-
Tell a friend
-
Topics
-
Posts
-
By தமிழ் சிறி · பதியப்பட்டது
அணுசக்தி மையங்களில் ஐ.நா. கண்காணிப்பதைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கையை அமுல்படுத்தியது ஈரான்! ஐ.நா.வின் சர்வதேச அணுசக்தி அமைப்பு (ஐஏஇஏ), தங்கள் நாட்டு அணுசக்தி நிலையங்களில் மேற்கொண்டு வரும் கண்காணிப்பைக் கட்டுப்படுத்தும் வகையிலான நடவடிக்கைகளை ஈரான் உத்தியோகபூர்வமாக அமுல்படுத்தத் தொடங்கியுள்ளது. அணுசக்தி ஒப்பந்தத்தின்படி தங்கள் நாட்டின் மீதான பொருளாதாரத் தடைகள் விலக்கிக்கொள்ளப்படாவிட்டால், ஐஏஇஏ-வுடனான தங்களது ஒத்துழைப்பு நிறுத்தப்படும் என்ற எச்சரிக்கையை இதன் மூலம் ஈரான் வெற்றிகரமாக வெளிப்படுத்தியுள்ளது. எனினும், சர்வதேச கண்காணிப்பாளர்களுக்கு எத்தகைய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன என்பது குறித்து விரிவான விபரங்கள் இன்னும் வெளியாகவில்லை. ஐ.நா. கண்காணிப்பாளர்களுக்கு அணுசக்தி மையங்களின் கண்காணிப்பு கெமரா பதிவுகளை அளிப்பதற்குத் தடை விதிக்கும் தீர்மானம் ஈரான் நாடாளுமன்றத்தில் கடந்த டிசம்பர் மாதம் நிறைவேற்றப்பட்டது. தங்கள் மீது விதிக்கப்பட்டுள்ள எண்ணெய் ஏற்றுமதி தடை மற்றும் சர்வதேச வங்கிப் பரிவர்த்தனைத் தடையை நீக்குவதற்கான நடவடிக்கைகளை அணுசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள ஐரோப்பிய நாடுகள் மேற்கொள்ளாவிட்டால், ஐஏஇஏ-வுக்கு கண்காணிப்பு கெமரா பதிவுகள் அளிப்பது நிறுத்தப்பட வேண்டும் என்று அந்தத் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தநிலையில் இதுதொடர்பான தாமதம் காரணமாக, அணுசக்தி மையங்களின் கண்காணிப்பு கெமரா பதிவுகளை கையளிக்கப் போவதில்லை என ஈரான் தெரிவித்துள்ளது. http://athavannews.com/அணுசக்தி-மையங்களில்-ஐ-நா/ -
By தமிழ் சிறி · பதியப்பட்டது
தற்கொலையைத் தடுக்க தனித்துறையை உருவாக்கியது ஜப்பான்! ஜப்பானில் தற்கொலையைத் தடுக்க வேண்டும் என்பதற்காக ‘தனிமை’ எனும் தனித்துறை உருவாக்கப்பட்டுள்ளது. அத்துடன் இதற்கு டெட்சுஷி சாகாமோட்டோ என்பவரை அமைச்சராக ஜப்பான் அரசாங்கம் நியமித்துள்ளது. இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ‘சமூக தனிமை மற்றும் தனிமைப்படுத்தப்படுவதைத் தடுப்பதற்கும் மக்களுக்கிடையிலான உறவுகளைப் பாதுகாப்பதற்கும் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்’ என கூறினார். கொரோனா நோய்த் தொற்று பரவலால் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்பு, வேலை வாய்ப்பின்மை மற்றும் சமூக தனிமைப் படுத்தல் காரணமாக, கடந்த 11 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குத் தற்கொலை செய்துகொள்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. குறிப்பாக ஜப்பான் பெண்கள் இந்தப் பிரச்னையால் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் வேலை இல்லாமலும், உரிய வயதடைந்தும் திருமணம் செய்துகொள்ள முடியாமல் தனிமையிலேயே வாழ்ந்து, அதீத மன அழுத்தத்தில் தவித்து வருகிறார்கள். http://athavannews.com/தற்கொலையைத்-தடுக்க-தனித்/ -
By தமிழ் சிறி · Posted
யாழ். நூலகத்தின், மரபை மதித்து... வெறுங்காலுடன் நடந்து வந்த, அமெரிக்கத் துாதுவருக்கு பாராட்டுக்கள். 👏 டிஸ்கி: இதனைப் பார்க்கும், வெள்ளைக்கார டமிழர்களுக்கு... கடுப்பாகத்தான் இருக்கும். அதுக்கு... நாங்கள் ஒண்டும் செய்ய முடியாது. வெறி சொறி. 🤣 -
மலையாளிகள் நடிகர்களை நடிகர்களாக பார்க்கிறாங்க அவ்வளவுதான் . ஐந்து நிமிடத்தில் வாசித்து உள்வாங்கும் ஒரு விடயத்தை 12 நிமிடங்களுக்கு மேல் ஒலிநாடாவில் ஓடவிட்டு அலுப்பு கொடுக்கிறார்கள் .
-
Recommended Posts
Archived
This topic is now archived and is closed to further replies.