Jump to content

புலி வேறு தமிழ் மக்கள் வேறு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்கா பொருட்களை தடை செய்யுங்கோ என்ற தலைப்பை யாழ் களத்தில் பார்த்தவுடன் புத்தனுக்கு சிட்னி டமிழ்ஸ் எவ்வளவு தூரம் அதை கடை பிடிக்கிறோம் என்பதை பார்க்க ஆசையா இருந்தது,முதல் என்ட வீட்ட சுற்றி பார்த்தன்,முக்கால்வாசி பொருட்கள் அங்கிருந்து இற்க்குமதி செய்யபட்ட பொருட்கள் உதாரணமாக பெரிய குத்து விளக்கு மற்றும் அலங்கார பொருட்கள்,மனசுக்கு ஒரு மாதிரியா இருந்தாலும் இது இரண்டு வருடத்திற்கு முன்னம் கொண்டு வந்த பொருட்கள் என மனதை திருப்தி படுத்தி கொண்டு,அரசியல் வேறு அலங்கார பொருட்கள் வேறு என்ற பாணியில் மேலும் மனதிற்கு வலு சேர்த்து கொண்டேன்.

நண்பனின் வீட்டுக்கு சென்று பார்ப்போம் என்று வெளிகிட்டோம் அங்கும் அதே கோலம் தான் நண்பனின் தகப்பன் என்னை வரவேற்றார் என்ன தம்பி இங்கு சரியான வெய்யில்லா இருக்குது சிறிலங்காவில இப்படி இல்லை தானே,தொடர்ந்து சிறிலங்கா புராணம் பாடி கொண்டு இங்கே பிள்ளை கற்பகத்தில் ஒரு விசிறி வாங்கினான் என்று அதை பாவித்து கொண்டு இருந்தார்(மின்சாரம் செலவு என்று ஏயார் கண்டிசன் போடா இருந்தது வேறு கதை).சிறிலங்கா தண்ணீரில பருப்பும் சோறும் சமைத்து உண்டாலே ஒரு ருசி தானே என்று அலந்து கொண்டு போனார்.தொலைகாட்சியில் கிரிக்கட் பார்த்த அவருடைய பேரன் ஜயசூரியா அவுட் என்று சந்தோசபட ,தாத்தா பேரனுக்கு இரண்டு திட்டு திட்டி அதற்கு ஏன் சந்தோசபடுகிறாய் அவன் இருந்தால் தான் நல்லா ஸ்கோர் பண்ணி வெள்ளையனுக்கு ஒரு பாடம் படித்திருப்பான்,சீ அவுட்டா போயிட்டான் என்று மிகவும் வேதனை பட்டார்.

இந்த பெரிசு தான் அப்ப சிறிலங்காவில் இருக்கும் போது இவன் சிங்களவனுக்கு பாடம் படிபிக்க ஒரு நல்ல ஆட்களும் இல்லை என்று 83 களில் மகன்மாருக்கு உசுப்பேற்றிபோட்டு சிட்னிக்கு பறந்து வந்து இப்ப பேரனுக்கு உசுப்பேற்றுகிறார்,சிங்களவனு

Link to comment
Share on other sites

இலங்கையில் அரசாங்க கட்டுப்பாட்டில் இருப்பவர்கள் இப்படி தான் சொல்லவெண்டும், ஆனால் புலத்தில் உள்ளவர்கள் உண்மையை உணர வைக்கலாம்.

உந்த பழசுக்களுக்கு முதலில் மண்டையில போட வேண்டும், இவர்கள், தங்கள் காலத்திலே போராடி தமிழருக்கு என்று ஒரு நாட்டை உருவாக்கியிருந்தால், நாம் ஏன் இவ்வளவு கஷ்டபடவேண்டும்?..இங்கிலீசு பேசிக்கொண்டு வெள்ளைக்காரனுக்கு கொடி பிடித்துகொண்டு திரிந்திருக்குதுகள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர்ந்த இடங்களில இளையோர் அமைப்புக்கள் என்று அமைச்சு வைச்சு கொஞ்ச நாள் *****. அவையள் எங்க..??! தாங்கள் தாங்கள் செயற்படும் இடங்களில ஒரு கருத்துக்கணிப்பை மக்களட்ட நேரப் போய் செய்து அதன் படி தீர்மானங்கள் எடுக்கலாமே...!

சும்மா வெட்டிக்கு யாழ் களத்திலும் இணையத்திலும் ஜிவ்..பிளாஸில மின்ன மறைய பனர் செய்து போட்டாப் போல அது மக்களை அடையப் போறதில்ல..! மக்களின் எண்ண ஓட்டத்தை அறியாத அவர்களின் தேவைகள் உணராத மக்களோடு நெருங்காத எந்தப் பிரச்சாரமும் மக்களிடம் எடுபடாது..!

இன்னொரு விசயம். தமிழர்கள் கிணற்றுத்தவளைகளா இருந்து இப்ப ஒரு இரண்டு தசாப்தங்களாத்தான் வெளி உலகைப் பார்க்கினம். இப்ப புரியுது எப்படி இனவெறி..நிறவெறி வெளிநாடுகளில இருக்குது. அதோட ஒப்பிடேக்க சிங்களவன் எவ்வளவு மேல் என்று. அதாலதான் பலர் தங்களை அறியாமலே சிறீலங்கன் என்று பெருமிதத்தோடு உச்சரிப்பதைக் காணலாம்..! எவருமே ஐ அம் பிறம் ரமிழ் ஈழம் என்று சொல்லுறதில்ல..! சொன்னாலும் யாருக்கும் தெரியப் போவதுமில்லை...!

