Recommended Posts

2 hours ago, இசைக்கலைஞன் said:

15698207_1510998382247645_71919460132408

:D:

புட்னினை சுற்றி சார்ச்சு போன பற்றரிகள். உதுகளை சார்ச்சு ஏத்திறதிலும் பார்க்க சும்மா இருக்கலாம் 

Share this post


Link to post
Share on other sites
7 minutes ago, MEERA said:

புட்னினை சுற்றி சார்ச்சு போன பற்றரிகள். உதுகளை சார்ச்சு ஏத்திறதிலும் பார்க்க சும்மா இருக்கலாம் 

Old is gold

Share this post


Link to post
Share on other sites

Share this post


Link to post
Share on other sites

Share this post


Link to post
Share on other sites

Share this post


Link to post
Share on other sites
1 hour ago, தமிழ் சிறி said:

Bild könnte enthalten: 1 Person, Text, im Freien und Natur

மாடு மேயுற திடலில ஏன்டா அம்பி அருகம் புல்லை வளர்த்தாய் ....! tw_blush:

Share this post


Link to post
Share on other sites
31 minutes ago, Nathamuni said:

 

திமுக காரங்க வைகோவை இரண்டில் ஒரு கை பார்க்கிற மாதிரி.

Share this post


Link to post
Share on other sites

Share this post


Link to post
Share on other sites

15726297_10155601571658294_4581212526567

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


  • Topics

  • Posts

    • சிங்கள சிறிலங்கா அரசு நினைப்பதை  அரங்கேற்றும் நிசலையிலா தமிழிளையோரில் ஒரு பகுதியினர் முழுமூச்சோடு அலைகிறார்கள் போல் உள்ளது. 
    • ர் சிங்களம் இட்ட தீயை மட்டுமல்ல.. அடித்த ஷெல்களையும்... பொம்பர் குண்டுகளையும்.. சகடைக் குண்டுகளையும்.. துப்பாக்கி ரவைகளையும்.. தாங்கி நின்ற தமிழரின் கல்விக் கருவூலம்.   
    • அழிக்கப்பட்ட அறிவுச் சுரங்கம் “யாழ் நூலகம்” Last updated May 30, 2020 தமிழர்களின் கலாச்சாரக் குறியீடுகளை அழிப்பது தமிழர்களை அழிப்பதைக் காட்டிலும் முக்கியமானது – சிங்கள இனவெறியர்களுக்குச் சொல்லித் தரப்பட்ட சித்தாந்தங்களுள் இதுவும் ஒன்று. அத்தகைய கலாச்சாரக் குறியீடுகளுள் ஒன்று யாழ்ப்பாணம் பொதுமக்கள் நூலகம். ஆசியாவின் மிகச்சிறந்த நூலகமாகக் கருதப்பட்ட நூலகம். ஈழத் தமிழர்களின் பெருமை, பெருமிதம், கௌரவம் என்று யாழ் நூலகத்தைச் சொல்லலாம். இன்னும் சொல்லப்போனால் ஈழத்தமிழர்களின் கல்வியறிவுக்கான ஆதாரப்புள்ளியாக அந்த நூலகத்தைத்தான் சுட்டிக்காட்டுவார்கள். அதுதான் சிங்கள இனவெறியர்களை உறுத்திக்கொண்டே இருந்தது. தமிழர்களின் முன்னேற்றத்துக்கு உத்வேகம் கொடுக்கின்ற அந்த நூலகத்தை என்றாவது ஒருநாள் தடம் தெரியாமல் அழித்துவிட வேண்டும் என்று உள்ளுக்குள் வன்மம் வளர்த்துக் கொண்டிருந்தனர். தகுந்த நேரத்துக்காகக் காத்திருந்தனர். 