Jump to content

கீழடி அகழாய்வும் தமிழர் நாகரீகமும் வரலாறும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: text

கீழடி  அகழாய்வில், குளியல் தொட்டி கண்டுபிடிப்பு..

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

  • 4 weeks later...
  • Replies 202
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கீழடி நாகரிகம்: பூம்புகார், கொற்கை அடுத்து தமிழக கிரேக்க வணிகத் தொடர்பு குறித்து ஆய்வு செய்ய அரசு முடிவு

முரளிதரன் காசிவிஸ்வநாதன் பிபிசி தமிழ்

நான்காம் கட்ட கீழடி ஆய்வு முடிவுகள் பல்வேறு தரப்பிலும் பரபரப்பையும், ஆர்வத்தையும் ஏற்படுத்தியிருக்கும் நிலையில், தற்போது நடந்துவரும் ஐந்தாம் கட்ட ஆய்வுகளில் தமிழக தொல்லியல் துறை பல நவீன முறைகளைப் பயன்படுத்தியிருக்கிறது. கடலடி ஆய்வுகளை நடத்தவும் மாநில தொல்லியல் துறை திட்டமிடுகிறது.

மதுரைக்கு அருகில் உள்ள கீழடியில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வில் கிடைத்த முடிவுகள் கடந்த வாரம் வெளியிடப்பட்டன. அங்கே கிடைத்த பொருட்களையும் கட்டட அமைப்புகளையும் வைத்து, கி.மு. ஆறாம் நூற்றாண்டிலேயே நகர்ப்புற நாகரீகம், எழுத்தறிவு, வளர்ச்சியடைந்த கலாச்சாரம் ஆகியவை கீழடி பகுதியில் இருந்ததாகக் கணிக்கப்பட்டிருக்கிறது.

தற்போது மாநில தொல்லியல் துறை கீழடியில் ஐந்தாம் கட்ட ஆய்வுகளை நடத்திவருகிறது. இந்த அகழாய்வில் பாரம்பரியமான முறைகளைத் தவிர, அகழாய்வுக்கான சரியான இடங்களைக் கண்டறிய பல புதிய தொழில்நுட்பங்களையும் மாநில தொல்லியல் துறை பயன்படுத்தியுள்ளது.

கீழடி கிராமத்தைச் சுற்றி சுமார் 15 சதுர கி.மீ. பரப்புக்கு தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் ஆங்காங்கே பரவிக்கிக்கின்றன. ஆகவே, எந்த இடத்தில் அகழாய்வை நடத்துவது சரியாக இருக்கும் என்பதைத் தீர்மானிக்க வேண்டியது முதற்கட்டப் பணி. இதற்கு முன்பாக, தரைமேல் நடத்தப்படும் ஆய்வின் (survey) மூலமாகவே இந்த இடங்கள் தீர்மானிக்கப்படும்.

கீழடி அகழாய்வு: அடுத்தது என்ன?

ஆனால், இந்த முறை அகழாய்வை துவங்குவதற்கு முன்பாக, செயற்கைக்கோள் மூலமாக எடுக்கப்பட்ட படங்கள் ஆராயப்பட்டன. அதற்குப் பிறகு மேக்னடோமீட்டர் (magnetometer)மற்றும் தெர்மோ மேப்பிங் (thermomapping)முறைகளை வைத்து நிலத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதற்குப் பிறகு நிலத்தை ஊடுருவிச் செல்லும் ரடார் (ground penetrating radar - GPR) ) மூலம் ஆய்வு நடத்தப்பட்டது.

முதலில், கீழடி மற்றும் அதனை ஒட்டியுள்ள கொந்தகை, அகரம், மணலூர் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வுகளை மேற்கொள்ள முடிவுசெய்யப்பட்டது. இதற்கு முன்பாக மத்தியத் தொல்லியல் துறை நடத்திய ஆய்வில் பானை ஓடுகள், உலோகக் கருவிகள் ஆகியவை கிடைத்திருந்த நிலையில், நிலத்தடியில் உள்ள தனிமங்களை அடையாளம் கண்டுவிட்டு, பிறகு அங்கு அகழாய்வு நடத்த முடிவுசெய்யப்பட்டது. அதன்படி களிமண், பெரஸ் ஆக்ஸைடு ஆகியவற்றைக் கண்டறியும் வகையிலும் நிலத்தடியில் உள்ள சுவர்களை கண்டறியும் வகையிலும் ஆய்வுகள் நடத்தப்பட்டன.

450 ஏக்கர் பரப்பில் பத்து முக்கியமான இடங்கள் இதற்காக அடையாளம் காணப்பட்டன. இதற்குப் பிறகு, மும்பையில் உள்ள இன்ஸ்டிடியூட் ஆஃப் ஜியோமேக்னடிசத்தைச் சேர்ந்த அதிகாரிகள் அந்த இடத்தை மேக்னெடோமீட்டர் மூலம் தரைவழியாக ஆய்வுசெய்தனர்.

ஜிபிஆர் ரடார் மூலம் நிலத்தடியை ஆய்வுசெய்யும் அதிகாரிகள் Image caption ஜிபிஆர் ராடார் மூலம் நிலத்தடியை ஆய்வுசெய்யும் அதிகாரிகள்

இந்த மேக்னடோ மீட்டர்களை வைத்து, கீழடியில் பூமிக்கடியில் புதைந்திருந்த 350 மீட்டர் நீளச் சுவர் கண்டறியப்பட்டது. இதற்குப் பிறகு நிலத்தடியை ஆராயும் ground penetrating radar (GPR) மூலம், அகழாய்வுக்குச் சரியான இடம் கண்டறியப்பட்டது.

இதிலிருந்து கிடைத்த முடிவுகளை வைத்துக்கொண்டு, தற்போது கீழடியில் நடந்துவரும் ஐந்தாம் கட்ட ஆய்வுகளில் கச்சிதமான இடங்களில் அகழாய்வுகள் செய்யப்படுகின்றன. தொடர்ந்து இந்தத் தொழில்நுட்பம் மேம்படுத்தப்பட்டுவருவதால், அடுத்தடுத்த ஆய்வுகளில் இன்னும் சிறப்பான முடிவுகளைப் பெற முடியுமென தொல்லியல் துறை நம்புகிறது.

கீழடியில் மட்டுமல்லாமல், தற்போது உலகம் முழுவதுமே அகழாய்வுகளைத் துவங்குவதற்கு முன்பாக, உள்ளே புதைந்திருக்கும் சுவர், கட்டட அமைப்புகள், பானைகள், செங்கல்கற்கள், கூரை ஓடுகள், தீமூட்டும் இடங்கள், பாதைகள், நினைவுக் கற்கள் ஆகியவற்றை கண்டறிய இம்மாதிரி மேக்னடோ மீட்டர்கள் பயன்படுத்தப்படுகின்றன.

கீழடிக்கு அடுத்து என்ன?

