Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

கீழடி அகழாய்வும் தமிழர் நாகரீகமும் வரலாறும்


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

'கீழடி ஆய்வில் சங்க காலமும், திராவிட செழுமையும் தெரிகிறது!' -நெகிழும் ஆய்வாளர்

 


        %201_13015.jpg
 

சிவகங்கை மாவட்டம் கீழடியில் இந்திய அகழ்வாராய்ச்சித் துறையினரின் ஆய்வில் புதையுண்ட ஒரு நகரம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. ஆய்வு மேலும் தொடர்வதற்குள்  சட்டச் சிக்கல் எழவே, ஆய்வு தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

 கீழடி ஆய்வின் திட்ட இயக்குநர் என்ன சொல்கிறார்

கீழடி அகழ்வாய்வின் தலைமை இயக்குநர் அமர்நாத் ராமகிருஷ்ணனிடம் கேட்ட போது , "கிபி 300-ம் ஆண்டு தொடங்கி 10-ம் நூற்றாண்டு வரையிலான தடயங்கள் ஆய்வில் கிடைத்திருக்கின்றன. இதைத் பத்திரப்படுத்தி தமிழகத்திலேயே வைக்கதான் அரசிடம் இரண்டு ஏக்கர் நிலம் கேட்கப்பட்டது. ஆனால் தமிழக அரசு இதுவரை எந்த ஒரு பதிலும் அளிக்கவில்லை" என்கிறார்.

சு.வெங்கடேசன் சொல்வது என்ன

கீழடி ஆய்வுகளை தன்னுடைய கட்டுரைகளில் கொண்டு வந்து கொண்டிருக்கும்  'சாகித்திய அகாடமி' விருதாளர் சு.வெங்கடேசன்,  "கீழடியில் 110 ஏக்கர் நிலத்தில்  50 சென்ட் வரைதான் அகழாய்வு செய்திருக்கிறார்கள்.முழுவதையும் ஆராய்ச்சி செய்ய இன்னும் பத்துமுதல்  இருபது வருடங்கள் தேவைப்படும். அதனால் இதில் தமிழக அரசும் தொல்லியல் துறையும் இணைந்து கொள்ள வேண்டியது அவசியம்" என்றார்.


சென்னை வட்டார தொல்லியல் கண்காணிப்பாளர், ஸ்ரீலட்சுமி , '' கீழடி ஆய்வில் ஏற்பட்டுள்ள தடைகுறித்து,டெல்லி, தலைமை இயக்குனருக்கு  தெரிவித்துள்ளோம்; பதிலுக்காக காத்திருக்கிறோம்'' என்கிறார்.

கீழடி மக்கள் கருத்து என்ன

ஆய்வாளர்களுடன் பொதுமக்களும், மக்கள் இயக்க சக்திகளும் கீழடி ஆய்வில் களம் இறங்கியுள்ளனர்.  அவர்களிடம் பேசியபோது, " கீழடியில் அகழாய்வு செய்துள்ள இடம், தனியாருக்கு சொந்தமானது. அகழாய்வுக்கு பின், தொல் பொருட்களை மட்டும் எடுத்து விட்டு, மீண்டும் நிலத்தை பழையபடியே மூடிக் கொடுப்பதாக, இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறை ஒப்பந்தம் செய்துள்ளது.தாங்கள் போட்டுக் கொடுத்த ஒப்பந்தத்தை தாங்களே மீறுவது என்றால், எதிர்காலத்தில் அகழ்வாராய்வுக்கு  நிலத்தைக் கொடுப்பதில் பொதுமக்கள் தயங்குவார்கள், கண்டிப்பாக முன்வர மாட்டார்கள் என்ற இக்கட்டான சூழலில்  அகழ்வாய்வுத் துறையினர் உள்ளனர்." என்கின்றனர்.

மு.கருணாநிதியின் அறிக்கை

தி.மு.க. தலைவர் கருணாநிதி, "கீழடி ஆய்வின் மூலம் சங்க காலத் தமிழகம் நகர்ப்புற நாகரீகத்தைக் கொண்டதல்ல என்ற கருத்துத் தவறானது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த அகழ்வாய்வில் கிடைத்த தமிழ் பிராமி எழுத்துக்கள் கொண்ட பானை ஓடுகளும் மற்றும் தொல்பொருட்களும் தமிழர் நாகரீகத்தின் தொன்மையைப் பறை சாற்றுகின்றன.
சிந்து சமவெளி நாகரீகத்தைப் போல் இங்கும் ஒரு நகர்ப்புற நாகரீகம் இருந்ததற்கான தடயங்கள் ஏராளமாகக் கிடைத்துள்ளன. இதுவரை தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வுகளில் கீழடியில் நடைபெற்றிருக்கும் ஆய்வுதான் மிகச் சிறப்பானது. புதிய தமிழ்ச் சொற்களும் இங்குதான் கிடைத்துள்ளன" என்று கூறியிருக்கிறார்.

 கி.வீரமணியின் அறிக்கை

திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, "கி.மு. 3-ஆம் நூற்றாண்டு தொடங்கி கி.பி.10 ஆம் நூற்றாண்டுவரை தமிழர்கள் எத்தகைய நகர்ப்புற வாழ்க்கையை மேற்கொண்டனர் என்பதற்கான தடயங்கள்,  ஆய்வில் கிடைத்துள்ளன. தமிழக அரசு அதற்கான நிலம் ஒதுக்கி அதனை அருங்காட்சியகமாக உருவாக்க வேண்டும்  திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யம்  அதற்கான தேவையான முயற்சியில் ஈடுபடும்" என்று அறிக்கையில் கூறியிருக்கிறார்.

ஆய்வாளரின் பெருமிதம்

கீழடி ஆய்வில் பணியாற்றிய ஓய்வு துணை கண்காணிப்பாளர் கருப்பையாவிடம் பேசியதில், "பெருமையாக, கர்வமாக உணர்கிறோம். நைல் நதி நாகரீகம் போன்று வைகை ஆற்று நாகரீகம் இந்த கீழடியின் மூலம் உலகத்தின் கண்களுக்கு காணக் கிடைத்திருக்கிறது.பிராம்மி எழுத்து ஓடுகள் நிறைய கிடைத்துள்ளது ஒரு வரப் பிரசாதம்தான். வணிகர்கள் வாழ்வியலும், பெருவணிகர்கள் வாழ்ந்ததற்கான தடமும், தொல்காப்பிய இலக்கியம் சார்ந்த விஷயங்களுக்கான ஆதாரங்களும் கீழடியில் கொட்டிக் கிடைத்திருக்கின்றன.
 தமிழர்களுக்கான தொன்மை நாகரீக வாழ்க்கை திரும்பக் கிடைத்திருக்கிறது, திராவிட செழுமை தெரிகிறது. அரசாங்கம் கை விரித்தாலும், பொதுமக்கள் புரிந்து கொண்டு  கை கொடுக்க முன் வந்துள்ளது நெகிழ வைக்கிறது.

    %205_14148.jpg

சங்ககாலம் என்ற ஒன்று இருந்ததற்கான சான்று ஏட்டளவில், எழுத்தளவில் என்பது போய் கண்ணெதிரே காட்சியளிக்கும் ஆவணமாக இந்த கீழடி ஆய்வு நிருபணம் செய்திருக்கிறது.  ஆய்வின் ஒவ்வொரு அடியும் நம்முடைய நாகரீகம் பளிச்சிடுவதை காட்டிக் கொண்டே இருக்கிறது. விரைவில் மீண்டும் தொடர்வோம் என்ற நம்பிக்கையும் இருக்கிறது. கீழடி புரொஜக்ட் இயக்குநர் அமர்நாத் ராமகிருஷ்ணன் தான் கடைசிவரையில் உறுதியாக நின்று "இந்த இடத்தை தோண்டுங்க, விஷயம் இருக்கிறது" என்று சக்சஸ் செய்து கொடுத்தவர். அவரைத்தான் இங்கே பாராட்டியாக வேண்டும். தமிழர் வாழ்க்கையே அல்லவா, திரும்பக் கிடைச்சிருக்கு..." நெகிழ்கிறார் கருப்பசாமி.

அன்றே முடிவெடுத்த மெக்காலே

இங்கிலாந்து பாராளுமன்றத்தில் 2.2.1835 அன்று மெக்காலே  ஆற்றிய உரையில், "இந்தியா வளமான நாடு. தார்மீக மதிப்பும், சிறப்பும் கொண்ட அந்த மக்களின் ஆன்மிக நம்பிக்கை, கலாசார பாரம்பரியம் ஆகியவற்றின் முதுகெலும்பை முறித்தால் அன்றி, அந்த நாட்டை நமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர இயலும் என்று நான் நினைக்கவில்லை.

அந்த நாட்டின் பழமையான கல்வி முறையையும் கலாசார முறையையும் மாற்ற வேண்டும் என்று நான் இங்கே முன்மொழிகிறேன். இந்தியர்கள் தங்களது சொந்த நாட்டைவிட அந்நிய நாடே மேல், சொந்த மொழியை விட ஆங்கில மொழியே மேலானது என்று நினைக்கும்போது, அவர்கள் தங்களது சுயமரியாதையையும், கலாசாரத்தையும் இழப்பார்கள். அப்போது நாம் விரும்பியவாறு அவர்களை உண்மையாக மேலாதிக்கம் செய்ய முடியும்" என்று 18-ம் நூற்றாண்டிலேயே தமிழர்களை என்ன செய்யலாம் என்ன முடிவில் உறுதியைக் காட்டிப் பேசியிருக்கிறார்.

மெக்காலே கல்வித்திட்டமும் இன்னும் மாறவில்லை, நம்முடைய பாரம்பர்ய மாண்பின் மீதான ஈர்ப்பும் நம்மிடம் இல்லை... மக்களிடம் அடிமைப் புத்தி தொடர அரசுகளே முக்கியக் காரணம்.

 

http://www.vikatan.com/news/tamilnadu/70376-keezhadi-excavation-and-sangam-era.art

Edited by நிழலி
தலைப்பு மாற்றம்
 • Like 2
Link to comment
Share on other sites

 • Replies 199
 • Created
 • Last Reply

Top Posters In This Topic

 • கருத்துக்கள உறவுகள்

நேற்று ஒரு காணொளியில்.... மீண்டும் மண் போட்டு மூடும் காட் சியை பார்த்து... அதிர்ந்து விட்டேன்.
அந்தக்  காணொளியை, தேடிக்  கொண்டு உள்ளேன். கிடைத்தால்... இணைத்து விடுகின்றேன். 

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

"மயான சூழலில் கீழடி அகழ்வாய்வு மையம்" - கொதிக்கும் திரைப்பட இயக்குனர்கள்...!

sivakangai%20city%201_17380.jpg


மதுரையை அடுத்துள்ள கீழடியில் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான தொல்லியல் நகரம் கண்டுபிடிக்கப்பட்டது. கடந்த இரண்டு ஆண்டுகளாக தொல்லியல் ஆய்வாளர்கள் நடத்திய அகழ்வாய்வில் சுடுமண் பாண்டங்கள், கரண்டி, கிண்ணம், யானை தந்தத்தில் செய்த தாயக்கட்டை, கழிவு நீர் செல்ல வாய்க்கால், பெரிய அளவிலான சதுர செங்கல்கள் என்று 500-க்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. கீழடிதான் பழமையான மதுரை என்றும், உலகில் தொன்மையான இனம் தமிழினம்தான் என்றும் இதுவரையில் பாடல்களில், கட்டுரைகளில், பேச்சு வழக்கில் சொல்லப்பட்டு வந்த நிலையில், அவற்றை மெய்ப்பிக்கும் வகையிலான வரலாற்று ஆதாரங்கள் தற்போது  கிடைத்துள்ளன. இதனை வரலாற்று ஆய்வாளர்கள், மொழி ஆய்வாளர்கள் என்று பல்வேறுபட்ட தரப்பினரும் உறுதிப்படுத்தியுள்ளனர்.

கீழடியில் இன்னும் முழுமையாக ஆய்வினை மேற்கொள்ளாமல் தோண்டிய அகழ்வாய்வு குழிகளை திடீரென்று மூடும் பணி கன ஜரூராக நடைபெற்றது.இதைக் கேள்விப்பட்ட பொதுமக்கள், கல்லூரி மாணவர்கள் என்று சிலர் கீழடிக்கு வந்து சென்றார்கள்.

அக்டோபர் 24-ம் தேதியோடு அகழ்வாய்வு குழிகள் மூடப்பட்டதால், கடைசி நாளான நேற்று சினிமா இயக்குனர்கள் எஸ்.பி.ஜன நாதன், அமீர், கரு. பழனியப்பன் ஆகியோர் கீழடிக்கு திடீரென்று ஆஜர் ஆனார்கள்.

"தென் தமிழகத்தில் 30 ஆண்டுகளுக்குப் பிறகு நடக்கும் அகழ்வாய்வுப் பணியை  முழுமையாக நிறைவு செய்யாமல், ஆரம்பக் கட்டத்திலேயே  மூடுவது என்பது ஏற்புடையது அல்ல. இது இன்னொரு ஆதிச்சநல்லூர் போன்று இருக்கிறது" என்று வெடிக்கிறார் ஜன நாதன்.

" இது ஒரு திட்டமிட்ட வரலாற்று ஒழிப்பு. உச்ச நீதிமன்றம் தோன்றுவதற்கு முன்பே ஜல்லிக்கட்டு நடந்தது. அதை எப்படி ஒழித்தார்களோ, அதைப்போல இதையும் மறைத்து ஒழிக்க பார்க்கிறார்கள். இங்கு இந்நேரம் தங்க புதையல் கிடைத்திருந்தால் அரசு இப்படி அலட்சியமாக இருக்குமா?" என்று சீறினார் அமீர்.

"மறுபடியும் 30 ஆண்டுகள் காத்திருக்க வேண்டுமா? மைசூரில் கண்ணகி சிலையை கோணிப்பையில் மூடியதைப் போல, இங்கு கிடைத்த பொருட்களையும் மைசூருக்குக் கொண்டு சென்று ஒரு மூலையில் போடப்போகிறார்களா? டாஸ்மாக்-ஐ விட இதுதான் நிஜமான செல்வம் " என்று கொந்தளித்தார் கரு.பழனியப்பன். இப்படி மூன்று இயக்குனர்களும் அகழ்வாய்வு இடங்களை சுற்றிப்பார்த்து விட்டு, "இதுவரை கீழடிக்கு அமைச்சர்கள், எம்.பி.கள், சட்டமன்ற உறுப்பினர்கள்,  இவ்வளவு ஏன் ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் கூட வந்து பார்க்கவில்லை. அவ்வளவு மோசமான சூழலில் நாம் வாழ்கிறோம்" என்று கருத்துக்களை பறிமாறிக் கொண்டனர். அந்த இயக்குனர்கள் மூவரிடமும் பேசினோம்.

10kilardi_19193_17551.jpg

"என்ன திடீர் ஆய்வு?  நீங்கள் மட்டும் வந்திருக்கிறீர்கள் ?மற்ற இயக்குனர்கள் வரவில்லையா?"