30 வருசமா போராடுறம்..பலஸ்தீன தேசம் உலகில் அறியப்பட்ட அளவுக்கு எமது போராட்டம் தேசத்தின் இருப்பு நாமம் இன்னும் உலகை அடையல்ல எனும் போது புலம்பெயந்தவர்களின் செயற்பாட்டின் குறுக்கிய நோக்கமும் குறுகிய வட்டமும் அப்பட்டமாகத் தெரிகிறது..! ஏன் முதியோரைப் பேசுறீர்கள்... அங்க இருந்து வந்த இளசுகள்..வயற்கரை விசுவற்ற மகள் கூட இப்ப அப்பாவவ டாடி அம்மாவை மம்மி..! இத்தனைக்கும் பெட்டை 20 வயது வரை அனேய் அம்மா..அப்பா என்றுதான் கூப்பிட்டது...! அப்படி இருக்கு எங்கட சனத்தின்ர ஆங்கில மொழி மோகமும்... வெளிநாட்டு சொகுசு வாழ்க்கை மேல மோகமும். இதை மீறி பலதும் நடக்கிறது ஒன்றும் சாதாரண சமாச்சாரமே அல்ல...! :D

*****நீக்கப்பட்டுள்ளது - மோகன்

Link to comment
Share on other sites

புலம்பெயர்ந்த இடங்களில இளையோர் அமைப்புக்கள் என்று அமைச்சு வைச்சு கொஞ்ச நாள் *****. அவையள் எங்க..??! தாங்கள் தாங்கள் செயற்படும் இடங்களில ஒரு கருத்துக்கணிப்பை மக்களட்ட நேரப் போய் செய்து அதன் படி தீர்மானங்கள் எடுக்கலாமே...!

சும்மா வெட்டிக்கு யாழ் களத்திலும் இணையத்திலும் ஜிவ்..பிளாஸில மின்ன மறைய பனர் செய்து போட்டாப் போல அது மக்களை அடையப் போறதில்ல..! மக்களின் எண்ண ஓட்டத்தை அறியாத அவர்களின் தேவைகள் உணராத மக்களோடு நெருங்காத எந்தப் பிரச்சாரமும் மக்களிடம் எடுபடாது..!

இன்னொரு விசயம். தமிழர்கள் கிணற்றுத்தவளைகளா இருந்து இப்ப ஒரு இரண்டு தசாப்தங்களாத்தான் வெளி உலகைப் பார்க்கினம். இப்ப புரியுது எப்படி இனவெறி..நிறவெறி வெளிநாடுகளில இருக்குது. அதோட ஒப்பிடேக்க சிங்களவன் எவ்வளவு மேல் என்று. அதாலதான் பலர் தங்களை அறியாமலே சிறீலங்கன் என்று பெருமிதத்தோடு உச்சரிப்பதைக் காணலாம்..! எவருமே ஐ அம் பிறம் ரமிழ் ஈழம் என்று சொல்லுறதில்ல..! சொன்னாலும் யாருக்கும் தெரியப் போவதுமில்லை...!30 வருசமா போராடுறம்..பலஸ்தீன தேசம் உலகில் அறியப்பட்ட அளவுக்கு எமது போராட்டம் தேசத்தின் இருப்பு நாமம் இன்னும் உலகை அடையல்ல எனும் போது புலம்பெயந்தவர்களின் செயற்பாட்டின் குறுக்கிய நோக்கமும் குறுகிய வட்டமும் அப்பட்டமாகத் தெரிகிறது..! ஏன் முதியோரைப் பேசுறீர்கள்... அங்க இருந்து வந்த இளசுகள்..வயற்கரை விசுவற்ற மகள் கூட இப்ப அப்பாவவ டாடி அம்மாவை மம்மி..! இத்தனைக்கும் பெட்டை 20 வயது வரை அனேய் அம்மா..அப்பா என்றுதான் கூப்பிட்டது...! அப்படி இருக்கு எங்கட சனத்தின்ர ஆங்கில மொழி மோகமும்... வெளிநாட்டு சொகுசு வாழ்க்கை மேல மோகமும். இதை மீறி பலதும் நடக்கிறது ஒன்றும் சாதாரண சமாச்சாரமே அல்ல...! :D

*****நீக்கப்பட்டுள்ளது - மோகன்

வெளி நாடுகளில் அவன் உங்கள் மேல் வெறுப்பை காட்டினால், அதை ஓரளவுக்கு ஏற்று தான் ஆக வேண்டும். ஏனென்றால், நீங்கள் அவர்களின் தேசத்தில் இருகிறிர்கள். உங்களுக்கு பிடிக்காவிட்டால், நீங்கள் வேரு இடத்திற்க்கு போகலாம். ஆனால், சிங்களவன், எங்கள் சொந்த இடத்திலயே எங்களை மிரட்டுகிறானே??இதை எப்படி ஏற்றுகொள்ள முடியும்?எங்களுக்கு பிடிக்கவில்லை என்று வேற இடதிற்க்கு போக முடியுமா? நாங்கள் ஒன்றும் அவன் தயவில் வாழவில்லையே, அவன் மேல் என்று சொல்லிவிட்டு வாழ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெளி நாடுகளில் அவன் உங்கள் மேல் வெறுப்பை காட்டினால், அதை ஓரளவுக்கு ஏற்று தான் ஆக வேண்டும். ஏனென்றால், நீங்கள் அவர்களின் தேசத்தில் இருகிறிர்கள். உங்களுக்கு பிடிக்காவிட்டால், நீங்கள் வேரு இடத்திற்க்கு போகலாம். ஆனால், சிங்களவன், எங்கள் சொந்த இடத்திலயே எங்களை மிரட்டுகிறானே??இதை எப்படி ஏற்றுகொள்ள முடியும்?எங்களுக்கு பிடிக்கவில்லை என்று வேற இடதிற்க்கு போக முடியுமா? நாங்கள் ஒன்றும் அவன் தயவில் வாழவில்லையே, அவன் மேல் என்று சொல்லிவிட்டு வாழ?

