Jump to content

வீரயுக நாயகன் வேள் பாரி


Recommended Posts

வீரயுக நாயகன் வேள் பாரி - 1

புதிய வரலாற்று தொடர்சு.வெங்கடேசன், ஓவியங்கள்: ம.செ.,

 

முன்னுரைp100a.jpg

இளைப்பாற நிழலின்றித் தவிக்கும் வழிப்போக்கனின் கண்ணில் படும் பெரும் ஆலமரம்போல, மூவேந்தர்களும் மன்னர்கள் பலரும் ஆண்ட தமிழகத்தில், தவித்தலைந்த உயிர்களுக்காகத் தன்னையே தந்தவன் வேள்பாரி.

தன்னலமற்ற கொடை உள்ளத்தாலும், அன்புவழிப்பட்ட வாழ்வியல் மரபாலும் பாரியின் புகழ் தமிழ் நிலம் எங்கும் பரவியது. மூவேந்தர்களான சேர, சோழ, பாண்டியர்கள் அவன் புகழ் கண்டு வெதும்பினர். பறம்பு நாட்டின் நிலவளம் அவர்களின் கண்களை உறுத்தியது. பாரிக்கு எதிராகத் தனித்தனியே அவர்கள் மேற்கொண்ட போர் முயற்சிகள் கைகூடவில்லை. இறுதியில் மூவேந்தர்களும் ஒன்றிணைந்தனர். அவர்களின் கூட்டுப்படை பாரியின் பறம்புநாட்டை அனைத்துத் திசைகளில் இருந்தும் ஒருசேரத் தாக்கியது. சின்னஞ்சிறு `டிராய்’ நகரின் மீது மொத்த கிரேக்கப் படையும் போர் தொடுத்ததைப் போலத்தான் இதுவும் நிகழ்ந்தது.

தலையானங்கானத்துப் போர், வெண்ணிலைப் போர், வாகைப் பறந்தலைப் போர், கழுமலப் போர் என சங்ககாலத் தமிழகம், குருதி பெருக்கெடுத்து ஓடிய எண்ணற்ற போர்க்களங்களைக் கண்டது. அங்கெல்லாம் நடைபெற்ற போரில் மூவேந்தர்களில் யாரேனும் ஒருவர் வெற்றிபெற்றார்.

மற்றவர்கள் தோற்றோடினர். ஆனால், `பறம்புமலைப் போரில்’ மட்டுமே மூவேந்தர்களும் ஒருசேர தோல்வியைத் தழுவினர். தமிழக வரலாற்றில் அதற்கு முன்பும் அதற்குப் பின்பும் நிகழாத வீரச்சரித்திரம் இது.

பெரும் நிலப்பரப்பை ஆண்ட மூவேந்தர்களின் கூட்டுப்படை, ஒரு குறுநில மன்னனால் சிதறடிக்கப்பட்டது. அதன் பின் மூவேந்தர்களும் ஒன்றாய் சதிசெய்து, வஞ்சினம் நிகழ்த்தி, பாரியின் உயிர் பறித்தனர். வீரத்தால் சாதிக்க முடியாததை துரோகம் செய்து முடித்தது.

வென்றவர்களின் பெயர்கள் இன்று வரை துலங்கவில்லை. ஆனால் வீழ்த்தப்பட்ட பாரி, வரலாற்றில் ஒளிரும் நட்சத்திரமானான்; வள்ளல் என்ற சொல்லின் வடிவமானான். முல்லைக்கொடிக்குத் தேரைத் தந்தவன் மட்டும் அல்ல... தனது வீரத்தால் என்றும் ஒளிவீசும் வெற்றிக்கொடியை நாட்டிச்சென்றவன் வேள்பாரி.

இயற்கைக்கும் மனிதனின் பேராசைக்கும் இடையில் இன்று நடக்கும் போராட்டத்தின் ஆதிவடிவம்தான் வேள்பாரியின் கதை. திரும்பும் திசையெல்லாம் அருவி கொட்டும் குறிஞ்சி நிலத்தில், அந்த அருவி நீரினும் குழுமையுடை பாரியின் கரம்பற்றி நடக்க வாருங்கள்...


p100b.jpg

குலப்பாடல்

மூக்கை விடைத்தபடி பாய்ந்துகொண்டிருந்தன குதிரைகள். மேடு பள்ளமற்ற பாதை இன்னும் விரைந்து, `வா...’ என்று தேரோட்டியை அழைத்தது. தேரை ஓட்டும் ஆதன், குதிரையின் கடிவாளத்தைச் சுண்டியபடி வேகத்தை மேலும் அதிகப்படுத்தினான்.

அதிகாலையில் இருள் கலையத் தொடங்கியபோது இவர்கள் புறப்பட்டனர். அறுக நாட்டை ஆளும் சிறுகுடி மன்னன் செம்பனின் தென்திசை மாளிகை அது. அங்குதான் நேற்றிரவுத் தங்கல். அதுவரை தேரை ஓட்டிவந்தவன் நாகு.

“இனி அடர் காட்டுப்பகுதியில் பயணம் இருக்கும். இந்த நிலப்பாதையை நன்கு அறிந்த தேரோட்டி இவன். இவனது பெயர் ஆதன். நாளை இவன்தான் உங்களை அழைத்துச் செல்வான்” என்று கூறி வணங்கி விடைபெற்றான்.

புறப்படும்போது, நாகுவிடம் ஆதன் கேட்டான், ‘‘இவர் யார்... மன்னரின் சுற்றத்தாரா?”

“இல்லை... ‘இவரின் அடிமை நான்!’ என்று மன்னர் என்னிடம் கூறினார்.”

பதில் கேட்டு ஆதன் நடுக்குற்றான். சற்று நிதானித்து, “அப்படியென்றால் ஏன் தனியாக வந்திருக்கிறார். உடன் பாதுகாப்புக்கு யாரும் வரவில்லையா?”

“பெரும் படையே புறப்பட்டது” என்று சொன்ன நாகு, சற்றுக் குரல் தாழ்த்தி, “முதலில் தேரை ஓட்ட, வளவனின் இருக்கையில் ஏறி அமர்ந்ததே மன்னர்தான். இவர் ஒற்றைச் சொல்தான் சொன்னார்.

எல்லோரும் நின்றுகொண்டார்கள். நான் மட்டும் அவரை அழைத்துக்கொண்டுவந்தேன்” - சொல்லிவிட்டு புறப்படத் தயாராகும்போது, ஆதன் மீண்டும் கேட்டான்...

“மன்னர்களை ஆளும் இந்தத் தெய்வத்துக்குத் தனித்த பெயர் எதுவும் இருக்கிறதா?”

“பெரும்புலவர் கபிலர்.”

ஆதன் இரவு முழுவதும் தூங்கவில்லை. பதற்றத்திலேயே இருந்தான். பொழுது விடிந்தது. தூக்கமின்மையைக் காட்டிக்கொள்ளாமல், உற்சாகமாகக் குதிரையைப் பூட்டி தேரைத் தயார்செய்தான். மாளிகையில் இருந்து கபிலர் வெளியேறி வந்தார். நரை முழுமைகொள்ளாத தாடி, வேந்தனைப்போல தலைமுடியை உச்சியில் முடிச்சிட்டு, சிறுகோள் ஒன்றைச் செருகியிருந்தார். பேரறிவின் இறுமாப்பு கண்ணொளியில் மின்னியது. பார்த்ததும் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்கினான் ஆதன்.

அவரது வாழ்த்துச்சொல் காதில் கேட்க எழுந்து திரும்பியபோது, அவர் குதிரையின் கழுத்தைத் தடவிக்கொடுத்துக்கொண்டிருந்தார். குதிரைகள் புதிய மனிதர்களைத் தொடவிடாது. ஆனாலும் தேரில் பூட்டப்பட்டிருந்ததால், ஓர் அளவுக்கு மேல் அதனால் விலகவோ, முகத்தைத் திருப்பவோ முடியவில்லை.

p100c.jpg

“மயிலும் குதிரையும் தனது மொத்த அழகையும் நீண்டு திருப்பும் கழுத்தில் வைத்திருக்கிறது” என்று சொன்னவர், சிரித்த முகத்தோடு தேரில் ஏறினார்.

ஆதன், மிகத் திறமையான தேரோட்டி. பயணத்தின் அதிர்வு பசுந்தூள் மெத்தையைக் கடந்து உடலில் உணர முடியாதபடி, தேரைச் செலுத்துவான். அவன் நினைத்ததைவிட வேகமாகவே வேட்டுவன் பாறைக்கு வந்துவிட்டான். அருகில் வந்ததும் வேகத்தைக் குறைக்க, கடிவாளத்தை இழுத்து நிறுத்தினான். கடிவாளத்தில் இருக்கும் பூண் எழுப்பிய உலோக ஒலி தனித்து மேலெழும்பியது.
தலைதூக்கிப் பார்த்தார் கபிலர். எதிரில் இரு சிறுகுன்றுகள். அதற்குப் பின்னால் அடுக்கடுக்காக மலைத்தொடர்கள். அதன் உச்சி, வெண்மேகத்துக்குள் மறைந்திருந்தது. மேலெழும்பிய உலோக ஒலி, மலையோடு மறைந்தது.

“அய்யா... இதுதான் பச்சை மலைத்தொடரின் முன்னால் இருக்கும் வேட்டுவன் பாறை. இந்த வழியாகத்தான் பாரியின் பறம்பு மலைக்குப் போக வேண்டும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.”
கபிலர் வண்டியைவிட்டுக் கீழே இறங்கிப் பார்த்தார். கண்ணுக்கெட்டும் தூரம் வரை மலை விரிந்துகிடந்தது. நீர் வற்றிய காட்டாற்றைக் கடந்து வேட்டுவன் பாறையில் பாதி ஏறுவது வரை, ஆதன் நின்று பார்த்துக்கொண்டே இருந்தான்.

“இதற்கு முன்னால் பறம்பு நாட்டுக்குப் போனது கிடையாது. பாதை எவ்வளவு தூரம் இருக்கும். துணைக்கு யாராவது வருவார்களா? போய்ச் சேர எத்தனை நாளாகும் என எதுவும் தெரியாது.  தன்னந்தனியாக எந்தத் தைரியத்தில் இந்த அடர்வனத்துக்குள் இவர் போய்க் கொண்டிருக்கிறார்?” - ஆதனுக்கு வியப்பு குறையவே இல்லை. வேறு வழியின்றி அந்த இடத்தைவிட்டுப் புறப்பட்டான். 
உச்சிவெயிலிலும் ஈரக்காற்று வீசியது. குன்றின் சரிவில் போய்க்கொண்டிருந்த பாதை சற்றே வளைந்து மேல் நோக்கி ஏறியது. பாறையில் இருந்து சரிந்துகிடக்கும் வேர்கள், கைபிடிக்க வாகாக இருந்தன. கபிலர் வேரை இறுகப் பிடித்து விசைகொடுத்து மேலேறியபோது, தனக்கு வயதாகிவிட்டதை உணர்ந்தார். உடல் வேர்த்தது, மூச்சுவாங்கியது, நடையின் வேகத்தைச் சற்றே குறைக்கலாமா என்று யோசிக்கையில், கால்கள் நின்றுகொண்டுதான் இருந்தன. சிறிது இளைப்பாரி மீண்டும் நடந்தார்.

p100d.jpg

இடப்புறம் கீழே நீர் வற்றிக்கிடக்கும் காட்டாற்றின் அழகைப் பார்த்தபடி, ஒற்றையடிப் பாதையை நோக்கி கண்களைத் திருப்பினார். செடிகளுக்கு இடையில் ஏதோ உருவம் தெரிகிறதே என்பதை உணர்ந்தவர், மீண்டும் கீழே உற்றுப்பார்த்தார். இவர் நடக்கும் பாதையை நோக்கி ஓர் இளைஞன் கையில் வேல் கம்போடு சரசரவென மேலேறி வந்தான்.

கபிலருக்கு அவனது உருவம் பதியவில்லை... அவன் வந்த வேகம்தான் பதிந்தது. மேலே ஏறியவன் கபிலரைக் கடந்து முன்னால் போய்க்கொண்டிருந்தான். நின்று பேச அவனுக்குப் பொழுது இல்லை. நடந்துகொண்டே கேட்டான்.

“நீங்கள் யார் எனத் தெரிந்துகொள்ளலாமா?”

கபிலர், கண்ணிமைத்து அவனைப் பார்த்தார். பதில் சொல்லுவதற்குள் மறைந்துவிடுவானோ என்று தோன்றியது. குரல் உயர்த்திச் சொன்னார்.

 “கபிலர்.”

“நான் பெயரைக் கேட்கவில்லை. யார் எனக் கேட்டேன்?”

எதிர்காற்றில் சற்றே தடுமாறினார் கபிலர். தடுமாற்றத்துக்குக் காற்று காரணம் அல்ல என்பதை, அவரது மனம் சொல்லியது.

“நான் புலவன்.”

“பாணர் குலமா?” - கேட்டபடி நடந்து போய்க்கொண்டே இருந்தான். அவனைப் பார்ப்பது, பாதையில் கவனம்கொள்வது, பதில் சொல்வது என்ற மூன்று வேலைகளை கபிலர் செய்யவேண்டி இருந்தது.p100e.jpg
“இல்லை... பாணர்கள் பாடல் பாடுபவர்கள். இசைஞர்கள், கலைஞர்கள். நான் அவர்கள் இல்லை. நான் புலவன்; எழுதக் கற்றவன்.”

பதில் சொல்லி முடிக்கும்போது, கேள்வி வந்தது...

“எழுத்து என்றால்..?”

மலையேறும் ஒரு பாதையில், இவ்வளவு தூர இடைவெளியில் ஓர் உரையாடலா?

உரத்தக் குரலில் பதில் சொல்வதற்கு மூச்சுக்காற்று ஒத்துழைக்க மறுத்தது. ஆனாலும் கபிலர் உரத்தே சொன்னார்...

``மரத்தை ஓவியமாக வரைந்து பார்த்திருக்கிறாயா?”

“பார்த்திருக்கிறேன்... குகைப் பாறையில் நிறைய மரங்கள் ஓவியமாக வரையப்பட்டுள்ளன.”

“அதேபோல, நாம் பேசும் ஒலியை ஓவியமாக வரைவதுதான் எழுத்து” - அவனது நடையின் வேகம் கொஞ்சம் குறைந்தது. யோசிக்கிறான் என்று புரிந்தது. அவனைக் கொஞ்சம் உள்ளிழுக்க முடியும் என்ற நம்பிக்கை கபிலருக்கு வந்தது. p100g1.jpg

“உனது பெயர் என்ன?”

“நீலன்.”

“இங்கே வா... வரைந்து காட்டுகிறேன்” என்று சொன்ன கபிலர், கீழே கிடந்த காய்ந்த குச்சியைக் குனிந்து எடுத்தார். அவன் சட்டென அருகில் வந்தான். அதைக் கவனித்தபடியே, குச்சியால் கீறி அவனது பெயரை மண்ணில் எழுதினார்.

அதைப் பார்த்ததும் உதட்டோரத்தில் ஓர் இளஞ்சிரிப்பு. மீண்டும் நடக்கத் தொடங்கியவன், “நான் என்ன யானையின் சாணத்தில் செரிக்காமல் கிடக்கும் ஈக்கியைப்போலவா இருக்கிறேன்?”

எதிர்காற்று மீண்டும் அடித்து கபிலரைத் தள்ளாடவைத்தது. நீலன் வேகமாகப் போய்க் கொண்டிருந் தான். கபிலர் ‘அவனை ரசிக்கத் தொடங்கினார். ‘அவனது வேகம், இறுகித் திரண்ட உடல், வீரனுக்கே உரிய மிடுக்கு, சிறு கண்கள், உள்ளத்தில் இருந்து உருவாகும் கேள்விகள், அவன் கையில் இருக்கும்போதே வேல் இவ்வளவு வேகமாகப் போகிறதே, அவன் எறிந்தால் எவ்வளவு வேகம் கொள்ளும்?’ என யோசித்த கபிலர், இந்த இடைவெளியில் கேள்வியை நாம் ஆரம்பித்துவிடுவோம் என முடிவுசெய்து, “உனக்கு மணமாகிவிட்டதா?” என்றார்.

“இல்லை... விரைவில் நடக்கும்” - சற்று இடைவெளிவிட்டுச் சொன்னான், “என்னவளைத்தான் பார்த்துவிட்டு வருகிறேன்.”

“எங்கே இருக்கிறாள்?”

“அதோ... அந்த மலையின் பின்புறம் இருக்கிறது அவளது குடில்.”

“அந்த மலைக்குப் பின்புறமா?’’ - ஓசையின் நீளமே உணர்வைச் சொன்னது.

“நாள்தோறும் இவ்வளவு தூரம் போய் வருவாயா?”

p100f.jpg“நாளும் இருமுறை போய் வருவேன். சில நாட்களில் இருமுறை இங்கு வந்து செல்வேன்.”

கபிலருக்கு அவன் மீதான ஈர்ப்பு இன்னும் கூடியது. ஓர் ஊஞ்சலைப்போல இரு குன்றுகளுக்கும் இடையில் தினமும் ஆடுகிறவன் என்று, மனதில் ஒரு சித்திரம் உருவாகிக்கொண்டிருக்கையில், கேள்வியை அவன் தொடுத்தான்.

“பெண்ணின் இதழ் இவ்வளவு சுவையேறி இருக்கிறதே, எப்படி?”

அந்த இளஞ்சிரிப்பு கபிலரின் உதட்டோரத்தில் வந்து உட்கார்ந்தது. ஊஞ்சலில் தன்னையும் ஏற்ற நினைக்கிறான். சரி... அவனது வேகத்தைக் குறைத்தால் போதும் என நினைத்தவர், பதில் சொல்லும் முன் அடுத்த கேள்வியை அவனே கேட்டான்.

“உங்களுக்கு மணமாகிவிட்டதா?”

“இல்லை.”

“அப்படியென்றால் நான் உங்களிடம் இந்தக் கேள்வியைக் கேட்டிருக்கக் கூடாது அல்லவா?”

ஏதாவது ஓர் இடத்தில் நின்றால்தானே பதில் சொல்வதற்கு, கணப்பொழுதில் மூன்று கொப்பு தாவுகிறான். இவனை எப்படி அடைத்து நிறுத்துவது என யோசித்த கபிலர், “உனக்கும்தான் மணமாகவில்லை” என்றார்.

“நான் வீரன்.”

கபிலர் திகைத்துப்போனார். இவன் என்னை என்ன சொல்ல வருகிறான் என யோசிக்கையில் அவன் பதிலைத் தொடர்ந்தான்...

“எப்போது போர் மூளும் எனத் தெரியாது. பறம்பு நாட்டுக்குச் சூழவும் எதிரிகள். போர்க்களத்தில் நான் சாயும்போது எனது ஈட்டியை இறுகப் பற்றி முன்னேற, என் மகன் வந்து நிற்கவேண்டும்.
வீரர்களின் வாழ்வு மிகக் குறுகியது, நிதானமாக வாழ்ந்து, எழுத்துக்கள் எல்லாம் கற்று, நாடுதோறும் பயணம்போய், ஒரு காத தூரத்தை மூன்று நாழிகை நடந்து கடக்க எங்களுக்கு அவகாசம் இல்லை புலவரே!”

ஊஞ்சல் அறுபட்டு தான் மட்டும் விழுவதுபோல் உணர்ந்தார் கபிலர்.

ட்டுவன் பாறையின் இரண்டாவது குன்றில் கால் பதிக்கும் வரை, கபிலர் அவனிடம் பேச்சுக் கொடுக்க வில்லை. அவனைப் பற்றிய ஒரு கணிப்பை உருவாக்கிக்கொள்ள முடியவில்லை. எதை உருவாக்கினாலும் அடுத்த கணமே அதைக் குழைத்துவிடுகிறான். அவன் கையில் வைத்திருக்கும் வேல்முனையைவிடக் கூர்மையானதாக இருக்கிறது அவன் அளிக்கும் பதில்கள். அவனைக் கணிக்க முடியவில்லை என்பதை மனம் ஏற்கவில்லை. ஆனால், ஒன்று புரிந்தது. அவனது நடைவேகத்துக்கு எங்கோ போயிருக்க வேண்டும். அவ்வாறு போகாததில் இருந்து, அவன் தன்னை அழைத்துக்கொண்டு போகிறான் என ஊகித்தார் கபிலர்.

சிறிது நேரத்துக்குப் பின்னர் மெளனம் கலைத்துப் பேசத் தொடங்கினார், “பாரியின் பறம்பு மலை எவ்வளவு தொலைவில் இருக்கிறது?” p100h.jpg

“இந்த நாட்டின் பெயர்தான் பறம்புநாடு; பாரி இருக்கும் மலையின் பெயர் ஆதிமலை. அந்த மலையில்தான் வேளீர் குலத்தைத் தோற்றுவித்த மாவீரன் `எவ்வி’, தலைநகரை உருவாக்கினான்.”

நிலப்பகுதிக்கு வந்து பாணர்கள் பாடிய பாடல்களில் இருந்தே பலவற்றை நாம் ஊகித்துக்கொள்கிறோம். ஆனால், உண்மை எவ்வளவு விரிவுடையதாக இருக்கிறது என யோசித்தபடி கபிலர் கேட்டார், “அங்கு இருந்துதான் பாரியின் அரசாட்சி நடக்கிறதா?”

கேள்வி, நீலனுக்குச் சிரிப்பை உண்டாக்கியது. “பாரி அரசன் அல்ல… வேளீர் குலத் தலைவன். நாட்டை ஆள்வதைப்போல காடும் ஆளப்படுகிறது என நீங்கள் நினைக்கிறீர்கள். காட்டை யாராலும் ஆளமுடியாது. சின்னஞ்சிறு மனிதனால் என்ன செய்ய முடியும்? பகை, துரோகம், வீரம், சாவு, அவ்வளவுதான். ஆனால், காட்டைப் பாருங்கள் எண்ணிலடங்கா உயிர்கள், ஒவ்வொன்றும் அளவில்லா ஆற்றல்கொண்டது. ஒரு பச்சிலையை வாயில் வைத்தால், அந்தக் கணமே நீங்கள் செத்து மடிவீர்கள். துளிர்விடும் ஒற்றை இலை உங்களின் வாழ்வை முடித்துவைக்கப் போதுமானது. உங்களால் முடிவுசெய்ய முடியுமா, காடு இலைகளால் ஆனதா, மரங்களால் ஆனதா, மிருகங்களால் ஆனதா, பாறைகளால் ஆனதா, பறவைகளால் ஆனதா, கொம்புகளால் ஆனதா?”

அவன் பேசிக்கொண்டேபோனான். கபிலரால் ஒருகட்டத்தில் அவனது பேச்சைப் பின்தொடர முடியவில்லை. பாறைகள் உருள்வதைப்போல வார்த்தைகள் உருண்டு கொண்டிருந்தன.

மூச்சுவிட அவகாசம் எடுத்துக் கொண்டார். அவர் நின்றுவிட்டதை உணர்ந்த அவன் திரும்பிப் பார்த்துச் சொன்னான், ``எங்களின் பாதங்கள் மண்ணைப் பிடித்து நடந்து பழகியவை. சமவெளியில் வாழும் உங்களின் பாதங்கள் மண்ணில் தேய்த்து நடந்து பழகியவை. பாதடியைக் கழட்டிவிட்டு பாதத்தை முன்னெடுத்து வையுங்கள். பற்களைப்போல விரல்களுக்கும் கவ்விப்பிடிக்கத் தெரியும்.”

இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு தனக்கு ஒருவன் நடைபயிலச் சொல்லிக்கொடுக்கிறான். இளம்பருவத்தில் இப்படித்தான் ஏமாற்றி நடை பழக்கினார்களா?

சீறூர் மன்னன், முதுகுடி மன்னன், குறுநில மன்னன், சேர, சோழ, பாண்டிய மூவேந்தர்கள், கல்வியில் சிறந்த சான்றோர்கள், அறவோர், `எட்டி’ பட்டம் சூடிய பெருங்குடி வணிகர்கள் என எத்தனையோ பேரோடு கழிந்துபோன இந்தக் காலங்களில், மொழியும் அறிவும் ஞானமுமே என்னுள் எப்போதும் நிலைகொண்டது. ஆனால், ஒருபோதும் எனது தாயின் நினைவு தோன்றியது இல்லை. கணப்பொழுதில் என்னை எனது தாயின் மடியில் கொண்டுபோய்ச் சேர்த்துவிட்டானே, முன்னால் போகும் இவன் யார்?”

p100j.jpgகபிலர் ஒருவித உணர்ச்சி மேலிட்ட வராக பாதடியைக் கழட்டிவிட்டு, அவனை நோக்கி நடந்தார். அவன் குன்றின் உச்சியை அடைந்து, அவரது வருகைக்காகக் காத்திருந்தான். அவர் மூச்சு வாங்கியபடி உச்சியை நெருங்கினார். எதிரில் பெரும் மலைத்தொடரின் அடுக்குகள் தெரிந்தன.

நீலன் சொன்னான்... “முதல் அடுக்குக்கு ‘காரமலை’ என்று பெயர். அதன் மேல் நின்று பார்த்தால்தான், மூன்றாம் அடுக்கைப் பார்க்க முடியும்... அதுதான் ஆதிமலை.”

உச்சிக்கு வந்ததும், அதுவரை இல்லாத வேகத்தோடு காற்று வந்து அவரைத் தள்ளியது. உடலைச் சற்றுத் திருப்பி காற்றின் வேகத்துக்கு ஈடுகொடுத்து நின்றபடி, எதிர்திசையைப் பார்த்தார். நீண்டுகிடக்கும் மலைத்தொடர் தனது இரு கரங்களையும் விரித்து அவரை அழைப்பதுபோல் இருந்தது.

நீலன் சரிவில்  இறங்கத் தொடங்கினான். “இனி வேகமாக நடக்க வேண்டும். பொழுதுசாய சிறிது நேரம்தான் இருக்கிறது. மலையின் விளிம்பை சூரியன் கடந்துவிட்டால், ஒரு பனை தூரத்தைக் கடப்பதற்குள் இருள் நம்மை அடைத்துவிடும். அதன் பிறகு நீங்கள் நடப்பது கடினம். விரைவில் வாருங்கள்” என்று சொல்லியபடி தாவிச் சரிந்தான். 

கபிலர் வேகமாக இறங்கத் தொடங்கினார், அவன் நடக்கவில்லை தாவிக் கடந்துகொண்டிருக்கிறான் என்பதைப் பார்த்தவாறு, சிறு புதர்களை விலக்கி, வேகமாக நடக்க முயற்சித்துக்கொண்டிருந்தார். ஏறும்போது முன்னால் செல்பவன் எவ்வளவு உயரம் போனாலும், ஆளைப் பார்த்துவிட முடியும். இறங்கும்போது அப்படி அல்ல. அங்கொன்றும் இங்கொன்றுமாக அவனது உருவம் மறைந்து தெரிந்தது. பேச்சுக் கொடுத்தால் மட்டுமே அவனைப் பின்தொடர முடியும் என்பதை உணர்ந்த கபிலர், கவனமாக நடந்தபடி கேட்டார். 

“ `காடுகள் கொம்புகளால் ஆனதா?’ என்று எப்படிக் கேட்டாய்?” என்றார்.

“கொம்புகள் என்றால் மிருகங்களின் கொம்புகள் என்று நினைத்துவிட்டீர்களா? நான் மரங்களின் கொம்புகளைச் சொன்னேன்.”

கபிலருக்கு விளங்கவில்லை. கழுத்தை நீட்டிப்பார்த்தார். அவன் எந்தப் புதர் தாண்டி போய்க் கொண்டிருக்கிறான் எனத் தெரிய வில்லை. சத்தமாகக் குரல்கொடுத்தார்...

“கொப்புகளைத்தான் கொம்புகள் என்று சொல்கிறாயா?”

“இல்லை... நாங்கள் மரத்தின் வேர்களை மரக்கொம்புகள் என்றுதான் சொல்வோம். மரம் மேல் நோக்கி வளருவது அல்ல... கீழ் நோக்கி வளருவது. இறுகிய மண்ணையும் கரும்பாறையும் தனது கொம்புகளால் பிளந்துகொண்டு அது உள்செல்கிறது. மரத்தின் முழு ஆற்றலும் அதன் கொம்புகளில்தான் இருக்கிறது. உடலைவிட நீளமானவை அதன் கொம்புகள்.”

தான் கற்றவற்றை ஒருவன் தலைகீழாகப் புரட்டிக் கொண்டிருக்கிறான் எனத் தோன்றியபோது, முன்வைத்த வலதுகால் இடறியது. சிறுபாறையில் பாதம் நழுவிச் சரிந்தது. பக்கத்தில் இருந்த செடியைப் பிடித்து, கீழே விழுந்துவிடாமல் நின்றார் கபிலர். 
 
கால் இடறி கற்கள் உருளும் சத்தம் கேட்டதும், நீலன் வேகமாக மேலேறிவந்தான், பக்கத்தில் இருந்த வேம்பின் மீது கை சாய்த்து நின்றார் கபிலர். `சிறிது நேரம் உட்காருங்கள்’ என்று சொன்னவன், பாதங்களை உள்ளங்கையால் பிடித்து, தசைகளை இழுத்துவிட்டான். அவரது முகத்தைப் பார்த்தபடி, “நடக்கலாமா?” என்றான். கொஞ்சம் பொறுப்பா என்பதுபோல அவரது பார்வை இறைஞ்சியது. கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி, தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டார். வேப்பம் பூக்கள் சுற்றிலும் உதிர்ந்துகிடந்தன. பூக்களை எடுத்து உள்ளங்கையில் வைத்து உற்றுப்பார்த்தார். மூச்சுக்காற்றில் பூக்கள் அசைந்தன. பேச்சுக் கொடுத்தால் உட்கார்ந்திருக்கும் நேரத்தைச் சிறிது நீட்டிக்கலாம் என யோசித்த கபிலர் “வேப்பம் பூ, யாருக்கு உரியது தெரியுமா?” என்றார்.

“சிற்றெறும்புக்கு உரியது.”

கபிலர் பதற்றம் அடைந்தார்.

“நான் அதைக் கேட்கவில்லை. வேப்பம் பூ மாலை யார் சூடுவதற்கு உரியது தெரியுமா?” என்று கேட்டுவிட்டு, ஏதாவது பதிலைச் சொல்லிவிடுவானோ என்ற பதற்றத்தில் அவரே பதிலையும் சொன்னார்...
 
“பாண்டிய மன்னனுக்கு உரியது.” p100m.jpg

“சரி... அப்படியே நடக்கத் தொடங்குங்கள். நான் அருகிருந்து அழைத்துச் செல்கிறேன்” என்றான்.

கபிலர் நடக்கத் தொடங்கினார். எட்டுவைக்கும்போது கால் நரம்பு சுண்டுவது போல் இருந்தது. சூரியனின் அடிவிளிம்பு காரமலையின் தலையைத் தொட்டது.

முன்னால் நடந்தபடியே கேட்டான்... “வயல் நண்டைப் பார்த்திருக்கிறீர்களா?”

சம்பந்தம் இல்லாமல் கேட்கிறானே என எண்ணியபடி, “பார்த்திருக்கிறேன்” என்றார்.

“வயல் நண்டின் கண்கள் வேப்பம்பூவைப் போலத்தான் இருக்கும். உங்கள் பாண்டியன் வயல் நண்டை மாலையாக அணிந்துகொள்வானா?” - கேட்டபடி நமட்டுச் சிரிப்போடு நாலு எட்டு முன் தாவிச் சென்றான்.

கபிலர் நிலைகுலைந்துபோனார். பெரும் வேந்தனை சாதாரண வீரன் ஒருவன் இவ்வளவு தாழ்த்தி தன்னிடம் பேசுகிறானே. இதைக் கேட்டுக்கொண்டிருப்பது அறம் அல்ல என்று தோன்றியது. இந்த எண்ணம் முழுமை அடையும் முன்னர், அவருக்குள் இருந்த கவிஞன் விழித்துக்கொண்டு வெளியில் வந்தான். என்ன அழகான ஓர் உவமை? கணநேரத்தில் எப்படி இவ்வளவு பொருத்தமான ஓர் ஒப்பீட்டைச் செய்தான். காதலுக்குள் சூழ்கொண்டு கிடக்கிற ஒருவனுக்கு உவமைகள் வராதா என்ன? மனதில் எண்ணங்கள் ஓடிக்கொண்டிருக்க, கபிலர் கேட்டார்... “வயல் நண்டின் கண்கள்தான் அப்படி இருக்குமா... கடல் நண்டின் கண்கள் அப்படி இருக்காதா?”

“எனக்குத் தெரியாது. நான் கடல் பார்த்தது இல்லை. ஆனால் நீரும் நிலமும் மாறுபடுகையில், வடிவமும் மாறுபடத்தான் செய்யும்.”

“மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவனும் கடல் பார்க்க வேண்டும்.”

“ஏன்?”

“அது அவ்வளவு விரிந்து பரந்தது... அளவற்றது.”

முன்னால் போய்க்கொண்டிருந்த நீலன், சட்டெனத் திரும்பி கபிலரை நேர்கொண்டு பார்த்துக் கேட்டான்...

“எங்கள் பாரியின் கருணையை விடவா?”

கபிலர், மனதுக்குள் சுருங்கிப் போனார்!

- பாரி வருவான்..

http://www.vikatan.com/anandavikatan/

Link to comment
Share on other sites

  • Replies 127
  • Created
  • Last Reply

வீரயுக நாயகன் வேள் பாரி - 2

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
 

பாணர்களின் கதாநாயகன்புதிய வரலாற்று தொடர்சு.வெங்கடேசன், ஓவியங்கள்: ம.செ.,

 

இது சுமார் முன்னூறு ஆண்டுகாலக் கதை, அப்போது வடவேங்கடம், தென்குமரி என்று தமிழ் நிலத்துக்கு எல்லையோ, பெயரோகூட உருவாகிவிடவில்லை. அடர்ந்த வனத்தில், ஆற்றுப்படுகையில், வண்டல் பூமியில், வற்றிய பாலையில், கடலோரத்தில், மலைமுகட்டில் என வெவ்வேறு வகையான நிலங்கள்தோறும் இனக்குழுக்களாகச் சேர்ந்து வாழ்ந்த மக்கள், தங்களின் குலமுறைப்படியான வாழ்வை நடத்திக்கொண்டிருந்தனர். அரசோ, அரசனோ உருவாகவில்லை. குலத் தலைவன் மட்டுமே இருந்தான். அவனே குலங்களை வழிநடத்திக் கொண்டிருந்தான். 

குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐவகை நிலங்களிலும் நூற்றுக்கும் மேற்பட்ட மனிதக் கூட்டங்கள் தங்களின் தனித்த அடையாளங்கோடு செழித்திருந்தன. இயற்கையோடு இயந்த வாழ்வு. தேவை மட்டுமே ஆசையாகவும் கனவாகவும் இருந்தது. உழைப்பும் விளைச்சலும் பொதுச் சொத்து. கொண்டாட்டமும் குதூகலமும் இயல்பின் பிரதிபலிப்பு. எல்லா மனிதனும் சரிநிகராக இருந்தனர். இயற்கையான  பிரிவினையான ஆண், பெண் என்ற பாலினப் பிரிவினை மட்டுமே இருந்தது.

p115.jpg

வேட்டையாடிய உணவை நெருப்பில் சுட்டு தின்றுகொண்டிருந்தபோது, குகையில் இருந்த பெண்கள் ஓய்வு நேரத்தில் நீரைக் கொதிக்கவைத்து இறைச்சியை அதில் வேகவைத்தனர்.  மாமிசத்தையும் கிழங்குகளையும் நெருப்பில் சுடாமலே உண்ணக்கூடிய பக்குவத்துக்கு அவர்கள் மாறினர். வேகவைத்த உணவு என்ற புதியதொரு வகையை உருவாக்கினர்.

அன்றில் இருந்து நெருப்பில் சுட்ட உணவுகளுக்கு `ஆண் உணவு' என்று பெயர் ஆயிற்று.  நீரில் வேகவைக்கப்பட்ட உணவுகளுக்கு `பெண் உணவு' என்று பெயர் ஆயிற்று. ஆண், அவசரத்தின் அடையாளம் ஆனான். பெண், பக்குவத்தின் அடையாளம் ஆனாள். உணவு, தாவரங்கள், விலங்குகள், பறவைகள், மலைகள், நதிகள் என எல்லாமே தம்மைப்போலவே ஆணாகவும் பெண்ணாகவும் இருக்கின்றன என்ற முடிவுக்கு வந்தனர்.

இயற்கையின் அதிஅற்புதம் எல்லாம் எதிர்பாலினத்தின் மீதான வசீகரத்தில் இருந்தே தொடங்குகிறது. எல்லாவிதமான புதிய ஆற்றலின் ஊற்றுக்கண்ணாக அவையே இருக்கின்றன. காதலுக்குள்தான் இயற்கையின் இயங்குசக்தி பொதிந்துகிடக்கிறது. ஆண், பெண் என்ற இரு சக்திகள். ஒருபோதும் ஒன்றை ஒன்று முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாத ஆதி ரகசியங்களை தன்னுள்கொண்டுள்ளது. நீரும் மண்ணும்போலத்தான் ஆணும் பெண்ணும். நொடி நேரத்தில் ஒன்றினுள் ஒன்று கலக்கவும் முடியும்; மறுநொடியில் ஒன்றைவிட்டு மற்றொன்று கழலவும் முடியும். அதுவே அதன் இயல்பு.

உயிரினங்களில் இயற்கை உருவாக்கியது இந்த ஒரு பிரிவினை மட்டுமே. இதுவன்றி வேறு பிரிவினைகள் இல்லாமல் அழகாகவும்  அமைதி யாகவும் இருந்தது அந்தக் காலம். ஆனால், அந்த அமைதி நீண்டு நிலைக்கவில்லை. மெள்ளக் குலைய ஆரம்பித்தது. 

பெரும் மாளிகை சரியக் காரணமான ஒற்றைச் செங்கல்லைப் போலத்தான் சொத்தும், சொத்தின் மீதான ஆசையும். தனக்கான உடமை, தனது சந்ததிக்கான சேமிப்பு என ஆரம்பித்தபோது, குலங்களின் அமைதி குலைய ஆரம்பித்தது; ஏற்றத் தாழ்வுகள் உருவாகின; குலங்களில் வலுத்தவனின் கை ஓங்கியது; வல்லமை பொருந்தியவனின் கைகளில் அதிகாரம் நிலைகொண்டது. வலிமையடைந்த குலம் பிற குலங்களை அடக்கியாள நினைத்தது. தமிழ் நிலம் எங்கும் இருந்த நூற்றுக் கணக்கான குலங்கள் ஒன்றோடு ஒன்று மோதத் தொடங்கின. அடர்ந்த காட்டில் விடாது கேட்கும் இடியோசை போல, அந்த மோதல்களின் ஓசை கேட்டுக்கொண்டே இருந்தது. நூற்றாண்டுகளாகக் குருதி ஆறு நிற்காமல் ஓடியது.

p115a.jpg

ஆரம்ப காலத்தில் மனிதனுக்குத் தேவையான பெரும் செல்வமாக கால்நடைகளே இருந்தன. எனவே, கால்நடைகளை அதிகப்படுத்தவே எல்லா குலங்களும் ஆசைப்பட்டன. அடுத்த இனக் குழுவின் கால்நடைகள் இரவோடு இரவாகக் களவாடப்பட்டன. களவு கொடுத்தவன் ஆயுதங்களோடு குறுக்கே பாய்ந்தான். ஓட்டிச் செல்லப்படும் கால்நடைக்கும், மீட்டுத்திரும்பும் கால்நடைக்கும் இடையில் மனிதன் செத்து விழுந்துகொண்டே இருந்தான்.

அடுத்தகட்டமாக, நல்ல விளைநிலங்களைக் கைப்பற்ற குலங்கள் மோதிக்கொண்டன. செழிப்பான விளைநிலங்கள் எங்கிருக்கிறதோ, அங்கே மனித ரத்தம் ஆண்டு முழுவதும் உலரவில்லை. கால்நடைகளைப் பறிக்கும்போது மோதலாக இருந்த செயல், இப்போது போர்களாகப் பரிணமித்தது. ஒரு போர் இன்னொரு போரை உற்பத்திசெய்தது. தொடக்க காலத்தில் தோல்வியடைந்த நாட்டின் வீரர்கள் வெட்டிக் கொல்லப்பட்டனர். ஆனால், இப்போது அப்படி அல்ல, அவர்களின் கைகளும் உழைப்பும் புதிய அரசுக்குத் தேவையாக இருந்தன. எனவே, அவர்கள் அடிமைகளாக்கப்பட்டு நுகத்தடியில் பூட்டப்பட்டனர். வீழ்ந்தவனின் நிலத்தை வென்றவன் வாள்கொண்டு உழுது பயிரிட்டான். `பிறர் மண் உண்ணும் செம்மலே’ என்று அவர்கள் போற்றப்பட்டனர்.

பெருகிவந்த தேவையும் கடல்வழி வணிகமும் எண்ணற்ற அடிமைகளை அனுதினமும் கோரின. நிலத்துக்காகத் தொடங்கிய போர் இப்போது அடிமைகளைப் பெறுவதற்கானதாக மாறியது. போர் எனும் நிரந்தரமான கொதிநீர்க் கொப்பரைக்குள் எண்ணிலடங்கா இனக் குழுக்கள் விழுந்து, ஒன்றோடு ஒன்று மோதி, அழித்து, கொன்று, செரித்து, மிஞ்சியவை மேலேறின.

மேலேறியவர்கள் தாங்கள் இனி குலத்தலைவர்கள் அல்ல, வேந்தர்கள் என்று அறிவித்தனர். `வம்ப வேந்தர்கள் (புதிய வேந்தர்கள்) வாழ்க வாழ்க' என்ற முழக்கம் மூன்றில் இரு பங்கு நிலப்பகுதியில் ஒலித்தது. வேந்தனுக்கு என்று தனித்த அடையாளங் களை சான்றோர்கள் உருவாக்கினர். மணிமுடி, அரச முரசு, வெண் கொற்றக்குடை, ஆணைச்சக்கரம் இவை வேந்தர்களுக்கு உரியன. வேந்தர்கள் என்றால் அது சேர, சோழ, பாண்டியராகிய மூவர் மட்டுமே. மற்ற எல்லோரும் குறுநில மன்னர்கள் என்று அறிவித்தனர்.

எந்த ஓர் அறிவிப்பும் ஆட்சிக்கு உட்பட்ட நிலப்பகுதிக்குத்தான் பொருந்தும். மூவேந்தர்களின் நிலப்பகுதிக்கு வெளியே இருந்த ஆட்சியாளர்கள் இந்த அறிவிப்பை காலிலே மிதித்து, காறி உமிழ்ந்தனர். குடவர், அதியர், மலையர், வேளீர் என இருபதுக்கும் மேற்பட்ட குலத் தலைவர்கள் வாளேந்தி வஞ்சினம் உரைத்தனர். காவிரி, வைகை, பேரியாறு என ஆற்றங் கரையில் மூவேந்தர்களின் நாடுகள் அமைந்தன. இவர்களின் தலைமையை ஏற்காத சுதந்திர இனக் குழுக்களாகச் செயல்பட்டவர்கள் பெரும்பாலும், மலை மற்றும் காடு சார்ந்த நிலப்பகுதியை ஆண்டு கொண்டிருந்தனர்.

p115aa.jpg

ஐவகை நிலத்தில் அமைந்த அனைத்து நாடுகளுக்குள்ளும் ஊடுருவி ரத்தநாளங்களாக, குறுக்கும் நெடுக்கும் அலைந்து கொண்டிருந்தவர்கள் பாணர் சமூகத்தைச் சார்ந்த கலைஞர்கள். அவர்கள் பாடிய பாடல்களும், கூறிச்சென்ற கதைகளும் நிலம் எங்கும் பரவிக்கிடந்தன. அவர்கள் யாழெடுத்து மீட்டி, பீறிடும் குரலில் பாடியபோதுதான், போர்க்களத்தில் மரணத்தைத் தழுவியவன் வரலாற்றில் உயிர்கொண்டு உலவினான். அவர்கள் தங்களின் நைந்துபோன மேலாடைக்குள் புகழை விதைக்கும் அபூர்வத்தை வைத்திருந்தனர். எல்லோருக்கும் தேவை, புகழ். தலைமுறை தலைமுறையாகச் சொல்லப்பட வேண்டிய வீர கதையின் நாயகனாக நிலைபெற வேண்டிய புகழ்.  அதை விதைப்பவர்களாக பாணர்கள் இருந்தனர்.

குலத் தலைவர்களும் சிற்றரசர்களும் பாணர் சமூகத்தை அரவணைத்து அள்ளித்தந்தனர். அவர்களின் ஆற்றலையும் வள்ளல்தன்மையையும் பாணர்கள் விடாமல் பாடினர். இந்த வறிய கலைஞர்களின் வற்றாத குரல், தமிழ் நிலம் எங்கும் மிதந்துகொண்டே இருந்தது.

இப்போது வள்ளல்களின் தலைநாயகனாக பறம்பு நாட்டை ஆளும் வேள்பாரி இருந்தான். அவனது ஆளுகையும் ஆற்றலும் வாரிக்கொடுக்கும் வள்ளல்தன்மையும் நிலம் எங்கும் பரவின. நாடுகள்தோறும் பாணர்கள் பாரியைப் பற்றிய பாடலைப் பாடிக்கொண்டே இருந்தனர். தங்களின் பசியைப் போக்க யாரும் இல்லாத காட்டுப் பகுதியில்கூட, காலில் சலங்கை கட்டி துடிப்பறை முழங்க பாரியைப் பற்றி பாடினால் பசி மறந்துபோவதாக, அவர்கள் ஊருக்குள் வந்து சொல்லிவிட்டுப் போயினர். பசித்தவரின் குரலாக பாரி மாறியதால், எல்லா நாட்டுக் குள்ளும் நிறைந்திருந்தான். அதோடு நிற்காமல் அவனது புகழை உச்சத்துக்குக் கொண்டு போனது, முல்லைக் கொடிக்குத் தேரைத் தந்தான் என்பது. இந்தக் கதையைக் கேட்கும் ஒவ்வொரு வனின் மனதுக்குள்ளும் ஒரு பச்சிளங்கொடி துளிர்விடுகிறது. இது உண்மையோ, பொய்யோ தெரியாது. ஆனால், இந்தக் கதை என் குழந்தைக்கு, என் சுற்றத்துக்கு, என் சமூகத்துக்கு, என் வேந்தனுக்கு மிக அவசியம் என மக்கள் நினைத்தனர்.

விளைந்த நெல்லை அறுக்கும் முன்னர், வரி வாங்க கூரிய வாளோடு வந்து நிற்கும் வேந்தனு டைய வீரர்களிடம், மக்கள் வரியோடு சேர்த்து ஒரு முல்லைக்கொடியையும் கொடுத்து அனுப்பு வதாக பக்கத்து நாடுகளில் பேசிக்கொண்டார்கள்.

தமிழ் நிலம் முழுவதும் சுற்றி அலையும் பாணர் குழுக்கள், ஒருமுறையாவது பறம்புநாடு சென்று திரும்பினர். எல்லா மன்னர்களிடமும் பரிசல் பெற்ற பாணர்கள் பாரியிடம்தான் கருணையைப் பெற்றனர். கருணை வற்றப்போவதே இல்லை. அது அவர்களின் நினைவுகளில் சுரந்துகொண்டே இருந்தது.

பாணர்கள் தங்களின் நினைவில் இருந்து மட்டும் அல்ல, நினைவு மறந்தும் பாடும் பாடலாக பாரியின் பாடலே இருந்தது. புகார் நகரில் நாளங்காடியில் காவல் புரிந்த ஒரு வீரன், கடைவீதியில் அலைந்துகொண்டிருந்த பாணர் குழு ஒன்றைப் பார்த்துக் கேட்டான், ``பாரி பறம்பை ஆள்கிறானா... அல்லது பாணர்களை ஆள்கிறானா?’'

நாளங்காடிக்கு மிக அருகில்தான் பட்டினப்பாக்கம் இருக்கிறது. அதுதான் சோழ நாட்டு வேந்தனும் உயர்குடிகளும் வாழும் பகுதி. காவல் வீரன் கேட்ட கேள்வி விரைவிலேயே பட்டினப் பாக்கத்துக்கு வந்து சேர்ந்தது. சிறிது காலத்திலேயே மூவேந்தர்களின் அரண்மனை களிலும் அந்தக் கேள்வி எதிரொலித்தது. இந்தக் கேள்வி தனக்குள் ஒரு பதிலையும் கொண்டிருந்தது. அந்தப் பதில் மூவேந்தர்களின் உறக்கத்தைக் குலைத்தது.

மூவேந்தர்கள் எனும் பேரரசர்களையும் மீறி நிலைபெற்றிருந்தது பாரியின் புகழ். அவர்களால் பாரியை ஒன்றும் செய்துவிட முடிய வில்லை. காரணம், பாரியின் மாவீரம், பறம்பு நாட்டின் நிலவியல் அமைப்பு, படை வலிமை இவை எல்லாம்தான். ஆனாலும் சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தனர்.

இந்த நிலையில்தான் கபிலர், அறுக நாட்டை ஆளும் சிறுகுடி மன்னன் செம்பனின்  மாளிகைக்கு தற்செயலாக வந்து சேர்ந்தார்.

p115b.jpg

ன்றைய தமிழ் நிலத்தின் பெரும் புலவராக விளங்கியவர் கபிலர். கபிலரைப் போன்ற புலவர்களே, மாற்றரசுக்குள் நுழையவும், அரசனுக்கு அறிவுரை சொல்லவும், போரைத் தடுக்கவும், அவசியம் எனக் கருதப்பட்ட தாக்குதலை நடத்தவும் காரணமாக இருந்தார்கள். அவர்கள் நிலம் எங்கும் சுற்றி அலைந்தபடி இருந்தனர். கடற்கரையில்  காய்ந்த மீனும், ஆயர்குடியின் தயிர் மத்தும் இவர்களின் பாடலில் சுவையைக் கூட்டின. பாலை நிலத்தின் ஊன் சோறும், குறிஞ்சி நிலத்தின் புளித்த கள்ளும் தமிழ்க் கவிதைகளைச் செழிப்புறச்செய்தன.

கபிலர், பறம்பு நாட்டுக்கும் போனது இல்லை; வேள்பாரியைச் சந்தித்ததும் இல்லை. ஆனால், பாரியைப் பற்றி பாணர்கள் மீண்டும் மீண்டும் பாடியபோது அவருக்கு ஆச்சர்யத்தைவிட சந்தேகமே வலுப்பெற்றது. எல்லோராலும் அதிகம் புகழப்படும் ஓர் இடத்தில் பிழைகள் மலிந்திருக்கும். யாருடைய கவனத்தையும் சிதைக்கும் ஆற்றல் புகழுக்கு உண்டு. அதற்கு அடிமையாகாதவர்களை அது சந்தித்தது இல்லை என்ற அகம்பாவம்தான் புகழின் ஆணிவேர். எனவே, புகழால் நிலைபெற்றுள்ள ஒன்றின் மீது இயல்பான கசப்பு கபிலருக்கு உருவாகியிருந்தது.

நடுநாட்டு அரசன் வேண்மானைக் காணச் சென்றுகொண்டிருந்த கபிலர், பயணக் களைப்பு மிகுதியால், சற்று ஓய்வெடுத்துச் செல்லலாம் என்று முடிவெடுத்தார். வாலியாற்றங் கரையில் அமைந்த செம்பனின் அரண்மனையை  நோக்கி தேரை ஓட்டச் சொன்னார். பாணர்களின் கூத்தை பகல் எல்லாம் பார்த்திருந்த செம்பனுக்கு, மாலையில் திடீரென கபிலர் வந்தது பெரும் மகிழ்வைத் தந்தது.

பச்சை நிறக் குப்பியில் நிறைந்து வழியும் கள்ளோடு தொடங்கியது அன்றைய இரவு. கள்ளைப் பருகத் தொடங்கியதும் அதன் புளிப்புச் சுவை சற்றே மாறுபட்டதாக இருக்கிறதே என்று உணர்ந்த கபிலர், “இது என்ன கள்?” என்று கேட்டார்.

“தேனில் இருந்து தயாரித்து, மூங்கில் குழாயில் இட்டு நன்கு புளிக்கவைத்த முற்றிய கள். நாங்கள் இதை `தேங்கள்' என்போம். உங்களைப் போல் புலவர்கள் `தேறல்' என்று சொல்வீர்கள்” என்றான் செம்பன். அப்போது வீரன் ஒருவன், உண்பதற்கான கறித்துண்டங்களை குழிசி பானை நிறையக் கொண்டுவந்து வைத்துவிட்டுப் போனான். அந்தப் பானையை கபிலர் எடுத்து உண்ண ஏதுவாக அவரை நோக்கித் தள்ளிவைக்க முயன்றான் செம்பன், பானையை ஒரு கையால் தள்ள முடியவில்லை. இன்னொரு கையில் இருந்த குப்பியைக் கீழே வைத்துவிட்டு இரு கைகளாலும் தள்ளினான். அதைக் கவனித்த கபிலர் கள்ளைப் பருகியபடியே கேட்டார், “பகல் எல்லாம் பாணர்களுக்கு அள்ளி வழங்கியதால், உனது கரம் சோர்ந்துபோய்விட்டதா?”

“இல்லை, பெரும் புலவரே... அவர்களுக்கு அள்ளி வழங்கும் நல்வாய்ப்பு எதுவும் இன்று எனக்குக் கிடைக்கவில்லை.”

“ஏன்?”

“அவர்கள் பறம்பு மலையில் பாரியைப் பார்த்துவிட்டு வருபவர்கள், எடுத்துச் செல்ல முடியாத அளவு பொருட்களோடுதான் இங்கு வந்தார்கள். என்னை நன்கு அறிந்த கீழ்க்குடி பாணர் கூட்டம் அது. எனவே என்னோடு விருந்துண்டு ஆடிக்களித்துவிட்டுப் போனார்கள்.”

நெய்யிலே வறுத்தெடுத்த மான் கறியின் கால்சப்பையைக் கடித்து இழுத்தபடி கபிலர் கேட்டார், “பறம்பு நாட்டுக்குப் போய்த் திரும்புபவர்கள், இந்தப் பக்கம் ஏன் வந்தார்கள்?”

``அறுக நாட்டின் தென் திசை எல்லை, பச்சை மலைத் தொடரில்தான் முடிகிறது. அந்தப் பக்கம் இருக்கும் வேட்டுவன் பாறையின் வழியாக பறம்பு மலைக்குப் போகும் பாதை ஒன்று உண்டு. ஆனால், அது முறையான பாதை அல்ல. அதில் எப்படி இவர்கள் இறங்கிவந்தார்கள் என்று தெரியவில்லை” என்று சொல்லியபடி தனக்கான கறித்துண்டை எடுத்துக் கடித்தான்.

“பாதையை முறையற்று வைத்திருப்பது அரச குற்றம்” என்றார் கபிலர்.

“மலைப்பாதையைப் பாதுகாப்பது கடினம் அல்லவா?” எனக் கேட்டான் செம்பன்.

“அவன் தேருக்கு முக்கியத்துவம் கொடுத்திருந்தால், பாதையைப் பாதுகாத்திருப்பான். முல்லைக்குக் கனிவு காட்டியவன் பாதையைக் கைவிடத்தான் வேண்டும். கைவிடப்பட்ட பாதையால், வணிகம் வளராது. வணிகம் பெருகாத நாட்டில், வளம் கூடாது. வளமற்ற நாட்டில் நிறைந்திருப்பது மக்களின் கண்ணீர்த் துளிகளே.”

“பறம்பு நாடு வளமிக்கது. அது மட்டும் அல்ல, பாரியைப் பார்க்கப்போன யாருமே பாதை தவறியோ, வனமிருகங்களிடம் சிக்கிக்கொண்டோ,  வழி தெரியாமல் இடர்பட்டதாகவோ நான் கேள்விப்பட்டது இல்லை” என்றான் செம்பன்.

“பாதை சரியில்லாத வழியில் பயணம் மட்டும் எப்படிச் சரியாக இருக்க முடியும்?” - கபிலரின் திடமான கேள்விக்கு செம்பனிடம் பதில் இல்லை. குப்பியில் இருந்த கள் தீர்ந்துகொண்டே இருந்தது.

“பாரி, விருந்தினரை நிர்வகிப்பதில் தேர்ந்தவன் என்று நினைக்கிறேன். ஆனால், வள்ளல்தன்மை என்பது நிர்வாகத்திறமை அல்ல. அது குழந்தையின் குரல் கேட்ட கணத்தில் பால் கசியும் தாயின் மார்பைப் போன்றது.”

p115c.jpg

“நீங்கள் பாரியை வள்ளல் இல்லை என்கிறீர்களா?”

“பாரியை வள்ளல் என்றோ, சிறந்த அரசன் என்றோ, என்னால் இப்போது சொல்லிவிட முடியாது” - தான் பேசும் வார்த்தைகளை உணர்ந்த வாறே கபிலர் சொன்னார், “நாளை காலை நான் வேட்டுவன் பாறை வழியாக பாரியின் பறம்பு நாட்டுக்குள் நுழைவேன்.” 

செம்பன் அதிர்ந்து பார்த்தான்.

“நடுநாட்டுக்கு அல்லவா போவதாகச் சொன்னீர்கள்?”

“நாம் தீர்மானித்தபடி எல்லாம் நடந்துவிடுவது இல்லை. வார்த்தைதான் நம்மை வழிநடத்துகிறது. ஒரு குப்பி கள் பல நேரம் வரலாற்றையே மாற்றியிருக்கிறது. யார் அறிவார், ஒரு கையால் நீ பானையைத் தள்ளாமல் போனதால் இன்னும் என்னென்ன நடக்கப்போகிறதோ!” - கபிலரின் வார்த்தையைக் கேட்டு செம்பன் ரசித்துச் சிரித்தான்.      
       
மறுநாள் காலை கபிலரை, பறம்பு நாட்டுக்குப் பாதுகாப் போடு அழைத்துச் செல்ல ஒரு படையோடு செம்பன் தயாராக இருந்தான்.  “நான் பரிசோதிக்க நினைப்பது பாரியை, உனது படைபலத்தை அல்ல” - கபிலரின் குரல், படையுடன் சேர்த்து செம்பனையும் சாய்த்தது. தனித்த தேரில் கபிலர் புறப்பட்டார்.

கபிலர் தனது துணிச்சல் கொண்டு பாரியை அளவிட முடிவுசெய்து, வேட்டுவன் பாறையின் வழியே மேலே ஏறினார். எங்கு இருந்தோ வந்த நீலன், அவருடன் இணைந்துகொண்டான். இப்போது வரை அவருக்குப் பிடிபடவில்லை, அவன் வந்து இணைந்தது தற்செயலா... அல்லது நிலைத்த ஏற்பாடா?

ஆனால், நீலனுக்குப் பிடிபட்டிருந்தது. கபிலர் காலில் ஏற்பட்டுள்ளது தசைப்பிடிப்பு. அது நேரம் ஆக ஆக வலியைக் கூட்டும். இந்த இடத்தில் ஆபத்து அதிகம். எனவே பேச்சுக் கொடுத்தபடி விரைவாக தனது குடிலுக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என முடிவோடு வேகவேகமாக முன்நகர்த்திச் சென்றான்.

வானில் பறவைக் கூட்டங்கள் வலசை வலசையாக கூடு திரும்பிக்கொண்டிருந்தன. இரவின் வாசல் கதவு திறக்கப்போகிறது. பசுவின் மடுவில் இரவுப்பால் சுரக்கத் தொடங்கியிருக்கும். மண்ணைப் பார்க்க முடிகிற வெளிச்சம் இன்னும் எவ்வளவு பொழுது நீடிக்கும் என்று யோசித்தபடி நீலன் விரைவுகொண்டு நடந்தான். கபிலர் ஏதோ கூப்பிடுவதுபோல் இருந்தது, திரும்பிப் பார்த்தான். அவர் ஒன்றும் சொல்லவில்லை, ஆனால், அவரது முகக்குறியை அவனால் உணர முடிந்தது.

“மலை இறக்கம் இன்னும் சிறிது தொலைவுதான், அதன் பிறகு சமதரைதான்” என்று சொல்லி ஒரு கையைப் பிடித்து அவருக்கு உதவினான்.

“நான் சிறிது நேரம் உட்கார்ந்துகொள்ளவா?” -குரல் தளர்ந்து, ஒரு குழந்தையைப்போல கேட்டார் கபிலர்.

அவனோ ``கீழே இருக்கும் அந்தப் பனையடிவாரம் போய்விடலாம்” என்று சொல்லி உட்காரவிடாமல் கீழிறக்கிக் கொண்டிருந்தான். அவருக்கு வலி அதிகமாகிக்கொண்டே இருந்தது.

சமதரைக்கு வந்தவுடன், பனைமரத்தின் அடிவாரத்தில் அவரை அமரவைத்துவிட்டு, ``சிறிது நேரத்தில் வந்துவிடுகிறேன்'' என்று சொல்லி. தெற்குப் பக்கமாக ஓடத் தொடங்கினான்.

கபிலருக்கு வலி அதிகமாகிக் கொண்டே இருந்தது. `இவ்வளவு வேகமாக எதற்கு ஓடுகிறான்?’ என்று யோசனை தோன்றியது.  ஆனால், `இப்போதாவது உட்காரவிட்டானே...’ என்ற நிம்மதிப் பெருமூச்சு விட்டார். நேரமாகிக்கொண்டிருந்தது. பனைமட்டைகளும் பனந்தாழ்களும் எங்கும் கிடந்தன. அதைப் பார்த்துக்கொண்டிருந்தவருக்குத் திடீரென சந்தேகம் வந்தது. `ஒருவேளை அவளைப் பார்க்கப் போய்விட்டானோ? அடுத்த குன்றைத் தாண்ட வேண்டுமே. எப்படி இருட்டுவதற்குள் வந்து சேருவான்? பெண்ணின் இதழ் சுவை பற்றி நாம் கொஞ்சம் சொல்லியிருந்தால் போகாமல் இருந்திருப்பானோ? இல்லை... இல்லை... சொல்லியிருந்தால் அப்போதே புறப்பட்டுப் போயிருப்பான், எண்ணங்கள் ஓடிக்கொண்டிருக்க, அதே வேகத்தோடு வந்து நின்றான். கைகளில் பச்சிலைகள் இருந்தன. 

“இதை வாயில் போட்டு மெல்லுங்கள்” என்றான்.

p115d.jpg

“என்ன இலை இது?”

“முதலில் இலையை வாயில் போட்டு மெல்லுங்கள்.  கால் வலி நின்ற பிறகு கேளுங்கள்... சொல்கிறேன்” என்றான். கபிலர் பச்சிலையை மென்றார். சிறிது நேரம் கழித்து இருவரும் நடக்கத் தொடங்கினர்.

“பச்சிலை பறிக்கப்போவதாக இருந்தால் என்னை முதலிலேயே உட்காரவிட்டிருக்கலாமே, ஏன் வலுக்கட்டாயமாக பனைமரம் வரை கீழே இறக்கினாய்?”

