்றியையும் கூறிக்கொண்டு, நெருப்பு நீறுபூத்தாலும், உள்ளே நெருப்பாகவே அணையாது அனல்வீசும் என்பதையும் தெரிவித்து மிகுதியைத் தொடர்கிறேன்.  

 

 

ருட்டுவதற்கு முன்பாக யாழ்வந்து மாமியைக் கண்டதும் பயணக்களைப்பு அத்தனையும் பறந்தது. வயதாகிவிட்டதால் அவருக்கு ஞாபகங்கள் நினைவுக்குவரத் தாமதமாகியது. எங்களைப்பற்றி அவருக்கு திரும்பத் திரும்பச் சொல்லவேண்டிக் கவலை ஏற்பட்டாலும் அவர் வயதை எண்ணி அனுதாபமே ஏற்பட்டது. பல வேலையாட்களை வைத்து மாமா பார்த்துவந்த அரசாங்க ஒப்பந்தவேலையை, மாமா இறந்தபின்பும் தானே நிர்வகித்து, எதிர்வந்த பலபிரச்சனைகளையும் தனது திறனால் கையாண்டு குடும்பத்தையும் பராமரித்து அதிகாரம் செய்துவந்த மாமி, வயதானதும் நலிந்துவிட்டாலும், அதிகாரத்தின் அகங்காரம் நலிந்துவிடவில்லை. மகனுடைய வீட்டில் மாமி தங்கியிருந்தபோதும் மகனுடைய குடும்பமும், வீடும் தன்னுடைய பராமரிப்பில்தான் மிளிர்கிறது என்ற எண்ணம் அவரிடம் ஆழ வேரூன்றி இருப்பது தெரிந்தது. வளவைக் கூட்டித் துப்பரவு செய்கிறேன் என்று, மகன் நாட்டி முளைவிட்ட பூக்கன்றுகள், காய்கறிப் பயிர்களும் அவருக்குப் புல்லாகக் காட்சிதந்து விடுவதால், அவைகளும் புடுங்கப்பட்டுக் குப்பைக்குள் போய்விடுமாம். வளவிற்குள் குந்தியிருந்து எழும்போது அவரைத் தாங்கித் தூக்கிவிடும் பலமானது, மாவிலை, வாழை இலை போன்றவற்றுக்கே உண்டாம். அதனைப் பின்பு நாங்கள் நேரிலும் கண்டு வியந்து சிரித்தோம். அவர் தன்மீது கொண்டுள்ள மிதமிஞ்சிய நம்பிக்கை, அவரை எங்காவது வீழ்த்திப் படுக்கையில் போட்டுவிடுமோ என்ற பயம், கண்ணுக்குள் எண்ணைவிட்டு அவரைப் பாதுகாக்க வேண்டிய தேவையை ஏற்படுத்தியிருந்தது.

கொன்டுசென்ற பரிசுப்பொருட்களை உரியவர்களுக்குக் கொடுத்துவர இரு நாட்கள் பறந்துவிட்டது. அதன்பின்புதான் மைத்துணன் கணனி வைத்திருப்பது ஞாபகத்தில் வந்தது. யாழ் இணையத்தைப் பார்க்கும் ஆவல் எழுந்தது. அது மடிக்கணனி. பத்திரமாகப் பட்டுத்துணியால் போர்த்திக் கிடந்தது. நான் வெளிநாட்டு ஆள் அல்லவா! தொழில்நுட்பத்தில் வெளிநாட்டவர்கள் கில்லாடிகள் என்ற நினைப்பு அவர்களுக்கு. கணனி உடனே என் கைக்கு வந்துவிட்டது. யாழைத்திறந்து பதிவுகளைப் பார்த்துவிட்டு ஏதாவது எழுத முயன்றபோதுதான் தமிழ் எழுத்தைப் பாவிக்கமுடியாத சங்கடம் தெரிந்தது. எனக்குத் தெரிந்த தொழில் நுட்பத்தைப் பாவித்து தமிழ் எழுத்துகளைத் தேடிக் கணனியை மீண்டும் பட்டுத்துணிக்குள் மூடிவைக்க விரும்பாததால், யாழுக்கு எழுதும் ஆசை அடக்கம் பெற்றது. அச்சமயத்தில்தான் யாழ் உறவுகள் எவரையாவது சந்திக்க முயற்சி செய்யலாம் என்ற எண்ணம் ஏற்பட்டது.

