• ×   Pasted as rich text.   Paste as plain text instead

      Only 75 emoji are allowed.

    ×   Your link has been automatically embedded.   Display as a link instead

    ×   Your previous content has been restored.   Clear editor

    ×   You cannot paste images directly. Upload or insert images from URL.

  • Topics

  • Posts

    • மொத்த தேர்தல் செலவு ரூபா 5500 மில்­லியன்: ஒரு வாக்­கா­ள­ருக்­கான செலவு 344 ரூபா Published by Loga Dharshini on 2019-11-15 15:31:19   (எம்.எப்.எம்.பஸீர்) நாளை நடை­பெ­ற­வுள்ள ஜனா­தி­பதித் தேர்­த­லுக்­கான மொத்த செலவு 5500 மில்­லியன் ரூபா எனவும் அத­ன­டிப்­ப­டையில் ஒரு வாக்­கா­ள­ருக்­காக இம்­முறை தேர்­தல்கள் ஆணைக்குழுவால் 344 ரூபா செல­வி­ட­ப்படு­வ­தாக  மதிப்­பீடு செய்­யப்­பட்­டுள்­ள­தாக தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.   இம்­முறை ஜனா­தி­பதித் தேர்­தலில் 35 வேட்­பா­ளர்கள் போட்­டி­யிடும் நிலையில், அவர்கள் அனை­வரும்  தேர்தல் பிர­சா­ரத்­துக்கு செல­விட்­ட­தாக மதிப்­பி­டப்­படும்  மொத்த தொகை 10 ஆயிரம் மில்­லியன் ரூபா­வாகும். அதன்­படி ஒரு வாக­்காளர் தொடர்பில் வேட்­பா­ளர்கள் செல­விட்ட தொகை 625 ரூபா என மதிப்­பீடு செய்­யப்பட்­டுள்­ளது.   தேர்­தல்கள் ஆணைக்குழுவின் உத்­தி­யோ­க­பூர்வ தக­வல்­களின் பிர­காரம்,  கடந்த 2005 ஆம் ஆண்டு ஜனா­தி­பதித் தேர்­தலின் மொத்த செலவு 715 மில்­லியன் ரூபா­வாகும். அப்­போது ஒரு வாக்­கா­ள­ருக்கு செல­வி­டப்­பட்ட தொகை 54 ரூபா­வாகும்.   2010ஆம் ஆண்டு ஜனா­தி­பதித் தேர்­த­லுக்­காக 1856 மில்­லியன் ரூபாவை தேர்­தல்கள் திணைக்­களம் செல­விட்­டுள்­ளது.   இதன்­போது வாக்­காளர் ஒரு­வ­ருக்கு 132 ரூபா செல­வா­கி­யுள்­ளது. அத­ன­டிப்­ப­டையில்  2015 ஆம் ஆண்டில் 2706 மில்­லியன்  ரூபாவை தேர்­தல்கள்  திணைக்­களம் ஜனா­தி­பதித் தேர்­த­லுக்­காக  செல­விட்­டுள்ள நிலையில்,  அப்­போது ஒரு வாக்­கா­ள­ருக்­காக 180 ரூபா  செல­வி­டப்­பட்­டுள்­ளது.  இந்­நி­லை­யி­லேயே இம்­முறை  ஜனா­தி­பதித் தேர்தல் செல­வீனம் 5500 மில்­லியன் ரூபா என மதிப்­பி­டப்பட்­டுள்­ள­துடன்,  வாக்­காளர் ஒரு­வ­ருக்­கான செலவு 344 ரூபா என மதிப்­பி­டப்பட்­டுள்­ளது. அதன்­படி இம்­முறை ஜனாதிபதித் தேர்தலுக்காக  வேட்பாளர்களும் தேர்தல்கள் ஆணைக் குழுவும் ஒரு வாக்காளருக்காக செலவிட்ட மொத்த செலவு  965 ரூபாவாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/68997
