Jump to content

கீழடி அகழாய்வும் தமிழர் நாகரீகமும் வரலாறும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டெழும் தமிழர் வரலாறு : 10 ஆயிரம் ஆண்டுகளாய் மண் மூடிக் கிடக்கும் பேரற்புதம்!! 

  • Like 1
Link to comment
Share on other sites

  • Replies 202
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்

பலத்த மழையால் கீழடி அகழாய்வுப் பணி நிறுத்தம்: திருப்புவனத்தில் 108.4 மி.மீ., மழைப்பதிவு

keeladi-excavation-stopped-due-to-heavy-rains

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பகுதியில் பெய்த பலத்த மழையால் கீழடியில் அகழாய்வு பணி நிறுத்தப்பட்டது. திருப்புவனத்தில் அதிகபட்சம் 108.4 மி.மீ., மழைப் பதிவாகியுள்ளது.

திருப்புவனம் அருகே கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய இடங்களில் பிப்.19-ம் தேதி ஆறாம் கட்ட அகழாய்வு பணியை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.

முதற்கட்டமாக கீழடி, கொந்தகை, அகரம் ஆகிய மூன்று இடங்களில் மட்டுமே குழிகள் தோண்டப்பட்டன. மணலூரில் பணிகள் தொடங்கவில்லை. மேலும் ஊரடங்கால் மார்ச் 24-ம் தேதி அகழாய்வு பணியை தொல்லியல்துறை நிறுத்தியது.

இந்நிலையில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்வு செய்யப்பட்டநிலையில் மே 20-ம் தேதி மீண்டும் கீழடி, அகரத்தில் அகழாய்வு பணி தொடங்கியது. தொடர்ந்து மே 23-ம் தேதி மணலூரிலும் பணிகள் தொடங்கின. மே 27-ம் தேதி கொந்தகையில் பணி தொடங்கியது. ஊழியர்கள் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் பணி செய்து வந்தனர்.

15907527252027.jpg

இந்நிலையில் நேற்று மாலை பெய்த பலத்த மழையால் கீழடி, அகரம், மணலூர், கொந்தகை அகழாய்வு நடந்த இடங்களில் தண்ணீர் புகுந்தது. கீழடியில் தார்பாய் மூடியும் குழிகள் நிரம்பின. இதையடுத்து 4 இடங்களிலும் அகழாய்வு பணிகள் நிறுத்தப்பட்டன.

‘மழைநீர் வற்றி, மண் காய்ந்த பிறகே மீண்டும் அகழாய்வுப் பணிகள் தொடங்கும்,’ என தொல்லியல்துறையினர் தெரிவித்தனர்.

மேலும் சிவகங்கை மாவட்டத்தில் திருப்புவனத்தில் அதிகபட்சமாக 108.4 மி.மீ., மழை பதிவானது. சிவகங்கையில் 43 மி.மீ., மானாமதுரையில் 19, இளையான்குடியில் 31, தேவகோட்டையில் 16.6, காரைக்குடியில் 18.4, திருப்பத்தூரில் 18, காளையார்கோவிலில் 78.8, சிங்கம்புணரியில் 5.2 மி.மீ., மொத்தம் 254.4 மி.மீ., மழை பதிவாகியுள்ளது.

https://www.hindutamil.in/news/tamilnadu/556932-keeladi-excavation-stopped-due-to-heavy-rains-1.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கீழடி - விலங்குகள் எலும்பு கூடுகள் கண்டெடுப்பு..👍

 

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கீழடியில் விலங்கின் எலும்பு கண்டெடுப்பு

animal-fossil-found-in-keezhadi-excavation திருப்புவனம் அருகே கீழடி அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட விலங்கின் எலும்பு.

திருப்புவனம்

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடியில் பிப்.19-ம் தேதி 6-ம் கட்ட அகழாய்வு தொடங்கியது. முதற்கட்டமாக கீழடி, கொந்தகை, அகரம் ஆகிய மூன்று இடங்களில் மட்டுமே குழிகள் தோண்டப்பட்டன. கரோனா ஊரடங்கால் மார்ச் 24-ல் அகழாய்வு பணியை தொல்லியல் துறை நிறுத்தியது.

ஊரடங்கு தளர்வால் மே 20-ம் தேதி மீண்டும் கீழடி, அகரத்தில் அகழாய்வுப் பணி தொடங்கியது. தொடர்ந்து மே 23-ல் முதல் முறையாக மணலூரிலும் பணி தொடங்கியது. மே 27-ல் கொந்தகையில் பணி தொடங்கியது

மே 28-ல் பெய்த பலத்த மழையால் அகழாய்வு நடந்த இடங்களில் தண்ணீர் புகுந்தது. இதனால், பணிகள் நிறுத்தப்பட்டன. தண்ணீர் வற்றிய நிலையில் சில தினங்களுக்கு முன் மீண்டும் பணிகள் தொடங்கின.

மணலூரில் தோண்டிய ஒரு குழியில் சுடு மண்ணால் ஆன உலையும், கீழடியில் விலங்கின் எலும்பும் கண்டெடுக்கப்பட்டன. இந்த எலும்பு ஏற்கெனவே கிடைத்த எலும்புத் துண்டுகளை விட பெரிதாக உள்ளது. முழு ஆய்வுக்குப் பிறகே அது எந்த விலங்கின் எலும்பு என்பது தெரியவரும் என தொல்லியல் ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

https://www.hindutamil.in/news/tamilnadu/557936-animal-fossil-found-in-keezhadi-excavation.html

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கீழடி அகழாய்வு: கொந்தகையில் கிடைத்த மண்டை ஓடு, எலும்புகள், நத்தை ஓடுகள், முதுமக்கள் தாழிகள்

மண்டை ஓடுகள்

 

சிவகங்கை மாவட்டம் கொந்தகையில் மண்டை ஒடுடன் எலும்புகள், நத்தை ஓடுகள் மற்றும் முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கபட்டுள்ளன.

சிவகங்கை மாவட்டம் கீழடியில் ஐந்தாம் கட்ட அகழாய்வுப் பணிகள் முடிவடைந்து ஆறாம் கட்ட அகழாய்வுப் பணிகள் கடந்த பிப்ரவரி மாதம் 19-ம் தேதி தொடங்கியது. ஆறாம் கட்ட அகழாய்வு கீழடி, அகரம், கொந்தகை, மணலூர் உள்ளிட்ட இடங்களில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு பணிகள் நடந்து வந்தன. கொரானோ வைரஸ் பரவல் காரணமாக கடந்த மார்ச் 24-ம் தேதி அகழாய்வு இடங்கள் அனைத்தும் மூடப்பட்டன.

மே 20ல் அகரம், கீழடியில் மீண்டும் பணிகள் தொடங்கப்பட்டது. மணலூரில் மே 22ம் தேதி, கொந்தகையில் 27ம் தேதி முதல் மீண்டும் அகழாய்வு பணிகள் தொடங்கப்பட்டு நடந்து வருகிறுது.

கொந்தகையில் நடந்த அகழாய்வில் நான்கு முதுமக்கள் தாழிகளும், ஆறு சிறிய மண்பானைகளும் கண்டறியப்பட்டதால், கொந்தகை பண்டைய காலத்தில் இடுகாடாக இருந்திருக்க கூடும், என மதுரை காமராசர் பல்கலை கழகம் மற்றும் உயிரியல் துறை இணைந்து நடத்திய ஆய்வில் தெரிய வந்தது.

கொந்தகையில் குறைந்த பட்சம் 15 ஏக்கர் பரப்பளவில் அகழாய்வு மேற்கொள்ள வேண்டும் என தொல்லியல் அலுவலர்கள் முடிவு செய்து அந்த பகுதியில் அகழாய்வு நடத்தி வரும் நிலையில் நேற்று (05.06.2020) அந்த இடத்தில் இருந்து 50 மீட்டர் தொலைவில் உள்ள கதிரேசன் என்பவரின் தோட்டத்தில் தென்னை கன்றுகள் நடுவதற்காக இயந்திரம் மூலம் குழிகள் தோண்டும் போது முதுமக்கள் தாழி முழு அளவில் கண்டறியப்பட்டது.

இதுகுறித்து நில உரிமையாளர் தொல்லியல் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார். தொல்லியல் துறை இணை இயக்குனர் சிவானந்தம் மற்றும் தொல்லியல் குழுவினர் உடனடியாக சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்று முதுமக்கள் தாழியை ஆய்வு செய்து தாழியினுள் இருந்த மண்டை ஓடு, எலும்புகள் உள்ளிட்டவைகளை பாதுகாப்பாக வெளியில் எடுத்தனர்.

பின்னர் அவை தொல்லியல் ஆய்வாளர்கள், மரபணு ஆய்வாளர்கள் ஆய்வுக்காக கொண்டு செல்லப்பட்டது

கீழடி Image captionகோப்புபடம்

பண்டைய காலத்தில் முதியோர்களை பராமரிக்க முடியாவிட்டால் பெரிய அளவிலான பானையினுள் அவர்களை வைத்து உணவு, தண்ணீருடன் மண்ணிற்குள் புதைக்கும் வழக்கம் இருந்துள்ளது. தற்து உணவு குவளை, தண்ணீர் பாத்திரம் உள்ளிட்டவற்றுடன் மண்டை ஓடு, எலும்புகள் கண்டறியப்பட்டது இதற்கு ஆதாரமாக கருதப்படுகிறது.

முதுமக்கள் தாழியில் இருந்து எடுக்கப்பட்ட எலும்புகள், மண்டை ஓடுகளை ஆய்வு செய்த பின்தான் இவற்றின் காலம் பற்றி அறிய முடியும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து கடந்த வியாழக்கிழமை சிவகங்கை மாவட்டம் அகரம் அகழாய்வில் அதிகமாக நத்தை கூடுகள் கண்டறியப்பட்டுள்ளன.

