• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

Archived

This topic is now archived and is closed to further replies.

பிழம்பு

அடுத்த தலைமுறையைக் கட்டிப்போடும் ஃபேஸ்புக்!

Recommended Posts

ஒரு நிறுவனத்தின் மிகவும் முக்கியமான ஒரு விஷயம், அடுத்த பத்தாண்டுகளில் நாம் எங்கு இருக்க வேண்டும் என் தீர்மானிப்பதும், அதை நோக்கி பயணிப்பதுமே ஆகும். மக்களால் பெரிதும் ஈர்க்கப்பட்ட ஆர்குட், தற்போது இணையவெளியில் இல்லை. அதன் நிறுவனர் புதிதாக ஓர் அப்ளிகேஷனை வெளியிட்டு, அதை சந்தைப்படுத்துவதில் தீர்வம் காட்டி வருகிறார். ஆனால், 2004-ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஃபேஸ்புக் தொலைநோக்குப் பார்வையில் அசத்தி வருகிறது. 32 வயதான அதன் நிறுவனர் மார்க் சக்கர்பெர்க், தற்போது வரை 50 நிறுவனங்களை வாங்கி இருக்கிறார். வாட்ஸ் -அப், அக்குலஸ் , இன்ஸ்டாகிராம் என  ஃபேஸ்புக்கின் கீழ் இயங்கும் நிறுவனங்கள் ஏராளம். அடுத்த பத்து ஆண்டுகளில் , செயற்கோள், ஆக்மென்ட்டெட் ரியாலிட்டி, விர்ச்சுவல் ரியாலிட்டி, போன்றவற்றில் சாதிக்க வேண்டும் என்பது ஃபேஸ்புக்கின் திட்டம். அதற்கான பணிகளில் தற்போதே இறங்கியிருக்கிறார்கள்.  

unnamed.jpg

ஃபேஸ்புக்கின் புதிய ஹார்ட்வேர் தொழிற்சாலை "ஏரியா 404" அதன் கலிபோர்னியா தலைமையகமான மென்லோ பார்க்கில் ஆகஸ்ட் 2, செவ்வாய்க்கிழமை  திறக்கப்பட்டுள்ளது.  கடந்த 2015 ஏப்ரல் மற்றும் ஜூன் மாதங்களில் 6 பில்லியன் டாலர் மதிப்புள்ள விளம்பரங்களை பேஸ்புக் விற்றது. இதன் மூலம் 2 பில்லியன் டாலர்களை லாபம் ஈட்டியது. இதனால் மகிழ்ச்சியடைந்த அதிபர் மார்க் சக்கர்பெர்க் புதிய ஆராய்ச்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க நினைத்தார். அதன் விளைவாக உருவாக்கப் பட்டது தான் இந்தத் தொழிற்சாலை. 2015ல் மட்டும் பேஸ்புக் மின்னணு சாதனங்கள் ஆராய்ச்சிக்காக 4.8 பில்லியன் டாலர்கள் செலவளித்துள்ளது. இது போன ஆண்டைவிட இருமடங்காகும். கட்டுமானப் பொறியாளர் மிக்கால் கிரேவ்ஸ் தலைமையில் இருபத்திரண்டாயிரம் சதுரடி பரப்பளவில் கட்டப்பட்ட இத்தொழிற்சாலை 9 மாதங்களில் கட்டி முடிக்கப்பட்டது. இங்கே உள்ள 10000எக்ஸ் ஜூம் செய்யக்கூடிய மைக்ராஸ்கோப், ஹார்டுவேர் சாதனங்களின் நுண்ணிய பாகங்களை தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது. நாம், ஏதோ ஒரு வலைதளத்தை தேடும்போது, சர்வரை தொடர்பு கொள்வதில் பிரச்னை இருந்தால்,  404 not found error என டிஸ்பிளே ஆகும். இதையே, தனது தொழிற்சாலைக்கு பெயராக வைத்து இருக்கிறார் மார்க்.