" திட்டமிட்டு வரவில்லை, நாங்க ஒரு வேலையாக மதுரைக்கு வந்தபோது, இந்த அகழ்வாய்வுக்காக தோண்டப்பட்ட குழிகள் மூடுவதை கேள்விப்பட்டு இங்கு வந்தோம். இந்த அகழ்வாய்வுப் பணி நடந்த செய்தியும், இங்கு கிடைத்த பொக்கிஷமும் இன்னும் மக்களிடம் போய்ச் சேரவில்லை. கிடைத்த செய்தியும் மூடும் செய்தியும் தெரியல. எங்கள் நோக்கம் மக்களிடம் தமிழர்களின் நாகரீகத்தைக் கொண்டு போய்ச் சேர்க்க வேண்டும் என்பதுதான்"

"தொடர் அகழ்வாய்வுப் பணி தொய்வில்லாமல் நடக்க என்ன நடவடிக்கை எடுக்க போகிறார்கள்?"

" இந்தியாவில் இதுபோன்ற வாய்ப்பு எந்த மாநிலத்திற்கு கிடைத்திருக்கிறது? இதை அரசு சரியாக பயன்படுத்த வேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கம் "

" இதை ஒரு இனப்படுகொலை போல பார்க்கிறீர்களா?"

" அதில் என்ன சந்தேகம்? நாங்கள் ஐயப்படுகிறோம். இந்த இடத்தில் இரண்டு தங்கப்பானையோ, குடம் நிறைய தங்க காசுகளோ கிடைத்திருந்தால் இந்நேரம் இந்த அரசு சும்மா இருந்திருக்குமா? இந்நேரம் இந்த இடத்தை எப்படி கையகப்படுத்தி இருக்கும்?
அப்போ, வெறும் தங்கமும்,வெள்ளியும் மட்டும்தான் தமிழர்கள் வரலாறா? 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தார்கள் என்பதே மிகப்பெரிய சொத்து .இங்கிருக்கும் ஒவ்வொரு செங்கலும் மிகப்பெரிய சொத்து. பல கோடி கிடைத்தாலும் இதை வாங்க முடியாது. அரசு இதை இப்படித்தான் பார்க்க வேண்டும். இந்த மண், இந்த விவசாயிக்கு சாதாரண மண்ணாக இருக்கலாம். ஆனால் அரசுக்கு இது மிகப்பெரிய சொத்தாக பார்க்க வேண்டும்".

"தமிழர் பிரச்னை, தமிழர் உரிமை சார்ந்த பிரச்னை என்று பேசும் திராவிடக் கட்சிகள் கீழடி விசயத்தில் போதிய கவனம் செலுத்தவில்லை. இதில் ஏன் அவர்களின் கவனம் மழுங்குகிறது?"

" அத்தனையும் ஏமாற்று வேலை. இடைத்தேர்தல் மற்றும் உள்ளாட்சி தேர்தலில் அவர்களின் கவனம் முழுவதும் இருக்கிறது. வேட்பாளர்களை வெளியிடுவதில்அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பிஸியாக இருக்கிறார்கள். ஓட்டு அரசியல்தான் அவர்களுக்கு முக்கியம். எனக்கு யார் ஆட்சியாளர் என்பது முக்கியம்மில்லை. என்னுடைய வரலாறு முக்கியம். நான் எங்கிருந்து பிறந்து வந்தேன் என்பது முக்கியம். தேர்தலை விட முக்கியமானதாக இதை கருதுகிறேன்.

" பல தலைவர்கள் இன்னும் கீழடிக்கு வரவில்லையே?"

  "நாங்கள் அரசியல் கட்சித் தலைவர்களை நம்பி இல்லை. நல்லாட்சி கொடுத்த காமராஜரே போய் சேர்ந்து விட்டார். அவரது ஆட்சியை மீண்டும் கொண்டு வருவோம் என்கிறார்கள். அப்படியென்றால் இடைப்பட்ட ஆட்சி சரியில்லை என்று டிக்ளேர் செய்கிறார்களா? அரசியல் தலைவர்கள், ஆட்சியாளர்களை நம்பி இல்லை. 50 ஆண்டுகளுக்கு பிறகு நாம் இருப்போம் என்பது தெரியாது. அடுத்த தலைமுறைக்கு எதை வைத்து விட்டுப் போகிறோம் என்பதுதான் முக்கியம்".

" தொன்மையான மதுரைக்கு சாட்சியாக கீழடி இருக்கிறது. தமிழகத்தில் கிடைத்த தொன்மையை இந்திய அரசு மறைக்கப் பார்க்கிறதா? இதில் உள்நோக்கம் இருக்கிறதா? "

111841_17170.jpg

"அதுதான் உண்மை. உண்மையை மறைக்கப் பார்க்கிறார்கள். பொய்யாக  புனையப்பட்ட கதைகளைக் கொண்டு வர இந்த உண்மையை மறைக்கிறார்கள். உலகில் தோன்றிய முதல் மனிதன் பேசிய மொழி தமிழ் என்று ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. முதல் மனிதன் தோன்றிய இடமாக கீழடி இருக்கிறது. 500 ஆண்டுகளில் உருவான நாடுகள் நாங்கள்தான் நாகரீகத்தை உருவக்கியவர்கள் என்று சொல்லுகிறார்கள். உண்மையை மறைக்க திட்டமிட்ட முயற்சியாக  நாங்கள் இதைப் பார்க்கிறோம். ஜல்லிக்கட்டு என்பது நீதிமன்றங்கள் உருவாவதற்கு முன்பே இங்கு நடைபெற்றிருக்கிறது.தமிழர்களின் அடையாளங்களை தொலைக்கிறார்கள்.
இறையாண்மைக்கு எதிராகப் பேசியதாக நினைக்க வேண்டாம். என்னுடைய உரிமையை கேட்பது இறையாண்மைக்கு எதிரானது இல்லை. நான் சொல்வது பொய் இல்லை. உண்மையில் தமிழன் என்பவன் ஒருவன் இல்லை என்கிறார்கள். அதுதான் அவர்களின் நோக்கம்.ஆஸ்திரேலியாவில் தமிழை மூன்றாவது தேசிய மொழியாக அறிவித்துள்ளனர். கனடாவில் ஒரு மாதத்தை தமிழ் மாதமாக அறிவித்து இருக்கிறார்கள். ஆனால் இங்கு நிலைமை வேறு! "

" இதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள் ? யாரை குறிப்பிட்டு சொல்லுகிறீர்கள்?"

" தமிழினத்தை வெறுக்கும் அதிகார வர்க்கம், அரசியல் கட்சி,முதலாளிகள் என்று அவர்கள் எந்த முகச் சாயத்திலும் இருக்கலாம்."

" கீழடி சினிமாவாக உருவாகுமா?"

" கண்டிப்பாக சினிமாவாக வரும். சர்வதேச சதி இதில் இருக்கிறது.மொகஞ்சதாரோ, ஹரப்பா ஆய்வுக்கு முன்பே ஆதிச்சநல்லூரில் ஆய்வு செய்தார்கள்.  ஒரு சதவிகித ஆய்வுதான் அங்கும் நடந்தது. அந்த ஆய்வை இன்னும் வெளியிடவில்லை. அங்கு எடுக்கப்பட்டது மாடு சின்னம். அது நம்முடைய அடையாளம். அதுபோல கீழடியும் ஆகிவிடுமோ என்ற அச்சம்  இருக்கிறது. 140 ஏக்கரில் ஒரு சிறிய பகுதியை  மட்டும் தோண்டி மூடும்போது பெரும் அச்சம் எழுகிறது. தமிழர் வரலாறு வெறும் பாட்டாக இருக்கிறது. ஆதாரம் இல்லை என்கிறார்கள். இப்பொழுது ஆதாரம் கிடைத்திருக்கிறது. தண்ணீர் செல்லும் வழி, செங்கல் வைத்து கட்டிய கட்டிடங்கள் சாட்சி .இதை மூடும் காட்சி சினிமா படக்காட்சி போல இருக்கிறது. இது உலக வரலாறு சொல்லும் இடமாக இருக்கிறது. 30 ஆண்டுகள் பழமையான குடும்ப கல்யாண புடவையைப் பாதுகாக்கிறோம். ஆனால் 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையான நம் முன்னோர் வாழ்ந்த நகரத்தை பாதுகாக்கத் தவறுகிறோம்".

" உலகம் முழுவதும் இருக்கும் தமிழர்களின் கவனத்திற்கு இதை எப்படி கொண்டு சேர்க்கப் போகிறீர்கள்?"
 
" இதை பத்திரிகையாளர்கள்தான் கொண்டு போய் சேர்க்க வேண்டும். 50 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த  அரசியல் தலைவர் பயன்படுத்திய கண்ணாடி , துணி, செருப்பு என்று மியூசியம் அமைக்கும் பொழுது 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான  பொருட்கள் கிடைத்திருக்கிறது. இதுக்கு மியூசியம் வைக்க வேண்டாமா? கடந்த 2 ஆண்டுகளாக இந்த ஆய்வு நடந்து வருகிறது. இன்னும் இந்திய அரசு இதை பாதுகாக்க வேண்டுமா? இல்லையா? என முடிவு எடுக்கவில்லை. யார் முடிவு எடுப்பது? எப்பொழுது முடிவு எடுப்பது?"

" இதற்கு ஒரு நல்ல இயக்குனர்களாக நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்?"

" சுவாதி வழக்கை விவாதம் செய்தது போல கீழடியை நீங்கள் இதுவரை ஏன் விவாதங்கள் செய்யவில்லை. தாத்ரி சம்பவம் நாடு முழுவதும் பேசப்பட்டது. கீழடியை பெரிய அளவில் ஊடகங்கள் ஏன் எழுதவில்லை?
சமூகப் பிரச்னையை நீங்கள் செய்ய வேண்டிய வேலையை, செய்யத் தவறியதை,  ஏன் கூத்தாடிகள் செய்யவேண்டும் என எதிர்பார்க்கிறீர்கள்? இது தவறான போக்கு. ஒரு சமூக பிரச்னையை சினிமாக்காரன் செய்ய வேண்டும் என்றால் எதுக்கு எங்களுக்கு 234 எம்.எல்.ஏ. 39   எம்.பி.க்கள் ? சைரன் வைத்த காரில் சுற்றுவதுதான் அவர்களது வேலையா? தமிழ் பண்பாட்டுத்துறையில் இருந்தாவது யாராவது வந்தார்களா?  இதுவரை யாருமே வரவில்லை என்கிற பொழுது நீங்க யாருக்காக ஆட்சி நடத்துறீங்க? இலவசமாக ஓட்டுக்கு காசு கொடுப்பதும், ஆடு, மாடுகள் கொடுப்பதும்தான் மக்களாட்சியா? இப்பொழுது மக்களாட்சி நடக்கவில்லை .கார்பரேட் கம்பெனிகளின் ஆட்சிதான் நடக்கிறது."

111851_17507.jpg

" இவ்வளவு பெரிய அலட்சியத்திற்கு பின்னால் யார் இருக்கிறார்கள்? "

" அலட்சியத்தின் பின்னால் மக்களுக்கான அரசு இல்லை. மக்களால் தேர்ந்தடுக்கப்படும் அரசு மக்களை வெறும் ஓட்டு வங்கியாக மட்டுமே பார்க்கிறது. அடுத்த தேர்தலை மட்டுமே மையமாக வைத்து இயங்கி  வருகிறது. பொறுப்பில் இருப்பவர்கள் அலட்சியமாக இருக்கிறார்கள். மக்களை கேளிக்கையாக, சந்தோஷப்படுத்தும் நாங்கள் களத்திற்கு வரவேண்டிய சூழல் இருக்கிறது. ஆட்சிப்
பொறுப்பில் இருப்பவர்கள், அவர்களின் பதவிகளை தக்க வைத்துக்கொள்வதிலேயே கவனமாக இருக்கிறார்கள்"  என்று இயக்குனர்கள் தெரிவித்தனர்.

 "அரசுக்கு அருங்காட்சியகம் அமைக்க இடம் கிடைக்கவில்லை என்றால் இந்த அமீர் இடம் தருகிறேன்" என்றார் அமீர்.

" தோண்டிய இடங்களை மண்ணைப்போட்டு மூடும் காட்சிகளை பார்க்கும் பொழுது இந்த இடத்தை விட்டு நகரும் பொழுது ஒரு மயானத்தில் இருந்து எனது 2 ஆயிரம் பழமையான பண்பாட்டு நாகரீகத்தை புதைத்து விட்டுச் செல்வது போல இருக்கிறது" என்கிறார் எஸ்.பி. ஜனநாதன்.

கீழடியை மீட்கப்போகும்  வரலாற்று நாயகன்  யார் ?

http://www.vikatan.com/news/tamilnadu/70521-keezhadi-archeological-site-being-closed-fumes-tamil-directors.art

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

நாம் தமிழர் போன்ற அமைப்புக்கள் இவ்விடங்களை பாதுகாக்க சரியான அமைப்புக்களை உருவாக்கிச் செயற்பட வேண்டும். கட்சிக் கிளைக்கொரு அமைப்பு தொன்மை... பொக்கிசங்களை.. கலை பண்பாட்டை பாதுகாக்க உருவாக்கப்படனும். ஆய்வுகளை ஊக்குவிக்கனும். 

Link to comment
Share on other sites

1.jpg

 

ழிப்பறை உபயோகிப்பதைப் பற்றி மத்திய அரசு, இப்போதுதான் விளம்பரம் செய்கிறது. ஆனால், நம் முன்னோர்கள் 2,500 வருடங்களுக்கு முன்பே கழிப்பறை வசதியுடன்,  நவீன கட்டுமானங்களுடன் நாகரிகமாக வாழ்ந்திருக்கிறார்கள் என்பதைக் கீழடியில் காண முடிகிறது” என்று இன்று கீழடிக்கு வருகை தந்த சீமான் மீடியாக்களிடம் பெருமிதமாகப் பேசினார்.

கீழடியில், கண்டெடுக்கப்பட்ட அரிய தொல்பொருட்களைப் பாதுகாக்க மைசூரில் இருக்கும் மத்திய தொல்லியல் துறை அருங்காட்சியகத்துக்குக் கொண்டு செல்வதாக தொல்பொருள் துறையினர் அறிவித்ததால், கீழடி அகழ்வுப்பணி மீது தங்கள் கவனத்தைத் திருப்பியுள்ளனர் தமிழக அரசியல்வாதிகள்.

5.jpgஇதனால் கொதித்து எழுந்துள்ள தமிழக தலைவர்கள், எழுத்தாளர்கள் இதைக் கண்டித்து பேசி வருகிறார்கள். மைசூருக்குப் பொருட்களைக் கொண்டு செல்லத் தடைவிதிக்க கனிமொழி என்ற வழக்கறிஞர் தாக்கல் செய்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் தடை வழங்கியுள்ளது.

