-
Tell a friend
-
Topics
-
1
By விவசாயி விக்
தொடங்கப்பட்டது
-
Posts
-
By உடையார் · பதியப்பட்டது
கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையின் ஒரு முக்கிய நடவடிக்கையே நில அபகரிப்பு-க.வி.விக்னேஸ்வரன் 18 Views எமக்கு எதிராக சிங்கள அரசாங்கங்கள் மேற்கொண்டுவரும் கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையின் ஒரு முக்கிய நடவடிக்கையாக நில அபகரிப்பு காணப்படுகின்றது என நாடாளுமன்ற உறுப்பினரும் நீதியரசருமான க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். தமிழர் தாயகத்தில் நடைபெற்று வரும் காணி அபகரிப்பு பற்றி அறிக்கை வெளியிட்டுள்ள க.வி.விக்னேஸ்வரன், “இலங்கை சுதந்திரம் அடைந்த நாள் முதல், எமது நிலங்களை அபகரிப்பதற்கு பல்வேறு உபாயங்களை அரசாங்கங்கள் கையாண்டுவருகின்றன. நீர்ப்பாசன அபிவிருத்தி என்ற போர்வையில் ஆரம்பத்தில் மேற்கொள்ளப்பட்ட திட்டங்களின் ஊடாக பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலப்பரப்புக்களில் கிழக்கு மாகாணத்தில் சிங்கள குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு இனப்பரம்பலில் செயற்கையான மாற்றம் மேற்கொள்ளப்பட்டது. பின்னர் யுத்தம் நடைபெற்ற காலப்பகுதியில், குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் வன்முறைகளின் ஊடாக தமிழ் கிராமங்கள் பலவற்றில் தமிழ் மக்கள் வெளியேற்றப்பட்டு அவை முற்றாக சிங்கள மற்றும் முஸ்லிம் கிராமங்களாக இன்று மாற்றப்பட்டுவிட்டன. 30 வருடங்களாக யுத்தம் நடைபெற்றபோது வட மாகாணத்தின் ஏறத்தாழ முழுமையான பகுதியும் கிழக்கு மாகாணத்தின் பெரும்பான்மையான பகுதிகளும் எமது இளைஞர்களின் கட்டுப்பாட்டில் இருந்தமையினால் அம்பாறை, திருகோணமலையில் நடந்தது போல பெருமளவில் எமது நிலங்களை அரசாங்கங்களினால் அபகரிக்க முடியவில்லை. ஆனால், 2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவடைந்த பின்னர், வடக்கு கிழக்கின் எல்லா மாவட்டங்களிலும் எந்தவித எதிர்ப்பும் இன்றி எமது நிலங்கள் அபகரிக்கப்பட்டு வருகின்றன. ஒருபுறம் நீர்ப்பாசன திட்டங்கள் என்ற போர்வையில் நிலங்கள் வவுனியா, முல்லைத்தீவு மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் பறிக்கபப்டுகின்றன. மறுபுறம், பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலப்பரப்பை இராணுவம் தன் வசம் வைத்துள்ளது. இதில், இராணுவ முகாம்கள் மட்டுமல்ல இராணுவ குடியிருப்புக்களும் உள்ளடங்கும். இவை தவிர, அரசாங்கம் எமது நிலங்களை அபகரிக்கும் நடவடிக்கைகளில் அரச இயந்திரத்தை முழுமையாக பயன்படுத்திவருகின்றது. வன இலாகா, வன விலங்குகள் திணைக்களம், தொல்பொருள் ஆராய்ச்சி திணைக்களம், மகாவாலி அதிகாரசபை ஆகியவை ,வற்றுள் உள்ளடங்கும். எவ்வளவு வேகமாக நாம் எமது நிலங்களை