இது குறித்து ஆய்வாளர்கள் கூறுகையில், "நத்தைகளில் இருவகை உண்டு, நன்னீரில் வளரும் நத்தைகளை உணவாகவும், மருந்தாகவும் பயன்படுத்துவார்கள். கடல் நீர் நத்தைகளை அழகு பொருளாக மட்டுமே பயன்படுத்துவார்கள்.

அகரத்தில் கிடைத்த நத்தை கூடுகள் அனைத்துமே நன்னீர் நத்தை கூடுகள். பண்டைய தமிழர்கள் இயற்கையாக கிடைக்கும் பொருட்களை பயன்படுத்தி உடல் உபாதைகளுக்கு தீர்வு கண்டறிந்த நிலையில், நத்தைகளை மருத்துவ ரீதியாக பயன்படுத்தினார்களா அல்லது உணவு பொருளாக பயன்படுத்தினார்களா என்பது ஆய்வின் முடிவில்தான் தெரிய வரும்" என்று கூறப்பட்டுள்ளது.

தொல்லியல்

மேலும், தற்போது கிடைத்து வரும் நத்தைகளை அதன் அளவுக்கு ஏற்ப தரம் பிரித்து ஆவணப்படுத்தி வருகிறோம். முழுமையான அளவில் கிடைத்த நத்தைகளை ஆய்விற்கு அனுப்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"நத்தைகளை சமைத்து சாப்பிட்டால் சளி, இருமல் சிறு குழந்தைகளுக்கு உமிழ் நீர் வடிதல் உள்ளிட்ட பிரச்சனைகள் தீரும், ரத்தகட்டுக்கு நத்தையை அரைத்து ரத்தக்கட்டு உள்ள இடத்தில் வைத்து கட்டுப்போட்டால் விரைவில் குணமடையும். நத்தை ஓடுகள், மூலம் நோய்க்கு சிறந்த மருந்து. நத்தையின் சதை, விந்து எண்ணிக்கையை உயர்வடைய செய்யும் என்பதால், அகரத்தில் நடத்தப்பட்ட அகழாய்வில் தொடர்ச்சியாக நத்தை கூடுகள் கிடைத்திருப்பதால் அங்கு சமையல் கூடமாக இருக்க வாய்ப்புண்டு. தொடர்ச்சியான அகழாய்வு மூலம் இதன் பயன்பாடு தெரிய வரும்" என சித்த மருத்துவர் வெங்கட்ராமன் தெரிவிக்கிறார்.

 

https://www.bbc.com/tamil/arts-and-culture-52947537

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கீழடியில் மனித எலும்புகள்.! மரபணு சோதனை நடத்தப்படுமா.?

muthu-makkal-thazhi-e1528438103416.jpg

சிவகங்கை : கீழடியில் கண்டுபிடிக்கப்பட்ட மனித எலும்புகள் மரபணு சோதனை செய்யப்படுமா என்ற எதிர்பார்ப்பு சமூக ஆர்வலர்கள் மக்களிடையே எழுந்துள்ளது.

சிவகங்கை மாவட்டம் கீழடி ஆராய்ச்சி தொடர்ந்த கொந்தகை கிராமத்தில் கதிரேசனுக்கு சொந்தமான நிலத்தில் ஆறாம் கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. கொந்தகை கிராமத்தில் கதிரைசனக்கு சொந்தமான மற்றொரு நிலத்தில் இன்று காலை விவசாயத்திற்காக விவசாய பணிகள் நடைபெற்று கொண்டிருந்தது.

அங்கு தென்னங்கன்று காக தோண்டப்பட்ட குழியில் மனித எலும்புக்கூடு உள்ள தாழி பானை தென்பட்டதை கண்ட கதிரேசன் ஆய்வுப்பணி செய்துகொண்டிருந்த தொல்லியல் துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார்.

அதன்பேரில் தொல்லியல் துறையில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் கதிரேசனின் விவசாயம் நடந்த இடத்திற்கு வந்து ஆய்வு பணிகளை மேற்கொண்டனர் . அதில் பெரிய தாழி பானை ஒன்றும் சிறிய பானை ஒன்றும் இரண்டையும் மூடுவதற்கான இரண்டு தட்டுகள், சுடுமண்ணால் ஆன தட்டுகள், பெரிய பானைக்குள் மனித எலும்புக்கூடு உட்கார வைத்தது போல் இருந்தது.

ஆராய்ச்சியாளர்கள் பானைக்குள் இருந்த மனிதத் தலை ,கை கால்களுக்கான எலும்புகள் அனைத்தையும் ஆராய்ச்சிக்காக பாதுகாப்பாக எடுத்து வைத்தனர், இது எத்தனை ஆண்டுகளுக்கு முன்னால் இருந்தது என்பதை ஆராய்ச்சிக்கு பின் தான் தெரியவரும் என்று கூறினார்கள்.

ஏற்கனவே 5 ம் கட்ட ஆய்வு பணியின் போது எலும்புகள் கிடைத்தன. அது மாடுகளின் எழும்புகளாக இருக்கக் கூடும் என்று தெரிவிக்க ப்பட்டது. 6 ம் கட்ட ஆய்வின் போது சிறிய அளவில் எலும்பு கிடைத்தது. அது மிக நீண்ட முதுகெலும்பு வரிசைகளை கொண்டதாக இருந்தது. அதுவும் விலங்கின் எலும்பாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. கிடைத்த எலும்புகள் வைத்து மரபணு சோதனைகள் நடத்தப்படுமா ?  என்ற எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.

https://www.updatenews360.com/tamilnadu/sivagangai-archaeological-found-060620/

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கீழடி: வரைபடம் தயாராகிறது.

keezhadi-excavation-3.jpg

மதுரை: கடந்த பிப்ரவரி 19ஆம் தேதி முதல் கீழடியில் நடைபெற்று வரும் 6ஆம் கட்ட அகழாய்வு குறித்த வரை படத்தை தயாரிக்கும் பணி துவங்கியுள்ளதாக தொல்லியல் துறை தெரிவித்துள்ளது.

அகழாய்வுப் பணியின் போது பொருட்கள் கிடைத்த குழிகள் பற்றிய விவரங்கள் வரைபடத்தில் இடம்பெறும். குழியின் நீளம், அகலம், ஆழம், பொருட்கள் கிடைத்த இடங்களின் துாரம், பொருட்களின் அகலம், உயரம், எடை உட்பட அனைத்து அம்சங்களும் இடம்பெறும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

https://www.tamilmurasu.com.sg/tamilnadu/story20200609-45619.html

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

கீழடி: வரைபடம் தயாராகிறது.

keezhadi-excavation-3.jpg

அகழாய்வுப் பணியின் போது பொருட்கள் கிடைத்த குழிகள் பற்றிய விவரங்கள் வரைபடத்தில் இடம்பெறும். குழியின் நீளம், அகலம், ஆழம், பொருட்கள் கிடைத்த இடங்களின் துாரம், பொருட்களின் அகலம், உயரம், எடை உட்பட அனைத்து அம்சங்களும் இடம்பெறும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தரமான செயல்.👍🏼

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களின் வாழ்வியலில் புதிய வெளிச்சம் பாய்ச்சும் கீழடி அகழ்வாராய்ச்சி.!

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 4/6/2020 at 03:17, புரட்சிகர தமிழ்தேசியன் said:

கீழடி - விலங்குகள் எலும்பு கூடுகள் கண்டெடுப்பு..👍

 

மிகவும் மகிழ்ச்சியான செய்தி. இந்த விலங்கின் carbon dating பார்த்து எத்தனை ஆயிரம் வருடங்கள் என்று கணிக்கலாம். இந்த இடத்தில் மனித எலும்புக்கூடுகள் கிடைக்காத காரணம் இது நகர்ப்புற வீடுகள் என்றும் கொஞ்சம் தொலைவில் நிச்சயம் சுடலை இருக்கும் என்றும் அதனை கண்டுபிடித்தால் இன்னும் நிறய விடயங்களை அறியமுடியும் என்றும் வேறொரு செய்தியில் வாசித்தேன் 

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Keezhadi-Research.jpg

கீழடியில் 6ஆம் கட்ட அகழ்வில் பூந்தொட்டி வடிவில் 6 தொட்டிகள் கண்டுபிடிப்பு!

தமிழ் நாகரிகத்தின் சீராகக் கட்டமைக்கப்பட்ட தொன்மையை இன்னும் பின்னோக்கிக் கொண்டு செல்ல ஆதாரமாக விளங்கிய கீழடியில் ஆறாம் கட்ட அகழாய்வில் ஏராளமான தொல்பொருட்கள் கிடைத்து வருகின்றன. தற்போது பூந்தொட்டி வடிவில் 6 மண் தொட்டிகள் கண்டறியப்பட்டுள்ளன.

கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய 4 இடங்களில் 6ஆம் கட்ட அகழாய்வுப் பணிகள் தற்போது இடம்பெற்று வருகின்றன.

குறித்த பகுதிகளில் இதுவரை, முதுமக்கள் தாழிகள், மனித மற்றும் விலங்கு எலும்புக் கூடுகள், பாசி மணிகள், சங்கு வளையல்கள், அம்மிக் குளவி, கொள்கலன்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட தொன்மையான பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன.

இந்நிலையில் மணலுரில் 2 வாரங்களுக்கு முன்பு கண்டறியப்பட்ட மட்பாண்டங்களை சூடு செய்யப் பயன்படும் சுமார் ஒன்றரை மீட்டர் சுற்றளவிலான உலை கலனிலிருந்து பூந்தொட்டி வடிவில் 6 மண் தொட்டிகள் கண்டறியப்பட்டுள்ளன.

