Sign in to follow this  
போல்

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்!

Recommended Posts

அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய இயக்கத்தின் ஏற்பாட்டில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

எதிர்வரும் 8ஆம் திகதி யாழ். பிரதான பேரூந்து நிலையத்திற்கு முன்னால் இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

நிபந்தனையற்ற வகையில் அரசியல் கைதிகளை உடனடியாக விடுவிக்குமாறு வலியுறுத்தியும், பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்குமாறு கோரியும் இக்கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்படவுள்ளது.

கடந்த 2012ஆம் ஆண்டு தடுப்புக் காவலில் வைத்துத் தாக்கிக் கொலை செய்யப்பட்ட அரசியல் கைதியான டில்ருக்ஷ்ன் அவர்களின் நான்காவது வருட நினைவை மீட்கும் முகமாக குறித்த இத் தினத்தில் மேற்கொள்ளப்படவுள்ளது.

இனி வரும் காலங்களில் இத்தகைய சம்பவங்கள் ஏற்படாமல் தடுக்கும் வகையில் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும், தேசத்தைப் பதற்றத்துள் வைத்திருக்கும் அடாவடித் தனமான பயங்கரவாதத் தடைச் சட்டத்தை விலக்கிக்கொள்ள வலியுறுத்தியும் பல்வேறு அரசியல், சமூக அமைப்புக்களைச் சேர்ந்தவர்களும் இணைந்து குரல்கொடுக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.tamilwin.com/community/01/113270

Share this post


Link to post
Share on other sites

பல குற்றம் புரிந்தவர்கள் அரசுடன்... குற்றம் புரியாதவர்கள் சிறையில்....!

பல குற்றம் புரிந்தவர்கள் அரசுடன் இன்றும் இணைந்திருக்கின்ற சூழலில் குற்றம் புரியாதவர்கள் சிறைவாசம் அனுபவிப்பது என்பது உலக நீதிக்கு புறம்பானது என பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

நீண்ட காலமாக சிறைகளில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி இன்று கிளிநொச்சி கந்தசாமி கோவில் முன்றலில் நடைபெற்ற கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் அவ்வாறு தெரிவித்தார்.

தமிழ் அரசியல் கைதிகளின் உறவினர்களால் குறித்த கவனயீர்ப்பு போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.

 

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

 

அவர் மேலும் தெரிவிக்கையில்,

அரசாங்கம் காலக்கெடுகளைச் சொல்கிறது, நல்லாட்சி பற்றிப் பேசுகிறது, இந்த அரசு அமைவதற்கு நல்லெண்ணத்துடனும் தமது விடுதலை கிடைக்கும் என்ற நோக்கங்களுடனும் இந்த அரசை அமைப்பதற்கான முழு ஆதரவை வழங்கி இருந்தார்கள்.

இதுவரை ஒரு அரசியல் கைதியைக் கூட பொது மன்னிப்பு வழங்கி விடுவதற்கு இந்த அரசு தயாராக இல்லை.

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

ஜே.வி.பி நடத்திய மனித குலத்துக்கு எதிரான நடவடிக்கைகளைக் கூட கட்டுப்படுத்திய அரசு அவர்களை மூன்று ஆண்டுகளுக்குள் தனது இனம் என்ற வகையில் தனது அரசியல் நலன் கருதி விடுதலை செய்திருந்தது.

தமிழர் என்ற காரணத்திற்காக தமிழ் பிள்ளைகள் இன்றும் சிறையில் வதைக்கப்பட்டுக் கொண்டுள்ளார்கள் எனவும் தெரிவித்தார்.

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

எதிர்க்கட்சி தலைவரே கைதிகளுக்கு வழங்கிய வாக்குறுதிகள் எங்கே?, அரசியற் கைதிகளின் விடுதலையே நல்லிணக்கத்தின் முதற்புள்ளி, பிள்ளைகள் சிறையில் வாட பிறக்குமா நல்லிணக்கம்?

இருபது வருடங்களாக இரும்பு சிறைவாழ்வு இதுதான் தமிழர்களுக்கு நீதியா? போன்ற வாசகங்கள் எழுதிய பதாதைகளை ஏந்தியவாறு கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இக் கவனயீர்ப்புப் போராட்டத்தில் தமிழ் அரசியல் கைதிகளின் உறவினர்கள், சமூக அமைப்புக்கள், பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் ,கொள்கைபரப்புச் செயலாளர் வேழமாலிதன் ,எனப் பலரும் கலந்து கொண்டுள்ளனர்

http://www.tamilwin.com/community/01/116438

Share this post


Link to post
Share on other sites

தமிழ் கைதிகளை விடுவிக்க வேண்டி கிளிநொச்சியில் கவன ஈர்ப்பு போராட்டம்

இலங்கை சிறைச்சாலைகளில் உரிய விசாரணைகளின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் எனக் கோரி கிளிநொச்சியில் கவன ஈர்ப்புப் போராட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது.

சிறை கைதிகளின் உறவினர்கள், காணாமல் போனோரின் உறவுகள், பொதுமக்கள் என பலரும் இதில் கலந்து கொண்டு கைதிகளின் விடுதலைக்காகக் குரல் கொடுத்தனர்.

நாட்டில் நல்லாட்சி மலர வேண்டும், அதன் ஊடாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் நீதி வழங்கப்பட வேண்டும், விசாரணைகளின்றி பல வருடங்களாக சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும், நிரந்தர அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் போன்ற எதிர்பார்ப்புடன் புதிய அரசாங்கத்திற்கு தமிழ் மக்கள் ஆதரவு நல்கியிருந்த போதிலும் அவர்களுடைய எதிர்பார்ப்புக்கள் ஏமாற்றத்தையே அளித்துள்ளது என இந்தப் போராட்டத்தின் போது சுட்டி காட்டப்பட்டது.

160904133200_srilanka_kilinochi_protest_

160904133045_srilanka_kilinochi_protest_

 

http://www.bbc.com/tamil/sri_lanka/2016/09/160904_srilanka_kilinochi_protest

 

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now
Sign in to follow this