Jump to content

பத்மினி


Recommended Posts

பத்மினி - 1. எல்லாம் இன்பமயம்!

 


 

ழகு, ஆற்றல், இளமை, ஈடுபாடு, உழைப்பு, உற்சாகம், ஊக்கம், எளிமை, ஏற்றம், ஓய்வறியா அர்ப்பணிப்பு, ஓங்கு புகழ் போன்ற தமிழ்ச் சொற்களின் ஒரே உருவம் பத்மினி. தாய்நாட்டின் விடுதலையோடு வேர் விடத் தொடங்கிய, நர்த்தன நந்தவனம்.

திரும்பத் திரும்பத் திரையில் வெவ்வேறு வயதுகளில் தோன்றினாலும், இந்திய ரசிகர்கள் பத்மினியை மட்டும் மனத்துக்குள் பாசப்பதியம் போட்டு வைத்துக்கொண்டார்கள். அவரது பாதச் சதங்கைகளின் ரீங்காரம் இன்னமும் சின்னத்திரைகளில் இந்தியா முழுதும் கேட்கிறது. மற்ற எந்த நடிகைக்கும் கிடைக்காத வரவேற்பு பத்மினிக்கு மாத்திரம் நிலைத்து நின்றது. பத்மினியின் நடிப்பு உயரத்தை அவ்வளவு எளிதில் வேறு யாரும் தொட்டுவிட முடியாது
 

padmini-1.jpg  

 


மேடைகளில் கொண்ட பற்று காரணமாக பாடசாலைகளைத் துரிதமாகத் துறந்தவர் பத்மினி. பால்யத்தில் சமஸ்க்ருதம் கற்றுக்கொண்டவர். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என நான்கு மொழிகளிலும் நீடித்த அவரது தொடர் பங்களிப்பு உன்னதமானது. நடித்த அத்தனை படங்களிலும் சொந்தக் குரலில் பேசியது அன்றைக்கு அபூர்வம். அவரது சாதனைகளின் பிள்ளையார் சுழி அது!

அதனாலேயே, தமிழில் பத்மினி நடித்த படங்களின் எண்ணிக்கை குறைவு. ஆனால், அவர் ஏற்று ஜொலித்த பாத்திரங்கள் தந்த மன நிறைவில், யாரும் அதை உணர்ந்ததே கிடையாது. அவரது படப் பட்டியலை சற்றே எண்ணிப் பார்த்தபோது வியப்பு தோன்றியது. ஆண்டுக்கு நான்கு ஐந்து படங்களில் நடித்திருந்தார். 1970-களில் அவர் இந்தியாவை விட்டு அமெரிக்காவுக்குக் குடும்பம் நடத்தச் சென்றார். அப்போது, ஏறக்குறைய எட்டுப் படங்கள் (1971-ல்) பத்மினி நடிப்பில் ஒரு சேரத் தமிழில் வெளிவந்தன. அவற்றில் அன்னை வேளாங்கன்னி, ஆதிபராசக்தி போன்ற பக்திச் சித்திரங்களும் அடங்கும்

வண்ணத்திரையில் பத்மினியின் ஒட்டுமொத்த சாதனைகளுக்கும் இந்தியர்கள் நன்றி சொல்ல வேண்டியது இருவருக்கு மட்டுமே. முதலாமவர் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன். இரண்டாமவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். கலைவாணர் வற்புறுத்தி பத்மினியை நாயகியாக்கியவர். கணேசனோ, பத்மினியின் பரவசமூட்டும் நடிப்புக்குப் பாதை வகுத்துத் தந்தவர்.

தமிழில் பத்மினி பங்கேற்ற நூற்றுச் சொச்சம் படங்களில், அவர் கணேசனோடு நடித்ததே அதிகம். பணம் படத்தில் தொடங்கி லட்சுமி வந்தாச்சு (சூப்பர் டைட்டில் பொருத்தம் இயல்பாகவே அமைந்துவிட்டது. திரையில் அவர்களது முதலுக்கும் நிறைவுக்கும்) கடந்தும், கடைசி வரையில் நட்போடு நீடித்தது அவர்களின் மிக நீண்ட கலைப்பயணம், தோழமை யாவும்.

85 ஆண்டு காலத் தமிழ் சினிமா சரித்திரத்தில், இட்லியும் சாம்பாருமாக இணை சேர்ந்த ஒப்பற்ற ஜோடி அவர்கள். நிஜ வாழ்வில் (1960-களில்) தாலி கட்டி முடித்ததும், கால் கட்டு போட்டதும், தமிழர்களின் கல்யாணங்களில் சிவாஜி - பத்மினிபோல் சேர்ந்து வாழ திருமண வீட்டார் வாழ்த்தியது காலத்தின் கல்வெட்டு.

 

padmini-3.jpg  

 

 

திருவனந்தபுரம் அரண்மனையில் ஆஸ்தான வித்வானாக இருந்தவர் குரு கோபிநாத். அவரிடம் நாலு வயது பத்மினியும் (பப்பி) அக்கா லலிதாவும் நடனம் கற்றுக்கொள்ளத் தொடங்கினர். கடைக்குட்டி ராகினி அப்போது குழந்தை. பப்பியின் எட்டு வயசுக்கெல்லாம் அரங்கேற்றம் ஆனது. ஒன்பது கெஜம் சேலையில் பாலகி பத்மினி ஆடிய ஆட்டத்துக்கு, சிறப்பு விருந்தினர் ஜோத்பூர் மகாராஜா ஜோராகக் கை தட்டினார்.

அக்கா லலிதாவோடு ஏழு வயது பத்மினி இணைந்து தர்பார் நாட்டியங்களில் பங்கேற்றார். அன்றைக்குப் 'பாரிஜாத புஷ்பகரணம்' நாடகம். அதில், பத்மினிக்கு நாரதர் வேடம். தலைமை கலைவாணர்.

'தேவலோகத்தில் எல்லாரும் அழகாக இருப்பாங்கன்னு இப்பத்தான் தெரியுது. நாரதர்கூட ரொம்ப அழகாக இருக்கிறார்'. என்.எஸ்.கே.யின் பாராட்டில் த்வனித்த கிண்டலுக்கும் கேலிக்கும் எல்லாரும் சிரித்தார்கள். ஆனால் பப்பிக்கோ, வெட்கச் சிறகுகள் முளைத்தன. தம்பூராவால் தன் தாழம்பூ முகத்தை மூடிக்கொண்டார்.

பரம்பரையான கலைக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல லலிதாவும் பத்மினியும். அவர்களுக்குள் அந்த ஆசை விதையை ஆழமாக ஊன்றியவர் மிஸஸ் பிள்ளை. பப்பியின் அம்மாவுக்கு அக்கா. பெரியம்மாவுக்கு, ஆறுமுகங்கள்போல் அத்தனையும் ஆண் பிள்ளைகள். எனவே, தங்கை மகள்களின் மீது தனிப் பிரியம்! பெரியம்மாவுக்கு, மலேசியாவில் நாலாயிரம் ஏக்கரில் ரப்பர் எஸ்டேட் இருந்தது. வசதியான வாழ்க்கை. பணம் லட்சியமில்லை. தங்கை பெற்ற செல்வங்களுக்குத் தங்கத்தில் உருத்திராட்சம் கட்டிப் போட்டார்.

padmini-2.jpg திருவிதாங்கூர் சகோதரிகள்


பப்பியின் மாமா, பம்பாயில் கடற்படையில் கமாண்டர். உலகப் புகழ்பெற்ற நாட்டியக் கலைஞர் உதயசங்கரின் பக்கத்து வீட்டுக்காரர். விடுமுறைக்கு வந்திருந்த சகோதரியின் பெண்களை அவரிடம் அறிமுகப்படுத்தினார். சலங்கைகள் பேசின. இளம் தளிர்களின் அங்க அசைவுகளில், ஜதிக்குப் பதில் சொல்லும் நயண பாஷைகளில், நான்கு பாதங்களின் அதிவேகப் பாய்ச்சலில், கலா மேதை கண் கலங்கினார். ஏற்கெனவே திருவிடைமருதூர் மகாலிங்கம் பிள்ளையிடம் தேர்ச்சி பெற்றவர்களை சினிமாவில் ஆட அழைத்தார்.

'ஜெமினி எஸ்.எஸ்.வாசன் ஆதரவில் கல்பனா என்ற பெயரில் முழுநீள நாட்டியச் சித்திரம் தயாரிக்கப்போகிறேன். அதில் நீங்களும் ஆடுகிறீர்களா' என்றார். நிஜத்தில் மெய்சிலிர்த்துப் போனது இருமலர்களுக்கும். கலைச் சமூகத்தின் மேட்டுக்குடிகளிடம் வாசம் பரப்ப வந்திருக்கும் வசந்த அழைப்பைத் தவறவிடலாமா? எல்லோருக்கும் கிடைக்கிற வாய்ப்பா அது!

அரண்மனை அந்தப்புரங்களில் ஆடியவர்கள், சினிமா ஸ்டுடியோவில் தடம் பதித்தார்கள். சந்திரலேகா ஷூட்டிங்கும், கல்பனாவுக்கான நடனப் பயிற்சிகளும் வருடங்களை விழுங்கியபடி நடந்தன. ராஜ வம்சத்து யவன ராணிகளை, வாசனின் ஊழியர்கள் பிரியத்தோடு கவனித்தார்கள். அவர்களில் நல்ல பெர்சனாலிடியும் சுறுசுறுப்பும் உடையவராக, பத்மினியின் கண்களுக்குத் தட்டுப்பட்டவர் ஜெமினி கணேசன்!

கல்பனா ரிலீஸுக்கு பிறகு காலத்தை விரயம் செய்யாமல் 'டான்ஸ் ஆஃப் இந்தியா'வைத் தொடங்கினார்கள். எட்டுப் பேர் கொண்ட சொந்தக் குழு அமைந்தது. பாம்பாட்டி நடனம், சிவாபார்வதி, ராதாகிருஷ்ணன் போன்றச் சின்னச் சின்ன அயிட்டங்களைத் தாங்களே உருவாக்கி ஆடினர்.

சென்னைக்கு வந்தால், பட அதிபர் ஏ.வி.மெய்யப்பச் செட்டியாரின் கவனத்தில் நின்றவை, லலிதா - பத்மினியின் நாட்டிய நிகழ்ச்சி விளம்பரங்கள். ஒரு நாள் எழும்பூர் மியூசியம் தியேட்டரில் அவர்களது நடனத்தைப் பார்த்தார்.

'ஆஹா, எவ்வளவு களையான முகம் இருவருக்கும். அவர்கள் தன் சொந்த மண்ணான காரைக்குடியில் வந்து ஆடமாட்டார்களா. வேதாள உலகத்தில் நடிக்கவைத்தால் வசூல் கூடுதலாக இருக்குமே...' இதய வீணை மீட்டிய இனிய ராகத்துக்கு விடை தேடிப் புறப்பட்டார்.

'நாங்கள் திருவிதாங்கூர் சமஸ்தானத்தைச் சேர்ந்தவர்கள். நாட்டியம் மட்டுமே ஆடுவோம். படங்களில் நடிக்கமாட்டோம்'. கலை உலகம் தேடிச் சென்று கேட்டபோதெல்லாம் ஏமாற்றத்தோடு திருப்பி அனுப்பினார்கள் ஆடல் அரசிகள் இருவரும்.

சொல் புதிது. பொருள் புதிது என்று புதுமை விரும்பியாக வாழ்ந்தவர் மெய்யப்பன். நினைத்ததை முடிக்கும் திறமைசாலி. பலமுறை தீர யோசித்துத் தொண்டைக்குழிக்குள் ஒத்திகை பார்க்காமல் ஒரு வார்த்தை பேசமாட்டார்.

'உங்களுக்கு இஷ்டம் இல்லையென்றால் நீங்கள் கேரக்டர் ரோலில் நடிக்க வேண்டாம். ஆடினால் போதும்'. உடனடியாக, நான்கு நடனங்களுக்கு ஒப்பந்தம் செய்துகொண்டு ஊருக்குத் திரும்பினார் செட்டியார்.

வேதாள உலகம், 1948 ஆகஸ்டு 11-ல் வெளியானது. லலிதா - பத்மினி ஆடிய பவளக்கொடி, பாம்பாட்டி நடனக் காட்சிகளுக்கு தடபுடலாகப் பிரமாதமாக விளம்பரம் செய்திருந்தார் ஏவிஎம். ஒட்டுமொத்த கோடம்பாக்கத்தின் பார்வையும் பத்மினி மீது பதிந்தது. விளைவு, திருவிதாங்கூர் சகோதரிகளின் பங்களிப்பு இல்லாமல் எந்தப் படமும் போணி ஆகாது என்ற நிலை விரைவில் வந்தது. சுமார் நூற்றைம்பது சினிமாக்களில் வெறும் நடனம் மாத்திரம் ஆடினர்

எல்லோரையும் போலவா கிருஷ்ணன். குடும்ப நண்பர் ஆயிற்றே! தேவதைகளின் தாயாரை நேரடியாகவே அணுகினார், நாயகி வாய்ப்போடு.

N.S.Krishnan.jpg

'மணமகள்னு ஒரு படம் எடுக்கலாம்னு இருக்கிறேன். அதில் ஹீரோயின்களா உங்க பொண்ணுங்க நடிக்கணும்'.

சரஸ்வதி அம்மாளுக்குச் சந்தேகம். பப்பிக்குள் அந்தத் திறமையெல்லாம் அடங்குமா? டி.ஆர்.ராஜகுமாரி, பானுமதி, அஞ்சலி, வசுந்தராபோல் நடிப்பதெல்லாம் அவளுக்குச் சாத்தியமா? தகுதி இருக்கட்டும். அதற்கான பக்குவம் இன்னமும் வரவில்லையே. இந்தக் கார்த்திகை போனால்தானே பதினாறும்கூடப் பூர்த்தி ஆகும். (பத்மினி பிறந்த தேதி டிசம்பர் 13).

'சினிமால நடிக்கிறதுன்னா கதையை காட்சியைப் புரிஞ்சிக்கிட்டு செய்யணுமே. அவ சின்னவ. இன்னும் விவரம் போதாது' அன்னை சிந்தித்தார். அவரது தயக்கத்தின் நொடிகளில், கலைவாணர் தாயம் போட்டார்.

'நல்லா நடனம் ஆடறவங்களால நல்லா நடிக்கவும் முடியும். நீங்க சம்மதம் சொல்லுங்க. உங்க பப்பியை ஸ்டார் ஆக்கிக் காட்டறேன்'.

கிருஷ்ணன் சொன்னது அதுவரையில் நிரூபிக்கப்படாத ஒன்று. ஏவிஎம்மின் வாழ்க்கை படம் மூலம் வைஜெயந்திமாலா அறிமுகமாகிய நேரம். குமாரி கமலா, குசலகுமாரி, சாய் சுப்புலட்சுமி போன்றோர் நாட்டியத் தாரகைகளாக ஒளி வீசிய அளவு, நடிப்பில் அரிச்சுவடி வகுப்பைக்கூடத் தாண்டாமல் போனார்கள்.

தண்டவாளத்தின் இரு பக்கங்கள்போல் நடனம், நடிப்பு இரண்டிலும் எடுத்த எடுப்பில் எழிலரசி பத்மினிபோல் புகழின் தொடர்வண்டியை ஓட்டி, சிகரம் தொட்டவர் இன்றுவரை எவரும் கிடையாது.

சரஸ்வதி அம்மாளுக்குக் கண்டிப்பு ஜீவ நாடி. அவரது விழி அசைவுகளுக்குள் பத்மினியின் கால்ஷீட் கடைசிவரையில் கட்டுண்டு நின்றது. ரசத்துக்குப் பெருங்காயம் போடுவதில் சந்தேகம் வந்தாலும், நியூஜெர்ஸியில் இருந்து ட்ரங்க்கால் போட்டு அம்மாவிடம் கேட்பார் திருமதி பத்மினி ராமச்சந்திரன்.

டி.ஏ.மதுரம், எம்.எஸ்.சுப்புலட்சுமி, டைரக்டர் கே.சுப்ரமணியம் போன்ற கலை மேதைகள் மிக  வேண்டியவர்களாக இருந்ததால், சரஸ்வதி அம்மாள் கொஞ்சம் நிம்மதிப் பெருமூச்சு விட்டார். கே.சுப்ரமணியம், கதகளி ஆடிக்கொண்டிருந்த சகோதரிகளுக்கு, பரதநாட்டியத்தையும் கட்டாயமாகக் கற்றுத் தரச் சொன்னப் பிதாமகன். 1944-ல் பத்மினியின் குடும்பம் சென்னைக்குக் குடி வந்தபோது, தன் வீட்டில் தங்க இடம் தந்து ஆதரவு அளித்தவர்.

1950-ம் ஆண்டின் மிகச் சிறந்த காவியம், ஏழை படும் பாடு. கே.ராம்நாத் என்ற மாபெரும் திரைச்சிற்பி இயக்கியது. அதில், வி.கோபாலகிருஷ்ணனுடன் கனவுக் காட்சியில் பத்மினி தோன்ற வேண்டும்.

'பப்பி அப்படி நடிக்கமாட்டாள்' என, தயாரிப்பாளரைத் தவிக்க வைத்தார் தாயார். இயக்குநர் என்ன சமாதானம் சொல்லியும் கேட்கவில்லை. கடைசியில், தங்கை ராகினிக்கு ஆண் வேடம் போடப்பட்டது. இளைய சகோதரியுடன் தன் முதல் காதல் பாடலைப் பாடி நடித்தார் பத்மினி.

மணமகள் தொடங்கியது. முதல் நாள் ஷூட்டிங்கில், வியர்வைக் குளத்தில் நீராடினார் பத்மினி. தமிழை கொச்சையாகப் பேச மட்டும் தெரிந்த அவரிடம், மு.கருணாநிதியின் வசனத்தைக் கொடுத்தார்கள். அடுத்து, புடைவையை நீட்டி கட்டிக்குங்க என்றார் காஸ்ட்யூமர். சேலை, இடுப்பை விட்டு நழுவிற்று. நாயகியின் தவிப்பைப் புரிந்துகொண்டார் மதுரம். 'போய் ரெடிமேட் ஸாரியை வாங்கிட்டு வாங்க என்றார் தயாரிப்பு நிர்வாகியிடம்.

பத்மினி அணிந்துகொண்டு நடிக்க, தன் சொந்த நகைகளைப் பூரிப்போடு வாரி வழங்கினார் இசைக்குயில் எம்.எஸ்.சுப்புலட்சுமி. மற்றொரு சங்கீதவாணி எம்.எல்.வசந்தகுமாரி, பத்மினிக்காகத் திரையில் பாடினார். எல்லாம் இன்பமயம் எனத் தொடங்கி, 65 ஆண்டுகளாக வசீகரிக்கிறது அந்த அற்புத கீதம்.

மணமகளில் பத்மினிக்குக் காதலன் யார் தெரியுமா? பிரபல குணச்சித்திர நடிகர் எஸ்.வி.சகஸ்ரநாமம். பாவம் பத்மினி. சிவாஜி கணேசனின் இணையற்ற ஜோடியாகப் புகழ்பெறும் வரையில், அவருக்கு நாயகனாக வாய்த்தவர்கள் அவரைவிட வயதில் மூத்த டி.எஸ்.பாலையா, கே.ஆர்.ராமசாமி, நாகையா, எஸ்.வி.சுப்பையா எனப் பட்டியல் நீள்கிறது.

மணமகள் மகத்தான வெற்றியைப் பெற்றது. கலைவாணர், பப்பியை விடுவதாக இல்லை. தொடர்ந்து வாய்ப்பு கொடுத்தார். அவரது பணம், சிவாஜி கணேசனின் இரண்டாவது படமாக வெளியானது. அதைத் தயாரித்தபோதும் பத்மினியை மறக்கவில்லை.

கணேசனுக்குப் பத்மினியோடு நடிப்பது கனவுபோல் இருந்தது. பராசக்தி எப்போது ரிலீஸாகும் என்று தெரியாத நிலை. பப்பி ஏற்கெனவே புகழ் பெற்ற நட்சத்திரம். இன்றைக்கெல்லாம் பார்த்துக்கொண்டிருக்கலாம் என்பது போன்ற அற்புதமான முகத்தோற்றம்! அழகின் ஆலயத்துடன் நடிக்கும் ஆனந்தத்தில், இளமை கரை புரண்டு ஓடியது புதுமுகத்துக்கு.

அவர்கள் இருவரும் நடித்த முதல் காட்சி, மங்களகரமாக ஆரம்பித்தது. அன்றைய இரவு, தன்னுடைய நிஜ திருமணத்துக்காக சுவாமிமலைக்குச் செல்ல வேண்டியவர் கணேசன். காலையில், மணமகள் பத்மினியின் கழுத்தில் சினிமா தாலியைக் கட்டி அவரை மாமியார் வீட்டுக்கு அழைத்து வருவதாகப் படம் பிடித்தார்கள். பிற்பாடு சந்தித்த வேளைகளில் சிரித்துச் சிரித்து மகிழ, சிவாஜிக்கும் பத்மினிக்கும் கிடைத்த இனிப்பு அவல், அந்தத் தித்திப்பான முதல் சம்பவம்.

பணம் படத்தைத் தொடர்ந்து அன்பு, இல்லற ஜோதி எனத் தொடர்ந்தது சிவாஜி - பத்மினி ஜோடி. இரண்டிலும் ஒரு விசேஷம். படங்களுக்கு நடுவில் ஓரங்க நாடகம். ஷேக்ஸ்பியரின் ஒத்தல்லோவாக கணேசனும், டெஸ்டிமோனாவாக பத்மினியும், அன்பில் வாழ்ந்து காட்டினார்கள்.

கண்ணதாசன் வசனம் எழுதிய மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிப்பான இல்லற ஜோதியில் சலீம் - அனார்கலியாக சிவாஜி - பத்மினியைச் சந்தித்தார்கள் ரசிகர்கள். ஓரங்க நாடகத்துக்கு மட்டும் காதல் வசனம் எழுதியவர் கலைஞர்!

தினம் ஓயாமல் ஒலித்த சலங்கை ஒலிகளுக்கு நடுவே, பத்மினி கேமரா முன்பு தோன்றினார் என்றே சொல்ல வேண்டும். தூக்கம் தொலைத்த இரவுகளில், பத்மினியின் பஞ்சுப் பாதங்கள் ஓய்வுக்காக ஏங்கும். கடிகாரங்கள்கூட சாவி கொடுத்தால்தான் ஓடும். திருவிதாங்கூர் சகோதரிகளுக்கு அந்த வாய்ப்பும் இல்லை. ராத்திரி பகல் பார்க்காமல், பதத்துக்கு ஆடினார்கள். ராமாயணம், கண்ணகி, தசாவாதாரம், வள்ளித் திருமணம் என நீண்ட நெடிய நாட்டிய நாடகங்கள். கலைத் தாகமா... புகழ் மோகமா எனப் பட்டிமன்றம் நடத்தலாம். வெகு சீக்கிரத்தில், சென்னை, மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலையில் இருந்த 12 பங்களாக்கள் அவர்களுக்குச் சொந்தமானது.

ஒவ்வோர் ஆண்டும் நவம்பர்  14-ம் தேதியை பாரதப் பிரதமருக்காக ஒதுக்கினார்கள். பத்மினி குழுவினரின் 'கீதோபதேசம்', நேருவுக்கு மிகவும் பிடிக்கும். பாதி ஆட்டத்தில் தன்னை மறந்து அபாரம் அபாரம் என்று கைகளைத் தட்டுவார் ஜவஹர். இந்தியர்களின் ரசிப்புத்தன்மைக்கு நேற்றைய உதாரண புருஷர். உலகின் ஒப்பற்ற தலைவரின்  முன், அவரது பிறந்த நாள் தோறும் ஆடும் பாக்கியம், இந்தியாவில் எத்தனை நடன மணிகளுக்குக் கிடைக்கும்!

Nehru.jpg


பத்மினி நாயகியாக அறிமுகமானபோது, தென் இந்தியா முழுவதும் தெலுங்கு நடிகைகளின் ஆதிக்கம் அதிகம்.

1. உணர்ச்சி மிகுந்த நடிப்புக்கும், தெளிவாக வசனம் பேசுவதற்கும் கண்ணாம்பா...

2. நளினமாக நடிக்கவும் இளமையாகப் பாடவும் பானுமதி...

3. டி.ஆர்.மகாலிங்கத்துக்கு முத்தம் கொடுத்து நடித்து கவர்ச்சிக் கன்னியாக அரங்கேறிய அஞ்சலிதேவி...

4. அழகான தோற்றத்துக்கும் வசீகரமான குரலுக்கும் எஸ்.வரலட்சுமி...

5. மனத்தை உருக்கும் நடிப்புக்கு ஜி.வரலட்சுமி

ஆகியோர் போதாது என்று புதுமுகங்களாக வந்த சௌகார் ஜானகி, கிரிஜா, மாலதி, சாவித்ரி போன்றோர், ரசிகப் பெருமக்களால் பெரிதும் வரவேற்கப்பட்டார்கள். ஏறக்குறைய நவரத்தினங்கள் மாதிரி அவர்கள் அனைவரும் தமிழிலும் தெலுங்கிலும் ஒரு சேர ஒளிவீசினார்கள்.

அத்தகைய போட்டி மிகுந்த சந்தர்ப்பத்தில், கேரளத்தில் இருந்து முதன் முதலில் தடம் பதித்து, தமிழர்களின் அபிமான நடிகை ஆனவர் பத்மினி. எழுத்தாளர் லஷ்மியின் காஞ்சனையின் கனவு, ஆனந்த விகடனில் தொடராக வெளியானது. அதில், லலிதாவும் பத்மினியும்தான் நடிக்க வேண்டும் எனத் தமிழ்நாட்டின் தாய்க்குலங்கள் அபிப்பிராயம் சொன்னார்கள். தட்டாமல் அதை நிறைவேற்றினார், தயாரிப்பாளர் ஸ்ரீராமுலு நாயுடு. மக்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப, லஷ்மியின் படைப்பு காஞ்சனா என்ற பெயரில் வெளியாகி வசூலைக் குவித்தது.

