Jump to content

பிரபல கதாசிரியர், தயாரிப்பாளர் பஞ்சு அருணாசலம் காலமானார்!


Recommended Posts

பிரபல கதாசிரியர், தயாரிப்பாளர் பஞ்சு அருணாசலம் காலமானார்!

panju.jpg

சென்னை: பிரபல திரைப்பட தயாரிப்பாளர்,கதாசிரியர் பஞ்சு அருணாசலம் சென்னையில் இன்று மரணமடைந்தார்.

சினிமா ஸ்டுடியோவில் 'செட்' உதவியாளராக வேலை செய்யத் தொடங்கிய பஞ்சு அருணாசலம், கவிஞர் கண்ணதாசனிடம் உதவியாளராகப் பணியாற்றினார். பல திரைப்படங்களுக்குப் பாடல்கள் எழுதியுள்ளார்.

மேலும் 'இளையதலைமுறை', 'மணமகளே வா', 'புதுப்பாட்டு' உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களை இயக்கியும் உள்ளார். ஆறிலிருந்து அறுபது வரை,கல்யாண ராமன்,எங்கேயோ கேட்ட குரல், ஆனந்த ராகம், ஜப்பானில் கல்யாணராமன், மைக்கேல் மதன காமராஜன், வீரா, ராசுக்குட்டி உள்ளிட்ட பல சில்வர் ஜூப்ளி திரைப்படங்களை தயாரித்தும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

* கவிஞர் கண்ணதாசனின் உறவினரான பஞ்சு அருணாசலம் அவருக்கு உதவியாளராக பணியாற்றியவர்

* அன்னக்கிளி படத்தின்மூலம் 1976ல் இளையராஜாவை அறிமுகம் செய்தவர்

* ரஜினிகாந்த், கமலஹாசன் படங்களை அதிக அளவில் தயாரித்த பெருமை பஞ்சு அருணாசலத்துக்கு உண்டு

http://www.vikatan.com/news/tamilnadu/66982-cinema-director-producer-panchu-arunachalam-passed-away.art

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணாரின் ஆத்மா சாந்தி அடையட்டும்....! 

ஆழ்ந்த இரங்கல்கள் .....!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எமக்காக தொடர்ந்து குரல் கொடுத்தவர்

 

அன்னாரின் ஆத்மா சாந்தி அடையட்டும்....! 

ஆழ்ந்த இரங்கல்கள் .....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் திரைப்பட வரலாற்றில் மக்களின் மனதில் நிற்கும் பல திரைப்படங்களை வழங்கியவர்.

அன்னாரின் ஆத்மா சாந்தி அடையட்டும் ! 

ஆழ்ந்த இரங்கல்கள் .....!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அன்னாரின் ஆத்மா சாந்தி அடையட்டும்

ஆழ்ந்த இரங்கல்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்.. ...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள்.

Link to comment
Share on other sites

கதாசிரியரும் இயக்குநருமான பஞ்சு அருணாச்சலம் அவர்களின் படங்களை சிறு வயதில் பார்த்து இருந்தமையால் அவை பற்றிய நினைவுகள் மிகவும் குறைவாகவே இருக்கின்றன

ஆனால் அவர் விகடனில் எழுதி வரும் 'திரை தொண்டர்' தொடரை விருப்பத்துடன் வாசித்து வருகின்றேன்.

இளையராஜாவினை அன்னக்கிளியில் அறிமுகப்படுத்தியது (முதல் பாடல் பதிவில் நிகழ்ந்த விடயம் ஒரு சுவாரசியக் கதை), ரஜனிகாந்திற்கு 'ஆறில் இருந்து அறுபது வரை' / 'ப்ரியா' திரைப்படங்கள் கொடுத்த மாற்றுப் பாதை, கமலின் வெற்றிகரமான முன்னேற்றம், 'அவள் அப்படித்தான்' எனும் அருமையான படம் எடுத்த ருத்திரையா 'கிராமத்து அத்தியாயம்' படத்தின் மூலம் தோல்வியடைந்து மீள முடியாமல் போனது என்று பல ஆரம்பகால விடயங்களை வெகு சுவாரசியமாக எழுதிக் கொண்டு வந்தார்.

அத்துடன் அக் காலத்தில் சக மனிதர்களை, அவர்களின் வெற்றியை /தோல்வியை மதிக்கும் மனிதர்களும் சமூக அக்கறையுள்ளவர்களும் தமிழ் சினிமாவில் இருந்துள்ளார்கள் என்பதையும் அறியத் தந்து இருந்தார்

சிறந்த கதாசிரியர் என்பதால் தொடரும் சுவாரசியமாக அமைந்தது ஆச்சரியமளிக்கவில்லை

இவரின் மறைவுக்கு பிறகு இனி அத் தொடர் வருமா எனத் தெரியவில்லை (பல சஞ்சிகைகள் தொடரை முழுமையாக / அல்லது அரைவாசிக்கும் மேலாக பெற்றபின்தான் பிரசுரிக்க தொடங்கும் - விகடன் என்ன மாதிரி என்று தெரியவில்லை)
.
தமிழ் சினிமாவின் ஆரம்பகால வேர்களில் ஒன்றாக இருந்து அது பற்றி இத் தலைமுறைகளுக்கும் அறியத் தந்து கொண்டு இருந்த பஞ்சு அருணாச்சலம் அவர்களுக்கு அஞ்சலி

--------------

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள்.

இந்த வாரம் பல சினிமா பிரபலங்கள் மறைந்துள்ளனர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள்.

பஞ்சு அருணாச்சலம் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி முத்திரையை பதித்தவர். இவர் 100 திரைப்படங்களுக்கு மேல் எழுத்தாளராகவும், 200 திரைப்படங்களுக்கு மேல் பாடலாசிரியராகவும் பணியாற்றியுள்ளார். 80,90'களில் வெளிவந்த பெரும்பான்மையான வெற்றி திரைப்படங்களை தயாரித்தவர் என்ற பெருமையோடு இளையராஜாவை அறிமுகப்படுத்தியவர் என்ற பெருமையும் இவரை சாரும்.

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.