எந்த இனக்கலவரமும் வடக்கிலோ கிழக்கிலோ நடக்கல்ல. நடந்ததெல்லாம் தெற்கில மேற்கில. அது அவங்கட இடம் தானே. எங்கட ஆக்கள் அங்க போய் ஒட்டி இருந்து கொண்டு..இப்ப வெளிநாடுகளுக்கு ஓடி வந்து இருக்கிறாப் போல.. சேட்டைவிட்டால் நீங்கள் தான் என்ன செய்வீர்கள்..! எல்லாம் நம்மாக்கள் பண்ணிய கூத்தாலதான்..! :D :P

Link to comment
Share on other sites

எந்த இனக்கலவரமும் வடக்கிலோ கிழக்கிலோ நடக்கல்ல. நடந்ததெல்லாம் தெற்கில மேற்கில. அது அவங்கட இடம் தானே. எங்கட ஆக்கள் அங்க போய் ஒட்டி இருந்து கொண்டு..இப்ப வெளிநாடுகளுக்கு ஓடி வந்து இருக்கிறாப் போல.. சேட்டைவிட்டால் நீங்கள் தான் என்ன செய்வீர்கள்..! எல்லாம் நம்மாக்கள் பண்ணிய கூத்தாலதான்..! :D :P

:lol::lol::lol:

உலக தமிழாராச்சி மன்றம் என்ன கொழும்பு கோட்டையிலா நடந்தது? :angry: வடக்கிலும் கிழக்கிலும் சிங்களவன் உங்களைய அடிக்கவே இல்லையா? காத்திருந்து நிங்கள் அவனின் இடதிற்க்கு வரவா அடிகிறான்? :D எல்லாம் உந்த பெரிசுகள் விதைத்த வினையை நாம் அருவடை செய்துகொண்டிருகிறோம்.( ஆனாலும் சும்ம சொல்லகூடாது,எங்கட ஆக்களும் லேசு பட்டவை இல்லை,கொழும்பையே,முக்கியமா வெள்ளவத்தை, பம்பலபிட்டி,தற்சமயம் தெகிவளை, கல்கிசையை அப்படியே விலைக்கு வாங்கி சிங்களவனை துரத்தி விட்டார்கள்).

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

:D:lol::lol:

உலக தமிழாராச்சி மன்றம் என்ன கொழும்பு கோட்டையிலா நடந்தது? :angry: வடக்கிலும் கிழக்கிலும் சிங்களவன் உங்களைய அடிக்கவே இல்லையா? காத்திருந்து நிங்கள் அவனின் இடதிற்க்கு வரவா அடிகிறான்? :D எல்லாம் உந்த பெரிசுகள் விதைத்த வினையை நாம் அருவடை செய்துகொண்டிருகிறோம்.( ஆனாலும் சும்ம சொல்லகூடாது,எங்கட ஆக்களும் லேசு பட்டவை இல்லை,கொழும்பையே,முக்கியமா வெள்ளவத்தை, பம்பலபிட்டி,தற்சமயம் தெகிவளை, கல்கிசையை அப்படியே விலைக்கு வாங்கி சிங்களவனை துரத்தி விட்டார்கள்).

நீங்கள் சொன்னவை அரச படைகளின் வன்முறைகள் கலவரங்கள் அல்ல..! 1956,58,74,77,83 என்பவையே கலவரங்கள். அவை அனைத்தும் தெற்கில் மேற்கில் தான் தமிழர்களுக்கு எதிராக வெடித்தன...! வெள்ளளக்காரன் அடிச்சா வாங்கிக்கினம்... சர்வதேசம் என்றினம்... அமெரிக்கன் காலில விழு என்றினம்.. ஆனா... வெள்ளவத்தையில அடிச்சா கெம்பிக்கினம்..! நம்மாக்கள் இடங்கட்ட இடத்தில மடம்புடுங்கிற ஆக்கள்..! தேசப்பற்றோ சுதேசியப்பற்றோ இல்லாத சுயநலவாதிகள் தமிழர்கள். இந்த நிலையில் இவர்களுக்கு நாடு..கேள்விக் குறிதான்.. ???!

உங்களுக்கும் உண்மை விளங்கிட்டுது..புகலிடத்தில இருந்து போய்க்கொட் சிறீலங்கா என்று பனர்..அங்கால இன்னொரு பக்கம்..அங்கதான் அடுக்குமாடி வீடுகளுக்கு பல்லாயிரம் பவுண்சும் டொலரும் போகுது...?! வெள்ளவத்தை பம்பலப்பிட்டி கொட்டகேன..மோதரை..வத்தளை.. நீர்கொழும்பு ..கல்கிசை.. தெகிளை... யார் அதிகம் என்று கணக்கெடுத்துப் பாருங்கோ..புலம்பெயர்ந்தவர்கள

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

56 இல் 58 இல் இனக்கலவரங்கள் நடைபெற்றன. அவையும் நம்மாக்கள் பண்ணிய கூத்தால்தான்..