1981 ஆம் ஆண்டின் மே மாதம் யாழ்ப்பாணத்தில் மாவட்ட சபைத் தேர்தல்கள் அறிவிக்கப்பட்டிருந்தன. பிரசாரம் உச்சத்தில் இருந்தது. தேர்தல் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுவதற்காக இலங்கையின் பல்வேறு பகுதிகளில் இருந்து சிங்களக் காவலர்கள் வந்திருந்தனர். 31 மே 1981 அன்று தமிழர்களுக்கும் போலீஸாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அதில் சிங்கள காவலர் ஒருவர் மரணம் அடைந்தார். அவ்வளவுதான். எங்கிருந்து வந்தார்கள் என்று தெரியாது. எப்படி வந்தார்கள் என்று தெரியாது. கொத்துக் கொத்தாக வந்த சிங்களர்கள் தமிழர்கள் மீது ஆவேசத் தாக்குதலில் ஈடுபட்டனர். இங்கே சிங்களர்கள் என்றால் சிங்களக் காவலர்கள், ராணுவத்தினர், இனவெறியர்கள், வன்முறையாளர்கள் என்று அத்தனை பேரும் அடக்கம். முதலில் புத்தகக் கடைகளைக் குறிவைத்தனர். அடுத்தது, பத்திரிகை அலுவலகம். இலங்கையில் முதல் தமிழ்ப் பத்திரிகை என்ற பெருமைக்குரிய ஈழநாடு பத்திரிகை அலுவலகம் தீக்கிரையானது. யாழ்ப்பாணம் நாச்சியார் கோயிலுக்குத் தீவைத்தனர். நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரனின் வீட்டுக்குத் தீ வைக்கப்பட்டது. அவருடைய வாகனமும் எரிக்கப்பட்டது. அக்கம்பக்கத்தின் தென்பட்ட தமிழர்களின் வீடுகள், கடைகள், வாகனங்கள் அனைத்தையும் நெருப்பு கொண்டு எரித்தனர். அதன்பிறகும் வெறி அடங்கவில்லை அவர்களுக்கு. அடுத்து எதை அழிப்பது என்று அலைந்த இனவெறியர்களின் கழுகுக் கண்களில் யாழ்ப்பாணம் பொதுமக்கள் நூலகம் சிக்கியது. உற்சாகமடைந்த இனவெறியர்கள் யாழ் நூலகத்துக்குள் நுழைந்தனர். தடுத்து நிறுத்திய காவலாளியை நெட்டித் தள்ளினர். கைவசம் கொண்டுவந்த பெட்ரோல் மற்றும் மண்ணெண்ணெய் கொண்டு நூலகத்தின் ஒவ்வொரு பகுதியாகப் பார்த்துப் பார்த்துத் தீவைத்தனர். பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டதாகவும் சில சாட்சியங்கள் இருக்கின்றன. நூலகத்தின் மேற்கு மூலை பகுதிதான் முதலில் எரியத் தொடங்கியது. அதன் தொடர்ச்சியாக நூலகத்தின் அடுத்தடுத்த பகுதிகளும் எரியத் தொடங்கின. நூலகம் எரிகிறது என்றால் புத்தகங்கள் எரிகின்றன என்று அர்த்தம். புத்தகங்கள் எரிகின்றன என்றால் தமிழர்களின் கலாச்சாரக் குறியீடுகள் எரிகின்றன என்று அர்த்தம். செய்தி கேள்விப்பட்ட தமிழர்கள் பதைபதைத்தனர். நூலகம் எரிந்துகொண்டிருக்கும் செய்தி மாநகரசபை ஆணையாளர் சிவஞானத்துக்குக் கிடைத்தது. பதறித் துடித்த அவர், உடனடியாக