இந்த நிலையில்தான் ராமநாதபுரம் வந்த சீமான், திரும்பும் வழியில் கீழடிக்கு வந்தார். நடந்துகொண்டிருந்த அகழ்வுப் பணிகளைப் பார்வையிட்டு அங்கிருந்த ஆய்வாளர்களிடம் விவரங்கள் கேட்டார். அதன்பின் நம்மிடம் பேசியவர், ‘‘சிவகங்கை மாவட்டம் கீழடி அகழ்வாய்வில் கிடைக்கப்பெற்ற தமிழரின் நாகரிக வாழ்வியலின் சாட்சியான தொல்பொருட்களைப் பார்க்கும்போது பிரமிப்பாகவும் பெருமையாகவும் இருக்கிறது. இந்த வட்டாரம் முழுவதும் ஆய்வு செய்தால் தமிழர்களின் பண்டைய நாகரிக வாழ்வியலைப் பற்றிய தடயங்களைச் சேகரிக்கலாம். இரண்டு வருடங்களாக இங்கு ஆய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. தமிழக அரசு கண்டெடுக்கப்பட்ட பொருட்களை ஆவணப்படுத்திப் பாதுகாக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை. ‘தமிழரின் பெருமையைப் பாதுகாக்க வேண்டும்’ என்று மக்கள் கேட்கும் நிலையில்தான் அரசாங்கத்தின் நிலை உள்ளது. தற்போது நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்தத் தடை தொடர வேண்டும்.

3.jpg


இந்த தனியார் இடத்தை விலை கொடுத்து வாங்கி தொல்பொருள் துறையினரிடம் ஒப்படைக்க வேண்டும். இங்கேயே அருங்காட்சியகம் அமைத்து, பராமரித்து தமிழக மக்களிடமும், மாணவர்களிடமும் இதன் பெருமைகளை எடுத்துச்சொல்ல அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். அதானிக்கு ஐயாயிரம் ஏக்கர் இடம் வேண்டுமென்றால், உடனே வாங்கிக்கொடுக்கும் அரசு, தமிழரின் வரலாற்றைத் தெரிந்துகொள்ள சில ஏக்கர்களை வாங்கிக்கொடுக்க முடியாதா?

கழிப்பறை உபயோகிப்பதைப் பற்றி மத்திய அரசு இபோதுதான் விளம்பரம் செய்கிறது. ஆனால், நம் முன்னோர்கள் 2,500 வருடங்களுக்கு முன்பே கழிப்பறை வசதியுடன் நாகரிகமாக வாழ்ந்திருக்கிறார்கள் என்பதை கீழடியில் காண முடிகிறது. தமிழரின் பண்டைய வீரமும், பெருமையும், வரலாறும், ஆவணங்களும் அழிக்கப்பட்டு வரும் சூழலில் கீழடியில் கண்டெடுக்கப்பட்ட அரிய பொருட்களை வெளிமாநிலங்களுக்கு கொண்டுசெல்லக் கூடாது. மீறிக் கொண்டு செல்ல முயன்றால் நாம் தமிழர் கட்சி போராடும்’’ என்றார்.

http://www.vikatan.com/news/tamilnadu/69033-seeman-opposes-for-moving-keezhadis-ancient-artefacts.art?artfrm=related_article

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

கீழடியை அவசர அவசரமாய் மூடசொல்லி மத்திய அரசு சொல்லி இரவு பகலாக மூடப்படும் செய்தி அமுக்கி வாசிக்கபடுது இது பழைய செய்தி போல் .

Link to comment
Share on other sites

 • 5 months later...

போராட்டக்களமான கீழடி - என்ன நடந்தது?

 
 

திக்கரை நாகரிகம் பற்றி ஆய்வை நடத்துவதற்காக, மத்திய தொல்லியல் துறையினர் 2015-ம் ஆண்டு சிவகங்கை மாவட்டம் கீழடியில் உள்ள தனியார் தென்னந்தோப்பைத் தேர்வுசெய்தனர்.  முதல் வருட ஆய்விலேயே இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன் தமிழர்கள் நாகரிகமாக வாழ்ந்ததற்கான அரிய பொருள்களையும், அவர்கள் வாழ்ந்த வீடுகளையும் கண்டுபிடித்தனர்.

தமிழரின் வரலாற்றைப் பறைசாற்றும் வகையில் அமைந்த இந்தத் தொல்லியல் ஆய்வால், தமிழர்கள் பெருமகிழ்ச்சி அடைந்தனர். அடுத்த ஆண்டு ஆய்வுசெய்ய, மத்திய அரசு மிகவும் யோசித்தே அனுமதி வழங்கியது. இரண்டாவது வருடத்திலும் பல முக்கியமான பொருள்கள் கிடைத்தன.  இந்தப் பொருள்களை பெங்களூருக்குக் கொண்டு செல்ல உத்தரவிட்டது மத்திய தொல்லியல் துறை. `இதைத் தமிழகத்திலேயே வைக்க வேண்டும். ஆய்வுக்காக அதிக இடங்களை அரசு ஒதுக்க வேண்டும்’ என வழக்குரைஞர் கனிமொழி வழக்கு தாக்கல் செய்த பிறகு, கீழடி விவகாரத்தின் பின்னால் இருக்கும் அரசியலும் பண்பாட்டு மோதலும் வெளிவந்தன.

அரசியல் தலைவர்கள் கனிமொழி, பழ.நெடுமாறன், ஜி.ராமகிருஷ்ணன், சீமான், மாஃபா பாண்டியராஜன் உள்பட திரையுலகைச் சேர்ந்த பலரும் கீழடிக்கு வரத் தொடங்கினர். கீழடியில் இதுவரை கண்டெடுக்கப்பட்ட ஐந்தாயிரத்துக்கும் அதிகமான பொருள்களில் ஒன்றுகூட மத அடையாளத்தை வெளிப்படுத்தும் வகையில் இல்லை. இதனால் பா.ஜ.க அரசுக்கு இந்த ஆய்வைத் தொடர்வதில் விருப்பமில்லை என்ற தகவல் பரவியது.

இந்த நிலையில் மூன்றாம்கட்ட ஆய்வுக்கு நிதி ஒதுக்கவும் அனுமதி அளிக்கவும் மத்திய தொல்லியல் துறை தாமதப்படுத்தியது. பிறகு, அரசியல் கட்சியினர் பலரும் குரல் எழுப்பவே அனுமதியை வழங்கியது. அதேநேரம், இந்த ஆய்வை வெற்றிகரமாக நடத்திவந்த மதுரையைப் பூர்விகமாகக்கொண்ட மூத்த தொல்லியல் அலுவலர் அமர்நாத் ராமகிருஷ்ணாவை, அதிரடியாக அசாமுக்கு இடமாறுதல் செய்ய உத்தரவிட்டனர். இதனால் இந்தப் பிரச்னை இன்னும் தீவிரமானது. ஓர் ஆய்வில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும்போது அது முழுமையாக முடியும் வரை அந்தக் குழுவை மாற்றக் கூடாது என்று விதி இருக்கும்போது, மிக ஆர்வமாக ஆய்வு செய்துவந்த அமர்நாத்தை இடமாறுதல் செய்ததைப் பல்வேறு அமைப்புகளும் கண்டித்தன. தன்னுடைய மாறுதலை எதிர்த்து மத்திய நிர்வாகத் தீர்ப்பாயத்தில் முறையிட்டார் அமர்நாத் ராமகிருஷ்ணா. தீர்ப்பாயமும் இடமாறுதலை மறுபரிசீலனை செய்யச் சொன்னது. ஆனால், ஒரு வாரம் கழித்து அவருடைய இடமாறுதலை உறுதிசெய்து உத்தரவிட்டது. இது, தமிழர்களுக்கு எதிரான மறைமுகப் பண்பாட்டுப் போர் என்று தமிழர் அமைப்புகள் களத்தில் இறங்கின. இன்று காலை `மே 17’ இயக்கத்தினர் மதுரை தமுக்கம் மைதானத்தில் மிகப்பெரிய ஆர்பாட்டத்தை நடத்தி முடித்தனர்.

 

கீழடி

இந்த நிலையில் கீழடி ஆய்வைப்  பார்வையிட மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீத்தாராமன், மகேஷ் சர்மா ஆகியோர் வருவதாகத் தகவல் வர, `அவர்களுக்கு எதிராக முற்றுகையிடப்போகிறோம்’ என்று மக்கள் விடுதலைக் கட்சியினர் அறிவித்திருந்தனர்.

நேற்று காலையிலிருந்து கீழடியைச் சுற்றியுள்ள பகுதிகளில் தங்கியிருந்த இந்தக் கட்சியினர், சரியாக 2 மணிக்கு அங்கு வந்தனர். அவர்கள் வந்த சிறிது நேரத்தில் பா.ஜ.க அமைச்சர்களும், கட்சி நிர்வாகிகளும் அங்கு வந்து பார்வையிட்டனர். மோடி மற்றும் பா.ஜ.க-வுக்கு எதிராகவும், அமர்நாத் ராமகிருஷ்ணாவை மாற்றம் செய்ததை எதிர்த்தும் கோஷமிட்டனர் மக்கள் விடுதலைக் கட்சியினர். பதிலுக்கு பா.ஜ.க-வினரும் கோஷமிட்டனர். சிறிது நேரத்தில் பா.ஜ.க-வினர் அங்கு கிடந்த கம்பு, கட்டைகளை எடுத்துக்கொண்டு, போராட்டம் செய்தவர்களையும் பத்திரிகையாளர்களையும் விரட்டத் தொடங்கினர். இதனால் அந்தப் பகுதியே கலவரமானது. சிறிது நேரத்தில் கூடுதல் போலீஸ் வந்து  மக்கள் விடுதலைக் கட்சிப் போராட்டக்காரர்களை வாகனத்தில் ஏற்றிச் சென்றனர்.

“கீழடி ஆராய்ச்சி தொடர்ந்து நடத்திட, அதற்கான உதவிகளைச் செய்வதற்காகப் பார்வையிடத்தான் வந்தோம். ஆனால், இங்கு கலவரக்காரர்களை அனுமதித்த போலீஸ், மத்திய அமைச்சர்களைப் பாதுகாப்பதில் முறை தவறிவிட்டது” என்றார் தமிழிசை. சிறிது நேரம் பார்வையிட்டவர்கள், கீழடி விவகாரத்தில் பா.ஜ.க-வுக்கு எதிரான போராட்டத்தைப் பார்த்ததால் மிகவும் அப்செட்டாகி, அங்கிருந்து கிளம்பிச் சென்றனர்.

http://www.vikatan.com/news/politics/87924-protest-in-keezhadi-excavation-site.html

Link to comment
Share on other sites

 • 2 months later...

 

புதைந்து கிடக்கும் தமிழர்களின் வரலாறு: கீழடி அகழாய்வு முகாம்

கல் தோன்றி, மண் தோன்ற காலத்தில் காலத்தின் முன்தோன்றிய முத்தக்குடி தமிழ்குடி. மதுரை அருகே உள்ள கீழடி கிராமத்தில் பல தமிழ், சம்ஸ்கிருத எழுத்துகள் கிடைத்துள்ளன, அதுமட்டும் அல்லாமல் முன்னோர்கள் வாழ்ந்த அடையாளமாக அவர்கள் நேரிய தொல்லியல் பொருட்கள் கிடைத்துள்ளன. இதை பாதுகாக்க தமிழக அரசு முடிவு எடுக்குமா? இல்லை எதுவும் அப்பிடியே கிடப்பில் விடப்படுமா?

Link to comment
Share on other sites

 • 4 weeks later...
 • கருத்துக்கள உறவுகள்

 

கீழடியில் புதைந்து கிடக்கும் தமிழர் வரலாறு.. ஒரு காட்சித் தொகுப்பு!

மதுரை அருகே உள்ள கீழடியில் கிடைத்த ஆதாரங்களில் இடைநிலையில் கிடைத்தவற்றில் இரண்டை மட்டுமே கார்பன் பரிசோதனைக்கு அனுப்பியதில் அது 2200 ஆண்டுகளுக்கும் முந்தியது என்கிற உண்மை வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

வெறும் 50 செண்ட் அளவில் தோண்டிப் பார்த்ததில் வெளிப்பட்ட பழந்தமிழரின் வைகைக்கரையில் வாழ்ந்த மனிதரின் நாகரிகம், இன்னும் உள்ள 150 ஏக்கர் நிலப்பரப்பிலும் ஆய்வு செய்தால் ஒரு மிகப்பெரிய தொல் நகரம் வெளிப்பட வாய்ப்புள்ளது. இந்திய வரலாற்றைத் தெற்கிலிருந்து புரட்டி எழுத வேண்டிய காலம் வந்துள்ளது...

செழுமையான சங்க கால வாழ்வியலின் எச்சங்கள்தான் கீழடி...!: தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம், இந்திய மாணவர் சங்கம் இணைந்து சென்னையில் நடத்திய தமிழர் உரிமை மாநாட்டில் கீழடி குறித்த கண்காட்சி வைக்கப்பட்டது. அதற்காக ஸ்ரீரசா (இரவிக்குமார்) அவர்களால் தயார் செய்யப்பட்ட கீழடி குறித்த கண்காட்சித் தொகுப்பு நமது வாசகர்களுக்காக...!

தமிழர்களின் தொன்மை நாகரீகம் குறித்த விரிவான ஆதாரச் சான்றுதான் கீழடி.
 

தமிழர்களின் தொன்மை நாகரீகம்

புதைந்த நிலையில்...:  தமிழர்களின் நாகரீகம் குறித்த சான்றுகள் ஹரப்பாவிலும் மொகஞ்சதராவிலும் புதையுண்ட நிலையில்தான் கிடைத்தன. 

 

சிந்து வெளி நாகரீகம்

 

சிந்து வெளி நாகரீகம்:  சிந்துவெளி நாகரீக மக்களின் ஊர்கள், பெயர்கள் தமிழர்களை ஒத்துள்ளன.

 

கீழடி நாகரீகம்
 

கீழடி நாகரீகம்: 1974ம் ஆண்டு கீழடியில் மாணவன் ஒருவன் மூலம் தற்செயலாகவே முதல் பொறி கிடைத்தது.

 

தாழிகள், மண்டை ஓடுகள்
 

தாழிகள், மண்டை ஓடுகள்: சம்பந்தப்பட்ட இடத்தில் நடத்தப்பட்ட முதல் கட்ட ஆய்வின்போது மண்டை ஓடுகள், எலும்புகள், நாணயங்கள், தாழிகள் கிடைத்தன.

கலெக்டருக்கு கடிதம்

கலெக்டருக்கு கடிதம்: இதையடுத்து கீழடி பள்ளி ஆசிரியர் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவருக்கு கடிதம் எழுதி தகவல் தெரிவித்தார்.

பள்ளியில் தஞ்சம் புகுந்த தொன்மை

பள்ளியில் தஞ்சம் புகுந்த தொன்மை கீழடியில் கிடைத்த பொருட்களை பள்ளியிலேயே ஹிஸ்டரி கார்னர் என்ற பகுதியை ஏற்படுத்தி பாதுகாத்து வைத்தனர். பின்னர் சென்னை அருங்காட்சியகத்துக்கு அது இடம் மாறியது.

37 ஆண்டுகள் கழித்து

37 ஆண்டுகள் கழித்து: இப்படியாக 37 ஆண்டுகள் கழிந்த நிலையில்தான் 2013ம் ஆண்டு புதிய வெளிச்சம் பாய்ந்தது கீழடியை நோக்கி.

வரலாற்று ஆய்வு

வரலாற்று ஆய்வு: 2015 மற்றும் 2016 ஆகிய ஆண்டுகளில் மத்திய அரசின் அனுமதியுடன் இங்கு ஆய்வுகள் தொடங்கின.

