Jump to content

சந்தேகங்கள், ஆலோசனைகள், அறிவித்தல்கள்??


Recommended Posts

எனக்கும் முன்பு அப்படி நடந்தது. நான் இதனால் நிருவாகம் எனது தொல்லை தாங்கமுடியாது என்னை தடைபண்ணிவிட்டதோ என நினைத்தேன்.

Link to comment
Share on other sites

  • Replies 281
  • Created
  • Last Reply

ஒரு கேள்வி:

NewsBot என்ற பெயரில் தானியங்கியாக செய்திகள் இணைக்கப்படுகின்றன. புதினத்தில் உள்ள சகல செய்திகளையும் யாழில் இணைப்பது அவசியமா? முன்பு கந்தப்பு, கறுப்பி போன்றோர் செய்திகளை இணைக்கும்போது புதினத்தில் உள்ள சகல செய்திகளும் வருவதில்லை என நினைக்கின்றேன்.

தானியங்கியாக யாழில் செய்திகள் இணைக்கப்படுவது பற்றி எல்லாரும் என்ன நினைக்கின்றீர்கள்?

ஒரு யோசனை

யாழில் தொழில்நுட்ப பிரச்சனைகளை, மற்றும் தொழில்நுட்பத்தை கவனிக்க, பரிந்துரைகள் செய்ய என ஒரு குழுவை உருவாக்கினால் என்ன? இங்கு இந்த துறையில் உள்ள பலர் யாழில் உள்ளார்கள் என நினைக்கின்றேன். இவ்வாறு செய்தால் எதிர்காலத்தில் யாழ் இணையத்தை பெரிய அளவில் விஸ்தாரணம் செய்வதற்கு இது உதவும். மேலும், இதன் மூலம் மட்டறுத்துனர்களின் பொறுப்பு கருத்தாடல் தளத்தில் மட்டும் குவிக்கப்பட முடியும். ஏற்கனவே நாம் அறிந்திராத வகையில் இவ்வாறான தொழில்நுட்ப குழு இருக்கின்றதோ தெரியாது.

Link to comment
Share on other sites

இண்டைக்கு யாழில் இப்படியும் ஒரு புது ஐகோன் வந்து இருக்கிது..

:3d_019: :3d_019: :3d_019: :3d_019: :3d_019: :3d_019:

இப்படியென்றால் என்ன? :3d_019: பார்க்க பயமாய் இருக்கிது. எல்லாரும் இப்ப இத பாவிக்கவும் துவங்கீட்டீனம்.. :):lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புதிசாய் சாறியள் வரேக்கை எங்கடைசனம் கலர் டிசைன் பாராமல் வாங்கி உடுக்கேல்லையே அது மாதிரித்தான் இதுவும் சும்மா பட்டிக்காட்டார் மாதிரி கதைச்சுக்கொண்டு :angry: இதை நாங்களும் பாவிச்சிட்டால் போச்சு இஞ்சை பாருமன் நானும் அஞ்சாறு தரம் அடுக்கி விட்டுருக்கிறன் :3d_019: :3d_019: :3d_019: :3d_019: :3d_019: :3d_019:

Link to comment
Share on other sites

இது ஒரு சந்தேகங்கமோ அல்லது ஆலோசனையோ அல்லது அறிவித்தலோ அல்ல.. ஒரு பகிடி..

ஒரு பகிடி...

நான் யாழில் பிரபலமான ஒருவரின் புரபைலை பார்வை இட்டபோது அதில் அவர் தனது நண்பர்கள் பகுதியில் தனக்கு தன்னை தானே நண்பனாக இணைத்து இருப்பதை கண்டேன். வேறு ஒருவரையும் நண்பர்களாக அட் செய்யவில்லை. :rolleyes: இவர் மற்றவர்களைவிட தன்னையே தான் நேசிக்கிறார் போல இருக்கு.. :P யாழில் என்னையே நான் நண்பனாக இணைக்கமுடியும் என்றவிசயம் எனக்கு முன்பு தெரியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது ஒரு சந்தேகங்கமோ அல்லது ஆலோசனையோ அல்லது அறிவித்தலோ அல்ல.. ஒரு பகிடி..

ஒரு பகிடி...