தமிழக அரசின் தொல்லியல் துறை வரும் 2019- 20 ஆண்டில் கீழடியிலும் அதனைச் சுற்றியுள்ள இடங்களிலும் அகழாய்வைத் தொடரவிருப்பதோடு, தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூர், சிவகளை ஆகிய இடங்களிலும் ஈரோடு மாவட்டம் கொடுமணலிலும் அகழாய்வுகளை நடத்த மாநில அரசு திட்டமிட்டுள்ளது. விரைவிலேயே கடலடி ஆகழாய்வுகளையும் செய்யத் திட்டமிட்டிருக்கிறது.

மேலும், வேலூர், தர்மபுரி, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு, விழுப்பரம், திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள வரலாற்றுக்கு முந்தைய, பழங்கற்காலத்தைச் சேர்ந்த இடங்கள் எவை என்பதை ஆராய்வதற்கான கள ஆய்வும் இந்த ஆண்டு நடத்தப்படவிருக்கிறது.

மேக்னடோமீட்டர் மூலம் ஆய்வுசெய்ததில் நிலத்தடியில் உள்ள சுவர் கண்டறியப்பட்டது. Image caption மேக்னடோமீட்டர் மூலம் ஆய்வுசெய்ததில் நிலத்தடியில் உள்ள சுவர் கண்டறியப்பட்டது

இதுதவிர, தாமிரபரணி ஆற்றின் இரு கரைகளிலும் தொல்லியல் தளங்களைக் கண்டறியும் ஆய்வும் நடத்தப்படவிருக்கிறது. இங்கு இடைக் கற்காலப் பகுதிகள் கண்டறியப்பட்டு, அவற்றில் ஆய்வுகளை மேற்கொள்ள மத்திய தொல்லியல் ஆலோசனை வாரியத்தின் நிலைக்குழு ஒப்புதல் அளித்த பிறகு பணிகள் துவங்கப்படவிருக்கின்றன.

மதுரைக்கு அருகில் உள்ள கீழடி பகுதியில் தற்போது ஆய்வுகள் நடந்துவரும் நிலையில், அதற்கு அருகில் உள்ள கொந்தகை, மணலூர், அகரம் போன்ற பகுதிகளிலும் அகழ்வாய்வுப் பணிகளை நடத்த மாநில அரசு திட்டமிட்டிருக்கிறது

ஆதிச்சநல்லூரில் தொடரவிருக்கும் ஆய்வு

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஆதிச்சநல்லூர் நீண்ட காலமாகவே தொல்லியல் ஆய்வுக்கான களமாக அடையாளம் காணப்பட்ட ஒரு இடம். இங்குள்ள புதைமேட்டில் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் 1876ஆம் ஆண்டிலும் 1904ஆம் ஆண்டிலும் அகழாய்வுகள் நடத்தப்பட்டிருக்கின்றன.

இதற்குப் பிறகு சமீபகாலத்தில், 2003 முதல் 2005ஆம் ஆண்டுவரை மத்திய தொல்லியல் துறை அகழாய்வுகளை மேற்கொண்டது. இருந்தபோதும் இது தொடர்பான ஆய்வறிக்கை இன்னும் மத்திய தொல்லியல் துறையிடம் சமர்ப்பிக்கவில்லை. இது தொடர்பாக வழக்குத் தொடரப்பட்டு, ஆய்வறிக்கையை சமர்ப்பிக்கும்படி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஏற்கனவே செய்யப்பட்ட அகழாய்வுகளில் முதுமக்கள் தாழிகள், மனித எலும்புகள், வெங்கலப் பாத்திரங்கள், இரும்புப் பொருட்கள், மட்பாண்டங்கள் உள்ளிட்டவை கிடைத்திருக்கின்றன. இந்த நிலையில் ஆதிச்ச நல்லூர் பகுதியில் தொடர்ச்சியாக அகழாய்வுப் பணிகளை மேற்கொள்ள தொல்லியல் துறை முடிவுசெய்துள்ளது.

நிலத்தடியில் உள்ள களிமண், இரும்பு போன்ற கனமங்களைக் காட்டும் வரைபடம் Image caption நிலத்தடியில் உள்ள களிமண், இரும்பு போன்ற கனமங்களைக் காட்டும் வரைபடம்

கடந்த கால ஆய்வுகளில் தொல்லியல் கால மக்கள் புதைக்கப்பட்ட மேடுகளே ஆய்வுக்குள்ளாக்கப்பட்ட நிலையில், தொல்லியல்துறை இனி மேற்கொள்ளவிருக்கும் ஆய்வில், மக்கள் வாழ்ந்த பகுதிகள், தொழிற்கூடங்கள் ஆகியவற்றை நோக்கி இந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்படவிருக்கின்றன.

கொடுமணலில் மீண்டும் தொல்லியல் ஆய்வு

ஈரோடு மாவட்டம் பெருந்துறை வட்டத்தில் நொய்யலாற்றின் கரையில் அமைந்துள்ள கொடுமணல் நீண்ட காலமாகவே தொல்லியல் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட ஒரு பகுதியாகும். 1985லிருந்தே மத்தியத் தொல்லியல் துறை, மாநில அரசின் தொல்லியல் துறை, தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகம் ஆகியவை அகழ்வுகளைச் செய்திருக்கின்றன. அந்த அகழ்வுகளில் பெருங்கற்காலம், வரலாற்றுத் தொடக்ககாலம் ஆகியவற்றைச் சேர்ந்த பல பொருட்கள் கண்டு பிடிக்கப்பட்டன.

கல்மணிகள், இரும்பு உருக்குப் பொருட்களைத் தயாரிக்கும் தொழிற்கூடங்கள் இங்கு இருந்ததும் கண்டறியப்பட்டது. தமிழ் பிராமி எழுத்துகளுடன் கூடிய பானை ஓடுகளும் இங்கே கிடைத்துள்ளன.

அதற்குப் பிறகு, இது தொடர்பான ஆய்வுகள் தொடராத நிலையில், இந்தப் பகுதியில் மீண்டும் ஆய்வுகளை நடத்த மாநில தொல்லியல் துறை முடிவுசெய்துள்ளது.

ஆய்வுகளைத் துவங்குவதற்கு முன்பாக ட்ரோன்கள் மூலம் நிலத்தின் மேற்பரப்பு முழுமையாகப் படமெடுக்கப்பட்டது Image caption ஆய்வுகளைத் துவங்குவதற்கு முன்பாக ட்ரோன்கள் மூலம் நிலத்தின் மேற்பரப்பு முழுமையாகப் படமெடுக்கப்பட்டது

ஆழ்கடல் ஆய்வுகள்

தொல்லியல் மேடுகளில் ஆய்வுகளை மேற்கொள்வது தவிர, ஆழ்கடல் பகுதிகளில் அகழ்வாராய்ச்சியில் ஈடுபடவும் மாநில தொல்லியல் துறை முடிவுசெய்துள்ளது. ஏற்கனவே பூம்புகார், கொற்கை, அழகன்குளம், வசவசமுத்திரம் ஆகிய பகுதிகளில் மாநில தொல்லியல் துறையால் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்த நிலையில், கிரேக்கம், ரோம், அரபு நாடுகளுடன் தமிழகத்திற்கு இருந்த வணிகத் தொடர்புகளை ஆராயும் வகையில் சங்ககாலம் மற்றும் இடைக்காலங்களில் துறைமுகங்கள் அமைந்திருந்த பகுதிகளில் ஆழ்கடல் ஆய்வுகளை மேற்கொள்ள மாநிலத் தொல்லியல்துறை திட்டமிட்டுள்ளது.

