அஞ்சரன்

மீள் நினைவில் .

Recommended Posts

தொண்ணூறுகளுக்கு முன் தீபாவளி,வருடம்,பொங்கல் என்றால் மட்டும் புது துணிகள் எடுப்பதும், தைப்பதும் என ஒரே ஆரவாரமாக இருக்கும் ஊரும்,குடும்பங்களும் உறவுகளும் ....

துணி எடுத்து ஜீன்ஸ் தைப்பதற்கு சேட் தைப்பதற்கு என்றால் யாழ்ப்பாணம் வரணும் ஊரில இருந்து,ஆஹா பஸ்சில போகபோறம் என்பது கூட ஒரு பெரும் சந்தோஷம் அம்மா கடை சந்தியில் இருந்து,இலங்கை போக்குவரத்து சபை (சிடீப்பி) பஸ்ஸில ஏறினாள் வேலணை ஊடாக வந்து மண்குப்பான் குணம் அண்ணையின் கடையில் நின்று வடை சாப்பிட்டு, மண்டைதீவு என யாழ் பஸ் தரிப்பிடத்தை அடையும்...

அப்பொழுதுகள் கூட பஸ் கரையில் கண்ணாடிப்பக்கம் இருந்து ஓடும் மின்கம்பம் எத்தனை,மரம் எத்தனை என எண்ணிக்கொண்டு வரும் போது,வேலணை புங்குடுதீவு பாலத்தில் பயணிக்கும் தருணம் இனிமை,வளைத்து வளைத்து கோலம் போட்ட களங்கண்டி ,மரக்குற்றிகளில் சிலையாக குந்தியிருந்து தூண்டில் போடும் மீனவர்,கடல் காற்று கொண்டுவரும் பாசி மணம்,களங்கண்டி தடிகள் மேலாக எறும்பு ஊருவது போல அமர்த்து இருக்கும் நீர் காகம் ,மீனை நேரம்பார்த்து குறியாக பிடிக்கும் பறவைகளின் வட்டமிடல் என அப்படியே ஒரு இயற்கை அழகை இப்பொழுது சிலாகித்து உணர முடிகிறது ,அன்நேரங்கள் அவைகள் எல்லாம் வெறும் விடுப்பும் வேடிக்கையும் மட்டுமே.

யாழில் வந்து இறங்கினால் நேரக்க செல்வது இந்த பாரிஸ் ரெக்ஸ் கடைக்கு தான்,அங்க போனால் மாமா நிப்பார் ,துணிகளை எடுத்து கத்தரிக்கோலால் இந்த முனையில் இருந்து வெட்டி கொழுவி ஒரு இழுவையில் அடுத்த பக்கம் நேராக போகும், சின்ன வயது என்பதால் பக்கத்தில் நின்று பார்ப்பது எப்படி வெட்டுறார்கள் இப்படி என கைக்குக்குள் எதாவது இருக்குமோ ,அவர்கள் போனவுடன் உடைத்து தரும் யானை சோடாவும் அப்ப அமிர்தம் , வாடா என கூட்டி போய் ஜிம்மா பள்ளிவாசல் லேனுக்குள் இருக்கும் முஸ்லீம் தையல் கடையொன்றில் அளவெடுத்து தைக்க கொடுத்து விட்டு வரும் போது,மலாயன் கடையில் வடையும் சம்பலும் கட்டிக்கொண்டு வந்து அம்மா பின்னேரம் உடுப்பையும்,பொருள்களும் வாங்கி வருவா நீங்க போங்க வீட்ட என கூட்டிக்கொண்டு வந்து.
அண்ணே இவங்களை அம்மா கடை சந்தியில் இறக்கி விடுங்க என ரைவரிடம் சொல்லி ஏற்றிவிட்டு டிக்கெட் எடுத்து தந்திட்டு போவார் மாமா.

அதிலும் யாழ்ப்பாணம் வந்தால் மட்டுமே இயக்க அண்ணைமாரை ஆயுதத்துடன் அதிகமாக பார்க்கலாம்,அவர்கள் பிக்கப் வாகனங்களில் போவதும்,சைக்கிளில் போவதுமாக இயக்க பெடியள் போயினம் என ஒருவித உணர்வு தோன்றி மறையும்,ஏனெனில் அவ்வேளைகள் அவர்கள் எங்கள் கண்களுக்கு ஹிரோக்கள்.

