சிரிக்க மட்டும் வாங்க
-
Tell a friend
-
Topics
-
Posts
-
By பிரபா சிதம்பரநாதன் · Posted
உண்மைதான்.. 32 வருட வரலாற்றை முறியடித்துவிட்டனர்..😡 புஜாரா அவுட் ஆகியபடியால்தான் இந்திய அணி விரைவில் போட்டியை முடித்தார்கள்.. சும்மாவா 211 பந்துகளுக்கு முகம் கொடுத்து 56 ஓட்டங்கள்.. நல்லதொரு பட்டப்பெயரையும் வைத்திருக்கிறார் The Wall.. -
By nunavilan · பதியப்பட்டது
18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கட்டாய இராணுவ பயற்சி என்ற அறிவிப்பு வெறும் முன்மொழிவு மட்டுமே http://i2.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/01/Keheliya.jpg 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கட்டாய இராணுவ பயற்சியை வழங்குவது என்ற பொதுப் பாதுகாப்பு அமைச்சரின் அறிவிப்பு வெறும் முன்மொழிவு மட்டுமே என அமைச்சரவை பேச்சாளர், அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பேசிய அவர், நாட்டின் அரசியல் பின்னணி, நிர்வாகம் மற்றும் அத்தகைய நடவடிக்கையின் அவசியம் ஆகியவற்றை மதிப்பீடு செய்த பின்னர் இது குறித்து பரிசீலிக்கப்படும் என்றும் குறிப்பிட்டார். இதேவேளை வளர்ந்த மற்றும் ஜனநாயக நாடுகளும் இத்தகைய கட்டாய இராணுவப் பயிற்சி முறையை வழங்குவதாகவும் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல சுட்டிக்காட்டினார். இந்த விடயத்துடன் இராணுவ மயமாக்கல் என்ற வார்த்தையைப் பயன்படுத்தக்கூடாது என்றும் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல கேட்டுக்கொண்டுள்ளார். நாட்டில் ஒழுக்கமான சமுதாயம் ஒன்றை உருவாக்கும் நோக்கில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கட்டாய இராணுவ பயற்சியை வழங்குவது குறித்து நாடாளுமன்றில் திட்டம் ஒன்றினை முன்வைக்கவுள்ளதாக பொதுப்பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கட்டாய இராணுவ பயற்சி என்ற அறிவிப்பு வெறும் முன்மொழிவு மட்டுமே | Athavan News -
By nunavilan · பதியப்பட்டது
இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி 2021 இல் ‘வலுவாக மீளக்கூடியது’ – இலங்கை மத்திய வங்கி ஆளுநர் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி 2021 ஆம் ஆண்டில் சுமார் 5 – 6% வளர்ச்சியுடன் ‘வலுவாக மீண்டும் வரும்’ என்று இலங்கை மத்திய வங்கி ஆளுநர் பேராசிரியர் டபிள்யூ.டி.லக்ஷ்மன் தெரிவித்தார். அரசாங்கமும் மத்திய வங்கியும் சர்வதேச அளவிலும், உள்நாட்டிலும் இருதரப்பு மற்றும் பலதரப்பு பங்காளிகளுடன் கலந்துரையாடல்களைத் தொடர்கின்றன, இலங்கைப் பொருளாதாரம் தொடர்ந்து மீளெழும் தன்மையைக் காண்பிக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். இலங்கையின் இறையாண்மை பத்திர விளைச்சல் மற்றும் குறிப்பிடத்தக்கவை பங்குச் சந்தை குறியீடுகளின் உயர்வு உலகளாவிய மற்றும் உள்நாட்டு முதலீட்டாளர்கள் இலங்கை பொருளாதாரம் மற்றும் அதன் வாய்ப்புகள் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது. 2020 ஆம் ஆண்டில் தொற்றுநோயால் இயக்கப்படும் சுருக்கத்தை பிரதிபலிக்கும் வகையில், 2021 ஆம் ஆண்டில் இலங்கை பொருளாதாரம் 2021 ஆம் ஆண்டில் ‘வலுவாக முன்னேறும்’ என்று எதிர்பார்க்கிறோம் எனவும் அவர் தெரிவித்தார் . தற்போதைய பணவியல் கொள்கை சூழல் பொருத்தமானது என்று நாணய சபை கருதுகிறது. 