கடலியல் தேசிய நிறுவனத்துடன் இணைந்து இந்த ஆய்வுகள் நடத்தப்படவுள்ளன.

https://www.bbc.com/tamil/india-49790302

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: outdoor

Image may contain: outdoor

Image may contain: one or more people and outdoor

Image may contain: one or more people

நகர வாழ்க்கை, வாழ்ந்த... தமிழர்கள்.

கி.மு 580-ம் ஆண்டில் பயன்படுத்திய
சுடுமண்ணால் செய்யப்பட்ட கழிவு
நீர்போக்கி"பைப் லைன்"(Pipe line)!மற்றும்
இரண்டடுக்கு கழிவு போக்கி!!ஒன்று
மூடி வைக்கப்பட்டுள்ளது!!!மற்றொன்று
திறந்த வடிகால்.....மேலும்,விரிவான
படங்கள் கீழடியில் இருந்து கிடைப் பெற்றுள்ளன!!!!

உலகில்,இன்றைய கால கட்டத்தில் கூட சிறந்த கழிவு நீர் போக்கிகளை அமைத்து செயல்படுத்தமுடியாமல் இருக்கும் சூழ்நிலையில்,மனிதன் நாடோடியாக திரிந்த காலத்தில் 2,600 வருடங்களுக்கு முன்னால் அறிவியலையும் மிஞ்சும் திட்டமிட்ட நகர அமைப்பு வாழ்க்கை முறையை என்னவென்று சொல்வது....

இன்று,உலகமே கீழடியில் தமிழர்களி்ன் நகர வாழக்கை அமைப்பை பார்த்து வியந்து அதிசயித்து நிற்கிறது....

கீழடித் தொல்பொருள்களின் காலம் கிமு ஆறாம் (கிமு 600) நூற்றாண்டு என்பது உறுதியாகிவிட்டது. அந்த உறுதிப்பாடு உயர்த்திப் பிடிக்கும் தமிழ்நிலத்தின் வரலாற்றுப் பெருஞ்சிறப்புகள் யாவை ?
**
1. அப்போது புத்தர் பிறந்திருக்கவில்லை. புத்தர் கிமு 563ஆம் ஆண்டுதான் பிறக்கிறார். கீழடித் தொல்லகம் புத்தர் காலத்திற்கும் முந்தி நிற்கிறது. இந்திய வரலாற்றின் முதற்பக்கங்கள் மொகஞ்சதாரோ, அரப்பா, அடுத்து புத்தர், மகாவீரர் என்று தொடங்கும். சான்றுகளைக் கேட்கும் வரலாறு இனி வாயடைத்து நிற்கும். இந்திய வரலாற்றின் முதற்பக்கங்களில் தமிழர் நாகரிகத்தைப் பற்றி இனிக் கூறியாகவேண்டும்.

2. அப்போது அஜந்தாக் குகைகள் குடையப்பட்டிருக்கவில்லை. அஜந்தாக் குகைகளில் புத்தமதச் செல்வாக்கு மிக்கிருப்பதால் அவை புத்தர் காலத்திற்குப் பிறகே பெரும்பாலும் குடையப்பட்டன. அதன் பழைமையான குகையினைக் கிமு இரண்டாம் நூற்றாண்டு வரைக்கும் ஏற்றுக்கொள்கின்றனர். கீழடிச் சான்றுகள் அவற்றுக்கும் முந்தியன.

3. கபாடபுரத்திற்கு நேர்ந்த கடல்கோளின் பின்னர் இன்றைய மதுரை நகரத்திற்குப் பாண்டியர்கள் இடம்பெயர்ந்தனர். அங்கே தோற்றுவித்து வளர்க்கப்பட்டதே கடைச்சங்கம். கடைச்சங்கத்தின் காலம் கிமு இரண்டாம் நூற்றாண்டு என்பதற்கே பலர் பல்வேறு குறுக்கு வழக்குகளோடு வருவர். சான்றெங்கே, ஆதாரம் எங்கே என்று நிற்பர். இப்போது கிமு ஆறாம் நூற்றாண்டுத் தமிழ் எழுத்துகள் தெளிந்த சான்றுகளாகிவிட்டன.

5. ஆதன், சாத்தன் ஆகிய பெயர்கள் நம் இலக்கண உரைகளில் தொடர்ந்து மேற்கோள் காட்டப்படுகின்றன. ஆதனின் தந்தை ஆந்தை எனப்படுவார். சாத்தனின் தந்தை சாத்தந்தை எனப்படுவார். பிசிர் என்ற ஊரில் வாழ்ந்த ஆதனின் தந்தையே பிசிர் ஆந்தையார் எனப்பட்டார். அகநானூறு, புறநானூறு, நற்றிணை ஆகிய சங்க இலக்கிய நூல்களில் பிசிராந்தையார் பாடிய ஆறு பாடல்கள் இடம்பெற்றிருக்கின்றன. அவர் யாராயினும் ஆதன் என்ற பெயர் வைக்கும் பழக்கம் தொல் தமிழரிடையே பரந்திருந்தது என்பது வெள்ளிடைமலை. ஆதன் என்பதற்கு உயிர் என்று பொருள். உயிரன்.

6. ஒடிய மாநிலம் புவனேசுவரம் உதயகிரிக் குகைகளின் நெற்றியில் பொறிக்கப்பட்டுள்ள காரவேலனின் கல்வெட்டு பதின்மூன்று நூற்றாண்டுகளாய் நிலவிய சேர சோழ பாண்டியர்களின் கூட்டாட்சி வலிமையைக் கூறுகிறது. “தமிர தேக சங்காத்தம்” என்பது அக்கல்வெட்டினில் உள்ள தொடர். ஒடிய மன்னன் காரவேலன் அசோகருக்குப் பிறகு அப்பகுதியினை ஆண்டவன். கிமு இரண்டாம் நூற்றாண்டினைச் சேர்ந்தவன். “அக்கல்வெட்டினில் இருப்பது பதின்மூன்று நூற்றாண்டுகள் இல்லை, வெறும் பதின்மூன்று ஆண்டுகளாகத்தான் இருக்கவேண்டும்” என்ற வழக்கும் ஓடியது. கீழடியில் பெருந்தமிழர் நாகரிகம் செழித்து வளர்ந்திருக்கும் நிலைமையைக் காண்கையில் காரவேலன் கல்வெட்டு கூறுவது பதின்மூன்று நூற்றாண்டுகளாகவே இருக்க வேண்டும்.

7. வைகை ஆறு இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்பு பேராறாக நிறைந்து ஓடியிருக்க வேண்டும். அதன் கரைவெளி எங்கும் பாண்டியப் பேரரசில் பெருவாழ்வு வாழ்ந்த குடிகளின் தடயங்களைக் கண்டெடுத்திருக்கிறோம்.

