Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வின்டோஸ் 10 ஐ இலவசமாக அப்கிரேடு செய்து கொள்ள இன்றுதான் கடைசி வாய்ப்பு!


Recommended Posts

வின்டோஸ் 10 ஐ இலவசமாக அப்கிரேடு செய்து கொள்ள இன்றுதான் கடைசி வாய்ப்பு!

WINDOW_1.jpg

ன்றைய சூழலில் பொழுதுபோக்கு சாதனம் என்பதைத் தாண்டி, அடிப்படை அத்தியாவசியப் பொருளாக மாறி இருப்பது இரண்டு. ஒன்று, மொபைல். மற்றொன்று, கணினி. மொபைலைப் பற்றிச் சொல்லத்தேவையே இல்லை. அந்த அளவிற்கு நம்மை ஆட்கொண்டு இருக்கிறது. கணினி,  ஐடி கம்பெனி முதல் அண்ணாச்சி கடை கணக்குவழக்கு அனைத்து அலுவல்களுக்கும் அத்தியாவசியமாகிவிட்டது. 

இந்த கணினிகள்,  பல்வேறு இயங்குதளம் என்று கூறப்படும் Operating system (O.S) யினால் இயங்குகின்றது. அதில் முக்கியமானது  வின்டோஸ் (Windows) இயங்குதளம். இதன் கீழ் Windows 7 Home premium, Windows 7 professional, Windows 7 ultimate, Windows 8 pro, Windows 8.1 pro என பல இருக்கின்றன. அதனுடன் Windows 10  என்னும் இயங்குதளத்தை ரெட்மாண்ட் -  பேஸ்டு நிறுவனம், கடந்த வருடம் ஜீலை 29 ம் நாள் அறிமுகம் செய்தது. இந்த இயங்குதளமானது பல்வேறு கணினிகள், மடிக்கணினிகள், டேப்லட்கள், மற்றும் X - box விளையாட்டு சாதனங்களுக்கும் உகந்தபடி வடிவமைக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமல்லாமல், பழைய இயங்குதளமான வின்டோஸ் 7 & 8  போன்றவற்றிலிருந்து, வின்டோஸ் 10 ற்கு இலவசமாக மேம்படுத்திக்கொள்ளும் வசதியையும் அறிமுகம் செய்தது.

இந்த இலவசமாக மேம்படுத்திக்கொள்ளும் வசதி இன்றுடன் நிறைவடைகிறது. மேலும், நாளை முதல் இதன் விலை ரூ.8000/-யை தொடும் என ரெட்மாண்ட் - பேஸ்டு நிறுவனம் தெரிவித்துள்ளது. இருப்பினும் நிறுவனம் வின்டோஸ் 10 ஐ மக்களிடத்தில் பெரிய அளவில் கொண்டு சேர்க்க  வேண்டும் என வின்டோஸ் நிறுவனம் உறுதியுடன் இருக்கிறது. அதன் மூத்த இயக்குனர் லிசா குர்ரி பேசுகையில், "இதனை மக்களிடத்தில் சேர்க்க நாங்கள் கடினமாக வேலை பார்த்துக்கொண்டிருக்கிறோம். ஆம், மக்கள் விரும்பும் இயங்குதளத்திற்காக கடுமையாக வேலை பார்க்கிறோம்" என்று கூறியதன் மூலம் அந்நிறுவனத்தின் முனைப்பு தௌிவுறுகிறது.

அப்படி என்னதான் இருக்கிறது இந்த வின்டோஸ் 10 ல்...?,

WINDOW_2.jpg

குரல் சார்ந்த மெய்நிகர் உதவியை Cortana எனும் வசதி செய்கிறது:

முன்பு வின்டோஸ் கைபேசியில் காணப்பட்ட cortana  எனும் உதவியாளர், தற்பொழுது உங்கள் கணினியிலும். இந்த வசதி மூலம் நீங்கள் குரலினால் ஆணையிட்டால், அது அனைத்து தகவல்களையும் சேகரித்துவிடும்.  வானிலை தகவல்கள் முதல் மின்னஞ்சல் அனுப்புவது வரை அனைத்து வேலைகளையும்  இந்த வசதி மூலம் செய்துமுடித்துவிடலாம். மேலும் இதனை விண்டோஸ் மொபைலில் மட்டுமல்லாமல் ஆண்ட்ராய்டு மொபைலுடனும் தொடர்பு கொள்ளும் வசதி இதில் உள்ளது.