இழந்து கொண்டிருக்கின்றோம் என்பதற்கு முல்லைத்தீவு மாவட்டத்தை ஒரு உதாரணமாக சொல்கின்றேன். எமது மாகாண சபை முன்னாள் உறுப்பினர் ரவிகரனின் புள்ளி விபரங்களின் படி முல்லைத்தீவின் மொத்த நிலப்பரப்பு 6, 21, 917. இதில், 4, 20, 300 ஏக்கர் அடர்ந்த காடு. ஆகவே, மக்கள் பயன்பாட்டுக்கு ,ருக்கும் நிலப்பரப்பு 201,617 ஏக்கர் ஆகும். இதில், ஆகக்குறைந்தது 80,000 ஏக்கர் நிலம் இராணுவம் மற்றும் அரச திணைக்களங்களின் கீழ் பறிக்கப்பட்டுள்ளது. இந்த புள்ளிவிபரத்தின்படி, முல்லைத்தீவு மாவட்டத்தின் மக்கள் பயன்பாட்டுக்குரிய நிலபபரப்பில் ஏறத்தாழ 40மூ நிலம் எம்மிடம் இருந்து பறிக்கப்பட்டுவிட்டது. இந்த சிறிய உதாரணம் எம்மை சூழ்ந்துவரும் ஆபத்தை வெளிப்படுத்துகின்றது. ஆனால், கடந்த 2009 ஆம் ஆண்டுக்கு பின்னரான கடந்த 10 வருட காலப்பகுதியில், நில அபகரிப்புக்கு எதிராக நாம் உள்ளூர் மட்டத்திலும் சர்வதேச மட்டத்திலும் காத்திரமான எதிர்ப்பு நடவடிக்கைகளையும் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை என்பதே உண்மையானது. உள்நாட்டு சட்ட ரீதியாக மேற்கொள்ளக்கூடிய விடயங்களை நாம் முழுமையான அளவில் மேற்கொள்ளவில்லை. அதேபோல, சர்வதேச சட்டம், சர்வதேச மனித உரிமை கட்டமைப்புக்கள், ஒப்பந்தங்கள், கோட்பாடுகள், போன்வற்றையும் நாம் முழுமையான அளவில் பயன்படுத்திக்கொள்ளவில்லை. ,வற்றுக்கு மேலதிகமாக, சர்வதேச ஊடகங்களின் ஊடாக எமக்கு எதிரான நிலஅபகரிப்பை நாம் வெளிப்படுத்த வேண்டும். ஐ. நா மனித உரிமைகள் சபையின் உறுப்பு நாடுகள், வெளிநாட்டு அரசாங்கங்கள், சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள், தூதரகங்கள் போன்றவற்றின் கவனத்தை ஈர்க்கும் வகையில் திட்டமிடப்பட்ட சிறப்பான டழடிடிலiபெ ஆதரவு நாடி செயற்பாடுகளை நாம் முன்னெடுக்கவேண்டும். ஆனால், இவற்றையெல்லாம், நாம் மேற்கொள்வதற்கு எமக்கு எதிரான நில அபகரிப்புக்கள் தொடர்பில் நம்பகத்தன்மையான நவீன தொழில்நுட்ப முறைகளில் அமைந்த ஆவணப்படுத்தல் பொறிமுறையும் ஆய்வும் அவசியம். சர்வதேச தராதரங்களுக்கு அமைவான ஆவணப்படுத்தல் மற்றும் ஆய்வு செயற்பாடுகளை நாம் முன்னெடுப்பது எமக்கு எதிரான நில அபகரிப்பு பற்றி சர்வதேச அளவில் நம்பகத்தன்மையானமுறையில் ஒரு விழிப்புணர்வையும் கவனத்தையும் ஏற்படுத்துவதற்கு உதவும். மறுபுறத்தில், அரசியல் ரீதியாக சர்வதேச அளவில் நாம் டழடிடிலiபெ ஆதரவு நாடி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு மட்டுமன்றி உள்ளூரில் சட்ட ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் இது பெரிதும் உறுதுணையாக இருக்கும். ஆகவே, நில அபகரிப்புக்கு எதிரான எமது செயற்பாடுகளை நாம் வெறுமனே ஆர்ப்பாட்டங்ககள், நீதிமன்ற நடவடிக்கைகளுடன் மட்டும் நிறுத்திவிடாமல் மேற்குறிப்பிட்ட