8. எழுத்துமுறை தோன்றுவதற்கு முன்பே பல்லாயிரம் ஆண்டுகளாகப் பேச்சுமுறை நிலவியிருக்க வேண்டும். மொழித்தோற்றத்தின் இளமைக் காலம் இன்னும் பல நூற்றாண்டுகள் பின்னோக்கிச் செல்லும். அனைத்தையும் கொண்டு கூட்டிப் பார்க்கையில் தமிழ் மொழியின் தொன்மையைப் பகரும் சான்றுகள் பல பல்லாயிரம் ஆண்டுகட்கு முந்தியவை என்பது தெளிவாக நம் கண்ணுக்கே தெரிகிறது.

9. கீழடியில் தங்க அணிகள் கிடைத்திருக்கின்றன. தொலைவுத் தேயங்களிலிருந்து வருவிக்கப்பட்ட மணிகள் கிடைத்திருக்கின்றன. மண்ணைக் கொண்டு பாண்டங்கள் செய்தல் என்னும் தொழில்நுட்பம் சிறப்படைந்திருக்கிறது. இருப்புப் பொருள்களும் பல்வேறு மாழைப் பொருள்களும் (உலோகம்) பயன்பாட்டுக்கு வந்திருக்கின்றன. தனிப்பான்மையான குடிவாழ்வின் தன்னிகரற்ற வரலாற்று வளர்ச்சி நிலைகள் இவை.

10. இன்றைய நிலைப்பாட்டிலிருந்து வரலாற்றினைப் பார்ப்பது தவறு. மதங்கள், சாதிகள், பழக்கவழக்கங்கள், பண்பாடுகள் என இன்று நாம் பற்றிப் பழகியிருக்கும் சிறுகண்களைக்கொண்டு பழைமையில் தேடுவது நன்றன்று. ஒற்றை நிலையில் ஒரு நிலத்தின் வரலாறும் அமையாது. காலப்போக்கில் அது பல்வேறு நிலைகளுக்கு முகங்கொடுத்தாக வேண்டும். நம் வரலாறெங்கும் அவ்வாறே நிகழ்ந்தது. எது எப்படியாயினும் அன்றைக்கும் இன்றைக்கும் இக்குடிவாழ்வின் பற்றுதலாக இருப்பது ஒன்றேயொன்று. அதுதான் முன்னைப் பழையதும் பின்னைப் புதியதுமான தமிழ்மொழி !

-- Kingdom Joker - பாணபத்திர ஓணாண்டி --

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கீழடி - சிந்து சமவெளி - சங்க இலக்கியம்: இணைக்கும் புள்ளி எது? விவரிக்கிறார் ஆர். பாலகிருஷ்ணன்

  •  
கீழடி

கீழடி அகழாய்வு முடிவுகள் குறித்த விவாதங்கள் தீவிரமடைந்திருக்கின்றன. இந்த நிலையில், சென்னை ரோஜா முத்தைய்யா நூலகத்தில் உள்ள சிந்துவெளி மையத்தின் கௌரவ ஆலோசகரும் சிந்துவெளி தொடர்பான ஆய்வுகளில் ஈடுபட்டு வருபவருமான ஆர். பாலகிருஷ்ணனிடம் கீழடி ஆய்வு முடிவுகளின் முக்கியத்துவம் குறித்து பேசியினார் பிபிசியின் செய்தியாளர் முரளிதரன் காசி விஸ்வநாதன். பேட்டியிலிருந்து:

கே. கீழடி முடிவுகள் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகின்றன. தற்போது தமிழக அரசு வெளியிட்டிருக்கும் முடிவுகள் குறித்து என்ன நினைக்கிறீர்கள்?

ப. இப்படி பரபரப்பாக விவாதிக்கப்படுவதற்குக் காரணமே, சமீப காலமாக இம்மாதிரி அகழாய்வு முடிவுகள் எதுவும் வெளிவரவில்லை என்பதுதான். ஆதிச்ச நல்லூரில் 1904ல் அலெக்ஸாண்டர் ரீ ஆய்வு மேற்கொண்டதற்குப் பிறகு, மீண்டும் 2004ல்தான் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

அதனால், அதனுடைய விரிவான விளக்கங்கள் யாருக்கும் தெரியவில்லை. ஆனால், கீழடி துவக்கத்திலிருந்தே பொதுமக்களின் கவனத்தை ஈர்த்திருப்பதால், இப்போது வெளியாகியிருக்கும் முடிவுகள் எல்லோரது கவனத்தையும் கவர்ந்திருக்கிறது.

2010ல் கோவையில் நடந்த செம்மொழி மாநாட்டில் ஐராவதம் மகாதேவன், அஸ்கோ பர்போலா முன்பாக நான் சிந்துவெளி தொடர்பாக ஒரு ஆய்வுக்கட்டுரையை முன்வைத்தேன்.

ஆர். பாலகிருஷ்ணன் Image caption ஆர். பாலகிருஷ்ணன்

கொற்கை - வஞ்சி - தொண்டி போன்ற தமிழகத்தில் உள்ள இடப்பெயர்கள், சிந்துவெளிப் பகுதியில் அடையாளம் தெரியாத இடப்பெயர்களாக இப்போதும் இருப்பதைக் கண்டறிந்து, என்னுடைய ஆய்வை அப்போது முன்வைத்தேன். அஸ்கோ பர்போலா, சங்காலியா, ஐராவதம் மகாதேவன், சவுத்வர்த் ஆகிய அறிஞர்கள் ஏற்கனவே இடப்பெயர்களை வைத்து சிந்துவெளி ஆய்வுகளை நடத்த முடியும் எனக் கூறியவர்கள்தான்.

அதைத்தான் நானும் பின்பற்றினேன். அப்போதுதான் கொற்கை - வஞ்சி - தொண்டி இடப்பெயர்கள் இருந்தன. ஆனால், அப்போதும்கூட வெறும் இடப்பெயர் சார்ந்த ஒரு ஆய்வாகத்தான் இது இருந்ததே தவிர, அகழ்வாராய்ச்சி சார்ந்த ஆதாரம் ஏதும் இருந்திருக்கவில்லை. அம்மாதிரியான ஒரு ஆதாரத்தை கீழடி கொடுத்திருக்கிறது.

கே. கீழடியையும் சிந்து சமவெளி நாகரிகத்தையும் நீங்கள் எப்படி தொடர்புபடுத்துகிறீர்கள்?

ப. சிந்து சமவெளி நாகரீகத்தின் முதிர்ச்சியான காலகட்டம் கி.மு. 2500. அது நலிவடைய ஆரம்பிப்பது கி.மு. 1900 காலகட்டத்தில். இப்போது கீழடியில் கிடைத்த தமிழி என்ற தமிழ் பிராமி எழுத்து கிட்டத்தட்ட கி.மு. ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்தது எனக் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. ஆதிச்சநல்லூரில் செய்யப்பட்ட தெர்மோலூமிசென்ஸ் உள்ளிட்ட ஆய்வுகளில் அது கி.மு. எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தது எனக் கண்டறியப்பட்டிருக்கிறது. நாம் சங்ககாலம் கி.மு. ஆறாம் நூற்றாண்டு என வரையறுக்கிறோம். அதிலிருந்துதான் தமிழகத்தில் வரலாற்றுக் காலம் துவங்குகிறது.

