“திணை” செப்டம்பர் 2016 இதழில் எனது கவிதைகள்
-
Tell a friend
-
Similar Content
-
By seyon yazhvaendhan
ஆனந்த விகடன் (15.2.17) இதழில் வெளியான எனது "நகரத்தின் புதிய தந்தை" கவிதையை யாழ் களத் தோழர்களுடன் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சி.... யாழ் களத்தோழர்கள் எனக்குத் தரும் உற்சாகத்துக்கு நன்றி!
நகரத்தின் புதிய தந்தை
எல்லாவற்றையும் மாற்றப்போவதாக வாக்களித்து
நாற்காலியைக் கைப்பற்றிய
நகரத்தின் புதிய தந்தைக்கு
அவர் பராமரிக்கவேண்டிய
பிள்ளைகளின் கணக்கு கொடுக்கப்பட்டது.
சாதுவானவர்கள், அடங்காதவர்கள்,
ஊதாரிகள், அயோக்கியர்களென
அனைவரின் புள்ளிவிவரம் அவரிடமிருந்தது.
அடங்காதவர்களை அவர் கலாச்சாரக் காவலர்களாக்கினார்.
ஊதாரிகளுக்கு வெகுமதிகள் கொடுத்தார்.
சாதுவானவர்களுக்கு வேலைகளைப் பகிர்ந்தளித்தார்.
அயோக்கியர்களைத் துணைக்கு வைத்துக்கொண்டார்
நகரம் முன்பைவிட நரகமானதைப் பற்றி
ஒருவரும் வாய்திறக்கவில்லை
-சேயோன் யாழ்வேந்தன்
(ஆனந்த விகடன் 15.2.17)
(எனது பதிவுகளில் படங்களை இணைக்க முடியவில்லை. யாழ் தளத்தின்நெறியாளர் அல்லது தோழர்கள் அதற்கான வழிமுறையைக் கூறவும்)
(அல்லது நான் இணைக்க முயன்ற படத்தை இப்பதிவில்இணைத்துவிடவும்)
-
By seyon yazhvaendhan
இந்த வார ஆனந்த விகடன் (18.1.17) இதழில் தனிப்பக்கத்தில் வெளியாகியுள்ள எனது இரண்டு கவிதைகளை யாழ் களத் தோழர்களுடன் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சி.... யாழ் களத்தோழர்கள் எனக்குத் தரும் உற்சாகத்துக்கு நன்றி!
நள்ளிரவில் சூரியன் உதிக்கும் வீடு
இரண்டு ஷிப்ட் வேலைக்குப் பின்
நள்ளிரவில் வீடு சேர்பவன்
சூரியனை குண்டு பல்புக்குள் உதிக்கவிடுகிறான்.
தன்னை மலடாக்கிய உணவை
இல்லாளுடன் கதை பேசியபடி உண்கிறான்.
ஆடு மாடுகளின் மேவு
ஆத்தா அப்பனின் அன்றைய பிரச்சனைகளை
அலைக்கற்றைவழி விசாரித்து அறிகிறான்.
டிஜிட்டல் இந்தியாவின் வல்லசுரக் கனவோடு
போட்டியிட முடியாமல் பின்தங்கும் கனவோடு
உறங்கப் போகிறான் சூரியனை அணைத்துவிட்டு.
தலைமுறை இடைவேளை
“கோழி கூப்புட நாலுமணிக்கு
நாலு தூத்தல் போட்டுச்சு
மண்வாசமும் வெக்கையும் கிளம்ப
வெளிய வந்து பார்த்தா
கீகாத்து மழையக் கலச்சுடுச்சு”
என்று சொன்ன அப்பத்தாதான்,
இன்று பிற்பகல் நாலுமணிக்கு
விளம்பர இடைவேளையில் வெளியே வந்து
“மழையா பேஞ்சுச்சு?” என்கிறாள்
ஈரவாசல் பார்த்து.
