Jump to content

மைசூரு முதல் - ‘81 போயஸ் கார்டன்' வரை... ஜெயலலிதா டைரி குறிப்புகள்!


Recommended Posts

‘என்னைக் கொல்ல சதி நடக்கிறது-கலங்கிய ஜெயலலிதா!’:மைசூரு முதல் - 81, போயஸ் கார்டன் வரை... ஜெயலலிதா டைரி குறிப்புகள்! - 24

 
 

ஜெயலலிதா

Jayalalithaa_12384.jpg

.தி.மு.க-வில், நால்வர் அணி என்றால் யாரைக் குறிப்பிடுவீர்கள்? ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், நத்தம் விசுவநாதன், எடப்பாடி பழனிச்சாமி. இவர்களைத்தானே...? இவர்கள்தானே கட்சியின் துவார பாலகர்களாக...  அதிகாரம் பொருந்தியவர்களாக... கட்சி ஒழுங்கு நடவடிக்கை குழு உறுப்பினர்களாக இருந்தார்கள். இப்போது, அந்த நால்வர் அணியும் இல்லை; அந்த நால்வரில் நடுநாயகமாக இருந்த நத்தம் விசுவநாதன், இப்போது எந்தப் பொறுப்பிலும் இல்லை என்பது வேறு கதை. சரி, விஷயத்துக்கு வருவோம். இதுபோல மூவர் அணி ஜெயலலிதா கட்சியைக் கைப்பற்றி, அனைத்து அதிகாரங்களையும் தனதாக்கிக்கொண்ட போதும் அமைக்கப்பட்டது. ஆனால், இரண்டுக்கும் வித்தியாசம் இருக்கிறது. அது, ஜெயலலிதா அமைத்த அணி அல்ல... அவர்களே அமைத்துக்கொண்ட அணி.  

ஆம், ஜெயலலிதாவிடம் கட்சியைக் கைப்பற்ற வேண்டும் என்று நினைத்த  பண்ருட்டி ராமச்சந்திரன், திருநாவுக்கரசு மற்றும் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ஆகியோர் அமைத்த அணி அது. இந்த மூவரும் வயதிலும், அரசியல் அனுபவத்திலும் ஜெயலலிதாவைவிட மூத்தவர்கள்; அரசியலின் அத்தனை சூட்சமத்தையும் அறிந்தவர்கள்; பழம் தின்று கொட்டை போட்டவர்கள். இவர்களைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கட்சியின் தொண்டர்களை வைத்தே ஓரங்கட்டினார் ஜெயலலிதா. இறுதியில், ஜெயலலிதாவை எதிர்க்க முடியாமல் அந்த மூவரும் ஆளுக்கு ஒரு பக்கமாக அரசியலில் கரை ஒதுங்கினார்கள்.  திருநாவுக்கரசு, காங்கிரஸில் அடைக்கலம் புக... பண்ருட்டி ராமச்சந்திரன் பா.ம.க., தே.மு.தி.க என ஒரு சுற்று அடித்துவிட்டு மீண்டும் அ.தி.மு.க-வில் தஞ்சமாக, எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகனாக இருந்த கே.கே.எஸ்.எஸ்.ஆர்., தி.மு.க-வைத் தழுவிக்கொண்டார்.

 ஹூம். அரசியலை சதுரங்கம் என்பார்கள். ஆனால், அது எவ்வளவு தவறான உவமை? சதுரங்கத்தில் எப்போதும் எந்தச் சிப்பாயும், மந்திரியும் அணி மாறமாட்டார்கள்... தங்கள் ராஜாவுக்கு, ராணிக்கு எதிராகத் திரும்பமாட்டார்கள். ஆனால், இங்கு எப்போது என்ன வேண்டுமானாலும் நிகழும்!

‘கரம் கோத்த அ.தி.மு.க. - காங்கிரஸ்!’

jayalalitha_12367.jpgசரி. சென்ற அத்தியாயத்தில் விட்ட இடத்திலிருந்து தொடர்வோம். எம்.ஜி.ஆருக்கும் ராஜிவ் காந்திக்கும் இருந்த நட்பு, இயல்பாகவே காங்கிரஸையும், அ.தி.மு.க-வையும் கரம்கோக்க வைத்தது. சட்டமன்றத்தில் இரு கட்சிகளும் இணைந்தே செயல்பட்டன. 1989 நாடாளுமன்றத் தேர்தலில், இந்த நட்பு கூட்டணியாக மலர்ந்தது. அ.தி.மு.க-வை கைப்பற்றிய பின் ஜெயலலிதா சந்திக்கும் முதல் தேர்தல். ஒரு பெரும் வெற்றியை அ.தி.மு.க தொண்டர்களுக்குக் காட்டியாக வேண்டும். அப்போதுதான், கட்சி உயிர்ப்புடன் இருக்கும். இதை, ஜெயலலிதா நன்கு உணர்ந்திருந்தார். தமிழ்நாடு முழுவதும் இடைவிடாது பிரசாரம் செய்தார். ஜெயலலிதா, சட்டமன்றத்திலிருந்து கண்ணீருடன் வெளியே வந்தார் அல்லவா...? அது மிகப்பெரிய அனுதாப அலையை உண்டாக்கி இருந்தது. சென்ற இடமெல்லாம் கூட்டம்... அதுவும் குறிப்பாக பெண்கள். 

இப்போது, கட்சிக்குள் ஜெயலலிதாவுடம் மனவருத்தத்தில் இருந்த சில சீனியர்களுக்கு புரியத் தொடங்குகிறது.  எம்.ஜி.ஆருக்குப் பின் அ.தி.மு.க-வில் ஜெயலலிதாவுக்கு மட்டும்தான், கூட்டத்தை ஈர்க்கும் கரிஷ்மா இருக்கிறதென்று; அவரால் மட்டும்தான் எம்.ஜி.ஆர் உருவாக்கி வைத்துச் சென்ற ஓட்டு வங்கியைக் காக்க முடியுமென்று. கூட்டைவிட்டு விலகிச் சென்றவர்கள் மீண்டும் கூடு திரும்பத் தொடங்குகிறார்கள். 

அந்தத் தேர்தலில் ஓர் இடத்தைத் தவிர, மற்ற இடங்களில் காங்கிரஸ் - அ.தி.மு.க கூட்டணிக்கே வெற்றி. ஆம், பிரமாண்ட வெற்றிதான். அந்த ஓர் இடத்தையும் சி.பி.ஐ கைப்பற்றி இருந்தது. தி.மு.க படுதோல்வி. இதைக் கொஞ்சம்கூட கருணாநிதி எதிர்பார்க்கவில்லை. அதுபோல ஜெயலலிதா எதிர்பார்க்காத சம்பவமும் மத்தியில் நிகழ்ந்தது. தமிழ்நாட்டில் அதிக தொகுதிகளை காங்கிரஸ் கைப்பற்றி இருந்தாலும், மத்தியில் ஆட்சி அமைக்கும் அளவுக்கு பெரும்பான்மை இல்லை. ஜனதா தளம் ஆட்சி அமைக்கிறது. கருணாநிதியின் நண்பர் வி.பி.சிங் பிரதமராகிறார். 

 

‘என்னைக் கொல்ல சதி!’

unnamed_13015.jpgநாடாளுமன்றத் தேர்தல் தந்த வெற்றி, காங்கிரஸையும், அ.தி.மு.க-வையும் இன்னும் நெருக்கமாக்குகிறது.  பாண்டிச்சேரி சட்டமன்றத் தேர்தலிலும் இந்தக் கூட்டணி தொடர்கிறது. அது, பிப்ரவரி 24-ம் தேதி அதிகாலை. இந்தக் கூட்டணிக்காகப் பிரசாரம் செய்துவிட்டு, பாண்டிச்சேரியிலிருந்து ஜெயலலிதா காரில் திரும்பிக் கொண்டிருக்கிறார். உடன் சசிகலாவும். அவர்கள் மீனம்பாக்கத்தைக் கடக்கும்போது, அவர்கள் கார் மீது ஒரு லாரி மோதுகிறது. ஜெயலலிதாவுக்கும், சசிகலாவுக்கும் பலத்த காயம். இருவரும் அப்போலோவில் அனுமதிக்கப்படுகிறார்கள். ஜெயலலிதாவை நலம் விசாரிக்க, ராஜிவ் அப்போலோவுக்கு வருகிறார். ஜெயலலிதா அவரிடம், “என்னைக் கொல்ல சதி நடக்கிறது” என்கிறார். பின், அதை ஓர் அறிக்கையாகவும் வெளியிடுகிறார்.  தமிழக அரசியலில் பெரும் புயல் வீசத் தொடங்குகிறது. அந்தப் புயலை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளத் திட்டமிடுகிறார். ஆம், அடுத்த பாய்ச்சலுக்குத் தயாராகிறார் ஜெயலலிதா...!

தமிழகத்தில் இவ்வாறு புயல்கள் வீசிக்கொண்டிருக்க... மத்தியிலும் சீதோஷ்ண நிலை சரியில்லை. ஆம், மண்டல் கமிஷன் அறிக்கை, அத்வானி ரதயாத்திரை என மத்தியில் சூழல் நிலையற்றதாக இருக்கிறது. வி.பி.சிங் அரசு கலைக்கப்படுகிறது. காங்கிரஸ் ஆதரவுடன் சந்திரசேகர் ஆட்சி அமைக்கிறார். 

நாடாளுமன்ற படுதோல்வியின்போதுகூட அதிகம் கவலைகொள்ளாத கருணாநிதிக்கு, இப்போது கவலை ரேகை கொஞ்சம் கொஞ்சமாகப் படர்கிறது. காங்கிரஸ் ஆதரவுடன் மத்தியில் ஓர் ஆட்சி... அது நிச்சயம் தனக்கு எதிராகத்தான் இருக்கும் என்பதை நம்புகிறார். அவர் நம்பிக்கை வீண்போகவில்லை. ஆம். மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் உறவு சுமுகமாக இல்லை. 

தமிழகத்தின் பெரும்பாலான கட்சிகள், ஈழ விடுதலைப் போராட்டத்தை ஆதரித்து வந்த காலம் அது. அந்தச் சமயத்தில், இலங்கையிலிருந்து சர்வசாதாரணமாகப் போராளிகள் வந்து சென்றுகொண்டிருந்தனர். தமிழகத்தில் அவர்களின் நடமாட்டம் அதிகமாகிறது. அது மாதிரியான சமயத்தில் காங்கிரஸே யோசிக்காத ஒரு விஷயத்தை ஜெயலலிதா செய்கிறார். போராளிகளின் ஊடுருவலைத் தடுப்பதில், கருணாநிதி அரசுக்குக் கொஞ்சமும் அக்கறையில்லை என்று ஒரு பெரிய புகார் பட்டியலை பிரதமரிடம் கொடுக்கிறார். எம்.ஜி.ஆருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இருந்த நெருக்கத்தைப் பற்றியெல்லாம் அவர் கவலைகொள்ளவில்லை. ஜெயலலிதாவின் நோக்கம், இதைக் காரணமாகவைத்து கருணாநிதி அரசைக் கலைப்பது. புகார் கொடுத்ததோடு நிற்கவில்லை... தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு கெட்டுவிட்டது என்று தினம் ஓர் அறிக்கைவிடுகிறார். ராஜிவ் காந்தி மூலமாக பிரதமருக்கு அழுத்தம் தருகிறார். 

இறுதியில், ஜெயலலிதா வெற்றி பெறுகிறார். ஆம், கருணாநிதி ஆட்சி கலைக்கப்படுகிறது. 12 ஆண்டுகள் காத்திருப்புக்குப் பின் ஆட்சிக்கு வந்தவர், இரண்டே ஆண்டுகளில் ஆட்சியை இழக்கிறார். தமிழகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலுக்கு வருகிறது.

(தொடரும்)

http://www.vikatan.com/news/coverstory/72455-i-am-having-a-life-threat--from-mysuru-to-81-poes-garden-travel-story-of-jayalalithaa--episode-24.art

Link to comment
Share on other sites

‘முதல்வர் ஜெயலலிதா காலில் விழுந்த முதல் நபர்’ - :மைசூரு முதல் - 81, போயஸ் கார்டன் வரை... ஜெயலலிதா டைரி குறிப்புகள்! - 25

 

Jayalalithaa%2025_15147.jpg

Jayalalithaa%2025%20cover_09221.jpg

எம்.ஜி.ஆர் இறந்த பின், ஜெயலலிதா அ.தி.மு.க-வை கைப்பற்றியிருந்த நேரம். அந்தச் சமயத்தில், ஒரு ஆங்கில இதழ் அவரைப் பேட்டி காண்கிறது. “தமிழகத்தில் சில ஆண்டுகளாக சினிமா சார்ந்த அரசியல் இருப்பதாக ஒரு பிம்பம் இருக்கிறது. அது குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? நீங்களும் திரைத்துறையிலிருந்து வந்து இருக்கிறீர்கள்?” என்று கேள்வி கேட்கிறார். அதற்கு ஜெயலலிதா கொஞ்சம் கோபமாக, “மக்கள் என்னை இன்னும் நடிகையாகக் கருதுவதை நீங்கள் பார்த்தீர்களா? நான் அரசியலில் வெகு காலமாக இருக்கிறேன். மக்கள் என்னை அரசியல்வாதியாகத்தான் பார்க்கிறார்கள். யாரும் என்னை நடிகையாக நினைவில் வைத்துக் கொள்ளவில்லை. மக்கள் என்னை அவர்களுடைய அம்மாவாக, அக்காவாக, மகளாகத்தான் நினைக்கிறார்கள். நீங்கள்தான் வேண்டுமென்றே... இன்னும் என்னை நடிகையாக நினைவில் வைத்திருக்கிறீர்கள்” என்றார். 

ஆம், உண்மைதான். சினிமாவைத் தாண்டி ஒரு பிம்பம் அவருக்கு இருந்தது. அதற்காக அவரும் கடுமையாக உழைத்தார். மேடைப் பேச்சுகள், புள்ளி விபரங்கள் எல்லாவற்றையும் கடந்து, அரசியலுக்கு ஏற்றவாறு தன்னை முழுவதுமாகத்  தகவமைத்துக் கொண்டார்.  மக்கள் கூடுவார்கள் என்பதற்காக மட்டுமே அவரை, கூட்டங்களுக்கு அனுப்பவில்லை எம்.ஜி.ஆர். விபரங்களுடன் கூடிய ஜெயலலிதாவின் பேச்சும் அதற்கொரு காரணம். எம்.ஜி.ஆருக்குப் பின் முழுவதுமாகக் கட்சியைக் கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கத்துடன் தொடக்கத்திலிருந்தே காய்களை நகர்த்தினாரா? என்று தெரியாது. ஆனால், அவர் அ.தி.மு.க-வில் சேர்ந்ததிலிருந்தே அரசியலை சாதாரணமாக எடுத்துக் கொள்ளவில்லை. பெரிய பொறுப்புகளும், வாய்ப்புகளும் வேண்டுமானால் அவருக்கு எளிதாக வந்திருக்கலாம். ஆனால், அதற்கு ஏற்றவாறு  தன்னை தகுதிப்படுத்திக்கொண்டார். 

‘மீண்டும் தேர்தல், மீண்டும் பிரசாரம்’

‘தி.மு.க ஆட்சி கலைக்கப்பட்டுவிட்டது; சென்ற அத்தியாயத்தை அங்குதானே முடித்திருந்தோம்.  சரி வாருங்கள்... அங்கிருந்து தொடர்வோம்...

Jaya%20-%20Rajiv_03402.jpgஆட்சி கலைக்கப்பட்ட சில மாதங்களில் அடுத்த தேர்தல் அறிவிக்கப்படுகிறது. ஆட்சி கலைக்கப்பட்டாலும், தி.மு.க-வினர் ஒருவித உற்சாகத்தில்தான் இருந்தனர். “தி.மு.க ஆட்சி கலைக்கப்பட்டுவிட்டது. இது அராஜகம். இதனால் நமக்கு ஆதரவாக மிகப் பெரிய அனுதாப அலை வீசும். நாம் சுலபமாக ஆட்சியைக் கைப்பற்றிவிடலாம்” என்று தி.மு.க-வினர் நினைத்தனர். ஆனால், ஜெயலலிதா அது குறித்தெல்லாம் கவலை கொள்ளவில்லை. அவரின் எண்ணம் வேறுவிதமாக இருந்தது,  “வாய்ப்புக்காக ஐந்து ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் என்று நினைத்தோம். ஆனால், இரண்டு ஆண்டுகளிலேயே அந்த வாய்ப்பு நமக்கு கிடைத்திருக்கிறது. இதனை மிகச் சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.” என்று நினைத்தார். அதற்காகக் காய்களை மிகச் சரியாக நகர்த்தினார்.  தனக்கு அடங்கி நடக்கும் வேட்பாளர்களாகப் பார்த்து தேர்வு செய்தார். நிறையப் புதுமுகங்களுக்கு வாய்ப்பளித்தார்.  

1991 ஏப்ரல் 21-ல் ஜெயலலிதாவின் தேர்தல் பிரசாரம் தொடங்கியது. செங்கல்பட்டில் பிரசாரத்தைத் தொடங்கி, தமிழகமெங்கும் சுற்றி சென்னையில் பிரசாரத்தை முடிப்பதாகத் திட்டம். இப்போது மாதிரி ஆகாய மார்க்கமாக, ஹெலிகாப்டரில்  பறந்து பறந்து எல்லாம் பிரசாரம் இல்லை. முழுக்க முழுக்க வேனில் தான். செங்கல்பட்டில் எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு பிரசாரத்தைத் தொடங்கினார். அவர் வேனிலிருந்து பிரசாரம் செய்ய, வேனுக்கு அருகே ஒரு ஸ்டூல் போடப்பட்டது. அதில் வேட்பாளர்கள் நின்று கொண்டார்கள். இப்படியாக அவர்  பிரசாரம் ஆரம்பமானது.

வழக்கம்போல் அப்போதும் காங்கிரஸில் கோஷ்டி பூசல்... வேட்பாளர்கள் அறிவிக்கப்படாமல் இருந்தார்கள். அது குறித்தெல்லாம் அவர் கவலைப்படவில்லை. 'கைச் சின்னத்துக்கு வாக்கு அளியுங்கள்' என்று வேட்பாளர் இல்லாமலேயே பிரசாரம் செய்தார்.  அனைத்துத் தொகுதிகளுக்கும் சென்றார். மற்ற வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்க வேண்டி இருந்ததால், தான் போட்டியிட்ட பர்கூருக்கு மட்டும் அவரால் செல்ல முடியவில்லை. அது குறித்து அவர் கவலை கொள்ளவும் இல்லை. மக்கள் தன்னைக் கைவிடமாட்டார்கள் என்று நம்பினார். 

1991 மே 21, இரவு பத்து மணிக்கு மேல் இருக்கும். தர்மபுரி சுற்றுவட்டாரத்தில் பிரசாரத்தை முடித்துவிட்டு, விருந்தினர் மாளிகைக்கு ஓய்வெடுக்க வந்தார். பிரசாரத்தில் மக்கள் தனக்கு அளித்த வரவேற்பு, அடுத்தக் கட்ட நகர்வு என நிர்வாகிகளுடன் உரையாடிக் கொண்டிருந்தார். அப்போதுதான் அந்த செய்தி அவருக்கு வந்து சேர்கிறது.  ஒரு நிமிஷம் உறைந்தே போனார். அதிர்ச்சியில்  உறைந்த வார்த்தைகளை உயிர்ப்பித்து மீண்டும் கேட்கிறார். மீண்டும் சொல்லப்படுகிறது “ஸ்ரீபெரும்புதூரில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் ராஜீவ் காந்தி கொல்லப்பட்டுவிட்டார்” 

“ஜெயலலிதா என்கிற நான்...”

ஜெயலலிதாஆட்சியைக் கலைத்ததால், அனுதாபம் இருக்கும்; சுலபமாக வென்றுவிடலாம் என்று தொடக்கத்தில் தி.மு.க-வினர் நினைத்தனர். ஆனால், காட்சி மாறியது ராஜீவ் மரணம், அளப்பரிய அளவில், தமிழகத்தில் அனுதாப அலையை உண்டாக்கி இருந்தது. அ.தி.மு.க - காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றது. மாபெரும் வெற்றி. தி.மு.க கூட்டணிக்கு வெறும் 7 இடங்கள்தான். அதிலும் தி.மு.க 2 தொகுதிகளில்தான் வெற்றி பெற்று இருந்தது. அ.தி.மு.க-வுக்கு 225 தொகுதிகள். இது ஜெயலலிதாவே எதிர்பார்க்காத வெற்றி.  தமிழகத்தின் இளம் முதல்வராக சேலைக்கு மேல் ஒரு அங்கி அணிந்து, 1991, ஜூலை 24-ம் தேதி, சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் பதவியேற்கிறார். அவருக்கு ஆளுநர் பீஷ்ம நாராயண் சிங் பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.  அந்தக் காலக்கட்டத்தில் திராவிட கட்சிகளைச் சேர்ந்தவர்கள் பதவியேற்கும்போது,  ‘உளமாற’ உறுதி கூறித்தான் பதவியேற்பார்கள். ஆனால், ஜெயலலிதா ஆண்டவனின் பெயரால் உறுதிமொழி எடுத்தார்.  

பதவிப் பிரமாணமெல்லாம் முடிந்து, அவர் சென்னைப் பல்கலைக்கழக வளாகத்திலிருந்து கிளம்பத் தயாரானபோது... சட்டமன்றத்துக்கு புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இளைஞர் ஒருவர் ஜெயலலிதாவின் கால்களில் விழுகிறார். அவர் விழுந்த மறுகணமே வரிசையாக மற்ற அமைச்சர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் தரையில் சாஷ்டாங்கமாக சரிகிறார்கள். தமிழக அரசியலில் ஒரு புது கலாசாரத்தை ஏற்படுத்திய அந்த இளைஞர்,  வேறு யாருமில்லை... ஜெயலலிதா பிரசாரத்தின் ஜி.பி.எஸ்-ஸாக இருந்து, அமைச்சர் பொறுப்பு வகித்து, இப்போது கட்சியிலிருந்து கட்டம்கட்டப்பட்டு வைத்திருக்கும், ‘செங்கோட்டையன்’தான் அவர்!

(தொடரும்)

http://www.vikatan.com/news/coverstory/72536-man-who-first-falls-on-cm-jaya-feet---from-mysuru-to-81-poes-garden-travel-story-of-jayalalithaa--episode-25.art

Link to comment
Share on other sites

‘சபாவான சட்டமன்றமும், மகாமகக் குளமும்!’ - மைசூரு முதல் - 81, போயஸ் கார்டன் வரை... ஜெயலலிதா டைரி குறிப்புகள்! - 26

 
 

Episode%2026_10265.jpg

ஜெயலலிதா

நான் பதவியை, செல்வத்தை விரும்புபவள் அல்ல. பதவியை அடைய நான் திருட்டுத்தனமாக எதுவும் செய்யமாட்டேன். ஆனால், அதே நேரம் என்னை நோக்கி பொறுப்பும், கடமையும் வந்தால், நான் பின்வாங்கமாட்டேன். அதை என் தோள்களில் சுமப்பேன் - இது ஜெயலலிதா 1988-ம் ஆண்டு, ஜனவரி மாதம் சொன்னது. இந்த வார்த்தைகளின்படியே அவர் முதன்முதலாக முதல்வராகப் பொறுப்பேற்றபோது நின்றிருப்பாரானால், நிச்சயம் அவர் பல சங்கடங்களைச் சந்தித்து இருக்கமாட்டார்.  காந்தி சொல்வார், “மனிதர்களில் மிகப் பெரியவர்கள் மிகச் சாதாரணமான நிலையில் தன்னை வைத்துக்கொள்வதன்மூலம் மிகச் சிறந்தவர்களாக நீடிக்கிறார்கள்” என்பார். சத்தியமான வார்த்தைகள்தானே...? ஒருவனிடம் கட்டுக்கடங்காத அதிகாரம் குவிந்துக்கிடக்கும்போது, அதை அவன் எவ்வாறு பயன்படுத்துகிறான் என்பதை வைத்துத்தான் அவன் மதிப்பிடப்படுகிறான். ஜெயலலிதாவின் முதல் ஐந்து ஆண்டுகால ஆட்சியை அவ்வாறாக மதிப்பிட்டால், நிச்சயம் அவர் மிக மோசமான மதிப்பெண்களைத்தான் எடுப்பார்.  