இந்த சந்தோஷங்கள் எல்லாம் தொண்ணூறுகளுக்கு பின்னர் இல்லாமல் போனதும்,உறவுகள் குடும்பங்கள் சிதறுண்டு பந்த பாசங்கள் அற்றுப்போனதுமாக போரும் அது கொடுத்த வாழ்வும் ,இன்று ஆளாளுக்கு ஒரு பக்கங்களில் ,ஒரு நாட்டில் இருந்து கொண்டு பேஸ்புக்கில் சுகம் விசாரிக்கும் நிலையில் வந்து நிக்கிறது கூட்டாக ஒட்டி இருந்து உறவாடிய உறவுகள் நிலை.

14256730_10205770454300406_718317924_n.jpg?oh=05f1a03766ac7c7944ab10df7ce0d737&oe=57D31A38

 

 • Like 10

Share this post


Link to post
Share on other sites

இந்த நிகழ்வுகள் கனபேருக்கு தெரியாதே அஞ்சரன் 

ஒரு காலத்தின் நினைவுகள் எமது உள்ளப்பக்கத்தில் அழியாத மைகொண்டு செதுக்கி எழுதியவை பழைய நினைவுகள் 

Share this post


Link to post
Share on other sites

40 வருடங்களின் பின்பு எனது ஒன்றைவிட்ட அக்காவை சந்தித்தேன்..அவர்களின் கலியாணத்திற்கு நான் தான் மாப்பிள்ளை தோழன். அத்தானை கலியாணத்தன்று கண்டேன் ,அதன் பின்பு காணவில்லை .இனிமேல் காணவும் முடியாது,இறந்துவிட்டார்.பகிர்வுக்கு நன்றிகள் அஞ்சரன்

Share this post


Link to post
Share on other sites

நன்றி  வருகை  தந்த  அனைவருக்கும்  ..உங்கள்  கருத்துக்கும் .

Share this post


Link to post
Share on other sites

அஞ்சரன்!  மீள் நினைவை பகிர்ந்தமைக்கு நன்றி.tw_thumbsup:

Share this post


Link to post
Share on other sites

அஞ்சரன் பழைய நினைவுகள்.அழியா நினைவுகள்.

தீபாவளி வருடத்திற்கு உடுப்புகள் எடுப்பதென்று சொல்வது சுகம்.அதில் எமது பெற்றோர்கள் படும் பாடிருக்கே.
பெற்ற பிள்ளைகளுக்கு மட்டுமா?

பெரியதொரு றோல் வாங்கி அதில் எல்லோருக்கும் தைத்து வீதியால் போகும் போதே ஆமியோ நேவியோ போன மாதிரி ஒரே மாதிரியான உடுப்புடன் இப்படி எத்தனை? எல்லாம் தொலைத்துவிட்டு நிற்கிறோம்.

 • Like 2

Share this post


Link to post
Share on other sites

அந்தநாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே...  Bild in Originalgröße anzeigen

