Jump to content

கடவுள் நம்பிக்கை

Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தியாவில் 93% மக்களுக்கு கடவுள் நம்பிக்கை!

ஜனவரி 25, 2007 கீகுகு

டெல்லி: இந்தியர்களிடம் கடவுள் நம்பிக்கை மிக அதிகமாக இருப்பதும், படிக்காதவர்களை விட படித்தவர்கள் மத்தியில்தான் கடவுள் நம்பிக்கை அதிகம் இருப்பதாகவும் கருத்துக் கணிப்பு ஒன்றில் தெரிய வந்துள்ளது.

சிஎன்என் ஐபிஎன் தொலைக்காட்சி, இந்துஸ்தான் டைம்ஸ் மற்றும் சிஎஸ்டிஎஸ் அமைப்பு ஆகியவை இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பில் இது தெரியவந்துள்ளது.

நாடு முழுவதும் 7,670 பேரிடம் கடவுள் நம்பிக்கை குறித்து கேட்கப்பட்டது. இந்த கணிப்பில் தெரிய வந்த முடிவுகள்:

கருத்துக் கணிப்பில் கலந்து கொண்டவர்களில் பெரும்பாலானவர்கள் கடவுள் நம்பிக்கை கொண்டவர்களாக உள்ளனர். அதிலும் படித்தவர்களும், நகரங்களில் வசிப்பவர்களும்தான் அதிக அளவில் கடவுள் நம்பிக்கையோடு இருக்கிறார்கள். பெண்களும், வயதானவர்களும் ஆண்களை விட அதிக அளவில் கடவுளை நம்புகின்றனர்.

இளைஞர்கள் மத்தியில் கடவுள், மதம் குறித்த ஆர்வம் குறைவாகவே உள்ளது. இருப்பினும் இது மிகவும் குறைவாக இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துக் கணிப்பில் கலந்து கொண்டவர்களில் 93 சதவீதம் பேருக்கு கடவுள் நம்பிக்கை உள்ளது.

கோவில்கள், சர்ச்சுகள், மசூதிகளுக்கு தவறாமல் செல்வதாக 64 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.

தினமும் பிரார்த்தனைகளில் தவறாமல் பங்கேற்பதாக 53 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் படித்தவர்கள்.

பேய், பிசாசு, பில்லி சூனியம் உள்ளிட்டவற்றில் நம்பிக்கை இருப்பதாக 46 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர்.

24 சதவீதம் பேருக்கு ஜோசியம் மீது நம்பிக்கை உள்ளது.

தாங்கள் சாராத அடுத்த மதம் சார்ந்த விழாக்களில் பங்கேற்போம் என 68 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர்.

மற்ற மதத்தினரை விட உயர் ஜாதி இந்துக்கள்தான் வெகு விரைவில் நவீன காலத்திற்கேற்ப மாறிக் கொள்கின்றனர் என்பதும் கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது.

கடவுள் நம்பிக்கை மக்களிடையே அதிக அளவில் இருப்பதற்கு இப்போதைய வாழ்க்கை முறையில் நிலவும் மன அழுத்தம், ஓய்வின்றி வேலை பார்ப்பது போன்றவைதான் முக்கிய காரணம் என கருத்துக் கணிப்பை நடத்திய யோகேந்திரா தலைமையிலான ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த கணிப்பில் தெரிய வந்த இன்னொரு இன்ட்ரஸ்டிங் விஷயம், மத சடங்குகளில் ஆதிவாசி மக்களிடையே ஆர்வம் குறைவாக இருப்பது தான். ஆதிவாசிகள் என்றாலே சடங்குகள் தான் என்ற கருத்து நம்மிடையே நிலவி வரும் நிலையில் கருத்துக் கணிப்பு புதிய விஷயத்தை வெளிக் கொண்டு வந்துள்ளது.

- thatstamil.com

Link to comment
Share on other sites

கடவுள் நம்பிக்கை இல்லாமல் பிறகென்ன?

மதங்களின் பெயரைச் சொல்லி அடிபடுவதற்கும், கோயிலுகள் இடிப்பதற்கும், அரசியல் செய்வதற்கும், உண்டியல் குலுக்குவதற்கும் , லட்டு கொடுப்பதற்கும், சுவாமி தரிசனம் கொடுப்பதற்கும் 93% இந்தியர்கள் கடவுள் நம்பிக்கையுடன் இருந்தால் தானே முடியும்?

இதற்கெல்லாம் ஒரு கருத்துக்கணிப்பு தேவைதானா?

ஏமாறுபவர்கள்(93%) இருக்கும்வரை ஏமாற்றிக் கொண்டிருப்பவர்கள்(7%) இருந்துகொண்டுதான் இருப்பார்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐயா ஆதிவாசி இஞ்சை பாரும் உம்மடை பேருக்கு ஆப்பு வைக்கிறார்கள்.இது உமக்கு அவமானம்.உமது கவுரவத்துக்கு விழுக்காடு.நாளைக்கே கொடும்பாவி எரித்து போராட்டம் செய்வோம்.நானும் ஆதரவாக வாறன்.

Link to comment
Share on other sites

கடவுள் நம்பிக்கை இல்லாமல் பிறகென்ன?

மதங்களின் பெயரைச் சொல்லி அடிபடுவதற்கும், கோயிலுகள் இடிப்பதற்கும், அரசியல் செய்வதற்கும், உண்டியல் குலுக்குவதற்கும் , லட்டு கொடுப்பதற்கும், சுவாமி தரிசனம் கொடுப்பதற்கும் 93% இந்தியர்கள் கடவுள் நம்பிக்கையுடன் இருந்தால் தானே முடியும்?

இதற்கெல்லாம் ஒரு கருத்துக்கணிப்பு தேவைதானா?

ஏமாறுபவர்கள்(93%) இருக்கும்வரை ஏமாற்றிக் கொண்டிருப்பவர்கள்(7%) இருந்துகொண்டுதான் இருப்பார்கள்!

ஆம் நண்பரே. கடவுள் இல்லாவிட்டால் கூட வேறு எதையாவது வைத்தாவது அரசியல் செய்து பணம் பார்த்துவிடுவார்கள் இந்தியாவில். அது தான் வருத்தமான விஷயம். எங்கும் அரசியல், எதிலும் அரசியல் - விளையாட்டு, பாதுகாப்பு, கல்வி, திரையுலகம், கடவுள் என்று எதையும் விட்டுவைக்கவில்லை.

ஆனால் என் கருத்து இந்திய மக்கள்தொகைக்கு அவர்கள் எடுத்து கொண்ட sampling ratio தவறு என்பது தான்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.