செளகரியமானது:

விண்டோஸ் 8 இயங்குதளம் அதன் பயன்பாட்டாளர்கள் மத்தியில் மிகவும் அசெளகரியத்தை ஏற்படுத்தியது. இதற்கு காரணம் அதன் கடுப்பேற்றும் Menu ஆப்ஷன்தான். Modern UI என்று சொல்லப்படும் இது, தொடுதிரை கணினிகளுக்கு மட்டும் சாதகமாக திகழ்ந்தது. ஆனால், இந்த இயங்குதளத்தில் Menu Option ஐ சற்று எளிதில் கையாளும் வகையில் வடிவமைத்துள்ளனர்.மேலும் நமக்கு தேவையான செயலிகளை ஏற்ற இடத்தில் மாற்றி அமைத்துக்கொள்ளலாம் என்பதும் இதன் சிறப்பு.

பாதுகாப்பானது:

விண்டோஸ் 7 இயங்குதளம் வந்து ஏழு ஆண்டுகள் ஆகப்போகிறது. விண்டோஸ் 8 பயன்படுத்தும் மக்கள் பெரும்பாலும் விண்டோஸ் 10க்கு மாறிவிட்டார்கள். ஏழு ஆண்டுகள் பழமையான ஒரு இயங்குதளத்தை பயன்படுத்துவது என்பதே, தற்போதைய டெக் உலகில், பாதுகாப்பை குறைக்கும் செயல்தான். Microsoft Hello எனும் வசதி நம் கணினியின் கேமரா மூலம், நம் முகத்தினை அடையாளம் கண்டுகொண்ட பின்புதான் கணினியை பயன்படுத்த அனுமதி அளிக்கிறது. இதனுடன் Device guard மற்றும் Microsoft passport வசதிகளும் உள்ளன. Device guard என்பது நிறுவனங்கள், தங்கள் தகவல்களை பாதுகாப்புடன் வைத்துக் கொள்ள உதவுகிறது. மேலும் தகவல் சுரண்டலையும் தடுக்கின்றது. Microsoft passport ஆனது வலைதளங்களைப் பாதுகாப்புடன் கையாள உதவுகின்றது.

ஒரே திரையில் பல பேர் விளையாடலாம்:

வின்டோஸ் 10 மூலம், பல பேர் தனித்தனியாக  விளையாடும் X -box விளையாட்டுக்களை ஒரு திரையில் இணைத்து சுருக்கிக் கொண்டு வந்துவிடலாம். இது விளையாட்டாளர்களுக்கு நண்பேன்டா!..

மைக்ரோசாஃப்ட் எட்ஜ்:

விண்டோஸ் 10 ல் உள்ள Edge எனும் வசதி, பல மடங்கு வேகத்தினை உள்ளடக்கியது. இந்த Chrome ஐ விட 112 மடங்கு வேகமானது. வேகத்துடன், பல விசயங்களையும் நண்பர்களுடன் எளிதில் பகிரும் வசதியும் இதில் உள்ளது. Cortana மூலமும் இதனை உபயோகிக்கலாம்.

WINDOW_3.jpg

2 இன் 1:

வளரும் சந்தையில் டேப்லட்டும், 2 in 1 ஆக பயன்படுத்தப்படும் 'ஃஹைப்ரிட்' கணினிகளுமே பிரசித்தி. இதனை மனதில் வைத்து வடிவமைக்கப்பட்ட இந்த இயங்குதளம் விசைப்பலகைக்கும், தொடுதிரைக்கும் ஏற்ற வகையில் எல்லா சூழ்நிலைக்கும் கைகொடுக்கும்.

விர்ச்சுவல் ஸ்கிரீன்:

இந்த வசதி மூலம் பல கணினிகள் பயன்பாட்டை தவிர்க்கலாம். எப்படியென்றால் நம் கணினி திரையினை நம் தேவைக்கு ஏற்ப பல பகுதிகளாய் பிரித்து, மாற்றி அமைத்து, அதில் வேறு வேலையினையும் கையாளலாம். இதனை பயன்படுத்த 'task bar' ல் இருக்கும் 'new desktop' என்பதை click செய்தாலே போதும்.

இலவசமானது:

விண்டோஸ் 10 ற்கு மேம்படுத்திக் கொள்வதினால் வேகமும், பாதுகாப்பும் அதிகரிக்கின்றது மட்டுமல்லாமல் பல வசதிகளைகளைக் கொண்டு, வேலையினை சுலபமாக முடித்துக்கொள்ளலாம். இந்த அரிய வாய்ப்பு இலவசமாக கிடைக்கும் போது நமக்கு லாபம் தானே.

