Archived

This topic is now archived and is closed to further replies.

நவீனன்

விடைப்பெற்றது பிரபல தேடல் தளம்

Recommended Posts

விடைப்பெற்றது பிரபல தேடல் தளம்

 

உலக அளவில் அதிகமாக பயன்படுத்தப்பட்ட டொரன்ட்ஸ் தேடல் தளமான டொரன்ட்ஸ்.இயூ(Torrentz.eu) தனது சேவையை முடித்துக்கொள்வதாக அறிவித்துள்ளது.

கிக்ஏஸ் டொரன்ட்ஸ் தளம் முடக்கப்பட்டதைத் தொடர்ந்து மற்றொரு பிரபல டொரன்ட்ஸ் தேடல் இணையதளமான டொரன்ட்ஸ்.இயூ (Torrentz.eu) இணையதளம் தனது சேவையை முடித்துக்கொள்வதாக அறிவித்துள்ளது.

கடந்த 13 ஆண்டுகளாக செயல்பட்ட டொரன்ட்ஸ்.இயூ தனது சேவை திடீரென நிறுத்திக்கொண்டதால் அத்தளத்தின் பயனாளர்கள் பலர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

டொரன்ட்ஸ்.இயூ தளத்தை ஒவ்வொரு நாளும் 10 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் பயன்படுத்திவந்தார்கள். தற்போது இந்த தளத்தில் செல்ல முயல்பவர்களுக்கு “டொரன்ட்ஸ் எப்போதும் உங்களை நேசிக்கும்...சென்று வருகிறேன்”  என்ற செய்தி காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

download.jpg

 

http://www.virakesari.lk/article/9864

Share this post


Link to post
Share on other sites

டோரென்ட்டுகளின் கூகிள் மூடப்பட்டது. அடுத்து என்ன?

toooo1.jpg

' மக்க கலங்குதப்பா பாடிக்கொண்டே கண்கள் வியர்த்தபடி இருக்கிறார்கள் டோரென்ட்வாசிகள். மூன்று வாரங்களுக்கு முன் உலகின் நம்பர் ஒன் டோரென்ட் தளமான kickass-ஐ தளத்தை முடக்கியதோடு, அதன் உரிமையாளரான அர்டெமை போலாந்தில் கைது செய்தது காவல் துறை. kickass தளம் முடக்கப்போட்டபோதே, வார்னஸ் ப்ரோஸ், 20த் சென்ச்சுரி ஃபாக்ஸ் போன்ற பெரும் ஹாலிவுட் நிறுவனங்கள் விழா எடுத்து கொண்டாடி இருப்பார்கள்.அப்படியும் செய்யாதவர்கள், இப்போது கொண்டாடுவார்கள். தற்போது Torrentz.eu என்ற தளத்தை, அதன் உரிமையாளர்கள் தாமாகவே முன்வந்து கடையை இழுத்து சாத்தி இருக்கிறார்கள்.

நேற்று வழக்கம் போல்,  Torrentz.eu தளத்திற்கு சென்றவர்களுக்கு பேரதிர்ச்சி. 'பல்வேறு தளங்களில் இருந்து தேடி எடுத்து ஃபைல்களைத் தரும் ஒரு இலவச , அதிவேக தளமாக டோரென்ஸ் இருந்தது ' என குறிப்பு ஒன்றை வெளியிட்டு இருந்தார்கள். அதிர்ச்சியை வெளிக்காட்டிக்கொள்ளாமல், சர்ஸ் பட்டனை க்ளிக் செய்தால், 'டோரென்ட் உங்கள் மீது அன்பாகவே இருக்கும். பிரியாவிடை' என மற்றொரு குறிப்பு இருந்தது.

toooo2.jpg

 

அவ்வளவுக்கும், Torrentz.eu வில் டோரென்ட் ஃபைல்கள் எதுவும் இருக்காது. அப்படியிருந்தும் , டோரென்ட் தளம் பறிபோனது தான், நேற்றைய டெக் உலகின் அதிர்ச்சிகர செய்தி. காரணம், ஒரு குறிப்பிட்ட ஃபைல் இந்த தளத்தில் இருக்கிறதென கண்டுபிடிப்பது டோரென்ட் தளங்களில் அவ்வளவு எளிதானதல்ல. ஒவ்வொன்றையும் kickass(தற்போது மூடப்பட்டுவிட்டது), piratebay, extra torrent, yify, பிட் ஸ்னூப் தளங்களில் சென்று தேட முடியாது. அதைத்தான் தொகுத்து வழங்கியது Torrentz.eu . சுருக்கமாக சொல்வதென்றால், அது டோரென்ட்டுகளின் கூகிள். கூகிள் போல், டோரென்ட் ஃபைல்களை தொகுத்துத் தரும் ஒரு சர்ச் இஞ்சின்.