சங்க காலக் கட்டடங்கள்

சங்க காலக் கட்டடங்கள்:  கீழடியில் நடந்த ஆய்வின்போது 10க்கும் மேற்பட்ட சங்க காலக் கட்டடங்கள் நமக்குக் கிடைத்தது மிகப் பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

நகர நாகரீகம்

நகர நாகரீகம்: இங்கு கிடைத்த கட்டமைப்புகள், நகர அமைப்புகளைப் பார்க்கும்போது சங்க காலத்தில் கட்டடங்களே இல்லை என்ற கூற்றை தகர்ப்பதாக அது அமைந்துள்ளது.

செழுமையான வாழ்வியல் சான்றுகள்

செழுமையான வாழ்வியல் சான்றுகள்:  இங்கு கிடைத்துள்ள பொருட்களையும், பெயர்களையும் பார்க்கும்போது நமக்குக் கிடைத்திருப்பவை செழுமையான சங்க கால வாழ்வியலின் எச்சங்கள் என்பது தெரிய வரும்.

நன்றி  தற்ஸ்  தமிழ்.

இவ்வளவு... பெருமை மிகுந்த தமிழினம், இன்று சொந்த நாடு இல்லாமல்... 
மற்றவனுக்கு... அடிமையாகி, சினிமா நடிகர்களுக்கு பின்னால் திரிவதையம், 
சொந்த இனத்தை... காட்டிக் கொடுத்து,  வயிறு வளர்ப்பதையும்   பார்க்க, மிகுந்த வேதனையாக உள்ளது.  
tw_joy:

 • Like 1
Link to comment
Share on other sites

கீழடி அகழ்வு மாதிரிகள் 2,200 ஆண்டுகள் பழமையானவை: இந்திய அரசு தகவல்

 

சிவகங்கை மாவட்டம் கீழடியில் சேகரிக்கப்பட்ட அகழ்வாய்வுப் பொருள்கள் சுமார் 2,200 ஆண்டுகள் பழமைவாய்ந்தவை என்று இந்திய அரசு தெரிவித்துள்ளது.

கீழடிபடத்தின் காப்புரிமைK STALIN

கீழடியில் உள்ள பொருள்கள் சங்க காலத்தை சேர்ந்தவை என்று பல ஆண்டுகளாக கூறப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக மாநிலங்களவை திமுக குழுத் தலைவர் கனிமொழி எழுப்பியிருந்த கேள்விகளுக்கு மத்திய கலாசாரம் மற்றும் சுற்றுலாத் துறை இணை அமைச்சர் மகேஷ் சர்மா மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக வியாழக்கிழமை பதில் அளித்துள்ளார்.

அதில், கீழடியில் இருந்து இருந்து கரியமில பொருள்கள் சேகரிக்கப்பட்டு அமெரிக்காவின் ஃபுளோரிடாவில் உள்ள பீட்டா அனாலிட்டிக் நிறுவனத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக அமைச்சர் மகேஷ் சர்மா கூறியுள்ளார்.

மேலும், அந்த கார்பன் பொருள்களை ஆய்வுக்கு உட்படுத்தியதில், அதில் முதலாவது மாதிரியின்படி, இவை சுமார் 2,160 ஆண்டுகள் அல்லது அதற்கு 30 ஆண்டுகள் முன்போ, பின்போ இருக்கும் என்றும், இரண்டாவது மாதிரியின்படி இவை 2,200 ஆண்டுகள் அல்லது அதற்கு 30 ஆண்டுகள் முன்போ, பின்போ இருக்கும் என்று ஆய்வு முடிவில் தெரிய வந்துள்ளதாக அமைச்சர் மகேஷ் சர்மா குறிப்பிட்டுள்ளார்.

கீழடி

கீழடியில் முன்பு தொல்லியல் ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டபோது, அங்கு தொல்லியல் கண்காணிப்பாளராக கே.அமர்நாத் ராமகிருஷ்ணா பணியாற்றினார்.

தற்போது அவர் அசாம் மாநிலத்தின் கௌஹாத்தியில் பணிபுரிந்து வருகிறார்.

அமெரிக்க ஆய்வு முடிவுகள் தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,"கீழடியில் பூமிக்கு அடியில் 4.5 மீட்டர் ஆழத்தில் இருந்து கரியமில மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டன என்றும், ஆய்வு முடிவில் அவை கிறிஸ்துவுக்கு முந்தைய மூன்றாம் நூற்றாண்டு பழமையானவை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது " என்றார்.

 

கீழடி அகழ்வாய்வுப் பணியின்போது, ஆதன், உதிரன், சந்தன் போன்ற பெயர்கள் அங்குள்ள மாதிரிகளில் இருந்தன என்று அமர்நாத் ராமகிருஷ்ணா கூறினார்.

சங்க காலத்திலேயே நகர நாகரிகம் இருந்ததை கீழடி அகழ்வு மாதிரிகள் நிரூபிக்கும் வகையில் உள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.

தமிழகத்தில் மதுரை - சிவகங்கை மாவட்டங்களின் எல்லையில் கீழடி கிராமம் அமைந்துள்ளது.

http://www.bbc.com/tamil/india-40761846

Link to comment
Share on other sites

"கீழடி அகழ்வாராய்ச்சி" வெறும் கண்துடைப்பு நாடகமா?

 

கீழடி

'கீழடியில் கண்டெடுக்கப்பட்ட பொருள்கள் சுமார் 2,200 வருடங்கள் பழமையானவை' என்று அமெரிக்காவைச் சேர்ந்த ஆராய்ச்சி நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. இரண்டே இரண்டு பொருள்களை வைத்து மட்டுமே கீழடியின் தொன்மையைச் சொல்லிவிட முடியாது. அந்தப் பகுதியில் தொடர்ந்து ஆராய்ச்சிகள் நடத்தப்பட வேண்டும். அதன்பிறகே. கீழடியின் உண்மையான தொன்மையைக் கணக்கிடமுடியும் எனத் தற்போது பலரும் கூறி வருகின்றனர்.

"மதுரை அருகேயுள்ள கீழடி என்ற இடத்தில், கண்டெடுக்கப்பட்ட பொருள்களின் காலத்தைக் கண்டறிய, அவை ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்டுள்ளனவா?" என்று நாடாளுமன்றத்தில் தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கேள்வி எழுப்பியிருந்தார். இதையடுத்து கீழடியில் கண்டெடுக்கப்பட்ட இர‌ண்டு கார்பன்‌ மாதிரிகளின் காலத்தைக் கண்டறிய அமெரிக்காவின் ஃபுளோரிடாவில் உள்ள 'பீட்டா அனலடிக்' என்ற நிறுவனத்திற்கு பரிசோதனைக்காக அவை அனுப்பிவைக்கப்பட்டன. அந்தப் பரிசோதனையின் முடிவுகளை மத்திய கலாசாரத்துறை இணையமைச்சர் மகேஷ் சர்மா நேற்று வெளியிட்டார். அதில் "கீழடி அகழ்வாராய்ச்சி பகுதியில் கண்டெடுக்கப்பட்ட ஒரு பொருள் 2,160 ஆண்டுகளுக்கும், மற்றொரு பொருள் 2,220 ஆண்டுகளுக்கும் முற்பட்டவை. கரிம பகுப்பாய்வு சோதனையில் கீழடி நகர நாகரிகம் கி.மு. இரண்டாம் நூற்றாண்டுக்கு முந்தையது என்பது உறுதிபடுத்தப்பட்டது" என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

காவிரிப் பூம்பட்டினம் அகழ்வாராய்ச்சிக்குப் பிறகு மத்திய தொல்லியல் துறை தமிழகத்தின் கீழடியில்தான் ஆய்வு நடத்தி இருக்கிறது. கீழடியில் கண்டுபிடிக்கப்பட்ட தொல்லியல் மேடானது, கிட்டத்தட்ட 110 ஏக்கர் பரப்பளவைக் கொண்டது. கி.பி. 300-ம் ஆண்டு தொடங்கி பத்தாம் நூற்றாண்டு வரையிலான தடயங்கள் கிடைத்தன. ஆனால், கீழடியில் அகழ்வாராய்ச்சிப் பணிகள் தடுத்து நிறுத்தப்பட்டன. கீழடியில் தொடர்ந்து அகழ்வாராய்ச்சி நடத்த வேண்டும் எனப் பல்வேறு அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டன. இதையடுத்து, அங்கு அகழ்வாராய்ச்சிப் பணிகளை மேற்கொண்டிருந்த தொல்லியல் கண்காணிப்பாளர் அமர்நாத், அந்தப் பதவியில் இருந்து மாற்றப்பட்டு, துணை கண்காணிப்பாளராக இருந்த ஸ்ரீராம் பணியில் அமர்த்தப்பட்டார். அதன்பிறகு மத்திய தொல்லியல்துறை அகழ்வாராய்ச்சிக்கு அனுமதியளித்தது. தற்போது, கீழடியில் பெயரளவிற்கு மட்டுமே ஆராய்ச்சி நடப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், அங்கு கண்டெடுக்கப்பட்ட பொருள்கள் சுமார் 2200 வருடங்கள் பழமையானவை நிரூபணமாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து, மத்திய தொல்லியல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "கீழடியில் இரண்டு சதவிகிதம் மட்டுமே அகழ்வாராய்ச்சி நடத்தப்பட்டது. இரண்டு வருடங்கள் ஆராய்ச்சி நடத்தியதற்கே 5,300 தொன்மையான பொருள்கள் கிடைத்திருக்கின்றன என்றால், இன்னும் பத்து முதல் இருபது வருடங்கள்வரை ஆராய்ச்சி நடத்தினால் என்னவெல்லாம் கிடைக்கும் என்பதை எண்ணிப்பார்க்க முடிகிறது. இன்னும் பல வருடங்கள் ஆராய்ச்சி நடத்தினால்தான் கீழடியின் உண்மையான காலத்தையும், அங்குவாழ்ந்த மக்களின் நாகரிகத்தையும் முழுமையாகக் கண்டறிய முடியும். இப்போது பரிசோதனையில் இருந்து கிடைத்திருக்கும் தகவல், மதுரைக்கு அருகே 'சங்ககால நகரம்' ஒன்று இருந்ததற்கான ஆதாரம் மட்டுமே. கீழடியில் முழுமையாக ஆறு மீட்டர் ஆழத்திற்கு அகழ்வாராய்ச்சி நடத்தப்பட வேண்டும். அப்போதுதான், இந்த நகரம் எப்படித் தோன்றியது என்பதை கண்டுபிடிக்க முடியும்" என்றார்.

கீழடி ஆராய்ச்சி

 

ஆய்வில் 70-க்கும் மேற்பட்ட தமிழ் பிராமி எழுத்துகள், பிராகிருத மற்றும் சமஸ்கிருத எழுத்துகள் கிடைத்திருக்கின்றன. ஆப்கான் நாட்டின் சூது பவளமும், ரோமானிய மண் பாண்டமும் 2,500 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழ் பாரம்பர்யத்தில் இருந்திருக்கிறது என்ற தகவல் கிடைத்திருக்கிறது. கீழடியில் பத்தாம் நூற்றாண்டு வரையிலான தகவல்கள் மற்றும் தடயங்கள்தான் கிடைத்துள்ளன. அவற்றில் குறைந்தபட்சம் பத்து பொருள்களையாவது கார்பன் பகுப்பாய்வு முறைக்கு அனுப்பியிருக்க வேண்டும். ஆனால் இரண்டே இரண்டு பொருள்களை மட்டுமே மத்திய கலாசாரத்துறை பரிசோதனைக்கு அனுப்பியிருக்கிறது. அதற்கான முடிவுகள் மட்டுமே வந்து சேர்ந்திருக்கிறது. கீழடியில் இருக்கும் தொல்லியல்மேடு முழுவதும் அகழ்வாராய்ச்சி நடத்தி, அங்கு கிடைக்கும் பொருள்களைக் அங்கேயே அருங்காட்சியகம் அமைத்து பாதுகாக்க வேண்டும்" என்றார்.

தமிழர் நாகரிகம் பற்றிச் சொல்லும் கீழடி குறித்து, தொடர்ந்து எழுதியும், பேசியும் வரும் எழுத்தாளர் சு.வெங்கடேசனிடம் பேசியபோது, 'கீழடி அகழ்வாராய்ச்சி - தமிழக வரலாற்றைக் குறிக்கும் மிகமுக்கிய ஆவணம். ஆறு மீட்டர் தோண்டப்பட்ட தொல்லியல் குழியில், மூன்றாவது குழியில் எடுக்கப்பட்ட பொருள்களின் காலம், சுமார் 2,200 வருடங்களுக்கு முந்தையது என்பது உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. அதற்கடுத்து நான்கு முதல் ஆறு மீட்டர் தோண்டினால்தான் மனிதர்கள் வாழ்ந்ததற்கான எச்சங்கள் கிடைக்கப்பெறும். அதையும் கார்பன் பகுப்பாய்வு பரிசோதனைக்காக அனுப்ப வேண்டும். இதை ஏன் மத்திய அரசு செய்யவில்லை? அதோடு, கீழடி ஆராய்ச்சியை முன்னெடுத்து நடத்திய தொல்லியல் கண்காணிப்பாளர் அமர்நாத்தை மீண்டும் கீழடியில் பணியமர்த்த மத்திய அரசு ஆவன செய்ய வேண்டும்" என்றார்.

தமிழரின் தொன்மையைப் பறைசாற்றும் கீழடியில் முழுமையாக அகழ்வாராய்ச்சி நடத்தப்பட வேண்டும். இங்கிருந்து மைசூருக்கு எடுத்துச் செல்லப்பட்ட பொருள்களை மீண்டும் இங்கேயே திரும்பக் கொண்டுவந்து அருங்காட்சியகம் அமைக்க வேண்டும். கீழடியில் குறிப்பிடப்படும் 110 ஏக்கர் தொல்லியல்மேடு முழுவதும் அகழ்வாராய்ச்சி செய்திட மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கீழடி ஆராய்ச்சியைத் தொடங்கிய அமர்நாத்தை மீண்டும் கீழடிக்குப் பணியமர்த்த வேண்டும். இல்லையெனில், 2000 வருடங்கள் பழமையான நாகரிக இடத்தில், தற்போது நடந்துவரும் அகழ்வாராய்ச்சி வெறும் கண்துடைப்பாகவே இருக்கும்.

http://www.vikatan.com/news/tamilnadu/97204-secrets-behind-keezhadi-excavation.html

Link to comment
Share on other sites

 • 3 weeks later...
 • 2 weeks later...

மூடு விழாவுக்குத் தயாராகும் கீழடி அகழாய்வு?

 

கீழடி அகழாய்வு ஆராய்ச்சி, வரும் செப்டம்பர் மாதத்துடன் `மூடு விழா' காணப்படும் ஆபாய கட்டத்தில் இருப்பதாகவும், பா.ஜ.க அரசு திட்டமிட்டே தமிழர்களின் நாகரிகத்தை, தொன்மையை இருட்டடிப்புச் செய்வதாகவும்  தமிழ் ஆர்வலர்கள் குற்றம்சாட்டிவருகிறார்கள்.

