Jump to content

சுயமாக நடமாட முடியாத நோயாளிகளை பராமரிக்கும் செயற்திட்டம் வடக்கு மாகாண சுகாதார அமைச்சினால் ஆரம்பம்!


Recommended Posts

யுத்தம் மற்றும் விபத்துக்களால் காயமடைந்து சுயமாக நடமாட முடியாது படுக்கையிலிருக்கும் நோயளிகளை அவர்களின் வீடுகளுக்கு சென்று சிகிச்சையளிக்கும் விசேட செயற்திட்டமொன்று வடக்கு மாகாண சுகாதார அமைச்சினால் நேற்று முன்தினம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

வடக்கின் ஐந்து மாவட்டங்களில் ஆரம்பிக்கப்படவுள்ள இந்த விசேட செயற்திட்டம் கிளிநொச்சியில் சம்பிரதாய பூர்வமாக வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கத்தினால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வின் போது உரையாற்றிய சுகாதார அமைச்சர்,

இலங்கையில் முதன்முறையாக இவ்வாறான செயற்திட்டத்தை எமது மாகாணத்தில் ஆரம்பிப்பதில் பெருமையடைகின்றோம். நாட்டின் ஏனைய மாகாணங்களுடன் ஒப்பிடுகையில் எமது மாகாணம் எதிர்நோக்கும் பிரச்சனைகள் முற்றிலும் வேறுபட்டதாகவே உள்ளது.

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

அதனடிப்படையில் எமது மாகாணத்தின் தேவை கருதி இவ்வாறான பிரத்தியேக திட்டங்களை ஆரம்பிக்கவேண்டிய தேவை எழுந்துள்ளது. எமது மாகாணத்தில் கொடிய யுத்தத்தின் காரணமாக பல நூற்றுக்கணக்கானோர் காயப்பட்டு சுயமாக இயங்க முடியாமல் வீடுகளில் உள்ளனர்.

இவர்களை கவனிக்க தற்போதுள்ள சுகாதார சேவையில் வசதிகள் இல்லை. எனவேதான் இவ்வாறானவர்களை கவனிக்க 2014ம் ஆண்டு வவுனியாவில் வைகறை எனும் முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களுக்கான மருத்துவ புனர்வாழ்வு நிலையத்தை ஆரம்பித்தோம்.

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

எனினும் அந்த புனர்வாழ்வு நிலையத்தில் போதிய இடவசதிகள் இல்லை. மாகாணத்தின் ஏனைய மாவட்டங்களிலும் இவ்வாறாக சுயமாக இயங்கமுடியாது படுக்கையில் இருக்கும் நோயளிகள் பலசிரமங்களை எதிர்நோக்கி வருகின்றார்கள்.

அவர்களில் பலர் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெறுவதற்கு வசதியற்றவர்களாக இருக்கின்றார்கள். எனவே அவர்களின் நலன்கருதியே இந்த செயற்திட்டத்தை ஆரம்பிக்கின்றோம்.

இந்த திட்டம் மாகாண நிதியிலோ அல்லது மத்திய அரசின் நிதியிலோ ஆரம்பிக்கவில்லை. அண்மையில் நான் கனடாவுக்கு விஜயம் செய்து புலம்பெயர் உறவுகளை சந்தித்தபோது நாங்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பில் கலந்துரையாடியிருந்தேன்.

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

மேலும், புலம்பெயர் கொடையாளர்களின் உதவியுடன் உள்ளுரில் உள்ள தொண்டுநிறுவனங்களினூடாகவே இந்த செயற்திட்டத்தை முன்னெடுக்கின்றோம்.எதிர்காலத்தில் இந்த செயற்திட்டம் வடக்கின் ஏனைய மாவட்டங்களுக்கும் விஸ்தரிக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.

ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒவ்வொரு நடமாடும் குழு சேவையில் ஈடுபடும். அதில் மருத்துவ தாதி, உளநல ஆலோசகர், மற்றும் உதவியாளர் ஒருவர் இடம்பெறுவர்.

இவர்கள் நோயளிகளின் வீடுகளுக்கு களவிஜயத்தை மேற்கொண்டு சிகிச்சைகளை வழங்குவார்கள் என்றும் வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த செயற்திட்ட ஆரம்ப நிகழ்வில் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் பிரதம விருந்தினராக கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

http://www.tamilwin.com/community/01/121308?ref=home

Link to post
Share on other sites

சத்தியலிங்கம் ஊழலை நிறுத்தினால் தான் மக்கள் முழுப்பயனைப் பெறமுடியும்.
ஊழல் பலவிதமானது. மிகவும் நுணுக்கமாக செய்தாலும் தப்ப முடியாது.