“பனைமரம் எங்களின் குலச் சின்னம், மனிதனுக்கு மட்டும் அல்ல, பறம்பு மலையின் எல்லா உயிர்களுக்கும் அது தெரியும். அதனிடம் ஒப்படைத்துவிட்டுப் போனால், எந்த ஆபத்தும் வராது. அதனால்தான் பனை அடிவாரத்தில் உங்களை உட்காரவைத்தேன்.”

தனது எண்ணத்துக்கும் அவனது எண்ணத் துக்கும் இருக்கும் வேறுபாட்டை உணர்ந்தபோது கால் வலியைத் தாண்டிய ஒரு வலியை உணர்ந்தார் கபிலர்.

தென்னை எத்திசையும் வளைந்து வளரக்கூடிய தன்மையுடையது. பனையோ தன் இயல்பிலேயே செங்குத்தாக வளரக்கூடியது. இயல்புதான் ஒன்றின் குணத்தைத் தீர்மானிக்கிறது. வளைந்து கொடுக்காத பறம்பு நாட்டின் இயல்பு பனையிலும், பனைமரத்தின் இயல்பு பறம்பு நாட்டிலும் நிலைகொண்டுள்ளது. முள்ளம்பன்றியைப் போல அடி முதல் நுனி வரை உடல் சிலிர்த்தபடி வளரும் பனைமரம், பறம்பு நாட்டின் ஆவேச அடையாளம். அதன் நிழலிலேதான் பாதுகாக்கப்பட்டிருந்தோம் என்ற உண்மை கபிலருக்கு விளங்கியபோதுதான் இன்னொன்றும் விளங்கியது, நீண்ட பொழுதுக்கு முன்பே பாரியின் பாதுகாப்புக்குள் தான் வந்துவிட்டோம் என்பது.

- பாரி வருவான்...

http://www.vikatan.com/anandavikatan

Link to comment
Share on other sites

வீரயுக நாயகன் வேள் பாரி - 3

 

 

வள்ளியைத் தேடி...

செழித்து வளர்ந்திருந்த புற்கள், தோள் அளவுக்கு இருந்தன. அதற்கு நடுவில் மெல்லிய கோடுபோல இருக்கும் ஒற்றையடிப் பாதையை கவனமாகப் பார்த்து, நீலன் முன் நடந்தான். சிறிது நேரம் எந்தப் பேச்சும் எழாமல் இருந்தது. சூரியன், காரமலையின் பின்புறம் இடுப்பு அளவுக்கு இறங்கியிருந்தான். வலி சற்றுக் குறைந்ததுபோல் இருந்தது. கபிலர் பேச்சைத் தொடங்கினார்.

p83a1.jpg

“இந்தக் காட்டில் எவ்வளவோ அழகான, வடிவுகொண்ட வாசனைப் பூக்கள் இருக்கின்றன. அவற்றை எல்லாம் விட்டுவிட்டு, பனம் பூவை ஏன் பறம்பு நாட்டின் குலச் சின்னமாக ஆக்கினார்கள்?”
 
“பனம் பூ வெறும் அழகு அல்ல; ஆயுதம். அது ஆயுதம் மட்டும் அல்ல; பேரழகு. இந்த மலைத்தொடர் எங்கும் அலைந்து திரியும் வேளீர் மக்கள், பனம் பூவின் குருத்து ஒன்றை எப்போதும் தங்களின் இடுப்பில் செருகிவைத்திருப்பார்கள். குட்டையில் தேங்கிக்கிடக்கும் நீரில் விஷம் ஏறியிருக்கும். அலைந்து திரிபவர்களுக்குத் தாகம் எடுத்தால், எந்தக் குட்டை நீரிலும் பனங்குருத்தைப் போட்டு, சிறிது நேரம் கழித்து அந்த நீரை அருந்துவார்கள். எவ்வித விஷமும் தாக்காது. அது ஒரு விஷமுறி. பனம் பூ அழகு, ஆயுதம், அருமருந்து... இன்னும் எவ்வளவோ இருக்கின்றன”- பேசிக்கொண்டே நடையின் வேகத்தைக் கூட்டினான் நீலன். கதை சொல்ல ஆரம்பித்தால், கபிலர் பசுவின் பின்னால் வரும் கன்றைப்போல வருவார் என்பதை அவன் கண்டறிந்து நீண்ட நேரமாகிவிட்டது.

“பறம்பு மலையின் பனைமரத்துக் கள்ளை அருந்தியிருக்கிறீர்களா?”

“இல்லை.”

“இன்னும் சற்று விரைவாக நடந்தால், இன்றே அருந்தலாம்.”

கபிலர், நீண்ட நேரம் கழித்து வலி மறந்து சிரித்தார். கள்ளைச் சொல்லி இழுக்கிறான் எனத் தெரிந்தது.

“ஏன்... நேரம் கழித்துப் போனால், கள் தீர்ந்துவிடுமா?”

“இறக்கப்பட்ட கள்ளுக்கு ஒரு நேரம் இருக்கிறது. கள் மதப்பேறித் திரண்டிருக்கும்போது அருந்த வேண்டும். அப்போதுதான் கீழ் நாக்கில் இருந்து உச்சந்தலைக்குப் பாய்ந்தோடி கிறங்கச்செய்யும். நேரம் தவறினால், அந்த ஆட்டம் தவறும்.”

“உன் பேச்சே கள்ளூறிக்கிடக்கிறதே?”

“நான் சிறுவன். நீங்கள் பாரியோடு அமர்ந்து கள் அருந்த வேண்டும். மஞ்சள் கொடியில் இருந்து இறங்கும் சாற்றைத் துளித்துளியாக இறக்கி, சுண்ணத்தின் அளவைக் கூட்டிக் குறைத்து, கள்ளுக்குள் இருக்கும் போதைக்கு வித்தைகாட்டுவான் பாரி. அவனோடு அமர்ந்து கள் அருந்தும் நாள்தான் வாழ்வின் திருநாள்.”

கபிலர், வாஞ்சையோடு அவனைப் பார்த்தார். `கள்ளையும் மிஞ்சிய இடத்தில் பாரியை வைத்திருக்கிறானே!’ என யோசிக்கையில், நீலன் தொடர்ந்தான்... “பெருங்குடி பாணன் ஒருவன், பாரியை `பனையன் மகனே..!’ என வர்ணித்துப் பாடியுள்ள பாடலைக் கேட்டிருக்கிறீர்களா?”

“இல்லை.”

“முழுநிலா நாளில் அந்த அரிய காட்சியைக் காணவேண்டுமே! ஆதிமலை அடிவாரம், ஊர் மன்றலில் எல்லோரும் திரண்டிருக்க, பேரியாழ் மீட்டி, பறை முழங்கி, `பனையன் மகனே...பனையன் மகனே!’ எனப் பாடலைப் பாடத் தொடங்கினால், பறம்பு நாடே எழுந்து ஆடும்” - சொல்லும்போதே துள்ளிக் குதித்தான் நீலன்.

p83b.jpg

`தனி ஒரு வீரன், நாட்டை ஆளும் தலைவனை இவ்வளவு நேசிப்பதா!' - பிற நாட்டில், அரசனுக்கும் அரசத் தொழில் செய்யும் வீரர்களுக்கும் குடிமக்களுக்கும் இடையே இல்லாமல்போன அன்புமயமான ஓர் அடிச்சரடு பறம்பு நாட்டில் இருப்பதைப் பார்த்தார் கபிலர். `இதுதான் குலவழியில் நடக்கும் ஆட்சிக்கும், பிற அரசாட்சிகளுக்கும் உள்ள வேறுபாடு' என நினைத்தபடி கபிலர் கேட்டார்.

“உனக்குப் பாடத் தெரியுமா?”

“பறம்பைப் பற்றியும் பாரியைப் பற்றியும் இன்று முழுவதும் பாடிக்கொண்டே இருப்பேன். அது மட்டும் அல்ல... எங்கள் குலப்பாடலும் எனக்குத் தெரியும்.”

“உனது குலப்பாடல் இருக்கட்டும். பாரியின் குலப்பாடல் உனக்குத் தெரியுமா?”

“தெரியும். மாவீரன் `எவ்வி’யிடம் இருந்து அது ஆரம்பிக்கிறது.”

“அதைப் பாடுவாயா?”

“நான், பாணனும் அல்ல; பாரியின் குலத்தவனும் அல்ல. எனவே, நான் அதைப் பாடுவது முறையும் அல்ல.”

இவ்வளவு நேரம் பேசிவந்த நீலனிடம் இருந்து முதன்முறையாக ஒரு தகவல் கபிலருக்குக் கிடைத்தது. பறம்பு மலையில் பாரியின் குலமக்கள் மட்டும் அல்ல, வேறு குலத்தவரும் இருக்கிறார்கள் என்று. குலத் தலைவன் ஆளும் நாட்டில் வேறு குலத்தவர்கள் இருப்பது இல்லை. அப்படியே இருந்தாலும், மரத்துக்குள் நெருப்பு மறைந்து இருப்பதைப் போல, ஆள்வோருக்கான ஆபத்து அதற்குள் மறைந்திருக்கும். யோசித்தபடி வந்து கொண்டிருந்த கபிலரின் நடை, சற்றே பின்தங்கியது.

“விரைந்து வாருங்கள்” என்றான் நீலன்.

“இந்தத் தர்ப்பைப் புற்களின் சுனை மேலெல்லாம் அறுக்கிறது. அதுதான்...” என்று சமாளிக்க ஒரு காரணத்தைச் சொன்னார்.

“இந்தப் புற்களுக்கு என்ன பெயர் சொன்னீர்கள்?”

“தர்ப்பைப் புற்கள். சேரன் வேள்வி நடத்தியபோது, அந்தணர்கள் இதுபோன்ற தர்ப்பைப் புல்கொண்டுதான் சடங்குகளைச் செய்தார்கள்.”

“நாங்கள் இதை `நாக்கறுத் தான் புல்' எனச் சொல்வோம்.”

“அப்படியா? இது யாருடைய நாக்கை அறுத்தது... ஏன் இந்தப் பெயர்?”

“அது முருகன் காதலித்த போது நடந்த நிகழ்வு.”

“கள்ளின் சுவையைவிடக் களிப்பூட்டக்கூடியது அல்லவா காதலின் சுவை! அதுவும் முருகனின் காதல் கதையை காலம் முழுவதும் கேட்டுக் கொண்டே இருக்கலாமே... சொல்” என்றார் ஆர்வத்துடன்.

“எனது காதலியைப் பார்க்க, ஒரு குன்று தாண்டிப் போவதையே, `இவ்வளவு தொலைவா?’ எனக் கேட்டவர் ஆயிற்றே. முருகனின் கதையைக் கேட்டால், இங்கேயே மயக்கம் அடைந்துவிடுவீர்கள்.”

“ஏற்கெனவே எனக்கு சற்று மயக்கமாகத்தான் இருக்கிறது. ஆனாலும் காதலின் ஆற்றலே, மயக்கம் நீங்காமல் வைத்திருப்பதுதானே!”

“முருகனாவது பரவாயில்லை. ஆறு குன்றுகள் தாண்டிப் போனான். ஆனால் வள்ளியோ, அவனைப் பார்க்க பதினொரு குன்றுகள் தாண்டி வந்தாள். என்ன இருந்தாலும் வள்ளி நிலமகள் அல்லவா? அவளின் ஆற்றல் சற்றே அதிகம்.”

`குறிஞ்சி நிலத் தலைவன் முருகனைப் பற்றி எவ்வளவோ கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், இவன் முற்றிலும் புதியதோர் இடத்தில் இருந்து கதையைத் தொடங்குகிறானே!’ என்று கபிலர் ஆச்சர்யப்பட்ட கணத்தில் இருந்து அவன் கதையைத் தொடங்கினான்.

“இந்தக் காரமலையின் அடிவாரத்தில் குடில் அமைத்து, குலம் தொடங்கியதொரு காலம். இந்தக் காலத்தில் பயிர்கள் விளையவைத்து தினையை அறுத்தும், கிழங்குகளைப் பிடுங்கியும், கொண்டுவந்து சேர்ப்பதும் இவ்வளவு கடினமாக இருக்கின்றன. அப்போது எப்படி இருந்திருக்கும்? காவலுக்குப் போய் பறவைகளிடம் இருந்தும், விலங்குகளிடம் இருந்தும் காப்பாற்றிக் கொண்டுவருவது பெரும்பாடு.

விளைச்சல் காலம் தொடங்கி விட்டால், முருகனும் எவ்வியும் தினைப்புலம் காக்கப் போவார்கள். வயதிலே இளையவனான `எவ்வி’தான், முருகனுடன் எந்நேரமும் இருக்கும் தோழன். கீழ்மலையின் விளைச்சலைப் பாதுகாத்துக் கொண்டுவந்து சேர்ப்பது அவர்களின் வேலை. அந்த ஆண்டு பயிர்கள் மிகவும் செழித்து வளர்ந்திருக்கின்றன. பயிர்கள் முற்றத் தொடங்கும் போதுதான் வேலையின் கடினம் தெரிய ஆரம்பிக்கும். மானும் மிளாவும் கிளியும் குருவிகளும் இன்னும் பிற உயிரினங்கள் எல்லாம் பயிர்களை மேய, பகலிலே வரும்; யானைகளும் பன்றிகளும் இரவு வரும். இவற்றிடம் இருந்து விளைச்சலைக் காக்க வேண்டும். வயலுக்கு நடுவே புன்னைமரத்தில் பரண் அமைத்து தட்டை, தழல், கவண் எனப் பல கருவிகளை வைத்து விதவிதமாக ஓசை எழுப்பி, விளைச்சலைப் பாதுகாத்தனர். இரவு-பகலாகக் கண்விழிப்போடு இருக்க வேண்டும். காட்டிலே கிடைக்கும் தேனையும் கிழங்கையும் தின்றுகொண்டு, பல நாட்கள் இருவரும் பரணிலே தங்கியிருந்தனர்.

ஒருநாள் காலை, காட்டுப்பன்றிக் கூட்டம் ஒன்று உள்நுழைந்துவிட்டது. காட்டுப்பன்றி, பயிர்களை அழிப்பதில் மிக வேகமாகச் செயல்படக்கூடியது. மிக வலுவான பற்களை உடைய அது, புலியுடனும் போர் புரியும் வல்லமை உடையது. பரணில் இருந்து இறங்கி வந்து இருவரும் விரட்டியிருக்கின்றனர். அது ஓடுவதுபோல் சிறிது தூரம் ஓடி புதரில் மறைந்துகொண்டு, இவர்கள் மீண்டும் பரண் ஏறியதும் விளைச்சலைத் தின்ன உள்ளே நுழைந்துவிடும். மறுபடியும் விரட்டி இருக்கின்றனர். இப்படியே பலமுறை நடந்திருக்கிறது. அந்தப் பன்றிக்கூட்டம் போவதாக இல்லை.

``எவ்வி... நீ பரணிலேயே காவலுக்கு நின்றுகொள். நான் இந்தப் பன்றிக் கூட்டத்தை காரமலைக்கு அப்பால் விரட்டிவிட்டு வருகிறேன்” என, வில்லோடு புறப்பட்டுப் போனான் முருகன்.

p83c2.jpg

யானைக் கூட்டத்தைக்கூட எளிதில் விரட்டிவிடலாம். ஆனால், பன்றிக்கூட்டத்தை விரட்டிச் செல்வது எளிது அல்ல. புதருக்குள் ஒளிந்துகொள்ளும்; திசை மாற்றி நம்மை ஏமாற்றும்; எளிதில் ஓடாது. தனது உயிருக்கு ஆபத்து என அது உணர்ந்தால் மட்டுமே தப்பி ஓட ஆரம்பிக்கும். இல்லை என்றால், அதை நகர்த்த முடியாது. முருகன் அதை நகர்த்தப் பெரும்பாடுபட்டான். அவனுடைய தோல் உறையில் இருந்த அம்புகள் ஒவ்வொன்றாகத் தீர்ந்தன. முருகன், வேட்டையாடுவதில் மிக வல்லவன். அவன் அம்பு எறியும் எந்த இலக்கும் தப்பாது. ஆனால், அன்று அவனுடைய எந்த வித்தையும் பலன் அளிக்கவில்லை. பன்றிக் கூட்டத்தைக் கண்டால், புலியே பின்வாங்கும். ஒற்றை வீரனால் என்ன செய்ய முடியும்? எல்லா அம்புகளும் தீர, கடைசியில் ஓர் அம்பு மட்டுமே மிஞ்சியது. அதைக் குறிபார்த்து எறிய நீண்ட நேரம் எடுத்தான். அந்தப் பன்றிக்கூட்டத்தின் தலைவன் யார் என்பதை அவன் கண்டறிந்து, அதற்குக் குறிவைத்து அடித்தான். அவை புதருக்குள் ஓடிய வேகத்தில் அம்பு தைத்ததா... இல்லையா எனத் தெரியாத நிலையில், உள்ளே இருந்து காதைக் கிழிப்பதுபோல ஒரு சத்தம் வந்தது. பன்றிகளின் ஓட்டம் என்ன என்பது அதன் பிறகுதான் தெரிந்தது. மலையைக் கடக்கும் வரை அவை நிற்கவில்லை.

அவற்றை விரட்டிவிட்டு தனது பரண் நோக்கி நடக்கத் தொடங்கினான் முருகன். கை, கால்கள் எல்லாம் குச்சிகளால் கீறி, ரத்தம் வழிந்தது. உச்சிப்பொழுது ஆகிவிட்டது. முருகனுக்கு நா வறண்டு உள்ளிழுத்தது. அந்தத் திசையில் வேங்கை முடுக்குக்கு அருகில் ஓர் அருவி இருப்பது தெரியும். நீர் அருந்த அந்த இடத்துக்குப் போனான். பெரும் ஓசையுடன் அருவி கொட்டிக்கொண்டிருந்தது. கையில் இருந்த வில்லையும் தோல் பையையும் சிறு பாறையில் வைத்துவிட்டு, நீரை நோக்கி நடந்தான். நீர்த்துளிகள் காற்றில் மிதந்துவந்து அவன் மீது படிந்தன. குளிர்ச்சியை உணர்ந்தபடி நீர் பருகக் குனிந்தான். பாறையின் பின்புறம் இருந்து சிரிப்பொலி கேட்டது. அருவியில் யாரோ குளித்துக்கொண்டிருப்பதுபோல் இருந்தது. யார் என உற்றுப்பார்த்தான் தெரியவில்லை. `சற்று அருகில் போய்ப் பார்ப்போம்' என நகர்ந்து முன்னே சென்றான். அவனது கண்களையே அவனால் நம்ப முடியவில்லை. கொட்டும் அருவிக்குள் இருந்து சற்றே விலகி அவள் வெளியே வந்தாள். தான் வாழ்வில் இதுவரை பார்த்திராத பேரழகு. முருகன் இமை மூடாமல் பார்த்தான். நீர் வடியும் கூந்தலைச் சிலுப்பியபடி இந்தப் பக்கம் திரும்பினாள். இவ்வளவு நேரம் அவன் எறிந்த மொத்த அம்புகளும் கூந்தலுக்குள் இருந்து பாய்ந்து வந்து அவன் மீது எகிறின.p83f.jpg

எவ்வி, எத்தனையோ முறை சொல்லிப் பார்த்தான், ``தினைக்கதிர் பரிந்து நிற்கிறது. அறுப்பு முடிந்ததும் அவளைத் தேடிப் போவோம்’' என்று. ஆனால் முருகனோ, ஒருநாள்கூடத் தாமதிக்கத் தயாராக இல்லை. அப்புறம் கதிரை எங்கே காப்பாற்றுவது? எல்லா பறவைகளும் விலங்குகளும் அவர்கள் காவல்காத்த நிலத்துக்கு வந்து சேர்ந்தன. பறவைகள் எல்லாம் தினைக்கதிரைத் தின்றுவிட்டு பரண் மேல் உட்கார்ந்து ஓய்வெடுத்தன. விலங்குகள் பரணின் அடிவார நிழலில் இளைப்பாறின.

பல  நாட்கள் அலைந்து,  பச்சைமலைத்தொடரின் இரண்டாவது அடுக்கில் இருக்கும் வள்ளியின் இருப்பிடத்தைக் கண்டறிந்தனர். அந்த இடத்தைப் பார்த்ததும் எவ்வி சொன்னான், “இவர்கள் நம்மை ஏற்க மாட்டார்கள்.”

“ஏன்?”

“இவர்கள் கொடிக் குலம். நாமோ வேடர் குலம். எப்படி ஏற்றுக்கொள்வார்கள்?”

“ஏற்றுக்கொள்ளவேண்டியது வள்ளி மட்டும்தான். மற்றவர்களைப் பற்றி ஏன் யோசிக்கிறாய்? அவளது சம்மதம் பெற வழி சொல்.”

பேசிக்கொண்டிருந்தபோது, வள்ளி தன் தோழிகளோடு போவதைப் பார்த்ததும் எவ்வி சொன்னான், “இந்த மலைத் தொடரிலேயே அழகான மனிதன் நீதான் என்று நினைத்திருந்தேன். ஆனால் இப்போதுதான் தெரிந்தது.”

“என்ன?”

“அழகு என்றால் என்னவென்று?”

எவ்வி சொன்னபோது முருகன் மகிழ்ந்து சிரித்தான். இதுவரை இல்லாத ஒரு பேரழகாக அந்தச் சிரிப்பு இருந்தது. அதன் பிறகு அவளைச் சந்தித்துப் பேசி, அவளின் சம்மதம் பெற நடந்த முயற்சிகள் எத்தனையோ. ஆனால், ஒன்றும் கைகூடவில்லை. இந்தக் காட்டில் அவள் அறியாதது எதுவும் இல்லை. எனவே, எதைக்கொண்டும் அவளின் மனதில் தனித்த இடத்தைப் பெற முடியவில்லை. முருகன் என்ன முயற்சி செய்தாலும், வள்ளி ஏறெடுத்துக்கூடப் பார்ப்பதாக இல்லை. தினைப்புலம் காப்பதும் பறவைகளைக் கவன்கல் கொண்டு விரட்டுவதும், மான்கள் வந்தால் தப்பையால் ஒலி எழுப்பித் துரத்துவதுமாக வள்ளி வழக்கம்போல தனது வேலைகளைப் பார்த்துக்கொண்டிருந்தாள்.

முருகனுக்குத்தான் வழியே பிறக்கவில்லை. ஒருநாள் எவ்வி ஓர் ஆலோசனை சொன்னான். “அவள் தினைப்புலம் காத்து வீடு திரும்பும் வழியில், அருவி கடந்து சிறிது தூரத்தில் சரக்கொன்றை மரம் ஒன்று இருக்கிறது. அந்த இடம் அவள் போகும்போது, நீ அவளின் எதிர்ப்பட்டு நின்று பேசு. உன் காதலைச் சொல்.அவள் ஏற்றுக்கொள்வாள்.”

“அந்த இடத்தில் அப்படி என்ன இருக்கிறது?” என்று முருகன் கேட்டான்.

“அந்த இடம் முழுக்க முல்லைக்கொடி படர்ந்துகிடக்கிறது. அவள் மாலை நேரம்தான் வருவாள். அப்போதுதான் முல்லை மலரத் தொடங்கும். அந்த மனம் யாவரையும் மயக்கும். காற்று எங்கும் சுகந்தம் வீசும். உன் காதல் அங்கே கைகூடும்” என்று சொல்லி அனுப்பினான்.

முருகனும் அவன் சொன்ன இடத்தில் அவளை எதிர்கொண்டு பேசினான். முதல் முறையாக அவள் அவனிடம் பேசத் தொடங்கினாள். ஆனால், அந்தப் பேச்சில் காதல் இருப்பதுபோல தெரியவில்லை. காட்டுக்குள் தப்பிப்போன ஆட்டுக்குட்டியை விசாரிப்பதைப் போலத்தான் அந்த விசாரிப்பு இருந்தது.

எவ்வி, இன்னொரு யோசனை சொல்ல முன்வந்தபோது, முருகன் தடுத்துவிட்டான். “காதல், சம்பந்தப்பட்டவர்களின் சாமர்த்தியத்தால்தான் கைகூடும்” என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டான். வழக்கம்போல வள்ளி செல்லும் வழியில் எதிர்ப்பட்டான். p83g.jpg

“உன்னை ஓர் இடத்துக்கு அழைத்துச் செல்ல விரும்புகிறேன். நீ என்னோடு வா” என்று அழைத்தான்.

அவளோ, ``தினைப்புலத்துக்குப் போக வேண்டும். தோழிகள் காத்திருப்பார்கள்'’ என்று காரணம் சொல்லி மறுத்தாள்.

“அதிக நேரம் இல்லை. சிறிது நாழிகை வந்தால் போதும்” என வலியுறுத்தினான்.

வள்ளியும் வேறு வழியின்றி, “சரி” எனத் தலையாட்டினாள்.

முருகன், அவளை அழைத்துக்கொண்டு சென்றான். இருவரும் எதையும் பேசிக் கொள்ளவில்லை. கூச்சம் தவிர்த்து முருகன் பேச்சைத் தொடங்கினான்...

“உன் தாய் வள்ளிக்கிழங்கு எடுக்கப் போன இடத்தில் இடுப்பு வலி கண்டு உன்னை ஈன்றெடுத்ததால், `வள்ளி' எனப் பெயர் வைத்தார்களாமே?”

p83e.jpg

“அது ஊரார் சொல்லும் காரணம். உண்மைக் காரணம் வேறு” என்று மட்டும் சொல்லி நிறுத்திக் கொண்டாள், என்னவென்று சொல்லவில்லை.

சிற்றோடையில் நீர் ஓடிக்கொண்டிருந்தது. கல் மேல் கால் பதித்து அதைத் தாவிக் கடந்தனர். அந்த இடத்தில் தனியாக ஒற்றை மரம் இருந்தது. முருகன், வள்ளியை அந்த மர அடிவாரத்தில் போய் சிறிது நேரம் நிற்கச் சொன்னான். அவளும் மரத்தின் அருகே போனாள். முருகனோ, நீரோடையின் அருகில் இருக்கும் சிறு பாறையில் அமர்ந்துகொண்டு அவளைப் பார்த்தபடி இருந்தான்.p83h.jpg

`எதற்கு இங்கே நிற்கச் சொல்கிறான்?' என்ற யோசனையிலேயே அவள் நின்றுகொண்டிருந்தாள். மேலே பார்த்தாள். மரம் முழுக்கக் காயும் மொட்டுமாக இருந்தன. ஒரு பூகூட இல்லை. `இது என்ன மரம்? இதுவரை பார்த்ததில்லையே...’ என யோசித்தாள். மரத்தின் மீது கை வைத்து, பட்டையைச் சிறிது உரித்து நுகர்ந்துபார்த்தாள். என்ன மணம் என்பதை அவளால் அனுமானிக்க முடியவில்லை.

“நின்றது போதுமா?” என்று கேட்டாள்.

முருகனோ, “இன்னும் சிறிது நேரம்” என்றான்.

மரப்பட்டைகளுனூடே எறும்பின் வரிசை ஒன்று போய்க்கொண்டிருந்தது. அதை உற்றுப்பார்த்தபடி விரல்களால் பட்டைகளை மெள்ள வருடினாள். அவளுக்கு, ஏதோ ஓர் உள்ளுணர்வு தோன்றியது. என்னவென்று தெரியவில்லை.

“புறப்படலாம்” என்றான் முருகன்.

அவளும் புறப்பட்டாள். நடந்துவரும்போது அந்த மரத்தை மீண்டும் மீண்டும் திரும்பிப் பார்த்தாள். ஆனால், முருகனிடம் எதுவும் கேட்கவில்லை. இவளை எதிர்பார்த்து தோழிகள் காத்திருந்தனர். வந்ததும், சற்றே கோபித்துக்கொண்டனர்.

மறுநாள் பொழுது விடியவும் முருகன் புறப்பட்டான். “எங்கே?” என்று எவ்வி கேட்டான்.

“நேற்று வள்ளியை அழைத்துச் சென்ற இடத்துக்கு” என்றான்.

“மீண்டும் அதே இடத்துக்கா?”

p83d.jpg

“ஆம்... காரணத்தை வந்து சொல்கிறேன்” என்று சொல்லிவிட்டு புறப்பட்டவன், “புதிய பரண் ஒன்று அமைத்துவை. நான் திரும்பி வரும்போது வள்ளியும் உடன் வருவாள்” என்று சொல்லிச் சென்றான்.

எவ்வி ஆச்சர்யத்தோடு பார்த்தான். முருகன் வழக்கத்தைவிட உற்சாகத்தோடு சென்றான்.

நேற்று சந்தித்த இடத்திலேயே வள்ளியைச் சந்தித்தான். ``சிறிது நேரம் என்னுடன் வா'’ என்று அழைத்தான். அவள் தனக்கு வேலை இருப்பதாகச் சொல்லி மறுத்தாள். முருகன் மீண்டும் அழைத்தான். வள்ளியோ, “மரங்களில் எறும்பூறுவது ஒன்றும் அதிசயம் அல்ல” என்று சொல்லிவிட்டு நடக்கத் தொடங்கினாள்.

“இந்த ஒருமுறை மட்டும் வா. இனி நான் உன்னை அழைக்க மாட்டேன்” என்றான் முருகன்.

அந்தக் குரலை மறுக்க முடியவில்லை.

“சரி... இந்த முறை மட்டும் வருகிறேன்” என்று சொல்லிப் புறப்பட்டாள். இருவரும் நேற்று சென்ற வழியில் நடந்தனர்.

வள்ளி கேட்டாள்... “முருகு என்று ஏன் உனக்குப் பெயர் வைத்தார்கள்?”

“நான் மிக அழகாக இருந்ததால், இந்தப் பெயர் வைத்ததாக எனது தாய் சொன்னாள்” - பதிலைச் சொல்கையில் முருகனின் முகம் எல்லாம் வெட்கம் பூரித்தது.

“எங்கள் ஊரில் எட்டு வகை கள் உண்டு. அதில் ஒரு வகை கள்ளுக்கு `முருகு' எனப் பெயர்” என்றாள் வள்ளி.

“கள்ளுக்கு எதற்கு இந்தப் பெயர் வைத்தார்கள்?” என்று கேட்டான் முருகன்.

“தெரியவில்லை. மயக்கும் தன்மை இருப்பதால் இந்தப் பெயர் வைத்திருப்பார்கள் என நினைக்கிறேன்” என்றாள் வள்ளி.

முருகன் திரும்பி அவளைப் பார்த்தான். அவள் தலை குனிந்திருந்தாள். ஆனாலும் அவளது முகத்தில் படர்ந்த வெட்கத்தை மறைக்க முடியவில்லை.

பேசியபடியே அந்த நீரோடை அருகில் வந்தார்கள். முருகன் வழக்கம்போல் அந்த இடத்தில் இருந்த சிறு பாறையின் மீது ஏறி அமர்ந்தான். வள்ளி, மரத்துக்கு அருகே போக ஓடையைத் தாண்டிக் குதித்து, தலைதூக்கிப் பார்த்ததும் அப்படியே அதிர்ந்து நின்றாள். அவள் கண்களையே அவளால் நம்ப முடியவில்லை. உறைந்துபோனவளாக, கண்ணிமை கொட்டாமல் பார்த்தாள். எதிரில் இருந்த அந்த மரம் முழுவதும் பூக்கள் பூத்துக் குலுங்கின. மஞ்சளும் நீலமும் ஒன்றுகலந்த வண்ணத்தில் முயல் காதைப்போல நீண்டு விரிந்த மலர்கள். மரமே நிரம்பி வழியும் பூக்கூடையாக நின்று ஆடியது. ஒரு சிற்றிலைகூட தெரியவில்லை. மலரின் மனம் காற்று எங்கும் பரவ, அந்த வெளியே மணத்துக்கிடந்தது. நம்பவே முடியாத அதிசயத்தைப் பார்த்தபடி இருந்த வள்ளி, திரும்பி முருகனைப் பார்த்தாள்.

“நேற்று ஒரு பூ கூட இல்லாத மரத்தில், இன்று மரம் எங்கும் பூக்கள் பூத்துக் குலுங்குகின்றனவே எப்படி?”

முருகன் சொன்னான், “பெண்ணுடைய அணுக்கத்தால் மலரும் மரம் இது. நேற்று நீ இதைத் தொட்டுத் தழுவினாய். உன் மூச்சுக்காற்றை அதன் பட்டைகளும் கணுக்களும் நுகர்ந்தன. இதன் அத்தனை மொட்டுக்களுக்குள்ளும் உன் பெண்மை பாய்ந்தோடியது. பல ஆண்டுக் காத்திருப்புக்குப் பிறகு அது பூப்பெய்தியுள்ளது. இதன் பெயர் ஏழிலைப் பாலை. இந்த வனத்தில் இருக்கும் பத்து பேரதிசயங்களில் இதுவும் ஒன்று.”

அந்த மொத்தப் பூக்களும் தனக்குள் இருந்து மலர்ந்தனவா? வள்ளிக்கு உடல் சிலிர்த்தது. ஓடிச்சென்று அந்த மரத்தைக் கட்டித் தழுவினாள். பட்டைகளின் மீது இதழ் குவித்து முத்தமிட்டு, இறுகத் தழுவினாள். கண்களில் நீர் வழிந்தது. அவளது மார்பகங்களை கணுக்கள் குத்தி அழுத்தின. மெய்மறந்து கண்கள் செருகினாள். மரம் குலுங்கி பூக்களை உதிர்த்தது.

அவளது அணைப்புக்குள் இப்போது முருகன் இருந்தான். அவளது கரங்கள் இணைந்து முருகன் கழுத்தை இறுக்கின. அவளது கீழ் உதடு நடுங்கியது. அதன் விளிம்பில் இருந்த சிறு மச்சத்தில் இருந்து முருகனின் பார்வை நகரவே இல்லை. இருவரது மூச்சுக்காற்றும் மோதித் திரும்பின. காதல் அனல் அடிக்க, ஏழிலைப் பாலையும் சூடேறியது. பூக்கள் சொரிந்து அவர்களது உடல்களை மூடின. ஆனாலும் உள்ளுக்குள் மலர்ந்துகொண்டே இருந்தன.

- பாரி வருவான்...

http://www.vikatan.com

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலவர் கபிலர் மற்றும் நீலனின் சம்பாஷணை அற்புதம். நிறைய விடயங்களைச் சொல்லியது....! tw_blush:

Link to comment
Share on other sites

வீரயுக நாயகன் வேள் பாரி - 4

 

 

p25.jpg 

ரண் அமைக்க, காலையில் இருந்தே இடம் தேடிக் கொண்டிருந்தான் எவ்வி. அவனுக்கு முருகன், வள்ளியோடு வருவான் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. `நேற்றே முருகன் அழைத்த இடத்துக்கு, வள்ளி தன் தோழிகளுக்குத் தெரிவிக்காமல் சென்றிருக்கிறாள். ஒருமுறை முருகனின் பின்னால் சென்றால், பிறகு காலம் முழுவதும் சென்றுகொண்டே இருக்க வேண்டியதுதான். அதற்குச் சிறந்த உதாரணமே நான்தான்' என்று நினைத்துக் கொள்வான். `இன்று வள்ளியுடன்தான் முருகன் வருவான். ஆனால், மீண்டும் அதே மரத்தைப் பார்க்க ஏன் அழைத்துப்போனான் என்பதுதான் விளங்கவில்லை' என யோசித்தபடியே பரண் அமைக்க ஏதுவான இடம் தேடிக்கொண்டே இருந்தான்.

25p6.jpgபச்சைமலையில் யானைப்பள்ளத்தின் தென்திசையில் இருந்த முகட்டில், ஒரு வேங்கைமரம் தனித்து நின்றிருந்தது. இப்படி ஓர் இடத்தில், தனித்த வேங்கை மரத்தை யாரும் பார்த்திருக்க மாட்டார்கள்.

எவ்வி, அதன் மீது ஏறி அதன் உச்சியை அடைந்தான். மேற்கொப்பில் நின்று நான்கு புறமும் பார்த்தான். மொத்த மலையும் அந்த வேங்கைமரத்துக்குக் கீழ்ப்பணிந்து இருந்தது. காற்று, எல்லா திசைகளில் இருந்தும் சுழன்று வந்தது. தனது வேகத்துக்கு ஏற்ப வேங்கை மரத்தை விரல்களால் கோதி இசை கூட்டிச் சென்றது காற்று.

இன்று முருகனுக்கும் வள்ளிக்கும் தலைநாள் இரவு. குறிஞ்சி நிலத்தின் பேரழகே இந்த நாளுக்காக வடிவமைக்கப்பட்டதுதான். கைக்கு எட்டும் தூரத்தில் வெள்ளிகள் பூத்துக்கிடக்க, கால்களுக்கு அடியில் காடு மிதக்க, காமம் பெருத்து, காதல் தழைக்க இதுவே ஏற்ற இடம் என எண்ணியபடி கீழ் இறங்கினான்.

25p2.jpg

அன்று பகல் முழுவதும் காட்டின் ஒவ்வொரு திசைக்கும் ஓடினான். செவ்வருவிக்குப் பக்கத்தில் விளைந்த சந்தனமரம் ஒன்று இருப்பது அவனுக்கு தெரியும். நண்பகல் கடந்தபோது சந்தனமரக் கிளைகளோடு வேங்கைமர அடிவாரம் வந்தடைந்தான். வரும்போதே சிலாக்கொடியை அறுத்து வந்திருந்தான்.

வேங்கைமரத்தின் உச்சியில், நாற்கிளைகளுக்கு நடுவில் சந்தனமரக் கட்டைகளைக் குறுக்கிட்டு அடுக்கி, சிலாக்கொடியால் இறுகக் கட்டினான். கொடிகளிலே மிக உறுதியானது சிலாக்கொடி. இவ்வளவு உயரத்தில், பரணை உலையவிடாமல் இறுகப்பிடித்திருக்கும் ஆற்றல் அதற்குத்தான் உண்டு. அதன் இன்னொரு சிறந்த குணம், கொடியை அறுத்த மூன்று நாட்கள் வரை அதன் சாறு கசிந்து வெளிவந்தபடியே இருக்கும். அதில் இருந்து வரும் நறுமணத்துக்கு ஈடே கிடையாது. சந்தனமர வாசத்தில், சிலாக்கொடியின் நறுமணத்தோடு வேங்கைமர உச்சியில் திரும்பும் திசை எல்லாம் பச்சைமலைக் காற்றை அள்ளி அணைத்து எம் குறிஞ்சித் தலைவனும் தலைவியும் நடத்தும் ஆதிக்கூத்து, எம் குலத்தைப் பெருக்கி, காதலைத் தழைக்கச்செய்யும்.

பெருமிதத்தோடு வேலையை முடித்த எவ்வி, தினைப்புனம் காக்கும் இடத்துக்கு வந்தபோது மாலை மயங்கி, கருக்கத் தொடங்கியது. அவன் எதிர்பார்த்ததுபோலவே வள்ளியோடு முருகன் வந்தான். காதலிக்கத் தொடங்கியதும் கைகூடும் ஓர் அழகு இருக்கிறதே, மனிதர்களைக் கண்டு மலர்களும் மயங்கும் காலம் அதுதான்.

முருகன் கேட்கும் முன்னரே மேல் திசை நோக்கி கையைக் காட்டினான் எவ்வி. தலையை உயர்த்தி மேலே பார்த்தான் முருகன். ‘நிலவிலே பரண் அமைத்துவிட்டானா?’ என்பதுபோல இருந்தது அவன் பார்வை. ‘நான் அதை நோக்கி படி அமைத்திருக்கிறேன். அங்கு போவது உன் வேலை' எனப் பதிலளிப்பது போன்று இருந்தது எவ்வியின் பார்வை.

முருகனும் வள்ளியும் பின்தொடர, தீப்பந்தம் ஏந்தியபடி முன் நடந்தான் எவ்வி. தனக்குப் பின்னால் இருளுக்குள்தான் எவ்வளவு விளையாட்டு? `சின்னச்சின்னச் சிரிப்புகளுக்கு என்ன அர்த்தம்?, இது பதிலா... கேள்வியா?, இவ்வளவு மெதுவாகப் பேச முடியுமா? பின்தொடரும் ஓசையே கேட்காமல் இருக்கிறதே! அவன் வள்ளியை அழைத்து வருகிறானா... அல்லது சுமந்து வருகிறானா? திரும்பிப் பார்த்தால் அவர்களின் நெருக்கம் குலைந்துவிடும். வேண்டாம்' என யோசித்தபடியே, வேங்கைமர அடிவாரம் வந்தான் எவ்வி. பந்தம் ஒளி அந்த இடம் படரும்போதுதான் தெரிந்தது, முருகனும் வள்ளியும் ஏற்கெனவே அங்கு வந்து அமர்ந்து இருந்தது. எவ்வி அதிர்ந்துபோனான்.

“என்னைப் பின்தொடர்ந்து வருகிறீர்கள் என்றல்லவா நினைத்தேன்!”

“மனிதனால் காதலை அழைத்துவர முடியாது; காதல்தான் மனிதரை அழைத்துவரும்.”

எவ்வியிடம், பேச வார்த்தைகள் இல்லை. வணங்கி விடைபெற்றான். அப்போது எவ்வியின் கையில் ஒரு பொருளைக் கொடுத்தான் முருகன்.

“எம் காதலின் பரிசு” என்றாள் வள்ளி.

அவர்கள் மர ஏணியில் ஏறிச்சென்று பரணில் அமர்ந்தனர். எங்கும் சூழ்ந்திருந்த இருளுக்குள் இருந்து, காற்று இசையைச் சுரந்தது. அசையும் இலைகளுக்கு இடையில் விண்மீன்கள் கண்சிமிட்டின.
“இத்தனை கண்களுக்கு இடையில் நாம் வெட்கம் களைவது எப்படி?” என்று கேட்டபடி வள்ளி நாணினாள்.

25p3.jpg

முருகன் சொன்னான், “வெட்கம் களைகையில் இவற்றைப் பார்க்க கண்கள் ஏது நமக்கு?”

சுடர் அணைவதுபோல பேச்சுக்குரல் மெள்ள அணைந்தது. வேங்கைமரம் தனது கிளைகளை அசைக்கத் தொடங்கியது. சந்தன வாசத்துக்குள் சிலாக்கொடியின் நறுமணம் இறங்கியபோது, காற்று எங்கும் சுகந்தம் பரவி மேலெழுந்தது. மரத்தின் கொப்பொன்றில் இருந்த ஆண் பல்லி குரலெழுப்பி, தனது துணையை அழைத்தது. ஓசை கேட்ட திசை நோக்கி முருகன் திரும்பியபோது, அவன் கன்னம் தடுத்து வள்ளி சொன்னாள், “அடுத்தவர் காதல் காண்பது பிழை.”

“முதலில் அதனிடம் சொல்” என்றான் முருகன். சிதறித் தெறித்த வள்ளியின் சிரிப்பொலியை, காடு எங்கும் அள்ளிக்கொண்டு போனது காற்று.

எவ்வி, காரமலையின் அடிவாரத்தில் இருக்கும் தனது ஊருக்கு வந்துசேர்ந்தான்.

“முருகன் எங்கே?” என்று கேட்ட ஒவ்வொருவருக்கும் ஒரு பதிலைச் சொன்னான். இதுவரை அடையாத ஒரு மகிழ்வை இப்போது அடைந்திருப்பதாக அவனது மனம் துள்ளிக்குதித்தது. முருகன் தந்த காதல் பரிசைப் பார்த்தான். அது ஒரு பூண்டுபோல் இருந்தது. `இதை என்ன செய்வது?' என யோசித்தபடி பூண்டைத் தட்டி, பக்கத்தில் நீர் நிறைந்திருந்த பைங்குடத்தில் போட்டான். நீருக்குள் இருந்து குமிழ்கள் இடைவிடாது வந்தன. அந்த நீர், பழச்சாறுபோல மாறிக்கொண்டிருந்தது.

அதை மூங்கில் குடுவையில் ஊற்றி ஒரு மிடறு குடித்தான். அதன் சுவைக்கு ஈடு சொல்ல வார்த்தைகளே இல்லை. மனிதர்கள் யாரும் இதுவரை இப்படி ஒரு சுவையை அனுபவித்திருக்க மாட்டார்கள். குடத்தில் இருந்த மொத்தத்தையும் குடித்து முடித்தான். குடத்தின் கீழ் பூண்டு அப்படியே இருந்தது. மீண்டும் குடம் நிறையத் தண்ணீரை ஊற்றினான். நீர், பழச்சாறாக உருமாறியது. மீண்டும் அதைக் குடிக்கத் துணிந்தபோது, காட்டின் கீழ்ப்புறம் இருந்து பெரும் ஓசை கேட்டது. குடத்தை அப்படியே வைத்துவிட்டு வெளியே ஓடிவந்து பார்த்தான்.

கையில் தீப்பந்தங்களோடு மனிதக் கூட்டம். வேட்டுவன் பாறைக்குப் பின்புறமாக நடந்து, காட்டின் தென்திசை நோக்கிச் சென்று கொண்டிருந்தனர். `யார் இவர்கள்?' `இந்த நள்ளிரவில் பந்தம் ஏந்தி எங்கே சென்று கொண்டிருக்கின்றனர்?' என, ஊரில் இருந்த ஒவ்வொருவருக்கும் ஒரு சந்தேகம் எழுந்தது. முதுகிழவன் சொன்னான், “நாம் கீழே இறங்கிப்போய், அவர்கள் யார்... எங்கே போகின்றனர்... என்ன இடர் நேர்ந்தது என்று கேட்போம்” என்றார்.
25p7.jpg
“நம் மீது தாக்குதல் தொடுத்துவிட்டால்?”

“இது நம் இடம். நம்மை ஒன்றும் செய்துவிட முடியாது”

“சரி'' என்று சிலர் மட்டும் புறப்பட்டுச் சென்றனர். மற்றவர்கள் குடிலைக் காத்தபடி மேலேயே நின்றனர்.

முதுகிழவனும் எவ்வியும் முன்னால் நடக்க, இளைஞர் சிலர் பின்தொடர்ந்தனர். மலைச்சரிவில் வேகமாக இறங்கினர். எங்கு இருந்தோ வந்த பலத்த காற்று அவர் மீது மோதிச் சென்றது. எவ்விக்கு, பரணை நோக்கி நினைவு சென்றது. `இந்தக் காற்றுக்கு பரண் தாங்குமா?' என, மனதுக்குள் சின்னதாக அச்சம் உருவானது. அவன் தென்திசை உச்சியை அண்ணாந்து பார்த்தான். மறுகணமே அடுத்த சந்தேகம் உருக்கொண்டது, `ஒருவேளை வேங்கைமரம் உந்தித் தள்ளியதில் இருந்துதான் இந்தக் காற்றே உருவாகியிருக்குமோ?'

பெருங்கடல் நடுவே மிதக்கும் சிறு தெப்பம்போல், உச்சிக்காட்டின் உள்ளங்கையில் ஆடிக்கொண்டிருந்தது பரண். வெகுதூரத்தில் பெண் யானையின் பிளிறல் கேட்டது. யானைகள் முயங்கிக் கூடுகின்றன. நிலவைப் பார்த்தபடி இருந்த வள்ளி சொன்னாள், “இன்னும் சிறிது நேரத்தில் இரவுப் பூக்கள் மலரத் தொடங்கும்.”

“எப்படிச் சொல்கிறாய்?” - மெல்லியதாகக் கேட்டது முருகனின் குரல்.

“பூவின் மேலிதழ் விலகத் தொடங்கி, மூன்றாம் நாழிகை முடியப்போகிறது.”

“நாம்  பரண்  ஏறத்  தொடங்கும் போதேவா?”

“இல்லை, நீங்கள் ஆண் பல்லியின் அழைப்பைக் கேட்டுத் திரும்பியபோது.”

“நீ எந்த மலரைச் சொல்கிறாய்?”

“மலர்களில் ஏது வேறுபாடு? எல்லா மலர்களும் ஒரே இனம்தான்… பெண் இனம்.”

இரவு மலர்கள் மலரத் தொடங்கின. திசை எங்கும் புதிய நறுமணம் படர்ந்தது. மூங்கில் அடர்ந்த கீழ்த் திசையில் இருந்து குழலிசையைக் காற்று அள்ளிவந்தபோது, அதனுடன் காதலின் உயிரோசையும் இணைந்தது. வேங்கைமரம் நிலைகொள்ளாமல் ஆடியது.

தீப்பந்தம் ஏந்தி, கடுங்குரலோடு சென்றுகொண்டிருந் தவர்களை, வேடர் குல முதுகிழவன் மறித்துக் கேட்டான்...

“எங்கே போகிறீர்கள்?”

முதுகிழவனின் கேள்விக்குப் பெருங்குரலில் பதில் சொன்னான் ஒருவன், ``நாங்கள் கொடி குலத்தைச் சேர்ந்தவர்கள். பச்சைமலையின் ஈரடுக்கின் கீழ் இருக்கிறோம். எங்களின் குலமகள் வள்ளியைக் காணவில்லை. நேற்று காலை குடில் விலகி, தினைப்புனம் காக்கச் சென்றாள். ஆனால், அவள் பரணுக்குப் போகவில்லை. எங்கே போனாள் என அவள் தோழிகளுக்கும் தெரியவில்லை. அவர்களாகத் தேடிப்பார்த்துவிட்டு, மாலையில்தான் எங்களிடம் வந்து சொன்னார்கள். அப்போது முதல் நாங்கள் தேடிவருகிறோம். எங்கேயும் காணவில்லை. கீழ்த்திசைக்கு ஒரு குழு சென்றுள்ளது. நாங்கள் யானைப்பள்ளம் நோக்கிப் போகிறோம்” என்றான்.

எவ்விக்கு, அப்போதுதான் ஆபத்து புரிந்தது. `இவர்களை அந்தப் பக்கம் போகவிடக் கூடாது' எனச் யோசிக்கையில், முதுகிழவன், “இந்தப் பெருங்காட்டில் நீங்கள் மட்டும் எப்படித் தேடுவீர்கள்? நாங்களும் உடன் வருகிறோம். ஆளுக்கு ஒரு பக்கமாகத் தேடுவோம்” என்றார்.

ஆபத்து, பேராபத்தாக மாறியதை எவ்வி உணர்ந்தான். `என்ன செய்யலாம்?' என யோசிப்பதற்குள் முதுகிழவன், “ஏன் நிற்கிறீர்கள்... புறப்படுங்கள்” என்று சொல்லி, அவர்களோடு நடக்கத் தொடங்கினார்.

25p4.jpg

“சற்று நில்லுங்கள். நான் மற்றவர்களையும் அழைத்துவருகிறேன்” என்று சொன்ன எவ்வி, அவர்களின் பதிலை எதிர்பார்க்காமல் குடிலை நோக்கி விரைந்து ஓடினான். `சரி, இன்னும் கூடுதல் ஆட்களோடு சென்று தேடுவது நல்லதுதான்' என யோசித்த அவர்கள், அவன் வரும் வரை பொறுத்திருக்க முடிவுசெய்தனர். கொடி குலத்தைச் சார்ந்த ஒரு பெரியவர் மட்டும் சொன்னார், “அடுத்த குலப்பெண்களுக்கு ஆபத்து என்றால், உங்களைப்போல் உதவிசெய்ய இன்னொருவர் இந்தக் காட்டில் இல்லை” என. முதுகிழவன் சற்றே பெருமிதத்தோடு தலையசைத்தான்.

அதே வேகத்தில் எவ்வி மலை மேல் இருந்து இறங்கி வந்தான். அவனுக்குப் பின்னால் ஒருவன் பைங்குடத்தைத் தலையில் வைத்துத் தூக்கிவந்தான். வேறு ஆட்கள் யாரும் வரவில்லை. ‘என்ன... இவன் யாரையும் அழைக்காமல், பானையோடு ஒருவனை மட்டும் அழைத்து வருகிறான்!’ என யோசிக்கையில், ‘`மற்றவர்கள் எல்லாம் ஆயுதங்களோடு வருகிறார்கள். அவர்கள் வருவதற்குள் நீங்கள் இந்தப் பழச்சாறை அருந்தி இளைப்பாருங்கள்” என்று சொல்லி, மூங்கில் குவளையில் ஆளுக்கு ஒரு குவளையாக அந்தப் பூண்டுச்சாற்றைக் கொடுத்தான். பழச்சாற்றின் சுவையாலும் அது தந்த எல்லையற்ற மயக்கத்தாலும், ‘`இதற்கு நிகர் இந்த உலகில் எதுவும் இல்லை'’ என ஆளாளுக்கு அதைப் புகழத் தொடங்கினர்.

பானை, முழுவதும் தீர்ந்தது. அதற்குள் இன்னொருவன் தலையில் பானையோடு வந்து சேர்ந்தான். பூண்டை எடுத்து அந்தப் பானையில் போட்டான் எவ்வி. அடுத்த சுற்று எல்லோரும் குடித்தனர். முதுகிழவன் மட்டும் புலம்பினான்,

“ `நிலமகள்... குலமகள்' என என்னென்னமோ சொன்னார்கள். இப்போது பழச்சாற்றைக் குடிக்க முந்திக்கொண்டிருக்கிறார்கள்” என்று சொல்லிக்கொண்டே மூன்றாம் குவளையை அருந்தியவன், மயங்கிச் சாய்ந்தான். எல்லோரும் விடாமல் குடித்து அதிமதுரச் சுவையில் மூழ்கினர்.

அவர்கள் குடிக்கும்போது சிந்திய துளிகள் இந்தப் புற்கள் எங்கும் சிதறின. அதன் வாசனை காற்றில் கலந்து எங்கும் பரவியது. நுகர்வுச்சக்தியை அதிகம்கொண்டிருந்த பாம்புகள், காடு முழுவதும் இருந்து பெரும்வேகம்கொண்டு இங்கு வந்தன. பாம்புகளின் எண்ணிக்கை, கணக்கில் அடங்காமல் இருந்தது. ஒவ்வொரு புல்லுக்கும் ஒரு பாம்பு வந்து சேர்ந்தது. புற்களில் இருந்த பழச்சாற்றுத் துளியை அவற்றை தம் நாவால் நக்கின. புல்லின் ஓரம் இருந்த சுனைஈக்கிகள் அவற்றின் நாவுகளை இரு கூறுகளாக அறுத்தன. ஆனால், பழச்சாற்றின் சுவை அவற்றை விடுவதாக இல்லை. மீண்டும் நக்கின. அடித்தொண்டை வரை நாக்கு இரு கூறுகளாகப் பிளந்தது. எல்லா பாம்புகளுக்கும் நாக்குகள் இரு கூறுகளாயின. அன்றில் இருந்து இந்தப் புற்கள் `நாக்கறுத்தான் புற்கள்' ஆயின.

தையைச் சொல்லியபடி, நீலன் முன் நோக்கி நடந்துகொண்டிருந்தான். பின்தொடர்ந்து வந்துகொண்டிருந்த கபிலருக்கு, கண்கட்டுவதுபோல் இருந்தது. எங்கும் இருள் அடர்ந்தது. நீலன், இருளுக்குள் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்தான்.

பிலருக்கு மீண்டும் நினைவு திரும்பிய போது மறுநாள் பிற்பகலாகியிருந்தது. நடந்த களைப்பை மீறி, பசி அவரை எழுப்பியது. சாணத்தால் மெழுகப்பட்ட ஒரு குடிலில் இருந்த மரப் படுக்கையின் மேல் அவர் படுக்க வைக்கப் பட்டிருந்தார். கண்விழித்து எழுந்தவருக்கு, தான் எங்கு இருக்கிறோம் என்பது குழப்பமாக இருந்தது. ‘இது எந்த இடம்? இங்கே எப்படி நான் வந்தேன்?' என்று கேள்விகள் எழுந்தபடி இருந்தன. அவரது வலதுகாலில் பச்சிலைகொண்டு கட்டு போடப்பட்டிருந்தது. வீட்டுத் திண்ணையின் ஓரம் சிறுவர்கள் விளையாடிக்கொண்டிருந்தனர்; சிறு பறை ஒன்றை கோலால் அடித்து ஒளியெழுப்பியபடி, குறுக்கும் நெடுக்குமாக ஓடிக்கொண்டிருந்தனர்.

“நேற்று தள்ளாடித் தடுமாறி வந்தது இவர்தானா?” என்று ஒரு சிறுவன் கபிலரைப் பார்த்து கேட்டுவிட்டு ஓடினான்.

`நான் எப்போது தள்ளாடி வந்தேன்?' என யோசிக்கையில், சற்று குழப்பமாகவே இருந்தது. கபிலர் எழுந்துவிட்ட தகவல் கிடைத்ததும் நீலன் அந்த இடம் வந்து சேர்ந்தான்.

“இது என்ன ஊர்? நான் எங்கே இருக்கிறேன்?”

“நீங்கள் வரவேண்டிய இடத்துக்குத்தான் வந்திருக்கிறீர்கள். ஆனால், வந்தது தெரியாமல் வந்தீர்கள்.”

“புரியும்படியாகச் சொல்” என்றார் கபிலர்.

“உங்களின் வலதுகால் தசை பிறண்டுவிட்டது. அந்த நிலையில் உங்களால் அதிகத் தொலைவு நடக்க முடியாது. நடக்க, நடக்க வலி கூடத்தான் செய்யும். பொழுது வேறு மறைந்துகொண்டிருந்தது. இருட்டுவதற்குள் இந்த இடம் வந்து சேர வேண்டும். இடையில் நாகக் கிடங்கு வேறு. இந்தக் காட்டில் எத்தனை வகை பாம்புகள் இருக்கின்றனவோ, அத்தனை வகையான பாம்புகளும் அங்கு உண்டு. நாங்கள் வெளியில் இருந்து வரும் யாரையும், அந்தப் பக்கமாக அழைத்துவர மாட்டோம்; ஆற்றைச் சுற்றிதான் அழைத்து வருவோம். ஆனால், உங்களுக்கு அடிபட்டதால் ஆற்றைச் சுற்ற முடியாது எனத் தெரிந்துவிட்டது. சரி, நாகக் கிடங்கின் வழியே வேகமாக அழைத்துச் செல்லலாம் என்றால், நீங்கள் பனைமரத்தைக் கடப்பதற்குள் உட்கார்ந்துவிட்டீர்கள். எனவே, எனக்கு வேறு வழி தெரியவில்லை. உங்களுக்கு `தனைமயக்கி’ மூலிகையைக் கொடுத்தேன்” என்றான்.

“அது என்ன மூலிகை? நான் கேள்விப்பட்டதே இல்லையே!” என்றார் கபிலர்.

“அது உங்களின் நினைவை மயக்கும். அதனால் நீங்கள் வலியை மறப்பீர்கள். அதே நேரத்தில் உங்களின் இயக்கத்தை நிறுத்தாது. அதனால்தான் உங்களின் தோளைத் தாங்கிப்பிடித்து என்னால் அழைத்துவர முடிந்தது. நீங்களும் தள்ளாடித் தடுமாறி நடந்து வந்தீர்கள்.”

கபிலர், வியப்பில் உறைந்துபோனார். “என்னை மயக்கவைத்து நடக்கவைத்தாயா! இது எப்படிக் கைகூடியது?”

“கைகூடியதால்தான் நீங்கள் இங்கு வந்திருக்கிறீர்கள், வந்தது தெரியாமல்.”

பெண் ஒருத்தி மண் கலயத்தில் கூழ் கொண்டுவந்து கொடுத்தாள்.

“குடியுங்கள், நீங்கள் உணவருந்தி நாளாகப்போகிறது” என்றான் நீலன்.

கூழ் முழுவதையும் குடித்த பிறகுதான் தெளிச்சி ஏற்பட்டது.

“அது என்ன பழச்சாறு? நேற்று ஒன்று சொன்னாயே. பெயர் மறந்துவிட்டேன்” என்றார் கபிலர்.

“அது உங்களுக்கு நினைவு இருக்கிறதா?” எனக் கேட்டான் நீலன்.

“நன்றாக நினைவு இருக்கிறது. `புல்லில் சிந்திய அந்தப் பழச்சாற்றைப் பாம்புகள் வந்து நக்கியதால், அவற்றின் நாக்குகள் இரு கூறுகளாகி விட்டன' எனச் சொன்னது வரை நினைவு இருக்கிறது.”

“அதன் பிறகுதானே கதையின் முக்கியமான பகுதியே இருக்கிறது” என்றான் நீலன்.

25p51.jpg

“எனக்கு முற்றிலும் நினைவில்லை. அதன் பிறகு முருகனும் வள்ளியும் என்ன ஆனார்கள்? என்னதான் நடந்தது?”

“மொத்தக் கதையையும் என்னால் திருப்பிச் சொல்ல முடியாது. பழச்சாற்றைக் குடித்தவர்கள் மயக்கம் தெளிய பல நாட்கள் ஆனதாம். அதிகம் குடித்தது எவ்விதான். எத்தனை நாட்கள் என்று தெரியவில்லை. மயக்கம் கலைந்து மரத்தடிக்குப் போனானாம். வேங்கைமரத்தில் கட்டப்பட்டிருந்த சந்தனக்கட்டைகள் தழைத்து, காற்றில் ஆடிக்கொண்டிருக்கின்றன. அவற்றைப் பார்த்தும் எவ்விக்குப் புரிந்தது. புன்னகையோடு ஊர் திரும்பிவிட்டான்.
25p8.jpg
“முருகன் எங்கே... ஏன் அழைத்துவரவில்லை?'' என்று கேட்டதற்கு, “காதலை மனிதனால் அழைத்துவர முடியாது; காதல்தான் மனிதனை அழைத்துவரும்” என்று சொல்லிவிட்டு, அந்தப் பூண்டுச்சாற்றை அருந்தப் போய்விட்டான்.

நீண்ட நாட்களுக்குப் பிறகு, காட்டுக்குள் சந்தனவேங்கை மரங்கள் புதிதாகத் தழைத்திருப்பதாகச் சொன்னார்கள். அதன் பக்கத்திலேயே சிலாக்கொடியும் படர்ந்திருந்தது. எங்கு சந்தனவேங்கை இருக்கிறதோ, அங்கு முருகனும் வள்ளியும் இருப்பதாக எங்கள் நம்பிக்கை. அதன் பிறகு, இந்தப் பெருங்காட்டில் காதலின் அடையாளமாக சந்தனவேங்கை மாறியது.

முருகனுக்குப் பிறகு, குலத்தலைவன் ஆனான் எவ்வி. கொடி குலமும் வேடர் குலமும் இணைந்தன. இருவரும் தங்களது இடங்களை விட்டு அகன்று, மூன்றாம் மலையான ஆதிமலையை அடைந்தனர். அங்கு புதுநகர் ஒன்றை அமைத்தான் எவ்வி. அதன் பிறகு அவனது வம்சாவழிகள் தலைமை தாங்க, வேளீர் குலம் தழைத்தது. அந்த வம்சத்தின் நாற்பத்திரண்டாவது தலைவன்தான் வேள்பாரி.

இதுதான் வேல்முருகனில் தொடங்கி வேள்பாரி வரையிலான கதை.”

கதையைக் கேட்ட கபிலர், கூழ் குடித்த கலயத்தை நீண்ட நேரம் கையில் வைத்தபடியே அமர்ந்து இருந்தார்.