நான் யாழில் பிரபலமான ஒருவரின் புரபைலை பார்வை இட்டபோது அதில் அவர் தனது நண்பர்கள் பகுதியில் தனக்கு தன்னை தானே நண்பனாக இணைத்து இருப்பதை கண்டேன். வேறு ஒருவரையும் நண்பர்களாக அட் செய்யவில்லை. :lol: இவர் மற்றவர்களைவிட தன்னையே தான் நேசிக்கிறார் போல இருக்கு.. :P யாழில் என்னையே நான் நண்பனாக இணைக்கமுடியும் என்றவிசயம் எனக்கு முன்பு தெரியாது.

தம்பி ராசா மாப்பு தெரியாதவர்களுக்கு சொல்லிக்கொடுப்பதுதானே அழகு :lol: ?இங்கு எத்தனை பேருக்கு எவ்வளவு பிரச்சனை இருக்கும்?முதலில் மொழிப்பிரச்சனை அடுத்தது தொழில்நுட்பப்பிரச்சனை இப்படி எத்தனை பிரச்சனை இருக்கும் போது நீங்கள்.........?அல்லது குறிப்பிட்ட நபருக்கு தனிமடலில் ஆலோசனை சொல்லலாமல்லவா?அவர் சில வேளைகளில் தெரியாமல் செய்திருக்கலாம் அல்லது செய்யத்தெரியாமலிருக்கலாம். :lol: கருத்து எழுதுபவர்களுடன் பதில் கருத்துக்களுடனேயே மோதுங்கள். :3d_019: அவர்கள் பலவீனத்தை இழுக்காதீர்கள்.இது வந்து உதாரணத்திற்கு எமது பல்லை நாமே குத்தி நாமே மணப்பது போலிருக்கின்றது.பல விடயங்கள் தெரிந்த நீங்களே இப்படியென்றால்.................! :rolleyes:

Link to comment
Share on other sites

கு.சா அண்ணா, அவர் இதை தெரியாமல் செய்யவில்லை. அவ்வாறு செய்யக்கூடியவர் அல்ல. சும்மா வம்புக்கே இவ்வாறு செய்து உள்ளார். :rolleyes:

உங்களுக்கு பல்லு குத்திற பழக்கம் எல்லாம் இருக்கோ? நான் பல்லு மினுக்கிற பிரஸ், பிளஸ் தவிர வாய்க்குள் வேறு ஒன்றும் விட்டு நோண்டுவதில்லை. :P

Link to comment
Share on other sites

அது நான் இல்லை.... :P

நீங்க சிறந்த அறிவாளி என்று எல்லாருக்கும் தெரியும் சபேசன் மாமா!!! :rolleyes:

Link to comment
Share on other sites

வலைஞனிடம் ஒர் கேள்வி,,

என்னிடம் பல மென்பொருட்கள், ஆங்கிலப்படங்கள்,கணணி விளையாட்டுக்களுக்கான rapidshare சுட்டிகள் உள்ளது.பெரும்பாலானவை சட்டவிரோதமானவை.இவற்றை யாழ் தரவிறக்கம் என்ற தலைப்பின்கீழ் இணைப்புக் கொடுக்கலாமா?

ஏனென்றால் இதனால் பலரும் பயனடைவார்கள் என்ற ஆதங்கத்தினால்,

பதில் தரவும்

Link to comment
Share on other sites

அனைவருக்கும் வணக்கம்!

புளிச்சாதம் என்றால் என்ன என்று எல்லாருக்கும் தெரியும். கஸ்டப்பட்டு யாரோ செய்த சோத்த ஊறவச்சு, தாளிச்சு சாப்பிடுறது. இது மாதிரி தான் யாராவது கஸ்டப்பட்டு செய்த படைப்புகளை ரீமிக்ஸ் செய்வது என்பது.

நீங்கள் ரீமிக்ஸ் பாடல்களை விரும்பும் ஒருவராக இருக்ககூடும். ஆங்கிலம் + தமிழ், தமிழ் + ஹிந்தி, தமிழ் + சிங்களம் இப்படி பல வகைகளில் ரீமிக்ஸ் உள்ளன.