கீழடி

இப்போது ஒரு கேள்வி நியாயமாகவே எழுகிறது. சிந்துச் சமவெளி நாகரிகம் நலிவடைந்தது கி.மு. 1,900ல். தமிழக வரலாற்றுக் காலம் கி.மு. 600ல் துவங்குவதாக வைத்துக்கொள்வோம். அப்படியானால் கி.மு. 1,900க்கும் கி.மு. 600க்கும் இடையில் சுமார் 1,300 ஆண்டுகால இடைவெளி இருக்கிறது.

அதேபோல, மொஹஞ்சதாரோ - ஹரப்பா போல, குஜராத்தில் சிந்துவெளி நகரங்களாக தேசல்பூர், லோதல், தோலாவிரா ஆகிய இடங்கள் இருக்கின்றன. அதற்குத் தெற்கே மகாராஷ்டிராவில் தைமாபாத் என்ற இடம் இருக்கிறது. 1960களின் துவக்கத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த இடம்தான் சிந்துவெளி நாகரிகத்தின் தெற்கு எல்லையாகக் கருதப்பட்டது. அதற்குத் தெற்கே சிந்துவெளி தொடர்பாக எந்த இடமும் இதுவரை கண்டறியப்படவில்லை.

சிந்துவெளி லட்சக்கணக்கான மக்கள் வாழ்ந்த இடம். அவர்கள் எங்கே போனார்கள் என்பது முக்கியமான கேள்வி. அந்த நாகரீகம் ஏன் அழிந்தது, எப்படி அழிந்தது என்ற விவாதம் இப்போது தேவையில்லை.

ஆனால், அங்கு வாழ்ந்தவர்கள் என்ன ஆனார்கள்? சிலர் அங்கேயே தங்கியிருந்திருப்பார்கள். சிலர் வேறு இடங்களுக்குப் போயிருப்பார்கள். வேறு மொழிகளைப் பேச ஆரம்பித்திருப்பார்கள். வேறு பண்பாடுகளைக் கடைப்பிடிக்க ஆரம்பித்திருப்பார்கள். அப்படி வெளியேறியவர்கள் அப்போதிருந்த அடையாளங்களைத் தொடர்ந்து தக்கவைத்திருப்பார்கள். அல்லது எடுத்துப் போயிருப்பார்கள். ஆனால், கட்டடங்களைஅவர்களால் எடுத்துச் சென்றிருக்க முடியாது. நினைவுகளையும் பெயர்களையும்தான், குறிப்பாக இடப்பெயர்களை எடுத்துப்போயிருப்பார்கள். நம்பிக்கைகள், பண்பாட்டுக் கூறுகள் ஆகியவையும் மாறாமல் இருந்திருக்கும்.

இந்தியாவில் ஆராய்ச்சியைப் பொறுத்தவரை இரண்டு விஷயங்கள் புரியாத புதிராக இருக்கிறது. முதல் கேள்வி, சிந்து வெளி மக்கள்பேசிய மொழி என்ன, அவர்கள் யார், அவர்கள் நாகரிகம் எப்படி அழிந்தது? இரண்டாவது கேள்வி, இந்தியாவைப் பொறுத்தவரை அவ்வளவு முக்கியமான கேள்வி இல்லையென்றாலும் தமிழர்களுக்கு முக்கியமான கேள்வி.

தமிழர்களுக்கு எப்போதுமே தம்முடைய தோற்றம், தாம் எங்கிருந்து வந்தோம் என்ற கேள்வி இருந்துகொண்டேயிருக்கிறது. சிலர் மத்திய தரைக்கடல் என்று சொல்வார்கள். சிலர் குமரிக் கண்டம், லெமூரியாக் கண்டம் என்று சொல்வார்கள். ஆனால், தோற்றம் குறித்து தமிழர்களிடம் ஒரு கூட்டு மனநிலை இருந்துகொண்டே இருக்கிறது. முதல் சங்கம், கடைச் சங்கம், கடற்கோள், அழிவு, புலம்பெயர்வு என தங்கள் தோற்றம் குறித்த கேள்வி அவர்களுக்கு இருந்துகொண்டே இருக்கிறது.

சிந்துவெளி எப்படி அழிந்தது, தமிழர்கள் எங்கிருந்து வந்தார்கள் ஆகிய இரண்டு கேள்விகளுமே வெவ்வேறான, தொடர்பில்லாத கேள்விகளைப் போல இருக்கின்றன. ஆனால், என்னைப் பொறுத்தவரை இந்த இரண்டு கேள்விகளுமே ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை. ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள். இதில் ஒரு புதிருக்கு தெளிவான விடை கிடைத்தால், இன்னொரு புதிருக்கும் விடை கிடைத்துவிடும்.

கே. இந்த ஆய்வு முடிவுகளை வைத்து, சங்க காலம் மூன்று நூற்றாண்டுகள் பின்னோக்கிச் செல்வதாகச் சொல்லப்படுகிறது. அவ்வாறு எப்படிச் சொல்ல முடியும்?

ப. நாம் வரலாற்றுக் காலம், வரலாற்றுக்கு முந்தைய காலம் எனப் பிரிப்பது எழுத்து தோன்றியதைவைத்துதான். எழுத்தின் தோற்றம்தான் இரண்டையும் பிரிக்கிறது. தமிழகத்தில் வரலாற்றின் துவக்க காலம் என்பது தமிழ் பிராமி என்ற தமிழி எழுத்துகள் கி.மு. மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என்ற கருதுகோள் இருந்தது. சங்க இலக்கியத்தையும் இந்த காலகட்டத்தைச் சேர்ந்ததாகத்தான் கருதினார்கள்.

ஆனால், இம்மாதிரி ஒரு இலக்கியம் எழுதப்படுவதற்குப் பின்னணியில் ஒரு சிறப்பான மரபு இருந்திருக்க வேண்டும். தொல்காப்பியத்தில் பல நூல்கள் மேற்கோள் காட்டப்படுகின்றன. அந்த நூல்கள் நமக்கு கிடைக்கவில்லை. ஒரு பெரிய இலக்கிய மரபு இருந்தால்தான் தொல்காப்பியம் போன்ற ஒரு நூலை எழுத முடியும். சங்க இலக்கியம்கூட திடீரெனத் தோன்ற முடியாது. சங்க இலக்கியத்தில் சொல்லப்படுவது நிகழ்காலப் பதிவுகள் அல்ல. கடையேழு வள்ளல்களைப் பற்றிப் பேசுகிறோம் என்றால், அவர்கள் எல்லாம் ஒன்றாகச் சேர்ந்து வாழ்ந்ததாக அர்த்தமல்ல. சமகாலப் பதிவாகவும் இருந்திருக்கலாம். அல்லது அதற்கு முந்தைய காலகட்டத்தைச் சேர்ந்த நினைவுகளாகவும் இருந்திருக்கலாம். ஆக, அந்த நிகழ்வுகளுக்கு, அது பற்றி இலக்கியத்திற்கு வயதை நிர்ணயிப்பது மிகக் கடினம்.