தனது இருப்பு இலங்கை என்று ஜீவன் சிவா தெரிவித்திருந்தது ஞாபகம் வந்தது அத்தோடு அவர் யாழில் நின்று யாழுக்கு எழுதுவதுபோன்றும் தெரிந்தது. ஆகவே அவரைச் சந்திக்கும் ஆவல்கொண்டு எனது தொலைபேசி இலக்கம் தெரிவித்து ஆங்கிலத்தில் தனிமடல் எழுதினேன். ஆகா! என்முயற்சி பலித்தது. நான் ஜீவன் சிவா நீங்கள் பாஞ்தானே. இனம்புரியாத ஒரு மகிழ்ச்சி. ஆமாம் நான்தான் பாஞ். இப்போது தெல்லிப்பளையில் நிற்கிறேன் உங்களை எங்கே சந்திக்கலாம்?“ நான் கச்சேரியடியில் இருக்கிறேன் வீட்டிற்கு வரமுடியுமா? மதிய உணவும் அருந்திச் சந்திப்போம். அழைப்பிற்கு நன்றி ஜீவன் சிவா, நான் தற்போது என் மனைவி குடும்பத்தினரின் குலதெய்வமான வீமன்காமம் வீரபத்திரருக்குப் பொங்கல் செய்துகொண்டிருக்கிறோம் உடனே வரமுடியவில்லை. உங்களுடைய தொடர்பு இலக்கம் தற்போது என்னிடம் வந்துள்ளது. நான் பின்பு தொடர்புகொள்கிறேன். நல்லது பாஞ் முதல் சந்திப்பு தொலைபேசியில் சந்தித்து முடிந்தது.

என் எண்ணங்கள் ஜீவன் சிவாவைச் சுற்றிப் பறந்தது. முதன் முதலில் சந்திக்கும் முன்னரே விருந்துக்கு அழைப்பு! அதுதான் தமிழரோடு உடன்பிறந்த பண்பான விருந்தோம்பல். நேற்றுத்தான் கச்சேரியடியில் உள்ள உறவினர்களையும் பார்க்கச் சென்றிருந்தோம், முன்பே தெரிந்திருந்தால் நேற்றே சந்தித்திருக்கலாம். மனம் சற்று வருந்தியது. மறுநாள் தொடர்புகொண்டேன். அளவெட்டி அம்மன்கோவில் தேருக்குச் செல்கிறேன் பின்பு சந்திப்போம் அம்மனுடைய பக்தன்.... நிச்சயம் ஆன்மீகவாதியாக இருக்கவேண்டும் எனவும், ஜீவன் சிவா ஒரு சைவப்பழமாகவும், அவர் ஒரு சைவப்பழத்தின் தோற்றம் கொண்டவர்போலவும் மனம் கற்பனை செய்துகொண்டது.

இன்று சந்திக்க முடியுமா?“ மறுநாள் காலை ஜீவன் சிவாவிடமிருந்து அழைப்பு வந்தது. அழைப்பு வந்ததும் உடனே என்னால் செல்லமுடியவில்லை. மைத்துணன் உந்துருளியுடன் வெளியே சென்றுவிட்டார். அரச பேரூந்தில் அல்லது தனியார் பேரூந்தில்தான் செல்லவேண்டும். தனியார் உந்து கிழங்கு அடுக்குவதுபோல் பயணிகளை அடுக்கி அடைத்துக்கொண்டு செல்லும். அதில் அதிக வருமானம் பெறுவதற்காக நடத்துனர் பயணியை ஏற்றும்போது, மிகப்பணிவாக, பவ்வியமாக ஏற்றிவிட்டுப் பின் மந்தை மேய்ப்பதுபோல் அதிகாரம் தூள்பறக்கும். பின்னால்போ, திரும்பிநில், இங்காலேவா என்று தாங்கமுடியாது. அதுக்கும்மேல் பயணிகள் அத்தனைபேரின் உயிர்களும் சாரதியின் கையில் இருக்கும். பருத்தித்துறை வீதி வளைவுகளில் அவர் வந்த வேகத்துடன் வெட்டித் திருப்பும்போது சரிந்து நிமிரும் உந்துதானது, நின்று பயணிக்கும் பயணிகளை ஒருவரோடு ஒருவரை மோதவைத்து வேடிக்கை காட்டும். பயணிகளின் அத்தனை பேர்களுடைய உயிர்களும் இயமன் கைக்குள் போய்விடுமோ? என்ற எண்ணத்தைத் தோன்றவைக்கும். அதனைக் கட்டுப்படுத்தவோ, கண்காணிக்கவோ யாரும் இல்லை. அது அங்குள்ள பயணிகளுக்கும் பழகிவிட்டது, வாயக்குள் முணுமுணுப்பதோடுசரி.