எல்லாரும் ஏதோ பண்ணித் தொலைக்கிறாங்களே, ஏன் நாமும் இப்படி இன்னொருவனின் முதுகில் ஏறி சவாரி போககூடாது எண்டு எனக்குள் ஒரு எண்ணம். ஒரு சின்ன ஆசை..

இதனால், நானும் நேரம் கிடைக்கும்போது ரீமிக்ஸ்களை உருவாக்கி கலைஞனின் மிக்ஷர் என்ற தலைப்பில் யாழில் இனிய பொழுது பகுதியில் இணைக்கலாம் என்று நினைக்கின்றேன்.

ரீமிக்ஸ் பற்றிய உங்கள் சுவைகளை முன்னமே அறியத்தந்தால் நீங்கள் விரும்பும் வகையில் ரீமிக்ஸ் பாடல்கள் செய்து நானும் எனது கொடியை தூக்கலாம் என்று நினைக்கின்றேன். :P

ரீமிக்ஸ் பற்றி உங்களுக்கு விருப்பம் இல்லாத சில விசயங்கள் இருந்தால் அவை பற்றியும் அறியத்தரவும்.

நன்றி!

Link to comment
Share on other sites

ஜெனரல்!!

நல்ல முயற்சி வெற்றி பெற வாழ்த்துகள்...............பயப்பிடாம உங்களுக்கு விரும்பிய மாதிரி செய்யுங்கோ கொடியை நான் உயர்த்து விடுறேன்!! :P

Link to comment
Share on other sites

அடுத்து, முகக்குறிகள் (Emoticons) தொடர்பில் தயா ஒருமுறை குறிப்பிட்டிருந்தார். இது தொடர்பாக முன்பும் சில உறுப்பினர்கள் எமக்கு அறியத்தந்திருந்தார்கள். முகக்குறிகள் எமது கருத்துக்கு உணர்வையூட்டுவதற்காக பயன்படுத்தப்படுகின்றன. அதுவே சில நேரங்களில் கருத்தை மேவியாக இருக்கிறது. குறிப்பான தீவிரமாக விவாதம் நடக்கிற ஒரு தலைப்பில் சில முகக்குறிகள் எதிர்க்கருத்தாளரை சீண்டுவதற்காகவும், நக்கல் செய்வதற்காகவும் பயன்படுத்தப்படுகிறது. இதுவரை காலமும் இந்தவகை முகக்குறிகளை நாம் தணிக்கை செய்ததில்லை. ஆனால் கடந்த சில நாட்களாக பலர் கவனித்திருப்பீர்கள் சில முகக்குறிகள் காணாமல் போயிருக்கும். இன்னும் சில முகக்குறிகளை சரியான வழிகாட்டலுடன் நீக்குவதற்கும், புதியவற்றை சேர்ப்பதற்கும் முயற்சிக்கிறோம். இது தொடர்பில் கருத்துக்கள உறவுகளின் கருத்துக்களையும் எதிர்பார்க்கிறோம்.

இந்த முக குறிகளை அப்புறபடுத்து விடயம் அவ்வளவு நல்லதாக தெரியவில்லை :wub: ............கோபத்தை காட்ட ஒரு முககுறி இருந்தது தற்போது அதுவும் இல்லை ஆகவே கருத்தாளர்கள் எனி எழுத்தில் அதை காட்டமுனையும் போது பிரச்சினைகள் அதிகரிக்க தான் வாய்ப்பு இருகிறது....... :lol: !!முககுறியை கூட சீரியசாக எடுப்பவர்களை கருத்தாளர்கள் என்று கூறமுடியாது ஆகவே........ :lol: இந்த நடைமுறை என்னை பொறுத்தவரை பிடிக்கவில்லை மற்றவர்களை பற்றி தெரியாது எனக்கு மிகவும் பிடித்த முக குறி நாக்கை காட்டுறது அதையும் காணவில்லை :( கருத்து எழுதும் போது ஒரு மாதிரி இருக்கு!!என்ன முக அடையாளங்களை போடுவதென்று ஆகவே பழைபடி சேர்த்தா நல்லது என்று நினைகிறேன் :D ஏனைய கருத்துகள உறுப்பினர்கள் என்ன சொல்கிறார்கள் என்று பார்போம்!! :lol:

அப்ப நான் வரட்டா!