சிவகங்கை மாவட்டம் கீழடி கிராமத்தில், தொல்லியல் துறை கடந்த 2015-2016ம் ஆண்டு வரை நடத்திய அகழ்வாராய்ச்சியில், 2,500 ஆண்டுகள் பழைமையான தமிழர்களின் நாகரிகம் 5,000-த்துக்கும் மேற்பட்ட தொல்பொருள்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த அகழ்வாராய்ச்சி பணியை, கீழடி அகழாய்வுக் குழவின் தலைவராக இருந்த அமர்நாத் ராமகிருஷ்ணன் மிகுந்த ஆர்வத்தோடும் அர்ப்பணிப்போடும் நடத்திவந்தார். மூன்றாம்கட்ட ஆய்வுக்கான வரைவுத்திட்டத்தை, தொல்லியல் துறைக்கு அனுப்பிவைத்தார் அமர்நாத். இதுதான் இவர் இடம் மாறுதல் செய்வதற்கான பிள்ளையார்சுழியாக அமைந்தது.

இருந்தபோதிலும், மத்திய அரசு கீழடி அகழாய்வுக்கு நிதி ஒதுக்குவதில் காலதாமதம் செய்துவந்தது. கடந்த மார்ச் மாதம் 24-ம் தேதி அமர்நாத்தை, கவுகாத்தியில் உள்ள தொல்பொருள் பாதுகாப்பு மையத்துக்கு பணி இடமாற்றம் செய்தது மத்திய தொல்லியல் துறை. தமிழர்களின் நாகரிகத்தை உலகத்தின் பார்வைக்குக் கொண்டுசேர்த்தவர் அமர்நாத்ராமகிருஷ்ணன். `கீழடி அகழாய்வுப் பணியை முற்றிலுமாக முடக்க முயற்சிக்கிறது மத்திய அரசு' என்று தமிழ் ஆர்வலர்கள், தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள்  பலரும் மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்துவந்தனர்.

`கீழடி அகழாய்வுப் பணி முடியும் வரை அமர்நாத்தை பணியிட மாற்றம் செய்யக் கூடாது. அவர் மீண்டும் அதே பணியில்  தொடர வேண்டும்' என, மூன்று முறை தொல்லியல் துறைக்குப் பரிந்துரை செய்தது மத்திய தீர்ப்பாயம். ஆனால் தொல்லியல் துறை, அசைந்துகொடுப்பதாக இல்லை. இதைத் தொடர்ந்து மதுரை உயர் நீதிமன்றக் கிளை வழக்குரைஞர் தேன்மொழிமதி, `அமர்நாத், மீண்டும் இந்த அகழாய்வுப் பணியில் தொடர வேண்டும்' என வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், `அமர்நாத் ராமகிருஷ்ணன் எதற்காக மாற்றப்பட்டார் என்பதற்கான காரணம் முழுமையாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட வேண்டும்' என உத்தரவிட்டார்கள். நீதிமன்றத்தில் மத்திய அரசு வழக்குரைஞர்கள் மழுப்பலாகவே பதில் மனு தாக்கல் செய்துவருகிறார்கள்.

கீழடி

மூன்றாம்கட்ட ஆய்வுப் பணி தொடக்கமும் முடக்கமும்:

இந்தப் பணிக்கு, மத்திய அரசு பிப்ரவரி மாதம் அனுமதி வழங்கியது.  ஆனால் மார்ச் மாதம்தான் நிதி ஒதுக்கியது.  இந்த ஆய்வுக்கான அதிகாரியாக ஸ்ரீராம் நியமிக்கப்பட்டார். இவரின் அணுகுமுறைகளைக் கண்ட கீழடி மக்கள், மூன்றாம்கட்ட ஆய்வுக்கு நிலம் தர மறுத்துவிட்டார்கள். ஒருவழியாக, கீழடி கிராமத் தலைவர்கள் ஜமாத் தலைவர்களிடம் பேசி, செப்டம்பர் 30-ம் தேதி வரை அனுமதி பெற்றிருக்கிறார் ஸ்ரீராம். மே மாதம் ஆய்வுப் பணி தொடங்கப்பட்டது. ஆனால், இன்று வரை ஆறு குழிகள் மட்டுமே தோண்டப்பட்டு, அதில் உறை கிணறுகள் பிராமிய எழுத்துகள் கறுப்பு-சிவப்பு பானை ஓடுகள் தண்ணீர் நிரப்பும் பானைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

அமர்நாத் இருக்கும்போது அதிகமான தமிழர் நாகரிகம் தொன்மையான ஆதாரங்கள் அதற்கான பொருள்கள் தோண்டி எடுத்தபோது, பத்திரிகைகள் மூலம் வெளியிடப்பட்டன. ஆனால், ஸ்ரீராம் வந்த பிறகு இந்த ஆய்வு முகாம் ராணுவ முகாம்போல் ஆகிவிட்டது. முகாம் பகுதிக்குள் நுழைய அனுமதி என்பது கெடுபிடியாக உள்ளது. ஆய்வுப் பணி நடக்கும் இடத்தில் பத்திரிகையாளர்களுக்குத் தடை. இதுவரைக்கும் என்ன பொருள்கள் எடுக்கப்பட்டன என்கிற விவரம் மறைக்கப்பட்டிருக்கிறது. ஆக, மூன்றாம்கட்ட பணி மர்மமாகவே இருக்கிறது.

மத்திய அரசு ஒதுக்கிய பணத்தைக் காலிசெய்துவிட்டு கிளம்பத் தயாராக இருக்கிறார் ஸ்ரீராம். `இந்த ஆய்வில் எந்தப் பொருள்களும் கிடைக்கவில்லை. இதற்குமேல் இங்கு ஒன்றும் இல்லை எனச் சொல்லி, ஊத்தி மூடுவதற்காக மத்திய அரசால் அனுப்பிவைக்கப்பட்டவர்தான் இந்த ஸ்ரீராம்' என்கிற குற்றச்சாட்டு தமிழ் ஆர்வலர்கள் மத்தியில் எழுந்திருக்கிறது.

 தீக்கதிர் மதுரை பதிப்பகம் ஆசிரியர் மதுக்கூர் ராமலிங்கம் பேசும்போது... மதுக்கூர் ராமலிங்கம்

``தொல்லியல் துறை தமிழகத்தில் பல்வேறு இடங்களில் ஆய்வுகள் நடத்தியது. ஆனால், சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழடியில்தான் உயரிய  மனித நாகரிகத்தோடு மனிதன் வாழ்ந்தான் என்பதற்கான அடையாளம் ஆதாரமாகக் காணப்படுகிறது. அந்தக் காலத்திலேயே மனிதன் கழிவுகளை வெளியேற்ற மண்ணால் சுட்ட பைப்களைப் பயன்படுத்தியிருக்கிறான்; நெசவு தொழிற்சாலைகள் அமைத்திருக்கிறான். (இன்றைக்கு நாம் குடிக்கும் ஆர்ஓ வாட்டர்) இவையெல்லாம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்கூட்டியே கடைப்பிடித்திருக்கிறான்.

பட்டினபாலையில் சொல்வதுபோல `கீழடி' என்பது அழிந்துபோன ஆதி மதுரையாகக்கூட இருக்கலாம். காரணம்,  கடல் வணிகம் செய்வதற்கான முத்திரை கண்டெடுக்கப்பட்டிருக்கிறது. கீழடி காக்கப்பட்டதற்கு அந்தப் பகுதி மக்களுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். மற்ற பகுதிகள் எல்லாம் ரியல் எஸ்டேட்களாக மாறிவிட்டன.

தென்னைமரங்கள் இருந்ததால் கீழடி காப்பாற்றப்பட்டிருக்கிறது. நூறு ஏக்கர் நிலப்பரப்பில் வெறும் 50 சென்டில் இவ்வளவு வரலாறுகள் நமக்குக் கிடைத்திருக்கின்றன. இதிலிருந்து இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பொருள்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இங்கே கிடைத்த பொருள்களில் இரண்டு பொருள்கள் மட்டும் கார்பன் ஆய்வுக்காக அமெரிக்காவுக்கு  அனுப்பியதில் `2,400 ஆண்டுகள் பழைமையானது' எனச் சொல்லப்பட்டிருக்கிறது. ஆக, கீழடியில் எடுக்கப்பட்ட பொருள்களை வைத்து பார்க்கும்போது, மனிதன், சாதி மதம் கடவுள் என எதுவுமே இல்லாத இனமாக மனிதனாக வாழ்ந்திருக்கிறான் என்பது மட்டும் நமக்குப் புரிகிறது.

கீழடி அகழாய்வு

தமிழகத்தில் மட்டும் 232 இடங்கள் தொன்மையான இடங்கள் என கண்டறியப்பட்டிருந்தாலும், கீழடி மட்டும்தான் தமிழர்களின் நாகரிகம், பண்பாடு, எழுத்து, வீரம் போன்றவற்றை ஆதாரத்தோடு வெளிப்படுத்தியிருக்கிறது. கீழடி, உலகத்துக்கே தமிழர்களின் நாகரிகத்தை எடுத்துக்காட்டியிருக்கிறது. மதம், கடவுள் போன்ற அடையாளங்கள் இல்லாததால்தான் பா.ஜ.க கீழடி அகழாய்வுப் பணிகளை இழுத்து மூட நினைக்கிறது. அதற்காகத்தான் தொல்லியல் துறை ஆய்வு அதிகாரியை நியமிக்காமல், கண்டெடுக்கப்பட்டுள்ள பொருள்களைப் பாதுகாக்கும் பாதுகாவலரை நியமித்திருக்கிறது மத்திய அரசு'' என்கிறார்.

சாகித்ய அகடமி விருது பெற்ற எழுத்தாளர் சு.வெங்கடேசன் பேசும்போது… சு.வெங்கடேசன்

``கீழடி, தமிழர்களின் நாகரிகத்தை உலகத்துக்கே முதன்மையானது என எடுத்துக்காட்டியிருக்கிறது. இந்த அகழாய்வுப் பணிகளை முடக்குவதற்கு திட்டமிடப்பட்டிருப்பதாகவே அறிகிறேன். ஒவ்வொரு முறையும் போராடிய பிறகுதான் அனுமதி வழங்கியது மத்திய அரசு. கீழடி அகழாய்வு என்பது, 110 ஏக்கரில் தோண்டி பார்க்கவேண்டிய ஒன்று. இந்த ஆய்வானது சுமார் இருபது ஆண்டுகளாவது தொடரவேண்டும். இந்த ஆய்வில் உண்மையிலேயே ஆர்வமுள்ள அனுபவமுள்ள அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்பட வேண்டும்.

அமர்நாத் போன்ற அதிகாரிகள், மீண்டும் நியமிக்கப்பட வேண்டும். 5,000 பொருள்கள், இரண்டு கட்ட ஆய்வில் கிடைத்திருக்கின்றன. 2,200 வருடங்களுக்கு முந்தைய காலத்தையும் வாழ்க்கை  வாணிப முறைகளைக் காட்டக்கூடியதாக அமைந்திருக்கிறது இந்த ஆய்வு.

1,000 ஆண்டுகள் உள்ள பெருமாள்-சிவன் கோயில்களின் கல்வெட்டுகளை இதோடு தொடர்புப்படுத்துகிறார். முதல் இரண்டாம்கட்ட ஆய்வில் தமிழர்கள் பயன்படுத்திய தொழிற்சாலை, தொழிற்கூடம், குடியிருப்புப் பகுதிகள் கிடைத்தன. முதல் ஆய்வில் 48 குழிகள் தோண்டப்பட்டன. இரண்டாம்கட்ட ஆய்வில் 53 குழிகள் தோண்டப்பட்டன. ஆனால், மூன்றாம்கட்ட ஆய்வுப் பணிக்குத் தோண்டப்பட்ட குழிகளின் எண்ணிக்கை வெறும் ஆறு மட்டுமே. `மூத்தகுடி தமிழ்குடி!' என்பதை மறைப்பதற்காக, மத்திய அரசு செயல்திட்டம் இது. இதுவரை கிடைத்த பொருள்கள் பாதுகாக்கப்படாமல் வெளியில் கிடக்கின்றன. ஆனால், அதிகாரிகள் ஆடம்பரமான செட்டில் இருக்கிறார்கள்'' என்றார்.

தமிழ் ஆசிரியர் இளங்கோவிடம் பேசும்போது...இளங்கோ

``கிமு 3-ம் நூற்றாண்டிலிருந்து கி.பி 10-ம் நூற்றாண்டு வரையிலான பகுதியைச் சேர்ந்த வசிப்பிடமாக இந்தக் களம் கணிக்கப்பட்டுள்ளது. இதிலிருந்து உறை கிணறுகள், செங்கல்சுவர்கள், கூரை ஓடுகள், மண்பாண்டங்கள் மிளிர்கல், அணிகலன்கள், எலும்புக் கருவிகள், இரும்புவேல் தமிழி எழுத்து பொறிக்கப்பட்ட பானையோடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இலக்கியத்தில் குறிப்பிடப்பட்டும் பாண்டியர்களின் தொல்நகரான பெருமணலூர் இதுவாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. 10-க்கும் மேற்பட்ட கட்டடங்கள் கண்டறியப்பட்டுள்ளன.  வளர்ச்சியடைந்த நகரமாக திகழ்ந்ததற்கு இது வலுவான சான்றாக அமைந்துள்ளது.

சங்ககாலத்தில் கட்டடங்களே இல்லை என்கிற கூற்றை இந்த அகழாய்வு மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இங்கு உள்ள மண்பாண்டம் ரோமப் பேரரசுடன்கொண்டிருந்த வணிகத் தொடர்பை  மெய்பித்திருக்கிறது. வணிகர்களால் கொண்டுவரப்பட்ட ரௌலட் அரிட்டைன் வகை மண்பாண்டங்கள் கிடைத்துள்ளன.

 

தமிழகத்தில் செம்பழுப்பு நிற ரசட் கலவை பூசப்பட்ட பாண்டங்கள், இதுவரை கொங்கு பகுதியிலேயே கிடைத்திருக்கின்றன. இது, கொங்கு பகுதியோடு வாணிபத் தொடர்பு வைத்திருந்ததைக்காட்டுகிறது. அதோடு தமிழி எழுத்துகள் ஆதன், உதிரன், திசன் போன்ற தனிநபர்களின் பெயரைக் குறிப்பிடும் தமிழி எழுத்துகள் பொறிக்கப்பட்ட மண்பாண்ட ஓடுகளும் கிடைத்திருக்கின்றன. இரும்பால் ஆன அம்பு முனைகள், எழுத்தாணி, சுடுமண் முத்திரை, கட்டைகள் தந்தத்தால் ஆன தாயக்கட்டைகள், சுடுமண் பொம்மைகள் உள்பட பல்வேறு அரிய தொல்பொருள்கள் கிடைத்திருக்கின்றன. இப்படிபட்ட வரலாற்றை அழிக்க மறைக்கும்  மத்திய அரசு, கீழடிக்கு அதிகபடியான நிதியை ஒதுக்க வேண்டும். பல ஆண்டுகள் இந்த ஆய்வுப் பணி தொடர வேண்டும். அதே நேரத்தில் ஆய்வுப் பணிக்கான அதிகாரியாக அமர்நாத் ராமகிருஷ்ணன் மீண்டும் கீழடிக்கு மாற்றப்பட வேண்டும்'' என்கிறார்.

http://www.vikatan.com/news/tamilnadu/100908-keeladi-excavation-put-on-hold.html

Link to comment
Share on other sites

கீழடி அகழாய்வு பகுதியை மூடக்கூடாது: மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவு

 

கீழடியில் அகழாய்வு நடைபெற்ற பகுதியை மூடாமல் பாதுகாக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையைச் சேர்ந்த கனிமொழி மதி என்பவர் உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த பொதுநலன் மனு:

மதுரையில் இருந்து 17 கி.மீ. தொலைவில் சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெற்ற அகழாய்வில் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான 5,300 பழங்காலப் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. இங்கு 110 ஏக்கர் அளவில் பழங்கால பொருட்கள், ஆவணங்கள் புதைந்துள்ளன. ஆனால் ஒரு ஏக்கர் பரப்பளவில் தான் ஆய்வுகள் நடைபெற்றுள்ளன. கீழடியில் அகழாய்வு பணியை தொடரவும், பழங்கால பொருட்களை கீழடியிலேயே அருங்காட்சியகம் அமைத்து காட்சிப்படுத்தவும் உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறப்பட்டிருந்தது.