தீயணைப்பு வீரர்களையும் மாநகரசபை ஊழியர்களையும் நூலகத்துக்கு அனுப்பினார். தீயை அணையுங்கள், ஆவணங்களைக் காப்பாற்றுங்கள் என்று உத்தரவிட்டார். அதன்படி நூலகத்தை நெருங்கிய தீயணைப்பு வீரர்களைத் தடுத்து நிறுத்தினர் சிங்கள காவலர்கள். மேலிடத்து உத்தரவு அவர்களை அப்படிச் செய்யவைத்திருந்தது. நூலகத்தின் ஒவ்வொரு அங்குலமும் அழிந்துகொண்டிருந்தது. நூலகத்துக்குள் சேமித்து வைக்கப்பட்டிருந்த 97000 நூல்கள் கருகிச் சிதைந்தன. மருத்துவம், இலக்கியம், ஜோதிடம் உள்ளிட்ட துறைகளைச் சார்ந்த நூல்கள், ஓலைச்சுவடிகளில் எழுதப்பட்ட ஆவணங்கள் அனைத்தும் சாம்பலாகின. கலாநிதி ஆனந்த குமாரசுவாமி நூற்தொகுதி, சி. வன்னியசிங்கம் நூற்தொகுதி, ஐசாக் தம்பையா நூற்தொகுதி, கதிரவேற்பிள்ளை நூற்தொகுதி, அமெரிக்காவில் இருந்து நன்கொடையாக வந்திருந்த நூற்தொகுதிகள் ஆகியன அழிந்து போன பொக்கிஷங்களில் அதிமுக்கியமானவை. யாழ் நூலகம் எரிக்கப்பட்ட செய்தி தமிழர்களை அதிர்ச்சியில் உறையச் செய்தது. செய்தியைக் கேள்விப்பட்ட பன்மொழிப் புலவர் தாவீது அடிகளார் அதிர்ச்சியில் மரணம் அடையும் அளவுக்கு இருந்தது யாழ் நூலக எரிப்பின் தாக்கம். நூலக எரிப்பை நேரடியாகப் பார்த்த பற்குணம் என்பவருக்கு மனநிலை பாதிக்கப்பட்டது. யாழ் நூலக எரிப்பு தமிழர்களின் மனத்தில் ஆற்றமுடியாத வடுக்களை ஏற்படுத்திவிட்டன. அந்த நூலகம் உருவான வரலாறு அப்படிப்பட்டது. மனிதனுக்கு சுவாசிப்பது எத்தனை முக்கியமோ அத்தனை முக்கியமானது வாசிப்பது என்பதில் ஈழத்தமிழர்கள் அசைக்கமுடியாத நம்பிக்கை கொண்டவர்கள். அதன் காரணமாகவே 1842 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் முதல் நூலகம் உருவாக்கப்பட்டது. அந்த நூலகம் பெரிய அளவில் வளர்ச்சி அடையாவிட்டாலும்கூட புத்தகங்கள் வாசிப்பதில் தமிழர்களுக்கு ஆர்வம் குறைந்துவிடவில்லை. அதன் காரணமாகவே பெரிய நூலகம் ஒன்றை யாழ்ப்பாணத்தில் உருவாக்க விரும்பினர். ஆர்வம் கொண்ட இளைஞர்களும் பொதுநல ஆர்வலர்களும் நூலகம் உருவாக்கும் பணியில் ஈடுபட்டனர். சிறிய அளவில் கட்டப்பட்ட அந்த நூலகம் மெல்ல மெல்ல வளர்ச்சி அடைந்தது. பொதுமக்களிடம் இருந்து திரட்டும் நிதியைக் கொண்டே நூலகக் கட்டடம் வளரத் தொடங்கியது. நூலகத்தை நிர்மாணிக்கும் பணியில் இந்தியாவைச் சேர்ந்த கட்டடக் கலைஞர் நரசிம்மன் ஈடுபட்டார். அமைதியான வாசிப்புக்குத் தேவையான அத்தனை வசதிகளுடனும் கூடிய யாழ்ப்பாணம் பொது மக்கள் நூலகம் 11 அக்டோபர் 1959 அன்று வாசிப்புக்குத் திறந்துவிடப்பட்டது. உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நூல்கள் வந்துசேர்ந்தன. புத்தக