திரையில் பத்மினியை ரசிகர்கள் ஏனோ அதிகம் சிரிக்க விடவில்லை. அவர் அழும்போதும் அழகாக இருந்தார். இறைவனின் வரப்பிரசாதம். அதுவே போதும் என திருப்தி அடைந்தார்கள். புகழின் சமுத்திரத்தில் உற்சாக அலைகளில், தமிழ் சினிமா உலகம் பப்பியைக் கொண்டாடியது.

பத்மினியின் பெயரில் தன் புது சினிமா கம்பெனியை ஆரம்பித்தார் பி.ஆர்.பந்தலு. அதில் முதல் தயாரிப்பு காமெடியாக வளர்ந்தது. கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி என்கிற டைட்டிலில் 100 நாள்கள் ஓடியது. ஆரம்ப நாள்களில், கணேசனைவிட பத்மினிக்கு ஊதியம் மிகவும் கூடுதல். உச்ச நட்சத்திரம் அல்லவா.

தூக்குதூக்கியும் கூண்டுக்கிளியும், 22 ஆகஸ்டு 1954-ல் ஒரே நாளில் வெளியாகின. முதலும் கடைசியுமாக சிவாஜியும் எம்.ஜி.ஆரும் இணைந்து நடித்த கூண்டுக்கிளியை, வசூலில் தூர வீசி எறிந்த மகத்தான வெற்றிச்சித்திரம் தூக்குதூக்கி. திருவிதாங்கூர் சகோதரிகள் மூவரும் சேர்ந்து நடித்த முதல் படம். சிவாஜி - பத்மினி ஜோடியின் நகைச்சுவை நடிப்பும், இனிய பாடல்களுமாகச் சிகரம் தொட்டது. கூண்டுக்கிளியின் தோல்விக்கான காரணங்களில் முக்கியமானது, பத்மினி அதில் நாயகி இல்லை என்பது.

1954. சிவாஜிக்கும் பத்மினிக்கும் மறக்க முடியாத மன்மத ஆண்டு. வருடக் கடைசியில் வெளியான எதிர்பாராதது, நிஜத்திலும் அப்படியே. தமிழ் சினிமாவின் முதல் மாறுபட்ட காதல் சித்திரம். ஸ்ரீதர் எழுதியது. அன்றைய கல்லூரிகளில் பாடத்தைவிட அதிகம் ஒப்பிக்கப்பட்டவை ஸ்ரீதரின் வசனங்கள். சுமதியாக பத்மினியும் சுந்தராக கணேசனும் பேசியதில் இருந்து சில வரிகள்

சுந்தர் - சுமதி! உன் பாட்டிலே நான் அப்படியே மெய்மறந்து...

சுமதி - தூங்கிட்டீங்களா!

சுந்தர் - இல்லை சுமதி. நீ பாடியது வெறும் பாட்டல்ல! என் இதய நரம்புகளை ஒவ்வொன்றாக மீட்டி...

சுமதி - அடடே, வர்ணனை பண்ணக்கூடத் தெரியுமா?

சுந்தர் - இதென்ன பிரமாதம்! இன்னும் கேள். அந்தரங்கத்தில் அரங்கம் நிர்மாணித்து... அ... அ...

சுமதி - என்ன அ'னாவிலே வரணும்னு தேடறீங்களா?

சுந்தர் - ஆமா... இரு இரு. ஆழ்கடலின் நீளத்தைச் சுவராக நிறுத்தி, தவழ்ந்து செல்லும் காற்றைத் தரையாக்கி, வண்ணமலர் இதழ்களை வகையாக அதில் பரப்பி, அந்த இனிய மாளிகையில் இதய ராணியான உன்னோடு இரவும் பகலும் இன்பத்தின் எல்லையில் மிதக்கத் துடிக்கிறேன் சுமதி!

சுமதி - ஒன்ஸ்மோர்!

சுந்தர் - நான் என்ன சொன்னேன்னு எனக்கே புரியல்லை. ஒன்ஸ்மோராம்லே ஒன்ஸ்மோர்!

padmini-4.jpg

அதன் உச்சகட்டக் காட்சியில், நடிப்பு என்பதை மறந்து கணேசனைக் கன்னத்தில் அறைந்தார் பத்மினி. அந்த நிகழ்வு, பப்பியின் வார்த்தைகளில்..

'சிவாஜியின் காதலியான நான், விதி வசத்தால் அவருக்குச் சித்தி ஆகிறேன். கணேசனுக்கோ பார்வை பறி போய்விடுகிறது. அப்பா நாகையாவின் இளம் மனைவியான என்னிடம், பழைய ஞாபகத்தில் சிவாஜி பழகுவதாக நினைக்கிறேன். மனம் பதறி அதைத் தவிர்க்க அவரை அறைவதாக சீன்.

டைரக்டர் சி.எச்.நாராயணமூர்த்தி என்னிடம், 'ரியலிஸ்டிக்கா இருக்கணும். கணேசனை நீ நிஜமாகவே அடிக்கணும்' என்றார். சிவாஜியும், 'பரவாயில்ல தைரியமா விடு ஒரு அறை. சீன் பிரமாதமா வரணும்' எனத் தூண்டினார். இருவருக்குமே அப்படி ஒரு ரிசல்ட் கிடைக்கும் என்று தெரியாது.

ஒரு ஆவேசத்தில், பளார் பளாரென்று சிவாஜியை அடித்து வெளுத்து வாங்கிவிட்டேன். சிவாஜியின் கன்னமெல்லாம் வீங்கிவிட்டது. உடம்பு சரி இல்லாமல் ரெண்டு மூன்று நாள்கள் செட்டுக்கே வரவில்லை.

'பார்க்க சின்னப் பெண்ணாக இருக்கிறாய். உனக்கு எப்படி இவ்வளவு பலம் இருந்தது...?' என்று திகைப்புடன் கேட்டார்.

'நான் பரத நாட்டியம் ஆடி ஆடி, கை விரல்களுக்கு அதிகம் பயிற்சி கொடுத்திருக்கேன் சார். உடல் பலம் எப்படியோ. கைகளின் வலுவுக்கு ஒன்றும் குறைச்சல் இல்லை’ என்றேன்.

சிவாஜிக்கு என்னால் நேர்ந்த கதியை நினைத்து வருத்தப்பட்டேன். சிவாஜி அதை சட்டை செய்யவில்லை. 'ரொம்ப இயற்கையாக நடித்தாய். அடியால் வலி இருந்தாலும், உன் நடிப்புத் திறமையை நினைத்து சந்தோஷமாகவே இருந்தது பப்பி' என மிகவும் பெருந்தன்மையோடு சொன்னார்.

எதிர்பாராதது படத்தின் இமாலய வெற்றி, சிவாஜி - பத்மினி ஜோடியைத் திரையில் நிரந்தரமாக்கியது.

http://www.dinamani.com

Link to comment
Share on other sites

பத்மினி - 2. பத்தில் ஒரு படம்!

 

 

1955-ம் ஆண்டு பொங்கல் வெளியீடான காவேரி, ராஜாராணி கதை. அந்நாளில் ஏவிஎம்மைவிடப் பிரபலமான லேனா செட்டியாரின் கிருஷ்ணா பிக்சர்ஸ் நிறுவனத் தயாரிப்பு. காவேரியும் சிவாஜி - பத்மினி நடிப்பில் 100 நாள்கள் ஓடியது. கிருஷ்ணா பிக்சர்ஸ், பத்மினியின் சொந்த வீடுபோல. அவர் நடிக்க, தொடர்ந்து தமிழிலும் தெலுங்கிலும் படங்களைத் தயாரித்தது.

'நல்லாத்தானே போய்க்கிட்டு இருக்கு. திடீர்னு ஏன் இப்படி’ என வடிவேலு காமெடியாகச் சொல்லும் வசனத்தை, அன்றைக்குத் திரையுலகில் எல்லோரும் சீரியஸாகப் பேசினார்கள். காரணம், டைரக்டர் எல்.வி.பிரசாத். அவர் இயக்கிய மங்கையர் திலகம் படத்தில் தாயாரை அறியாத, அண்ணியையே தெய்வமாகப் போற்றும் வாசுவாக  சிவாஜி. அண்ணி சுலோசனாவாக பத்மினி. அண்ணன் கருணாகரனாக எஸ்.வி.சுப்பையா. அண்ணிக்கும் மைத்துனனுக்கும் உள்ள பாசப்பிணைப்பைப் புரிந்துகொள்ள மறுக்கும் மனைவி பிரபாவாக எம்.என்.ராஜம் நடித்தார்கள். இந்த நான்கு கேரக்டர்களின் உணர்ச்சிக் குமுறல்களே திரைக்கதை. கே.ஏ.தங்கவேலு - ராகினி காமெடி இருந்தாலும், படம் ரொம்ப சீரியஸ். வாஹினியின் வளையல்கள் என்கிற மராட்டிய சினிமாவின் மறு வடிவம்.

நிஜத்தில், இயக்குநருக்கு மிகப்பெரிய சவால். டஜன் கணக்கில் சிவாஜியும் பத்மினியும் ஜோடியாக நடித்து வந்த சூழல். மங்கையர் திலகத்தில் நிகழ்ந்த மாற்றத்தை மக்கள் ஏற்றுக்கொள்வார்களா என்கிற சந்தேகம். இந்தப் படத்தின் வெற்றி தோல்வி, நிச்சயம் தமிழ் சினிமா வணிகத்தைப் பாதிக்கக்கூடும் என்றெல்லாம் பேசினார்கள், கோலிவுட் பண்டிதர்கள்.

1.jpg


பிரசாத் புத்திசாலி. சிவாஜியும் பத்மினியும் தனியாகச் சேர்ந்து நிற்கும் காட்சியே வராமல், படத்தை இயக்கினார். 21 வயதுகூட நிறைவு பெறாத பத்மினிக்கு மிகப்பெரிய லைஃப் டைம் ரோல். முக்கியமான காட்சிகளில், சிவாஜியும் பிரசாத்தும் பத்மினிக்கு நடிக்கக் கற்றுக் கொடுத்தனர். ஆகஸ்ட் 26, 1955-ல் படம் வெளியானபோது, ரசிகர்களால் திரையில் பத்மினியைப் பார்க்க முடியவில்லை. சுலோசனாவைத்தான் கண்டார்கள்.

நாயகியின் மேக் அப்பில் மிகப்பெரிய மாற்றம் செய்திருந்தார் பிரசாத். பத்மினியின் அழகும் யவ்வனமும் எளிதில் வெளிப்பட்டுவிடாதபடி, சேலைகளில் பத்மினியை மிக கௌரவமாகக் காட்டினார். பத்மினியிடம் அவ்வளவு மெச்சூரிட்டியான மிக இயல்பான நடிப்பு. கடைசியில் அவர் இறந்துவிடுவார். கதறி அழுத சிவாஜியோடு சேர்ந்து ஜனங்களும் கண்ணீர் விட்டனர். திரை முழுக்க முழுக்க பத்மினியின் சுய ராஜ்ஜியம். சிவாஜி ஸ்கிரீனில் வர ஏறக்குறைய ஒரு மணி நேரம் ஆகிவிடும். அதுவரை சின்ன சிவாஜியாக வரும் பொடி நடிகனின் அற்புதமான நடிப்பு நெஞ்சை அள்ளும். இன்றும் 21 வயதில் நிறைய அழகான நட்சத்திரங்கள் இருக்கிறார்கள். அவர்களில் ஒரு பத்மினிகூட நிச்சயம் அகப்படமாட்டார்.

பத்மினிக்குப் பிறகு அறிமுகமாகி, நடிப்பில் அவரையும் முந்திக்கொண்டு, 'நடிகையர் திலகம்’ எனப் பட்டம் பெற்றவர் சாவித்ரி ஒருவரே. ஒரே நேரத்தில் தமிழிலும் தெலுங்கிலும் வெற்றிகளை விடாது குவித்தவர். ரூபாவாக பத்மினியும், அருணாவாக சாவித்ரியும், அசோக்காக சிவாஜியும் நிறைவாக நடித்த படம், வீனஸ் பிக்சர்ஸ் அமரதீபம்.

2.jpg

இளமை வழிந்தோடிய அந்தக் காதல் சித்திரம், டைரக்டர் ஆவதற்கு முன்பாகவே கதாசிரியர் ஸ்ரீதரை வெற்றிகரமான பட முதலாளியாக ஆக்கியது. கையில் நயா பைசா முதல் போடாமல், நட்சத்திரங்களுக்கு அட்வான்ஸ் கொடுக்கவும் தரவும் வாய்ப்பு இல்லாத நிலை. ஸ்ரீதரின் எழுத்தின் மேல் உள்ள நம்பிக்கையில், அன்றைய பெரிய நட்சத்திரங்கள் மூவரும் உடனடியாக கால்ஷீட் தந்தனர். பத்மினி - சாவித்ரி இருவரும் சிவாஜியோடு ஜோடி சேர்ந்து நடிப்பதாக தினசரிகளில் பட விளம்பரங்கள் வந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

ஸ்ரீதரிடம் கோலிவுட் சீமான்கள் லட்சக்கணக்கில் கொண்டு வந்து கொட்டி விநியோக உரிமை பெற்றனர். நட்சத்திர செல்வாக்கு என்பதன் முழுமையான அர்த்தம் அது. அந்த நொடி முதலே ரசிகைகளின் உள்ளத்துக்குள் பத்மினியா, சாவித்ரியா? யார் அமரதீபம் என்ற ஆர்வத்தீ. க்ளைமாக்ஸில், தன் தங்கை அருணாவுக்காக அசோக்கை தியாகம் செய்துவிட்டு, நாடோடிப் பெண் ரூபாவாக வரும் பத்மினி இறந்துவிடுவார். அமரதீபம் மகத்தான சக்ஸஸ். உடனடியாக இந்தியிலும் எடுத்தார்கள். இந்தியிலும் ரூபாவாக பத்மினி. அருணா வேடத்தில் வைஜெயந்திமாலா. ஹீரோ தேவ் ஆனந்த்.

இன்றைய அனேகன் தனுஷின் டங்கா மாரி ஊதாரிக்கெல்லாம் பிள்ளையார் சுழி, அமரதீபத்தில் ஒலித்த ஜாலிலோ ஜிம்கானா பாடல். ஜிப்ஸி பெண்ணான பத்மினி, தெருவில் ஆடுவதற்காக, தஞ்சை ராமையாதாஸ் எழுதிய அர்த்தம் நிறைந்த பாட்டு! இப்போதும் பெரிசுகள் அதைக் கேட்டவுடன், பப்பியை எண்ணிக் கனவு காண்பார்கள். பத்மினியின் சக்கைப் போடு போட்ட 'ம' வரிசைப் படங்கள்போல், வசூலில் நிறைவை தராவிட்டாலும், ரசிகர்களின் மனத்தில் நீங்கா இடம் பிடித்த படம், கலைஞரின் புதையல். துரையாக சிவாஜி, பரிமளமாக பத்மினி, துக்காராமாக சந்திரபாபு. மூவரும் முற்றிலும் மாறுபட்டு நடித்தார்கள்.

நட்சத்திரங்கள், செட்டுக்குள் காகிதப்பூக்களுக்கு நடுவே பொய்க் காதல் பேசி நடித்ததே வாடிக்கை. அதை மீறி, சிவாஜி - பத்மினி ஜோடியை, கடற்கரையில் 'விண்ணோடும் முகிலோடும்...’ என தங்களை மறந்து இயற்கையோடு ஐக்கியப்படுத்தி, ஆடிப்பாட வைத்தனர், டைரக்டர்கள் கிருஷ்ணன் - பஞ்சு.

எல்லா டிவி சேனல்களிலும் அடிக்கடி இடம்பெறும் அந்தப் பாடல் காட்சியில், சிவாஜியின் அந்தர் பல்டியும், பத்மினியுடனான கொஞ்சலும் எப்போது பார்த்தாலும் புதிதாகவே தோன்றும். காதல் வசனங்களை பத்மினிக்காக எழுதுகிறோம் என்பதில் கலைஞருக்கும் குஷி போலும். புதையல் படத்தில் ஹைலைட் அவை.

'லவ் சீன் நியூ ஸ்டைல்! சிவாஜி, பத்மினி மூக்கைப் பிடிச்சுண்டு விளையாடறதும், தலை மயிரைப் பிடிச்சி இழுக்கறதும் பிரமாதம்! ஓரணா நாணயத்தின் விளிம்புபோல் அழகு உன் கூந்தல் என்கிறான். காதல் சீன் டயலாக் எல்லாம் கல்கண்டாட்டமா இருக்கு’ என மனம் திறந்து பாராட்டியது ஆனந்த விகடன் விமரிசனம்.

தங்கப்பதுமையும், தெய்வப்பிறவியும் சிவாஜி - பத்மினி சேர்ந்து நடித்ததில் எவராலும் மறக்க முடியாத கலைப் பொக்கிஷங்கள். நிஜத்தில், பத்மினியின் குரல் ஆண்மையோடு ஒலிக்கும். தொலைபேசியில் அவர் பேசினால், புதிதாகக் கேட்பவர்களுக்குப் பேசுவது பத்மினியா, அவரது அண்ணன் தம்பி யாராவதா என்ற குழப்பம் நிச்சயம் வரும். ஆணின் குரலை வைத்துக்கொண்டா மலையாளத்து பத்மினி, அருந்தமிழில் அத்தனை அற்புதமாகப் பெண்மையின் இயல்புகளை, சிறப்பை வெளிப்படுத்தினார் என்கிற திகைப்பு தோன்றும்.

தன் கணவனுடைய கண்கள் குருடாகிவிட்டன எனத் தெரிந்ததும், தங்கப்பதுமையில் 'உங்கள் கண்கள் எங்கே அத்தான்...’ என வீறிட்டு அலறுவாரே. அப்போது கல் நெஞ்சங்களும் கரையும். ஏதோ நிஜமான புருஷனுக்காகக் கூச்சலிடும் மனைவியின் அடிவயிற்றுக் கதறலாக நினைத்து, நிசப்தத்தின் அரங்குகள் கண்ணீரில் நீச்சல் அடிக்கும். 1959 பொங்கலுக்கு தங்கப்பதுமை ரிலீசானபோது, ஏனோ பிரமாதமாக ஓடாமல் போனது. மறு வெளியீடுகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. எடுத்த எடுப்பில் வெற்றி பெறாவிட்டாலும், தங்கப்பதுமையில் சிவாஜி - பத்மினி நடிப்பு, ஏவி.எம். செட்டியாரின் திட்டத்தைக் கிடப்பில் போட்டது.

3.jpg


கலைஞர் வசனத்தில் கிருஷ்ணன் - பஞ்சு இயக்கத்தில் மீண்டும் கண்ணகியை திரையில் காட்ட முயற்சி நடந்தது. கோவலனாக கணேசன், கண்ணகியாக பத்மினியை நடிக்க வைக்கத் திட்டம் உருவானது. தங்கப்பதுமையும் ஏறக்குறைய பத்தினிப் பெண் ஒருவரின் பரிதவிப்பு. அதை பத்மினி பிரமாதமாக வெளிப்படுத்தி இருக்கிறார். அதுவே போதும் என செட்டியார் புத்திசாலித்தனமாக முடிவெடுத்தார்.

தங்கமாக பத்மினியும் மாதவனாக சிவாஜியும் தெய்வப்பிறவியில் நடித்ததாகச் சொன்னால் யாரும் நம்பமாட்டார்கள். நிஜமாக வாழ்ந்தார்கள். சந்தேகச் சுவர்களுக்குள், குழப்பத்தின் கால்களில் சதிராடும் தம்பதிகள். கணவர் சிவாஜியை அடிக்கப் பாயும் தம்பி எஸ்.எஸ்.ஆரை, அக்கா பத்மினி குடையால் பிளக்கும் காட்சியில், மீண்டும் நிஜமாகவே பிய்த்து உதறிவிட்டார்! குடையை அல்ல ராஜேந்திரனை. அந்த ஒரு காட்சிக்காகவே தியேட்டர்களில் மீண்டும் மீண்டும் ரசிகர்கள் குவிந்தனர்.

உணர்ச்சிக் காவியம் என்று சொன்னால், உடனே அடையாளம் காட்டப்பட்ட அன்றைய உன்னதம் தெய்வப்பிறவி. கருப்பு வெள்ளைக் காலத்தில் வந்த மிகச் சிறந்த 10 படங்களில் தெய்வப்பிறவி ஒன்று! மிக முக்கியமானது.

திருமணத்துக்குப் பிறகு பத்மினி திரும்பவும் நடிக்க வந்த வேளையில், தமிழ் சினிமா தேவிகாவுக்கு மாறி இருந்தது. பத்மினியின் இடத்தில் சிவாஜிக்குப் பக்கத்தில் தேவிகாவின் அன்புக்கரங்கள். தமிழில் தலை தூக்க பத்மினி ரொம்பவே சிரமப்பட்டார். 1966 பொங்கலுக்கு கே.எஸ்.கோபாலகிருஷ்ணனின் சித்தி வரும் வரையில், மாடர்ன் தியேட்டர்ஸ் காட்டு ரோஜாவாக தனித்து வாடினார்.

4.jpg

சித்தியில் எம்.ஆர்.ராதாவின் கெடுபிடிக்கு ஆளாகும் மனைவி மீனாட்சியாக ஜொலி ஜொலிப்பான நடிப்பு. பி.சுசிலாவின் தாய்மை சிந்தும் குரலில் 'பெண்ணாகப் பிறந்தவருக்கு கண் உறக்கம் இரண்டு முறை’ என்கிற கண்ணதாசனின் ஆறு நிமிடத் தாலாட்டுப் பாடல், பத்மினிக்குப் புது வாழ்வை உறுதிப்படுத்தியது. அட்டகாசமாக 100 நாள்கள் ஓடி, பெண்களிடையே பத்மினியின் மதிப்பு மீண்டும் உயர்ந்தது. சித்தியில் பத்மினியின் நடிப்பை பாராட்டாத பத்திரிகைகள் கிடையாது.

சித்தியின் உச்சகட்டப் பெருமிதம், ஜெமினி ஸ்டூடியோ அதை ஹிந்தியில் தயாரித்தது. அவ்ரத் என்ற அந்தப் படத்தில், நாயகி பத்மினிக்குத் தம்பியாக, முத்துராமன் வேடத்தில் வந்தவர் புதுமுகம் ராஜேஷ் கன்னா.

ஏ.பி.நாகராஜனின் சரஸ்வதி சபதத்தில் பார்வதியாக பத்மினி தோன்றினார். 1967-ல், சிவாஜி கணேசனோடு மறுபடியும் ஜோடி சேரும் வாய்ப்பை, பேசும் தெய்வத்தில் கே.எஸ்.ஜி. அளித்தார். மீண்டும் வசந்தம்!

மார்க்கெட் போனால் அம்மா, அக்கா வேஷம்தான் என்பதை, முதன் முதலில் முறியடித்தவர் பத்மினி! நாற்பதை நெருங்கியும், கனவுக்காட்சிகளில் 'அழகு தெய்வம் மெல்ல மெல்ல அடி எடுத்து வைத்ததோ’ என்று சிவாஜியை பத்மினியுடன் டூயட் பாடவைத்தார் கே.எஸ்.ஜி.

கோபாலகிருஷ்ணனின் இன்னொரு மறக்கமுடியாத படைப்பு, கண் கண்ட தெய்வம். அதில் எஸ்.வி.ரங்காராவ், எஸ்.வி.சுப்பையா ஆகியோருடன் பத்மினிக்கும் பலத்த நடிப்புப் போட்டி. தமிழகத்தின் மண்வாசனை வீசும் பண்பாட்டுக் காட்சிகளில், பத்மினியின் புகழ் கூடுதலாயிற்று. அதைத் தொடர்ந்து, 1967 தீபாவளிக்கு வெளியான இருமலர்களில் ஒரு மலர் பத்மினி. 100 நாள்கள் ஓடியது. விடா முயற்சியோடு போராடி வெற்றிக்கோட்டைச் சீக்கிரத்தில் தொட்டு விட்டார் பத்மினி.

5.jpg

எந்த ஹீரோவும் இல்லாமல், 1968 இறுதியில் பத்மினி நடித்த படம் குழந்தைக்காக. கொலைக்கார வில்லன்களுடன் போராடி, பேபி ராணியைக் காப்பற்ற வேண்டி, இரும்புப் பெண்மணியாக, காட்சிக்கு காட்சி பதற்றம் காட்டி பப்பி தனி ஆவர்த்தனம் புரிந்தார். 100 நாள்கள் ஓடியது. அதே படம் ஹிந்தியில் உருவானபோதும் பத்மினியே நாயகி.

1969-ல் பத்மினி நடித்து வெளியான ஒரே படம் குருதட்சணை. புராணப் படங்கள் தயாரித்து வந்த ஏ.பி.நாகராஜனின் சமூகச் சித்திரம். சிவாஜி, கல்வி கற்க விரும்பும் கிராமத்தானாகவும், பள்ளி ஆசிரியையாக பத்மினியும் நடித்தனர். தன் படிக்கும் ஆசையை சொல்லி பத்மினியின் கால்களில் விழுவார் சிவாஜி. அவரது ரசிகர்கள் அதை ஏற்கவில்லை. நிஜத்தில் மாறுபட்ட கதையாக இருந்தாலும், படம் படுதோல்வி.

