Jump to content

நீங்கள் விரும்பி வாசிக்கும் கவிதை எது ?


நீங்கள் மிக விரும்பிப் படிக்கும் கவிதைகள்..!  

21 members have voted

You do not have permission to vote in this poll, or see the poll results. Please sign in or register to vote in this poll.

Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்கள் விரும்பி வாசிக்கும் கவிதை எது ?

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு இரசனை இருக்கும் அவ்வாறு இருக்கும் போது சிலருக்கு ஒன்றுமே பிடிப்பதில்லை ஆனால் யாழ் இணையத்தினை பொறுத்த வரை இங்கு ஏராளமான கவிதைகள் கருத்தாடுபவர்களால் எழுதப்பட்டுள்ளது. இதில் எந்த கவிதைகள் உங்களை கவர்கின்றன என அறிய ஒரு ஆவல் அந்த நோகில் தான் இதனை உங்கள் முன் வைக்கின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தம்பி உங்களுக்கு எது பிடிக்குமோ....??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கு எது பிடிக்குமோ... அது இருக்கட்டும்......

எதுவும் படிப்பதில்லை (கவிதை என்று சொல்லி பொன்னான நேரத்தை வீணாக்குகிறார்கள்).

வாழ்க வாழ்க

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மேற்கோள்:

எதுவும் படிப்பதில்லை (கவிதை என்று சொல்லி பொன்னான நேரத்தை வீணாக்குகிறார்கள்).

வாழ்க வாழ்க

_________________

தம்பிக்கு எதுவும் பிடிப்பதில்லையோ...?? யாரை வாழ்த்திறீங்கள்....?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தம்பிக்கு எதுவும் பிடிப்பதில்லையோ...?? யாரை வாழ்த்திறீங்கள்....?

அப்படியல்ல அதற்கு தானே 50 % வாக்கு கிடைத்திருக்கு அது தான் சொன்னேன்..... :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ம் அப்படியா... ! :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இத்தளத்தில் கருத்தாடுபவர்களில் 7 பேர்தான் கவிதை பகுதிக்கே வருவீர்களா...? அதிலும் 3 பேர் கவிதையே படிப்பதில்லை... பாக்கப்போனால் கவிதை எழுதுறதே வேஸ்ற் போலை கிடக்கு

Link to comment
Share on other sites

அட.. இப்பதான் இந்த தலைப்பைப் பாக்கிறன்! :lol:

கவிதைகளை எவரும் பார்ப்பதில்லை என்று கூறாதீர்கள்! தற்போது கதைகளுக்கும் பார்க்க கவிதைகளைத்தான 'வாசிக்கும்' ஆர்வமுள்ளோர் நாடுகிறார்கள். காரணம், நேரப்பற்றாக்குறையாகவும், சில வரிகளில் அது கூறவரும் விசயத்தை அறியமுடிவதாகவும் இருக்கலாம்!

என்னைப் பொறுத்தவரையில்... யாழ் களத்திலே பரணி, நளா போன்றவர்களின் காதல் கவிதைகளை இரசித்துப் படித்தேன்... எளிமையான நடை.. கூடவே இயல்பாகவே மனதை வருடும் காதல் நயம் போன்றவையாக இருக்கலாம். அதற்காக மற்ற கவிதைகளை குறைத்து மதிப்பிடுவதாக இல்லை.. ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகம்.. ஒவ்வொரு எண்ணங்கள்.. ஒவ்வொரு கருத்துக்கள்... எனினும், கவிதையில் கலந்திருக்கும் உணர்வுகள் வாசகனை அந்த உணர்வுக்குள் கொண்டு வருகிறதோ.. அப்போதுதான் அவை வெற்றிபெறுகின்றன!

அந்த வகையில் காதல் கவிதைகள் எளிதாக என்னுள் புகுந்து கொள்கின்றன! அதுவும் யாழ் கள கவிஞர்களில் காதலை காதலாகத் தருவதில் பரணியும் நளாவும் வெற்றிபெற்றுவிட்டார்கள்!

தற்போது குருவிகள் அந்த பாதையில் அடியெடுத்து வைத்திருக்கிறார்!

'உனக்கே உனக்காய்!' எனும் கவிதை மிக நன்றாக வந்திருக்கிறது!