ஆம், 1991 தேர்தலில் அ.தி.மு.க அடைந்த இமாலய வெற்றியை தன் வெற்றியாகப் பார்த்தார்... தன் வெற்றியாக மட்டுமே பார்த்தார். இப்போது இது அவரின் வாய்ப்பு... யார் யார் தன்னைக் கிண்டல் செய்தார்கள்... யார் யார் தன்னை அவமானப்படுத்தினார்கள்... யார் யார் தன் இருப்பே இருக்கக் கூடாது என்று விரும்பினார்கள்...? அவர்கள் அனைவரையும் தன்  காலில் விழவைத்தார். தன்னை நிந்தித்தவர்களை, துதி பாடவைத்தார். கொஞ்சம் கொஞ்சமா அ.தி.மு.க-வில் உள்ள  ‘அ’ வை மறக்கும்படி செய்துவிட்டு...
ஜெ.தி.மு.க-வாக்கினார். மறக்கமுடியாமல் கஷ்டப்பட்டவர்களைக் கட்சியில் இருந்து நீக்கினார். இது அவர் கட்சியுடன் நின்றிருக்குமாயின், நிச்சயம் யாருக்கும் எந்தப் பிரச்னையும் இருந்து இருக்காது. ஆனால், இது எல்லை மீறியது... ஆட்சி அதிகாரத்திலும் தலைகாட்டியது. தமிழக அரசு...  ‘ஜெ’ அரசாக மாறியது. அப்படியானால், அவரது முதல் பதவிக்காலத்தில் நன்மைகள் எதையுமே தமிழகத்துக்குச் செய்யவில்லையா...? செய்தார்... நிச்சயம் செய்தார். 

 ‘புகழ்பாடும் சபாவான சட்டமன்றம்!’

Jayalalithaa%200026_04420.jpg

ஜெயலலிதாவை, பெண்கள் அதிகம் விரும்பினார்கள். பொதுவாக நமக்கென்று ஆழ்மனதில் சில விருப்பங்கள் இருக்கும்தானே ... அநியாயத்தைத் தட்டிக் கேட்க வேண்டும்... தீயவர்களை அடிக்க வேண்டுமென்று. ஆனால், பயம் நம்மைத் தடுக்கும். நம்மால் செய்யமுடியாததையெல்லாம் திரையில் செய்பவர்களை நாம், நன்நாயகர்களாக விரித்துக்கொள்கிறோம். பெண்களுக்கு அதுபோலத்தான் ஜெயலலிதா இருந்தார். ஆண்வயப்பட்ட சமூகத்தில் இருக்கும் பெண்கள், தங்களது ஆழ்மனது ஆசைகளின் உருவகமாகத்தான் ஜெயலலிதாவைக் கருதினார்கள். பெண்கள்தான், தன் பலம் என்பதை ஜெயலலிதாவும்  உணர்ந்தே இருந்தார். அதனால்தான்  முதல்வரானதும் முதலில் மலிவு விலை மதுவை ஒழிக்கும் திட்டத்தில் கையெழுத்திட்டார். அதனுடன் நிறகவில்லை,  நிர்வாகரீதியாக பல சீர்திருத்தங்களைச் செய்தார். மாவட்ட எல்லைகளை மாற்றியமைத்து, புதுப்புது மாவட்டங்களை உருவாக்கினார். 

Jayalalithaa%20026_04560.jpgஜெயலலிதா இவ்வளவு நுட்பமாகச் செயல்படுவார் என்று முதலில் அதிகாரிகள் எதிர்பார்க்கவேயில்லை. “என்ன ராஜ்ய சபா உறுப்பினராக இருந்திருக்கிறார்... அவ்வளவுதானே...? டெல்லி சூழல் வேறு, தமிழச் சூழல் வேறு... இங்கு இவர் என்ன செய்துவிடப்போகிறார்...?” என்பதாகத்தான் முதலில் அவர்கள் எண்ணம் இருந்தது. ஆனால், அவர்களுக்கு தங்கள் எண்ணம் எவ்வளவு தவறு என்பது சில தினங்களிலேயே புரிந்தது. ஆம், அவருடைய பார்வை, அவருடைய ஆங்கிலப் புலமை... பிரச்னைகளைக் கையாள்வதில் அவரின் மதிநுட்பம்... இது எல்லாம் அவர்களை வியக்கவைத்தது. பணக்காரச்சூழலில் பிறந்து, கான்வென்ட்டில் படித்ததால் என்னவோ... ஜெயலலிதாவும் எப்போதும் அமைச்சர்களைவிட, அதிகாரிகளுக்குத்தான் அதிக இடம்கொடுத்தார். 

ஜெயலலிதா அரசின் முதல் பட்ஜெட் கூட்டத் தொடர். அவர், சட்டமன்றத்துக்கு வருவதே விழாபோல மாறியது. அவரை வரவேற்க கோட்டையில் ஏகப்பட்ட ஏற்பாடுகள்... கட்சிக்காரர்கள், எம்.எல்.ஏ-க்கள், அமைச்சர்கள் மட்டும் அல்ல... அப்போது சபாநாயகராக இருந்த சேடப்பட்டி முத்தையாவே ஜெயலலிதாவுக்காக சட்டமன்ற வாசலில் காத்திருந்தார். அவர் வந்ததும்,மிகப் பணிவாக அவரைச் சட்டமன்றத்துக்குள் அழைத்துச் சென்றார். சட்டமன்றம் கொஞ்சம் கொஞ்சமாக ஜெயலலிதா புகழ்பாடும் சபாவாக மாற்றப்பட்டது.  ஒரு நிகழ்வின்போது, ஜெயலலிதா சபாநாயகர் இருக்கையில் அமர்ந்ததாகவும், சட்டமன்றத்துக்கே தேர்ந்தெடுக்கப்படாத சசிகலா, துணை சபாநாயகர் இருக்கையில் அமர்ந்ததாகவும் சர்ச்சை எழுந்தது. 

தமிழக அரசியல் இவ்வாறாகச் சென்று கொண்டிருக்கும்போதுதான், தமிழகத்தையே புரட்டிப்போட்ட அந்த  நிகழ்வு நிகழ்ந்தது. 

‘அமங்கலமான தொடக்கம்!’

ஜெயலலிதாவுக்கு அவரின் ஜோதிடர்கள் கணித்துக் கொடுத்து இருந்தார்கள்... “நீங்கள் மகாமக குளத்தில் குளித்தீர்கள் என்றால், உங்களதுJayalalithaa%201726_04191.jpg எதிர்காலம் சுபிட்சமாக இருக்கும்” என்று. பிப்ரவரி 18, 1992. ஜெயலலிதா கும்பகோணம் வருகிறார். அந்த நகரமே அல்லோலப்பட்டது. எப்போதுமே மகாமகம் என்றால், அந்தச் சிறு நகரத்தில் லட்சக்கணக்கில் மக்கள் திரள்வார்கள். இதில் முதல்வரும் வருகிறார் என்றால் கேட்க வேண்டுமா என்ன...? கட்சிக்காரர்கள், பக்தர்கள், காவலர்கள் என அந்த ஊரே அல்லோலப்பட்டது.  அவருக்காக மேற்குக்கரையில் குண்டு துளைக்காத கண்ணாடியிலான குளியல் அறை தயாராக இருந்தது. அங்கு ஜெயலலிதா அமர, சசிகலா தண்ணீர் ஊற்றிக்கொண்டிருக்க... இன்னொரு பக்கம் கூட்டம் முந்தியடித்துக் கொண்டிருந்தது. அந்தச் சமயத்தில் வடக்குக்கரையில் இருந்த தர்மசாலாவின் தடுப்புச் சுவர் உடைந்து விழுந்தது. 
சரியாக அந்தச் சமயத்தில் ஜெயலலிதாவும் நீராடிவிட்டுக் கிளம்பினார். அவருடன் பெரும்கூட்டம் கிளம்பவே நெரிசல் மேலும் மேலும் அதிகமாகியது. ஜெயலலிதா ஏதோ அசாம்பாவிதம் நடந்துவிட்டது என்பதை கணித்தார். ஆனால், இது இவ்வளவு மோசமாக இருக்கும் என்று அவர் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. ஆம், 48 பக்தர்கள் இறந்து இருந்தார்கள். 

சுபிட்சம் வேண்டித்தான் அவர் மகாமக குளத்துக்கு வந்தார். ஆனால், கெடுவாய்ப்பாக, அதுவே அவருக்கு அமங்கலமான தொடக்கமாக மாறியது. 

(தொடரும்)

http://www.vikatan.com/news/coverstory/72645-assembly-and-mahamaha-tank--from-mysuru-to-81-poes-garden-travel-story-of-jayalalithaa--episode-26.art

Link to comment
Share on other sites

‘ஆடம்பரத் திருமணமும்... தேர்தலில் படுதோல்வியும்!’ - மைசூரு முதல் - 81, போயஸ் கார்டன் வரை... ஜெயலலிதா டைரி குறிப்புகள்! - 27

 
 

Epi%2027_08145.jpg

ஜெயலலிதா

‘எளிமை, துணிவு, நேர்மை, உழைப்பு போன்ற பண்புகளை, மற்றவர்களிடம் எதிர்பார்ப்பதைவிட மிகக் கூடுதலான அளவில் அமைச்சர்களிடமிருந்து மக்கள் எதிர்பார்க்கிறார்கள்’’ என்றார் காந்தி. இதைச் சொன்னது இந்தியாவுக்குச் சுதந்திரம் கிடைத்த அடுத்த ஆண்டு. இதை, அவர் சொல்லி ஏறத்தாழ ஆறு தசாப்தங்கள் ஆகின்றன. மக்களின் எதிர்பார்ப்பும் அப்படியேதான் இருக்கிறது. ஆனால், அதை நிறைவேற்றத்தான் அமைச்சர்கள் யாரும் இல்லை. நம்மை நாமே நொந்துகொள்ள வேண்டியதுதான். சரி... நாம் விஷயத்துக்கு வருவோம். 1996-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க படுதோல்வி அடைந்தது. ஏன், அந்தத் தேர்தலில் பர்கூரில் ஜெயலலிதாவே... சுகவனத்திடம் தோற்றுப்போனார். அந்தத் தோல்விக்குப்பின் ஜெயலலிதா, ‘இந்தியா டுடே’வுக்கு அளித்த பேட்டியில் இவ்வாறாகக் கூறினார், “ஆம். நான் என் வாழ்வில் செய்த மிகப்பெரிய தவறு... சுதாகரன் திருமணத்தை அவ்வளவு ஆடம்பரமாக நடத்தியது.” முதன்முதலில் பொதுவெளியில் ஜெயலலிதாவே ஒப்புக்கொண்ட தவறு, அது. அப்படியென்றால், அந்தத் திருமணம் எவ்வளவு ஆடம்பரமாக நடந்திருக்க வேண்டும்? 

‘ஆடம்பரத் திருமணம்!’ 

http---photolibrary.vikatan.com-images-g

திடீரென ஒருநாள் ஜெயலலிதா, 28 வயது சுதாகரனை தன் வளர்ப்பு மகனாகத் தத்தெடுத்தார். சுதாகரன் வேறு யாரும் இல்லை... ஜெயலலிதாவின் உடன்பிறவா சகோதரி (ஆம், ஜெயலலிதா அப்படித்தான் குறிப்பிட்டார்) சசிகலாவின் அக்கா மகன்தான். தத்தெடுத்த சில நாட்களிலேயே அவருக்கு மிக ஆடம்பரமாகத் திருமணம் நடத்தினார். மணப்பெண், மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேத்தி.

இப்போது நாம் எல்லாம் ஜனார்த்தன ரெட்டி மகள் திருமணத்தைப் பற்றிப் பெரிதாகப் பேசுகிறோம்தானே... ரூ.6 கோடி செலவில் எல்.சி.டி வடிவில் திருமண அழைப்பிதழ் அச்சடிக்கப்பட்டது; 30 ஆயிரம் விருந்தினர்கள் அழைக்கப்பட்டார்கள்; 36 ஏக்கர் பரப்பளவில் விஜயநகரப் பேரரசின் அரண்மனை போன்ற பிரமாண்ட செட் போடப்பட்டது; ஒரு கோடி ரூபாய் மதிப்பில் ஆடைகள் எடுக்கப்பட்டது என்று... இதேபோல்தான் 1995-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற இந்தத் திருமணம் குறித்துப் பெரிதாகப் பேசப்பட்டது. 

70,000 சதுர அடி பரப்பளவில் திரைப்பட கலை இயக்குநர் தோட்டாதரணியைக் கொண்டு பந்தல் போடப்பட்டது; ஒரே சமயத்தில், அங்கு 25,000 பேர் அமர்ந்து உணவு அருந்துவதற்கு ஏற்றாற்போல் அரங்கு அமைக்கப்பட்டது. வெளியூர்களிலிருந்து வரும் விருந்தினர்கள் தங்குவதற்காக சென்னையில் மட்டும் வெவ்வேறு ஹோட்டல்களில் 1,000 அறைகள் எடுக்கப்பட்டன... திருமணத்துக்கு வந்தவர்களுக்குக் கொடுப்பதற்காக 2 லட்சம் தாம்பூலப் பைகள் வாங்கப்பட்டன. இவை மட்டும் அல்ல... ஏ.ஆர்.ரகுமானின் இசைக்கச்சேரி, வாணவேடிக்கை என தமிழகமே அதுவரை கண்டிராத திருமணம். இல்லை... இல்லை... காண விரும்பாத திருமணம். 

திருமண ஊர்வலத்தில் ஜெயலலிதாவும், சசிகலாவும் ஊர்வல வண்டிக்கு முன்னால், ஒட்டியாணம், வளையல்கள் என தலை முதல் கால்வரை நகைகளால் அலங்கரிக்கப்பட்டுச் செல்ல... இவர்களுக்கு முன்னால், தேவாரம் பாதுகாப்பு அளித்தபடியே சென்றுகொண்டிருந்தார். ஆம், மொத்த அரசு நிர்வாகமும், இந்தத் திருமணத்துக்காக முடக்கிவிடப்பட்டிருந்தது. ரோட்டோர மின்சாரக் கம்பத்திலிருந்து மின்சாரம் எடுக்கப்பட்டு மின்விளக்குகளுக்குப் பாய்ச்சப்பட்டது. இன்னொரு பக்கம் அதே நன்னாளில் மின்சாரம் இல்லாமல், சென்னையின் சில பகுதிகள் இருளில் மூழ்கி இருந்தன. 

அந்தத் திருமணத்தை, சசிகலா குடும்பத்தால் நியமிக்கப்பட்ட புகைப்படக்காரர்கள் மட்டும் பதிவுசெய்யவில்லை. தி.மு.க புகைப்படக்காரர்களும், திருமணப்பொழுதின் ஒவ்வொரு கணத்தையும் படம்பிடித்துக் கொண்டிருந்தார்கள். ஆம், அதில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள்தான், தி.மு.க-வின் பிரசார ஆயுதமானது. 

‘என் சம்பந்தம் இல்லாமல் என்னைத் தத்தெடுத்தார்கள்!’

http---photolibrary.vikatan.com-images-g

1996-ம் ஆண்டு தேர்தலில், அந்தத் திருமணத்தில் எடுக்கப்பட்ட படங்களைக் கொண்டு தி.மு.க-வின் சுவரொட்டி வடிவமைக்கப்பட்டது. ஒரு ரூபாய் சம்பளம் வாங்குபவருக்கு... ஒரு கோடி ரூபாய் செலவில் திருமணம் நடத்த எங்கிருந்து பணம் வந்தது என்று அந்தச் சுவரொட்டிகள் கேள்வி எழுப்பின? அது, உண்மையில் மக்கள் மத்தியில் தாக்கத்தை உணடாக்கியது. அது மட்டும் அல்ல... அந்தத் தேர்தலில் தி.மு.க. - த.மா.கா அமைத்த கூட்டணி; அதற்கு ஆதரவாக நடிகர் ரஜினிகாந்த் குரல்கொடுத்தது என எல்லாம் சேர்த்து... அந்தத் தேர்தலில் அ.தி.மு.க-வை அதலபாதாளத்தில் தள்ளியது. இந்தக் காலகட்டத்தில்தான் ஜெயலலிதா காவிரிப் பிரச்னைக்காக மூன்று நாட்கள் உண்ணாவிரதம் இருந்தார். ஆனால், இது எதுவும் முதன்மை பெறவில்லை. அந்தத் திருமணம், அவர் எடுத்த சில நல்ல நடவடிக்கைளையும் பின்னுக்குத் தள்ளியது. 1991 தேர்தலில், பர்கூர் தொகுதிக்கு பிரசாரம் செல்லாமலேயே வென்ற ஜெயலலிதா.. 1996 தேர்தலில் அதே தொகுதில் 8,366 வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க வேட்பாளரிடம் தோற்றார். 173 தொகுதிகளில் வென்று தி.மு.க., தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது. 

அ.தி.மு.க தோற்றது, தி.மு.க வென்றதுகூடச் செய்தியல்ல... சில ஆண்டுகளுக்குப்பின் ஜெயலலிதா யாரைத் தத்தெடுத்தாரோ... அதே சுதாகரனை கஞ்சா வழக்கில் கைதுசெய்தார் ஜெயலலிதா. ஏறத்தாழ 10 மாதங்கள் சிறையில் வைத்தார். சுதாகரனும், “என் சம்பந்தம் இல்லாமல் என்னைத் தத்தெடுத்துவிட்டார்கள்...” என்று ஆங்கில இதழ்களுக்கு பேட்டி கொடுத்துக்கொண்டிருந்தார். 

இன்று, அதே சுதாகரன்தான்... அப்போலோவில் ஜெயலலிதாவைப் பார்க்க தன் சொந்த அத்தையால் அனுமதி மறுக்கப்பட்டு வாசலில் நின்றுகொண்டிருக்கிறார்.

(தொடரும்)

http://www.vikatan.com/news/coverstory/72787-big-fat-wedding-and-great-defeat---from-mysuru-to-81-poes-garden-travel-story-of-jayalalithaa--episode-27.art

Link to comment
Share on other sites

‘இனி சசிகலாவுடன் எந்த உறவுமில்லை! : ஜெயலலிதா’ - மைசூரு முதல் - 81, போயஸ் கார்டன் வரை... ஜெயலலிதா டைரி குறிப்புகள்! - 28

 

Epi%2028_13593.jpg

 

 

“அதிகாரம் மக்களைக் கெடுப்பதில்லை... மக்கள்தான் அதிகாரத்தை மாசாக்குகிறார்கள்” என்றார் அமெரிக்க எழுத்தாளர் வில்லியம் காடீஸ்.  கட்டுக்கடங்காத அதிகாரம் ஜெயலலிதாவை மாசாக்கியதா... இல்லை, அவர் அதிகாரத்தை மாசாக்கினாரா என்று தெரியவில்லை. ஆனால், ஜெயலலிதாவின் ஐந்து ஆண்டுகால ஆட்சியில் ஏகப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்தன.  கருணாநிதி தன் தேர்தல் பிரசாரத்தின்போது, “ஜெயலலிதா மற்றும் அமைச்சர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் விசாரிக்கப்படும்” என்று வாக்குறுதி அளித்திருந்தார். இப்போது அவரின் கையில் ஆட்சி, நிர்வாகம்... சொன்ன வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும். மற்ற வாக்குறுதிகளாக இருந்தால்கூட பரவாயில்லை... வசதியாக மறந்துவிடலாம். ஆனால், இது தன் அரசியல் எதிரியின் மீதான  ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிப்பதாக அளித்த வாக்குறுதி. இதை எப்படி நிறைவேற்றாமல் இருக்க முடியும்? ஆனால், அதே நேரம் கருணாநிதிக்கு இன்னொரு அச்சமும் இருந்தது. ஜெயலலிதா மீது எடுக்கப்படும் நடவடிக்கை... அவருக்கு அனுதாப அலையை உண்டாக்கினால்... இந்தக் கைதே மீண்டும் அவர் அரசியலில் முக்கியத்துவம் பெற காரணமாக அமைந்தால்...? ஹூம்.. இந்த விஷயத்தை  கவனமாகக் கையாள வேண்டும்.  டிசம்பர் - 5, 1996-ம் நாள், கருணாநிதி தன் அமைச்சர்களுடன் இதுகுறித்து தீவிரமாக விவாதித்தார். அதில் உள்ள சாதக, பாதகங்களை அமைச்சர்கள் எடுத்துவைத்தனர். ஓர் இளைய அமைச்சர் அந்தக் கூட்டத்தில், “இன்னும் ஏன் ஜெயலலிதா மீது நடவடிக்கை எடுக்கவில்லையென்று, மக்கள் எல்லாம் கொதிப்புடன் இருக்கிறார்கள்” என்றார். இந்தக் கூட்டம் நடக்கும் சில தினங்களுக்கு  முன்பு ஜெயலலிதா, உயர் நீதிமன்றத்தை முன்ஜாமீனுக்காக அணுகி இருந்தார். டிசம்பர் 6, மதியம்  நீதிபதி சி.சிவப்பா, அந்த முன்ஜாமீன் மனுக்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்தார்.  

ஜெயலலிதா

 ‘அப்பாவின் மகள்!’

Jayalalithaa%20arrested_14390.jpg

ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டவுடனே ஜெயலலிதாவுக்குப் புரிந்துவிட்டது... தாம் எந்த நேரத்திலும், கைது செய்யப்படுவோமென்று. அதற்குத் தயாரானார். பின்னாளில் ஜெயலலிதா ஒரு பேட்டியில் கூறினார், “என் அப்பா மட்டும், தாத்தா சேர்த்துவைத்திருந்த செல்வத்தைச் சரியாக நிர்வகித்திருந்தால்... நிச்சயம் என் வாழ்வில் பல துயரங்களை அனுபவித்திருக்க மாட்டேன்”.  கைதுக்காகக் காத்திருந்த அன்றும், இவர் அவ்வாறாகத்தான் யோசித்தார். ஆனால், அவர் அப்பா செய்த அதே தவற்றைத்தான் அவரும் செய்தார் என்பதை நினைத்தாரா என்று தெரியவில்லை. ஆம், ஜெயராமிடம் அவர் அப்பா சேர்த்துவைத்திருந்த செல்வங்கள் குவிந்திருந்தன... ஆனால், அதைச் சரியாக நிர்வகிக்காமல், ராஜாவீட்டு கன்றுகுட்டியாக, விட்டோத்தியாக இருந்து அனைத்தையும் இழந்தார். இப்போது அதே தவற்றைத்தான் ஜெயலலிதாவும் செய்திருக்கிறார். அதிகாரத்தைச் சரியாக பயன்படுத்தவில்லை; ஆடம்பரமாக வாழ்ந்தார். இந்த விஷயத்தில்... ஜெயலலிதா ‘அப்பாவின் மகள்’தான். 

டிசம்பர் 7, அரக்கு வண்ணப்புடவை அணிந்திருந்தார். சிறிது நேரம், பூஜை அறையில்  செலவிட்டார். பின் சிறைவாசத்துக்குத் தேவையான பொருட்களை எடுத்துவைத்துவிட்டு, வீட்டு பால்கனிக்குச் சென்று, அவருடைய வாசலில் திரண்டிருந்த மக்களைப் பார்த்து கையசைத்தார். அப்போது புன்னகைக்கச் சிரமப்பட்டுத்தான் போனார். 

அதே சமயம், காவலர்கள் போயஸ் கார்டனுக்குள் நுழைந்தார்கள்.  “நாளை நமதே” என்று தொண்டர்களைப் பார்த்துச் சொன்னபடியே ஜெயலலிதா போலீஸ் ஜீப்பில் ஏறினார்.  அவர் முதன்மை அமர்வு நீதிபதி அ.ராமமூர்த்தி வீட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கிருந்து சென்னை மத்திய சிறைக்கு. சிறையில் அவருடைய எண் 2529. 

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர் கைதுசெய்யப்படுவதற்கு முன்பே,  தமிழகமெங்கும் 2,500 அ.தி.மு.க நிர்வாகிகள் கைதுசெய்யப்பட்டனர்.  அப்போதும் அங்கொன்றும், இங்கொன்றுமாக சிறு அசாம்பாவிதங்கள் நடக்கத்தான் செய்தன. பேருந்துகள் கொளுத்தப்பட்டன. ஓட்டுமொத்தமாகப் பார்த்தால், தமிழகம் தழுவிய பெரிய எதிர்ப்பு எதுவும் இல்லை. அந்த அளவில் கருணாநிதிக்கு முதல் வெற்றி. அரசியல் எதிரியை பெரிய எதிர்ப்பு எதுவும் இல்லாமல் கைதுசெய்தாகிவிட்டது...  அடுத்து எந்த அனுதாப அலையும் ஏற்பட்டுவிடாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். என்ன செய்யலாம்...? அவர் கைதுசெய்யப்பட்ட சில தினங்களில், போலீஸ் போயஸ் கார்டனுக்கு சோதனை செய்வதற்காகச் சென்றது.  ஏராளமான பொருட்களை அங்கிருந்து கைப்பற்றியது.  300 கிலோ தங்கம், 500 கிலோ வெள்ளி, 150 விலைமதிப்புமிக்க கைக்கடிகாரங்கள், 10,000 புடவைகள், 250 ஜோடி செருப்புகள் கைப்பற்றப்பட்டதாக ’இந்தியா டுடே’ இதழ் செய்தி வெளியிட்டது. 