Link to comment
Share on other sites

நீங்கள் சொன்னவை அரச படைகளின் வன்முறைகள் கலவரங்கள் அல்ல..! 1956,58,74,77,83 என்பவையே கலவரங்கள். அவை அனைத்தும் தெற்கில் மேற்கில் தான் தமிழர்களுக்கு எதிராக வெடித்தன...! வெள்ளளக்காரன் அடிச்சா வாங்கிக்கினம்... சர்வதேசம் என்றினம்... அமெரிக்கன் காலில விழு என்றினம்.. ஆனா... வெள்ளவத்தையில அடிச்சா கெம்பிக்கினம்..! நம்மாக்கள் இடங்கட்ட இடத்தில மடம்புடுங்கிற ஆக்கள்..! தேசப்பற்றோ சுதேசியப்பற்றோ இல்லாத சுயநலவாதிகள் தமிழர்கள். இந்த நிலையில் இவர்களுக்கு நாடு..கேள்விக் குறிதான்.. ???!

உங்களுக்கும் உண்மை விளங்கிட்டுது..புகலிடத்தில இருந்து போய்க்கொட் சிறீலங்கா என்று பனர்..அங்கால இன்னொரு பக்கம்..அங்கதான் அடுக்குமாடி வீடுகளுக்கு பல்லாயிரம் பவுண்சும் டொலரும் போகுது...?! வெள்ளவத்தை பம்பலப்பிட்டி கொட்டகேன..மோதரை..வத்தளை.. நீர்கொழும்பு ..கல்கிசை.. தெகிளை... யார் அதிகம் என்று கணக்கெடுத்துப் பாருங்கோ..புலம்பெயர்ந்தவர்கள

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதனால் தான் சேர்ந்திருக்க முடியாது, தனியே போகின்றொம் என்றோம்! எங்களுக்கேன்று ஒரு தேசம் இருக்கும் போது எமக்கு சிங்களவனின் இடத்தில் இருக்க வேன்டிய அவசியம் வராது. 80 களிற்க்கு முற்பகுதியில் சிங்கள இடங்களில் இருந்த தமிழர்களில் அனேகமானோர் கடமை நிமித்தமே அங்கு குடியிருக்க வேண்டிய நிலமை வந்தது! இதுவே எமக்கு தனி நாடாக இருந்திருக்குமானல், அவர்கள் ஏன் அங்கு கடமை செய்ய வேன்டிய நிலை வருகிறது? எங்கள் பகுதிகளிலேயே எமக்கு வேலை வாய்ப்பு இருந்திருக்குமே?

எல்லாத்தையும் பறித்து கோன்டு ஓடு என்று கலைத்துவிடும் காலம் வந்தாலும் வரக்கூடும்! முக்கியமாக,இவர்கள் கலவரத்தை உண்டு பண்ணுவதே தமிழரிடம் கொள்ளையடிக்க தானே? எங்கட சனமும், வாய கட்டி வயித்த கட்டி சேமிச்சு வைதிருப்பார்கள். அதை இனக் கலவரம் என்ற பேரில் இவர்கள் கொள்ளையடிப்பார்கள்!

கொஞ்ச காலதிற்ர்கு முன்னால் கோட, 10 வருடதிற்ற்கு மேல் எந்த செயற்பாடும் இல்லாத (dormant)கணக்குகளை முடக்கினார்களே? ஏன்? தமிழரின் சொத்தை கொள்ளை அடிக்க தானே? இவர்கள் எதை செய்யவும் தயன்க மாட்டார்கள்!

வெள்ளைக்காரன் ரக்ஸ் என்று புடுக்கிறான்...அதைக் கண்டுக்காம இருக்கிறீங்கள் தானே. அதேபோல சிங்களவனும் தன்ர இடத்தில வாழ வந்ததுக்கு ரக்ஸ் எடுக்கிறான் ஆக்கும். ஏன் தமிழர்களுக்கு பிரிட்டிஷ்காரன் கொடுத்ததை வாங்க மனசில்ல. சிங்களவனோட சகோதரம் என்று சொல்லி வேணாம் எண்டெக்க எங்க போனது இந்தப் புத்தி. தமிழர்கள் தான் தமிழர்களின் உரிமைகளை பிரிட்டிஷ் ராணியின் "சேர்" மற்றும் "பொன்" அடைமொழிகளுக்காக தாரைவார்த்தது. இதுக்குள்ள சிங்களவனில குறை சொல்ல எதுவுமில்ல...! தமிழர்கள் தான் தங்கள் தலையில தாங்களே மண்ணள்ளிக் கொட்டியது..! இப்ப வெளிநாட்டு மோகத்தில ஈழத்தையே கைவிட்டு ஓடிறவை எப்படி தாய்நாடு அமைத்து அதை முன்னேற்றி அதில பிழைக்க நினைப்பினம்...! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரி மீண்டும் தலைப்புக்கு போனால்:

புலத்தமிழர் பலர் தற்போதும், யானை மார்க் சோடாவை ஆசைப்பட்டு வாங்குகினமே.. ஏன்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்கள் தான் தமிழர்களின் உரிமைகளை பிரிட்டிஷ் ராணியின் "சேர்" மற்றும் "பொன்" அடைமொழிகளுக்காக தாரைவார்த்தது. இதுக்குள்ள சிங்களவனில குறை சொல்ல எதுவுமில்ல...!