இதேபோல் கீழடியில் அகழாய்வு பணியை மேற்கொண்ட தொல்லியல் அதிகாரி இடமாறுதல் செய்யப்பட்டதற்கு எதிராகவும் கனிமொழி மதி தனி மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனுக்கள் நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், சதீஷ்குமார் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், கீழடியில் அகழாய்வு நடைபெற்ற இடத்தை பாதுகாக்க வேண்டும். அகழாய்வு நடைபெற்ற இடத்தை மூடக்கூடாது. அகழாய்வுக்காக தோண்டப்பட்ட இடம் அப்படியே இருப்பது தான் சிறப்பு. ஹரப்பா, மொகஞ்சதாரோவில் அகழாய்வு நடைபெற்ற இடம் மூடப்படாமல் தான் உள்ளது. அகழாய்வு நடைபெற்று வரும் இடங்களை வைத்திருந்த தனியாருக்கு இழப்பீடு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

அப்போது, நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த தொல்லியல் கண்காணிப்பாளர் ஸ்ரீராம் கூறுகையில், அகழாய்வு மேற்கொள்வதற்கு வழங்கப்பட்ட உரிமக் காலம் இந்த மாதத்துடன் முடிகிறது. உரிமக் காலத்தை நீட்டிக்க மத்திய அரசை கேட்டுள்ளோம். இங்கு கண்டுபிடிக்கப்பட்ட பழங்காலப் பொருட்களை பாதுகாப்பாக வைக்க பக்கத்திலுள்ள சமுதாயக் கூடத்தை தர அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்றார்.

பின்னர் நீதிபதிகள் தங்கள் உத்தரவில், அகழாய்வு நடைபெற்ற இடத்துக்கு நிரந்தரமாக போலீஸ் பாதுகாப்பு வழங்குவது தொடர்பாகவும், பழங்காலப் பொருட்களை பாதுகாக்க சமுகநலக் கூட்டத்தை வழங்குவது தொடர்பாகவும் மாவட்ட நிர்வாகம் பதிலளிக்க வேண்டும். கொந்தகையில் அருங்காட்சியகம் அமைக்க அரசு வழங்கியுள்ள இடத்தை கூடுதல் அட்வகேட் ஜெனரல், மத்திய அரசு வழக்கறிஞர் பார்வையிட்டு அங்குள்ள வசதிகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர். விசாரணையை செப். 11-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.

http://tamil.thehindu.com/tamilnadu/article19642237.ece

Link to comment
Share on other sites

 • 2 weeks later...

கீழடியில் 3-ம் கட்ட அகழாய்வில் 1800 பொருட்கள் கண்டெடுப்பு: தங்க அணிகலன்கள், தமிழ் பிராமி மட்பாண்ட ஓடுகள் கிடைத்தன

18%209majanKeezhadi

தமிழ் பிராமி எழுத்துகளுடன் கூடிய மட்பாண்ட ஓடு.

18%209majanKeezhadi%20Uraikinaru

கீழடியில் நடைபெற்ற மூன்றாம்கட்ட அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட உறைகிணறு, பழைய மட்பாண்டங்கள்.

இந்திய தொல்லியல் துறையின் பெங்களூரு அகழாய்வு பிரிவு சார்பில் சிவகங்கை மாவட்டம், கீழடியில் தாமதமாக தொடங்கப்பட்டு, 3 மாதமே நடைபெற்ற 3-ம் கட்ட அகழாய்வில் சுமார் 1800-க்கும் மேற்பட்ட தொல்பொருட்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. இதில் தங்கத்தால் ஆன அணிகலன்கள், தமிழ் பிராமி எழுத்துகள் பொறிக்கப்பட்ட மட்பாண்ட ஓடுகள், மட்பாண்ட உறை கிணறுகள் கிடைத்துள்ளன.

கீழடி அருகே பள்ளிச்சந்தை புதூர் திடலில் உள்ள அகழாய்வு முகாமில் பெங்களூரு பிரிவு தொல்லியல் கண்காணிப்பாளர் பி.எஸ்.ஸ்ரீராமன் நேற்று கூறியதாவது:

கீழடியில் 2 ஆண்டுகளாக மேற்கொண்ட அகழாய்வில் சுமார் 2200 ஆண்டுகளுக்கு முந்தைய, வரலாற்றின் தொடக்க காலத்தைச் சேர்ந்த செங்கல் கட்டிடங்கள் உள்ளிட்ட 5,300 தொல்லியல் பொருட்கள் கிடைத்தன.

மத்திய அரசின் பண்பாட்டுத் துறை அமைச்சர் மகேஷ் சர்மா, கடந்த ஏப்ரல் 28-ம் தேதி கீழடியில் ஆய்வு செய்தார். இதனைத் தொடர்ந்து கடந்த மே 27-ம் தேதி பெங்களூரு அகழாய்வு ஆறாம் பிரிவு சார்பில், கீழடியில் மூன்றாம் கட்ட அகழாய்வுப் பணிகள் தொடங்கின.

 

1800 தொல் பொருட்கள்

ஏற்கெனவே கிடைத்த கட்டிட எச்சங்களின் தொடர்ச்சியை கண்டறியும் வகையில், வடபுறத்தில் 400 சதுர மீட்டர் பரப்பளவில் குழிகள் தோண்டப்பட்டன. மே முதல் செப்டம்பர் வரையிலான காலம் குறைவாக இருந்ததாலும், தொடர்ச்சியாக மழை பெய்ததாலும் திட்டமிட்டபடி முடிக்க இயலாமல் 400 சமீ பரப்பளவில் மட்டும் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இதுவரை சுமார் 1800-க்கும் மேற்பட்ட தொல் பொருட்கள் கிடைத்துள்ளன. இதில் 1500-க்கும் மேலாக கண்ணாடி மணிகள், பளிங்கு, சூது பவளம், பச்சைக் கல் மற்றும் சுடுமண் மணிகளாகும். மேலும், தந்தத்தால் ஆன சீப்பின் உடைந்த பகுதி, விளையாட்டுக் காய்கள், காதணிகள், செப்பு, எலும்பு முனைகள், இரும்பு உளிகள் போன்ற பொருட்கள் கிடைத்துள்ளன.

18%209majanKeezhadi%20Gold

தங்கத்தால் ஆன பழங்கால அணிகலன்கள்.

 

 

இணையதளத்தில் பதிவேற்றம்

மேலும், பதினான்கு தமிழ்பிராமி எழுத்துகளுடன் கூடிய பானையோடுகள் கிடைத்துள்ளன. இதில், ஒளிய(ன்) என்ற பெயருள்ள மட்பாண்ட ஓடு, ஓரிரு எழுத்துக்களுடய ஓடுகள் கிடைத்துள்ளன. இதில் ‘……ணிஇய் கிதுவரன் வேய்இய்’ என்ற 12 எழுத்துகளுடைய ஓடும் கிடைத்துள்ளது.

சதுர மற்றும் வட்ட வடிவிலான தேய்ந்த செப்புக் காசுகள், ஐந்து தங்கத்தால் ஆன ஓரிரு அணிகலன்கள், சுடுமண் உருவ பொம்மைகள் கிடைத்துள்ளன.

ஆவணப்படுத்தப் பட்டுள்ள அனைத்து தொல்பொருட்களும் National Mission on Monuments and Antiquities என்ற அமைப்பின் அதிகாரபூர்வ

18%209majanKeezhadi%20Kannadi%20manigal

பல வகையான கண்ணாடி மணிகள்.

இணையதளமான http://nmma.nic.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய அனுப்பப்படும். மேலும், கரிம பகுப்பாய்வுக்கும் அனுப்பி இவற்றின் காலம் கணக்கிடப்படும்.

 

நான்காம் கட்ட அகழாய்வு

வரும் செப்டம்பர் 30-ம் தேதியுடன் மூன்றாம் கட்டப் பணிகள் நிறைவடையும். நான்காம் ஆண்டு அகழாய்வு மேற்கொள்ள தமிழக தொல்லியல் துறையின் மூலமாக வரைவுத் திட்டம் தயாரிக்கப்பட்டு, மத்திய தொல்லியல் ஆலோசனைக் குழுவுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதனை பரிசீலித்து இந்தியத் தொல்லியல் துறை நான்காம் கட்ட அகழாய்வு குறித்து விரைவில் அறிவிப்பு வெளியிடும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

http://tamil.thehindu.com/tamilnadu/article19707205.ece?homepage=true

Link to comment
Share on other sites

கீழடி அகழ்வாராய்ச்சி நிறுத்தமா?! தீர்ப்பு என்னவாகும்?

பாலமுருகன். தெ வி.சதிஷ்குமார்

சிவகங்கை மாவட்டம் கீழடியில், மூன்று மாதங்களுக்கு முன் மூன்றாம்கட்ட அகழாய்வுப் பணி தொடங்கியது. இந்த ஆய்வுப் பணி, இம்மாதம் 30-ம் தேதியோடு முடிவடைகிறது. இந்நிலையில், கீழடி குறித்த வழக்கு, சென்னை உயர் நீதிமன்றம் மதுரைக் கிளையில் விசாரணையில் இருக்கிறது. முந்தைய தொல்லியல் கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் மாற்றப்பட்டது குறித்தும், `கீழடியில் எடுக்கப்பட்ட பொருள்களை இங்கேயே வைத்து மியூசியம் அமைக்க முடியுமா?' என்பது குறித்தும் நீதிபதிகள் கேள்வி எழுப்பியிருந்தனர். இந்த வழக்கு, இம்மாதம் 21-ம் தேதி (நாளை) நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வரவிருக்கிறது. இந்நிலையில் நீதிபதிகள் கீழடிக்கு வருவதாக திடீர்  தகவல் கிடைத்தது. “கீழடியில் இதுக்குமேல் ஒன்றும் இல்லை. மனிதர்கள் குடும்பமாக வாழ்ந்ததற்கு எந்த அடையாளமும் இல்லை. தொழிற்சாலைகள் இருந்திருக்கலாம்” என்று  சொல்லி, மூடத் தயாராகிவிட்டார் கீழடி தொல்லியல் துறையின் கண்காணிப்பாளர் ஸ்ரீராம்.

கீழடி

நீதிபதிகள் சதீஸ்குமார், சுந்தரேசன் ஆகியோர் கீழடியைப் பார்வையிட்டார்கள். அப்போது நீதிபதிகள் தொல்லியல் துறை அதிகாரிகளிடம் “இங்கு, அருங்காட்சியகம் அமைக்க முடியுமா? அப்படி  அமைப்பதில் பல்வேறு சிக்கல்கள் இருக்கின்றன. திருட்டுச் சம்பவங்கள் நடக்க வாய்ப்பு இருக்கிறது. இதற்கென பணியாளர்கள் நியமிக்கப்பட வேண்டும். ஆகையால், பராமரிப்பது கடினம். அதே நேரத்தில் இது அரசாங்கம் முடிவு பண்ணவேண்டிய விஷயம்'' என்றவரிடம், நீதிபதிகள் “இங்கு உள்ள பொருள்கள் எவ்வளவு வருடங்கள் பழைமையானவை?” என்று கேட்டார்கள். “ஒவ்வொரு லேயருக்கும் ஆண்டுகள் கணக்கிடப்பட்டுள்ளன. இங்கு உள்ள பானைகள் ஐந்நூறு ஆண்டுகளுக்குமேல் பழைமைவாய்ந்ததாக இருக்கலாம்” என்றார் அந்த அதிகாரி. 

கீழடி

மேலும், நீதிபதிகள் “என்னென்ன பொருள்கள் கிடைத்திருக்கின்றன?” என்று கேட்டார்கள். “இங்கு அதிக அளவில் பாசிமணிகள் கிடைத்திருக்கின்றன. தங்கம், செப்பு, உறைகிணறு, தந்தத்தால் ஆன சீப் போன்றவை கிடைத்திருக்கின்றன. பிராமி, தேவநாகரி எல்லாம் தமிழுக்குப் பிறகே உருவாகியிருக்கின்றன. மதுரையைச் சுற்றி தமிழ் எழுத்துகள் மேட்டுப்பட்டி, அரிட்டாபட்டி மாங்குளம் போன்ற ஏரியாக்களில் அதிகம் காணப்படுவதோடு, தென்னிந்தியாவில் மிக அதிக அளவில் தமிழ் எழுத்துகள் கிடைத்திருக்கின்றன” என்றார் ஸ்ரீராம். 

கீழடி அகழ்வராய்ச்சிக்கு முதல் மற்றும் இரண்டாம்கட்ட ஆய்வுப் பணிக்கு இடம் கொடுத்த விவசாயி சந்திரன், நீதிபதிகள் திரும்பிச் செல்லும்போது குறுக்கிட்டு, “அய்யா, நான் இந்த அகழ்வாராய்ச்சிக்கு நிலம் கொடுத்த விவசாயிகள்ல ஒருவன். எங்களை இந்த அதிகாரி தரக்குறைவாகப்  பேசுகிறார். விவசாயிகளையும் தொழிலாளர்களையும் மரியாதை குறைவாக நடத்துகிறார். இதே அதிகாரி நீடித்தால் நாங்கள் யாரும் அகழ்வராய்ச்சிக்கு நிலம் கொடுக்க மாட்டோம். எனவே, பழைய அதிகாரி அமர்நாத் வந்தால் மட்டுமே ஆராய்ச்சிக்கு நிலம் கொடுப்போம்” என்று தெரிவித்த விவசாயி சந்திரன், “அய்யா, இந்த அகழ்வாராய்ச்சியை நிறுத்தக் கூடாது. இது எங்களுக்குப் பெருமையான விஷயம்” என்றார்.

கீழடி

கீழடி  அகழ்வாராய்ச்சிக்கு இடம் கொடுத்த விவசாயிகளில் ஒருவரான சந்திரனிடம் பேசினோம்...