ஆர்வலர்கள் சேமித்துவைத்திருந்த புத்தகங்களும் பத்திரிகைப் பிரதிகளும் யாழ் நூலகத்துக்கு அன்பளிப்பாகத் தரப்பட்டன. அரிய நூல்களும் ஆவணங்களும் அங்கு பாதுகாக்கப்பட்டன. தமிழ் இளைஞர்களின் வாசிப்புப் பழக்கத்தைத் தூண்டுவதற்கு யாழ் நூலகம் பேருதவி செய்தது. ஏராளமான இளைஞர்கள் நூலகத்துக்கு வருவதை வழக்கமாக்கிக் கொண்டனர். பத்திரிகைகள் மற்றும் புத்தகங்கள் வாசிப்பது தமிழர்களின் தினசரி நடவடிக்கைகளுள் ஒன்றாக மாறிப்போனது யாழ் நூலகத்தின் வருகைக்குப் பிறகுதான். யாழ் நூலகத்தைப் பார்த்து பரவசம் அடைந்த தமிழ் இளைஞர்கள், அதேபோன்று இல்லாவிட்டாலும் சிறிய அளவிலான நூலகங்களையும் வாசக சாலைகளையும் தத்தமது பகுதிகளில் உருவாக்க ஆர்வம் செலுத்தினர். தமிழர்களின் வாசிப்பு ஆர்வமும் கல்வியறிவும் சிங்கள அரசாங்கத்துக்கு ஆத்திரத்தை வரவழைத்தன. தமிழர்கள் படிப்பதால்தான் சிந்திக்கிறார்கள். சிந்திப்பதால்தான் கேள்வி கேட்கிறார்கள். போராட்டத்தில் இறங்குகிறார்கள். உரிமைக்குரல் எழுப்புகிறார்கள். எல்லாவற்றுக்கும் காரணம் அவர்களுடைய கல்வியறிவு. அதற்கு உந்துசக்தியாக இருப்பது அந்த யாழ் நூலகம். அதை அழித்துவிட்டால் தமிழர்களின் எதிர்காலத்தையே சீர்குலைத்துவிடமுடியும் என்று கணித்தனர். நூலகத்தை எரிக்கும் பொறுப்பு இரண்டு அமைச்சர்கள் வசம் ஒப்படைக்கப்பட்டது. சிறில் மேத்யூ மற்றும் காமினி திசநாயகா என்ற இரண்டு அமைச்சர்கள் களத்தில் இறங்கினார்கள். (பின்னாளில் அதிபரான ரணசிங்கே பிரேமதாசா கொடுத்த வாக்குமூலம் இது) கொழும்புவில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட சிங்கள வன்முறையாளர்களை யாழ்ப்பாணம் நகரத்துக்கு அழைத்துவந்து தங்கவைத்தனர். என்ன செய்வீர்கள் என்று தெரியாது.. யாழ் நூலகம் எரிக்கப்படவேண்டும். இதுதான் அந்த வன்முறையாளர்களுக்கு அமைச்சர்கள் கொடுத்த உத்தரவு. தகுந்த தருணத்துக்காகக் காத்துக்கொண்டிருந்தனர் வன்முறையாளர்கள். அந்த நேரம் பார்த்து போலீஸாருக்கும் தமிழர்களுக்கும் மோதல் மூண்டது. இதுதான் சமயம் என்று மின்னல் வேகத்தில் களமிறங்கினர் வன்முறையாளர்கள். அமைச்சர் இட்ட உத்தரவை அப்படியே நிறைவேற்றி முடித்தனர். நூலகத்தை எரித்த நெருப்பு தமிழர்களின் நெஞ்சுக்குள் பரவியது. தங்களுடைய உரிமைக்குரலை உரத்து எழுப்பியது நூலக எரிப்புப் பிறகு என்றே சொல்லலாம். பாவத்துக்குப் பரிகாரம் தேடும் முயற்சியாக யாழ் நூலகத்தை மீண்டும் கட்டியிருக்கிறது சிங்கள அரசு. செங்கல். சிமெண்ட். மேசை. நாற்காலி. எல்லாம் புதிதாக வந்துவிட்டன, அழிந்துபோன அரிய ஆவணங்களைத் தவிர! -ஆர். முத்துக்குமார்.   https://www.thaarakam.com/news/134306