1970-ல் கணேசனோடு இரண்டு வெற்றிப்படங்கள். 1. ஜெமினியின் விளையாட்டுப்பிள்ளை, 2. சிவாஜி புரொடக்ஷன்ஸ் முதல் தயாரிப்பு வியட்நாம் வீடு. விளையாட்டுப்பிள்ளையில் நடிக்கும்போது ஒரு விபரீதம் எதிர்பாராமல் நடந்தது. எமோஷனல் சீனில் தன்னை மறந்து, பாசாங்கு இன்றி பத்மினியின் கன்னத்தில் ஓங்கி ஓர் அறை விட்டார் சிவாஜி. அதன் விளைவு, பத்மினியின் கம்மல் கழன்று அடுத்த ஃப்ளோரில் போய் விழுந்தது. காட்சி ஓகே.

ஷாட் முடிந்ததும் பத்மினியைக் காணோம். அடுத்த சீனுக்காக தேடிப் போய்ப் பார்த்தால், ஓர் ஓரமாக நாற்காலியில் உட்கார்ந்து பத்மினி கண்ணீர் சிந்திக்கொண்டிருந்தார். கன்னம் வீங்கி, அழுது அழுது கண்களும் முகமும் சிவந்து, 'ஸாரி ஒண்ணுமில்ல. வலி தாங்கல. அஞ்சு நிமிஷம் கழிச்சி முழுசா அழுதுட்டு வரேன். ப்ளீஸ் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க’ என்றார்.

வியட்நாம் வீடு நாடகத்தில், கணேசனின் ஜோடியாக சாவித்ரி மாமியாக பிரமாதப்படுத்தியவர் ஜி.சகுந்தலா. டிராமா சினிமா ஆகிறது என்றதும் தனக்கே வாய்ப்பு கிடைக்கும் என்று கனவு கண்டார். ஆனால், சிவாஜியின் சாய்ஸ் பத்மினி. 'அவருக்குதான் நட்சத்திர அந்தஸ்து இருக்கிறது. சினிமா வெற்றி பெற மார்க்கெட் உள்ள ஆர்ட்டிஸ்ட் ரொம்ப முக்கியம்’ என்று சகுந்தலாவுக்கு சந்தர்ப்பம் தரவில்லை. வேதனையோடு வீடு திரும்பினார் சகுந்தலா. பத்மினி அவருக்குப் பிராண சிநேகிதி. அவர் தனக்காக சிவாஜியிடம் சிபாரிசு செய்யாமல் போய்விட்டாரே என்கிற தீராத காயம், சகுந்தலாவுக்கு அவர் மறையும் வரையில் நீடித்தது.

6.jpg

சாவித்ரி மாமியாக பத்மினி, மடிசார் புடவை கட்டிக்கொண்டு 'பாலக்காட்டு பக்கத்திலே ஒரு அப்பாவி ராஜா’வுக்காகப் பாடி ஆடினார். வித்தியாசமாக, பிராமண பாஷை பேசி வியட்நாம் வீடு படத்தில் வலம் வந்தார். ஆனால், ஜி.சகுந்தலா அவரை விடச் சிறப்பாக நடித்ததாக, ரசிகர்கள் சிலர் பத்திரிகைகளில் எழுதினர்.

கணவர் ராமச்சந்திரனின் மருத்துவப் படிப்பு லண்டனில் முடிந்தது. அடுத்து அவரோடு பத்மினி அமெரிக்காவுக்குக் குடி போக வேண்டிய நிர்ப்பந்தம். கே.பாலாஜியின் எங்கிருந்தோ வந்தாள் படத்திலும், கே.எஸ்.கோபாலகிருஷ்ணனின் குறத்தி மகனிலும் தொடர்ந்து நடிக்க இயலாமல் போனது.

1971-ல் சிவாஜி - பத்மினி நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படம் பி.எஸ்.வீரப்பாவின் இருதுருவம். திலீப்குமார் - வைஜெயந்தி மாலா நடித்த ஹிந்தி சூப்பர் டூப்பர் கங்கா ஜமுனாவின் தமிழ் வடிவம். பொங்கலுக்கு வெளியாகி ஏனோ வெற்றிபெறாமல் போனது.

கே.எஸ்.கோபாலகிருஷ்ணனின் குலமா குணமா, சிவாஜி - பத்மினி ஜோடிக்கு மிகப்பெரிய வெற்றியைத் தேடித் தந்தது. அவர்களின் கடைசி 100 நாள் படம் அது. அதற்குப் பிறகு வெளியான தேனும் பாலும் படமும் வசூலாகியது. பத்மினியும் சரோஜா தேவியும் சிவாஜியோடு முதலும் கடைசியுமாக தேனும் பாலுமாகத் தோன்றினார்கள்.

1986-ல், சிவாஜியுடன் நிறைவாக தாய்க்கு ஒரு தாலாட்டு, லட்சுமி வந்தாச்சு என கை கோர்த்தார். புதிய பறவையில் ஒலித்தது விஸ்வநாதன் - ராமமூர்த்தியின் 'உன்னை ஒன்று கேட்பேன்’ பாடல். அதே மெட்டில், இசைஞானியின் கைவண்ணத்தில் 'பழைய பாடல்போல புதிய பாடல் இல்லை’ என டிஎம்எஸ் - பி.சுசிலா குரல்களில், தாய்க்கு ஒரு தாலாட்டில் சிவாஜி - பத்மினி ஜோடி வாயசைத்துப் பாடியது. அதுவே அவர்களின் கடைசி டூயட்!

ஏறக்குறைய 40 சினிமாக்களில் தமிழர்களின் வாழ்க்கையோடு ஒன்றிக் கலந்துவிட்ட, சிவாஜி - பத்மினி ஜோடியின் ஒப்பற்ற ஆற்றலை, தினந்தோறும் சின்னத்திரைகளில்  பார்க்கலாம்.

http://www.dinamani.com

Link to comment
Share on other sites

பத்மினி - 3. மன்னாதி மன்னனும்… காதல் மன்னனும்…

 


 

 

ணேசனுக்கு முன்பாகவே பத்மினிக்கு நன்கு அறிமுகமானவர் எம்ஜிஆர். ‘மோகினி’ சினிமாவில் நாட்டியம் ஆட, கோவை சென்ட்ரல் ஸ்டுடியோவுக்கு சென்றனர் திருவாங்கூர் சகோதரிகள். அந்த நொடி முதலே, எம்.ஜி.ஆர். -  பத்மினி நட்பு அரும்பு விட்டது.

எம்.ஜி.ஆர். பிரபலமாகி மிக நீண்ட காலம் கடந்தே, எம்.ஜி.ஆரின் நிழல் காதலி பத்மினி ஆனார். அவர்கள் இருவரும் இணைந்து நடித்த முதல் படம், 1956 ஏப்ரலில் வெளியான மதுரை வீரன். அதில் பத்மினி, வெள்ளையம்மாளாகத் தோன்றினார். மதுரை வீரனின் முதல் மனைவி பொம்மியாக பானுமதி நடித்திருந்தார். எம்.ஜி.ஆருடன் பானுமதி - பத்மினி இருவரும் இணை சேர்ந்தது, மதுரைவீரனுக்குப் புது மகத்துவத்தை ஏற்படுத்தியது. புரட்சி நடிகரின் முதல் வெள்ளிவிழாப் படம் என்கிற அந்தஸ்தைப் பெற்றுத் தந்தது.

 

madurai%20veeran.jpg மதுரை வீரன்

 

பத்மினி நாயகியாக நடித்த படங்களில் நாட்டியங்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் உண்டு. மதுரை வீரன், கிருஷ்ணா பிக்சர்ஸ் தயாரிப்பு. செலவைப் பற்றி சிறிதும் கவலைப்படாதவர் அதன் முதலாளி லேனா செட்டியார். அதில், பத்மினிக்கு மட்டுமல்லாமல் எம்.ஜி.ஆரின் முழங்கால்களுக்கும் வேலை சற்றுக் கூடுதல்.

‘உத்தமவில்லன்’ கமலுக்கு அறியாப் பருவத்தில் நடனத்தின் மீது ஆர்வத்தை ஏற்படுத்தியது, ‘ஏச்சிப் பிழைக்கும்…’ பாடலுக்கான எம்.ஜி.ஆர். - பத்மினியின் அங்க அசைவுகள்தான். அந்தக் காட்சிக்காகவே, மதுரை வீரனை மறக்காமல் நூறு நாள்களுக்கு மேல் பார்த்து ரசித்து, அதேபோல் பாதம் தூக்கி ஆடினார் பரமக்குடி கூத்தபிரான். கமலின் கலை வாழ்க்கைக்குப் பிள்ளையார் சுழி, மதுரை வீரனில் இருந்து மையம் கொண்டது.

அந்நாளில், எம்.ஜி.ஆரின் ஆஸ்தான டான்ஸ் மாஸ்டர் தங்கராஜ். மதுரை வீரனில் எம்.ஜி.ஆரும் – பத்மினியும் தனக்கு அளித்த ஒத்துழைப்பு குறித்து கூறியுள்ளார் –

‘பட்சிராஜா ஸ்டுடியோஸ் ஏழை படும் பாடு, பிரசன்னா படங்களின்போதே பத்மினிக்கு சினிமா நடனம் சொல்லித் தந்துள்ளேன். பத்மினி நல்ல டான்ஸர். அவரை மாதிரி பரதம் தெரிந்தவர்களுக்கு, ஒருமுறை சொல்லிக்கொடுத்தால் போதும். புரிந்துகொண்டு ஆடி பிரமாதப்படுத்திவிடுவார்கள்.

‘ஏய்த்துப் பிழைக்கும் தொழிலே சரிதானா எண்ணிப்பாருங்க…’ பாடலுக்கான ஒத்திகையில் நான் ஆடிக்காட்டியதும், இந்த மூவ்மென்ட் கஷ்டமாக இருக்கும்போலிருக்கிறதே’ என எம்ஜிஆர் முணுமுணுத்தார். பிறகு அவரே, ’எனக்குத்தானே பெயர் கிடைக்கும்; நானே முயற்சி செய்து ஆடிடறேன்’ என்று சொன்னபடியே நன்றாக ஆடினார். எம்.ஜி.ஆர். தயங்கியதுகூட, பத்மினியுடன் ஆடும்போது நம் ஆட்டம் அவருக்கு இணையாக இருக்க வேண்டும் என்றுதான்’.

எம்.எல்.வசந்தகுமாரியின் குரலில் ஒலித்த, 'ஆடல் காணீரோ...' சூப்பர் ஹிட் பாடலுக்கு பத்மினி ஆடிய திருவிளையாடல் நடனம், மிகப் பிரமாதமாகப் படமாக்கப்பட்டது. ஒப்பற்ற அந்த நாட்டியம், படத்தின் வேகமான ஓட்டத்துக்குத் தடையாக இருக்கும் என்று, எம்.ஜி.ஆர். அதை நீக்கி விடுமாறு சொல்லி விட்டார்.

செட்டியார், பப்பியின்  பரம விசிறி. அதேநேரத்தில், எம்.ஜி.ஆரின் உத்தரவை அவரால் உதாசீனம் செய்யவும் முடியவில்லை. யவ்வன பம்பரமாகச் சுழன்றாடும் பப்பியின் பாதங்களை விட்டுத்தர முடியாது என மனத்தின் குரல் கூவியது. ஹீரோவின் தயவும் தேவை. வேறு வழியின்றி, இடைவேளையில் தசாவதார பாடல் காட்சி காட்டப்பட்டது.

எம்.ஜி.ஆர். - பத்மினி ஜோடியாக நடித்த ஐந்தும் சமூகப்படங்கள் அல்ல. அத்தனையும் ராஜா - ராணி கதைகள். மதுரைவீரனுக்கு அடுத்து, மெர்ரிலாண்ட் ஸ்டுடியோ தயாரித்த ராஜராஜன், மன்னாதி மன்னன், ராணிசம்யுக்தா, விக்ரமாதித்தன் ஆகியவை மற்ற நான்கு படங்கள்.

டாக்டர் சீர்காழி எஸ்.கோவிந்தராஜன் - ஏ.பி.கோமளா ரேர் காம்பினேஷனில், ‘நிலவோடு வான் முகில் விளையாடுதே…’ பாடல் மட்டும் ராஜராஜனை ஞாபகப்படுத்துகிறது.

ராஜராஜனில் ஒரு விசேஷம். அண்ணன் - தம்பிகளான எம்.ஜி.சக்ரபாணியும் எம்.ஜி.ராமச்சந்திரனும், அக்கா - தங்கைகளான லலிதா, பத்மினியுடன் நடித்த ஒரே படம். ‘ஆடும் அழகே அழகு…’ எனத் தொடங்கும் பாடலுக்கு, லலிதா - பத்மினியின் நடனம் நிறைவாக இடம் பெற்றது. அதன்பின்னர், லலிதா திருமணமாகிச் சென்றுவிட்டார். மீண்டும் நடிக்க வரவில்லை.

1960-ல் ராஜா தேசிங்கு - எஸ்.எஸ்.ஆர்., 1961-ல் அரசிளங்குமரி - எம்.என்.நம்பியார், 1971-ல் ரிக்ஷாகாரன் - ஆர்.எஸ்.மனோகர் ஆகியோரது மனைவியாகவும் பத்மினி, எம்.ஜி.ஆர். படங்களில் நடித்துள்ளார். சகோதரி பத்மினியுடன் கடைசியாக நடித்த ராசியோ என்னவோ, ரிக்ஷாக்காரனுக்காக எம்.ஜி.ஆருக்கு சிறந்த நடிகருக்கான பாரத் விருது கிடைத்தது.

தனக்கு முக்கியத்துவம் தராத எந்த சீனிலும் தான் இடம் பெறுவதை எம்.ஜி.ஆர். அனுமதிக்கமாட்டார். நாயகன் வெறும் காட்சிப் பொருளாகக் காட்டப்படுவதை விரும்பாதவர். அவரது ஆரம்ப சினிமா நாள்களில், வசனம் பேசவும் வாய்ப்பு கிடைக்காமல் வதைக்கப்பட்டிருக்கிறார். முந்தைய உள்குத்துக் காயங்களின் எதிரொலியால், எப்போதும் எச்சரிக்கையாக இருப்பார். ஆனால், அதற்கு விதிவிலக்கு  மன்னாதி மன்னன்.

 

mannadhi%20mannan.jpg மன்னாதி மன்னன்  

 

கறந்த பால் போல் கொஞ்சமும் கலப்படமற்ற லதாங்கி ராகப் பாடல், ‘ஆடாத மனமும் உண்டோ…’

எம்.எல்.வசந்தகுமாரி - டி.எம்.சௌந்தரராஜன் குரல்களில் அது ஒரு கோமள கீதம்! கேட்கக் கேட்கத் திகட்டாத கானம் என்பார்களே அப்படி.

காட்சியைச் சற்றே மனத்தில் இருத்திப் பாருங்கள். பத்மினியும் எம்.ஜி.ஆரும் ஒருவரை ஒருவர் புகழ்ந்துகொண்டே பாடும், பப்பி அற்புதமாக ஆடும் அபிநயச் சித்திரம்! அதில் ஒரே இடத்தில் உதயசூரியன்போல் தகதகக்கும் திறந்த மார்போடு அமர்ந்து, எம்.ஜி.ஆர். வாத்தியம் வாசிக்க, அதற்கேற்ப பத்மினியின் பாதங்களும் ஒலிக்கும். புரட்சி நடிகர் எம்.ஜி.ஆரின் நூற்றுக்கான சினிமாக்களில், அவர் இதுபோல் வேறு எந்தப் படத்திலாவது சும்மா உட்கார்ந்து பாடியதை யாரும் பார்ப்பது துர்லபம்.

நாடோடி மன்னனுக்கும் மன்னாதி மன்னனுக்கும் ஒரே வசனகர்த்தா கண்ணதாசன். மன்னாதி மன்னனில், ‘அச்சம் என்பது மடமையடா…’ உள்ளிட்ட பெரும்பாலான பாடல்கள் அவர் எழுதியவை. ஆனால், ‘ஆடாத மனமும்…’ மட்டும், மருதகாசியின் கை வண்ணம். எத்தனை முயன்றும் கவிஞருக்கு வார்த்தைகள் சரியாக அமையாததால், மருதகாசியிடம் எழுதி வாங்கினர்.

வரலாறு காணாத நாடோடி மன்னனின் மகத்தான வெற்றி, மருதகாசியின் கன்னித்தமிழில் சீரும் சிறப்புமாக  மன்னாதி மன்னனில் திக்கெட்டும் ஒலித்தது. சிவாஜி கணேசனின் சிரஞ்சீவி ஜோடியான பத்மினியும் வேறு எந்த சினிமாவிலும், மக்கள் திலகத்தின் அங்க அழகை, ஆற்றலை வர்ணித்து இத்தனை எடுப்பாகப் பாடி ஆடியிருப்பாரா...  யாம் அறியோம்!

நாடெங்கும் கொண்டாடும் புகழ்ப் பாதையில்
வீரநடை போடும் திருமேனி தரும் போதையில்
ஆடாத மனமும் உண்டோ
ஈடேதும் இல்லாத கலைச் சேவையில்
தனியிடம் கொண்ட உமைக் கண்டும் இப்பூமியில்
ஆடாத மனமும் உண்டோ
பசும் தங்கம் உனது எழில் அங்கம்
அதன் அசைவில் பொங்கும் நயம் காணவே
ஆடாத மனமும் உண்டோ…


1960 தீபாவளி ரிலீஸின்போது, இப்பாடல் வரிகள் இல்லாத, மன்னாதி மன்னன் விளம்பரங்களை அன்றைய தமிழர்கள் பார்த்திருக்க இயலாது.

மன்னாதி மன்னனில் கவனம் ஈர்க்கும் இன்னொரு புதிய அம்சம், க்ளைமாக்ஸ். பத்மினியை பி.எஸ்.வீரப்பா தன் ஆசைக்கு இணங்கச் செய்யும் கட்டம். அவரிடம் அகப்பட்டுவிடக்கூடாது என்கிற தவிப்பில், அவஸ்தையான சூழலில் எம்.எல்.வசந்தகுமாரியின் போராடும் குரலில், வீரப் பெண் சித்ராவின் (பத்மினி) தன்மானத்தைப் பெருமிதத்துடன் கம்பீரமாக இசைக்கும்…

‘கலையோடு கலந்தது உண்மை கற்புக் கனலோடு பிறந்தது என் தமிழ் ஆளும் பெண்மை…’

பத்மினியின் நாட்டியத் திறமையை வெளிப்படுத்த கிடைத்த மாறுபட்டக் கதைக் களம். 25 ஆண்டுகளுக்குப் பின், டி.ராஜேந்தர் அதே போன்ற பாடல் காட்சியை தனது ‘மைதிலி என்னைக் காதலி’ படத்தில் பயன்படுத்திக்கொண்டார். அமலா ஆட ஆட ‘நானும் உந்தன் உறவை நாடுகின்ற பறவை…’ எஸ்.பி.பாலசுப்ரமணியம் குரலில் நெஞ்சைத் தொடும்.

எம்.ஜி.ஆருடன் குறைவாக நடித்தவர் பத்மினி. எல்லாரையும்போல் மக்கள் திலகத்தின் மனிதநேயம், அவரது உள்ளத்திலும் உரிமையோடு சிம்மாசனம் போட்டு உட்கார்ந்துவிட்டது. பத்மினியின் திருமணத்துக்கு முன்னே உருவான படம் ‘ராணி சம்யுக்தா’.

பிருதிவிராஜன், குதிரை மீதேறி விரைந்து வந்து சம்யுக்தாவைக் கவர்ந்து செல்ல வேண்டும். அந்தக் காட்சி எடுக்கப்படாமல் இருந்தது. பத்மினி அதை முடித்துத் தர வந்தபோது நிறை மாதக் கர்ப்பிணி. திரையில் அது தெரியாதபடி மறைத்துப் படமாக்குவது முக்கியம். எம்.ஜி.ஆர். அப்போது எப்படி நடந்துகொண்டார் என்பதை பத்மினியின் வார்த்தைகளில் வாசிக்கலாம்.

‘எம்.ஜி.ஆர். என்னை எப்போதும் ‘என்னம்மா தங்கச்சி, நல்லா இருக்கியா’ என்பார். நான் துணிச்சலாக குதிரை சவாரிக்குத் தயாரானேன். பிறகுதான் எம்.ஜி.ஆருக்கு விஷயம் தெரிந்திருக்கிறது. என்னைக் கடுமையாகக் கோபித்துக்கொண்டார். ‘உன் வயித்துல உள்ள பிள்ளைக்கு ஏதாவது ஆச்சுன்னா,  என்னம்மா நீ...?’ என்றார்.

கர்ப்பிணியை குதிரையில் எப்படி அழைத்துச் செல்வது, ஏதாவது பிசகாகிவிடுமோ என்று எம்.ஜி.ஆருக்கு ஒரே கவலை. தலையணையெல்லாம் வைத்து, பயப்படாதீங்க என்று எனக்கு தைரியம் சொல்லி, என்னை அந்த நிலையில் நடிக்கவைத்ததற்காக பட அதிபரைத் திட்டினார். புரொடியூசருக்கு வேறு வழியிருக்கவில்லை. ‘பாவம்! வயிற்றில் குழந்தையோடு இருக்கிறார். கஷ்டப்படுத்தாமல் காட்சியை எடுங்கள்’ என எச்சரிக்கை செய்தவாறே உடன் நடித்தார்’.

 

rani%20samyuktha.jpg ராணி யுக்தா

ராணி சம்யுக்தாவில் மட்டுமல்ல, ரிக்ஷாகாரனில் நடித்தபோதும் பத்மினியைப் புதிய சங்கடம் வாட்டியது. அப்போது, தனது ‘உலகம் சுற்றும் வாலிபனு’க்காக எம்.ஜி.ஆர். அயல்நாட்டுப் பயணத்தில் இருந்தார். கழக இடைத்தேர்தல்கள் என அனைத்து நொடிகளிலும் நேரம்போல் இயங்கினார். இடையில், பத்மினிக்கு அவருடைய கணவரிடமிருந்து குடித்தனம் நடத்த அமெரிக்காவிலிருந்து அழைப்பு வந்து விட்டது.

 

 பத்மினிக்குப் பதற்றம் அதிகரித்தது. எம்.ஜி.ஆர். இருக்கிற பிஸியில், அவர் ஒத்துழைக்க நினைத்தாலும் அரசியல் குறுக்கிடுமே என்கிற தவிப்பு கூடியது. குறித்த காலத்தில், பத்மினி அவரது கணவரைச் சென்று சேர வேண்டும் என்பதற்காக, எம்.ஜி.ஆர். தன் மற்ற இயக்கங்களை ஒத்திவைத்துவிட்டு, இரவு பகலாகத் தொடர்ந்து பத்மினியோடு நடித்துத் தீர்த்தார். அதோடு மட்டுமல்ல, பத்மினி முன்னிலையில் வாத்தியாராகி மஞ்சுளாவுக்கும் மகிழ்ச்சியோடு பாடம் நடத்தினார்.

‘எங்க தங்கச்சியைப்  பார்! ஒத்திகைன்னாலும்கூட, டேக் மாதிரி எவ்வளவு கரெக்டா செய்யறாங்க பார். இதைப்போல நடிக்க நீயும் கத்துக்கணும்’.

பத்மினிக்கு 27 வருடங்களுக்கு மேலாக அரிதாரம் பூசியவர் மேக்அப்மேன் தனகோடி. அவரை அம்போ என்று விட்டுவிட்டு அமெரிக்காவுக்குப் போவதில் பத்மினிக்கு சம்மதம் கிடையாது. எம்.ஜி.ஆரிடம் சொன்னால் ஏதாவது அதிசயம் நடக்கும் என்ற நம்பிக்கை. தனகோடியின் எதிர்காலப் பிழைப்பு குறித்து தன் வருத்தத்தை வெளியிட்டார்.  

சினிமா எஜமானர்களை எதிரிகளாகப் பாவிப்பது எம்.ஜி.ஆரின் வழக்கம். தொழிலாளிகளிடம் தனிப் பிரியம் காட்டுவதே தலைவரின் ஸ்டைல். பத்மினி விஷயத்திலும் அது நிரூபணமானது. தன்னுடைய புதிய ஜோடியான லதாவுக்கு தனகோடியை மேக்அப்மேனாக எம்.ஜி.ஆர். நியமித்தார்.

எவ்வளவுதான் தோண்டித் துருவினாலும், எம்.ஜி.ஆர். - பத்மினி சமாசாரம் இவ்வளவுதான். அதற்காக, வாத்தியாருடைய ரத்தத்தின் ரத்தங்கள் வருத்தப்பட வேண்டாம். சரோவைப் பற்றி எழுதும்போது எம்.ஜி.ஆர். புராணம் சரளமாக நீளும்.

*

அடுத்து, காதல் மன்னனை கவனிக்கலாம்.

எம்.ஜி.ஆர்., சிவாஜிக்கு முன்னரே பத்மினியோடு அதிக அன்யோன்யம் கொண்டவர் ஜெமினி கணேசன். பத்மினி - ஜெமினியின் நட்புக்குக் களம் அமைத்துத் தந்தவை, வாசனின் ஜெமினி ஸ்டுடியோவும், பத்மினியின் மயிலாப்பூர் வீடும்.

 ஜெமினி - பத்மினி இருவரும் நட்சத்திரங்களாக ஆவோமா எனச் சிந்திக்காத அறியாப் பருவம். தோழமை அவர்களைத் துரத்தியது. லல்லி, பப்பி இருவரையும் ஏற்றிக்கொண்டு சைக்கிளில்  ட்ரிபிள்ஸ் போவதென்றால் ஜெமினிக்கு இரட்டிப்பு சந்தோஷம். திருவிதாங்கூர் சகோதரிகளுக்கு மிதிவண்டி பழகக் கற்றுத்தந்தவர் ஜெமினி கணேசன்.

பத்மினி, உலக நாட்டியப் பேரொளியாக வருவார் என்கிற பகல் கனவெல்லாம் அன்று ஜெமினிக்குக் கிடையாது. அவர் நேசம் பாராட்டிய பப்பி, சின்னப் பெண். அவரோடு சேர்ந்து சினிமாவில் டூயட் பாடுவோம் என்றெல்லாம் காதல் மன்னன் நினைக்கவே இல்லை. ஜெமினியின் வசீகர வாலிபம், விரைவில் அவரை ஹீரோவாக்கிவிடும் என்று சிறுமி பத்மினி எண்ணியது நடந்தது. 