காலையிலேயே அகோர வெயில். யாழ் மத்திசென்று பின் கச்சேரி செல்லவேண்டும். எனது நிலமையைத் தெரிந்துகொண்ட ஜீவன் சிவா, தான் நல்லூர் வருவது சுலபமென்று கூறினார். பரம்பொருளின் பெரும்புகழைப் பாடித் துதிப்பதல்லால் பிதொன்றும் பேசற்க ஆலயத்துள் வசனங்கள் ஞாபகத்தில் வந்தது. அத்துடன் கடும் வெயில் காரணமாகவும், அங்குள்ள குளிரூட்டிய பழமுதிர்சோலை உண்டிச்சாலையில் சந்திப்பதாக ஏற்பாடாகியது. அவர் இளஞ்சிகப்பு நிறத்தில் அங்கி அணிந்து துவிச்சக்கர வண்டியில் வருவதாகவும், அவரைக் கண்டுகொள்வதற்கான தனது அடையாளங்களையும் தெரிவித்துக் கொண்டார்.

ஜீவன் சிவா வருகிறார் தொடரலாம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐயா பாஞ்சு நீங்க தேனை மட்டுமல்ல எங்க நெஞ்சையும் நக்கீட்டீங்க போங்க.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

ஐயா பாஞ்சு நீங்க தேனை மட்டுமல்ல எங்க நெஞ்சையும் நக்கீட்டீங்க போங்க.

அங்க என்ன தேனா ஊத்தி வச்சாருtw_blush:tw_blush: நெஞ்ச தொட்டிடீங்க என்று சொல்லுங்க ஈழ பிரியா??

பாஞ் ஐயா ??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் பான்ஞ்...எனக்கும் ஊருக்கு ஒருக்கால் போக ஆசை.பார்ப்பம் அடுத்த வருடமாவது சரி வருமா என்று

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாஞ்சவர்வளே, உங்களது பயண அனுபவங்களைப் படிக்கும்போது நாமும் அதனூடே நகர்வதுபோன்று எழுத்துநடை. ஆங்காங்கே இதயத்துள் ஒருவிதவலி. ஏக்கம் போன்றனவும் வந்து செல்கிறது.
 
தேன் விற்கும் அம்மா, வீதிகளைதழுவிச் செல்லும்போது எழும் மாவீரரின் நினைவலைகள், மாமி, களஉறவான  ஜீவன்சிவாவின் விருந்தோம்பல் உண்மையிலே இன்னும் தமிழரிடையேயான அடிப்பண்புகளைத் தொட்டுச் செல்லும் உணர்வலைகளாகவே என்னுள் படிந்து நகர்கிறது….. 
தொடருங்கள்….

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் பாஞ்ச்!

மிக அழகாக உங்கள் அனுபவப் பகிர்வு நகர்கின்றது!

பச்சை விசயத்தில் 'யாழ்' களம் கொஞ்ச நாளாக அடக்கி வாசிக்கிறது!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் நன்பரே...!  நன்றாக எழுதிக் கொண்டு போகின்றீர்கள்...! tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்பதிவைப் பார்க்கும் போது அட நம்மால் போக முடியவில்லையே. துணிவு ஏற்பட்டு என்னால் முடியும் காலம் மிச்சம் மீதி இருப்போரை போய் பார்க்கும் சந்தர்ப்பம் வருமா? என்றுதான் மனம் அங்கலாய்க்கிறது.

தொடருங்கள் பாஞ்ச்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் பாஞ்ச்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாஞ்ச் அண்ணை.....
ஜீவன் சிவாவின் சந்திப்பை, வாசிக்க... ஆவலுடன் இருக்கின்றோம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பயணக்கட்டுரை எழுதுவது ஒரு கலைதான். நாங்களும் கூடப் பயணிப்பதுபோன்று உணர்வைத் தரும்வகையில் எழுதும் பாஞ்ச் ஐயாவுக்கு பாராட்டுக்கள்.