“நான் இப்போது தனைமயக்கி மூலிகை எதுவும் தரவில்லை” என்று நீலன் சொன்ன போதுதான், ஆச்சர்யம் அகன்றார். கலயத்தை அந்தப் பெண்ணிடம் திருப்பித் தரும்போது கபிலரின் வாய் முணுமுணுத்தது,

“தனைமயக்கி மூலிகை, இலைகளில் மட்டும் அல்ல; கதைகளிலும் இருக்கிறது.”

- பாரி வருவான்...

http://www.vikatan.com

Link to comment
Share on other sites

வீரயுக நாயகன் வேள் பாரி - 5

 

 

 

p83.jpg

னது நினைவில் இல்லாத ஒரு நாளைப் பற்றி கேள்விப்பட்ட கணத்தில் இருந்து, கபிலர் சற்றே அதிர்ந்துபோயிருந்தார். நீலன், அவர் அருகில்தான் உட்கார்ந்திருந்தான். அவனிடம் பேச கபிலரின் மனம் விரும்பினாலும், அவரது எண்ணங்கள் முழுவதும் கைதவறிப்போன நினைவுக்குள்தான் இருந்தன.

நீலன் எழுந்தான்.

“ஊர்ப் பழையன் உங்களைப் பார்க்க வேண்டும் எனச் சொல்லியிருந்தார். அவரை அழைத்துவருகிறேன்” என்று சொல்லிச் சென்றான். ஊரின் மிக வயதான ஆணை `பழையன்' என்றும், பெண்ணை `பழைச்சி' என்றும் அழைப்பது வழக்கம்.

p83f.jpgஅதே யோசனையில் இருந்த கபிலர், தான் உட்கார்ந்திருக்கும் மரப்பலகையை விரலால் கீறிக்கொண்டிருந்தார். `எவ்வளவு அகலமான பலகையாக இருக்கிறது. இது என்ன மரம்?' என்று அதை உற்றுப்பார்த்தார். அவரால் கண்டறிய முடியவில்லை. அந்தப் பெண், சிறு மூங்கில் கூடையில் நாவற்பழங்களைக் கொண்டுவந்து கொடுத்தாள். அதை  வாங்கிக்கொண்ட கபிலர் “இது என்ன மரம்?” என்று கேட்டார்.

“திறளி மரம்” என்று சொன்னாள்.

“திறளி மரம் இவ்வளவு அகலமாக இருக்குமா!”

“இது நடுப்பாகம்தான். அடிப்பாகம் இன்னும் அகலமானது. எங்களது குடிலில் இருக்கிறது. வந்து பார்க்கிறீர்களா?”

கபிலர், பதில் ஏதும் சொல்லவில்லை. திறளி மரம் பற்றிய பழம்பாடல் ஒன்று நினைவுக்கு வந்தது. `தன் மனைவி உடன் இருந்தாலும் அழகியை நேசிக்க எந்த ஆணும் தவறுவது இல்லை. அதேபோல சேர, சோழ, பாண்டிய வேந்தர்கள் மூவரும் தங்களுக்கு எனத் தனித்த மரங்களை அரசச் சின்னங்களாகக் கொண்டிருந்தாலும், மூவருக்கும் பிடித்த மரமாக திறளி மரமே இருக்கிறது' என்று சொல்கிறது அந்தப் பாடல். அதற்குக் காரணம், யவன வணிகத்தின் திறவுகோலாகத் திறளி இருப்பதுதான்.

யவன நாட்டோடு வணிகத்தொடர்பு உருவாகி, பல தலைமுறைகள் உருண்டோடிவிட்டன. இன்று அது உச்சத்தில் இருக்கிறது. இந்த வணிகத்தில் பெரும்செல்வமாக யவனர்கள் கருதுவது மிளகைத்தான். கறுத்து, சிறுத்த அந்தத் தானியத்துக்காக, யவனர்கள் எந்த விலையும் கொடுக்கத் தயாராக இருக்கின்றனர். யவனக் கப்பல்களை தமிழ் நிலத்தின் துறைமுகங்களை நோக்கி இழுத்துவருவது மிளகுதான்.

பெரும் மதில்போல் கடலில் மிதந்துகொண் டிருக்கும் யவனக் கப்பல்களில் மிளகை ஏற்ற, கரையில் இருந்து ஒற்றை அடிமரத்தாலான தோணியில் எடுத்துச் செல்வார்கள். அந்தத் தோணி, திறளி மரத்தால் ஆனது. துறைமுகங்களில் நிற்கும் திறளி மரத் தோணிகளே மிளகு வணிகத்தின் குறியீடாக மாறின. வணிகர்கள் கடலில் மிதக்கும் கப்பல்களை எண்ணுவதைவிட, கரையில் மிதக்கும் திறளி மரத் தோணிகளை எண்ணியே செல்வச்செழிப்பை மதிப்பிடுகின் றனர். பெரும்பானையில் இருக்கும் உணவை அள்ளிப் போடும் அகப்பையைக்கொண்டு அளவிடுவதைப்போல.

யவன வணிகர்களுக்கு, இப்போது எல்லா கணக்குகளும் மிகத்தெளிவு. நூற்றாண்டுகளுக்கும் மேலாக சிறந்து விளங்கும் இந்த வணிகத்தை, அவர்கள் துல்லியமான கணக்குகளின் மூலமே அளவிட்டனர். `தேர்ந்த மாலுமிகளால் செலுத்தப்படும் கப்பல்கள், 40 இரவுகளும் 40 பகல்களும் கடக்கும் தொலைவைக் கொண்டுள்ளது மேலைக் கடற்கரை' என்பது அவர்களின் கணக்கு. திறளியை `டிரோசி' என்றே அவர்கள் உச்சரித்தனர்.

பேரியாறு, காவிரி, பொருநை என மூன்று நதிகளின் முகத்துவாரத்தில் இருந்த மூவேந்தர்களின் துறைமுகங்களில் எத்தனை டிரோசிகள் நிற்கின்றன என்ற கணக்குகள் நைல்நதிக்கரை நகரத்தில் எழுதிப் பாதுகாக்கப் பட்டன.

நீலக் கடலுக்கு அப்பால் விரிந்துகிடக்கும் நாடுகளை வணிகமே இணைத்தது. அதுவே வரலாற்றை உந்தித் தள்ளியது. யவனர்கள் தங்களுக்குத் தேவையான முத்தும் மிளகும் நவரத்தினங்களும் செழித்துக்கிடக்கும் பூமியாக தமிழ் நிலத்தைக் கண்டனர். அழகின் பித்தர்கள் கூடிவாழும் செல்வவளம்மிக்க நாடாக யவன தேசத்தை தமிழ் வணிகர்கள் அறிந்துவைத் திருந்தனர். இருநாட்டு வணிகர்களும் அரசியல் சதுரங்கத்தில் முன்பின் காய்கள் நகர்வதற்குக் காரணமாக இருந்தனர்.

p83a.jpg

வணிகமே வரலாற்றின் போக்கைத் தீர்மானிக்கிறது. இந்தக் கருத்தோடு தொடக்கக் காலத்தில் கபிலருக்கு உடன்பாடு இல்லை. ஆனால், கடந்த இருபது ஆண்டுகளாக தனது கண் முன்னால் நடக்கும் அரசியல் சூழ்ச்சிகளை அறிந்த பிறகு, அவர் தனது கருத்தை மாற்றிக்கொண்டார். கடல் கடந்து நடக்கும் இந்தப் பெரும் வணிகம்தான் பேரரசுகளை விடாமல் இயக்குகிறது. அறுபது வயதைக் கடந்துவிட்ட குலசேகரபாண்டியனுக்கு தேறலை ஊற்றிக்கொடுக்க ஒரு `கிளாசரினா' தேவைப்படு கிறாள்.

கடற்பயணத்தின் தொலைவும் கப்பல்களில் ஏற்றப்படும் பொருட்களும் பெருக்கெடுக்கும் லாபமும் கணக்குகளால் கண்டறியப்பட்டபடி இருக்க, வணிகமும் கணிதமும் பேரரசுகளின் இரு கண்களாகின.

மழை கொட்டி முடித்த ஒரு நண்பகல் நேரத்தில் கொற்கைத் துறையில் நின்ற கபிலர், கொந்தளிக்கும் கடல் அலையைப் பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அவரைக் கடந்து போன யவன வணிகர்கள், டிரோசியைப் பற்றி பேசியபடி சென்றனர். திறளியை யவனர்கள் இப்படித்தான் உச்சரிக்கின்றனர் என்பதை கபிலர் அன்றுதான் கேட்டு அறிந்தார்.

பெரும்வணிகத்தின் திறவுகோலாக இருக்கும் திறளி, இங்கு படுத்து உறங்கும் பலகையாகக் கிடக்கிறது. அதுவும் இவ்வளவு அகலமான திறளி மரம், செல்வத்தின் பெரும்குறியீடு அல்லவா! எண்ணங்கள் எங்கெங்கோ ஓடியபடி இருக்க, விரல் நகத்தால் திறளி மரத்தின் மீது அழுத்திக்  கோடு போட முயற்சித்துக்கொண்டிருந்தார் கபிலர். அப்போது நீலன், ஊர்ப் பழையனை அழைத்து வந்தான்.

அவரது உயரமே கபிலரை ஆச்சர்யப்பட வைத்தது. சுருங்கி மடிந்திருக்கும் தோல்தான் வயோதிகத்தைச் சொன்னது. மற்றபடி நெடும் உயரம்கொண்ட அந்த மனிதரின் கை எலும்புகள், உருட்டுக்கட்டைகளைப்போல இருந்தன. அடர்த்தியற்ற நரைமுடியை பின்னால் முடிச்சிட்டிருந்தார். அவரது உடல் முழுவதும் தழும்புகள் திட்டுத்திட்டாக இருந்தன. எத்தனை ஈட்டிகளுக்கும் அம்புமுனைகளுக்கும் தப்பிப் பிழைத்த உடல் இது. இவ்வளவு வயதான ஆண்களை இப்போது எல்லாம் பார்ப்பதே அரிதாகிவிட்டது.

p83b.jpg

பழையன் வந்து, திறளி மரப் பலகையில் கபிலருக்குப் பக்கத்தில் அமர்ந்தார். நீலன் நின்றுகொண்டிருந்தான்.

“தசைப்பிடிப்பு இன்று சரியாகிவிடும். நாளை நீங்கள் நடக்கலாம்” என்றார் பழையன்.

கபிலருக்கு அப்போதுதான் தசைப்பிடிப்பு நினைவுக்கு வந்தது.

“நீலன், என்னைப் பாதுகாப்பாக அழைத்துவந்துவிட்டான்” என்றார் கபிலர்.

“சிறுவன். இன்னும் பக்குவம் போதாது. நாகக்கிடங்கின் ஆபத்தை அவன் உணரவில்லை” என்றார் பழையன்.

“ஆற்றைச் சுற்றிவந்து சேர்வது முடியாது என்பதால், அப்படிச் செய்ததாகச் சொன்னான்” என்றார் கபிலர்.

“சுற்றிவந்து சேர முடியாமல் போகலாம், ஆனால், உயிரோடு வந்து சேர வேண்டும் அல்லவா?’’

கபிலர், நீலனைப் பார்த்தார். இளைஞர்களின் துணிவை பெரியவர்களால் ஏற்றுக்கொள்ள முடிவது இல்லை. அதற்காக இளைஞர்கள் கவலைகொள்வது இல்லை. நீலன் கவலைப் படாமல்தான் நின்றுகொண்டிருந்தான். ஆனாலும் பழையனின் வார்த்தைகளுக்கு முன் பணிவுகொண்டு நின்றான். நாவற்பழம், பழையனுக்கு மிகவும் பிடிக்கும். எனவே, இந்த வசவு வேகமாக முடிவுக்கு வரும் என அவனுக்குத் தெரியும்.

“ஏன் பழத்தை எடுக்காமல் இருக்கிறீர்கள்? எடுத்து உண்ணுங்கள்” என்று கபிலருக்கு அருகில் கூடையை நகர்த்தினார் பழையன்.

கூடையில் இருப்பது, காட்டில் பல்வேறு நாவல்மரங்களில் இருந்து பறித்த பழங்கள். ஒவ்வொரு நாவற்பழத்துக்கும் ஒவ்வொரு வகையான சுவை உண்டு. எந்த நாவற்பழத்தை முதலில் எடுத்து உண்ண வேண்டும் என்பதில் இருந்து தொடங்குகிறது காடு பற்றிய அறிவு. புதிதாக எவராவது வந்தால், அவர்களுக்குக் கூடை நிறைய நாவற்பழத்தைத் தருவது விருந்தோம்பல் மட்டும் அல்ல; காடு பற்றிய அவர்களது அறிதலை அளத்தலும்தான்.

“எடுத்துச் சாப்பிடுங்கள்” என்று பழையன் கூடையை கபிலரிடம் தள்ளியபோது, கபிலர் முதற்பழத்தை எடுத்து வாயில் போட்டார். அதில் இருந்தே தெரிந்துவிட்டது, காடு பற்றி அவருக்கு எதுவும் தெரியாது என்று. ‘காடற்ற மனிதனைக் காட்டுக்குள் அழைத்து வந்திருக்கிறாய்' என்று நீலனை முறைப்பதைப்போல் இருந்தது பழையனின் பார்வை.

`சரி, இனி நாம் விளையாடவேண்டியதுதான்' என்று முடிவுசெய்தார் பழையன். நீலனின் கண்கள், அவர் தேர்ந்தெடுக்கப்போகும் பழத்தின் மீது இருந்தது. அவர் உட்கார்ந்த கணத்தில் தனக்கான பழத்தைத் தேர்வுசெய்திருப்பார் என நீலனுக்குத் தெரியும். ஆனாலும், அவர் இன்றைய விளையாட்டை எதில் இருந்து தொடங்கப் போகிறார் என்பதை அறிய ஆவலோடு இருந்தான். ஆனால், கண்ணிமைக்கும் நேரத்தில் பழையன் முதற்பழத்தை எடுத்து வாயில் போட்டுவிட்டார். நீலனால் அவர் எந்தப் பழத்தை எடுத்து வாயில் போட்டார் என்பதைக் கவனிக்க முடியவில்லை.

p83c.jpg

கபிலரின் கண்களும் பழையனின் விரல்கள் மீதுதான் இருந்தன. மடிப்புகள் அலையலையாக இறங்கி கருமையேறியிருக்கும் விரல்கள். நகம் பிளவுண்டு உலர்ந்திருந்தது. தோலின் வழியே கனிந்து வழிந்துகொண்டிருந்தது வயோதிகம்.
கபிலர் கேட்டார், “உங்களின் வயது என்ன பெரியவரே?”

மென்ற நாவற்பழக் கொட்டையை இடது உள்ளங்கையில் துப்பியபடி பழையன் சொன்னார், “தொண்ணூற்று ஏழு”.

கபிலர் ஆச்சர்யத்தோடு அவரைப் பார்த்தார். நீலனின் கண்கள் அதைவிடக் கவனமாக அவரது விரல்களைப் பார்த்துக்கொண்டிருந்தன. அவர் பதில் சொல்வதற்குள் அடுத்த பழத்தை எடுத்து வாயில் போட்டார். இப்போது அவன் கண்டுபிடித்தான். அவர் கையில் எடுத்தது நரிநாவல். இது துவர்ப்பை உச்சத்துக்குக் கொண்டுபோகும். அப்படியென்றால், இதற்கு முன்னால் அவர் எடுத்து வாயில் போட்டது வெண்நாவலாகத்தான் இருக்கும். அதற்குத்தான் புளிப்பு அதிகம். மொத்த வாயையும் உச்சுக்கொட்டவைத்து விழுங்கும் எச்சிலின் வழியே பேராவலை அது தூண்டும். அதற்கு அடுத்து நரிநாவலை எடுத்துத் தின்றால், தூக்கலான துவர்ப்பு முற்றிலும் வேறு ஒரு சுவையைக் கொடுக்கும். ஆனால், இதில் முக்கியமானது அடுத்து எடுக்கப்போவதில்தான் இருக்கிறது. பழையன் எந்தப் பழத்தை எடுத்து சுவையின் பாதையை எப்படி அமைத்துக் கொள்ளப்போகிறார் என்பதை அறிய ஆர்வத்தோடு இருந்தான் நீலன்.

கபிலர் விடுபடாத ஆச்சர்யத்தின் வழியே கேட்டார் “எப்படி இவ்வளவு துல்லியமாக வயதைச் சொல்கிறீர்கள்?”

நரிநாவலில் சதையைவிட அதன் கொட்டையை அசைபோட்டு மெல்லுவதில்தான் சுவை இருக்கிறது. அதன் மேல்தோல் கழறக் கழற, சுவை உச்சத்துக்குச் செல்லும். தப்பித் தவறி சற்றே அழுத்திக் கடித்து கொட்டையை உடைத்துவிட்டால் அவ்வளவுதான்! உள்ளே இருக்கும் பச்சை நிறப் பருப்பின் கசப்பு இருக்கிறதே, அது நாக்கையே கழற்றிப் போட்டாலும் போகாது. குறைந்தது மூன்று மாதங்களுக்காவது காறிக்காறித் துப்பிக்கொண்டே இருக்க வேண்டியதுதான். எனவே, நரிநாவலைத் தின்னும்போது மிகக் கவனமாகத் தின்னவேண்டும். தந்திரத்தோடு அதன் கொட்டையின் மேல்பகுதியைக் கடித்துச் சுவைக்க வேண்டும், பழையன் வாயில் நரிநாவலை ஒதுக்கிவைத்திருக்கும்போது, கபிலர் இப்படி ஒரு கேள்வியைக் கேட்டுள்ளார். எப்படிப் பதில் சொல்கிறார் பார்ப்போம் என்று ஆவலோடு இருந்தான் நீலன்.

எத்தனை கேள்விகளைப் பார்த்தவர் பழையன், அவருக்குத் தெரியாதா நரிநாவலை என்ன செய்ய வேண்டும் என்று! தாடையின் ஒரு பக்கவாட்டில் இருந்து மறு பக்கவாட்டுக்கு நரியைப் பக்குவமாக அணைத்து ஓடவிட்டுக்கொண்டிருந்தார். துவர்ப்பின் சாறு உள்நாக்கில் இறங்கிக்கொண்டிருந்தது. கண்களாலேயே கபிலரைப் பொறுத்திருக்கச் சொன்னார். `என்னென்ன வித்தைகளைக் காட்டுகிறான் கிழவன்!' என ஆச்சர்யத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான் நீலன்.

நன்றாக மென்ற கொட்டையை இடது உள்ளங்கையில் துப்பிவிட்டு, கபிலரைப் பார்த்து “என்ன கேட்டீர்கள்?” என்றார் பழையன்.

“வயது தொண்ணூற்று ஏழு என்று எப்படி துல்லியமாகச் சொல்கிறீர்கள்?” என்று மீண்டும் கேட்டார் கபிலர்.

p83d.jpg

பழையனின் கைவிரல்கள், கூடையில் இருக்கும் பழங்களைக் கிளறி மூன்று பழங்களை எடுத்தன. நீலன் அவர் எதை எடுத்திருக்கிறார் என உற்றுப்பார்த்தான். உள்ளங்கை சற்றே மூடியிருந்ததால், சரியாகத் தெரியவில்லை. பழையன், கபிலரைப் பார்த்து “மேல் மலையில் இருக்கும் குறிஞ்சிச் செடியில் இரண்டாவது கணுவில் பூ பூத்திருக்கும்போது, நான் பிறந்ததாக என் தாய் சொன்னாள். கடந்த ஆண்டு அந்தச் செடியில் பத்தாவது கணுவில் பூ பூத்திருந்தது” என்றார்.

சொல்லி முடித்ததும் தனது கையில் உள்ள பழங்களை வாயில் போட்டார். அப்போதுதான் நீலன் கவனித்தான், இரண்டு நீர்நாவலும் ஒரு கொடிநாவலும் அதில் இருந்தன. துவர்ப்பேறிய வெற்றிலையில் சுண்ணமும் தெக்கம்பாக்கையும் சேர்ப்பதைப்போலத்தான் இது. இந்தச் சேர்மானம் தரும் சுவைக்கு அளவு இல்லை. துவர்ப்பை அதன் முனையில் தட்டிவிட்டு வேறு ஒன்றாக்கும்.

கனிகளின் சுவையை நாம் எந்த வழியில், எந்தச் சேர்மானத்தோடு அழைத்துச் செல்கிறோம் என்பதுதான் முக்கியம். ஒவ்வொரு வழிக்கும் ஒவ்வொரு விதமான வாசமும் வண்ணமும் உண்டு. `பழையன், துவர்ப்புக்கு அடுத்து சிறுநாவலை எடுத்து இளங்காரத்தோடு முடிப்பார்' என்றுதான் நீலன் நினைத்தான். ஆனால், அவரோ சட்டென வேறு ஒரு சுவைக்குத் தவ்விக் குதித்துவிட்டார். அதுவரை நீலம் ஏறியிருந்த அவரது நாக்கு, செவல் நிறத்துக்கு மாறத் தொடங்கியது. நீலன் அதிர்ந்துபோய்தான் நின்றான். பழையன் தனது நாக்கால் மேல் உதட்டைத் தடவியபடி பேசியதற்குக் காரணம் இருக்கத்தான் செய்தது. நெல்லிக்கனிக்கு அடுத்து குடிக்கும் முதல் மிடறு நீர், நெல்லியால் அறியப்படாத சுவையை நாக்குக்குத் தந்து முடிப்பதைப்போல்தான் இதுவும்.

நாவற்பழத்தின் அடர்கருநீலத்துக்குள் இருப்பது ஒரு சுவை அல்ல, சுவைகளின் பேருலகம். கணக்கில்லாக் கனிகள் தொங்கும் மரத்தில் தனக்கான கனியைத் தேர்வுசெய்யும் பறவையைப்போலத்தான் பழையனும்.

நீலன் ஆச்சர்யப்படுவதைத் தவிர வேறு வழி இல்லை. கபிலருக்கு ஏற்பட்டது ஆச்சர்யம் அல்ல, அதிர்ச்சி. அவர் மனதுக்குள் பழையன் சொன்ன கணக்கு சரிதானா என்பதை எண்ணிக்கொண்டிருந்தார். பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் குறிஞ்சிப் பூ. இரண்டாவது கணுவுக்கும் பத்தாவது கணுவுக்கும் இடையில் இருக்கும் கணுக்களின் எண்ணிக்கை, முன்னும் பின்னும் மீதி இருக்கும் ஆண்டுகள் என எல்லாவற்றையும் மனதுக்குள் கணக்கு போட்டுக்கொண்டிருந்தார்.
தொண்ணூற்று ஏழு என்று பழையன் சொன்ன கணக்கு மிகச் சரியானது என அறிந்த போது, கபிலர் ஏறக்குறைய உறைந்துபோனார். கணிதம் கடலிலும் கப்பலிலும் மட்டும் அல்ல, காட்டிலும் கணுக்களிலும் இருக்கிறது என்பதை ஒற்றைச் செய்தியில் விளங்கவைத்தான் பழையன்.

ஆனால், கபிலரால் விளங்கிக்கொள்ள முடியாத எத்தனையோ விஷயங்கள் அங்கு நடந்துகொண்டிருந்தன. தான் எடுக்கப்போகும் நாவற்பழம் கொண்டு தனது காட்டு அறிவு கணிக்கப்படும் என்பது, அவரால் கற்பனை செய்துகூடப் பார்க்கமுடியாத ஒன்று. எடுத்த உடனே பூநாவலை எடுக்கும் ஒருவரைப் பற்றி சொல்ல என்ன இருக்கிறது?

p83e.jpg

“இரவு கஞ்சி குடிக்கும் முன் இவருக்கு தும்முச்சிச் சாறு கொடுங்கப்பா” என்று சொல்லிவிட்டுப் போனார் பழையன்.

“அது என்ன சாறு? எனக்குத்தான் கால் வலி சரியாகிவிட்டதே. பிறகு ஏன் தரவேண்டும்?” என்று விடாமல் கேட்டுக்கொண்டிருந்தார் கபிலர்.

நீலன் சொன்னான், “நீங்கள் காட்டுக்குப் புதியவர் அல்லவா, அதனால்தான்.”

“நானா காட்டுக்குப் புதியவன்? குறிஞ்சி நிலத்திலேயேதான் எனது வாழ்வின் பெரும்பகுதியைக் கழித்திருக்கிறேன். அந்தத் துணிவில்தான் நான் பாரியைப் பார்க்கத் தன்னந்தனியாக மலையேறத் தொடங்கினேன்” என்றார்.

``மனித வழித்தடங்களின் வழியாக நீங்கள் காட்டை அறிந்திருப்பீர்கள். இது மனிதவாசனை படாத காடு. ஒளி விழாத இடத்துக்குள் நுழைந்து செல்ல வேண்டும். பலவகையான பூச்சிகள் இருக்கின்றன. அவை எல்லாம் கடித்த பிறகுதான் உங்களால் உணர முடியும். அதன் பின்னரும் உணர முடியாத பூச்சிகள்தான் இந்தக் காட்டில் அதிகம். எனவே, இதைக் குடித்தால் மட்டுமே நல்ல உடல்நிலையோடு மலைக்கு மேல் செல்ல முடியும். தற்காப்புக்கு மிகத் தேவை.”

நீலன் சொல்லிவிட்டுப் போன சிறிது நேரத்தில், அந்தப் பெண் சிறு குவளையில் சாறு கொண்டு வந்தாள். அதைக் குடிக்கும்போதுதான் கபிலருக்குத் தோன்றியது, மூவேந்தர்களாலும் பாரியை நெருங்க முடியாது என்று பாணர்கள் மீண்டும் மீண்டும் பாடுவதன் அர்த்தம்.

- பாரி வருவான்...

http://www.vikatan.com

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வள்ளல் பாரியின் பறம்பு மலைப் பிரதேசம் மனதை அள்ளுது..... தொடருங்கள் நவீனன் ....! tw_blush:

Link to comment
Share on other sites

வீரயுக நாயகன் வேள் பாரி - 6

 
 
 

சு.வெங்கடேசன் - ஓவியங்கள்: ம.செ.

 

83p1.jpg

குடிலின் தாழ்வாரம் முழுக்க விளக்கின் வெளிச்சம் படர்ந்திருந்தது. பெருங்கலயத்தில் கஞ்சியும் இலையில் சுருட்டப்பட்ட துவையலும் கொண்டுவந்து கொடுத்தாள் அந்தப் பெண். துவையலைத் தொட்டு வழிப்பதற்கு ஏற்ப சுருட்டப்பட்ட இலையை விரித்துவைத்து, கலயத்தை வாங்கிக் குடிக்கத் தொடங்கினார் கபிலர். கஞ்சி தொண்டைக்குள் இறங்கும்போதே குளிர்ச்சி உடல் எங்கும் பரவியது.

83p3.jpg

புளிப்பேறிய அருஞ்சுவையாக இருந்தது. ‘சுவைத்துச் சிறிது சிறிதாகக் குடிக்கவேண்டும்’ என்று எண்ணிய கபிலர், ஆட்காட்டி விரலால் துவையலை எடுத்து, நடுநாக்கில் வைத்து விரலை எடுப்பதற்குள், அதன் காரம் உச்சந்தலைக்குப் போய் முட்டியது. கண்கள் பிதுங்கின. விழுங்கிய துவையல் தொண்டையில் நின்றது. விழுங்குவதா... துப்புவதா என யோசிக்கும் முன்னர் காரம் சுழன்று பரவிக்கொண்டிருந்தது. கணநேரத்துக்குள் முழுக் கலயத்தையும் வாய்க்குள் கொட்டி முடித்தார். மூச்சு வாங்கியது. நாக்கு, காற்றைத் துழாவியது. சற்றே ஆசுவாசப்பட்டார். கண்கலங்கிய கபிலரைப் பார்த்து, வாய் பொத்திச் சிரித்தாள் அவள்.

தலையை உலுப்பி, காரத்தைக் கீழிறக்கினார் கபிலர். மறுகலயத்தைக் கொடுத்தாள். அணில்வால்தினை கொண்டு காய்ச்சப்பட்ட கஞ்சி.

``புளிப்பிரண்டையை வால்மிளகோடு பிசைந்து செய்யப்பட்ட துவையல்’’ என்றாள்.

கபிலருக்கு இப்போதுதான் நிதானம் வந்தது.

“வால்மிளகு இவ்வளவு காரமாகவா இருக்கும்?” என்று கேட்டார்.

“காரத்துக்குக் காரணம், துவையல் சுருட்டப்பட்ட மகரவாழையின் கொழுந்து இலைதான். முதல்நாள் இரவே அதில் சுருட்டி வைத்துவிடுவோம், நாள் செல்லச் செல்ல காரம் கட்டிநிற்கும். இதுவே மூன்றாம் நாளாக இருந்திருந்தால்…” என்று சொல்லி மீண்டும் வாய் பொத்திச் சிரித்தாள்.

கபிலர் சற்றே நிதானமாக மறுகலயத்தை வாங்கிக் குடித்தார். கண்களின் ஓரம் நீர் வழிந்தது. அவள் பார்த்துவிடக் கூடாது என்பதற்காக இடது பக்கமாகத் தலையைத் திருப்பிக்கொண்டார். துவையலை கண்கள் பார்த்தன. ஆனால், விரல்கள் கிட்ட நெருங்கவில்லை. எரிந்துகொண்டிருக்கும் விளக்கின் இலுப்பை எண்ணெய் வாசனை அவருக்குப் பிடிபட்டது. ஆனால், அந்த விளக்கின் வடிவம்தான் வித்தியாசமாக இருந்தது. இது எதனால் செய்யப்பட்ட விளக்கு என யோசித்துக்கொண்டிருக்கும்போது பழக்கத்தில் துவையலை விரல் வழித்து எடுத்துவிட்டது. உடனே அவருக்குப் பொறிதட்டியது. சட்டெனத் தலையைத் திருப்பி அவளைப் பார்த்தார். அவளோ வெடித்துச் சிரிக்கத் தயாராக இருந்தாள்.

83p21.jpg

துவையலை எடுத்த விரலை அவளுக்கு நேரே நீட்டி, “காரமலை என்று இந்த மலைக்கு இதனால்தான் பெயர் வந்ததா?”  எனக் கேட்டார்.

“எனக்குத் தெரியாது” என்றாள் அவள்.

‘ஒருவழியாகச் சமாளித்துவிட்டோம்’ என்று மனதுக்குள் நினைத்தபடி, விரலை இலையின் ஓரத்தில் தேய்த்துவிட்டு, மீதிக்கஞ்சியைக் குடித்து முடித்தார்.

கலயத்தை அவரிடம் வாங்கும்போதும் அவள் முகத்தில் இருந்த சிரிப்பு அடங்கவில்லை.

“நான் உன்னிடம் விளக்கம் கேட்கத்தான் இரண்டாம் முறை துவையலை எடுத்தேன்” என்றார்.

“நான் அதற்காகச் சிரிக்கவில்லை” என்றாள்.

“பின்னர் எதற்குச் சிரிக்கிறாய்?”

“மாலையில் நான் நாவற்பழங்கள் கொண்டுவந்து கொடுத்தபோது, நீங்கள் முதலில் பூநாவலை எடுத்துத் தின்றீர்களாமே?”

கபிலருக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. தான் எடுத்துத் தின்ற நாவலுக்கு அதுதான் பெயரா என்றும், அவருக்குத் தெரியவில்லை. மெள்ளத் தலையை ஆட்டி “ஆம்” என்றார்.

அவள் வாய்விட்டுச் சிரித்தபடி, இலையோடு சேர்த்துத் துவையலை மடித்து எடுத்துவிட்டுச் சொன்னாள், “உதிரப்போக்கு நிற்காத பெண்கள்தான் பூநாவலைச் சாப்பிட வேண்டும்.''

பழையனும் நீலனும் மீண்டும் குடிலுக்குள் நுழைய, அவள் சிரித்தபடி வெளியேறினாள்.

“என்ன சொல்லிச் சிரித்துக்கொண்டு போகிறாள்” எனக் கேட்டார் பழையன்.

கபிலரோ ‘எதைச் சொல்ல?’ என்ற திகைப்பும் வியப்பும் மிரட்சியும் கலந்தவராக இருந்தார்.

“இவளிடம் பேச்சு கொடுத்தால் மீளமுடியாது, என்னையவே வந்து பார் என்பாள். விருந்தினர் என்பதால் உங்களிடம் சற்று பக்குவமாக நடந்துகொள்கிறாள்” என்றார் பழையன்.

“ஆம்” என்று அவளது பக்குவத்தை ஆமோதிப்பதைத் தவிர, அவருக்கு முன் வேறு எந்த வழியும் இல்லை. காட்டின் இருளுக்குள் இருந்து குளிர்க்காற்று அவ்வப்போது வீசியது. விளக்கு நிலைகொள்ளாமல் ஆடிக்கொண்டே இருந்தது. மகரவாழையில் இருந்து பேச்சைத் தொடங்கிய கபிலர், நெடுநேரம் பழையனோடு பேசிக்கொண்டிருந்தார். நீலன் அங்கும் இங்குமாகப் போய் வந்தபடி இருந்தான். பகலில் வேட்டைக்குப் போயிருந்த நாய்கள் குடில் திரும்பியிருந்தன. குரைப்பொலி விடாமல் கேட்டுக்கொண்டிருந்தது. தனது கண் முன்னால் கடந்துபோன ஒரு நாயின் உயரத்தைக் கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்த கபிலரிடம் பழையன் கேட்டார், “பாரியைப் பார்த்துவிட்டு எப்போது திரும்பப் போகிறீர்கள்?”

83p4.jpg

“மழைக்காலம் தொடங்குவதற்குள் கீழிறங்க வேண்டும். எனவே ஒரு மாதம்தான் எனது திட்டம்.”

“அப்படி என்றால் நீங்கள் கொற்றவைக் கூத்தைப் பார்க்கத்தான் வந்திருக்கிறீர்களா?”

“இல்லையே, அப்படி ஒரு கூத்தைப் பற்றி நான் கேள்விப்பட்டதுகூட இல்லையே” என்றார் கபிலர்.

“நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் கூத்து இது. பறம்பு நாட்டின் உக்கிரம் ஏறிய விழா. நாடே திரண்டிருக்கும். பழைமையான பாணர் கூட்டம் எந்த நாட்டில் இருந்தாலும் இந்த விழாவில் வந்து பங்கெடுக்கும். நீங்கள் அதைக் கேள்விப்பட்டு வந்திருப்பதாகத்தான் நான் நினைத்தேன்” என்றார் பழையன்.

மறுநாள் அதிகாலை கபிலரை அழைத்துக் கொண்டு பழையன், நீலன் உள்பட பத்துக்கு மேற்பட்டோர் ஆதிமலைக்குப் புறப்பட்டனர்.

“நேற்று முன்தினம் ஊரே புறப்பட்டுப் போய்விட்டது. உங்களை அழைத்துச் செல்லத்தான் நாங்கள் இருந்தோம்” என்று சொல்லிக்கொண்டே பழையன் முன்நடந்து சென்றார். 

இரண்டு பகல் ஓர் இரவு நீடிக்கும் பயணம் அது. பயணம் முழுவதும் கபிலர் கொற்றவைக் கூத்து பற்றித்தான் மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டே வந்தார்.

மற்றவர்கள் கபிலருக்காக வேகம் குறைத்தே நடந்தனர். ஆனாலும் கபிலரால் ஈடுகொடுத்து நடக்க முடியவில்லை. நீலன் அவருக்கு அவ்வப்போது உதவிகள் செய்தான். பாதை சில இடங்களில் மிகக் கடினமாக இருந்தது. சிறு பிசகு ஏற்பட்டாலும் பெரும்பள்ளத்தில் விழும் அபாயம் இருந்தது. விலங்குகளின் தடயங்களைப் பார்த்தபடி அனேக இடங்களைக் கடந்தனர்.  யானைக் கூட்டங்கள் கடந்து செல்லட்டும் என்று சில இடங்களில் பொறுத்திருந்தனர். கிழங்குகளைத் தின்றுவிட்டு, சிறுத்தோடும் சுனைநீர் அருந்தினர்.

பின்கோடை காலமாதலால் செடிகொடிகள் சற்றே துவண்டுபோய்க் கிடந்தன. ஆனாலும் தொலைவு செல்லச் செல்ல காட்டின் உள் அடர்த்தி அதிகமானபடியே இருந்தது. எல்லா மரங்களும் கொடிகளைப்போல ஒன்றை ஒன்று பின்னிக்கிடந்தன. நீலனின் வயதொத்த மூன்று `இளைஞர்கள்’ உடன் வந்துகொண்டிருந்தனர்.

நீண்டு திரும்பும் பாறையைக் கைபிடித்து கடக்கும்போது சற்றே கீழ்ப்பக்கம் குனிந்து பார்த்தார் கபிலர். அந்தக் காட்சியின் அற்புதம் பெரும்பரவசத்தை ஏற்படுத்தியது. அது காரமலையின் உச்சிப்பகுதி. பெரும்மலைச்சரிவு காலுக்குக் கீழ் பரந்துகிடக்கிறது. ஒளியின் தகதகப்பில் இலைகள் சுடரேற்ற, காடே தீப நாக்கால் சீழ்கை அடிப்பதைப்போல இருக்கிறது. நின்ற இடம்விட்டு கபிலரின் கால் நகரவில்லை.

“காட்டின் பேரழகுக்கு ஈடில்லை” என்றார் கபிலர்.

“சரி வாருங்கள்” என்று பக்குவமாய் அவரைக் கைபிடித்து அழைத்தபடி நீலன் சொன்னான், “புலியின் மீசைமயிரின் மீது உட்கார்ந்திருக்கும் சிறு தும்பி போலத்தான் நாம்”, நீலன் பேச்சை முடிப்பதற்குள், முன்னால் நடந்துகொண்டிருந்த இளைஞன் சொன்னான், “பாதையில் மட்டும் கவனம்கொள்ளுங்கள், பார்வையை ஓடவிடாதீர்கள்”.

83p5.jpg

‘அப்படி இருக்கத்தான் விரும்புகிறேன். ஆனால், இந்த அழகில் கரையவில்லை என்றால் நான் கவிஞனா?’ என்று தனக்குள்ளே கேட்டுக்கொண்டார் கபிலர். உச்சியில் இருந்த குறுகலான பாறையைக் கடந்ததும் காரமலையின் பின்புற இறக்கத்தில் இறங்கத் தொடங்கினர்.

கபிலர் கேட்டார்...

“பறம்பு நாட்டின் தலைநகரான எவ்வியூருக்குச் செல்லும் எல்லா பாதைகளும் இதுபோன்ற ஒற்றையடிப் பாதைகள்தானா அல்லது வண்டிகள் செல்லும் சாலைகள் இருக்கின்றனவா?”

“பறம்பு நாடு நானூறுக்கும் மேற்பட்ட ஊர்களைக்கொண்டது. எல்லா ஊரில் இருந்தும் இதுபோன்ற பாதைகள் உண்டு. இதுதவிர எட்டுத்திசை எல்லைகளுக்கும் குதிரைகள் போய்த் திரும்பும் பாதைகள் உண்டு. அதைக் காவல்வீரர்கள் மட்டுமே அறிவர்” - சொல்லிவிட்டு அவன் நீலனைப் பார்த்ததை கபிலர் கவனித்தார்.

அவன் பேச்சைத் தொடர்ந்தான் “வண்டிச்சாலை ஒன்று உண்டு. வட திசையில் இருக்கும் தண்டலை ஆற்றின் கரை வழியாக அது காரமலைக்கு ஏறுகிறது. ஆனால், மலையின் பாதித்தொலைவில் இருக்கும் பள்ளத்தூர் வரைதான் அந்தச் சாலை இருக்கும். அதன் பிறகு இதுபோன்ற ஒற்றையடிப் பாதைதான்.

கடற்கரையில் இருந்து உப்பு கொண்டுவரும் உமணரின் வண்டிகள் பள்ளத்தூர் வரை வரும். அங்கு வந்து உப்பைக் கொடுத்துவிட்டு, மலைப்பொருட்களை வாங்கிக்கொண்டு உமணர் திரும்பிவிடுவர். அங்கு இருந்து பறம்பு நாட்டில் இருக்கும் எல்லா ஊர்களுக்குமான உப்பை பள்ளத்தூரைச் சேர்ந்தவர்கள் பிரித்துக் கொடுத்துவிடுவர்” என்றான்.

நீலன் குறிக்கிட்டுச் சொன்னான், “வெளியில் இருந்து பறம்பு நாட்டுக்குள் வரும் ஒரே பொருள் உப்பு மட்டும்தான்.”

பேசியபடி நடந்துகொண்டிருக்கும்போது மரங்களின் மீது பறவைகள் படபடத்துக் கலைவதுபோல் இருந்தது. மனிதச் சத்தத்தைக் கேட்டு அவை கலைகின்றன என்று நினைத்தார்கள். அடுத்த சில அடிகள் எடுத்து வைப்பதற்குள் பறவைகள் கத்தத் தொடங்கின. ஒன்று இரண்டு பறவைகளின் சத்தம்தான் முதலில் கேட்டது, கணநேரத்துக்குள் மொத்தப் பறவைகளும் காது கிழிவதைப்போல, `க்கீ… க்கீ…க்கீ…’ எனக் கத்தி, இங்கும் அங்கும் அலைமோதின. மரக்கொப்புகள் மோதி இலைகள் சிதறி உதிர்ந்தன. மேலே என்ன நடக்கிறது என்று தெரியாமல், மரக்கொப்புகளை அண்ணாந்து பார்த்தபடி அவர்கள் இருந்தனர். கொப்புக்குள் பறவைகள் அம்பைப்போல காற்றைக் கிழித்துக்கொண்டு பறந்தன. பெரும்பருந்து ஒன்று இவர்களின் தலையை உரசிக்கொண்டு போனது. கூட்டம் மொத்தமும் என்ன எனத் தெரியாமல் முழித்தபோது, திடீரென பழையன் பெரும்குரலெடுத்துக் கத்தினார்...

“காக்காவிரிச்சிடா...”

83p6.jpg

மொத்தக் கூட்டமும் கண்ணிமைக்கும் நேரத்தில் சிதறி பாறைகளின் ஓரம் விழுந்து சரிந்தனர். கரும்பாறையை ஒட்டி கீழே சரிந்து, பாறையோடு பாறையாக ஒண்டினான் நீலன். மற்றவர்கள் இங்கும் அங்குமாக இடுக்குகளில் புதைந்தனர். பாறையின் இடுக்கில் இருந்த நீலன் சட்டெனத் திரும்பிப் பார்த்தான். கபிலர் தன்னந்தனியாக நின்றுகொண்டிருந்தார். அவருக்கு நடப்பது எதுவும் புரியவில்லை. மின்னல் வேகத்தில் கபிலரின் மீது பாய்ந்தான் நீலன். அவர் நிலைகுலைந்து மண்ணில் சரிந்தார். அவரைக் கீழே போட்டு அமுக்கியபடி கிடந்த நீலன், தலையை மட்டும் தூக்கி மேலே பார்த்தான். பறவைகளின் வேகம் மொத்த மரத்தையும் உலுக்கிக்கொண்டிருந்தது. `க்கீ... க்கீ...க்கீ…’ எனக் காடே நடுங்குவதுபோல் ஓசை வந்துகொண்டிருந்தது. புதருக்குள் இருந்த ஒரு பெரும்விலங்கு தாவி வெளியேறியது. பாறை ஓரத்தில் இருந்த மற்ற இரு இளைஞர்களும் நீலனை நோக்கிப் பாய்ந்து புரண்டனர். மண்ணில் சரிந்து குத்தீட்டிகளைக் கையில் பிடித்தபடி அண்ணாந்து மரத்தைப் பார்த்தனர். 

அவர்களின் கண்கள் அலைமோதின. அவர்கள் யாராலும் காக்காவிரிச்சியைப் பார்க்க முடியவில்லை. பாறையோடு பாறையாகக் குத்தவைத்தபடி அமர்ந்திருந்த பழையனின் கண்கள் மட்டும், அதைத் துல்லியமாகப் பார்த்துக்கொண்டிருந்தன. நின்று நிதானமாக அது வேட்டையாடியது. அங்கும் இங்குமாகப் பறவைகளின் உடல் துண்டுதுண்டாகச் சிதறின. ஒரு பெரும்பருந்தின் தலையை, வாள்கொண்டு சீவுவதைப்போல அதன் கூர்மூக்கால் வெட்டி எறிவதை இமைகொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தார் பழையன். துடிக்கும் அதன் கழுத்துக்குள் காக்காவிரிச்சியின் அலகு இருந்தது. அதன் இறக்கைகள் மெள்ள அசைய, காற்றில் பறந்தபடியே அது பருந்தின் ரத்தத்தைக் குடித்துக்கொண்டே சென்றது.  

நீண்ட நேரத்துக்குப் பிறகுதான் கிழவனின் குரல் வெளியே கேட்டது.

“போயிருச்சுடா...”

கீழே கிடந்தவர்கள் மெள்ள எழுந்தார்கள். கிழவன் பார்த்த திசைநோக்கிப் பார்த்தபடி இருந்தன மற்றவர்களின் கண்கள். ஆனால், அவர்கள் கிடந்த இடத்தில் இருந்து அதைப் பார்க்க முடியவில்லை. மரங்களின் அசைவுகளும் பறவைகளின் ஓசையும் கொஞ்சம் கொஞ்சமாகக் குறையத் தொடங்கின.

கபிலர் கையை ஊன்றி மெள்ள எழுந்தார். உடம்பு எங்கும் சிராய்ப்புகள். பாறை ஓரத்திலும் செடிகளுக்குள்ளும் பதுங்கிக் கிடந்தவர்கள் எழுந்து வந்தனர். அவர்களின் கண்கள் இங்கும் அங்குமாக அலைமோதிக்கொண்டுதான் இருந்தன. அது கொன்றுபோட்ட பருந்தின் உடல், சரிவில் இருந்த செடிகளுக்குள் கிடந்தது. ஒருவன் அதை எட்டிப்பார்க்க முயன்றான்.

“அதைப் பார்க்க வேண்டாம்” என்று கத்தினார் பழையன்.

அவன் திரும்பிவிட்டான். கிளைகளின் ஆட்டம் நிற்கவில்லை. பழுத்த இலைகள் உதிர்ந்துகொண்டே இருந்தன.

கபிலர் கேட்டார் “என்ன பெயர் சொன்னீர்கள்?”

பழையன் சொன்னார், “காக்காவிரிச்சி. வெளவால் இனத்தைச் சேர்ந்த ரத்தம் குடிக்கும் பறவை.”

“இதைக் கேள்விதான்பட்டிருக்கிறேன். இன்றுதான் இதன் தாக்குதலைப் பார்க்கிறேன். ஆனாலும் அதைப் பார்க்க முடியவில்லை” என்றான் நீலன்.

83p7.jpg

“அது மரங்களில் இருக்கும் சிறுபறவைகளை வேட்டையாடாது. பாறைகளின் பொந்துகளில் இருக்கும் பருந்து இனங்களைத்தான் வேட்டையாடும். பருந்துகள் வானில் பறந்து இதனிடம் இருந்து தப்பிக்க முடியாது.  அதனால்தான் இந்தப் பருந்து மரங்களுக்குள் நுழைந்து தப்பிக்க இங்கும் அங்குமாக அலைமோதியது. பருந்தின் இந்தக் கூச்சலால் மற்ற பறவைகள் எல்லாம் அலறியடித்தன. இனி உங்களுக்கு எப்போதாவது சந்தேகம் ஏற்பட்டால் மரங்களைப் பார்க்காதீர்கள். பக்கத்தில் இருக்கும் மலைப்பாறைகளை அண்ணாந்து பாருங்கள். பருந்தோ, கழுகோ சிதறிப் பறந்தால் அது காக்காவிரிச்சிதான் என்று முடிவு செய்துகொள்ளுங்கள்” என்று இளைஞர்களுக்குக் குறிப்பு சொன்னார் பழையன்.

“இதற்கு முன்னால் நீங்கள் பார்த்திருக்கிறீர்களா?” என்று பழையனைப் பார்த்துக் கேட்டார் கபிலர்.

“பார்த்திருக்கிறேன். கைக்கெட்டும் தொலைவில் உட்கார்ந்திருந்த என் மனைவியின் பிடறியை தனது அலகால் தட்டிவிட்டுப் பறந்தது. பின்மண்டையில் இருந்து ரத்தம் பீறிட அவள் என் உள்ளங்கையில் சரிந்தபடி செத்துப்போனாள்.”

அதன் பிறகு யாரும் பேசிக்கொள்ளவில்லை. கால்கள் மட்டும் நடந்துகொண்டிருந்தன. ஊர் பழைச்சியின் அறுந்த பின்மண்டை நரம்பு நீலனுக்கு ஞாபகம் இருந்தது.

அப்போது அவன் மிகச் சிறுவனாக இருந்தான். ஆனாலும் பழையன் அழுத கண்ணீர் அவனுள் வற்றாமல் தேங்கியிருந்தது.

நீண்ட நேரத்துக்குப் பிறகு மெளனம் கலைத்து பழையன் சொன்னார், “கொற்றவை விழாவுக்கு முன்னர் பறவைகளின் ரத்தம் காற்றில் தூவப்படுவது நல்ல நிமித்தம்.”

பள்ளத்தில் சரிந்துகொண்டிருக்கும் மனிதனின் கையில் அகப்படும் கொப்புபோல இருந்தது இந்த வார்த்தை. தீமையைக் கணப்பொழுதில் நன்மையாக மாற்றமுடிகிற வல்லமை வார்த்தைகளுக்கு உண்டு. வார்த்தை தரும் ஆறுதலை வேறு எதுவும் தருவது இல்லை. மனிதன் முதிரும்போதுதான் மனங்களைக் கையாளக் கற்றுக்கொள்கிறான். மனம் விழுந்த பின்னர் எழவைக்க எவ்வளவோ வழிகள் இருக்கின்றன. ஆனால், வீழ்ந்து கொண்டிருக்கும்போது தடுத்து நிறுத்துவதுதான் மிக முக்கியம். வாழ்வின் சாரமேறிக் கிடக்கும் அனுபவ அறிவால்தான் அதைச் செய்ய முடியும். அதிர்ச்சி குலையாமல் இருக்கும் இந்தக் கணத்தில் பழையனின் வார்த்தைகள், அடர் காட்டுக்குள் துணிந்து கால்களை முன்நகர்த்தும் மனதைரியத்தைக் கொடுத்தன. 

ஆனாலும் தயக்கத்தை உடைக்கவேண்டி யிருந்தது. யார் முகத்தையும் பார்த்து பழையன் இந்த முடிவுக்கு வரவில்லை. உறைந்த மெளனமே எல்லாவற்றையும் சொன்னது. பின்திரும்பாமலே பழையன் சொன்னார்...
“மின்னலைப்போல வாளை வீசி காக்காவிரிச்சியின் இறக்கைகளை வெட்டித் தள்ளியவன் வேள்பாரி.”

வார்த்தைகள், முதுகுத்தண்டை முறுக்கேற்றும் வல்லமைகொண்டவை என்பதை கபிலர் உணர்ந்த தருணம் அது. உள்ளுக்குள் உறைந்து கிடந்த அதிர்ச்சியை கிழவன் பொடிப்பொடியாக் கினான். எல்லோருக்குள்ளும் ஆவேசமிக்க ஆர்வத்தைத் தூண்டினான். பாரி வாள் சுழற்றிய கணத்தில் சரிந்த காக்காவிரிச்சியின் இடப்புற இறக்கையைப் பற்றி, காதுநரம்பு விடைக்கச் சொல்லிக்கொண்டு நடந்தான் பழையன். கபிலரின் கண்களுக்கு முன்னர் ஒரு வீரக் கதை அரங்கேறிக்கொண்டிருந்தது. 

- பாரி வருவான்...

http://www.vikatan.com/anandavikatan

Link to comment
Share on other sites

வீரயுக நாயகன் வேள் பாரி - 7

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
 

சு.வெங்கடேசன் - ஓவியங்கள்: ம.செ.

 

83p1.jpg

ருட்டும்போது, நடுமலையின் மேற்குத் திசை அடிவாரத்தில் இருந்து புலிவால் குகைக்கு வந்து சேர்ந்தார்கள். இவர்கள் வரும் முன்னரே அந்தக் குகையில் பலர் இருந்தனர். எல்லோரும் கொற்றவைக் கூத்து பார்க்க, பறம்பு நாட்டின் வெவ்வேறு ஊர்களில் இருந்து வந்தவர்கள். புலிவால் குகை, மிக நீளமானது. எத்தனை பேர் வேண்டுமானாலும் படுத்துறங்கிப் போகலாம். அதன் கீழ் மூலையில் கொடுங்கோடையிலும் வற்றாத நீரூற்று உண்டு. முன்னால் வந்தவர்கள், பந்தத்தைப் பொறுத்திவைத்திருந்தனர். ஏந்திவந்த ஆயுதங்கள் ஓர் ஓரத்தில் சாய்த்துவைக்கப்பட்டிருந்தன. வேட்டூர் பழையனைப் பார்த்ததும் எல்லோருக்கும் பெருமகிழ்ச்சி. ஆசையோடு வந்து பேசினர். வயோதிகத்திலும் தளர்ந்துவிடாத பழையனைப் பற்றி பேச எவ்வளவோ இருக்கின்றன!

ஆணும் பெண்ணுமாக, பெருங்கூட்டம் கூடியிருந்தது. தாங்கள் கொண்டுவந்த உணவுகளைப் பறிமாறிக்கொண்டனர். அவித்த பன்றிக்கறியை உப்பு போட்டுப் பிசைந்து, பெருங்கூடையில் தூக்கி வந்திருந்தது ஒரு கூட்டம். மூன்று மலைகளை ஏறி இறங்கியவர்களின் பசியை அதுதான் தாங்கும். விரல்களுக்கு இடையில் பன்றியின் ஊண் ஒழுகக் கடித்து இழுத்தனர்.

மிகவும் களைத்துப்போயிருந்த கபிலருக்கு, பனையோலை நிறையத் துண்டங்களை எடுத்துவந்து நீலன் கொடுத்தான். உப்புக்கறியின் சுவை மிகவும் பிடித்திருந்தது. விரும்பிச் சாப்பிட்டார் கபிலர். இன்னும் சாப்பிட வேண்டும்போல் இருந்தது. அரை இருட்டில் நீலனை அடையாளம் காண முடியவில்லை. மற்றவர்களுக்கு எடுத்துக் கொடுத்துக்கொண்டிருப்பான். சத்தம்போட்டு அவனை அழைக்கத் தயங்கியபடி இருந்தார் கபிலர். பச்சிளங்குழந்தை ஒன்று, பசித்து அழுதது. அப்போதுதான் கை நிறையக் கறித்துண்டங்களை வாங்கிய அந்தத் தாய், அப்படியே பக்கத்தில் இருந்த கபிலரின் கையில் அவற்றைக் கொடுத்துவிட்டு, சேலைத்துணியில் கையைத் துடைத்தபடியே ஓடிப்போய், மூலையில் தோல்விரித்துப் படுக்கப்போட்டிருந்த குழந்தையைத் தூக்கி பால் கொடுத்தாள்.

கபிலர், கையில் கறித்துண்டங்களோடு உட்கார்ந்திருந்தார். அவள் மறுமுலை தாங்கி குழந்தையை அணைத்தாள். அது வயிறு நிறைந்ததும் உதடு பிதுக்கி மறுத்தது. அதை மீண்டும் படுக்கப்போட்டு, அழகிய சிரிப்போடு கன்னத்தைத் தொட்டுக் கொஞ்சிவிட்டு எழுந்தாள். இந்தக் கூட்டத்தில் யாரிடம் கறித்துண்டங்களைக் கொடுத்தோம் என்பது அவளுக்கு நினைவில் இல்லை. எல்லோரும் கறியைக் கடித்து இழுத்துக்கொண்டிருந்தனர். பனங்கூடையின் அருகில் போனாள். கறி தீர்ந்துவிட்டது. அவள் மிகவும் சோர்ந்துபோனாள். அந்த அரை இருட்டில், அவளின் தவிப்பு யார் கண்ணிலும்படாமல் இருந்தது. சற்றே கலங்கியபடி அவள் திரும்பும்போது, “மகளே... உனக்கான உணவு எனது கையில் இருக்கிறது” என்றது கபிலரின் குரல்.

அவள், குரல் கேட்ட இடம் நோக்கி வந்தாள். கை தாழ்த்தாமல் அப்படியே பிடித்திருந்தார் கபிலர். வாங்கிய அவள், கனிந்த சிரிப்பில் நன்றி சொல்லியபடி கறித்துண்டங்களைக் கடித்தாள்.

“கடும் பசி. சுவை வேறு இழுத்தது. கையில் இருப்பதில் ஒரு துண்டையாவது சாப்பிடலாமா என, பலமுறை தோன்றியது. ஆனால் கைநிறையக் கறித்துண்டங்களை வாங்கிய நீ, குழந்தையின் குரல் கேட்ட கணத்தில் மொத்தத்தையும் உதறிவிட்டு ஓடினாயே! தாய்மைக்கு முன்பு ஆண்களாகிய நாங்கள் அற்பப்புழுவம்மா” என்றார் கபிலர்.

83p2.jpg

“பெரிய சொல் சொல்கிறீர்கள். இருட்டில் உங்களின் முகம் தெரியவில்லை. ஆனாலும் தந்தையை முகத்தைப் பார்த்துதான் அடையாளம் காண வேண்டுமா என்ன?” - சாப்பிட்டுக்கொண்டே பேசினாள்.

ஈச்சமதுவுக்கு வறுத்த கறிதான் சரியான ஈடு. ஆனாலும் வெப்பத்தை அடைகாத்திருக்கும் கற்குகைக்குள் உப்புக்கறித்துண்டுகள் எல்லாவற்றையும் விஞ்சும். அலுப்புத்தீர எடுத்து முடித்தது அந்தக் கூட்டம். வலி பொறுக்க இன்னொரு குவளையும் சேர்த்துக் கொடுத்தான் நீலன். குடித்த கபிலர், ஓர் ஓரமாகப் படுத்துச் சமாளிப்போம் என முயற்சி செய்தார்.

எத்தனை ஆண்டுகள் காட்டில் வாழ்ந்தாலும், ஒவ்வொரு நாளும் புதுப்புது அனுபவத்தைத் தரவல்லது காடு. அன்றைய அனுபவத்தின் கதை காக்காவிரிச்சியைப் பற்றியதாக இருந்தது. இளம்வயது, எந்த விலங்கையும் வீழ்த்தும் துணிவோடு வேல்கம்பைத் தூக்கி நிற்கும். வயோதிகம், எவ்வளவு கொடும்விலங்கிடம் இருந்தும், எளிதில் தப்பிக்கும் வித்தையைக் கக்கத்தில் வைத்துக் காத்திருக்கும். பழையனின் கம்புக்கூட்டுக்குள், அவன் மரணத்தை வென்ற பல கதைகள் இடுக்கிக் கிடந்தன. அதில் இன்னொன்றாக இன்றைய கதையும் சேர்ந்துகொண்டது.

கபிலர், தூக்கமின்றி எழுந்து உட்கார்ந்தார். தாகம் எடுத்தது. `சுனை நோக்கிப் போகலாம்!' என நினைத்து எழுந்தார். அதைப் பார்த்த நீலன், உடன் வந்து அவரை அழைத்துச் சென்றான்.

“மடிப்புப் பாறைகள், கால்களைக் கவனமாகத் தூக்கிவையுங்கள்” என்றான். அவர் பதில் ஏதும் சொல்லாமல் தலையாட்டியபடி வலது கையை மெள்ள உயர்த்தி, நீலனின் தோள்பட்டையைப் பிடித்தார். அவரது கையின் உள்நடுக்கத்தை நீலனால் உணர முடிந்தது. பந்த  வெளிச்சத்தைவிட்டு விலகி, நீரின் சத்தத்தை நோக்கி அவர்கள் நடந்தனர்.
 
“நான் உங்களை எதிர்பாராமல் கீழே தள்ளியதால் உடல் முழுவதும் காயம் ஏற்பட்டுவிட்டது. என்னை மன்னியுங்கள்” என்றான் நீலன்.

``எனது உயிரைக் காப்பாற்றிய உனக்கு, நான் அல்லவா நன்றி சொல்ல வேண்டும்” என்றார் கபிலர்.

“உங்களின் உயிருக்கு எந்தவித ஆபத்தும் ஏற்பட்டிருக்காது!” என்று நீலன் சொல்லிக் கொண்டிருக்கும்போது குறுக்கிட்ட கபிலர், “முதலில் அது என்னைத்தான் நேர்கொண்டு பார்த்தது.”

நீலன் அதிர்ச்சியடைந்தான்.

“அதை நீங்கள் பார்த்தீர்களா?”

“ஆம், கருவேங்கை போல… மரக்கொப்புகளில் தாவி உட்காரும் ஏதோ ஒரு விலங்கு என்றுதான் நினைத்தேன். இறக்கைகளை விரித்த பிறகுதான் அது பறவை எனப் புரிந்தது. நீ என்னைக் கீழே தள்ளியபோதுதான், நம்மைக் கடந்துபோன பருந்தை அது அடித்தது. பழையன் முன்னால் இருந்ததைத்தான் பார்த்தார். வந்தது ஒன்று அல்ல, இரண்டு.”

நீலன் நடுக்கமுற்றான்.

“எங்களின் கண்களுக்கு மட்டும் எப்படி அது தெரியாமல்போனது?”

“அதைப் பற்றி நீங்கள் அறிந்திருந்ததால், அதனிடம் இருந்து தப்பிக்கவே முதலில் முயன்றீர்கள். நீங்கள் பதுங்க இடம் தேடிப் பாய்ந்தபோது என்ன நடக்கிறது என்று தெரியாமல் நின்றுகொண்டிருந்த நான், அண்ணாந்து பார்த்து அதைக் கண்டறிந்தேன். இவை எல்லாம் அறியாமை ஏற்படுத்திக்கொடுக்கும் வாய்ப்புகள்; அறிந்தவர்களுக்குக் கிடைக்காது.”

நீலனுக்கு அவர் சொல்லவருவது புரியவில்லை. விளக்கமாகக் கேட்பதற்குள் நீரூற்றை அடைந்தனர். கபிலர் குனிந்து இரு கைகளாலும் நீரை அள்ளினார். நீரின் குளிர்ச்சி, உடல் முழுவதும் பரவியது. நீலன், முகத்தை நீரால் அடித்து மயக்கம் கலைத்தான்.

“ஆதிமலையின் வடமேற்கு மூலை, மிகவும் செங்குத்தான பாறைகளும் அடர்ந்த மரங்களும் நிறைந்த பகுதி. அதை `ஆளிக்காடு' என்று நாங்கள் சொல்வோம். அங்கே இரு கடவுகள் உண்டு. ஆதிகால மாந்தர் அவற்றைப் பயன்படுத்தினராம். அந்தக் குத்துப்பாறைகளுக்கு இடையில்தான் காக்காவிரிச்சிகள் தங்குவதாகச் சொல்வார்கள். அந்தத் திசையில் மலையைவிட்டு மிகத் தள்ளி குட்டநாட்டு எல்லை தொடங்குகிறது” என்றான் நீலன்.