இவை தொழில் கூடங்களில் பயன்படுத்தப்பட்டவையா அல்லது வீட்டில் பயன்படுத்தப்பட்டவையா என தொல்லியல் துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.

இதேவேளை, கீழடியில் நடத்தப்பட்ட 4ஆம் கட்ட அகழாய்வின் முடிவுகள் வெளியானபோது தமிழகத்தில் கீழடியைத் தவிர வேறு ஒரு பேசுபொருள் இல்லாமல் போனது. குறிப்பாக, அதன்பிறகு 5ஆம் கட்ட அகழாய்வு முடிந்து இன்னும் முடிவுகள் வெளியிடப்படாத நிலையில், 6ஆம் கட்ட அகழாய்வுகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

http://athavannews.com/கீழடியில்-6ஆம்-கட்ட-அகழ்வ/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கீழடியில் அகழாய்வு பணி- புதிதாக 2 மண் பானைகள், மனித மண்டை ஓடு கண்டெடுப்பு.!

202006061104563827_Near-keezhadi-Human-s திருப்புவனம்:

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் யூனியனை சேர்ந்த கீழடியில் தற்போது 6-வது கட்ட அகழாய்வு பணி நடைபெற்று வருகிறது. இந்த பணி கீழடி மட்டுமின்றி அதன் அருகே உள்ள கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய 4 பகுதிகளிலும் நடைபெற்று வருகிறது.

 

கீழடியில் ஏற்கனவே தோண்டப்பட்ட குழிகளில் அகழாய்வு பணிகள் நடைபெற்றன. இதில் நேற்று 2 மண் பானைகள் கண்டெடுக்கப்பட்டன. இதுதவிர புதிதாக மீண்டும் ஒரு குழி தோண்டும் பணியும் நடைபெற்றது. கொந்தகையில் நடந்த பணியில் நேற்று புதிதாக மனித மண்டை ஓடு பாகங்கள் கிடைத்துள்ளன. மொத்தம் இதுவரை 12-க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழி கண்டெடுக்கப்பட்டன. ஒவ்வொரு முதுமக்கள் தாழியையும் மாநில தொல்லியல் துறை துணை இயக்குனர் சிவானந்தம் தலைமையில் தொல்லியல் அலுவலர் பாஸ்கரன் உள்ளிட்ட ஆய்வாளர்கள் ஆராய்ச்சி செய்து வருகின்றனர். இதுவரை 3 முதுமக்கள் தாழிகள் ஆய்வு செய்யப்பட்டு அதன் உள்ளே உள்ள மனித எலும்புகள் மற்றும் சிறிய பொருட்கள் எடுக்கப்பட்டன.

அகரத்தில் கவிழ்ந்த நிலையில் பானை மற்றும் அதன் அருகே உடைந்த நிலையில் மற்றொரு பானை, நத்தை ஓடுகள், சங்குவளையல்கள் உள்பட பல்வேறு பொருட்கள் கிடைத்துள்ளன. மணலூரில் சுடுமண் உலை, மண் திட்டு பகுதி ஆகியவை இருந்தது தெரியவந்தது.

எனவே 4 இடங்களிலும் கூடுதலாக குழிகள் தோண்டி அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது.

https://www.maalaimalar.com/news/district/2020/06/16070039/1617895/Keezhadi-Work-Earthenware-human-skull-found.vpf

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கீழடி அகரம் அகழாய்வில் கிடைத்த 17ஆம் நூற்றாண்டு தங்கக் காசு

கீழடி நாகரிகம்: ஆறாம் கட்ட அகழாய்வு

 

கீழடியிலும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளிலும் மாநில தொல்லியல் துறை நடத்திவரும் அகழாய்வில் அகரம் பகுதியில் 16 - 17ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த காசு கிடைத்துள்ளது.

அந்தப் பகுதி தொடர்ச்சியாக மக்கள் வாழ்ந்ததற்கான ஆதாரமாக இதனைக் கொள்ள முடியும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

கீழடியிலும் அதனை ஒட்டியுள்ள அகரம், கொந்தகை பகுதிகளிலும் மாநில தொல்லியல் துறை தற்போது அகழாய்வுகளை நடத்திவருகிறது. இது கீழடி பகுதியில் நடந்துவரும் ஆறாவது கட்ட அகழாய்வாகும்.

இதில் கொந்தகை பகுதி ஈமக் குழிகள் அமைந்த பகுதியாக அடையாளம் காணப்பட்டுள்ளது. அகரம் பகுதி மக்கள் வாழ்ந்த பகுதியாக அடையாளம் காணப்பட்டிருக்கிறது.

இந்த அகரம் பகுதியில் நடந்த அகழாய்வில் தங்கக் காசு ஒன்று கண்டெடுக்கப்பட்டது. இந்த நாணயம் ஒரு சென்டிமீட்டர் அளவுடையதாகவும் 300 மில்லி கிராம் எடையும் கொண்டிருக்கிறது.

Tamil Nadu State Department of Archaeologyபடத்தின் காப்புரிமைTAMIL NADU STATE DEPARTMENT OF ARCHAEOLOGY

நாணயத்தின் முன் பக்கத்தில் நாமம் போன்றும் நடுவில் சூரியனும் அதன் கீழே சிங்க உருவமும் காணப்படுகின்றன. பின் பக்கம் 12 புள்ளிகளும் அதன் கீழ் இரண்டு கால் மற்றும் இரண்டு கைகளுடன் கூடிய உருவமும் காணப்படுகின்றது.

இந்த வகை காசுகள் 17ஆம் நூற்றாண்டில் புழக்கத்தில் இருந்துள்ள காசுகள் என்றும் இவை வீரராயன் பணம் என்று அழைக்கப்படுவதாகவும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

"இம்மாதிரி காசுகள் தமிழ்நாடு மட்டுமல்ல தென்னிந்தியா முழுவதும் கிடைக்கின்றன. ஆனால் ஒவ்வொரு பகுதிக்கும் சில மாறுபாடுகள் இருக்கும். தமிழ்நாட்டில் எங்காவது தங்கப் புதையல் கிடைக்கும்போது எடுக்கப்படும் காசுகளில் பெரும்பாலானவை இந்த வீரராயன் காசுகள்தான்" என்கிறார் நாணய சேகரிப்பாளரான மன்னர் மன்னன்.

Tamil Nadu State Department of Archaeologyபடத்தின் காப்புரிமைTAMIL NADU STATE DEPARTMENT OF ARCHAEOLOGY

"இந்தக் காசுகளை தனியாக எந்த ஒரு மன்னரும் வெளியிட்டார் எனச் சொல்ல முடியாது. இது தமிழ்நாடு பல பாளையங்களாகப் பிரிக்கப்பட்டிருந்த காலத்தில் வெளியிடப்பட்ட காசு" என்கிறார் ஆய்வாளர் பழங்காசு சீனிவாசன்.

"தற்போது அகரம் பகுதியில் 11ஆம் நூற்றாண்டு காலம்வரை தோண்டப்பட்டிருக்கிறது. தற்போது கிடைத்திருக்கும் காசு 17ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. ஆகவே இந்தப் பகுதியில் தொடர்ச்சியாக மக்கள் வாழ்ந்திருப்பதை அறியலாம்," என்கிறார் அங்கு தொல்லியல் பணியை மேற்கொண்டிருக்கும் தமிழக தொல்லியல் துறையின் துணை இயக்குனர் டி. சிவானந்தம் தெரிவித்தார்.

தற்போது கீழடி, கொந்தகை, அகரம் பகுதிகளில் அகழாய்வுப் பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.

 

https://www.bbc.com/tamil/india-53076219

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் வரலாறு: கீழடி கொந்தகை அகழாய்வில் கிடைத்த குழந்தையின் எலும்புக்கூடு

  • ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
 
Keeladi Excavationபடத்தின் காப்புரிமை https://tnarch.gov.in/keeladi Image caption கொந்தகை, மணலூர், அகரம், கீழடி ஆகிய இடங்களில் இப்போது ஆறாம் கட்ட அகழாய்வு நடந்து வருகிறது. (கோப்புப்படம்)

கீழடி அகழாய்வின் ஒரு பகுதியாக உள்ள கொந்தகையில் குழந்தை ஒன்றின் முழு அளவிலான எலும்புக்கூடு முதன் முறையாக கண்டெடுக்கப்பட்டுள்ளது.

கீழடி அகழாய்வுத் திட்டத்தின் ஆறாம் கட்ட அகழாய்வு கொந்தகை, மணலூர், அகரம், கீழடி ஆகிய நான்கு இடங்களில் 40 லட்சம் ரூபாய் செலவில் தொடங்கப்பட்டு கடந்த பிப்ரவரி 19ஆம் தேதி முதல் நடந்து வருகிறது.

ஏற்கனவே கொந்தகையில் சுரேஷ் என்பவரது நிலத்தில் நான்கு குழிகள் தோண்டப்பட்டு 10 முதுமக்கள் தாழிகள் கண்டறியப்பட்டன. இதில் மூன்று தாழிகளில் உள்ள எலும்புகள் வெளியே எடுக்கப்பட்டு மரபணு சோதனைக்காக அனுப்பட்டுள்ளன.

நேற்று, வியாழக்கிழமை கொந்தகையில் மேலும் ஒரு குழி தோண்டப்பட்டு அகழாய்வு நடந்தது. இதில் இரண்டு முதுமக்கள் தாழிகள் கண்டறியப்பட்டன.

இன்று, வெள்ளிக்கிழமை காலையில் நடந்த அகழாய்வில் குழந்தையின் எலும்புக்கூடு ஒன்று முழு அளவில் கிடைத்துள்ளது. கொந்தகை ஈமக்காடாக இருந்த இடம் என்பதால் முதுமக்கள் தாழிகள் கொந்தகையில் அதிகளவில் கிடைத்து வருகின்றன.