அதேமாதிரி, தடைகளை தகர்த்தெறியும் உணர்வை ஊட்டக்கூடிய கவிதைகளை ஏற்கெனவே பாரதி, பாரதிதாசன், காசி ஆனந்தன் போன்றவர்கள் எழுதிக் காட்டியமாதிரி... அந்த வழியிலும் கவிஞர்கள் யாழ் களத்தில் உருவாகவேண்டும்! வாழ்த்துக்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆகா. நீங்கள் தான் சரியாக சொல்லி இருக்கிறீர்கள் .... நளாயினி அக்கா இப்ப களத்துக்கு வாறது இல்லை ... ஆனால் பரணி அண்ணாவின் காதல் கவிதை சுப்பர்.... குருவியண்ணாவின் மலர் காதலும் நன்றாகத்தான் போகிறது.. ஒரு மலருடன் வைத்து எத்தனை விதமாக கவிதை வடிக்கிறார்.. அதுதான் எனக்கு ஆச்சரியம்.... தமிழினி அக்கா சாந்தி அக்காவின் கவிதைகளும் நன்றாக் இருக்கின்றன.... சாந்தி அக்கவினது தனித்து புரட்சி சம்பந்தமாகவும்.. தமிழினி அக்கா எல்லாத்தியும் கலந்தும் தருகிறா... சுவீற்மிச்சி அக்காவினது கவிதைகள் நன்றாக வருகிறது ஆனால் தமிழ் எழுத்து பிழை காரணமாக கருத்து வேறுபட்டு விடுகின்றது... அதை மட்டும் திருத்தினா என்றால் அவ எங்கையோ போடுவா.. சோபனா அக்கா வந்தா நல்ல கவிதை தல்லம் என்று ஆளையே காணவில்லை.... இப்படி பலரும் வருகிறார்கள் நல்ல கவிதைகள் தருகிறார்கள் அவர்களுக்கு எல்லாம் நன்றிகள்.. அத்தோடு சுட்ட கவிதைகளை சுடச்சுட தருவது BBC , BBCக்கும் நன்றிகள்... இன்னும் பலர் வந்து தருவார்கள் நல்ல கவிதைகளை...

Link to comment
Share on other sites

சோழியான் அண்ணா சொல்லுறதும் உண்மைதான் கதை வாசிக்க எங்க நேரம் இருக்கு... கவிதை வாசிக்கவே நேரம் கிடைக்காது..கிடைத்தாலும் சும்மா மேலோட்டமா மேஞ்சதோட சரி....எங்கையன் ஒன்றிரண்டைத்தான் ஆழ்ந்து வாசிப்பது.... நாங்க அப்பப்ப காணும் காட்சிகள் நிகழும் நிகழ்வுகள் தோன்றும் கற்பனைகளுக்கு ஏற்ப கிறுக்குவம் உந்த நயம் கியம் எல்லாம் பாக்கிறதில்லை....அது உந்த நளவெண்பா படிக்கேக்க படிச்சதோட சரி....!

எங்கட கிறுக்கலின் முக்கிய நோக்கம் புதிய வரவுகளை கொஞ்சம் தூண்டிவிட்டு வேடிக்கை பாக்கிறதுதானே ஒழிய வேறில்லை....அப்பதான் அவங்க தாங்களும் எழுத முனைவாங்க... எழுத எழுதத்தான் திறமைகளை வெளிப்படுத்தும் திறனும் அதிகரிக்கும்....! சும்மா எழுதுவன் என்று நினைச்சுக் கொண்டிருந்தா திறமை வெளிவராது மழுங்கடிக்கப்படவே வழிசெய்யும்...!

யாழ் களத்தில் பரணி, சாந்தியக்கா, சண்முகி அக்கா, நளாயினி அக்கா, சந்திரவதனா அக்கா, சோழியான் அண்ணா, மணிதாசன் அங்கிள், சரீஸ், ஈழவன், இளைஞன், மயூரன் போன்ற மூத்த கவியாக்குனர்களும் சமீபகாலமாக களத்தில் கவிதைப் பகுதிக்கு உயிரூட்டிக் கொண்டிருக்கும் ஆதீபன், கவிதன், தமிழினி, வெண்ணிலா ,அஜீவன் அண்ணா, செந்தமிழ் கவி பொழிலர், செல்லத்தமிழ்க் கவி சுவிற்மிச் போன்றோரும் ஆர்வத்துடன் வந்து சில கவிதைகளுடன் காணாமல் போன தாமரை அக்கா ,சிவாஜினி, சிவதேவ், சோபனா மற்றும் ஈழத்தில் போராட்டக்களத்தில் களமாடியபடி தம் சிந்தனைக்கு வரிவடிவம் தந்த போராளிகளின் கவிதைகளை தந்த சேது போன்ற கவி ஆர்வலர்களும்...அப்பப்ப பம்பல் கவிதை எழுதும் தாத்தா,முல்லைப்பாட்டி, அம்பலத்தார், வல்லையார், கணணி போன்ற கவிக் குட்டிகளும்.... சுட்டுச்சுட்டே கவிதைப் பகுதியை அலங்கரித்த பிபிசி போன்ற கவிப் பித்தர்களும் கவிதையே மேல் என்று கருத்துரைத்த வசிசுதா போன்ற கவிக் குடிகளும்.... வாழ்ந்தது.... வாழ்வது மறக்கலாமோ....!