img_79801.jpg

வெர்ச்சுவல் ரியாலிட்டி லேசர் என சொல்லப்படும் காற்றில் மிதக்கும் முப்பரிணாமத் திரை,  கேம் விளையாடப் பயன்படுத்தப்படும் வெர்ச்சுவல் ரியாலிட்டி ஹெட் போன்கள், அடுத்த தலைமுறை சர்வர்கள் மற்றும் எலெக்ட்ரானிக் கேட்ஜெட்டுகள் தயாரிக்கும் இடமாக இவ்விடம் அமைந்துள்ளது. வர்த்தகம், பொழுதுபோக்கு, தகவல் தொழில்நுட்பம், விளம்பரம் முதலிய துறைகளில் எதிர்கால தேவைகளை கருத்தில் கொண்டு இந்தத் தொழிற்சாலை உருவாக்கப்பட்டுள்ளதாக ஃபேஸ்புக்கின் தலைமை பொறியாளர்  ஜே பரிக் தெரிவித்தார். கனரக எலெக்ட்ரானிக் சாதனங்கள் பயன்படுத்தப்படும் இந்தத் தொழிற்சாலையில்,ஹார்ட்வர் இன்ஜினியர்களுக்கு சிறப்புப் பயிற்சி வகுப்புகள் வழங்குகிறது. 2012ல் துவக்கப்பட்ட அக்குலஸ் வெர்சுவல் ரியாலிட்டி நிறுவனம் தயாரித்த முப்பரிணாம ரிப்ட், கேமர்கள் மத்தியில் வைரலானது. இந்த ரிப்ட் மூலம் கேம் விளையாடுபவர் 180 டிகிரி வரை பார்த்து, துல்லிய ஒலியை உணரமுடியும். சுற்றுச் சூழலை மறந்து கேமுக்குளேயே செல்வது போன்ற  மாயையை உருவாக்கும் இந்தத் தொழில் நுட்பத்தின் மூலம் அக்குலஸ் நிறுவனம் உலகப்புகழ் பெற்றது.

img_8043.jpg

குறுகிய காலத்தில் அக்குலஸ் நிறுவனத்தின் அசுர வளர்ச்சியைக் கண்ட சாம்சங், தனது கேலக்சி நோட் வகை ஸ்மார்ட்போன்களுக்கு வி ஆர் ஹெட்போன்கள் தயாரிக்க அக்குலஸூடன் ஒப்பந்தமிட்டது. இதனைக் கண்ட ஃபேஸ்புக் அதிபர் மார்க் சக்கர்பெர்க் வாட்ஸ் அப்பைத் தொடர்ந்து அக்குலஸ் நிறுவனத்தை வாங்கினார். மிகுந்த சந்தோஷத்தில் திளைத்திருக்கும் மார்க் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கூறுகையில், ‘அக்குலஸ் ரிப்ட் வகை ஹெட்போன்கள் தொழில்நுட்பத்தில் முன்னோடியாகத் திகழ்கிறது. ஃபேஸ்புக் மூலம் வாடிக்கையாளர்கள் தங்கள் நேசிக்கும் தருணங்களை லைக், ஷேர் செய்வது போல எதிர்காலத்தில் அக்குலஸ் நிறுவனத்தின் உதவியுடன் ஃபேஸ்புக்கின் மொமெண்ட்ஸ் சேவை அடுத்தகட்டத்தை நோக்கி செல்லும் என நம்புகிறேன். இதன்முலம் நீங்கள் நேசிப்பவர்கள் உங்கள் அருகிலேயே இருப்பது போன்ற உணர்வை உங்களுக்கு அளிக்க முடியும். அதற்கான ஆராய்ச்சி எங்கள் தொழிற்கூடத்தில் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. ஒரு காலத்தில் இணையமும், ஸ்மார்ட்போன்களும் கனவாகத்தான் இருந்தன. இன்று அவை உங்கள் விரல் நுனியில் உள்ளன. அதுபோல்  "ஏரியா 404" தொழிற்சாலையில் நாங்கள் தயாரிக்கும் வெர்சுவல் ரியாலிட்டி சாதனங்கள் எதிர்காலத்தில் உலக மக்களின் வாழ்வில் ஒரு பகுதியாகவே மாறிவிடக்கூடும். இதன் மூலம் பேஸ்புக் புதிய பரிணாமத்தை எட்டும்’ என்று தெரிவித்துள்ளார்.