 

Link to comment
Share on other sites

14 hours ago, கிருபன் said:

பயணக்கட்டுரை எழுதுவது ஒரு கலைதான். நாங்களும் கூடப் பயணிப்பதுபோன்று உணர்வைத் தரும்வகையில் எழுதும் பாஞ்ச் ஐயாவுக்கு பாராட்டுக்கள்.

 

என்னையும் ஒரு எழுத்தாளனாக்கி, உங்களைப்போன்ற உறவுகளையும், ரசிகர்களையும் பெற்றுக்கொள்ள வைத்த யாழ்களத்திற்கு என் நன்றிகள்!!. 

Link to comment
Share on other sites

12 minutes ago, யாயினி said:

ஜீவன் சிவா வருகிறார் தொடரலாம். ........,too slow ?

வணக்கம் யாயினி அவர்களே! வயது அப்படி, உங்களைப்போல் இளமைத் துடிதுடிப்பு அற்றவன். பொறுத்தருள்க. :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, யாயினி said:

ஜீவன் சிவா வருகிறார் தொடரலாம். ........,too slow ?

ஜீவன் மிகவும் லேட்டாக வந்ததைச் சொல்லாமல் சொல்கின்றார்  பாஞ் அண்ணை tw_blush:

Link to comment
Share on other sites

மேலும் என் பதிவைத் தொடர ஊக்கம்தந்த  மெசொபொத்தேமியா சுமேரியர்,   பெருமாள் ஆகிய உறவுகளுக்கும் நன்றிகளைத் தெரிவித்துத் தொடர்கிறேன்.

 

நான் உண்டிச்சாலையில் நுளைந்து அமர்ந்ததும், தின்பண்டங்களின் பட்டியலைக் கொண்டுவந்து வைத்த பையன் என்னை நிமிர்ந்து பார்த்தான். எனது தோற்றம்..... தனக்கும் தனியாக ஏதாவது கிடைக்கலாம் என்ற எண்ணத்தை அவனுக்கு வரவழைத்ததோ தெரியவில்லை! குழைந்து நின்றான். குறிப்பாக வெளிநாட்டிலிருந்து வந்துள்ளவர்களைக் கண்டுகொள்ளும் திறனை அவர்கள் பெற்றிருப்பது வியக்கவைக்கிறது!! நண்பர் ஒருவர் வரவேண்டும் அவரும் வந்தபின் சொல்கிறேன். நிமிடங்கள் கடந்தன. இருக்கைகள் பல காலியாக இருந்தன, ஆகவே உணவகத்தின் வியாபாரத்திற்கு நான் இடையூறு இல்லை என்பது ஆறுதலாக இருந்தது. சிலர் வந்து விதவிதமான பண்டங்களை வரவழைத்து உண்டு சுவைத்தார்கள். பின் தட்டில் செலுத்திய பணத்தில் திரும்பிய மிகுதியைத் தொடாது, பெரும் தனப் பார்வையைச் சுற்றிலும் வீசிவிட்டுச் சென்றார்கள். சிறுவர்களுடனும் வந்தார்கள். குளிரூட்டிய உணவகமும், குளிர்பானகமும், குளிர்களியும், இனிப்பான தின்பண்டங்களும் அவர்களைக் குதூகலப்படுத்தியதோடு, விரும்பியதை உண்ணும் சந்தர்ப்பமும் கிடைத்ததால், சந்தோச மிகுதியுடன் உண்டு களித்தார்கள். ஓரளவுக்கேனும் கையில் பசை உள்ளவர்களால்தான் அங்கு வந்து உணவருந்த முடியும் என்பது சந்தேகமின்றித் தெரிந்தது. 