    • இந்தியா - சீனா எல்லை பதற்றம் எங்கு போய் முடியும்? அடுத்து என்ன நடக்கும்? அன்பரசன் எத்திராஜன் மற்றும் விகாஸ் பாண்டே பிபிசி AFP ஆசியாவின் இரு முக்கிய நாடுகளின் ராணுவங்களும் இமயமலையில் குவிக்கப்பட்டுள்ளது, பதற்றத்தை அதிகரித்துள்ளது. நிலைமை மேலும் மோசமாகும் வாய்ப்பு இருப்பதாகவும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.  இந்தியா - சீனா எல்லை பிரச்சனை கடந்த சில வாரங்களில் பூதாகரமாகி உள்ள நிலையில், சர்ச்சைக்குரிய காஷ்மீர் பிராந்தியத்தில் அதாவது லடாக்கில் உள்ள கால்வன் பள்ளத்தாக்கில் ஆயிரக்கணக்கான சீன துருப்புகள் நுழைந்துள்ளதாக அதிகாரிகள் கூறியதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்தியத் தலைவர்களுக்கும், ராணுவ உத்தியாளர்களுக்கும் இது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  இந்தியா தனக்கு சொந்தமான இடம் என்று கருதும் எல்லைப்பகுதிகளில் சீனப் படைகள் கூடாரம் அமைத்து, சுரங்கங்கள் தோண்டி அதன் வழியாக கனரக உபகரணங்களை கொண்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது. கால்வன் பள்ளத்தாக்கில் இந்தியா கட்டுமானப்பணிகளை செய்வதை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.  எனினும் இதனால் சீனா சொல்ல வரும் செய்தி டெல்லி தலைவர்களுக்கு தெளிவாகவே இருக்கிறது. இது வழக்கமான ஊடுருவல் அல்ல எனும் செய்திதான் அது.  "சூழல் மோசமாக உள்ளது. இந்தியாவுக்கு சொந்தமானது என்று ஏற்கனவே சீனாவால் ஒப்புக்கொள்ளப்பட்ட பகுதிக்குள்ளே அவர்கள் தற்போது நுழைந்துள்ளனர். அதனால், அங்கிருந்த நிலை முற்றிலும் மாறியுள்ளது" என்கிறார் இந்திய ராணுவ நிபுணரான அஜய் சுக்லா. இந்த மாற்றத்திற்கு காரணம் இந்தியா மாறியதுதான் என்று சீனா கூறுகிறது.  லடாக்கில் இருதரப்பினரிடையே இருமுறை மோதல் ஏற்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. கால்வன் பள்ளத்தாக்கு, ஹாட் ஸ்பிரிங்க்ஸ் மற்றும் பங்காங் ஏரியின் தெற்கு பகுதியில் இருதரப்பிற்கும் மோதல் நிலை ஏற்பட்டது. இந்தியா, சீனாவுடன் 3,488 கி.மீ எல்லையை பகிர்ந்து கொள்கிறது. ஜம்மு-காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம், உத்தரகண்ட், சிக்கிம் மற்றும் அருணாச்சல பிரதேசம் வழியாக இந்த எல்லை செல்கிறது. இருப்பினும், இரு நாடுகளும் இன்னும் முழுமையாக எல்லைகளை வரையறுக்கவில்லை. ஏனென்றால் பல பகுதிகள் தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே எல்லை தகராறு நீடிக்கிறது. இரு நாடுகளின் எல்லைப் பாதுகாப்பு வாகனங்களிடையே அடிக்கடி மோதல் நிகழ்வுகள் இருந்தாலும், கடந்த 4 தசாப்தங்களாக துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் ஏதும் இருக்கவில்லை.  