அறிவு, தகவல் மற்றும் தொழில்நுட்பம் ஆகியவற்றின் அடிப்படையிலான நடவடிக்கைளில் நாம் கவனம் செலுத்த வேண்டும். உதாரணமாக, பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் மேற்கொண்டுவரும் நில அபகரிப்பு பற்றி சர்வதேச ரீதியான விழிப்புணர்வு இருக்கிறது. இதற்கு காரணம், அவை பற்றிய முறையான ஆவணப்படுத்தல், ஆய்வுகள், பரப்புரைகள், ஊடக வெளியீடுகள் நடைபெற்றிருப்பதுதான். எமக்கு எதிராக என்ன நடைபெறுகின்றது என்பது பற்றி எமக்கே சரியான புரிதல்கள் இன்றி இருக்கும் ஒரு துரதிஷ்ட்டமான நிலைமையே காணப்படுகின்றது. இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக நடைபெறும் நில அபகரிப்பு பற்றி ஆராய்வு செய்த யூத பேராசிரியரான ழுசநn லுகைவயஉhநட என்பவர் அவற்றை நவாழெஉசயவiஉ டயனெ pசயஉவiஉநள என்று குறிப்பிடுகிறார். ஏனென்றால், ஜனநாயகம், சட்டம் ஆகியவற்றின் போர்வையில், ஒரு நாட்டில் தனி ஒரு இனத்தின் மேலாண்மையை நிலைநிறுத்தும் வகையில் ஒரு அரசு தனது நடவடிக்கைகளை மேற்கொள்ளுமானால் அதனை நவாழெஉசயவiஉ சநபiஅந என்று அவர் கூறுகிறார். இஸ்ரேலைபோல ஒரு நவாழெஉசயவiஉ நாடக இருப்பதற்கான அத்தனை பண்புகளும் இலங்கைக்கு இருப்பதாக அவர் கூறுகிறார். இதுபோன்ற விடயங்களை மேலும் ஆய்வு செய்து, அல்லது இந்த வாதத்தினை பலப்படுத்தும் நோக்கில் ஆதாரங்களை சேமித்து ஆவணப்படுத்தி எவ்வாறு எமக்கு எதிராக நில ஆக்கிரமிப்புக்கு நீதியை பெறுவதற்கு நம்பகத்தன்மையான ஆதிக்கம் நிறைந்த கருத்து வினைப்பாட்டை நாம் மேற்கொள்ளலாம் என்று சிந்தித்து விஞ்ஞான ரீதியாக நாம் செயற்படவேண்டும்” என்று கூறியுள்ளார். https://www.ilakku.org/?p=40178 -
By உடையார் · பதியப்பட்டது
தமிழ் மக்களின் வாழ்வுரிமையை பாதுகாக்கும் கலந்துரையாடல் -விக்கினேஸ்வரன்,சிவாஜிலிங்கம் கருத்து 23 Views தமிழ் மக்கள் அதிகமாக உள்ள பகுதிகளில் மக்களின் வாழ்வுரிமையை பாதுகாக்கும் வகையில் அனைத்துத் தரப்புக்களையும் ஒன்றிணைத்து அவசர கலந்துரையாடல் ஒன்று இன்றையதினம் நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் இடம்பெற்றது. மதத்தலைவர்கள், மக்கள் பிரதிநிதிகள், சிவில் அமைப்புகள், பல்கலைக்கழக மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் என அனைத்துத் தரப்பினரையும் ஒன்றிணைந்து மக்கள் போராட்டங்களை முன்னெடுப்பது என்பது இந்தக் கலந்துரையாடிலின் நோக்கமாகும். Video Player 00:00 02:54 வடக்கு – கிழக்கில் தமிழரின் பாரம்பரிய இடங்கள் தொல்பொருள் என்ற பெயரில் அபகரித்தல், காணி சுவீகரிப்புகள் உள்ளிட்ட விடயங்களுக்கு எதிராக செயற்பட்டு வாழ்வுரிமையை பாதுகாப்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது. Video Player 00:00 03:01 நாட்டின் தற்போது ஏற்பட்டுள்ள சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.ilakku.org/?p=40183 -