அது சரி. "பொன்" அடைமொழி. இதென்ன ராணி கொடுக்கின்ற பட்டமா? :D

Link to comment
Share on other sites

வெள்ளைக்காரன் ரக்ஸ் என்று புடுக்கிறான்...அதைக் கண்டுக்காம இருக்கிறீங்கள் தானே. அதேபோல சிங்களவனும் தன்ர இடத்தில வாழ வந்ததுக்கு ரக்ஸ் எடுக்கிறான் ஆக்கும். ஏன் தமிழர்களுக்கு பிரிட்டிஷ்காரன் கொடுத்ததை வாங்க மனசில்ல. சிங்களவனோட சகோதரம் என்று சொல்லி வேணாம் எண்டெக்க எங்க போனது இந்தப் புத்தி. தமிழர்கள் தான் தமிழர்களின் உரிமைகளை பிரிட்டிஷ் ராணியின் "சேர்" மற்றும் "பொன்" அடைமொழிகளுக்காக தாரைவார்த்தது. இதுக்குள்ள சிங்களவனில குறை சொல்ல எதுவுமில்ல...! தமிழர்கள் தான் தங்கள் தலையில தாங்களே மண்ணள்ளிக் கொட்டியது..! இப்ப வெளிநாட்டு மோகத்தில ஈழத்தையே கைவிட்டு ஓடிறவை எப்படி தாய்நாடு அமைத்து அதை முன்னேற்றி அதில பிழைக்க நினைப்பினம்...! :D

அதை தானே நான் முதலில் சொன்னேன்..உந்த பெரிசுகளுக்கு முதலில் மண்டையில் போட வேன்டும் என! நிஙகள் தான் ஏன் பெரிசுகளை கோவிகிறிங்கள் என்று கேட்டீர்கள்? இவர்கள் வெள்ளைகாரனின் வாலைப்பிடித்து விதைத்த வினையை நாம் அறுவடை செய்கிறொம்!

Link to comment
Share on other sites

சரி மீண்டும் தலைப்புக்கு போனால்:

புலத்தமிழர் பலர் தற்போதும், யானை மார்க் சோடாவை ஆசைப்பட்டு வாங்குகினமே.. ஏன்?

எல்லாம் பாழாய் போன நாக்கு பண்னுற வேலை தான்!

இந்த புலம் பெயர் மக்களின் இம்சையை சொல்லபோனால், வருடம் முழுக்க சொல்லலாம். தாயகம் வந்தால், தங்கள் நாடுகளின் புராணம், எல்லாத்துக்கும் ஒரு 'அங்க". அங்க இப்படி, அங்கை இப்படி இல்லை! புலத்திற்க்கு வந்து பிறகு சிறீலங்கா பொருட்ட்கள் தேவை!

Link to comment
Share on other sites

பாகிஸ்தான் தனிநாடாக வேண்டும் என்று ஏற்றுக் கொள்ளப்பட்டு பாகிஸ்தானும் இந்தியாவும் 2 நாடுகளாக சுதந்திரம் அடைந்த பொழுது கிட்டத்தட்ட 7.5 மில்லியன் முஸ்லிம்கள் இந்தியாவிலிருந்து அகதிகளாக பாகிஸ்தான் சென்றார்கள். கிட்டத்தட்ட 10 மில்லியன் இந்துக்களும் சீக்கியர்களும் பாகிஸ்தானில் இருந்து அகதிகளாக இந்தியா வந்தனர்.

அதன் பின்னர் கிழக்கு பாகிஸ்தான் பிரச்சனை கிளம்பிய பொழுது 10 மில்லியன் பெங்காலியினர் இந்தியாவிற்கு அகதிகளாக 9 மாதங்களில் வந்தனர்.

இந்த 9 மாத பங்களாதேஸ் இற்கான யுத்தத்தில் கொல்லப்பட்டவர்கள் 2 வருடங்களிற்கும் குறைவாக நடந்த இந்தோனேசியா உள்நாட்டு யுத்தத்தில் 1.5 மில்லியன் இறப்புகளை விட அதிகம் என்கிறார்கள். ஒரு கணிப்பு குறைந்தபட்சம் 3 மில்லின் என்கிறது. 9 மாதங்களில் 3 மில்லி என்பது றுவண்டா படுகொலைகளை விட மோசமானது.

யுகோசெலாவியா உடைந்த பொழுது 400000 மேற்பட்ட சேபியர்கள் தனி நாடாக பிரிந்து சென்ற குறோசியா போன்ற இடங்களில் இருந்த சேபியாவிற்கு வந்தார்கள்.

அதுபோலவே வடக்கு கிழக்கிற்கு வெளியில் இருக்கும் தமிழர்களின் நிலையும் மாறும் இன்னும் சில வருடங்களில்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அது சரி. "பொன்" அடைமொழி. இதென்ன ராணி கொடுக்கின்ற பட்டமா? :D

வந்திட்டார்யா... வாங்கிற முட்டைல வாளேந்திய சிங்க மார்க் இருக்கோ என்று பார்க்க. ராணிட சேர் மற்றும் என்றொரு சொல்லு போட்டு எழுதினது புரியல்லையே. இதுக்குள்ள தமிழ் வகுப்பும் எனி எடுக்கனும் தனிய. இலக்கணத்தெளிவா எழுதாட்டி விளங்காது பண்டிதமணிகளுக்கு..! :lol::D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அதை தானே நான் முதலில் சொன்னேன்..உந்த பெரிசுகளுக்கு முதலில் மண்டையில் போட வேன்டும் என! நிஙகள் தான் ஏன் பெரிசுகளை கோவிகிறிங்கள் என்று கேட்டீர்கள்?