“எங்களுக்கு வழங்கப்பட்ட கூலியில், மோசடி செய்யப்பட்டது. நிலம் கொடுத்தவர்களுக்கு மரியாதை இல்லை. ஸ்ரீராம் எங்களை அதிகார தோரணையில் மிரட்டுகிறார். இவருக்கு அகழ்வராய்ச்சி தொடர்ந்து நடைபெற வேண்டும் என்ற எண்ணமே இல்லை. கீழடிக்கு எப்படியாவது மூடு விழா நடத்த வேண்டும் என்பதற்காகவே இப்படி நடந்துகொள்கிறார். அரசாங்கம் கொடுத்த நிதியில் பெரும்பான்மையான அளவை, அவரின் சொகுசான வாழ்க்கைக்குப் பயன்படுத்தியுள்ளார். இங்கு கண்டுபிடிக்கப்பட்ட பொருள்களை மறைத்திருக்கிறார். தங்கம் போன்ற பொருள்கள் கிடைத்திருப்பது கீழடியில்தான்.

அதிகாரி ஸ்ரீராம் வந்ததிலிருந்தே எடுக்கப்பட்ட பொருள்கள் மர்மமாகவே உள்ளன. ஆராய்ச்சியில் கிடைத்த பெரும்பான்மையான பொருள்கள் மறைக்கப்பட்டிருக்கின்றன என்பது மட்டும் உண்மை. ஏனென்றால், எடுக்கப்பட்ட பொருள்கள் பத்திரிகைகளுக்கோ பொதுமக்களுக்கோ காட்சிப்படுத்தவில்லை. விவசாயிகள், நிலம் கொடுக்கத் தயாராக இருக்கிறோம். ஆனால் அதிகாரி வேறு நபராக மக்களோடு மக்களாகப் பழகக்கூடியவராக இருக்கவேண்டும்” என்றார் விவசாயி சந்திரன்.

கீழடி தொல்லியல் துறை அதிகாரி ஸ்ரீராம் பேசும்போது, “நான்காம்கட்ட ஆய்வுப் பணிகள்குறித்து மத்திய தொல்லியல் துறைக்கு அறிக்கை அனுப்பியிருக்கிறோம். மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்து, பணியைத் தொடர தொல்லியல் துறை அனுமதி வழங்கிய பிறகு மீண்டும் பணி தொடரும்” என்றார்.

http://www.vikatan.com/news/tamilnadu/102804-what-is-the-judgement-of-keezhadi-excavation.html

Link to comment
Share on other sites

“கீழடி அகழாய்வு திசை திருப்பப்படுவதை முறியடிப்போம்..!” - எழுத்தாளர் சு.வெங்கடேசன்!

 
 

கீழடி

''திராவிட நாகரிகத்தின் மிக முக்கிய அடையாளம் கீழடி. உலகின் மிகச் சிறப்புமிக்க இலக்கியத் தொகுதிகளில் ஒன்றான சங்க இலக்கியம் சொல்லும் மனித வாழ்வின் வளமையை நிரூபிக்கும் ஆதாரம். கீழடியைப் பாதுகாப்பது, அதன் ஆய்வினை அறிவியல்பூர்வமாக முன்னெடுத்துச் செல்வது மிக முக்கியம். ஸ்ரீராமன் போன்ற ஆய்வாளர்கள் ஆய்வினைத் திசை திருப்பும் வேலையைச் செய்து முடிப்பார்கள் என்பது நிரூபிக்கப்பட்டுவிட்டது. அதை அனுமதிக்கக் கூடாது'' என்று சாகித்ய அகாடமி விருதுபெற்ற எழுத்தாளர் சு.வெங்கடேசன் வலியுறுத்தியுள்ளார்.

சு.வெங்கடேசன்கீழடி மூன்றாம்கட்ட ஆய்வுக்காலம் செப்டம்பர் 30-ம் தேதியுடன் முடிவடைகிறது. இந்த ஆய்வில் உருப்படியாக எதுவும் கிடைக்கவில்லை என்று அகழாய்வுப் பணி இயக்குநர் பு.சு.ஸ்ரீ ராமன் கடந்த ஞாயிற்றுக்கிழமை அறிக்கை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து, வரலாற்று ஆய்வாளரும், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் -கலைஞர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளருமான சு.வெங்கடேசனிடம் கேட்ட கேள்விகளும் அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு: 

''கீழடியில் மூன்றாம்கட்ட அகழாய்வின் முடிவுகளை அதன் பொறுப்பாளர் பு.சு.ஸ்ரீராமன் வெளியிட்டுள்ளாரே. இதுகுறித்து உங்கள் கருத்து?''

''மூன்றாம்கட்ட அகழாய்வு தொடங்கப்பட்ட உடன் கீழடி அகழாய்வு மையம் ராணுவ முகாம்போல மாற்றப்பட்டது. அங்கு என்ன நடக்கிறது என்று எந்தவிதமான தகவல்களையும் ஊடகங்களுக்கும், பார்வையாளர்களுக்கும் தெரிவிக்கவில்லை. மேலும், 'இவ்விடத்தில் (கீழடியில்) கட்டடங்கள் தொடர்ச்சியாகவோ அல்லது பரவலாகவோ கட்டப்பெறவில்லை என்று தெரியவருகிறது' என்ற முடிவினை பு.சு.ஸ்ரீராமன் தெரிவித்துள்ளார். மத்திய ஆட்சியாளர்கள் எதிர்பார்த்ததுபோல கீழடி அகழாய்வை இழுத்துமூடவேண்டிய வாசகத்தை ஸ்ரீராமன் எழுதி முடித்துள்ளார்''.

“இந்த ஆண்டு நடந்த ஆய்வினைப் பற்றிய உங்களின் கருத்து என்ன..?”

“மூன்றாம் ஆண்டு அகழாய்வுக்கு அனுமதி மறுப்பு; பின்னர், ஆய்வின் தலைவர் அமர்நாத் ராமகிருஷ்ணன் இடமாற்றம் செய்யப்பட்டு ஸ்ரீராமன் நியமிக்கப்பட்டார். கடந்த இரண்டு ஆண்டுகளில் 2,500 சதுர மீட்டர் பரப்பளவில் அகழாய்வு நடந்தது. ஆனால், இந்த ஆண்டு வெறும் 400 சதுர மீட்டர் பரப்பளவு மட்டுமே ஆய்வு நடந்தது. கடந்த ஆண்டு அகழாய்வுப் பணியில் ஈடுபடுத்தப்பட்ட தொழிலாளர்களின் எண்ணிக்கை சராசரியாக 80-க்கும் மேல் இருந்தது. ஆனால், இந்த ஆண்டு அந்த எண்ணிக்கை 25-க்கும் மேல் இல்லை. எந்த ஒருநாளும் 80 பேர் பணியில் அமர்த்தப்படவில்லை. இது திட்டமிட்ட சூழ்ச்சி. ரூ. 25 லட்சம் நிதி ஒதுக்கப்பட்ட 2015-ம் ஆண்டில் 43 குழிகள் தோண்டப்பட்டன. ஆனால், ரூ. 40 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ள இந்த ஆண்டு 10 குழிகள் மட்டுமே தோண்டப்பட்டுள்ளன''.

கிழடி

“மழையின் குறுக்கீடும், இயற்கை இடர்பாடுகளும் அகழாய்வுக்கு இடையூறாக இருந்ததாக ஸ்ரீராமன் கூறியுள்ளாரே?''

''இதைவிட அபத்தமான காரணத்தை யாரும் சொல்ல முடியாது. அமர்நாத் ஆய்வு மேற்கொண்ட இரண்டு ஆண்டுகளும் கீழடியில் மழையே பொழியவில்லையா? இதே செப்டம்பர் மாதத்தில்தானே அவரும் ஆய்வை முடித்தார். உரிய எண்ணிக்கையில் பணியாளர்களை வேலைக்கு அமர்த்தாமல், திட்டமிட்டே வேலையை மந்தப்படுத்தும் செயல் முதல் நாளில் இருந்து நடைமுறையானதைக் கீழடியில் உள்ள அனைவரும் அறிவர். இதில், மிகுந்த கவலைக்குரிய விஷயம் என்னவென்றால் இவ்வாண்டு அகழாய்வு செய்யப்பட்ட ஒரு குழிகூட இயற்கை மண்படிமம் (கன்னி மண் – Virgin soil) வரை தோண்டப்படவில்லை. அதாவது, எந்த ஓர் அகழாய்வுக் குழியும் முழுமையடைவில்லை. ஒரு குழியைக்கூட முழுமையாகத் தோண்டாமல்தான் பல முடிவுகளை ஸ்ரீராமன் அறிவித்துள்ளார். கடந்த ஆண்டுகளில் இயற்கை மண் அடுக்குகளுக்குக் கீழே மணல் அடுக்குகளும் கண்டறியப்பட்டன. அதை வைத்துதான், 'வைகை நதி முதலில் இப்பகுதியில் ஓடியுள்ளது; பின்னர், நதியின் போக்கு மாறியவுடன் வளமிக்க வண்டல் மண் படிவம் தோன்றியுள்ளது; அந்த வளமிக்க மண்ணின் பரப்பில்தான் இந்நகரம் உருவாகியுள்ளது' என்று ஆய்வாளர்கள் கூறினர்''.

“ ‘இந்த ஆண்டு சேகரிக்கப்பட்ட கரித்துகள் மாதிரிகளைக் கரிமப் பகுப்பாய்வுக்கு உட்படுத்திக் காலநிர்ணயம் செய்யப்படும்’ என்று ஸ்ரீராமன் கூறியுள்ளாரே?”

“ஒரு குழிகூட இயற்கை மண்படிமம்வரை தோண்டப்படவில்லை என்பதை அவரே தெரிவித்துள்ளார். அப்படியிருக்கையில், அகழாய்வுக் குழியின் எந்த நிலையில் எடுக்கப்பட்ட கரிமத் துகளை மாதிரிக்கு அனுப்பப் போகிறார் என்ற கேள்வி எழுகிறது. குழியின் மேற்புறத்தில் இருக்கிற மாதிரிகளை அனுப்பிக் கால நிர்ணயத்தை மிக அருகில் கொண்டுவருவதற்கான வாய்ப்பு உள்ளது. இது மோசமான அணுகுமுறை. கடந்த ஆண்டு அமர்நாத் ராமகிருஷ்ணன் குழு, 20 மாதிரிகளைச் சேகரித்து ஆய்வுக்கு அனுப்ப மத்திய அரசிடம் அனுமதி கோரியது. ஆனால், மத்திய அரசு இரண்டு மாதிரிகளை ஆய்வு செய்ய அனுமதி கொடுத்தது. மீதமுள்ள பதினெட்டு மாதிரிகள் இன்னும் ஆய்வு செய்யப்படவில்லை. அதை ஆய்வுக்கு உட்படுத்தாமல் இந்த ஆண்டு ஸ்ரீராமன் குழு சேகரித்துள்ள மாதிரிகளை ஆய்வுக்கு அனுப்பக் கூடாது. தவறான கால நிர்ணயத்தை உருவாக்குவதற்கான வாய்ப்பை அனுமதிக்க முடியாது''.

“ ‘கடந்த ஆண்டு கண்டறியப்பட்ட கட்டுமானங்களின் தொடர்ச்சியோ அல்லது அதனுடன் தொடர்புடைய எவ்விதக் கூறுகளோ இவ்வாண்டு ஆய்வுசெய்த குழிகளில் கிடைக்கவில்லை’ என்று ஶ்ரீராமன் சொல்லியிருக்கிறாரே?”

“இவர்களின் நோக்கம் முழுமையாக வெளிப்பட்டு நிற்கும் இடம் இதுதான். கடந்த ஆண்டு மிக விரிந்த கட்டுமான அமைப்பு கண்டறியப்பட்டது. அது குடியிருப்பல்ல; தொழிற்கூடம், ஈனுலைகள், மூன்று விதமான வடிகால்கள், சதுரவடிவ தொட்டிகள், வட்டவடிவத் தொட்டிகள் எனப் பலவும் இருந்ததைப் பார்த்தோம். அந்தக் கட்டுமானத்தின் தொடர்ச்சி தென் திசை நோக்கிப் பூமிக்குள் போயிருந்தது. அதன் தொடர்ச்சியைக் கண்டறிய வேண்டும் என்றால், தென் திசையில் குழி அமைத்திருக்க வேண்டும். ஆனால் தென் திசையில் ஒரு குழிகூட அமைக்கப்படவில்லை. அதற்கு நேர் எதிராக வட திசையில்தான் இவ்வாண்டின் அனைத்துக் குழிகளும் தோண்டப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட கட்டுமானத்தின் பிற மூன்று பகுதிகளில் தோண்டாமல், கட்டுமானப் பகுதியின் தொடர்ச்சி இருக்கும் தென் திசையில் தோண்டாமல், கட்டுமானப் பகுதியின் தொடர்ச்சி இல்லாத பகுதியில் மட்டும் தோண்டியது ஏன் என்பதுதான் முக்கியமான கேள்வி? அது மட்டுமல்ல, முதலாமாண்டு ஆய்வு மூன்று இடங்களில் தோண்டப்பட்டது, இரண்டாமாண்டு ஆய்வு ஆறு இடங்களில் தோண்டப்பட்டது. ஆனால், இவ்விரு ஆண்டிலும் கிடைத்த நிதியைவிட இவ்வாண்டு அதிக நிதி ஒதுக்கப்பட்டும் ஒரே ஒரு இடத்தில் மட்டும் தோண்டப்பட்டது ஏன்?

ஆய்வு

100 ஏக்கர் பரப்பளவு கொண்ட அந்த மேட்டில் எவ்வளவோ இடங்கள் இருந்தும் இவர்கள் தோண்டவில்லை. கட்டடத்தின் தொடர்ச்சியற்ற அந்தக் குறிப்பிட்டஇடத்தில் மட்டுமே தோண்டியுள்ளனர். அங்கும் முழுமையாக இயற்கை மண்படிமம்வரை தோண்டவில்லை. இவ்விடத்தில் கட்டடங்கள் தொடர்ச்சியாகவோ அல்லது பரவலாகவோ கட்டப்பெறவில்லை என்று ஆய்வாளர் ஸ்ரீராமன் தெரிவித்துள்ளது என்ன நோக்கத்துக்காக இவர் நியமிக்கப்பட்டாரோ, அந்த நோக்கத்தை நிறைவேற்றியுள்ளார் என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது''.

“ ‘நீதிமன்ற அறிவுறுத்தலின்படி, அருங்காட்சியம் அமைத்தல், கட்டுமானங்களைப் பொதுப்பார்வைக்குக் கொண்டுவருதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படும்’ என்று ஸ்ரீராமன் கூறியுள்ளாரே?”

“கள அருங்காட்சியகம் அமைக்க இரண்டு ஏக்கர் நிலம் கடந்த மே மாதம் மாவட்ட நிர்வாகத்தால் தரப்பட்டுவிட்டது. ஆனால் இன்றுவரை, அதை ஏற்றுக்கொண்டு நிர்வாக நடவடிக்கையைக்கூட மத்திய அரசு செய்யவில்லை. அப்புறம் எங்கே இருந்து அருங்காட்சியம் அமைக்கப்படும்?.”

கீழடி

''அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?''