மைக்ரோசாப்ட்,  அமேசான் மற்றும் கூகுள் முதலியவற்றின் தொழிற்போட்டியை சமாளிக்க பேஸ்புக் அதிபர் மார்க் சக்கர்பெர்க் இந்தத் தொழிற்சாலையை உருவாக்கியுள்ளார். ஹார்ட்வேர் தயாரிப்பு ஃபேஸ்புக்குக்கு புதிதல்ல என்றாலும் இந்தத் தொழிற்சாலை எதிர்கால ஆராய்ச்சிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் விதத்தில் உள்ளது. மின்னணு சாதனங்கள் மற்றும் சர்க்யூட் வெல்டிங் இங்கு செய்யப் படுவதில்லை. ஹார்ட்வேர் பொருட்களின் மாதிரிகளை உருவாக்குவது. பரிசோதனை செய்வது ஆகிய வேலைகளுக்கு இவ்விடம் பயன்படுத்தப்படுகிறது. மாதிரிகள் எல்லா சோதனைகளிலும் வெற்றிபெற்றபின் விற்பனை ஆர்டர்களை பொறுத்து ஃபேஸ்புக் வளாகத்தின் உள்ளேயே வேறொரு தொழிற்சாலையில் மொத்தமாக தயாரிக்கப்படும். இவை அமேசான் போல ஆன்லைன் சந்தையில் விற்கப்படும். ஃபேஸ்புக் வாடிக்கையாளர்களை இங்கு தயாரிக்கப்படும் கேட்ஜெட்ஸ் மூலமாக,  உண்மையான முப்பரிணாம உலகிற்கு அழைத்துச் செல்வதே இதன் நோக்கமாக இருக்கும். 

 