கீழடி

இப்போது கீழடியில் கிடைத்த பொருட்கள்,குறிப்பாக எழுத்துகள் கிடைத்த அதை படிவத்தில் கிடைத்த சில பொருட்கள் கரிம ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டு அவற்றின் வயது கி.மு. 580 எனக் கண்டறியப்பட்டுள்ளது. ஆகவே எழுத்தறிவு இருந்த காலம் அல்லது சங்க காலம் என்பது கங்கைச் சமவெளியில் வரலாறு துவங்கிய காலத்திற்கு சமமாக இருக்கிறது.

சிந்து சமவெளி நாகரிகத்தின் தொடர்ச்சியை இந்தியாவில் எந்த இலக்கியத்தில் அதிகமாக பார்த்தறிய முடியும் என்ற கேள்வியை முன்வைத்தால், அதாவது சிந்துவெளி தொடர்பான நினைவுகளைக் கொண்ட இலக்கியம் எங்கிருக்கிறது என்று பார்த்தால் சங்க இலக்கியத்தில்தான் இருக்கிறது. சங்க இலக்கியத்தைப் போல நகரங்களைக் கொண்டாடிய இலக்கியம் வேறு இல்லை.

நகர வாழ்க்கை மட்டுமல்ல, ஒரு வகையான பல்லின மக்கள் சேர்ந்து வாழக்கூடிய ஒரு வாழ்க்கை, கடல் வணிக மரபு, தாய்த் தெய்வ வழிபாடு, விளையாட்டுக்கான முக்கியத்துவம் ஆகியவை அந்த நாகரீகத்தின் குணாதிசயங்களைக் குறிப்பிடும் குறீயீடாக நம் முன் நிற்கின்றன. அப்படி சிந்துவெளிக்கென்று சில விஷயங்களை நாம் அடையாளமாகக் குறிப்பிட்டால், அந்த நான்கைந்து விஷயங்கள் காத்திரமாகப் பேசப்பட்டது சங்க இலக்கியத்தில்தான். அதற்குப் பிறகு இதுபோன்ற குணாதிசயங்களுடன் பொருட்கள் கிடைப்பது கீழடியில்தான். அதனால்தான் சிந்துச் சமவெளி - சங்க இலக்கியம் - கீழடி ஆகிய மூன்றையும் ஒரு புள்ளியில் இணைக்கிறோம்.

பத்தாண்டுகளுக்கு முன்பாக கொற்கை - வஞ்சி - தொண்டி குறித்துப் பேச ஆரம்பிக்கும்போது இப்படி கீழடி போல ஒரு இடம் கிடைக்குமென யாரும் நினைக்கவில்லை. தவிர, கீழடி கிடைத்திருக்கும் இடத்தைப் பார்ப்போம். இந்த இடம் மதுரைக்கு அருகில் இருக்கிறது. மதுரை ஒரு சாதாரணமான நகரமல்ல. சங்க இலக்கியத்தில் மதுரைக் காஞ்சி என ஒரு தனி இலக்கியம் இருக்கிறது. அதில் மட்டுமல்லாமல் சங்க இலக்கியத்தின் பல இடங்களில் மதுரையும் நான்மாடக் கூடலும் பேசப்படுகிறது. பரிபாடல் வைகையைப் பற்றிப் பேசுகிறது.

கீழடி

தமிழுக்கும் மதுரைக்கும் இடையிலான தொடர்பு சங்க இலக்கியத்தில் பேசப்படுகிறது. சங்கப் புலவர்களின் பெயர்கள் ஊர்களை வைத்தே அறியப்பட்டன. அப்படி அதிக புலவர்கள் இருந்தது மதுரையில்தான். "மாங்குடி மருதன் தலைவன் ஆக, - உலகமொடு நிலைஇய பலர்புகழ் சிறப்பின் புலவர் பாடாதுவரைக என் நிலவரை" என புறநானூறில் ஒரு பாடல் வருகிறது. அப்படியானால், ஒரு புலவரை தலைவனாக வைத்து மற்ற புலவர்கள்கூடி, கவிதைகள் குறித்து பேசுவது, விவாதிப்பது என்பது சங்க இலக்கியத்தில் பதிவாகியிருக்கிறது.

மதுரையைச் சுற்றி நிறைய இடங்களில் தமிழ் - பிராமி கல்வெட்டுகள் கிடைத்திருக்கின்றன. அந்த நகரம் இடைக்கால இலக்கியத்திலும் பக்தி இலக்கியத்திலும் வருகிறது. ஆகவே அந்த நகரத்திற்கு 2600 வருட தொடர்ச்சி இருக்கிறது. அப்படி ஒரு நகரத்திற்கு அருகில் அகழாய்வில் ஒரு நகர நாகரீகம் கிடைப்பது சாதாரணம் கிடையாது. ஆகவே, நம் தொன்மத்திலிருக்கும் சில மரபுகளை இந்த ஒற்றுமை இணைக்கிறது. அதுதான் இதில் முக்கியம்.

கே. கீழடியில் பெரும் எண்ணிக்கையில் பானை ஓடுகளில் கீறல்கள் கிடைத்திருக்கின்றன. 1001 பானை ஓடுகள் இப்படிக் கிடைத்திருக்கின்றன. இதற்கு என்ன முக்கியத்துவம்?

ப. எழுத்து வடிவத்தை எடுத்துக்கொண்டால், இந்தியத் துணைக் கண்டத்திலேயே மிகப் பழைய எழுத்துவடிவம் சிந்துவெளி எழுத்துவடிவம்தான். சிந்துவெளி எழுத்துகளை இன்னும் நம்மால் படிக்க முடியவில்லை. பொதுவாக, படிக்க முடிந்த எழுத்துகளுக்கு அருகில், படித்தறிய முடியாத எழுத்துகள் கிடைத்தால், இதைவைத்து அதைப் படிக்க முடியும். சுமேரியாவில் அப்படித்தான் படிக்க முடிந்தது. ரொஸட்டா ஸ்டோன் என்ற இருமொழி கல்வெட்டின் உதவியுடன் அவை படிக்கப்பட்டன. ஆனால், சிந்துவெளியில் அப்படி ஒரு விஷயம் கிடைக்காததால், சிந்துவெளியைப் படிக்க முடியவில்லை.