நேரம் கடந்தது. ஓசியில், ஏசியில் வந்து குந்தியுள்ளானோ...? கல்லாப்பெட்டியில் இருந்தவரின் பார்வை என்மீது பதிந்துசென்றது. என் தோற்றம் என்ன தெரிவித்ததோ? எதுவும் சொல்லவில்லை. குனிந்து ஏதோ எழுதத் தொடங்கினார். வீபூதிக் குறியோடும், சந்தணப் பொட்டோடும் சிலர் வந்ததைக் கண்டபோது எழமுயன்று ஏமாற்றம் கிடைத்தது. அந்த ஏமாற்றம் அங்கு ஒருவர் துவிச்சக்கரவண்டியில் வந்திறங்கியபோதும் அலட்சியம் தந்தது. ஆட்டோகிராப் படத்தில் வரும் சேரனைப்போன்ற தோற்றத்தில், காய்ந்து கறுத்த உருவம், உருவத்திற்கேற்பப் படியாது நிமிர்ந்து நின்ற கிராப்பு, அழகாகக் கத்தரித்து விடப்பட்ட மீசை, தாடி. வந்தவர் இறங்கி வண்டியைத் தாங்குகாலில் நிறுத்தினார். கையில் கைதொலைபேசி துலங்கியது. உயர்ந்தவன், தாழ்ந்தவன். ஏழை, பணக்காரன். வித்தியாசம் எதுவுமின்றி அனைவரையும் சரி சமமாக மதித்து ஒட்டி உறவாடும் ஒன்று என்றால் அது கைதொலைபேசி ஒன்றேதான். தொலைபேசியை எடுத்து அழுத்தி அதனை அவர் காதில் வைத்தபோது, என் தொலைபேசி உறுமியது. வணக்கம்! நான் ஜீவன் சிவா. நீங்கள் எங்கே நிற்கிறீர்கள்?“ வணக்கம்! நான் உணவகத்தின் உள்ளே இருக்கிறேன் வாருங்கள்.

கற்பனை செய்திருந்த உருவம் ஏமாற்றிவிட்டது. யாழ்ப்பாணத்தில், அந்த மண்ணின் பராமரிப்பில் இயற்கையோடு இணைந்து வாழுபவர்களை அங்கு வயல், தோட்டம், சந்தைகளில் அதிகமாகக் காணலாம். அப்படியான ஒரு தோற்றத்தோடு வருகைதந்த ஜீவன் சிவா அவர்களைச் சற்றுக் குனிந்து கைலாகுகொடுத்து வரவேற்றேன். சின்ன உருவம். சிறிது நிமிர்ந்து பார்த்துப் புன்னகை செய்தார். இருங்கள் வரவேற்றுவிட்டு, அருகில் இருந்த உணவுவகைப் பட்டியலை எடுத்து முன்வைத்தேன். நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்கள்?“ சிவாவை நோக்கினேன். இதனைப் பார்த்துக்கொண்டிருந்த பையன் விழுதடித்து ஓடிவந்தான். விருந்துக்கு அழைத்த உறவை வீட்டுக்கு அழைத்து விருந்தளிக்க எனக்கு அங்கு சொந்தமாக வீடில்லை. ஆகையால் பழமுதிர்சோலை உணவகத்தில் அவர் போதும் போதும் என்னும்வரையில் விருந்தளிக்க முடிவுசெய்திருந்தேன். ஒரு காப்பி போதும். இல்லை குளிராக ஏதாவது குளிர்களியுடன்கூடிய சர்பத் அது இது என்று விலைகூடிய பண்டங்களின் பகுதியைக் காட்டினேன். இல்லை இல்லை காப்பிமட்டும் போதும். ஒருமுறை மறுத்தால் மறுமுறை கேட்டுத் திணிக்கும் பழக்கம் எனக்கு யேர்மனியில் வாழ்ந்து அற்றுப்போய்விட்டதால், எனக்கும் ஒரு காப்பி தருமாறு கேட்டுக்கொண்டேன். பையன் முகம் சப்பென்று போய்விட்டது. இதற்காகத்தானா இத்தனைநேரம் ஏசியை ஓசியில் அனுபவித்தீர்கள் என்று அவன் ஏளனம் செய்வதுபோல் இருந்தது.