 

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Similar Content

  • By புரட்சிகர தமிழ்தேசியன்
   யாழ்.பல்கலைகழக மாணவா்கள் கண்டுபிடித்த ரோபோக்களுடன் கிளிநொச்சியில் மாபெரும் அறிவியல் கண்காட்சி..!

   யாழ் பல்கலைக்கழக பொறியியல்பீட மாணவர்களால் ஏற்பாடு செய்துள்ள வருடாந்த மாபெரும் கண்காட்சி (EXPO ARIVIYAL NAGAR- 2020 ) இன்று ஆரம்பமாகியுள்ளது.குறித்த கண்காட்சி இன்று காலை 8.30 மணியளவில் கிளிநொச்சி அறிவியல் நகரில் அமைந்துள்ள யாழ்.பல்கலைக்கழக பொறியியல் பீடத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
   இக்கண்காட்சி ஆரம்ப நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ்ப்பாண பல்கலைக்கழக தகுதி வாய்ந்த அதிகாரி பேராசிரியர் திரு.க.கந்தசாமி கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்தார் . இந்நிகழ்வில்
   1 . யாழ் பொறியியல் பீட மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட மாபெரும் கண்காட்சி.
   2. இலவச மருத்துவ முகாம் (Medical Check-up and Dental Care)
   3. இரத்ததான முகாம்
   4. Battle ground Competition (For University of Jaffna, Kilinochchi Premises University Students)
   5. பாடசாலை மாணவர்களுக்காக விசேடமாக ஏற்பாடு செய்யப்பட்ட பல்கலைக்கழக Z Score பற்றி விளக்கம் மற்றும் தனியார் கற்கை நெறிகள்.
   6. பாடசாலை மாணவர்களின் தொழிநுட்ப அறிவாற்றலை மேம்படுத்தும் வகையில் Arduino பயிற்சி பட்டறை .
   7. வருகைதருவோர்களின் பொழுதுபோக்குகளுக்காக புகைப்பட நிகழ்வு மற்றும் இசை நிகழ்ச்சி
   என இன்று ஆரம்பமான குறித்த கண்காட்சி நிகழ்வை காண்பதற்காக வவுனியா, திருகோணமலை உள்ளிட்ட பல்வேறு பிரதேசங்களிலிருந்தும் மாணவர்கள் வந்திருந்தமைகுறிப்பிடத்தக்கது.
   குறித்த கண்காட்சி நிகழ்வு இன்றும், நாளையும் 8 மணிமுதல் பிற்பகல் 4 மணிவரை இடம்பெறவுள்ளதுடன், இவற்றை காண்பதற்கு கட்டணங்கள் அறவிடப்படாது.
   குறித்த கண்காட்சியில் குறைந் செலவிலான மனைகள் அமைத்தல், நீர் முகாமைத்துவத்தினை பேணல், நவீன நகர திட்டம், நவீன போக்குவரத்து முறைமைகள், ரோபோக்கள், நவீன கட்டுமான துறை உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை உள்ளடக்கிய வகையில் குறித்த கண்காட்சியில் பல்வேறு அம்சங்கள் இடம்பிடித்துள்ளமை குறிப்பிடதக்கதாகும்.
   https://jaffnazone.com/news/15214
 • Topics