உலகிலேயே மிகப்பெரிய ராணுவத்தை கொண்ட இந்த இருநாடுகளும் அவ்வப்போது பல தருணங்களில் நேருக்கு நேர் சந்தித்துக் கொண்டிருக்கின்றன.  எது எவ்வாறு இருந்தாலும், இருக்கும் நிலையை அப்படியே தக்க வைத்துக் கொள்ள, நிஜமான எல்லை கட்டுப்பாட்டுக் கோடு அதாவது எல்.ஏ.சி என்ற சொல் பயன்படுத்தப்பட்டது. இருப்பினும், அது இன்னும் தெளிவுபடுத்தப்படாமல் இருக்கிறது.    இந்த எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டில், பல பனிப்பாறைகள், பனிப் பாலைவனங்கள், மலைகள் மற்றும் ஆறுகள் இருக்கின்றன. எல்.ஏ.சி-யை ஒட்டியப் பகுதிகளில் இதுபோன்ற பல பகுதிகள் உள்ளன, அங்கு இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே பதற்றங்கள் அடிக்கடி ஏற்படுகின்றன. இந்த பதற்றம் லடாக் பகுதிக்கு மட்டும் இல்லை. இருநாட்டு ராணுவ வீரர்களும் சீனாவிற்கும் சிக்கிமிற்கும் இடையே உள்ள நகு லா கணவாயிலும் விழிப்புடன் இருக்கிறார்கள்.  மேலும், நேபாளம் வெளியிட்ட புதிய வரைபடம் குறித்த சர்ச்சையும் நீடிக்கிறது. சீனாவை இணைக்கும் சாலையை அமைப்பது மூலம் இந்தியா நேபாளுக்கு உட்பட்ட இடத்தை ஆக்கிரமிப்பதாக அந்நாடு குற்றஞ்சாட்டுகிறது.  தற்போது பதற்றம் அதிகரிப்பது ஏன்? இதற்கு பல காரணங்கள் உண்டு.  "தற்போது கல்வான் நதிக்கு அருகில்தான் அதிக பதற்றம் நீடிக்கிறது. ஏனென்றால் ஷ்யோக் நதிக்கரையோரத்தில் இருந்து டாலட் பெக் பகுதிக்கு இந்தியா அமைக்கும் புதிய சாலை இங்கிருந்துதான் எல்ஏசி-க்கு மிகவும் நெருக்கமான இருக்கிறது" என்று சுக்லா கூறுகிறார். இது சீனாவிற்கு மிகுந்த கோபத்தை ஏற்படுத்தியது. Getty Images இந்தியா-சீனா எல்லையில் உள்ள பாங்கோங் த்சோ ஏரி "கால்வன் பள்ளத்தாக்கு சீன பிராந்தியத்துக்கு உட்பட்டது. உள்ளூர் எல்லைக் கட்டுப்பாட்டு சூழல் தெளிவாக இருக்கிறது" என சீன அரசு ஊடக நிறுவனமான குளோபல் டைம்ஸ் செய்தி வெளியிட்டது.  "சீன ராணுவத்தை பொறுத்தவரை, இந்தியாதான் கால்வன் பள்ளத்தாக்கில் அத்துமீறி நுழைந்ததாக கூறுகிறது. எல்லையில் இருக்கும் சூழலை இந்தியா மாற்றுவதே, சீனாவின் கோபத்திற்கு காரணம்" என்று உலக விவகாரங்களுக்கான செங்க்டு நிறுவனத்தின் தலைவர் லாங் ஷிங்சுன் தெரிவிக்கிறார்.  ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை இந்திய அரசு நீக்கியது பிராந்திய வரைபடத்தில் மாற்றத்தை கொண்டு வந்தது. இதன்படி அக்சாய் சீனா லடாக் பகுதிக்குள் கொண்டுவரப்பட்டது. சீனாவின் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் பகுதியை, இந்தியா தனக்கு சொந்தம் என்று கூறியது.  