இது குறித்து கொந்தகை அகழாய்வு பணியில் ஈடுபட்டு வரும் தொல்லியல் ஆய்வாளர் ஒருவர் பிபிசி தமிழிடம் பேசினார்.

கீழடி அகழாய்வு தமிழர் வரலாறுபடத்தின் காப்புரிமை Tamil Nadu State Department of Archaeology Image caption இந்த எலும்புக்கூடு ஆண் குழந்தையுடையதா, பெண் குழந்தையுடையதா என்று தெரியவில்லை.

"இன்று கொந்தகை அகழாய்வின்போது குழந்தையின் எலும்புக்கூடு முழு அளவில் கிடைத்துள்ளது.

பெருங்கற்காலத்தில் இறந்தவர்களை மூன்று வெவ்வேறு வழிமுறைகளில் புதைக்கும் வழக்கம் இருந்தது. பூமியில் போட்டு மூடுவது, பள்ளம் தோண்டிப் புதைப்பது, தாழியில் வைத்துப் புதைப்பது ஆகிய வழக்கங்கள் இருந்தன. இன்று கொந்தகையில் கிடைத்துள்ள குழந்தையின் உடல் முதல் வழிமுறையில் புதைக்கப்பட்டது. ஏனனில், இன்று கிடைத்துள்ள குழந்தையின் எலும்புக்கூடு இருந்த பகுதியில் மணல் மிகவும் தளர்வாக இருந்தது, " என அவர் தெரிவித்தார்.

கொந்தகையில் கிடைத்துள்ள எலும்புக்கூட்டின் உயரம் 75 சென்டி மீட்டராக உள்ளது. ஆனால், அது ஆணா, பெண்ணா என்பது குறித்த தெரியவில்லை. பொதுவாக இடுப்பு எழும்பு 'V' வடிவத்தில் இருந்தால் அது ஆண். எலும்பு 'U' வடிவத்தில் இருந்தால் பெண். ஆனால் இந்த எலும்புக் கூட்டில் இடுப்பு எலும்புப் பகுதி சேதமாகியுள்ளதால் வடிவம் சரியாகத் தெரியவில்லை. அகழாய்வில் கிடைத்துள்ள எலும்புக்கூடு உயரம் 75 செ.மீ என்பதால் அது குழந்தையின் எலும்புக்கூடாகத்தான் இருக்கும். ஆனால், குழந்தை இறந்தபோது என்ன வயது என்பது தெரியவில்லை, என அவர் மேலும் தெரிவித்தார்.

தற்போது கிடைத்துள்ள மனித எலும்புக்கூட்டை கருப்பு கவரால் குளிக்குள் மூடி வைக்கப்பட்டுள்ளது. நாளை அல்லது நாளை மறு நாள் குழியில் இருந்து எலும்புக்கூடு எடுக்கப்பட்டு அதில் இருந்து தேவைப்படும் எலும்புகளை மரபணு சோதனைக்காக மதுரை காமராஜர் பல்கலைக்கழக உயிரியல் துறையிடம் ஒப்படைக்கப்டும்.

உயிரியல் துறையின் மரபணு சோதனை முடிவின் அடிப்படையில் அடுத்தகட்ட தகவல்கள் கிடைக்கும். கொந்தகையில் அதிக அளவு மனிதர்கள் வாழ்ந்த சுவடுகள் கிடைத்து வருகின்றன. எதிர் வரும் காலங்களில் இன்னும் மக்கள் வாழ்ந்ததுக்கான கூடுதல் அடையாளங்கள் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. இது தொல்லியல் துறைக்கு மிக பெரிய மைல்கல், என்றார் அந்தத் தொல்லியல் ஆய்வாளர்.https://www.bbc.com/tamil/india-53111714

Edited by பிழம்பு
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கீழடி அகழாய்வில் 6-ம் நூற்றாண்டு சிரியா நாணயம் கிடைத்ததா ?| தொல்லியல் ஆர்வலரின் விரிவான தகவல்.

syria-coin-7.jpg

கீழடியில் 6-ம் கட்ட அகழாய்வு பணிகள் கடந்த பிப்ரவரி மாதத்தில் தொடங்கிய நிலையில் அகழாய்வு திட்டத்தின் தொடர்ச்சியாக கொந்தகை, அகரம், மணலூர் உள்ளிட்ட இடங்களிலும் அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்றன. கீழடி மற்றும் அதன் தொடர்ச்சியாக அகழாய்வு பணிகள் நடைபெற்ற அகரத்தில் 17-ம் நூற்றாண்டைச் சேர்ந்த தங்க நாணயம் மற்றும் கொந்தகையில் எலும்புக்கூடுகள் கிடைத்தது தொடர்பாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், விகடனில் ” 6-ம் நூற்றாண்டு சிரியா நாணயம்; 17-ம் நூற்றாண்டு தங்க நாணயம்!’ – கீழடி ஆச்சர்யம் ” என்ற தலைப்பில் வெளியானக் கட்டுரையின் ஸ்க்ரீன்ஷார்ட் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதை மையமாக வைத்தே கீழடியில் 6-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சிரியா நாணயம் கிடைத்துள்ளதாகவும் மற்றும் சிலர் 6 நூற்றாண்டில் தமிழகத்தில் இஸ்லாம் பரவி இருந்ததாகவும் பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர். இக்கட்டுரையில் சிரியா நாணயம் குறித்த தகவலையும், தொல்லியல் ஆர்வலரின் பதிலையும் விரிவாக காண்போம்.

பகிரப்பட்டு வரும் விகடனின் கட்டுரையின் இறுதியில், ” இது குறித்து தொல்லியல் ஆர்வலர் ஜெமினி ரமேஷ் பேசுகையில் கீழடி 2300 வருடங்களுக்கு முற்பட்டது. இங்கு பெரிதாக தங்க நாணயங்கள் கிடைத்ததில்லை. தற்போது கீழடியின் தொடர்ச்சியான அகரத்தில் 17-ம் நூற்றாண்டு தங்க நாணயம் கிடைத்துள்ளது மகிழ்ச்சியான விஷயம். இதேபோல், இலந்தக்கரையில் 6-ம் நூற்றான்டைச் சேர்ந்த சிரியா நாணயம் கிடைத்துள்ளது. இப்படி மொத்தம் 3 சிறப்புமிக்க நாணயங்கள் காளையார்க்கோயிலை அடுத்த இலந்தக்கரையில் கிடைத்துள்ளன. எனவே கீழடியைப் போல் இலந்தக்கரையிலும் விரிவான அகழாய்வை மத்திய, மாநில அரசுகள் நடத்த வேண்டும் எனக் கூறினார் ” என்று இடம்பெற்றுள்ளது.

ஆக, 6-ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கூறப்படும் சிரியா நாணயம் கீழடியில் கிடைத்துள்ளதாக கூறுவது தவறான தகவல். விகடன் கட்டுரையின் தலைப்பில் ” கீழடி ஆச்சர்யம் ” என சிரியா நாணயம் குறித்த தகவலையும் சேர்த்ததே குழப்பத்திற்கு காரணம். மேலும், 6-ம் நூற்றான்டைச் சேர்ந்த சிரியா நாணயம் தொடர்பாக கூடுதல் தகவலை அறிந்து கொள்ள தீர்மானித்தோம்.

தனிப்பட்ட முறையில் கள ஆய்வுகளில் ஈடுபட்டு வரும் தொல்லியல் ஆர்வலர் ஜெமினி ரமேஷ் அவர்களின் முகநூல் பக்கத்தை கண்டறிந்து பார்க்கையில் ஜூன் 18-ம் தேதி சிரியா நாணயத்தின் புகைப்படத்துடன் விளக்கமாக பதிவிட்டு இருந்தார்.

தொல்லியல் ஆர்வலர் ஜெமினி ரமேஷ் அவர்களை யூடர்ன் தரப்பில் தொடர்பு கொண்டு பேசுகையில், ”  கீழடியில் இருந்து இலந்தக்கரை 40 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. கீழடியில் கிடைத்தப் பொருட்களை போலவே எங்களின் ஊரின் பகுதியில் எனக்கு கிடைத்தது. 2 ஆண்டுகளுக்கு முன்பாக அங்கிருந்த காட்டுக்கருவேல மரங்களை தூரோடு பிடிங்கி அப்புறப்படுத்தும் போது இதெல்லாம் வெளியே வந்தது. அதில் அந்த தங்க நாணயமும் ஒன்று. இது சிரிய நாட்டைச் சேர்ந்த நாணயம். 2 நாட்கள் வரை அந்த நாணயம் தங்கமா அல்லது செம்பா எனத் தெரியவில்லை. நாணயத்தின் புகைப்படத்தை கூகுள் அப் மூலம் தேடி பார்த்த போது சிரியாவின் நாணயம் என கிடைத்த தகவலை ஒப்பிட்டு அறிந்து கொண்டேன். அதை இங்கு நாணயமாக பயன்படுத்தவில்லை. இங்கிருந்து பாசிகளை வாங்கிக் கொண்டு பண்டமாற்ற முறையில் தங்கத்தைக் கொடுத்து இருக்கலாம். அந்த நாணயத்தில் துளையிட்டு டாலர் போல் பயன்படுத்தி இருக்க வேண்டும். ஏனெனில், அங்கு ஆபரண தொழிற்சாலை இருந்ததற்கான சாத்தியக்கூறுகள் நிறைய உள்ளன. ஆகவே, அதிலுள்ள துளை இங்கு செய்திருக்கலாம்.