By விவசாயி விக் · Posted
1) Conducting provincial council polls – 0.3% 2) Boosting tourism – 1.1% 3) Repatriating migrant workers - 2.8% 4) Obtaining Covid 19 vaccine - 8.2% 5) Resolve dispute over burial and cremations – 87.6% A large majority (87.6%) had voted demanding a resolution to the dispute over burial and cremation எனக்கென்னவோ இது நம்பிற மாதிரி தெரியேல்லை!? 87% உடல் தகனம் செய்ய கேட்கினமாம்! எங்கேயோ வாக்கு ஊழல் நடந்திருக்கு -
By உடையார் · பதியப்பட்டது
இருளைப் பற்றி பயம் எதற்கு? பெண்ணே நீயே வெளிச்சமாகு முன்னணி நகை தயாரிப்பு நிறுவனமான ஜோஸ் ஆலுக்காஸ் சார்பில் பெண்களின் பெருமையை போற்றும் 'shine on - girl' விளம்பரம் தயாரிக்கப்பட்டுள்ளது. இது சமூகத்தில் போராடும் பெண்களுக்கு ஊக்கம் தருவதாக அமைகிறது. பீனிக்ஸ் பறவையாக பெண்கள் : பல ஆண்டுகளாக இச்சமூகத்தில் பெண்கள் பலவிதமான பாகுபாடுகள் மற்றும் இன்னல்களுக்கு ஆளாகி வருகிறார்கள். அவர்களது குரல்களும் அடங்கி ஒடுங்கி இருக்கின்றன. பெண்களின் கருத்துக்கள் குறைவாகவே மதிப்பிடப்பட்டு வருகின்றன. தனக்கான அடிப்படை சுதந்திரத்தையும் அனுபவிக்க பெண்கள் பல கஷ்டங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. கலாசார எதிர்பார்ப்பு எனும் பெயரிலும், பாலின பாகுபாடுகளாலும் தனக்கு பிடித்தமான வாழ்க்கையை வாழ முடியாமல், இந்த சமூகத்தில் பின்தங்கி இருப்பதே பெண்களின் வாடிக்கையாக இருக்கிறது. இத்தகைய பாகுபாடுகளால் தன்னம்பிக்கையுடன் செய்யக்கூடிய செயல்களையும் செய்யமுடியுமா? என்ற கேள்வியுடனேயே பெண்கள் இருக்கிறார்கள். என்னதான் அடிபட்டாலும் சாம்பலில் இருந்து மீண்டும் உயிர் பெற்று எழும் பீனிக்ஸ் பறவையாக பெண்கள் தங்களை உருவேற்றி கொள்கிறார்கள் என்பதே நிதர்சன உண்மை. தூய்மை பணியில் இருந்து பொழுதுபோக்கு மற்றும் பேஷன் தொழில்துறை வரை முழுமையான நம்பிக்கையுடன், தன்னம்பிக்கை இழக்காமல், மனச்சோர்வு சிறிதும் இல்லாமல் ஆர்வமும் குன்றாமல் பெண்கள் சாதித்து வருகிறார்கள். இதன் மூலம் சமூக விதிமுறைகளையும், சடங்கு எனும் பெயரிலான மூடநம்பிக்கைகளையும் அச்சமின்றி எதிர்த்து போராடி பெண்கள் வெற்றி கண்டு வருகிறார்கள். ஜோஸ் ஆலுக்காஸ்-ன் புதிய படம்: அத்தகைய மகளிர் சக்தியை உலகுக்கு எதிரொலிக்க செய்யும் வகையிலும், அவர்களின் தன்னம்பிக்கையின் பலத்தை உலகறிய செய்யும் வகையிலும் முன்னணி நகை தயாரிப்பு நிறுவனமான ஜோஸ் ஆலுக்காஸ் 'shine on - girl' எனும் ஒரு படத்தை தயாரித்து இருக்கிறது. படத்தின் தொடக்கமே, ஒரு கண்டிப்பான தாய் டியூசனுக்கு செல்லும் தனது மகளிடம், 'எத்தனை தடவை சொல்வது... நாலு பேர் நாலுவிதமா பேசுவாங்க...' என்று கூறி உடைக்கு