இந்தப் பொருட்கள் மீண்டும் மீண்டும் தொலைக்காட்சிகளில் காட்டப்பட்டன.... மக்கள் வாயடைத்துத்தான் போனார்கள்... கருணாநிதி வெற்றிகரமாக ஜெயலலிதாவுக்கு எதிராக ஒரு கருத்தை உருவாக்கினார். இத்துடன் ஜெயலலிதாவின் அரசியல் சகாப்தம் முடிந்தது என்று நினைத்தார். அவர் மட்டும் அல்ல... அனைத்து அரசியல் கட்சிகளும். ஏன்... அ.தி.மு.க-விலே பலர் அவ்வாறாகத்தான் நினைத்தார்கள். அ.தி.மு.க கட்சியே முடங்கிப்போனது... அந்தச் சமயத்தில் சோ மட்டும்தான் சரியாகக் கணித்தார்... “இல்லை... ஜெயலலிதாவின் அரசியல் இதனுடன் முடியவில்லை” என்று. ஆம், இறுதியில் அதுதான் சரியாக இருந்தது. 

Jayalalithaa%20ano_14180.jpg‘இனி சசிகலாவுடன் எந்த உறவுமில்லை!’

28 நாட்கள் சிறை வாழ்க்கை முடிந்து ஜெயலலிதா வெளியே வந்தார். அப்போது, அவர் சிந்தனையில் ஒன்றே ஒன்றுதான் இருந்தது. “யாரை எதிர்த்து எம்.ஜி.ஆர் புது கட்சியைத் தோற்றுவித்தாரோ... அவரிடம் ஜெயலலிதா தோற்று, அ.தி.மு.க-வை இல்லாமல் செய்துவிட்டார்” என்று வரலாறு பதிவு செய்துவிடக் கூடாது. ஆம்... மீண்டும் எழ வேண்டும்... கட்சியைத் தூக்கி நிறுத்த வேண்டும். ஜெயலலிதா சிறையில் இருந்தபோது, அ.தி.மு.க சுணங்கி இருந்தது... ஜெயலலிதாவுக்கு புது தெம்பை தந்தது. என்ன முரணாக இருக்கிறதா...? ஆனால், அதுதான் உண்மை. ஜெயலலிதா இல்லாமல் கட்சி இயங்காது என்ற தோற்றம் பொதுவெளியில் ஏற்பட்டது. மக்களிடம் மட்டும் அல்ல... கட்சியிலும்தான். இதன்பின்தான் ஜெயலலிதா கட்சியில் அசைக்கமுடியாத மனிதர் ஆனார். 

தினம் தினம் கட்சி அலுவலகத்துக்குச் சென்றார். மாற்றுக்கட்சித் தலைவர்களைச் சந்தித்தார். குண்டுமணி அளவு தங்கத்தைக்கூட அணிவதைத் தவிர்த்தார். முத்தாய்ப்பாக இனி எனக்கும், சசிகலாவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை... என்று அறிவித்துவிட்டு, சசிகலாவின் மன்னார்குடி உறவுகளை போயஸ் கார்டனிலிருந்து வெளியே அனுப்பினார்.  கொஞ்சம் கொஞ்சமாக இழந்த செல்வாக்கை மீட்டுக்கொண்டிருந்தார். 

(தொடரும்)

http://www.vikatan.com/news/coverstory/73021-‘no-relationship-with-sasikala-henceforth’--from-mysuru-to-81-poes-garden-travel-story-of-jayalalithaa--episode-28.art

Link to comment
Share on other sites

‘அமைச்சரை நீக்குங்கள்... ஆட்சியை கலையுங்கள்!’ - ஜெயலலிதா! - மைசூரு முதல் - 81, போயஸ் கார்டன் வரை... ஜெயலலிதா டைரி குறிப்புகள்! - 29

 
 

Jayalalithaa%20001_14223.jpg

நாவலாசிரியர் ஸ்காட் இவ்வாறாகச் சொல்வார், “ஒரு தோல்வியை யாரும் இறுதி தோல்வியாக நினைத்துக் குழப்பிக்கொள்ளக் கூடாது” என்று. புத்தகப் புழுவான ஜெயலலிதா, ஸ்காட்டின் நாவல்களைப் படித்தாரா அல்லது அதில் இந்த வார்த்தைகளைக் கடந்துவந்தாரா என்றெல்லாம் தெரியவில்லை. ஆனால், இந்த வார்த்தைகளை மனதில் நிறுத்தினார். “தோற்று இருக்கிறோம்... அதுவும் அவமானம் தரும் படுதோல்வி. ஆனால், நிச்சயமாக மீண்டும் எழுவோம்” என்று நம்பினார். அந்த நம்பிக்கையில் காய்களை நகர்த்தினார். சூழலும் அவருக்குச் சாதகமாக அமைந்தது. ராஜீவ் படுகொலையைப் பற்றி விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட எம்.சி.ஜெயின் கமிஷனின் அறிக்கை 1997-ம் ஆண்டு, நவம்பர் மாதம் கசிந்தது. அதில், தி.மு.க அரசின் அஜாக்கிரதையால்தான் ராஜீவ் படுகொலைக்குக் காரணம் என்பது போன்ற வாசகங்கள் இடம்பெற்று இருப்பதாக செய்திகள் பரவின. இது, தி.மு.க-வை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அ.தி.மு.க-வை, குதூகலம் கொள்ளச் செய்தது. அந்தச் சமயத்தில் ஐக்கிய முன்னணியின் ஆட்சி மத்தியில் இருந்தது. ஐ.கே.குஜரால் பிரதமராக இருந்தார். மந்திரி சபையில் தி.மு.க-வும் இருந்தது. காங்கிரஸ், வெளியிலிருந்து ஐக்கிய முன்னணிக்கு ஆதரவளித்து வந்தது. ஜெயின் கமிஷன் அறிக்கை கசிந்ததுமே... காங்கிரஸ் கட்சி, ‘மத்திய அமைச்சரவையிலிருந்து தி.மு.க-வை நீக்கவேண்டும்’ என்றது. மெலிதாக எழுந்த குரல்... ஓரிரு நாட்களில் உஷ்ணமாகியது. ‘தி.மு.க-வை நீக்காவிட்டால், ஐக்கிய முன்னணி அரசுக்கு நாங்கள் அளித்துவரும் ஆதரவை வாபஸ் பெறுவோம்’ என்ற அளவுக்குச் சென்றது. ஜெயலலிதா உற்சாகமானார்... தமிழகத்திலிருந்து அவரும் இதற்காக உரக்கக் குரல் கொடுக்கத் தொடங்கினார். ஆனால், கருணாநிதி அமைச்சரவையிலிருந்து வெளியே வரவில்லை. “நாமாக வெளியே வந்தால், ஜெயின் கமிஷன் அறிக்கையை ஒப்புக்கொண்டதுபோல் ஆகிவிடும். வேண்டுமானால், அவர்களே நம்மை வெளியே அனுப்பட்டும்” என்று அமைதி காத்தார். ஆனால், காங்கிரஸ் விடுவதாக இல்லை. அழுத்தம் மேல் அழுத்தம் கொடுத்தது. குஜரால், நான்கு நாட்கள் காத்திருந்து பார்த்தார்... நிலைமை சீராகும் என்று நினைத்தார். ஆனால், எதுவும் நிகழ்வதுபோலத் தெரியவில்லை. அவர், தன் பதவியை ராஜினாமா செய்தார். அடுத்த பாராளுமன்றத் தேர்தலுக்கு இந்தியாவே தயார் ஆனது.

‘கூட்டணி கணக்கு!’

1jaya_14363.gif“தமிழகத்தில் நாம் ஆட்சியில் இல்லை... ஆட்சி, இல்லாமல் போனாலும் பரவாயில்லை... சொல்லிக்கொள்ளும் எண்ணிக்கையில் எம்.எல்.ஏ-க்களும் இல்லை. தன்னை வீழ்த்துவதற்காக தி.மு.க அனைத்து அஸ்திரங்களையும் ஏவுவதற்குத் தயாராக இருக்கிறது. மத்தியில் ஒரு வலுவான ஆட்சி... அந்த ஆட்சியில் மந்திரி பதவி. இது இருந்தால்தான் தன்னைக் தற்காத்துக்கொள்ள முடியும்” என்று நினைத்த ஜெயலலிதா, கூட்டணிக்காகத் தேர்ந்தெடுத்தது பா.ஜ.க-வை.    

“திராவிட அரசியலாவது... சித்தாந்தமாவது? எம்.ஜி.ஆர் தோற்றுவித்த கட்சியைக் காக்க வேண்டாமா...” - யாராவது கேள்வி எழுப்பினால்... இந்தப் பதிலை சொல்வதற்குத் தயாராகத்தான் இருந்தார். ஆனால், இந்தக் கேள்வியைக் கேட்கும் தைரியம் கட்சியில் யாருக்கும் இல்லை. பா.ஜ.க-வுடன் கூட்டணி அமைத்து சூறாவளி பிரசாரம் மேற்கொண்டார். மக்களைச் சந்தித்தார். “பாருங்கள்... என் மீது பொய் வழக்குப் போட்டு, என்னை அலைக்கழிக்கிறார்கள். என்னை 28 நாட்கள் கொடுஞ்சிறையில் வைத்தார்கள்...” என்று சிறை அனுபவத்தைச் சொல்லி வாக்குக் கேட்டார். மக்கள் 10,000 புடவைகள், 250 ஜோடி செருப்புகள் என அனைத்தையும் மறந்தார்கள். மக்களுக்கு மீண்டும் ஜெயலலிதா மீது இரக்கம் ஏற்பட்டது. 

ஃபிப்ரவரி மாதத்திலும் சூடு பறக்க பிரசாரம் நடந்துக்கொண்டிருந்தது. தேசிய அளவில் பி.ஜே.பி-யும், விஸ்வரூபம் எடுத்து நின்றது. 1998-ம் ஆண்டு, பிப்ரவரி மாதம் 14-ம் நாள்... லால் கிஷான் அத்வானி, கோவைக்கு பிரசாரத்துக்குத் தாமதமாக வந்தார். ஆம்... நல்ல வேளையாக தாமதமாக வந்தார். அத்வானி பேசுவதாக இருந்த இடத்திலிருந்து 100 மீட்டர் தொலைவில், அவர் வருவதற்கு 30 நிமிடங்களுக்கு முன்பு ஒரு குண்டு வெடித்தது. மக்கள் சுதாரிப்பதற்குள் அடுத்தடுத்து காந்திபுரம், பெரியகடைத் தெரு, ரயில்வே ஸ்டெஷன் என குண்டுகள் வெடித்தன. ஏறத்தாழ 50 பேர் இறந்தனர். குண்டுவெடிப்பு சம்பவம் தி.மு.க-வை ஆட்டம் காணச் செய்தது. ஏற்கெனவே நிகழ்ந்த குண்டுவெடிப்புதான், இப்போதைய தேர்தலுக்குக் காரணம். மீண்டும் குண்டுவெடிப்பா என தி.மு.க., இதை எதிர்கொள்ள முடியாமல் தவிக்க... ஜெயலலிதா கோவைக்கு வந்தார்... தி.மு.க-வை சரமாரியாக விமர்சித்தார். தன் ஆட்சியில், ‘அமைதிப் பூங்காவாக’ இருந்த தமிழகத்தை... கருணாநிதி ‘தீயவர்களின் புகலிடமாக’ மாற்றிவிட்டார் என்று பிரசாரம் செய்தார். இது, நன்றாக வேலை செய்தது. அந்தத் தேர்தலில் அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணி 30 இடங்களைக் கைப்பற்றியது.

‘மூச்சடைக்கும் அழுத்தம்!’

Jayalalithaa%20002_14533.jpgஜெயலலிதா கைப்பற்றியது 18 இடங்கள். பா.ஜ.க-வுக்கு, மத்தியில் ஆட்சி அமைக்கும் அளவுக்கு பெரும்பான்மையில்லை. பா.ஜ.க., அ.தி.மு.க-வை நம்பி ஆட்சி அமைத்தது. அ.தி.மு.க கேட்ட அமைச்சர் பதவிகளைக் கொடுத்தது. இது, ஜெயலலிதாவுக்கு புது தெம்பைக் கொடுத்தது. பா.ஜ.க ஆட்சி அமைக்கும் வரை பொறுமை காத்த ஜெயலலிதா... சில தினங்களில் பிரதமர் வாஜ்பாய்க்கு நிர்பந்தம் கொடுக்கத் தொடங்கினார்.  அவர் கொடுத்த முதல் அழுத்தம் கருணாநிதி ஆட்சியை கலைக்க வேண்டுமென்பது. பா.ஜ.க., வாயடைத்துப் போனது. என்ன செய்வதென்று தெரியாமல், பா.ஜ.க தலைமை திணறிக்கொண்டிருக்க... ஜெயலலிதா எதைப் பற்றியும் யோசிக்காமல், வரிசையாக கோரிக்கைகளை அடுக்கிக்கொண்டே போனார். ராமகிருஷ்ண ஹெக்டேவை... பூட்டா சிங்கை... ராம் ஜெத்மலானியை... ஜார்ஜ் ஃபெர்னாண்டஸை அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும்; நான் சொல்லும் ஆட்சிப் பணியாளர்களைத்தான் தமிழகத்தில் நியமிக்க வேண்டும்; கடற்படை தலைமை அதிகாரியை மாற்றக் கூடாது என மூச்சடைக்கும் அளவுக்கு அழுத்தம் கொடுத்துக்கொண்டே போக... பா.ஜ.க-வுக்கு மூச்சு முட்டியது. ஜெயலலிதா, ‘‘லக்‌ஷ்மண ரேகையைத் தாண்டுகிறார்’’ என்றனர் சங் பரிவாரங்கள். 
ஜெயலலிதா, அது குறித்தெல்லாம் கவலைப்படவில்லை. பா.ஜ.க இறங்கிவந்து பூட்டா சிங்கை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கியது... அவர் கேட்ட ஆட்சிப் பணியாளர்களைத் தமிழகத்துக்கு அனுப்பிவைத்தது. பா.ஜ.க., கீழே இறங்கி வரவர... ஜெயலலிதா உச்சாணிக் கொம்புக்கே சென்றார். ஃபெர்னாண்டஸை நீக்க வேண்டும்... கருணாநிதி ஆட்சியை கலைக்க வேண்டும் என்று மீண்டும அழுத்தம் கொடுக்கத் தொடங்கினார். ஆனால், வாஜ்பாய் உறுதியாக மறுத்துவிட்டார். 

பா.ஜ.க-வை அச்சுறுத்த வேண்டும் என்பதற்காகவே.... சுப்பிரமணிய சுவாமி ஒருங்கிணைத்த ‘தேநீர் விருந்து’க்குச் சென்றார். அதில், முக்கியமான காங்கிரஸ் தலைவர்கள் எல்லோரும் கலந்துகொண்டனர். குறிப்பாக சோனியாவும். அதன்பின்பும் பா.ஜ.க இறங்கி வர மறுத்தது.

1999-ம் ஆண்டு... ஜெயலலிதா, வாஜ்பாய் தலைமையிலான பா.ஜ.க கட்சிக்கு அளித்துவந்த ஆதரவை வாபஸ் வாங்கினார். நம்பிக்கை வாக்கெடுப்பு கொண்டுவரப்பட்டது. அதில், ஒற்றை வாக்கு வித்தியாசத்தில் பா.ஜ.க தோல்வி அடைந்தது. இதைப் பயன்படுத்தி காங்கிரஸ், ஆட்சியைக் கைப்பற்றத் துடித்தது. ஆனால், அதற்கும் போதுமான இடங்கள் இல்லை. 

மீண்டும் ஒரு பாராளுமன்றத் தேர்தலுக்குத் தமிழகம் தயாரானது!

(தொடரும்)

http://www.vikatan.com/news/coverstory/73126-‘jaya-demands-to-remove-the-minister-dismiss-the-government-’--from-mysuru-to-81-poes-garden-travel-story-of-jayalalithaa--episode-29.art

Link to comment
Share on other sites

‘காத்திருந்த சோனியா காந்தி... தாமதமாக வந்த ஜெயலலிதா...’ - ஜெயலலிதா! - மைசூரு முதல் - 81, போயஸ் கார்டன் வரை... ஜெயலலிதா டைரி குறிப்புகள்! - 30

 
 

Epi%2030_11291.jpg

Jaya%20Sonia_11461.jpg

ரசியல், என்பது பிரச்னைகளைத் தேடுவது; எல்லா இடங்களிலும் அவற்றைக் கண்டறிவது; அதை, தவறாக அறுதியிட்டு அதற்கு மிகத்தவறான தீர்வை வழங்குவது’’ என்றார் அமெரிக்க நகைச்சுவை நடிகர் ஜூலியஸ் ஹென்றி. ஹூம்... உலகம் முழுவதும் அரசியலும், அரசியல்வாதிகளும் இவ்வாறுதான்போல... ஒரு மொன்னையான காரணத்துக்காக 13 மாதங்களில் வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கலைந்தது. அடுத்த தேர்தல்... அடுத்த கூட்டணி... ஏறத்தாழ 13 மாதங்கள் மத்தியில் ஆளுமை செய்த அ.தி.மு.க-வின் நிலைதான் இப்போது திண்டாட்டமானது. ஆம்... பா.ஜ.க அரசு கவிழ்வதற்கு அ.தி.மு.க-வும் ஒரு காரணம். அதனால், அதனுடன் கூட்டணி வைக்க முடியாது. பா.ஜ.க-வுடன் கூட்டணி வைத்தபோது காங்கிரஸையும், அதன் தலைவர் சோனியா காந்தியையும் மிகக் கேவலமாக விமர்சித்திருக்கிறோம்... என்ன செய்யலாம் என்று ஒரு பக்கம் ஜெயலலிதா யோசித்துக்கொண்டிருக்க... கருணாநிதி காய்களை நகர்த்தத் தொடங்கினார். 

1999-ம் ஆண்டு, தி.மு.க-வின் பொன்விழா ஆண்டு. 1949. ராயபுரம் ராபின்சன் பூங்காவில், தி.மு.க-வின் முதல் கூட்டத்தில் அண்ணா இவ்வாறாகப் பேசினார், “அன்புக்குரிய பெரியாரே... நாங்கள் உங்களிடமிருந்துதான் பாடம் கற்றோம். உங்கள் பாதையிலேயே நடப்போம்” என்றார். அந்த மேடையில் கருணாநிதியும் இருந்தார். கருணாநிதிக்கும்... அன்பழகனுக்கும் இதுவெல்லாம் நினைவில் இருந்ததா என்று தெரியவில்லை. ஆனால், அதை நினைவுகூற விரும்பவில்லை என்பது மட்டும் மிகத் தெளிவாகத் தெரிந்தது. தி.மு.க-வின் பொன்விழா ஆண்டில், யாருடன் அந்தக் கட்சி இத்தனை தசாப்தங்களாக கொள்கை போர் நடத்தியதோ... அவர்களுடனே கூட்டணி வைத்தது. ஆம், தி.மு.க - பா.ஜ.க கூட்டணி ஏற்பட்டது. இந்த நகர்வு ஜெயலலிதாவே எதிர்பாராத ஒன்று. தன் அரசியல் இருப்பை இல்லாமல் செய்ய, கருணாநிதி இந்த எல்லைவரை செல்வார் என்று ஜெயலலிதா நினைக்கவில்லை. காங்கிரஸுடன் கூட்டணி வைக்க கரங்களை நீட்டினார். இருவருக்கும் வேறுவழியில்லை. கூட்டணி சேர்ந்தார்கள்.

‘கூடு திரும்பிய சசிகலா!’

http---photolibrary.vikatan.com-images-g‘‘இனி சசிகலாவுடனும்... அவர் குடும்பத்துடனும் எந்த உறவும் இல்லை’’ என்று ஜெயலலிதா சொல்லி இருந்தார் அல்லவா...? அந்த வார்த்தைகள் எல்லாம் தண்ணீரில் எழுதிய கதை ஆனது. ஆம்... 1999 தேர்தலில் சசிகலாவின் உறவினரான டி.டி.வி.தினகரனுக்கு பெரியகுளம் தொகுதியை ஒதுக்கினார். இது, அ.தி.மு.க மூத்த நிர்வாகிகளையே புருவம் உயர்த்தச் செய்தது. அதுமட்டுமல்ல, இரண்டு ஆண்டுகள் சிறையில் இருந்துவிட்டு ஜாமீனில் வெளியேவந்த சசிகலாவும் போயஸ் கார்டனுக்குத் திரும்பிவிட்டார் என்று பேச்சுகள் உலாவத் தொடங்கின. சில காலம் வெளியே வராமல் இருந்த சசிகலா... ஜெயலலிதாவின் தேர்தல் பிரசார கூட்டங்களின்போது, உடன்வரத் தொடங்கினார். மீண்டும் தொண்டர்களிடையே முணுமுணுப்பு ஏற்பட்டு அடங்கியது. மூத்த நிர்வாகிகளும், தொண்டர்களும் ஒருகட்டத்தில் புரிந்துகொண்டார்கள்... அரசியல்போல அதிக உழைப்பை உறிஞ்சும் ஒரு துறையில், தனியாக ஒரு பெண்ணால் இயங்குவது கடினம். நிச்சயம் துணை நிற்க ஒரு நட்பு தேவை என்பதை.  

ஜெயலலிதாவே பின்னாளில் ஒரு பேட்டியில் இதுகுறித்து விரிவாகப் பேசியிருக்கிறார். “என் மீதான விசுவாசத்தின் காரணமாகவே, மற்றவர்களால் மிகத்தவறாகச் சித்தரிக்கப்பட்ட, புரிந்துகொள்ளப்பட்ட ஒரு பெண் சசிகலா. எனக்காக அவர் மிகச் சிரமப்பட்டிருக்கிறார். சிறைத்தண்டனையை அனுபவித்திருக்கிறார். என்னுடனான நட்பு மட்டும் இல்லையென்றால், அவரை யாருமே இந்த அளவு தொந்தரவு செய்திருக்க மாட்டார்கள். பரபரப்பான அரசியல் வாழ்க்கையை மேற்கொள்ளும் ஒருவரால், அவருடைய குடும்பத்தையும் கவனித்துக்கொள்வது என்பது மிகவும் கடினமான காரியம். பெரும்பாலான ஆண்களுக்கு இது புரிவதில்லை. ஏனென்றால், அவர்களுக்கு வீட்டில் மனைவியோ அல்லது வேறு யாரோ இருப்பார்கள். இதனால்தான், ஆண்கள் எங்களுடைய நட்பை மிகவும் கொச்சைப்படுத்துகிறார்கள்.”

சரி, மீண்டும் விஷயத்துக்கு வருவோம்... ஜெயலலிதா சென்ற இடங்களில் எல்லாம் கூட்டம் திரண்டது. உண்மையில், இது ஜெயலலிதாவுக்கு பெரும் ஆறுதலைத் தந்தது. அதே நேரம், மமதையையும். அது, ஒருகட்டத்தில் மிகமோசமாக வெளிப்பட்டது. 

‘காத்திருந்த சோனியா!’

Jayalalitha_11191.jpgஆம். விழுப்புரத்தில் சோனியாவும் - ஜெயலலிதாவும் இணைந்து தேர்தல் பொதுக் கூட்டத்தில் பேசுவதாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. டெல்லியிலிருந்து சோனியா வந்துவிட்டார். ஜெயலலிதாவுக்காகக் காத்திருந்தார்... ஏறத்தாழ இரண்டு மணிநேரங்களுக்கு மேல். ஒரு கட்டத்தில் சோனியா, தன் உரையை முடித்துக்கொண்டு கிளம்பிவிட்டார். ‘‘கடுமையான வாகன நெரிசலால்தான் கூட்டத்துக்கு வரத் தாமதமாகிவிட்டது’’ என்றார் ஜெயலலிதா. ஆனால், இதை நம்ப அ.தி.மு.க-காரர்களே தயாராக இல்லை. இது, காங்கிரஸ்காரர்களை மிகவும் கோபப்படுத்தியது. ஏற்கெனவே, தனிப்பட்ட முறையில் மோசமாக சோனியாவை, ஜெயலலிதா விமர்சித்தது... காக்கவைத்தது என எல்லாம் சேர்ந்து, அந்தத் தேர்தல் பிரசாரம் முழுவதும் மிக இறுக்கமாகத்தான் சென்றது. 

அப்போது கருணாநிதி, “காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்தாலும், ஜெயலலிதா கொடுக்கும் அழுத்தங்கள் தாங்காமல்... நிச்சயம், சோனியா காந்தி இத்தாலிக்கே சென்றுவிடுவார்” என்றார். அது மாதிரியெல்லாம் ஏற்படாத வண்ணம் தேர்தல் முடிவுகள் வந்தன. ஆம், மத்தியில் காங்கிரஸ் கூட்டணி படுதோல்வி அடைந்தது. அ.தி.மு.க-வுக்கு பெரிய சேதம் இல்லாமல் தமிழகத்தில் 10 தொகுதிகளைக் கைப்பற்றியது. தி.மு.க - பா.ஜ.க கூட்டணி 26 தொகுதிகளைக் கைப்பற்றி இருந்தது. 