இது வெறும் பைரசி தளங்கள் தானே?

காலைல டிபன் சாப்பிட்டீர்களா என்பது போல், சகஜமாக மாறிய வார்த்தைகள் திருட்டு விசிடிக்களும், டவுன்லோடு செய்து படம் பார்ப்பதும். திருட்டு  சிடிக்கள் என்பதை 'குடி குடியைக் கெடுக்கும்' என்னும் லேபிளோடு குடிக்கும் குடிமக்களைப் போல , மிக இயல்பாக வாங்கி செல்கின்றனர் மக்கள். அமீர்கானின் முந்தைய படமான PKவை, ஒரு மாநிலத்தின் முதல்வர், ' டவுன்லோடு செய்து பார்த்தேன்.இதற்கு வரிவிலக்கு அளிக்கலாமே' என சில ஆண்டுகளுக்கு முன்னர் குறிப்பிட்டார். அந்த அளவிற்கு பைரசிகளுக்கு பழகிவிட்டோம். ' அட , நான் எல்லாப் படமுமே, திரையில் தான் பார்ப்பேன் ' என மார்த்தட்டுபவர்கள் கூட, தங்களது மொபைலில் தங்களுக்கே தெரியாமல் பைரசி பாடல்களையும், தங்கள் கணினிகளில் பைரசி மென்பொருள்களையும் பயன்படுத்தி இருப்பார்கள்.


சில ஆண்டுகளுக்கு முன்னர், piratebay தளம் முடக்கப்பட்ட போது, அதன் தாக்கம் அதிகளவில் இல்லை. ஆனால், தற்போதைய நிலை வேறு.13 ஆண்டுகளாக கொடிகட்டிப்பறந்த kickass-ம், Torrentz.eu-ம் மூன்று வார இடைவேளையில் மூடப்பட்டு இருக்கிறது.  கபாலி படத்திற்காக tamilgun.com மூடப்பட்டது. அது மூடப்பட்டும். tamilrockers தளத்தில் படம் முதல் நாளே  வெளியானது. தற்போது tamilgun தங்கள் டொமைனை மாற்றி இருக்கிறார்கள். ஆனால், இதே நிலை, தொடர்ந்து நீடிக்காது. இனி, எல்லா தளங்களும் மூடப்படலாம். குறைந்தது, அதன் வீச்சு குறைய வாய்ப்பு இருக்கிறது. திரைப்படம் என்பதைத் தாண்டி, புத்தகங்கள், மென்பொருள்,கேம்ஸ், போன்றவற்றிற்காகவும், அதிகளவில் டோரென்ட்டுகளை மக்கள் பயன்படுத்துகிறார்கள்.

toooo3.jpg

 

டோரென்ட் தளங்கள் மூடப்படுவதன் ஒரே நல்ல விஷயம். உலக சினிமா ரசிகர்கள் என சொல்லிக்கொள்பவர்கள் , இனி ஃபேஸ்புக்கில், ஈர மனங்களை அள்ளும் இரானிய சினிமா எனவெல்லாம் எழுத முடியாது. புதுப்படங்களை அப்லோடு செய்யும் தளங்கள் குறைந்து கொண்டே வருகிறது. இல்லையெனில், பழைய படங்களை வைத்தே ஒப்பேற்ற வேண்டியது தான். இனி, ஒரு படத்திற்கு 480p,720p,1080p, HDRIP,TCRIP,DVDSCR,BLURAY  போன்ற  பல வெர்ஷன் எல்லாம் வராது.இல்லாவிட்டால், ஒரு வழி இருக்கிறது. ஒரிஜினல் டிவிடிக்களை ஆயிரக்கணக்கில் பணம் செலவு செய்து வாங்கி கருத்துக்களை தெரிவிக்கலாம்.

க.மணிவண்ணன்
மாணவ பத்திரிகையாளர்

Kickass முடக்கப்பட்டது எப்படி தெரியுமா?