2020 ஆம் ஆண்டில் கடன் விகிதங்கள் கடுமையாகக் குறைந்துவிட்டன, மேலும் உள்நாட்டு பணச் சந்தையில் பராமரிக்கப்பட்டு வரும் அதிகப்படியான பணப்புழக்கத்துடன் சந்தை கடன் விகிதங்களில் மேலும் குறைப்பை எதிர்பார்க்கிறோம். மேம்பட்ட வணிகச் சூழல் மற்றும் குறைந்த வட்டி விகிதங்களுக்கு பதிலளிக்கும் விதமாக தனியார் துறை கடன் வளர்ச்சியில் முடுக்கம் இருப்பதைக் கண்டோம். பொருளாதாரத்தின் வெளிப்புறத் துறை இந்த ஆண்டில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை பதிவு செய்துள்ளது. தொழிலாளர்கள் அனுப்பும் பணம் 7 பில்லியன் அமெரிக்க டொலர்களை விட அதிகமாக உள்ளது. அரசாங்கத்தின் வெளிநாட்டுக் கடன் சேவைக் கடமைகளை பூர்த்தி செய்த போதிலும், 4.5 பில்லியன் அமெரிக்க டொலர் உத்தியோகபூர்வ இருப்புக்கள் 2020 ஆம் ஆண்டின் இறுதிக்குள் 5.7 பில்லியன் அமெரிக்க டொலர்களாக பராமரிக்கப்பட்டுள்ளன, “என்று பேராசிரியர் லக்ஷ்மன் மேலும் கூறினார். கொவிட் தொற்று சுற்றுலா வருகை மற்றும் நிதி வரவுகள் 2020 காலகட்டத்தில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன, மேலும் இந்த வரவுகள் 2021 முதல் நடைமுறைக்கு வரும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம் எனவும் அவர் தெரிவித்தார் . Thinakkural.lk -
By nunavilan · பதியப்பட்டது
பொதுமக்களின் காணிகள் சுவீகரிப்பு: வேலனை பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் http://i2.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/01/pro-1-7-720x450.jpg பொதுமக்களின் காணிகளை சுவீகரிப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வேலனை பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டு, கவனயீர்ப்புப் போராட்டமொன்று இன்று (செவ்வாய்க்கிழமை) முன்னெடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம்- வேலணை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட மண்கும்பான் பிரதேசத்தில் 11 பேருக்கு சொந்தமான 5 ஏக்கர் காணியை கடற்படையின் தேவைக்காக சுவீகரிக்கும் நோக்கில் நில அளவைத் திணைக்களத்தினால் அளவீடு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, காணி உரிமையாளர்களும் பிரதேச மக்களும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும் இணைந்து போராட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர். ஆயினும் இன்றைய தினம் காணி அளவீட்டு திணைக்கள அதிகாரிகள் காணி அளவிடுவதற்கு அங்கு வருகை தரவில்லை. இதனால், நாளாந்தம் திடீர் திடீரென மக்களுக்குச் சொந்தமான காணிகளை படையினரின் தேவைகளுக்காக அதிகரிக்கும் நோக்கில் நிலஅளவைத் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்பட்ட செயற்பாடு நிறுத்தப்பட வேண்டுமென வலியுறுத்தியும் படையினரால் ஆக்கிரமிக்கப்பட்ட காணிகளை மீண்டும் மக்களிடமே வழங்க கோரியும் வேலணைப் பிரதேச செயலகத்திற்கு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பேரணியாகச் சென்றனர். இதன்போது வேலனை பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டு எமது நிலம் எமக்கு வேண்டும், சுவீகரிக்காதே சுவீகரிக்காதே எமது காணிகளை சுவீகரிக்காதே, நிறுத்து நிறுத்து காணிகளை அளவிடுவதை நிறுத்து, வேண்டும் வேண்டும் எமது காணிகள் எமக்கு வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோஷங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து அங்கு பெருமளவு பொலிஸார் குவிக்கப்பட்டு பிரதேச செயலகத்துக்குள் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் உள் நுழைவதற்கு தடை விதித்திருந்தனர். எனினும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தாம் பிரதேச செயலாளரிடம் மனு கையளிக்க வேண்டும் என்றும் தமக்கான நீதி கிடைக்க வேண்டும் என்றும் காணி அளக்கப்படுவதை நிறுத்துவது தொடர்பில் பிரதேச செயலாளர் உறுதிமொழி வழங்க வேண்டும் என்றும் கோரி, பிரதேச செயலாளரைச் சந்திக்க போவதாக கூறியிருந்தனர். மேலும் பொதுமக்களின் காணிகளை சுவீகரிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும். இல்லையேல் தொடர்ச்சியான போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என்றும் பிரதேச செயலாளரிடம் ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்திருந்தனர். அத்துடன் இவ்விடயம் தொடர்பாக மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பிரதேச செயலாளர் சோதிநாதன், “இந்தக் காணிகளை சுவீகரிக்க முயற்சி முன்னெடுக்கப்பட்டாலும் அதில் மக்களுக்கு விருப்பமின்மை அல்லது மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதால், அதனை தாம் தற்காலிகமாக இடை நிறுத்துவதாகவும் இது தொடர்பில் காணி அமைச்சிக்கு தெரியப்படுத்தி அதன்பின்னரே அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பில் தீர்மானிக்க முடியும்” என குறிப்பிட்டார். பின்னர் போராட்டமும் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. இதேவேளைஅரசின் இத்தகைய செயற்பாடுகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டால் சிவில் நிர்வாகத்தை வட.கிழக்கு முழுவதும் முடக்கி தமிழ் மக்களது கடுமையான எதிர்ப்பை அரசிற்கு காட்ட வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என்றும் போராட்டத்தில் கலந்து கொண்டிருந்த அரசியல் பிரமுகர்கள் கருத்து வெளியிட்டிருந்தனர். பொதுமக்களின் காணிகள் சுவீகரிப்பு: வேலனை பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் | Athavan News -
By உடையார் · பதியப்பட்டது
`சசிகலாவை அதிமுகவில் இணைக்க 100% வாய்ப்பில்லை!’ -அமித் ஷா, மோடி உடனான சந்திப்புக்குப்பின் முதல்வர் பிரேம் குமார் எஸ்.கே. எடப்பாடி பழனிசாமி `முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்த வரை சசிகலா கட்சியிலே இல்லை. சசிகலாவுடன் இருந்தவர்கள் பலர் அ.தி.மு.க வில் இணைந்து விட்டனர்’ - முதல்வர் பழனிசாமி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரண்டு நாட்கள் சுற்றுப் பயணமாக டெல்லி சென்றுள்ளார். அவருடன் அமைச்சர் ஜெயக்குமார் சென்றுள்ளார். டெல்லியில் அ.தி.மு.க எம்.பிக்கள் முதல்வரை வரவேற்றனர். இந்நிலையில் நேற்று இரவு 7.30 மணிக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இல்லத்திற்கு சென்று அவரை சந்தித்தார். அப்போது தமிழக அரசியல் நிலவரம் குறித்து பேசியதாக கூறப்படுகிறது. எடப்பாடி பழனிசாமி இந்த நிலையில் இன்று காலை முதல்வர், பிரதமர் மோடியை அவரின் இல்லத்தில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக முதலவர் எடப்பாடி பழனிசாமி, ``புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்ட வேண்டும் என்று பிரதமரிடம் கோரிக்கை வைத்தேன். வண்ணாரப்பேட்டை - விம்கோ நகர் மெட்ரோ ரயில் சேவை தொடக்க விழாவுக்கும் பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்தேன். கோரிக்கை ஏற்று தமிழகம் வருவதாக தெரிவித்திருக்கிறார். இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட படகுகளை மீட்கக்கோரி பிரதமரிடம் கோரிக்கை விடுத்தேன். தமிழக அரசின் கோரிக்கைகளை பரிசீலிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்” என்றார். தொடர்ந்து அமித் ஷா உடனான சந்திப்பு குறித்து பேசியவர், ``உள்துறை அமைச்சர் அமித் ஷா உடன் அரசியல் பேசவில்லை” என்றார். சசிகலா தற்போது தமிழக அரசியலில் சசிகலாவில் விடுதலை குறித்து தான் அதிகம் பேசப்படுகிறது. டெல்லி சென்ற முதல்வர் சசிகலா குறித்து பேசினார். ``முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்த வரை சசிகலா கட்சியிலே இல்லை. சசிகலாவுடன் இருந்தவர்கள் பலர் அ.தி.மு.க வில் இணைந்து விட்டனர். சசிகலா வருகையால் அ.தி.மு.கவில் எந்த மாற்றமும் ஏற்படாது. சசிகலாவை அ.தி.மு.க-வில் இணைக்க 100 சதவீதம் வாய்ப்பில்லை” என்றார். https://www.vikatan.com/government-and-politics/politics/cm-palanisamy-says-sasikala-will-not-be-accepted-in-admk
-
Recommended Posts
Join the conversation
You can post now and register later. If you have an account, sign in now to post with your account.