யாழுக்கு வந்து யாழிலேயே ஒரு யாழுறவைக்கண்ட மகிழ்ச்சி என்னுள்ளே நரம்புகளை மீட்டி யாழாக இசைபாட வைத்தது. காப்பியை உறுஞ்சியபடி எங்கள் அறிமுகம் ஆரம்பமாகி உரையாடல் தொடங்கியது. எங்களைப்பற்றிய விபரங்களைப் பறிமாறிக்கொண்டோம். யாழ்களம்பற்றிப் பேச்சுகள் வந்தபோது, யாழில் கிறுக்குவதைத் தவிர என்னைப்பற்றிச் சொல்ல என்னிடம் எதுவுமே இருக்கவில்லை. ஆனாலும் எனது சில பதிவுகளும், பின்னூட்டங்களும் தன்னை ஈர்த்துள்ளதாகத் தெரிவித்தார்.  அந்த நேரத்தில்தான், ஜீவன் சிவாவும் புலம்பெயர்ந்து நோர்வேயில் வாழ்ந்து வருவதைத் தெரிந்துகொண்டேன். ஆச்சரியமாக இருந்தது! மேலைநாட்டில் வாழ்கின்றார் என்பதற்கான எந்தவொரு சிறிய அறிகுறியைத்தானும் அவர் தோற்றமோ! உடை, நடையோவெளிப்படுத்தவில்லை!! விறாந்தையில், ஓலைப்பாயில் படுத்தெழும்பி, விடிந்ததும் வேம்பம் குச்சியை முறித்துப் பல்விளக்கித் தெருவில் நின்று துப்பும் நான்... வெளிநாட்டிலிருந்து வந்தவனில்லை என்று அங்கு சொன்னால்! நம்புவதற்கு யாருமே இல்லை. ஜீவன் சிவா எப்படிப் பிறந்தமண்ணின், குணம், மணம், தோற்றம் எதுவுமே மாறாமல்.... அதிசயித்தேன்...!

அவரது எண்ணங்கள், பேச்சுக்கள் அனைத்திலும், ஏமாற்றமடைந்து விரக்தியிலுள்ள தமிழ்மக்களை, எப்படி மீண்டும் பழைய நிலையில் காணலாம் என்பதிலேயே குறியாக இருந்தது. அரசியல்வாதிகளை அவர் நம்பவில்லை, வெளிநாடுகளையும், அதன் உதவிகளையும் அவர் நம்வில்லை. ஆனாலும் கிடைப்பவற்றிலிருந்து, ஒவ்வொரு தமிழனும் தன்காலில் எழுந்து நிற்பதற்கு வேண்டியவற்றை எப்படிப் பெற்றுக்கொள்ளவது என்பதில் கவனம் இருப்பது தெரிந்தது. நலிந்தவர்களுக்கு அவர் செய்யும் உதவிகளை அடக்கமாகவே செய்துவருவதும் பேச்சுக்களில் தெரிந்தது. அகன்ற குளம் வெட்டிப் பெருமழைக்குக் காத்திருப்பதை விடவும், சிறுதுளி நீர் கிடைத்தாலும் அதனைப் பயன்படுத்திக் கொள்ளவேன்டும் என்ற நோக்கத்தைக் கொண்டிருந்தார். யாழ்களம் இணைத்துவைத்த உறவுகளில் அனேகமானோர் பிறருக்கு உதவும் குணம் கொண்டவர்களாக இருப்பதை இந்த உறவின் சந்திப்பும் உறுதிப்படுத்தியது.

காப்பி குடித்துமுடித்து நான் எழுவதற்கு முன்பாகவே பரபரப்புடன் எழுந்தவர் அதற்குரிய பணத்தைச் செலுத்திவிட்டார். தடுப்பதற்கு வினாடி நேரம்கூடத் தரவில்லை. பையனுக்கு ஏதாவது கொடுப்போம் என்று நான் எண்ணியிருந்ததை அவர் அறிந்திருக்கவும் வாய்ப்பில்லை, பையன் முகத்தைப் பார்க்காமலே உணவகத்தைவிட்டு வெளியேறினேன். உறவைச் சந்தித்த மகிழ்வுடன் வெளியே வந்தபோது அனல்பறக்கும் வெயிலினூடே காற்றும் சிறிது பலமாக வீசியது. சந்தித்த மகிழ்ச்சி மாறுவதற்கு முன்னே பிரிவதற்கான நேரமும் வந்தது. பிரிவதற்காகக் கைலாகு கொடுத்தவேளையில் வீசிய காற்று அவரது துவிச்சக்கர வண்டியைக் கீழே தள்ளி விழுத்தியது. அருகேநின்ற நான் பதறிப்போய் அதனைத் தாங்கிப் பிடிக்கச்செல்லுமுன் வண்டி விழ்ந்துவிட்டது. கவலைவேன்டாம் பாஞ், இனிமேல் அதுவிழாது, விழ்வதற்கும் முடியாது. எந்தப் பதட்டமும் இன்றி புன்சிரிப்போடு கூறினார். எத்தனை பெரியதத்துவம்தான் அதற்குள்...!! தமிழன் விழுந்துவிட்டான். இனிமேல் விழ இடமில்லை எனும்போது.... அடுத்தது முடிவுதானே! ஒரு முடிவு வந்துதான் ஆகவேண்டும். பிறந்தமண்ணில் மக்களோடு மக்களாகப் பலநாட்கள் தங்கி வாழும் ஒருவர்....! விடுமுறையைக் கழிக்க வந்துசெல்லும் ஒருவர்போல் நான்.....!! யாழுறவு ஜீவன் சிவா என்மனதில் உயர்ந்து உறைந்தார்.