 

kickass.jpg   


பலநாள் திருடன் ஒருநாள் அகப்படுவான் என்பது பழமொழி. ஆனால், பலநாள் திருடன், திருடாமல் நியாயமாக ஒரு பொருளை பணம் கொடுத்து வாங்கியபோது மாட்டிக்கொண்டார் என்றால் நம்ப முடிகிறதா?. ஆனால், இது தான் நடந்து இருக்கிறது கிக்ஆஸ் நிறுவனர் ஆர்டெம் வௌலினுக்கு. நேற்று காப்பிரைட் வழக்கில், அவரை போலாந்தில் வைத்து கைது செய்து இருக்கிறது அமெரிக்க காவல்துறை. 1 பில்லியன் டாலருக்கும் அதிகமாக காப்பிரைட் ஃபைல்களௌ பகிர்ந்துள்ளதால், அவரைக் கைது செய்திருப்பதாக சொல்கிறார்கள்.


இவரைக் கைது செய்து, இவரின் வலைதளத்தை முடக்கினாலும், சில மணி நேரத்தில், புதிய வலைதளம் ஒன்றை ஆரம்பித்துவிட்டார்கள். ஏனெனில் டோரென்ட்டில் டவுன்லோடு செய்வது டெக்னிக்கலாக குற்றம் கிடையாது.

டோரென்ட் சந்தைகளின் ராஜாவக திகழ்ந்து வருவது கிக்ஆஸ் தளம் kat.cr .2008-ம் ஆண்டு இந்த தளம் தொடங்கப்பட்டாலும், 2015-ம் ஆண்டு தான் ,பைரேட் உலகின் டான் ஆக உருவெடுத்தது கிக்ஆஸ். கொடிகட்டிப் பறந்துகொண்டு இருந்த பைரேட்பே சிக்கியதும் அதே ஆண்டு தான். பைரேட்பேயின், மூன்று ஓனர்கள் கைது செய்து, பைரேட்பேயை முடக்கினார்கள். அதற்குப்பின்னர் பல பெயர்களில், பைரேட் பே வலம் வந்தாலும், முதல் இடத்தை மீண்டும் அதனால் பிடிக்க முடியவில்லை. கிக்ஆஸ் தளத்திற்கு, மாதம் ஒன்றிற்கு, 50 மில்லியன் பார்வையாளர்கள் வருகிறார்கள்.அதிக நபர் பார்க்கும் வலைதளங்கள் பட்டியலில், உலக அளவில், கிக்ஆஸ் 68வது இடத்தில் இருக்கிறது.

பல்வேறு டொமைன்களில் ராஜாவாக சுற்றி வந்த ஒரு நபரைப் பிடிக்க வழிதெரியாமல் அமெரிக்க காவல்துறை விழிபிதுங்கி நின்றதுஆனால்,நேற்று இவரது கைதுக்குப் பின் இருக்கும் கதை சுவாரஸ்யமானது.

டோரென்ட் என்பது ஒரு ஃபைல் ஷேரிங் தலம் என்பதால், அது அப்லோட் செய்பவர்களின் பிரச்னையே அன்றி, அர்டெமின் பிரச்னை அல்ல. ஆனால், அப்படி பதிவேற்றப்பட்ட ஃபைல்கள், காப்பிரைட் சம்பந்தப்பட்டது என பலமுறை சொல்லியும், விளம்பர நோக்கிற்காக, அதை அழிக்காமல், அதை வைத்து பலமடங்கு லாபம் பார்க்க முயற்சி செய்தது தான் பிரச்னை.

2015-ம் ஆண்டு நவம்பர் மாதம், ஒரு உளவு ஏஜென்டை வைத்து, கிக்ஆஸ் வலைதளத்தை அணுகுகிறது அமெரிக்க காவல்துறை.ஒரு நாளைக்கு 300 டாலர்கள் என விலைபேச்சி ஆர்டெமுடன், ஒப்பந்தம் செய்கிறது அமெரிக்கா.இதெல்லாம் செய்வதற்கு பின்னால் இருக்கும் காரணம், குறிப்பிட்ட நபரின் விவரங்களைப் பெறத்தான். இந்த ஆண்டு மார்ச் மாதத்தில், எந்த வங்கிக் கணக்கில் பணம் பெறப்பட்டது என்பதை கண்டு அறிந்தது அமெரிக்க காவல்துறை.அந்த அக்கௌன்ட்டில், 2015 ஆகஸ்ட்டில் இருந்து, மார்ச் 2016 வரை 31 மில்லியன் டாலர்கள், விளம்பரத் தொகையாக பெறப்பட்டு இருந்தது.