அங்கு பகுதியில் இருந்து ராஜராஜச்சோழன் காலத்து இரு நாணயங்களும், சிரியா நாணயமும் எடுத்துள்ளேன். ராஜராஜச்சோழன் காலத்து நாணயங்களும் பரவலாக கிடைத்துள்ளது. நபிகள் நாயகம் இறந்து சிறிது நாட்களுக்கு பிறகு அப்துல்-மாலிக் இப்னு மரவன் இப்னுல் ஹக்காம் எனும் சிரியாவின் பேரரசர் கிபி 698-ல் குரானில் இருந்து சில வாசகங்களை பொறித்து இந்த தங்க நாணயத்தை உருவாக்கி உள்ளார். இதற்கு முன்பாக  ஒரே மதிப்புடைய நாணயத்தின் எடை வேறுபடும். இவர்கள் 4.25 கிராம் என்கிற எடையை வரையறை செய்து உள்ளார்கள்.

முதலில் இத்தகைய நாணயங்கள் வணிகத்தின் போது பண்டமாற்று முறையில் இங்கு வந்திருக்கக்கூடும். அடுத்ததாக, நபிகள் நாயகத்தின் சீடர் மாலிக் தினார் என்பவர் இஸ்லாம் கொள்கைகளை பரப்ப தென்னிந்தியாவிற்கு வந்துள்ளார். அவரின் சமாதி கேரளாவில் அமைந்துள்ளது. அவரின் மூலமாகவும் இந்த நாணயம் இங்கு வந்திருக்க வாய்ப்புகள் இருக்கிறது. சில நாற்றாண்டுகளுக்கு முன்பு இங்கு இஸ்லாமிய மதத்தினர் வாழ்ந்து வந்தனர். தர்காவும் இங்குள்ளது. சமீபத்தில்தான் இடம்பெயர்ந்து உள்ளனர். அதுமட்டுமின்றி, 13-ம் நூற்றாண்டில் சிரியாவில் இருந்து காளையார்கோவில் பகுதிக்கு வந்த பயணி மூலமாகவும் நாணயம் வந்திருக்க வாய்ப்புகள் உள்ளன.

இலந்தக்கரையில் இருந்து ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பல தங்கம், வெள்ளி, செப்பு நாணயங்கள் கிடைத்துள்ளன. நிலத்தின் மேற்பரப்பில் மேற்கொண்ட கள ஆய்வில் முடிந்தவரை ஆதாரங்களை திரட்டி வருகிறேன். இலந்தக்கரையில் மத்திய, மாநில அரசுகள் அகழாய்வு பணிகளை மேற்கொள்ள வேண்டும்  ” எனக் கூறியுள்ளார்.

சிரியா நாணயம் குறித்து தேடிய போது aramcoworld எனும் இணையதளத்தில் நாணயம் குறித்த தகவல் 2015-ம் ஆண்டு வெளியாகி இருக்கிறது. சிரியாவில் குரான் வாசகம் பொறிக்கப்பட்டு வெளியிடப்பட்ட நாணயத்தை தமிழகத்தில் பார்ப்பது ஆச்சரியமாக இருக்கிறது.

இருப்பினும், கிபி 6 நூற்றாண்டின் இறுதியில் உருவாக்கப்பட்ட சிரியா நாணயம் தமிழத்திற்கு எந்த நூற்றாண்டில் வந்தது என்பதற்கோ, எப்படி வந்தது என்பதற்கோ உறுதியான ஆதாரங்கள் இல்லை. சிரியா நாணயம் வணிகத்தின் போது பண்டமாற்று முறையில் தமிழகத்திற்கு வந்திருக்கவே வாய்ப்புகள் அதிகம் என்கிறார் தொல்லியல் ஆர்வலர். மேலும், வைகை நதிக்கரை நாகரீகத்தின் பகுதியாக இலந்தக்கரை இருந்திருக்கக்கூடும் என்கிறார்.

பண்டைய தமிழ் சமூகம் பல நாடுகளுடன் வாணிபம் செய்த வரலாறு இங்குள்ளதை அறிய வேண்டும். 2 ஆண்டுகளுக்கு முன்பு கிடைத்த இந்த நாணயத்தை கீழடியுடன் தொடர்புப்படுத்தி குழப்பத்தை உண்டாகியுள்ளனர். பழங்கால சிரியா நாணயத்தை வைத்து தவறான தகவலை பரப்ப வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறோம்.

https://youturn.in/articles/keezhadi-excavation-and-syria-coin.html

டிஸ்கி:

சும்மாவே அவயளின் ஆட்டம் தாங்காது.. இதுல சிரியா அறியா என்டா நாம ஊரை காலி செய்ய வேண்டியதுதான்..☺️

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்
Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

keladi.jpg

கீழடி அகழாய்வில், எடைக்கற்கள் கண்டுபிடிக்கப்பட்டன!

சிவகங்கை மாவட்டம் கீழடி பகுதியில் 6-ஆம் கட்ட அகழாய்வு தொடங்கி நடைபெற்று வருகிற நிலையில் அகழாய்வில் எடைக்கற்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இதில், ஒரு குழி மற்றும் அதனை சுற்றியுள்ள குழிகளில் நான்கு எடைக்கற்கள் கண்டெடுக்கப்பட்டன. ஒவ்வொரு எடைக்கல்லும் முறையே 8, 18, 150, 300 கிராம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

திருப்புவனம் அருகே கீழடி, கொந்தகை, அகரம், மணலூா் ஆகிய இடங்களில், கடந்த மே 20-ஆம் திகதி முதல் மீண்டும் அகழாய்வுப் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

இந்த அகழாய்வில், மணலூரில் சுடுமண்ணாலான உலை, கீழடியில் விலங்கின் எலும்பு, கொந்தகையில் முதுமக்கள் தாழிக்குள் மனித எலும்பு, அகரத்தில் மண்பானைகள் என அடுத்தடுத்து பல பொருள்கள் கண்டெடுக்கப்பட்டு வருவதால், தமிழாா்வலா்கள் மத்தியில் கீழடி 6 ஆம் கட்ட அகழாய்வு மீது மிகுந்த எதிா்பாா்ப்பு ஏற்பட்டுள்ளது.

இதனிடையே, கடந்த ஜூன் மாதம் அகரத்தில் 17 ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த தங்க நாணயம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. அதன்பின்னா், கொந்தகையில் ஒரே குழியில் 2 முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டன. இந்நிலையில், கீழடியில் ஏற்கெனவே இரு மண்பானைகள் கிடைத்த இடத்தின் அருகிலேயே தண்ணீர் செல்வதற்கான வடிகால் வசதி அமைப்பும் கண்டறியப்பட்டுள்ளது.

இப்பகுதியில் 2600 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மக்கள், தண்ணீரை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு கடத்துவதற்காக இதுபோன்று வடிகால் வசதியை ஏற்படுத்தியிருக்கலாம் என தொல்லியல் ஆய்வாளா்கள் தெரிவித்தனா்.

https://athavannews.com/கீழடி-அகழாய்வில்-எடைக்கற/

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

பெரிய தலையுடன் குழந்தைகளின் எலும்புக்கூடுகள்!

July 9, 2020, 19:01 [IST]

keezhadi-truth-about-old-civilization-15

கீழடியில் தற்போது 6ம் கட்ட அகழ்வாராய்ச்சி மிகவும் தீவிரமாக நடந்து வருகிறது. பல்வேறு அழுத்தங்களுக்குப் பிறகு தொடங்கப்பட்ட 6ம் கட்ட ஆராய்ச்சியில் பல எதிர்பாராத திருப்பங்கள் நடந்தேறியுள்ளது. தற்பொழுது இந்த ஆராய்ச்சியில் பெரிய தலையுடன் இரண்டு ஆதிகால எலும்புக்கூடுகள் கிடைத்துள்ளது. இன்னும் பல மர்ம முடிச்சுகள் இந்த 6ம் கட்ட அகழ்வாராய்ச்சியில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


2600 ஆண்டுகள் பழமை வாய்ந்த அரிய பொருட்கள்

மதுரை மாவட்டத்திலிருந்து சுமார் 15 கிலோ மீட்டர் தூரத்தில் தென்கிழக்கில் அமைந்துள்ள சிவகங்கை மாவட்டத்தில் தான் கீழடி கிராமம் அமைத்திருக்கிறது. இங்கு தான் தற்பொழுது 6ம் கட்ட அகழ்வாராய்ச்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆராய்ச்சியில் சுமார் 2600 ஆண்டுகள் பழமை வாய்ந்த அரிய பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது முழுக்க முழுக்க தமிழர் நாகரீகம் என்பது குறிப்பிடத்தக்கது.


உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ள கீழடி

உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ள இந்த கீழடி அகழ்வாராய்ச்சியில் தற்பொழுது இரண்டு குழந்தைகளின் எலும்பு படிமங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு உடல்களும் அடுத்தகட்ட ஆய்விற்காக மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கண்டுபிடிக்கப்பட்ட இரண்டு உடல்களும் குழந்தைகளின் உடல்கள் தான் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.


95 செமீ நீளம் கொண்ட மனித உடல் படிமங்கள்

கீழடியில் இதற்கு முன்பும் சில எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆனால், அவை அனைத்தும் பெரியவர்களின் உடல் படிமங்கள். இந்த பகுதியில் இதுவரை மொத்தமாக மூன்று மனித படிமங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் சுவாரசியம் என்னவென்றால் கண்டுபிடிக்கப்பட்ட இரண்டு உடல்களில் ஒரு உடல் 95 செமீ நீளம் கொண்டது, மற்றொரு உடல் 75 செமீ நீளம் கொண்டது என்பது கூடுதல் தகவல்.