கீழடி

அதற்கடுத்து, அசோகன் பிராமியும் தமிழ் பிராமியும் கிடைத்திருக்கின்றன. இவற்றைப் படிக்க முடியும். இவை இரண்டுக்கும் நடுவில் ஒரு இணைப்புச் சங்கிலி இருந்திருக்க வேண்டும். அவைதான் பானையில் செய்யப்பட்ட கீறல்கள் (Graffiti markers). இந்தக் கிறுக்கல்கள் இரண்டுவிதமாக இருக்கும். பானையைச் செய்தவர் எழுதியிருப்பார். அது பானை ஈரமாக இருக்கும்போதே எழுதப்பட்டிருக்கும். வாங்கியவர் எழுதியிருந்தால், பானை சுடப்பட்ட பிறகு எழுதப்பட்டிருக்கும். கீழடியில் கிடைத்திருப்பது இரண்டாவது வகையைச் சேர்ந்தது. அப்படி எழுதக்கூடியவர்கள் நிறையப் பேர் இருந்திருக்க வேண்டும். அவர்கள் பெரிய அளவில் கற்றறிந்தவர்களாகவோ, புலவர்களாகவோ இருந்திருக்க வேண்டியதில்லை. சாதாரண மக்களாகவும் இருக்கலாம்.

இந்த பானைக் கீறல்களை சிந்துவெளி முத்திரைகளுக்கும் தமிழ் பிராமி எழுத்துகளுக்கும் இடையிலான ஒரு இணைப்புச் சங்கிலியாக நாம் பார்க்க முடியும். இந்தப் பானைக் கீறல்களில் சிந்துவெளியில் உள்ள கீறல்களைப் போன்ற கீறல்களும் சில பானை ஓடுகளில் கிடைத்திருக்கின்றன. ஆகவே அதன் தொடர்ச்சியாகவும் இதைப் பார்க்க முடியும். மேலும், இம்மாதிரி கீறல்களுடன் கூடிய பானை ஓடுகள், இந்தியாவின் பிற பகுதிகளிலும் தமிழகத்திலும் இலங்கையிலும் கிடைத்திருக்கின்றன. அவற்றில் 75 சதவீதம் தமிழகத்தில்தான் கிடைத்திருக்கிறது.

கீழடியில் மட்டுமல்ல, கொற்கை, அழகன் குளம் ஆகியவற்றிலும் இம்மாதிரி பானை ஓடுகள் கீறல்களுடன் கிடைத்திருக்கின்றன. கீழடியில், தமிழ் பிராமி கிடைத்த படிநிலைக்குக் கீழே இவை கிடைத்திருக்கின்றன. ஆகவே, அவை தமிழ் பிராமிக்கு முந்தைய காலமாக இருக்கலாம். ஆகவே இந்தக் கீறல்கள் மிக முக்கியமானவை.

கே. கீழடியில் சமய வழிபாடு சார்ந்த பொருட்கள் கிடைக்கவில்லையென ஆய்வறிக்கை கூறுகிறது. ஆகவே அங்கு வாழ்ந்த மக்கள் சமய நம்பிக்கை, கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் எனச் சொல்ல முடியுமா?

ப. அப்படிச் சொல்ல முடியாது. கீழடியில் அகழாய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட இடம் 110 ஏக்கர். வைகை நதிக்கரையில் இதுபோல 293 இடங்கள் இப்படி அடையாளம் காணப்பட்டுள்ளன. இதில் இதுவரை கீழடியில் மூன்று - நான்கு ஏக்கர்கள்தான் தோண்டப்பட்டிருக்கின்றன. மீதியைத் தோண்டும்போது என்ன கிடைக்குமெனத் தெரியாது. இப்போதுவரை வழிபாட்டுக்கூடம் போன்றவற்றுக்கான ஆதாரம் கிடைக்கவில்லை.

ஆனால், இது சங்க காலத்துடன் தொடர்புடைய இடம் என்பதால் இதை எச்சரிக்கையுடன்தான் அணுக விரும்புவேன். சங்க கால மக்களை வழிபாடு அற்றவர்கள் எனச் சொல்ல முடியாது. சங்க இலக்கியமே, குறிஞ்சி, முல்லை, மருதம் என ஐவகையாகப் பிரிக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு இடத்திற்கு ஒரு கடவுள் இருந்தார்கள். தவிர, நடந்து செல்லும் பாதையைப் பாதுகாக்கும் தெய்வங்கள், மரத்தில் இருக்கும் தெய்வங்கள், காட்டில் உள்ள தெய்வங்கள் இருந்தன. பெரும்பாலும் தாய்த் தெய்வ வழிபாடு இருந்தது. இதற்கான ஆதாரம் பிறகு கிடைக்கலாம்.

கீழடி

ஆனால், நாம் முக்கியமாகக் கவனிக்க வேண்டியது இம்மாதிரியான வழிபாடு அந்த சமூகத்தின் மையப்பொருளாக இல்லை என்பதைத்தான். சங்க இலக்கியத்தை முழுதாகப் படித்துப் பார்த்தால், அந்தக் கால வாழ்க்கை என்பது, Celebration of lifeஆகத்தான் இருந்திருக்கிறது. அந்த இலக்கியம் வாழ்க்கையைக் கொண்டாடுகிறது. தினசரி வாழ்வைக் கொண்டாடுகிறது. இப்போது கிடைத்திருக்கும் பொருட்கள் அந்த வாழ்வை உறுதிப்படுத்துகின்றன. ஆனால், எதிர்கால ஆகழாய்வுகள் என்ன சொல்கின்றன என்று பார்க்க வேண்டும்.

கே. கீழடியில் விளையாட்டுப் பொருட்கள் அதிகம் கிடைத்திருப்பது குறித்து அதிகம் பேசப்படுகிறது. அதில் என்ன முக்கியத்துவம்?

ப. அதில் இரண்டு மூன்று விஷயங்கள் இருக்கின்றன. அந்த மக்கள் நிலையான வாழ்வை வாழ்ந்தவர்களாக இருப்பார்கள். அவர்கள் பொருளாதாரம் உபரிப் பொருளாதாரமாக இருக்க வேண்டும். உள்நாட்டு வணிகம் - வெளிநாட்டு வணிகம் ஆகிய இரண்டுக்கும் கீழடியில் ஆதாரம் கிடைத்திருக்கிறது. ஆகவே, இங்கு வேளாண்மை சார்ந்த, கால்நடை வளர்ப்பு சார்ந்த, வணிகம் சார்ந்த ஒரு பொருளாதாரம் இருந்திருக்க வேண்டும். அதில் உபரி இருந்திருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வரலாம். அப்போதுதான் விளையாட்டிற்கு நேரம் கிடைக்கும். அது நாகரிகத்திற்கான முக்கியமான அடையாளம். சிந்துவெளியிலும் இதுபோல விளையாட்டுப் பொருட்கள் கிடைத்திருக்கின்றன. தவிர, சங்க இலக்கியம் விளையாட்டுகள் குறித்து நிறையப் பேசுகிறது. அதை உறுதிப்படுத்துவது போல இந்தப் பொருட்கள் இருக்கின்றன.

கீழடி

கே. கீழடி குறித்துப் பேசும்போது ஆதிச்சநல்லூர் பற்றியும் குறிப்பிடப்படுகிறது. அந்த இடம் தொல்லியல் ரீதியில் எவ்வளவு முக்கியமான இடம்?