இவர்களுக்குக் கிடைத்த ஈ-மெயில் முகவரியான  pr@kat.cr தான், ஃபேஸ்புக்கில் official.KAT.fanclub என்ர பக்கத்தையும் மெயின்டெய்ன் செய்ய, உஷாரானது காவல்துறை. சில வலைதள ட்ரேக்கர்களை வைத்து அர்டெமிற்கு சொந்தமான தளங்களை ( kickasstorrents.com, kat.cr, kickass.to, kat.ph, kastatic.com, thekat.tv and kickass.cr ) டொமைனை ட்ரேக் செய்தார்கள்.இந்தத் தகவல்களை வைத்து இந்த டொமைன்களின் உரிமையாளர், முகவரி, ஈமெயில் ஐடி, மொபைல் எண் போன்றவற்றை வைத்து அது உக்ரைனை சேர்ந்த அர்டெம் வௌலின் என்பவரைக் கண்டுபிடிக்கிறார்கள்.

ஆப்பிள் மொபைல் வாடிக்கையாளர்கள் ஏதேனும் அப்ளிகேஷன் அல்லது ஃபைல்களை டவுன்லோட் செய்ய வேண்டும் என்றால், ஐட்யூன்ஸில் பணம் கட்டித்தான் பெற முடியும். அர்டெம் மாட்டிக்கொண்டது இங்கு தான். உலகிற்கே, பைரேட்டட் , அதாவது திருட்டுத்தனமான ஃபைல்களைத் தரும் வலைதளத்தின் ஓனர், ஐட்யூன்ஸில் அந்த குறிப்பிட்ட வங்கியின் அக்கௌன்ட்டில் இருந்து பணம் செலுத்தி சில அப்ளிகேசன்களை வாங்குகிறார்.

இந்த எல்லா தகவல்களையும் ஒன்றிணைத்து, அர்டெமை கைது செய்து இருக்கிறது அமெரிக்காவின் ஹோம்லாண்டு செக்யூரிட்டி.