ஜெமினிக்கு இயல்பாகவே கிரிக்கெட்டில் ஆர்வம் உண்டு. ஐம்பது அறுபதுகளில், வட இந்தியக் கலைஞர்களுடன் சென்னையில் ஸ்டார் கிரிக்கெட் மேட்ச் நடக்கும். ஜெமினி கேப்டனாகி வழிகாட்டுவார். பத்மினியின் வீட்டில் நெட் ப்ராக்டீஸ் நடைபெறும். பத்மினி உள்ளிட்ட நட்சத்திரங்களுக்கு கிரிக்கெட் கெய்டு ‘சாம்பார்’தான்.

ஜெமினியோடு பத்மினி முதன்முதலாக நடித்தது ஆசா தீபம் என்கிற மலையாளப் படம். தமிழிலும் ஆசைமகன் என்ற பெயரில் வெளியானது. நிஜ வாழ்வின் பிரியமான தோழி, அதில்  வில்லியாகத் தோன்றினார். ஆசை மகன் படத்தில் பப்பி மீது கத்தி வீச வேண்டிய துர்ப்பாக்கியம் ஜெமினிக்கு. ரிகர்சல் பார்த்தார்கள். ஜெமினி கத்தியை வீச, யாரும் எதிர்பாராத நிலையில் கதவைத் திறந்துகொண்டு பத்மினி வந்துவிட்டார். ஜெமினி வீசிய கத்தியை தன் கையாலேயே பத்மினி பிடித்ததில், பப்பியின் கையில் வெட்டுப்பட்டு குருதி வழிந்தது.

ரத்தப்பூக்களின் வாசத்தில் அவர்களின் கலைப்பயணம் தொடங்கியது. சிவாஜி - பத்மினியை வைத்து அன்பு என்ற படத்தைத் தயாரித்து இயக்கியவர் நடேசன். அவரது நடேஷ் ஆர்ட் பிக்சர்ஸ், 1956-ல் ஜெமினி - பத்மினியை ஆசை படத்தில் முதன்முதலாகக் காதல் ஜோடியாக்கியது. ஜெமினி தன் ‘ஆசை’நாயகியை பாப்ஸ் என்று அழைக்கத் தொடங்கினார்.

ஆசையைவிட, 1957-ல் சிட்டாடல் நிறுவனத்தில் உருவான ‘மல்லிகா’, ஜெமினி - பத்மினி இணைக்கு முதல் வெற்றிச்சித்திரம்! மங்கையர்திலகத்துக்குப் பின் மதுரைவீரனைவிட, மல்லிகாவில் பத்மினியின் நடிப்பு பர்ஸ்ட் க்ளாஸ் எனப் பத்திரிகைகள் ஒரே குரலில் உரத்துக் கூறின. அதில் இடம் பெற்ற ‘நீலவண்ணக் கண்ணனே உனது எண்ணமெல்லாம்…’, ‘வருவேன் நான் உனது மாளிகையின் வாசலுக்கே…’ ஆகியவை சூப்பர் ஹிட் பாடல்கள்.

ஜெமினி ஸ்டுடியோவின் பிரம்மாண்டமான கருப்பு வெள்ளைச் சித்திரம் வஞ்சிக்கோட்டை வாலிபன். எம்.ஜி.ஆரை வைத்துத் தயாரிக்க வாசன் முடிவு செய்தார். நாடோடி மன்னனில் எம்.ஜி.ஆர். தீவிர கவனம் செலுத்திய நேரம். வாசனுக்கு அவரது கால்ஷீட் கிடைக்காமல் போனது. பின்னர் ஜெமினி கணேசன் அதில் ஹீரோ ஆனார். அப்படியும் பாஸ் திருப்தி அடையவில்லை. ரொமான்டிக் காதலன், ஆக்ஷன் ஹீரோவானால் ஜனங்கள் படம் பார்க்க வர வேண்டுமே.

 

vanjikottai%20valiban.jpg வஞ்சிக்கோட்டை வாலிபன்

 

தன் படத்துக்கு ஒரு தனித்தன்மையை வேண்டி அன்றைய மிகப்பெரிய நாட்டியத்தாரகைகளாகவும், அகில இந்திய நட்சத்திரங்களாகவும் இருந்த பத்மினி, வைஜெயந்திமாலா இருவரையும் நாயகிகளாக நடனமாடவிட்டார். ஒரே சமயத்தில் தமிழ், ஹிந்தி (ராஜ் திலக்) இரண்டிலும் அதே கலைஞர்களுடன், செலவைப் பார்க்காமல் உருவாக்கினார். ரசிகர்களின் ஆர்வத்தீ கொழுந்துவிட்டு எரிந்தது. கூடுதலாக, எல்லோரையும் வாயைப் பிளக்கச் செய்யும் வகையில்,  பாதங்களால் அனைவரின் நெஞ்சங்களிலும் என்றுமே அழியாத பரவச கோலத்தை அள்ளித் தெளித்தார்.

வஞ்சிக்கோட்டை வாலிபனின் ‘கண்ணும் கண்ணும் கலந்து...’ என்கிற போட்டி நடனம், பத்மினியின் கலைவாழ்வில் நிச்சயம் ஒரு காலப் பெட்டகம்! ஏறக்குறைய, ஒன்பது நிமிடங்கள் பத்மினியும் - வைஜெயந்தியும் ஆடிய ‘சாதூர்யம் பேசாதடி என் சதங்கைக்குப் பதில் சொல்லடி…’ நூற்றாண்டுகள் கடந்தும் ஜீவிக்கும். அப்பாடல் காட்சி படமாக்கப்பட்டபோது, பத்மினியின் முட்டி பெயர்ந்துவிட்டது. குருதி கொப்பளிக்கும் பத்மினியின் அனுபவத் தடம் இது.

‘படப்பிடிப்புத் தளம், காலை நான்கு மணிக்கே விளக்குகள் அமைத்துத் தயாராகிவிடும். எப்போதும் ஆடத் தயாராக இருக்க வேண்டும். அதனால் மேக்கப்பை  கலைக்காமல் ஜரிகைப் புடைவையும் நகைகளுமாக நாள் முழுதும் அமர்ந்திருப்போம். சற்று நீளமான பாடல். உண்மையிலேயே சவாலாக இருந்தது. காட்சிகள் வேகவேகமாக மாறும். ‘பார்க்கும் ரசிகர்கள், சலித்துக்கொள்ளவே கூடாது. ஒவ்வொரு இடத்திலும் டெம்போ கொஞ்சமும் குறையாமல் ஆட வேண்டும்’ என்று வாசன் சொல்லிவிட்டார்.

‘எஸ்.எஸ்.வாசன் மிகப்பெரிய டைரக்டர். சமயோசிதம் தெரிந்தவர். திருப்தி ஏற்படுகிற வரையில் ஷாட் முடியாது. ஷாட் எடுத்து முடிந்ததும், தன்னுடைய உணர்ச்சிகளை வெளியே காட்டமாட்டார். அவரிடமிருந்து கட், ஓகே என்று எந்த வார்த்தையும் வராது. ‘இதை மறுபடியும் ஒரு தரம் எடுத்துப் பார்க்கலாமே’ என்பார். முழுத் திருப்தி ஏற்படுகிறவரையில் என்னையும், வைஜெயந்தியையும் வைத்துத் தொடர்ந்து வேலை வாங்கினார்.

‘நீங்கள் பார்க்கும்போது நானும் வைஜெயந்தியும் சேர்ந்து ஆடுவதுபோலக் காட்சிகள் வரும். நிஜத்தில், பெரும்பகுதி காட்சிகளைத் தனித்தனியே எடுத்தார்கள். சிலவற்றை மட்டும், ஒன்றாக ஆடுவதுபோல் படமாக்கினார்கள். அவர் எப்படி ஆடினார் என்று எனக்குத் தெரியாது. நான் எப்படி ஆடினேன் என்பதையும் வைஜெயந்தி அறியவில்லை. 

‘சாதூர்யம் பேசாதடி என்கிற வரிகள் ஒலிப்பதற்கு முன் நான் முட்டி போட்டு ஆடுவேன். அவ்வாறு தரையில் அங்கும் இங்கும் ஆடியபோது, முழங்காலில் இருந்து ரத்தம் தெரித்தது. இடையில் நிறுத்தினால், மீண்டும் அத்தகைய வேகமான அங்க அசைவுகள் அமையாமல் போகலாம். எனவே, வலியைப் பொறுத்துக்கொண்டு சுழன்று சுழன்று ஆடி முடித்தேன். ஆர்வக்கோளாறில், ரத்தம் ஒரு பொருட்டாகத் தெரியவில்லை.

‘மொத்தக் காட்சியையும் எடுத்து முடிந்ததும் அப்பாடா என்றிருந்தது. படத்தில் பார்த்தபோது ஒரே பிரமிப்பாகத் தோன்றியது. அத்தனை ஜோராக அமைந்துவிட்டது.

‘இந்தக் காட்சியையொட்டி எங்கள் இருவருக்குமே ஒரு போட்டி இருந்தது. பிரமாதமாக ஆட வேண்டும் என்ற ஆர்வம் அதிகமானது. செட், ஜோடனை, எங்களது உடை, நகைகள், மேக்கப் எல்லாவகையிலும் ஒரு சவால் பரவியிருந்தது. ஒருவருக்கொருவர் தோல்வி – வெற்றி இல்லாமல் ஈடு கொடுத்தோம்.

‘படம் வெளிவந்தபோது, அந்த நடனத்தை மக்கள் எனக்கும் வைஜெயந்திக்குமான உண்மையான போட்டியாகவே எண்ணிக்கொண்டார்கள். யார் முந்திக்கொள்வார்கள் என்று நாற்காலியின் நுனிக்கே ரசிகர்கள் வந்து விடுவார்கள்’.

ஏறக்குறைய ஆட்டம் பூர்த்தியாகும் தருணம். பத்திரிகையாளர் நாரதர் ஸ்ரீனிவாசராவிடம் நயமாகக் கூறப்பட்ட விஷயம், ‘போட்டியின் முடிவில் பத்மினி தோற்பதாகக் காட்டக்கூடாது. நாரதர் ஸார்! உங்க பாஸ்கிட்ட கண்டிப்பா சொல்லிடுங்க. எங்க பப்பி எவ்வளவு பெரிய டான்ஸர் என்பது உங்களுக்கே தெரியும்.அவள் தோல்வி அடைவதாகக் காட்டினால், அவளுடைய பெயர் கெட்டுப்போகும் ஆமா! அவள் ஜெயிக்காமல் போவதாக நீங்கள் எடுப்பதானால், பப்பி ஷூட்டிங் வரமாட்டாள்’ - தாயார் சரஸ்வதி அம்மாள், சர்ச்சையைக் கிளப்பினார்.

சரஸ்வதி அம்மாளுக்குக் கொஞ்சமும் சளைத்தவரில்லை, வைஜெயந்தியின் வளர்ப்புப் பாட்டி யதுகிரி. ‘எங்க பாப்பா தோற்பதாகக் காட்டக்கூடாது’.

நாரதர்,  நடந்ததை முதலாளியிடம் விளக்கினார். இரண்டு நாள்கள் படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டார் வாசன். திரைக்கதையில் லேசான மாற்றம். பத்மினியும் வைஜெயந்தியும் ஆக்ரோஷமாக ஆடிடும் நிலையில், சபாஷ் சரியான போட்டி என்பார் பி.எஸ்.வீரப்பா. சில நிமிடங்களில் யாருக்கு வெற்றி என்பது தெரிவதற்குள், ஜெமினி விளக்கை அணைத்துவிடுவதாகக் காட்சி முடியும்.

தென் இந்தியாவில் வஞ்சிக்கோட்டை வாலிபனில் பத்மினியின் பெயரும், வடக்கில் ராஜ்திலக்கில் வைஜெயந்தியின் பெயரும் டைட்டிலில் முதல் இடம் பிடித்தன.

1959-ல் வீரபாண்டிய கட்டபொம்மன். அதில் பப்பியின் அறிமுகக் காட்சி ஏக அமர்க்களம். ‘அஞ்சாத சிங்கம் என் காளை…’ என ஆடல் பாடலுடன் களை கட்டும். பத்மினியின் தலை அலங்காரமும், காஸ்ட்யூம்களும் மகளிரால் மறக்கமுடியாது. பத்மினி, ஜெமினியின் மனைவியாக, அவரைப் போருக்கு அனுப்ப அஞ்சி, ‘போகாதே போகாதே என் கணவா, பொல்லாத சொப்பனம் நானும் கண்டேன்…’ என்று காண்பவர்களையும் அழவைப்பார். ‘இன்பம் பொங்கும் வெண்ணிலா’வுக்கும் ஒரு வரலாறு உண்டு. ஜெமினிக்காக பி.பி.ஸ்ரீனிவாஸ் பாடிய முதல் டூயட் அது.

1960-ல், ஸ்ரீதரின் மீண்ட சொர்க்கத்தை யாரால் மறக்க முடியும்! அதில், பரதக்கலைக்காகவே தன்னை அர்ப்பணித்துக்கொள்ளும் அதி அற்புதமான நிர்மலா என்கிற வேடம் பத்மினிக்கு. திரையில் பத்மினி தெரியவில்லை. நிர்மலாவே யாதுமாகி நின்றாள். ஜெமினி அவரை நாட்டியத்தில் நெறிப்படுத்தும் காதலனாக நடிப்பில் சிகரம் தொட்டார். தொழில்நுட்ப ரீதியில் மிகச்சிறந்த படமாக உருவான மீண்ட சொர்க்கம், வர்த்தக ரீதியில் தோல்வி.
 

meenda%20sorgam.jpg மீண்ட சொர்கம்  

 

‘மன நாட்டிய மேடையில் ஆடினேன்
கலை காட்டிய பாதையில் வாடுகிறேன்…’


என்கிற கண்ணதாசனின் காவிய சோகமும், டி.சலபதிராவின் தனிமை ஏக்கம் த்வனிக்கும் மெல்லிய சிற்றோடை இசையும், பி.சுசிலாவின் உருக்கமான குரலில் இழையோடும் பிரிவின் தேய்மானமும், பத்மினியின் சித்திரப்பாவை நடிப்பும்... மீண்ட சொர்க்கத்தில் காலக் கரையான் அரிக்காமல் இன்னமும் மிச்சம் இருக்கின்றன. கோடிக்கணக்கான உலகத் தமிழச்சிகளது நெருக்கடியான இரவுகளில், துன்பத்தின் நீளத்தைக் குறைக்கும் இதமான மயிலிறகு ஸ்பரிசம் அப்பாடல்!

1966 சித்தியில், பத்மினியின் கண்ணியமான காதலனாக வந்தவர் ஜெமினி. அதற்குப் பிறகு ஜெமினி - பத்மினி ஜோடி நடித்த படங்கள்,  எதிர்காலம், திருமகள், தேரோட்டம், அப்பா டாட்டா ஆகியவை. அவை ஒவ்வொன்றும் மாறுபட்ட கதைகளைச் சொன்னபோதும், மக்களின் வரவேற்பைப் பெறவில்லை.

அவற்றில், மல்லியம் ராஜகோபாலின் படைப்பான ‘அப்பா டாட்டா’, மிக வித்தியாசமானது. பெற்ற குழந்தையை மனைவி சரியாகக் கவனிப்பதில்லையோ என்கிற சஞ்சலத்தில் உழலும் கணவனாக ஜெமினியும், அதனால் ஏற்படும் கோபதாபங்களால் நிஜமாகவே பிள்ளையைத் தொலைத்துவிடும் மனைவியாக பத்மினியும் வருவதாகக் காட்சிகள் பின்னப்பட்டிருக்கும். மிக காலதாமதமாக வெளிவந்து மக்கள் மனத்தில் பதியாமல் போனது.

அதில், பி.சுசிலாவின் குரலில் ஒலித்த தாலாட்டு -

‘கிண்ணத்தில் தேன் எடுத்து எண்ணத்தால் மூடி வைத்தேன்
என்னவோ இறைவனுக்கு என்னிடத்தில் கருணை இல்லை…’


என்கிற கண்ணதாசனின் சூப்பர்ஹிட் பாடல், எத்தனை பேருக்கு இன்று நினைவில் நிற்கும்!

பீம்சிங்கின் காலத்தை வென்ற பா வரிசைப் படங்களின் கதை ஆசிரியர் எம்.எஸ்.சோலைமலை. அவர் முதன்முதலாகத் தயாரித்து இயக்கிய படம், எதிர்காலம். அதில், பத்மினிக்கு சேரியில் வசிக்கும் ரவுடிப் பெண் வேடம். அதற்காக ரிக்ஷா ஓட்டவும், மெட்ராஸ் பாஷை பேசவும் பயிற்சி எடுத்துக்கொண்டார்.

விமரிசனம் எழுதிய தமிழகத்தின் பிரபல முன்னணி வார இதழ் -

‘பத்மினியைப் பற்றி உயர்வாக நினைத்துக்கொண்டிருப்பவர்கள் இந்தப் படத்துக்குப் போனால், மிகுந்த மனக்கஷ்டத்துக்கு உள்ளாகக்கூடும்’ என்று எழுதியது.

மெர்ரிலாண்ட் சுப்ரமணியத்தின் குமாரசம்பவம் என்ற  மலையாளப் படத்திலும் பரமசிவனாக ஜெமினியும், பார்வதியாக பத்மினியும் நடித்திருக்கிறார்கள். பாலமுருகனாக நின்றவர் ஸ்ரீதேவி.

http://www.dinamani.com

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எவ்வளவுதான் தோண்டித் துருவினாலும், எம்.ஜி.ஆர். - பத்மினி சமாசாரம் இவ்வளவுதான். அதற்காக, வாத்தியாருடைய ரத்தத்தின் ரத்தங்கள் வருத்தப்பட வேண்டாம். சரோவைப் பற்றி எழுதும்போது எம்.ஜி.ஆர். புராணம் சரளமாக நீளும். ....!

என்னடா எம்.ஜி.ஆர்.... பத்மினி  பற்றி ஒரு வார்த்தை கூட கூறாமல் போறாரே என்று மணக் கஸ்டமாய் இருந்தது. ஹா...ஹா...ஹா... மகிழ்ச்சி ....! tw_blush: 

அவர்களின் ஒரு படம் நூறு படத்துக்குச் சமம்.  ராணி சம்யுக்தா   நாங்கள் நாடகமே நடித்தோம்.சம்யுக்தாவாக ஒரு பெண் நடித்திருந்தார். போருக்குப் போகும் கணவனை காலைப்  பிடித்து கதறி அழுது நடித்த நடிப்பில் நிறையவே வசூலானது . நாங்கள் குந்தியிருந்து கதைக்கிற திண்ணை ஒரு சல்லி செலவில்லாமல் கட்டினோம் ....!  tw_blush:

Link to comment
Share on other sites

பத்மினி - 4. சிவாஜி ஏன் உசத்தி?

 


 

சிவாஜியுடன் நீங்கள் அதிகம் இணைந்து நடித்ததற்குக் காரணம், உங்களுக்கும் அவருக்கும் இருந்த நட்பா, இல்லை உங்கள் இருவரின் நடிப்பாற்றலா?

இந்தக் கேள்விக்கான பதிலை வெவ்வேறு சந்தர்ப்பங்களில் பல நேர்காணல்களில் பகிர்ந்துகொண்டிருக்கிறார் பத்மினி. இனி வருவது அவற்றின் தொகுப்பு. இதில் ஒவ்வொரு சொல்லும் பப்பிக்கே சொந்தம்.

‘நான் மறக்கமுடியாத ஒருவர் சிவாஜி. கணேஷ் நடிகராக மட்டுமின்றி என் தனிப்பட்ட வாழ்க்கையிலும் ரொம்பவே அக்கறையானவர். பப்பியம்மா என்றுதான் என்னை அழைப்பார். உற்சாகமான மூடில் இருந்தால், பேப் என்று அழைப்பார். நான் நன்றாகத் தமிழ் பேச ஆரம்பித்ததே சிவாஜியால்தான்.

1959-ல் நெப்டியூன் ஸ்டுடியோவில் தங்கப்பதுமை படம் எடுத்தார்கள். ஏ.எஸ்.ஏ.சாமி டைரக்டர். அதில் வரும் ‘ஈடற்றப் பத்தினியின் இன்பத்தைக் கொன்றவன் நான்...’ என்ற பாடல், அப்போதே பரபரப்பாகப் பேசப்பட்டது. அந்தப் பாட்டினூடே நான் கண் பறிக்கப்பட்ட நிலையில் இருக்கும் என் கணவரைப் பார்த்து, ‘அத்தான் உங்கள் கண்கள் எங்கே அத்தான்?’ என்று வீறிட வேண்டும்.

 

padmini.jpg  

 

காட்சி விளக்கப்பட்டதும், நான் ரிகர்சல் எதுவுமின்றி கதறி அழுது நடித்தேன். அப்படி ஒரு சம்பவம் எனக்கே நேர்ந்தது போலான நடிப்புக்குள் நான் ஆழ்ந்துபோனேன். யதார்த்த நிலைக்கு வர சில விநாடிகள் பிடித்தது. சீன் முடிந்ததும், ‘நடிச்ச மாதிரியே தெரியல. ரொம்ப இயல்பா இருந்தது பப்பி’ என்று சிவாஜி பாராட்டினார்.

சிவாஜியிடமிருந்து இலேசில் பாராட்டு வாங்கிவிட முடியாது. அவரே பாராட்டிய பிறகு அதற்கு ஈடான பாராட்டு வேறு எதுவும் இருக்கமுடியாது.

அவருடன் நடிப்பதே ஒரு தனியான அனுபவம். சிவாஜி ஒரு பிறவி நடிகர். கணேஷைப்போல ஒரு நொடியில் முகபாவங்களை மாற்றிக்கொள்ளவோ, உணர்ச்சியைப் பொழிந்து வசனம் பேசவோ யாராலும் முடியாது. நான் ஒரு நல்ல நடிகை என்று பெயர் வாங்கியதற்கு, சிவாஜியுடன் நடித்த படங்களில் பெற்ற பயிற்சியே காரணம்.

‘நான் நாடகத்தில் நடித்துத் தேர்ச்சியுற்று முன்னுக்கு வந்தவன். நீ  மேடையில் பாவனைகளைக் காட்டக் கற்று பெயர் பெற்றவள். உனக்குச் சொல்லிக் கொடுப்பதில் எனக்கு என்ன சிரமம்?’ என்பார். நான் நடிக்க வேண்டியவற்றை அவரே நடித்தும் காட்டுவார். எங்களுக்குள் நடிப்பில் ஒரு போட்டிகூட இருக்கும். என்னால் முடிந்தவரையில் அவருக்கு ஈடு கொடுத்திருக்கிறேன்.

பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகள், சிவாஜி படங்களில் அதிகம் இருந்தது. மேலும் நடிப்புத் தொழிலில் என் தாயார் சொன்னபடிதான் பட ஒப்பந்தங்கள் அமையும். நடிகர் திலகத்தோடு  நாற்பதுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளேன். அரை நூற்றாண்டுக்கும் மேலாக அவர் எனக்குப் பழக்கமானவர். இந்த இரண்டையுமே பெருமையுடனும் மகிழ்ச்சியுடனும் நினைத்துக்கொள்வேன்.

சம்பூர்ண இராமாயணம் ஷூட்டிங்குக்காக நாங்கள் ஒகேனக்கல் போயிருந்தோம். இதில் சிவாஜி பரதனாக நடித்ததை ராஜாஜியே பார்த்துப் பாராட்டி இருக்கிறார். கணேஷுக்கு வேட்டை என்றால் ரொம்பப் பிரியம். எங்கேயாவது ஒரு சிறு சான்ஸ் கிடைத்தால் கிளம்பிவிடுவார். காடுகள் நிறைந்த மலைப்பாங்கான இடமான ஒகேனக்கல்லில் நாங்கள் விடுதியில் தங்கி இருந்தோம்.

இரவு பன்னிரெண்டு மணி இருக்கும். கதவை யாரோ தட்டும் சத்தம் கேட்டது. எனக்குப் பயமாகப் போயிற்று. எழுந்து மெதுவாகக் கதவைத் திறந்தேன். வெளியே சிவாஜி நின்றுகொண்டிருந்தார்.

‘என்ன விஷயம்?’ என்று கேட்டேன். ‘பப்பி! உனக்கு ஒரு ப்ரஸண்ட்’ என்று தன் கையில் இருந்த பையில் கையை விட்டார். வெளியே வந்தது ஒரு அழகான சிறு முயல் குட்டி!

சிவாஜியோடு நடிப்பதற்கு அவர் மீது செலுத்தும் அன்பும் நட்பும் மட்டும் போதாது. அவரோடு ஈடுகொடுத்து நடிக்க வேண்டும். அது அவ்வளவு எளிதல்ல. ‘இதைவிடச் சிறப்பாக உன்னால் நடிக்க முடியும். உன்னுடைய திறமை எனக்கு நன்றாகத் தெரியும் என்றெல்லாம் சொல்லிச் சொல்லி, பிரமாதமாக நடிக்க வைப்பார்.

நான் எப்படி நடித்தால் நன்றாக வரும். இன்னும் அதை எவ்விதம் வளர்த்துக்கொள்வது என்பதெல்லாம் அவர்தான் சொல்லித் தருவார். இல்லாவிட்டால், அன்று என் வயதுக்கு மீறிய வேடங்களில் என்னால் நடிகர் திலகத்தோடு நடித்திருக்க முடியுமா?