83p3.jpg

“காக்காவிரிச்சி பற்றி நீண்டகாலமாகவே மலைமக்கள் அறிவார்களா?” என்று கேட்டார் கபிலர்.

“ஆதிகாலத்தில் இருந்தே அதைப் பற்றிய கதைகள் உண்டு. ஆனால், அதைப் பார்த்தவர்கள் மிகச் சிலரே. இப்போது பறம்புநாட்டில் உயிரோடு இருப்பவர்களில் அதைப் பார்த்தவர்கள் பத்துபேர்தான் இருக்கும்”
“இப்படி ஒரு பறவையைப் பற்றி சமவெளியில் வாழும் மக்களுக்கு எதுவும் தெரியவில்லையே. நாடு எல்லாம் சுற்றும் எனக்கே இன்றுதான் இப்படி ஒரு பறவை இருப்பது தெரியும்.”

“காட்டில் நமக்குத் தெரியாதவை எத்தனையோ உண்டு. நாம் ஆச்சர்யப்பட ஆரம்பித்தால், அதற்கு எல்லையே கிடையாது.”

பேசியபடியே குகைக்குள் நுழைந்தனர். சிறிது நேரத்தில் கபிலர் படுக்கப்போனார். உடல் எங்கும் வலி திரண்டிருந்தது. எந்தப் பக்கம் திரும்பிப் படுத்தாலும் வலித்தது. வேறு வழியின்றி சமாளித்துக்கொண்டு படுத்தார்.
வேட்டூர் கூட்டத்தோடு வந்திருக்கும் புதிய மனிதரைப் பற்றி நள்ளிரவுக்குப் பின் பேச்சுத் தொடங்கியது.

“எழுத்து கற்ற புலவர் என்று சொன்னார். பாரியைப் பார்க்கவேண்டுமாம். அழைத்து வருகிறோம்” என்றார் பழையன்.

அப்போதுதான் ஆழ்ந்த உறக்கத்துக்குப்போன கபிலருக்கு, தன்னைப் பற்றி பேசுவது காதில் அரைகுறையாகக் கேட்டது. தொலைவில் படுத்துக்கிடந்த இன்னொருவர் கேட்ட கேள்வி காதில் சரியாக விழவில்லை. அதற்கு பழையன் பதில் சொன்னார் “ஒற்றனுக்கு உரிய திறன் எதுவும் அவரிடம் இல்லை.”

கபிலருக்கு கேள்வி விளங்கியது.

“அப்படி நம்பவைப்பதுதானே சிறந்த ஒற்றனின் தகுதி” என்றது இன்னொரு குரல்.

பழையனின் பேச்சை மடக்கிப் பேசுவது யார் என, குரல் வந்த திசையை எல்லோரும் பார்த்தனர். இருட்டுக்குள் இருந்த அந்த மனிதனை மற்றவர்கள் பார்த்து அறியும் முன் குரல் கேட்டே பழையன் கேட்டார்...
“வந்திருப்பது கூழையனா?”

“கிழவா... கண்ணும் காதும் அப்படியே இருக்கடா உனக்கு” - அருகில் வந்து பழையனைக் கட்டி அணைத்தான் பறம்புநாட்டு தென்பகுதி எல்லைக்காவலன் கூழையன். உயரத்தில் மிகக் குள்ளனாக இருந்தாலும், வீரத்திலும் பலத்திலும் யாராலும் விஞ்ச முடியாதவன் என பெயர் எடுத்தவன்.

படுத்துறங்கும் கபிலரைவிட்டு இருவரும் சற்று தூரம் நகர்ந்தனர்.

“காலம் மாறிவிட்டது கிழவா. எண்ணற்றக் குலங்களை அழித்து வலுக்கொண்டிருக்கின்றனர் வேந்தர் மூவரும். எல்லோரின் கண்களுக்கும் உறுத்தலாக இருப்பது பாரிதான். பறம்பின் செல்வத்தைச் சூறையாட பாரியே தடை எனக் கருதுகின்றனர். மூவரும் தனித்தனியாக எத்தனையோ திட்டங்களைத் தீட்டுகின்றனர். ஒற்றர் படை இல்லாத நம் காதுகளுக்கே இவ்வளவு செய்திகள் வந்து சேர்கின்றன. அப்படியென்றால், எவ்வளவு திட்டங்கள் தீட்டப்படுகின்றன என்பதை எண்ணிப்பார்.”

“ஆகட்டும்... அவர்கள் என்ன திட்டம் தீட்டினாலும் நம்மை ஒன்றும் செய்ய முடியாது” - கிழவனின் நம்பிக்கையின் மீது அச்சத்தை ஏற்றும் வல்லமை, கூழையனுக்கு இல்லை. ஆனாலும், காலமாற்றத்தை பழையனுக்கு உணர்த்த வேண்டும் என்று விரும்பினான்.

``உங்களின் காலம் அல்ல இது. சேரனின் மிளகைப் பின் தள்ளி, வணிகத்தில் முன்னேறிக் கொண்டிருக்கின்றன கொற்கை முத்துக்கள். யவன வணிகத்தில் தனக்கு இருக்கும் முதல் இடத்தைத் தக்கவைக்க உதியஞ்சேரல் எதையும் செய்வான். மிளகுச்செடி தழைத்துச் செழிக்கும் எண்ணற்றக் குன்றுகள் நம்மிடம் உண்டு. அதுமட்டும் அல்ல, ஏற்கெனவே பறம்பு நாட்டிடம் அடைந்த தோல்விக்குப் பழிவாங்க வேண்டும் என்ற வெறியோடு இருக்கிறான். இதுபற்றி பாரியிடம் பேசிவிட்டுத்தான் திரும்புகிறேன்.”

“என்ன சொல்கிறாய், நீ கொற்றவைக் கூத்தில் பங்கெடுக்கவில்லையா?”

“இல்லை கிழவா. எல்லைக்குத் திரும்பியாக வேண்டும்.”

“கொற்றவைக் கூத்தில் பங்கெடுக்காமல் திரும்பும் அளவுக்கு நிலைமை மோசமாக உள்ளதா?”

“நீங்கள் நம்ப மாட்டீர்கள். ஆனால், உண்மை அதுதான்.”

கிழவன் குறுகுறுவென கூழையனையே பார்த்தான்.

``எதை வைத்துச் சொல்கிறாய்?”

“எல்லைப்புற ஊர்களில் புதிய மனிதர்கள் நடமாடுகின்றனர். நாம் அறியாத வேட்டை நாய்கள் காடுகளுக்குள் அலைகின்றன. பள்ளத்தூருக்கு வரும் உப்பு வணிகர் முன்புபோல் உடனுக்குடன் புறப்படுவது இல்லை. தேவைக்கு அதிகமாகத் தங்கிவிட்டுப் போகின்றனர். பறம்பு நாட்டுக்கு வந்த எந்த ஒரு பாணர் குழுவும் கடந்த ஆண்டில் ஒருமுறைகூட, வரும் வழியில் உள்ள முல்லை நிலக் காடுகளில் கொள்ளையர்களிடம் அகப்படவில்லை. இவை எல்லாம் நமது ஐயத்தை வலுப்படுத்தவே செய்கின்றன.”

“கொள்ளையரிடம் சிக்காமல் இருப்பதற்கும் இதற்கும் என்ன தொடர்பு இருக்கிறது?”

“காடுகளில் வேந்தர்களின் படைகள் நிலைகொண்டுள்ளன எனப் பொருள். படைகள் இருக்கும் காடுகளில் கொள்ளையர் இருக்க மாட்டார் அல்லவா! நம்மை, பலரும் நெருங்கியுள்ளனர். வழக்கத்துக்கு அதிகமாக இந்த ஆண்டு அதிக விருந்தினர் வந்துள்ளனர். போருக்கு முன்னர் விருந்தினரின் எண்ணிக்கை பெருகும் எனக் கேள்விப்பட்டது இல்லையா?”

“அதற்காக, விருந்தினரை எல்லாம் சந்தேகப்பட முடியுமா?”

“சந்தேகப்பட முடியாது. ஆனால், கண்டறிய முடியும். அதற்கான எந்த முயற்சியும் செய்யாமல்தான் நீங்கள் இவரை அழைத்துக்கொண்டு போகிறீர்கள்.”

“என்ன செய்திருக்க வேண்டும்?”

“பாணருக்குத்தான் வறுமை காரணமாக பரிசல் பெறவேண்டிய தேவை இருக்கிறது. புலவனுக்கு இங்கு என்ன வேலை? எழுத்து கற்றவனுக்கு உதவத்தான் மூவேந்தரும் போட்டிபோடுகின்றனரே! அவரிடம் கிடைக்காத பொன்னா... பொருளா? அப்படியிருக்க, இவ்வளவு கடினமான ஒரு மலைப்பயணத்தைச் செய்யவேண்டிய தேவை என்ன? இவை எல்லாவற்றையும் பற்றிகூட நீ அவரிடம் பேசாமல் இருந்திருக்கலாம். ஆனால், தனித்த தேரில் வந்து இறங்கி காட்டுக்குள் நுழைந்திருக்கிறார். இறக்கிவிட்டுப் போனது யாருடைய தேர்? தேரில் வந்து இறங்கும் வளம்கொண்டவன், காட்டின் கடுமையை அனுபவிப்பது எதனால்?”

பழையனின் கண்கள் நீலனைத் தேடின. அவன் கூழையனுக்குப் பின்னால் நின்றிருந்தான்.

“ஆகட்டும்... நாளை காலையில் அவரிடம் பேச்சுக்கொடுத்துப் பார்க்கிறேன்” என்றார் பழையன்.

கூழையனின் முகத்தில் சிரிப்புப் படர்ந்தது.

“ஏன் சிரிக்கிறாய்?” என்று கேட்டார் பழையன்.

83p41.jpg

“நம்பிய பிறகு ஒருவனைச் சந்தேகப்படுவது எளிது அல்ல. அதுவும் உன்னால் உறுதியாக முடியாது. நானே காலையில் அவருடன் பேசுகிறேன். உங்களோடு அனுப்பிவைப்பதா, என்னோடு அழைத்துச் செல்வதா என்பதை அவர் அளிக்கும் பதில்கள் முடிவுசெய்யட்டும்” என்றான் கூழையன்.

பழையனும் நீலனும் அதன் பிறகு பேசிக்கொள்ளவில்லை. நீலன், திசைக்காவல் வீரன்; கூழையனின் உத்தரவுக்குக் கட்டுப்பட்டவன். நிச்சயமாக அவனுக்கு அதிகமான வசவு கிடைத்திருக்கும் என்பது பழையனுக்குத் தெரியும். வீரர்களின் கட்டளை ஒழுங்குகளில் பழையனுக்கு எப்போதும் நம்பிக்கை இல்லை. ஒரு மனிதனின் முகத்தையும் சொல்லையும் பார்த்துக் கணிக்க முடியாதது எதுவும் இல்லை என்று நம்புகிறவர் பழையன். ‘காடு, மிகவும் தூய்மையான இடம் மட்டும் அல்ல; மனித இதயத்துக்கு மிக நெருக்கமான இடமும்கூட. ஒருவனுக்குள் இருக்கும் உண்மைகளை எளிதில் உதிர்க்கச் செய்யும் ஆற்றல் காட்டுக்கு உண்டு. காட்டின் ஊடே பயணப்படும் ஒருவனால் கபடத்தனத்தை மறைத்து இவ்வளவு தொலைவு எடுத்து வர முடியாது. இதை உணர முடியாத அளவுக்கு கூழையனைப் பதற்றம் தொற்றியுள்ளது. காலையில் என்னதான் நடக்கிறது பார்ப்போம், என்ற முடிவோடு தலை சாய்த்தான் பழையன்.

காலையில் பறவைகளின் ஒலியால் காடு நிரம்பி இருந்தது. கபிலரின் தூக்கம் கலைந்தது. உடல் முறுக்கி எழுந்தார். முடிச்சுகள் பிரிவதைப்போல தசைநார்கள் பிரிந்து அவிழ்ந்தன. வலி இலகுவாகிறதா...விட்டுப்பிடிக்கிறதா எனத் தெரியவில்லை. இரவு முழுவதும் கேட்டுக்கொண்டேயிருந்த பேச்சுச் சத்தம் எதுவும் இப்போது இல்லை. மெள்ள கண்கள் விழித்துப் பார்த்தார். குகைக்குள் யாரும் இருப்பதுபோலத் தெரியவில்லை. ‘அதிகாலையிலே எழுந்து போய்விட்டனரா! மற்றவர் போயிருந்தாலும் அழைத்துச் செல்ல நீலன் இருப்பானே, எங்கே அவனைக் காணோம்' என்று நினைத்தபடியே எழுந்து உட்கார்ந்தார்.

குகை முகப்பின் வழியே சூரிய ஒளி பாய்ந்து வந்துகொண்டிருந்தது. அப்போது ஓரத்தில் இருந்த பாறையின் மீது ஒருவர் உட்கார்ந்திருப்பது தெரிந்தது. கண்களைக் கசக்கிக்கொண்டு பார்த்தார் கபிலர். முகம் தெரியவில்லை. நெடு உயரம். திரண்டு விரிந்திருந்த தோள்கள், உடல் அமைப்பின் கம்பீரத்தைச் சொல்லின.

கபிலர் எழுந்துவிட்டதைப் பார்த்த அந்த மனிதர், முன்னோக்கி நடந்துவந்தார். முழு சூரியனையும் அவரது முதுகு அடைத்திருக்க, பின்புறம் இருந்து சூரிய ஒளி பீச்சியடித்துக் கொண்டிருந்தது. தோள்பட்டையில் விழுந்து சுருண்டிருக்கும் தலைமுடியின் வழியே பாய்ந்துவரும் ஒளி மேல்படர, கபிலர் கையூன்றி எழுந்தார். மஞ்சள் ஒளியால் கண்கள் கூசின. ஆனாலும் காட்சியின் அபூர்வம் அவரை இமை கொட்டாமல் பார்க்கவைத்தது.

குகைக்கு முன்புறம் இருந்த மலைச்சரிவில் மொத்தக் கூட்டமும் நின்றுகொண்டிருப்பது அரைகுறையாகத் தெரிந்தது. எட்டிப்பார்க்கும் போது முன்நகர்ந்து வருபவரின் குரல் குகை எங்கும் ஒலித்தது.

“முதல் நாளே கால் தசை பிறண்டுவிட்டது. நாக்கறுத்தான் புற்கள் உடல் எங்கும் கீறியுள்ளன. காக்காவிரிச்சி நிலைகுலையவைத்துள்ளது. நீலன், எதிர்பாராமல் தூக்கி அடித்திருக்கிறான். இவ்வளவு தாக்குதல்களையும் வலியையும் தாங்கியபடி விடாமல் மலைகள் கடந்து வந்திருக்கிறீர்களே, இனியாவது உங்களை எனது தோளிலே தூக்கிச்செல்ல அனுமதிப்பீர்களா?”

திகைப்பில் இருந்து மீளாத கபிலர், நெருங்கிவரும் அந்த மாமனிதனைப் பார்த்துக் கேட்டார், “நீங்கள் யார்?”

``வேள்பாரி!’’

- பாரி வருவான்...

http://www.vikatan.com

Link to comment
Share on other sites

வீரயுக நாயகன் வேள்பாரி - 8

 
இத்தொடரின் மற்ற பாகங்கள்:
 

சு.வெங்கடேசன் - ஓவியங்கள்: ம.செ.

 

83p1.jpg

டுத்து வந்த நாட்களில், எவ்வியூரில் நிகழ்ந்த கொண்டாட்டங்களை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை. திரும்பும் திசைகள் எல்லாம் ஆட்டமும் பாட்டும் கூத்துமாக, காடே கலகலவென இருந்தது. கபிலரின் வரவு பெரும் விழாவானது. பாரியின் பீறிடும் அன்பை வெளிக்காட்ட வடிவங்கள் ஏது? கொண்டாட்டங்கள்... கொண்டாட்டங்கள்...கொண்டாட்டங்கள்!

`கபிலரைத் தோளிலே சுமந்து வந்தான் பாரி' என்ற செய்தி, நாடு எங்கும் பரவியது. கபிலர் யார் என, பறம்பு மக்களுக்கு நேற்று வரை தெரியாது. ஆனால், தங்களின் தலைவன் தோளிலே சுமந்த ஒரு மாமனிதனைப் பற்றித்தான் இப்போது காடு எங்கும் பேச்சு.

ஒரே நாளில் கபிலர், காட்டின் கதையாக மாறினார். அவரை அழைத்து வந்த நீலனும் வேட்டூர் பழையனும் இப்போது எல்லோராலும் தேடப்படும் மனிதராக இருக்கின்றனர். வேட்டுவன் குன்றில் கால் பதித்ததில் இருந்து, எவ்வியூருக்குள் நுழையும் வரையிலான கபிலரின் ஒவ்வோர் அடியும் இப்போது பழையனின் கதைக்குள் மிதந்துகொண்டிருக்கின்றன.

தனது வீரத்தால் பேர் எடுத்த நீலனின் புகழ், கபிலரால் இன்னும் உச்சத்துக்குப்போனது. எந்நேரமும் இளம்பெண்கள் சூழ இருக்கும் நீலனைக் கண்டு, அவனது நண்பர்கள் சற்றே பொறாமைகொள்கின்றனர். காலிலே தசைப்பிடிப்பு ஏற்பட்டவுடன் திருப்பி அனுப்பாமல் அழைத்து வந்த நீலனைக் கட்டி அணைத்தான் பாரி.

`கண நேரத்துக்குள் அவருக்குத் தனைமயக்கி மூலிகை கொடுக்க வேண்டும் என நீ துணிந்ததுதான் மிக முக்கியம். சிறந்த வீரனால் மட்டுமே அந்நிலையில் நாகக் கிடங்குக்குள் நுழைய முடியும்' - பாரி சொன்ன சொற்களை இப்போது எல்லோரும் சொல்கின்றனர்.

கொற்றவை விழா தொடங்க ஒரு வார காலம் இருக்க, இப்போது கபிலருக்கான விழா தொடங்கியது. “கபிலரின் வருகை, காட்டின் திருவிழா” என்று பாரி சொன்ன சொல்லில் இருந்து அது தொடங்கியது. காட்டின் விழா என்றால், அதன் முதல் வெளிப்பாடு வேட்டைதான். பெரும் உற்சாகத்தோடு பல குழுக்கள் வேட்டைக்குப் புறப்பட்டுப் போகும். சொல்லிவைத்த பொழுதுக்குள் ஊர்வந்து சேர வேண்டும். வேட்டையில் சிக்கும் முக்கியமான விலங்கு எதுவோ, அதுதான் அன்றைய விருந்தைத் தீர்மானிக்கும்.

ஒவ்வொரு விலங்கின் ருசிக்கும் ஏற்ற மதுவகை உண்டு. மதுவின் தன்மைக்கு ஏற்றபடியே இசை முழங்கும். இசைக்கு ஏற்பவே ஆட்டம். அன்றைய ஆட்டத்தின் ஆரம்பம் வேட்டையாடப்படும் விலங்கில் இருந்தே தொடங்குகிறது. அது மானாட்டமா, மயிலாட்டமா, மிளா கூத்தா, காட்டு எருமையின் கொம்பாட்டமா என்பது மதுவோடும் உணவோடும் இசையோடும் ஆட்டத்தோடும் கலந்தது.

83p21.jpg

மான்கறிக்கு ஈச்சங்கள் எடுபடாது. பறவைகளின் கறிக்கு தென்னங்கள் பொருந்தாது. ஈனா கெடாரிக்கு மூன்றாம் நாள் பனங்கள்தான் சிறந்தது. அத்தி மதுவுக்கும் அறுபதாங்கோழியின் கறிக்கும் ஈடு இவ்வுலகில் கிடையாது. `அறுபதாங்கோழி அகப்படாதா!' என ஏக்கத்தோடு இருந்தான் பாரி. `வேட்டைக்குப் போன ஒரு குழுவாவது அறுபதாங்கோழியைப் பிடித்துவரும்' என, மூன்று நாட்களாக பாரி ஆசையோடு காத்திருக்கிறான். கபிலர் எனும் பெரும்புலவர் வந்திருக்கிறார். அந்த வருகையைக் கொண்டாட அறுபதாங்கோழியே பொருத்தமானது. பாரியின் ஆசை இன்றாவது நிறைவேற வேண்டும் என, எவ்வியூரில் இருக்கும் ஒவ்வொருவரும் ஆசைப்படுகின்றனர். முதல் நாளும் கிடைக்கவில்லை, அடுத்த நாளும் கிடைக்கவில்லை. இந்தச் செய்தி எங்கும் பரவ, பறம்பு நாட்டில் இருக்கும் எல்லா ஊர்களும் காட்டுக்குள் அறுபதாங்கோழியைத் தேடி தினமும் அலைகின்றன.

`காட்டின் பிரமாண்டத் துக்குள் சின்னஞ்சிறு கோழியைக் கண்டுபிடிப்பது என்ன சாதாரணச் செயலா? அறுபதாங்கோழி, தான் பிடிபடுவதை அதுதான் முடிவுசெய்யும்' என்பார்கள். பாரி, அதன்மீதுதான் நம்பிக்கைகொண்டிருக்கிறான். “எனக்காகவா கேட்கிறேன்? கபிலருக்காக அது இந்நேரம் வந்து அகப்பட்டிருக்க வேண்டாமா!” என்று எல்லோரிடமும் சொல்லிக் கொண்டிருக்கிறான். ஒரு குழந்தையைப்போல அடம்பிடிக்கும் பாரியின் ஆசையை நிறைவேற்ற, ஒவ்வொருவரும் துடியாகத் துடிக்கின்றனர். “இந்நேரம் ஆயிரம் யானைகளைக்கூட ஓட்டிவந்திருக்கலாம். ஆனால், காட்டுக்குள் கோழி பிடிப்பது எளிதான செயலா? இது பாரிக்கு ஏன் புரியவில்லை? பச்சிளம் பிள்ளையைப்போல அடம்பிடிக்கிறானே!'' என்று புலம்பியபடியே காட்டின் இண்டு இடுக்கு எல்லாம் நுழைந்து தேடுகின்றனர் பறம்பு மக்கள். விவரம் தெரிந்தவர்கள், புலிகளின் நடமாட்டப் பகுதியை நோக்கிப் போய்க்கொண்டிருக்கின்றனர்.

கபிலர் திகைத்துப்போய் இருந்தார். ஒவ்வொரு நாளும் பெரும் விருந்துகளோடுதான் தொடங்குகிறது. மறுநாள் அதைவிடச் சிறந்த விருந்து அரங்கேறுகிறது. அவர் யவனத்தேறலை பாண்டியக் கிழவனோடு உட்கார்ந்து நாட்கணக்கில் குடித்திருக்கிறார். சேரனோடு பெருவிருந்து உண்டு மகிழ்ந்திருக்கிறார். ரசனையில் சோழனே சிறந்தவன் எனக் கருதுபவர் கபிலர். அவனது உபசரிப்பும் ஏற்பாடுகளும் அவ்வளவு எழில் வாய்ந்தவையாக இருக்கும். அவை எல்லாம் அதிகாரத்தாலும் ஆடம்பரத்தாலும் நடப்பவை; செல்வத்தின் திளைப்பில் நடப்பவை. ஆனால், இங்கு நடப்பது முற்றிலும் வேறானது. பாவனைகளும் அலங்காரமும் படியாத மானுட அன்பின் தூய வடிவம். அதே தூய்மையுடன் இருக்கும் ஒருவனால்தான் இதை அனுபவிக்க முடியும்.

மனதின் ஓரத்தில் இருக்கும் அழுக்குகூட நம்மை வெட்கித் தலைகுனியச் செய்யும் அளவுக்கு உக்கிரம் ஏறிய பேரன்பு இது. கபிலர் திணறிப்போனார். அறுகநாட்டுச் சிறுகுடி மன்னன் செம்பனிடம், தான் சொல்லிவந்த வார்த்தைகள் உள்ளத்தை அறுத்துக் கொண்டிருந்தன. ‘பாரியின் தூய்மையான அன்புக்கு முன் நான் கூனிக்குறுகியே நிற்கிறேன். நான் அதற்குத் தகுதியானவன் அல்ல. அவனது புகழ் மீது ஐயங்கொண்டு அதைக் கண்டறியவே, நான் இங்கு வந்தேன். இதை அவனிடம் சொல்ல வேண்டும்' என்று கபிலரின் மனம் தவித்தது.

83p3.jpg

பாரியின் நிழல்போல் எந்நேரமும் உடன்நிற்பவன் முடியன். வேகமும் வீரமும்கொண்ட இளைஞன். அவனது இடுப்பில் ஒரு பக்கம் வாளும் இன்னொரு பக்கம் மாட்டுக்கொம்பும் தொங்கிக்கொண்டிருந்தன. பழைமையும் புதுமையுமான இரண்டு ஆயுதங்களை ஒருசேர வைத்திருந்தான். ‘முடியன்’ என்பது அவனது பெயர் என்றுதான் கபிலர் முதலில் நினைத்தார். ஆனால், அது `தளபதி'போல ஒரு பட்டம் என்பது பின்னர்தான் கபிலருக்குத் தெரியவந்தது.

அதேபோல் எவ்வியூரில் எல்லோரும் வணங்கும் மனிதராக, பெரியவர் தேக்கன் இருக்கிறார். அதுவும் பட்டமா அல்லது பெயரா என கபிலருக்குத் தெரியவில்லை. இருவரிடமும் தனது நிலையை விளக்க வேண்டும் என கபிலர் முயற்சிசெய்ய, அவர்களோ அறுபதாங்கோழி கிடைக்கும் வரை எதையும் காதுகொடுத்துக் கேட்கவே தயாராக இல்லை. கபிலர் என்ன செய்வது எனத் தெரியாமல் திக்கித்திணறிக் கிடந்தார்.

ஆனால், கபிலரைவிட திணறிக் கிடப்பது பறம்பு மக்கள்தான். அறுபதாம்கோழிக்காக அவர்கள் இப்போது காடு எங்கும் அலைந்துகொண்டிருக்கின்றனர், பாரியின் குடும்பம் உள்பட. ஆசைப்பட்டது பாரி என்பதால், அதை நிறைவேற்றுவதை கடமையாகவே எல்லோரும் கருதுகின்றனர். அறுபதாம்கோழி, காட்டின் அதிசயங்களில் ஒன்று. கோழியைப்போல் உடலும் சேவலைப்போல் வாலும் கொண்டிருக்கும். வண்ணமயமான வாங்கருவாள் போல் வாலின் இறகுகள் சிலிர்த்து நிற்கும். அது அறுபது நாட்களுக்கு ஒருமுறைதான் முட்டையிடும். அன்னப்பறவை சாவதற்கு முன், ஒரே ஒருமுறை பெருங்குரல் எழுப்பிக் கூவிவிட்டு செத்துப்போவதைப் போலத்தான் இதுவும். சாவதற்கு முன் பகற்பொழுதில் சேவலைப்போல் பெருங்குரல் எடுத்துக் கூவிவிட்டு செத்துப்போகும்.

அந்த ஓசைதான் அதை `அறுபதாங்கோழி' என்று அடையாளப்படுத்துவது. ஓசை வந்த பகுதியில் தேடினால், ஏதேனும் ஓர் இண்டுஇடுக்குக்குள் செத்துக்கிடக்கும். அறுபதாங்கோழியைத்தான் முருகன் தனது கொடியில் வைத்திருந்தான். முன்புறம் கோழி போன்றும், பின்புறம் சேவல் போன்றும் அது காட்சியளித்தது.

`அது முருகனின் மாயவித்தை' என, பின்னால் வந்தவர்கள் சொல்லிக்கொண்டிருந்தபோது `எவ்வி'தான் ஒருநாள் அறுபதாங்கோழியைக் கண்டறிந்தான். முருகன் கொடியாக வைத்திருந்தது இதுதான் என்பது அவன் சொல்லித்தான் மற்றவர்களுக்குத் தெரியும். அந்தக் கோழியின் பெரும் அதிசயம் என்ன என்றால், அதன் கழிவில் இருந்துதான் `தீப்புல்' முளைக்கும். அதன் கறியின் சுவைக்கு ஈடுஇணை இல்லை. முருகனிடம் இருக்கும் ஒன்றின் சுவையைப் பற்றி தனித்துச் சொல்லவேண்டியது இல்லை.

அறுபது நாட்களுக்கு ஒருமுறை முட்டையிடும். அது காட்டுக்குள் எந்த விலங்கின் உணவாகவும் மாறாமல், மண்ணுக்குள் பாதுகாப்பாக இருந்து பொறிக்க வேண்டும். அதன் சுவை வேட்டை விலங்குகளுக்கு மிகவும் பிடித்தமானது. ஆனால், அதை வேட்டையாடுவது எளிது அல்ல. புலி போன்ற வேட்டை விலங்கு அதன் சுவைக்கு மயங்கி அதன் வாசனையை நுகர்ந்தபடி, காட்டின் குறிப்பிட்ட பகுதியில் அலைந்துகொண்டே இருக்கும். புலியால் எளிதில் அறுபதாங்கோழியைப் பிடிக்க முடியாது, அதே நேரம் அதன் வாசனையைவிட்டு விலகவும் முடியாது. எந்நேரமும் புதருக்குள் பதுங்கியபடியே நகர்ந்துகொண்டு கிடக்கும். தன்னைக் கடந்துபோகும் மான் கூட்டத்தைக் கண்டும் புலி அமைதியாக இருக்கிறது என்றால், அங்கு அறுபதாங்கோழி இருக்கிறது என அர்த்தம். புலியின் இந்த மயக்கச் செயலின் வழியே அங்கு அறுபதாங்கோழி இருப்பதை, காடு அறிந்தவர்கள் அறிவார்கள்.

நான்காம் நாள் அதிகாலை, தென்புறக் காட்டுக்குள் சரசரவெனக் கீழ் இறங்கினான் பாரி. உடன் வீரர்கள் சிலரும் சென்றுகொண்டி ருந்தனர். புலியின் நடமாட்டம் பற்றிய தகவல் வந்திருக்கலாம். எனவே, `அறுபதாங்கோழி இருக்கும் வாய்ப்பு இருக்கிறது. நாமே செல்வோம்' என முடிவெடுத்து பாரி போய்க்கொண்டிருக்கிறான் என்று மற்றவர் நினைத்தனர். சிற்றோடையைத் தாண்டிய சிறிது தொலைவில் செழித்து வளர்ந்திருந்த கடம்பமரத்தின் முன் நின்றான் பாரி. குறி சொல்லும் வேலன் பூசாரி முன்னரே அங்கு வந்திருந்தார். வீரருக்கு அப்போதுதான் புரிந்தது. சற்று தொலைவில் நின்று முருகனை நோக்கிக் கைதொழு தனர்.

84p1.jpg

தமிழ் நிலத்தில் எஞ்சியிருக்கும் மலைமக்களின் அரசுகள் இருபத்திரண்டு மட்டுமே. அவற்றுள் முதன்மையாக அறியப்படுவது பறம்புநாடு. அதன் தலைவன் பாரி. இந்த நாட்டைப் பற்றி மூவேந்தருக்கும் சமவெளியில் வாழும் மக்களுக்கும் இதுவரை தெரிந்த உண்மைகள் பாணர் பலரால் சொல்லப்பட் டவையே! தமது வறிய நிலையைப் போக்க வரும் பாணர், பாரியின் அள்ளித் தரும் வள்ளல் தன்மையையே மீண்டும் மீண்டும் பாடினர்.

ஆனால், வேளீர்களின் பறம்புநாடு எத்தகைய வளத்தைக்கொண்டுள்ளது, அந்த மக்கள் தமது வாழ்வை எப்படி அமைத்துக்கொண்டுள்ளனர், பாரி நடத்தும் ஆட்சியின் தனித்துவம் என்ன என்று, எதுவும் வெளி உலகில் இருப்பவர்களுக்குத் தெரியாது. ‘மலைமகன் ஒருவன் ஆளுகிறான்; இல்லாதவர்கள் போனால் `இல்லை' எனச் சொல்லாமல் அள்ளித் தருகிறான்' என்றுதான் நினைத்திருந்தனர்.

முதன்முறையாக வயிற்றுப்பாட்டுக்காக அல்லாமல், பாரியையும் அவனது பறம்புநாட்டையும் அளந்து பார்க்க வேண்டும் என்று முடிவோடு ஒருவர் வந்திருக்கிறார். வெளி உலகின் கண்கொண்டு இந்த நாடு இப்போதுதான் பார்க்கப்படுகிறது.

இவர்கள் காட்டின் பழைமையான மைந்தர்கள்தான். ஆனால், காலமாற்றத்தின் கரங்களை இறுகப் பற்றியுள்ளனர். இந்த மண்ணில் இருந்து அழிக்கப்பட்ட எத்தனையோ குலங்களின் கண்ணீரும் ரத்தமும் இவர்களை உருமாற்றியபடி இருக்கின்றன. பத்து ஆண்டுகளாக இந்தக் குலத்தின் தலைவனாக இருக்கிறான் வேள்பாரி. வேளீர்குல வீரன் ஒருவன் எறியும் ஈட்டியைக் கண்டு, வேந்தனே ஆனாலும் விலகி நிற்கும் மனநிலையை உருவாக்கிய மாவீரன் வேள்பாரி.

83p4.jpg

`நாடு என்பது அரசும் அரச நியதியும்தான்' என விதி செய்பவர்களுக்கு மத்தியில், `நாடு என்பது அரசற்ற மக்களின் ஆதிநிலம்' என  நிலைநிறுத்தி உள்ளான். இந்த நிலத்தில் நடந்துவரும் கபிலருக்கு, கண்ணில் படுபவை எல்லாம் ஆச்சர்யத்தையே உண்டு பண்ணின. அதிகாரம் உயிர்பெறாத இடத்தில் அன்பு மட்டுமே தழைத்திருக்கும். ஆசை, கோபம், சோகம் எல்லாமே அன்புமயமாக நிகழும் ஓர் உலகின் நிகழ்வைக் கனவில்கூட காண முடியாதே! நிஜத்தில் என்ன செய்வார் கபிலர்? நிலைகுலைந்துபோனார்.

கபிலரின் கண்களில்  முதலில் பட்டது பறம்பின் தலைநகரான `எவ்வியூர்'. வேட்டூரில் இருந்து நடந்து வரும்போது நீலன் சொன்னான், ``பாம்புத் தச்சன்தான் எவ்வியூருக்கு வடிவம் கொடுத்தவன்'' என்று.
“பாம்புத் தச்சனா, அது யார்?” எனக் கேட்டார் கபிலர்.

“பாம்புக்கு வீடு கட்டும் தச்சன் யார்? எனத் திருப்பிக் கேட்டான் நீலன்.

“கறையான்” என்றார் கபிலர்.

“கறையான் கட்டியுள்ள புற்றைப்போல, ஆதிமலையின் நடுவில் உள்ள கரும்பாறையைச் சுற்றி பாறையோடு பாறையாகச் சற்றே குடைந்து, முன்னால் புற்றுமண்ணால் சுவர் எடுத்து மரச்சட்டகங்களால் வடிவமைக்கப்பட்ட வீடுகளைக்கொண்டது எவ்வியூர். கார்காலத்தில் மழை கொட்டித்தீர்க்கும். எவ்வளவு பெரிய மழை பெய்தாலும் உச்சியில் இருந்து கீழ்நோக்கிப் பாய்ந்தோடும் நீர், சிறு துளிகூடத் தேங்கி நிற்காது. கோடையில் கொடுங்காட்டுத் தீ பரவினாலும் உள்ளுக்குள் ஏறாது. சுட்டமண், மழைக்கு உறுதியானது; நெருப்பை உள்வாங்கும்; அனல் தாங்காமல் இளகி உருகும். ஆனால், புற்றுமண் நெருப்பை ஒட்டவிடாது, விலக்கிக் கொடுக்கும். நீரும் நெருப்பும் ஒன்றும் செய்துவிட முடியாத ஒரு கட்டுமானம். இவற்றுள் மிக வியக்கவைப்பது எவ்வி கட்டியுள்ள அரண்மனை. அதை நேரில் பார்த்தால்தான் உமக்குப் புரியும்” என்றான் நீலன்.

எவ்வியூரைக் காணும் வரை இதன் வடிவம் கபிலருக்குப் பிடிபடவில்லை. உண்மையில் ஆச்சர்யம் நிரம்பிய கட்டுமானம்தான் இது. இன்னும் அரண்மனையைப் பார்க்கவில்லை. அதைப்  பற்றி ஒற்றை  வரியில் முடித்துக் கொண்டான் நீலன். பார்த்ததன் வியப்பு பார்க்காததன் மீதே படிகிறது. அவருக்கு அரண்மனையைப் பார்க்க ஆசைதான். ஆனால், இந்த ஊரில் எந்தத் தெருவுக்குள் போனாலும் ஆச்சர்யத்தின் வழியாகத்தான் கடக்க வேண்டியிருக்கிறது.

83p5.jpg

பறம்புநாட்டில் மனிதன் உழைத்து விளைவிக்கக்கூடிய எந்த ஒரு பொருளும் இல்லை. தினை வகைகள், பழ வகைகள், காய்கறி வகைகள் எல்லாம் இயற்கையில் தாமாக விளைகின்றன. உணவு என்பது சேகரிப்புதானே தவிர, உற்பத்தி அல்ல. பிறநாடுகளைப்போல் உணவு உற்பத்திக்காகப் பெரும் உழைப்பைச் செலுத்தவேண்டிய தேவை இல்லை. பிறநாடுகளில் பெரும்பகுதி மக்கள் செய்யும் வேலைக்கு, இங்கு சிறு பொழுது மட்டுமே செலவழிக்கப்படுகிறது.

ஆண்களின் வாழ்வு முழுவதும் ஆயுதங்களோடுதான் கழிகிறது. வேட்டை தொடங்கி போர் வரை எல்லாவிதமான ஆயுதங்களையும் பயன்படுத்தும் அசாதாரணமான கலையை ஒவ்வொருவரும் கற்றிருக்கின்றனர். எட்டு வயதில் காடு அறிந்துவர வீட்டைவிட்டு வனத்துக்குள் அனுப்பப்படும் சிறுவர், அதன் பிறகு மாவீரராகத்தான் குடில் திரும்புகின்றனர். இவரின் முயற்சிக்கு இணையான முயற்சிகள் வேறு எங்கும் இல்லை.

இரண்டாவது, இயற்கையை அறிதல். தாவரங்கள், விலங்குகள், பறவைகள், காலநிலைகள் ஆகியவற்றைப் பற்றி இவருக்கு இருக்கும் பேரறிவுக்கு இணை சொல்லும் அறிவு வேறு எவருக்கும் இல்லை. அதனாலேயே இவர்கள் மருத்துவத்தில் அற்புதங்களைக் கைவரப்பெற்றவராக இருக்கின்றனர். மருத்துவம் கைவரப்பெற்றதாலேயே வீரத்தின் எல்லையை இன்னும் கூட்டுகின்றனர்.

பயிற்சியின்போது வாள்முனை நெஞ்சைக் கீறிப்போனாலும் கவலைகொள்ளும் வீரன் எவனும் இல்லை. `அத்தாப்பொறுத்தி' மூலிகையைக் கண்டறிந்த பிறகு, சதையை அறுத்துக்கொண்டுபோனாலும் அறுத்ததைப் பொறுத்திக்கொடுக்கிறான் மருத்துவன். பறம்பு நாடு அபரிமிதமான ஆற்றலோடு இருக்கிறது.

வெளிஉலகுக்குப் பெரிதாகத் தெரிவது பாரியின் புகழ்தான். ஆனால், அதைவிட பெரிய ஆற்றலும் அறிவும் ஆச்சர்யங்களும் இங்கு இருக்கின்றன. ஆனால், இவை எல்லாவற்றையும்விட கபிலர் அதிசயித்தது இந்த மக்களின் வாழ்முறையைத்தான்.

83p6.jpg

ஒவ்வொருவருக்கு எனத் தனித்த சொத்தும், எப்பாடுபட்டாயினும் அதைச் சேமித்துப் பெருக்க வேண்டும் என்ற பெருந்தாகமும் இங்கு இல்லை. இயற்கை பிற உயிரினங்களுக்கு வடிவமைத்த குண எல்லைகளைக் கடந்து மனிதன் போகவில்லை. மழை வந்ததும் செழிப்புறத் தழைத்து, வெயில் காலத்தில் வாடித் துவண்டு, மலரும்போது நறுமணம் வீசி, கனியும்போது அள்ளி வழங்கி, உதிரும்போது சத்தம் இல்லாமல் மண்ணில் மக்கி தம்மை உரமாக்கியபடி பயணத்தை முடித்துக்கொள்ளும் இந்த வாழ்க்கை, கபிலரை மண்டியிட்டு வணங்கவைத்தது.

டம்ப மரத்தின் முன் மண்டியிட்டு வணங்கிய பாரி, நீண்ட நேரம் கழித்தே எழுந்தான். வேலன்பூசாரி குறி சொன்ன வார்த்தைகள் எவையும் அவனது காதுகளில் விழவில்லை. அவன் முருகனை வணங்கி நின்றான். ஆனால், அவன் மனம் வணங்கவில்லை. அவனுக்கு இருந்தது கோபம். அதைத் தெரிவிக்க வேண்டும் என்பதற்காகவே இறங்கி வந்தான். காற்றின் அசைவின்றி இறுகி நின்றது கடம்ப மரம். பாரியும் கோபம் தளர்த்தாமலே திரும்பினான். எதிரில் செய்தி சொல்ல ஒருவன் வேகமாக இறங்கி வருவது தெரிந்தது. பாரிக்கு ஆவல் மேலிட்டது. ‘அறுபதாங்கோழியைப் பற்றிய செய்தி வருகிறதோ!' என எண்ணினான். வந்தவன் வணங்கிவிட்டுச் சொன்னான், “குடநாட்டு அமைச்சர் கோளூர் சாத்தன் தங்களைக் காண வந்திருக்கிறார்.”

- பறம்பின் குரல் ஒலிக்கும்...

http://www.vikatan.com

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல தொடர் விறுவிறுப்பாக தொய்வில்லாமல் போகின்றது. நாவற் பழத்தில் இத்தனை வாகையுண்டா?
இவர்களின் மருந்துவத்தை வாசிக்க வியப்பாக இருக்கு

http://www.tamilvu.org/slet/l1281/l1281pd2.jsp?bookid=28&page=78

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அறுபதாங் கோழி அடுத்த அத்தியாயத்திலாவது பிடிபடுமா.... அல்லது வேறு கோழியாவது .....! tw_blush:

Link to comment
Share on other sites

வீரயுக நாயகன் வேள்பாரி - 9

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
 

சு.வெங்கடேசன், ஓவியங்கள்: ம.செ.,

 

p83a.jpgபிலர் எவ்வியூர் வருவதற்கு மூன்று மாதங்களுக்கு முன்னர் நடந்த நிகழ்வு இது...

 சித்தாற்றின் வடபுலத்தைச் சேர்ந்த பாணர் கூட்டம் ஒன்று, எவ்வியூருக்கு வந்திருந்தது. அவர்கள், வேட்டைச் சமூகப் பின்புலத்தில் இருந்து பாணர்களாக மாறியவர்கள்; யாழ் தெய்வமான மதங்கனையும் மதங்கியையும் வணங்குபவர்கள். இந்தக் குழுத் தலைவன் `மதங்கன்' என்றும், தலைவி `மதங்கி' என்றும் அழைக்கப்படுவர். தாங்களே வேட்டையாடி, அந்த விலங்கில் இருந்து யாழுக்கு நரம்பு எடுத்துக் கட்டுவர்; அந்த விலங்கின் தோல்கொண்டு பறை செய்வர்.

இவர்களின் கூத்து, நள்ளிரவுக்குப் பிறகுதான் தொடங்கும். அரிசியின் அளவு பருமன்கொண்ட யாழ் நரம்புகள் மீட்டப்பட்டு பறை ஒலிக்கத் தொடங்கும்போது, வேட்டை விலங்கின் சீற்றம் ஆரம்பம் ஆகும். சிறுபறையின் ஒலியில் தொடங்கும் கூத்து, நேரம் ஆக ஆக உக்கிரம்கொண்டு காட்டை மிரட்டும். குகை விலங்கு வெளியில் வந்து எட்டிப்பார்க்கும். அதன் கண்களுக்குள் இருக்கும் நீல ஒளி, இருளுக்குள் ஊர்ந்து இறங்கும். இந்தக் குழுவினரின் அடையாளமே தோல் கருவியான தடாரிதான். தடாரிகளைத் துணியால் கட்டி, கூடையில் வைத்து, காவடியைப்போல இருபுறமும் தூக்கி வருவார்கள். பயணத்தின்போது அவற்றைக் கீழ் இறக்கி மண்ணில் வைக்க மாட்டார்கள். தடாரி மண்ணைத் தொட்டால், அங்கு கூத்து நிகழ்த்தப்பட்டுத்தான் அவற்றைத் தூக்கவேண்டும். எனவே, கூத்து நடக்கும் இடத்தில் மட்டுமே அதைக் கீழே இறக்குவார்கள். மற்ற நேரங்களில் எல்லாம் காவடியைப்போல தோளிலும் கைக்குழந்தையைப்போல இடுப்பிலும் சுமந்தபடியே இருப்பர். தங்களின் முன்னோர்கள் வேட்டையாடிய யானையின் காலடியின் அளவுகொண்டே தடாரியை வடிவமைப்பர்.

கூத்து நிகழ்ந்துகொண்டிருக்கும் எந்தக் கணத்தில் தடாரிகளை எடுத்து, பெரும் மதங்கன் களம் இறங்குவான் எனத் தெரியாது. யாழ்தேவதை உருகி அழைக்க, ஏதோ ஒரு கணத்தில் சினம்கொண்டு இறங்குவான். தடாரிகள் எழுப்பும் ஒலி கேட்டு மலைதெய்வம் உள்ளொடுங்கும். மதங்கன், மலை நடுங்க ஆடுவான். தடாரிகளின் பேரொலி, காட்டைக் கிட்டித்து இடிக்கும். காட்டின் ஆதி மைந்தர்கள் ஆடிய ஆட்டம் அது. மதங்கனின் ஆட்டத்தைக் கதையாகக் கேட்கும்போதே பலரும் நடுங்குவர்.

p83.jpg

மதங்கன் கூட்டம் வந்திருக்கிறது என்பதைக் கேள்விப்பட்ட பாரி அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. பாரி, இதுவரை மதங்கனின் கூத்தைப் பார்த்தது இல்லை. பாரியின் மனைவி ஆதினி. அவள் பொதினிமலையின் (பழநி) குலமகள். அவள் சிறுவயதில் பொதினிமலையில் தந்தையோடு சேர்ந்து மதங்கனின் நிகழ்வைப் பார்த்து, பயந்து அழுததைப் பற்றி பாரியிடம் பல நாள் சொல்லியிருக்கிறாள். ஏனோ பறம்பு நாட்டுக்கு மதங்கனின் கூட்டம் எதுவும் வந்தது இல்லை. நீண்ட காலத்துக்குப் பிறகுதான் பாரி கேள்விப்பட்டான், `சித்தாற்றங் கரையில் இருந்த நெட்டூர் மலையை சோழன் கைப்பற்றிவிட்டான்' என்று. அந்த மண்ணின் மகா கலைஞர்களான மதங்கர்கள், இப்போது அவனது கடல் பணிகளுக்கு ஏவல் வேலை செய்துகொண்டிருக்கின்றனர். யாழிசையின் பெருந்தேவிகளான அந்தக் குலப்பெண்கள், சோழ அரண்மனையில் விறலிகளாக மாறிக்கிடக்கின்றனர். பேரரசை உருவாக்கும் கனவுக்கு எண்ணற்ற இனக் குழுக்கள் இரையாக்கப்பட்டுவிட்டன. `மதங்கர் இனமே முற்றிலும் அழிந்துபோய்விட்டது!' என நினைத்துக்கொண்டிருந்த பாரிக்கு, தப்பிப் பிழைத்த அந்தப் பாணர் குழுவைப் பார்த்ததில் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

பாரிக்கு இரு மகள்கள். மூத்தவள் அங்கவை; இளையவள் சங்கவை. சிறுமியின் விளையாட்டை இன்னும் தொலைக்காமல் இருக்கும் சங்கவையைவிட ஆறு ஆண்டுகள் மூத்தவள் அங்கவை. பாரியின் குலக்கொடி. தந்தையின் எண்ணத்தை அவரது கண்களில் இருந்தே கண்டறிந்துவிடுவாள். தாய் ஆதினிக்கு அங்கவையின் மீதான ஆச்சர்யம் எப்போதும் நீங்கியது இல்லை. தான் அறியாத பாரியை இவள் எப்படிக் கண்டறிகிறாள் என எத்தனையோ முறை நினைத்திருக்கிறாள்.

`உனது சொல்லைத்தான் தந்தை கேட்பார்' என, ஒருமுறைகூட சொல்லியது இல்லை. ஆனால், `தந்தையைப்போலவே நீயும் சொல்கிறாயே!' எனச் சொல்லாத நாள் இல்லை. எது ஒன்றையும் அவளின் கண்கொண்டு பாரி பார்ப்பதும், பாரியின் எண்ணம்கொண்டு அங்கவை யோசிப்பதும் எப்போதும் நடக்கும் நிகழ்வுகள் ஆகிவிட்டன.

p83d.jpgஒருநாள் நண்பகலில் அருவிக் குளியல் முடித்து, உணவுக்குக் காத்திருந்தனர். சமையல் தயாராகிக்கொண்டிருந்தது. அருகில் இருந்த பாறையின் மீது ஏறி முடிகள் காய, சுடுவெயில் தாங்கி நின்றான் பாரி. சிறு துணியால் தலை துவட்டியபடியே ஆதினியும் அங்கவையும் பாறை ஏறி வந்தனர்.

“என்ன பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள் தந்தையே?” எனக் கேட்டாள் அங்கவை.

குரல் கேட்டுத் திரும்பாமல், “கண்டுபிடி!” என்றான் பாரி.

எதிரில் விரிந்து பறந்த காடு. பின்புறம் கேட்கும் அருவியின் ஓசை, எங்கும் சிறகடித்துத் திரியும் பறவைகள், அவ்வப்போது வீசிச் செல்லும் காற்றின் சலசலப்பு என, அனைத்தையும் பார்த்தனர் ஆதினியும் அங்கவையும்.

பதிலுக்காகக் காத்திருந்தான் பாரி. ஆதினி சொன்னாள்... “எங்கும் பறவைகளின் குரல் கேட்கிறது. ஏதாவது ஒரு பறவையின் குரலில் துயரத்தின் சாயல் வெளிப்பட்டிருக்கும், அதைத்தான் நீங்கள் கவனித்துக்கொண்டிருக்கிறீர்கள்” என்றாள்.

அங்கவையோ, “இல்லை... தந்தை வேறு ஒன்றைப் பார்த்துக்கொண்டிருந்தார். அதை நான் கண்டுபிடித்துவிட்டேன்” என்றாள்.

சொல்லும்போதே அவளது முகத்தில் வெட்கம் பூத்து நின்றது. பாரி அவளை உச்சி முகர்ந்தான். ஆதினிக்குக் கோபம் வந்தது.

“அவள் எதைச் சொல்கிறாள். நீங்கள் எதைப் பார்த்தீர்கள்... சொல்லுங்கள்?” என்றாள் சற்றே பொறாமையுடன்.

p83b.jpg

அங்கவை சொன்னாள்... “அம்மா, அதோ அந்த மூலையில் சந்தனவேங்கை மரம் நிற்கிறது பாருங்கள். தந்தை அதைத்தான் பார்த்துக்கொண்டி ருந்தார்” என்றாள்.

இப்போது ஆதினி முகத்தில் வெட்கம் ஓடியது.

“இவ்வளவு நேரம் அந்தத் திசையைப் பார்த்துக்கொண்டு நின்றது அதனால்தானா?” என்றாள் ஆதினி.

“ஆம்... நம் மகளையும் காதல் அழைத்துச் செல்லும். அதற்குள் நாம் அவளுக்குச் செய்ய வேண்டியவற்றைச் சிந்தித்துக்கொண்டிருக்கிறேன்” என்றான் பாரி.

“என்ன அது?” என ஆர்வத்தோடு கேட்டாள் ஆதினி.

“நிலம் எங்கும் அறியப்பட்ட பெரும் புலவர்கள் பரணரும் கபிலரும். அவர்களில் ஒருவரேனும் பறம்பு நாட்டுக்கு வர மாட்டார்களா என, பல நாட்கள் விரும்பியிருக்கிறேன். அந்த விருப்பம் இன்று வரை நிறைவேறவில்லை. என் மகள் மணமுடித்துச் செல்வதற்குள், அவர்கள் வர வேண்டும் என்று மனம் ஏங்குகிறது. அவர்கள் எழுத்து கற்றவர்கள். அவர்களிடம் இருந்து என் மகளும் என் மக்கள் சிலரேனும் எழுத்து கற்றால், எவ்வளவு நன்றாக இருக்கும்” என்றான் பாரி.

“அது எனக்கான உங்களின் விருப்பம் தந்தையே! அதைவிட ஆழமான ஆசைகள் உங்களிடம் உண்டு. அவை நிறைவேற வேண்டும் என்றுதான் நான் விரும்புவேன்” என அங்கவை சொன்னாள்.

பாரியே சற்று வியந்து, “எதைச் சொல்கிறாய்?” எனக் கேட்டான்.

அங்கவை சொன்னாள், ``பறம்பு நாட்டில் முழங்காத பறை இல்லை; ஆடாத கூத்து இல்லை; மீட்டாத யாழ் இல்லை. ஆனால், மதங்கர் கூட்டம் இந்த மண்ணை மிதிக்கவில்லை என்ற ஏக்கம் நீண்ட நாள் உங்களின் ஆழ்மனதில் உண்டு.
உங்களோடு அமர்ந்து அந்த விசையையும் கூத்தையும் நான் காண வேண்டும். அதுதான் எனது ஆசை” என்றாள்.

சமையல் தயாராகிவிட்டதால், கீழ் இருந்து அழைக்கும் குரல் கேட்டது.

“நீ போய் முதலில் சாப்பிடு. நாங்கள் வருகிறோம்” என்று மகளை அனுப்பிவைத்தான் பாரி. அவனது கண்கள் கலங்கியிருந்தன. கவனித்த ஆதினி என்ன என்று கேட்டாள்.

“மதங்கர் நாட்டை, சோழன் அடிமையாக்கிக்கொண்டான். அந்த மகத்தான இசைவாணர்கள் வர இனி வாய்ப்பே இல்லை” எனச் சொல்லும்போது பாரியின் குரல் உடைந்தது.

செய்வது அறியாது நின்ற ஆதினி, அவன் தோளைத் தொட்டாள். சற்றே ஆசுவாசம் அடைந்து நிதானித்தான் பாரி.

“சரி, வாருங்கள். அந்தச் சந்தனவேங்கை மரம் வரை போய் வருவோம்” என்றாள்.

சிறிய நகைப்போடு பாரி சொன்னான், “மகள் இருக்கும்போதே நீ அழைத்திருக்க வேண்டும். அந்தத் துணிவை ஏன் இழந்தாய்?”

ஆதினி சொன்னாள்... “எனது கண்களை நீங்கள் பார்த்திருந்தால் உங்களுக்குத் தெரிந்திருக்கும். நீங்கள்தான் அவற்றை நேர்கொண்டு பார்ப்பதே இல்லையே.”

இந்தத் தாக்குதலை பாரி எதிர்பார்க்கவில்லை. ஆதினியின் கண்கொண்டு பார்க்கத் தவறிய நாட்கள் எத்தனையோ! `காலம் எவ்வளவு வேகமாக அழைத்துக்கொண்டு போகிறது. கணவனின் இடத்தை தந்தை எந்தக் கணம் விழுங்குகிறான் என்பதை நிதானிக்கவே முடியவில்லையே!' என யோசித்துக் கொண்டிருக்கும்போது பாரி சொன்னான்...

“நீதான் எனது கண்கொண்டு பார்த்தவள்.”

p83f.jpgபுரியாமல் விழித்தாள் ஆதினி.

“உண்மையில், நான் அந்தப் பச்சைப்புறாவின் சற்றே மாறுபட்ட குரல் ஒலியைத்தான் கேட்டுக்கொண்டிருந்தேன். அங்கவை, காதல் பருவத்தில் நிற்கிறாள். அவளின் கண்களின் வழியே அவள் பார்க்கத் தொடங்கிவிட்டாள். அவளின் கண்களுக்கு சந்தனவேங்கைதானே முதலில் படும். அதைத்தான் தந்தை பார்த்திருப்பார் என நம்பிச் சொன்னாள்” என்றான்.

“நீங்கள் ஏன் அதை ஒப்புக்கொண்டீர்கள்?” எனக் கேட்டாள்.

மெல்லியச் சிரிப்போடு பாரி சொன்னான்...  “குழந்தைகளிடம் விட்டுக்கொடுக்கும்போதும் தோற்கும்போதும்தான் ஓர் ஆண், தாய்மையை அனுபவிக்கிறான்.”

இதை ஆதினி எதிர்பார்க்கவில்லை. சற்றே கலங்கிய அவள், பாரியின் நெஞ்சில் சாய்ந்து சுடுவெயில் மறைய இதழ் பதித்தாள்.

ள்ளிரவு சிறுநிலவு, காடு எங்கும் சாம்பல் தூவிக்கொண்டிருந்தது. ஊர்மன்றலில் பந்தங்கள் ஏற்றப்பட்டு, எவ்வியூர் முழுக்கத் திரண்டிருந்தது. செய்தி கேள்விப்பட்டு, பலரும் இரவோடு இரவாக வந்துகொண்டிருந்தனர். மதங்கி, யாழ் மீட்டத் தொடங்கியதில் இருந்து, பார்வையாளர்கள் இமை சிமிட்டுவது கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து கொண்டிருந்தது. இசைக்கருவிகள் ஒவ்வொன்றாக இணைந்தன. சிறுபறையும் அரிப்பறையும் முழங்கும் போது இருள், நடுக்கம்கொள்ளத் தொடங்கியது. சலங்கை அணிந்த பெண்கள் இருவர், நெடுநிழல் நகர ஆவேசம்கொண்டு ஆடினர். பாரியின் இடதுபக்கம் அங்கவை அமர்ந்திருந்தாள். வலதுபக்கம் அமர்ந்திருந்த ஆதினியின் அருகில் சங்கவை இருந்தாள். வழக்கம்போல் பாரியின் பின்புறமாக நின்றிருந்தான் முடியன்.

`பாட்டாப் பிறை’ எனச் சொல்லப்படும் பாட்டன்மார்களுக்கான மேடையில் அமர்ந்து பார்த்துக்கொண்டிருந்தான் தேக்கன். அவர்களோடு தேக்கனின் வயதுடைய பெருசுகளும் உட்கார்ந்திருந்தனர்.

கூத்தின் பாங்கில் துயரத்தின் நெடுங்குரல் மேலே எழும்பியது. அழிந்த இனத்தின் கடைசிப் பாடகன், தனது குரல்நாளங்கள் வெடிப்பதைப்போல் பாடத் தொடங்கினான். இன்றோடு குரல் வெடித்துச் சாக வேண்டும் என்பதே அவன் விழைவாக இருந்தது. ஆறாத் துயரைக் கலையாக்கும்போது கலைஞன் படும் வேதனைக்கு இணைகூற சொல் இல்லை.

p83c.jpg

குரலும் சலங்கையும் யாழும் பறையும் ஒன்றை ஒன்று விலகியும் விழுங்கியும் நகர்ந்தன. போர்க் குதிரைகளின் விரட்டுதலில் இருந்து தப்பியோடும் ஓர் இசைக்கலைஞனின் காலடி ஓசை, தனித்து கேட்டுக்கொண்டிருப்பதைப்போல பாரி உணர்ந்தான். `அந்த ஓசை எந்தக் கருவியில் இருந்து வருகிறது?' என்பதை அவனது கண்கள் தேடிக்கொண்டிருந்தன. எல்லோரும் மெய்ச்சிலிர்த்துப் பார்த்துக் கொண்டிருந்த கணத்தில், இரு தடாரிகளோடு குதித்து உள்ளே இறங்கினான் மதங்கன். அதுவரை முழங்காமல் இருந்த அனைத்துத் தடாரிகளும் ஏக காலத்தில் ஒலி எழுப்பின. சற்றும் எதிர்பாராத பேரிசை. பாரியே குலுங்கி உட்கார்ந்தான். பயந்த சங்கவை, “அம்மா...” எனக் கத்திய ஓசை பக்கத்தில் இருப்பவருக்கு மட்டுமே கேட்டது. ஆதினி அவளை அணைத்து மடியில் இறுக்கிக்கொண்டாள். அதைக் கவனித்த பாரியின் கண்களுக்கு, சிறுவயதில் பயந்து கத்திய ஆதினியும் சேர்ந்து தெரிந்தாள்.

மதங்கன், தாவி உள்ளிறங்கிய இடத்தில் மண் பெயர்ந்து மேலே எழுந்தது. வேட்டையாடிய யானையின் காலடி நிலத்தை அதிரச் செய்வதைப்போல அது இருந்தது. ஓர் ஆட்டம் தொடங்கும் கணத்தில் இவ்வளவு ஆவேசம்கொண்டு நிகழுமா என்ற வியப்பு எல்லோருக்கும் இருந்தது. இருமுகப் பறையான தடாரியைக் கையால் அடித்து முழங்க வேண்டும். அவன் இரண்டு நடை முன்னும் பின்னுமாகத் தவ்வித் தவ்வி தடாரிகளில் ஒலி எழுப்பிக்கொண்டிருந்தான். மதங்கனின் குடுமி கழன்று, சிகை சுழன்று எழும்பியது. ஆவேசம்கொண்ட மதங்கன், கால்களை முன்னும் பின்னுமாக மாற்றி, குதிக்காலால் குத்திக் குத்தி ஆடினான். மதயானை தனது நிழலைக் கொல்ல, மீண்டும் மீண்டும் தந்தத்தால் மண்ணைக் குத்துவதுபோல அது இருந்தது. எல்லா கருவிகளும் முழங்கிக்கொண்டிருந்தன. பாரி உறைந்த நிலையில் மதங்கனைப் பார்த்துக்கொண்டிருந்தான். மூதாதையர்களின் ஆதிக்கூத்து, மதங்கன் மயங்கிச் சரிந்ததோடு முடிந்தது.

பின்னிரவில் கூத்து முடிந்ததும் எல்லோரும் கலைந்தனர். கலைஞர்கள், இசைக்கருவிகளை துணிகளில் எடுத்துக் கட்டினர். மதங்கனை அருகில் அழைத்து அமரச்செய்த பாரி, அவன் உள்ளங்கையைத் தொட்டும் தடவியும் பார்த்தபடி நீண்ட நேரம் எதுவும் பேசாமல் இருந்தான். உள்ளங்கை சிவந்து இறுகிப்போய் இருந்தது.

“நீங்கள் இங்கேயே தங்கிவிடுங்களேன்” என்றாள் ஆதினி.

“இல்லை... நிலைகொள்ளக் கூடாது என்பது தெய்வவாக்கு” என்றான் மதங்கன்.