குழந்தை எலும்பு படிமத்திலும் சில சுவாரசியம்

ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்ட இந்த இரண்டு உடல்களை வைத்து தீவிரமான ஆராய்ச்சிகள் நடந்து வருகிறது. தற்பொழுது இன்னும் கூடுதலாக இரண்டு குழந்தைகளின் எலும்பு படிமங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த குழந்தை எலும்பு படிமத்திலும் சில சுவாரசியமான தகவல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பெரிய தலை

கண்டுபிடிக்கப்பட்ட குழந்தைகளின் படிமங்களில், தலைகள் மட்டும் இயல்பை விட பெரிதாக இருக்கிறது. உடலின் மற்ற பகுதிகள் எப்பொழுதும் போல சாதாரணமாக இருக்கிறது. இந்த குழந்தைகளின் தலை பகுதி மட்டும் ஏன் பெரியதாக இருக்கிறது என்பதற்கான சரியான காரணம் எதுவும் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.


காரணம் இது தானா? சந்தேகத்தில் ஆராய்ச்சியாளர்கள்

இருப்பினும் அகழ்வாராய்ச்சி ஆய்வாளர்களின் தகவலின்படி, பெரும்பாலும் நீண்ட காலம் புதைக்கப்பட்ட படிமங்களில் இப்படியான சில மாற்றங்கள் காணப்படும் என்று சந்தேகத்துடன் தெரிவித்துள்ளனர். இருப்பினும் இது தொடர்பாக ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

எத்தனை ஆண்டு பழமையானது?

கண்டுபிடிக்கப்பட்ட குழந்தைகளின் வயது மற்றும் பாலினம் குறித்த தகவல்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. இது எத்தனை ஆண்டு பழமையானது என்பது இன்னும் சில ஆராய்ச்சிகளுக்குப் பின்னர் தெரியவரும் என்று தெரிவித்துள்ளனர். இவற்றின் நிலையை வைத்துப் பார்க்கையில் இவை நிச்சயமாக கிமு 6ம் நூற்றாண்டிற்கு முந்தைய உடலாக தான் இருக்கக்கூடும் என்று சந்தேகித்துள்ளார்.


இந்திய வரலாற்றையே மாற்றி எழுதும் படிமங்கள்

கீழடி ஆராய்ச்சியில் தற்பொழுது இந்த இரண்டு குழந்தைகளின் உடல்கள் முக்கியமான திருப்புமுனையாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட பொருட்கள் இந்திய வரலாற்றையே மாற்றி எழுதும் அளவிற்குப் பழமையானது என்று கண்டுபிடிக்கப்பட்டது.


கிறிஸ்து பிறப்பதற்கு முன்பே தோன்றிய கீழடி சமூகம்

கார்பன் ஆராய்ச்சியில், கீழடி படிமங்கள் சுமார் 2600 வருடங்களுக்கு முந்தையது என்று கண்டுபிடிக்கப்பட்டது. சரியாகச் சொன்னால், இவை கிறிஸ்து பிறப்பதற்கு சுமார் 600 வருடங்களுக்கும் முந்தையது என்பது ஆச்சரியத்தை உருவாக்கியுள்ளது.

https://tamil.gizbot.com/social-media/the-mystery-of-unraveling-discovery-of-children-s-skeletons-with-big-heads-found-in-keezhadi-026054.html

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

வந்தவாசி அருகே கற்கால மனிதர்கள் வாழ்ந்த தடயங்கள் கண்டெடுப்பு.!

202008081413117333_Tamil_News_Vandavasi-

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி தாலுகா, கீழ்நமண்டி கிராமத்தின் மலையடிவாரத்தில், கற்கால மனிதர்கள் வாழ்ந்ததற்கான தடயங்கள் இருப்பதாக கிடைத்த தகவலின்படி, திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தின் செயலாளர் தாசில்தார் ச.பாலமுருகன், ஆய்வாளர்கள் எ.சுதாகர், பழனிச்சாமி, ஏ.வெங்கடேஷ் ஆகியோர் கூட்டாக கள ஆய்வு செய்தனர். அப்போது, கீழ்நமண்டி கிராமத்தின் தெற்குப்பகுதியில் உள்ள குன்றுகள் சூழ்ந்த இடத்தில், சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட மனிதர்களை புதைத்த ஈமக்காடு இருப்பது தெரியவந்தது. அங்கு, சுமார் 300க்கும் மேற்பட்ட கல் வட்டங்கள் காணப்படுகின்றன.

இந்த கல் வட்டங்களின் நடுவில் மண்ணுக்கடியில் உள்ள ஈமப்பேழையில், இறந்து போன மனிதனின் எலும்புக்கூடுகள், அவர்கள் பயன்படுத்திய பொருட்கள், மண் குடுவைகள், இரும்பு ஆயுதங்கள், பானைகள் ஆகியவற்றை வைத்து புதைத்திருப்பது தெரியவந்துள்ளது. கற்கால மனிதர்களை புதைத்த இடத்தை சுற்றிலும், வட்டமாக சிறு பாறைக்கற்களை பாதியாக புதைத்து அடையாளம் தெரியுமாறு வைப்பது அக்கால வழக்கம். அதன்படியே, இந்த பகுதியிலும் சுமார் 3 மீட்டர் விட்டம் முதல் 5 மீட்டர் விட்டம் வரை பல அளவுகளில் காணப்படுகின்றன. இதுகுறித்து, தொல்லியல் ஆய்வாளர்கள் கூறுகையில், ‘கீழ்நமண்டி கிராமத்தில் கண்டெடுக்கப்பட்டவை, பெருங்கால கல்வட்டங்கள் ஆகும்.

சிறப்புக்குரிய குழிக்குறி பாறைகள் இந்த பகுதியில் நான்கு இடங்களில் உள்ளன. இதேபோல், தென்னிந்தியாவில் கர்நாடகத்திலும், தமிழ்நாட்டில் புதுக்கோட்டை, தர்மபுரி பகுதியிலும் கிடைத்திருக்கிறது. கீழ்நமண்டியில் உள்ள பெருங்கற்கால கல்வட்டங்கள் மற்றும் பொருட்கள் சில சிதிலமடைந்துள்ளன. சில கல்வட்டங்களில் உள்ளிருந்த ஈமப்பேழைகள், மண் குடுவைகள், பானைகள் வெளியே சிதறிக்கிடக்கின்றன. தொல்லியல் சிறப்பு வாய்ந்த கீழ்நமண்டி கல்வட்டங்களை, தொல்லியல் துறையினர் முறையாக அகழாய்வு செய்து, பண்டைய தமிழரின் பண்பாட்டை வெளி உலகுக்கு தெரியப்படுத்தவும், பாதுகாக்கவும் வேண்டும். இவ்வாறு தெரிவித்தனர்.

https://m.dinakaran.com/article/news-detail/607798

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

india-1.jpg

ஆதிச்சநல்லூரில் 3,000 ஆண்டுகள் பழமையான குறியீடுகள், கூரைஓடுகள் கண்டெடுப்பு!

ஆதிச்சநல்லூரில் அகழாய்வில் 3000 ஆண்டுகள் பழமையான குறியீடுகள் மற்றும் கூரை ஓடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

உலக நாகரீகத்தின் தொட்டில் என அழைக்கப்படும் ஆதிச்சநல்லூரில் தமிழக அரசு சார்பில், அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது.

தொல்லியல் துறை இயக்குனர் பாஸ்கர், ஆய்வாளர் லோகநாதன் தலைமையிலான குழுவினர் அகழாய்வு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அங்கு ஏராளமான முதுமக்கள் தாழிகள், மண்பாண்ட பொருட்கள், இரும்பு மற்றும் வெண்கலத்தாலான பொருட்கள் போன்றவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் தற்போது 3000 ஆண்டுகள் பழமையான குறியீடுகள் மற்றும் கூரை ஓடுகள் இங்கு கிடைத்துள்ளது. அந்த குறியீடுகளில் ஏணி, இலை போன்று வரையப்பட்டுள்ளது.

கீறல்கள் மற்றும் குறியீடுகளை ஆய்வு செய்யும்போது பழங்கால மனிதர்களின் வாழ்வியல் குறித்த முக்கிய தகவல்கள் கிடைக்கப்பெறும் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2004ம் ஆண்டு நடந்த அகழாய்வு பணியில் கரும்பு, மான், முதலை, பெண் உருவங்கள் இருந்த பானை ஓடுகள் கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/ஆதிச்சநல்லூரில்-3000-ஆண்டுக/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கீழடி : அகழ்வாராய்ச்சியில் 5 அடி உயர எலும்புக் கூடு கண்டெடுப்பு.! 

Screenshot-2020-08-14-08-47-06-655-org-m 

கீழடியில் நடைபெற்று வரும் 6-ம் கட்ட அகழ்வாராய்ச்சியில் மேலும் ஒரு முழுமையான மனித எலும்புக் கூடு கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதுவரை 6 எலும்புக் கூடுகள் கண்டறியப்பட்டுள்ள நிலையில் இன மரபியலை அறிவதற்கான மரபணுவியல் சோதனை பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

சிவகங்கை மாவட்டம் கீழடியில்  6-ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் கடந்த பிப்ரவரி 19-ம் தேதி முதல் விரிவான முறையில் நடைபெற்று வருகிறது. 5கட்ட அகழ்வாராய்ச்சியின் தொடர்ச்சியை கண்டறியும் வகையிலும் தொன்மையான மனிதர்களின் வாழ்வியல் முறை, நம்பிக்கை, கலாச்சாரம், இன மரபியல் ஆகியவற்றை அறியும் நோக்கத்தில் கடந்த 5 கட்ட அகழாய்வு போன்று அல்லாமல் 6ம் கட்ட அகழ்வாராய்ச்சி விரிவான முறையில் நடத்த திட்டமிடப்பட்டு கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய 4 இடங்களில் விரிவான முறையில் அகழாய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

6ம் கட்ட அகழாய்வில் இதுவரை 10-க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழி, விலங்கு எலும்பு கூடு, தங்க நாணயங்கள், எடைகற்கள்,  பாசி மணிகள், சங்கு வளையல்கள், அம்மி குளவி,  கொள்கலன்கள், உறை கிணறு உள்ளிட்ட ஆயிரக்கணக்கான  தொன்மையான பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில்  கொந்தகையில் மேற்கோள்ளப்பட்டு வரும் அகழாய்வில் இன்று மேலும் ஒரு மனித எலும்புக் கூடுண்டறியப்பட்டுள்ளது.