-சேயோன் யாழ்வேந்தன்
(ஆனந்த விகடன் 18.1.17)
(எனது பதிவுகளில் படங்களை இணைக்க முடியவில்லை. யாழ் தளத்தின் நெறியாளர் அல்லது தோழர்கள் அதற்கான வழிமுறையைக் கூறவும்)
(அல்லது வழக்கம்போல் நான் இணைக்க முயன்ற படத்தை இப்பதிவில் இணைத்துவிடவும்)
-
By seyon yazhvaendhan
30.11.16 ஆனந்த விகடன் இதழில் தனிப்பக்கத்தில் வெளியாகியுள்ள எனது "மாநகரத்தின் அகதிகள்" கவிதையை யாழ் களத் தோழர்களுடன் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சி.... யாழ் களத்தோழர்கள் எனக்குத் தரும் உற்சாகத்துக்கு நன்றி!
மாநகரத்தின் அகதிகள்
தேசத்தின் வல்லசுரக் கனவினால்
தம் வாழிடங்களை விட்டுத் துரத்தப்பட்ட
ஒரு மாநகரத்தின் அகதிகள்
அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட
தனித்த பகுதிகளில் வசிக்கிறார்கள்
வாக்குரிமையும் ரேஷன் அட்டையும்கூட
சொந்த நிலத்தில் மட்டுமே அவர்களுக்குண்டு.
அங்குள்ள வங்கிக் கணக்கையும்
அவர்கள் இங்கிருந்தே பராமரிக்கிறார்கள்.
கால்வயிறு அரைவயிற்றுக் கஞ்சியோடு
அங்கே சில கால்நடைகளும் மனிதர்களும்
அதில் ஜீவிக்கிறார்கள்
பண்டிகைகள் நிமித்தம் தம் சொந்தநிலங்களுக்கு
பிதுங்கி வழியும் பேருந்துகளிலும்
ரயில்களின் கழிவறை அருகிலும்
பயணிக்க முடியும் என்பது
இம்மாநகரத்தின் அகதிகளுக்கு
இம்மாபெரும் தேசம் வழங்கியிருக்கும் சகாயம்.
-சேயோன் யாழ்வேந்தன்
(ஆனந்த விகடன் 30.11.16)
(எனது பதிவுகளில் படங்களை இணைக்க முடியவில்லை. யாழ் தளத்தின் நெறியாளர் அல்லது தோழர்கள் அதற்கான வழிமுறையைக் கூறவும்)
(அல்லது வழக்கம்போல் நான் இணைக்க முயன்ற படத்தை இப்பதிவில் இணைத்துவிடவும்)
-
By seyon yazhvaendhan
நவம்பர் மாத கணையாழி இதழில் வெளியாகியுள்ள எனது "ஒருவழிப் போக்குவரத்து" கவிதையை யாழ் களத் தோழர்களுடன் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சி.... யாழ் களத்தோழர்கள் எனக்குத் தரும் உற்சாகத்துக்கு நன்றி!
ஒரு வழிப் போக்குவரத்து
-----------------------------------------------
நடுத்தெருவில் நிற்கும் பிழைப்பு அவருக்கு.
உச்சி வெய்யிலில் புகை தூசுக்கள் இடையில்
ஆயிரம் கவலைகளை மனதின் மூலையில் தள்ளி
நம்மை ஒழுங்குபடுத்திக் கொண்டிருக்கிறார்.
சிவப்பு விளக்கு கண்டல்ல,
சீருடைக் காவலர் சீறுவாரென்றே
விதிகளை மதிக்கப் பழகியிருக்கிறோம் நாம்.
அவருக்குள்ளும் கவிதை இருந்திருக்கும்,
கோடையின் வெப்பத்தில் உருகி ஓடியிருக்கும்.
அவரின் மழைக்கவிதைகள்
பாதாளச் சாக்கடையில் ஓடிக் கலந்திருக்கும்.
கோடையில் ஓர் இளநீரோ தர்பூசணிக்கீற்றோ
இடி மின்னலுக்கு இடையில் நிற்கையில் இதமாக ஒரு தேநீரோ
ஒருநாளும் நாம் அவருக்கு வாங்கிக்கொடுத்ததில்லை.
பரிவும் நேசமும்
ஒருவழிப் போக்குவரத்தாகவே இருக்கும் வாழ்வுக்குத்தான்
நாம் பழக்கப்படுத்தப்பட்டிருக்கிறோம்.