நிமிர்ந்து அவன் கண்களைப் பார்த்தான் பாரி.

“நாங்கள் தப்பி ஓடுகிறோம். மீளாத் துயர் எங்களை விரட்டுகிறது. ஓர் இடத்தில் நின்றுவிட்டால் துயர் முழுமையும் கவிந்துவிடும். அதனால்தான் மறுபகல் காணாமல் இரவோடு இரவாக ஆடிய நிலம்விட்டு அகல்கிறோம். விளக்கிச் சொல்ல மனதில் துணிவு இல்லை. எனவேதான் தெய்வவாக்கு என்கிறோம்” என்றான் மதங்கன்.

பாரிக்குச் சொல்ல எதுவும் இல்லை.

“உனக்கு என்ன வேண்டும்? எது வேண்டுமானாலும் எடுத்துக்கொள்” என்றான்.

மதங்கன் கேட்க, சற்றே தயங்கினான்.

“தயங்காமல் கேளுங்கள்” என்றார் பெரியவர் தேக்கன்.

மதங்கன், மெல்லியக் குரலில் கேட்டான்...

“வேறு எதுவும் வேண்டாம். கொல்லிக்காட்டு விதை கொடுங்கள்.”

பாரி அதிர்ந்து பார்த்தான். யாரும் எதிர்பாராத ஒன்று. என்ன பதில் சொல்வது எனத் தெரியவில்லை. `இப்படி ஒரு பொருள் இருப்பதே வெளியில் உள்ளவர்களுக்குத் தெரியாது. இதை எப்படிக் கேட்டான் மதங்கன்?' - நீடித்த மெளனம் கலைத்து தேக்கன் சொன்னான்...

“பறம்பின் ஆதிப்பொருட்கள், குலம் தாண்டக் கூடாது என்பது குலநாகினி வாக்கு. வேறு எது வேண்டுமானாலும் கேளுங்கள்.”

“குலநாகினியின் வாக்கு, காப்பாற்றப்படட்டும். நாங்கள் புறப்படுகிறோம்” எனச் சொல்லி, வேறு எதுவும் கேட்காமல் மதங்கன் எழுந்தான்.

அவன் உள்ளங்கை பாரியிடம் இருந்தது. தடாரியை அடித்து அடித்து வடுவேறிய கை. அதைத் தொட்டு அழுத்தியபடியே தலை நிமிராமல் பாரி சொன்னான்...

“எடுத்து வாருங்கள்.”

அரண்மனையை நோக்கி வீரர்கள் ஓடினர்.

p83e.jpg

மூன்று நாட்களுக்கு முன்னர்...

மதங்கன் கூட்டம், மேற்கு எல்லையின் வழியே பறம்பு நாட்டுக்குள் நுழைந்தனர். பன்றிக் காட்டின் அடிவாரம் இருக்கும் காட்டாலம்தான் முதல் கிராமம். அந்தத் திசை வழியே நுழையும் எந்தப் பாணர் கூட்டமும், அந்தக் கிராமத்தை வந்து அடையும். அதன் பிறகு வீரன் ஒருவன் அந்தக் கூட்டத்தை அழைத்துக்கொண்டு மூன்று நாட்கள் பயணித்து, எவ்வியூர் கொண்டுவந்து சேர்ப்பான். அப்படித்தான் இவர்களும் வந்தார்கள். வரும் வழியில் கூட்டத்தில் இருந்த பெண் ஒருத்தி மயங்கிச் சரிந்தாள். `என்ன?' என, அழைத்துவந்த வீரன் விசாரித்தபோதுதான் தெரிந்தது, ஆகாரம் இன்றி தொடரும் நான்காம் நாள் பயணம் இது என்பது. குடுவையில் இருந்த நீரைத் தெளித்து அவளை எழுப்பினர். `பக்கத்தில் கிராமம் எதுவும் இல்லை. உணவுக்கு என்ன செய்யலாம்?' என யோசித்த வீரன், சிறிது தொலைவில் இருந்த குளத்துக்கு அழைத்துச் சென்றான். மதங்கன் கூட்டமும் ஆவலோடு போனது.

குளக்கரையை அடைந்ததும், “நீங்கள் உட்காருங்கள், நான் மீன்பிடித்து வருகிறேன்” என்றான்.

“கையில் வலை இல்லை, குத்தீட்டி இல்லை. எதைவைத்து மீன் பிடிப்பாய்?” என மதங்கன் கேட்டான்.

இடுப்புத் துணியில் முடிந்துவைத்திருந்த சிறிய காய் ஒன்றை எடுத்துக்காட்டினான் வீரன்.

“இதைவைத்து எப்படி மீன் பிடிப்பாய்?” எனக் கேட்டான் மதங்கன்.

“பாருங்கள்” என்று சொன்ன வீரன். அந்தக் காயை அருகில் உள்ள கல்மீது வைத்துத் தட்டினான். அது இரண்டாக உடைந்தது. ஒரு துண்டை எடுத்து இடிப்புத் துணியில் முடிந்துகொண்டான். மறுதுண்டை கல்லால் தட்டி பொடிப்பொடியாக ஆக்கினான். அதைத் துளியும் மிஞ்சாமல் எடுத்து குளத்தில் தூவிவிட்டான்.

அவன் தூவிய இடத்தைப் பார்த்துக் கொண்டிருந்தான் மதங்கன். நீர் சிறிது கலங்க ஆரம்பித்தது. சிற்றலைகள் தோன்றின. வீரன் சொன்னான்... “இது கொல்லிக்காட்டு விதை. காக்காய்க் கொல்லி விதை என்றும் சொல்வோம். அதை மீன்களும் பறவைகளும் விரும்பித் தின்னும். பிறகு சிறிது நேரத்திலேயே மயக்கம் அடைந்துவிடும்” என்றான்.

p83g.jpg

மதங்கன் ஆச்சர்யத்தோடு கேட்டான்...

 “மீன் எப்படி மயக்கம் அடையும்?”
“அதோ பாருங்கள்” என்றான் வீரன்.

மதங்கன் அந்த இடத்தைப் பார்க்க, மீன்கள் மேலும் கீழுமாகச் சுழன்றும் பிறண்டும் நீந்திக்கொண்டிருந்தன. பெருமீன் ஒன்று வாலை மட்டும் மெள்ள அசைத்தபடி மிதக்க ஆரம்பித்தது. வீரன் உள்ளே இறங்கி ஒவ்வொன்றாக எடுத்துக் கொடுக்க ஆரம்பித்தான். வாய் பிளந்து நின்ற மதங்கன் அதை வாங்கினான். எட்டு பேருக்குத் தேவையான மீன்களை எடுத்த பிறகு, வீரன் கரை ஏறினான். இன்னும் சில மீன்கள் மிதந்து கொண்டிருந்தன.

“நமக்கு இவை போதும்; அவை சிறிது நேரத்தில் மயக்கம் தெளிந்து நீருக்குள் சென்றுவிடும். அது வரை பறவைகள் எதுவும் கொத்தாமல் பார்த்துக்கொள்ளுங்கள்” என்று சொல்லிவிட்டு, நெருப்புமூட்ட தீக்கல் எடுக்கச் சென்றான் வீரன்.

p83h.jpg

தங்கன் பார்த்துக்கொண்டே இருந்தான். அரண்மனைக்குச் சென்ற வீரர்கள், பெரும் தாழிப்பானையைத் தூக்கிவந்து பாரியின் முன்னால் வைத்தனர். மதங்கனின் கண்கள் ஆச்சர்யம் நீங்காமல் பானைக்குள் பார்த்தன. அதே காய்கள். பாரி சொன்னான்... “எவ்வளவு வேண்டுமோ எடுத்துக்கொள்ளுங்கள்.”

தேக்கனின் மனம் பதறியது. ஆதினிக்கு என்ன சொல்வது எனப் புரியவில்லை. குல வழக்கங்களை மீறும் இடங்களுக்குச் சாட்சியாக நிற்பவர் யாராக இருந்தாலும் உள்நடுக்கம்கொள்வர். எல்லோருக்குள்ளும் ஒருவித அச்சம் உண்டானது. இறுக்கமான அந்தச் சூழலில் மதங்கனின் இரு கைகளும் தாழிக்குள் இருந்து கொல்லிக்காட்டு விதையை கைநிறைய அள்ளின. தடாரி பேரொலி எழுப்பியபோது உணர்ந்ததைப்போல, பல மடங்கு நடுக்கத்தை இப்போது உணர்ந்தனர்.

- பறம்பின் குரல் ஒலிக்கும்...

http://www.vikatan.com/anandavikatan

Link to comment
Share on other sites

"மெல்லியச் சிரிப்போடு பாரி சொன்னான்...  “குழந்தைகளிடம் விட்டுக்கொடுக்கும்போதும் தோற்கும்போதும்தான் ஓர் ஆண், தாய்மையை அனுபவிக்கிறான்.”

உண்மைதான்

Link to comment
Share on other sites

வீரயுக நாயகன் வேள்பாரி - 10

 
இத்தொடரின் மற்ற பாகங்கள்:
 

சு.வெங்கடேசன், ஓவியங்கள்: ம.செ.,

 

வனர்களின் `சொலாண்டியா' கப்பல், வழக்கம்போல் அரபுத் துறைமுகங்களில் தங்காமல், ஓசிலிஸ் p83a.jpgவழியாக சிந்துநதியின் முகத்துவாரத்தில் இருக்கும் பாப்பரிக்கோன் துறைமுகத்துக்கு வந்து சேர்ந்தது. கப்பலின் மாலுமி எபிரஸ், நீண்டகால கடல் அனுபவம் பெற்றவன். கடற்காற்றின் குறிப்பு அறிந்து கப்பலைச் செலுத்துவதில் கைதேர்ந்தவன். அதனால்தான் மிகப்பெரிய கப்பலான `சொலாண்டியா’வின் பயணம் இவன் வசமே பல ஆண்டுகளாக ஒப்படைக்கப்பட்டுள்ளது. கப்பலின் பாதுகாப்புத் தளபதி திரேஷியன். தனி ஒருவனே கப்பலை நகர்த்திவிடுவது போன்ற உடல் அமைப்பு கொண்டவன். கடற்கொள்ளையர்களிடம் இருந்து தற்காத்து, `சொலாண்டியா’வின் பயணம் தொடர்ந்து வெற்றிகரமாக அமைய, இவனே முதற்காரணம். இவனது படைவீரர்களும் அபாரத் திறமைகொண்டவர்கள்.

p83b.jpg

பாப்பரிக்கோன் துறைமுகம், சரக்கு வர்த்தகத்தில் முக்கியமானது எனச் சொல்ல முடியாது. ஆனாலும் கப்பல்கள் பல நாட்கள் இங்கு தங்கிச் செல்வது வழக்கம். காரணம், இந்த நிலப்பரப்பின் தனித்த அடையாளமாக விளங்கும் யவன - இந்திய வம்சக் கலப்பால் உருவான அழகிகள். ஒரு சாயலில் யவனத் தேவதைகளாகவும் மறு சாயலில் இந்தியப் பதுமைகளாகவும் காட்சிதருபவர்கள். அவர்களின் படுக்கையைவிட்டு, கப்பல் மாலுமிகள் அவ்வளவு எளிதில் விலகுவது இல்லை.
நீலம் பூத்த கண்களையும் செழித்த கொங்கைகளையும் ஒருசேரப் பார்க்கும் எந்த ஆணும் அணைத்த கையைப் பிரித்து எடுக்க மாட்டான்.  வேறு வழியே இல்லாமல்தான் எபிரஸ் வெளியேறி கப்பலுக்கு வந்துசேர்வான். ஆனால், திரேஷியன் வந்துசேர அதன்பின் ஒரு வாரம்கூட ஆகலாம். 

`உடலே ஒரு மர்மக்குகைபோல் இருக்கிறது எபிரஸ். வெளிர்மஞ்சள் நிறங்கொண்ட யவன அழகிக்குள் நுழைந்து, கருமஞ்சள் நிறங்கொண்ட இந்தியப் பதுமையின் வழியே கரை சேர்ந்தேன்’ எனச் சொல்லியபடி கப்பலுக்கு வருவான்.  அவனைக் கோபம்கொள்ள முடியாது. ஏனென்றால், இந்தப் பயணத்தின் மிக ஆபத்தான பகுதி இனிமேல்தான் இருக்கிறது.

கச் வளைகுடா, ஆழமற்றது மட்டும் அல்ல... கூர்மையான பாறைகள் நிரம்பியதும்கூட. எந்த நேரத்திலும் கப்பலின் அடிப்பாகம் நொறுங்கும் ஆபத்து உண்டு. மிகக் கவனமாக அதைக் கடந்து சுபாகரா வந்து சேர வேண்டும்.  கரையை ஒட்டிப் பயணிக்கும் இந்தப் போக்குவரத்துதான், துருவங்களைக் கடந்த வணிகத்துக்கு அச்சாணியாக இருக்கிறது. ஆனால், அவற்றின் மிக ஆபத்தான பகுதிகளான மேலிமேடுவும் மங்களகிரியும் அடுத்தடுத்து உள்ளன. இதைக் கடற் கொள்ளையர்களின் நாடாக யவனர்கள் குறித்துவைத்துள்ளனர். இதைக் கடப்பதுதான் மொத்தப் பயணத்திலும் மிகச் சவாலான காரியம். இதை வெற்றிகரமாகக் கடந்துவிட்டால், அதன் பிறகு தீண்டிஸுக்கு வந்துவிடலாம். யவனர்கள் தொண்டியைத்தான், `தீண்டிஸ்’ என அழைத்தார்கள். அவர்கள் இந்த நிலப்பரப்புக்கு, சம்புத்தீவு அதாவது `நாவலந்தீவு' எனப் பெயர் இட்டிருந்தார்கள். நாவல் மரங்கள் அதிகம் இருக்கும் காரணத்தால் இந்தப் பெயர். இந்த நிலப்பரப்பு நாற்சதுர வடிவில் உள்ளது என்றும், இதில் அறுபத்தைந்து நதிகளும் நூற்றிப்பதினெட்டு நாடுகளும் உள்ளன எனவும் அவர்கள் குறிப்பு எடுத்துவைத்திருந்தனர். இந்த நாற்சதுரத்தின் ஒருமுனை திரும்பும் இடமே தொண்டி. 

இங்கு வந்துவிட்டால் அதன் பிறகு மிகப் பாதுகாப்பான பயணம் ஆரம்பம் ஆகும். அதுமட்டும் அல்ல, இந்த நெடும் பயணத்தின் முக்கிய வணிகமே இனிமேல்தான் உள்ளது. நாற்சதுரத்தின் முதல்முனையான தொண்டியை விட்டுத் திரும்பும் கப்பல்கள், அடுத்து முசிறியை அடையும். அதன் பிறகு சற்றுப் பயணித்து மறு திருப்பத்தில் குமரியை அடையும். அங்கு இருந்து கொற்கைக்குச் செல்லும். பின்னர் புகார் வந்துசேரும். கப்பலின் பெரும்பாலான பொருட்கள் இறக்கி - ஏற்றப்பட்டு, கப்பல்கள் மீண்டும் யவனத்தை நோக்கிப் பயணத்தைத் தொடங்கும்.

p83c.jpg

`சொலாண்டியா’ கப்பல், நற்பகலில் தொண்டி துறைமுகத்துக்குள் நுழைந்தது. பிரமாண்டமான கப்பலின் வருகை மிகத் தொலைவிலேயே கண்டறியப்பட்டுவிடும். பாய்மரத்தின் உப்பிய வயிற்றில் விலைமதிப்பற்ற வணிகத்தைச் சூல்கொண்டுவரும் யவனத் தேவதையைப்போல, `சொலாண்டியா’ வந்து நிற்கும். கடற் காகங்களின் கரைச்சல் அலையின் சத்தத்தையும் மிஞ்சிக்கொண்டிருக்க, எபிரஸ் நங்கூரத்தை இறக்க உத்தர விட்டான்.

சேரர் குலம், இரு வம்சாவழியாகப் பிரிந்து நாளாகிவிட்டது. முன்னவன் உதியன் பரம்பரை என அழைக்கப்பட்டான். வஞ்சியைத் தலைநகராகக்கொண்டு, முசிறியைத் துறைமுகப்பட்டணமாக அமைத்து அவன் ஆட்சி நடத்தினான். அவனது நாடு `குட்ட நாடு’ என அழைக்கப் பட்டது. பின்னவன் அந்துவன் பரம்பரை என அழைக்கப்பட்டான். மாந்தையைத் தலைநகராகக்கொண்டு, தொண்டியைத் துறைமுகப்பட்டணமாக அமைத்து அவன் ஆட்சி நடத்தினான். அவனது நாடு `குடநாடு' என அழைக்கப்பட்டது. இருவரும் சேரனின் வம்சக்கொடி தாங்களே என்று உரிமைகொள்வர்.  ஆனாலும் முன்தலைமுடி வைத்துக்கொள்ளும் உரிமை முன்னவனான உதியன் பரம்பரைக்கே இருந்தது.  

கடற்கரை மாளிகையில் ஓய்வு எடுத்துக்கொண்டிருந்தான் எபிரஸ். வழக்கம்போல் பவளக்கற்களும் ரசக்கண்ணாடிகளும் மதுப்புட்டிகளும் இறங்கிக்கொண்டிருந்தன. பதிலுக்கு அந்தத் துறைமுகத்தில் இருந்து ஏற்றப்படவேண்டிய பொருட்கள்... மிளகும் உதிரவேங்கை மரத்தின் பட்டைகளும்தான். குடநாட்டில் மிளகு விளையும் பகுதி அளவில் சிறியதே. அதனால், அந்தக் கடற்கரையில் சில திறளிமரப் படகுகளே நின்றன. உதிரவேங்கைப்பட்டை மிகுந்த மருத்துவக் குணம்கொண்டது. அதை யவனர்கள் முக்கியமாக வாங்குவர். இரு பொருட்களைச் சேர்த்தாலும் இங்கு நடக்கும் வர்த்தக மதிப்பு மிகக் குறைவுதான். எனவே, வேகமாக சரக்கை இறக்கிவிட்டுச் செல்வதிலேயே மாலுமிகளும் உடன் வந்துள்ள வியாபாரிகளும் தீவிரமாக இருப்பர். ஏற்றவேண்டிய பொருட்களை, திரும்பி வரும்போதுதான் ஏற்றுவர்.

பொருட்கள் எல்லாம் இறக்கப்பட்டுவிட்ட தகவல் கிடைத்ததும் எபிரஸ், மாளிகையில் இருந்து புறப்படத் தயார் ஆனான். அப்போது மாளிகைக்கு வந்தான் குடநாட்டு அமைச்சன் கோளூர்சாத்தன். தளபதிக்குரிய உடலமைப்பும், அமைச்சனுக்குரிய அறிவுக்கூர்மையும் ஒருங்கே அமையப்பெற்றவன். யவனத்துடனான குடநாட்டு வர்த்தகத்தை முதல்நிலைக்குக் கொண்டுவர வேண்டும் எனத் தீவிரமாக முயல்பவன். அவனுடன் இரு வணிகர்களும் வந்திருந்தனர்.

திரேஷியன், தனது கப்பலை நோக்கி வந்தான். அவன் வீரர்கள், தளபதிக்கு உரிய ஆயுத மரியாதையைச் செய்து அவனை கப்பலுக்குள் வரவேற்றார்கள். உள்ளே வந்த பிறகுதான் அவனுக்குத் தெரிந்தது எபிரஸ் இன்னும் வரவில்லை என்பது.

p83d.jpg

“எப்போதும் எனக்கு முன்னமே வந்துவிடுவானே, ஏன் தாமதம்?” எனக் கேட்டான். யாருக்கும் தெரியவில்லை. குடநாட்டு அழகிகளால் காலதாமதம் ஏற்பட வாய்ப்பு இல்லையே என யோசித்தபடி, அவனது மாளிகையை நோக்கி திரேஷியன் நடந்து போனான். வீரர்கள் அணிவகுத்துச் சென்றனர்.

காவலாளி கதவைத் திறக்க, மாளிகையின் உள்ளே நுழைந்தான் திரேஷியன். ஆச்சர்யம் நீங்காத நிலையில் எபிரஸ் உட்கார்ந்து இருந்ததைக் கண்டான். அவனது எதிர் இருக்கையில் கோளூர்சாத்தனும் வணிகர்கள் இருவரும் உட்கார்ந்து இருந்தனர். நடுவில் இருந்த பலகையின் மேல் தங்கத்தாலான வட்டத்தட்டில் `கொல்லிக்காட்டு விதைகள்’ வைக்கப்பட்டிருந்தன.

“புகார் சென்று திரும்புவதற்குள் நீங்கள் சேகரித்துவையுங்கள். இதற்கு என்ன விலை கொடுக்கவும் நான் தயார்!” என்று அவர்களிடம் சொல்லிவிட்டு எழுந்தான் எபிரஸ். கப்பல் நோக்கி அவனும் திரேஷியனும் பேசிக்கொண்டே வந்தனர்.

எபிரஸ் சொன்னான்... “ஒருவேளை இந்த வியாபாரம் கைகூடினால் தொண்டி துறைமுகம் பிற மூன்று துறைமுகங் களையும் வணிகத்தில் விஞ்சிவிடும். அதுமட்டும் அல்ல, நாம்தான் யவனத்தின் அதிசக்தியுள்ள மந்திர மனிதர்களாக மாறுவோம்.”

டம்ப மரத்தில் இருக்கும் முருகனை வழிபட்டுத் திரும்பும் பாரியிடம், “குடநாட்டு அமைச்சன் வந்திருக்கும் செய்தி சொல்லப்பட்டது. அவன் காத்திருந்த மாளிகையை நோக்கிச் சென்றான் பாரி. உடன் முடியனும் பெரியவர் தேக்கனும் வந்தனர். சேரகுலத்தின் அந்துவன் பரம்பரையின் மீது மட்டும் சிறுமதிப்பு, பறம்பு நாட்டுக்கு உண்டு. அதனால்தான் அவர்கள் அழைத்துவர அனுமதிக்கப்பட்டனர். கபிலர் வந்ததால் எவ்வியூரே கொண்டாட்டத்தில் திளைத்துக் கொண்டிருந்த நேரம் இது. பாரியின் மனம் பூத்துக் கனிந்திருந்தது. அறுபதாங்கோழி இன்னும் கிடைக்கவில்லை என்ற கவலை மட்டுமே மனதின் ஓரத்தில் இருந்தது. அதுவும் எந்த நேரத்திலும் சரியாகிவிடக்கூடியதுதான்.

மாளிகைக்குள் நுழையும் பாரியின் முகமலர்ச்சியைப் பார்த்த அமைச்சன், கோளூர்சாத்தன் அகமகிழ்வுகொண்டான். தான் வந்த காரியம் நல்லபடியாக முடியும் என்ற நம்பிக்கை அவனுக்கு ஆழமானது. அவன் கொண்டுவந்த பரிசுப்பொருட்களை பாரி அமரும் இருக்கைக்கு முன்பாகப் பரப்பி வைத்திருந்தனர். யவனத்தில் இருந்து வாங்கப்பட்ட ரசக்கண்ணாடி, நடுவில் வைக்கப்பட்டிருந்தது. கண்ணாடியின் மேல் இரண்டு யவன அழகிகளின் உருவங்களைக் கொண்ட மரவேலைப்பாடுகள் இருந்தன. இருக்கையில் அமரும் பாரியின் முகத்தைப் பிரதிபலிப்பதைப்போல அந்தக் கண்ணாடி வைக்கப்பட்டிருந்தது.

அமைச்சன் ஆரம்பித்தான்...

“பறம்பின் மாமன்னரை வணங்குகிறோம். குடநாட்டு வேந்தன், `குடவர்கோ’வின் அன்புப் பரிசை நீங்கள் ஏற்க வேண்டும்” என்று முன்னால் பரப்பி வைக்கப்பட்டிருந்தவற்றைப் பார்த்துச் சொன்னான்.
பாரியின் உதட்டோரம் தொடங்கிய மெல்லிய சிரிப்பு, முழுமைகொள்ளாமல் வேகமாக முடிந்தது.

“வந்ததன் நோக்கம்?”

காணிக்கையை ஏற்பதைப் பற்றி எந்தவித பதிலும் சொல்லாமல், பாரி கேள்விக்குள் போனது சற்றே ஆச்சர்யத்தைக் கொடுத்தது. அமைச்சன் சொன்னான், “குடநாட்டு வேந்தர், வணிகப்பேச்சு ஒன்றுக்காக என்னை அனுப்பிவைத்தார்.”

“வணிகம், இயற்கைக்கு விரோதமானதே! அதை ஏன் என்னிடம் பேசவந்தீர்கள்?”

அமைச்சன் எச்சில் விழுங்கினான்.

``வணிகம்தானே ஓர் அரசின் அச்சாணி. வணிகம் செழித்தால்தானே அரசு செழிக்கும். அரசு செழித்தால்தானே மக்கள் செழிப்பர்.”

“வணிகமே இல்லாததால்தான் நாங்கள் செழித்திருக்கிறோம்” என்று சொன்ன பாரி, சற்று இடைவெளிவிட்டுச் சொன்னான், “எந்த மன்னனின் காலடியிலும் பறம்பின் தட்டுக்கள் பணிந்துவைக்கப்பட்டது இல்லை என்பதை அறிவீரா?”
அமைச்சன், அதிர்ச்சி அடைந்தான். பாரி தொடர்ந்தான்...

“இயற்கை வழங்குகிறது; நாம் வாழ்கிறோம். இடையில் விற்கவும் வாங்கவும் நாம் யார்?’’

“கொள்ளாமலும் கொடுக்காமலும் எப்படி வாழ முடியும் மன்னா? பறம்பு நாட்டுக்குத் தேவையான உப்பை உமணர்களிடம் இருந்து நீங்கள் வாங்கத்தானே செய்கிறீர்கள்?”

p83f.jpg

“எங்களுக்குத் தேவையானதையும் அவர் களுக்குத் தேவையானதையும் பரிமாறிக்கொள்கிறோம். பகிர்ந்து உண்பதும் பரிமாறி வாழ்வதும், இயற்கை நமக்குக் கற்றுக்கொடுத்தவை.”

“அதுதானே வணிகமும்.”

“இல்லை... பரிமாற்றம் என்பது தேவை சார்ந்தது. வணிகம் என்பது ஆதாயம் சார்ந்தது.  ஆதாயம் மனிதத்தன்மையற்றது; மாண்புகளைச் சிதைப்பது. யவன அழகிகளை எனது காலடியில் வந்து பரப்ப உங்களைத் தயார்செய்வது. இதனினும் கீழ்மை அடையத் தூண்டுவது” எனச் சொன்ன பாரி, சற்றே குரல் உயர்த்திச் சொன்னான்... “நான் சொல்வது விளங்கவில்லையா? எனது காலடியில் யவன அழகிகளின் சிற்பத்தைப் பரப்புகிற உன் மன்னன், இதைவிட பெரிய ஆதாயத்துக்காக வேறு யாருடைய காலடியில் எவற்றை எல்லாம் பரப்புவான்?”

அமைச்சனின் நாடி நரம்புகள் ஒடுங்கின.

“நாட்டை ஆள்பவர்கள் நீங்கள். அமைச்சர் களாகிய நாங்கள் உங்களின் சொற்கேட்டுப் பணியாற்றுபவர்கள்” - தற்காத்துப் பதில் சொன்னான் அமைச்சன்.

“நாங்கள் ஆள்பவர்கள் அல்லர்; ஆளப்படு கிறவர்கள். இயற்கைதான் எங்களை ஆள்கிறது.”

சற்று மெளனத்துக்குப் பிறகு அமைச்சன் சொன்னான், “உங்களையும் பறம்பு நாட்டையும் எந்தக் கணமும் அழிக்கத் துடித்துக்கொண்டிருக்கிறான் குட்டநாட்டு அரசன் உதியஞ்சேரல். அவனே இப்போது யவன வணிகத்தில் உச்சத்தில் இருக்கிறான். அவனிடம் சேரும் ஒவ்வொரு செல்வமும் பறம்பு நாட்டுக்கு எதிரான போர் ஆயுதமே. வணிகத்தில் அவனை விஞ்ச குடநாட்டுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. நீங்கள் எங்களுக்கு உதவினால், எங்களால் அதைச் சாதிக்க முடியும். உதியஞ்சேரலைப் பின்னுக்குத் தள்ள முடியும். நாங்கள் பறம்பின் நண்பர்கள். என்றும் உங்களுக்குத் துணை நிற்போம்.”

“எங்களை நீங்கள் எதிர்க்க முடியாததனால், நண்பர்கள் எனச் சொல்லிக்கொள்வதை ஏற்க மாட்டோம். நட்பின் பொருள் மிக ஆழமானது. உதியஞ்சேரலைப்போல வணிகத்தில் நீங்களும் பெரும்செல்வம் ஈட்டுவீர்களானால், இவ்வளவு பணிவுடன் பேசுமாறு உங்கள் மன்னன் சொல்லி அனுப்ப மாட்டான்.”

“அப்படி என்றால் எங்களுக்கும் குட்டநாட்டு அரசுக்கும் வேறுபாடு இல்லை என்று கருதுகிறீர்களா?”

“உண்டு... உதியஞ்சேரலின் தந்தை, என்னால் கொல்லப்பட்டவன்; உங்கள் மன்னனின் தந்தை என்னால் வாழ அனுமதிக்கப்பட்டவன். அதுமட்டுமே உங்கள் இருவரின் அணுகுமுறை வேறுபாட்டுக்குக் காரணம். வேறு அடிப்படைக் காரணங்கள் இல்லை.”

புறப்படவேண்டிய நேரம் வந்துவிட்டதை அமைச்சன் உணர்ந்தான்.

“ஒன்று மட்டும் சொல்ல வேண்டும் எனத் தோன்றுகிறது. சொல்ல அனுமதிப்பீர்களா?”

“என்ன?”

“உட்கார்ந்த கணத்தில் மூன்று முறை இந்த ரசக்கண்ணாடியை நீங்கள் பார்த்தீர்கள். உங்களை அறியாமலேயே உங்களின் கை, மீசையைச் சரிபடுத்திக்கொண்டது.  இந்த வேளையில் நீங்கள் தனித்து இருந்தால் அது உங்களை முன்னூறு முறை பார்க்கவைத்திருக்கும். உங்களின் தேவையாக அது மாறும். எது ஒன்றையும் தேவையானதாக மாற்றுவதுதான் வணிகம். வணிகத்திடம்தான் ஆசையின் திறவுகோல் உள்ளது. அதை வெல்லும் ஆற்றல் யாருக்கும் இல்லை.”

“இதுவரை நீ எங்களைப் பார்த்தது இல்லை. இப்போது பார்த்துவிட்டாய் அல்லவா? இதை வெல்லும் ஆற்றல்கொண்டவர்கள் இருக்கிறார்கள் என உலகுக்குச் சொல்.  நீ போகலாம்” - சொல்லிவிட்டு எழுந்தான் பாரி.

p83e.jpg

பாரியின் வருகையை, அவன் குடும்பமே எதிர்பார்த்துக் காத்திருந்தது. மாளிகையின் மூன்றாம் கதவு திறக்க, அவன் உள்நுழைந்தான். ஆவலோடு எதிர் நின்ற அங்கவை கேட்டாள், “என்ன தந்தையே இவ்வளவு நேரம்?”

“வணிகம் பேச குடநாட்டு மன்னன் ஆள் அனுப்பியிருந்தான்”.

அருகில் இருந்த ஆதினி சற்றே பதற்றமாகி பாரியின் முகத்தைப் பார்த்தாள். அங்கவை அம்மாவின் கரம் பற்றி சொன்னாள், “கபிலர் வந்திருப்பதால் தந்தை கோபம்கொண்டிருக்க மாட்டார். இல்லையா தந்தையே!”

“ஆம் மகளே... வணிகம் பேசித் திரும்பும் ஒருவனுக்கு, கை கால்கள் இருப்பதைப் பார்க்க எனக்கும் ஆச்சர்யமாகத்தான் இருந்தது.”

“என்ன வணிகம் பேச வந்தான்?”

“அதை நான் கேட்கவில்லையே மகளே.”

“அதனால்தான் அவன் தப்பிப் போயிருக்கிறான்.”  

பாரி, மாளிகையின் மையத்தில் இருந்த இருக்கையில் அமர்ந்தான். அவன் அருகில் வந்து அமர்ந்த இளையவள் சங்கவை, தந்தையின் கையை தனது மடியின் மேல் வைத்து சேவல் இறகால் மெள்ள வருடினாள். பாரி கேட்டான், “ஆவலோடு எதிர்பார்த்ததாகச் சொன்னீர்களே எதற்காக?”

மூவருக்குமே பாரியின் கேள்வி ஆச்சர்யத்தை உண்டுபண்ணியது.

“என்ன தந்தையே... வந்தவன் உங்களின் மனநிலையைத் தொந்தரவு செய்வதைப்போல் எதையும் கேட்டானா?”

“அப்படி எதுவும் இல்லை மகளே.”

“எங்களின் தந்தையை நாங்கள் அறிவோம். மறைக்க முயலாதீர்கள்?”

“இவ்வளவு தொலைவு மேல் ஏறிவந்து வணிகம் பேசுகிறான் என்றால், அவனது துணிவுக்குக் காரணம் அவனுடைய வலிமையாக இருக்காது.  அவன் பெற விளையும் ஆதாயமாக இருக்கும் எனத் தோன்றுகிறது. என்ன பொருளுக்காக வந்தான் என்பதைக் கேட்டிருக்க வேண்டும்.”

“அதற்காகக் கவலைகொள்ளாதீர்கள். வந்தவர்களைத் திருப்பி அனுப்ப, எல்லை வரை முடியனும் போயிருக்கிறான் அல்லவா... நிச்சயமாக அறிந்துவருவான்” என்றாள் ஆதினி.
சங்கவை, பாரியின் கைகளை இறகால் வருடியபடியே இருந்தாள்.

“என்ன மகளே, தந்தைக்கு வருடிக்கொடுக்கிறாய்?”

“ஆம் தந்தையே... சேவல் இறகால் வருடினால் சுகமாக இருக்கும் அல்லவா! அதனால்தான்...” 

“மயில் இறகுதான் வருடுவதற்கு ஏற்றது.”

“ஆனால் இந்த இறகுதானே உங்களுக்குப் பிடிக்கும்” எனச் சொன்னவள் தந்தையின் முகம் பார்த்துச் சொன்னாள், “இது சேவலின் இறகு. ஆனால், கோழியினுடையது.”
அப்போதுதான் பாரிக்குப் புரிந்தது.

“அறுபதாங்கோழி கிடைத்துவிட்டதா?” எனக் கத்தியபடி மகள்களை வாரி அணைத்தான் பாரி.

ல்லையைக் கடக்க, சிறிது தொலைவே இருந்தது. கோளூர்சாத்தன் குழுவினருடன் முடியனும் பறம்பின் வீரர்கள் சிலரும் வந்துகொண்டிருந்தனர். முன்னால் செல்லும் முடியனின் இடுப்பின் ஒருபக்கம் வாளும் மறுபக்கம் கொம்பும் தொங்கிக்கொண்டிருந்தன. அதைப் பார்த்தபடி வந்துகொண்டிருந்தான் கோளூர்சாத்தன்.p83g1.jpg

`விரி ஈட்டி, கேடயம், சூரிவாள் என எவ்வளவோ ஆயுதங்களை உருவாக்கி பிற நாடுகள் முன்னேறி விட்டன. இன்னும் இடுப்பில் கொம்பைக் கட்டிக்கொண்டு அலைகிற இந்த மலைவாசிக் கூட்டத்துக்கு வணிகத்தின் பயனை எப்படிப் புரியவைப்பது?’ என்ற எண்ணமே கோளூர் சாத்தனின் மனதில் ஓடிக்கொண்டிருந்தது.

முன்னால் போய்க்கொண்டிருந்த முடியன் கேட்டான், “எந்தப் பொருளுக்காக வணிகம் பேச வந்தீர்கள்?”

கோளூர்சாத்தனின் முகம்  மலரத் தொடங்கியது. தனக்குள் ஓடியதுபோலவே வணிகம் சார்ந்த எண்ணமே இவனுக்குள்ளும் ஓடியிருக்கிறது. அந்த ஆர்வத்தில்தான் கேட்கிறான். அதை ஊதிப் பெரிதாக்கிவிடலாம். இன்று இல்லாவிட்டாலும் நாளை உதவும் என எண்ணினான். உடன்வந்த வணிகனைப் பார்த்துக் கை அசைத்தான். அதில் ஒருவன் தனது இடுப்பில் முடிச்சிட்டிருந்த கொல்லிக்காட்டு விதையை எடுத்துக் கொடுத்தான்.

அதை வாங்கிய முடியனின் கை நடுங்கியது. கண்கள் நம்ப மறுத்து அந்த விதையைக் கூர்ந்து பார்த்துக்கொண்டே இருந்தன. உயிரற்ற குரலில் கேட்டான், “என்ன விலை கொடுத்திருந்தாலும் மதங்கன் இதை விற்றிருக்க மாட்டான். அவனை என்ன செய்தீர்கள்?”

கோளூர்சாத்தன் அசட்டுச் சிரிப்போடு கேட்டான், “உனக்கு என்ன வேண்டும் கேள்?”

த்திமதுவும் அறுபதாம்கோழியின் கறியும்  கபிலருக்கு விருந்தாக்கப்பட்டன. அவருக்கு அரண்மனையில் நடக்கும் முதல் விருந்து. பாரி மனைவி ஆதினியும் மகள்கள் அங்கவையும் சங்கவையும் கபிலரை இன்றுதான் சந்திக்கின்றனர். இந்த நாளுக்காகத்தான் அவர்கள் தவியாய்த் தவித்திருந்தனர்.

அரண்மனையின் மேல்வட்ட அறையில் இரவு எல்லாம் ஆட்டமும் கூத்துமாக இருந்தது. வேட்டூர் பழையனுக்கும் நீலனுக்கும் அறுபதாங்கோழியின் கறித்துண்டு ஆளுக்கு ஒன்று கிடைத்தது. பாரிக்குத்தான் அதுவும் இல்லை. கபிலர் சொன்னார், “உன்னோடு சேர்ந்து கள் அருந்தும் நாள்தான் வாழ்வின் திருநாள் என்று நீலன் சொன்னான்” என்றார். பெருங்குவளை நிறையக் கள்ளினை ஊற்றி, அதை நீலனுக்குக் கொடுத்தபடி பாரி சொன்னான், “உனக்கு கள் ஊற்றிக் கொடுக்கும் இந்த நாள்தான் என் வாழ்வின் திருநாள்.”

நீலன் மெய்சிலிர்த்து நின்றான். பெரியவர் தேக்கன் சொன்னார், “கபிலருக்குத் தோள்கொடுத்த பாரி உனக்குத்தானடா கள் கொடுத்தான்.”

எல்லோரும் சிரித்து மகிழ்ந்தனர்.

“முடியன் ஏன் இன்னும் வரவில்லை?’’ எனக் கேட்டான் பாரி.

றம்பு நாட்டின் வட எல்லையில், குடநாட்டுக்கு உள்நுழையும் இடத்தில் தோளில் இருந்து பொங்கும் குருதியை மறுகையால் பொத்தியவாறு கதறிக்கொண்டே ஓடினர் கோளூர்சாத்தனும் இரு வணிகர்களும். அங்கு இருந்த பனைமரத்தில் வெட்டப்பட்ட மூவரின் கைகளையும் தொங்கவிட்டுக்கொண்டிருந்தான் முடியன்!

- பறம்பின் குரல் ஒலிக்கும்...

http://www.vikatan.com/anandavikatan

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒருமாதிரி அறுபதாங் கோழி அகப்பைக்குள் வந்து விட்டது....!  tw_blush:

Link to comment
Share on other sites

வீரயுக நாயகன் வேள்பாரி - 11

 
இத்தொடரின் மற்ற பாகங்கள்:
 

சு.வெங்கடேசன், ஓவியங்கள்: ம.செ.,

 

ருள் விலகாத இரவின் கடைசி நாழிகையில், கபிலரை எழுப்ப அவரது அறை நோக்கி வந்துகொண்டிருந்தான் வீரன் ஒருவன். அவனது காலடி ஓசை மிகத் தொலைவில் இருந்தே கேட்கத் தொடங்கியது. படுக்கையில் இருந்து மெள்ள  அசைந்தார். ஓசை, அறைக்குள் நுழைவதற்குள் எங்கு இருந்தோ வந்த மலரின் மணம் அவரது மூக்குக்குள் ஏறியது. சற்றே மூச்சை இழுத்து முகர்ந்தார். காலடி ஓசை அருகில் வந்து நின்றது.

p135a.jpgநள்ளிரவில் மலரும் மயிலை மலரின் மணம். நள்ளிரவு மலருக்கு எனத் தனிக் குணங்கள் உண்டு அது வண்ணங்களை எல்லாம் வாசனையாக்கி ஒளி வீசக்கூடியது. ஆம்பலும் முசுண்டையும் நள்ளிரவிலே பூப்பவை. ஆனாலும், மயிலையின் தனித்துவ மிக்க வாசத்துக்கு அவற்றை இணைசொல்ல முடியாது. மயிலையின் மணம் அறை எங்கும் பரவியது. காட்சிக்கு முன்பே நறுமணத்தால் இதயம் நிரம்பியது. அகமகிழ்வோடு கண் விழித்தார் கபிலர்.

மலர்க் கூடையை அறையில் வைத்துவிட்டு ஒரு பெண் வெளியேறினாள். அருகே வந்த வீரன் சொன்னான், “பறம்பின் தலைவர் உங்களை அழைத்துவரச் சொன்னார்”. மலர் மணத்தோடு இணைந்தது இனியவனின் அழைப்பு. சிறிது நேரத்தில் வருவதாகக் கூறினார்.

மாளிகையின் முகப்பில் தயாராக நின்றுகொண்டிருந்தான் பாரி. கபிலர் வெளியேறி வந்ததும், ``வாருங்கள் போகலாம்” என உற்சாகமாக அழைத்துச் சென்றான். இரவின் கடைசி இதழ் இப்போதுதான் உதிரத் தொடங்கியிருந்தது. தீப்பந்தங்களை அணைக்க வீரர்கள் மூடுகுவளைகளோடு போய்க்கொண்டிருந்தனர். பறவைகளின் சத்தம் இன்னும் வெளியேற வில்லை. எவ்வியூரின் நடுவீதியின் வழியே கபிலரை அழைத்துக்கொண்டு மேலே ஏறினான்.

பாரி அணிந்திருந்த உடையில் இருந்து நறுமணம் பரவியது. அறைக்குள் நிரம்பியிருந்த மயிலையின் மணத்தை அது விஞ்சியது. வீதியில் நடக்கும்போதுகூட வாசனை கரையாமல் ஆடையோடு வந்துகொண்டிருக் கிறது. கபிலரை எவ்வியூரின் மேலே இருக்கும் உச்சிப்பாறைக்கு அழைத்துச் சென்றுகொண்டி ருந்தான் பாரி. நாய்களின் குரைப்பொலி அங்கும் இங்குமாகக் கேட்டுக்கொண்டிருந்தது. அவர்கள் மேல்நோக்கி நடந்துகொண்டிருந்தனர்.

புலர்காலையில் வீதிகளின் உள்ளழகை ரசித்தபடி நடந்துகொண்டிருந்த கபிலர், பாரியிடம் கேட்டார், “யவனத்தில் இருந்து நறுமண எண்ணெய்களை வாங்கி, பூசிக் கொள்ளும் வேந்தர்களையும் பெரு வணிகர்களையும் அறிவேன். ஆனால், அந்த வாசனைகூட இவ்வளவு மணமூட்டுவதாக நான் உணர்ந்தது இல்லை. உனது ஆடையின் வாசனை அளவற்ற நறுமணத்தைப் பரப்புகிறதே...”

“அதிகாலைக் காற்று மணம்கொண்டுதானே மிதந்துவரும். அதனால் இருக்கலாம்.”

“இல்லை. காலடியோசை என்னை எழுப்பியபோது காற்றில் கலந்திருந்த மெல்லிய மணத்தை நான் உணர்ந்தேன். பின்னர் மயிலையின் மணத்தால் அறையே நிறைந்தது. அதை நுகர்ந்த எனது மூக்கு அதைவிடச் சிறப்பான ஒரு மணத்தைக் கண்டறியாதா என்ன?”

p135.jpg

இருவரும் உச்சிப்பாறையின் அருகே வந்தனர். வெளிச்சம் மெள்ளப் பரவிக்கொண்டிருந்தது. பறவைகளின் குரல் கேட்கத் தொடங்கியது. பாரி சொன்னான், ``தாழை மலரில் பெண் பூ, ஆண் பூ இருக்கின்றன அல்லவா? அவற்றுள் ஆண் பூவின் அரும்பு மிகவும் மணமூட்டக்கூடியது. காய்ந்த ஆண் பூவின் இதழ்களை ஆடைகளுக்குள் போட்டுவைத்தால், சிறுபூச்சிகள் ஆடைக்குள் நுழையாது. அதுமட்டும் அல்ல; நல்ல மணமூட்டி யாகவும் அவை இருக்கும். இவை எல்லாம் சொல்லத்தான் கேள்வி. இப்போது நீங்கள் சொல்வ தால்தான் இவ்வளவு மணம் வீசுவது தெரிகிறது. எங்களுக்கு இது பழகிவிட்டதால் தெரியவில்லை” எனச் சொல்லியபடி, பாறையின் மேலே கபிலரைக் கைதூக்கி ஏற்றினான் பாரி.

கைபிடித்து மேலேறியபடி கபிலர் கேட்டார் ``பெண் பூவைவிட அதிக மணம் வீசும் ஆண் பூ ஆடையின் மீது இருக்கிறதா... ஆடையை அணிந்திருக்கிறதா?”

பாரி சற்றே வெட்கப்பட்டு அந்தக் கேள்வியைக் கடந்தான். இருள் அகன்று எவ்வியூரின் மீது வெளிச்சம் பரவிக்கொண்டிருந்தது. கபிலர் உச்சிப்பாறையில் இருந்து நாற்புறமும் பார்த்தார். எவ்வியூரின் பேரழகு அவரது கண்களைச் சுழற்றிக்கொண்டிருந்தது. முழுவட்டமும் சுற்றியபோது நகரின் அழகில் தன்னை மறந்தார். இயற்கையான பாறை அமைப்புகளுக்கு ஏற்ப, மடித்து மடித்துக் கட்டப்பட்ட வீடுகள். இங்கொன்றும் அங்கொன்றுமாகக் கிளைபரப்பி நிற்கும் பெரும் மரங்கள். கரும்பாறைகளை அரணாகக்கொண்டு கட்டி எழுப்பப்பட்டுள்ள அரண்மனை.

அரண்மனை இருக்கும் தென்திசையில் மிகத் தொலைவில், மலை நோக்கிச் செல்லும் சாலையில் தேர் ஒன்று விரைந்துபோவது தெரிந்தது. அதைக் கவனித்த கபிலர் கைநீட்டியபடி பாரியைப் பார்த்தார். பாரி சொன்னான், ``அந்தப் பக்கம் இரு குன்றுகளுக்குப் பின்னால்தான் பாழி நகர் இருக்கிறது. அங்குதான் ஆயுதசாலைகள், பயிற்சிக்கூடங்கள், தொழிலகங்கள் எல்லாம் இருக்கின்றன. எவ்வியூரைவிட அதிகமான மக்கள் அங்கு வாழ்கின்றனர். விருந்தினர்கள் தங்கும் இல்லங்கள் அங்குதான் இருக்கின்றன. பாணர் கூட்டம் வந்து தங்கிச் செல்வது எல்லாம் அந்த இடத்தில்தான்.”

``பாழி நகரில்தான் வேளீர்கள் செல்வங்களை எல்லாம் பாதுகாத்து வைத்துள்ளனர் என்று கேள்விப் பட்டுள்ளேன். அங்குதான் இருக்கிறதா பாழி நகர்?”

கபிலரின் கேள்விகண்டு புன்னகைத்தான் பாரி. எங்கும் பறவைகளின் ஓசை கேட்டுக்கொண்டிருந்தது. கிழக்கு திசையைப் பார்த்தபடி நின்றிருந்த பாரி, மறுபக்கம் திரும்பாமல் கபிலரின் கேள்விகளுக்குப் பதில் சொல்லிக் கொண்டிருந்தான். கபிலரின் கண்கள் சுற்றிச்சுற்றிச் சுழன்றுகொண்டிருந்தன. வெளிச்சம் கொஞ்சம் கொஞ்சமாகக் கூடும்போது, கரும்பாறையின் மீதுள்ள நகரம் தனது மேனியின் எழிலைக் கூட்டிக் கொண்டிருந்தது. மக்கள், வீடுகளில் இருந்து வெளியில் வரத் தொடங்கினர். பறவைகளின் கீச்சுக்குரல்கள் காட்டையே எழுப்பிக் கொண்டிருந்தன. தீபத்தின் உச்சியில் இருந்து அடிபெருத்த அகல்விளக்கைப் பார்ப்பதைப் போன்று இருந்தது அந்த நகரம். இளங்காற்று உச்சிப்பாறையைத் தழுவி மேலே ஏறியபடி இருந்தது.

கபிலர், “காணக் கிடைக்காத காட்சி” என்றார்.

கிழக்கு திசையைப் பார்த்து நின்று கொண்டிருந்த பாரி, அவரின் தோள் தொட்டுத் திருப்பினான். கபிலர் கிழக்குப் பக்கமாகத் திரும்பும்போது பாரி சொன்னான், “இப்போது நீங்கள் காணப்போவதுதான் காணக் கிடைக்காத காட்சி.”
கபிலர் இன்முகத்தோடு கிழக்கு திசை பார்த்தார். எல்லா திசைகளிலும் இருக்கும் அதே அழகோடுதான் எவ்வியூரின் கிழக்கு திசையும் இருந்தது. ‘இதில் கூடுதல் சிறப்பு என்று பாரி சொல்வது எதை?’ என்று கபிலரின் கண்கள் தேடிக்கொண்டிருந்தன.

p135b.jpg

கிழக்கு திசையில் ஆதிமலைக்கு நடுவே இருந்த மெல்லியப் பிளவின் வழியே சூரியனின் செந்நிறக் கதிர் மெள்ளக் கசிந்துகொண்டிருந்தது. பார்க்கும் கணத்தில் ஒளிபெருகிக் கூரிய வாள்போல் பாய்ந்து வந்தது. கபிலர் இமைகொட்டாமல் பார்த்தார். எவ்வியூரின் கிழக்குப் பகுதி இருளை இரண்டு துண்டாக்கியது. `காணக் கிடைக்காத காட்சி’ என்று கபிலரின் வாய் முணுமுணுத்துக்கொண்டிருக்கும்போது அந்தக் கூரிய ஒளி வாள் கபிலரின் மார்பில் இறங்கியது. கபிலரின் நாடிநரம்புகள் எல்லாம் சிலிர்த்தன. மெய்மறந்து இரு கைகளையும் மேலே உயர்த்தினார். எவ்வியூரின் அடிவாரம் வரை இரு திசைகளும் அவரது கரங்களின் நிழல் படர்ந்து அசைந்தது. கதிரவனைப் பார்த்து அவர் கைகளை உயர்த்தி வணங்கினார்.

பெருங்குலவை ஒலி எவ்வியூர் முழுக்க மேலெழுந்தது. நான்கு திசை வாயில்களில் இருந்தும் பறைகள் முழங்கின. முழவின் ஓசையில் காடு நடுங்கியது. மக்கள் எல்லோரும் தங்களின் வீடுகளின் மேலேறி குலவையிட்டு அந்த அருங்காட்சியைக் கண்டு மகிழ்ந்தனர். துல்லியமான இடத்தில் கபிலரை நிறுத்திய பாரி, ஈரடி கீழிறங்கி நின்று அண்ணாந்து பார்த்தான். `பேரறிவின் தீச்சுடர் இதுதானா?’ நினைக்கும்போதே மெய்சிலிர்த்தது பாரிக்கு.

கணநேரத்துக்குள் பிளவின் மேல்விளிம்பை சூரியன் தொட்டவுடன் அந்த ஒளி வாள் மறைந்தது. எங்கும் புலர்மஞ்சள் நிரம்பியது. கபிலர் உறைந்துபோய் நின்றார். மக்கள் கூட்டம் கூட்டமாகப் பாறையை நோக்கி வரத் தொடங்கினர். குலவைச்சத்தம் எங்கும் எதிரொலித்தது. பாரி, உச்சிப்பாறையின் மீதேறி கபிலரின் அருகில் வந்தான். 

“நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை, தெற்கு ஓட்டக்காலத்தின் ஆறாம் நாளில் ஆதிமலையில் உள்ள பெருங்கடவின் நடுவில் இருந்து கதிரவன் வேலெழும்பி வருவான். நெருப்பை உருக்கி ஊற்றியதைப்போல கண்ணிமைக்கும் நேரத்தில் நீளும் ஒளி வாள். அரை நாழிகை நேரம் மட்டுமே  நீண்டிருக்கும். கதிரவன் ஒளி வாளை எவ்வியூரின் மேல் இறக்கிய மூன்றாம் நாள் கொற்றவைக் கூத்து தொடங்கும்”  என்று கூறிவிட்டு இறங்கி நடந்தான் பாரி.

திரண்ட மக்கள் கூட்டம் உணர்ச்சிப் பெருக்கோடு குலவையிட்டபடி அவன் பின்னே சென்றுகொண்டிருந்தது. அவர்கள் அரண்மனைக்குள் நுழையும் வரை பார்த்துக்கொண்டிருந்தார் கபிலர்.

p135d.jpg

இயற்கையைப் பற்றிய வியப்பு, பாரியின் சொல்கேட்ட கணத்தில் இயற்கை அறிவைப் பற்றிய வியப்பாக மாறியது. வானியல் வசப்படுவதுதான் கணிதத்தின் உச்சம். கணிதம் வசப்படுதல் அறிவின் உச்சம். நோக்கறிவு கொண்டு விண்மீன்களைக் கணித்தலும்,  கதிரவனின் நகர்வை அளத்தலும் மனிதனின் அபாரச் சாதனை. இந்தச் சாதனைகளைச் சொந்தமாக்கிவைத்துள்ளவர்கள் மூவேந்தர்கள். வானியலையும் கணிதத்தையும் தலைமுறை, தலைமுறையாகக் கற்று ஆளும் ‘கணியர்கள்’ அவர்களிடமே இருக்கின்றனர். அதனால்தான் நீரும் நிலமும் வானும் வேந்தர்களுக்கு வசப்பட்டிருக்கின்றன. ஆனால், இந்தப் பேரறிவு, சின்னஞ்சிறு வேளீர் கூட்டத்துக்கு எப்படி வசப்பட்டது?

ஒரு வாரத்துக்கு முன்பே கொற்றவைக் கூத்து தொடங்கப்போவது பற்றி வேட்டூர் பழையன் சொன்னது கபிலருக்கு நினைவு வந்தது. ‘நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை அரை நாழிகை நேரம் மட்டுமே நிகழும் ஒளி  வாளின் கோலக்காட்சியை நாளும் நேரமும் தவறாமல், எப்படி இவர்கள் கணக்கிட்டனர்?’ அடுத்தடுத்து எழுந்த கேள்விகள் கபிலரைத் திக்குமுக்காடச் செய்தன.

கதிரவன் தகதகத்து மேலேறிக்கொண்டிருந்தான். திகைப்பில் இருந்து மீளா கபிலர் சிறிது நேரத்துக்குப் பின்னர் பாறையைவிட்டு கீழே இறங்கினார். அவரை அழைத்துச்செல்ல வீரர்கள் நின்றிருந்தனர். ஊரின் தென்திசைக்குப் போய்விட்டு அரண்மனைக்கு வருவதாகச் சொல்லி அவர்களை அனுப்பினார்.

அவரைச் சந்திக்கக் காத்திருந்த மக்களுடன் ஆங்காங்கே நின்று பேசியபடி கீழே இறங்கிக்கொண்டிருந்தார். ஒவ்வொருவரும் அவருடன் பெரும் மகிழ்வைப் பகிர்ந்து கொண்டனர். தென்திசையின் அடிவாரம் வந்துசேர்ந்தவர், அரண்மனையை நோக்கி நடக்கத் தொடங்கினார்.

பாண்டிய நாட்டுப் பெருங்கணியன் திசைவேழரின் நினைவு வந்தது. நீளும் நிழல்கொண்டு உலகை அளக்கும் அவரை கபிலர் தன் ஆசான்களில் ஒருவராக எண்ணுவார். கண்சிமிட்டாத விண்மீனைப்போல வானத்தைப் பார்த்துக்கொண்டே இருக்கும் வானியலாளர்; தலைமுறை தலைமுறையாகச் சேகரித்த அறிவுச்சேகரத்தின் உறைவிடம். கபிலர், அந்த வான் உழவனின் தாள்பணிந்து பாடிய கவிதைகள் ஏராளம். அவர்தம் முன்னோர்கள் கண்டறிந்து பெயர்சூட்டிய வெள்ளியைக் கண்டுதான் இன்று நாளும் நேரமும் கணிக்கப்படுகின்றன.

 

வானம், மிதந்துகொண்டிருக்கும் ஒரு மாயத்தட்டு; கற்பனைக்கு எட்டாத பேருலகு. மனிதன் தனது அறிவால் அதைக் கணிப்பது என்பது நம்ப முடியாத அதிசயம். தரத்தரவென தனது கையை இழுத்துக்கொண்டுபோய் இயற்கையின் கூர்முனையின் எதிரில் துல்லியமாக நிறுத்திவிட்டான் பாரி.

‘பெருங்கணியன் திசைவேழர் இந்த நாளில் தன்னோடு இருந்திருந்தால் எப்படி இருந்திருக்கும்? பாரியைக் கட்டி அணைத்திருப்பார். நாட்டுத் தலைவர்கள் யாருக்கும் இல்லாத நாள் அறிவும் கோள் அறிவும் பாரியிடம் இருப்பதைக் கண்டு திகைத்திருப்பார்.

திசைகள் மட்டுமே திகைப்பை ஏற்படுத்தக்கூடியவை. திக்குத்தெரியாத திகைப்பை நிலமும் கடலும் வானும் ஒவ்வொரு கணத்திலும் உருவாக்கும். அந்தத் திகைப்பை வெல்லத் தெரிந்தவர்களே திசையாளும் கணியர்கள். எனவே, அவர்கள் மனிதர்களைக் கண்டு ஒருபோதும் திகைக்க மாட்டார்கள். ஆனால், இன்று பாரியின் செய்கையை பெருங்கணியன் கண்டிருந்தால், திகைக்காமல் இருந்திருக்க மாட்டான்’ என எண்ணியபடி இடப்புற வீதியின் வழியே திரும்பி நடந்தார் கபிலர்.

எதிர் வந்த பெண் ஒருத்தி கை நீட்டி அவரின் பாதையை மறித்தாள். விலகிப்போக முயல்கிறாளோ என நினைத்த கபிலர் வலப்புறம் நகர்ந்தபோது, அவள் இன்னொரு கையையும் நீட்டி வழியை அடைத்தாள்.

பெருங்கணியன் இரு பக்கங்களும் கைகளை விரித்து நீளும் நிழலின் நகர்வுகளைத் தனக்குச் சொல்லிக்கொடுத்தது நினைவுக்கு வந்தது. உள்மனதில் கணியனின் உருவம் படிந்திருக்க, அந்தக் கையை விலக்கி நடக்க முயன்றார். ஆனால், அந்தப் பெண்ணின் கைகள் அவருக்கு இடம் தரவில்லை. மறித்த கைகள் தட்டி நின்றன. 

அப்போதுதான் கணியனின் நினைவில் இருந்து மீண்டு அந்தப் பெண்ணை உற்றுப் பார்த்தார் கபிலர். நேர்கொண்டு பார்த்த அந்த இளம்பெண்ணின் கண்கள் கோபத்தைக் கக்கின.

“ஏனம்மா வழி மறிக்கிறாய்?”

கபிலரின் கண்களையே கூர்ந்து பார்த்தாள்.

``பாரியிடம் நட்புக்கொள்ளும் தகுதியுண்டோ உம்மிடம்?”

கபிலர் அதிர்ந்துபோனார். நெஞ்சில் கூர்மைகொண்டு இறங்கியது சொல்.

``ஏனம்மா இப்படிக் கேட்கிறாய்... என்ன தவறு இழைத்தேன் நான்?”

மெளனத்தின் வழியே கபிலரின் அதிர்ச்சியை அதிகப்படுத்தினாள். எந்த வகையிலும் அவளின் கோபத்துக்கான காரணத்தை கபிலரால் தொடர்புபடுத்திக்கொள்ள முடியவில்லை.

p135c.jpg

``எவ்வளவு பதற்றமான சூழ்நிலையிலும் கார்காலத்து இரவில், இங்கு இருந்து பாழி நகருக்குத் தேர் ஏறிச் செல்ல மாட்டான் பாரி. தெரியுமா உமக்கு?”

கபிலர் பதில் எதுவும் சொல்லாமல் அவளின் கண்களையே பார்த்தார். அவள் தொடர்ந்தாள்.

“கார்காலத்து இரவுகளில் மான்கள் இணை சேரும். தனது தேரின் ஒலி அவற்றின் இணக்கத்தைக் குலைத்துவிடும் என்பதால், தேரில் செல்ல மாட்டான். ஆனால், உமது செயல் அதற்கு நேர் எதிராக இருக்கிறது.”

இளம்பெண் உதிர்த்த சுடுசொல் கண்டு அஞ்சினார் கபிலர்.

“யான் செய்த பிழை என்ன மகளே?”

அவளின் கண்கள் குளமாகின.

``அழகிய பூக்காடாக இருந்த எம் காதலில் புயல்காற்று வீசச் செய்துவிட்டீர்.”

``கலங்கி நிற்கும் உனது கண்கள் என்னைப் பதறவைக்கின்றன. எனக்கு விளங்கும்படி சொல்.”

“உங்களால்தான் அவன் புகழின் உச்சியை அடைந்திருக்கிறான். எனது கைகள் தழுவிக்கிடந்த அவனது தோளின் மீது இப்போது பாரியின் கை கிடக்கிறது. புகழால் நிலை தடுமாறிக் கொண்டிருக்கிறது எனது காதல்.”

“நீ யாரைச் சொல்கிறாய்... உன் காதலன் யார்?”

“நீலன்.”

கபிலர் பெருமூச்சு விட்டார். சின்னதாக ஒரு சிரிப்பு உதட்டின் ஓரம் பரவியது. அவளோ வேகம் குறையாமல் தொடர்ந்தாள்.

p135e.jpg“சிறு கல்லைத் தாண்டுவதைப்போல இருபெரும் குன்றுகளைத் தாண்டி, நினைத்தபோது எல்லாம் என்னைப் பார்க்க வந்தவன், அடுத்த தெருவில் நான் இருப்பது தெரிந்தும் இன்னும் என்னை வந்து பார்க்கவில்லை. எந்தப் பெண்ணைப் பார்த்தாலும் அவனைப் பற்றித்தான் பேசுகிறாள். என் நீலனின் பெயர்கொண்டே என் நெஞ்சைச் சுடுகிறார்கள்.”