சுமார் 5 அடி உயரம் கொண்ட அந்த எலும்புக் கூடு,  எத்தனை ஆண்டுகள் பழமையான மனிதருடைய எலும்புக் கூடு என்பது குறித்தும், ஆணா ? பெண்ணா ? என்பது குறித்தும் முழுமையான மரபணுவியல் சோதனைக்கு பிறகே தெரியவரும் என்று ஆராய்ச்சியில் ஈடுபட்டு வரும் தொல்லியல் துறையினர் தெரிவித்துள்ளனர். முன்னதாக 5 குழந்தைகள்  எலும்புக் கூடுகள் கண்டறியப்பட்டுள்ள நிலையில் இன்று மேலும் ஒரு எலும்புக் கூடு கண்டறியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

இதனிடையே எலும்புக் கூடுகள் குறித்து மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் மரபணுவியல் சோதனை நடத்தப்பட்டு வரும் நிலையில் கீழடி பகுதியில் வாழ்ந்த மனிதர்களின் இன மரபியல் குறித்தும், அவர்களின் உணவு முறை, ஆயுட்காலம், உள்ளிட்ட பல்வேறு தகவல்களை பெற முடியும் என தொல்லியல் துறையினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

http://www.puthiyathalaimurai.com/amp/news/76957/keeladi-excavation-one-more-skeleton-discovered 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

கீழடியில் கிடைத்த நுண்கற்கால கருவிகளும் எரிந்த நெல் மணிகளும்

24 ஆகஸ்ட் 2020
தூத்துக்குடி மாவட்டம் சிவகளையில் தோண்டப்பட்ட இடத்திலேயே முதுமக்கள் தாழி.
 

தூத்துக்குடி மாவட்டம் சிவகளையில் தோண்டப்பட்ட இடத்திலேயே முதுமக்கள் தாழி.

கீழடித் தொகுதியில் நடந்து வரும் அகழாய்வில் நுண்கற்கால கருவிகள், கரிமயமாகிப்போன நெல்மணிகள் உள்ளிட்டவை கிடைத்திருப்பது ஆய்வாளர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. மாநிலம் முழுக்க நடந்துவரும் ஆய்வுகளில் ஆயிரக்கணக்கான தொல் பொருட்களும் நூற்றுக்கணக்கான முதுமக்கள் தாழிகளும் சேகரிக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் தற்போது கீழடி தொகுதிகள், ஆதிச்சநல்லூர், சிவகளை, கொடுமணல் ஆகிய இடங்களில் அகழாய்வுப் பணிகள் நடந்துவருகின்றன. இந்த அகழாய்வுப் பணிகள் எந்த நிலையில் உள்ளன, கிடைத்த பொருட்கள் என்னென்ன என்பது குறித்த தகவல்களை மாநில தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் வெளியிட்டார்.

கீழடி பகுதியில் தற்போது நடந்துவரும் அகழாய்வில் உருளை வடிவ பானைகள், உலை, கால்நடை எலும்புகள், இரும்புப் பொருட்கள், விலைமதிப்பற்ற கற்களால் ஆன மணிகள், எடை கற்கள், முத்திரைகள் உள்ளிட்டவை கிடைத்திருக்கிறன. க - ய என்ற தமிழ் எழுத்துகள் பொறிக்கப்பட்ட பானை ஓடும் கிடைத்திருக்கிறது. 

கொடுமணல் பகுதியில் கண்டறியப்பட்ட இரும்பு உலை
 

கொடுமணல் பகுதியில் கண்டறியப்பட்ட இரும்பு உலை

அதேபோல, வடமேற்கு இந்தியாவின் தற்போதைய மகாராஷ்டிரம், குஜராத் ஆகிய பகுதிகளில் பரவலாக காணப்படும் அகேட், சூது பவளம் போன்ற மணிகளும் கிடைத்திருப்பதால், இங்கு தொழில், வணிகத் தொடர்புகள் சிறப்பாக நடந்திருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

பஸால்ட் வகை கற்களால் ஆன எடை கற்கள், சுடுமண்ணாலான முத்திரை ஆகியவையும் கிடைத்துள்ளன. கூம்பு வடிவத்திலான இந்த முத்திரையின் நடுப்பகுதியில் ஆமை வடிவம் இடம்பெற்றிருக்கிறது. 

கீழடியை அடுத்துள்ள கொந்தகை முழுமையாக ஈமச்சின்னங்கள் நிறைந்துள்ள பகுதி என ஏற்கனவே அடையாளம் காணப்பட்டிருந்தது. 

இங்கிருந்து இதுவரை 40 முதுமக்கள் தாழிகளும் 17 மனித எலும்புக் கூடுகளும் 2 கால்நடை எலும்புகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. 

 

நுண் கற்காலக் கருவிகள், எரிந்த நெல் மணிகள்

 

கீழடிக்கு அருகில் உள்ள மற்றொரு பகுதியான அகரத்தில் நடத்தப்பட்டு வரும் தொல்லியல் ஆய்வில் பல முக்கியமான தொல்பொருட்கள் கிடைத்திருப்பதாக அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்தார். 

"இங்கு கிடைத்துள்ள தொல்பொருட்களில் நுண் கற்காலக் கருவிகள் கிடைத்திருப்பது கவனத்திற்குரியது. இந்த நுண் கருவிகள் இங்குதான் தயாரிக்கப்பட்டிருக்கின்றன. மேலும் கரிமயமான நெல்மணிகளும் கிடைத்திருப்பது தொல்லியல் ரீதியில் மிகவும் முக்கியமானது" என்று தெரிவித்தார் பாண்டியராஜன். 

கொடுமணல் பகுதியில் கண்டறியப்பட்ட கல்வட்டம்
 

கொடுமணல் பகுதியில் கண்டறியப்பட்ட கல்வட்டம்

இவை தவிர, அகரத்தில் இருந்து, பட்டை தீட்டப்பட்ட கல் கருவிகள், கறுப்பு - செவ்வண்ண பானை ஒடுகள், சுடுமண்ணாலான உருவங்கள், பொருட்கள் ஆகியவையும் கிடைத்துள்ளன. கரிமயமான நெல்மணிகளைப் பொருத்தவரை, அவை 20 என்ற எண்ணிக்கையில் கிடைத்துள்ளன. அவற்றுக்கு அருகிலேயே கிடைத்த கற்கள் ஒன்றில் கிண்ணம் போன்ற குழி காணப்பட்டிருக்கிறது. 

இவை தவிர, பிற்காலத்தைச் சார்ந்த தங்க நாணயம், செலடான் வகை சீன மட்பாண்ட ஓடு, புகைப்பான்கள் ஆகியவையும் கிடைத்துள்ளன.

தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்ச நல்லூரில் 1876ல் முதல் முறையாக பெர்லின் அருங்காட்சியகத்தைச் சேர்ந்த ஜோகோர் என்பவரால் பெரிய அளவிலான முதுமக்கள் தாழிகள் உள்ள ஈமக்காடு கண்டறியப்பட்டது. 1903ல் அலெக்ஸாண்டர் ரீ இங்கு மிகப் பெரிய அளவிலான தொல்லியல் ஆய்வை நடத்தினார். 

மத்தியத் தொல்லியல் ஆய்வுத் துறையால் மீண்டும் இந்த இடத்தில் 2003-04ல் அகழாய்வுப் பணிகள் நடத்தப்பட்டன. இந்த தொல்லியல் ஆய்வின் முடிவுகள் நீண்ட காலமாக சமர்ப்பிக்கப்படாத நிலையில், இங்கு தற்போது தமிழகத் தொல்லியல் துறை அகழாய்வைத் துவங்கியிருக்கிறது.

ஈமக்காடாக உள்ள பகுதியிலும் வாழ்விடப் பகுதி எனக் கருதப்படும் பகுதியிலும் அகழாய்வுப் பணிகள் நடந்து வருகின்றன. வெளிக் கொணரப்பட்ட பத்து முதுமக்கள் தாழிகளில் இரண்டு மிக நல்ல நிலையில் உள்ளன. இவை தவிர, இரும்பாலான பொருட்கள் உட்பட 438 தொல்பொருட்களும் சேகரிக்கப்பட்டுள்ளன. 

ஆதிச்ச நல்லூரில் இருந்து 14 கி.மீ. தூரத்தில் உள்ள சிவகளையில் கண்டெடுக்கப்பட்ட ஏராளமான பானை ஓடுகளும் இடைக் கற்காலக் கருவிகளும் இப்பகுதியின் முக்கியத்துவத்தை உணர்த்தியதையடுத்து இங்கும் அகழாய்வு நடத்தப்பட்டிருக்கிறது. இதுவரை 61 தொல் பொருட்களும் 31 முதுமக்கள் தாழிகளும் இங்கே கிடைத்துள்ளன. 