மத்தியில், பா.ஜ.க ஆட்சி. அந்த அமைச்சரவையில் தி.மு.க-வுக்கு இடம். சென்ற ஆட்சியின்போது, யாரை அமைச்சரவையில் இருந்து நீக்கவேண்டும் என்று ஜெயலலிதா அழுத்தம் தந்தாரோ... அந்த ராம்ஜெத்மலானிக்கும் அமைச்சரவையில் இடம். அதுவும் சட்ட அமைச்சர்.  இப்போது ஜெயலலிதாவுக்கு யாரை நொந்துகொள்வது என்று தெரியவில்லை. அதன்பிறகு, நடந்த சில சம்பவங்களும் ஜெயலலிதாவுக்கு சாதகமானதாக இல்லை. 

(தொடரும்)

http://www.vikatan.com/news/coverstory/73209-sonia-gandhi-waits-for-jayalalithaa-from-mysuru-to-81-poes-garden-travel-story-of-jayalalithaa--episode-30.art

Link to comment
Share on other sites

‘எனக்கு மூடநம்பிக்கை இல்லை!' - மைசூரு முதல் - 81, போயஸ் கார்டன் வரை... ஜெயலலிதா டைரி குறிப்புகள்! - 31

 
 

Episode%2031_11305.jpg

ஜெயலலிதா

“நாம் வேறொன்றுக்கு மிகத் தீவிரமாக திட்டமிட்டுக் கொண்டிருக்கும் போது... சம்பந்தமே இல்லாமல் நமக்கு வேறொன்று நடக்கும். அது தான் வாழ்க்கை.” இது  ‘மேரி ஒர்த்’ காமிக் கதையை எழுதிய ஏலன் கூறியது.  ஜெயலலிதா அப்போது எதற்காக திட்டமிட்டுக் கொண்டிருந்தார் என்று தெரியவில்லை. அப்போது அவர் எதிர்பாராதது எல்லாம் நடந்தது. அவர் உதறித் தள்ளிய பா.ஜ.க தலைமையில் மத்தியில் ஆட்சி, அதில் சர்வ அதிகாரங்களுடன் தி.மு.க. என அவர் எதிர்பாராதது அல்லது விரும்பாததெல்லாம் நடந்து கொண்டிருக்க... அல்லது இதை எப்படி எதிர் கொள்வது என்று திட்டமிட்டுக் கொண்டிருக்க... ஏலன் கூறியது போலவே, ஜெயலலிதாவுக்கு வேறொன்று நடந்தது. ஆம், மில்லினியம் ஆண்டின் முதல் மாதமே, அதாவது ஜனவரி 12, 2000 அவருக்கு சந்தோஷம் தருவதாக இல்லை. அவர் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மல்லிகாவுக்கு ஒரு ஊழல் வழக்கில் ஏழு ஆண்டு கால சிறைத் தண்டனை வழங்கப்பட்டது.  ஜெயலலிதா உள்ளுக்குள் உடைந்துதான் போனார். ஏனென்றால், அடுத்த நாள் சென்னை உயர்நீதிமன்றத்தில் டான்சி வழக்கில் தீர்ப்பு. அதில் ஜெயலலிதா தான் முதல் குற்றவாளி.  தீர்ப்புக்காக பதைபதைப்புடன் காத்திருந்தார்... அவர் பதைபதைப்புக்குக் காரணம் இல்லாமல் இல்லை... சில தினங்களுக்கு முன்பு தான் அவரது ஆஸ்தான ஜோதிடர்கள் , அவருக்கு இப்போது நேரம் சரியில்லை... நட்சத்திரங்களின் நகர்வு சரியில்லை என்று கூறி இருந்தார்கள். இதற்கு முன்பே கணித ஜோதிடத்தின் படி Jayalalitha என்ற தன் பெயரை Jayalalithaa என்று மாற்றி இருந்தார்.  ஜோதிடர்கள் சொன்னபடி எல்லாவற்றையும் பச்சை வண்ணத்துக்கும் மாற்றி இருந்தார். இருந்தும் இப்போது ஜோதிடர்கள் கஷ்ட காலம் என்கிறார்கள்... ஆனால், அவர்களே சில பரிகாரங்களும் சொல்லி இருந்தார்கள். அனைத்தையும்  ஜெயலலிதா  சிரமேற்கொண்டு செய்தார். 

விடிந்தது. ஜனவரி 13... அது அந்த நாளுக்கான புதுவிடியலாக மட்டும் இல்லை. ஜெயலலிதாவுக்கும் மன இறுக்கத்திலிருந்து ஒரு விடிவாகத்தான் இருந்தது.  ஆம், டான்சி வழக்கிலிருந்து ஜெயலலிதாவை நீதிபதி எஸ். தங்கராஜ் விடுவித்தார். ஜெயலலிதா பெருமூச்சு விட்டார். ‘தர்மம் வென்றது’ என்றார். வெகு நாட்களுக்குப் பின் உண்மையாக இறுக்கம் தளர்ந்து புன்னகைத்தார்.  ஆனால், அந்த புன்னகை வெகுநாட்கள் நீடிக்கவில்லை. 

 ‘கொளுத்தப்பட்ட மாணவிகள்’

Jayalalithaa%20002_11578.jpg

ஆம்.  வரிசைகட்டி நின்ற வழக்குகளில் ஒன்றான கொடைக்கானல் ‘பிளசண்ட் ஸ்டே’ ஹோட்டல் வழக்கு தீர்ப்பு நாள் குறிக்கப்பட்டது. நிலக்கரி இறக்குமதி வழக்கிலிருந்து, ஜெயாவை விடுவித்த  நீதிபதி வி. ராதாகிருஷ்ணன் தான், இந்த வழக்கையும் விசாரித்தார். ஜெயலலிதா கொஞ்சம் நம்பிக்கையாகத் தான் இருந்தார்.  ஆனால், இந்த முறை அவர் நம்பிக்கை உருப்பெறவில்லை. ஆம், ஜெயலலிதாவுக்கு இந்த வழக்கில் ஓராண்டு சிறைத் தண்டனை விதித்து ராதா கிருஷ்ணன் தீர்ப்பளித்தார். அவருக்கு மட்டுமல்ல... அவருடன் சேர்த்து முன்னாள் அமைச்சர் செல்வகணபதி, இந்திய ஆட்சிப் பணி அதிகாரி பாண்டே, பிளசண்ட் ஸ்டே-வின் உரிமையாளர்கள் ராகேஷ் மிட்டல், சண்முகத்துக்கும் இந்த வழக்கில் தண்டனை வழங்கப்பட்டது.  தீர்ப்பு வந்ததும் ஜெயலலிதா நிலைகுலைந்து போனார். 

Bus_11542.jpgஇதனால்தானோ என்னவோ, பின்னொரு நாள் கரண் தபாருக்கு அளித்த பேட்டியில் கோபமாக,“நான் ஒன்றும் மூடநம்பிக்கை கொண்டவள் இல்லை. எனக்கு ஜோதிடத்தில், ஜாதகத்தில் நம்பிக்கை இல்லை” என்று சொன்னாரா என்று தெரியவில்லை. 

சரி, விட்ட இடத்திலிருந்து தொடங்குவோம்... தீர்ப்பு குறித்த செய்தி 4G வேகத்தில் பரவியது. பிப்ரவரி 2, 2000 -ம் ஆண்டு, தமிழகமெங்கும் வன்முறை வெடித்தது... பேருந்துகள் கொளுத்தப்பட்டன... ஒரு கட்டத்தில் வன்முறை எல்லை மீறிச் சென்றது... தருமபுரி மாவட்டத்தில்... ஆட்சியர் அலுவலகத்திலிருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள இலக்கியம்பட்டி பகுதியில், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக மாணவிகள் பயணித்த பேருந்து தீ வைத்துக் கொளுத்தப்பட்டது. உயிருடன் மூன்று மாணவிகள் காயத்ரி, கோகிலவாணி, ஹேமலதா பேருந்துக்குள்ளேயே தீயில் கருகி உயிரிழந்தனர். தமிழகமே விக்கித்து நின்றது.  

இப்போது கட்சி தலைமையிடம் நல்ல பேர் எடுப்பதற்காக, போராட்டம் செய்வதற்கு முன் அனைத்து நிருபர்களுக்கும் தகவல் கொடுக்கிறார்கள் அல்லவா கட்சிக்காரர்கள்... அப்போதும், அதுபோல தான் செய்திருந்தனர். அனைத்து தொலைக்காட்சிகளுக்கும் தகவல் கொடுத்தனர்... அவர்கள் முன்னிலையில் தான் பேருந்தை எரித்தனர். அதனால், அனைத்து தொலைக்காட்சி கேமிராக்களிலும் இந்த சம்பவம் பதிவாகி இருந்தது. அவர்களும் மீண்டும் மீண்டும் ஒளிபரப்பினர். 

‘பயம் தான் பயம் கொள்ள வேண்டும்’

அ.தி.மு.க மற்றும் ஜெயலலிதாவின் நிலை இவ்வாறாக இருக்க... உச்சநீதிமன்ற தலையீட்டால் மீண்டும் டான்சி வழக்கு விசாரணைக்கு Jayalalithaa%20001_11091.jpgவந்தது. சிறப்பு நீதிமன்றம் விசாரித்தது. இந்தமுறை அந்த வழக்கில் ஜெயலலிதாவுக்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 

இன்னும் சில மாதங்களில் சட்டமன்றத் தேர்தல்... என்ன செய்வதென்று தெரியாமல் ஜெயலலிதா கொஞ்சம் திணறித்தான் போனார். சிலநாட்கள் போயஸ் கார்டனிலிருந்து வெளியே வராமல் இருந்த ஜெயலலிதா... கும்பகோணம் கும்பேஸ்வரர் கோயில் சென்றார்... மனம் உருக வேண்டினார்...  பின் அ.தி.மு.கவின் 29-ம் ஆண்டு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றினார். அந்த உரை  ‘நான் வீழ்ந்து விடவில்லை’ என்பதாக இருந்தது.

அந்த உரை, “நாம் பயம் கொள்வதற்கு ஒன்றும் இல்லை... பயம் தான் பயம் கொள்ளவேண்டும்... என்னை மக்கள் மன்றத்தில் வீழ்த்த திராணியற்ற கருணாநிதி... பொய் வழக்குகள்... சிறப்பு நீதிமன்றங்கள் மூலம் என்னை வீழ்த்தப் பார்க்கிறார். எத்தனை கருணாநிதி வந்தாலும் என்னை எதுவும் செய்ய முடியாது... மீண்டும் நான் ஆட்சிக்கு வந்தால்... நிச்சயம் கருணாநிதியை கைது செய்வேன்..” என்றார். 

அதுவரை துவண்டிருந்த அ.தி.மு.கவினர் உற்சாகம் கொண்டனர்... தேர்தலுக்குத் தயாராகினர். 

(தொடரும்)

http://www.vikatan.com/news/coverstory/73305-i-dont-believe-in-superstitions--from-mysuru-to-81-poes-garden-travel-story-of-jayalalithaa--episode-31.art

Link to comment
Share on other sites

“ஊழலுக்கு வயது வித்தியாசம் பார்க்க வேண்டியதில்லை!''- ஜெயலலிதா - மைசூரு முதல் - 81, போயஸ் கார்டன் வரை... ஜெயலலிதா டைரி குறிப்புகள்! - 32

 

Epi%2032_11388.jpg

ஜெயலலிதா

“காலத்துக்கு ஏற்றவாறு என்னை வடிவமைத்துக் கொண்டிருக்கிறேன். நான் முதிர்ச்சி அடைந்திருக்கிறேன். என் வாழ்க்கையில், பல இன்னல்களை சந்தித்து இருக்கிறேன்; அதனைக் கடந்து வந்திருக்கிறேன். யோசித்துப்பார்த்தால், அந்தப் பிரச்னைகள்தான் என் ஆளுமையை வடிவமைத்து இருக்கிறது.” -  இது நம்பிக்கை வாக்கெடுப்பில் வாஜ்பாய் அரசு தோல்வியுற்ற சமயத்தில், ஜெயலலிதா ஒரு ஆங்கில இணைய இதழுக்கு கொடுத்த நேர்காணல். இதன் ஒரு பகுதி நிச்சயம் உண்மைதான். சந்தோஷ தருணங்களால் மட்டுமே ஒரு மனிதனின் ஆளுமை வடிவமைக்கப்படுவதில்லைதானே? ஒரு மனிதன் தான் சந்தித்த மனிதர்கள், படித்த புத்தகம், புரிந்துகொண்ட அரசியல்... இதைத்தானே தன் மொழியில் வெளிப்படுத்துகிறான். ஜெயலலிதாவும் அப்படித்தான்... தான் சந்தித்த துரோகங்களை, அவமானங்களை தன் மொழியில் வெளிப்படுத்திக் கொண்டிருந்தார். ஜெயலலிதாவின் செயல்களை விமர்சிக்கலாம். ஆனால், உண்மையாக அவரைப் புரிந்துகொள்ள விரும்பினால், அவரது செயல்களை ஆய்வுக்கு உட்படுத்துவது மட்டும் போதாது. அவரது வாழ்க்கை அனுபவத்தையும் கருத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். இது ஜெயலலிதாவுக்கு மட்டும் அல்ல... எல்லா மனிதர்களுக்கும்  பொருந்தும்.

சரி, நாம் விஷயத்துக்கு வருவோம்.   தமிழகச் சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. கட்சியைக் கைப்பற்றியது... 10 வது சட்டமன்ற தேர்தலில் வெற்றிப்பெற்றது... மத்தியில் சில காலம் சர்வ அதிகாரத்துடன் இருந்தது... இப்போது 10  எம்.பி-களை வைத்திருப்பது என எதுவும் முக்கியம் அல்ல. இந்தத் தேர்தலில் வெற்றிப் பெற வேண்டும். 'இப்போது விழுந்தால், பின் எப்போதும் எழவே முடியாது' என்பதை நன்கு உணர்ந்திருந்தார் ஜெயலலிதா. 'கட்சி உயிர்பெற வெற்றி வேண்டும். நான் இன்னும் வலிமையுடன் தான் இருக்கிறேன் என்பதை நிரூபிக்க வெற்றி வேண்டும்' என்று யோசித்த ஜெயலலிதா அனைத்துக் கட்சித் தலைவர்களையும் சந்தித்தார். கூட்டணி அமைத்தார். காங்கிரஸ், தமிழ் மாநிலக் காங்கிரஸ், பாட்டாளி மக்கள் கட்சி, இடதுசாரிகள்... என மாபெரும் கூட்டணி அது.  கருணாநிதி கூட்டணியில் அப்போது பா.ஜ.க-வைத் தவிர இருந்தவை எல்லாம் சிறு கட்சிகள். பெரும்பாலான மக்களுக்கு பெரிதாக அறிமுகமாகாத கட்சிகள்.  கூட்டணி எல்லாம் ஜெயலலிதாவுக்கு சாதகமாக அமைந்துவிட்டதுதான்... ஆனால், டான்சி வழக்கின் தீர்ப்பு இருக்கிறதே? 'இரண்டு ஆண்டுகளுக்கு மேல் தண்டனை பெற்ற ஒருவர் தேர்தலில் நிற்க முடியாது' என்கிறது மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம்.  டான்சி வழக்கில் ஜெயலலிதாவுக்கு மூன்று ஆண்டுகள் தண்டனை. இதன் காரணமாக அவர் போட்டியிட முடியுமா, முடியாதா? என்ற சந்தேகம் நிலவியது. சூழ்நிலை இப்படியாக இருக்க... ஆண்டிபட்டி, கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை, புவனகிரி என நான்கு சட்டமன்றத் தொகுதிககளில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார் ஜெயலலிதா.  ஆனால், தேர்தல் அதிகாரிகள் ஒவ்வொரு வேட்புமனுவாக நிராகரித்தனர். 

“நான் உங்களிடம் பிச்சை  கேட்கிறேன்”

Jayalalithaa%20%200001_11396.jpg

ஜெயலலிதா இதுக்குறித்து கவலைப்பட்டாரா இல்லையா என்றெல்லாம் தெரியவில்லை. ஆனால், வெற்றிகரமாக இதையும் தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டார். ஊர் ஊராக சென்றார். மக்களை சந்தித்தார்.  அவர் தன் கட்சியின் கொள்கைகள் குறித்துப் பேசவில்லை. தான் ஆட்சிக்கு வந்தால் மக்களுக்கு என்ன செய்வோம் என்பது குறித்துப் பேசவில்லை... தமிழகத்தில், தற்போது நிலவும் பிரச்னைகள் குறித்தும் பேசவில்லை... தன்னைப் பற்றி மட்டும் தான் பேசினார். முழுக்க முழுக்க தன்னை மட்டுமே பிரதானப்படுத்தினார். கருணாநிதி தன்னை அழிக்கத் திட்டமிடுகிறார் என்றார். தன் மீது போடப்பட்டுள்ள அனைத்து வழக்குகளும் புனையப்பட்ட வழக்குகள் என்றார். அரசியல் சூழ்ச்சியால் தன் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டிருக்கிறது என்றார். தனக்கு அநீதி இழைக்கப்படுகிறது; நியாயம் வேண்டும் என்றார். முத்தாய்ப்பாக அவர், “மற்ற தீர்ப்புகள் எப்படி வேண்டுமானாலும் இருந்துவிட்டுப்போகட்டும். எனக்கு உங்கள் தீர்ப்புதான் முக்கியம். நீங்கள் சரியான தீர்ப்பை வழங்குவீர்களா? நான் உங்களிடம் பிச்சை கேட்கிறேன். நீங்கள் சரியான தீர்ப்பை வழங்குவீர்களா.?” என்றார். கூட்டம் சில நொடிகள் நிசப்தம் ஆனது. பின் கண்ணீருடன் கரகோஷம் எழுப்பியது. 

சொல்லப்போனால்... அப்போது கருணாநிதி ஆட்சியில், பெரிய அதிருப்தி எல்லாம் இல்லை. பெரிதாக எந்த ஊழல் குற்றச்சாட்டுகளிலும் சிக்கவும் இல்லை. ஆனால், இது எதுவும் கருணாநிதிக்கு கை கொடுக்கவில்லை.  ஆம், ஜெயலலிதா அமைத்த பெருங்கூட்டணி மற்றும் ஜெயலலிதாவின் பிரச்சாரம் முன் ஈடுகொடுக்க முடியாமல் திணறிய  தி.மு.க., இறுதியில் படுதோல்வி அடைந்தது. அ.தி.மு.க மட்டும் 132 இடங்களைக் கைப்பற்றியது. தி.மு.க கூட்டணி மொத்தமாகக் கைப்பற்றிய இடங்கள் 37. இது உண்மையில், ஜெயலலிதாவே எதிர்பாராத வெற்றி தான். 

வழக்கம் போல் அ.தி.மு.க கூட்டணியின் வெற்றியை, ஜெயலலிதா தன் வெற்றியாக மட்டுமே பார்த்தார். தான் அரசாள மக்கள் விரும்புகிறார்கள். அதனால்தான் இத்தகைய அமோக வெற்றியை மக்கள் பரிசளித்திருக்கிறார்கள் என்று நம்பினார். அப்போது ஆளுநராக இருந்த ஃபாத்திமா பீவி, ஜெயலலிதாவை அரசமைக்க அழைத்தார். இது அந்த சமயத்தில், சர்ச்சையைக் கிளப்பியது. 'சட்டமன்ற உறுப்பினராக இல்லாத ஒருவரை, மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்ற ஒருவரை எப்படி ஆட்சி அமைக்க அழைக்கலாம்?' என்ற எதிர்ப்புக் குரல் எழுந்தது. ஃபாத்திமா பீவி இதனையெல்லாம் காதில் வாங்கிக் கொள்ளவில்லை. யாரை வேண்டுமானாலும் அரசமைக்க அழைக்கும் அதிகாரத்தை அரசியலமைப்புச் சட்டம் அங்கம் 164 ஆளுநருக்கு வழங்கி இருக்கிறது. அவர் ஜெயலலிதாவை அழைத்தார்... ஜெயலலிதா முதல்வராக பொறுப்பேற்றார்!

Jayalalithaa%20%200002_11013.jpg

'பழிவாங்கும் படலம்'

Jayalalithaa%20%200003_11408.jpgஇது ஜெயலலிதாவின் முறை. இதற்காகத்தான் காத்துக் கொண்டிருந்தார். தேர்தல் பிரச்சாரத்தின் போதே, தன்னை முதன்மைப்படுத்தியவருக்கு... ஆட்சி, அதிகாரங்கள் கிடைத்ததும் வேறு ஏதாவது முதன்மையாக இருக்குமா என்ன? ஆட்சி பொறுப்பேற்ற ஒரு மாத காலத்துக்குள் தன் ஆட்டத்தைத் தொடங்கினார்.  ஜூன் 30, 2001 நள்ளிரவு கருணாநிதியை மேம்பால ஊழல் வழக்கில் கைது செய்ய காவல் துறையினர்  அவர் இல்லத்துக்கு வந்தனர். அப்போது மணி நள்ளிரவைத் தாண்டிவிட்டது. கருணாநிதி தகவல் அறிந்ததும் முரசொலி மாறனுக்கு தொலைபேசியில் பேசினார்.  சில நிமிடங்களில் மாறன், கருணாநிதி வீட்டுக்கு வந்தார்; கூடவே தொலைக்காட்சி நிருபர்களும். கருணாநிதி மிக மோசமான முறையில் கைது செய்யப்பட்டார்.

  “78 வயதான மூத்த அரசியல்வாதியை  ஆடை மாற்றக்கூட அனுமதிக்கவில்லை. வயதானவர் என்று கூட பார்க்காமல், மிகவும் மோசமான முறையில் காவல் துறை அவரைக் கையாண்டது” என்று அடுத்த நாள் அனைத்து ஊடகங்களும் செய்தி வெளியிட்டது. குறிப்பாக “அய்யோ...என்னைக் கொலை செய்யுறாங்க... கொலை செய்யுறாங்க...” என கருணாநிதி கதறும் காட்சி தொலைக்காட்சிகளில் மீண்டும் மீண்டும் ஒளிபரப்பப்பட்டது.  

இந்தக் கைது நடவடிக்கையை அப்போது அ.தி.மு.க கூட்டணியில் இருந்த கட்சிகளே ரசிக்கவில்லை. தேர்தலுக்குப் பின், அதிகரித்துப்போன ஜெயலலிதாவின் எதேச்சதிகாரம், கூட்டணித் தலைவர்களை மதிக்காத போக்கினால் அதிருப்தியில் இருந்தனர் அவர்கள். எனவே, அவர்களும் இந்தக் கைது நடவடிக்கையைக்  கண்டித்தனர். 

ஜெயலலிதா இதுகுறித்தெல்லாம் அணு அளவும் கவலை கொள்ளவில்லை. தமிழகமே அல்லோலப்பட்டுக் கொண்டிருக்க... ஜூலை 7-ம்Jayalalithaa%20004_11594.jpg தேதி, சசிகலாவுடன் குருவாயூர் பயணமானார். அங்கு ஏறத்தாழ 40 நிமிடங்கள் கலங்கிய கண்களுடன் குருவாயூரப்பனைத் தரிசித்துவிட்டு ஹெலிகாப்டரில் சென்னை திரும்பினார்.

நாட்கள் நகர்ந்தன... ஆனால், கருணாநிதி கைது அல்லது அவரை கைது செய்த விதம் ஏற்படுத்திய அதிர்வலை சில நாட்களுக்கு அப்படியேதான் இருந்தன. இது மட்டும்தான் தமிழகத்தின் பேசு பொருளாக இருந்தது. ஆனால், இது குறித்தெல்லாம் ஜெயலலிதா கவலை கொள்ளவில்லை. சில ஆண்டுகளுக்கு பின் அவர் அளித்தப் பேட்டி ஒன்றில், கருணாநிதி கைது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு,  அவர் இவ்வாறாகப் பதில் அளித்தார், “ஊழல் செய்தவருக்கு வயது வித்தியாசம் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. அவர் ஊழல் செய்திருக்கிறார். குற்றவாளியாகத்தான் பார்க்கவேண்டும்.” என்று கோபமாகவே அந்தக் கேள்வியைக் கடந்துச் சென்றார்.

