Jump to content

வாட்ஸ்அப், ஃபேஸ்புக்கில் அறிமுகமாக இருக்கும் 7 புதிய இமோஜிக்களில் என்ன விசேஷம்..?


Recommended Posts

வாட்ஸ்அப், ஃபேஸ்புக்கில் அறிமுகமாக இருக்கும் 7 புதிய‌ இமோஜிக்களில் என்ன விசேஷம்..?

IMG_3284_15041.PNG

காலைல எழுந்து காஃபி குடிச்சியானு கேட்க காஃபி இமோஜி, பர்த்டே விஷ் பண்ண கேக் ஆரம்பிச்சு சாக்லேட் வரைக்கும் இமோஜியாவே அனுப்புறதுனு வாட்ஸ்அப், ஃபேஸ்புக் எல்லாத்துலயும் வார்த்தைகள தாண்டி இமோஜிக்கள்ல தான் வாழ்க்கையே ஓடுதா? அப்படின்னா அடுத்த அப்டேட்ல வரலாம்னு எதிர்பார்க்கப்படுற இந்த ஏழு இமோஜிக்கள் பத்தி நீங்க தெரிஞ்சுக்கிட்டே ஆகணும்.

இமோஜிக்களை உருவாக்கும் நிறுவனமான யுனிகோட் தனது 10.0 அப்டேட்டை வரும் 2017ம் ஆண்டு வெளியிடவுள்ளது. அதற்கான ஆலோசனை கூட்டத்தை வரும் நவம்பரில் நடத்தவுள்ளது. இந்த கூட்டத்தின் முடிவில் இந்த ஆண்டு வெளியாகும் இமோஜிக்கள் இவையாகத் தான் இருக்கும் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.

சென்ற ஆண்டு 2016ம் ஆண்டு எதிர்பார்க்கப்படும் இமோஜிக்கள் என்னவாக இருக்கும் என்ற கணிப்பு நடத்தப்பட்டது. பல இமோஜிக்களின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டது. இதில் பல இமோஜிக்கள் பரிந்துரை செய்யப்பட்டன. தாடியுடன் கூடிய ஆண் உருவம், முகத்தை மறைத்துக் கொள்ளும் இமோஜி, ப்ரோக்கோலி, நர்ஸ், டைனோசர், வரிக்குதிரை, ரெயின்போ கொடி என பல இமோஜிக்கள் பரிந்துரைக்கப்பட்டன.

new-emoji-proposals-q4-2016_15301.jpg

இதில் பின்வரும் 7 இமோஜிக்கள் தேர்ந்தெடுக்கப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. 1. பாதம் 2. தேங்காய், 3. பாலூட்டும் தாய் 4. மலையேறுதல் 5. மீன் உடல் கொண்ட பெண் 6.யோகா/தியாணம் 7. பை எனும் கேக் வகை ஆகிய ஏழு இமோஜிக்களை டிக் அடிக்கலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளதாம்.

இதில் பாலூட்டும் தாய் இமோஜி கட்டாயம் இடம் பெறும் என்ற கருத்து நிலவுகிறது. காரணம், அமெரிக்காவில் 30 லட்சம் தாய்மார்கள் பாலூட்டுதலை ஆதரித்துள்ளனராம். கூகுள் தேடலும் பாட்டில் மூலம் குழந்தைகளுக்கு பாலூட்டுவது தவறு என்ற கருத்தை வலியுறுத்தியுள்ளது. இந்த இமோஜியை லண்டன் மருத்துவமனை பல்கலைக்கழக நர்ஸ் ரேச்சல் லீ சமர்பித்துள்ளார். குழந்தைகளின் ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியத்துக்கு தாய்ப்பால் அவசியம் என்பதை உணர்த்த இதனை சமர்பித்துள்ளதாகவும் கூறியுள்ளார். 

உலகம் முழுவது யோகா பற்றிய விழிப்புணர்வு வளர்வதை ஊக்குவிக்கும் விதமாக யோகா இமோஜியும், மலையேறுதல், உணவு பொருட்கள் பிரிவில் பை, தேங்காய், பாதாம் இடம் பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

காரணம் இல்லாம இமோஜி அனுப்புறனு சொல்லுறவங்க இனிமே காரணம் சொல்லி அனுப்புற மாதிரி இமோஜிக்கள் அறிமுகமாக உள்ளது. இதோடு சேர்ந்த பல புதிய இமோஜி அப்டேட்கள் இருக்கும் என்றும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

http://www.vikatan.com/news/information-technology/70041-7-new-emojis-ready-including-breastfeeding-meditation-for-unicode-discussion.art

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.