    • ஒரு தகவல் கொடுத்தால் முகநூல் தடை அமுலுக்கு வரும்- தே.ஆ. தலைவர் 8:51 am November 15, 2019 0 186 Views     ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரசார சூன்ய காலத்தில முகநூல் பக்கங்களில் பதிவுகளை இடுபவர்களையும், அந்தப் பதவுகளை வேறு முகநூல்களுக்கு பரிமாறிக் கொள்பவர்களையும் சட்டத்தின் முன் கொண்டுவர நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை தகவல் தொழில்நுட்ப சங்கம் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. தேர்தல் பிரசாரம் சூன்ய காலப் பகுதியில் இணையத்தளமொன்றின் கீழ் செயற்படும் முகநூல் பக்கத்தில் ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரின் பாடல் ஒன்று பதிவேற்றப்பட்டுள்ளதாகவும் அந்த சங்கம் ஆணைக்குழுவுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளது. அந்த முகநூல் செய்தியை ஏனைய முகநூல் உரிமையாளர்கள் பரிமாற்றம் செய்து பிரசார நடவடிக்கை ஈடுபட்டு வருவதாகவும் அச்சங்கம் தெரிவித்துள்ளது. இவ்வாறாக தேர்தல் பிரசார சூன்ய காலத்தில் முகநூல் பக்களை நடாத்தும் பெரியளவிலான குழுவொன்று பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதாகவும் அச்சங்கம் கூறியுள்ளது. இதேவேளை, நேற்றிரவு தனியார் தொலைக்காட்சியில் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போது முகநூல் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்பிரிய கருத்துத் தெரிவிக்கையில், “ முகநூல் பக்கங்களைத் தடை செய்வது குறித்து இதுவரையில் தீர்மானம் எதுவும் எடுக்கவில்லையெனவும், அதனை முடிந்தளவு செய்யாமலேயே முயற்சிப்பதாகவும் கூறினார். அத்துடன், தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவுக்கு தான் ஒரு அறிவித்தல் கொடுத்தால் போதும், அதனை உடனே தடை செய்ய அவர்கள் நடவடிக்கை எடுப்பார்கள். அவ்வாறு தடை செய்தாலும், வி.பி.என். மூலம் அதனைச் செயற்படுத்துபவர்கள் இருக்கத்தான் செய்கின்றார்கள்” எனவும் அவர் சுட்டிக்காட்டினார் https://www.virakesari.lk/article/68964
    • எல்லாரும் யாருக்கோ வாக்களிக்க சொல்லேக்க ஒரே ஒரு கோஷ்டி தான் பகிஷ்கரிக்க சொல்லி நிக்குது. அது வேற யாரும் இல்லை கஜேந்திரகுமார்-கஜேந்திரன் கோஷ்டி தான்.   எல்லா தேர்தலிலையும் 100% வாக்களிப்பதில்லை. 70% வாக்களித்தால் 30% ஆன ஆக்கள் கஜேந்திரகுமார்-கஜேந்திரன் கோஷ்டி சொல்லித்தான் வாக்களிக்கவில்லை என்று அந்த கோஷ்டி உரிமை கோரப் போகினமாம். கஜேந்திரகுமார்-கஜேந்திரன் கோஷ்டியின் பகிஷ்கரிப்பு கோரிக்கையை 20% க்கு மேற்பட்ட சிங்களவங்களும் கேடக்க போகினம் என்கிறது தான் கஜேந்திரகுமார்-கஜேந்திரன் கோஷ்டியின் பலம்.
    • கோத்தாவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து வரும் Hiru சிவாஜிலிங்கத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது.😀 People do not support TNA, says Sivajilingam 08-11-2019 Presidential candidate M.K.Sivajilingam says that the Tamil people will not support the TNA at the upcoming presidential election as much as they did during 2015 presidential election. He said so while participating at a media briefing held in Hatton yesterday. http://www.hirunews.lk/227861/people-do-not-support-tna-says-sivajilingam மக்கள் சிவாஜிலிங்கத்துக்கு வாக்களிக்காமல் சஜித்துக்கு வாக்களியுங்கள்.