(தொடரும்)

http://www.vikatan.com/news/coverstory/73417-“there-is-no-age-bar-set-for-corruption”---from-mysuru-to-81-poes-garden-travel-story-of-jayalalithaa--episode-32.art

Link to comment
Share on other sites

“மீண்டும் ஜெயலலிதாவாக திரும்பி வருதல்” - மைசூரு முதல் - 81, போயஸ் கார்டன் வரை... ஜெயலலிதா டைரி குறிப்புகள்! - 33

 
 

Epi%2033_12524.jpg

ஜெயலலிதா புகைப்படத் தொகுப்பு 1 ஐ காண இங்கே கிளிக் செய்யுங்கள்ஜெயலலிதா

ஜெயலலிதா புகைப்படத் தொகுப்பு 1 ஐ காண இங்கே கிளிக் செய்யுங்கள் 

ருமபுரி வாச்சாத்தி மலைப்பகுதியில் வாழும் பழங்குடிகள் சொல்வார்கள், “நீங்கள் மட்டும்தான். ஆம், நீங்கள் மட்டும்தான், உங்களுக்கு சரியான கூட்டணி. உங்களுக்கு நீங்கள் மிக உண்மையாக இருங்கள். உங்களை அதிகமாக நம்புங்கள்” என்பார்கள். ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது தான், 1992-ம் ஆண்டு வாச்சாத்தி பழங்குடியின மக்கள் மீது வனத்துறையினர், காவல்துறையினர் இணைந்து வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டனர். ஒருவேளை அந்த காவல்துறை அதிகாரிகள், ஜெயலலிதாவிடம் சொன்னார்களா என்று தெரியவில்லை.... ஜெயலலிதா எப்போதும் தாம் அமைத்த கூட்டணியை, அதன் தலைவர்களை நம்பியதைவிட தன்னை நம்பினார். ஆம், தன்னை மட்டுமே நம்பினார். தன்னை நம்பியதுடன் நின்றிருந்தால் பரவாயில்லை. கூட்டணித் தலைவர்களை அவமதித்தார். ஜெயலலிதாவின் இந்த போக்கால், கோபத்தில் இருந்த கூட்டணித் தலைவர்கள், அவரை வீழ்த்துவதற்காக சந்தர்ப்பத்தை தேடிக் கொண்டிருந்தார்கள். அப்படியான சந்தர்ப்பம் மிகவிரைவில அமைந்தது. 

“ஓ. பன்னீர்செல்வம் ஆகிய நான்...”

Jayalalithaa%20003_12232.jpg

ஜெயலலிதா புகைப்படத் தொகுப்பு 1 ஐ காண இங்கே கிளிக் செய்யுங்கள்

அவர்  பயந்தது போன்றே ஒரு தீர்ப்பை செப்டம்பர் 21, 2001 செப்டம்பரில் உச்ச நீதிமன்றம் வழங்கியது. இதுதான் அந்த தீர்ப்பு, “மே 14, 2001 தமிழக முதல்வராக ஜெயலலிதா பொறுப்பேற்றது இந்திய அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது. அவர் பொறுப்பேற்றது செல்லாது” என்றது. ஜெயலலிதா உடனடியாக அமைச்சர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை போயஸ் கார்டனில் கூட்டினார். O%20PaneerSelvam_12554.jpgவிவாதித்தார்.... இல்லை, இல்லை... அவர் மட்டுமே பேசினார். பின் அங்கிருந்து புறப்பட்டு, தன் வாகனத்தில் ஆளுநர் மாளிகை சென்றார். இப்போது அவர் வாகனத்தில் தேசியக் கொடி இல்லை. அ.தி.மு.க கொடி மட்டுமே இருந்தது. வாகனத்தை பார்த்தவர்களுக்கு புரிந்து விட்டது. கவர்னரிடம் சூழ்நிலையை விளக்கினார். அதன்பின், மாலையில் ஆளுநரை அமைச்சர்கள் சந்தித்தார்கள். எம்.ஜி.ஆர் ரசிகனாக பெரியகுளம் பகுதியில் சிறு தேநீர்கடை நடத்தி, பின் அ.தி.மு.கவில் இணைந்து,  ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரிய மனிதராக மாறி, அமைச்சராக உயர்ந்த ஓ. பன்னீர்செல்வம், இப்போது முதல்வராக உயர்த்தப்பட்டார். விவிலியத்தில் ஒரு வசனம் வரும்...“தன்னை தாழ்த்திக் கொள்பவனே உயர்த்தப்படுவான்” என்று. இது பன்னீர்செல்வத்துக்கு மிகச்சரியாக பொருந்தியது. முதல்வராக உயர்த்தப்பட்ட போதும் அமைதி காத்தார். முதல்வர் நாற்காலியிலும் அசெளகர்யமாக அமர்ந்தார். அவருக்கு நன்கு தெரியும்... இதுஎல்லாம் சில காலம்தான் என்று. 

“போயஸ் தோட்டத்தில்தான் தலைமைச் செயலகம் செயல்படுகிறது... ஜெயலலிதாவின் அனுமதி பெற்ற பின்பே, அனைத்து கோப்புகளிலும் பன்னீர்செல்வம் கையெழுத்திடுகிறார்...” என்று முணுமுணுக்கப்பட்டது. ஊடகங்கள் எழுதின... இதுகுறித்து பன்னீர்செல்வம் சிறிதும் கவலைப்படவில்லை. அப்போது அவர் கவலையெல்லாம் வேறொன்றின் மீது இருந்தது. ஆம், டான்சி வழக்கு உயர் நீதிமன்றதில் விசாரணைக்கு வந்தது. அவர் கவலையெல்லாம்... ஜெயலலிதாவுக்கு சாதகமாக தீர்ப்பு வர வேண்டும் என்பது மட்டும்தான். ஜெயலலிதாவே இந்த அளவுக்கு தீர்ப்பு குறித்து கவலைப்பட்டிருப்பாரா..? என்று தெரியாது. ஆனால், அப்போது தமிழக முதல்வராக இருந்த பன்னீர்செல்வம் கவலைப்பட்டார். எல்லா சாமியையும் வேண்டினார். அவர் வேண்டுதல் வீண் போகவில்லை. ஜெயலலிதாவுக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது. டான்சி வழக்கிலிருந்து ஜெயலலிதாவும் விடுதலையானார். முதல்வர் பதவியிலிருந்து பன்னீர்செல்வமும் விடுதலையானார். 

“ஜெயாவாக திரும்பி வருதல்”

Jayalalithaa%20002_12378.jpgமீண்டும் ஜெயலலிதா முதல்வராக பொறுபேற்றார். பழைய பன்னீர்செல்வமாக முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் அமைச்சர் பொறுபேற்க... பழைய ஜெயலலிதாவாகவே திரும்பி வந்தார். ஆம், தீர்ப்பு, சில காலம் முதல்வராக இல்லாதது... இது எதுவும் அவர் ஆளுமையை சிதைக்கவில்லை. அப்படியே திரும்பி வந்தார். மீண்டும் அனைத்து தரப்பு மக்களின் பகையைச் சம்பாதித்துக் கொண்டார்.  ராணி மேரி கல்லூரியின் ஒருபகுதியை இடித்துவிட்டு புதிய சட்டப்பேரவை கட்டுவேன் என்றது... கோயில்களில் ஆடு கோழி பலியிடத் தடை...  கட்டாய மதமாற்ற தடைச் சட்டம், எஸ்மா சட்டத்தின் மூலம் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களை டிஸ்மிஸ் செய்தது... பொடா சட்டத்தில் வைகோவை கைது செய்தது என அனைத்து தரப்பு மக்களும், கட்சிகளும் ஓரணியில் திரள, இவரே காரணமானார்... ஊடகங்களையும் விட்டு வைக்கவில்லை... எதிர்த்து எழுதிய அத்தனை பேர் மீதும் அவதூறு வழக்கு போட்டார்.  

அனைத்து கட்சிகளும் கரம் கோர்த்தன. தங்களது சந்தர்ப்பத்துக்காக காத்திருந்தது. எதனையும் பொருட்படுத்தாமல் முன்னோக்கி சென்று கொண்டிருந்த ஜெயலலிதாவுக்கு, ஒரு பின்னடைவு காத்திருந்தது. தி.மு.க பொதுச் செயலாளர் அன்பழகன் தொடர்ந்த வழக்கில், உச்ச நீதிமன்றம், சொத்து குவிப்பு வழக்கை தமிழ்நாட்டை விட்டு வெளியே கர்நாடகத்தில் நடத்த உத்தரவிட்டது. தமிழ்நாட்டில் நடந்தால் வழக்கு விசாரணை நியாயமாக நடக்காது... சாட்சிகள் அச்சுறுத்தப்படுவார்கள் என்று தான் இவ்வழக்கை தொடர்ந்திருந்தார் அன்பழகன். இப்படியாக தீர்ப்பு வரும் என்று ஜெயலலிதா எதிர்பார்க்கவில்லை.... மீண்டும் ஜெயலலிதா எதிர்பார்க்காதது அல்லது அவருக்கு நடக்கக் கூடாது என்று எல்லாம் நடக்கத் துவங்கியது.

கருணாநிதி ஒரு மெகா கூட்டணியை அமைத்தார்... காங்கிரஸ், பா.ம.க, ம.தி.மு.க, சி.பி.ஐ, சி.பி.எம் என வலுவான கூட்டணி அது. அதற்கு சில நாட்களுக்கு முன் பத்தொன்பது மாதங்கள் சிறையில் இருந்து விட்டு வெளியே வந்த வைகோவும் தமிழகமெங்கும் நடைப் பயணம் சென்று ஜெயலலிதாவுக்கு எதிராக பிரசாரம் செய்தார். 

கூட்டணி பலம், தேர்தல் பிரசாரம்... இதையெல்லாம் தாண்டி மக்களிடம் சம்பாதித்த அதிருப்தி என எல்லாம் ஜெயலலிதாவுக்கு எதிராக திரும்பியது. அ.தி.மு.க கூட்டணி 2004-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் 40க்கு 40 தொகுதிகளையும் இழந்து படுதோல்வி அடைந்தது. இது என்றுமே ஜெயலலிதா நினைவுகூர விரும்பாத தோல்வி... ஒரு நேர்காணலில் இதை நினைவுபடுத்தியதற்காகத் தான் ஊடகவியலாளர் கரண் தபாரிடம் கோபப்பட்டார் ஜெயலலிதா. ”இது ஒன்றும் மகிழ்ச்சி தரக்கூடிய பேட்டியாக எனக்கு அமையவில்லை.” என்றார். 

ஜெயலலிதா புகைப்படத் தொகுப்பு 1 ஐ காண இங்கே கிளிக் செய்யுங்கள்

(தொடரும்)

http://www.vikatan.com/news/coverstory/73646-come-back-of-jayalalithaa---from-mysuru-to-81-poes-garden-travel-story-of-jayalalithaa--episode-33.art

Link to comment
Share on other sites

“தைரியலட்சுமி ஆன ஜெயலலிதா...” - மைசூரு முதல் - 81, போயஸ் கார்டன் வரை... ஜெயலலிதா டைரி குறிப்புகள்! - 34

 
 

Episode%2034_10268.jpg

 

ஜெயலலிதா

“நீங்கள் தூங்கவே செய்யாதபோது எப்படி ஒரு கொடுங்கனவிலிருந்து எழ முடியும்...?”என்றொரு வசனம் 2004 வெளிவந்த தி மெஷினிஸ்ட் (The Machinist) படத்தில் வரும்.  இந்த வசனத்தை நாம் இப்படியும் பொருள் கொள்ளலாம்.  “நாம் ஒரு படுதோல்வியைச் சந்திக்காதபோது... எப்படி ஒரு புதுப் பாடம் கற்கமுடியும்...?” இந்தப் படம் வெளிவந்த அதே ஆண்டில்தான் ஜெயலலிதா ஒரு படுமோசமான தோல்வியைக் கண்டார் என்பது தற்செயலானது. ஆம், 2004-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் ஜெயலலிதா சந்தித்த மோசமான தோல்வி, அவருக்குப் பல விஷயங்களை உணர்த்தியது. அதில் பிரதானமானது, நாம் மக்கள் விருப்பத்துக்கு எதிர்திசையில் பயணித்துக் கொண்டிருக்கிறோம் என்பது. தப்பாருக்கு அளித்த பேட்டியில், “நாங்கள் பெரும்பாலான கட்சிகளுடன் கூட்டணி வைக்கவில்லை. அதுதான் எங்கள் தோல்விக்குக் காரணம்” என்று அவர் கூறியிருந்தாலும், அவர் மனதுக்கு நன்கு தெரிந்தது, நம் தோல்விக்கு காரணம் மக்கள் விருப்பங்களை ஈடுசெய்யாமல், அதற்கு முரணாக நடந்துக் கொண்டதுதான் காரணம் என்பது. உடனே விழித்தெழுந்தார். இதே திசையில் பயணித்தால், முட்டுச்சந்தில்தான் சிக்கிக் கொள்ள வேண்டும் என்பதை உணர்ந்தார். இன்னும் இரண்டு ஆண்டுகளில் சட்டமன்றத் தேர்தல் வருகிறது. அதற்கு முன்னதாக எல்லாவற்றையும் சரி செய்ய வேண்டும். போன பாதை தவறு என்று மக்கள் உணர்த்திவிட்டார்கள். இன்னும் இரண்டு ஆண்டு காலம் இருக்கிறது அல்லவா என்று பாதையை மாற்றினார். அதே சமயம், நாடாளுமன்ற தேர்தல் தீர்ப்புக் குறித்து கருணாநிதி,  “இது மக்கள் விரோத ஆட்சிக்கு, மக்களால் கொடுக்கப்பட்ட தண்டனை” என்று பிரசாரத்தை முடுக்கிவிட்டுகொண்டிருந்தார். 

“வீழ்ச்சி... மீட்சி... எழுச்சி”

Jayalalithaa%20VIk_11110.jpg

ஜெயலலிதா புகைப்படத் தொகுப்பு 1 ஐ காண இங்கே கிளிக் செய்யுங்கள்

ஜெயலலிதா புகைப்படத் தொகுப்பு 2 ஐ காண இங்கே கிளிக் செய்யுங்கள்

தேர்தல் முடிவுகள் வந்த சில வாரங்களில், ஜெயலலிதா டெல்லிக்குப் பயணமானார். பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து, பதினேழு கோரிக்கைகள் அடங்கிய மனுவை கொடுத்தார். அதுமட்டுமல்ல, பி.ஜே.பி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி குறித்த கேள்விக்கு, “நாங்கள் தேசிய ஜனநாயக கூட்டணியின் அங்கம் அல்ல. அவர்கள்தான் எங்களுடன் கூட்டணி வைத்திருந்தார்கள்”என்று பி.ஜே.பி-யில் இருந்து நான் தள்ளிதான் நிற்கிறேன் என்பதைக் குறிப்பால் உணர்த்தினார். 

அவருக்கு அந்த சமயத்தில் இன்னொரு கவலையும் இருந்தது. கருணாநிதி மீண்டும் 2006-ம் ஆண்டு சட்டபேரவைத் தேர்தலில் வென்று ஆட்சியைப் பிடித்து, தனக்கு எதிரான நடவடிக்கைகளை எடுத்தால் என்ன செய்வது? என்று நினைத்த அவர் தன் பிம்பத்தை மாற்றி அமைக்க, மக்கள் நல அரசு தான் இது என்பதை நிரூபிக்க அனைத்து நடவடிக்கைகளையும் முடுக்கிவிட்டார். தமிழகத்தில் தான் அமல்படுத்திய கட்டாய மதமாற்ற தடைச்சட்டம், கோயில்களில் ஆடு, கோழி பலியிடத் தடைச்சட்டம் என மக்கள் விரும்பாத அனைத்துச் சட்டங்களையும் திரும்பப் பெற்றார். கொஞ்சம் கொஞ்சமாக இழந்த செல்வாக்கை மீட்டுக் கொண்டிருந்தார். இது குறித்துக் கேள்விகேட்ட ஊடகங்களுக்கு அவர், “இதற்குமுன் எனது ஒரு பக்கத்தைப் பார்த்தீர்கள். இப்போது இன்னொரு பக்கத்தைப் பார்க்கிறீர்கள். எதிர்காலத்தில் வேறுபட்ட பக்கங்களைப் பார்ப்பீர்கள்” என்றார். உண்மை தான். தன்னுடைய அனைத்துப் பரிமாணங்களையும் காட்ட, திட்டங்களை செயல்படுத்தத் தொடங்கினார். இந்தத் தோல்விகளுக்கு முன் அவர் மழைநீர் சேகரிப்பு திட்டத்தை அமல்படுத்தினார். அப்போது மக்கள் முணுமுணுப்புடன்தான் அந்தக் கட்டமைப்பை வீட்டில் உண்டாக்கி இருந்தனர். இப்போது, அந்தத் திட்டம் பயன் தரத் தொடங்கி இருக்கிறது. இது அவருக்கு ஒரு நல்ல பெயரை வாங்கித் தந்தது. அடுத்து அவர் அனைத்து மதுபானைக்கடைகளையும் அரசே எடுத்து நடத்தும் என்று அறிவிப்பை வெளியிட்டார். “என்னது அரசு மதுக்கடை நடத்துவதா?” என்று எதிர்ப்புக் குரல் எழுந்தாலும் அந்த சமயத்தில் இது நல்ல நகர்வாகத்தான் பார்க்கப்பட்டது. இதிலிருந்து வரும் வருமானம் மக்கள் நலத் திட்டங்களுக்குப் பயன்படுத்தப்படும், டாஸ்மாக் மூலம் வேலை வாய்ப்பு உண்டாகும் என்று அறிவித்தார்.  அடுத்து வரவே வராது என்று கருதப்பட்ட வீராணம் கூட்டுக் குடிநீர் திட்டத்தைச் செயல்படுத்தி, வீராணத்திலிருந்து தண்ணீரை சென்னைக்கு கொண்டு வந்து, சென்னைவாசிகளின் தாகம் தணித்தார். இது சென்னை மக்கள் மத்தியில் அவருக்கு நல்ல பெயரை வாங்கித் தந்தது.

மக்கள் அவரது மாற்றத்தைக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருக்க  அக்டோபர் 18, 2004-ம் ஆண்டு வந்த ஒரு செய்தி, மொத்த இந்தியாவையும் அவரை நோக்கித் திரும்பிப் பார்க்க வைத்தது.   செவ்வாய்கிழமை (அக்டோபர் 19, 2004), அயர்ச்சியுடன் சோம்பல் முறித்து தொலைக்காட்சிப் பொத்தானை அழுத்தியவர்கள்... அதில் ஓடிய செய்தியைப் பார்த்துத் திகைத்து நின்றார்கள். இது உண்மைதானா என்று தன்னைத் தானே கிள்ளிப்பார்த்துக் கொண்டார்கள். “வீரப்பனும் அவனது கூட்டளிகளும் தருமபுரி பாப்பாரப்பட்டி பகுதியில் சுட்டுக்கொல்லப்பட்டார்கள்” என்பதுதான் அந்தச் செய்தி. ஒரே நாளில் ஒட்டுமொத்த இந்தியாவின் பேசு பொருளானது இந்தச் செய்தி. உலக ஊடகங்கள் எல்லாம் தருமபுரியில் திரண்டன. 17,000 கி.மீ சதுர கிலோமீட்டர் பரப்பை ஆட்சி செய்த வீரப்பன். சந்தன மரங்களை வெட்டிக் கடத்திய வீரப்பன், யானைகளைக் கொன்று, அதன் தந்தத்தைக் கடத்திய வீரப்பன் இனி இல்லை. அவர் என் தலைமையிலான ஆட்சியின்போது கொல்லப்பட்டார் என்ற ஜெயலலிதா, வீரப்பன் தேடுதல் வேட்டையில் இருந்த அனைத்து காவலர்களுக்கும் பதவி உயர்வு, வீட்டுமனை என எண்ணற்ற பரிசுகளை வழங்கினார்.  

எந்த ரஜினி, “இனி ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது” என்றாரோ இப்போது, அவரே தையரியலட்சுமி ஜெயலலிதா என்று போற்றிப் புகழ்ந்தார்.  

Jayalalithaa%20003%20VIk_11576.jpg

ஜெயலலிதா புகைப்படத் தொகுப்பு 1 ஐ காண இங்கே கிளிக் செய்யுங்கள்

ஜெயலலிதா புகைப்படத் தொகுப்பு 2 ஐ காண இங்கே கிளிக் செய்யுங்கள்

இப்படியாக நாட்கள் நகர்ந்துக் கொண்ருக்க அடுத்து அவர் எடுத்த நடவடிக்கையைக் கண்டு தி.மு.க-வே விக்கித்து நின்றது. இது கருணாநிதியே எதிர்பார்க்காத ஒன்று. ஆம், நவம்பர் 11, 2004 ஊரே உற்சாகமாக தீபாவளிக் கொண்டாடிக் கொண்டிருக்க, சங்கரராமன் கொலைவழக்கு தொடர்பாக காஞ்சிபுரம் சங்கர மடத்துக்குள் போலீஸ் நுழைந்தது. இன்னொரு போலீஸ் டீம், ஆந்திராவுக்கு பறந்து  அங்கு முகாமிட்டிருந்த சங்கராச்சாரியரை கைது செய்தது.  மீண்டும் இந்தியாவின்  பேசு பொருளானார் ஜெயலலிதா. சங்கரமடத்துடன் நல்ல நட்பில் இருந்த ஜெயலலிதாவின் இந்த நடவடிக்கையை அனைவரும் அதிர்ச்சியுடனும், ஆச்சர்யத்துடனுடம்தான் பார்த்தார்கள். ஒருபக்கம் தி.மு.க தலைவர் கருணாநிதியே பாராட்டி அறிக்கை கொடுக்க, இன்னொரு பக்கம் அத்வானி, சிங்கால், சங் பரிவாரங்கள் எல்லாம் இந்த நடவடிக்கைக்கு எதிராக ஜெயலலிதாவை எதிர்த்து டெல்லியில் போராடிக் கொண்டிருந்தார்கள்.  
கைது பரப்பரப்பு ஓய்ந்து சில தினங்கள் கடந்திருக்கும் புத்தாண்டை எதிர்நோக்கிக் காத்திருந்த சமயத்தில்தான் ஒரு பெருந்துயர் தமிழகத்தைத் தழுவியது. கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் முடிந்து மக்கள் வேளாங்கன்னியிலிருந்து மக்கள் தங்கள் ஊர்களுக்குத் திரும்பிக் கொண்டிருக்க, அதே நேரத்தில் சென்னையில் அந்த ஞாயிற்றுக்கிழமை பொழுதில் பலர் உற்சாகமாக நடைப்பயிற்சி செய்துக் கொண்டிருக்க  கடலூரில் மீனவர்கள் கடலுக்குள் செல்ல தங்கள் படகுகளைத் தயார் செய்துக் கொண்ருக்க  ஒரு பெரும் கடல் அலை அனைவரையும் வாரி இழுத்துச் சென்றது. அதுவரை யாரும் அதன் பேரழிவின் பெயரை அறிந்திருக்கவில்லை.  பின்புதான் எல்லாரும் அறிந்தார்கள். அதற்கு  ‘சுனாமி’ என்று பெயரென்று. ஒரு பெருந்துயர்  கண் இமைக்கும் நேரத்தில்  நிகழ்ந்துவிட்டது. ஆயிரக்கணக்கில் கொத்து கொத்தாக மனிதர்கள் மாண்டு கிடந்தார்கள். 

தமிழக அரசு உடனே விழித்து எழுந்தது. அனைத்து அரசு பணியாளர்களையும் முடுக்கிவிட்டது. ஊழியர்கள் அர்பணிப்புடன் பணியாற்றினார்கள். அரசு இயந்திரம் வழக்கமான நத்தை வேகத்திலிருந்து தன்னைத்தானே விடுவித்துக் கொண்டு சுழன்று சுழன்று வேலைபார்த்தது. மீட்பு நடவடிக்கையும், புனர்வாழ்வில் அரசு எடுத்துக் கொண்ட சிரத்தையும் ஜெயலலிதாவுக்கு நல்ல பெயரை எடுத்துத் தந்தது.

“அக்னிப்பரீட்சையிலும் வெற்றி”

Jayalalithaa%20002%20VIk_11096.jpgஒரு பெருந்தோல்விக்குப்பின் தையரியமான, மக்களுக்குப் பயன் தரும் நடவடிக்கைகளை எடுத்திருந்தார். சுனாமி மீட்பு நடவடிக்கையிலும் நல்ல பெயர் எடுத்திருந்தார். இந்த  சமயத்தில்தான் காஞ்சிபுரம், கும்மிடிபூண்டியில் இடைத்தேர்தல் வந்தது.  சங்கராச்சாரியார் கைதை மக்கள் எப்படிப் பார்க்கிறார்கள், மக்கள் இந்த அரசை எப்படி எடைப்போடுகிறார்கள் என்று இந்தத் தேர்தல் முடிவுகளின் மூலம் தெரிந்துவிடும் என்று ஏகப்பட்ட எதிர்பார்ப்பு. அதுமட்டுமல்ல இந்த இடைதேர்தலில் தோல்வியுற்றால், நிச்சயம் அடுத்த ஆண்டு வரும் சட்டமன்ற தேர்தல் தோல்வி நிச்சயக்கப்பட்ட ஒன்றாகிவிடும் என்பதால், அனைத்து அமைச்சர்களையும் முடுக்கிவிட்டார்.  அனைத்து அமைச்சர்களும் காஞ்சிபுரம் வீதிகளில் சுற்றி வாக்குச் சேகரித்தனர். அ.தி.மு.க ஒற்றை கட்சியாக  தேர்தலை எதிர்கொண்டு நிற்க, எதிர்த்து தி.மு.க தலைமையில் காங்கிரஸ், பா.ம.க, ம.தி.மு.க, சி.பி.ஐ, சி.பி.எம் என பலமான  கூட்டணி அமைந்தது.   இந்தக் கூட்டணியை எதிர்த்து ஜெயலலிதா வென்றார். அதுவும் காஞ்சிபுரத்தில் 17,648 வாக்கு வித்தியாசத்திலும், கும்மிடிபூண்டியில் 27,000 சொச்சம் வாக்கு வித்தியாசத்திலும். ஆம்... அக்னிபரீட்சையில் வென்றார். 