கண்டுக்காதீங்க..

நெடுக்ஸ் இப்படி பலதும் பத்துமாய் எழுதுவது யாழில சகஜம். உது புதுசில்லை.. மாற்றுக் கருத்துக்கள் ஒரு தெளிவை ஏற்படுத்தும் என்றால் வரவேற்கலாம் முந்தி ஈழநாதத்தில சீதன தடை சட்டம் வர முதலில அது பற்றின ஒரு விவாதம் போனது. சீதனத்திற்கு எதிராக முதல் வாரமும் பின்னர் இன்னொரு பெயரில் அடுத்த வாரம் ஆதரவாகவும் அன்ரன் பாலசிங்கம் அவர்கள் எழுதியிருக்கிறார். இரண்டுமே வெவ்வேறு பெயர்களில். முதல் வாரம் எழுதிய புனைபெயர் தணிகாசலத்தார். அடுத்த வாரம் அன்ரன் பாலசிங்கம் எழுதிய எதிர்க்கருத்துக்கு இட்ட பெயர் தணிகாசலத்தாரின் தப்புத் தாளங்கள்.

அது மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஊட்ட அவ்வாறு ஆதரவாக எதிராக அவர் எழுதினார். வாசிப்பவரின் சிந்தனையை விரிபு படுத்த..

ஆனா சிலர் அப்பிடி நினைச்சுக் கொண்டு குழப்பற வேலையைத்தான் செய்யினம்.

நெடுக்ஸ் எழுதுவதன் மூலம் எப்பவுமே வெற்றி செய்தியை மட்டும் தான் படிப்பம் எண்டு ஏங்கிற சனம் இப்பிடியும் இருக்கலாம்.. என்று தாமாக யோசிக்க தொடங்கும் என்றால்.. நல்லது தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வந்திட்டார்யா... வாங்கிற முட்டைல வாளேந்திய சிங்க மார்க் இருக்கோ என்று பார்க்க. ராணிட சேர் மற்றும் என்றொரு சொல்லு போட்டு எழுதினது புரியல்லையே. இதுக்குள்ள தமிழ் வகுப்பும் எனி எடுக்கனும் தனிய. இலக்கணத்தெளிவா எழுதாட்டி விளங்காது பண்டிதமணிகளுக்கு..! :lol::D

முட்டாப் பயலுக. :D

பொன். என்பது பொன்னம்பலத்தின் சுருக்கம் என்று தெரியாமல் பினாத்துகிறாங்க. பொன் என்ற அடைமொழிக்கு என்னத்தைத் தாரைவார்த்தாங்களோ தெரியலியே.. பவுண் பவுணாக் குடுத்தாங்களா?? :lol::lol: :P

Link to comment
Share on other sites

எவருமே ஐ அம் பிறம் ரமிழ் ஈழம் என்று சொல்லுறதில்ல..! சொன்னாலும் யாருக்கும் தெரியப் போவதுமில்லை...!

"யாரும்" என்று சொல்லாதீர்கள்..

பலர் என்று வேண்டுமானால் சொல்லலாம் என நினைக்கிறேன்..

காரணம்,

எங்கள் வீட்டில் யாருமே அப்படியல்ல...

யாருக்கும் தெரியாது என்பது உண்மை

ஆனால் நாங்கள் சொல்லும் போது...ஏது எங்கு எப்படி என்று கேட்பார்களே..

அதை ஒரு வாய்ப்பாக எடுத்து எங்கள் போராட்டத்தை பற்றி சொல்வது வழமை..

இதை எங்கள் குடும்பத்தில் அனைவரும் பல வருடங்களாக செய்கிறோம்..

இப்படி சொல்பவர்கள் பலரை நான் பார்த்திருக்கிறேன்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முட்டாப் பயலுக. :D

பொன். என்பது பொன்னம்பலத்தின் சுருக்கம் என்று தெரியாமல் பினாத்துகிறாங்க. பொன் என்ற அடைமொழிக்கு என்னத்தைத் தாரைவார்த்தாங்களோ தெரியலியே.. பவுண் பவுணாக் குடுத்தாங்களா?? :lol::lol: :P

பொன் தியாகம்..பொன் சுந்தரலிக்கம்..இப்படி எல்லாமே பொன்னம்பலத்தின் வாரிசுகளாமோ...??! வந்திட்டார்யா..பொ என்று போடாமால ஏனாம் பொன் என்று போட்டவை..! டொனமூர் தந்த 50:50 வாங்கி சம உரிமையைக் காட்டி இருக்கலாமே. சிறுபான்மை பெரும்பான்மை அடிப்பட்டுப் போயிருக்கும்..! அப்படியே தமிழன் பிரிஞ்சு போடக் கேட்டிருக்கலாமே...! எல்லாத்தையும் விட்டிட்டு..சேருக்கும் பொன்னுக்கும் மயங்கி பல்லக்கில சுத்தினதுதான் மிச்சம்..! இப்ப அடிவாங்கி உலகமெங்கும் அடிமைகளாக...! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொன் தியாகம்..பொன் சுந்தரலிக்கம்..இப்படி எல்லாமே பொன்னம்பலத்தின் வாரிசுகளாமோ...??! வந்திட்டார்யா..பொ என்று போடாமால ஏனாம் பொன் என்று போட்டவை..!