மேல் துப்பட்டா அணிந்து செல்லுமாறு நிர்பந்திக்கிறார். '6 மணிக்கு மேல் ஒரு பெண்ணுக்கு வெளியே என்ன வேலை?', என வேலைக்கு சென்று வரும் இளம் பெண்ணை சிலர் விமர்சிக்கிறார்கள். அடுத்த காட்சியில் ஓட்டு கேட்டு வரும் அரசியல்வாதியிடம், தனது குடியிருப்பு பகுதியில் நிலவும் பிரச்சினை குறித்து ஒரு குடும்ப பெண்மணி பேச முயல்கிறார். ஆனால், 'உனக்கு இது தேவையில்லாத விஷயம். நீ பேசி இந்த உலகம் கேட்க போகிறதா?' என்று அவரது கணவர் முட்டுக்கட்டை போடுகிறார். விளையாட்டு பயிற்சியில் ஈடுபட வரும் பெண் ஆசிரியையிடம், 'உங்களுக்கு சரியான இடம் வகுப்பறை தான், மைதானம் அல்ல', என்று கூறி பயிற்சியாளர் ஏளனமாக சிரிக்கிறார். இறுதியாக படத்தில் மாடல் வாய்ப்பு கேட்டு நடிகை திரிஷா ஒரு தயாரிப்பாளரிடம் செல்கிறார். 'நீ மாடலா? நேரத்தை வீணடிக்காதே', என்று அந்த தயாரிப்பாளர் கூறிவிடுகிறார். மேற்கண்ட காட்சிகள் மூலம் மூலம் பெண்கள் தினம் சந்திக்கும் ஒரு சமூகப் பிரச்சினையை இப்படம் மிக அழகாக முன்னெடுத்துச் செல்கிறது. தங்கத்தை போல மின்னும் பெண்கள் : அடுத்தடுத்த காட்சிகளில் நடிகை திரிஷா தனது தன்னம்பிக்கையால் மாடல் உலகில் மின்னுவதை படம் தெளிவாக உணர்த்துகிறது. அதேபோல சமூகத்துக்கு பயப்படாமல் தன்னம்பிக்கையுடன் டியூசன் செல்லும் மாணவி, வேலை முடிந்து துணிச்சலுடன் இரவில் வீடு திரும்பும் இளம்பெண், தைரியமாக அரசியல்வாதியிடம் பிரச்சினைகளை எடுத்துச் சொல்லி அவரை ஓடவிடும் குடும்ப பெண்மணி, விளையாட்டில் எதிரணியினரின் வெற்றியை தட்டிப் பறிக்கும் ஆசிரியை என பெண்களின் துணிச்சலையும், தன்னம்பிக்கையுடன் அவர்கள் பெரும் வெற்றியையும் படம் எடுத்துச் சொல்கிறது. ஜோஸ் ஆலுக்காஸ் நிறுவனத்தின் பெண்ணியத்தின் பெருமை கூறும் இந்த படம், ஒவ்வொரு துறைகளிலும் தடைகளை உடைத்து பெண்கள் எவ்வாறு முன்னேறிச் செல்கிறார்கள்? என்பதை ரசிக்கும்படியாக சொல்கிறது. இன்றைய காலத்தில் வேண்டிய உடை, நகைகள் போன்றவற்றை பெண்கள் விருப்பத்துடன் தேர்வு செய்ய முடிகிறது. திருமணம் தொடங்கி குழந்தை பெறுவது வரை பெண்களின் தீர்மானத்திற்கு உரிய அங்கீகாரம் கிடைக்கிறது. பெண்கள் அச்சமின்றி வாழ்கிறார்கள். விரும்பும் வாழ்க்கையை உருவாக்கி அதில் பெருமை அடைகிறார்கள். வாழ்க்கை எனும் போரில் அசாத்திய வீரர்களாக வலம் வரும் பெண்களை பார்த்து ஜோஸ் ஆலுக்காஸ் பெருமிதம் கொள்கிறது. தங்களது நகைகளைப் போலவே பிரகாசமாக மின்னும் பெண்களை, ஜோஸ் ஆலுக்காஸ் போற்றி வணங்குகிறது. எட்டு திசையும் பாராட்டும்: நெருப்பில் விழுந்தாலும் தங்கத்தின் பிரகாசம் குறைவதில்லை. அதுபோல ஒவ்வொரு பெண்ணாலும் நிச்சயம் சமூகத்தில் பிரச்சினைகளை எதிர்கொண்டு பிரகாசிக்க முடியும். நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை நாம்தான் முடிவு செய்ய வேண்டுமே தவிர, இந்த சமூகம் முடிவு செய்யக்கூடாது என்ற அழுத்தமான நம்பிக்கை இந்தப்படம் பெண்கள் மனதில் விதைக்கிறது. நாலு சுவற்றுக்குள் முடங்கி விடாமல் எட்டு திசையும் பார்த்து பாராட்டும் வகையில் திகழ வேண்டுமென பெண்களுக்கு ஊக்கம் தருவதாக இந்த படம் அமைந்திருக்கிறது. 