ஒரு வீழ்ச்சியைக் கண்டு, அதிலிருந்து மீட்சி பெற்று எழுச்சியடைந்து அடுத்த சட்டமன்ற தேர்தலுக்கான காய்களை நகர்த்திக் கொண்டிருந்தார். இரண்டு ஆண்டுகளுக்கு முன் தனக்கு இருந்த மோசமான பிம்பத்தை சரி செய்திருந்தார். சட்டமன்றத் தேர்தல் நெருங்கியது. பல கூட்டணிக் குழப்பங்களும் அரங்கேறின. 
 

(தொடரும்)

 

http://www.vikatan.com/news/coverstory/73718-jayalalithaa-turns-brave-woman----from-mysuru-to-81-poes-garden-travel-story-of-jayalalithaa-episode-34.art

Link to comment
Share on other sites

“பிரிந்த வைகோ... சேர்ந்த சரத்குமார்... தனியன் விஜயகாந்த்” - மைசூரு முதல் - 81, போயஸ் கார்டன் வரை... ஜெயலலிதா டைரி குறிப்புகள்! - 35

 
 

jaya3521_12332.jpg

ஜெயலலிதா

ஜெயலலிதா புகைப்படத் தொகுப்பு 1 ஐ காண இங்கே கிளிக் செய்யுங்கள்

ஜெயலலிதா புகைப்படத் தொகுப்பு 2 ஐ காண இங்கே கிளிக் செய்யுங்கள்

ஜெயலலிதா புகைப்படத் தொகுப்பு 3 ஐ காண இங்கே கிளிக் செய்யுங்கள்

 

'தோல்வி எப்போது தோல்வியாகிறது என்றால், நாம் அந்த தோல்வியிலிருந்து எதுவும் கற்காதபோதுதான்' என்பார் குத்துச்சண்டை வீரர் ரெனன். ஜெயலலிதா கடந்த நாடாளுமன்றத் தோல்வியிலிருந்து அனைத்தையும் நன்கு கற்றிருந்தார். முக்கியமாக, 'இனி வலுவான கூட்டணி இல்லாமல் எதுவும் செய்யமுடியாது' என்பதை..! தன் கூட்டணி வாகனத்திலிருந்து பா.ஜ.க-வை இறக்கிவிட்டு... பிற கட்சிகளுக்காக இருக்கைகளை வைத்திருந்தார். ம.தி.மு.க-வுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடைபெறுவதாக ஹாஸ்யங்கள் உலாவின. சரத்குமாரும் அ.தி.மு.க வாகனத்தில் ஏறுவார் என்று முணுமுணுக்கப்பட்டது.

அந்த சமயத்தில்தான் தி.மு.க மாநாடு திருச்சியில் ஒருங்கிணைக்கப்பட்டது. அது தி.மு.க மாநாடாக மட்டுமில்லாமல், கூட்டணிக் கட்சிகளின் மாநாடாக இருந்தது. எப்படி கருணாநிதிக்கு ஆளுயர  பதாகை வைக்கப்பட்டதோ... அதே போல வைகோ உட்பட பிற கூட்டணித் தலைவர்களுக்கும் வைக்கப்பட்டது. மாநாடு துவக்க நாளன்று, 'தி.மு.க-வில் தான் கேட்ட இடங்கள் கிடைக்காததால்,  அ.தி.மு.க கூட்டணிக்கு வைகோ செல்வது உறுதியாகிவிட்டது' என ஊடகங்கள் எழுதின. ஆனால், இதை மூன்று தரப்பும் உறுதி செய்யாமல், அமைதி காத்தது.

'பிரிந்த வைகோ... சேர்ந்த சரத்குமார்... தனியன் விஜயகாந்த்'

மாநாட்டுக்காக திருச்சிக்கு வந்த கருணாநிதியிடம் இதுகுறித்து நிருபர்கள் கேட்டார்கள். அவர் கோபமாக, “இவ்வளவுதான் ஒதுக்க முடியும். அவர் செல்வதாக இருந்தால் செல்லட்டும்” என்ற தொனியில் பேசிவிட்டார். உடனடியாக வைகோவுக்கு இந்தத் தகவலை ம,தி.மு.க-வினர் எடுத்துக் கூறினர். அதுவரையிலும் அ.தி.மு.க-வுடன் திரைமறைவாக மேற்கொள்ளப்பட்ட கூட்டணி பேரங்கள், இதன்பின் வெளிப்படையாக  நடைபெறத் தொடங்கியது. 19 மாதங்கள் ஜெயலலிதா தன்னை பொடா சட்டத்தின் கீழ் சிறையில் வைத்ததையெல்லாம் மறந்துவிட்டு, அவருடன் இன்முகத்துடன் கைகுலுக்கினார் வைகோ. தி.மு.க மாநாட்டின் கடைசி நாளன்று அங்கு வைக்கப்பட்டிருந்த வைகோ பதாகைகள் கொளுத்தப்பட்டன.

vijeee_11125.jpg

இது பரவாயில்லை என்று சொல்லும் அளவுக்கு இருந்தது, சரத்குமாரின் நிலைப்பாடு. தி.மு.க மாநாட்டில் பங்கேற்று உரையாற்றிய சரத்குமார், “நான் இறந்தால் என் மீது தி.மு.க கொடிதான் போர்த்தப்பட வேண்டும்” என்று மிக உருக்கமாக உரையாற்றினார். கூட்டத்தில் இருந்த தொண்டர்கள் அனைவரும் கண்கலங்கித்தான் போனார்கள். ஆனால், அடுத்த சில தினங்களில் சரத்குமார் எடுத்த முடிவு அதிரடியானது. ஆம், வைகோவாவது கூட்டணிதான் வைத்தார். சரத்குமார் கட்சியிலேயே இணைந்துவிட்டார். ஜெயலலிதாவை  ராதிகாவுடன் சென்று சந்தித்து அ.தி.மு.க-வின் உறுப்பினர் அட்டையைப் பெற்றார். ராதிகாவுக்கும் உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது. இப்போது அ.தி.மு.க கூட்டணியில் ம.தி.மு.க, வி.சி.க என இரண்டு பிரதான கட்சிகள். மேலும் பிரசாரம் செய்ய நட்சத்திரங்கள். தி.மு.க கூட்டணி அளவுக்கு வலுவான கூட்டணி இல்லாவிட்டாலும் மோசம் இல்லை என்று சொல்லும் அளவுக்கு கூட்டணி இருந்தது. எம்.ஜி.ஆர் உண்டாக்கி வைத்திருந்த அ.தி.மு.க-வின் வாக்கு வங்கியும் உடன் இருக்கிறது.

ஹூம்... இந்தத் தேர்தலில் இன்னொரு கட்சியும் புதிதாக களத்தில் இறங்கியது. ஆம், தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன் விஜயகாந்த் தொடங்கிய தே.மு.தி.க-வும் இப்போது களத்தில்.  “தி.மு.க, அ.தி.மு.க-வுக்கு நாங்கள்தான் மாற்று. மக்களுடனும் தெய்வத்துடனும் மட்டும்தான் கூட்டணி” என்று சொல்லிவிட்டு அனைத்து தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை போட்டுவிட்டு, அவரும் பிரசாரத்தை முடுக்கிவிட்டார்.இப்படியாகத் தேர்தல் பிரசாரம் தொடங்கியது. இவர்கள் கொப்பளித்த வார்த்தைகளின் உஷ்ணத்தில் களம் சூடாகியது.

கருணாநிதியின் 'இலவச அஸ்திரம்'

vaikoo_11325.jpg

நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில் இருந்த எந்த மோசமான பிம்பமும் இப்போது ஜெயலலிதாவுக்கு இல்லை. 'கூட்டணியில் கட்சிகளின் எண்ணிக்கை மாறுபட்டாலும் ஏறத்தாழ ஒரே பலத்துடன்தான் தேர்தலை சந்திக்கப்போகிறோம்' என்பதை உணரத் தொடங்கினார் கருணாநிதி. ஆக, ஜெயலலிதாவை வீழ்த்த  கூட்டணி மட்டும் போதாது. வேறு அஸ்திரங்களும் தேவை என்று எண்ணிய கருணாநிதி வடிவமைத்ததுதான்...  ‘இலவச அஸ்திரம்’! ஆம், 'இரண்டு ரூபாய்க்கு அரிசி, இலவசத் தொலைக்காட்சி, இரண்டு ஏக்கர் நிலம், கேஸ் இணைப்பு' என அவரின் தேர்தல் அறிக்கை இலவசங்களால் நிரம்பி வழிந்தது. அ.தி.மு.க கூட்டணி கொஞ்சம் ஆடித்தான் போனது.  சென்ற சட்டமன்றத் தேர்தலில், 'தனக்கு அநீதி இழைக்கப்படுகிறது. என் இருப்பை இல்லாமல் செய்யப்பார்க்கிறார் கருணாநிதி... பொய் வழக்கு போடுகிறார்' என்று தன்னைச் சுற்றியே பிரசாரத்தை வடிவமைத்த ஜெயலலிதா இந்தத் தேர்தலில் அப்படிச் சொல்லமுடியாது. எனவே, அவரும் சில இலவசங்களை வழங்குவதாகச் சொன்னார்.

saaeee_11169.jpg

பன்னிரெண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றால், இலவசக் கணினி வழங்கப்படும் என்றார்.  தொலைக்காட்சிக்கு முன்னால் கணிப்பொறி எடுபடவில்லை.  அ.தி.மு.க தோல்வியைச் சந்தித்தது. ஆனால், நாடாளுமன்றத் தேர்தல் அளவுக்கு படுமோசமான தோல்வி அல்ல... கவுரவமான தோல்விதான்! அ.தி.மு.க 61 இடங்களைக் கைப்பற்றியது. கூட்டணி பலம்... இலவசம் என எல்லாம் இருந்தும் தி.மு.க-வால் தனிப் பெரும்பான்மையைப் பெற முடியவில்லை.  கூட்டணிக் கட்சிகள் துணையுடன் தி.மு.க ஆட்சி அமைத்தது.

யாரும் எதிர்பார்க்காத வண்ணம் தே.மு.தி.க 8 சதவிகித வாக்குகளைப் பெற்று இருந்தது. அந்த கட்சியிலிருந்து விஜயகாந்த் மட்டும் சட்டமன்றத்துக்குத் தேர்வு செய்யப்பட்டார்.

இப்போது தி.மு.க ஆட்சி! அ.தி.மு.க  வலுவான எதிர்க்கட்சி. எப்படியாவது கூட்டணி ஆட்சி அமைத்துவிடலாம் என்று நினைத்தக் காங்கிரஸ், கடைசி நேரத்தில், கூட்டணி மாறிய ம.தி.மு.க, விஜயகாந்த் வரவால் தன் வாக்கு வங்கியில் சேதமடைந்திருந்த பா.ம.க, இடதுசாரிகள், விடுதலைச் சிறுத்தைகள் முதன்முதலாக சட்டமன்றத்துக்குள் தே.மு.தி.க என பி.ஜே.பி தவிர்த்து அனைத்துக் கட்சிகளும் இப்போது சட்டப்பேரவையில். அடுத்தடுத்து காட்சிகள் அரங்கேறத் தொடங்கின...

-(தொடரும்)

http://www.vikatan.com/news/coverstory/73801-party-switching-in-admk---from-mysuru-to-81-poes-garden-travel-story-of-jayalalithaa-episode-35.art

Link to comment
Share on other sites

“17 ஆண்டுகளுக்குப் பின் நேருக்கு நேர் சந்தித்துக் கொண்ட கருணாநிதி - ஜெயலலிதா” - மைசூரு முதல் - 81, போயஸ் கார்டன் வரை... ஜெயலலிதா டைரி குறிப்புகள்! - 36

 

Episode%2036_12492.jpg

 

ஜெயலலிதா

 

காலநிலை உங்கள் வார்த்தைகளில் நிச்சயம் ஆதிக்கம் செலுத்தும் தானே...? ஏதோ ஒரு மலைவாசற்தலத்தில் ஒரு மெல்லிய தூரலில் நீங்கள் ஒரு உரையாடலை நிகழ்த்தும்போது நிச்சயம் வார்த்தைகள் தடிக்காது. ஒருவேளை பல ஆண்டுகள் கழித்து உங்கள் எதிரியாக நீங்கள் நினைக்கும் நண்பரை அப்படியான இடத்தில் சந்தித்தால் நீங்கள் முகமன் கூறுவீர்கள். நட்பு பாராட்டினாலும் ஆச்சர்யப்படுதவற்கு இல்லை. அதே நேரம், வெம்மையான வெயிற் காலத்தில் ஒரு இறுக்கம் நிலவும். அது வெட்கை தரும் இறுக்கம்.  இதை மேம்போக்காகச் சொல்லவில்லை... இது குறித்து ஆய்வுகள் நடைபெற்று இருக்கின்றன. ஜான் க்ரோகல் என்னும் மேற்கத்திய உளவியல் நிபுணர் இது குறித்து விரிவான ஆய்வை நிகழ்த்தி இருக்கிறார். சரி... சரி...  நாம் விஷயத்துக்கு வருவோம்...  சரியாக 17 ஆண்டுகள் கழித்து ஜெயலலிதாவும் கருணாநிதியும்  ஒரு வெயிற்காலத்தில் நேருக்கு நேர்  சந்தித்து கொண்டதால்தானோ என்னவோ அங்கே இறுக்கம் நிலவியது. அவர்கள் முகமன் கூறிக்கொள்ளவில்லை.

ஆம், தி.மு.க ஆட்சி பொற்றுபேற்று சரியாக 12 நாட்கள் ஆகி இருக்கும்... காங்கிரஸ் உறுப்பினர் பீட்டர் அல்போன்ஸ், "கடந்த அ.தி.மு.க அரசு, மத்திய அரசை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. மத்திய அரசு தமிழகத்தில் கடல்நீரைக் குடிநீர் ஆக்கும் திட்டத்துக்கு 1000 கோடி ஒதுக்கி இருந்தது. ஆனால், தமிழக அரசு இந்தத் திட்டம் குறித்த அறிக்கையை அனுப்பவில்லை" என்று தன் உரையைத் தொடங்கினார்.  இந்த  உரைக்கு அவையில் இருந்த அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்களும் கடுமையான ஆட்சேபம் தெரிவித்து கோஷம் எழுப்பினர். ஒரு சட்டமன்ற உறுப்பினர் மைக்கை தூக்கி காங்கிரஸ் உறுப்பினர்கள் மீது எரிந்தார். அப்போது அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினராக இருந்த சேகர் பாபு கோபமாக முதல்வர் கருணாநிதியை நோக்கிச் சென்றார். சட்டமன்றமே அல்லோலப்பட்டது. 59 அ.தி.மு.க உறுப்பினர்களும் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.  ஜெயலலிதா வெகுண்டெழுந்தார். அன்று மாலையே பத்திரிகையாளர்களை சந்தித்த ஜெயலலிதா, “இது அநீதி. நான் சட்டமன்றம் செல்லப்போகிறேன்” என்று அறிவித்தார். அவையில் இருந்த அ.தி.மு.க உறுப்பினர்கள் அனைவரும் இடைநீக்கம் செய்யப்பட்ட நிலையில்... ஜெயலலிதா மட்டும் தனியாக மே 27, 2006 சனிக்கிழமை சட்டமன்றம் சென்றார். 

“தனி  ஒருவர்... முப்பது நிமிட உரை”

Jayalalitha%20with%20Logo_12596.jpgசரியாக காலை 9.28 மணிக்கு அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் புடைசூழ சட்டமன்ற வளாகத்துக்குள் நுழைந்த ஜெயலலிதா, தனியாக அவைக்குள் சென்றார். வளாகத்தில் பரபரப்புத் தொற்றிக் கொண்டது.  சட்டமன்ற உறுப்பினர்கள் உண்மையில் இத்தகைய சூழலை எதிர்பார்க்கவில்லை.   கடைசியாக ஜெயலலிதா - கருணாநிதி என இருவரும் அவையில் இருந்தது மார்ச் 25, 1989-ம் ஆண்டு. அன்று நிகழ்ந்த பட்ஜெட் கூட்டத்தொடர் நிகழ்வில்தான் கருணாநிதி கையிலிருந்த பட்ஜெட் உரை பிடுங்கப்பட்டு கிழிக்கப்பட்டது. ஜெயலலிதா, தான் தாக்கப்பட்டதாகக் கூறி அவையிலிருந்து வெளியேறினார். அதன்பின் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது கருணாநிதி அவைக்கு வரவில்லை. பின் கருணாநிதி முதல்வரக இருந்தபோது ஜெயலலிதாவும் அவைக்கு வரவில்லை. இது நடந்து 17 ஆண்டுகளுக்குபின் ஜெயலலிதாவும்-கருணாநிதியும் அவையில்.  ஜெயலலிதா அவையில் நுழைந்த சிறிது நேரத்தில் கருணாநிதி வந்தார். அனைத்து உறுப்பினர்களும் எழ, ஜெயலலிதா தன் இருக்கையிலேயே அமர்ந்திருந்தார்.  பிற அ.தி.மு.க உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதால்  ஜெயலலிதா இருக்கைக்கு பின் இருந்த இருக்கைகள் காலியாக இருந்தன.  
சபாநாயகர் ஆவுடையப்பனிடம் 95 நிமிடங்கள் பேச அனுமதிகேட்டார் ஜெயலலிதா. முப்பது நிமிடங்கள் வழங்கப்பட்டது.  புள்ளிவிவரத் தகவல்களுடன் உரையைத் தொடங்கினார்  ஜெயலலிதா. புள்ளிவிவரங்கள் மட்டும் இல்லை. அதனுடன் தி.மு.க-வைக் கோபபடுத்தும் ‘மைனாரிட்டி அரசு’ என்ற பதமும் இருந்தது. இந்த வார்த்தையைத் தன் உரையின்போது அழுத்திக் கூறினார்  “தி.மு.க தன் தேர்தல் அறிக்கையில் நிலமற்ற ஏழை விவசாயிகள் 86 லட்சம் விவசாயிகளுக்கு 2 ஏக்கர் இலவசம் நிலம் தருவதாக கூறி இருக்கிறது. இதற்கு 50 லட்சம் ஏக்கர் நிலத்தை அடையாளம் கண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.  அரசுக்குச் சொந்தமாக 3.5 லட்சம் எக்கர் நிலம்தான் இருக்கிறது. மீதம் உள்ள 46.5 லட்சம் ஏக்கர் நிலத்தை யாரிடமிருந்து கைப்பற்றப்போகிறது? ஏழை மக்களிடமிருந்தா?" என்று கேள்வி எழுப்பியவர். மீண்டும் தொடர்ந்தார், “1.72 கோடி விவசாயிகளுக்கு நிலம் தருவதாக இருந்தால் 86 லட்சம் விவசாயிகளுக்கு 2 ஏக்கர் இலவசம் நிலம் தருவதாக 1.72 கோடி ஏக்கர் நிலம் தேவை நீங்கள் கூறுவது போல் 50 லட்சம் ஏக்கர் நிலம் இல்லை” 
அமைச்சர்கள் குறிக்கிட்டனர். ஜெயலலிதா அதைப் பொருட்படுத்தாமல் உரையைத் தொடர்ந்தார். உன்னிப்பாக உரையைக் கவனித்துக் கொண்டிருந்தார் கருணாநிதி...  
அடுத்து, “கடந்த அ.தி.மு.க ஆட்சியின் போதே கட்டாயமதமாற்றத் தடைச்சட்டம் ரத்து செய்யப்பட்டு விட்டது. இப்போது நீங்கள் அதை ரத்து செய்யபோவதாகக் கூறுகிறீர்கள். புதைக்கப்பட்ட பிணத்தைத் தோண்டி எடுத்து மீண்டும் ஏன் புதைக்க வேண்டும்?” என்றார். 
அப்போது குறுக்கிட்ட கருணாநிதி, “அதன் இறப்பு குறித்து சந்தேகம் இருந்ததால், அதை மீண்டும் தோண்டி எடுத்துள்ளோம்” என்று பதிலளித்தார். 
இப்படியாக அந்த 30 நிமிடங்களும் குளிரூட்டப்பட்ட சட்டமன்ற அறையின் குளிர்ச்சியைத் தாண்டி விவாதம் உஷ்ணமாகச் சென்றது. 
அவை நேரம் முடிந்து வெளியே வந்த ஜெயலலிதா, பத்திரிகையாளர்களிடம், “எங்கள் கட்சியைச் சேர்ந்த 60 சட்டமன்ற உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். நான் மட்டும்தான் என் கட்சி சார்பாக இருக்கிறேன். அதனால், எனக்கு கூடுதல் நேரம் வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அவர்கள் நான் கேட்ட நேரத்தை வழங்கவில்லை.  இது ஜனநாயகப் படுகொலை”  என்றார்.  அதன் பின் அவர் அந்தக் கூட்டத்தொடரில் கலந்துகொள்ளவில்லை. 

‘மனகசப்பை கொண்டு வந்த கருத்துக்கணிப்பு’

Jayalalithaa%20002%20Logo_12199.jpg

 

தி.மு.க ஆட்சி பொறுப்பேற்ற சில மாதங்களில் அவர்கள் வாக்குறுதி கொடுத்ததுபோல் தொலைக்காட்சிப் பெட்டிகளை விநியோகிக்கத் தொடங்கினர். பொறுபேற்ற அன்றே கிலோ இரண்டு ரூபாய் அரிசி திட்டத்துக்கு கையொப்பமிட்டிருந்தார் கருணாநிதி. எல்லாம் சுமூகமாக போய்க்கொண்டிருந்தது அந்தக் கருத்துக்கணிப்பு வரும் வரை.  கருணாநிதி குடும்பத்துக்குச் சொந்தமான “தினகரன்” நாளிதழில் கருணாநிதிக்கு அடுத்து தி.மு.க-வின் தலைமைப் பொறுப்பை யார் ஏற்க வேண்டும் என்று விரும்புகிறீர்கள் என்ற தொணியில் ஒரு கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  இதில் 70 சதவிகிதம் பேர் மு.க.ஸ்டாலினுக்கும், 2 சதவீதம் பேர் அழகிரிக்கும் ஆதரவாக வாக்களித்திருப்பதாக முடிவுகள் வெளியிடப்பட்டது. அழகிரி ஆதரவாளர்கள் கொதித்தெழுந்தார்கள். மதுரையில் தினகரன் அலுவலகம் மே 9-ம் தேதி தாக்கப்பட்டது. ஜன்னலை உடைத்து அலுவலகத்துக்குள் பெட்ரோல் குண்டுகள் எரியப்பட்டது.  மூன்று ஊழியர்கள் இறந்தார்கள்.


இது தொடர்பாக அழகிரி மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். கைது செய்யவேண்டும். அப்படி எடுக்கவில்லை என்றால் விளைவுகள் மோசமாக இருக்கும்  என்று தயாநிதி மாறன் அமைச்சர்களுக்கு அழுத்தம் கொடுத்ததாக  பேச்சுகள் உலாவின.  தி.மு.க உயர்மட்டக் குழுக் கூட்டம்  கூடியது. தயாநிதிமாறன் கட்சி விரோத நடவடிக்கைகள் ஈடுப்படுவதாக விவாதிக்கப்பட்டது. தயாநிதி மாறன் கட்சியிலிருந்து கட்டம் கட்டப்பட்டார்... கருணாநிதி குடும்பத்தில் விரிசல் விழுந்தது. 
இதைத் தனக்கு சாதகமாக மாற்றிக்கொள்ள அ.தி.மு.க திட்டமிட்டது. யாரும் எதிர்பார்க்காத வண்ணம்...  மாறன் சகோதரர்களுக்கு ஆதரவாக நமது எம்.ஜி.ஆரில் கட்டுரைகள் வெளியாகின!

(தொடரும்)

http://www.vikatan.com/news/coverstory/73904-karunanidhi-jaya-together-in-house-after-17-long-years---from-mysuru-to-81-poes-garden-travel-story-of-jayalalithaa-episode-36.art

Link to comment
Share on other sites

“யார் அஞ்சாநெஞ்சன்...?” - மைசூரு முதல் - 81, போயஸ் கார்டன் வரை... ஜெயலலிதா டைரி குறிப்புகள்! - 37

 
 

EPISODE%2037_11060.jpg

ஜெயலலிதா

 

 

“யுத்தத்திலும் காதலிலும் எல்லாம் சரி என்று அவர்கள் சொன்னார்கள் தானே? நான் இதைக் கேட்டிருக்கிறேன்.”

யார் சொன்னார்கள்?

“தெரியவில்லை. ஆனால் மக்கள்தான்”

“சொல்லி இருப்பார்கள். ஆனால், அது வெற்றிபெற்ற மக்களின் கூற்று. தோல்விடைந்தவர்களுடையது அல்ல; அதிகாரத்தின் கூற்று. அதிகாரமற்ற சாமான்யனின் கூற்று அல்ல. ‘எல்லாம் சரிதான்’ ஆனால், அந்த  ‘சரி’யின் நியாயத்தை முடிவு தீர்மானிக்கிறது” என்பதாக ஒரு உரையாடல் ஜான் கொன்னாலி எழுதிய  ‘தி இன்ஃபெர்னல்ஸ்” நாவலில் வரும். இது எவ்வளவு சத்தியமான வார்த்தைகள்.  