Link to comment
Share on other sites

யாழில் இருந்து முகக்குறிகளை அகற்றுவதாய் இருந்தால் முதலில் இதை அகற்றுங்கள்... சகிக்க முடியவில்லை...

இப்படி என்றால் என்ன?

:wub::lol::lol::lol::(

மேலும் எனது பல்லை காணவில்லை. கவலையாக இருக்கின்றது. வலைஞன் எல்லாத்தையும் தணிக்கை செய்ய வெளிக்கிட்டு கடைசியில் ஐகோனிலையும் கை வச்சாச்சா? ஏதோ நடப்பது நல்லதுக்காய் இருந்தால் சரி.

தயவு செய்து எனது பல்லு ஐகோனை மீண்டும் போடவும். பல்லு இல்லாமல் என்னவோ மாதிரி இருக்கிது. அதற்கு பதிலாக இந்த சகிக்க முடியாத ஐகோனை அகற்றவும்.

:D:):):):)

நன்றி!

Link to comment
Share on other sites

ஆமாம். அந்த சிரிப்பு முகக்குறியையும் கோவ முகக்குறியையும் மீண்டும் சேர்த்துக்கொள்ளுங்கள் தயவுசெய்து.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் ஏதாவது தாக்குற மாதிரி எழுதினால் உடனே வலைஞனிடம் இருந்து இப்படி ஒரு மடல் வரும்.

- தனிநபர் தாக்குதல் கருத்துக்களை எழுதியமை.

- கருத்தாடற் பண்பை கடைப்பிடிக்காமை.

- கருத்துக்கள விதிமுறைகளை மீறியமை.

அதற்கு எச்சரிக்கையும் வழங்கப்படும். இங்கே யாருக்கும் எச்சரிக்கை வழங்கச் சொல்லி நான் கேட்கவில்லை. ஆனால் எங்களைப் பார்த்து ஒருவர் பாசியக் கருத்துக்களை வைக்கின்றோம் எனக் குற்றம் சாட்டுகின்றார். நாங்கள் எதைச் சட்டவிரோதமாகப் பிடிக்கின்ற எண்ணத்தைக் கொண்டிருந்தோம்? அல்லது வைத்திருக்கின்றோம். இது தனிநபர் தாக்குதல் இல்லையா?

அக்கருத்து உடனே வலைஞனால் நீக்கப்படுவதோடு முடிவதாகவே உணர முடிகின்றது. இது நாங்கள் முன்பு சொன்ன நிர்வாகம் பற்றிய விடயத்துக்கு மற்றுமொரு சான்று.

Link to comment
Share on other sites

அதன் பெயர் பாசியம் அல்ல. பாசிசம். ஆனால் இந்த உச்சரிப்பும் தவறுதான். fascism என்பதை தமிழில் பாசிசம் என்று எழுதுவார்கள்.

வேறு நிறத்தை, இனத்தை கொண்டிருப்பதற்காக ஒரு மனிதன் அடக்கப்பட்டால் அதை rascism என்று சொல்வார்கள்.

வேறு கருத்தை கொண்டிருப்பதற்காக ஒருவர் அடக்கப்பட்டால், அதை fascism என்று சொல்வார்கள்.

எத்தனையோ பேர் செய்த ஒரு சாதரண ஒப்பீட்டைக் கூட செய்யக்கூடாது என்று இங்கே அடம்பிடித்து நிற்பதோடு, அதை தடுப்பதற்கு பல வழிகளிலும் முயற்சிப்பதால், பாசிசம் என்ற சொல்லைப் பாவித்தேன்.

மனம் புண்பட்டிருந்தால், வருந்துகிறேன்

Link to comment
Share on other sites

ஜெனரல்!!

இந்த குறியீடு எப்படி இருக்கு நல்லா இருக்கு தானே எல்லாவற்றிற்கும்!! :)

eusawallfm1.gif

eusawallfm1.gif

eusawallfm1.gif

eusawallfm1.gif

Link to comment
Share on other sites

நீங்கள் வேறு ஏதோ கதைத்துக்கொண்டிருக்கிறீர்க?். இடையில் குழப்புவதற்கு மன்னிக்கவும்!