“உன் காதலன் பற்றி பெருமை பேசினால் நீ மகிழத்தானே வேண்டும். ஏன் கவலைகொள்கிறாய்?”

உடைந்து அழுதாள் அவள்.

“இந்தக் கேள்வியை நானே பலமுறை கேட்டுவிட்டேன். என்னால் விடை காண முடியவில்லை. அவனது உறுதியை நன்கு அறிந்தவள் நான். ஆனாலும் கைப்பற்ற அவனது கண்பார்வை கிடைக்காமல் தவிக்கிறேன்.”

குறுக்கிட்ட கைகளை மடக்கி பக்கத்தில் இருந்த வீட்டின் திண்ணையில் உட்கார்ந்தாள். நெஞ்சொடிந்து விழுவதைப்போல்தான் அது இருந்தது.

“எங்களின் குன்று எவ்வளவு அழகானது தெரியுமா? யார் கண்பட்டதோ தெரியவில்லை, பொழுது எல்லாம் எங்கள் காதல் செழித்து வளர்ந்த அந்த நிலத்தின் அடிவாரத்தில், ஒரு தேர் வந்து நின்றது.”
கபிலர், சற்றே சுதாரித்துப் பார்த்தார்.

“எனது மடி மீது தலைசாய்த்து இருந்தான். நான்தான், `யாரோ ஒருவர் தேரில் இருந்து இறங்கி வேட்டுவன் பாறையில் கால் பதிக்கிறார்’ என்றேன். எனது காதலின் அமைதியை எனது சொல்கொண்டே கெடுத்துவிட்டேன்” சொல்லிக்கொண்டிருக்கும்போது கண்ணீர் வழிந்தோடியது.

துடைத்தபடி தொடர்ந்தாள்... ``குயில்கள் கூவும் அந்த மாமர நிழலில், இதழ்விட்டு நழுவிப்போன அவனது மறுமுத்தத்துக்காக அன்று முழுவதும் காத்திருந்தேன். வரவில்லை. மறுநாள் அவன் ஊருக்குப் போனேன். `வந்திருப்பவருக்குக் காலில் அடிபட்டுள்ளது. நீ எவ்வியூருக்குப் போ. இரண்டு நாளில் நான் அவரை அழைத்துக்கொண்டு வந்துவிடுகிறேன். கொற்றவை விழா முடியும் வரை நாம் அங்கு மகிழ்ந்திருப்போம்’ ” என்று சொல்லி அனுப்பினான்.
கபிலர், தனது கதையைத் தானே கேட்டுக்கொண்டிருந்தார். ‘எனது காலடிக்குப் பின்னால் ஒரு காதல் நடந்து வந்திருக்கிறது. இவ்வளவு அழகிய இளம்பெண்ணின் இதழ்முத்தம் விலக்கிவந்தவனா, தசை பிறண்ட பின்னும் என்னைத் தாங்கிவந்தான்?’ - நீலன் மீதான மரியாதை இன்னும் கூடியது.

அவள் தொடர்ந்தாள்... “எவ்வியூருக்கு வந்த பின்பாவது நான் வாய் பொத்தியிருக்க வேண்டாமா? உனது காதலன் வருவானா எனக் கேட்ட எனது தோழியிடம், ‘கபிலர் என்று ஒருவர் கால் ஒடிந்துகிடக்கிறார். அவரை அழைத்துக்கொண்டு வர வேண்டுமாம். இரண்டு நாட்கள் ஆகும் என்று சொல்லி அனுப்பியுள்ளான் என்றேன்.”

கபிலருக்கு அவளை, ‘மகளே...’ என அணைத்துப் பிடித்துக் கதைகேட்க வேண்டும்போல் இருந்தது.

“எல்லாம் எனது போதாத காலம். எதைச் சொன்னாலும் அது பிரச்னையாக மாறித்தான் போகும். நான் சொன்ன சொல் பாரியின் காதுக்கு எட்ட, உடனடியாக என்னை அரண்மனைக்கு அழைத்துச்சென்று விசாரித்தனர். நான் கபிலருக்கு கால் ஒடிந்ததால், எனது காதலின் நாள் ஒடிந்த கதையைச் சொன்னேன். அவ்வளவுதான் இரவோடு இரவாக பாரியே புறப்பட்டு புலிவால் குகைக்குப் போய்விட்டான்.”

கபிலருக்கு ஆச்சர்யம் தாங்கவில்லை. தன்னை ஒருகை பிடித்து நீலன் அழைத்து வந்ததைப்போலவே, மறுகை பிடித்து இவளும் அழைத்துவந்திருக்கிறாளே என மகிழ்ந்து கிறங்கினார்.

p135f.jpg

“போதாத காலத்தைப் புலம்பித்தான் தீர்க்க வேண்டும் என்பார்கள். கபிலரை, பாரி தனது தோளில் ஏற்ற, என்னைத் தனது நெஞ்சில் ஏற்றிவைத்திருந்தவன் எங்கு சென்றானோ தெரியவில்லை.”

கண்ணீரைத் துடைத்தபடி சொன்னாள்... “ஊரே பேசுகிறது, நேற்று இரவு அவனுக்கு அறுபதாங்கோழிக்கறி விருந்து படைக்கப் பட்டதாம். உள்ளங்கையில் கஞ்சி காய்ச்சி அவனது உதடு விலக்கி ஊட்டிவிட்ட எனது அன்புக்கு இணையாகுமா இந்த உலகு? சொல்லுங்கள் அந்தக் கொடியவனை என்ன செய்யலாம்?”

கணநேரமும் தாமதிக்காமல் பதில் சொன்னார் கபிலர், “அது தெரியாமல்தான் நானும் விழித்துக்கொண்டிருக்கிறேன். நான் தங்கியுள்ள இடத்தில் என்னோடுதான் அவனும் தங்கியுள்ளான். நேரம் கிடைக்கும்போது எல்லாம், “மயிலா… மயிலா…” என்று எவளோ ஒருத்தியின் பெயரைச் சொல்லிப் புலம்பிக்கொண்டே இருக்கிறான். அந்தப் பெண்ணுக்கு நள்ளிரவு பூக்கும் மயிலை மலர் மிகவும் பிடிக்குமாம். முழுநிலா நாளில் மயிலம் பூச்சூடி, அவள் மீது காதல்கொண்டானாம். இன்று எப்படியாவது அவளைப் பார்க்க வேண்டும் என்பதற்காக எனக்குத் தெரியாமல், நான் கேட்டதாக அரண்மனையில் சொல்லி, மயிலை மலரைக் கொண்டுவந்து வைத்திருந்தான். இன்று காலை அவளுக்குச் சூட்டப்போயிருப்பான் என்று நினைக்கிறேன்.”

வெட்கமும் ஆசையும் பீறிட்டு மேலெழும்பியது. ஆடைகொண்டு கண்ணீர் துடைத்தாள். அதையும் மீறிச் சிந்தியது சிரிப்பு. மகிழ்வை மறைக்க மெனக்கிட்டாள். முடியவில்லை. கண்ணீர் வெடித்துக் காதலாக மலரும் அந்த அதிசயத்தை அருகே இருந்து ரசித்தபடி அவளின் கரம்பிடித்தார் கபிலர்.

“விடுமய்யா கையை, இன்னொரு நாளும் உம்மால் வீணாகிவிடக் கூடாது” எனச் சொல்லியபடி, பிடித்த கையை உதறிவிட்டு ஓடினாள் மயிலா!

- பறம்பின் குரல் ஒலிக்கும்...

http://www.vikatan.com/anandavikatan

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குயில் நிறத்தில் குதித்தோடும் மயில்....!  tw_blush:

Link to comment
Share on other sites

வரவுக்கும் தொடந்து வரும் உங்கள் கருத்துகளுக்கும் நன்றி..:)

On 29.12.2016 at 10:34 PM, suvy said:

குயில் நிறத்தில் குதித்தோடும் மயில்....!  tw_blush:

 

On 22.12.2016 at 0:25 PM, suvy said:

ஒருமாதிரி அறுபதாங் கோழி அகப்பைக்குள் வந்து விட்டது....!  tw_blush:

 

On 22.12.2016 at 0:25 PM, suvy said:

ஒருமாதிரி அறுபதாங் கோழி அகப்பைக்குள் வந்து விட்டது....!  tw_blush:

 

On 13.12.2016 at 9:02 PM, suvy said:

அறுபதாங் கோழி அடுத்த அத்தியாயத்திலாவது பிடிபடுமா.... அல்லது வேறு கோழியாவது .....! tw_blush:

 

On 18.11.2016 at 7:53 AM, suvy said:

வள்ளல் பாரியின் பறம்பு மலைப் பிரதேசம் மனதை அள்ளுது..... தொடருங்கள் நவீனன் ....! tw_blush:

 

On 3.11.2016 at 2:37 PM, suvy said:

புலவர் கபிலர் மற்றும் நீலனின் சம்பாஷணை அற்புதம். நிறைய விடயங்களைச் சொல்லியது....! tw_blush:

 

On 9.12.2016 at 6:18 AM, உடையார் said:

நல்ல தொடர் விறுவிறுப்பாக தொய்வில்லாமல் போகின்றது. நாவற் பழத்தில் இத்தனை வாகையுண்டா?
இவர்களின் மருந்துவத்தை வாசிக்க வியப்பாக இருக்கு

http://www.tamilvu.org/slet/l1281/l1281pd2.jsp?bookid=28&page=78

 

On 16.12.2016 at 0:39 AM, வந்தியத்தேவன் said:

"மெல்லியச் சிரிப்போடு பாரி சொன்னான்...  “குழந்தைகளிடம் விட்டுக்கொடுக்கும்போதும் தோற்கும்போதும்தான் ஓர் ஆண், தாய்மையை அனுபவிக்கிறான்.”

உண்மைதான்

 

Link to comment
Share on other sites

வீரயுக நாயகன் வேள்பாரி - 12

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
 

சு.வெங்கடேசன், ஓவியங்கள்: ம.செ.,

 

p99.jpg

ரு பொன்வண்டு கூட்டுக்குள் நுழைவதைப்போல் இருந்தது. விளிம்பில் கருமைகொண்டு நீண்டுகிடந்த மரக்கிளைகள், அந்தப் பொன்வண்டின் எண்ணற்ற கால்கள் எனக் காட்சியளித்தன. மாளிகையின் மேல்மாடத்தில் நின்றபடி, மேற்குத் திசையில் மலையில் மறையும் சூரியனைப் பார்த்துக்கொண்டிருந்தார் கபிலர். கண்கள், ஊர்ந்து இறங்கும் பொன்வண்டைப் பார்த்துக்கொண்டிருந்தாலும், மனம் முழுவதும் காலைச் சூரியனே நிறைந்திருந்தான்.  அருகில் யாரோ வரும் காலடி ஓசை கேட்டுத் திரும்பினார்.

``மறையும் கதிரவனிடம் ஒளி வாளை ஒப்படைத்துக்கொண்டிருக்கிறீர்களா?”- கேட்டுக்கொண்டே இன்முகத்தோடு வந்தான் பாரி. இருவரும் பேசியபடியே இருக்கையில் அமர்ந்தனர்.

பாரி கேட்டான்... “காலையில் உச்சிப்பாறை ஏறியதும் மேற்குத் திசையைப் பார்த்தபடி, ‘காணக்கிடைக்காத காட்சி’ எனச் சொன்னீர்களே... எதைச் சொன்னீர்கள்?”

சற்றே யோசித்த கபிலர், “அதுவா… மேலே ஏறியதும் முதலில் கண்ணில்பட்டது கோட்டைச்சுவரே இல்லாத இந்த நகர அமைப்புதான். இப்படி ஒரு தலைநகர் உலகில் எவ்வியூர் மட்டுமாகத்தான் இருக்கும்.”

``எதிரிகளிடம் இருந்து தற்காத்துக்கொள்ள, கோட்டைச்சுவர் எதுவும் எங்களுக்குத் தேவை இல்லை. ஏனென்றால், எங்களின் ஒத்துழைப்பும் உதவியும் இல்லாமல், யாரும் இந்தப் பெரும்காட்டையும் மலைமுகடுகளையும் கடந்து இங்கு வந்துவிட முடியாது அல்லவா?”

பாரியின் கேள்வியை ஆமோதித்தார் கபிலர்.

``அதே நேரம் காட்டு உயிரினங்களிடம் இருந்து உங்களுக்குப் பாதுகாப்பு தேவை.அதற்காகவாவது சுவர் எழுப்பியிருக்கலாமே?”

``அதன் பொருட்டுத்தான் எழுப்பியுள்ளோம்.”

``எங்கே எழுப்பியிருக்கிறீர்கள்... என் கண்களுக்குத் தெரியவில்லையே. எதுவும் மாயச்சுவர் கட்டியுள்ளீர்களா?”

பாரி சிரித்தான்.

``உங்களின் கண்களுக்குத் தெரிகிறது. ஆனால், அதுதான் சுவர் என்பதை உங்களின் எண்ணம் ஏற்க மறுக்கிறது.”

கபிலர், உட்கார்ந்த இடத்தைவிட்டு எழுந்து பார்த்தார். அவரைக் கவனித்தபடி பாரி கேட்டான்... “இந்தக் காட்டில் எத்தனை வகையான விலங்குகள் இருக்கின்றன என்று யாருக்குத் தெரியும்? காட்டுவிலங்குகளால் உடைத்து நொறுக்கவோ, தாவிக் கடக்கவோ முடியாத ஒரு கோட்டை மதிலை மனிதனால் கட்டிவிட முடியுமா? கார்காலத்தில் மூன்று `குளகு’ தின்ற ஒரு பெண் யானை, எவ்வளவு பெரிய கற்கோட்டையையும் தகர்க்கும். `அதிங்கத்தை’த் தின்ற ஆண் யானைக் கூட்டம் உள்நுழைந்தால், பெரும்மலையும் கிடுகிடுக்கும். மரமேறி உயிரினங்களால் தாவிக் கடக்க முடியாத தடுப்புச்சுவரை எழுப்ப முடியுமா? இந்த மலைத்தொடர் வடதிசையிலும் தென்திசையிலும் எவ்வளவு தொலைவு நீண்டுகிடக்கிறதோ, யார் அறிவார்? இடையில் ஒரு சிறு பகுதியில் பறம்பு நாடு இருக்கிறது. எண்ணிக்கையில் அடங்காத விலங்குக் கூட்டங்கள் நாள்தோறும் இடமும் வலமுமாக எங்களைக் கடக்கின்றன. இவற்றிடம் இருந்து பாதுகாக்க எத்தனையோ முறைகளைக் கையாண்ட எம் முன்னோர்கள், இறுதியாக இந்த நாகப்பச்சை வேலியை பெரும்கோட்டையாக எழுப்பினர்.”

p99a.jpg

கபிலர் சுற்றும் முற்றும் பார்த்தார். எவ்வியூரின் கடைசி வீடுகளும் தெருக்களும் முடிவடைந்த சிறிது தொலைவில் இருந்து காடு ஆரம்பம் ஆகிறது. இதில் வேலியோ, சுவரோ எங்கு இருக்கிறது என யோசித்தபடி நின்றார்.

பாரி சொன்னான்... “ஊரின் எல்லை முடிவடைந்ததும் காடு தொடங்குகிறது.இடையில் வேலி எங்கே இருக்கிறது என்று நினைக்கிறீர்களா? நீங்கள் பார்க்கும் அந்தக் காட்டின் தொடக்கம் இயற்கையானது அன்று. அந்தத் தாவரங்கள், தாமாக முளைத்தவை அல்ல; நாங்கள் அறிந்த இந்தப் பெரும் உலககெங்கிலும் இருந்தும் கொண்டுவந்து, இங்கு முளைக்கவைத்தவை.”

கபிலர், பாரியைக் கூர்ந்து பார்த்துக்கொண் டிருந்தார்.

“காட்டில் உள்ள ஒவ்வோர் உயிரும் தின்னக்கூடிய தாவரங்களும் உண்டு; தின்னக் கூடாத தாவரங்களும் உண்டு. நுகரக்கூடியதும் நுகரக் கூடாததுமான பச்சிலைகள் உண்டு. பற்றக்கூடியதும் பற்றக் கூடாததுமான செடி, கொடிகள் உண்டு. நாங்கள் வன உயிரினங்கள் நுகரவும் நெருங்கவும் பற்றவும் முடியாத தாவரங்களைக்கொண்டு, ஒரு பெரும் வேலி அமைத்துள்ளோம். தலைமுறைத் தலைமுறையாக எங்கள் தாவர அறிவின் சேகரம், இந்த நாகப்பச்சை வேலிதான்.”
இவ்வளவு எளிதான வார்த்தைகளால் எவ்வளவு பெரிய செய்தியைச் சொல்லிக் கொண்டிருக்கிறான் பாரி, நம்ப முடியாமல் நின்றுகொண்டிருந்தார் கபிலர்.

``இதை எப்படி மனிதனால் செய்ய முடிந்தது?”

“அதைச் செய்ய முடிந்ததால்தான், நாங்கள் இங்கு வாழ்கிறோம். காற்றுகூட உள்நுழைய முடியாத இந்தக் கானகத்தில் ஓரிரு வீரர்கள் காவல் காக்க, நாள்தோறும் தூங்கி, உயிரோடு எழுகிறோம். எங்கள் குழந்தைகள் மறுநாள் காலை சிரித்துக்கொண்டு விளையாடுகின்றனர். எங்கள் இளைஞர்களின் இதழ்களில் முத்தத்தின் ஈரம் ஊறிக்கொண்டே இருக்கிறது.”

``இது எப்படி…?”  - நா தயங்கி வெளிவந்தன கபிலரின் வார்த்தைகள்.

``வெறிமணம்கொண்ட செடி, கொடி, மரங்களால் சூழ்ந்துகிடக்கிறது இந்த வேலியின் வெளிப்புறம். நடுப்பகுதியோ, புறவைரமும் அகவைரமும் பாய்ந்தோடும் மரங்கள் ஒன்றை ஒன்று பின்னிக்கிடப்பதைப்போல நன்கு திட்டமிட்டு வளர்க்கப்பட்டுள்ளது. வெளிவிஷம், மற்றும் உள்விஷத் தாவரங்களால் தழைத்துக் கிடக்கிறது இதன் முதல் பகுதி. இந்த மூன்று பகுதிகளின் இடைவெளிகளிலும் நஞ்சு ஏறிய அலரி வேர்கொண்டு சுருக்கு வலை பின்னப்பட்டுள்ளது.

நச்சுப் பிசின் வழியும் மருவு, தொடரிப் பட்டைகள் இடைவிடாதிருக்கும். ஒன்றின் மேல் ஒன்றாக வைத்து பின்னிப்பிணைந்து உருவாக்கப்படும் பிணையல், மாலையைப்போல தாவரப்பச்சிலைகளோடு பிணைந்து கட்டிக் கிடக்கும். அதன் கணுக்கள்தோறும் வேர்களை உண்டாக்கி, அந்தப் பச்சிலைச்செடிகள் தழைத்தபடி இருக்கும்.

இந்த வேலிக்குள் உருவாக்கப்பட்டுள்ள அனைத்துத் தாவரங்களின் மீதும் குறுக்கும் நெடுக்குமாகப் படர்ந்துகிடக்கும் எண்ணிலடங்காத படர்கொடிகளும் சுற்றுக்கொடிகளும்தான், இந்த நாகப்பச்சை வேலியின் உயிர்நாடி. வலப்புறம் சுற்றும் கொடியும் இடப்புறம் சுற்றும் கொடியும் ஒன்று மாற்றி ஒன்றாகப் படர்ந்துகொண்டே இருக்கின்றன. சுருண்டு எழும் அவற்றின் ஊசிநாவுகள் எதிரெதிர் திசையில் ஒருசேரப் பின்னியபடியே மேலே எழுகின்றன. உதிர்ந்து கொண்டிருக்கும் இலையைக்கூட இந்த வேலி அந்தரத்தில் நிறுத்திவிடும்.

விலங்கின் நாசியை வெகுதொலைவிலேயே இந்த வெறிமணம் தாக்கும். அதையும் கடந்து உள்நுழையும் உயிரினம் விஷமுள்ளாலோ, நச்சுக்கணுக்களாலோ, நாவில்படும் பச்சிலையாலோ, சற்றே மயங்கி அமரும். அந்த கணத்தில் அதன் மயிர்க்கால்கள் ஒவ்வொன்றையும் பற்றி உள்ளிழுக்கின்றன சுருட்கொடிகள். அந்த உயிரினத்தின் இயக்கத்தை மிக விரைவாக தனது கட்டுக்குள் கொண்டுவந்துவிடுகிறது இந்த நாகப்பச்சை வேலி. அதன் பிறகு அந்த விலங்கு அமர்ந்த இடத்தில் உள்ள தாவரமும் கறையான்களும் எறும்புகளும் சிலந்திகளும் சற்றே கூடுதல் செழிப்புக்கொள்கின்றன.”

பாரி சொல்வதை வாய் பிளந்து கேட்டுக்கொண்டிருந்தார் கபிலர்.

“தாமரை இதழை ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கி, அதன் மேல் ஊன்றப்படும் வேலம் முள், முதல் இதழுக்குள் இறங்கும் நேரம்தான் கணப்பொழுது. மூன்றாம் இதழைக் கடக்கும் நேரம்தான் இமைப்பொழுது, ஆறாம் இதழுக்குள் நுழையும் நேரம்தான் விநாடிப்பொழுது. எந்த ஒரு விலங்கின் இயக்கத்தையும் வேலம் முள் ஆறாம் இதழைக் கடக்கும் பொழுதுக்குள் நிறுத்திவிடும் ஆற்றல் இந்த நாகப்பச்சை வேலிக்கு உண்டு என்று எம் முன்னோர் கூறுவர்.”

இயற்கையைப் பற்றிய பேரறிவின் முன்னர், தூசி என நின்றுகொண்டிருப்பதாக கபிலர் உணர்ந்தார். மேற்கு மலையின் விளிம்பில் பொன்வண்டு தனது கடைசிக்கால்களை உள்ளிழுத்துக்கொண்டிருந்தது. பாரி, இறங்கும் சூரியனையே பார்த்துக்கொண்டிருந்தான்.

p99b.jpg

ஆச்சர்யம் விலக்கி, சற்றே ஆர்வம் மேலிட கபிலர் கேட்டார், ``எந்த வெறிமணம் யானைகள் கூட்டத்தை விரட்டக்கூடியது?”

ஒளி உள்வாங்கும் அழகைப் பார்த்தபடி பாரி சொன்னான்.

“ஏழிலைப் பாலை.”

கபிலரின் கண்கள் பூத்தன.

“அந்த மரத்தின் வாடையை நுகரும் யானைகள் காதத் தொலைவுக்கு விலகி ஓடும்” என்றான் பாரி.

“அந்த மரங்கள் எங்கே இருக்கின்றன? நான் அருகில் சென்று பார்க்க வேண்டும்.”

பாரியின் உதட்டில் சின்னதாக ஒரு சிரிப்பு ஓடி மறைந்தது.

`சிரிக்கக்கூடிய கேள்வியையா நான் கேட்டுவிட்டேன்' என்று யோசித்தபடி பதிலுக்குக் காத்திருந்தார் கபிலர்.

p99c.jpg``ஒவ்வொரு திசைக்கும் ஒரு மரம் நின்றுகொண்டிருக்கிறது.”

``எறும்புக் கூட்டங்கள்போல் யானைக் கூட்டங்கள் திரியும் இந்தக் காட்டில், திசைக்கு ஒரு மரம் போதுமா?”

“அதற்கும் அதிகமாக வைத்தால் எவ்வியூர் தாங்காது” என்றான் பாரி.

கபிலருக்கு, பதில் விளங்கவில்லை.

பாரி சொன்னான்... ``அந்த மரத்தால் வேறு தொல்லைகள் இருக்கின்றன. மதயானை ஏழிலைப் பாலையின் வாசனையை நுகர்ந்துவிட்டால், வெறிகொண்டு வந்து அந்த மரத்தை அடியோடு பிடுங்கி எறிந்து நாசம் செய்துவிடும்.”
``பின் எப்படிச் சமாளிப்பீர்கள்?”

“அதன் பிறகு மனித முயற்சிதான். ஆயுதங்களும் பறை ஒலிகளும் தீப்பந்தங்களும்தான் கைகொடுக்கும். திசைக்கு ஒன்று என்றால் வந்த திசையில் இருக்கும் அந்த ஒன்றோடு அதன் ஆத்திரம் தணிய வாய்ப்பு இருக்கிறது அல்லவா? இப்படி ஒரு நிகழ்வு மூன்று தலைமுறைகளுக்கு முன்னர் நடந்ததாகச் சொல்வார்கள்.”

ஆர்வத்தில் கேட்ட கேள்வி அதிர்ச்சியைப் பதிலாகக் கொடுத்தது. கணப்பொழுதுக்குள் மாறிச் செல்லும் உணர்வுகளின் வழியே பயணமாகிக்கொண்டிருந்தது கபிலரின் எண்ணம்.

“அதுமட்டும் அல்ல. இன்னொரு பிரச்னையும் உண்டு. அதுதான் மிக முக்கியமானதும்கூட.”

“என்ன அது?”

“அந்த மரத்தின் வாசனை, காமத்தைத் தூண்டும். கோல்கொண்டு நெருப்பைக் கிளறுவதைப்போல, அது வாசனையைக்கொண்டு காமத்தைக் கிளர்த்திக்கொண்டே இருக்கும்.”

சற்றே இடைவெளிவிட்டு பாரி சொன்னான், “எவ்வியூருக்குள் வேறு வேலையும் நடக்க வேண்டும் அல்லவா? அதனால்தான் திசைக்கு ஒரு மரம் மட்டும் வைத்திருக்கிறோம்” - பாரியின் சொல்லைத் தாண்டி வெளிவந்தது சிரிப்பு.
கபிலரும் சேர்ந்து சிரித்தார். நினைவு வந்ததும் சட்டென சிரிப்பை அடக்கிவிட்டுக் கேட்டார், “அதனால்தான் மரத்தின் அருகில் சென்று நான் பார்க்க வேண்டும் என்று கேட்டதற்கு  நீ சிரித்தாயா?”

அவ்வளவு நேரம் அடக்கமாக வெளிப்பட்ட சிரிப்பு இப்போது பீறிட்டது. சிரித்தபடியே ‘ஆம்’ என, தலையை மேலும் கீழுமாக ஆட்டினான் பாரி.

p99e.jpg

கபிலர் சற்றே வேகமாக, “ஏழிலைப் பாலையை அடியோடு வீழ்த்தும் மதயானை மனிதரிலும் உண்டு.”

சட்டென பாரி சொன்னான்... ``காமம் கண்டு பயந்த சொல் இது.”

``பயம் இல்லை என்று சொல்ல நான் பொய்யன் அல்ல. ஆனால், பயப்பட மாட்டேன் எனச் சொல்ல பொய் தேவை இல்லை.”

``அதுதான் புலவன். சொல் சுடும்போது சொல்லைச் சுடுவான் என்று சொல்லக் கேட்டுள்ளேன். இன்றுதான் சொல்லிக் கேட்கிறேன்.”

நாழிகை மணியோசை எவ்வியூர் முழுவதும் எதிரொலித்தது. சூரியன் முழுவதும் விழுந்தவுடன் இருள், காட்டின் எல்லா திசைகளில் இருந்தும் இறங்கி வந்துகொண்டிருந்தது. பந்தங்களை ஏற்றும் வீரர்கள், கையில் நீண்ட குழல்போன்ற விளக்குகளுடன் ஓர் இடம் நோக்கிக் குவிந்துகொண்டிருக்கின்றனர்.

பேச்சு எதிர்பாராத கணத்தில் காமத்துக்குள் போனதைப் பற்றி யோசித்தபடி கபிலர் கூறினார்... “இரவு வரும்போதே ஏதாவது ஒரு வடிவில் காமத்தையும் அழைத்து வந்துவிடுகிறதே.”

பாரி அசட்டுச் சிரிப்போடு சொன்னான்... “ஏழிலைப் பாலைக்கு இரவு ஏது... பகல் ஏது?”

பறம்புமலை ஏறத் தொடங்கியதில் இருந்து தனது சொல் முறியும் ஓசையை விடாமல் கேட்டுக் கொண்டிருந்தார் கபிலர்.

பாரி சொன்னான்... “ஏழிலைப் பாலையின் அடிவாரத்துக்கு வள்ளியை அழைத்து வந்ததுதான் முருகன் செய்த மிகப்பெரிய தந்திரம். இல்லை என்றால், வள்ளியை ஒருநாளும் அவனால் இணங்க வைத்திருக்க முடியாது.”
``அவனும் குறுக்குவழியைத்தான் கையாண்டானா?”

சற்றே தயக்கத்துடன், “ஆம்” எனச் சொல்லியபடி தொடர்ந்தான் பாரி. “முருகன் வேட்டுவர் குலம்; வள்ளியோ கொடிக்குலம். செடி, கொடிகளை அறிந்தவர்கள் வேட்டையாடியவர்களைவிட மனநுட்பத்தில் முன்னேறியவர்கள் அல்லவா? வலிமையைவிட நுட்பத்துக்குத்தானே ஆற்றல் அதிகம். அதனால்தான் முருகனால் வள்ளியின் மனதில் எதைச் சொல்லியும் இடம்பிடிக்க முடியவில்லை.

காட்டை அழித்து, பயிரிடு முன் அந்த நிலத்தில் காமம் நிகழ்த்தி மனிதக் குருதி படிந்த தாய்நிலத்துக்குள் முதல் பயிரிடுதலைத் தொடங்கிய வர்கள்தான் கொடிக்குலத்துக் காரர்கள். முதலில் நட்ட வள்ளிக் கிழங்கைத் தோண்டி எடுக்கும்போது இடுப்பு வலிகண்டு, அந்த நிலத்திலே பிறந்தாள் அந்தப் பெண். விதைத்த இடத்திலே முளைத்தவள் அவள். அதனால் அந்தச் செவ்வள்ளிக் கிழங்கின் பெயரையே அந்த அழகிய பெண்ணுக்குச் சூட்டினர். வள்ளிக்கிழங்கும் வஞ்சிக்கொடியுமே பெண்ணாக மாறிய பேரெழில் கொடிக்குலத்துக்கு உரியது.

செடி, கொடிகளை அறிந்தவர்களை எளிதில் ஈர்க்க முடியாது. அவர்கள் கணம்தோறும் உயிரின் வளர்ச்சியைப் பார்த்து மகிழ்ந்தவர்கள். வண்ணங்களையும் வாசனைகளையும் அவர்கள் அளவுக்கு அறிந்தவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். அவர்களின் கவனத்தைக் கவர்வதோ, காதலைப் பெறுவதோ எளிது அல்ல. வேறு வழியே இல்லாமல்தான் ஏழிலைப் பாலையின் அடிவாரத்துக்கு வள்ளியை அழைத்துச் சென்றான் முருகன்.”

கபிலரின் கண் முன் காலமும் காதலும் கடவுளும் ஒன்றை ஒன்று பின்னி மேலே எழுந்தபடி இருந்தன. ஆண் ஆதியில் இருந்தே வெல்வதற்குத்தான் முயன்றிருக்கிறான். பெண் ஆதியில் இருந்தே நம்புவதற்குத்தான் ஆசைப்பட்டிருக்கிறாள்.
பாரி சொன்னான்... “ஏழிலைப் பாலை, பெண்மையால் பூக்கும்; அதைவிட முக்கியம் பெண்ணையும் ஆணையும் ஒருசேரப் பூக்கவைக்கும்.”

வியப்பு நீங்க சிறிது நேரமானது. உள்ளுக்குள் ஏனோ ஒரு சிரிப்பு பொங்கிவந்தது. அதை அடக்க முடியவில்லை. சற்றே திரும்பிச் சிரித்தார் கபிலர். ஏளனம்கொண்ட அந்தச் சிரிப்பின் தொனியைக் கவனித்த பாரி, ‘இதில் சிரிக்க என்ன இருக்கிறது?' என, பார்வையால் கேட்டான்.

கபிலர் சொன்னார்... ``அந்த ஏழிலைப் பாலையைத் தலைமாட்டில் நட்டுவைத்துக் குடும்பம் நடத்திக்கொண்டிருக்கும் கூட்டத்தோடு நான் வந்து சேர்ந்துவிட்டேனே என்று என்னை நினைத்துச் சிரித்தேன்.”

p99d.jpgகபிலரோடு சேர்ந்து வெடித்துச் சிரித்தான் பாரி.

இருளை விரட்ட பந்தங்கள் தயாராகிக்கொண்டி ருந்தன. பாரி சொன்னான், “பந்த ஒளிக்குப் பூச்சிகள் வந்து விழாமல் இருக்க இலுப்பை எண்ணெய் ஊற்றப்படுவதை நீங்கள் அறிவீர்கள். ஆனால், அதற்கு எல்லாம் இந்தக் காட்டுப்பூச்சிகள் கட்டுப்படாது. நாங்கள் பயன்படுத்துவது கொம்பன் விளக்குகள். அதில் நாகக் கழிவும் நஞ்சுப் பிசினும் சேர்த்து மெழுகியிருப்போம். பந்தம் எரிவது திரியில் இருந்து மட்டும் அல்ல, திரியோடு சேர்ந்து விளக்கின் விளிம்பும் கருகியபடி தீய்ந்து எரியும். அந்த வாசனையை ஊடறுத்து பூச்சிகளால் உள்நுழைய முடியாது. ஒருவகையில் இதை `ஒளிவலை' எனச் சொல்லலாம். ஒவ்வொரு பருவகாலத்துக்கும் மாறுபடும் பூச்சியினங்களுக்கு ஏற்ப, கொம்பனில் தேய்க்கும் பசையும் மாறும். எண்ணெய்யின் சேர்மானமும் மாறும். அப்போதுதான் அவற்றைக் கட்டுப்படுத்த முடியும்.

கபிலர் பந்தம் ஏற்றப்போகும் காவலர்களைப் பார்த்துக்கொண்டிருந்தார். ஒரு பெரும் தாழ்வாரத்தின் அடியில், அவர்கள் எல்லோரும் கூடியிருந்தனர். கொம்பன் விளக்கில் எண்ணெய் ஊற்றப்பட்ட பிறகும், அவர்கள் நெருப்பைப் பற்றவைக்காமல் யாருக்கோ காத்திருந்தனர்.

தொலைவில் மாளிகையின் மேல்மாடத்தில் இருந்து அதைப் பார்த்துக்கொண்டிருந்த கபிலர் கேட்டார், ``உனது உத்தரவுக்காகத்தான் காத்திருக்கிறார்களா?”

“இல்லை. அவர்கள் குலநாகினியின் வருகைக்காகக் காத்திருக்கின்றனர்.”

பாரி சொல்லிக்கொண்டிருக்கும்போதே வயதான கிழவிகளின் கூட்டம் ஒன்று எவ்வியூரின் கீழ்த் திசையில் இருந்து நடந்து வந்துகொண்டி ருந்தது. கபிலர் எட்டிப்பார்த்தார். பாரி கையைக் காட்டிச் சொன்னான்... “அதுதான் நாகினிகளின் கூட்டம். அதற்குள்தான் குலநாகினி வந்துகொண்டிருப்பாள். அவள்தான் எங்கள் குலமூதாய். இந்த நாகப்பச்சை வேலியை ஆட்சிசெய்பவள் அவள்தான். பெண்களால்தான் இவ்வளவு நுட்பமான ஒரு வேலியைக் கட்டியமைத்துக் காப்பாற்ற முடியும். அவர்களின் சொல்கேட்டு தாவரங்கள் தழைக்கும்; தலையாட்டும். அவர்களின் உடம்பில்தான் கொடிக்குலத்தின் ரத்தம் ஓடுகிறது.

ஆதியில் நிலத்தில் சிந்திய குருதியில் இருந்து தழைத்தவர்கள்தானே அவர்களின் முன்னோர்கள். ஒரே நேரத்தில் மண்ணுக்குள் வேர்விடவும் மேல்நோக்கி முளைவிடவும் தாவரங்களால் முடிவதைப்போல இவர்களால் முடியும். கருவுக்குள் புது உயிர் சூல்கொள்ளும் கணத்தில்கூட, பிறந்த குழந்தைக்காக மார்பில் பால் சுரந்துகொண்டிருக்கும் அல்லவா? எல்லாம் தாவரப்பட்சினிகள். அபார ஆற்றல் படைத்தவர்கள். இவர்களிடம் மிகக் கவனமாக இருக்க வேண்டும்.''

பாரியின் குரலுக்குள் இதுவரை கேட்டு அறியாத அச்சம் இருந்தது. குல சமூகத்தில் பெண்ணின் தலைமை இடத்தை வேளீர் குலம் அப்படியே வைத்துள்ளது.

p99f.jpg

“எங்களின் மூதாயின் குரலுக்கு குலமே அஞ்சும்” என்றான் பாரி.

இவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போது அந்தக் கூட்டம் பந்தங்கள் ஏற்றப்படும் தாழ்வாரத்துக்கு வந்துசேர்ந்தது. நகர் எங்கும் ஏற்றப்படவேண்டிய பந்த எண்ணெய்களின் வாடையையும் கொம்பன் விளக்கின் வாடையையும் நுகர்ந்து பார்த்தபடியே ஒவ்வொரு விளக்காக ஏற்றிக் கொடுத்துக்கொண்டி ருந்தார்கள் நாகினிகள். ஏற்றப்பட்ட விளக்குகளைக் கையில் ஏந்திய வீரர்கள், அவற்றை உரிய இடங்களுக்கு எடுத்துச் சென்றுகொண்டிருந்தனர்.

``நாகப்பச்சை வேலியையும் ஒளி வலையையும் நிர்வகிப்பவர்கள் குலநாகினியின் தலைமை யிலான பெண்களே. அவர்கள்தான் பருவ காலங்களின் தன்மையை அறிந்து, செய்ய வேண்டிய எல்லா முன்னெச்சரிக்கைகளையும் செய்து இந்த நகரையும் எங்களையும் காத்துவருகிறவர்கள். ஆண்கள் எல்லோரும் விலங்குகளை வேட்டையாடவும் வெளியுலக மனிதர்களிடம் இருந்து தற்காக்கவும்தான். புல் பூண்டில் இருந்து, இலையின் முனைக்கு வந்து இரு கால்கள் நீட்டி எட்டிப்பார்க்கும் எறும்புகள் வரை அறிந்தவர்கள் அவர்களே.”

பிரமிப்பு நீங்காமல் இருந்தது பாரியின் ஒவ்வொரு வார்த்தையும். வந்ததில் இருந்து இதுவரை பார்த்தறியாத பாரியை, கபிலர் இப்போது பார்த்துக்கொண்டிருந்தார்.

``நாகினிகள் பார்க்கிறார்கள். வாருங்கள் கீழிறங்கிப் போவோம்” என்றான் பாரி.

இருவரும் அந்த இடம் நோக்கி நடந்தனர். வீரர்கள் தீப்பந்தம் ஏந்தி எல்லா திசைகளிலும் சென்றுகொண்டிருந்தனர். எல்லா தீப்பந்தங்களும் அந்த இடத்தில் வைத்துதான் ஏற்றப்படுவதால், அங்கு கரும்புகை நிரம்பியிருந்தது. உள்ளே இருக்கும் யாருடைய முகமும் அருகில் வரும் வரை தெரியவில்லை. கரும்புகைக்குள் நுழைந்ததும் பாரி வணங்கினான். கபிலருக்கு புகைவாடை பெரும் உமட்டலைக் கொடுத்தது. கண்கள் வேறு எரிந்தன. உள்ளுக்குள் இருக்கும் யார் முகமும் தெரியவில்லை. உமட்டலை அடக்கியபடி கண்களைக் கசக்கிக் கசக்கிப் பார்த்தார். புகை பொங்கிப் பொங்கி வந்துகொண்டிருந்தது. மூக்கில் காரநொடி ஏறி, தும்மல் உருவானது. மூச்சிழுத்து வாய் திறந்தபடி, தும்மப்போகும் அந்த நொடியில் மூக்குக்கு மிக அருகில் தெரிந்தது பெருவிழி விரிந்திருந்த குலநாகினி முகம்.

- பறம்பின் குரல் ஒலிக்கும்...

http://www.vikatan.com/anandavikatan

Link to comment
Share on other sites

வீரயுக நாயகன் வேள்பாரி - 13

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
 

சு.வெங்கடேசன், ஓவியங்கள்: ம.செ.,

 

p75b.jpgp75a.jpg

ள்ளிரவு நெருங்கியது. எவ்வியூரை விட்டு சற்றுத்  தொலைவில் நடுக்காட்டில் பெரும் மர அடிவாரத்தைச் சுற்றி வட்ட வடிவில் ஊரே உட்கார்ந்திருந்தது. எங்கும் பந்தங்கள் எரிந்துகொண்டிருந்தன. நடுவில் ஆடுகளம் இருந்தது. உட்காருவதற்கு ஏதுவாக மண்திட்டுகளும் மர அடுக்குகளும் உருவாக்கப்பட்டிருந்தன. அந்தப் பெரும் மரப் புதர்தான் கொற்றவையின் இருப்பிடம். அந்த மர அடிவாரத்தின் முன்னர் இலைவிரித்து, பதினைந்துவிதமான பனங்கூடைகள் நிறைய பல்வேறு வகையான பழங்கள் நிரப்பி வைக்கப்பட்டிருந்தன.

சுற்றிலும் பெரும் கூட்டம். நேர் எதிரே பாரியின் இருக்கை. அதற்குப் பக்கத்தில் கபிலர் அமர்ந்திருந்தார். மரத்தின் வலதுபக்கம் எண்ணற்ற பாணர்கள் வாத்தியக் கருவிகளோடு காத்திருந்தனர். இடதுபக்கம் குலநாகினி உட்கார்ந்திருந்தாள். அவளைச் சுற்றி நாகினிகளின் கூட்டம் இருந்தது. ஊர்மன்றலில் நடக்கும் குரவைக்கூத்துக்கோ, பாணர்களின் ஆட்டம்பாட்டத்துக்கோ,  சந்தனவேங்கை முன்பு நிகழும் வள்ளிக்கூத்துக்கோ நாகினிகள் வர மாட்டார்கள். குலச்சடங்குகள் தவிர்த்து கொற்றவைக் கூத்துக்கு மட்டுமே அவர்கள் வருவார்கள்.

இருளின் மையத்தில் சிறுத்திருந்த வெளிச்சத்துக்கு நடுவில் குலநாகினியைப் பார்ப்பதே அச்சம்கொள்ளச் செய்தது. அவளின் தோளிலும் மடியிலும் கூகைக்குஞ்சுகள் தாவிச் சரிந்துகொண்டிருந்தன. அவள்  தன் மேல் போட்டிருந்த தாவர வேர்களாலான மாலைக்குள், சிறுபாம்புகள் நெளிவதுபோல் கபிலருக்குத் தெரிந்தது. அந்தச் சூழலே மிகவும் அச்சமூட்டுவதாக இருந்தது. விழா தொடங்கவில்லை. பெரும் அமைதி நிலவியது. யாருக்காகக் காத்திருக்கிறார்கள் என்பது தெரியவில்லை.

p75c.jpg

கபிலருக்கு கொற்றவை விழா பற்றி எத்தனையோ கேள்விகள் இருந்தன. ஆனால், விழா நாள் நெருங்க நெருங்க, ஊரே பேச்சைக் குறைத்து மெளனமாகியது. கபிலரால் யாரிடமும் எளிதில் உரையாட முடியவில்லை. தன்னோடு எப்போதும் பேசி மகிழும் நீலன், மற்றவர்களைவிட இறுகிய மெளனம் கொண்டிருந்தான். அவனிடம் இருந்து ஒரு வார்த்தையைக்கூட கபிலரால் வாங்க முடியவில்லை; ஏன் என்றும் புரியவில்லை. கபிலர் கேட்கிறார் என்பதால், பாரி மட்டுமே அவ்வப்போது ஒரு சில கேள்விகளுக்குப் பதில் அளித்தான். 

``கொற்றவைக் கூத்து பாலை நிலத்துக்கு உரியதுதானே. அதை ஏன் குறிஞ்சி நிலத்தில் நடத்துகிறீர்கள்?” என்று கேட்டார் கபிலர்.

“மனம் கொடும்பாலையாக வெடித்துக்கிடக்கும்போது எங்கே நடத்தினால் என்ன?”

பாரியிடம் இருந்து இவ்வளவு விரக்தியான ஒரு பதிலை கபிலர் எதிர்பார்க்கவில்லை. அவர் திகைப்புற்று நின்றார்.

“இது குறிஞ்சிக்கு உரிய கூத்து அன்று. ஐந்திணைக்கும் உரிய கூத்து” என்ற பாரியின் குரல், சத்தற்று பெரும் கலக்கம் கொண்டிருந்தது. இதற்கு மேல் கேள்வி எதுவும் கேட்க வேண்டாம் என கபிலர் எண்ணிக்கொண்டிருந்தபோது, பாரி தொடர்ந்தான்.

“இந்த மண் எங்கும் மூவேந்தர்களால் எத்தனையோ குலங்கள் அழிக்கப்பட்டுவிட்டன. பலநூறு ஆண்டுகளாகக் குருதி ஆறு வற்றாமல் ஓடிக்கொண்டிருக்கிறது. அழிபடும் குலங்களின் எண்ணிக்கை இன்று வரை தொடர்கிறது.”

இந்த விழாவுக்கும் பாரி சொல்லும் பதிலுக்கும் என்ன சம்பந்தம் என்ற குழப்பத்துடன், கபிலர் கேட்டுக்கொண்டிருந்தார்.பாரி தொடர்ந்தான், “அழிக்கப்பட்ட குலங்கள் எண்ணிக்கையில் எத்தனையோ… யார் அறிவார்? ஆனால், பேரரசுகளின் கொடும் தாக்குதலில் இருந்து தப்பி உயிர்பிழைத்தவர்கள் மிகச் சிலர். அவர்கள் எங்கெங்கோ அலைந்து திரிந்து, இறுதியில் பறம்பு நாட்டுக்கு வந்து குடியேறி உள்ளனர். மூவேந்தர்களால் அழிக்கப்பட்ட பதினாறு குலங்களின் மிச்சங்கள், இப்போது பறம்பு நாட்டில் வசிக்கின்றன. அவர்கள் போர் தெய்வமான கொற்றவையிடம் முறையிட்டு, ஆராத்துயரைக் கொட்டி வஞ்சினம் உரைக்கும் விழாதான் இது.”

p75d.jpg

அழிக்கப்பட்ட பதினாறு குலங்களின் வழித்தோன்றல்கள் இன்னும் மிச்சம் இருக்கிறார்களா, அவர்கள் எல்லாம் பறம்பு நாட்டில் இருக்கிறார்களா? செய்தி கபிலரைக் கலங்கடித்தது. 

பாரி தொடர்ந்தான்... ``நாங்கள் மட்டுமே வேந்தர்களிடம் இருந்து பாதுகாத்து அடைக்கலம் தர முடியும் என்ற நம்பிக்கையில் அவர்கள் இங்கு குடிபுகுந்தனர். அந்தக் குலங்களுக்கான குடிப் பாணர்களின் வழித்தோன்றல்கள், இப்போது எங்கெங்கோ இருக்கின்றனர். அவர்கள் எல்லாம் நான்கு ஆண்டுக்கு ஒரு முறை நிகழும் இந்த விழாவுக்கு வந்துவிடுவர். அழிந்த குலத்தின் வரலாற்றை அந்தப் பாணர்கள் பாட, இறுதியில் குலத்தின்  வழித்தோன்றல்கள் கொற்றவைக்குப் பலியிட்டுச் சூளுரைப்பார்கள்” என்றான் பாரி.

அதன் பிறகு இங்கு வந்து அமரும் வரை, கபிலர் பேச்சற்றவராக ஆனார். காலம் மனித அனுமானங்களுக்கு அப்பால் இயங்கிக்கொண்டேதான் இருக்கிறது. அதை எதிர்பாராத கணத்தில் சந்திக்கும்போது மனிதன் பொறி கலங்கிப்போவதைத் தவிர வேறு வழி என்ன?

அழிந்த குலங்களின் வழித்தோன்றல்களை இன்னும் சிறிது நேரத்தில் பார்க்கப்போகிறோம் என்பதை, கபிலரால் நம்பவே முடியவில்லை. கடந்த காலத்தின் பெரும் சாட்சி ஒன்று கண்கள் முன்னால் விரியப்போகிறது. மிச்சம் இருக்கும் அந்தக் குலங்கள்  எவை... எவை? தப்பிப் பிழைத்த அந்த மனிதர்கள் யார்... யார்? வரலாற்றில் இருந்து அப்புறப்படுத்தப்பட்ட அந்த மகத்தான மனிதச் செல்வங்களை மீண்டும் காணக்கிடைப்பது எவ்வளவு பெரும் வாய்ப்பு. இப்படி ஒரு தருணம் தனது வாழ்வில் வரும் என அவர் நினைத்துக்கூட பார்த்தது இல்லை. பெரும் எதிர்பார்ப்புடன் இருந்தார். ஆனால், விழா தொடங்காமல் இருந்தது. இந்த மெளனம் யாருக்காக, ஏன் நீடிக்கிறது என்பது கபிலருக்கு விளங்கவில்லை. பொழுது நள்ளிரவைக் கடந்தது.

p75f1.jpg

இந்த மரத்தில் தெய்வவாக்கு சொல்லும் விலங்குகள் உள்ளன. அவை மிகச் சிறியவை.  ஆந்தை முகமும் அணில் உடலும் குரங்குக் கால்களும்கொண்ட விலங்குகள் அவை. மிகப் பயந்த சுபாவம்கொண்டவை. அகலக் கண்களை விழித்து, குழந்தையைப் போலவே பயந்து பயந்து பார்க்கும் அவை, இன்னும் மரத்தைவிட்டு இறங்காமல் இருக்கின்றன. அவை மெள்ள இறங்கிவந்து எந்தக் கூடையில் உள்ள பழத்தை எடுத்துச் செல்கின்றவோ, அந்தக் குலப்பாடகன் தனது பாடலைப்  பாடத் தொடங்குவான். பாடல் முடிந்ததும் அந்தக் குலத்தின் வழித்தோன்றல் கொற்றவைக்குப் பலியிட்டுச் சூளுரைப்பான். அந்தத் தெய்வவாக்கு விலங்குகள் இறங்கி வருவதற்காகத்தான் எல்லோரும் அமைதிகொண்டு காத்திருந்தனர். சிறுசத்தமும் அசைவும் இருந்தால்கூட அவை வெளிவராது. எனவே, அந்த இடத்தில் இருள் மிரளும் அமைதி நிலவியது.

மரக்கிளைகளுக்கு நடுவில், அப்போதுதான் பிறந்த ஆட்டுக்குட்டியைப் போல சின்னஞ்சிறிய உடல்கொண்ட அந்த விலங்கு மெள்ள இறங்கி வந்தது. தலையைத் திருப்பித் திருப்பிப் பார்த்தபடி, பயந்த விழிகளோடு கூடை அருகில் வந்தது. எல்லோரும் அது எந்தப் பழத்தை எடுக்கப்போகிறது என்பதை உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தனர். கபிலரின் கண்கள் இமைகொட்டாமல் நிலைகுத்தி நின்றன. அசையும் மரக்கொப்பு ஒன்று சிற்றோசை எழுப்ப, பயந்து கணநேரத்துக்குள் அது உள்ளோடி ஒழிந்தது. அதன் மறுவருகைக்காக எல்லோரும் காத்திருந்தனர். அதைவிடச் சின்னதான தெய்வவாக்கு விலங்கு ஒன்று வேறுதிசையில் இருந்து இறங்கி வந்தது. தயங்கியபடி கால் எடுத்து வைத்த அது, கூடைக்கு அருகில் வந்து சேராது என்றுதான் பலரும் நினைத்தனர். ஆனால், நினைத்து முடிக்கும் கணத்தில் அதன் கையில், மூன்றாம் கூடையில் இருந்த இலந்தைப்பழம் இருந்தது.

p75.jpg

அந்தக் கணத்தில் காட்டையே மிரட்டும் பேரொலியாக மேலே எழுந்தது குலவை ஒலி. மருத நிலத்துக்கு உரிய கிணைப்பறை கொட்டும் பாணர்கள் ஆடுகளத்துக்குள் நுழைந்தனர். கொற்றவையின் அருகில் வந்த மூத்த கிணையன், சிறுகோள்கொண்டு கிணைப்பறையின் தோலுக்கு மையத்தில் இருக்கும் கண்ணில் ஓங்கி அடித்தான். உடன்வந்த கலைஞர்கள் எல்லோரும் கிணை முழங்க அச்சமூட்டும் கிணைப்பறையின் பேரொலி எங்கும் பரவியது. குடிப்பாணன் பாடலைத் தொடங்கத் தயாரானான்.
 
கபிலர் நடப்பதைப் புரிந்துகொள்ள முடியாமல் பாரியைப் பார்த்தார்.

வைகைக் கரை கூடல்நகரை ஆட்சிசெய்த அகுதைக் குடிப்பாணர்கள் அவர்கள். அகுதையின் குலப்பாடலைப் பாடப்போகிறார்கள்” என்றான் பாரி.

கபிலருக்கு மயிர்க்கூச்செரிந்தது. அகுதையின்  வழித்தோன்றல்கள் இந்த உலகில் இன்னும் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்களா, அந்தக் கதையை பாணர்கள் பாடுகின்றனரா? கபிலர் உச்சந்தலையை கைகளால் அழுத்தி, மயிர்க்கற்றையின் சிலிர்ப்பைத் தளர்த்த முயன்றார். கூடல்மாநகரின் வரலாற்றையும் அகுதையின் கதையையும் அணுஅணுவாக அறிந்தவர் கபிலர். எத்தனையோ தலைமுறைக்கு முன்னால் நடந்த நிகழ்வு அது.

உரத்துச் சொல்லப்படுவதைவிட, காதோடு காதாகப் பேசும் கதைக்கு வயது அதிகம். அது காட்டுச்செடிபோல ஒருபோதும் நிலம்விட்டு அகலாது. அகுதையின் குலம் கூடலைவிட்டு அகற்றப்பட்டாலும் அவனைப் பற்றிய கதை கூடல்மாநகரில் இன்னும் சொல்லப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது. யாரும் அறியாமல், விளக்குகள் அணைக்கப்பட்ட நள்ளிரவில், ரகசிய மொழியில், அகுதையின் கதை காலங்களைக் கடந்து வந்துகொண்டே இருக்கிறது.

நாட்டில் உலவும் ரகசியக் கதை, காட்டுக்குள் பெரும் குரலெடுத்துக் கர்ஜிக்கிறது. கிணைப்பறை முழங்க, பெரும் பாணன் கதையைத்  தொடங்கினான்.

வைகைக் கரையில் செழித்து வளர்ந்த வேளாண்மை, அழகிய நாகரிகத்துக்கு அடித்தளம் அமைத்தது. நதிக்கரையின் நிலவளம் கொண்டு பயிர் வளர்க்கவும் விளையவைக்கவும் அறுவடையைக் குவிக்கவுமாக, விவசாயத்தின் ஆதிரகசியங்களைக் கண்டறிந்தவர்கள் கூடல்வாசிகளே.

குறிஞ்சி நிலம், கற்களாலான மண்ணை உடையது; முல்லை, வெண்ணிற மண்ணை உடையது; நெய்தல், உவர் மண்நிலம். பாலை, செம்மை ஏறியது; மருதம் மட்டுமே பொன்னிறமாக கரிசலும் வண்டலும் மேவிக்கிடப்பது. அதனாலேயே மண்ணையும் நீரையும் பிசைந்து உணவாக மாற்றக்கூடிய வித்தையை கூடல்வாசிகள் முந்திக் கற்றனர்.

p75h.jpg

அவர்களுக்குத்தான் மண்ணின் நிறம் பிடிபட்டது. வெவ்வேறு வகையான மண்ணுக்கு இருக்கக்கூடிய குணங்கள் பிடிபட்டன. புற்றுகளும் ஊற்றுகளும் அவர்களின் கணிப்புக்குள் அடங்கின. தாவரங்களின் வேர்களை எந்த மண் தனது மார்போடு உள்வாங்கி அணைத்துக்கொள்ளும், எந்த மண் தலையில் முட்டி வெளித்தள்ளும் என அவர்கள் கண்டறிந்தனர். பறவைகளின் அலகு பறித்துத் தின்னும் காட்டுக் கதிர்களைக் கண்டறிந்தனர். பறவைகளின் கழிவில் இருந்து முளைவிடும் தானியமணிகள் எவை எவை என்பதைப் பற்றிய அறிவுச்சேகரம் அவர்களிடம் இருந்தது.

முதல் தானியம் நடும்போது அந்தப் பறவையின் சிறகை, அதன் அருகில் நட்டு தங்களுக்கு வழிகாட்டிய அந்த வானம்பாடிக்கு நன்றி சொல்லும் மரபைக்கொண்டவர்கள். விளைந்த பயிரைத் தின்னவரும் விலங்குகளை வேல்கொண்டு விரட்டுவர். ஆனால், பறவைகளை வேண்டிக்கொள்ள மட்டுமே செய்வர். ஏனென்றால் பறவையே ஆசான். பறவையின் எச்சம் கண்டே பயிர்செய்து பழகியவர்கள். பறவை உண்ட மிச்சமே நமக்கு என அறம் வகுத்துக்கொண்டனர்.

காடு எங்கும் அலைந்து சேகரித்த தானியங்களை, கால் பரப்புக்குள் விளையவைத்து அறுக்க முடியும் என்பதைச் செய்துகாட்டியவர்கள் அந்தக் குலத்தின் முன்னோர்களே. அவர்களே மனிதக் கூடலின் ஆற்றலை, மண்ணில் விளையும் பயிராக மாற்றியவர்கள். அவர்கள் வாழ்விடமே கூடல் என அழைக்கப்படலாயிற்று. அந்தக் கூடல் நகரை உருவாக்கிய குலத்தின் தலைவன் அகுதை.

குதையின் கதையைக் குலப்பாடகன் பாடத்தொடங்கிய கணமே பாரியின் கண்கள் கலங்கின.

``வேளாண் அறிவின் நுணுக்கத்தை இந்த உலகுக்குக் கண்டறிந்து சொன்னது அகுதையின் குலம் அல்லவா” - கபிலரைப் பார்த்து பாரி சொன்னபோது, அவனது கண்களில் திரண்ட நீருக்குள் பந்தத்தின் வெளிச்சம் நெளிந்தது.

உப்பு விற்கும் உமணர்களே நிலம் எங்கும் அலைந்து திரிபவர்கள். கடற்கரை தொடங்கி மலைமுகடு வரை அவர்களின் வண்டிச்சக்கரங்கள் சதா உருண்டுகொண்டே இருந்தன. எல்லோருக்கும் தேவைப்படும் பொருள்கள் அவர்களிடம் இருந்தன. எல்லோரும் தங்கள் கைவசம் இருந்த பொருளை அவர்களிடம் கொடுத்து உப்பைப் பெற்றனர்.

இந்த நிலம் எங்கும் இருக்கும் மனிதக் கூட்டங்கள், அவர்களின் வாழ்விடங்கள், அங்குள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள், செல்வச் செழிப்பு, சேமிப்பு என, எல்லாவற்றையும் அறிந்தவர்கள் அவர்களே.

கூடல்நகரில் வளமை கொடிகட்டிப் பறந்தது. விளைச்சல்கள் குவிய, தானியக் குதிர்கள் வைக்கும் ஆளுயர மொடாவை, உமணர்கள் அங்குதான் முதன்முதலில் கண்டனர். அந்தக் குலத்தின் செழிப்பு உமணர்களின் கண்களில் அதிசயம் என நிலைபெற்றது. அது சொல்லவேண்டிய எல்லா செய்திகளையும் சொன்னது.

பொருநை ஆற்றின் முகத்துவாரத்தில் இருந்த கொற்கைப்பாண்டியன் தன் வீரர்களோடு புறப்பட வேண்டிய  நாளை, உமணர்கள் சொன்ன தகவலை வைத்தே முடிவுசெய்தான்.

`வைகையில் புனலாட்டு விழா. கூடல்வாசிகள் முழுவதும் நீராடி மகிழ்ந்திருக்கும் நன்னாள். அன்று காலை நமது படை கூடல் நகருக்குள் நுழைந்தால் எளிதில் அதைக் கைப்பற்றலாம்’ என்று உமணர்கள் நாள் குறித்துச் சொன்னார்கள். முதல் நாள் நண்பகலில் கொற்கைப்பாண்டியன் படை கடற்கரையில் இருந்து புறப்பட்டது.

கிணைப்பாணன் தனது தாள லயத்தைக் கூட்டத் தொடங்கினான். செங்காலி மரத்தால் செய்யப்பட்டு, மயிர்சீவாத செவ்வித்தோலைக் கொண்டு போத்தப்பட்ட கிணைப்பறை, அதன் அகால ஓசையை எழுப்பத் தொடங்கியது. குலப்பாடகனின் குரல்நாளங்கள் வெடிப்புறத் தொடங்கின. ஒரு கொடூரம் அரங்கேறப்போகும் விடியல்பொழுதைப் பாட அவனது நா எழவில்லை.

பொழுது புலர்ந்தது. வைகையின் பெருவெள்ளம் தாவிக் குதித்தோடியது. கூடல் மாநகரே நதிக்கரையில் வந்து ஆவலோடு நின்றுகொண்டிருந்தது. குலத்தலைவன் அகுதை, யானை மீது ஏறி வைகைக் கரைக்கு வந்து சேர்ந்தான். எல்லோரும் அவனது கையசைவுக்காகக் காத்திருந்தனர்.

வைகையை வணங்கி, கூட்டத்தை நோக்கிக் கையசைத்தான் அகுதை. புனலாட்டு விழா தொடங்கியது. கரையில் இருந்த இளைஞர்களும் இளைஞிகளும் வைகையில் பாய்ந்து உள்ளே இறங்கினர். புனலாட்டு விழா என்பது காதல் திருவிழா. காதலர்கள் நீரால் ஒருவரை ஒருவர் அடித்து விளையாட ஆரம்பித்து, நேரம் செல்லச் செல்ல நீர் அடித்தாலும் விலகாத விளையாட்டாக மாறும். மணமானவர்களும் தம் இணையோடு சென்று வைகையில் நீராடி, காதல் பேசி, கனிவுகொண்டு விளையாடுவர்.

p75g1.jpg

காமத்துக்கு மிக அருகில் பயணிக்கும் ஒரு திரவம் நீர். அதுவும் நதியில் ஓடும் நீர் தனது உள்ளங்கையில் இருக்கும் ஆணையும் பெண்ணையும் கணநேரத்துக்குள் கரைத்துவிடும். கரைந்தவர்கள் காதல்கொண்டவரின் உடலுக்குள் உறைந்திருப்பர். உடலின் வாசனையை மனதுக்குள் பாயவிடும் மாயசக்தி நீருக்கு மட்டுமே உண்டு. 