“கொத்து கொத்தான மரணமும், தேர்தலும்”

Jayalalithaa%20003_12472.jpg

 


2006-ம் ஆண்டு ஈழ மக்கள் மீதான தாக்குதல் மீண்டும் துவங்கியது. ஆகஸ்ட் 14, 2006-ம் ஆண்டு முல்லைத்தீவு ஆதரவற்ற குழந்தைகள் காப்பகமான செஞ்சோலையில் குண்டுகளை வீசி 61 குழந்தைகளைக் கொன்றது இலங்கை ராணுவம். அந்தப் புள்ளியிலிருந்து தொடங்கிய அழிப்பு நடவடிக்கை 2007 - 2008-ம் ஆண்டுகளில் உச்சம் தொட்டது.  தினம் தினம் கொத்துக் கொத்தாகத் தமிழ் மக்கள் செத்துக் கொண்டிருந்தார்கள். இந்த சமயத்தில் தமிழகம் தன்னிச்சையாகக் கிளர்ந்தெழுந்தது. இளைஞர்கள் கரம் கோத்தார்கள்.  “காங்கிரஸ் தலைமையிலான மத்தியஅரசுதான் இந்த இன அழிப்பு நடவடிக்கைகளை  முன்னெடுக்கிறது. மத்தியஅரசு இலங்கையில் தமிழ் மக்களைக் கொல்ல  ஆயுதம் தருவதை உடனே நிறுத்த வேண்டும். தமிழ் மக்களைக் காக்கவேண்டும்” என்றார்கள். மயிலை மாங்கொல்லையில் நடந்த நிகழ்வில் கருணாநிதி, “மத்தியஅரசு தமிழ் மக்களின் குரலுக்குச் செவிமடுக்கத் தவறினால் தமிழகத்திலிருந்து நாற்பது நாடாளுமன்ற உறுப்பினர்களும் ராஜினாமா செய்வார்கள்” என்று அறிவித்தார். கரகோஷம் விண்ணைப் பிளந்தது. கருணாநிதி பெரிதாக எதையோ செய்யபோகிறார். நன்மைகள் நடக்கப் போகிறது  என்று தமிழர்கள் நம்பினார்கள்.
ஆனால், அந்த அறிவிப்பு காற்றில் கரைந்து போனது. ஆம், அதன்பின் அவர் செய்தது எல்லாம் இங்கு போராடிய தமிழக மக்களை ஒடுக்கியதுதான். ஒடுக்கியது மட்டும்தான். அப்போது, ஜெயலலிதா, “போர் என்றால் மக்கள் சாவத்தான் செய்வார்கள்” என்று சிதறிக்கிடந்த ஈழமக்களின் பிணங்களைக் கடந்து சென்றார்.  இத்தகைய சூழலில் நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தலிலும் மீண்டும் காங்கிரஸ்-தி.மு.க கூட்டணியே அமைந்தது. இந்தக் கூட்டணியை வீழ்த்த  அ.தி.மு.க தலைமையில் பா.ம.க, ம.தி.மு.க, சி.பி.ஐ மற்றும் சி.பி.எம் கட்சிகளும்  அணிதிரண்டன. உக்கிரமாகக் கொத்துக் குண்டுகளை வீசி இலங்கை ராணுவம் தமிழ் மக்களைக் கொன்று கொண்டிருக்க. இங்கே தி.மு.க - காங்கிரஸ் கூட்டணி வாக்குக் கேட்டுக் கொண்டிருந்தது. தி.மு.க தமிழர்களை வஞ்சித்து விட்டது என ஒரு கோப அலை அந்தக் கூட்டணிக்கு எதிராக இருந்தது. ஆனால், இது தேர்தலில் எதிரொலிக்கவில்லை. ஆம், தி.மு.க கூட்டணியே அதிக இடங்களில் வெற்றிபெற்றது. 29 இடங்களைக் கைப்பற்றியது. சென்றமுறை போல அனைத்துத் தொகுதிகளிலும் படுதோல்வி இல்லாமல், அ.தி.மு.க கூட்டணி 12 இடங்களைக்  கைப்பற்றியது.

மீண்டும் மத்தியில் காங்கிரஸ் ஆட்சி. அதில் மீண்டும் தி.மு.க அமைச்சர்கள். இந்தமுறை அந்த அமைச்சரவையில்  மு.க. அழகிரியும் இடம்பெற்றார். கருணாநிதியின் மொழியில்  “கண்கள் பனிக்க... இதயம் இனிக்க” மீண்டும் இணைந்த குடும்பத்திலிருந்து தயாநிதி மாறனும் அமைச்சர் ஆனார்.  இப்படியான முடிவை யாரும் எதிர்பார்க்கவில்லை. குறிப்பாக ஜெயலலிதா கொஞ்சம் துவண்டுதான் போனார்.  அ.தி.மு.க-வே வலுவிழந்தது போன்ற ஒரு தோற்றம் வந்தது. பலர் அ.தி.மு.க-விலிருந்து தி.மு.க-வுக்கு தாவிக் கொண்டிருந்தார்கள். இதையெல்லாம் உணராதவராக ஜெயலலிதா கொடநாட்டில் பிடித்தமான ஆங்கிலப் புத்தகங்களைப் புரட்டிக் கொண்டிருந்தார். எளிய எம்.ஜி.ஆர் ரசிகர்கள் தங்கள் தலைவர் உருவாக்கிய கட்சி காணாமல் போய்விடுமோ என்று மன அழுத்தத்தில் உழன்றுக் கொண்டிருந்தார்கள்...!

“கட்சியை மீண்டும் உயிர்பித்தல்”

Jayalalithaa%20001_12230.jpg

 

 

இப்படியான சூழலில் தி.மு.க-வுக்கு எதிராக ஒரு எதிர்ப்பு அலை தமிழகத்தில் கடுமையாகவீசியது. அமைச்சர்கள் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்கிறார்கள். சினிமா தொழில் முழுவதும் கருணாநிதி குடும்பத்தின் கைகளுக்குச் சென்றுவிட்டது. மதுரையில் அழகிரி தலைமையில் தனி ராஜ்ஜியமே நடக்கிறது என்று குரல்கள் கேட்கத் தொடங்கியது. தேர்தலும் நெருங்கிக் கொண்டிருந்தது. மீண்டும் ஜெயலலிதா சுறுசுறுப்பானார். தி.மு.க ஆட்சிக்கு எதிராகத் தரவுகளைத் திரட்டத் தொடங்கினார். கோவையில் ஆர்ப்பாட்டத்தை அறிவித்தார். அ.தி.மு.க உறுப்பினர்கள் உற்சாகம் அடைந்தனர். மக்களைத் திரட்டத் தொடங்கினர். ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட ஜெயலலிதா, “விரைவில் எம்.ஜி.ஆர் ஆட்சி வரும். தீய சக்திகள் விரட்டப்படும்” என்று கர்ஜித்தார். அந்த ஆர்ப்பாட்டத்தில்,  ஏறத்தாழ 8 இலட்சம் பேர் திரண்டதாகப் புள்ளி விபரம் சொல்லியது. தி.மு.க அதிர்ந்து தான் போனது.

இதே உற்சாகத்தில் அடுத்து  அழகிரியின் கோட்டையாகக் கருதப்பட்ட மதுரையில் ஆர்ப்பாட்டத்தை அறிவித்தார். அங்கும் லட்சக்கணக்கில் மக்கள் திரண்டார்கள். அந்தக் கூட்டத்தில் ஜெயலலிதா, “ நான் மதுரையில் கால் எடுத்துவைத்தால், என்னைக் கொல்வதாக எனக்குப் பல மிரட்டல்கள் வந்தன.  இது அஞ்சாநெஞ்சனின்  கோட்டையாம்.  நான் அத்தகைய மிரட்டல்களுக்கு என்றுமே அஞ்சப்போவதில்லை. நான் அஞ்சாமல் மதுரைக்கு வந்துள்ளேன். ஆனால் என்னைக் கொல்வதாக கூறியவர்கள் எங்கே? யார் உண்மையான அஞ்சாநெஞ்சன்?” என்று திரண்டிருந்த கூட்டத்தின் முன் முழங்கினார். கூட்டம் ஆர்ப்பரித்தது.

கூட்டம் கூடத் தொடங்கிவிட்டது. கட்சிக்காரர்களும் சுறுசுறுப்பாக வேலைப்பார்க்கத் தொடங்கி விட்டார்கள். ஆனால், இது மட்டும் போதாது. கூட்டணி வேண்டும். அதுவும் பலமான கூட்டணி. என்ன செய்யலாம் என்று நினைத்தவர் விஜயகாந்துடன் கூட்டணி அமைக்கத் தயாரானார். 

ஒரு ஆங்கில நாவலிலிருந்து இந்த அத்தியாயத்தை தொடங்கினேன். இன்னொரு ஆங்கில நாவலிலிருந்து முடிக்கிறேன்...
“எங்கு நாம் நமக்கான கூட்டணியைக் கண்டடைய முடியும்.?”  “நிச்சயம் எதிரிகளிடமிருந்துதான்!” என்பதாக ஒரு உரையாடல் ஜோ அபர்க்ரோம்பி எழுதிய ஹாஃப் த வார்ல்ட் (Half the world) நாவலில் வரும். இது எங்கு பொருந்துகிறதோ இல்லையோ நிச்சயம் அரசியலுக்கு மிகச்சரியாக பொருந்துகிறது. ஆம் இங்கு கூட்டணி, கொள்கைகள்மீது கட்டமைக்கப்படுவதில்லை. ஒரு தேவையை வென்றடைய எதிரிகள் ஒன்றிணைக்கிறார்கள்.   

“வீட்டுக்கு வீடு ரேஷன் பொருட்களை வழங்குவேன் என்றுகூறுவதெல்லாம் குடிகாரன் பேச்சைப் போன்றதுதான். நான் யாரைச் சொல்கிறேன் என்பது சம்பந்தப்பட்டவர்களுக்குத் தெரியும்.” என்று விஜயகாந்தை குடிகாரர் என்ற தொணியில் விமர்சித்து ஜெயலலிதா அறிக்கை வெளியிட்டதை விஜயகாந்தும்...“ஊத்திக் கொடுத்தாரா” என்ற தொணியில் விஜயகாந்த் பேசியதை ஜெயலலிதாவும் மறந்து..  இரண்டு எதிரிகளும் கரம் கோத்தார்கள்.

(தொடரும்)

http://www.vikatan.com/news/coverstory/73976-who-is-anjanenjan----from-mysuru-to-81-poes-garden-travel-story-of-jayalalithaa-episode-37.art

Link to comment
Share on other sites

“எல்லாம் ஆன ஜெயலலிதா...!” - மைசூரு முதல் - 81, போயஸ் கார்டன் வரை... ஜெயலலிதா டைரி குறிப்புகள்! - 38

 

EPI_38_11463.jpg

ஜெயலலிதா

 

சீன ராஜதந்திரி சன் சூ சொல்வார், “நீங்கள் உங்களையும் நன்கு அறிந்திருக்கிறீர்கள்... எதிரியையும் நன்கு அறிந்திருக்கிறீர்கள் என்றால், உங்களுக்கு எந்தப் போரிலும் தோல்வி இல்லை. உங்களுக்கு உங்கள் எதிரியைப் பற்றித் தெரியாது. ஆனால், உங்களுடைய பலம், பலவீனம் தெரியும் என்றால்... வெற்றியும், தோல்வியும் மாறிமாறி கிடைக்கும். உங்களுக்கு உங்களையும் தெரியாது... எதிரியையும் தெரியாது என்றால், படுதோல்வியைத்தான் பரிசாகப் பெறுவீர்கள்.” ஜெயலலிதா 2011 சட்டமன்றத் தேர்தலில் தன் பலத்தையும், பலவீனங்களையும் மட்டுமல்லாமல்... கூட்டணிக் கட்சிகள், எதிர்க்கட்சிகளின் பல, பலவீனங்களையும் அறிந்திருந்தார். அதற்கேற்றார்போல் வியூகங்களை வகுத்தார். 

“வியூகத்தில் வீழ்ந்த ம.தி.மு.க-வும், வேட்பாளர் பட்டியலும்!”

Jayalalithaa_38-1_10490.jpg

 

இந்த வியூகத்தில் முதலில் வீழ்ந்தது தி.மு.க அல்ல... அப்போது கூட்டணிக் கட்சியாக இருந்த ம.தி.மு.க-தான். ஆம், ம.தி.மு.க-வின் பலம் இவ்வளவுதான்... ‘அவர்களுக்கு அதிகபட்சமாக 12 தொகுதிகளைத்தான் ஒதுக்க முடியும்’  என்று அ.தி.மு.க சொல்ல... வைகோ, 21 தொகுதிகளில் விடாப்பிடியாக நின்றார். அ.தி.மு.க-வின் மூத்த நிர்வாகிகள் பலசுற்று பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனால், எந்த முன்னேற்றமும் இல்லை. மார்ச் 20, 2011 ஜப்பானில்  நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 9-ஆக பதிவாகி இருந்தது. அதே நாளில், ம.தி.மு.க-வின் தலைமை அலுவலகமான தாயகத்திலும் ஓர் அதிர்வு ஏற்பட்டது. அது அரசியல் அதிர்வு. அன்று தாயகத்தில் நடந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில், அ.தி.மு.க கூட்டணியிலிருந்து விலகுவதாக முடிவு எடுக்கப்பட்டது. தாயகத்திலிருந்து வந்த அறிக்கையில், “காலம் கற்றுத் தந்த பாடத்தால், ஜெயலலிதா முதிர்ச்சி அடைந்து இருப்பார்... பக்குவப்பட்டிருப்பார் என்று நாங்கள் நினைத்தோம். ஆனால், எங்கள் எண்ணம் பொய்த்துவிட்டது. அவர் இன்னும் தன்னிச்சையான முடிவுகளைத்தான் எடுத்துக்கொண்டிருக்கிறார். இதையெல்லாம் அப்படியே ஏற்றுக்கொண்டு கூட்டணியில் தொடர்வது எங்களுக்கு உவப்பானதாக இருக்காது” என்றது அந்த அறிக்கை.  ம.தி.மு.க கூட்டணியிலிருந்து விலகியது.  

தே.மு.தி.க., இடதுசாரிகளுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை இழுத்துக்கொண்டே சென்றுக்கொண்டிருந்தது. தேர்தல் நாள் வேறு நெருங்கிக்கொண்டே இருந்தது. பார்த்தார் ஜெயலலிதா... மார்ச் 16, புதன்கிழமை 160 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார். கூட்டணிக் கட்சிகள் அதிர்ந்துபோயின... அதன்பின்தான் பேச்சுவார்த்தை சுறுசுறுப்பானது. தொகுதிப் பங்கீடு ஒரு முடிவுக்கு வந்தது. 

“கருணாநிதியை உள்வாங்கிக் கொண்ட ஜெ.!”

Jayalalithaa_38_10065.jpg

 

 

கூட்டணிக் கட்சிகளைச் சமாளித்தாகிவிட்டது. அடுத்து, எதிர்க்கட்சியான தி.மு.க-வை... அதன் கூட்டணியை வீழ்த்த வேண்டும். என்ன செய்யலாம் என்று யோசித்தவருக்கு, 2006 சட்டமன்றத் தேர்தல் முடிந்த பிறகு, நாகப்பட்டினத்தில் ஒரு மீனவர் குடியிருப்பில் எடுக்கப்பட்ட ஒரு கருத்துக் கணிப்பு நினைவுக்கு வந்தது. 

அதன் சாரம் இதுதான்,

“நீங்கள் யாருக்கு வாக்களித்தீர்கள்...?” 

 “தி.மு.க-வுக்கு.”

‘‘ஏன்..?’’ 

‘‘சுனாமி வந்தபோது ஜெயலலிதாதானே துரிதமான நடவடிக்கையை எடுத்தார். உங்கள் புனர்வாழ்வுக்காக மெனக்கட்டார்?’’
ஆம். ஆனால், தி.மு.க-தானே இலவச தொலைக்காட்சி தருகிறேன் என்றது.

இதைக் கவனித்த ஜெயலலிதா, கருணாநிதியின் அஸ்திரங்களை அப்படியே சுவிகாரம் செய்துகொண்டார். இலவசங்களை... மன்னிக்கவும், விலையில்லாப் பொருட்களை அறிவித்தார்... வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ள குடும்பத்துக்கு 20 கிலோ அரிசி, மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி, பள்ளி மாணவர்களுக்கு சைக்கிள், லேப்டாப் என அறிவித்தபோது... தி.மு.க கொஞ்சம் ஆடித்தான் போனது. 

இலவசங்களை அறிவித்ததோடு நில்லாமல் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டார். தி.மு.க தமிழர்களுக்குச் செய்த துரோகங்களைப் பட்டியலிட்டார், ‘‘தி.மு.க-வினர் ஆக்கிரமித்த நில ஆக்கிரமிப்புகள் மீட்கப்படும்’’ என்றார். மக்கள் இதை அப்படியே உள்வாங்கி, வாக்குகளாக மாற்றினார்கள். அ.தி.மு.க அனைத்து கருத்துக் கணிப்புகளையும் பொய்யாக்கி... மாபெரும் வெற்றி பெற்றது. தி.மு.க-வால் பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்தைக்கூட கைப்பற்ற முடியவில்லை. வெறும் 23 தொகுதிகளைக் கைப்பற்றி படுதோல்வி அடைந்தது. தே.மு.தி.க பிரதான எதிர்க்கட்சி ஆனது.

Jayalalithaa_38-2_10398.jpgஜெயலலிதா உற்சாகம் ஆனார். தி.மு.க-வுக்கு எதிரான தன் அதிதீவிர நடவடிக்கைதான் தன் வீழ்ச்சிக்குக் காரணம் என்று உணர்ந்தவர், இந்த முறை நிதானமாகச் செயல்பட்டார். யாரையும் கைது செய்யவில்லை... எந்த அடாவடி நடவடிக்கையும் இல்லை... இந்த முறை ஆட்சியில் தன் ‘அம்மா’ பிம்பத்தை வலுவாக்குவதில்தான் முழுக் கவனத்தையும் செலுத்தினார். அம்மா உணவகம், அம்மா மருந்தகம், அம்மா திட்டம், அம்மா குடிநீர் என எங்கு காணினும் ‘அம்மா’ மயம் ஆனது.  

இது ஒரு பக்கமென்றால், ஆட்சி அமைத்த சில மாதங்களிலேயே ஜெயலலிதாவுக்கும், விஜயகாந்த்துக்கும் முட்டிக்கொண்டது. பால், பேருந்துக் கட்டண உயர்வு தொடர்பாக சட்டமனறத்தில் விவாதம் எழுந்தபோது... விஜயகாந்த் சட்டமன்றத்தை படப்பிடிப்புத் தளமாக நினைத்து ஆளும் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களைப் பார்த்து நாக்கைத் துருத்தினார். ஜெயலலிதா கடுங்கோபம் கொண்டார், “நான் தே.மு.தி.க-வுடன் கூட்டணி வைத்ததற்காக வருந்துகிறேன்” என்றார். கூட்டணி முறிந்தது. 

“எல்லாமுமான ஜெயலலிதா!”

முன்பே இலவசங்களை அறிவித்து கருணாநிதியின் வியூகங்களைத் தனதாக்கிக் கொண்டிருந்தவர். அடுத்து உள்வாங்கியது தமிழுணர்வை தூண்டும் கட்சிகளை. இலங்கை அரசுக்கு எதிரான தீர்மானத்தை சட்டப்பேரவையில் நிறைவேற்றினார். ‘‘ராஜீவ் காந்தி கொலை குற்றத்துக்காக... தண்டனை, ஆயுள் தண்டனை அனுபவித்து வருபவர்களை விடுதலை செய்யப்போகிறேன்’’ என்று அறிவித்தார். எதிர்க்கட்சிகளுக்கு எதிர்த்து அரசியல் செய்வதற்கு வாய்ப்பே இல்லாமல்தான் போனது. தமிழ்த் தேசியமா... காவிரிப் பிரச்னையா... ஈழ விடுதலையா... எல்லாவற்றையும் அவரே பேசினார். 
ஆம், எல்லாமுமாக ஆகிப்போனார் ஜெயலலிதா! இந்தச் சுழலில்தான் 2014-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. 

(தொடரும்)

http://www.vikatan.com/news/coverstory/74195-jaya-transition-to-supreme-politician--from-mysuru-to-81-poes-garden-travel-story-of-jayalalithaa-episode-38.art

Link to comment
Share on other sites

அ.தி.மு.க-வின் தலைமைப் பொறுப்பை ஏற்க தகுதி உடையவர் யார்...? - ஜெ. சொன்ன பதில்!” - மைசூரு முதல் - 81, போயஸ் கார்டன் வரை... ஜெயலலிதா டைரி குறிப்புகள்! - 39

 

EPI_39_10587.jpg

ஜெயலலிதா

 

ந்தக் கட்டுரையை தட்டச்சு செய்துகொண்டிருக்கும்போதுதான் அவர் உயிரோடு இல்லை என்ற செய்தி வருகிறது. ஆம், அவர் இனி இல்லையாம்... போயஸ் சாலையின் காற்றைச் சுவாசிக்க, ஏகாந்தமான பொழுதில்... கொடநாட்டின் மெல்லியத் தூறலில் கைகளை நனைக்க, புத்தகங்களுக்கு வலிக்காமல் பக்கங்களை புரட்ட... இனி அவர் இல்லை. இல்லையென்றால், அவர் பூத உடல் இல்லை. ஆம், பூத உடல் மட்டும்தான் இல்லை. மற்றபடி அவர் நினைவுகள் எங்கும் வழிந்தோடிக் கொண்டுதான் இருக்கும். கொடநாட்டுப் பகுதியில் விளையும் காபியை அருந்தும்போது, அவர் நினைவுகளை நீங்கள் நாக்கால் உணரலாம்; மிதிவண்டியில் செல்லும் பள்ளி மாணவிகளைப் பார்க்கும்போது... அந்தப் பிள்ளைகளின் முகத்தில் ஜெயலலிதாவின் நினைவு நிழலாடலாம். ஹூம். 1,008 கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், தன் இருப்பால் தமிழக அரசியலை நிறைத்தவர் ஜெயலலிதா என்பதை, அவர் அரசியல் எதிரிகளும் மறுக்க மாட்டார்கள். 

“புயலை தனித்து எதிர்கொள்ளல்!”

Jaya001_09373.jpgசரி... அவர் நினைவுகளை எழுத்தின் ஒவ்வொரு புள்ளிகளுடன் படரவிட்டுவிட்டு... சென்ற அத்தியாயத்தில் விட்ட இடத்திலிருந்து தொடர்வோம். 2014 நாடாளுமன்றத் தேர்தல் இந்தியாவெங்கும் மோடி அலை வீசியது. எங்கு காணினும் மோடி குறித்த பேச்சுதான். அவர் குஜராத் மாடல் குறித்து சிலாகித்து எழுதினார்கள். தமிழகத்திலும் பி.ஜே.பி வலுவான கூட்டணியைக் கட்டி எழுப்பி இருந்தது. கூட்டணியில் தே.மு.தி.க., பா.ம.க., ம.தி.மு.க போன்ற பிரதான கட்சிகள் இருந்தன. தி.மு.க. கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள், மனிதநேய மக்கள் கட்சி போன்ற கட்சிகள் இருந்தன. தனித்து நின்றது அ.தி.மு.க. ஜெயலலிதாதான், ‘‘தனித்து நிற்கலாம்’’ என்றார். ஆனால், இந்த முடிவு குருட்டு நம்பிக்கையில் எடுக்கப்பட்ட முடிவு என்று கட்சியின் சில மூத்த நிர்வாகிகளே அதை ரசிக்கவில்லை. ஆனால், என்ன செய்ய முடியும்...? ஜெயலலிதா முடிவு எடுத்துவிட்டார். அதற்கு நாம் கட்டுப்பட்டுதான் ஆக வேண்டும் என தேர்தல் பணிக்குத் தயாரானார்கள். 