சிவாஜி ரொம்ப பங்க்சுவலாக, காலை ஏழு மணிக்கெல்லாம் செட்டில் நடிக்க வந்துவிடுவார். என்னைப் போன்ற ஹீரோயின்கள், மேக் அப் செய்துகொண்டு வர நேரமாகும். சில சமயம், நான் பத்து மணிக்குத்தான் தயாராக முடியும். அதுவரைக்கும் கணேஷ் பொறுமையாக இருப்பார். இதுவே எனக்கு வெட்கமாகக்கூடப் போய்விடும்.

 

sivaji.jpg  

 

சிவாஜி, சேர்ந்தாற்போல் ஒரு டஜன் படங்களில் நடித்துக்கொண்டிருப்பார். அவற்றில் அதிகமாக அவரோடு நானும் பங்கு பெறுவேன். ஒரு சினிமாவுக்கும் இன்னொரு சினிமாவுக்கும் கொஞ்சமும் குழப்பம் இல்லாமல், கணேசன் வசனம் பேசுவதையும், நடிப்பை மாற்றிக்கொள்வதையும் பார்க்கும்போது எனக்குப் பிரமிப்பாக இருக்கும்! உலகத்திலேயே மிகச்சிறந்த கலைஞர் நடிகர் திலகம். அதைப்பற்றி இரண்டு கருத்துகள் இருக்கமுடியாது.

கெய்ரோவில் நடந்த ஆசிய-ஆப்பிரிக்கத் திரைப்பட விழாவுக்கு வீரபாண்டிய கட்டபொம்மன் படம் அனுப்பிவைக்கப்பட்டது. அதையொட்டி, சிவாஜியுடன் நானும் ராகினியும் அம்மாவும் போயிருந்தோம்.

‘புகழ் பெற்ற நடிகர்கள் ஒமர் ஷெரீப்போல் உலகின் பல பாகங்களில் இருந்தும் வந்திருந்தார்கள். சிறந்த நடிகர் என்ற மரியாதை யாருக்குக் கிடைக்கப்போகிறதோ...? என எல்லாரும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருந்தார்கள். பரிசு, சிவாஜி கணேசனுக்குத்தான்  என்று அறிவிக்கப்பட்டபோது, எங்களுக்கெல்லாம் ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது. சிவாஜி கணேசன் அந்த சந்தோஷத்தைத் தாங்கமுடியாமல் உருகிப்போனார். என்னால் இந்தியாவுக்கு இவ்வளவு பெரிய கௌரவமா... என் உடம்பெல்லாம் சிலிர்க்குது’ என்று உணர்ச்சிவசப்பட்டார்’.

சிவாஜியிடம் நான் கற்றுக்கொண்ட விஷயங்கள் பல. பொறுமையுடன் அதிக தடவை சொல்லிக் கொடுப்பார். அதில் திருப்தி அடையும்வரையில் விடமாட்டார். நடிப்பு நன்றாக இருந்தால் உடனே பாராட்டுவார். சரியாக இல்லையென்றால் டைரக்டரிடம் சொல்லி, மீண்டும் எடுக்கச் சொல்வார். சிவாஜியால் நடிக்க முடியாத ரோல் எதுவும் கிடையாது. ஆனால் அதைச் செய்வதற்கு முன் அவர் பர்ஃபெக்டாக இருக்க வேண்டும் என்று முழு முயற்சி எடுத்துக்கொள்வார்.

சென்னைக்கு எப்போது வந்தாலும், நான் சிவாஜியைச் சந்திப்பது வழக்கம். ஒரு நாளாவது அவர் வீட்டுக்குப் போய்ச் சாப்பிட்டுவிட்டு வருவேன். 1979-ல், டிசம்பர் சீசனில் மியூசிக் அகாடமியில் என்னுடைய ராமாயணம் நாட்டிய நாடகம் இரண்டு நாள்கள் நடந்தது. நிகழ்ச்சிக்கு மனைவி கமலா அம்மாளோடு அவர் வந்திருந்தார்.

ஒரு ஆள் உயரத்துக்கு ரொம்பப் பெரிய மாலை ஒன்றைத் தூக்க முடியாமல் எடுத்துக்கொண்டு வந்து, ஸ்டேஜில் என்னை கௌரவித்துப் போட்டார். அவர் வரப்போவது எனக்குகூடத் தெரியாது. ப்ளசன்ட் சர்ப்ரைஸ் ஆக இருக்க வேண்டும் என்று யாருக்கும் சொல்லாமலே வந்தாராம். பத்மினி இப்ப நடிக்கிறதுகூட இல்லையே என சிலர் கேட்டபோது, ‘நடிக்காவிட்டால் என்ன? பப்பி ஒரு கிரேட் ஆக்ட்ரஸ். அதுக்காகவே மரியாதை செய்யணும்’ என்று சிவாஜி சொன்னதாகக் கூறினார்கள்.

ஒலிம்பிக்ஸ் விளையாட்டுப் போட்டிகளைப் பார்வையிட சிவாஜி அமெரிக்கா வந்தபோது, விமான நிலையத்துக்குச் சென்று அவரை வரவேற்றேன். என் உடல்நலம் பாதிக்கப்பட்டு ஹார்ட் ஆபரேஷனுக்கு பிறகு கொஞ்சம் கொஞ்சமாக தேறி வந்த சமயம். என்னை அவருக்கு அடையாளம் தெரியவில்லை. கமலா அம்மாள் என்னைப் பார்த்துக் கண் கலங்கிவிட சிவாஜி சோகமானாலும், ‘ஷீ ஈஸ் சச் எ பியூட்டிஃபுல் லேடி’ என என்னைத் தட்டிக் கொடுத்தார். அழுதுவிடக்கூடாது என்று தன்னையும் கட்டுப்படுத்திக்கொண்டார்.

அமெரிக்காவில் இருந்தாலும் சிவாஜியின் பிறந்த தினம், திருமண நாள் ஆகிய விசேஷத் தருணங்களில் மறக்காமல் கணேஷூக்கு ஃபோனில் வாழ்த்து சொல்லுவேன். ஆனால், சிவாஜிக்கு எனது பிறந்த நாள்கூடத் தெரியாது.’ - பத்மினி.

*

கணேசனின் முதல் காமெடி சித்திரம், கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி…

முதல் பட விநியோகம், அமரதீபம்…

முதல் புராணப் படம், சம்பூர்ண இராமாயணம்…

இரட்டை வேட நடிப்பு, உத்தமபுத்திரன்…

தமிழில் முதல் சரித்திரம் மற்றும் சிவாஜியின் முதல் வண்ணப்படம், வீரபாண்டிய கட்டபொம்மன்.

ஆசிய அளவில் முதல் அயல்நாட்டு விருது, வீரபாண்டிய கட்டபொம்மன்…

சிவாஜி புரொடக்ஷன்ஸ் முதல் தயாரிப்பு, வியட்நாம் வீடு...

என, சிவாஜியின் பல முதல்களில் பத்மினிக்கும் அதிகப் பங்கு உண்டு. சிவாஜியின் மிக ராசியான நட்சத்திரம் அவர்.

‘தில்லானா மோகனாம்பாள்’ பற்றிச் சொல்லாமல், பத்மினியின் சினிமா வாழ்வு பூர்த்தி பெறாது.

ஏறக்குறைய, இளமையைத் தொலைத்துவிட்ட நிலையில், தில்லானா மோகனாம்பாள், பத்மினியின் திரை உலகப் பயணத்தில் மாபெரும் பாக்கியம். என்றைக்கும் பத்மினியை இளைய தலைமுறை மறந்துவிடாமல் இருக்க, கலைத்தாய் சூட்டிய மகுடம்! கொத்தமங்கலம் சுப்புவின் காலத்தை வென்ற படைப்பான மோகனாம்பாள், பத்மினிக்குக் கிடைக்கக் காரணமானவர் ஏ.பி.நாகராஜன்.

 

thillana-2.jpg  

 

ஏ.பி.நாகராஜன் நீண்ட வருடங்களாக, அக்கதையைப் படம் எடுக்க வேண்டும் என்று வாசனிடம் கேட்டு வந்தார். வாசன் அதற்குச் சம்மதிக்கவில்லை. மோகனாம்பாளாக வைஜெயந்திமாலா நடிக்க, ஜெமினி ஸ்டுடியோஸ் சார்பில் தானே தயாரிக்கப்போவதாக வாசன் சொல்லி அனுப்பிவிடுவார்.

1965-ல், ஏ.பி.நாகராஜன் உருவாக்கிய ‘திருவிளையாடல்’, வாசனைக் கவர்ந்தது. மீண்டும் நாகராஜன் வந்து கேட்டபோது, தில்லானா மோகனாம்பாள் உரிமையை அவருக்கு விட்டுக்கொடுத்தார்.

‘எனக்கு மணமான பிறகு நான் நடித்த படங்களில் முக்கியமானது தில்லானா மோகனாம்பாள். என்னால் மறக்க முடியாத ஓர் அனுபவம்! நாட்டியமாடும் ஒரு பெண்ணின் வாழ்க்கையைச் சித்தரிக்கும் படம் அது. அதன் ஒவ்வொரு காட்சியையும் மிகவும் அனுபவித்து நடித்தேன்.

‘தில்லானா மோகனாம்பாள் படத்தைத் தயாரிக்கணும்னு முடிவு பண்ணினதுமே, நீதாம்மா மோகனா. சிவாஜி சிக்கல் ஷண்முகசுந்தரம்னு முடிவு பண்ணிட்டேன். உங்க ரெண்டு பேர்ல யார் ஒருத்தர் நடிக்கலைன்னாலும் படத்தை எடுக்கிறதா இல்லை என்றார் ஏ.பி.என். எப்பேர்ப்பட்ட வார்த்தை! சிலிர்த்துப் போனேன்.

நான் அன்று அடைந்த சந்தோஷம், எவ்வளவுன்னு சொல்ல முடியாது. ஆனந்த விகடனில் தொடராக வந்தபோதே, இந்தக் கதை படமானால் மோகனாம்பாள் கேரக்டர் எனக்கே கிடைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டிருக்கிறேன். கதையோடு பத்திரிகையில் கோபுலு வரைந்த சித்திரங்கள் பற்றியும் பரபரப்பாக பேசப்பட்டது. கோபுலுவின் ஓவியங்களைப் போலவே, எங்களுக்கான மேக் அப்பும் காஸ்ட்யூமும் அமைந்தன.

18 வயசுப் பெண் ரோல் அது. எனக்கு அப்போ 38. என் மகன் பிரேம், சிறுவனாக இருந்த நேரம். மோகனாம்பாளின் யவ்வன பருவத்தை நினைத்துக்கொண்டு நடிக்கவேண்டி இருந்தது. உடம்பை ஒல்லியாக்கிக்கொள்ள நேர்ந்தது. அந்த மாதிரி சமயத்தில், நமக்கு நம்ம வாழ்வே சொந்தமில்லே. சினிமா தொழிலுக்கும் ஜனங்களுக்கும்தான் அது சொந்தம்.

எனக்கும் சிவாஜிக்கும் கதைக்கு ஏற்ற மாதிரி நிஜமான போட்டி உணர்வு ஏற்படணும்னு நாகராஜன், சாரதா ஸ்டுடியோல இரண்டு தனித்தனி காட்டேஜ் அமைச்சார். சிவாஜி க்ரூப் ஒரு காட்டேஜ். என் குழுவினர் ஒரு காட்டேஜ். யாரை யார் மிஞ்சறாங்க பார்க்கலாம் என்கிற போட்டியை உருவாக்கினார். அதனால்தான் மோகனாம்பாள் வெற்றிப் படமாச்சு.

வாத்தியக் கோஷ்டியுடன் நான் ஜரூராக ஒத்திகை பார்த்துக்கொண்டிருப்பேன். சிக்கலாரின் செட்டில் தவில் வாசிப்பவர், நாயணக்காரர், ஒத்து ஊதுபவர், தாளம் போடுபவர் என்று அங்கேயும் தீவிரமான ரிகர்ஸல் நடக்கும். அவர்கள் மிஞ்சிவிடுவார்கள்போல... என்று எனக்கு இங்கே தகவல் வரும். நாங்கள் இன்னும் மும்முரம் காட்டுவோம்.

பப்பி முந்திக்கொண்டுவிடுவார் என சிவாஜிக்கு செய்தி போகும். கணேஷ் பார்ட்டியின் வேகம் கூடும். ஏ.பி.என்., இரண்டு தரப்பினரையும் வந்து பார்த்து உற்சாகப்படுத்திவிட்டுப் போவார். இரண்டு கோஷ்டியை வைத்தும் ஃபைனல்  பார்ப்பார். இந்தக் காட்சி சிறப்பா அமையணும்னா, எல்லாரும் உடம்பு பலவீனம் இல்லாம நடிக்கணும்னுவார்.

என் முகத்தில் கொஞ்சம் அலுப்புத் தட்டினாலும், ‘உடம்பு சரியில்லயாம்மா... ஷூட்டிங்கை கேன்சல் செய்துடவா’  என்று அக்கறையுடன் கேட்பார்.

கடைசியில் இந்தப் போட்டிக் காட்சி பிரமாதமாகவே அமைந்தது. நாங்கள் ஒருவரை ஒருவர் பாராட்டிக் கொண்டோம்’ - பத்மினி.

*

தில்லானா மோகனாம்பாளுக்காக, பத்மினியை 1968-ம் ஆண்டின் சிறந்த நடிகையாகத் தேர்வு செய்தது தமிழக அரசு. விருது வழங்கியவர், அன்றைய முதல்வர் மு.கருணாநிதி.
 

thillana-1.jpg  

 

சில விசேஷத் தகவல்கள் -

கலைஞர் மு.கருணாநிதிக்கும், இயக்குநர் சிகரம் கே.பாலச்சந்தருக்கும் மிகவும் பிடித்த படம் தில்லானா மோகனாம்பாள். அதிலும், ‘நலந்தானா…’ பாடலுக்கு பாலசந்தர் பரம ரசிகர்!

சென்னை தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட முதல் படம் தில்லானா மோகனாம்பாள்! இன்றளவும் (சமீபத்தில் 2015 ஏப்ரல் 5-ம் தேதி மாலை 6.30 மணிக்கு) ப்ரைம் டைமில், சன் டிவி போன்ற தனியார் சேனல்கள், தில்லானா மோகனாம்பாளைத் ஒளிபரப்புகின்றன. ஒவ்வொரு பிரேக்கும் 10 நிமிஷம் இருந்தாலும், ஜனங்கள் 1968-ன் உற்சாகத்தோடு மீண்டும் மீண்டும் பார்க்கும் ஒரே படம்!

மோகனாம்பாளில் ஒட்டுமொத்தமாகக் கொட்டிய கடும் உழைப்பை மிஞ்சுகிற மாதிரி, ஒரே ஒரு நாட்டியத்துக்காகவும் பத்மினி ஆடவேண்டி வந்தது. திருவருட்செல்வரில் இடம் பெற்ற ‘மன்னவன் வந்தானடி…’ பாடல் காட்சி, திரையில் ஏறக்குறைய ஏழு நிமிடங்கள் வரக்கூடியது.

 

thiruvarutchelvar.jpg  

 

இன்றளவும் சின்னத்திரையில் ஏர்டெல் சூப்பர் சிங்கர் உள்ளிட்ட உச்சக்கட்டப் போட்டிகளில், கல்யாணி ராகத்தில் அமைந்த அப்பாடலை பாலகர்கள் பிரமாதமாகப் பாடி, லட்சக்கணக்கான மதிப்புள்ள வீட்டை பரிசாகப் பெற முடிகிறது.

‘மன்னவன் வந்தானடி…’ பாடல் பற்றி பத்மினி மனம் திறந்தவை.

‘இந்தப் பாட்டில் நீங்கள் ஒன்பது உருவங்களுக்கு முன்னால் நடனம் ஆடுகிறீர்கள் என்று ஏ.பி.என். சொன்னதும் உற்சாகமாக இருந்தது. ஷூட்டிங்கின்போது அதன் சிக்கல் புரிந்தது. வண்ணச்சித்திரமான திருவருட்செல்வரில், ஒவ்வொரு பதுமை முன்பும் நான் வெவ்வேறு ஆடைகளில் ஆட வேண்டும். கேட்பானேன்?

சரியான சோதனை. பத்து நாள்கள் இடைவிடாமல் உடை மாற்றி மாற்றி ஆடியதில், நான் அல்லாடிப் போனேன். சிக்கலான மேக் அப் வேறு. பாட்டில் சில அடிகள் படமானதும், நான் புதிய காஸ்ட்யூமில் வருவேன். அடுத்த வரிகளுக்குத் தொடர்ந்து ஆடுவேன். அதுபோல் ஒன்பது தடவைகள் நடந்தது.

இனிமையான கர்நாடக இசை நாதமும், அதற்கேற்ப எனது ஆடலும் பிரம்மாண்ட தர்பாரில் நடிகர் திலகம் வந்து நிற்கும் கம்பீரமான தோற்றமும், என்றும் என் மனத்தை விட்டு அகலாது. அதற்காக  நான் பட்ட பாடு அம்மாடி! அந்த மாதிரி வேறு எந்தப் பாட்டுக்காவது நான் கஷ்டப்பட்டிருப்பேனா... சந்தேகம்தான்’.

யார் ஹீரோ என்றபோதிலும், ஏராளமான படங்களில் டைட்டில் ரோல் பத்மினிக்கே சொந்தம். பெண்மைக்கு உயர்வளிக்கும் உயர்ந்த நோக்கமோ அல்லது வணிக உத்தியில் பத்மினிக்கு இருந்த நட்சத்திர அந்தஸ்தோ இரண்டில் ஏதோ ஒன்று. 

நடிப்பில் மணமகள் தொடங்கி, தொடர்ந்து மருமகள் (ஹீரோ என்.டி.ஆர்.), காவேரி, மங்கையர்திலகம், மல்லிகா (நாயகன் ஜெமினி), அமரதீபம், பாக்யவதி, தங்கப்பதுமை, தெய்வப்பிறவி, மரகதம், சித்தி, தில்லானா மோகனாம்பாள், பெண் தெய்வம் என தாய்க்கு ஒரு தாலாட்டு வரை பத்மினியின் நடிப்பில் வெளிவந்தவை, அவரது அற்புத நடிப்புக்காகவே ஓடியவை.

‘பத்மினிக்குக் கிடைத்த வெற்றியில், பெரும்பாலும் கணேசன் குளிர் காய்ந்தார். சிவாஜிக்காகவேண்டி படங்கள் விழா கொண்டாடவில்லை’ என நடிகர் திலகத்துக்கு வேண்டாதவர்கள் விஷமப் பிரசாரத்தில் ஈடுபட்டதும் உண்டு.

அமெரிக்காவுக்குப் போனாலும், ஆண்டுதோறும் மார்கழி மஹோத்சவத்துக்கு சென்னையில் இருப்பதை, கடைசி வரை தன் வழக்கமாக பத்மினி கடைப்பிடித்தார். அவ்வாறு, 1976-ல் சென்னை வந்த பத்மினி,  ‘சிவாஜி வயதுக்கேற்ற வேடங்களில் நடிக்க வேண்டும்’ என்று பேட்டி ஒன்றில் குறிப்பிட்டதாக சர்ச்சை எழுந்தது. அந்த ஆண்டில் கடைசி சிவாஜி படம் ரோஜாவின் ராஜா. அதில் அவர் கல்லூரி மாணவராக நடித்திருந்தார். அதையொட்டி எழுந்த கேள்விக்கான பதில், சிக்கலை ஏற்படுத்தியது.

‘கணேஷுக்குக் குழந்தை மாதிரி சுபாவம். கோபம் வந்தாலும் உடனே தணிந்து போகும்’ என்கிற பத்மினியின் வாசகத்தை, சிவாஜி நிரூபித்துவிட்டார். பத்மினி தன்னைக் குறித்து சொன்னதை அவர் பொருள்படுத்தவே இல்லை. எப்போதும்போல் தோழமை தொடர்ந்தது. அதன் விளைவு, 1977-ல் கே.பாலாஜியின் ‘தீபம்’ படத்தில் பத்மினி கௌரவ வேடத்தில்  ப்ளாஷ்பேக்கில், ஒரு காட்சியில் தாயாராக நடித்திருப்பார். அதில் பத்மினி தோன்றும் புகைப்படம். தொலைந்துபோன  தம்பி விஜயகுமார்தான், நாயகி சுஜாதாவுடைய காதலன் என சிவாஜிக்கு உணர்த்தும்.

பத்மினி பற்றி, கணேசனும் நேர்காணல் ஒன்றில் மனம் திறந்து பாராட்டியுள்ளார்.

‘உங்களுக்கு ஜோடியாக நடித்தவர்களில் உங்களுக்கு இணையான நடிப்புத் திறனை வெளிப்படுத்தியவர் யார்?’

நிச்சயமாக பப்பிதான். பப்பி சிறந்த நாட்டியக்காரி மட்டுமல்ல. சிறந்த அழகியும்கூட. குணச்சித்திரம், காமெடி, நடனம்... வாட் நாட்…?

எல்லாப் பாத்திரங்களிலும் ஜொலித்த நடிகை. ஷீ ஈஸ் ஆன் ஆல்ரவுண்டர். சின்ன வயதிலிருந்தே நானும் பப்பியும் பழகி வருகிறோம். வீ ஆர் ஆல் இன்டெலக்சுவல் ஃப்ரண்ட்ஸ். எங்களிடையே தெய்வீக நட்பு உண்டு’.

http://www.dinamani.com

Link to comment
Share on other sites

பத்மினி - 5. பத்மினியும் எண்பத்தாறு முத்தங்களும்


 

 

சா

மர்த்தியமே உன் பெயர் மெய்யப்பனா என மெச்சும்படியாக இருந்தது செட்டியாரின் ஒவ்வொரு நகர்வும். ஏவிஎம் உருவாக்கிய வாழ்க்கை, ‘பஹார்’ என்ற பெயரில் ஹிந்தி பேசியது. தமிழில் நடித்த வைஜெயந்தியே ஹிந்தியிலும் ஹீரோயின். கையோடு, லலிதா பத்மினிக்கும் வடநாட்டில் புதிய வாசலைத் திறந்துவைத்தார் செட்டியார். வேதாள உலகம் படத்தில் இடம்பெற்ற பாம்பாட்டி நடனக் காட்சியை பஹாரில் புகுத்தினார்.

டெல்லியில் பஹாரைத் திரையில் பார்த்தவர்கள், பப்பி மீது நாலணா, எட்டணா நாணயங்களை வீசி எறிந்து புதுப் பூவைக் கொண்டாடினர். நேரில் அதை ரசித்த ஹிந்தி சினிமாக்காரர்கள் சென்னைக்கு விரைந்தனர். உடனடியாக பத்மினிக்கு லட்ச ரூபாய்க்கு சம்பளம் பேசி, 50,000 ரூபாயை அட்வான்ஸாக கொடுத்த பின்னரே நிம்மதியாக ஜிலேபியும் சமோசாவும் சாப்பிட்டார்கள்.

பத்மினி நாயகியாக நடித்த முதல் ஹிந்திப் படம், ஜெமினியின் ‘மிஸ்டர் சம்பத்’. (தமிழில் மிஸ் மாலினி). ஏவிஎம், ஜெமினி என தென்னகத்தின் இரண்டு மெகா ஸ்டுடியோக்களின் அறிமுகம் பத்மினி. தமிழைப் போலவே வடக்கிலும் வெற்றிக்கொடியை மிகச் சுலபமாகப் பறக்கவிட்டார். பத்மினியின் சூப்பர் ஹிட் தமிழ்ச் சித்திரங்கள், ஹிந்தியில் அதிகம் தயாரானது. அவற்றில், பத்மினியைத் தவிர வேறு யாரும் அந்த வேடங்களில் உச்சம் தொட முடியாது என்கிற முதல் மரியாதையைப் பெற்றார்.

 

1.jpg  

 

திலீப்குமார் தவிர, அநேக மும்பை சிகரங்களான அசோக் குமார், ராஜ் கபூர், தேவ் ஆனந்த், சஞ்சீவ் குமார், ஷம்மி கபூர், தர்மேந்திரா ஆகியோருக்கு ஜோடியாக நடித்துள்ளார். தமிழில், காஷ்மீர் அவுட்டோர் ஷூட்டிங் போக வாய்ப்பில்லை. அக்குறையைப் போக்கியவை, அசோக்குமாரின் கல்பனா, ராகினி உள்ளிட்ட தயாரிப்புகள். பத்மினிக்கு காஷ்மீரை கையோடு சென்னைக்குக் கொண்டுவரும் அளவு, அத்தனை பிடித்துப்போனது. குளிரின் ரோஜாவனத்தில் ஆப்பிள் மெத்தையாக ரசிகர்களின் கண்களுக்கு சுகமாகக் காட்சியளித்தார்.

மீண்டும் தர்மேந்திரா - மீனாகுமாரி ஜோடியுடன், காஜல் சினிமாவின் அவுட்டோருக்காக, பத்மினியும் ஆசை ஆசையாக காஷ்மீர் சென்றார். ஆனால் பகைவர்கள் படையெடுத்து வந்ததால், இடத்தை காலி செய்ய வேண்டியதாயிற்று. ‘வேலைக்காரன்’ அமலாபோல் உருகும் பனியில் பத்மினி ஆட வேண்டிய நடனம், பாதியில் நின்றது. மிச்சம், மும்பை ஸ்டியோவில் தொடர்ந்தது. அங்கு, பனிக்கட்டிகளுக்குப் பதிலாக உப்பைக்கொண்டு தளத்தை நிரப்பினர். புழுக்கத்தின் உச்சகட்டத்தில் ஆடி முடித்தார் பத்மினி. என்னே ஓர் உப்பான அனுபவம்!

ஆஷா ஃபரேக் தவிர, வடக்கில் யாரும் உருப்படியாக நாட்டியம் கற்றவர்கள் கிடையாது. பப்பியுடைய அசாத்திய அசைவுகளில் ஆச்சரியம் அடைவது, ஹிந்தி கனவுக்கன்னிகளின் அன்றாட இயல்பானது. மீனா குமாரி போன்ற நடிப்பின் இமயங்கள்கூட, பத்மினியின் சிஷ்யையாகப் பாதங்கள் தூக்கி ஆடி உள்ளனர்.