(கள நிர்வாகிகள் இணைக்கப்பட்டுள்ள படத்தை upload செய்து உதவவும்)
-
By seyon yazhvaendhan
2.11.16 ஆனந்த விகடன் தீபாவளிச் சிறப்பிதழில் தனிப்பக்கத்தில் வெளியாகியுள்ள எனது கவிதையை யாழ் களத் தோழர்களுடன் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சி.... யாழ் களத் தோழர்கள் எனக்குத் தரும் உற்சாகத்துக்கு நன்றி!
நானிலம் போற்றும் நீதி
காடு இருந்த இடத்தில்
அமைந்திருக்கும் முல்லை நகரில்
கழனி இருந்த இடத்தில்
வீடுகட்டிக் கொண்டவர்கள்
கால்வாய் இருந்த இடத்தில்
சாலை அமைப்பதை எதிர்த்து
வழக்குத் தொடுத்திருக்கிறார்கள்.
குளம் இருந்த இடத்தில்
அமைந்திருக்கும் உயர்மன்றத்தில்
நீதி இன்னும் நிலுவையில் இருக்கிறது!
-சேயோன் யாழ்வேந்தன்
(ஆனந்த விகடன் 2.11.16)
(எனது பதிவுகளில் படங்களை இணைக்க முடியவில்லை. யாழ் தளத்தின் நெறியாளர் அல்லது தோழர்கள் அதற்கான வழிமுறையைக் கூறவும்)
-
-
Topics
-
1
By nunavilan
தொடங்கப்பட்டது
-
Posts
-
வாழ்த்துக்கள் டொக்டர் வரதராஜா விருதுக்கு தகுதி உடையவரே ...இணைப்பிற்கு நன்றி உடையார்
-
உண்மை .. இந்த அனுபவம் எனக்கும் இருக்கு. இந்த அரியதரம் முன்பெல்லாம் பிடிக்காது ஆனால் இப்ப அதுவும் பிடிக்க ஆரம்பித்து விட்டது.நன்றி கோசன் அரியதரத்தை தவிர மற்ற எல்லாம் செய்வது இலகுதான். செய்து பாருங்கள்..நன்றி கருத்து பகிர்வுக்கு..
-
வாதாடி தோத்து அவரை 4 வருசம் உள்ளுக்கு அனுப்பினதும் இல்லாமல் விளக்கம் வேறு கொடுத்திட்டு இருக்கிறார் 🤣🤣🤣
-
தெரியும் தல... அடுத்த கேள்வி.... சீமான் ஆமைக்கறி சாப்பாட்டுக்கு முன்னரே, பின்னரே ?😜🤪
-
கழுவி ஊத்தும் அளவிற்கு அப்படி என்ன கேவலம் இந்த படத்தில் இருக்குதென்று விளங்கவில்லை ...படத்தில் லவ் சீனோ ,டூயட் பாட்டுக்களோ இல்லை ...வழமையான விஜய் பாணியில் இருந்து வித்தியாசமான வேடத்தில் நடித்திருக்கிறார் / நடிக்க முற்பட்டு இருக்கிறார்🙂 ...படத்தின் நீளம் கூடி விட்டது ...விஜய்க்கு சமமாய் சேதுபதிக்கும் காட்சிகள் கொடுக்கப்பட்டு இருக்கு ..அவரும் நல்லாய் நடித்திருக்கிறார் . என்னைப் பொறுத்த வரை முடிவை கொஞ்சம் மாற்றியிருந்தால் படம் இன்னும் சிறப்பாய் இருந்திருக்கும் ...இதை விட கேவலமான விஜய் படம் எல்லாம் வந்திருக்கு ...அதோடு ஒப்பிடுமையில் இந்த படம் எவ்வளவோ பெட்டர் ...தனக்கு சமமான கரெக்டரில் சேதுபதி நடிக்க விஜய் ஒத்து கொண்டதே ஒரு பெரிய மாற்றம் ...வாழ்த்துக்கள்
-
Recommended Posts
Archived
This topic is now archived and is closed to further replies.