விசித்திரமான தேர்தல் அது... பி.ஜே.பி. கூட்டணி, மோடிதான் எங்கள் பிரதமர் வேட்பாளர் என்று அவரை முன்னிறுத்தி வாக்கு கேட்டது. காங்கிரஸுக்கு யாரைச் சொல்வது என்று தெரியவில்லை. தி.மு.க. கூட்டணி, இடதுசாரிகளின் நிலையும் இதுவாகத்தான் இருந்தது. இப்படியான சூழலில், அ.தி.மு.க-வுக்கு ஓர் அபிலாஷை இருந்தது. அது ஜெயலலிதாவை பிரதமராக ஆக்க வேண்டும் என்று. “எங்கள் அம்மாவுக்கு என்ன தகுதி இல்லை...? அவர் பிரதமரானால், இந்தியாவைச் சரியான பாதையில் வழிநடத்துவார்கள்” என்று மக்களிடம் முணுமுணுப்பாகத்தான் பேசினார்கள். உரக்கப் பேசும் அளவுக்கு அவர்களுக்கு நம்பிக்கை இல்லை. தமிழகத்தைத் தாண்டினால் இரட்டை இலை சின்னத்தை யாருக்கும் பெரிதாக தெரியாது என்பது அவர்களுக்கு நன்கு தெரியும்.  அதே நேரம், ஒரு வேளை மத்தியில் தொங்கு பாராளுமன்றம் அமைந்தால்... ‘ஜெயலலிதா பிரதமர் ஆகக்கூடும்’ என்று கிசுகிசுத்தார்கள். நிலைமை இவ்வாறாக இருக்க, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, அந்தத் தேர்தலில் ஜெயலலிதாவை பிரதமர் வேட்பாளராக அங்கீகரித்தார். ஆம், மூன்றாவது அணிக்கான பேச்சுவார்த்தை போய்க்கொண்டிருந்தபோது மம்தா, “மூன்றாவது அணியின் பிரதமர் வேட்பாளராக ஜெயலலிதாவை முன்னிறுத்தினால், நான் அவரை ஆதரிக்கத் தயாராகவே இருக்கிறேன்” என்றார். 

ஏற்கெனவே மூன்றாவது அணி குறித்த சில அனுபவங்கள் ஜெயலலிதாவுக்கு இருந்ததால், அவர் அந்தப் பக்கம் போகவில்லை. ஆனால் உற்சாகமானார். கட்சிக்காரர்களிடம், “மத்தியில் நமக்கான இடங்களைப் பெறுவோம். இந்த நாட்டை அவலங்களிலிருந்து மீட்டு, புதிய சுதந்திர இந்தியாவை படைப்போம்” என்றார். இந்த உற்சாகம் தொண்டர்களையும் தொற்றிக்கொண்டது. இப்போது உண்மையாக மனதளவில் ஜெயலலிதாவை பிரதமர் வேட்பாளராகக் கருதினார்கள். உற்சாகமாக வேலை செய்யத் தொடங்கினார்கள். 

தேர்தல் முடிவுகள் வந்தன... இந்தியா முழுவதும் மோடி அலை பெரும் ஆலமரங்களை எல்லாம் வீழ்த்தி இருந்தது. ஆனால், தமிழகத்தில் அந்த அலையை அ.தி.மு.க தடுத்து நிறுத்தி இருந்தது. ஆம், 39-க்கு 37 இடங்களை அ.தி.மு.க-வே கைப்பற்றி இருந்தது. ஆனால், அவர் நினைத்தது நிகழவில்லை. தேசிய ஜனநாயக கூட்டணி தனிப்பெரும்பான்மையில் வந்ததால், அவர்களுக்கு அ.தி.மு.க-வின் ஆதரவு தேவையற்ற ஒன்றாகவே ஆனது. 

“சொத்துக் குவிப்பு வழக்கு தீர்ப்பும்... மீட்சியும்!”

Jayalalithaa_001_09077.png

ஜெயலலிதா புகைப்படத் தொகுப்பு 1 ஐ காண இங்கே கிளிக் செய்யுங்கள்

ஜெயலலிதா புகைப்படத் தொகுப்பு 2 ஐ காண இங்கே கிளிக் செய்யுங்கள்

ஜெயலலிதா புகைப்படத் தொகுப்பு 3 ஐ காண இங்கே கிளிக் செய்யுங்கள்

நாட்கள் வேகமாக நகர்ந்து செல்லத் தொடங்கின. கர்நாடகாவில் நடந்த சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணையும் துரிதமாக நடைபெற்று தீர்ப்பு நாளும் நெருங்கியது. அனைத்து வழக்குகளிலிருந்தும் விடுதலை கிடைத்துவிட்டது. இது மட்டும்தான் பாக்கி. இதிலும் விடுதலை கிடைத்துவிட்டால்... வேறு எந்த அழுத்தங்களும் இல்லை என்றுதான் ஜெயலலிதா நினைத்தார். கிடைத்துவிடும் என்றும் நம்பினார். ஆனால், அவர் நம்பிக்கை பொய்த்தது. செப்டம்பர் 27, 2014 கர்நாடக அமர்வு நீதிமன்றம், அவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 100 கோடி ரூபாய் அபராதமும் விதித்தது. மீண்டும் ஒரு தடை... முதல்வர் ஜெயலலிதாவாக கர்நாடகம் சென்றவர், 20 நாட்கள் பரப்பன அக்ரஹாரா சிறையில் கழித்த பின்னர்... மனதளவில் தளர்ந்து ஜெயலலிதாவாக ஜாமீனில் போயஸ் திரும்பினார்.

ஏறத்தாழ 8 மாதங்கள் அவர் வெளியில் வரவேயில்லை. ஓ.பன்னீர்செல்வம் முதல்வராகப் பொறுப்பேற்று இருந்தாலும், அரசு இயந்திரமே மொத்தமாக ஸ்தம்பித்தது போன்ற ஒரு தோற்றம் இருந்தது. எல்லாத் திட்டங்களும் ஜெயலலிதாவின் வருகைக்காகக் காத்திருந்தன. ஏன் புதிய பேருந்துகள் மக்கள் பயன்பாட்டுக்கு வரவில்லை என்றால்... ‘நாங்கள் காத்திருக்கிறோம்’ என்றார்கள். அமைச்சர்களுடன்... திறக்கப்படாத பாலங்கள், புதிதாக வாங்கப்பட்ட பேருந்துகள் என அனைத்தும் காத்திருந்தன.

Jayalalithaa_003_09316.jpg

 

கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்ட இந்த வழக்கின் தீர்ப்பு மே 11, 2015-ம்  நாள் வந்தது.  ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டார். இதை நான் இரண்டு வரிகளில் தட்டையாகக் கடக்கிறேன். இந்தத் தீர்ப்பு அவருக்குத் தந்த மனமகிழ்ச்சியை எத்தனை வார்த்தைகளில் எழுதினாலும் அப்படியே உங்களிடம் கடத்த முடியாதுதான். தீர்ப்பு குறித்து சர்ச்சைகள் எழாமலும் இல்லை... ‘சொத்துக்களை மதிப்பிட்டதில் தவறு இருக்கிறது’ என்றார்கள். கர்நாடக அரசும், தி.மு.க-வும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. ஜெயலலிதா, விமர்சனங்கள் குறித்து கவலைப்படாமல் மீண்டும் முதல்வராகப் பொறுப்பேற்றார். பின், ராதாகிருஷ்ணன் நகர் தொகுதியில் போட்டியிட்டு மகத்தான வெற்றி பெற்றார். 

“மீண்டுமொரு தேர்தல்... மீண்டுமொரு வெற்றி... மீளமுடியாத மரணம்!”

Jayalalithaa_002_09007.jpg

 

2016. அடுத்த சட்டமன்றத் தேர்தல் வந்தது. நாடாளுமன்றத் தேர்தல் வெற்றி கொடுத்த உற்சாகத்தில், ஜெயலலிதா இந்தத் தேர்தலையும் கூட்டணி இல்லாமல் சந்திக்கத் தயாரானார். சில கட்சிகளுக்கு வாய்ப்பு வழங்கினார். ஆனால், அவர்களும் ‘‘இரட்டை இலை சின்னத்தில்தான் போட்டியிட வேண்டும்’’ என்றார். தி.மு.க., காங்கிரஸுடன் கூட்டணி அமைத்திருந்தது. பா.ம.க-வும் தனியாக தேர்தலை எதிர்கொள்ளத் தயாரானது. மக்கள் நலக் கூட்டணி என ஒரு புது கூட்டணி, இந்தத் தேர்தலில் உதயமாகி இருந்தது. இதில், ம.தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள், சி.பி.ஐ., சி.பி.எம் இருந்தது. பா.ஜ.க தனித்து நின்றது. 

ஜெயலலிதா, ‘‘மக்களால் நான்... மக்களுக்காக நான்” என்ற கோஷத்துடன் பிரசாரம் சென்றார். சென்ற தேர்தல் அளவுக்கு இல்லாவிட்டாலும் இந்த முறையும் சில இலவசங்களை முன்வைத்தார். ‘‘இலவச கைப்பேசி, பெண்கள் டூவீலர் வாங்குவதற்கு மானியம் தரப்படும்’’ என்றார். ‘‘மீண்டும் ஆட்சிக்கு வரும்போது படிப்படியாக மதுபானக் கடைகள் மூடப்படும்’’ என்றார்.  

கருத்துக்கணிப்புகள், தி.மு.க கூட்டணி வெற்றிபெறத்தான் வாய்ப்புகள் அதிகம் என்றன. அதற்குக் காரணம் இல்லாமலும் இல்லை. 2015 டிசம்பரில் பெய்த கனமழையால் சென்னையே வெள்ளத்தில் மூழ்கியது.  செம்பரம்பாக்கம் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிட்டதுதான் காரணம் என்று அரசு மீது மக்கள் கோபம் கொண்டிருந்தார்கள். இது, தேர்தலில் எதிரொலிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சென்னையைத் தாண்டி இந்தக் கோபம் எங்கும் எதிரொலிக்கவில்லை. 134 தொகுதிகளை அ.தி.மு.க கைப்பற்றியது. தஞ்சாவூர், அரவக்குறிச்சி என இரண்டு தொகுதிகளில் முறைகேடு காரணமாக தேர்தல் தள்ளிவைக்கப்பட்டிருந்தது. பின்னர் நடந்த தேர்தலில் இந்தத் தொகுதிகளையும் கைப்பற்றினார் ஜெயலலிதா.

jaya_09186.jpg

 

தொடர்ந்து மூன்று தேர்தல்களில் வெற்றி என அரசியல் வரலாற்றில் அவர் ஒரு முக்கியக் குறிப்பை எழுதி முன்னேறிச் சென்றுகொண்டிருக்கும் போதுதான், செப்டம்பர் 22, 2016 அந்தச் சம்பவம் நிகழ்ந்தது. ஆம், போயஸ் கார்டனில் ஓர் ஆலோசனைக் கூட்டத்தில் மயங்கி விழுந்தார். அப்போலோவில் அனுமதிக்கப்பட்டார். முதலில் காய்ச்சல், நீர்ச்சத்து குறைபாடு என்றவர்கள்... பின்னர், நுரையீரல் தொற்று என்றார்கள்... தொண்டர்கள் பதபதைத்துப் போனார்கள்... தமிழகமே குழம்பி நின்றது... எங்கெங்கிருந்தோ எல்லா மருத்துவர்களும் வந்தார்கள். பின், அப்போலோ நிர்வாகம், ‘அவர் கொஞ்சம் கொஞ்சமாகக் குணமடைந்து வருகிறார்’ என்றது. தொண்டர்கள் நிம்மதி பெருமூச்சுவிட்டார்கள். பின்னர், டிசம்பர் 4 மாலை ‘இதயத்துடிப்பு செயல்பாட்டில் கோளாறு’ என்றார்கள். 75 நாட்கள் தொடர் சிகிச்சைக்குப் பின் டிசம்பர் 5 செவ்வாய்க்கிழமை இரவு 11.30 மணிக்கு ஜெயலலிதா மரணித்ததாக அப்போலோ நிர்வாகம் அறிக்கை வெளியிட்டது. 

ஆம், ஒரு சகாப்தம் முற்றுப் பெற்றது.

1998-ம் ஆண்டு ஜெயலலிதாவிடம் சாமன்ய மக்கள், ஒரு வார இதழ் மூலம் ஒரு கேள்வியை முன்வைத்திருந்தார்கள், “உங்களுக்குப் பிறகு அ.தி.மு.க-வின் தலைமைப் பொறுப்பை ஏற்க தகுதி உடையவர் என்று யாரை கருதுகிறீர்கள்...?’’ என்று. அதற்கு அவர், “தகுதியுடையவர்கள் பலர் இருக்கிறார்கள். கழக உடன்பிறப்புகள் அதை முடிவு செய்வார்கள்” என்றார். இருக்கலாம்... ஆனால், ஜெயலலிதாவைப்போல ஓர் இரும்பு மனுஷி நிச்சயம் அ.தி.மு.க-வுக்கு எப்போதும் கிடைக்கமாட்டார்.

(நாளை தொடர் முற்றுப்பெறும்)

http://www.vikatan.com/news/coverstory/74281-who-is-capable-successor-of-admk-to-her-legacy--jayas-answer-from-mysuru-to-81-poes-garden-travel-story-of-jayalalithaa-episode-39.art

Link to comment
Share on other sites

“ஜெயலலிதா மரணமும்... ஒரு தி.மு.க தொண்டரும்...” - மைசூரு முதல் - 81, போயஸ் கார்டன் வரை... ஜெயலலிதா டைரி குறிப்புகள்! - 40 (நிறைவுப் பகுதி)

 
 

Epi_40_14385.jpg

ஜெயலலிதா

ஜெயலலிதா புகைப்படத் தொகுப்பு 1 ஐ காண இங்கே கிளிக் செய்யுங்கள்

ஜெயலலிதா புகைப்படத் தொகுப்பு 2 ஐ காண இங்கே கிளிக் செய்யுங்கள்

ஜெயலலிதா புகைப்படத் தொகுப்பு 3 ஐ காண இங்கே கிளிக் செய்யுங்கள்

வர் பெயர் ராமர். சட்டமன்ற உறுப்பினர்கள் விடுதிக்கு வருபவர்களுக்குத் தேவையான பொருட்களை வாங்கித் தந்து, அவர்கள் தரும் டிப்ஸில் காலத்தை நகர்த்திக் கொண்டிருப்பவர். நேற்று ஜெயலலிதாவின் உடல் வைக்கப்பட்டிருந்த ராஜாஜி அரங்கத்தின் அருகே அவரைச் சந்தித்தேன். அவருக்கும் எனக்குமான அந்த உரையாடலை இங்கே பகிர்கிறேன்... “நான் தீவிர தி.மு.க-காரன் தம்பி... மொழிப் போராட்டத்துல எல்லாம் கலந்திருக்கேன். இப்பவும் தி.மு.க என்ன போராட்டம் நடத்தினாலும் நான் முதல் ஆளா நிப்பேன். கலைஞரை அவ்வளவு பிடிக்கும். ஆனா, இன்னைக்கு காலையிலேர்ந்து மனசு சரியில்லை தம்பி. அவங்க தோற்கணும்னுதான் நான் நினைச்சேனே தவிர... அவங்க இருக்கவே கூடாதுன்னு நினைக்கல... என்னமோபோல இருக்கு?” என்று அவர் சொல்லி முடித்தபோது அவர் கண்கலங்கி இருந்தது.

அவரே தொடர்ந்தார், “எவ்வளவு ஆளுமை... இங்க நிறைய எம்.எல்.ஏ-க்களை பார்க்கிறேன் தம்பி. எல்லாரும் என்னென்ன பண்ணுவாங்கன்னு நல்லா தெரியும். அவங்க மத்தியில வேலை செய்யுறது அவ்வளவு ஈசி இல்லை... வாய்ப்பு கிடைச்சா நமக்குத் தெரியாம நம்மையே வித்துட்டுப் போயிடுவாங்க...  எவ்வளவு ஆளுமையா இவங்க எல்லாத்தையும் தன் கட்டுப்பாட்டுல வச்சுருந்தாங்க. இனி இப்படி ஒரு தலைமை அந்த கட்சிக்கு கிடைக்காது. இப்படி ஒரு தலைவர் தமிழ்நாட்டுக்கும் கிடைக்க மாட்டாங்க” என்று சோகம் அப்பிய முகத்துடன் நகர்ந்தார். 

ஆம். ஜெயலலிதா கட்சிப் பேதமின்றி எல்லோரையும் வசிகரித்துதான் இருக்கிறார். அவரின் ஏதோ ஒரு பண்பு அவரது எதிராளிகளைக் கூட கவர்ந்திருக்கிறது.  அவரைப் பார்த்து வியந்திருக்கிறார்கள்.  ஜெயலலிதாவின் இல்லாமை அவர்களையும் மனதளவில் நொறுங்கச் செய்திருக்கிறது. 

ராமர் மட்டுமல்ல... ஜெயலலிதா குறித்து பலருடன் உரையாடியபோது, அவர்கள் அனைவரும் வியந்து கூறியது, அவரின் ஆளுமைப் பண்பு குறித்துதான்.  இவ்வளவு ஆளுமை சரியா? இதன் வெளிப்பாடு தானே எதேச்சதிகாரம்? என்பதெல்லாம் வேறு விவாதம். ஆனால், அ.தி.மு.க-வைக் காப்பாற்றியது, எம்.ஜி.ஆர் உருவாக்கி வைத்துச் சென்ற வாக்கு வங்கியைச் சரியாமல் பார்த்துக்கொண்டது எல்லாமும் இந்த ஆளுமைப் பண்பால்தான்!  

Jayalalithaa_15086.jpg

ஜெயலலிதா புகைப்படத் தொகுப்பு 1 ஐ காண இங்கே கிளிக் செய்யுங்கள்

ஜெயலலிதா புகைப்படத் தொகுப்பு 2 ஐ காண இங்கே கிளிக் செய்யுங்கள்

ஜெயலலிதா புகைப்படத் தொகுப்பு 3 ஐ காண இங்கே கிளிக் செய்யுங்கள்

சரி எங்கிருந்து இந்த ஆளுமைப் பண்பை கற்றார்?

நிச்சயம் துரோகங்களிடமிருந்துதான். அவமானங்களில் இருந்துதான். அவரின் ஆளுமை காயங்களால் உண்டானது. அமெரிக்கப் பெண் எழுத்தாளர் ரொசியானி சொல்வார், “நம் பெண்கள் புரிந்துகொள்ள வேண்டிய விஷயம் ஒன்று இருக்கிறது. இங்கு யாரும் பெண்களுக்கு அதிகாரத்தைத் தரமாட்டார்கள்.  பெண்கள்தான் அதனை எடுத்துக்கொள்ள வேண்டும்” என்பார்.  அதைத்தான் ஜெயலலிதா செய்தார். பெண் என்ற காரணத்துக்காக அவர் அவமானப்படுத்தப்பட்ட போது...  அந்த அவமானத்தையே உரமாக்கி... உரமாக்கி...  விருட்சமாக எழுந்து நின்றார். அவருக்கு அதிகாரம் தர மறுக்கப்பட்டபோது, அவரே அதனை எடுத்துக் கொண்டார்.  யாரும் நினைக்காத அளவுக்கு உச்சங்களைத் தொட்டார். பெண்களுக்கு ஜெயலலிதாவை அதிகம் பிடிப்பற்கும் இதுதான் காரணம்.  காலங்காலமாக  பெண்கள் மீது அதிகாரத்தின் வாள் வீசப்பட்டது. குருதி வழிந்தது. அந்த குருதியால் செதுக்கப்பட்டவர்தான் ஜெயலலிதா என்று பெண்கள் நம்பினார்கள்.  அவரோடு தங்களை அடையாளப்படுத்திக் கொண்டார்கள். 

இந்தத் தொடரை  ஜெயலலிதா சொன்ன இந்த வரிகளுடன் தொடங்கினேன், ‘நான் பல நரகங்களைத் தாண்டித்தான் இந்த இடத்துக்கு வந்து இருக்கிறேன்’  என்று. ஆம், ஆணாதிக்க நரகம், பெண் தானே என்ற வக்கிர மனோபாவம் என பல நரகங்களைத் தாண்டித் தாண்டிதான் ஜெயலலிதா இந்த இடத்துக்கு வந்திருக்கிறார்.  இன்றும் அந்த நரகங்கள் அப்படியேதான் இருக்கின்றன. நம் பெண்கள் அதனைக் கடக்கத்தான் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். 

ஜெயலலிதா தனக்கு நெருக்கமானவர்களிடம் பகிர்ந்திருக்கிறார், “எங்கள் குடும்பத்தில் யாரும் 60 வயதுக்கு மேல் உயிருடன் இருக்கவில்லை. 60 வயதுக்கு மேலான எனது ஒவ்வொரு தினமும், இறைவன் எனக்களிக்கும் கருணை தான்” என்று.

 இறைவனுக்கு இவ்வளவு தான் கருணை போலும்..?

முற்றும்

http://www.vikatan.com/news/coverstory/74389-demise-of-jayalalithaa-and-a-dmk-cadre-from-mysuru-to-81-poes-garden-travel-story-of-jayalalithaa-episode-40.art

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு நன்றி நவீனன்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அனுபவப் பகிர்விற்கு நன்றி கோசான் அவர்களே. புத்தர் சிலைகள் எல்லாம் எந்தளவு தூரம் முளைத்துள்ளன? 
    • மனித வளம் அதிகம் இருப்பதால்தான் இன்னும் மனித மலத்தை மனிதர்களை வைத்தே கையால் அள்ளிக் கொண்டிருக்கிறார்களோ?தமிழ்நாட்டில் எண்ணெய்கப்பல் கசிந்து கடல்நீரில் கலந்த பொழுது வாளியால் அள்ளி ஊற்றினார்கள்.உண்மையில் இந்தியாவில் பொருளாதாரம் பெரும் வளர்ச்சி அடையவில்லை.ஆனால் ஒரு அணுவாயுத வல்லரசு பொருளாதாரத்தில் வளர்ந்தது போல் ஒருமாயத் தோற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.நகர்ப்புறங்கள் நவீனத் தோற்றத்தைக் காட்டிக் கொண்டிருக்கின்றன.சந்திராயனுக்கு ரொக்கற் அனுப்பிய அதே வேளையில் இந்தியாவின் கடைக்கோடி கிராமத்தில் அடிப்படை வசதிகளற்று மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.ஒப்பீட்டளவில் தென் மாநிலங்கள் ஓரளவு வளர்ச்சி அடைந்த நிலையில் வடமாநிலங்களின் நிலமை படு மோசம்.
    • சகோ சீமானின் பிள்ளைகள் பற்றிய கருத்தை இங்கே பதிவிட்டவன் யானே.  இங்கே எனது கேள்வி தனது பிள்ளைகள் தமிழ் படிக்காததற்கு  மேடை கோணல் என்பது.  ஆனால் அது உண்மையல்லவே.  எனவே இந்த இவரது கூற்று தேர்தல் நேரத்தில் அவரை கவிழ்க்க உதவும் என்பதே அவரின் அபிமானியான எனது கவலை. நன்றி. 
    • சீமான் தமிழ் தேசியத்தைப் பேசுகிறார், உண்மை - ஈழத்தில் கஜேந்திரகுமார் அணி தமிழ் தேசியத்தைப் பேசுவது போல பேசுகிறார்😎. இதனால் மட்டும் தமிழ் தேசியம் வாழும் என்றால், நீங்கள் குறிப்பிடும் தமிழ் தேசியம் "யூ ரியூப்" வியாபார தமிழ் தேசியம் என எடுத்துக் கொள்கிறேன்! இந்த "திராவிடர்-தமிழர் ஆணி" ஈழவருக்கு தேவையில்லாத ஆணி என்கிறேன். இதனால், தமிழ் நாட்டில் ஆட்சியில் இருக்கப் போகும் கட்சிகளோடும் (குறைந்த பட்சம் புலத்தில் வாழும்) ஈழவர் பகைத்துக் கொள்ள வேண்டி வரும். இன்னொரு பக்கம், சீமான் தம்பிகள் முன்மாதிரியில் போலிச் செய்திகள், வைரல் வீடியோக்கள், யாழில் நடப்பது போன்ற எங்களிடையேயான அர்த்தமில்லாத சண்டைகளும் வளரும். இதெல்லாம் "ஈழவரான எங்களுக்கு ரொம்ப நல்லது!" என்று நீங்கள் சொன்னால் நான் நம்புகிறேன்!  
    • உங்களுக்கு இந்தியா பற்றி நான் தந்திருப்பது தரவுகளை. நீங்கள் மேலே அலம்பியிருப்பது இந்தியா தொடர்பான உங்கள் ஆத்திரக் கருத்துக்களை. இந்தியா மீது அபிமானம் எனக்கும் இல்லை - ஆனால், தரவுகளை நோக்கித் தான் ஒரு நாட்டின் முன்னேற்றம் பற்றிய கருத்துக்கள் வர வேண்டும், அந்த நாட்டை விரும்புகிறோமா வெறுக்கிறோமா என்பதை ஒட்டியல்ல. பொருளாதார வளர்ச்சி ஊழலால் பெரிதும் பாதிக்கப் பட்டிருக்கிறது இந்தியாவில். ஆனால், மனித வளம் அதையும் மீறி இந்தியாவை முன்னேற்றி வருகிறது. இந்தியா போன்ற கலாச்சாரப் பின்னணி கொண்ட, ஆனால் மனித வளம் மிகக் குறைந்த பாகிஸ்தானிலோ. வங்க தேசத்திலோ இந்தியாவில் இருப்பது போன்ற வளர்ச்சி இல்லை - இது உங்களுக்குக் கசக்கலாம், ஆனால் யதார்த்தம் அது தான்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.