நர்கீஸ், பிருத்விராஜ், ஜெயராஜ் போன்ற பிரபலங்களுடன் பத்மினி இணைந்து நடித்த  பர்தேஸி,  இந்திய - ரஷிய கூட்டுத் தயாரிப்பு. கலரில் சினிமாஸ்கோப்பில் பிரம்மாண்டமாக மூன்றே மாதங்களில் தயாரானது. பர்தேஸி ஷூட்டிங்குக்காக 1957-ல், பத்மினி ரஷ்யாவுக்குச் சென்றார். லைட்பாய்ஸூக்கு பதிலாக லைட் கேர்ள்ஸ் உள்ளிட்ட தொழில்நுட்பக் கலைஞர்களும் நட்சத்திரங்களும் அங்கு சமமாகவே நடத்தப்பட்டதில், பத்மினிக்கு ஆச்சரியம். நடிப்பதற்காகக் கொஞ்சம் ரஷிய மொழியைக்கூட பத்மினி கற்றுக்கொண்டார்.

 

2.jpg  

 

ஷம்மி கபூருடன் பத்மினி ஜோடியாக நடித்த வெற்றிச் சித்திரம் ‘சிங்கப்பூர்’. முழுக்க முழுக்க சிங்கப்பூரிலேயே உருவானது. தமிழில் சிவாஜி, பத்மினியின் பிதாமகன் என்றால், ஹிந்தியில் ராஜ் கபூர். ஒரே நேரத்தில், கணேசன் – ராஜ் கபூர் என்று இரு தண்டவாளங்களில் இந்தியாவெங்கும் புகழின் திசைகளில் தடையின்றி ஓடியது பத்மினியின் நட்சத்திர ரயில்.

நர்கீஸ் மூலம் ராஜ் கபூர், பத்மினியின் நிழல் காதலன் ஆனார். வடக்கில், 1946 முதல் 1957 வரையில் ஆடிக்களித்தது ‘ஆவாரா’ புகழ், ராஜ் கபூர் - நர்கீஸ் ஜோடி. ராஜ் கபூரின் மனைவி என்கிற சட்டரீதியான அந்தஸ்து தனக்குக் கிடைக்காது எனத் தெரிந்ததும், நர்கீஸ் தன் காதலுக்கு முற்றும் போடவேண்டி வந்தது. ராஜ் கபூரின் வசம் அன்பின் ஐஸ்கிரீமாக உருகி நின்ற நர்கீஸ், ‘மதர் இந்தியா’ செய்த மாயத்தால், சுனில் தத்தை மணந்துகொண்டார். 

‘சோரி – சோரி’ ஏவிஎம் தயாரிப்பு. சென்னையின் செல்வ மகள்கள், ராஜ்கபூர் - நர்கீஸ் ஜோடி நடிப்பதை நேரில் காண ஏவிஎம்முக்கு செல்வது வாடிக்கையானது. பத்மினியும் அவ்வகையில் முதன்முதலாக நர்கீஸை சந்தித்தார். அதுமுதல், நர்கீஸும் பப்பியும் நல்ல தோழிகள். பப்பியைவிட ராகினிக்கு நர்கீஸ் என்றால் அத்தனை உயிர்.

 

3.%20nargis.jpg நர்கீஸ்  

 

நட்சத்திர ஓட்டலில் நர்கீஸ் ஓய்வு எடுத்தாலும், வீட்டுக்கு அழைத்துவந்து, தங்களின் அபிமான நடிகைக்கு ஒரு வாய் உப்புமாவாவது ஊட்டிவிடுவது திருவாங்கூர் சகோதரிகளின் உற்சாக விருந்தோம்பல். நட்புக்கும் உப்புக்கும் நேரடித் தொடர்பு எக்கச்சக்கம். செஞ்சோற்றுக் கடன்போல், பப்பி வீட்டு உப்புமாவுக்காக நர்கீஸ் செய்த நற்பணி, மும்பை சென்றிருந்த பத்மினிக்கு  ராஜ் கபூரை  அறிமுகம் செய்தது.

நர்கீஸ் இல்லாமல் சுவரில் முட்டி மோதி நாளெல்லாம் அழுது, நட்சத்திரத் துணைக்கு என்ன செய்வது என யோசித்துக்கொண்டிருந்த ராஜ் கபூருக்கு பத்மினியைப் பிடித்துவிட்டது. நர்கீஸுக்குப் பிறகு ராஜ் கபூருடன் தொடர்ந்து நடிக்கும் வாய்ப்பைப் பெற்றவர் நம்ம ஊர் பத்மினி! ராஜ் கபூர் குறித்து தென்னிந்தியர்களுக்கு ஆதி முதல் அந்தம் வரை விரிவாகச் சொல்வது பத்மினிக்குப் பிடித்தமானது.

இனி,  ராஜ் கபூர் பற்றி பத்மினி சொன்னது.

(உங்களுக்காக அவரது உற்சாகமூட்டும் உதட்டுப்பூக்களில் இருந்து அமுத மழையாகப் பொழிகிறது! பெரிசுகள் நிதானமாகப் பருகிச் சுவையுங்கள்! உறங்கும் உங்களின் இளமை மீண்டும் வீறிட்டு விழித்தெழலாம், ஜாக்கிரதை!)

‘1953-ல் இருந்து ராஜ் கபூர் ரொம்ப நெருக்கமானவராக இருந்தார். ராஜ் கபூருக்கு என்னுடைய நடிப்பாற்றலிலும் நாட்டியத் திறமையிலும் மிகுந்த நம்பிக்கை இருந்தது. எனது அழகையும் அவர் பாராட்டியது உண்டு. ’தன்னுடன் நடித்த நாயகிகளில் பத்மினி தலைசிறந்த அழகி!’ என்று  பத்திரிகைகளில் பெருமையாக பேட்டி அளித்திருக்கிறார்.

‘ஜிஸ் தேஷ் மே கங்கா பெஹ்தி ஹை’ படத்தில் என்னை நாயகியாக நடிக்க ராஜ் கபூர் அழைத்ததும், அதற்கு எவ்வளவோ எதிர்ப்பு இருந்தது. முதல் முறையாக அவருடன் ஹீரோயினாக நடித்தேன். என்னாலே அந்த ரோலை செய்ய முடியுமான்னு ரொம்ப யோசனையாயிருந்தது. நீதான் நடிக்கணும்னு அவர் பிடிவாதம் பிடித்தார். மூன்று வருடங்கள் தொடர்ந்து அதன் ஷூட்டிங் நடந்தது. என்னால் மறக்க முடியாத அனுபவம்.

 

4.rajkapoor.jpg ராஜ் கபூர்  

 

ராஜ் கபூருடன் நடிக்க ஏராளமான வாய்ப்புகள் வந்தபோதும், அவற்றை ஏற்க முடியவில்லை. எனக்குத் திருமணமாகிவிட்டது. தொடர்ந்து ராஜ் கபூரின் ஆஷிக்கில் மட்டும் நடித்தேன். அதில் விறுவிறுப்பான நடனம் வேறு. ஐந்து மாத கர்ப்பவதியான நான், மருத்துவ ஆலோசனையைக் கேட்டு ஆடவேண்டியதாயிற்று. அயர்வு சோர்வு இல்லாமல் வேலை செய்வார். ஷாட்டில் முழு திருப்தி கிடைக்கும் வரையில் விடமாட்டார். அதனால், அவருடன் நடிக்கிறவர்களுக்கு மிகுந்த பொறுமை வேண்டும்.

அவர் எப்போது கூப்பிட்டாலும், நடிக்கத் தயாராக செட்டில் எல்லோரும் காத்திருப்போம். அந்த வரிசையில், அவருடைய தந்தை பிருத்விராஜ் கபூரும் உட்கார்ந்திருப்பார்! பார்க்கப் பரிதாபமாக இருக்கும். ‘என்ன செய்வது? அவன் எப்போது என்னை அழைப்பானோ தெரியவில்லையே...’ எனப் புன்னகை செய்வார். சில சமயம், நாட்டியக் காட்சிகள் நாள் முழுதும் படமாகும். அதில் வரும் ‘ஓ வசந்தி’ என்ற பாடல், இன்னும் என் காதுகளில் ஒலிக்கிறது.

ஷூட்டிங்கில் சிடுசிடுவென்று தோன்றினாலும் மற்ற சமயங்களில் கலகலப்பாக வேடிக்கையாகப் பேசுவார். விளையாட்டுக்காக, நிறைய குறும்புகள் செய்வார். மணமான பிறகு, ராஜ் கபூருடன் நான் நடித்த கடைசி ஹிந்திப் படம் ‘மேரா நாம் ஜோக்கர்’. இந்தக் கடைசியும் ஒரு ரெக்கார்டு! மிக நீளமான சினிமாவானதால், இரண்டு தடவை இடைவேளை விட்டார்கள்.

ஃபிலிம் ஸ்டார் கிரிக்கெட் என்றால் ராஜ் கபூர் முன்னணியில் வந்து நிற்பார். அவரே வடக்கின் கேப்டன். ஒரு குழுவுக்குப் பதினோரு பேர் என்கிற கணக்கெல்லாம் கிடையாது. இருபது பேர் வரையில் இருப்போம்.

*

உடல் நலம் சரியில்லை என பத்மினியிடம் இருந்து ஒரு நாளும் தகவல் வராது. பொய் வயிற்று வலி, தலை வலி,  காய்ச்சல், மாதவிலக்குக் கோளாறு என்று ஷூட்டிங் கேன்சல் செய்யப்பட்டதாக வரலாறு கிடையாது. மேரா நாம் ஜோக்கரில் நடித்த நேரம். பிஞ்சுகளை மாத்திரம் பாதிக்கும் டிப்திரியா என்கிற தொண்டைப்புண் ஜுரம் நிஜமாகவே பாதித்தது. முதலும் கடைசியுமாக, படப்பிடிப்பு ரத்தானது. பத்து நாள்கள் படுத்த படுக்கையாகக் கிடந்தார் பத்மினி. அனைவருக்கும் ஆச்சரியம். அதிர்ச்சி! மிகப்பெரிய சர்க்கஸ் அரங்கம். பத்மினி பார் ஆடவேண்டி போடப்பட்டது. ராஜ் கபூர், ஹீரோயினுக்கு முதலில் குணமாகட்டும் என்று செட்டை கலைத்துவிட்டார்.

 

5.jpg  

 

பத்மினி – ராஜ் கபூர் இணைக்கு, ஆபாசத்தின் எல்லைகள் தெரியாது என்கிற புகாரும் எழுந்தது.

ஜெமினி கணேசனின் மகள் ரேகா வழங்கிய நேர்காணல், ஸ்ரீதரின் சித்ராலயா இதழில் வெளிவந்தது. சென்னையில் கோடை வெப்பத்தின் தாக்கத்தைவிட, 1971-ல் பத்மினி மீதான ரேகாவின் மறைமுக அவதூறின் சூடு அதிகம். பத்மினியோடு மூவேந்தர்கள் நடித்த திருமகள், குலமா குணமா, ரிக்ஷாகாரன் போன்றவைத் தொடர்ந்து ரிலீஸான சமயம். பத்மினியின் தமிழக இமேஜை  கெடுக்கும் விதமாக ரேகாவின் வார்த்தைகள் புழுதியைக் கிளப்பின.

‘இங்கு முத்தக் காட்சியில் நடிக்கமாட்டேன் என்று கூறுபவர்கள், வெளிநாட்டுக்கு அனுப்பும் பிரிண்டுகளில் நடிக்கிறார்கள். ராஜ் கபூர் படமொன்றில், தமிழ்நாட்டு நடிகை 86 முத்தங்கள் கொடுத்து இருக்கிறார். அதுதான் அந்நிய தேசங்களுக்கு அனுப்பப்பட்டது. இது, பம்பாய் பட உலகில் எல்லாருக்கும் தெரியும்’.

பத்மினி, அமெரிக்காவில் இல்லறஜோதியாக ஒளிவிட்ட சூழல். சகோதரிக்காக தங்கை ராகினி பரிந்து பேசினார்.

‘நெவர். ரேகா குறிப்பிடும் அந்த நடிகை, நிச்சயம் அக்கா பத்மினியாக இருக்கமாட்டார். கெய்ரோவில் வீரபாண்டிய கட்டபொம்மன் பரிசளிப்பு விழாவின்போதே, நிறைய பேர் பப்பியை அங்கே நடிக்க அழைத்தார்கள். ‘உங்கள் நாட்டுப் படங்களில் கவர்ச்சியும் செக்ஸும் ஓவர். அதுபோன்ற வேடங்களை நான் ஏற்பதில்லை’ என மறுத்துவிட்டார் அக்கா. பர்தேஸியில்கூட, அவள் இந்தியப் பெண்ணாக நடித்தாளே தவிர, கிளாமராக அல்ல.

 

6.%20Raagini.jpg ராகினி  

 

கவர்ச்சி மற்றும் செக்ஸ் வேடங்களில் நடிக்க மறுத்ததாலேயே, அக்காவுக்கு அதிகமான ஹிந்திப் படங்களில் நடிக்கமுடியாமல் போய்விட்டது. தமிழ், ஹிந்தி எதுவானாலும் கேரக்டரை கேட்டுவிட்டே ஒப்பந்தங்களில் கையெழுத்து இடுவோம். அநாதை ஆனந்தனின் ஹிந்தி ரீமேக்கான ‘சந்தா அவுர் பிஜிலி’யில் குளிக்கும் காட்சிகள் இருந்தன. கேமராமேனிடம் சில சீன்களை மாற்றி எடுங்கள். ஒரேயடியாக செக்ஸியாக வேண்டாம் என்றார் அக்கா’.

‘தமிழில் வெகு சிறப்பாக நடித்த நீங்கள், ஹிந்தியில் கவர்ச்சி நாயகியாகத்தானே இருந்தீர்கள்?’ - 1997 ஆகஸ்டில்,  பத்மினியிடம் கேட்டபோது –

‘ராஜ் கபூர் சொல்வார். நான் இந்தியாவுக்கு மட்டும் படமெடுக்கவில்லை. உலகம் முழுவதும் என் படங்கள் வெற்றிபெற வேண்டும்’ என்று. மேரா நாம் ஜோக்கரில் நான் இளைஞன் வேடத்தில் வருவேன். என் கதாபாத்திரத்தின் தேவையை நான் பூர்த்தி செய்தாக வேண்டும். எப்போதுமே தங்கப்பதுமையாக இருக்க முடியுமா? ரஷ்யாவில், பெண் குழந்தைகளுக்குத் தமிழக பத்மினியின் பெயர் வைத்தார்கள் என்றால், அது ராஜ்கபூருக்கு ஜோடியாக நடித்ததன் பயனால் மாத்திரமே’.

பத்மினி நடித்து தேசிய விருதுபெற்ற ‘குழந்தைக்காக’, ஹிந்தியில் ‘நன்னா பரிஸ்தா’ என்ற பெயரில் வெளியானது. பப்பி அதிலும் நடித்தார். அதில் பத்மினி இடம்பெற்ற காட்சிகள் சில, நிஜத்தில் தமிழர்களுக்குத் தலைகுனிவாகப் போனது. பெரும் கண்டனங்களும் எழுந்தன.

திலீப் குமார் - வைஜெயந்தி மாலா நடித்து, சூப்பர் டூப்பர் ஹிட் ஆகி வசூலை வாரிக் குவித்தது ‘கங்கா ஜமுனா’. திலீப் குமாரின் தயாரிப்பு. அதில், வைஜெயந்தி வில்லனால் மானபங்கம் செய்யப்படும் காட்சி. தமிழ் வார இதழ் ஒன்றின் அதிகபட்ச பாராட்டுதலைப் பெற்றது. கங்கா ஜமுனா, தமிழில் ‘இரு துருவம்’ என்ற டைட்டிலில் பி.எஸ்.வீரப்பாவால் ரீமேக் ஆனது. சிவாஜி - பத்மினி நடித்து, மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் 1971 தைத் திருநாளில் வெளியானது. வசூலில் தோல்வி. பத்மினி, பி.எஸ்.வீரப்பாவால் பலாத்காரம் செய்யப்படும் காட்சிகள் ஆபாசமாக இருந்தன. பத்மினியா இப்படி என்கிற பெருமூச்சு, அனலாகக் கிளம்பியது தாய்க்குலத்திடமிருந்து.

http://www.dinamani.com

Link to comment
Share on other sites

பத்மினி - 6. பூவே பூச்சூடவா!

 

 

1950
தொடங்கி 1960 வரை, வருடத்துக்கு  ஏறக்குறைய இரண்டு டஜன் படங்களில் இரவு பகலாக நடித்துக்கொண்டிருந்தவர் பத்மினி. நடுவில் மாண்புமிகுகள், மேதகுகள், ஹைனஸ்கள், மஹா கனம் பொருந்தியவர்கள் பங்கேற்ற விசேஷங்களில், பரதம் ஆடி அவர்களை உற்சாகமூட்டும் பணி வேறு. இங்கிலாந்து இளவரசியா, தலாய் லாமாவா, மற்ற அயல் தேசத்து முக்கியப் பிரமுகர்களா... யார் சென்னைக்கு விஜயம் செய்தாலும், கூப்பிடு பத்மினியை... என ஒரே குரலில் அழைத்தன அரசாங்கமும், தனியார் ஸ்தாபனங்களும்.

‘ஜிஸ் தேஷ் மே கங்கா பெஹ்திஹை’, இந்தியாவெங்கும் வசூல் வற்றாமல் ஓடிக்கொண்டிருந்தது. உச்சகட்டப் புகழ் என்பார்களே... அப்படியொரு மந்தகாச நிலை. பத்மினியை மணக்க அரும்பு மீசை இளவரசர்கள் முதல், ஜமீன்களும், மிட்டா மிராசுகளும், படா படா தொழில் அதிபர்களும், விவிஐபிகளும், சினிமாகாரர்களும், நான் நீ எனப் போட்டி போட்டார்கள். அமிர்தத்தை ஏந்திக்கொள்ள ஆலோசனையா...!

பாவம் நாட்டுப்புறத்து ஏழை இளைஞர்கள்... பப்பி தங்களுக்கு எட்டாத உயரம் எனத் தெரிந்தும் ருசிகரக்  கனவுகளில், பத்மினியின் பேரழகால் வெளிச்சம் பெற்ற இரவுகளில் இளமையைத் தொலைத்தனர். பத்மினி முப்பது வயதைக் கடக்கும்முன், எப்படியாவது கல்யாணத்தை முடித்துவிட, சரஸ்வதி அம்மாள் சந்தனம் இட்டுக்கொண்டார். தங்களின் குடும்பப் பெரியவர் குருவாயூரப்பனுடன் கூட்டு சேர்ந்தார். குருவாயூரப்பனுக்கும் பத்மினி மீது அலாதிப் பிரியம். நிரந்தரமான கெடுபிடிகளுக்கும் சர்ச்சைகளுக்கும் குறைவற்ற குருவாயூர் கோயிலில்,  ஸ்ரீமன் நாராயணன் கண்ட முதல் மானுட நர்த்தனம் லலிதா-பத்மினி ஆடியது. பகவானும் மனம் குளிர்ந்து பத்மினிக்கான மங்கல காரியங்களில் மும்முரமாக ஈடுபட்டார்.

பத்மினியின் விருப்பம் போலவே, ஒரு டாக்டர் மாப்பிள்ளையைக் கை காட்டினார். தெல்லிச்சேரியின் பிரபலமான வக்கீல் குஞ்சப்பன் நம்பியார். அவரது சீமந்தபுத்திரன் ராமச்சந்திரன். தலைச்சனுக்குப் பின்னால் ஏழு சகோதரர்களும் ஒரு சகோதரியும் க்யூவில் நின்றனர். குடும்ப உறுப்பினர்கள் மொத்தம் 25 பேர். ஒவ்வொரு வேளையும் பந்திக்குப் பாயும், வாழை இலையும், தண்ணீரும், நேந்திரம் பழமும்  எடுத்துவைத்துக் கட்டுப்படி ஆகாது.
 

padmini_res.jpg  

 

அத்தனை பேருக்கும் அவியலுக்கு கறிகாய் நறுக்கியே களைத்துப்போகும் ஹேமலதாவின் கைகள். சக்கைப் பிரதமன் செய்வது பற்றிச் சொல்லவே வேண்டாம். அவர், குஞ்சப்பன் நம்பியாரின் மைத்துனி மட்டுமல்ல, இரண்டாம் தாரமும்கூட. தெல்லிச்சேரியின் மிக இளமையான மாமியார் ஹேமலதா!  அவருக்கும், மருமகளாகச் செல்லவிருந்த பத்மினிக்கும் இடையே அதிகமில்லை... ஜஸ்ட் எட்டு ஆண்டுகள் அகவை  வித்தியாசம். ராமச்சந்திரனின் ஜாதகம் வாங்கி, ஆருடம், பொருத்தம் எல்லாம் பார்த்து, சகலமும் சரஸ்வதி அம்மாளுக்கு மனத் திருப்தியானது.

பரதம் - சினிமா. வங்கிக் கணக்குகளில், வீட்டுப் பெட்டகங்களில், சரஸ்வதி அம்மாளின்  இடுப்பு சேலை மடிப்புகளில் கண்மண் தெரியாத பணப் புழக்கம். ஆள், அம்பு, சேனை, பரிவாரம்! ஃபோட்டோ கேட்டு ரசிகர் கடிதம். இமயம் கடந்த நட்சத்திர செல்வாக்கு. அத்தனையையும் ஒரு நொடியில் மறந்து, அம்மாவின் சொல் பேச்சு கேட்டு, அறியா பாலகியாக தாயாரின் முந்தானையைப் பிடித்து மணமேடை ஏறிய பத்மினி பேராச்சரியம்!

போட்டது போட்டபடி,  எவ்வாறு அவரால் எல்லாவற்றையும் உதறித் தள்ளி, ஓர் இன்பத் துறவறத்துக்குத் தன்னைத் தயார்படுத்திக்கொள்ள முடிந்தது! நினைக்க நினைக்க இன்னமும் மலைப்பாகவே இருக்கிறது. சரஸ்வதி அம்மாள் -  தங்கப்பன் பிள்ளை என்ற  பெற்றோரைப் போற்றும், தாய் சொல்லைத் தட்டாத, அந்நாளின் பாரதப் பண்பாடு, குடும்பப் பாரம்பரியம், கலாசாரத்துக்கான மிக முக்கிய அடையாளமாக பத்மினியைச் சொல்லலாமா... இருந்திருந்து ஒரு சினிமா நடிகைதானா அதற்கு எடுத்துக்காட்டாகக் கிடைத்தாள்... என யாராவது வம்புக்கு வருவார்களா...!

பாக்கு - வெற்றிலை மாற்றிக்கொள்ளும் மங்கல உற்சவம், 1960 நவம்பர் 9-ல் ஆலப்புழையில் அக்கா லலிதாவின் வீட்டில் நடைபெற்றது. அந்த இன்பமான நொடிகளில், பத்மினியும் ராகினியும் காட்சிப்பொருளாக அங்கே இல்லை. பாரதத் தலைநகரில், ரோஜாவின் ராஜா பண்டித நேருவை குஷிப்படுத்தும் வண்ணம்,  ஜவஹரின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில், எப்போதும்போல் பதத்துக்கு ஆடிக்கொண்டிருந்தனர்!

1961, ஏப்ரல் 27 என மண நாள் குறிக்கப்பட்டது. பதறியவாறு ஓடி வந்தது, கலை உலகம். ‘ப்ளீஸ்! கொஞ்சம் கல்யாணத்தைத்  தள்ளிவையுங்கள். திடுதிப்பென்று இப்படிச் செய்தால் தொழில் பாதிக்கும். பத்மினியை நம்பி லட்சக்கணக்கில் முடங்கிக் கிடக்கிறது. முடிகிற நிலையில் உள்ள படங்களையாவது பூர்த்தி செய்துவிட்டுப் போகட்டும்’.

ஒரு மாதம்போல் சற்றே தள்ளி, அக்னி நட்சத்திரம் முடியும் நிலையில் புதிய முகூர்த்தம் ஏற்பாடானது. 1961 மே 25-ல், ஏற்கெனவே வேண்டிக்கொண்ட மாதிரி, குருவாயூரப்பன் ஸ்தலத்தில் பத்மினிக்குக் கல்யாணம் என அறிவிப்பு வெளியானது. பத்மினி திருமணத்துக்குப் பின் நடிக்கக்கூடாது என்கிற வழக்கமான வேண்டுகோளை புகுந்த வீடு முன் வைத்தது.

அதனால், மே 23-ந் தேதி அன்றும் பத்மினியால் அரிதாரத்தைக் கலைக்க முடியவில்லை. அவர் மணமகள் அவதாரம் எடுப்பதற்குள், போதும் போதும் என்றாகிவிட்டது. இடையில், மே 20, 21, 22 ஆகிய தினங்களில், சாயங்காலத்தில் ராமாயண நாட்டிய நாடகம்! விடியலின் ஒவ்வொரு நகர்வும், பத்மினி தன் கல்யாண சந்தோஷத்தைச் சிந்திக்க இடமில்லாமல், மிகக் கடின உழைப்பால் நிரம்பி வழிந்தது.

மே 24. மிக உக்கிரமான கத்திரி வெய்யிலின் காலை. நேரம் 10 மணி 40 நிமிடம். கொச்சிக்கு வானூர்தி ஏற மீனம்பாக்கம் சென்றார் பத்மினி. பூரண கும்ப மரியாதையுடன் டைரக்டர் கே.சுப்ரமணியம் தலைமையில் கலையுலகினர் வரவேற்றார்கள். நாகஸ்வரம், மங்கல இசை பெருக்கியது. கல்யாண வசந்தம் வாசித்தது. சுற்றமும் நட்பும் ஆரத்தி எடுத்தது.