இப்ப சொல்லுங்கோ உங்க களத்தில எதற்கு உயிர்ப்பு அதிகம் என்று....! :P

(இதில் யாரின் பெயரும் தவறவிடப்பட்டிருந்தால் குருவிகளை மன்னிச்சிடுங்கப்பா..இவ்வளவும

Link to comment
Share on other sites

  • 5 years later...
  • கருத்துக்கள உறவுகள்

சரியாச்சொன்னியள் குருவியார் :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காதல், வீரம், ஈழ விடுதலை.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: DIGITAL DESK 7 18 APR, 2024 | 05:27 PM   வடக்கு மாகாணத்தில் காணி உறுதிப்பத்திரங்களை கைமாற்றும் நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தபட்டுள்ளதாக யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் ஆளுநர் தெரிவித்துள்ளார். காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கல், மீள் குடியேற்றம், புதிய வீட்டுத்திட்டம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநர் பி. எஸ். எம். சார்ள்ஸ் கூட்டத்தில் கருத்து தெரிவிக்கையில், இந்த வருட இறுதிக்குள் மீள் குடியேற்ற நடவடிக்கை நிறைவு செய்யப்பட வேண்டும் என ஜனாதிபதி வழங்கியுள்ள பணிப்புரைக்கு அமைய, மீள்குடியேற்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. யாழ் மாவட்டத்தில் ஆயிரத்து 500 குடும்பங்களை சேர்ந்தவர்கள், நண்பர்கள் மற்றும் உறவினர்களின் வீடுகளில் தங்கியுள்ளனர். அவர்களை மீள்குடியேற்றுவது தொடர்பில் விசேட கூட்டம்  நடத்தப்பட வேண்டும். அத்துடன் ஏற்கனவே மீள்குடியேற்றப்பட்ட மக்களின் வீடுகளுக்கான மின்சார விநியோகம் தொடர்பில் துரித நடவடிக்கை எடுக்குமாறு துறைசார் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளேன் . இதேவேளை, வடக்கு மாகாணத்தில் காணி உறுதிப் பத்திரங்களை கைமாற்றும் செயற்பாடுகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.  "உரித்து" காணி உறுதிகளை வழங்கும் நடவடிக்கையை துரிதப்படுத்துவதற்காக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதற்கமையை மே மாத நிறைவுக்குள்  வடக்கு மாகாணத்தில் 60 ஆயிரம் பேருக்கான  காணி உறுதிப் பத்திரங்கள் கையளிக்கப்படவுள்ளன. வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படவுள்ள வீட்டுத் திட்டம் தொடர்பான கலந்துரையாடல்கள் மற்றும் திட்டமிடல்கள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த திட்டத்தில் நெடுந்தீவு மக்களுக்கான 76 வீடுகளும் உள்வாங்கப்பட்டுள்ளது என வடக்கு மாகாண ஆளுநர் தெரிவித்தார்.  மே மாத இறுதிக்குள் வடக்கில் 60 ஆயிரம் பேருக்கு காணி உறுதி வழங்கப்படும் - வடக்கு ஆளுநர் | Virakesari.lk
    • காங்கிரஸ் கட்சியின் பூத் ஏஜென்ட் காங்கிரஸ் சின்னத்தில் வாக்களித்துள்ளார். அப்போது விவி பேட் மிஷினில் காங்கிரஸ் சின்னம் மற்றும் வேட்பாளர் பெயருடன் ஒரு ரசீதும், அடுத்ததாக பா.ஜ.க-வின் தாமரை சின்னம் பொறித்த ரசீதும் பதிவாகி வந்துள்ளது. கேரள மாநிலத்தில் 3-ம் கட்டமாக வரும் 26-ம் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. அதற்கு முன்னோட்டமாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சோதனை நடத்தப்பட்டு, தாலுகா அலுவலகங்களுக்கு அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று காசர்கோடில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் அனைத்து கட்சியினர் சார்பில் மோக் போல் (Mock Poll) நடத்தப்பட்டது. காங்கிரஸ் கட்சியின் பூத் ஏஜென்ட் காங்கிரஸ் சின்னத்தில் வாக்களித்துள்ளார். அப்போது விவி பேட் மிஷினில் காங்கிரஸ் சின்னம் மற்றும் வேட்பாளர் பெயருடன் ஒரு ரசீதும், அடுத்ததாக பா.