தெரியாம எழுதினா ஒத்துக்கணும்.. அதைவிட்டுட்டு "பொன்" என்று பட்டம் இருக்கிறதாக புதுக்கதை வேணாம்.. என்னதான் ஐடியை மாத்தினாலும் அடிப்படைக்குணம் மாறாதுதானே (ஊர்க்குருவி உரயப் பறந்தாலும் கொக்காகாது என்ற மாதிரி) :D:D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தெரியாம எழுதினா ஒத்துக்கணும்.. அதைவிட்டுட்டு "பொன்" என்று பட்டம் இருக்கிறதாக புதுக்கதை வேணாம்.. என்னதான் ஐடியை மாத்தினாலும் அடிப்படைக்குணம் மாறாதுதானே (ஊர்க்குருவி உரயப் பறந்தாலும் கொக்காகாது என்ற மாதிரி) :D:lol:

தெளிவாகத்தான் எழுதப்பட்டு இருக்கிறது. அடுத்தவரில் குற்றம் பிடிக்க என்று அலைவதை விடுத்து உருப்படியா எழுதுங்கள். சேர், பொன் என்ற அடைமொழிகளுக்காக என்று எழுதப்பட்டிருக்கிறது. பட்டம் என்றல்ல..! கருத்தை திரிக்கும் பாணியை முதலில் கைவிடுங்கள்.

தெரிஞ்சால்.பொ க்குப் பதில் ஏன் பொன்.. என்று பொன் தியாகம்.. சுந்தரலிங்கம்..இராமனாதன்...அரு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொன். என்பது அடைமொழியல்ல. முதல் எழுத்துக்குப் பதிலாக இரு எழுத்துக்கக்களைப் பாவிப்பது.

பொன். இராமனாதன், பொன். குமாரசுவாமி, பொன். அருணாசலம் ஆகியோர் சகோதரர்கள் (பொன்னம்பல முதலியாரின் மகன்கள்).

பொன். சுந்தரலிங்கம் யாரென்று நீங்கள்தான் சொல்லவேண்டும் (C. சுந்தரலிங்கம் அடங்காத்தமிழன் என்ற பட்டத்தைப் பெற்றவர்.. என்னத்திற்கு அடங்கவில்லை என்று நமக்குத் தெரியாது. தெரியவும் தேவையில்லை)

பொன். சிவகுமாரன், பொன். தியாகம், பொன். கந்தையா, பொன். பூலோகசிங்கம். பொன். கணேசமூர்த்தி என்று பலருக்கு "பொன்" பெயருக்கு முன்னுள்ளது. பொன். : பொன்னம்பலம், பொன்னையா,....., போன்றவற்றின் சுருக்கம் என்று உணர்ந்தால் சரி..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலிகளின் குரலில பொன் காந்தன் இப்ப கிட்டடியில சுடப்பட்டு இறந்த பொன் கணேசமூர்த்தி இவையெல்லாம் பொன் எண்ட அடைமொழியை ஏனாம் போட்டிருக்கினம். பொ எண்டு போட வேண்டியது தானே..

அடுத்தவரில் குற்றம் பிடிக்க என்று அலைவதை விடுத்து உருப்படியா எழுதுங்கள்.

ஸ்... இப்பவே கண்ணைக் கட்டுதே...

அதென்ன புதுவை இரத்தின துரை

சு.ப. தமிழ்செல்வன்

இராசையா இளந்திரையன்... (இ எண்டு போட வேண்டியது தானே)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப சண்முகநாதனின் பிள்ளை என்றால்..சண்.. கந்தசாமியின் பிள்ளை என்றா கந்... இப்படி போட்டுக்கொண்டு இருக்கலாமே...! "பொன்" சமூக அந்தஸ்துக்கான அடையாளமாக சேர்க்கப்பட்டவை. அவர்களின் இயற்பெயர்ரோடு "பொ" மட்டுமே இருக்கத் தகுதியானது..! அல்லது இராசையா இளந்திரையன் போல முழுப் பெயரைப் பொறிக்க வேண்டியதுதானே..! அதென்ன "பொன்"...! சேர்..!

சாதாரண பொன்னம்பலத்தின் பிள்ளை பொன் என்று எழுதுவதில்லை. பொ என்றுதான் எழுதும். இவர்கள் தங்கள் பெயரை தன்னித்துக் காட்டப் பாவித்தது பொன்..! ஆக புகழை வெளிப்படுத்த இவற்றைப் பாவித்தனர் சிலர். சிலர் தனித்து அடையாளம் பேணப் பாவித்தனர்...! " பொன்" பாவித்த பலரும் அரசியல் பின்புலத்தில் உள்ளவர்கள்.. என்பதும் குறிப்பிடத்தக்கதூ...!