சென்னை இளைஞர்கள் அங்கு திரண்டு நின்றார்கள். அவர்களின் எண்ணிக்கை 25 ஆயிரம் இருக்கும் என நாளிதழ்கள் எழுதின. அத்தனை பெரிய ரசிகர் கூட்டத்தை யாரும் அதுவரையில் விமான நிலையத்தில் கண்டதில்லை. அடக்க முடியாமல் அழுகை பெருகியது பத்மினிக்கு. மூச்சு முட்டக் கை குவித்து, திருவாளர் பொது ஜனத்துக்கு உளமாற நிறைவான வணக்கம் சொன்னார். மகிழ்ச்சியைவிட துக்கமே அதிகரித்தது. கண்ணீரும் புன்னகையும் முகங்களில் வழிந்தோட,  தங்களின் அபிமான நடிகைக்குப் பிரியாவிடை தந்தனர்  வாலிப விசிறிகள். வேறு யாருக்கு, பத்மினிக்குக் கிடைத்த அத்தகைய பாக்கியம் அமைந்தது!

கொச்சியில் இருந்து பத்மினியை ராகினி காரில் அழைத்துக்கொண்டு திருச்சூருக்குப் பயணமானார். திருச்சூர் ராமவிலாஸ் மாளிகையில், சகோதரிகள் தங்கினர். முந்தைய  பிஞ்சு இரவுகளின் மழலைப் படிவங்களில்  விடிய விடிய விழுந்து எழுந்தார்கள். ரசிகர்களின் பட்டாளம் போதாதென்று, வானமும்  மழையைச் சிறப்பு விருந்தினராக அனுப்பிவைத்தது. குருவாயூரில் பத்மினியின் மருதாணிப் பாதங்கள் பட்டதும், மழை இன்னும் வீறுகொண்டு பொழிந்தது.

‘செரிய பிராயத்தில் அரி கழிக்குந்ந ஷீலம் உண்டோ...’ (பப்பி பால்யத்தில் நிறைய அரிசி தின்றிருப்பாரோ’) ‘இப்படி மழை விடாமல் பெய்கிறதே...’ கூடியிருந்தவர்கள் குறும்பு செய்தனர்.

இனி, லைவ் ரிலே பை பத்மினி.

‘விமான நிலையத்தில் எனக்கு அளிக்கப்பட்ட வழியனுப்பு உபசாரம் என்னைத் திணறடித்துவிட்டது. நாதஸ்வர இசையும், கலைஞர்களின் ஆசிச் சொற்களும், ரசிகர்களின் வாழ்த்தொலியும் சேர்ந்து என்னை எங்கோ அழைத்துச் சென்றுவிட்டன. என் மனநிலை, விவரிப்புக்கு அப்பாற்பட்டதாக இருந்தது. ஓர் உலகிலிருந்து இன்னொரு வாழ்க்கைக்கு மாறுகிறோம் என்ற எண்ணம் என்னை என்னவோ செய்தது. 

‘புதுமையான மலர் அலங்காரத்துடன் மணப்பந்தல் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. உள்ளே பரப்புவதற்காகத் திருவனந்தபுரத்திலிருந்து, ஸ்பெஷலாக வெள்ளை மணலை லாரி லாரியாகக் கொண்டுவந்து கொட்டினார்கள். விளக்குடன் கூடிய தட்டுகளை ஏந்திய ஒன்பது கன்னிகைகள், என்னை அவரிடம் அழைத்துச் சென்றனர். என் தம்பி சந்திரன், அவர் கால்களை அலம்பினான். எங்கள் சம்பிரதாயப்படி, அவர் எனக்கு முண்டு கொடுத்தார். பிறகு மோதிரம் மாற்றிக்கொண்டோம். சரியாக காலை 8.15-க்கு அவர் எனக்குத் தாலி கட்டினார். என் உடல் புல்லரித்தது. என் வாழ்வில் மறக்கமுடியாத நேரம் அல்லவா அது!

 

padmini_wed.jpg  

 

‘12 மணிக்கு குருவாயூரிலிருந்து புறப்பட்டு அவர் ஊரான தலைச்சேரி சென்றோம். அங்கு, மஞ்சள் துணி விரித்த மனையில் என்னை அமர்த்தினார்கள். அந்தக் கணத்திலிருந்து நான் அவர்கள் குடும்பத்தில் ஒருத்தியாகிவிட்டேன். ‘சென்னை ஆபட்ஸ்பரி மண்டபத்தில் திருமண வரவேற்பு நடைபெற்றது. சினிமாகாரர்களைப் பார்க்க, மாலையில் மவுண்ட் ரோட்டில் ஜன சமுத்திரம் அலை அலையாகக்  கூடியது. இரவு நெருங்க நெருங்க, 1961-ன்  சுனாமியாகி  தேனாம்பேட்டையையே திணறச் செய்துவிட்டார்கள்.

*

ராஜாஜி, எம்.எஸ்.சுப்புலட்சுமி உள்ளிட்டவர்கள் நேரிலும், மாநில கவர்னர்கள், ராணி எலிசெபத், மவுன்ட்பேட்டன் பிரபு, நேரு, ஜனாதிபதி ராஜேந்திர பிரசாத், நேபாள மன்னர் போன்றவர்கள் தந்தி மூலமும் பத்மினிக்குத் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர். உலகப் பேரொளியின்  திருமணத்தில் தமிழ் சினிமாவின் மூவேந்தர்களும் ஆப்சென்ட். ஜெமினி தன் இரண்டு மனைவிகளுடன் (பாப்ஜி - சாவித்திரி) ஸ்ரீதரின் ‘தேன் நிலவு’ ஷூட்டிங்கில், வைஜெயந்திமாலாவுடன் ஓஹோ எந்தன் பேபி பாடியவாறு காஷ்மீரில் இருந்தார். சிவாஜிக்குப் பதிலாக அவரது தாயார் ராஜாமணி அம்மாள், தம்பி வி.சி.ஷண்முகம் ஆபட்ஸ்பரிக்குச் சென்று ஆசிர்வதித்தனர். எம்.ஜி.ஆர். பற்றிய செய்திகள் கிடையாது. அக்கா லலிதாவின் கல்யாணத்தில், நடிகர் சங்கத் தலைவராக வாழ்த்துப் பத்திரம் வாசித்தவர் புரட்சி நடிகர்.

விவிஐபிகளுக்காக பிரத்யேக ரிசப்ஷன் ஓஷியானிக் ஹோட்டலில் நடந்தது. அதில் ரவிசங்கரின் சிதார் இசை இடம் பெற்றது. வேறு எந்த முக்கியப் பிரமுகரின் அழைப்புக்கும் விரல் அசைத்து வாசிக்காத மேதை,  பத்மினிக்காக சிதாரை மீட்டி, கலையரசிக்கும் தனக்கும் உள்ள சிறப்பான சிநேகத்தை வெளிப்படுத்தினார்.

மலையாள நாயர் வகுப்பைச் சேர்ந்தவர் பத்மினி. தமிழ்ப் பண்பாட்டினை மறக்காமல் தன் திருமணத்தில் தொங்கத் தொங்கத் தங்கத்தாலி கட்டிக்கொண்டார். பத்மினி மீதான தமிழர்களின் நேசம், சரித்திரம் காணாதது. வேறு எந்த சினிமா  ஸ்டாரின் கல்யாணத்தைவிட பத்மினியின் திடீர் திருமண அறிவிப்பும், உடனடியான கல்யாண ஏற்பாடுகளும் அன்றைய தமிழகத்தில் சமூக, அரசியல் விவகாரங்களைப் பின்னுக்குத் தள்ளின. அன்றைக்கு இதேபோல் இன்டர்நெட் வசதிகளும், தனியார் தொலைக்காட்சி சேனல்களும் இருந்திருந்தால், மங்கல நிகழ்வுகள் உலகமெங்கும் நிச்சயம் நேரடி ஒளிபரப்பாகக் காட்டப்பட்டிருக்கும். அந்தக் குறையே தெரியாதவாறு, ‘தினத்தந்தி’ நாள்தோறும் தலைப்புச் செய்திகளைத் தொடர்ந்து வெளியிட்டு தமிழ்நாட்டைத் தயார் செய்தது. ‘இரவும் பகலும் சினிமாவில் நடிக்கிறார் பத்மினி!’, ‘ஓட்டல்கள் நிறைந்துவிட்டன’, ‘பத்மினி திருமணத்தைப் பார்க்க ரசிகர் கூட்டம்!’, ‘இன்று நடக்கிறது பத்மினி - ராமச்சந்திரன் திருமணம்!’, ‘பத்மினி கழுத்தில் தாலி கட்டினார் மாப்பிள்ளை ராமச்சந்திரன்!’…

தங்களின் அபிமான நடிகையை மணமகள் கோலத்தில் காண வேண்டும் என்பதற்காக, மெனக்கெட்டு கிடைத்த வாகனங்களில் ஏறி, குருவாயூர் போய்ச் சேர்ந்த 1961-ன் விடலைகள், இந்நேரம் ஆயிரம் நிலவைக் கொண்டாடி இருப்பார்கள். பத்மினி கல்யாணத்துக்குப் போக வர இருபது ரூபாய் டிக்கெட் என்றெல்லாம் வாலிபர்களை உசுப்பேற்றி, தமிழகத்தின் தனியார் பஸ் அதிபர்கள் வசூலை வாரிக் குவித்தார்கள். சென்னை ராஜதானியில், மூன்று தினங்களுக்கு பத்மினியால் இன்பப் பிரளயம் நிகழ்ந்தது.

பத்மினி - ராமச்சந்திரன் தம்பதிக்கு ஒரே மகன் பிரேம் குமார். தற்போது அவருக்கும்  ஐம்பது வயதுக்கு மேல் இருக்கும். டைம் பத்திரிகையில் நிருபர் பணி. அவரது மனைவி ஒரு டாக்டர். கேரளத்தைச் சேர்ந்தவர். அவர்களுக்கும் ஓர் ஆண் வாரிசு.
 

3.jpg


நட்சத்திரங்களிடையே நோய்க்கிருமியாகப் பரவும் காழ்ப்புணர்ச்சி, பத்மினியிடம் அறவே கிடையாது. தன் காலத்தில் ஒளிவீசிய சக கதாநாயகிகள் அத்தனை பேருடனும் சேர்ந்து நடித்தவர் அவர் ஒருவரே. ஓய்வாக இதை வாசிக்கிறவர்கள், சட்டென்று அந்த நட்சத்திரப் பட்டியலை ஒரு பார்வை பார்த்துவிடலாம்.

1.  டி.ஆர். ராஜகுமாரி - அன்பு, தங்கப்பதுமை

2. பானுமதி - மதுரைவீரன், ராஜாதேசிங்கு

3. அஞ்சலிதேவி - சொர்க்கவாசல், மன்னாதிமன்னன்

4. வைஜெயந்திமாலா - வஞ்சிக்கோட்டை வாலிபன்,  அமர் தீப் (ஹிந்தி)

5. சாவித்ரி - அமரதீபம், சரஸ்வதி சபதம்

6. கண்ணாம்பா - புனர்ஜென்மம்

7. ராஜசுலோசனா - அரசிளங்குமரி

8. சௌகார் ஜானகி - பேசும் தெய்வம்

9. கே.ஆர்.விஜயா - இருமலர்கள், பாலாடை

10.ஜெயலலிதா - குருதட்சணை

11. லட்சுமி - பெண் தெய்வம், திருமகள்

12. சரோஜாதேவி - தேனும் பாலும்

13. தேவிகா - சரஸ்வதி சபதம், அன்னை வேளாங்கன்னி

14. காஞ்சனா - விளையாட்டுப்பிள்ளை

15. வாணிஸ்ரீ - எதிர்காலம், குலமா குணமா

 16. ராஜஸ்ரீ – இரு துருவம்

17. விஜயநிர்மலா – சித்தி

18. மஞ்சுளா – ரிக்ஷாக்காரன்

19. சுஜாதா - தாய்க்கு ஒரு தாலாட்டு

20. நதியா - பூவே பூச்சூடவா

21. ஜெயசித்ரா - லட்சுமி வந்தாச்சு

பத்மினியோடு மிக அதிகப்படங்களில் நடித்தவர், அறுபதுகள் வரையில்  எம்.என்.ராஜம். அதன் பிறகு மனோரமா. விஜயகுமாரி, வெண்ணிற ஆடை நிர்மலா ஆகியோரை நீங்கள் பத்மினியோடு பார்த்திருக்கிறிர்களா? ஒருவேளை மற்ற மொழிகளில் நிர்மலாவும் பப்பியோடு தோன்றி இருக்கலாம். விஜயகுமாரிக்கு அந்தச் சந்தர்ப்பமும் கிடையாது. மிக நீண்ட வருடங்கள், அவர் மற்ற மொழிகளில் நடித்தது இல்லை. கவிஞர் கண்ணதாசனின் ‘தாயே உனக்காக’  படத்தில் கவுரவ வேடங்களில், தனித் தனி கதைகளில் சிவாஜி - பத்மினி, எஸ்.எஸ்.ஆர். - விஜயகுமாரி, முத்துராமன் - தேவிகா ஆகிய ஜோடிகள் நடித்தனர்.  பத்மினியும் விஜயகுமாரியும் இணைந்து நடித்த காட்சிகள் அதில் கிடையாது. ‘சின்னதம்பி’ புகழ் குஷ்புகூட பேபி ஆர்ட்டிஸ்டாக ஹிந்தியில் பத்மினியுடன் நடித்திருக்கிறார். தமிழில் ஏறக்குறைய இரண்டு டஜன் ஹீரோயின்களோடு நடித்த ஒரே நட்சத்திரம் பத்மினி! ஹிந்தியை கணக்கில் சேர்த்தால் பட்டியல் நீளும்.

பத்மினியின் ஒப்பற்ற உயர்ந்த குணங்களில் மிக முக்கியமானது தோழமை. 1950-களில் அரும்பி, எம்.என்.ராஜம் உள்ளிட்ட சக நட்சத்திரங்களிடம், அந்திம காலம் வரையில் ஆத்ம நேசத்தோடு நிறம் மாறாமல் மண்ணின் மகளாகப் பழகியவர். மூப்பு படர்ந்து நட்சத்திர வாழ்வின் எல்லையில் இருந்தபோதும், முன் பின் பார்த்திராத பத்திரிகையாளரைக்கூட பத்மினியின் வரவேற்பு புத்துணர்ச்சி பெற வைக்கும். சிநேக பாவத்துடன் நேர் காணல் பூர்த்தி பெறச் செய்யும். நான் பத்மினி என்கிற ஆணவம், திமிர், தெனாவட்டு எதுவும் அவர் முகத்தில் தென்படாது. பொதுவாக, பெண்களின் நிரந்தர அடையாளம் புறம் பேசுதல். எப்போதும் உச்ச நட்சத்திரமாக மிளிர்ந்தும், பத்மினி ஒருகாலும் சக நடிகைகள் குறித்துத் தவறாக ஒரு சொல் பேசியதாக வரலாறு இல்லை.

பத்மினியின் மாபெரும் சாதனைகள் அவருடைய பாதங்களால் வேர் விடவில்லை. நாக்கில் நிலைப்படியாக நின்றது.

‘வட இந்திய நடிகர் நடிகையர் எல்லாருடனும் அநேகமாக நடித்திருக்கிறேன். ஆனால் யாருடனும் சின்ன சண்டைகூடப் போட்டதில்லை. சாதாரண உப நடிகை எனக்கு அட்வைஸ் பண்ணினாலும்கூட, அதில் ஏதாவது அர்த்தம் இருக்கும் என்று நல்லவிதமாக எடுத்துக் கொள்வேன். எனக்குக் கோபமே வராது. யாராவது சில சமயம் என்னைப் பற்றி குத்தலாகப் பேசுவது கேட்கும். காதில் விழுந்ததாகவே காட்டிக்கொள்ளமாட்டேன்.

‘ஒரு நாளைக்கு நான்கு மணி நேரம் மாத்திரமே தூங்க முடியும். அப்படி ஓர் உழைப்பு. புகழ்பெற்ற நடிகையாக இருப்பது லேசான காரியம் இல்லை. உடம்பை சீராக வைத்துக்கொள்ள வேண்டும். தோற்றம், நிறம், கவர்ச்சி எல்லாவற்றையும் பாதுகாக்க வேண்டும். கூடிய வரை, தயாரிப்பாளர்களுடன் ஒத்துழைக்க வேண்டும். இவற்றில் கொஞ்சம் தவறினால்கூடக் கீழே போக வேண்டியதுதான். அப்புறம் மேலே வருவது ரொம்ப சிரமம்!’  - பத்மினி.

அநேக நாயகிகளுக்கு அதிர்ஷ்டமாக அமைந்த இரட்டை வேடம், பத்மினிக்குக் கிடைக்காமல் போனது. உங்களை ஏன் இரட்டையராகப் பார்க்க முடியவில்லை? ‘மாதத்தில் பத்து நாள்களாவது நாட்டியமாடுவது என்று எப்போதும் நடிப்பையும் நாட்டியத்தையும் இரு கண்களாக  பாவித்து வந்தேன். ஒரு வேடத்தில் நன்றாக நடித்துப் பெயர் வாங்குவதே கஷ்டமான காரியம். இதில் இரு வேடங்களில் நடிப்பது என்னால் எப்படி முடியும்? சுசித்ரா சென், தாயும் மகளுமாக நடித்த மம்தாவின் தமிழ் ரீமேக்கில் நடிக்க எனக்கு ஆசை. ‘காவியத்தலைவி’ என்ற பெயரில் சௌகார் ஜானகி அதை சொந்தமாகத் தயாரித்து நடித்தார்’.

பத்மினி உஷார் பார்ட்டி. கணேசனின் பிரியசகியாக திரையில் இடைவிடாமல் வலம் வந்தவர். டி.ஆர்.ராஜகுமாரி தொடங்கி ஏராளமானோர் சிவாஜியை நாயகனாக்கிச் சொந்தப் படங்களைத் தயாரித்தனர். மற்ற ஹீரோயின்கள் செய்த தவறை அவர் சிந்தித்தவர் அல்ல. ‘என்னை ஹிந்தி, தமிழ்ப் படங்கள் தயாரிக்கும்படி சில பேர் யோசனை கூறியது உண்டு. ஆனால்,  அந்த முயற்சியில் ஈடுபட்டதில்லை. நான் ஒரு சிறந்த நடிகையாக இருக்கலாம். ஆனால் தயாரிப்பாளராக வெற்றிபெறுவதற்கு எனக்குத் தகுதி இல்லை என்பதே என் அபிப்ராயம்’ - பத்மினி.

பத்மினிக்கு ஆஸ்துமா தொந்தரவு உண்டு. 1971 மார்ச் 27-ல், அமெரிக்காவில் கென்னடி ஏர்போர்ட்டில் பத்மினி சென்று இறங்கும்வரையில் அவரைப் படாதபாடு படுத்தியது. கால்ஷீட் கலாசாரத்தில் அந்நோயைக் கண்டுகொள்ளமாட்டார். மழை, பனி, குளிர் என்று பாராமல்,  நிஜமான நீரோடைகளிலும் சினிமா அருவிகளிலும் குதியாட்டம் போடுவார். மூக்கடைப்பும் மூச்சுத் திணறலும் அவரது வாழ்க்கையில் நிழலாக உடன் வந்தது.

சரம் சரமாக மல்லிகைப்பூ தோரணமாக மணக்கும் கூந்தல், மாம்பழம், அம்பலப்புழை பால் பாயசம், ஊறுகாய் ஆகியவை பத்மினிக்கு உயிர். ரொம்பவும் நட்சத்திரப் பஞ்சாங்கம் அவர். நியூஜெர்ஸியில் கணவர் வாங்கிய சொந்த வீட்டில், 1971 செப்டம்பர் 15-ல் குடித்தனம் செய்யத் தொடங்கிய நாள் முதலாக, வெள்ளிப் பிள்ளையாருக்கு பூஜை,  தியானம், சடங்கு, சம்பிரதாயம் எல்லாவற்றிலும் ஆழ்ந்த பற்று ஆரம்பித்தது. பத்மினி, வடஅமெரிக்காவுக்குப் போன பின்பே அங்கு விநாயகருக்குக் கோயில் கட்டப்பட்டது. அதற்காக, ஓயாமல் ஆடி நிதி திரட்டித் தந்தார். தனது 63-வது பிறந்த நாளில், கடுங் குளிர் வீசும் கார்த்திகைத் திங்களில் திருப்பதியில் அங்கப்பிரதட்சணம் செய்தவர் பத்மினி.

இந்தியாவின் மிகப்பெரிய நட்சத்திரக் குடும்பம் பத்மினியுடையது. திருவாங்கூர் சகோதரிகள் மூவரைத் தவிர, பத்மஸ்ரீ பட்டம் பெற்ற சுகுமாரி, பத்மினிக்கு மாமன்  மகள். தில்லானா மோகனாம்பாளில் மதன்பூர் மகாராணியாக, எம்.என்.நம்பியாரின் மனைவியாகத் தோன்றிய அம்பிகா, பத்மினியின் பெரியம்மா பெண்.

மலையாள சினிமாவில் இந்தியாவின் சிறந்த நடிகை எனும் தேசிய விருது பெற்ற ஷோபனா, பத்மினியின் தம்பி மகள். எனக்குள் ஒருவன், இது நம்ம ஆளு,  தளபதி, மல்லுவேட்டி மைனர் போன்றவை, தமிழில் அவரது பெயரைச் சொல்லும். நாட்டியத்துக்காகத் தன் வாழ்க்கையை அர்ப்பணித்தவர். காதல் தேசம், சந்திரமுகி புகழ் வினீத், பத்மினியின் கணவர் ராமச்சந்திரனின் தம்பி மகன்.

குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்தில் என்பார்கள். குழந்தையும் தெய்வமும் மட்டுமல்ல, ரத்த சொந்தங்களும் அன்பைப் பொழிந்தால் மட்டுமே நீண்ட காலம் நிலைத்திருக்கும். அபூர்வ சகோதரிகளா இவர்கள்! இவர்களுக்குள் சண்டை சச்சரவே வராதா என லலிதா - பத்மினியைப் பார்த்து அங்கலாயித்தவர்கள் ஆயிரம் பேர். ஏன் அவர்களுக்குள் தகராறு இல்லை. பத்மினி, ரத்த பாசத்தின் ரகசியம் குறித்துச் சொன்னவை -

‘எங்க அம்மா, மூன்று பேருக்கும் ஒரே மாதிரியான டிரஸ் வாங்குவார். உடைகள்ல மட்டும் ஒற்றுமையில்ல. உள்ளத்தின் எண்ணங்களும் எங்களுக்குள் ஒத்துப்போச்சு. ஆச்சரியமான நெருக்கமும் பாசமும் இருந்தது. லலிதாவும் நானும் சகோதரிகளாகப் பழகவில்லை. இரு தோழிகளாகவே பழகினோம். அக்கா நல்ல பொறுமைசாலி. அவளிடமிருந்து நான் பல நல்லப் பண்புகளைக் கற்றுக்கொண்டிருக்கிறேன். ஒருநாள்கூட நாங்கள் சண்டை போட்டுக்கொண்டது இல்லை. ஒருவரைப் பார்த்து மற்றவர் பொறாமைப் பட்டது கிடையாது.

இத்தனைக்கும், எனக்குத்தான் கதாநாயகி ரோல் கிடைக்கும். லலிதாவுக்கு சாதாரணமா வில்லி கேரக்டர். ராகினிக்கு காமெடி ரோல்னு அமையும். நடிப்பைத் தொழிலாக நாங்க பாவிச்சமே தவிர, புகழைப் பிடிக்கணும்ங்கற ஆசை வராது.

குறும்பு, ராகினியின் கூடவே பிறந்தது. திருவருட்செல்வர் ஷூட்டிங் நடந்த சமயம். அடிக்கடி காஸ்ட்யூம் மாற்றி ஆடியதால், களைத்துப் போனேன். செட்டின் ஓரமாக சோபாவில் சாய்ந்தவள், என்னையும் அறியாமல் தூங்கிவிட்டேன். மீண்டும் ஷாட்டுக்காக என்னை அழைக்க ஆடப் புறப்பட்டேன். மொத்த யூனிட்டும் என்னைப் பார்த்துச் சிரித்தது. எதற்காகச் சிரிக்கிறார்கள் என்று புரியாமல், ஏன் கேலி செய்கிறீர்கள் என்று கேட்டேன்.

கண்ணாடியில் முகத்தைப் பார்க்கச் சொன்னார்கள். நான் கண் அயர்ந்த சமயம், ராகினி எனக்கு அழகாக மீசை போட்டிருந்தாள். அதைப் பார்த்ததும் நானும் என் தங்கையின் செய்கையை எண்ணிச் சிரித்தேன். ராகினி எப்போதும் தமாஷ் பேர்வழி.

உறவினர்களின் நெருக்கம்தான் என் பலம். இந்த மண்ணின் ஈர்ப்பும் கடமை உணர்வும் என் பலம். அதுதான் என்னை இங்கு வருஷத்துக்கு ஒருமுறை இழுக்கிறது. பந்தம், பாசம் என்பதுதான் வாழ்வுக்கு அர்த்தத்தைக் கொடுப்பது, எங்கிருந்தாலும்.

பொன் நகைகளில் எனக்கு அலாதிப் பிரியம் உண்டு. பூத்தாலி போன்ற எங்கள் மாநிலத்து ஆபரணங்களை வைத்திருக்கிறேன். லலிதா, ராகினி கொடுத்தவை, ஜெமினி எஸ்.எஸ்.வாசனின் மனைவி பட்டம்மாள் தந்த வளையல்கள், இப்படிப் பலவிதமான அணிகலன்கள் என்னிடம் இருக்கின்றன. இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு நான் வாங்கிய நகைகளைக்கூட நான் அழித்து மாற்றிக்கொள்ளவில்லை.