 

ஜீவன் சிவா அவர்களைச் சந்தித்த நிகழ்வுபற்றி நான் எழுதியவற்றில் ஏதாவது விடுபட்டிருந்தால், அல்லது குறைகள் இருந்தால் அவர் அதனைச் சரிசெய்து அறியத்தருவார் என்று நம்பிக்கை கொண்டுள்ளேன். 

நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Paanch said:

அங்கு ஒருவர் துவிச்சக்கரவண்டியில் வந்திறங்கியபோதும் அலட்சியம் தந்தது. ஆட்டோகிராப் படத்தில் வரும் சேரனைப்போன்ற தோற்றத்தில், காய்ந்து கறுத்த உருவம், உருவத்திற்கேற்பப் படியாது நிமிர்ந்து நின்ற கிராப்பு, அழகாகக் கத்தரித்து விடப்பட்ட மீசை, தாடி. வந்தவர் இறங்கி வண்டியைத் தாங்குகாலில் நிறுத்தினார்.

 தோளில் பை ஏதாவது தொங்க விட்டிருந்தாரா? :cool:

Link to comment
Share on other sites

53 minutes ago, குமாரசாமி said:

 தோளில் பை ஏதாவது தொங்க விட்டிருந்தாரா? :cool:

ஆமா 

கங்காரு மாதிரி வயித்தில் இல்லை, முதுகில்.

அதில் எப்பவும் எனது கேமராவும், தண்ணிப் போத்தலும், கொஞ்சம் முகம் துடைக்கும் கடதாசிகளும் இருக்கும்.

 

2 hours ago, Paanch said:

ஜீவன் சிவா அவர்களைச் சந்தித்த நிகழ்வுபற்றி நான் எழுதியவற்றில் ஏதாவது விடுபட்டிருந்தால், அல்லது குறைகள் இருந்தால் அவர் அதனைச் சரிசெய்து அறியத்தருவார் என்று நம்பிக்கை கொண்டுள்ளேன். 

நன்றி பாஞ்ச்.

சந்திப்பை சுவையாக எழுதியிருந்தீர்கள். ஆனாலும் நான் 6/8 நிமிடம்தானே பிந்தி வந்தேன். காரணம் மகளின் தொலைபேசி என்றும் கூறியிருந்தேன். அதுக்காக இப்படி வாரக்கூடாது.:grin:

எப்படியாயினும் கருத்துக்களால் வேறுபட்டாலும் நாம் அனைவரும் நண்பர்களே என்பதை உங்கள் சந்திப்பு எனக்கு அடித்து சொல்லியதை நான் மறக்கவே மாட்டேன்.

மிகவும் இனிமையான ஒரு மனிதரை சந்தித்தித்தது மிகவும் சந்தோசம் - எனது முகமறிந்த நண்பர் குழாமில்  நீங்களும் சேர்ந்து விட்டீர்கள்.

வாழ்க நீடூழி.

Link to comment
Share on other sites

1 hour ago, ஜீவன் சிவா said:

எப்படியாயினும் கருத்துக்களால் வேறுபட்டாலும் நாம் அனைவரும் நண்பர்களே என்பதை உங்கள் சந்திப்பு எனக்கு அடித்து சொல்லியதை நான் மறக்கவே மாட்டேன்.

மிகவும் இனிமையான ஒரு மனிதரை சந்தித்தித்தது மிகவும் சந்தோசம் - எனது முகமறிந்த நண்பர் குழாமில்  நீங்களும் சேர்ந்து விட்டீர்கள்.

வாழ்க நீடூழி.

ஈடிணையில்லாத பரிசு ஒன்று கிடைத்த மகிழ்ச்சி. நன்றி ஜீவன் சிவா.  kiss and thank you smiley

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.