இதை விடவும் முக்கியமானதொரு விஷயம், நீங்கள் விண்டோஸ் 10ற்கு அப்கிரேட் செய்து கொண்டாலும், சில மாதங்கள் கழித்து பிடிக்கவில்லையெனில், விண்டோஸ் 7க்கு டவுன்கிரேடு செய்துகொள்ள முடியும். ஆனால், அதில் இருக்கும் பாசிட்டிவான விஷயம், உங்களிடம் விண்டோஸ் 10 லைசென்ஸ் இருக்கும். ஆனால், தற்போது அப்டேட் செய்யவில்லை என்றால், மீண்டும் பணம் கொடுத்து அல்லது பைரேட்டட் வெர்ஷனை பயன்படுத்தும் நிலை வரும்.

இது ஏற்கனவே 190 நாடுகளில் அறிமுகப்படுத்தப்பட்டு சிறப்பாக செயல்பட்டுவருகிறது. ஆனால் நாளை முதல் இதன் விலை ரூ.8000/- யை நெருங்கும். ஆகவே, இன்றே மேம்படுத்திக்கொள்ளுங்கள்... உலகத்தின் வேகத்துடன் போட்டியிடுங்கள்..

http://www.vikatan.com/news/information-technology/66641-why-should-you-upgrade-to-windows-10.art