ஆக ராணியின் சேருக்கும்.."பொன்" அடைமொழியோடு பெயர் தேடவும் தமிழர்களின் உரிமையை விற்றவர்கள் தமிழர்களே அன்றி வேறு எவரும் இல்லை...! குறிப்பாக தமிழர்களின் ஆரம்பகால "பொன்" அரசியல்வாதிகள்..! :icon_idea:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அடுத்த அடுத்த வரிகளில் எப்படி இப்படி 180 பாகை எதிராக எழுத முடிகிறது? 👆🏼👇 2016 இல் இறங்கினார் சரி.  2021 வரை அனுபவம் ஜனநாயகம் செயல் அளவில் இல்லை என சொன்னபின்னும் ஏன் அதையே 2024 இல் செய்கிறார்? The definition of  insanity is doing the same thing again and gain and expecting a different outcome. அண்ணன் என்ன லூசா? அல்லது கமிசன் வாங்கி கொண்டு வாக்கை பிரிக்க இப்படி செய்கிறாரா? நான் என்ன ரோ எஜெண்டா அல்லது பிஜேபி பி டீமா? எனக்கு எப்படி தெரியவரும்? உங்களை சவுத் புளொக் கூப்பிட்டு காதுக்குள் ஐபி டைரக்டர் சொல்லி இருப்பார் என நினைக்கிறேன்? மாற்றுக்கருத்து ஏதும் இல்லை. நேற்று டவுனிங் ஸ்டிரீட் பக்கம் சும்மா வாக்கிங் போனேன். உங்களை பற்றி இந்த வகையில்தான் பேசி கொண்டார்கள். நான் கேள்விபட்ட வரையில் டிரம்ப் தான் வென்றதாம்….நீங்கள் சொல்லி விட்டீர்கள் என்பதால், தேர்தல் முடிவை குளறுபடி செய்து மாற்றினார்களாம்.
    • உங்க‌ட‌ அறிவுக்கு நீங்க‌ள் இப்ப‌டி எழுதுறீங்க‌ள் அவ‌ர்க‌ள் ஜ‌ன‌நாய‌க‌த்தின் மீது ந‌ம்பிக்கை இருந்த‌ ப‌டியால் தான் அர‌சிய‌லில் இற‌ங்கின‌வை இந்தியாவில் ஜ‌ன‌நாய‌க‌ம் என்ற‌து சொல் அள‌வில் தான் இருக்கு செய‌லில் இல்லை................ 2023 டெல்லிக்கு உள‌வுத்துறை கொடுத்த‌ த‌க‌வ‌ல் உங்க‌ளுக்கு வேணும் என்றால் தெரியாம‌ இருக்க‌லாம் இது ப‌ல‌ருக்கு போன‌ வ‌ருட‌மே தெரிந்த‌ விடைய‌ம்.........................நீங்க‌ள் யாழில் கிறுக்கி விளையாட‌ தான் ச‌ரியான‌ ந‌ப‌ர்.............................என‌க்கும் த‌மிழ‌க‌ அர‌சிய‌ல் அமெரிக்கா அர‌சிய‌ல் டென்மார்க் அர‌சிய‌ல் ப‌ற்றி ந‌ங்கு தெரியும் ஆனால் நான் பெரிதாக‌ அல‌ட்டி கொள்வ‌து கிடையாது.................   ந‌ண்ப‌ர் எப்போதும் த‌மிழ‌ன் ம‌ற்றும் விவ‌சாயிவிக் அண்ணா இவ‌ர்க‌ள் இருவ‌ரும் 2020ம் ஆண்டு ர‌ம் தான் மீண்டும் ஆட்சிக்கு வ‌ருவார் என்று சொன்ன‌வை  நான் அதை ம‌றுத்து பைட‌ன் தான் ஆட்சிக்கு வ‌ருவார் என்று சொன்னேன் அதே போல் நான் சொன்ன‌ பைட‌ன் அமெரிக்கன் ஜனாதிபதி ஆனார்😏............................ ஆர‌ம்ப‌த்தில் தாங்க‌ளும் வீர‌ர்க‌ள் தான் என்று வார்த்தைய‌ வீடுவின‌ம் ஒரு சில‌ர் அடிக்கும் போது  அடிக்கு மேல் அடி விழுந்தால் ப‌தில் இல்லாம‌ கோழை போல் த‌ங்க‌ளை தாங்க‌ளே சித்த‌ரிப்பின‌ம்🤣😁😂..............................
    • இந்த மாத முடிவில் சில நாடுகளின் நரித்தனத்தாலும், சுயநலத்தாலும் இரு நாடுகள் அணு ஆயுதங்களால் பலமாக தாக்கபட போகின்றன. ஜீசசும் வருகின்றார் என்ற செய்தும் உலாவுகிறது.
    • நான் யாழில் எழுத தொடங்கியது 2013. அதுதான் உளவுதுறை பிஜேபி கைப்பாவை ஆச்சே? அதேபோல் இப்படி சொன்ன தேர்தல் ஆணையம் மீது ஏன் சீமான் வழக்கு போடவில்லை? நம்ப வேண்டிய தேவை இல்லை. என் கருத்து அது. ஆனால் தேர்தல் ஆணையம் இப்படி ஒரு விடயத்தை சீமானிடம் சொல்லாது. எந்த அதிகாரியாவது மேலிட பிரசரால் இப்படி செய்கிறோம் என சீமானிடமே வெளிப்படையாக சொல்வாரா? மிகவும் சின்னபிள்ளைதனமாக சீமான் கதை பின்னுகிறார். நம்ப ஆள் இருக்கு என்ற தைரியத்தில். சீமான் சொல்வது உண்மை எனில் சீமான் வழக்கு போட்டிருக்க வேண்டும்.  போடமாட்டார் ஏன் என்றால் இது சும்மா….லுலுலுலா கதை. இந்த 😎 இமோஜியை பாவிக்காமலாவது விட்டிருக்கலாம். திருடப்போகும் இடத்தில் சிக்னேச்சர் வைத்தது போல் உள்ளது. 🤣🤣🙏
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.