http://www.vikatan.com/news/information-technology/66876-torrentz-shuts-down.art

Share this post


Link to post
Share on other sites

 • Topics

 • Posts

  • பிடிக்காத மண உறவில் இருந்து விடுபடுவது மட்டுமல்ல விடுபடும் இருவருக்கும் தத்தம் எதிர்காலத் துணையைத் தேடும் உரிமை இருவருக்கும் உண்டு. இவர்கள் விடயத்தில் மணவாழ்வில் இருந்து விலகிய தனது கடந்தகால மனைவி( விலகிய பின்னர் இந்தச் சொற்பதமே தவறு) வேறு யாரையும் தெரிவு செய்து வாழ்ந்துவிடக்கூடாது என்பதே அடிப்படை ஆணவமாக இருக்கிறது. உண்மை என்ன என்பது எவருக்கும் தெரியாது ஆனால் சட்டப்படி விலகியவர்கள் தமக்கான வாழ்வை தெரிவு செய்வது நியாயமானதே... பிடித்தமில்லாத இருவர் சேர்ந்து வாழ முடியாது...அதில் ஒருவருக்குப் பிடிப்பிருந்து மற்றவருக்கு இல்லையென்றாலும் அதுதான் நிலை.... இன்று புலம் பெயர்ந்த நம்மவர்களை எடுத்துக் கொண்டால் பல வீடுகளில் துணைவனும் துணைவியும் தனித்தனி அறைகளில் வீட்டுக்குள்ளும்,..... வெளியே புறத்தோற்றத்தில் சமூகத்திற்கு ஒஞ்சி கணவன் மனைவியாகவும் தம்மைத்தாமே ஏமாற்றி வாழ்கிறார்கள். ஒவ்வாத திருமணங்களிலிருந்து விலகுவதும் தமக்கான எதிர்காலத்தை நிர்ணயிப்பதும் தற்சமயம் கனடாவில்  வாழும் இளையவர்களிடம் பரவலாக நிகழ்ந்து வருகின்றது. விகிதாசாரத்தில் அதிகமாகவே இருக்கிறது. என்னுடைய திருமண சேவையில் முதல் திருமணத்திற்கு விண்ணப்பிப்பவர்களைக்காட்டிலும் மறுவாழ்வுக்கு விண்ணப்பிப்பவர்களே அதிகமாக இருக்கின்றனர். ஆதலால் அவர்களுடைய கடந்த காலத்தை கேட்டும் விசாரித்தும் அறியவேண்டிய தேவை எனக்கு அதிகம் ஏற்படுகிறது. அநேகமானவை தாயகத்திலிருந்து திருமணம் செய்து இங்கு வந்த பின்னர் ஏதோ காரணம் உருவாக்கி பெண்கள் பிரிவதாகவும் அதன் பின்னர் அவர்கள் வேலை செய்து தமது கடந்த கால (திருமணத்திற்கு) முன்னராக தாம் காதலித்தவரை ஸ்பொன்சர் செய்து அழைப்பதாகவும் அதிக குற்றச்சாட்டுக்களை பெண்கள் மீது போட்டபடிதான் ஆண்பிள்ளைகளின் பெற்றோர் தம் மகனுக்கான வரனைத் தேடுகிறார்கள். இவ்விடயத்தில் உண்மைகள் இல்லாமலும் இல்லை.... வெளிநாட்டுக்கு வரும் சந்தர்ப்பத்திற்கு இலட்சக்கணக்கான பணத்தைச் செலவு செய்யாமல் சில பெண்கள் திருமணம் என்னும் பெயரில் ஒரு ஆணின் வாழ்வை கபாளீகரம் செய்துவிட்டு தன் துணையை அழைத்து வாழும்போது, கடந்த திருமணம் தனக்கு விபத்து என்று கூறி தட்டிக்கழித்துச் செல்லும் நிலையையும் கண்கூடாகப் பார்க்கநேர்கிறது. ஆக திருமணம் என்பது மலினப்பட்டுப்போகிறது. தாயகத்திலிருக்கும் பெற்றோரும் உள்ளூர் வரன்களைக்காட்டிலும் வெளிநாட்டு வரன்களையே அதிகம் விரும்புகிறார்கள்  உண்மையில் மகளுக்கு பிடிக்கிறதா என்று அவர்கள் சிந்திப்பதே இல்லை... மகளை ... அவளின் கனவுகளைக் காவு கொடுத்து தங்கள் குடும்பத்தை முன்னேற்றவே அரும்பாடுபடுகிறார்கள். வெளிநாட்டு மாப்பிள்ளை எத்தகைய பழக்கவழக்கம் உடையவர் என்று சிறிதும் கவலைப்படுவதே இல்லை. அதிகமான வெளிநாட்டு மணமக்கள் அதாவது இரு பாலரும் போதைக்கு அடிமையானவர்களாக இருக்கிறார்கள். ஏகப்பட்ட கனவுகளோடு வாழவரும் மணமகளுக்கு இங்கு வந்தபின்னரே உண்மைகள் மெல்ல மெல்லத் தெரிய வரும். உண்மைகள் தெரியும்போது காலம் கடந்திருக்கும். அதற்குப் பின்னான துயரம் என்பதும் ஏமாற்றம் என்பதும் மன அழுத்தத்தை உருவாக்கி தற்கொலை முயற்சிகள், அடிதடி வன்முறைகளாக வடிவம் கொள்ளும். விவாகரத்துகளும் எதிர்காலம் பற்றிய திண்டாடல்களும் சூழ இன்னொரு வாழ்வை தேடலாமா என்றும் ஏற்கனவே பட்டதே போதும் என்று முடக்கமும் பலர் வாழ்வில் நடந்தேறிக்கொண்டிருக்கும் ஒன்று. இந்த கொலை செய்தவருக்கும் , கொலை செய்யப்பட்டவருக்கும் இடையில் ஏதேனும்  