http://www.vikatan.com/news/miscellaneous/67064-facebook-opens-hardware-lab.art

Share this post


Link to post
Share on other sites

 • Topics

 • Posts

  • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்...
  • புதிதாக மலர்கிறது... விடுதலைப்புலிகள் மக்கள் பேரவை முன்னாள் போராளிகள் பலரின் ஒருங்கிணைவில் விடுதலைப்புலிகள் மக்கள் பேரவை என்ற அரசியல் கட்சியொன்று உதயமாகின்றது. இந்த கட்சியின் முதலாவது அங்குரார்ப்பண மாநாடு எதிர்வரும் 25ஆம் திகதி கிளிநொச்சியில் முற்பகல் 10 மணிக்கு நடைபெறவுள்ளது. அண்மையில் வவுனியாவில் ஒன்று கூடியிருந்த முன்னாள் போராளிகள் அணிகளான ஜனநாயக போராளிகள் கட்சி, புனர்வாழ்வு அளிக்கப்பட்ட முன்னாள் போரளிகள் அணி, தமிழர் தாயகக் கட்சி, தமிழர் தேசியக் கட்சி மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் ஊடாக சமூக செயற்பாடுகளில் பங்கேற்றிருந்த தரப்பினர் உள்ளிட்டவர்கள் சமகால சூழலில் ஒருங்கிணைந்து செயற்படுவதன் அவசியம் குறித்து ஆலோசனை நடத்தியிருந்தனர். மாவீர்களின் உறவுகளையும் முன்னாள் போராளிகளையும், தாயக மக்களையும் மையமாக வைத்து அரசியல் பிரதிநிதித்துவத்தின் அவசியத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்ட இந்த இணக்கப்பாட்டினை அடுத்து 14 பேர் கொண்ட தலைமைத்துவக் குழுவொன்றும் நியமிக்கப்பட்டிருந்தது. மேலும் முன்னாள் போராளிகள் பலர் விடுதலைப்புலிகள் என்ற சொற்பதம் உள்ளடங்கும் வகையிலேயே கட்சியின் பெயர் அமைய வேண்டும் என்பதில் அதீத விருப்பினை கொண்டிருந்தமையை முன்னிலைப்படுத்தி கட்சியின் பெயர் குறித்த கலந்துரையாடல்கள் இடம்பெற்றிருந்தன. எனினும் விடுதலைப்புலிகள் என்ற சொற்பதத்தினை உள்ளீர்க்கும் பட்சத்தில் அரசியல் கட்சியாக பதிவு செய்வதற்கான நகர்வுகளைச் செய்கின்றபோது சிக்கல்கள் உருவாகும் என்ற அடிப்படையில் ஒரு சிலர் கருத்துக்களை முன்வைத்திருந்தனர். எனினும் தேர்தல்கள் ஆணைக்குழுவில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் என்ற பெயரில் கட்சியொன்று பதிவு செய்யப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டப்பட்ட நிலையில் ‘விடுதலைப் புலிகள் மக்கள் பேரவை’ என்ற பெயர் உறுதி செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/புதிதாக-மலர்கிறது-விடுதல/
  • ரஞ்சனுடனான தொலைபேசி உரையாடலின் எதிரொலி: நாட்டை விட்டு தப்பியோடினார் நடிகை பியூமி நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் தொலைபேசி உரையாடல் வெளியானதால் நடிகை பியூமி ஹன்சமாலி நாட்டை விட்டு வெளியேறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் ரஞ்சன் போன்ற அரசியல் பிரமுகர்களுடன் தொடர்பு கொண்டதற்கு வருத்தம் அடைவதாக அவரது சமூக வலைப்பின்னல் கணக்கில் பதிவேற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. இதேவேளை இந்த குரல்களால், பல நடிகர்கள் மற்றும் நடிகைகளின் வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ரஞ்சன் ராமநாயக்க மாதிவெலயில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் வைத்து கடந்த நான்காம் திகதி கைது செய்யப்பட்டார். இதன்போது பல இறுவட்டுக்கள் அவரின் இல்லத்தில் இருந்து மீட்கப்பட்டன. இதனையடுத்து முன்னைய ஆட்சியின்போது குற்றப்புலனாய்வு திணைக்கள முன்னாள் பணிப்பாளர் சானி அபேசேகர, நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா உள்ளிட்ட பலருடன் கலந்துரையாடிய விடயங்கள் தொடர்பான குரல் பதிவுகள் அனைத்தும் பகிரங்கமாகியிருந்தன. இவ்வாறு முக்கிய பிரமுகர்கள் பலரின் குரல் பதிவுகள் பகிரங்கமாகி வருகின்ற நிலையில் நடிகை பியூமி ஹன்சமாலியும் குறித்த குரல் பதிவு காரணமாக நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/ரஞ்சனுடனான-தொலைபேசி-உரைய/
  • இன்றைய உலகில் பெரும்பாலும் ஹெட்போன் உபயோகிப்போரின் எண்ணிக்கை அதிகமாகிவிட்டது, அதேபோல மார்க்கெட்டிலும் அதிகமான நிறுவனங்களும் ஹெட் போன்களை விற்பனைக்கு கொண்டுவந்துள்ளது, தங்களின் பொழுதுபோக்கிற்காக விளையாட்டாக பயன்படுத்தும் ஹெட் போன்களினால் எவ்வளவு பாதிப்பு ஏற்படுகின்றது என்பதை யாரும் உணர்வதில்லை நாளடைவில் தான் அதன் பாதிப்பை உணர்கின்றனர். நமது காதுகளால் 65 டெசிபெல் வரை ஒரு ஒலியை தாங்க முடிகிறது, ஆனால் நாம் பயன்படுத்தும் ஹெட் போனின் ஒலி குறைந்தது 100 டெசிபெல் ஆகும். அதாவது 100 டெசிபெல் தொடர்ச்சியாக 10 மணி நேரத்திற்கு மேல் நாம் ஹெட் போனில் ஒலியை கேட்டால், நாம் காது கேளாத நிலையை அடைந்துவிடும். நாம் ஹெட்போன் பயன்படுத்துவதினால் நம் காதுகளில் உள்ள செல்களின் மீது மிகவும் தவறான தாக்கத்தை எதிர்கொள்கிறோம். ஹெட்போனை தொடர்ந்து 10 நிமிடங்கள் வரை நாம் உபயோகிப்பதால் நம் காதுகளில் உள்ள செல்கள் சிதைகின்றனர், அதே போல வேகமாக பாக்டீரியாக்கழும் தோன்றுகின்றது. ஹெட்போன் பயன்படுத்துவதினால் தலைவலி, தூக்கமின்மை, மற்றும் மன அழுத்தம் போன்றவற்றினாலும் நாம் பாதிப்படைகின்றோம், நீங்கள் இது போன்ற பிரச்சனைகளை சந்திக்கிறீர்கள் என்றால்! ஹெட் போன் பயன்பாட்டை தவிர்த்துக்கொள்ளுங்கள். Kingdom Joker - பாணபத்திர ஓணாண்டி