வில்சன் சென்டர் என்ற வல்லுநர் அமைப்பில் ஆசிய திட்டத்தின் துணை இயக்குநராக இருக்கும் மைக்கெல் கூகெல்மேன் கூறுகையில், "இது வழக்கமான மோதல் கிடையாது. தங்களுடைய பலத்தை காண்பிக்கவே எல்லையில் ராணுவ வீரர்களை சீனா நிறுத்தியுள்ளது" என்றார். மோதல் ஏற்பட்டால் ஆட்களையும் அதற்கு தேவையானவற்றையும் எல்லைக்கு அனுப்ப இந்தியா வேகமாக நடவடிக்கை எடுக்கும்.  கடந்த ஆண்டில் மற்றக் கொள்கைகளிலும் சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே பல்வேறு கருத்து வேறுபாடுகள் நிலவின. பாகிஸ்தான் நிர்வகிக்கும் காஷ்மீரை மீண்டும் கைப்பற்றுவது குறித்து பாஜக மூத்த தலைவர்கள் பேசி வருகின்றனர். நீண்டகால நட்பு நாடுகளாக இருக்கும் சீனா மற்றும் பாகிஸ்தானை இணைக்கும் சாலையான கரகொரம் நெடுஞ்சாலை இப்பகுதியில்தான் செல்கிறது. பாகிஸ்தானின் கட்டமைப்பில் சீனா சுமார் 60 பில்லியன் டாலர்கள் அளவிற்கு முதலீடு செய்துள்ளது. இந்த நெடுஞ்சாலை வழியாகத்தான் பாகிஸ்தானிய துறைமுகம் குவாடரில் இருந்து சீனாவுக்கு சரக்கு போக்குவரத்து செய்யப்படுகிறது. இந்தத் துறைமுகம்தான் அரபுக்கடலில் சீனாவிற்கு இருக்கும் கட்டுப்பாட்டை நிலைநிறுத்த உதவுகிறது.  இது எங்கு போய் முடியும்? "எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டை இருநாட்டு ராணுவங்கள் அவ்வப்போது மீறுவது வழக்கம்தான். இதுபோன்ற நிகழ்வுகள் அப்பகுதியில் ராணுவ மட்டத்திலேயே பேசி தீர்க்கப்படும். ஆனால், தற்போது நடப்பது நாங்கள் கண்டிராத ஒன்று" என்கிறார் இந்தியா - சீனா விவகாரங்களுக்கான வல்லுநரும் முன்னாள் இந்திய அரசின் அதிகாரியுமான ஸ்டோப்டன். "தனக்கு மிகவும் முக்கியம் என்று இந்தியா கருதும் சில பகுதிகளில் மோதல் சூழ்நிலை உருவாகி உள்ளது. பாங்காங் ஏரி கைவிட்டு போனால் லடாக்கை காப்பாற்ற முடியாது. ஷ்யோக் பள்ளத்தாக்கில் சீன ராணுவம் குடியேற அனுமதிக்கப்பட்டால், அவர்கள் நுப்ரா பள்ளத்தாக்கு மற்றும் சியாச்சினை கூட அடையலாம்" என்று அவர் கூறுகிறார்.  இந்தியா இதுபோன்ற ஒரு சிக்கலில் மாட்டிக் கொண்டதற்கு புலனாய்வு தோல்வியே காரணம் என்று கருதப்படுகிறது. எல்லைப் பிராந்தியத்தில் இந்திய ராணுவ வீரர்களின் எண்ணிக்கை குறைவாக இருக்க, அதற்குள் சீனா அங்கு அந்நாட்டின் ராணுவத்தையும் தேவையான உபகரணங்களையும் குவித்துவிட்டது. இதனால் ஆபத்தை உணர்ந்த இந்தியாவுக்கு, தகுந்த நடவடிக்கை எடுப்பதற்கான வாய்ப்பும் குறைவாகவே இருக்கிறது.  