தலைப்பில சந்தேகங்கள், உதவிகள் என்று போட்டிருக்கு அது தான் கேட்கிறேன்!

நான் நிறைய காலம் யாழ் வரவில்லை. இப்போ என்னால் தனிமடல்கள் அனுப்ப கஷ்டமாக இருக்கிறது.

அது மட்டுமில்லை... யாருக்காவது பதில் அவர்கள் பதில் மேற்கோள் காட்டி போட முயன்றாலும் முடியவில்லை. உடனே இண்டெர்நெற் ல் பிழை என்று வருகிறது. ஆனால் மற்றைய வெப் சைட்டெல்லாம் வருகிறது தானே? என்ன பிழை என்று தெரியவில்லை.... :o

என்னோட settings எதிலும் பிழையா? இல்லை நான் வராத இந்த இடை காலத்தில் ஏதும் நடந்து விட்டதா? தெரிந்தவர்கள் உதவுங்கள்.

நன்றி :lol:

Link to comment
Share on other sites

நீங்கள் வேறு ஏதோ கதைத்துக்கொண்டிருக்கிறீர்க?். இடையில் குழப்புவதற்கு மன்னிக்கவும்!

தலைப்பில சந்தேகங்கள், உதவிகள் என்று போட்டிருக்கு அது தான் கேட்கிறேன்!

நான் நிறைய காலம் யாழ் வரவில்லை. இப்போ என்னால் தனிமடல்கள் அனுப்ப கஷ்டமாக இருக்கிறது.

அது மட்டுமில்லை... யாருக்காவது பதில் அவர்கள் பதில் மேற்கோள் காட்டி போட முயன்றாலும் முடியவில்லை. உடனே இண்டெர்நெற் ல் பிழை என்று வருகிறது. ஆனால் மற்றைய வெப் சைட்டெல்லாம் வருகிறது தானே? என்ன பிழை என்று தெரியவில்லை.... :o

என்னோட settings எதிலும் பிழையா? இல்லை நான் வராத இந்த இடை காலத்தில் ஏதும் நடந்து விட்டதா? தெரிந்தவர்கள் உதவுங்கள்.

நன்றி :lol:

ஆகா எனக்கும் இதே பிரச்சனை தான் சகி.. எதாவது இடத்தில் கருத்து எழுதுவோம் என்றால் கஸ்டமாய் இருக்கு.. பல இடத்தில் கருத்துக்கள் எழுதியவுடன் அது பிறிஷ் அகுது. தொடர்ந்து எழுத முடியலை. பல கருத்துக்கள் அப்படியே அழிந்து விட்டது. யாரவது உதவி செய்யுங்களேன்

Link to comment
Share on other sites

யாரப்பா அது பாட் ஸ்குயாட் எண்டிறது? அந்த தலைப்பை நிருவாகத்திற்கு நகர்த்திவிட்டதாய் கருத்துக்களில் மாற்றம் பகுதியில் எழுதப்பட்டுள்ளது. நிருவாகம் இதை அங்கு நகர்த்தியதற்கான காரணம் தெரியவில்லை.

நான் அந்த இரண்டு பாடல்களையும் முன்பு கேட்டுப் பார்த்தேன். எல்லாம் பச்சைத் தூசணத்தில் (ஆங்கிலத்தில்) இருந்தது. அது பரவாயில்லை. எமினம் பாட்டுக்களிலும் அவ்வாறு உள்ளது. ஆனால், எமினம் கூட இப்படி தெளிவாக தூசணம் கதைப்பதில்லை.

மற்றையது, இப்படியான தூசண வார்த்தைகளுடன் தமிழ் மொழியையும் கலந்துவிட்டு அதற்கு ரப் என்று வேறு பெயர் வைப்பது சுத்த மோசம்.

போற போக்கைப் பார்த்தால் இவர்கள் தமிழ் தூசணத்தில் ரப் பாடல்கள் செய்வார்கள் போல இருக்கின்றது. இப்படி எற்கனவே பாட்டுக்கள் இருக்கின்றதோ தெரியாது.

எல்லாம் கலிகாலம்.. என்ன செய்வது..

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.