மண்ணில் கால்பாவாமல் மனிதன் நடப்பது தண்ணீருக்குள்ளும் காதலுக்குள்ளும்தான். இரண்டும் ஒன்றுசேரும் தருணத்தில் நிகழ்வது எல்லாம் மாயவித்தைகளே. வித்தைகளின் வாடிவாசல் வழியே பீறிட்டு ஓடிக்கொண்டிருந்தது வைகை.

அகுதை உள்ளிறங்கும் பொழுதுக்காக கரையில் நின்றிருந்தவர்கள் காத்திருந்தனர். காதல் ஏறிய கண்கொண்டு தனது மனைவியைப் பார்த்தான் அகுதை. அவளோ அவனது தோள்கவ்வி உள்ளிறங்கும் பொழுதுக்காகக் காத்திருந்தாள். அகுதை நதி நீருக்குள் கால் நுழைத்தான். இன்னும் சற்று உள்ளே போகட்டும் அவனது தோளைத் தாவிப்பிடித்தபடி நாம் இறங்குவோம் என அவள் கல்பாவியத் திட்டில் நின்றிருந்தாள். ஏன் இன்னும் வராமல் இருக்கிறாள் என யோசித்தபடி, அகுதை இரண்டாவது அடியை எடுத்து நீருக்குள் வைத்தான். அவன் தோளின்மேல் சரிந்துவிழலாம் என அவள் நினைத்தபோது, அருகில் தோழியிடம் இருந்த அவள் மகன், பெரும் குரலெடுத்து அழ ஆரம்பித்தான்.

``பெருக்கெடுத்து ஓடும் நீரும் உற்சாகப் பேரொலியும் குழந்தையைப் பயமுறுத்தியிருக்கும், அவனை அமைதிப்படுத்திவிட்டு வருகிறேன். நீங்கள் உள்ளிறங்குங்கள்’’ எனச் சொல்லிவிட்டு தோழியிடம் போனாள். தாயைப் பார்த்ததும் குழந்தையின் அழுகை மேலும் கூடியது. அவள் அவனைச் சமாதானப்படுத்த எவ்வளவோ முயன்றாள்; முடியவில்லை. நீருக்குள் இருந்து அவளையே பார்த்துக்கொண்டிருந்தான் அகுதை. அந்தப் பார்வை அவளைத் துளைத்துக் கொண்டிருந்தது. குழந்தை அழுகையை நிறுத்துவதாக இல்லை. வேறு வழியில்லாமல் குழந்தையைத் தூக்கிக்கொண்டு, நதிக்கரைவிட்டு சற்றே அகன்று உள்காட்டுக்குள் நுழைந்தாள். குழந்தையின் முதுகைத் தட்டியபடி சமாதானப்படுத்தினாள்.

குழந்தை அழுகையை நிறுத்தவே இல்லை. நீரின் சத்தமும் நீராடுவோர் சத்தமும் கேட்காத அளவுக்கு அடர்ந்த மரங்களுக்கு இடையே மிகவும் உள்ளே சென்றாள். உள்ளே செல்லச் செல்ல ஓசையின் அளவு கூடுவதுபோல் உணர்ந்தாள். மனிதக் கூக்குரல் எங்கும் எதிரொலிக்கிறதே என யோசித்தவள், அகுதையின் கண்கள் தன்னைத் தடுமாறவைக்கிறது என நினைத்தபடி காட்டை ஊடுருவி வெகுதொலைவு சென்றாள். காலைக்கதிர்களின் இளமஞ்சள் ஒளியில் உள்காடு ஒளிர்ந்துகொண்டிருந்தது. எங்கும் தும்பிகள் பறந்தன. புல்நுனிகள், பனித்துளிகளை உலர்த்தாமல் வைத்திருந்தன.

தரையில் அழகிய செம்மூதாய் ஒன்று நகர்ந்துகொண்டிருந்தது. செந்நிறப் பட்டுப்பூச்சி அது. மேனி எல்லாம் மெத்தைபோல மினுமினுத்து நகர்ந்தது. குழந்தையை அதன் அருகில் இறக்கிவிட்டாள். குழந்தை தனது பிஞ்சுவிரலால் செம்மூதாயின் மேனியை மெள்ளத் தொட்டதும் அது நகர்வதைப் பார்த்து மலர்ந்து சிரித்தது. அந்தப் செம்பட்டுப் பூச்சியிடம் சிறிதுநேரம் விளையாடவிட்டபடி அவள் நின்றுகொண்டி ருந்தாள்.

சிவப்பு, காமத்தின் அடையாளம். அவளது கண்கள் அதற்குள் போக எண்ணங்கள் எங்கெங்கோ சென்றுகொண்டிருந்தன. அகுதையின் தோள்தழுவிய அந்த முதற்கணம் நினைவுக்கு வந்தது. அகுதை, அதிகம் பேசாதவன். ஆனால், அந்த இரவில் அவன் பேசியதை இன்னோர் ஆண், இந்த உலகில் பேசியிருப்பானா என்பது சந்தேகமே. காதல் சொல்லால்தான் மலர்கிறது. காதல்கொள்கையில் சின்னஞ்சிறு சொற்கள் எவ்வளவு பெரும் கிளர்ச்சியை ஏற்படுத்தக்கூடியனவாக இருக்கின்றன.

சிறு உளியால் மலைகள் உடையும் தருணம் அது. அவன் ஒற்றைச்சொல் சொல்லும்போது, அப்படி ஒரு வெட்கம் உடல் எங்கும் பரவியது. அந்தச் சொல் ஞாபகம் வந்த கணம் மீண்டும் வெட்கம் பரவி, தன்னை அறியாமல் சிலிர்த்து மீண்டாள்.

p75i1.jpg

சொற்கள் நினைவுக்கு வந்த கணத்திலேயே, செயல்களும் நினைவின் வழியே மேலே எழுந்து வந்துவிடுகின்றன. அதன்பின் என்ன செய்ய முடியும்? சற்றே பெருமூச்சுவிட்டபடி குழந்தையைப் பார்த்தாள். அவன் செம்மூதாயின் பின்னால் நகர்ந்துபோய்க்கொண்டிருந்தான்.

திருமணம் முடிந்த முதல் புனலாட்டு விழாவின்போது அவள் கருவுற்றிருந்தாள். அதனால் ஆற்றுக்குள் இறங்கவில்லை. இரண்டாம் ஆண்டான இப்போதும், அதேபோல் தன்னந்தனியாகவே அகுதை ஆற்றுக்குள் இறங்கினான். கரையில் நின்ற அவளைத் துளைத்தெடுத்தது அகுதையின் பார்வை.

ஆணின் பார்வை பெண்ணின் பார்வையைப்போல நயமிக்கது இல்லை. ஆணின் கண்கள் காதல்கொள்பவை; ஆனால், காதலைச் சொல்லக் கற்றவை அல்ல. அவன் பார்வையால் பற்றி இழுத்தாலும், அவள் கண்களால் கைம்மாறு செய்துகொண்டிருந்தாள்.

கண்கள் விழித்திருந்தாலும் ஆந்தைக்கு பகலில் பார்வை கிடையாது. அதைப்போலத்தான், மனிதன் நீருக்குள் மூழ்கிவிட்டால் பார்வையைத் தொலைத்துவிடுகிறான். ஆனால், காதலர்களுக்கு அப்படி அல்ல. அவர்கள் அந்த இடமே பார்வை பெறுகின்றனர். கண்களின் வேலையை கைகள் எடுத்துக்கொள்கின்றன. தொடுதலின் மூலம் ஆயிரம் விழிகள் உள்ளுக்குள் விழித்து அடங்குகின்றன. அதனால்தான் நீர் விளையாட்டு காதலின் களம் ஆகிறது.

அவள் கண்களைச் சிமிட்டி கனவைக் கலைத்தாள். குழந்தை நீண்ட நேரம் விளையாடி அமைதி அடைந்தது. சரி... அழைத்துச் செல்லலாம் என முடிவுசெய்து, அவள் காட்டைவிட்டு நடக்கத் தொடங்கினாள். நதியை நோக்கி வர வர அவளுக்குக் காட்டின் அமைதியே நீடித்தது. கொண்டாட்டத்தின் பேரொலி கேட்கவில்லை. இவ்வளவு அமைதியாக நீராட வாய்ப்பே இல்லையே என யோசித்தபடி, நதியின் கரையில் ஏறி நின்று பார்த்தாள். மொத்த வைகையும் நீண்டு நகரும் செம்மூதாயாகக் காட்சி அளித்தது. குருதி கரைபுரண்டோட கரை எங்கும் மீன் எலும்புகள்போல் முட்கள் கோக்கப்பட்ட ஈட்டியுடனும் உயர்த்திய வாளுடனும், எண்ணற்ற வேற்றுக்குலத்தினர் நின்றுகொண்டிருந்தனர்.

குரல்வெடித்துச் சரிந்தான் குலப்பாடகன். பெண்களின் குலவை ஒலி பீறிட்டுக்கொண்டிருந்தது. குரல் உடைந்தபடி பாரி கபிலரிடம் சொன்னான்... “அந்தப் பெண் எதிரிகளின் கண்ணிற்படாமல் தப்பித்து, கையில் குழந்தையோடு ஒரு முதுகிழவனை அழைத்துக்கொண்டு, பல மாதங்களுக்குப் பிறகு பறம்பு நாட்டுக்குள் நுழைந்திருக்கிறாள். பறம்பின் மக்கள் அவளை அள்ளி அணைத்துப் பாதுகாத்திருக்கின்றனர். அவள் வழித்தோன்றல்தான் இப்போது கொற்றவைக்குக் காளையைப் பலிகொடுத்துச் சூளுரைக்கப் போகிறான்” என்றான்.

தாங்க முடியாத துக்கத்தைக் கிழித்துக்கொண்டு கபிலருக்கு ஆர்வம் மேலே ஏறியது. அகுதையின் வழித்தோன்றல் - இயற்கையை, வேளாண்மையை,  நாகரிகத்தை நேசித்த அந்த மாமனிதனின் வம்சக்கொடி  யார் என அறிய, கபிலர் ஆடுகளத்தை இமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தார். தாமரையின் மேல் இதழில் முள் இறங்கும் நேரம்கூட அவரால் தாங்க முடியவில்லை. அந்த மகத்தான குலத்தில் உதித்த திருமகனைக் கண்டு வணங்க அவரை அறியாமலே கைகள் கூப்பின.

அந்தக் கணம் இடம் இருந்து உள்ளிறங்கினான் நீலன்.

- பறம்பின் குரல் ஒலிக்கும்...

http://www.vikatan.com/anandavikatan

Link to comment
Share on other sites

வீரயுக நாயகன் வேள்பாரி - 14

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
 

சு.வெங்கடேசன், ஓவியங்கள்: ம.செ.,

 

p83c3.jpgp83b1.jpg

ரவில் ஏற்பட்ட மனக்கலக்கம் பகல் முழுவதும் பரவிக்கிடந்தது. பாரி தனது அறைக்கு வரும் வரை கபிலர் செயலற்றே கிடந்தார். பாரிதான் அவரை அழைத்துச் சென்று உணவு அருந்தவைத்தான். பிறகு இருவரும் தேர் ஏறி பாழியூருக்குச் செல்லும் பாதையில் சென்றனர். கபிலர் எதுவும் கேட்காமல் வந்துகொண்டிருந்தார்.

புன்னைமர அடிவாரத்தில் தேரை நிறுத்தச் சொன்னான் பாரி. வளவன், குதிரைகளின் கடிவாளத்தை இழுத்து நிறுத்தினான். இருவரும் இறங்கி காட்டுக்குள் நடந்தனர்.

p83a.jpg

“பறம்பில் காலடி எடுத்துவைத்த கணத்தில் இருந்து நீலனோடு பயணிக்கிறேன். தன்னைப் பற்றி ஒரு சொல்கூட அவன் சொல்லவில்லை” என்றார் கபிலர்.

பாரி அமைதியாகக் கேட்டுக்கொண்டு வந்தான்.

சட்டென நினைவு வந்தவுடன், “இல்லை...இல்லை...” என தான் சொன்ன சொல்லை மறுத்த கபிலர், “வேட்டுவன் பாறையில் வரும்போது அவனது குலப்பாடல் பற்றி அவன் சொல்ல வந்தான். `அது இருக்கட்டும்’ என அதைப் புறந்தள்ளிவிட்டேன். எனது அந்தக் கொடும் செயலுக்கு என்ன தண்டனை வேண்டுமானாலும் தரலாம்” என்றார்.

``பறம்பில் தண்டனை கிடையாது.”

பாரியின் சொல், குற்றவுணர்வில் இருந்து வியப்பின் பரப்புக்குத் தூக்கி வந்தது கபிலரை. வழக்கம்போல் சொல்லால் தாக்குண்ட புலவன், மறுசொல்லின்றி பாரியின் குரலுக்காகக் காத்திருந்தான்.
பாரி சொன்னான், “ஒருவகையில் அதுதான் கொடும் தண்டனை.”

கபிலர் மெள்ளத் தலையசைத்து, தனக்கு வழங்கப்பட்ட தண்டனையை ஏற்றார்.

வர்கள் பேசிக்கொண்டு நடந்த அதே பொழுதில், எவ்வியூரின் தென்புறக்காட்டில் மருதமர அடிவாரம் ஒன்றில் மயிலாவின் மடியில் தலைசாய்த்துக்கிடந்தான் நீலன். இரவில் எருமையின் தலையை வெட்டி, பொங்கும் குருதியோடு நீலன் ஆடிய ஆட்டத்தைப் பார்த்தவர்கள், இன்னும் நடுக்கம் மீளாமல்தான் இருக்கின்றனர். தான் பார்த்து அறியாத நீலனை நேற்றுதான் கண்டுணர்ந்தாள் மயிலா.

தனது மடியில் தலைசாய்த்துக்கிடக்கும் அவனை, கண் இமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தாள். அவள் முதல்முறையாக கொற்றவைக்கூத்துக்கு இப்போதுதான் வந்திருக்கிறாள். நீலனோடு இருவார காலம் எவ்வியூரில் மகிழ்ந்திருக்கலாம் என்பதற்காகத்தான் வந்தாள். ஆனால், வைகையில் ஓடிய குருதி அவனது உடலில் தேங்கிக்கிடக்கிறது என்பது இங்கு வந்த பிறகுதான் அவளுக்குத் தெரியும். வாளோடும் வலியோடும் ஒட்டிப்பிறந்த ஒருவன், அவள் மடிமீது தலைவைத்துத் துயில்கிறான்.

p83d.jpg

இரவில் நீலன் ஆடியது, ஆட்டம் அல்ல; ஒரு போர்க்களத்தின் இறுதிப்பாய்ச்சல். வெட்டிய காட்டு எருமையின் குருதியை உடல் முழுவதும் பூசியபடி நிலம் அதிர ஆடினான். நிலத்தில் பட்டும் வானில் சுழன்றும் திரிந்த நீலனின் கால் அசைவுகளுக்கு ஈடுகொடுக்க முயன்று, திம்... திம்...திம்... திம்... எனப் பறையைக் கொட்டிய பாணர்களின் கைகள் நொந்ததுதான் மிச்சம். அவனது காலடி அசைவுகளுக்கு, பறையொலியால் இறுதிவரை ஈடுகொடுக்க இயலவில்லை. பறை அடிக்கும் கோல்கள் நார் நாராகப் பிரிந்தன. கிணைப்பறையின் கண் கிழிந்த பிறகும் நீலனின் ஆட்டம் நிற்கவில்லை. கூட்டத்தின் குலவை ஒலி மலை எங்கும் எதிரொலித்த ஒரு கணத்தில், உடலின் ஆவேசம் உச்சம் அடைந்து மயக்கநிலை கொண்டான் நீலன். அவன் சரிந்துவிழப் போகிறான் என யூகித்த பாரி, தன் இருக்கையைவிட்டு எழுந்து அவனை நோக்கி ஓடினான். ஆவேசத்தோடு நிலத்தைச் சுற்றிய வேகத்தில், ஒடிந்த கொம்புபோல் சரிந்தான் நீலன். சரியும் அவனது உடல் மண்ணைத் தொடும் முன் தாங்கிப்பிடித்தன குலநாகினியின் கரங்கள்.

உக்கிரம் ஏறிய குலநாகினி, நீலனை இரு கைகள் ஏந்தி எதிர்க்களமாடினாள். போர்க்களத்தில் சினம்கொண்டு ஆடும் கொற்றவையின் ஆட்டம் அது. தாவர வேர்கள் உடல் எல்லாம் சரசரக்க, கூகைக்குஞ்சுகள் எங்கும் சிதறி விழ, நாகப்பச்சை நாயகி, வேளீர்குல நாகினி, நீலனை ஏந்தி களம் முழுவதும் வலம்வந்தாள். குலவை ஒலிகளும் பறையொலியும் விண்ணை முட்டின. ஆடுகளம், ஆவேசத்தால் குலுங்கியது. நாகினியின் முன் மண்டியிட்டு இரு கைகள் ஏந்தி நின்றான் பாரி. கண்களில் இருந்து நீர் சரிவதைப்போல, அவளது கரங்களில் இருந்து சரிந்த நீலனைத் தாங்கின பாரியின் கரங்கள்.

p83e.jpg

அந்த உடல்தான் தளர்ந்து மயிலாவின் மடியில் சாய்ந்துகிடக்கிறது. அவளால் அவனைத் தொட முடியவில்லை. காதல்கொண்டு நெருங்க முடியாத ஒரு மானுடனை என்ன செய்வது எனத் தெரியாமல் அவள் திகைத்துக்கிடந்தாள். பெரும் வனத்தை சிறு பூ ஒன்று காதல்கொள்வதைப் போல் அவளுக்குத் தோன்றியது.

திகைப்பில் இருந்து மீள முடியாமல்தான் இருவரும் நடந்தனர். ஆனால், எந்த ஓர் உரையாடலை நடத்தினாலும், அது மேலும் திகைப்பைக் கூட்டவேசெய்யும் என்பது இருவருக்கும் தெரியும். ஏனென்றால், அகுதையின் குலக்கதை இந்த மண்ணில் எல்லோரும் அறிந்ததே. எல்லோரும் அறிந்த கதையை அறிஞர்கள் இன்னும் அடியாழத்தில் இருந்து அள்ளித்தருவர். கபிலரின் சொற்கேட்க ஆவலோடு இருந்தான் பாரி.

கபிலர் சொன்னார், ``மருத நிலத்தில் ஒரு பறவை இருந்தது. அதன் பெயர் `அசுணமா’. இசைக்கு மயங்கும் பறவை அது. கூடல்வாசிகள் வைகைக் கரையில் அமர்ந்து, மாலைப்பொழுதில் சிறு யாழ் மீட்டி மகிழ்ந்திருப்பர். அசுணமா சிற்றொலி எழுப்பியபடி நாணல்களுக்குள் இருந்து ஒவ்வொன்றாகப் பறந்து வரும். யாழ் இசைக்கப்பட்டுக்கொண்டே இருக்க, இசைப்பவனைச் சுற்றி அசுணமா வந்து இறங்கும். கொன்றை மரக் கிளையால் செய்யப்பட்ட யாழையே கூடல்வாசிகள் மீட்டுவர். அசுணமா, கொன்றை மரத்தில் மட்டுமே அடையக்கூடிய பறவை. யாழின் இசை செவியிலும் கொன்றையின் வாசனை நாசியிலும் ஏற, அசுணமா கிறங்கி, அந்த இடத்திலேயே அடையத் தவிக்கும். நேரம் ஆக ஆக அது இசைப்பவனை நெருங்கும். பின்னர் அவன் மேலே ஏறத் தொடங்கும். அவனது தோள், கால், கை என எங்கும் சிற்றீசல்போல் மொய்க்கத் தொடங்கும். மயங்கிய அசுணமா, இசைப்பவனோடு கொஞ்சும்; தனது சிறு அலகால் அவனது கூந்தலைக் கோதும்.

p83f.jpg

மலரின் இதழ் விரிவதற்காக, அவற்றுக்கு எதிரே பறந்தபடியே காத்திருக்கும் தேனீக்கள் போல, இசைப்பவனின் இமைக்கு நேரே இறக்கைகளை அசைத்தபடி அது தள்ளாடித் தள்ளாடி மிதக்கும். இசைப்பவன் அதைக் கண்டு சிரித்துக்கொண்டே யாழ் மீட்டுவான். அந்தச் சிரிப்பை தனது அலகால் கொத்த அவனது இதழை முட்டும். அதன் கொஞ்சலில் இருந்து விடுபட முடியா இசைஞன், இரவு எல்லாம் யாழ் மீட்டிக்கிடப்பான்” எனச் சொல்லும்போதே கபிலரின் குரல் உடையத் தொடங்கியது.
“கூடல்வாசிகளுக்கு அசுணமாதான் குலப்பறவை. இசை கேட்டுத் தலையாட்டும் அசுணமா, இன்று இந்த நிலவுலகில் எங்கும் இல்லை. அந்தப் பறவை இனம் எங்கே போனது, எப்படி அழிந்தது என யாருக்கும் தெரியவில்லை. `குட்டூர் முடவனார்’தான் ஒரு கவிதை பாடினார், அகுதையின் குலம் அழிந்த மறுநாள், யாழ் நரம்பில் வந்து மோதி மோதி, தங்களின் கழுத்தை அறுத்துக்கொண்டு அசுணமாக்களும் அழிந்தன என்று.”

விரல்களால் அவனது தலைமுடியை மெள்ளக் கோதினாள். ஆற்றல் இன்றி அயர்ந்துகிடந்த நீலன், கண்விழிக்க முயன்றான். அவள் கன்னம் தொட்டு, தூங்குமாறு இமை மூடினாள். அவனுக்குள் இரவின் ஆவேசம் மேலே எழும்பியபடியே இருந்தது. கிணைப்பாணனின் குரல் செவிப்பறைக்குள் மீண்டும் மீண்டும் வந்து மோதியது. நினைவுகள் அவனது கழுத்தை நெரித்தன. எல்லாவற்றையும் சட்டென மறுத்து கண் விழித்தான். அவள் சற்றே அச்சம்கொண்டாள். அவளது விரல்கள் கன்னம் தொட அஞ்சின.

அவன் கழுத்தைத் தூக்கி எழ முயலும்போது, அவள் நெஞ்சில் கைவைத்து அழுத்தி, அவனைப் படுக்கச் செய்தாள். அவன் மனம் இரவில் இருந்து மீள முயன்றது. அவள் விரல்களால் அவனது உடல் முகர்ந்து, வெளிவர வழி அமைத்துக்கொண்டிருந்தாள்.

p83g.jpg

பாரி கேட்டான், “கூடல்வாசிகளுக்கு மட்டும் உழவு சிறப்பாக வசப்பட்டது எப்படி?'’

“எல்லோரும் காட்டை அழித்து விளைநிலமாக்கியபோது, காட்டை அறிந்துகொண்டு நிலத்தை விளையவைத்தவர்கள் அவர்கள்.”

ஆர்வத்தோடு பாரி வினவினான், ``எப்படி?”

``பன்றி அகழ்ந்த நிலத்தில் பயிர் நட்ட மலை அனுபவம்தான், சமதளத்தில் பயிர் நடுமுன் மண்ணை ஏர்கொண்டு கிளறச் சொல்லியது. பன்றியின் முன் உதடு பூமியின் தன்மையை உணரும். அதுபோல பூமியை உணரவும், அதைக் கிழித்து இறங்கும் மரத்தை உணரவும் முயன்றனர் கூடல்வாசிகள்.

வண்டல் மண்ணுக்கு, இறுகிய மண்ணுக்கு, இளமண்ணுக்கு என உழுபடைகளை வகைப்படுத்தி உருவாக்கினர். தாளி மரமும் வேலா மரமும் வெக்காளி மரமும்கொண்டு கலப்பைகள் செய்து, மண்ணின் தன்மைக்கு ஏற்ப அவற்றைப் பயன்படுத்தினர். உழு மரங்கள் மண்ணுக்கு ஏற்ற ஆழம்கொண்டு உழுதன. எல்லோரும் நிலத்தை உழ வேண்டும் என அறிந்திருந்தனர். ஆனால், உழும் நிலத்தை உணர வேண்டும் என்று அறிந்தவர்கள் அவர்களே.”

ணர முடியா இடத்தில் கிடந்த நீலனை உணரத் தலைப்பட்டாள் மயிலா. இடதுகையால் கழுத்தோடு அணைத்து அவனைத் தூக்கினாள்.அவனது முகம் முழுவதும் அவளது கூந்தல் உழுது இறங்கியது. மேல் உதடு கிளறி உள்ளிறங்கத் துடித்தன அவளது இதழ்கள். ஆனால், அவன் சோர்வில் இருந்து விடுபடாமல் இருந்தான். மூடி வைத்திருந்த சிறு கலயத்தை எடுத்து அவனுக்குக் குடிக்கக் கொடுத்தாள். அவன் கைகள் மிகவும் துவண்டிருந்தன. அவளது வலதுகை, கலயத்தைத் தாங்கியிருக்க... அவன் குடித்தான்.

நினைவுகளை உதிர்த்துவிட்டு வெளிவரத் துடிக்கும் அவனது வேட்கை, கண்களில் தெரிந்தது. நீராகாரம் உள்ளுக்குள் இறங்கி மயக்கம் கலைக்கத் தொடங்கியது. நீலன் நினைவின் ஆழத்தில் இருந்து மேலேறி மேலேறி, அவளது மார்பின் சரிவுக்கு வந்து சேர்ந்தான்.

பிலர், தான் கேள்விப்பட்ட அந்தப் பூர்வகதையை வியப்பு குறையாமலே சொன்னார்...

``அது மட்டும் அல்ல. ஏர்க்கலப்பையை மாடு இழுக்க, அதன் கழுத்தில் போடும் குறுக்கு ஆரத்தை (நேக்கா) எல்லா மரங்களிலும் செய்து மாட்டின் கழுத்தில் மாட்டி இழுக்கவைத்தனர். அகுதையின் குலம்தான் முதலில் கண்டறிந்தது, அத்தி மரம்தான் ஆவினத்தின் சேர்மானம் என்று. குறுக்கு ஆரத்தை அத்திமரத்தில் செய்தனர். அதுதான் கனம் குறைவாக இருக்கும். எவ்வளவு இழுத்தாலும் மாட்டின் கழுத்துத் தோலில் வடு பிடிக்காது. அதன் கழுத்து நரம்புக்கு எண்ணெய் நீவியதுபோல், சிறு நெளிவுக்குக்கூட சரிந்துகொடுத்துச் செல்லும்.”

பாரி வியப்போடு கேட்டான், “கால்நடைகளை மரங்களோடு இணைத்துப் பொருத்த மதிநுட்பம் தேவை. காடும் கால்நடைகளும் அதிசய உறவுகொண்டவை.”

‘ஆம்’ என்று தலையாட்டிய கபிலர் சொன்னார், “மரத்தையும் மாட்டையும் இணைத்தது மட்டும் அல்லாமல், தாவரத்தையும் மண்ணையும் இணைத்தனர். ஆவார இலையை அடிமண்ணில் போட்டபோது அவர்கள் சொல்வதை யாரும் நம்பவில்லை. அறுவடை நாளில் அம்பாரமாகக் குவிந்த விளைச்சல் கண்டு வாய் பிளந்தவர்கள், அந்தத் தாவரத்தின் பெயர் என்ன என மீண்டும் மீண்டும் வந்து கேட்டுப் போயினர்.”

``எதற்கும் ஆகார்” எனக் கேலி பேசிச் சிரித்த அவர்களின் பெருங்கிழவன் ஒருவன்தான், அந்த இலையைக் கண்டறிந்து நிலத்தில் போட்டு அமுக்கியவன். `பயிர்களுக்கு நல்ல ஆகாரம் இந்த இலை’ என அவன் சொன்னதை இரண்டு விளைச்சலுக்குப் பிறகே உண்மை என கூடல்வாசிகள் ஏற்றனர். `ஆகார இலை' என்று அந்த இலைக்குப் பெயர் சூட்டினர். அவர்களே அறியாமல் அது ஆவார இலையாக வளைந்துகொண்டது.”

வன் நீராகாரத்தைக் குடித்து முடித்தான். அவனது முகம் சற்றே அமைதிகொண்டது. மயிலா அவனை எப்படி உள்வாங்குவது எனத் தெரியாமல் தவித்தாள். அவனது முகத்தை மார்போடு அணைத்தபோது அவளது கைகள் நடுங்கின. தன்னை எத்தனையோ முறை தழுவிக்கிடந்த நீலன்தான் இவன். ஆனால், குலநாகினி கையில் ஏந்த நின்ற அந்தக் காட்சியைப் பார்த்தப் பிறகு, அவனைத் தொடவே ஆழ்மனம் அஞ்சுகிறது.

p83h.jpg

“நேற்றைய இரவில் நான் பார்த்த நீலன் நீதானா?” என்று அவனைப் பார்த்துக் கேட்கவே, அவள் தலை குனிந்தாள். அந்தச் சமயம் அவனது தலை நிமிர்ந்தது. உதடுகள் உணர நிலம் கிளறி உள்ளிறங்கினான். இதழ்கள் இணைந்தபோதும் அவள் கொண்டுவந்ததை அவன் குடித்துக்கொண்டுதான் இருந்தான்.

சிறிதுநேரம் கழித்து, இதழ்கள் விலக்கி பெருமூச்சு வாங்கியபடி தன்நிலைக்கு வந்தாள்.

``நீ ஏன் உன்னைப் பற்றி என்னிடம் இதுவரை சொல்லவில்லை?’’

மயிலாவின் கேள்விக்கு, அவன் பதில் ஏதும் சொல்லவில்லை. அவளது இமைகள் துடித்து ஆடுவதையே பார்த்துக்கொண்டிருந்தான். அடிமண்ணில் ஆகாரமாகச் சேர்ந்துகிடக்கும் குலக்கதைகள் வெளிப்பார்வைக்குச் சட்டெனத் தெரியாதே!
“உனது தோள்கள் எனது அணைப்புக்கு அப்பாற்பட்டவையாக மாறியுள்ளன என உணர்கிறேன். உனக்குள் இருக்கும் நெருப்புக்கு முன் நம் காதல் நிலைகொள்ள மறுக்கிறது” எனச் சொல்லிக்கொண்டிருக்கும்போதே அவளது கண்களில் இருந்து நீர் வழிந்தது. ஒரு கணம் கண்களை மூடி தன்னை நிதானப்படுத்தினாள்.

பறம்பின் எல்லா பெண்களையும்போல அவளுக்கும் அந்தச் சமயம் வள்ளியே நினைவுக்கு வந்தாள். வள்ளியின் உறுதிப்பாட்டுக்கு இணை சொல்ல யாரும் இல்லை. பெண்ணின் வீரிய வடிவம் அவள். மயிலாவின் மனம் வள்ளியை நினைத்துக்கொண்டிருந்தபோது தன்னைத் தூக்கிக்கொண்டு செல்வதுபோல உணர்ந்தாள். வள்ளியின் நினைவு எந்தத் துயரத்தில் இருந்தும் வெளியேற்றும். நினைவின் சுகத்தை உடல் உணர்ந்துகொண்டிருந்தது.

சட்டென கண்விழித்துப் பார்த்தாள் மயிலா. நீலன் தன் இரு கைகளால் அவளைத் தூக்கியபடி மர நிழல்விட்டு வெயில் இறங்கும் நிலம் நோக்கி வந்து நின்றான்.

சூரிய ஒளி இருவர் மீதும் பொழிந்து இறங்கியது. அவளின் கண்களைப் பார்த்து நீலன் சொன்னான், “நான் அகுதை, நீ அசுணமா. வாழ்ந்தாலும் அழிந்தாலும் பிரிவில்லை நமக்கு.”

``மலையில் இருந்தவர்கள், காட்டில் இருந்தவர்கள், கடற்கரையில் இருந்தவர்கள் எல்லோரும் வெட்டிச் சாய்க்கும் வாள்முனையின் பின்னும் பாய்ந்து இறங்கும் அம்புமுனையின் பின்புமே அலைந்துகொண்டிருந்தனர். ஆனால், கூடல்வாசிகள்தான் எந்நேரமும் ஊர்ந்து நகரும் மண்புழுவின் பின்னும், சிறு துவாரம் உருவாக்கி மறுகணம் சிறகு விரிக்கும் ஈசலின் பின்னும் அலைந்துகொண்டிருந்தனர்” என்றார் கபிலர்

“உண்மைதான். ஆனால், வாள்முனைதானே வெற்றிகொண்டது. எந்த மண்ணிலும் விளைய வைக்கத் தெரிந்தவர்களை, விதைநெல்லே அறியாதவர்கள் வீழ்த்திவிட்டனரே. காலம் வைகையின் சாட்சியாகச் சொல்லும் செய்தி ஒன்றுதான். எந்தக் கணமும் நீ தாக்கப்படலாம். ஆனால், அதற்கு முந்தைய கணம் உன்னுடையது. அதில் நீ கையறுநிலையில் நின்றால் ஆறோடு உன் குலம் போகும்” என்றான் பாரி.

கபிலர் தலையசைத்து ஆமோதித்தார். ``அகுதை மாவீரன்தான். ஆனால், திருநாளின் அதிகாலையில் கொலைவாள் கொண்டு சூழப்படுவோம் என்பதை எதிர்பார்க்கும் அளவுக்கு அவன் மனம் சீர்கெடவில்லை.”

``தீயவர்களின் வீழ்ச்சி, மகிழ்வைக் கொடுக்கும்; பாதிப்பை ஏற்படுத்தாது. நல்லவர்களின் வீழ்ச்சியோ, துயரத்தோடு நிற்காது; பெரும்பாதிப்பை உருவாக்கும். அகுதையின் தோல்விதான் இந்த மண்ணின் சமநிலை சரியக் காரணமானது. வளமான பூமி தன் கை வந்ததும் வென்றவன் பெரும் வலிமைகொண்டவன் ஆனான். அதே போன்ற ஒரு கொலைவெறித் தாக்குதலை எதிர்பாராத பொழுதில் நிகழ்த்தினால், நாமும் பெரும்வளம் பெற்றவர்களாக மாறுவோம் என்ற எண்ணம் எல்லோருக்கும் வரத் தொடங்கியது. அதைவிடப் பெரும் தாக்குதலை நிகழ்த்தி அடுத்தடுத்து மூன்று குலங்களை அழித்ததனால், சேர குலம் முதல்நிலை பெற்றது. போர் என்பது அறை கூவி நிகழ்த்துவது என்ற மரபை உடைத்தான் கொற்கைப்பாண்டியன். அகுதையின் மீது தொடுக்கப்பட்டது போர் அல்ல.”

பாரி பேசிக்கொண்டிருக்கும்போது இடதுபுறம் இருந்த புதருக்குள் இருந்து செந்நாய் ஒன்று பாய்ந்து ஓடியது. அது ஓடிய திசைநோக்கி விரைந்தான் பாரி. அது அடுத்தடுத்த புதர்களுக்குள் நுழைந்து வேகம்கொண்டது. அதன் திசையைக் கூர்ந்து கவனித்தபடி தனது கையில் இருந்த ஈட்டியை இழுத்து வீசினான். செடிகொடிகளைக் கிழித்துக்கொண்டு அதன் விலாவிலே இறங்கியது ஈட்டி.

பாரியை நோக்கி ஓடிவந்து நின்ற கபிலர், மூச்சிரைத்தபடியே கேட்டார், ``அது இறந்துவிட்டதா?”

“ஆம்” என்றான் பாரி.

தன்போக்கில் போகும் விலங்கை ஈட்டி எரிந்து கொல்லும் செயல், கபிலருக்கு நடுக்கத்தை ஏற்படுத்தியது. `பாரிதானா இது?!' எனப் பதறியபடி பார்த்தார்.

புதருக்குள் போன பாரி, தான் எறிந்த ஈட்டியை அதன் உடலில் இருந்து பிடுங்கி எடுத்து வந்தான். கபிலரின் முகத்தில் இருந்த வெறுப்பைப் பார்த்தபடி இலைகளால் ஈட்டியில் இருந்த குருதியைத் துடைத்துக்கொண்டே சொன்னான், “விலங்குகள் தமது உணவுக்காக பிற விலங்குகளை வேட்டையாடித் தின்கின்றன. ஆனால், தனது உணவுக்காகவும் தேவைக்காகவும் மட்டும் அல்லாமல், கண்ணில் படும் எல்லா விலங்குகளையும் கொன்றுபோடும் இயல்புடைய விலங்கு இது மட்டும்தான். கண்ணில் படும் நாடுகளை எல்லாம் விழுங்கப்பார்க்கும் வேந்தர்களைப்போல.”

கபிலர் அதிர்ந்து பார்த்தார்.

“காட்டு உயிர்களின் அழிவுச்சக்தி இதுவே. அழிவுச்சக்திகளை எந்த இடத்தில் கண்டாலும் பறம்பின் ஈட்டி பாயும்.”

- பறம்பின் குரல் ஒலிக்கும்...

http://www.vikatan.com/anandavikatan

Link to comment
Share on other sites

வீரயுக நாயகன் வேள்பாரி - 15

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
 

சு.வெங்கடேசன் - ஓவியங்கள்: ம.செ.,

 

83p1.jpg

ரண்டாம் நாள் நள்ளிரவுக்கு முன்பே தெய்வவாக்கு விலங்கு, மரம் இறங்கி பழத்தை எடுத்தது. முன்புறம் நடப்பதுபோலவே பின்புறமும் நடப்பது இந்த விலங்கின் இயல்பு. பழம் எடுத்ததும், சில நேரம் திரும்பி நடந்து மரக்கிளையின் மீது ஏறும்; சில நேரம் யாரும் தன்னை நெருங்கிவிடுவார்களோ என்ற பயத்தால் முன்பக்கம் பார்த்தபடியே கால்களைப் பின்னால் நகர்த்திப் போகும். இந்த முறை அப்படித்தான் போனது. அது பின்னால் நடந்து போனால், இரட்டை விளக்கு ஏற்றப்பட வேண்டும் என்பது வழக்கம். மரத்துக்கு முன்பு வைக்கப்பட்டிருந்த தீச்சட்டியில் நெருப்பு எரிந்துகொண்டிருந்தது. எண்ணெயில் முக்கி எடுத்த சிறு மரத்துண்டுகளைக் கொண்டுவந்து அதில் பக்குவமாக வைத்தனர். குலநாகினியின் கண்கள் அதைப் பார்த்துக்கொண்டிருக்க, பிற நாகினிகள் அந்த வேலையைச் செய்தனர்.

விளக்கில் தீயின் கனஅளவு அதிகமாகி, தழல் இரு கூறுகளாகப் பிரிந்து எரிந்தது. தீயின் கனஅளவு எவ்வளவு இருக்க வேண்டும் என்பதையும், தழல் எத்தனை கூறுகளாகப் பிரிய வேண்டும் என்பதையும் அவர்கள் முடிவுசெய்தனர். நீர்பாய்ச்சுவதைப்போல, தீயையும் கட்டுப்படுத்திப் பாய்ச்ச அவர்கள் கற்றிருந்தனர். குலநாகினி பார்த்துக்கொண்டிருக்க, எழும் நெருப்பின் தழல் பல கூறுகளாகப் பிரிந்து இரு கூறுகளாக நிலைகொண்டது.

நேற்றைப்போலவே தெய்வவாக்கு விலங்கு பழம் எடுத்ததும் பாணர் கூட்டம் உள்ளிறங்கும் என எதிர்பார்த்திருந்த கபிலருக்கு, சற்றே ஏமாற்றமாக இருந்தது. 83p5.jpg

“கூத்து தொடங்க நேரமாகும். வாருங்கள் நாம் இந்த மரத்தைச் சுற்றிப்பார்த்துவிட்டு வருவோம்” எனச் சொல்லி, கபிலரை அழைத்துக்கொண்டு நடந்தான் பாரி.

கொற்றவை நிலைகொண்டிருக்கும் மரக்கூட்டம் பெரும் அடர்த்திகொண்டது. மனிதனால் உள்நுழைய முடியாத அளவுக்குப் பின்னிக்கிடப்பது. பாரியோடு கபிலர் அந்த மரத்தைச் சுற்றி நடந்துகொண்டிருந்தார். அடர்ந்த காட்டில், பந்த வெளிச்சத்தில் ஆங்காங்கே தனித்தனியான வீடுகள் இருப்பது தெரிந்தது.

“இந்த அடர்வனத்தில் தனி வீடுகள் ஏன் இருக்கின்றன?” எனக் கேட்டார் கபிலர்.

“இது ஒரு மர விலங்கு. காலகாலமாக இந்த ஒரு மரத்தில் மட்டுமே இந்த விலங்கு வாழ்கிறது. வேறு எந்த மரத்திலும் இது ஏறாது. எனவே, இந்த இடம் தவிர, வேறு எங்கேயும் இந்தப் பிராணியை நீங்கள் பார்க்க முடியாது. இந்த விலங்கு, வேட்டை விலங்குகளுக்கு மிகவும் பிடித்த உணவு. இந்த மரப் புதருக்குள் நுழைந்து இதை எப்படியாவது தின்றுவிட அவை முயல்கின்றன. அதனால்தான் இதைப் பாதுகாக்க காவற்குடிகள் இங்கு இருக்கின்றனர்.”

பேசிக்கொண்டிருக்கும்போது துடிப்பறையின் ஒலி கேட்கத் தொடங்கியது. `‘வாருங்கள்’’ எனச் சொல்லி வேகமாக முன் நடந்தான் பாரி.

செம்பாதேவியின் கதை இது. எனவே, ஆடுகளம் முழுவதையும் நிறைத்து ஓர் அழகிய கோலம் போடப்பட்டிருந்தது. பாரியும் கபிலரும் இருக்கையில் வந்து அமர்ந்தனர். அப்போதுதான் தரையை மெழுகி, கோலம் போட்டிருந்ததால் சாணத்தின் வாசனை எங்கும் வீசியது. அதன் ஈரம் காயவில்லை. கோலத்தின் நடுவில் வெண்ணெயில் தானியங்களை உருட்டிச் செய்யப்பட்ட `வெண்சாந்து உருண்டை’ வைக்கப்பட்டிருந்தது. அந்த உருண்டையின் நடுவில் மாட்டின் இரு கொம்புகளை நட்டுவைத்திருந்தனர். வெண்சாந்து உருண்டையின் வாசனை எங்கும் பரவியிருந்தது.

கோலத்தின் முன்பு பெண் ஒருத்தி அமர்ந்து உடுக்கை வகையைச் சேர்ந்த துடிப்பறையை அடிக்கத் தொடங்கினாள்.

“இவர்கள் பாணர்களா?” எனக் கேட்டார் கபிலர்.

“இல்லை... பறம்பு மக்கள்” என்றான் பாரி.

83p2.jpg

துடியின் ஓசை பேராந்தையின் ஓசையைப்போல அச்சத்தை ஏற்படுத்தக்கூடியது. நீருக்குள் பொடி கரைவதைப்போல, இருளுக்குள் துடி கரையத் தொடங்கியது. தங்களுக்கு என்று பாணர்கள் அற்ற குலம் இவர்களுடையது. அந்தக் குலப்பெண் செம்பாதேவியின் கதையைத் தொடங்கினாள். கபிலர் கேள்விப்பட்டிராத கதை இது.

ஆதிகாலத்தில் மலைமக்களில் ஒரு பிரிவினர் கால்நடைகளை வளர்க்கப் பழகியபோது, மேய்ச்சல் நிலங்களை நோக்கி தந்தரைக்கு இறங்கினர். குறிஞ்சி நிலத்தைவிட்டு இறங்கிய ஐந்து குடும்பங்கள் செம்மலையின் அடிவாரத்தில் குடில் அமைத்தனர். கால்நடைகளை மேய்த்துப் பல்கிப் பெருக்கினர். ஐந்து வகைக் குடும்பத்தின் குலவழி தழைத்தது.

அந்தக் குலவழியின் வகையை அடிப்படையாகக்கொண்டு அடையாளங்களை உருவாக்கவேண்டிய தேவை வந்தது. குலத்துக்கு ஒரு வகை என ஐவகையான சூட்டுக்காயங்களை ஆண்கள் தம் வலது தோளிலே உருவாக்கிக் கொண்டனர். பெண்களுக்கு அதே போல சூட்டுக்காயத்தை உருவாக்கினால் திருமணத்துக்குப் பின்னர் அவளது குடும்ப அடையாளம் மாறும், எனவே சூட்டுக்காயம் சரிப்பட்டு வராது. வேறு வழிகளைச் சிந்தித்தனர். பெண்களே அதற்கு ஒரு முடிவும் கண்டனர். தங்களின் தலைமுடியை, குலத்துக்கு ஒரு வகை என ஐந்து வகைகளாகப் பின்னிக்கொள்வது என முடிவு எடுத்தனர்.

ஐவகைக் கொண்டைகளை உருவாக்கினர். அந்தக் காலத்தில், எல்லா நாட்டுப் பெண்களுக்கும் தலைமுடியைச் சுருட்டி கொண்டைபோடும் பழக்கம் மட்டும்தான் இருந்தது. ஆனால், உச்சந்தலையில் வகிடு எடுத்து இரு பக்கங்களும் முடி சரிய இரு கொண்டைகள்... அதேபோல மூன்று, நான்கு, ஐந்து என ஐந்து விதமான கொண்டைகளை இவர்கள் முடிந்தனர். ஐந்து விதங்களிலும் சடைகளைப் பின்னினர். அதில் மேய்ச்சலுக்குச் செல்லும் வெவ்வேறு நிலத்தின் பூக்கள் சூடப்பட, இவர்களைப் பார்க்கும் ஆணும் பெண்ணும் சொக்கிப்போனார்கள். `அழகைப் பேணும் அதிசயக் கூட்டம்' என இவர்களைப் பற்றி திசை எங்கும் பேச்சு பரவியது.

மேய்ச்சலின்போது கால்நடைகளின் கோமியம் வெவ்வேறு வகையில் வளைந்து வளைந்து வடிவம்கொள்வதை, காலம்பூராவும் பார்த்துக்கொண்டிருந்தவர்கள் இந்தப் பெண்கள். அந்த நீர்க்கோலம் மனதுக்கு எப்போதும் ஒரு காட்சி இன்பத்தை ஏற்படுத்தக்கூடியது. ஆனால், கணப்பொழுதில் அந்தக் காட்சி மறைந்துவிடும். புன்னகை, காற்றில் மறைவதைப்போல மண்ணில் மறையும் மஞ்சள் வண்ண நீர் அது.

தனது குடிலின் வாசலில் அதே போன்ற ஒரு கோலத்தை வரைந்தால் என்ன என எண்ணினர். இடித்த குருணையின் தொலியைச் சிறுகத் தூவியபடி அவர்களின் விரல்கள் வலமும் இடமுமாக வளைய ஆரம்பித்தன. ஐந்து விதமாக தலைமுடியைப் பின்னியும் கொண்டைபோட்டும் பழக்கப்பட்ட விரல்களுக்கு வளைந்து நெளியும் கோலம் எளிதில் வசப்பட்டது. மாடு பெய்த நீரின் எல்லா வளைவுகளையும் தனது ஒற்றைக் கோலத்துக்குள் கொண்டுவர அவர்களுக்கு அதிக காலம் ஆகவில்லை.

செம்மலையின் அடிவாரத்தில் உள்ள பெண்கள் விதவிதமாகக் கொண்டை போட்டு, தரை எங்கும் கோலம் போடும் அழகு அரசிகள் என எல்லோராலும் பேசப்பட்டனர். காட்டு வழியிலும் உமணர்களின் காது வழியிலும் இந்தச் செய்தி எல்லா பகுதிகளுக்கும் பரவியது. இவர்கள் இருக்கும் பகுதிக்கு `கோலநாடு' எனப் பெயர் உருவாயிற்று.

புதிய நாகரிகத்தின் அடையாளமாக செம்மலை மாறியது. இதில் வெளி உலகுக்குத் தெரியாத இன்னொன்றும் இருந்தது. ஐந்து குடும்பங்களும் தங்களின் மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துப்போய்விட்டு வந்து, ஐந்து தனித்தனிப் பட்டியில்தான் அடைக்க வேண்டும். அப்படி என்றால், அவற்றுக்கும் தனித்தனி அடையாளம் தேவை. மாடுகளுக்கு, பிற இடங்களில் சூட்டுக்குறி, காது அறுத்தக் குறிகள் எல்லாம் போட்டிருப்பதைக் கேள்விப்பட்டனர். கால்நடைகளே தங்களின் தெய்வம். எனவே, அவற்றைத் துன்புறுத்தாத வழியில் அடையாளம் இட விரும்பினர்.

மூத்த கிழவி ஒருத்தி, `இந்தச் செம்மலையில் இத்தனை வகையான வண்ணக்கற்கள் கிடக்கின்றன. அவற்றை எடுத்து, ஒரு குடும்பத்துக்கு ஒரு வண்ணம் என முடிவுசெய்யுங்கள். அந்த வண்ணக்கல்லையே அந்தக் குடும்பத்தின் மாடுகளுக்கும் நெற்றிப்பட்டமாகச் சூட்டுங்கள்’ என்றாள். அதில் இருந்து ஐந்து வகையான வண்ணக் கற்களைக்கொண்டு கொம்புகளுக்கு இடையில் கயிறு முடிந்து நெற்றிப்பட்டத்தை உருவாக்கினர்.

மாடுகள் எந்த நிலையிலும் துன்பப்படக் கூடாது என்பதே இவர்களின் எண்ணமாக இருந்தது. கிடைமாடுகளின் மேல் சிறுபூச்சிகளும் உண்ணிகளும் நிறைந்துகிடந்தன. அவற்றைக் கொத்தித் தின்ன எந்த நேரமும் பறவைகள் அவற்றின் மீதே அமர்ந்து இருந்தன.

83p3.jpg

இதைத் தடுக்க ஒரு வழியைக் கண்டறிந்தனர். திரட்டப்பட்ட வெண்ணெயில் தானியங்களைக் கலந்து, பெரிய வெண்சாந்து உருண்டைகளை உருவாக்கினர். அந்த உருண்டையை நாணல்கூடையில் வைத்து கிடையின் ஓரம் ஏதாவது ஓர் இடத்தில் வைத்துவிட்டால் போதும். பறவைகள் முழுக்க வெண்சாந்து உருண்டையைத்தான் மொய்த்துக்கிடந்து, மாடுகளின் பக்கம் போகவே போகாது.

ஒருநாள் இரவு வெண்சாந்து உருண்டை வைக்கப்பட்டிருந்த நாணல் கூடையை குடிலுக்குள் வைக்காமல், மறந்து வெளியில் வைத்துவிட்டுத் தூங்கிவிட்டனர். நாணல் கூடையின் இண்டு இடுக்குகளில் ஒட்டியிருப்பதை இரவு முழுவதும் பறவைகள் கொத்தித் தின்றுள்ளன. காலையில் எழுந்து பார்த்தபோது, நாணல் கூடை நார்நாராக உதிர்ந்துகிடந்தது. வெண்சாந்து உருண்டையின் சுவை, பறவைகளையே வெறிகொள்ளச் செய்துள்ளது.

நாடோடி நாகரிகம் எல்லா உயிர்களையும் தனதாக்கி நேசித்தது. இவர்களின் குலம் தலைமுறைத் தலைமுறையாகத் தழைத்து முன்னேறியது. மனிதர்களும் கால்நடைகளும் பல்கிப் பெருகின.

கோல நாட்டினர், பல்வேறு குழுக்களாக ஒவ்வோர் ஆண்டும் மார்கழி மாதம் பிரிந்து மேய்ச்சலுக்குப் போவார்கள்; மீண்டும் ஆவணி மாதம் செம்மலைக்குத் திரும்புவார்கள். எல்லோரும் கொண்டுவரும் மாடுகள் குடும்ப அடையாளத்தோடு பிரிக்கப்பட்டு, கணக்கு வைத்துக்கொள்ளப்படும்.

வழக்கம்போல் மார்கழி மாதம் கோல நாட்டில் இருந்து மேய்ச்சலுக்காகப் பல்வேறு திசைகளில் கிடைபோட குழுக்கள் புறப்பட்டுப் போயின. ஒரு குழு, காவிரி ஆற்றின் படுகையில் நகர்ந்தது. பதினெட்டுக் குடும்பங்களையும் இருநூறு மாடுகளையும் கொண்டிருந்தது அந்தக் கிடை. அந்தக் கிடையில் சுடர்ந்து ஒளிவீசும் தழல்போல் இருப்பவள் செம்பா. வகிடு எடுத்து இரு சடை பின்னிய குடும்பம் அவளுடையது. கோவனின் தோள்கள் மாட்டின் திமில்போல் உருத்திரண்டு இருக்கும். அவனது வலது தோளில் பொறிக்கப்பட்ட மூன்று சூட்டு அடையாளத்தின் மீது சிறுவயதில் விரல்வைத்துப் பார்த்த செம்பா, இப்போது இதழ் பதித்துப் பார்க்கவே ஆசைப்படுகிறாள்.

கிடையின் முன்னால் நடந்துபோகும் கோவனின் நடையைத் தொடர்ந்து மொத்த மாடுகளும் நகர்ந்தன. கிடையின் இடது ஓரம், நாணல் கூடை தூக்கி நடக்கும் செம்பாவைச் சுற்றி பறவைக் கூட்டம் மிதந்து வந்தது. மாட்டின் காதுகள் விடைத்து ஆட, பறவைகளின் இறக்கைகள் படபடத்து அடிக்க, பசுக்களுக்கும் பறவைகளுக்கும் நடுவில் செழித்து வளர்ந்தது அவர்களின் காதல்.

கிடைமாடு நடந்துகொண்டிருக்கும்போதே குட்டியை ஈனும். அந்தக் குட்டியால் உடனடியாக கிடையின் வேகத்துக்கு நடக்க முடியாது. பால் குடிக்கும் நேரம் தவிர, பிற நேரத்தில் அதைத் தோளிலே தூக்கித்தான் நடக்க வேண்டும். கோவன் இளங்குட்டியைத் தோளில் தூக்கி நடக்க, ஈன்ற பசு அவனை உரசியே நடந்து வந்து, குட்டியை நாவால் நக்கி இன்புற்றது. செம்பாவின் கண்கள் அவனையே பார்த்துக்கொண்டிருந்தன. தோளில் கிடக்கும் இளங்குட்டியின் மீது ஒரு கணம் பொறாமை வந்து விலகியது.

மாலையில் மாடுகளைக் கிடைபோட்டு, இரவு கஞ்சி குடித்து, தங்களின் குடிலுக்கு நடுவில் சிறு கூத்து நிகழ்த்துவர். எல்லோருக்கும் பாடத் தெரியும். ஆள் மாற்றி ஆள் பாடுவர். கிடையில் காவலுக்கு நிற்பவன்கூட எட்ட இருந்தே தனது பாடலைப் பாடுவான். எல்லோரின் பாடலுக்கும் துடிப்பறை முழங்கி இசை கொடுப்பவன் கோவன்தான். இடது கை துடியை இழுத்துப் பிடிக்க வலது கை விரல்களால் அதன் வலதுபுறத்தை அடித்து அடித்து தாளம் எழுப்பும் அழகைப் பார்த்து மகிழ்வாள் செம்பா. அன்று கோவனின் துடியிசை வழக்கத்துக்கு மாறாகத் துள்ளலோடு இருந்தது. கூத்து முடிந்ததும் எல்லோரும் தங்களின் குடிலுக்குப் போக செம்பா, கோவனின் காது அருகே போய்ச் சொன்னாள், “துடியின் இடப்பக்கம் போலவே நானும் உனது விரல்படாமல் இருக்கிறேன்.”

கோவன் கலங்கிப்போனான். அன்று இரவு முழுவதும் துடியின் இடதுபுறம் பற்றியே நினைத்திருந்தான். கிடைக் காவல்காரனின் பார்வைக்குத் தப்பி குடில் தாண்ட முடியாது. வேறு வழியின்றி கோவன் ஒடுங்கிப் படுத்தான்.83p6.jpg

மறுநாள் பக்கத்தில் இருக்கும் ஊருக்கு வெண்ணெய் விற்கப் போனாள் செம்பா. வெண்ணெய் விற்று, தானியம் பெற்றுவருவது பெண்களின் வேலை. உழவு செழிப்பாக நடந்துகொண்டிருந்த ஊர் அது. இரு தெருக்களைத் தாண்டும் முன்பே அவள் கொண்டுவந்த வெண்ணெய் விற்றுத் தீர்ந்தது. தானியங்களைப் பெற்றுக்கொண்டு மர அடிவாரத்தில் காத்திருந்தாள். எதிர்ப்பக்கம் விற்கப்போன அவள் தோழி இன்னும் வரவில்லை. அங்கும் இங்குமாகப் பார்த்துக்கொண்டிருந்தாள். சற்றுத் தொலைவில் நின்றிருந்த இளைஞன் ஒருவன் தன்னையே பார்த்துக்கொண்டிருந்ததை அவள் கவனித்தாள். தோழியை கண்கள் தேடிக்கொண்டிருக்க, தன்னைக் கடந்துபோகும் பெரியவரிடம், ``இந்த ஊர் பெயர் என்ன?’’ எனக் கேட்டாள்.

“உறையூர்” என்றார் அவர்.

பார்த்துக்கொண்டிருந்தவனைக் கடந்து தோழி நடந்து வந்தாள். இருவரும் கிடை நோக்கி தானியங்களைத் தூக்கிக்கொண்டு நடந்தனர். தானிய முடியை மறுதோளுக்கு மாற்றியபடியே தோழி சொன்னாள். “உன்னைப் பார்த்துக்கொண்டே நின்றவன் இந்த ஊர் குலத்தலைவரின் மகனாம். ஊருக்குள் நுழைந்ததில் இருந்து உன் பின்னால்தான் வந்துகொண்டிருக்கிறானாம். கிள்ளி என அவனை அழைத்தார்கள்.”

83p4.jpg

``புதுவிதமான பெயராக இருக்கிறதே?”

“ `எதிரிகளின் தலையைக் கிள்ளி எடுத்ததால் இந்தப் பெயர் உருவாயிற்று’ என்று ஒரு மூதாட்டி சொன்னாள். ஆனால், உன்னைப் பார்த்துக்கொண்டிருந்த அவனது கண்களும் அதே வேலையைத்தான் செய்தன.”

அவள் சொல்வதைப் பொருட்படுத்தாத செம்பா, மகிழ்வோடு சொன்னாள், “இன்று சிறு சோளம் கிடைத்திருக்கிறது. காரமாட்டுப்பாலில் இருந்து கடையப்பட்ட இளவெண்ணெயைப் பிசைந்து சாப்பிட்டால், அப்படி ஒரு சுவை இருக்கும். நினைக்கும்போதே நாவூறுகிறது” என்றாள்.

இரவு, கஞ்சி குடித்த பிறகு கூத்து முடிந்து எல்லோரும் கலைந்தனர். அன்றைய கிடைக்காவல் முறையில் கோவனும் உண்டு. செம்பா அவனுக்காகச் சமைத்த கஞ்சியைச் சிறு கலயத்தில் ஏந்தி குடிலுக்குப் பின் காத்திருந்தாள். இருள் நன்றாக அடங்கிய பிறகு குடிலுக்குப் பின்புறமாக மறைவாக வந்து சேர்ந்தான் கோவன். அந்த இடமே சுவையால் மணத்துக்கிடக்க, பூத்து நின்றாள் செம்பா. பிசைந்த உணவை ஊட்ட அவன் வாய் அருகே கையைக்கொண்டு சென்றபோது நாவால் விரல் தொட்டு வாங்கினான்.

அந்தச் சிறு தொடுதல் மொத்த உடலையும் குலுக்கியது. காதலின் கூர்மிகு ஆயுதம் நீர்சுரக்கும் நுனி நாக்கு. சற்றும் எதிர்பாராமல் கோவன் அதைப் பயன்படுத்தியபோது செம்பா நடுங்கிப்போனாள்.

உணவு அருந்தியபடியே துடியின் இடதுபுறத்தின் மீது அவனது விரல்கள் படரத் தொடங்கின. அவள் உள்நடுங்கிக் குலுங்கினாள். அவள் கண்செருகி மீண்டபோது கடைசிக் குடிலுக்குப் பின்னால் குதிரையில் ஒருவன் போவது தெரிந்தது. கிடையில் கிடந்த நாய்கள் சுதாரித்து அந்தத் திசைநோக்கிப் பாயத் தொடங்கின. ஆனால், குதிரை படுவேகத்தில் மறைந்தது. நாயின் குரைப்பொலியில் அனைவரும் எழுந்துவிட்டனர். வேல்கம்பைத் தூக்கியபடி முன்னால் ஓடி நின்றான் கோவன். அவிழ்ந்த நூல்களைக் கட்டியபடி குடிலுக்குள் நுழைந்த செம்பாவிடம் எதிர்ப்பட்ட தோழி சொன்னாள்... “வந்தது அவன்தான்”. சொல்லியபோது செம்பாவின் கட்டு கழன்று இருந்ததை அதிர்ச்சியோடு பார்த்தாள் தோழி.

செம்பா, தலையை மறுத்தபடி ஆட்டி, சற்றே வெட்கப்பட்டுச் சொன்னாள்...

“கோவன்.”

தோழி திரும்பிப் பார்த்தாள். கோவன் வேல்கம்போடு முன்னிலையில் நின்றுகொண்டிருந்தான். காதல், கண நேரத்துக்குள் எல்லோரையும் கண்ணைக்கட்டி விளையாடிக்கொண்டிருந்தது. நாய்கள் திருடனோடு சேர்ந்து ஓடுபவனைக் குரைத்தன. தோழி கோவனின் அருகில் போய் காதோடு சொன்னாள், “இனி நீ கிடைக்காவல் நிற்கும் நாள் எல்லாம், நான் இடைக்காவலுக்கு நிற்பேன்.”

மறுநாள் மாலையில், கிடைக்கு இடப்புறம் இருந்த பெருமேட்டிலே தந்தையோடு வந்து நின்றான் கிள்ளி. சற்றுத் தொலைவில் மாட்டுக்கிடையும் குடில்களும் இருந்தன. தந்தையின் கண்கள் மாடுகளை எண்ணின.

“இருநூறுக்கும் குறைவாகத்தான் இருக்கிறது. இதைவிட பெருஞ்செல்வம் இருக்கும் இடத்தில் பெண் எடுப்போம்” என்றார்.

அவனோ அவர் சொல்வதை ஏற்கவில்லை. “அவள் பேரழகு, அதற்கு இணையான செல்வம் எதுவும் இல்லை” என்றான்.

அவரோ மறுத்துப் பேசி அவனது மனதை மாற்ற முயன்றுகொண்டிருந்தார். நடக்கவில்லை. சரி, நமது மாளிகைக்குப் போய் பேசிக்கொள்வோம் என முடிவு எடுத்து குதிரையின் மீது ஏறப்போகும்போது சொன்னான்... “இன்னும் சிறிது நேரத்தில் குடிலுக்கு நடுவில் பந்தம் ஏற்றி கூத்து நிகழ்த்துவார்கள். அப்போது அவள் குடிலுக்குள் இருந்து வெளியில் வருவாள். அவளை நீங்கள் பாருங்கள். நான் சொல்வதை ஏற்பீர்கள்” என்றான்.

