Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

கதிர்வீச்சு துப்பாக்க


Recommended Posts

ி

அமெரிக்காவின் ராணுவம் புதிதாக கதிர்வீச்சு துப்பாக்கி ஒன்றினை கண்டுபிடித்து உள்ளது.இந்த துப்பாக்கி, குண்டுகளுக்கு பதிலாக 54 டிகிரி செல்ஸியஸ் வெப்பகற்றையினை சுடும்.இந்த வெப்பகற்றை உடம்பில் தீப்பிடித்தது போன்ற ஒரு உணர்வினை ஏற்படுத்தும். இது நமது தோலின் 1 அங்குல தடிப்பில் 1/64 அளவுக்கு தான் துளைக்கும். அதனால் நமது உயிர்க்கு ஊறு ஏதும் விளைக்காது . இது 2010 ஆண்டு வாக்கில் அமெரிக்க ராணுவத்தில் சேர்க்கப்படும். ஆனால் அமெரிக்காவின் ராணுவத்தின் அனைத்து பிரிவுகளும் இந்த துப்பாக்கியினை உடனடியாக சேர்க்க கோரி உள்ளன.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

லேசர் கன் எப்பவோ அறிமுகமாகிவிட்டது. சீனா அதை பெருமளவில் தயாரிக்கவும் தொடங்கிவிட்ட நிலையில் அமெரிக்கா புதினம் காட்டுகிறது.

அண்மையில் சீனா தரையில் இருந்து விண்வெளியில் சஞ்சரிக்கும் தனது செயற்கைக் கோளைத் தாக்கி அழித்ததில் இருந்து அமெரிக்காவின் நட்சத்திரப் போர்த்திட்டத்தில் சீனா மண்போட்டு விட்டுள்ள நிலையில் அமெரிக்கா உலகின் கவனத்தைத் திருப்ப இப்படிச் செய்கிறது. சோவியத் வீழ்ச்சியோடு நட்சத்திரப் போர்த்திட்டம் வேகம் குறைந்துள்ள போதும் சீனாவின் இந்த அதிரடி நடவடிக்கை அமெரிக்காவிம் மொத்தத் திட்டங்களையே ஆட்டங்காணச் செய்யும் படியாக அமைந்துள்ளது. குறிப்பாக ஏவுகணை பாதுகாப்பு திட்டங்கள் என்ற புஷ்ஷின் சமீபத்திய திட்டங்கள் எல்லாம் தவிடுபொடியாகியுள்ளது. காரணம் அமெரிக்க திட்டங்கள் பலவும் விண்ணில் சஞ்சரிக்கும் அமெரிக்க இராணுவ செயற்கைக் கோள்களை மையமாக வைத்தே வடிவமைக்கப்பட்டுள்ளன. :)

wchina19.jpg

சீனப் பரிசோதனை நடந்த முறை. - http://www.telegraph.co.uk/news/main.jhtml...19/wchina19.xml

Link to comment
Share on other sites

லேசர் துப்பரக்கிக்கும் கதிர்வீச்சு துப்பாக்கிக்கும் வித்தியாசம் உள்ளது என கருதுகிறேன். லேசர் துப்பாக்கி உடம்பை எரித்து விடும். ஆனால் கதிர்வீச்சு துப்பாக்கியினால் உயிர்க்கு ஒன்றும் ஆகுவதில்லை. கூட்டத்தை கலைக்க ரப்பர் குண்டுகளுக்கு பதிலாக இதனை பயன்படுத்தவியலும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

லேசர் துப்பரக்கிக்கும் கதிர்வீச்சு துப்பாக்கிக்கும் வித்தியாசம் உள்ளது என கருதுகிறேன். லேசர் துப்பாக்கி உடம்பை எரித்து விடும். ஆனால் கதிர்வீச்சு துப்பாக்கியினால் உயிர்க்கு ஒன்றும் ஆகுவதில்லை. கூட்டத்தை கலைக்க ரப்பர் குண்டுகளுக்கு பதிலாக இதனை பயன்படுத்தவியலும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இருக்கலாம். கதிர்வீச்சு என்பது பொதுவாக கரு இரசாயன அடிப்படையில் சொல்லப்படுவது. லேசர் என்பது அணுக்களின் இலத்திரன் அருட்டல்களாலும் உருவாக்கப்படக் கூடியது. Light beam போல...! Radiation ஆபத்தான வகைகளிலும் உண்டு..! :rolleyes:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.