''திராவிட நாகரிகத்தின் மிகமுக்கிய அடையாளம் கீழடி. உலகின் மிகச் சிறப்புமிக்க இலக்கியத் தொகுதிகளில் ஒன்றான சங்க இலக்கியம் சொல்லும் மனித வாழ்வின் வளமையை நிரூபிக்கும் ஆதாரம். சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் கண்டறியப்பட்டுள்ள இத்தொல்லியல் மேடு என்பது நமது வரலாற்றுக்கு மிகமிக முக்கியமான இடம். இந்துத்துவா அரசியல் முழுவிசையோடு வரலாற்றின் கட்டமைப்புகளைக் குலைத்துப் போட்டுக்கொண்டிருக்கும் இன்றைய நிலையில் கீழடியைப் பாதுகாப்பது, அதன் ஆய்வை அறிவியல்பூர்வமாக முன்னெடுத்துச் செல்வது மிகமுக்கியம். தமிழகத்தில் உள்ள பலரும் சந்தேகப்பட்டதுபோலவே, இவ்வாண்டு அகழாய்வு என்பது அவர்களின் அரசியல் நோக்கத்தை நிறைவேற்றும் பகுதியாக அமைந்துள்ளதாகத்தான் பார்க்கிறோம். 

 

ஓர் அகழாய்வில் எதுவும் கிடைக்கவில்லை என்று நிரூபிக்க என்னனென்ன வழிகளுண்டோ அத்தனையும் இந்த ஆண்டு செய்து முடித்துள்ளனர். எனவே, மிகுந்த விழிப்பு உணர்வோடு இதனை அணுகவேண்டும். அகழாய்வு தொடர வேண்டும் என்பதைவிடத் திசை திருப்பவிடக் கூடாது என்பதிலும் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஸ்ரீராமன் போன்ற ஆய்வாளர்கள் ஆய்வினைத் திசை திருப்பும் வேலையைச் செய்து முடிப்பார்கள் என்பது நிரூபிக்கப்பட்டுவிட்டது. அதை அனுமதிக்கக் கூடாது''.

http://www.vikatan.com/news/tamilnadu/102962-sriram-claims-on-keezhadi-are-false-says-writer-svenkatesan.html

Link to comment
Share on other sites

கீழடியில் 4-ம் கட்ட  அகழாய்வுக்கு 2 வாரத்தில் அனுமதி! மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

 
 
 
 
 

mdu_high_arun_14546.jpg

 

சென்னையைச் சேர்ந்த கனிமொழிமதி என்பவர்  உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்தார்.  அந்த மனுவில், ”மதுரையிலிருந்து 17 கிலோ மீட்டர் தொலைவில் சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெற்ற அகழாய்வில் 2000  ஆண்டு பழைமையான 5300 பழைமையான பொருள்கள் கண்டெடுக்கப்பட்டன.  இங்கு 110 ஏக்கர் அளவில் பழங்கால பொருள்கள், ஆவணங்கள் புதைந்துள்ளன. ஆனால், ஒரு ஏக்கர் பரப்பளவில்தான் ஆய்வுகள் நடைபெற்றுள்ளன. கீழடியில் அகழ்வாய்வுப் பணியை தொடரவும், பழங்கால பொருள்களை கீழடியிலேயே அருங்காட்சியகம் அமைத்து காட்சிப்படுத்தவும் உத்தரவிட வேண்டும்” என கூறியிருந்தார்.

இந்த வழக்கு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, ''கீழடியில் அகழாய்வு நடைபெற்ற இடத்தை மூடக்கூடாது. அகழாய்வுக்காக தோண்டப்பட்ட இடம் அப்படியே இருப்பதுதான் சிறப்பு. ஹரப்பா, மெகஞ்சதாரோவில் அகழாய்வு நடைபெற்ற இடம் மூடப்படாமல் தான் உள்ளது. அகழாய்வு நடைபெற்று வரும் இடங்களை தனியாருக்கு இழப்பீடு வழங்கி அரசு பெற நடவடிக்கை எடுக்கலாம்'' என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். மேலும், கடந்த 19-ம் தேதி நீதிபதிகள்  கீழடி சென்று நேரில் ஆய்வுசெய்தனர். அப்போது, அகழாய்வின்போது கண்டெடுக்கப்பட்ட பொருள்கள் குறித்தும் கைப்பற்றப்பட்ட பொருள்கள் எவ்வாறு பாதுகாக்கப்படுகின்றது என்பன குறித்தும் அகழாய்வு கண்காணிப்பாளரிடம் நீதிபதிகள் கேட்டறிந்தனர்.

பின்னர் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது கீழடி அகழாய்வு கண்காணிப்பாளர் ஸ்ரீராம் கூறுகையில், வரும் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் மழை அதிகமாக இருக்கும். மேலும், இங்கிருக்கும் நில உரிமையாளர்கள் நிலத்தை தர தாமதிப்பதாக கூறினார். அப்போது நீதிபதிகள், நிலத்தை தர மறுப்பவர்கள் யார். யார்? என்பதுகுறித்து நாளை தெரிவிக்க வேண்டும். 4-ம் கட்ட அகழாய்வை நடத்த மத்திய தொல்லியல் துறைக்கு அறிவுறுத்தி, மாநில தொல்லியல் துறையினருக்கு ஆய்வுநடத்த அனுமதி அளிக்க வேண்டும் என கூறியதோடு, அன்றைய தினம் விரிவான உத்தரவு  பிறப்பிப்பதாக தெரிவித்தனர்.

இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிபதிகள் சுந்தரேஷ், சதீஷ்குமார் அமர்வு முன்பு தொல்லியல்துறை கண்காணிப்பாளர் ஸ்ரீராம் ஆஜரானார். அப்போது நீதிபதிகள், " சமூக ஆர்வலர்கள், பேராசிரியர்கள் , தமிழக அரசு உள்ளிட்ட பலதரப்பினர் நான்காம் கட்ட அகழாய்வு தொடங்கவேண்டும் என விண்ணப்பித்துள்ளனர். வரும் நவம்பர், டிசம்பர் மழைக்காலங்களாக  இருந்தாலும் இங்கு முந்தைய அகழாய்வில் பழங்கால மற்றும் ரோமானிய பொருள்கள் கண்டெடுக்கப்பட்டதால் மிகவும் தொன்மையாக கருதப்படுகிறது. எனவே, அனுமதியை இரண்டுவார காலத்தில் வழங்க வேண்டும். மேலும் அதன் பணியை விரைவாக செயல்படுத்த வேண்டும் என அறிவுறுத்தியதோடு, வழக்கு விசாரணையை 3 வாரத்துக்கு ஒத்திவைத்தனர்.

http://www.vikatan.com/news/tamilnadu/103014-high-court-madurai-branch-orders-central-government-in-keezhadi-issue.html

Link to comment
Share on other sites

நீதி மன்ற உத்தரவு மகிழ்ச்சியை தருகின்றது

திராவிட நாகரிக்கத்தின் தொன்மையை நிரூபிக்கும் இந்த அகழ்வும் ஆராச்சியும் ஸ்ரீராம் எனும்  பார்ப்பனரை வைத்து இந்துத்துவா திசை திருப்பும் செயலை திராவிடக் கட்சிகள் என்று சொல்லிக் கொண்டு இருக்கும் கட்சிகள் ஏன் இன்னமும் தடுக்க முனையவில்லை.
திராவிடத்தை நிராகரிக்கும் சீமான் போன்றவர்களும்  தமிழர் நலனுக்காக இதை கண்டிக்க கூடாதா (அல்லது இது தொடர்பாக ஏதும் செயற்பாடுகளில் உள்ளார்களா ?)

 • Like 1
Link to comment
Share on other sites

 • 2 weeks later...

முடங்கிய கீழடி... நான்காம் கட்ட ஆய்வுக்காக காத்திருக்கும் சமூக ஆர்வலர்கள்!

 
 

FullSizeRender_19428.jpg

கீழடி அகழாய்வு ஆராய்ச்சி செப்டம்பர் 30-ம் தேதியோடு முடிவடைந்திருக்கிறது. தமிழர்களின் தொன்மையைக் கூறும் கீழடி ஆய்வு திட்டமிட்டே பாதியில் நிறுத்தப்பட்டிருப்பதாக பல தரப்பினரும் குற்றம் சாட்டி வருகின்றனர். தமிழர்களின் நாகரீகத்தை, தொன்மையை இருட்டடிப்பு செய்வதாக தமிழ் ஆர்வலர்கள் ஒரு பக்கம் கவலை தெரிவித்திருக்கிறார்கள்.

 

சிவகங்கை மாவட்டம், கீழடி கிராமத்தில் தொல்லியல் துறை கடந்த 2015 - 2016-ம் ஆண்டு வரை நடத்திய அகழ்வாராய்ச்சியில் 2,500 ஆண்டுகள் பழமையான தமிழர்களின் நாகரீகம், 5000-த்துக்கும் மேற்பட்ட தொல் பொருள்கள் என முதல் மற்றும் இரண்டாம் கட்ட ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த அகழ்வாராய்ச்சியைக் கீழடி அகழாய்வுக்குழவின் தலைவராக இருந்த அமர்நாத் ராமகிருஷ்ணன் மிகுந்த ஆர்வத்துடனும் முழுமையாக இந்த ஆய்வை நடத்தி வந்தார். ஆனால், அமர்நாத் வேறு இடத்துக்கு மாற்றப்பட்டார். இதையடுத்து, புது அதிகாரி மூன்றாம் கட்ட ஆய்வை நடத்தினார். அந்த மூன்றாம் கட்ட ஆய்வுதான் கடந்த 30-ம் தேதி முடிவடைந்தது.

 

மூன்றாம் கட்ட ஆய்வுப் பணிகள் முடிவடைந்துள்ள நிலையில், நான்காம் கட்ட ஆய்வு நடக்குமா? நடக்காதா? என்கிற எண்ணம் சமூக ஆர்வலர்களிடையே உதித்துள்ளது. '110 ஏக்கரிலும் ஆய்வு செய்யப்பட வேண்டும். மக்களோடு மக்களாக இருக்கும் அதிகாரி வரவேண்டும். அப்போது தான் நாங்கள் நிலம் கொடுப்போம்' என்று விவசாயிகள் ஒரு பக்கம் கோரிக்கை வைத்துவருகிறார்கள்.

http://www.vikatan.com/news/tamilnadu/103806-third-level-keeladi-excavations-ends.html

Link to comment
Share on other sites


 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Similar Content

 • Topics

 • Posts

  • தொழிற்சங்க தலைவர்களுக்கு கட்டாய விடுமுறை! எரிபொருள் விநியோகத்திற்கு இடையூறு விளைவித்த தொழிற்சங்க தலைவர்கள் மற்றும் ஊழியர்களுக்கு கட்டாய விடுமுறை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெட்ரோலியக் கூட்டுத்தாபன வளாகம் மற்றும் பெட்ரோலியக் களஞ்சிய முனையங்கள் ஆகியவற்றினுள் பிரவேசிப்பதற்கும் குறித்த தொழிற்சங்க தலைவர்கள் மற்றும் ஊழியர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏனைய அனைத்து அதிகாரிகளும் கடமைக்கு சமூகமளித்து, எரிபொருள் விநியோகம் மற்றும் ஏனைய கடமைகளை முன்னெடுக்குமாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2023/1328841
  • சர்வதேச நாணய நிதிய கடன் என்பது பயங்கரமானது – அனுர தரப்பு! சர்வதேச நாணய நிதிய கடன் என்பது பயங்கரமானது என ஜே.வி.பியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துனெத்தி தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கிடைத்த கடனை சிலர் புதையல் கிடைத்துவிட்டதுபோல கருதுகின்றனர். சர்வதேச நாணய நிதிய கடன் என்பது பயங்கரமானது. இந்த உண்மை தெரிந்திருந்தால் பட்டாசு கொளுத்தியிருக்கமாட்டார்கள். சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை ஏற்ற எந்தவொரு நாடும் முன்னேறியது கிடையாது. பணவீக்கம் அதிகரிப்பு, கடனை மீள செலுத்தமுடியாமை உள்ளிட்ட விடயங்களால் பாதிக்கப்பட்டடிருந்த நாடொன்று சர்வதேச நாணய நிதிய கடனால் எங்கும் மீண்டுள்ளதா? நாடொன்று தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் முன்வைத்துள்ள மிக மோசமான நிபந்தனைகளே, இலங்கை விடயத்தில் முன்வைக்கப்பட்டுள்ளன.“ எனத் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2023/1328838
  • போராடும் உரிமையை சீர்குலைத்த பல நாடுகளில் இலங்கையும் ஒன்று – சர்வதேச மன்னிப்புச் சபை மக்களின் போராடும் உரிமையை சீர்குலைத்த பல நாடுகளில் இலங்கையும் ஒன்று என சர்வதேச மன்னிப்புச் சபையின் மனித உரிமைகள் தாக்கத்திற்கான சிரேஷ்ட பணிப்பாளர் டிப்ரஸ் முச்சென் தெரிவித்தார். இன்று கொழும்பில் சர்வதேச மன்னிப்புச் சபையின் வருடாந்த அறிக்கையை வெளியிட்டு அங்கு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவைப் பற்றிய விவாதத்தில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் என்றும் டிப்ரஸ் முச்சென் வலியுறுத்தியுள்ளார். எந்த ஒரு உதவி பொறிமுறையும் மனித உரிமைகளைக் குறைக்கக் கூடாது என்பதால் சமூகப் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடி மற்றும் மனித உரிமைகள் நிலைமையைக் கருத்தில் கொண்டு அவசரத் தேவையை முன்னிலைப்படுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என டிப்ரஸ் முச்சென் கூறியுள்ளார். https://athavannews.com/2023/1328780
  • அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி !! பொதுச்செயலாளர் தேர்தல் முடிவை வெளியிட விதிக்கப்பட்ட தடையை உயர்நீதிமன்றம் நீக்கியதையடுத்து, அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்றுள்ளார். கடந்த ஆண்டு ஜூலை 11ஆம் திகதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தெரிவு செய்யப்பட்டார். இதன்போது முன்னாள் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர். இந்நிலையில் பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து பன்னீர்செல்வம் மற்றும் ஆதரவாளர்களால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் பொதுச் செயலாளர் முடிவுக்கு தடை விதித்திருந்தது. இருப்பினும் இன்றய விசாரணையின் போது கட்சிக்கு புதிய நிர்வாகிகளை நியமித்து வெளியிடப்பட்ட தீர்மானங்களுக்கு தடை விதிக்க முடியாது என நீதிமன்றம் அறிவித்தது. எவ்வாறாயினும் குறித்த தீர்ப்பை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் இன்று உடனடியாக மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில் குறித்த மனு நாளை விசாரணைக்கு வரவுள்ளது. https://athavannews.com/2023/1328797
  • சீன எல்லை அருகே 37 வீதிகளை அமைக்க மத்திய அரசு திட்டம்! சீன எல்லை அருகே 875 கிலோ மீட்டர் நீளம் கொண்ட மேலும் 37 வீதிகளை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ICBR எனப்படும் இந்திய- சீன எல்லைச் வீதிகள் அமைக்கும் பணிகள் லடாக், இமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட், சிக்கிம் மற்றும் அருணாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் நடந்து வருகின்றன. இந்நிலையில் சமீபத்தில் நடந்த 3ஆம் கட்டப் பணிகளுக்கான உயர்மட்டக் கூட்டத்தில், 13 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய வீதிகள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தச் வீதிகளில் கிட்டத்தட்ட 70 விழுக்காடு அருணாச்சலப்பிரதேச மாநிலத்தில் அமையவுள்ளமை குறிப்பிடத்தக்கது https://athavannews.com/2023/1328754
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.