'இருளை பார்த்து பயப்பட வேண்டாம், நீயே இந்த உலகுக்கே வெளிச்சமாக மாறு', என்ற அழுத்தமான வார்த்தைகளுடன் இந்த படம் முடிவடைகிறது. இந்த படம் தன்னம்பிக்கையுடன் பிரச்சனைகளை எதிர்கொண்டு துவண்டு விடாமல் போராடி வரும் பெண்களுக்கு நிச்சயம் ஒரு சமர்ப்பணம் என்றால் அது மிகையல்ல. https://www.dailythanthi.com/Advertorial/AdvertorialNews/2021/01/23185647/advertorial-Jos-Alukkas-shine.advt -
By கிருபன் · பதியப்பட்டது
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சுகிர்தராஜனின் 15 ஆவது ஆண்டு நினைவு தினம் மட்டு.வில் அனுஷ்டிப்பு திருகோணமலையில் 2006 ஆம் ஆண்டு சுட்டுக்கொல்லப்பட்ட ஊடகவியலாளர் சு.சுகிர்தராஜனின் 15 ஆவது ஆண்டு நினைவு தின நிகழ்வுகள் இன்று மட்டக்களப்பிலுள்ள கிழக்கு ஊடகவியலாளர் ஒன்றியத்தின் அலுவலகத்தில் அனுஷ்டிக்கப்பட்டது. கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியம், யாழ். ஊடக அமையம், தெற்கு ஊடக அமையம் மற்றும் தொழில்சார் இணைய ஊடகவியலாளர் ஒன்றியம் என்பன இணைந்து ‘படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதிவேண்டும்’ என்னும் தொனிப்பொருளில் இந் நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தன. இதன்போது ஊடகவியலாளர் சு.சுகிர்தராஜனின் திருவுருவப்படத்திற்கு மலர்மலை அணிவிக்கப்பட்டு, தொடர்ந்து ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு, மலரஞ்சலி செலுத்தப்பட்டதோடு, நினைவுரைகளும் இடம்பெற்றது. கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவர் ரீ. தேவ அதிரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன், சீ.யோகேஸ்வரன், பா.அரியநேந்திரன், மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி. சரவணபவன், பிரதி முதல்வர் க.சத்தியசீலன், தமிழ் தேசிய மக்கள் முன்னைனியின் தேசிய அமைப்பாளர் சுரேஸ், தொழில்சார் இணைய ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவர் பெடி கமகே உள்ளிட்ட சகோதர இன ஊடகவியலாளர்கள், முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பி. இந்திரகுமார் மற்றும் கிழக்கு மாகாண ஊடகவியலாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர். https://www.virakesari.lk/article/99055
-
Recommended Posts
Join the conversation
You can post now and register later. If you have an account, sign in now to post with your account.