Getty Images ஒன்று, பேச்சுவார்த்தை மூலம் துருப்புகளை திரும்பிப் பெற இந்தியா சீனாவை சம்மதிக்க வைக்கலாம். அல்லது கட்டாயப்படுத்தி அவர்களை வெளியேற்றலாம். ஆனால், இரண்டுமே அவ்வளவு எளிமையானது கிடையாது.  "உலகிலேயே இரண்டாவது பெரிய ராணுவ சக்தியாக சீனா திகழ்கிறது. தொழில்நுட்ப ரீதியாக இந்தியாவை விட சீனா வலிமையானது. சீனா மேம்பட்ட கட்டமைப்பு வசதிகளை கொண்டது. ராணுவத்திற்கு தேவையானவற்றை பெற சீனாவிடம் நிதியை செலவழிக்கும் திறன் இருக்கிறது. ஆனால், இந்தியாவின் பொருளாதார நிலை இதற்கு ஏதுவாக இல்லை. மேலும், கொரோனா வைரஸ் தொற்று, இந்திய பொருளாதார சூழலை அதிகம் பாதித்துள்ளது" என்று அஜய் சுக்லா கூறுகிறார்.  அடுத்து என்ன? இமய மலையில் சீனாவுடனான எல்லைப் பகுதியில் 1962ல் நடைபெற்ற குறுகியகால, கசப்பான போர் முடிந்து அரை நூற்றாண்டுக்கு அதிகமானபோதும், அந்த அதிர்ச்சி மறக்க முடியாதது. இந்த யுத்தத்தில், இந்திய ராணுவத்துக்கு ஏற்பட்ட தோல்வி அரசியல் தோல்வியாகவும் கருதப்பட்டது. தனது பிராந்தியத்தின் 38,000 கிலோ மீட்டர் பரப்பை சீனா ஆக்கிரமித்துள்ளதாக இந்தியா கூறுகிறது. எல்லைப் பிரச்சனையை முடிவுக்கு கொண்டுவர கடந்த 3 தசாப்தங்களாக பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன. ஆனால், அவை அனைத்தும் தோல்வியிலேயே முடிந்தது. PRESS INFORMATION BUREA இந்தியா தனக்கு சொந்தமானது என்று கூறும் லடாக்கின் கிழக்கில் இருக்கும் அக்சாய் சீனா, ஏற்கனவே சீனாவின் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது. சீனாவின் ஷின்ஜியாங் மாகாணத்தையும் மேற்கு திபெத்தையும் அக்சாய் சீனா இணைப்பதால், அது மூலோபாய ரீதியாக சீனாவுக்கு மிகவும் முக்கியமானதாகும்.  "பதற்றத்தை அதிகரிக்கும் எண்ணம் சீனாவிற்கு இல்லை. இந்தியாவும் மோதலை தவிர்க்கவே நினைக்கும் என்று எண்ணுகிறேன். ஆனால், என்ன நடக்கும் என்பது இருதரப்பையும் சார்ந்தது. உயர் மட்ட பேச்சுவார்த்தைகள் மூலம் இந்தப் பிரச்சனையை தீர்க்கும் வல்லமை இரு நாடுகளுக்கும் இருக்கிறது" என்று செங்டு நிறுவனத்தின் லாங் ஷிங்சுன் கூறுகிறார்.  எல்லை தகராறு குறித்து சீன ஊடகங்கள் பெரிய செய்திகள் ஏதும் வெளியிடவில்லை. அதனால் பேச்சுவார்த்தைகள் மூலம் இப்பிரச்சனையை சீனா தீர்க்க நினைப்பதாகவே தெரிகிறது.  "இந்தியா - சீனா ஆகிய இரு நாடுகளும் ராணுவ பதற்றத்தை தவிர்த்து, தங்களின் பொருளாதாரத்தை மீட்பதில் கவனம் செலுத்தவதில் விருப்பம் கொண்டுள்ளதாக தெரிகிறது" என்கிறார் ஆபத்துக் கட்டுப்பாட்டு ஆலோசனை அமைப்பின் தெற்காசிய இயக்குநர் ப்ரத்யுஷ் ராவ்   https://www.bbc.com/tamil/india-52861160