கொந்தகை பகுதியில் கிடைத்த இரு முழுமையான எலும்புக் கூடுகள்
 

கொந்தகை பகுதியில் கிடைத்த இரு முழுமையான எலும்புக் கூடுகள்

ஈரோடு மாவட்டம் கொடுமணல் நீண்ட காலமாகவே தொல்லியல் ரீதியில் கவனிக்கப்பட்ட பகுதியாக இருந்துவந்தது. இங்கு பண்டைய குடியேற்றத்தைக் கண்டறிதல், தமிழி எழுத்தின் வளர்ச்சியைக் கண்டறிதல் ஆகிய நோக்கத்துடன் மாநில தொல்லியல் துறை இங்கு ஆய்வு நடத்தி வருகிறது.

அதில் பெரும் எண்ணிக்கையில் கருப்பு - செவ்வண்ண பானை ஓடுகளும் உலைகளுக்கு பயன்படுத்தப்படும் பொருட்களும் கிடைத்துள்ளன. ஆகவே இந்தப் பகுதி ஒரு தொழில்சார்ந்த பகுதியாக இருந்திருக்க வேண்டுமெனக் கருதப்படுகிறது. 

இது தவிர, தமிழி பொறிக்கப்பட்ட பானை ஒடுகளும் கிடைத்துள்ளன. ஒரு பானை ஓட்டில் ஆதன் என்ற பெயரும் மற்றொரு பானை ஓட்டில் 'ள்அகுர (வன்)" என்ற எழுத்துகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கருங்கல், சுண்ணாம்புக் கல்லால் கட்டப்பட்ட கற்சுவர் ஒன்றும் வெளிக்கொணரப் பட்டிருக்கிறது. உலையும் எரிந்த களிமண் கொண்ட பகுதியும் அடையாளம் காணப்பட்டுள்ளது. தங்கத்தால் ஆன அணிகலன்கள், காசுகள் ஆகியவையும் கிடைத்துள்ளன.

கீழடி அகழாய்வுக்குப் பிறகு தமிழ்நாட்டில் தொல்லியல் ஆய்வுகளின் மீது பெரும் ஆர்வம் ஏற்பட்டிருக்கும் நிலையில், தொடர்ச்சியாக ஆய்வுகளுக்காக குறிப்பிடத்தக்க அளவில் நிதி ஒதுக்கப்பட்டிருப்பதாக தொல்லியல் துறை அமைச்சர் தெரிவித்தார். 

மேலும் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தொல் மரபணு பகுப்பாய்வு ஆய்வகம் ஒன்றை அமைக்கும் பணிகளும் நடந்துவருவதாக அவர் கூறினார்.

இந்த தொல்லியல் ஆய்வுகளில் கிடைக்கும் தொல் பொருட்களை அறிவியல் ரீதியாக ஆய்வுசெய்ய இந்தியாவில் உள்ள பல பல்கலைக்கழகங்கள், ஆய்வகங்களுடன் தொடர்புகள் ஏற்படுத்தப்பட்டிருப்பதாகவும் மாநிலத் தொல்லியல் துறை தெரிவிக்கிறது.

குறிப்பாக புணேவில் உள்ள டெக்கான் கல்லூரி, மதுரை காமராசர் பல்கலைக்கழகம், ஹைதராபாதில் உள்ள செல்லுலார் மற்றும் மூலக்கூறு உயிரியலுக்கான மையம், சர்மா மரபுசார் கல்வி மையம், இந்திய புவிகாந்தவியல் நிறுவனம், பாண்டிச்சேரியில் உள்ள பிரெஞ்ச் இன்ஸ்ட்டிடியூட் ஆகியவை இந்த ஆய்வில் உதவவுள்ளன. 
 

கீழடி நான்காம் கட்ட ஆய்வு முடிவுகள் கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட நிலையில், அடுத்த கட்ட ஆய்வு முடிவுகள் இந்த ஆண்டின் இறுதிக்குள் வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மதுரையிலிருந்து சுமார் 13 கி.மீ. தொலைவில் சிவகங்கை மாவட்டத்தில் 2015ஆம் ஆண்டிலிருந்து தொல்லியல் அகழாய்வு நடந்து வருகிறது. முதல் மூன்று அகழாய்வுகளை மத்தியத் தொல்லியல் துறை நடத்தியது. அதற்குப் பிறகு நான்கு, ஐந்து, ஆறாம் கட்ட ஆய்வுகளை மாநிலத் தொல்லியல் துறை நடத்தியிருக்கிறது. 

கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட கீழடி ஐந்தாம் கட்ட ஆய்வு முடிவுகள் தேசிய அளவில் பெரும் விவாதங்களை ஏற்படுத்தின.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கீழடி அகழாய்வு ஆறாம் கட்டப்பணி நிறைவடைந்து ஆவணப்படுத்தல் தொடங்குகின்றது

 
keeladi-4-agarathi.jpg
 

கீழடியில் ஆறாம்கட்ட அகழாய்வுப் பணிகள் நிறைவடையவுள்ளதுடன், அங்கு சேகரிக்கப்பட்ட பொருட்களை ஆவணப்படுத்தும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகில் கீழடி, அகரம், கொந்தகை, மணலூர் ஆகிய இடங்களில் 40 இலட்சம் ரூபா செலவில் 6ஆம் கட்ட அகழாய்வுப் பணிகள் கடந்த பெப்ரவரி மாதம் 19ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. கொரோனா பரவலையடுத்து ஏப்ரல், மே மாதங்களில் இடைநிறுத்தப்பட்ட பணிகள், மீண்டும் மே மாத இறுதியில் ஆரம்பமாகின.

இதேவேளை இந்தப் பணிகள் வேகமாக நடைபெற்று வருவதுடன், கீழடியில் 18 குழிகளும், கொந்தகையில் 7 குழிகளும், மணலூரில் 5 குழிகளும், அகரத்தில் 12 குழிகளும் தோண்டப்பட்டு அகழாய்வு நடைபெற்று வருகின்றன.

இந்த அகழாய்வில் எலும்புக்கூடுகள், முதுமக்கள் தாழிகள், தங்க நாணயங்கள், உறைகிணறு, உலைகலன், செங்கல் கட்டுமானம், பானை ஓடுகள், கறுப்பு, சிவப்பு பானைகள், இணைப்புக் குழாயாக பயன்படுத்தப்பட்ட பானைகள் போன்றன கண்டெடுக்கப்பட்டுள்ளது. இவற்றை ஆவணப்படுத்தும் பணியில் தொல்லியல் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

அகழாய்வுப் பணிகள் நடைபெற்ற இடங்கள், பொருட்கள் குறித்த வரைபடங்கள் தயாரிக்கப்படுகின்றன. இதனால் கீழடி, அகரம் உள்ளிட்ட இடங்களில் அகழாய்வுப் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. அத்துடன் இந்த இடங்கள் வீடியோ மற்றும் புகைப்படங்கள் எடுக்கப்பட்டு வருகின்றன.

http://www.ilakku.org/கீழடி-அகழாய்வு-ஆறாம்-கட்/

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

இறுதிக்கட்டத்தில் கீழடி அகழாய்வு | கீழடி அகழ்வாராய்ச்சி

 

 

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • இது தான் சொறீலங்கா கடற்படை ஆக்கிரமிப்பில் இருக்கும்.. காங்கேசந்துறை நோக்கிய கடற்கரை. அண்ணர் ஆலாபனையோடு சொன்னது.  இது தான் கடலட்டை வாடிகளோடு அமைந்த.. அழுகி நாறும் பண்ணைக் கடற்கரை நோக்கிய தோற்றம். குத்தியரின் சீன ஏற்றுமதி வருவாய். அண்ணர் இதனை பற்றி மூச்சும் விடேல்ல.. ஆனால் பண்ணைக் கடற்கரை காதல் காட்சிகளை மட்டும் வர்ணிச்சிட்டு போயிட்டார். இது தான் கொழும்பின் தாமரைத் தடாகம் இரவுக் காட்சி. அண்ணர் சொன்ன மாதிரி தடாகம் ஒளிந்தாலும் சுற்றயல் ஒளிரவில்லை. இன்னும் பல பகுதி காலு வீதியில் இரவில் வீதி விளக்குகள் எரிவதில்லை.  அதே நேரம் யாழ்ப்பாண நெடுந்தூர பயணிகள் பேரூந்து தரிப்பிடத்திற்கு அருகில் உள்ள புல்லுக் குளத்தின் இரவுக் காட்சி. சுற்றயல் எங்கும் ஒளிரோ ஒளிரெண்டு ஒளிருது. யாழ் மணிக்கூட்டுக் கோபுரமும் தான். அண்ணர் அதை பற்றி மூச்.  ஆக அவை அவை பார்க்கிற பார்வையில தான் இங்கு களத்தில் இருந்தான காட்சிகளுக்கு ஆலாபனைகள் வருகின்றன. 
    • நீங்கள், அரச இரகசியங்களை கசிய விடுவதால்.... நாலாம் மாடியில் வைத்து,  கசையடி விழ வாய்ப்புகள் உண்டு. 
    • தோற்றாலும் வென்றாலும் அரசியல் தனித்தன்மையோடு தனித்து நிற்கும்.. அண்ணன் சீமானின் முடிவு வரவேற்கத்தக்கது. மேலும்.. மைக் சின்னத்தில்.. சம பால்.. சமூக பகிர்வுகளோடு.. அண்ணன் தேர்தலை சந்திக்க வாழ்த்துக்கள்.  வீரப்பனின் மகளுக்கு அளித்த வாய்ப்பு நல்ல அரசியல் முன்னுதாரணம். வீரப்பன் ஒரு இயற்கை வள திருடல் குற்றவாளி ஆகினும்.. அதில் அவரின் அப்பாவி மகளுக்கு எந்தப் பங்களிப்பும் இல்லாத நிலையில்.. அவர் அரசியல்.. சமூகப் புறக்கணிப்புக்கு உள்ளாவது ஏற்கக் கூடியதல்ல. நாம் தமிழர் அதனை தகர்த்திருப்பது நல்ல முன் மாதிரி. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.