ஏமாற்றம், துயரம் பிணைந்திருக்கலாம். விடுபட்டு சென்ற பின்னர் ஒருவரின் தனிமனித வாழ்வில் தலையிடவே கூடாது.. ஆனால் இவ்விடத்தில் ஆதிக்கவெறி , ஆணவம் ஆத்திரம் என பல்வகைப்பரிமாணங்களில் இச்சம்பவம் நிகழ்ந்திருக்கிறது. இன்று கொலை செய்யப்பட்ட பெண்ணை அவதூறு செய்யும் யாராகட்டும் இன்று கொலையாளி ஆகி நிற்கும் அந்த மனிதனுக்கு நல்வழிகாட்ட எண்ணினார்களா? கொலையாளி முன்பே அவளைக் கொல்லவேண்டும் என்று கறுவிக் கொண்டிருந்தார் என்று வெளிப்படுத்தும் எவரேனும்.... அந்தப் பையனை ஆற்றுப்படுத்த எண்ணவில்லையா?
  • அமெரிக்க அரசு தனது நட்பு நாடுகளுக்கு அவ்வாறான 'கேட்க்கும்' சேவையை வழங்கி வருகின்றது. இரண்டு வாரங்களுக்கு முன்னராக அவ்வாறான ஒரு தகவல் அடைப்படையில் கனடா நாட்டின் தேசிய காவல்துறையின் ஒரு உயர் அதிகாரி நாட்டின் இரகசியங்களை வேறு ஒரு நாட்டிற்கு கொடுத்தார் என குற்றம் சாட்டப்பட்டு கைதாகியுள்ளார். இவர் எந்த நாட்டிற்கு உளவு பார்த்தார் என கூறப்படவில்லை.    A senior RCMP official arrested in a case that sent shockwaves through Canada’s national security community on Friday was uncovered by U.S. authorities who tipped off Ottawa, a source told Global News. Cameron Ortis faces seven counts dating as far back as 2015, including breach of trust, communicating “special operational information,” and obtaining information in order to pass it to a “foreign entity.” The charges did not specify which foreign entity or what type of information, but a source said he had amassed “terabytes of information,” including a list of undercover operatives, when he was arrested in Ottawa on Thursday. https://globalnews.ca/news/5899146/senior-rcmp-arrested-charged/
  • 🥴 எனக்கு சிரிப்பை அடக்குறதா அழுகையை அடக்குறதா என்றே விளங்கேல்ல! "என்ன சட்டச் சிக்கல்?" எண்டு வேற கேக்கிறார் பாருங்களன் அப்பாவித் தனமா!  அது சரி, ஊரில சாதாரண உடையில் சிலர் இருக்கிறார்களாம். உங்களுக்கு யுனிபோம் வேற இருக்கா? கொடுமை சரவணா! 
  • உயிலும் நன்கொடையும்  பொதுவாக நன்கொடையாக கிடைக்கும் சொத்துக்கள் ஒரு குடும்பம் புலம்பெயர் தேசத்தில் பிரியும் பொழுது அது நூறு வீதம் அதற்கு உரித்தானவர்க்கே கிடைக்கும்.  நபர் அ ஒரு வீட்டை நன்கொடையாக பெறுகிறார். பத்து வருடங்கள் அந்த வீட்டில் வசித்து பின்னர் பிரிக்கிறார். இந்த பத்து வருடத்தில் எவ்வளவு பணம் அதிகரித்ததோ அதில் ஐம்பது வீதம் நபர் ஆக்கு செல்லும். நபர் அ  ஒரு குடியிருந்த, ஆனால் சொந்தமில்லாத வீட்டிக்கும் இது பொருந்தும்.  அதுபோன்று வீடல்லதா சொத்துக்களையும் நன்கொடையாக பெறலாம். நகைகள், கோடைகால வீடுகள் மற்றும் வேறு பெறுமதிமிக்க பொருட்கள்.     
  • ஒரு அரச உத்தியோக பெற்றோரின் மகனான எட் ஸ்னோடன் பற்றி அறிந்திருப்பீர்கள். இவருடன் விக்கி லீக்சின்  இணைக்கப்பட்டு செய்திகளும் வந்தன. இவர் தற்பொழுது உருசியாவில் வாழ்கிறார். அமெரிக்காவிற்கு வர முடியாத நிலை, காரணம் அமெரிக்காவின் மூன்றாம் தர உளவில் வேலைசெய்த இவரும் ஒரு 'விசில்' ஊதியவர்.  தான் வேலை செய்த என்.எஸ்.ஏ. அமைப்பானது சாதாரண அமெரிக்கர்களின் மீதும் உளவு பார்க்கின்றது என்பதை உறுதிப்படுத்தியமையே. இவர் இன்றும் கூறுவது, உங்கள் கணனியில் நீங்கள் உலகில் எங்கிருந்து அதை செய்தாலும் அதை இந்த அமெரிக்க அமைப்பும் செய்யும் வலிமை கொண்டது.  அமெரிக்க அரசு இவருக்கு புகலிடம் அளிக்க எண்ணும் அரசுகளை மிரட்டி வருகின்றது. ஸ்னோடன் அண்மையில் பிரான்ஸ் நாட்டடையும் புகலிடம் அளிக்க கேட்டிருப்பதாக செய்திகள் வந்தன,