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


 • Topics

 • Posts

  • இந்தக் கதையில் சொல்லப்பட்ட புதுமைப்பித்தனின் காஞ்சனை கதையும் யாழ் இணையத்தில் உள்ளது    
  • தேர்தல் நேரத்தில் பொய் வாக்குறுதிகளை கொடுத்து அப்பாவி மக்களின் வாக்குகளைப் பெற்று தேர்தலில் வென்ற பின்னர் கொடுத்த வாக்குறுதிகளை மறந்த நயவஞ்சகர்கள் என்று தெளிவாகவே அடையாளம் காணப்பட்டுள்ள சம்மந்தன், சுமந்திரன் இருவருமே அரசியலில் இருந்து நீக்கப்பட வேண்டியவர்கள். இந்த இரண்டு நயவஞ்சகர்களும் 2009 இன் பின்னர் தமிழினப் படுகொலைகளை மேற்கொண்ட போர்க்குற்றவாளிகளை காப்பாற்றுவதிலேயே கண்ணும் கருத்துமாக இருந்துள்ளனர்.
  • மந்திகையில் இராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்திய புத்தளம்வாசி சிக்கினார் மந்திகை பகுதியில் இராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்திய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று யாழ்.மாவட்ட குற்றத் தடுப்புப் பொலிஸார் தெரிவித்தனர். பருத்தித்துறை மற்றும் சாவகச்சேரி ஆகிய பகுதிகளில் 3 கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய புத்தளத்தைச் சேர்ந்தவரே இராணுவச் சிப்பாய் மீது தாக்குதல் நடத்தியுள்ளார் என்றும் அவர் குறிப்பிட்டார். “சாவகச்சேரியில் இடம்பெற்ற வழிப்பறிக் கொள்ளைச் சம்பவம் தொடர்பில் புத்தளத்தைச் சேர்ந்த சந்தேக நபர் சாவகச்சேரியில் வைத்து நேற்றுக் கைது செய்யப்பட்டார். சந்தேக நபரிடமிருந்து மோட்டார் சைக்கிள் ஒன்றும் சங்கிலிகள் இரண்டும் கைப்பற்றப்பட்டன. அவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் பருத்தித்துறையில் இரண்டு கொள்ளைச் சம்பவங்களில் தொடர்புடையவர் என்று அறியப்பட்டது. அத்துடன், கடந்த 14ஆம் திகதி நள்ளிரவு மந்திகை வைத்தியசாலைக்கு முன்பாக வைத்து இராணுவச் சிப்பாய் ஒருவருக்கு கல் ஒன்றால் தாக்கிய சம்பவத்துடன் தனக்குத் தொடர்பு இருப்பதாக சந்தேக நபர் ஒப்புக்கொண்டுள்ளார். சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முற்படுத்தப்பட்டுள்ளார்” என்றும் யாழ்ப்பாணம் பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகரின் கீழான மாவட்டக் குற்றத் தடுப்புப் பொலிஸார் தெரிவித்தனர். https://www.ibctamil.com/srilanka/80/144007
  • இந்த நிலமை இலங்கையில் வந்தமைக்கு அமெரிக்காவும், ஐரோப்பிய ஒன்றியமும் குறிப்பாக இந்தியாவும் காரணம்.  விடுதலைப்புலிகளை அவர்களின் மேற்குலக / இந்திய ஆதரவான அரசை அழித்து இன்று முழு தீவையும் சீனாவிடம் இழக்கும் நிலை.  13ஆவது திருத்த சட்டத்தையாவது இந்தியா இறுக்கமாக அமுல்படுத்தாவிடடால், இந்தியாவை சீன அரசு சுற்றி வளைத்துவிடும்.    
  • நடிகையை பார்க்க, இந்தியாவிற்கு அழைத்து செல்லவில்லை: யாழில் இளம் யுவதி தற்கொலை! தென்னிந்திய சின்னத்திரை நடிகையை பார்க்க இந்தியா அழைத்து செல்லவில்லை என்ற மன விரக்தியில் இளம் யுவதி ஒருவர் மண்ணெண்ணெய் ஊற்றி தனக்கு தானே தீ வைத்து உயிரிழந்துள்ளார். இந்த சம்பவத்தில் கொட்டைக்காடு மல்லாகம் பகுதியை சேர்ந்த 26 வயதுடைய சூரியகுமார் தேனுஜா என்ற இளம் யுவதியே உயிரிழந்துள்ளார். மல்லாகம் பகுதியில் வசித்து வரும் குறித்த யுவதி கடந்த ஒரு மாதமாக தென்னிந்திய சின்னத்திரை நடிகை ஐஸா என்பவரை பார்ப்பதற்கு தன்னை இந்தியா அழைத்து செல்லுமாறு கேட்டுள்ளார். எனினும் பெற்றோர்கள் தற்போது நாட்டில் கொரோனா வைரஸ் காரணமாக இப்போது செல்ல முடியாது பின்னர் அழைத்து செல்வதாக கூறி வந்த்துள்ளனர். இந்நிலையில் தன்னை கூட்டி செல்வதாக தொடர்ந்தும் ஏமாற்றுவதாக கூறி நேற்றுமுன்தினம் (24) வீட்டில் மண்ணெண்ணெய் ஊற்றி தனக்கு தானே தீ வைத்துள்ளார். தீக்காயத்திற்கு உள்ளன யுவதியை உடனடியாக தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.பின்னர் மேலதிக சிகிசசைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். எனினும் சிகிச்சை பலனின்றி அன்றையதினமே மாலை உயிரிழந்துள்ளார்.இந்த இறப்பு தொடர்பாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் மேற்கொண்டார். http://athavannews.com/நடிகையை-பார்க்க-இந்தியா/