இருள் கூடியது. பந்தங்கள் ஏற்றப்பட்டன. எல்லோரும் வந்து கோலத்தைச் சுற்றி அமர்ந்தனர். கோவன் வழக்கம்போல துடியோடு வந்து உட்கார்ந்தான். நேர் எதிரில் தோழி வந்து உட்கார்ந்தாள். கோவன் சற்றே தலையைத் திருப்பி தனக்குள் சொல்லிக்கொண்டான்... “துடியின் இடப்புறத்தை ஊர் திரும்பி மணம் முடிப்பது வரை நினைக்கக் கூடாது.”

அவள் இன்னும் ஏன் குடில்விட்டு வெளிவரவில்லை என ஆவலோடு பார்த்தபடி தொலைவில் நின்றுகொண்டிருந்தான் கிள்ளி. எங்கும் கும்மிருட்டுச் சூழ்ந்திருந்தது. பந்த வெளிச்சத்தில் எதிர்சுடர் வீச அவள் குடிலுக்குள் இருந்து வெளியேறி வந்து, கோவனுக்கு எதிரில் உட்கார்ந்தாள். நேற்று கலைந்த வெட்கம், இன்று கூடி நின்றது. கோவனால் அவளை நேர்கொண்டு பார்க்க முடியவில்லை. அவனது விரல்கள் துடியின் மீது படவே அஞ்சின. தாளம் கூடவில்லை. ஓசையும் அவனைப்போலவே பம்மியது. கிடையின் பெரியாம்பளைச் சொன்னார், “டேய்... நேத்து கஞ்சி குடிச்சவன் மாதிரி அடிச்சுக்கிட்டு இருக்க, சத்தமே கேட்கலை. இழுத்து அடிடா.”

தோழி சொன்னாள்...

“பெருசு, நேத்தும் அவன் கஞ்சி குடிக்கலை. அதுதான் விரல் செத்துப்போய் கிடக்கு.”

செம்பா அதிர்ச்சியோடு தோழியைப் பார்த்தபோது, அவளோ சற்றே ஆணவச் சிரிப்போடு கோவனைப் பார்த்தாள்.

தொலைவில் இருந்து பார்த்தபடி அவள் பேரழகில் மயங்கி வாய்பிளந்து நின்ற கிள்ளி, தந்தையிடம் காட்ட அவரை நோக்கித் திரும்பினான். அவரோ ஒலியற்ற இருளின் திசையை நோக்கி வாய்பிளந்து பார்த்தபடி, அதிர்ச்சியில் உறைந்து நின்றார்!

- பறம்பின் குரல் ஒலிக்கும்...

http://www.vikatan.com

Link to comment
Share on other sites

வீரயுக நாயகன் வேள்பாரி - 16

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
 

சு.வெங்கடேசன் - ஓவியங்கள்: ம.செ.,

 

83p1.jpg

துடிப்பறை அடிக்கும் பெண், மரம் நோக்கி உட்கார்ந்திருந்தாள். அவளது விரல்கள், துடியின் வலதுபுறத்தை இழுத்து இழுத்து அடித்து ஓசையை எழுப்பிக்கொண்டிருந்தன. நான்கு பின்னல் சடையைப் பின்னிய பெண்கள் உள்ளிறங்கினர். உச்சி எடுத்து இருபக்கச் சடைப்பின்னல் மட்டும் யாரும் போடவில்லை. எனவே, அது துடி வாசிக்கும் பெண்ணுக்கு உரியது என்பது கபிலருக்குப் புரிந்தது. அந்தப் பெண்ணை இதற்கு முன்னால் பார்த்ததுபோல் இருக்கிறது. ஆனால், எங்கு என்று நினைவில்லை.

உள்ளிறங்கிய பெண்கள், தாங்கள் பின்னியிருந்த சடைமுடியை அவிழ்த்தனர். கூந்தல் பரவி தோள் முழுக்கச் சரிந்தது. மெள்ள தலையை ஆட்டியபடி இருந்தனர்.

“அணங்குகள் இறங்குகின்றன’’ என்றான் பாரி.

`மோகினி’ என அஞ்சப்படும் வனதேவதைகளே அணங்குகள் ஆவர். அணங்குகள் முனங்கும் ஓசை விரிந்த கூந்தலின் வழியே வெளிவரத் தொடங்கியது. கபிலர் உற்றுப்பார்த்தபடி இருந்தார். அவரது கவனம் பாடுபவள் சொல்லிச் செல்லும் கதையின் மீதே இருந்தது.

83p2.jpg

றையூரைவிட்டு கிடை புறப்பட்டது. கோடைவெயில் தகித்துக்கொண்டிருந்தது. அவர்கள் அதற்கு ஏற்ற நிலப்பகுதியைப் பார்த்து கிடையைச் செலுத்திக்கொண்டிருந்தனர். தோழியைக் கண்டு பம்மியபடி நகர்ந்து கொண்டிருந்தான் கோவன். அவனது பம்மலுக்கான காரணம் செம்பாவுக்கு முதலில் புரியவில்லை. நிலைகொண்டு தங்காமல் தொடர்ந்து நடந்துகொண்டிருந்தது கிடை. கோவன் மறைந்து மறைந்து சிரித்துக்கொண்டு இருந்தான். ஒரு பிற்பகல் நேரத்தில் தோழி நாணல்கூடையில் வெண்சாந்து உருண்டையைத் தூக்கியபடி கிடையின் பின்புற ஓரத்தில் வந்துகொண்டிருந்தாள். முன்புறத்தின் இடது ஓரத்தில் நடந்துகொண்டிருந்தான் கோவன். அவனது தோளில், ஈன்றகுட்டி ஒன்று கிடந்தது. பின்னால் வரும் தாய்ப்பசு நாவால் நக்க, அது துள்ளியபடி இருந்தது. அந்தக் கன்று துள்ளிவிடாதபடி அதன் கால்களை தனது இரு கைகளாலும் இறுகப்பிடித்து நடந்துகொண்டிருந்தான். அவனைக் கடந்துபோன செம்பா, தாய்ப்பசு கத்தும் ஓசையோடு சேர்த்து வலதுபுற இடுப்பில் இரு விரல்கொண்டு ஒரு நிமிண்டு நிமிண்டினாள்.

பால் பீச்சும் விரல்கள் மூங்கில் நாரைவிட வலுமிக்கவை. நிமிண்டிய விரல்களை எடுக்கும் முன்னர் துள்ளி வில்லைப்போல் வளைந்தான் கோவன். அவனைத் தாண்டி குதித்தோடியது தோளில் கிடந்த குட்டி. அது வேறு திசையில் ஓடிவிடக் கூடாது என்பதற்காகப் பாய்ந்து விழுந்து பிடித்தான். விழுந்தவனின் அருகில் புன்முறுவலோடு மண்டியிட்டு உட்கார்ந்தாள் செம்பா. அவன் பிடியில் இருந்து குட்டியை விடுவித்தாள். அவளது பிடியில் இருந்து, தன்னை விடுவித்துக்கொள்ள அவன் முயற்சி செய்யவில்லை. முயன்றாலும் அது நடக்காது எனத் தெரியும். கிடைமாடுகள் அவர்களைச் சுற்றி விலகி நடந்தன. அவளின் கன்னத்தை வாலால் தட்டிவிட்டுப்போனது கிடாரி ஒன்று. 

பறவைகள் மொய்த்துக்கிடக்கும் நாணல் கூடையைத் தூக்கிவந்த தோழியின் கண்கள் கிடையை மேய்ந்தன. இருவரையும் காணவில்லை. குறுக்கும் நெடுக்குமாக பறவைகள் பறந்தபடியிருக்க, அவளால் எந்தப் பகுதியையும் உற்றுப்பார்க்க முடியவில்லை. இளங்கன்று, வயிறு நிறைய பால் குடித்து முடித்தது. கோவன் மீண்டும் கன்றைத் தோளில் தூக்கியபடி எழுந்தான். உடன் எழுந்தபடி செம்பா சொன்னாள், “அவள் இன்னொரு முறை வந்து கேட்டாள் சொல்... நீ இடைக்காவல்தான் இருக்க முடியும். இதழுக்குக் காவல் இருக்க முடியாது என்று.''

உரசி நகரும் கிடை வாழ்க்கை எந்நேரமும் காதலைப் பற்றவைத்தபடியே இருந்தது.  கடையப்பட்ட தயிர் மத்தின் விளிம்புகளுக்கு இடையில் விரல் தேய்த்து வெண்ணெயை எடுப்பதைப்போல, திரளத்திரளக் காதலை எடுத்துக்கொண்டே நடந்தனர் செம்பாவும் கோவனும். அவர்கள் சற்றே கவனக்குறைவாக இருந்தாலும், தோழி அடிக்க வருவதாக நினைத்து புது மத்தைக் கையில் கொடுத்துவிட்டுப் போய்விடுவாள். அதற்குள் இன்னொரு பசு கன்றை ஈனும். துள்ள முடியாதபடி கோவன் கன்றையும், செம்பா அவனையும் பிடித்தபடி இருப்பார்கள். அவ்வப்போது விரல்கள் நிமிண்டித் திருகின. விலகும் கிடைக்கு இடையில் நிலம்தொட்டு காதல் துள்ளி எழுந்தது. 

83p3.jpg

ந்தக் கிடைக்குப் பின்னால், வெகுதொலைவில் குதிரை வீரர்கள் சிலர் பல நாட்களாக வந்துகொண்டிருந்தனர். குலத்தலைவனின் உத்தரவு அது. செம்பாவை வாய் பிளந்து பார்த்தபடி கிள்ளி நின்றுகொண்டிருந்த போது, அவனது தந்தை இருட்டுக்குள் இருந்த கிடை மாடுகளைத்தான் வாய்பிளந்து பார்த்துக் கொண்டிருந்தான். மாடுகளின் கொம்புகளுக்கு இடையில் கயிறு முறுக்கிக் கட்டப்பட்டிருந்த நெற்றிப்பட்டத்தில் இளஞ்சிவப்பு, மஞ்சள், நீலம், பச்சை, கருஞ்சிவப்பு என ஐந்து வண்ணங்களில் கற்கள் ஒளிவிட்டுக்கொண்டிருந்தன. அவனது கண்களையே அவனால் நம்ப முடியவில்லை.

மாளிகைக்கு அழைத்துப்போய் மகனைக் கட்டித்தழுவி முத்தமிட்டான் தந்தை.

“ `இருளிலும் சுடர்போல் ஒளிரும்’ என்று நீ சொன்னபோது பெண்ணைச் சொல்கிறாயோ எனத் தவறாக நினைத்துவிட்டேன். எல்லாம் மணிக்கற்கள். யாருக்கும் கிடைக்காத மணிக்கற்கள். அவற்றை நாம் அடையவேண்டும்” எனச் சொல்லி கிடையை அறிந்து வர ஆள் அனுப்பினான்.

போய்வந்தவர்கள் சொன்னார்கள்...  “அவர்களின் ஊர் இருக்கும் மலை முழுவதும் இந்தக் கல் கிடக்கிறதாம். அதைவைத்துதான் மாட்டுக்குப் பட்டம் கட்டியுள்ளனர்.”

“அவர்களின் மலை எங்கும் கிடப்பது மணிக்கற்கள் என அந்த மூடர்களுக்குத் தெரியவில்லை. நாம் இந்த இருநூறு கற்களோடு ஏமாந்துவிடக் கூடாது. இந்தக் கிடையைப் பின்தொடர்ந்தே போங்கள். அந்த ஊரை அடைந்ததும் தகவல் சொல்லுங்கள்” எனச் சொல்லி அனுப்பினான். வீரர்கள் அவர்களின் பின்னால் வந்துகொண்டே இருந்தனர்.

ஒரு முன்மாலைப்பொழுதில் கிடை நகர்ந்துகொண்டிருந்தபோது, தோழி  ஓசை எழுப்பி செம்பாவை அழைத்தாள்.

“அருகில் இருக்கும் ஓடையில் நீர் அருந்தி வருகிறேன். அதுவரை நீ தூக்கி வா” எனச் சொல்லி வெண்சாந்து உருண்டை இருந்த நாணல்கூடையை செம்பாவின் தலைக்கு மாற்றினாள்.

கூடை மாற்றுவதை மிகக் கவனமாகச் செய்ய வேண்டும். வெண்சாந்து உருண்டைகள் தோளில் சிந்திவிட்டால், அவற்றைக் கையால் தட்டும் முன் பறவையின் அலகு கொத்தி எடுத்துவிடும். காக்கை கொத்தினால் தோளில் சிறு கீறல் ஏற்படும். மைனாவின் அலகோ சிறு துளையிட்டு எடுக்கும். அதுவே மரங்கொத்தியாக இருந்தால், காயம் ஆற ஒரு வாரம் ஆகும்.

பறவைக் கூட்டம் இப்போது செம்பாவின் தலையைச் சுற்றி இடம் மாறியது. பறவைகளின் இடைவிடாத  கீச்சொலிக்கு இடையில் செம்பா கூப்பிட்டது கோவனுக்குக் கேட்கவில்லை. முதுகிலே சுள்ளென கல் விழுந்த பிறகுதான் திரும்பிப் பார்த்தான். 

தோழியைச் சுற்றும்முற்றும் பார்த்தபடி செம்பாவின் அருகில் வந்தான் கோவன். அவள் கூடையை அவன் தலைக்கு மாற்றினாள். பறவைகள் தேனீக்கள் மொய்ப்பதைப்போல அவர்கள் இருவரையும் சுற்றி, படபடத்து, மொய்த்துக்கொண்டிருந்தன. உடல் மேல் சிந்திய வெண்சாந்து உருண்டையை பறவைகள் கொத்தி எடுப்பதால்தான், அவன் இப்படி நெளிந்தும் வளைந்தும் பாடாய்ப்படுகிறான் எனப் பார்த்தவர்கள் நினைத்தனர்.

பசுக்களுக்கு இடையில் படர்ந்ததைப்போல, பறவைகளுக்கு இடையிலும் சுழன்றது அந்தக் காதல். பசுக்கள் விலகி நடக்கவும், பறவைகள் கூடிப்பறக்கவும் இவர்களுக்காகவே கற்றுக்கொண்டதுபோல் இருந்தது. குருவி ஒன்று அவர்களின் இதழைக் கொத்திய பிறகுதான், செம்பா அவனைவிட்டு விலகி, நீர் அருந்தி வருவதாகக் கூறி, ஓடையை நோக்கிச் சென்றாள்.

தோழி போன அதே ஓடைப்பாதையில் அவள் நடந்தபோது எதிரில் வந்துகொண்டிருந்தாள் தோழி.

“பறவையின் இறகு ஒன்று கண்ணில் விழுந்துவிட்டது, ஊதிவிடு” எனச் சொல்லி தோழியிடம் முகத்தை நீட்டினாள் செம்பா. அவள், இடது கன்னத்தைப் பிடித்து கண்ணுக்குள் ஊதப்போகும் போதுதான் இவளுக்கு நினைவு வந்தது, பதிந்துகிடக்கும் பல் தடத்தை அவள் பார்த்துவிடுவாளோ என்று. சட்டெனக் கன்னத்தை அவள் கையில் இருந்து விலக்கி, “சரியாகிவிட்டது” என்றாள் செம்பா.

தோழியோ,  “இன்னும் ஊதவே இல்லையடி” எனச் சொன்னபோதும், “இல்லை… இல்லை...சரியாகிவிட்டது” எனக் கூறி விலக முயன்ற செம்பாவின் முகத்தை, இரு கைகளாலும் அழுத்திப் பிடித்து நிறுத்தினாள் தோழி.

செம்பா அதிர்ச்சியோடு அவளைப் பார்த்தாள்.

“திரும்பிப் பார்க்காதே, குதிரைகள் இன்னும் நம்மைப் பின்தொடர்ந்துதான் வந்துகொண்டி ருக்கின்றன.”

தோழியின் சொல் செம்பாவை இடி எனத் தாக்கியது. கலங்கியிருந்த கண்களைப் பார்த்த தோழி, “தூசி இன்னும் இருக்கிறது” எனச் சொல்லியபடி இழுத்து மூச்சுவாங்கி ஊதிவிட்டாள். செம்பாவின் கண்ணீர்த்துளி, காற்றில் பறந்தது.

இரவு, கிடை பெரியாம்பளைகளிடம் செய்தியைச் சொன்னார்கள். கிடையின் திசைவழியை மாற்றி ஊர் நோக்கி நடந்தார்கள். துள்ளிக்குதித்து கிடை எங்கும் பரவியபடி இருக்கும் செம்பாவின் சிரிப்பை அதன் பிறகு கோவன் பார்க்கவே இல்லை. இரு நாட்களுக்கு ஒருமுறை புதிதாக ஈனும் குட்டிகளை, அவன் தோளில் சுமந்தபடி நடந்துகொண்டே இருந்தான். செம்பா அருகில் வரவே இல்லை. பெரியாம்பளைகள் ஏன் கிடையின் போக்கை மாற்றி ஊருக்குப் போக முடிவு எடுத்தார்கள் என்பதும் அவனுக்கு விளங்கவில்லை. சரி, ஊருக்கு வேகமாகப் போனால், செம்பாவுடனான தனது திருமணம் வேகமாக நடக்கும். அதனால் நாமும் வேகமாகவே நடப்போம் என முடிவு எடுத்த கோவனின் கால்கள் கிடையின் முன்கால்களாக மண் மிதித்துச் சென்றன.

இரு மாதங்களுக்கு முன்னரே இந்தக் கிடை ஊர் திரும்பிவிட்டது. ஊரில் இருந்தது கிழவன்களும் கிழவிகளும்தான். மற்றவர்கள் எல்லாம் கிடை போட போயிருக்கின்றனர். வழக்கம்போல ஆவணி மாதம்தான் வருவார்கள். ஊர் முழுவதும் இடையில் திரும்பிய கிடையைப் பற்றித்தான் பேச்சாக இருந்தது. கோவனுக்குச் செய்தி இப்போதுதான் தெரியவந்தது. பெரியாம்பளைகளோடு சண்டைக்குப் போனான்.

``அவசரப்பட்டு முடிவு எடுத்துவிட்டீர்கள் அவர்கள் இப்போது செம்பாவைத் தூக்க ஊருக்குப் படை திரட்டி வந்தால் என்ன செய்வது? நமது கூட்டம் வந்துசேர இரண்டு மாதங்கள் ஆகும்” என்றான்.
பெரியவர் ஒருவர் சொன்னார், “ஆளுக்கு ஒரு திசையில் போய், கிடைகளை வேகமாக வரச் சொல்வோமா?”

“ஓடித் திரும்பும் வலுவோடு இருப்பது இருபது பேர். அவர்களையும் அனுப்பிவிட்டு என்ன செய்வது?”

எல்லோருக்குள்ளும் பதற்றம் இருந்தது. ஆனால், குதிரைக்காரர்கள் யாரும் கண்ணில் படவில்லை. நாட்கள் கழிந்துகொண்டிருந்தன. 

“வரும் நான்காம் நாள் செம்பாவுக்கும் கோவனுக்கும் மணம் முடித்துவிடுவோம்” என யோசனை சொன்னார் ஒரு பெரியாம்பளை.

“முடிப்பது என்று முடிவான பிறகு நான்காம் நாள் வரை ஏன் காத்திருக்க வேண்டும்? இன்று இரவே மணம் முடிப்போம்” என்றாள் கிழவி.

அச்சத்தை மகிழ்ச்சிகொண்டு கடக்க முடிவுசெய்தனர். மணவிழாவுக்கான ஏற்பாடுகள்  தொடங்கின. சாணம்83p5.jpg கரைத்து தெரு எங்கும் மெழுகினர். கோவன் இளைஞர்களோடு செம்மலையின் குகைகளுக்குள் அமர்ந்து பாதுகாப்புக்கான திட்டங்களைத் தீட்டிக் கொண்டிருந்தான்.  இப்போது அந்த இருபது இளைஞர்களோடு இருநூறு மாடுகளும் பதிமூன்றும் கிடை நாய்களும் மட்டுமே இருந்தன. அவற்றைக்கொண்டு எதையும் சமாளிக்க முடியும் என அந்த இருபது பேரும் நம்பினர்.

“நான், அந்த ஊருக்குள் போகவில்லை. ஆனால், வளமான ஊர். படைபலம் சற்றே அதிகம் இருக்கும் என்று நினைக்கிறேன். அதற்கு ஏற்ப திட்டம் வேண்டும்” என்றான் கோவன்.

செம்மலையின் மேற்கிலும் வடக்கிலும் அடர்ந்த காடு. அதற்குள் எந்தப் படையும் ஊடுருவி வர முடியாது. படைகள் வந்தால்  கிழக்கிலும் தெற்கிலும் இருந்துதான் வர முடியும். வருவதை அறிய பல காதத் தொலைவுக்கு முன்னரே கிடை நாயோடு ஆட்கள் நிறுத்தப்பட்டார்கள்.

மலை எங்கும் கோவனைத் தேடி அலைந்த சிறுவன் உச்சிவெயிலில் பச்சைக் குகைக்குள் அவனைப் பார்த்தான்.

“இன்னிக்கு இரவுல உனக்கும் செம்பாவுக்கும் திருமணமாம். பெரியாம்பளை சொல்லிவிட்டாரு” என்றான் அவன்.

கோவனுக்கு ஆத்திரம் ஏறி வந்தது.

“எல்லாம் தப்புத்தப்பா முடிவு எடுக்கிறான் அந்தக் கிழவன்” எனக் கொதித்தான். மற்றவர்கள் அவனைச் சமாதானப்படுத்தினர். சிறுவனிடம், “மாலையில் மணமேடைக்கு கோவன் வருவான்” எனச் சொல்லி அனுப்பினர்.

இருநூறு மாடுகளில் கொள்ளிக்கொம்பு மாடுகள் இருபது இருந்தன. விரிகொம்பு மாடுகள் முப்பது இருந்தன. நெற்றியில் மூன்று சுழியும் ஒன்றுடன் ஒன்று எதிர்த்திருக்கும் இடிமேலி மாடுகள் இருபத்தி ஆறு இருந்தன. மற்றவை எல்லாம் சொல்லிக்கொள்ளும்படியான மாடுகள் இல்லை. ஆனாலும் கொம்பு உள்ள மாடுகள்தான். அவற்றைப் பயன்படுத்துவதற்கான திட்டத்தை வகுத்துக்கொண்டிருந்தான் கோவன்.

மலையைவிட்டு ஊருக்குள் இறங்கி வந்த மூன்று இளைஞர்கள், கோவன் சொல்லி அனுப்பிய எரிசாற்றுப் பச்சிலையை அரைத்துக் கொடுக்கச் சொல்லிக் கேட்டனர். அதைக் கேள்விப்பட்டு ஊரே நடுங்கியது.

“குலமே அழிந்தாலும் செய்யக் கூடாத செயல் இது. எங்களின் உயிரே போனாலும் நாங்கள் அதை அரைத்துக் கொடுக்க மாட்டோம்” என்று எல்லா கிழவிகளும் சொல்லிவிட்டனர். வேறு வழி இன்றி இளைஞர்கள் மலை திரும்பும்போது குறுக்கிட்ட செம்பா, மூன்று கலயங்களை நீட்டினாள். அவர்கள் கேட்டதைவிட அதிகமானதாகவே அது இருந்தது.

பொழுது இறங்கத் தொடங்கியது. ஊர் முழுவதும் சாணம் மெழுகி, கோலம்போட்டு முடித்தனர். ஊரே கூடிக் கொண்டாடவேண்டிய திருமணம், இப்படி கையளவு ஆட்களை வைத்து நடத்தவேண்டியது ஆகிவிட்டதே என்று எல்லோருக்குள்ளும் கவலை படர்ந்திருந்தது. ஆனால், வாசலில் கோலம் மலர்ந்துவிட்டால், கவலைகள் எல்லாம் காற்றாகப் பறந்துபோகும்.

நீராட்டுச் சடங்கு தொடங்கவேண்டிய நேரம் வந்துவிட்டது. பிற நான்கு வீட்டுப் பெண்களும் செம்பாவை அழைத்துக்கொண்டு, ஊரின் மேற்குப் பக்கக் காட்டுக்கு நடுவில் இருக்கும் செங்குளத்துக்குப் போனார்கள்.
சூரியன் இறங்கத் தொடங்கியபோது தூரத்து மேட்டில் கிடை நாய் ஒன்று பாய்ந்துவருவதை மலை மேல் இருந்து கவனித்தான் கோவன். திட்டங்களைச் செயல்படுத்தும் நேரம் நெருங்கிவிட்டது.
 
``ஊரார்களை மலைக்கு மேல் ஏற்றுங்கள்’’ என்றான்.

பேரோசைக்கும் கூச்சலுக்கும் நடுவில் எல்லோரும் மலை ஏறினர். செம்பாவைத் தேடின கோவனின் கண்கள். மண நீராட்டுக்காக செங்குளத்துக்கு அழைத்துச்செல்லப்பட்டி ருப்பதாகச் சொன்னார்கள். இந்த ஏற்பாடுகளைச் செய்த கிழவனை வெட்டிக் கொல்ல வேண்டும்போல் இருந்தது. ``மின்னல் எனப் போய்த் திரும்புகிறேன்'' எனச் சொல்லி மேற்குத் திசைக் காட்டுக்குள் ஓடினான் கோவன். போகும்போது அவனுக்குப் பிடிபட்டது, கிழவன் செய்த செயல் ஒருவிதத்தில் நல்லதே.

செம்பாவை, நான்கு வீட்டுத் தோழிகளும் நீராட்டினர். உச்சி எடுத்துப் பின்னியிருந்த அவளது இரட்டைப் பின்னல் கூந்தலை மெள்ளக் கழற்றி, கோவனின் வீட்டு அடையாளமான மூன்று சடைப்பின்னலைப் பின்னத்  தொடங்கினர். வழக்கமாக இந்தச் சடங்கின்போது கேலிப் பேச்சும் கிண்டல் சொல்லுமாக செங்குளமே கலங்கிப்போயிருக்கும். ஆனால், இன்று அப்படி அல்ல.

நான்கு பெண்களும் மூன்று பின்னல் சடையைப் பின்னி முடித்தபோது, குளக்கரையில் வந்து நின்றான் கோவன். அவர்கள் நால்வரை மட்டும் தனியாக அழைத்தான். சுற்றிமுற்றிப் பார்த்தான். வெண்சாந்து உருண்டை வைக்கப் பயன்பட்ட பழைய நாணல்கூடை ஒன்று நைந்த நிலையில் கிடந்தது. அதை எடுத்துவந்து அதன் மீது கைவைத்தபடி வாக்கு கேட்டான்.

“என்ன நடந்தாலும் செம்பாவை ஊருக்குள் கூட்டி வரக் கூடாது. அவர்கள் கையில் சிக்காமல் வெளியேற வேண்டும்.”

நான்கு பெண்களும் பயந்து தயங்கியபடி இருக்க, செம்பாவின் கை நாணல்கூடையை இறுக்கிப் பிடித்து அவனுக்கான வாக்கை அளித்தது. கோவன் மலை நோக்கி ஓடினான்.

83p4.jpg

தீப்பந்தங்களோடு அவர்களின் படை கிழக்கிலும் தெற்கிலுமாக ஊரைச் சூழ்ந்தது. ஊருக்குள் எதிர்ப்புகள் எதுவும் இல்லை. உறையூர் படைக்கு வாள் வீசாமலே வெற்றி கைகூடுவதுபோல் இருந்தது. ஊருக்கும் செம்மலைக்கும் இடையில் இருக்கும் இடைவெளிக்கு அந்தப் படை வரட்டும் எனக் காத்திருந்தான் கோவன்.

அவன் எதிர்பார்த்த இடத்துக்குப் படை வந்தது. கொம்பின் உச்சிமுனை வாள்போல மடித்து நீட்டியபடி இருக்கும் கொள்ளிக்கொம்பு மாடுகளை, இரு திசைகளுக்கும் பத்து எனப் பிரித்த கோவன், அவற்றின் மூக்கில் பச்சிலையை வைத்து நுழைத்தபடி கயிறுகளை உருவிவிட சைகை செய்தான். உற்றுப்பார்த்தால் தீ நிறத்தில் இருக்கும் அவற்றின் கண்கள் பச்சிலைச் சாறு மூக்கில் ஏறியபோது கண்ணில்பட்ட தீப்பந்தங்களை எல்லாம் குத்திக் கிழித்துக்கொண்டு நுழைந்தன.

இடது பக்கமும் வலது பக்கமும் இரு கைகளை விரித்ததைப்போல் கொம்புகள் விரிந்துகிடக்கும் ‘விரிகொம்பு’ மாடுகள் முப்பதும் உள்ளிறங்கின. அவை உள்ளே ஓடினாலே இரு பக்கங்களும் உள்ள குதிரைகளின் விலாவினைச் சீவிச் சரிந்தபடி இருக்கும். பச்சிலை உருண்டையை  இரு காதுகளுக்குள்ளும் திணித்த பிறகு தலையை மறுத்து மறுத்து ஆட்டி, ஆவேசம்கொண்டு உள்ளிறங்கின. அவற்றின் மண்டைக்குள் இறங்கும் பச்சிலையின் எரிசாறு கணப்பொழுதில் நூறுமுறை தலையை மறுத்தாட்டி வெறிகொள்ளச் செய்தது.

மீதி இருக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட மாடுகள் எல்லாம் சிறப்புத் தகுதியற்ற மாடுகள்தான். ஆனால், கொம்பு உள்ளவை. அது ஒன்று போதும். பிற மாடுகளைவிட வலிமையாக அவற்றைப் பயன்படுத்த முடியும் என்பது கோவனுக்குத் தெரியும். அவற்றின் குதத்துக்குள் கைகளை நுழைத்து இலை உருண்டைகளை அமுக்கினர். சிறிது நேரத்தில் அவற்றின் குடல் பிறண்டு தலைக்கு ஏறிக்கொண்டிருந்தது. பின்புறக் கால்களை உதறியபடி அவை வந்த வேகத்தில் பாறைகள் உருண்டன. மாடுகளின் நிலைகொள்ளாத சீற்றம் குதிரைகளைக் கலங்கடித்தது. தாவிச் சரிந்து உள்நுழைந்தன மாடுகள்.

ஊருக்குள் பட்டிபோட்டு அடைக்கப் பட்டிருந்தன கிடை நாய்கள். வயல்வெளிகளில் கிடையைவிட்டுத் 83p6.jpgதனித்துப் பிரியும் முட்டுக்காளைகளையே குரைத்தபடி மிரட்டி நகர்த்தும் பழக்கம் உள்ள நாய்கள் அவை. குதிரையைத் தாண்டிக் குதிக்கக்கூடியவை. நாக்கை மடித்து சீழ்க்கை அடித்தபடி ஒரு வங்கிழவன் பட்டியைத் திறந்துவிட்டான். பெரும் குரைப்பொலியோடு குதிரைகளின் பின்னங்கால் சப்பைகளின் மீது அவை பாய்ந்துகொண்டிருந்தன. உறையூர் படைக்கு என்ன நடக்கிறது என்றே புரியவில்லை. நாய்களின் பாய்ச்சலையும் மாடுகளின் ஆவேசத்தையும் எதிர்கொள்ளத் திணறிய நேரத்தில், கோவன் தனது இறுதி ஆயுதத்தை இறக்க முடிவுசெய்தான்.  

மலையின் பின்புறம் நின்றுகொண்டிருந்த இடிமேலி மாடுகள் இருபத்தியாறையும் மலையுச்சியில் அணிவகுத்து நிறுத்தினான். இடிமேல் இடிவிழுந்தாலும் அஞ்சாமல் முன்னால் நகரும் மாட்டு இனம் அது. தான் செய்யப்போகும் செயலுக்கான கலக்கம் எதுவும் இல்லாமல்தான் கோவனின் முகம் இருந்தது. பெரிய பெரிய வைக்கோற்கட்டுகளை அவற்றின் கொம்புகளின் மேல் செருகினர். இரு திசைகளிலும் பாய்ந்து இறங்குவதைப்போல அவை நின்றுகொண்டிருந்த போது, வைக்கோல் கட்டுகளின் மேல் தீவைத்து கழுத்துக் கயிறுகளை உருவிவிட்டனர்.  

மிகப்பெரிய மர உருளைகளில் தீயைப் பற்றவைத்தபடி மலை உச்சியில் இருந்து ஆயிரக்கணக்கானவர்கள் இறங்குவதைப்போல அந்தக் காட்சி இருந்தது. உறையூர் படை கதிகலங்கிய நேரத்தில், எரிந்து இறங்கும் தீப்பந்தத்தின் தழலில் செம்மலையின் மணிக்கற்கள் எல்லாம் ஒளிவீசின. மலை எங்கும் இருந்து பல்லாயிரம் பேர் பந்தங்களோடு இறங்குவதைப் போல் தெரிந்தது. இது கோவனாலும் திட்டமிடப்படாதது. நிலைமை அதிபயங்கரமானதை உணர்ந்த உறையூர் படை, உயிர் தப்பித்தால் போதும் என ஓடத்  தொடங்கியது. குறுக்கும் நெடுக்குமாக ஆவேசத்துடன் அலையும் கிடைமாடுகள் நிலைகொண்ட இடத்தில் இருந்து எளிதில் வெளியேறாதவை. அவற்றைக் கடந்து வெளியேற முடியாமல், உறையூரின் முழுப்படையும் அழிந்துகொண்டிருந்தது. வலையைத் தாண்டி மீன்கள் தவ்வுவதைப்போல குதிரைகளைத் தாண்டியபடி நாய்களின் பாய்ச்சல் நிகழ்ந்துகொண்டே இருந்தது. மிச்சம் மீதியை கோவனின் கூட்டாளிகள் உள்ளிறங்கி வெட்டிச் சரித்தனர். 

பொழுது புலர்ந்தது. உறையூர் படை தோற்று ஓடியதை உறுதிப்படுத்தினான் கோவன்.  குடல் சரிந்த குதிரைகளும் உறையூர் வீரர்களின் உடல்களும் எங்கும் கிடந்தன. அவற்றுக்கு நடுவில் நடந்துகொண்டிருந்தான். பெரும்வாள் கொண்டு தலை இருகூறுகளாகப் பிளக்கப்பட்ட விரிகொம்பு மாடு ஒன்று செத்துக்கிடந்தது. `மாடுகளை, பூச்சிகளும் உண்ணிகளும் கடிப்பதையே பொறுத்துக்கொள்ள முடியாமல் வெண்சாந்து உருண்டை செய்த குலத்தில் பிறந்த நான், எம் மாடுகள் அனைத்தும் அழிய பச்சிலை எரிச்சாற்றை என் கையாலே தந்துவிட்டேனே’ எனக் கதறியபடி, செத்துக்கிடந்த மாட்டின் முன் மண்டியிட்டு உட்கார்ந்தான். சரிந்துகிடந்த அதன் இருபக்கக் கொம்புகளையும் பிய்த்து எடுத்தான். தான் செய்யப்போகும் செயலுக்கான கலக்கம் எதுவும் இல்லாமல்தான், அவனது முகம் இருந்தது. சூரியன் அவனுக்கு நேர் எதிராக மேலே எழுந்தபோது, இரு கொம்புகளையும் முழு விசையோடு செலுத்தி, தொண்டைக்குள் இறக்கினான் கோவன். சூரியனைப் பார்த்தபடி அவனது உடல் மண்ணில் சரிந்தது.

- பறம்பின் குரல் ஒலிக்கும்...

http://www.vikatan.com/anandavikatan

Link to comment
Share on other sites

வீரயுக நாயகன் வேள்பாரி - 17

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
 

சு.வெங்கடேசன், ஓவியங்கள்: ம.செ.,

 

p83b.jpgp83c1.jpg

ணங்கேறி ஆடிய பெண்கள் உக்கிரம்கொண்டனர். போர்க்களத்தில், விரிந்த கூந்தலும் பிளந்த வாயுமாக நிணத்தைத் தின்று குதித்தாடும் பேயாடல் தொடங்கியது. துடியின் ஓசை காதைக் கிழித்தது. கூட்டத்தின் குலவை ஒலி பயங்கர அச்சத்தை ஏற்படுத்துவதாக இருந்தது.

முன்புறம் கொற்றவையின் திசைநோக்கி துடியடித்துக் குலப்பாடலைப் பாடிக்கொண்டிருந்த பெண், ஆவேசம் மேலிட துடியை வீசியெறிந்து பின்புறம் திரும்பினாள். நெருப்புக்கோலமாக இருந்தன அவளது கண்கள். அணங்குகளின் பேய் ஆட்டத்தால் நிலம் நடுங்கிக்கொண்டிருந்தது. பின்புறம் திரும்பியவள் களத்தின் நடுவில் வரையப்பட்டிருந்த கோலத்தைக் கால்களால் குறுக்கும் நெடுக்குமாக அழித்து அலங்கோலமாக்கினாள். “செம்பாதேவி…வேணாந்தாயீ…” என ஆண்களும் பெண்களும் பெருங்குரலெடுத்து வேண்டினர். கதறலும் கண்ணீரும் கரைபுரண்டன.

p83a.jpg

கோலத்தின் நடுவில் நாணல் கூடையில் வைக்கப்பட்டிருந்த வெண்சாந்து உருண்டையை நோக்கிப் போனாள் அவள். அவளது கண்களில் இருந்த ஆவேசத்தையும் கைகளின் வேகத்தையும் கண்டு கூட்டம் நடுங்கியது.

`அங்கு என்ன நடக்கப்போகிறதோ?!' என்ற பதற்றத்தில் கூச்சல் உச்சத்துக்குப்போனது. குலவை ஒலி பீறிட எல்லோரும் களத்தை நெருங்கிக்கொண்டிருந்தனர். ஆனால், அணங்குகளின் ஆட்டத்தைத் தாண்டி யாரும் உள்ளே நுழைய முடியவில்லை.
வெண்சாந்து உருண்டையில் வைக்கப்பட்டிருந்த இரு கொம்புகளையும் ஆவேசத்தோடு பிடுங்கி எடுத்தாள் அவள். கூட்டம் கதறியது. பிறர் அவளை நெருங்க முடியாத வளையத்தை அணங்குகள் உருவாக்கினர். “வேண்டாந்தாயீ…” என உயிர் நடுங்கக் கத்தினர். கத்தும் குரல்களுக்கு நடுவில், அவளோ பிடுங்கிய கொம்புகளை தனது இரு மார்புகளை நோக்கி உள்ளிறக்கத் துணிந்தபோது, கண்ணிமைக்கும் நேரத்தில் இடதுபுறத்தில் இருந்து தாக்கப்பட்டு, தூக்கி வீசப்பட்டாள்.

இரு கொம்புகளும் எங்கோ போய் உருண்டன. கூட்டத்தினர் வாய் பிளந்து நின்றனர். தாக்கிய குலநாகினி, அணங்குகளுக்கு நடுவில் மூச்சிரைக்க நின்றாள். அணங்குகளின் ஆத்திரம் தணிய ஆரம்பித்தது. ஆவேசம்கொண்ட குலநாகினி காலத்தையும் கதையையும் தனது இரு கைகளைக்கொண்டு இறுக்கி நிறுத்தினாள். கூட்டம் நிம்மதிப் பெருமூச்சு விட்டது.

p83d.jpg

தள்ளப்பட்டு கீழே விழுந்தவளுக்கு ஆத்திரம் அடங்கவில்லை. பற்களை நறநறவெனக் கடித்தபடி குலநாகினியை நோக்கிப் பாய்ந்து வந்தாள். மரமே நிலைகுலைந்து சரிந்துவிழுவதுபோல் இருந்தது அவளின் பாய்ச்சல். அவளின் வேகத்தை எதிர்கொண்டு தாங்கி அசையவிடாமல் பிடித்து நிறுத்தினாள் குலநாகினி. கூடியிருந்தவர்களின் குலவை ஒலி மீண்டும் உச்சத்துக்குப்போனது. அவளது இரு கைகளையும் பிடித்த குலநாகினி, அப்படியே அழுத்தி வெண்சாந்து உருண்டை வைக்கப்பட்டிருந்த கூடைக்கு முன் அமரவைத்தாள். கூடையைப் பார்த்ததும் அவளின் கொதிப்பு கொஞ்சம் கொஞ்சமாக அடங்கத் தொடங்கியது.

குலநாகினியை அண்ணாந்து பார்த்தபடி, அனைத்துப் பற்களும் தெரிவதைப்போல முழு வாயிலும் சிரிப்பைக் காட்டித் தலையாட்டினாள். அதே போன்ற சிரிப்புடன் தலையை வேகமாக ஆட்டி அமைதிப்படுத்தினாள் குலநாகினி. அணங்கு ஆடிய நான்கு பெண்களும் பல்வரிசை காட்டிச் சிரித்தபடியே அவளைச் சுற்றி அமர்ந்தனர். குலநாகினி, அந்த வட்டத்தைவிட்டு வெளியேறி தனது இடத்துக்குப் போனாள்.

கபிலருக்கு உடல் முழுவதும் வியர்த்து வடிந்தது. கூட்டத்தின் நெரிசலில் பாரி எங்கு நிற்கிறான் எனத் தெரியவில்லை. நிலைமை அமைதியான பிறகுதான் பாரியின் அருகில் அவரால் வர முடிந்தது.

“கணிக்க முடியாத நிகழ்வுகளைக் கைக்கொள்ள யாரால் முடியும்? இது காலங்களுக்கு இடையில் நடக்கும் போர். நினைவுகளின் வழியே குருதி வழிகிறது. நம்மால் என்ன செய்ய முடியும்? வெட்டுக்காயம் இருப்பதோ, பல நூறு ஆண்டுகளுக்கு முன்” பாரியின் வார்த்தைகளை கபிலரால் பற்ற முடியவில்லை. காட்சிகள் ஏற்படுத்திய கொதிப்பால் அவர் மனம் திணறிக்கிடந்தது.

மூச்சுவிட முடியாத திணறலோடுதான் பாரியின் குரலும் இருந்தது. கபிலர், பாரியை உற்றுப்பார்த்தார். புருவம் உயர்த்தி பெருமூச்சு விட்டபடி பாரி சொன்னான், “கதை இன்னும் முடியவில்லை.”

கபிலரின் கருவிழிகள் அசைவற்று நின்றன.

மூன்று வாரங்களுக்குப் பிறகு பெரும்படையோடு உறையூர் தலைவன் செம்மலை அடிவாரம் போனான். அப்போது அவர்களை எதிர்த்துப் போரிட அங்கு யாரும் இல்லை. அந்தப் பெரும் பொக்கிஷ மலை, தங்களின் ஆளுகைக்கு வரக் காரணமான மகன் கிள்ளியைக் கொண்டாடித் தீர்த்தான் தந்தை.

சில மாதங்களுக்குப் பிறகு, கிள்ளியின் குதிரை உறையூரின் பெரும்வீதியைக் கடந்தபோது தொலைவில் வெண்ணெய் விற்கும் பெண் ஒருத்தி போவது தெரிந்தது. சற்றே அருகில் போய்ப் பார்த்தான். அவனால் நம்பவே முடியவில்லை, தலையில் கூடையைச் சுமந்து போய்க்கொண்டிருந்தவள் செம்பா. வாய் பிளந்து நின்றான். `அன்று நள்ளிரவு நடந்த தாக்குதலில் இந்த அழகு தேவதை அழிந்துபோனாள் என்று அல்லவா எண்ணியிருந்தேன். எனக்காகவே மீண்டு வந்தவள்போல், அதே தெருவில் வந்து நிற்கிறாளே!' என்று திகைத்துப்போனான் கிள்ளி.

p83g.jpg

சற்றே திரும்பி அவனைப் பார்த்த செம்பா, சின்னதாகச் சிரித்துவிட்டு நடந்தாள். அன்று பார்த்ததைவிட மெருகேறிய அழகு. அருகில் இருந்தவனை அழைத்து குதிரையை அவன் கையில் கொடுத்த கிள்ளி, “போய் தந்தையை அழைத்து வா. அன்று பார்க்காத அழகை இன்றாவது பார்த்துத் தெரிந்துகொள்ளட்டும்” என்று சொல்லி அனுப்பிவிட்டு, அவள் பின்னால் நடந்தான்.

இறங்கு வெயிலில் ஊரைவிட்டு மிகத் தள்ளி, முன்னர் கிடைபோட்டிருந்த நிலத்தை நோக்கி அவள் நடந்தாள். அடர்ந்த செடி கொடிகள் துளிர்த்துக்கிடக்கும் பாதையில் அவள் நடந்துபோகும் அழகை ரசித்தபடி பின்னால் நடந்தான் கிள்ளி. அவள் வேண்டுமென்றே எதையும் செய்வதுபோல் தெரியவில்லை. கைகளை இந்தப் பக்கமும் அந்தப் பக்கமுமாக நீட்டி பூக்களைப் பறிப்பதும் பூச்சிகளைத் தட்டிவிடுவதுமாக அவள் நடந்துகொண்டிருந்தாள். பின்னால் வரும் ஒருவனுக்கு, அவை அனைத்தும் சமிக்ஞைகளாக இருந்தன.

காற்றில் பறந்தபடி காமம்கொண்ட இணைத் தும்பிகள் அவளின் முகத்துக்கு நேராகப் பறந்தபோது, தலைவணங்கி அந்த இடம் கடந்தாள். பின்னால் வந்தவனால் அந்தக் காட்சியைக் கடக்க முடியவில்லை.

பெருங்கூடையைக் கவிழ்த்துப்போட்டதைப் போன்ற அந்தச் சிறுகுடில் தனித்து இருந்தது. அவனைத் திரும்பிப் பார்க்காமலேயே குடிலுக்குள் நுழைந்த செம்பா, படலை மூடாமல் திறந்தேவைத்தாள். அவள் நடக்கத் தொடங்கிய பொழுதில் இருந்து அவனை அழைத்தபடிதான் இருக்கிறாள். வீட்டுக்குள் நுழையும்போது தனியாக அழைக்க வேண்டுமா என்ன? அவன் குடிலுக்குள் தலை நுழைத்தான். அதற்குள் வைக்கோல் பாய் ஒன்றை விரித்திருந்தாள். அதன் நடுவில் கால் மடக்கி அவள் அமர்ந்தபோது, தும்பி உடல் மடக்கிப் பறந்தது அவனின் நினைவுக்கு வந்தது. முன்செல்லும் தும்பியை நினைத்தபடி பின்னந்தலை சரிய, பாயில் படுத்தான்.p83e.jpg

செம்பாவின் முதுகின் மேல் கை வைக்கப்போகும்போதுதான், அவனுக்கு உள்ளிருந்த ஆபத்து பிடிபடத் தொடங்கியது. குடிலின் நான்கு திசைகளிலும் செம்பாவைப் போலவே நான்கு பெண்கள் குத்தவைத்த நிலையில் உட்கார்ந்து இருந்தனர். பார்த்த கணத்தில் சட்டென எழ முயற்சி செய்யும்போது ஆளுக்கு ஒருவராக அவனது கைகளையும் கால்களையும் பிடித்தனர். அவன் கடுங்கோபத்தோடு கூச்சலிட்டு, தன்னை விடுவிக்க முயன்றான். அவர்கள் பெரும் அழுத்தம் கொடுக்காமல் மிக இயல்பாக அவனை அழுத்திப் பிடித்திருந்தனர். நாள் ஒன்றுக்கு நூறு மாடுகளின் நானூறு காம்புகளில் பால் கறக்கும் விரல்கள். பெரும் கிடைக்குள் விதவிதமான கொம்புகளோடு உரசிக்கிடக்கும் எண்ணற்ற மாடுகளை விலக்கி, நகர்த்தி, தள்ளி வெளிவரும் கைகள். அதுவும் ஒருவர் இருவர் அல்ல, நான்கு பேர். அவனால் என்ன செய்ய முடியும்?

செம்பா, குடிலின் மேல் செருகிவைக்கப்பட்டிருந்த இரண்டு கொம்புகளை உருவி எடுத்தாள். அதுவரை கத்திக்கொண்டிருந்தவன், கண்களின் முன் மரணத்தின் வடிவத்தைப் பார்த்து உறைந்துபோனான். குருதிக்கறையேறி இருந்த கொம்புகள். கோவனின் தொண்டைக்குழிக்குள் இறங்கியவை.

“விட்டுவிடுங்கள்... விட்டுவிடுங்கள்...'' என்று மீண்டும் மீண்டும் உயிர்போகக் கத்தினான். காவிரி ஆற்றங்கரையில் செழித்துக்கிடக்கும் மரப்புதர்களைத் தாண்டி, தனித்து இருக்கும் குடிலுக்குள் போடும் கத்தல் யாருக்குக் கேட்கும்? செம்பா, கால் மடக்கி அவன் அருகில் உட்கார்ந்தாள். நெஞ்சுக்குழிக்குள் கொம்பை இறக்கப்போகிறாள் என அவன் நடுங்கியபோது, அவனது மார்பில் கோவனுக்குப் பிடித்த ஒற்றைச்சுழிக் கோலத்தைப் போட்டாள் செம்பா.

கொம்பின் நுனி அவன் நெஞ்சின் மேல்தோலைக் கீறியபடி நகர, நெஞ்சு நிறைய மெள்ள ஊறும் குருதியின் வழியே ஒற்றைச்சுழிக் கோலம் உருவானது. அவள் என்ன செய்கிறாள் என அவனுக்குப் புரியவில்லை. நெஞ்சுப் பகுதியை முடித்த பிறகு இடுப்புக்குக் கீழ் இரு கால்களிலும் வளைந்த இரு கோடுகளைக் கொம்பின் கூர்முனைகொண்டு இழுத்தாள். கதறலை நிறுத்திய அவன், அவளது விநோதமான செயலால் உறைந்துபோனான்.

நான்கு பெண்களும் அவனை அப்படியே புரட்டிப்போட்டனர். முதுகிலும் ஒற்றைச்சுழிக் கோலத்தைப் போட்டு, இடுப்புக்குக் கீழ் பாதம் வரை இருகோடுகளை இழுத்தாள் செம்பா.

கொம்புகளால் குத்திக் கொல்லாமல் மேலெழுந்தபடி கீறிவிடுகிறாள். `இதுபோதும் எப்படியாவது உயிர் பிழைத்துவிடலாம்!' என்ற நம்பிக்கை அவனது கண்களில் உயிர்கொண்டபோது, அவனைத் தூக்கி நிறுத்தினர். சட்டென கையை உதறி தன்னை விடுவிக்க முயற்சித்தபோது, இடதுபுறம் நின்றவள் ஒரு முறுக்கு முறுக்கினாள். நோயால் பாதிக்கப்பட்ட மாடுகளின் மூக்கில், பச்சிலை சாறு விடவேண்டும். அப்போது அதன் கொம்புகளை முறுக்கி மூக்கை மேல்நோக்கித் திருப்பியபடி சாறு இறங்கும் வரை பிடித்திருக்க வேண்டும். மாடு, தனது முழு பலத்தால் கொம்பைத் திருகும். ஆனால், அதைப் பிடித்திருப்பவர் அசையவிடக் கூடாது. மாட்டின் கொம்பைத் திருகி நிறுத்தும் பணிதான், கிடையில் அவளுக்குப் பல நாள் கொடுக்கப்பட்டிருக்கிறது.

அவனது கையை சற்றே திருகியபோது உள்ளுக்குள் எத்தனை எலும்புகள் நொறுங்கின எனத் தெரியவில்லை. ஆனால், இவ்வளவு நேரமும் அவன் கத்திய மொத்தக் கதறலும் இப்போது ஒரே நேரத்தில் வெளிவந்தது. போதும் என நினைத்துத் திரும்பிய செம்பா, அப்போதுதான் அவனது தோள்களைப் பார்த்தாள். வலதுகை தோள்பட்டையில் ஒரு சுழியைக் கீறி, விரல்கள் வரை இறக்கினாள். அதே போல இடது கையிலும் இழுத்தாள்.

கொம்பை மீண்டும் மேற்கூரையில் செருகிய செம்பா, குடிலின் ஓரத்தில் மூடிவைக்கப்பட்டிருந்த நாணல்கூடையை எடுத்தாள். அதில் மணமணத்துக்கிடந்தது வெண்சாந்து உருண்டை. அதை இரு கைகளாலும் அள்ளி அவனது கால்கணுவில் இருந்து கழுத்து வரை பூசினாள். வெண்ணெயின் குளுமை அவனது உடலெங்கும் பரவியது. கூடை நிறைய இருந்த வெண்சாந்து உருண்டை அவன் உடல் முழுவதும் மணமணத்தது. நால்வரும் பிடியைவிட்டு விலகினர். உயிர்பிழைத்தால் போதும் என, குடிலைவிட்டு வெளியே ஓடினான் கிள்ளி.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு, வெண்சாந்து உருண்டையின் மணம் காற்றில் பரவி, பறவைகளின் மூக்குக்குள் இறங்கியது. ஓடிய கிள்ளியின் இடதுபுறத் தோளிலே வந்து அமர்ந்தது ஒரு காகம். ஒரு கையால் அதைத் தட்டிவிட்டு திரும்பும்போது மூன்று காகங்கள் வலதுபுறத் தோளில் அமர வந்தன. இன்னொரு கையைத் தூக்க முடியாததால், வலதுகையாலே அவற்றைத் தட்டி விரட்ட முயன்றபோது தோளின் கிழிபாடுகளுக்குள் இறங்கி எழுந்தது காக்கையின் அலகு. “அய்யோ” எனக் கத்த வாயெடுத்தவனின் செயலை, மறுகணமே வாயடைக்கவைத்தது எதிர் திசையில் படபடத்து வந்துகொண்டிருந்த பறவைகளின் பெருங்கூட்டம். காய்ந்த நாணல்கூடையையே நார்நாராகக் கிழிக்கும் அளவுக்கு பறவைகளை வெறிகொள்ளச் செய்தது வெண்சாந்து உருண்டை.

மாலை நேரத்தில் பறவைகள் வலசை போகின்றன என ஊரார்கள் நினைத்தபோது, அவை அனைத்தும் அலை அலையாக வந்து இவன் மீது இறங்கிக்கொண்டிருந்தன. துள்ளத் துடிக்கக் கதறியபடி அவன் ஓட ஓட,  பறவைகளின் கூட்டம் மகிழ்ந்து அவனைச் சூழ்ந்தது. பறவைகளின் அலகுகள் கொத்தியெடுக்கும் இடம் எல்லாம் வெண்சாந்து உருண்டை உருகி உள்ளேபோனது. அடுத்த பறவையின் அலகு, ஆழத்துக்குள் போய் அதை எடுத்தது.

p83f1.jpg

செம்பா வெண்சாந்து உருண்டையை மேலெல்லாம் பூசும்போது, அவனது முகத்தில் சிறு துளிகூடப் படாமல் பூசினாள். ஏன் என்பது, உடன் இருந்த நான்கு பெண்களுக்குக்கூட விளங்கவில்லை. குடிலின் வாசலில் நின்று பார்க்கும்போதுதான் அவர்களுக்கு விளங்கியது. பறவைகள் அவனது உடலை துகள்துகளாகக் கிள்ளி எடுப்பதை, கண்களில் கடைசித்துளி உயிர் இருக்கும் வரை அவன் பார்க்க வேண்டும்.

அழிவு அணு அணுவாக நிகழ்ந்துகொண்டிருந்த அந்த இடத்துக்கு மிகவும் தாமதமாக வந்து சேர்ந்தன மரங்கொத்திகள். அவற்றால் உள்நுழைய முடியவில்லை. காக்கைகளின் இடைவிடாத கரைச்சலும் பிற பறவைகளின் கத்தலுமாகப் பேரிரைச்சல் நிலவிய அந்த இடத்தில், மரங்கொத்திப் பறவை ஒன்று, அவனது இடதுபுற மார்பை நோக்கி ஓர் அம்பு நுழைவதைப்போல பாய்ந்து, அதே வேகத்தில் வெளியே இழுத்தது தனது கூரிய அலகை.

பிலர் மறுநாள் காலையில் எழுந்தபோது உடல் முழுவதும் நடுக்கம்கொண்டிருந்தது. மூலிகைச் சாற்றைக் கொடுத்தார்கள். வாங்கிக் குடித்தார். பகல் முழுவதும் நடுக்கம் நீடித்தது. கண்ணுக்குள் செம்பாதேவி நிலைகொண்டிருந்தாள். ஆடுகளத்தில் உருண்டு விழுந்த இரு கொம்புகளை எடுத்துவந்து அவள் முன் வணங்கி நின்றான் முடியன். அதில் ஒன்றை அவனது இடுப்பு உறையில் செருகினாள். மற்றொன்றை அவளின் காலடியைத் தொட்டு வணங்கிக்கிடந்த வீரன் ஒருவனின் இடுப்பில் செருகினாள்.

குலப்பாடலைத் துடியடித்துப் பாடிய அந்தப் பெண்ணின் முகத்தை அப்போதுதான் கூர்ந்து பார்த்தார் கபிலர். அவருக்கு அறிமுகமான முகம் அது. ‘எங்கே பார்த்திருக்கிறோம்?’ என யோசித்தபோது புலிவால் குகை அவரின் நினைவுக்கு வந்தது. பன்றிக்கறியை அவளின் கையில் கொடுத்த கணம் நிழலாட, கைகூப்பி கபிலர் சொன்னார், “மகள் அல்லள், என் தாய் நீ”.

மாலை நெருங்கியபோது, கபிலரின் இருப்பிடத்துக்கு வந்தான் பாரி. உடல் நடுக்கம் இருக்கத்தான் செய்தது. அதைக் காட்டிக்கொள்ளக் கூடாது என அவர் செய்த முயற்சி, பலன் அளிக்கவில்லை.

``உங்களின் நடுக்கத்துக்குக் காரணம் உடல் அல்ல, மனம். அது கலங்கிப்போய் இருக்கிறது” என்றான் பாரி.

அதை ஏற்பதைப்போல தலையாட்டிய கபிலர் சற்று மெளனத்துக்குப் பிறகு, “சிந்தப்பட்ட குருதி, கதைகளின் வழியே தலைமுறைகளுக்குக் கைமாறி வந்துகொண்டே இருக்கிறது. கதைகள்தான் மனித நினைவுகளில் இருந்து, குருதிவாடை அகலாமல் இருக்கக் காரணமா?” என்றார்.

`ஆம்' எனத் தலையசைத்தபடி பாரி சொன்னான், “கடித்து இழுக்க விலங்குகளுக்குப் பல் இருப்பதைப்போல் மனிதனுக்குக் கதை.”

நடுங்கி எழுந்தார் கபிலர். மனம் அல்ல, சொல்லால் நிகழ்கிறது நடுக்கம்.

“கிள்ளியின் முன்புறம் பாய்ந்த மரங்கொத்தி, பின்புறமாக வெளியேறிச் சென்றதைப் பேசும் கதைதான் நம்பிக்கையின் வேராக இருக்கிறது. அது இல்லையென்றால், `மேலெல்லாம் வைரக்கல் பதித்த பெரும்வடம் அணிந்தபடி கிள்ளி ஆட்சிசெய்து, எல்லோரையும் வாழவைத்தான்' என்றே கதைகள் சொல்லப்பட்டுக் கொண்டிருக்கும்.

கதைகள்தான் நல்லவர்களுக்கான கடைசி நம்பிக்கை. பறவைகள், விலங்குகள், மரம், செடி கொடி என இயற்கை எல்லாம் நமக்கு துணை நிற்க, அழித்தொழிப்பவர்கள் வீழ்வார்கள்; அழிக்கப்பட்டவர்கள் எழுவார்கள் என்ற நம்பிக்கையை, கதையன்றி வேறு யார் கொடுப்பது?” - பாரி சொல்வதை, கண்ணிமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தார் கபிலர்.

பாரி தொடர்ந்தான், “ஈட்டியை விசைகொண்டு எறியும் எங்கள் வீரர்களின் கை தன்னிகரற்ற வலிமைகொண்டிருப்பது சதையால் அன்று, கதையால்.”

‘இந்தப் பதிலில் இருக்கும் நியாயங்கள் ஏன் என்னை வந்து சேரவில்லை? அதைத் தடுத்துக்கொண்டிருந்த உண்மைகள் என்ன?’ என்று யோசித்தார் கபிலர். வேந்தர்களுடன் தான்கொண்ட நட்புக்கு மனம் நம்பிக்கையாக இருக்க நினைக்கிறது. தன்னைப் பேணிப் போற்றுவதில் வேந்தர்கள் காட்டிய அக்கறையை பொய் என எப்படிச் சொல்ல முடியும்? எண்ணங்கள், மனக்கலக்கத்தை மேலும் அதிகப்படுத்தின. அவர் பாரி சொன்னதை வழிமொழியவில்லை. முகம் உணர்வுகளை வெளிக்காட்டிவிடக் கூடாது என நினைத்து சற்றே இறுக்கத்துடன் தலைசாய்த்தார்.

கவனித்த பாரி, சின்னதாகப் புன்முறுவல் பூத்தபடி இருக்கையைவிட்டு எழுந்தான். “நீங்கள் நன்றாக ஓய்வெடுங்கள். நாளை காலை நான் வந்து பார்க்கிறேன்” என்றான்.

“ஏன், நான் இன்று வர வேண்டாமா?”

“உங்களது உடல்நிலை அப்படியிருப்பதால் `ஓய்வெடுங்கள்' என்று சொல்கிறேன். இன்று மூன்றாம் நாள். பிற நாளைப்போல இருக்காது. சற்றே அச்சமூட்டுவதாக இருக்கும்.”

அச்சம் என்பதற்கு அவன் கொண்டுள்ள விளக்கத்துக்குள் நேற்றைய நாள் இடம் பெறவில்லைபோலும். கடந்த இரு நாள்களில் நடந்தவற்றை நினைவுகூர்ந்தவாறே கபிலர் கேட்டார், `‘தெய்வவாக்கு விலங்கு பழம் எடுத்தப் பிறகுதானே குலப்பாணன் உள்ளிறங்குவான். முன்கூட்டியே எப்படிச் சொல்கிறீர்கள்?”

“மூன்றாம் நாளில் தெய்வவாக்கு விலங்குக்கு வேலை இல்லை. காலம் காலமாகப் பின்பற்றப்படும் மரபு இது.”

“மரபுகளுக்குக் காரணம் இருக்க வேண்டும் அல்லவா?”

“நீங்கள் வருவதில் உறுதியாக இருக்கிறீர்களா?”

``ஆம்” என்றார் கபிலர்.

“சரி வாருங்கள், பேசிக்கொண்டே போவோம்” என்றான் பாரி.

இருவரும் கொற்றவை மரம் நோக்கி புறப்பட்டபோது இருள் முழுமை கொண்டுவிட்டது. கபிலர் சொன்னார், “மரபுக்கான காரணத்தைச் சொல்லாமல் அமைதி காப்பது எதனால்?”

“தனித்தக் காரணம் ஒன்றும் இல்லை. நான் வேறு சிந்தனையில் இருந்ததால் மறந்துவிட்டேன்” என்று சொன்ன பாரி மேலும் கூறினான். “உடலெல்லாம் அச்சம்கொண்ட தெய்வவாக்கு விலங்கால் பழங்களைத்தான் எடுக்க முடியும், பாம்புகளை எப்படி எடுக்க முடியும்?”

“புரியவில்லை” என்றார் கபிலர்.

“இன்று சொல்லப்படப்போவது நாகக்குடியின் கதை”.

- பறம்பின் குரல் ஒலிக்கும்...

http://www.vikatan.com

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.