ஜ.க-வின் தாமரை சின்னம் பொறித்த ரசீதும் பதிவாகி வந்துள்ளது. இதையடுத்து எந்த சின்னத்திலும் ஒருமுறை வாக்களித்தால் இரண்டு வாக்குகள் பதிவாவதாகவும், அதில் மற்றொரு வாக்கு பா.ஜ.க-வுக்கும் பதிவாவதாக புகார் எழுந்தது. மோக் போலிங்கில் முதல் ரவுண்டில் இது போன்ற பிரச்னை எழுந்ததாகவும், ஒவ்வொரு வேட்பாளருக்கும் தலா ஒரு ஒட்டு வீதம் செலுத்தியபோது, பா.ஜ.க வேட்பாளருக்கு கூடுதலாக ஒரு வாக்கு பதிவானதாகவும், முதல் மூன்று ரவுண்டுகளில் அப்படி நடந்ததாகவும், பின்னர் அது சரிசெய்யப்பட்டதாகவும் காங்கிரஸ் கூட்டணியில் காசர்கோடு பூத் ஏஜென்ட்டாச் செயல்படும் செர்க்களா நாசர் ஒரு தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருந்தார்.         மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாதிரிப் படம் அதே சமயம், முதலில் உள்ள வேட்பாளரின் சின்னம் ஒரு டம்மி ரசீதாக பதிவாகும் எனவும், அந்த ரசீது மற்ற ரசீதுகளைவிட அளவில் சிறியதாக இருக்கும் எனவும, அது எண்ணுவதற்கு தகுந்தது அல்ல என ரசீதிலேயே குறிப்பிடப்பட்டிருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இது ஒருபுறம் இருக்க மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்துடன் பொருத்தப்பட்டுள்ள விவி பேட் ரசீதுகளையும் எண்ண வேண்டும் என பிரசாந்த் பூஷன் சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கு இரண்டாவது நாளாக இன்று விசாரணைக்கு வந்த நிலையில், காசர்கோடில் மோக் போலிங்கில் ஏற்பட்ட குழறுபடி குறித்தும் கோர்ட்டின் கவனத்துக்கு கொண்டுசென்றிருந்தார்.     தேர்தல் ஆணையம் அது குறித்து இன்று மதியத்துக்கு மேல் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் குழறுபடி செய்ய வாய்ப்பே இல்லை எனவும், காசர்கோடில் பா.ஜ.க-வுக்கு அதிக வாக்குகள் பதிவாவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு தவறானது எனவும், ஒரு பத்திரிகையில் வந்த செய்தியின் அடிப்படையிலே பிரசாந்த் பூஷன் அதை தெரிவித்துள்ளதாகவும் தேர்தல் ஆணையம் கூறி உள்ளது. மேலும், காசர்கோடு கலெக்டர் மற்றும் ரிட்டனிங் ஆபீசர் ஆகியோர் இது குறித்து அறிக்கை சமர்ப்பித்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பான விரிவான அறிக்கையை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்ய உள்ளதாகவும் தேர்தல் ஆணையம் சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்துள்ளது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்து எதிர்க்கட்சிகள் அடிக்கடி சந்தேகம் கிளப்பிவரும் நிலையில், மோக் போலிங்கில் எழுந்துள்ள குளறுபடி சர்ச்சையாகியுள்ளது. இ.வி.எம்-மில் பாஜக-வுக்கு அதிக வாக்குகள் பதிவாகின்றனவா? - சர்ச்சையும் தேர்தல் கமிஷன் விளக்கமும்! | Reports of EVMs showing ‘extra votes’ during mock poll in Kerala are false: ECI informs Supreme Court - Vikatan
    • தம்பி கணிதத்தில் வீக் என்று சொன்ன மாதிரி இருந்ததே?
    • எதையும் கணித ரீதியில் சொன்னால் இலகுவாய் புரியும்🤣
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.