ஏனென்றால், அவை ஒவ்வொன்றும் எனக்கு ஒவ்வொரு நிகழ்ச்சியை ஞாபகப்படுத்திக்கொண்டிருக்கின்றன. அவை ஒளிவிடும்போது, என் வாழ்க்கையின் ஒளி மிகுந்த நாள்களை மறுபடி நினைவுப்படுத்திக் கொண்டிருக்கின்றன.

‘பத்மினியைத் தவிர வேறு எந்தப் பிரசாசமும் இல்லாமல் உருவானது  ‘பூவே பூச்சூடவா’. டைரக்டர் ஃபாசில், அவருக்குப் பரிச்சயமானவர் அல்ல. முன்பின் பார்த்தறியாதவர். புது இயக்குநர் சொன்ன கதை பிடித்ததும், பத்மினி எந்த மறுப்பும் சொல்லாமல் கேமரா முன்பு மீண்டும் தோன்றினார். மலையாளத்தில் ‘நோக்கத் தாத்த தூரத்து கண்ணும் கூட்டு’ என்ற பெயரில் முதலில் தயாராகி, பின்னர் தமிழில் ரீமேக் ஆனது. இரண்டிலும் பத்மினி தன்னை நிரூபித்து நின்றார். பத்திரிகைகளின் பாராட்டு மழையில் நனைந்தார்.

‘அழகிய பாட்டியாக வருபவர் பத்மினி. அழுத்தமான பாகம். அநாயாசமாகச் செய்திருக்கிறார்’, ‘பத்மினியிடம் அந்நாளைய அனுபவம் பளிச்சிடுகிறது!’ மலையாளத்தில் ‘நோக்கத் தாத்த தூரத்து கண்ணும் கூட்டு’ மாதிரியான கவிதைகள், வழக்கமானதாக இருக்கலாம். தமிழில் பூவே பூச்சூடவாவின் திரைக்கதையும் தரமும் வசூலும் அபூர்வமானது.

2006 செப்டம்பர் 23. மாலையில், சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடந்தது பாசத்தலைவனுக்குப் பாராட்டு விழா!  சக்கர நாற்காலியுடன் பத்மினி பங்கேற்ற நிறைவான நிகழ்வு. அவரது அறிமுகப் படமான மணமகளுக்கு வசனம் எழுதிய மு.கருணாநிதியின் சிறப்பைச் சொன்னது. அமெரிக்காவில் வாழ்வது தாற்காலிகம் என்கிற உணர்வோடே வாழ்ந்தவர். தமிழ் மண்ணில்தான் உயிர் விட வேண்டும் என்று தயாராகத் தாயகம் திரும்பியவர். மரணம் பொதுவானது. பத்மினிக்கும் மாரடைப்பால் நேர்ந்தது. மறுநாள் செப்டம்பர் 24.  இரவு பத்து மணி பத்து நிமிடங்களுக்கு, உலக நாட்டியப் பேரொளி இயற்கை எய்தினார்.
 

4.jpg  

 

பத்மினியின் அளப்பரிய சாதனைகளுக்கு ஏற்றவாறு, நமது தேசம் அவருக்கு மரியாதை செலுத்தத் தவறிவிட்டது. இத்தனைக்கும் அகில இந்திய நட்சத்திரம்!  நேரு, காமராஜர் போன்ற பெருந்தலைவர்களிடம் நல்ல அறிமுகம் உடையவர். 1967-ல், தமிழகத் தேர்தலில் காங்கிரஸுக்காக பிரசாரம் செய்தவர்.

அவரது மயிலாப்பூர் வீட்டுக்கு பத்மஸ்ரீ என்று பெயர். ஆனால், மத்திய அரசின் பத்மஸ்ரீ உள்ளிட்ட எந்த விருதுகளும் பத்மினிக்குக் கிட்டாமல் போனது. நாலு மொழிகளிலும் அவர் நடித்த ஏராளமானவை, வருடம்தோறும் சிறந்த படங்களுக்கான தேசிய விருதுகளை வாங்கிக் குவித்துள்ளன. பத்மினி போன்ற ஆற்றல்மிக்கக் கலைஞர்கள், பத்ம விருதுகள் பெற என்ன அளவு கோல் என்பது புதிராக உள்ளது. தமிழகத்தின் ஒப்பற்ற சாதனையாளர்களை, குறிப்பாகச் சிறந்த நடிகைகளை மத்திய அரசு மதிக்கவில்லையோ என எண்ணத் தோன்றுகிறது.

குறுகிய  இடைவெளியில் காலமானதாலோ என்னவோ, (ஸ்ரீவித்யா நினைவு தினம் அக்டோபர் 19), தென் இந்திய நடிகர் சங்கம் பத்மினிக்கும், நடிகை ஸ்ரீவித்யாவுக்கும் சேர்ந்தே அஞ்சலிக் கூட்டம் நடத்தியது. குழந்தைப் பருவத்தில் இருந்து எதிர் வீட்டில் வாழ்ந்த பத்மினியைப் பார்த்து, பரதம் கற்றுக்கொண்டு அவரது இன்ஸ்பிரேஷனால், படங்களில் நடிக்க வந்தவர் ஸ்ரீவித்யா. தமிழர்களின் உதாசீனத்துக்குள்ளான, போற்றப்படாத திறமைசாலி. நட்சத்திர வாழ்க்கையால் அமைதியை இழந்தவர் என்றெல்லாம் அடையாளப்படுத்தப்பட்டவர்.

தமிழகத்தைச் சேர்ந்தவரான ஸ்ரீவித்யாவுக்கு, கேரளம் அரசு மரியாதைகளுடன்  இறுதி அஞசலி செலுத்தியது. தென் இந்தியாவில் வேறு எந்த நடிகைக்கும் கிடைத்திராத சிறப்பு, ஸ்ரீவித்யாவுக்கு மரணத்துக்குப் பின் நிகழ்ந்தது. ஒருவேளை நர்கீஸுக்கும் அத்தகைய உயரிய தனித்துவத்தை மராட்டியம் வழங்கி இருக்கலாம். அமரத்துவம் அடைந்த நர்கீஸின் உடலை, அம்மாநில முதல்வரே சுமந்து சென்றதாகச் செய்திகள் உண்டு.

கேரளத்தில், சினிமாகாரர்கள் கட்சி தொடங்கி ஆட்சியைப் பிடித்ததாகச் சரித்திரம் கிடையாது. ஆனாலும், மலையாளிகள் தாங்கள் உளமாற நேசித்த, தங்களின் அபிமான நடிகையை மயானம் வரையிலும் மாண்புறச் செய்தனர். கலையுலகிலிருந்து தொடர்ந்து மாநில முதல்வர்களைத் தேர்வு செய்கிற தமிழர்கள்,  பத்மினிக்காகச் செய்த மேன்மைகள் என்ன?  கேள்விக்குறியோடும், ஆதங்கத்தோடும் நிறைவுபெறுகிறது உன்னதமான பத்மினியின் கலை உலக நிகழ்வுகள்.

அடுத்து, உருக்கத்தின் விளைநிலம் நடிகையர் திலகம் சாவித்ரியின் அரிதார நாள்களை அலசலாம்.

http://www.dinamani.com

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 28 MAR, 2024 | 09:33 PM   இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் சில்வெஸ்டர் வோர்திங்டன்( SYLVESTER WORTHINGTON) வடக்கு விஜயத்தின் ஒரு பகுதியாக  இன்று வியாழக்கிழமை (28)  காலை மன்னாருக்கான விஜயம் மேற்கொண்டார் .  இந்த நிலையில் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் ஏற்பாட்டில் பாதிக்கப்பட்டவர்கள், மனித உரிமைகள் செயற் பாட்டாளர்களை ஒன்றிணைத்து இடம்பெற்ற விசேட சந்திப்பில் கலந்து கொண்டார்.   குறித்த சந்திப்பில் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் சட்டத்தரணி ரனித்தா ஞானராஜ் உள்ளடங்களாக மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலைய பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.    குறித்த கலந்துரையாடலின் போது அவுஸ்திரேலியாவின் நிதி உதவியுடன் திட்டங்கள் அமுல் படுத்தப்பட்ட நிறுவனங்களுடன் கலந்துரையாடல் நடத்தப்பட்ட நிலையில் மன்னார் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் அலுவலகத்தில் பயனாளிகளுடன் கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன் போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டவர்கள் உடன் அவர்களின் என்னக் கருத்துக்களையும் கேட்டறிந்தார். மேலும் மன்னாரில் பால்நிலை அடிப்படையிலான வன் முறைகளும் பெண்கள் எதிர் நோக்குகின்ற பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது .  https://www.virakesari.lk/article/179920
    • காஸா போர்: ஐ.நா தீர்மானத்தால் இஸ்ரேல் தனிமைப்படுத்தப்படுகிறதா? அமெரிக்கா கூறுவது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி கட்டுரை தகவல் எழுதியவர், டேவிட் கிரிட்டன் பதவி, பிபிசி நியூஸ் 7 மணி நேரங்களுக்கு முன்னர் காஸாவில் இஸ்ரேலுடனான போர் நிறுத்தத்திற்கான தற்போதைய முன்மொழிவை ஹமாஸ் நிராகரித்துள்ளதாக இஸ்ரேல் கூறியுள்ளது. உடனடி போர் நிறுத்தம் கோரிய ஐ.நா பாதுகாப்பு சபையின் தீர்மானம் 'சேதத்தை' ஏற்படுத்தியுள்ளது என்பதை இது காட்டுகிறது. பாலத்தீன ஆயுதக் குழுவின் ஏற்க முடியாத கோரிக்கைகளுக்கு இஸ்ரேல் அடிபணியாது என்று பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவின் அலுவலகம் தெரிவித்துள்ளது. காஸாவில் இருந்து இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் முழுமையாக வெளியேற வேண்டும் என்றும், போரை நிறுத்தவும் ஹமாஸ் கோரிக்கை விடுத்துள்ளதாக இஸ்ரேல் கூறுகிறது. அதேநேரம் இஸ்ரேலின் அறிக்கை கிட்டத்தட்ட எல்லா விஷயங்களிலும் தவறானது என்று அமெரிக்கா கூறியுள்ளது. திங்கட்கிழமை ஐ.நா. பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்பு நடப்பதற்கு முன்னதாகவே ஹமாஸின் அறிக்கை தயாரிக்கப்பட்டதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வலியுறுத்தியுள்ளார். ஹமாஸ் ராணுவப் பிரிவின் துணைத் தலைவர் மர்வான் இசா இரண்டு வாரங்களுக்கு முன்னர் நுசைரத் அகதிகள் முகாமின் சுரங்கப்பாதை வளாகத்தில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதை உறுதி செய்திருப்பதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது.   24 மணிநேரத்தில் 81 பேர் பலி பட மூலாதாரம்,REUTERS “உளவுத்துறை அறிக்கைகள் அனைத்தையும் நாங்கள் சரிபார்த்தோம். மார்வான் இசா வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டார்,” என்று இதுகுறித்து இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளர் ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி தெரிவித்தார். இஸ்ரேல் தெரிவிப்பதில் தனக்கு 'நம்பிக்கை இல்லை என்றும் அந்த அமைப்பின் ராணுவத் தலைமை மட்டுமே இதுகுறித்து 'இறுதியாக ஏதாவது சொல்லும்' என்றும் ஹமாஸ் அரசியல் தலைவரான இஸாத் அல் ரிஷ்க் கூறுகிறார். இசா இந்தக் குழுவின் 'மூன்றாம் நிலையில் இருக்கும் தலைவர்' என்றும், அக்டோபர் 7ஆம் தேதி தெற்கு இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் 'முக்கிய ஏற்பாட்டாளர்களில் ஒருவர்' அவர் என்றும் ரியர் அட்மிரல் ஹகாரி கூறியுள்ளார். இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலில், 1,200 பேர் கொல்லப்பட்டனர், 253 பேர் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து இஸ்ரேல் காஸாவில் பதில் தாக்குதல் மேற்கொண்டது. காஸாவில் இதுவரை 32,400க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாகவும், கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 81 பேர் உயிரிழந்துள்ளதாகவும் ஹமாஸ் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. காஸாவில் போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பாக முட்டுக்கட்டை நிலவி வருகிறது. காஸாவில் உடனடியாக போர் நிறுத்தத்தை அமல்படுத்த ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் முதன்முறையாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு எதிராக இஸ்ரேல் கடும் எதிர்வினையைப் பதிவு செய்துள்ளது.   தீர்மானத்தில் ஹமாஸை கண்டனம் செய்வது பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்பின் போது அமெரிக்கா வாக்களிக்கவில்லை. இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவாக பிரிட்டன் உட்பட 14 பாதுகாப்பு சபை உறுப்பினர்கள் வாக்களித்தனர். போர் நிறுத்தம், மீதமுள்ள பிணைக் கைதிகளை நிபந்தனையின்றி விடுவித்தல் மற்றும் மனிதாபிமான உதவியை விரிவுபடுத்துதல் ஆகியவை இந்தத் தீர்மானத்தில் அடங்கும். இஸ்ரேலின் நெருங்கிய கூட்டாளியும் ராணுவ ஆதரவாளருமான அமெரிக்கா, அக்டோபர் 7 தாக்குதலுக்கு ஹமாஸை கண்டிக்கத் தவறிய தீர்மானத்தை விமர்சித்துள்ளது. இருப்பினும் இஸ்ரேலின் போர் முறைகள் தொடர்பாக அதிகரித்து வரும் கோபம் காரணமாக இந்தத் தீர்மானத்தின் மீது வாக்களிப்பதில் இருந்து அமெரிக்கா விலகிக் கொண்டது. ஆனால் அமெரிக்கா இந்தப் போரின் முக்கிய நோக்கங்களுக்கு முழு ஆதரவளிப்பதாகக் கூறியது. இந்த முன்மொழிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இஸ்ரேல், வாஷிங்டனுக்கான தனது தூதுக்குழுவின் பயணத்தை ரத்து செய்துள்ளது. காஸாவின் தெற்கு நகரமான ரஃபாவில் தரைவழித் தாக்குதலை நடத்துவதற்கான திட்டத்தைப் பற்றி விவாதிக்க தூதுக்குழு அங்கு செல்வதாக இருந்தது. தற்போது 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் ரஃபாவில் தஞ்சமடைந்துள்ளனர். முழு அளவிலான தாக்குதல் மனித பேரழிவாக நிரூபிக்கப்படலாம் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது. பின்னர் ஹமாஸ் போர் நிறுத்த திட்டத்தை நிராகரித்து அறிக்கை வெளியிட்டது. அமெரிக்கா, கத்தார் மற்றும் எகிப்து நாடுகளின் மத்தியஸ்தத்துடன் தோஹாவில் நடைபெற்ற மறைமுக பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்தத் திட்டம் உருவானது. "நிரந்தர போர் நிறுத்தத்துடன்" காஸாவில் இருந்து இஸ்ரேலிய படைகள் முற்றிலுமாக வெளியேறவும், இடம்பெயர்ந்த பாலத்தீனியர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பவும் அழைப்பு விடுத்த தன் அசல் கோரிக்கையைத் தான் பற்றி நிற்பதாக ஹமாஸ் கூறியது. ஹமாஸின் நிலைப்பாடு, 'பேச்சுவார்த்தை மூலமான ஒப்பந்தத்தில் அதற்கு எந்த ஆர்வமும் இல்லை என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. கூடவே ஐ.நா. பாதுகாப்பு சபையின் தீர்மானத்தால் ஏற்பட்ட சேதத்தை உறுதிப்படுத்துகிறது,” என்று செவ்வாய்கிழமை காலை இஸ்ரேலிய பிரதம மந்திரி அலுவலகம் தெரிவித்தது. ஹமாஸின் திசை திருப்பும் கோரிக்கைகளை இஸ்ரேல் ஏற்றுக் கொள்ளாது என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. "ஹமாஸின் ராணுவ மற்றும் அரசாங்க திறன்களை அழித்தல், எல்லா பிணைக் கைதிகளையும் விடுவித்தல், காஸா, இஸ்ரேலிய மக்களுக்கு எதிர்கால அச்சுறுத்தலை ஏற்படுத்தாததை உறுதி செய்தல் போன்றவற்றை உள்ளடக்கிய தனது போர் நோக்கங்களை இஸ்ரேல் தொடர்ந்து அடையும்," என்றும் அறிக்கை தெரிவிக்கிறது.   இஸ்ரேலின் பேச்சுவார்த்தைக் குழு திரும்பிவிட்ட செய்தி பட மூலாதாரம்,EPA-EFE/REX/SHUTTERSTOCK அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர் இந்த விமர்சனங்களை நிராகரித்துள்ளார். "இந்த அறிக்கை கிட்டத்தட்ட எல்லா வகையிலும் தவறானது. பிணைக் கைதிகள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு இது நியாயம் இல்லாதது" என்று அவர் வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் கூறினார்.“செய்தி அறிக்கைகள் மூலம் ஹமாஸின் எதிர்வினை பற்றிய தகவல்கள் பகிரங்கமாயின. ஆனால் அவர்களது பதிலின் உண்மையான சாராம்சம் இதுவல்ல. இந்த எதிர்வினை ஐநா பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்புக்கு முன் தயாரிக்கப்பட்து, அதற்குப் பிறகு அல்ல என்று என்னால் கூற முடியும்,” என்றார் அவர். கத்தாரின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாஜித் அல்-அன்சாரி தோஹாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், மறைமுகப் பேச்சுவார்த்தைகள் நிறுத்தப்படவில்லை, அவை தொடர்கின்றன என்றார். "பேச்சுவார்த்தைகளுக்கான கால அட்டவணை எதுவும் இல்லை. ஆனால் நாங்கள் எங்கள் கூட்டாளர்களுடன் பேச்சுவார்த்தை முயற்சிகளைத் தொடர்ந்து செய்து வருகிறோம்," என்று அவர் கூறினார். ஆனால் 10 நாட்கள் பேச்சுவார்த்தைக்குப் பிறகு இஸ்ரேல் தனது பேச்சுவார்த்தைக் குழுவைத் திரும்ப அழைத்ததாக இஸ்ரேலிய அதிகாரிகளை மேற்கோள் காட்டி இஸ்ரேலிய ஊடகங்களும் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையும் தெரிவித்துள்ளன. இரானுக்கு பயணம் மேற்கொண்ட ஹமாஸ் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியா, இஸ்ரேல் முன்னெப்போதும் இல்லாத வகையில் அரசியல் தனிமையை எதிர்கொள்வதை ஐ.நா.பாதுகாப்பு சபையின் தீர்மானம் காட்டுவதாகத் தெரிவித்தார். கடந்த ஆண்டு நவம்பர் மாத இறுதியில் ஒரு வார கால போர் நிறுத்தத்தின் போது இஸ்ரேலிய சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த சுமார் 240 பாலத்தீன கைதிகள் 105 இஸ்ரேலிய பிணைக் கைதிகளுக்கு ஈடாக விடுவிக்கப்பட்டனர். ஹமாஸ் நிராகரித்த புதிய ஒப்பந்தம், ஆறு வாரங்களுக்கு போர் நிறுத்தத்தை முன்மொழிந்ததாகக் கூறப்படுகிறது. கூடவே 800 பாலத்தீன கைதிகளுக்கு ஈடாக ஹமாஸால் பிடிக்கப்பட்ட 40 இஸ்ரேலிய பிணைக் கைதிகளை விடுவிப்பதும் இதில் அடங்கும். ஆனால் காஸாவில் போரில் தோல்வியை ஏற்கும் அறிகுறி இன்னும் தெரியவில்லை. சமீபத்திய இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் பல டஜன் பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. ரஃபாவின் புறநகரில் உள்ள குடியிருப்பு கட்டடத்தின் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் ஒன்பது குழந்தைகள் உட்பட குறைந்தது 18 பேர் கொல்லப்பட்டதாக பாலத்தீன ஊடகங்களும் உள்ளூர் சுகாதார ஊழியர்களும் கூறுகின்றனர். முசாபா பகுதியில் உள்ள அபு நக்கீராவின் வீட்டில் டஜன் கணக்கான இடம்பெயர்ந்த மக்கள் தஞ்சம் அடைந்திருந்தனர் என்றும் கூறப்பட்டது. காஸா நகரில் அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே வான்வழித் தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டதாக வடக்கு காஸாவில் உள்ள அபு ஹசிரா குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் தெரிவித்தனர். கடந்த 24 மணிநேரத்தில் 60 இலக்குகளைக் குறிவைத்ததாகவும், 'பயங்கரவாத சுரங்கப்பாதைகள், பயங்கரவாத உள்கட்டமைப்புகள் மற்றும் ராணுவ உள்கட்டமைப்புகள்' இதில் அடங்கும் என்றும் இஸ்ரேலிய ராணுவம் செவ்வாய்கிழமை காலை தெரிவித்தது. இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினர் 'அல்-ஷிஃபா மருத்துவமனை பகுதியில் துல்லியமான தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்' என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.   மனிதாபிமான உதவிகளைச் சேகரிக்கும் போது 18 பேர் கொல்லப்பட்டனர் பட மூலாதாரம்,REUTERS கடுமையான சண்டை காரணமாக நோயாளிகள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் இடம்பெயர்ந்த மக்கள் ஆபத்தில் இருப்பதாக பாலத்தீனர்கள் மற்றும் உதவிக் குழுக்கள் தெரிவித்துள்ளன. 175 'பயங்கரவாதிகள்' கொல்லப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என்றும் ராணுவம் தெரிவித்துள்ளது. வடக்கு காஸாவில் விமானத்தில் இருந்து போடப்பட்ட மனிதாபிமான உதவிகளைச் சேகரிக்கும்போது 18 பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாக காஸாவில் உள்ள ஹமாஸின் அரசு ஊடக அலுவலகம் செவ்வாயன்று கூறியது. உணவுப் பொட்டலங்களைச் சேகரிக்கும்போது 12 பேர் கடலில் மூழ்கி இறந்தனர். அதேநேரம் பொருட்களை எடுக்கும்போது ஏற்பட்ட ' கூட்ட நெரிசலில்' சிக்கி ஆறு பேர் இறந்தனர் என்று கூறப்பட்டது. இந்த அறிக்கையில் மேலதிக தகவல்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. திங்களன்று வடக்கு நகரமான பைட் லாஹியாவில் கடற்கரைக்கு அருகே ஏர் டிராப்பின் போது குறைந்தது ஒரு நபராவது நீரில் மூழ்கியதை வீடியோ காட்சிகள் காட்டின. திங்களன்று அமெரிக்க விமானம் வடக்கு காஸாவில் 18 மனிதாபிமான உதவிப் பொட்டலங்களைப் போட்டதாக பென்டகனை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் தெரிவித்தது. ஆனால் பாராசூட்டில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அவை தண்ணீருக்குள் விழுந்தன. ஆனால் யாரும் உயிரிழந்ததை உறுதிப்படுத்த முடியவில்லை. இஸ்ரேலிய பிணைக் கைதி யூரியல் பரூச் கொல்லப்பட்டதாகவும், அவரது உடல் ஹமாஸிடம் இருப்பதாகவும் இஸ்ரேலிய ராணுவம் அவரது குடும்பத்திடம் கூறியதாக பிணைக்கைதிகள் மற்றும் காணாமல் போன குடும்பங்களின் மன்றம் தெரிவிக்கிறது. 35 வயதான, இரண்டு பிள்ளைகளின் தந்தையான பரூச், அக்டோபர் 7ஆம் தேதி சூப்பர்நோவா இசை விழாவின் போது காயமடைந்தார். பின்னர் அவர் கடத்தப்பட்டார். அதே நேரத்தில் காஸாவில் ஒரு காவலர் துப்பாக்கி முனையில் தன்னை பாலியல் வன்புணர்வு செய்ததாக நவம்பரில் விடுவிக்கப்பட்ட ஒரு பெண் பிணைக் கைதி நியூயார்க் டைம்ஸ் செய்தித்தாளிடம் கூறினார். நாற்பது வயதான அமித் சுசானா தான் சிறைப்பிடிக்கப்பட்ட போது பாலியல் வன்முறைக்கு ஆளானதாகத் தெரிவித்ததாக செய்தித்தாள் குறிப்பிடுகிறது. பிணைக் கைதிகள் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டதற்கான தெளிவான மற்றும் உறுதியான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும், "அத்தகைய வன்முறை தொடரக்கூடும் என்று நம்புவதற்கு நியாயமான காரணங்கள் உள்ளன," என்றும் இந்த மாதத் தொடக்கத்தில் ஐ.நா குழு கூறியது. https://www.bbc.com/tamil/articles/cv2y4zzp76mo
    • பெரிய‌வ‌ரே நாம் த‌மிழ‌ர் க‌ட்சி 2021 ச‌ட்ட‌ ம‌ன்ற‌ தேர்த‌லில் பெற்ற‌ ஓட்டு ச‌த‌ வீத‌ம் 6:75 8ச‌த‌வீத‌ வாக்கு எடுத்து இருந்தா அங்கிக‌ரிக்க‌ ப‌ட்ட‌ க‌ட்சியாய் மாறி இருக்கும்...............இது கூட‌ தெரிய‌ வில்லை என்றால் உங்க‌ளுக்கு நாம் த‌மிழ‌ர் க‌ட்சியின் கொள்கை எப்ப‌டி தெரியும்...........சீமானுக்கு எதிரா எழுதுப‌வ‌ர்க‌ளின் க‌ருத்தை வாசிப்ப‌தில் உங்க‌ளுக்கு எங்கையோ த‌னி சுக‌ம் போல் அது தான் குறுக்க‌ ம‌றுக்க‌ எழுதுறீங்க‌ள்😁😜..............
    • 😀..... மிக்க நன்றி. இல்லை, நான் இங்கு முந்தி எழுதவில்லை. இந்த மாதம் முதலாம் திகதி தான் நான் இங்கு இணைந்தேன். இது சத்தியமான உண்மை. ஆனால் பல வருடங்களாக களத்தை வாசித்து வருகின்றேன்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.