Jump to content

கனடாத் தமிழ்த் திரைப்படத்துறையில்


Recommended Posts

கனடாத் தமிழ்த் திரைப்படத்துறையில் தற்சமயம் பல திறமை மிக்க இளைஞர்கள் இருப்பதை உணரக்கூடியதாக இருக்கிறது. கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளாக வரும் படங்கள், இசை அல்பங்கள், குறுந்திரைப்படங்கள் இதைச் சுட்டிக்காட்டுகின்றன. இயக்கம், கமரா, எடிட்டிங், இசையமைப்பு என்று பல துறைகளிலும் இவர்களின் ஆக்கங்கள் triple "Wow" நிலைக்கு வந்துவிட்டன. இளைஞர்கள் மத்தியில் இவர்களின் ஆக்கங்கள் சீக்கிரகதியில் சென்றடைந்து கொண்டிருக்கிறது.. அந்த வகையில் சில இளைஞர்களின் பெயர்கள் அடிக்கடி ஆக்கங்களில் காண்கிறோம். அவர்களில் ஒருவர் Pras Lingam . இவருடைய கமரா எடிட்டிங் உடன் வெளிவந்த படங்களைப் பார்த்து வியந்திருக்கிறேன். அல்பங்கள் சிலவற்றிலும் இவரின் திறமை ஆச்சரியப்பட வைத்திருக்கிறது.
ஆர்வம் -
செய்வதைச் சிறப்புடன் செய்யவேண்டும் என்ற விருப்பு -
துணிச்சல் -
அர்ப்பணிப்பு

இவைகள் இவரை உயர்த்திவைத்திருக்கிறது என்று நினைக்கிறேன். இவரை நேரில் கண்டது கிடையாது. திறமையைப் பார்த்து இவரின் ரசிகன் ஆகிவிட்டேன்.

இவருடைய இயக்கத்தில் இரண்டு வித்தியாசமான படங்கள் வரவிருப்பதாக அறிகிறேன்.
"கண்டம்"
"Broken Dreams"
அவருடைய பட trailer இவ்வாரம் வெள்ளிக்கிழமை யோர்க் சினிமாவில் இடம் பெறவிருக்கிறது என்றும் அறிகிறேன்.
அவருக்கு நம் மனமார்ந்த வாழ்த்தினை தெரிவித்துக் கொள்கிறோம்.

 

Tnx : Kris S Pragas from facebook

இவ்... எமது... இளைய... சமுதாயத்துக்கு... அறிந்து... தேடி... உண்மை அறிந்து... பயம்இல்லாமல்... ஆதரவு தாருங்கள். யாழ்இணயநண்பர்களே உங்கள் கருத்துக்களையும் அன்புடனும்.. பண்புடனும் எதிர்பார்க்கிறார்கள்... அவ் இளைஞர்கள் நன்றி.  :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு நன்றி நண்பரே ....! பிராஸ் லிங்கத்துக்கு வாழ்த்துக்கள் ...! 

Link to comment
Share on other sites

  • 4 weeks later...

 

Kandam & Broken Dreams Screening
East London Premiere

Saturday,  December 3rd  @ 4:00PM
Boleyn Cinemas UK
7-11 Barking Rd
East Ham, London
 

Link to comment
Share on other sites

  • 1 month later...

 

எம்மவர் கலைஞர்களின் தயாரிப்பில் உருவான "கண்டம்" திரைப்படம் டென்மார்க்கில் திரையிடப்பட இருக்கிறது.  இப் படத்தினுடைய முன்னோட்டம் நம்பிக்கைக்குரியதாகவும்  சிறப்பாகவும் அமைந்திருக்கிறது. 

எங்கள்  வீட்டுத் தோட்டத்துச் செடிகளுக்கு இன்னொருவர் வந்து தண்ணீர் ஊற்றப்போவதில்லை .
ஆகவே எம்மவர் தரும் நல்ல படைப்புகளை  நாமே ஆதரவளித்துத் தட்டிக்கொடுப்போம்....வாருங்கள் !

 

Facebook இல் இருந்து...

இளங்கோ யோகராஜா  . நன்றி

https://s27.postimg.org/ila4qpz5v/IMG_1476.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

 

15232120_1653905391569047_27858364565309

 

 

15134597_1653906394902280_62663906655163 

 

பிராஸ் லிங்கத்தையும் கண்டம் படத்தின் தயாரிப்பாளரான எனது நண்பரையும் அண்மையில் சந்தித்தேன். ஐரோப்பாவில் படத்தை திரையிடும் வேலைகளில் பிஸியாக இருந்தார்கள். இலண்டனில் திரையிடப்படும்போது நடிகர்களும் அவர்களுடனும் வருகை தரவுள்ளதாகச் சொன்னார்கள். 