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சீனாவில் பரவியுள்ள புதியவகை நோய் -உடன் அமுல்படுத்தப்பட்ட அவசரநிலை சீனாவின் யுனான் பிராந்தியத்தில் புபோனிக் பிளேக் நோய் என்ற புதியவகை நோய் பரவல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் நான்காம் நிலை அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனாவின் பாதிப்பிலிருந்தே உலக நாடுகள் மீளாத சூழலில் சீனாவில் புதிய புதிய நோய்கள் பரவுவதாக வெளியாகும் செய்திகள் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. இந்நிலையில் சீனாவின் யுனான் பிராந்தியத்தில் மெங்காய் பகுதியில் உள்ள சிறுவன் ஒருவனுக்கு புபோனிக் பிளேக் நோய் தொற்று இருப்பது தெரிய வந்துள்ளது. இதேவேளை சீனாவின் அண்டை நாடான மங்கோலியாவில் உள்ள 21 மாகாணங்களில் 17 மாகாணங்கள் புபோனிக் பிளேக் அபாயத்தில் இருப்பதாக அறிவித்துள்ளது. இதனையடுத்து புபோனிக் ப்ளேக் நான்காம் நிலை அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. சமீபத்தில் பிளேக் அதிகமாக பரவி வருவதாக உலக சுகாதார அமைப்பும் கூறியுள்ள நிலையில் இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. https://www.ibctamil.com/world/80/151409?ref=home-imp-parsely
    • திராவிட உளறல்கள்களுக்கு நேரடி பதில் | சுப வீரபாண்டியன் | guru murugan  
    • இலங்கையை சேர்ந்தவரின் நிறுவனத்தில் பணிபுரிந்த தமிழ் பெண்களுக்கு நேர்ந்த அவலம் தமிழகத்தில் இளைஞர் ஒருவரை தனிமையில் அழைத்து சென்ற பெண்கள் அவரை, தூக்கிப் போட்டு மிதித்த வீடியோ வைரலாகி வரும் நிலையில், அதன் பின்னணி குறித்து திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் இருக்கும் சிப்காட்டில் ஜே.ஜே மில்ஸ் மற்றும் கார்மெண்ட்ஸ் என்ற பனியன் நிறுவனம் இயங்கி வருகிறது. இலங்கையை சேர்ந்தவரின் நிறுவனமான இங்கு அவினாசி அடுத்த சூளையை சேர்ந்த சிவக்குமார் என்பவர் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிறுவனத்தில், வெளியூரை சேர்ந்த ஏராளமான பெண் ஊழியர்கள்தங்கி பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில், சம்பவ தினத்தன்று, மேலாளர் சிவக்குமார், கார்மெண்ட்ஸின் கணனி ஊழியரான மதுரையை சேர்ந்த சங்கீதா மற்றும் அவரது தோழி ஆகியோருடன் பல்லடம் அடுத்த பச்சான்காட்டுப்பாளையம் காட்டுப்பகுதிக்கு சென்றுள்ளார். அங்கு வைத்து சங்கீதாவும் அவரது தோழியும் சேர்ந்து மேலாளர் சிவக்குமார் மீது பெப்பர் ஸ்பிரே அடித்து அவர் நிலைகுலைந்த நேரத்தில் உதைத்து கைகால்களை கட்டிபோட்டு மிளகாய் பொடிதூவி அடித்து உதைத்துள்ளனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பல்லடம் பொலிசார், சிவக்குமார் மற்றும் அந்த இரண்டு பெண்களையும் காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்துள்ளனர். விசாரணையில் சங்கீதா, கார்மென்ட்ஸில் வேலைபார்க்கும் தனக்கு பிடித்த பெண்களிடம் செல்போன் நம்பரை வாங்கிக் வைத்துக் கொள்ளும் இவன் , அவர்களை சேலை அணிந்து வரச்சொல்லி வாரந்தோறும் முறைவைத்து வெளியிடங்களுக்கு அழைத்துச்சென்று பாலியல் அத்துமீறல்களில் ஈடுபடுவது வழக்கம். தனக்கு ஒத்துழைக்க மறுக்கும் பெண்களை வேலையை விட்டு வீட்டுக்கு அனுப்பி விடுவார் என்பதால் சில பெண்கள் தங்கள் குடும்ப வறுமையை நினைத்து இவன் மிரட்டலுக்கு அஞ்சி பாலியல் சீண்டல்களை வெளியில் சொல்ல இயலாமல் தவித்து வந்தனர். மற்ற பெண்களை போன்று தன்னிடமும், பாலியல் தொல்லை கொடுத்ததால், இனி இவன் எந்த பெண்ணிடமும் தவறாக நடக்க கூடாது என்பதற்காக, அவனை தனிமையில் அழைத்து சென்று, மிளகாய் பொடி அடித்து தூவி, கட்டிப் போட்டு உதைத்து, அதன் பின் பொலிசாருக்கு தெரிவித்ததாக கூறியுள்ளார். இந்த சம்பவத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோவை பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளார். ஆனால், சிவக்குமாரோ, பொலிசாரிடம், தான் அவர்களுக்கு வேலை கொடுக்கவில்லை என்ற ஆத்திரத்தில் தன்னை கடத்தி வந்து தாக்கியதாக தனது வழக்கறிஞரை வைத்து பொலிசாரிடம் கூறியுள்ளார். இதையடுத்து பொலிசார், பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டால், தங்களிடம் புகார் செய்யாமல் நீங்களே எப்படி நேரடியாக தாக்குதல் நடத்தலாம் என்று இரு பெண்களின் மீதும், சிவக்குமாரை அடித்து உதைத்ததாக வழக்கு பதிவு செய்துள்ளனர். அதன் பின், இரு பெண்களும் அளித்த புகாரின் பேரில் சிவக்குமார் மீதும் சாதாரண அடிதடி வழக்கு ஒன்றை பதிவு செய்த பொலிசார் 3 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ள சங்கீதா, மதுரை மாவட்ட ஆட்சியரை சந்தித்து, பல்லடம் காவல்துறையினர் பாலியல் தொல்லை கொடுத்த சிவகுமாருக்கு ஆதரவாக தங்களை மிரட்டி முதல் தகவல் அறிக்கையில் கையெழுத்து பெற்றதாக புகார் தெரிவித்துள்ளார். இதனால் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டால் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகலாம் என்று கூறப்படுகிறது. https://www.ibctamil.com/india/80/151411?ref=imp-news
    • EPS - OPS..வீடுகளில் ரகசிய மீட்டிங்.. முதல்வர் வேட்பாளர் மாற்றமா?  
    • மக்களின் ஜனநாயகத்தையும் சுதந்திரத்தையும் பாதுகாப்பதற்காக அனைவரும் ஒன்றிணையவேண்டிய தருணம் வந்துள்ளது- ரஞ்சித் மத்துபண்டார 20வது திருத்தத்தின் மூலம் அரசாங்கம்ஜனநாயகத்தினை குழப்புவதற்கு முயல்கின்றது என ஐக்கியமக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித்மத்தும பண்டார தெரிவித்துள்ளார். மக்களின் ஜனநாயகத்தையும் சுதந்திரத்தையும் பாதுகாப்பதற்காக அனைவரும் ஒன்றிணையவேண்டிய தருணம் வந்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார். 20வது திருத்தம் பெற்றோர்கள் இல்லாமல் பிறந்த குழந்தையை போல உள்ளது என குறிப்பிட்டுள்ள அவர் நீதியமைச்சர் பிரதமர் அமைச்சர்களுககு கூட தெரியாமல் அதனை உருவாக்கியுள்ளனர் என குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதியையும் அரசாங்கத்தினையும் சர்வாதிகாரிகளாக மாற்றும் நோக்கத்துடனேயே 20வது திருத்தம் உருவாக்கப்பட்டுள்ளது என ரஞ்சித்மத்தும பண்டார தெரிவித்துள்ளார். மக்களின் இறைமை நாடாளுமன்றத்தின் ஊடாக பிரதிநிதித்துவம் செய்யப்படுகின்றது தற்போது மக்களின் இறைமை அழிக்கப்படுகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார். பொதுமக்களால் தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற பிரதிநிதிகளை கருத்தில்கொள்ளாமல் முடியாட்சியை ஏற்படுத்த 20வது திருத்தம் முயல்கின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.   https://thinakkural.lk/article/74540
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.