 • Posts

  • யாழ்ப்பாணத்திலிருந்து தென் பகுதிக்கு மட்டுமே செல்லுமிடமா?? இவ்வளவு இடங்களுக்கு BUS ஒவ்வொரு நாளும்  போகின்றனவா???
  • நாதமுனியர்.... உந்த பிஸி, கிஸி எல்லாத்தையும் கிடப்பிலை போட்டுட்டு... 😁 குமாரசாமி அண்ணையையும், பையன் தம்பியையும் கூட்டிக் கொண்டு,  ஓடி வாங்கப்பூ... 🤣
  • தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள்!!! மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை ஈகம் செய்தார்களோ அவ் இலட்சியத்தை அடையும் வரை ஓயாது அதற்காக உழைப்போம் என்று உறுதி கொள்வோம்.
  • இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரினால் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கை மிக முக்கியமானதெனச் சுட்டிக்காட்டியிருக்கும் பிரித்தானியா மற்றும் கனடா ஆகிய நாடுகள் இலங்கையில் நல்லிணக்கத்தையும், பொறுப்புக்கூறலையும் உறுதிப்படுத்துவதை அடிப்படையாகக்கொண்டு செயற்படத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46வது கூட்டத்தொடர் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 24ம் திகதி ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ள நிலையில், இலங்கை தொடர்பில் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சேல் பச்லெட் சமர்ப்பிக்கவிருக்கும் 16 பக்கங்கள் கொண்ட முழுமையான அறிக்கை நேற்று ஐக்கிய நாடுகள் சபையினால் பகிரங்கப்படுத்தப்பட்டது. அதன்படி ஐக்கிய நாடுகள் சபைக்கான பிரித்தானியாவின் நிரந்தர வதிவிடப்பிரதிநிதி ஜுலியன் பிரெய்த்வெய்ட் இது குறித்து டுவிட்டர் பக்கத்தில் செய்திருக்கும் பதிவில், ‘இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையினால் வெளியிடப்பட்டிருக்கும் மிக முக்கியமான புதிய அறிக்கை தொடர்பில் நாம் அவதானம் செலுத்தியிருக்கிறோம். எதிர்வரும் ஜெனிவா கூட்டத்தொடரின் போது இலங்கையில் மனித உரிமைகளையும் பொறுப்புக்கூறலையும் உறுதிப்படுத்துவதை முன்னிறுத்தி நாம் ஆதரவு வழங்குவோம்’ என்று குறிப்பிட்டுள்ளார். அதேவேளை, இது குறித்து கனேடிய வெளிவிவகார அமைச்சர் மார்க் கார்னே அவரது டுவிட்டர் பக்கத்தில், ‘இலங்கையில் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவற்றை உறுதி செய்வதன் அவசியத்தை அடிக்கோடிட்டுக் காட்டுவதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அறிக்கை அமைந்துள்ளது. இலங்கையில் அமைதி, நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் என்பவற்றை உறுதி செய்வதற்காக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு முழுமையான ஆதரவை வழங்குவதற்கு கனடா தயாராக இருக்கின்றது’ என்று அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இலங்கையின் பொறுப்புக் கூறலுக்காக செயற்படவுள்ள கனடா, பிரித்தானியா – உதயன் | UTHAYAN (newuthayan.com)
  • மானிப்பாய் பொலிஸ் பிரிவில் இளம் பெண் ஒருவர் அடங்கலாக கலாசார சீரழிவில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நால்வரை 8ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அத்துடன், 20 வயது இளம் பெண்ணை சட்ட மருத்துவ அதிகாரியிடம் முற்படுத்தி மருத்துவ பரிசோதனை அறிக்கையைப் பெற்று மன்றில் சமர்ப்பிக்குமாறு நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராசா, பொலிஸாருக்கு உத்தரவிட்டார். முச்சக்கர வண்டியில் நடமாடும் கலாசார சீரழிவில் ஈடுபட்டு வந்த பெண்கள் இருவர் உட்பட நால்வர் மானிப்பாய் பொலிஸாரால் நேற்று (27) கைது செய்யப்பட்டனர்.     45 வயதுடைய சுதுமலை பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், கோப்பாயைச் சேர்ந்த 20 வயதுடைய பெண்ணை வைத்து இந்த கலாசார சீரழிவை பணத்துக்காக முன்னெடுத்துள்ளார். அவர்களுக்கு உடந்தையாக தெல்லிப்பழையைச் சேர்ந்த முச்சக்கர வண்டி சாரதி ஒருவரும் நெல்லியடியைச் சேர்ந்த இளைஞன் ஒருவரும் செயற்பட்டுள்ளனர். அந்த நான்கு பேரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். கலாசார சீரழிவு இடம்பெறுவதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் இரகசிய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் ஊடாக கும்பலுடன் தொடர்பை ஏற்படுத்திய மானிப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, அந்தக் கும்பலைச் சேர்ந்த நால்வரையும் கைது செய்திருந்தார். சந்தேக நபர்கள் நால்வரும் மல்லாகம் நீதிவான் முன்னிலையில் இன்று முற்படுத்தப்பட்டனர். அதன்போதே நால்வரையும் விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டார். இதேவேளை, கைது செய்யப்பட்ட சுதுமலையைச் சேர்ந்த பெண் 15 வயது சிறுமியை பணத்துக்காக கலாசார சீரழிவில் ஈடுபடுத்தினார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு நீதிமன்றின் உத்தரவில் 3 மாதங்கள் விளக்கமறியலில் இருந்து அண்மையில் விடுவிக்கப்பட்டவர் என்று பொலிஸார் தெரிவித்தனர். நடமாடும் விபச்சாரம் – நால்வருக்கு மறியல்! – உதயன் | UTHAYAN (newuthayan.com)  
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.