Link to comment
Share on other sites

கண்டம் யாழில் தயாரிக்கப்பட்ட திரைப்படம் நாளை ஞாயிறு 18.12.2016 அன்று ஈக்காஸ்ற் திரையரங்கில் 13.30 மணிக்கு காண்பிக்கப்படுகிறது.. சென்று பார்வையிட வேண்டியது நமது கடமை..

கனடாவில் இருந்து டென்மார்க் வாழ் தமிழ் மக்களை நம்பி வந்துள்ளார்கள், தயவு செய்து ஏமாற்றிவிடாதீர்கள்..

குறைந்தபட்சம் கலைஞர்களாவது ஆதரவு கொடுங்கள்.. அன்று நமது சினிமாவிற்கு ஆதரவு வழங்காமல் மூழ்கடித்த குற்றத்தை இனியும் செய்யமாட்டோம்.. தடுப்பது நமது கடமை..

திரையரங்கு போய் ஆதரவு வழங்குவோம்... நாளை எனக்கு வேலை நாள் ஆனாலும் குடும்பத்தை அழைத்தபடி புறப்படுகிறேன்..

நீங்களும் வாருங்கள்.. உங்களை இரு கரம் கூப்பி அழைக்கிறேன்... திரையரங்கில் உங்களை தேடுவேன்.. வணக்கம்..

மற்ற நாட்டு கலைஞனை ஆதரிப்பது நமது கடமை..!

முகநூலில் இருந்து

KS Thurai நன்றி

IMG_1476.jpg

Link to comment
Share on other sites

கண்டம்

விஞ்ஞான புனைக்கதையை களமாக்கி முற்றிலும் யாழ்மண்ணில் படமாக்கிய
கண்டம் என்ற நம்மவர்கள் திரைப்படத்தினை பார்க்கும் சந்தர்ப்பம் கிட்டியது. கண்டம் சிறப்பான தொழிற்நுட்பங்கள் கொண்டு யாழ் வீதிகளில் வலம் வந்து பிரமிக்க வைக்கிறது. ஒரு காட்சியில் இருந்து அடுத்த காட்சிக்கு மாறும் நுட்பம், படம் தொடங்கி முடியும் வரை பரபரப்பைத் தக்க வைத்திருப்பது என பல காட்சிகளில் நெறியாளர் பராஸ் திறமை வெளிப்படுகிறது. தேனுகா, அமீர், யாழ். பிரபல்யமாக நடிகர் சிந்தர், ஜெர்மனி நடிகர்கள் என கச்சிதமாக பொருந்தும் நடிகர்கள் தெரிவு நெறிகையாளரின் திறமைக்கு சான்று. நடிகர் சிந்தருக்கு சபாஸ். காட்சிகளில் பயன்படுத்தப்பட்ட மம்மி, ஜீப்வண்டி படத்திற்கு மெருகூட்டுகிறது. எதிர்கால நம்மவர்கள் சினிமாவுக்கு நல்லதோரு எதிர்பார்ப்பினை தந்த கண்டம் படக்குழுவினர்களுக்கும், தயாரிப்பாளர் வரன் சின்னத்தம்பிக்கும் நன்றிகளும் பாராட்டுக்களும்.

நன்றி

முகநூலில் ரவி கந்தய்யா

 

Link to comment
Share on other sites

"கண்டம்" & "Broken Dreams"

ஆகிய இரு திரைப்படங்கள் 
யாழ்மண்ணில் படமாக்கப்பட்ட படைப்பு
08.01.2017 அன்று காட்சிக்கு 
ஞாயிற்றுக்கிழமை 15:30 மணிக்கு
அனைத்து நண்பர்களையும் உறவினர்களையும் அன்புடன்
உரிமையோடும் அழைக்கிறோம்
மற்றும் உங்கள் நண்பர்களுக்கும்
உறவினருக்கும் தெரிவித்து
ஆதரவுதருமாறு வேண்டுகிறோம்.

இடம்
Elysees Biarritz
22-24 Rue Quentin-Bauchart
75008 Paris 
Métro (1) George V 
அல்லது Métro (1) (2) (6) RER (A) 
Charles de Gaulle Étoile 
நன்றி
     
https://www.facebook.com/eelamboy/posts/10202437852862981


https://www.facebook.com/eelamboy/posts/10202431176176068

https://www.facebook.com/eelamboy/posts/10202427970295923

https://www.facebook.com/eelamboy/posts/10202423381381203

https://www.facebook.com/eelamboy/posts/10202419654888043

https://www.facebook.com/eelamboy/posts/10202381497334128

https://www.facebook.com/eelamboy/posts/10202395170995961

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.