ப. அலெக்ஸாண்டர் ரீ முதன் முதலில் 1904ல் ஆதிச்சநல்லூரில் அகழாய்வைத் துவங்கியபோது, சிந்துச்சமவெளியே கண்டறியப்படவில்லை. 1920களில்தான் சிந்துவெளியில் ஆர்.டி. பேனர்ஜி, எம்.எஸ். வாட்ஸ் ஆகியோர் அகழாய்வில் ஈடுபட்ட பிறகு, சர் ஜான் மார்ஷல் சிந்துவெளி குறித்த ஒரு அறிக்கையை கொண்டுவருகிறார். அலெக்ஸாண்டர் ரீ அந்த காலகட்டத்தில் அதை ஒரு புதைமேடாகத்தான் பார்த்தார். அதாவது, இறந்தவர்களைப் புதைப்பதற்கான ஒரு இடமாகப் பார்த்தார். ஆனால், அப்போதே அவர் 30 இடங்களில் இங்கு அகழாய்வு மேற்கொள்ள முடியுமென கண்டறிந்தார்.

ஆனால், அதற்குப் பிறகு 100 வருடம் அங்கு ஏதும் ஆய்வுகள் செய்யப்படவில்லை என்பது ஆச்சரியகரமானது. 2004ல் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டாலும், ஆய்வு முடிவு தற்போதுவரை வெளியாகவில்லை.

ஆனால், கீழடி, ஆதிச்சநல்லூர் ஆகியவற்றைத் தனித்தனியாகப் பார்க்க வேண்டியதில்லை. தமிழகத்தில் உள்ள பல நதிக்கரைகளில் ஆய்வுகளை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. தமிழக அரசைப் பொறுத்தவரை ஆதிச்சநல்லூரிலும் ஆய்வுகள் நடக்குமெனச் சொல்லியிருக்கிறார்கள். அது மகிழ்ச்சியளிக்கிறது.

https://www.bbc.com/tamil/india-49802510

  • Like 1
Link to comment
Share on other sites

இத் திரி கீழடி தொடர்பான அனேகமான விபரங்களின் தொகுப்பாக இருப்பதனால் இதன் தலைப்பை 'கீழடி அகழாய்வும் தமிழர் நாகரீகமும் வரலாறும்' என மாற்றியுள்ளேன். இத் தலைப்பை விட பொருத்தமனா தலைப்பு உங்களுக்கு தோன்றினால் தனி மடலில் தொடர்பு கொள்ளவும்.

கீழடி தொடர்பான செய்திகளை பிரசுரிப்பவர்கள் தனித்திரியில் புதிய செய்திகளை/ தகவல்களை பதிந்தால், இந்த திரியிலும் வந்து ஒட்டினால், இது ஒரு செய்தி இரண்டு இடங்களில் இருப்பினும்,  இத் திரி கீழடி தொடர்பான தகவல்களின் பெரும் தொகுப்பாக அமையும்.

 

Link to comment
Share on other sites

இந்தத் திரியிலுள்ள படங்களைப் பார்க்கும்போது ஆய்வுகள் நேர்த்தியான முறையில் செய்யப்படுகின்றனவா என்ற கவலையே ஏற்படுகிறது. கீழடி தமிழர்க்ககளின் விலைமதிக்க முடியாத சொத்து. அகழ்வாராச்சியில் ஏற்படும் தவறுகள் ஈடுசெய்ய முடியாதவையாக இருக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடர்ந்து கீழடி அகழ்வாராய்ச்சி சம்பந்தமாக வியத்தகு படங்களையும்,செய்திகளையும் இணைத்து கொண்டுவரும் அனைவருக்கும் நன்றிகள். தொடருங்கள்.......!  👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கீழடி நாகரிகம்: ஆதிச்சநல்லூரில் அகழ்வாய்வு நடந்த இடம் இப்போது எப்படி இருக்கிறது தெரியுமா?

#GroundReport

பிரமிளா கிருஷ்ணன் பிபிசி தமிழ்

தூத்துக்குடி மாவட்டத்தில் மத்திய தொல்லியல் துறையால் அகழ்வாய்வு செய்யப்பட்ட ஆதிச்சநல்லூர் கிராமத்தில் இருந்து பல முதுமக்கள் தாழிகள் மற்றும் மண்டைஓடுகள் கண்டெடுக்கப்பட்டு ஒரு தசாப்தத்திற்கு பிறகும் கண்டுபிடிப்புகள் உள்ளூரில் காட்சிப்படுத்தப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஆதிச்சநல்லூர்

பத்தாண்டுகளுக்கு முன்னர் நூற்றுக்கணக்கான எலும்புக்கூடுகள், மண்டைஓடுகள் மற்றும் முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்ட ஆதிச்சநல்லூரில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு குறித்த முதல்கட்ட அறிக்கைகூட மத்திய அரசு வெளியிடாமல் உள்ளது என்கிறார்கள் பண்பாட்டு ஆர்வலர்கள்.

'மத்திய,மாநில அரசுகளின் கவனமின்மை'

தமிழக அரசால் ரூ.22லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள முதுமக்கள் தாழி தகவல் மையம் பயன்பாடு இல்லாமல், மதுஅருந்தும் இடமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பதை நேரில் பார்த்தபோது அறிந்துகொள்ள முடிந்தது.

பிபிசிதமிழ் செய்திக்காக ஆதிச்சநல்லூர் கிராமத்தில் உள்ள அந்த மையத்திற்கு நாம் சென்றபோது அந்த மையத்தின் வெளிப்புற கதவுகள் திறந்தே இருந்தன.

பாதுகாவலர் யாரும் இன்றி, பயன்பாட்டில் இல்லாத முதுமக்கள் தாழி மையத்தின் ஜன்னல் திறந்து இருந்தது. அதன் வழியாக பார்த்தபோது, சில உடைந்த பொருட்கள் அந்த அறையில் சிதறிக்கிடந்தன.

முதுமக்கள் தாழி மையத்தின் தரை தளத்தில் மது பாட்டில்கள் கிடந்தன . மாலை நேரத்தில் சிலர் அந்த மையத்தில் வந்து மது அருந்துவதாகவும் உள்ளூர்வாசிகள் கூறுகின்றனர்.

ஆதிச்சநல்லூர் முதுமக்கள் தாழி மையம் Image caption ஆதிச்சநல்லூர் முதுமக்கள் தாழி மையம்

கீழடி விவகாரத்தில் அக்கறை காட்டுவதாக சொல்லும் தமிழக அரசு, ஆதிச்சநல்லூரை மறந்துவிட்டது என்கிறார் சமூக ஆர்வலர் ஜபார்.

''முதுமக்கள் தாழி மையம் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளது. ஒரு ஊரில் கிடைத்த பொருட்களை அந்த ஊரில் காட்சிப்படுத்தவேண்டும் என்பது விதி. பல ஆண்டுகள் ஆன பின்னரும் அதற்கான முயற்சிகளை மத்திய மற்றும் மாநில அரசுகள் மேற்கொள்ளாதது கண்டிக்கத்தக்கது. ஆதிச்சநல்லூரில் முதுமக்கள் தாழிகள் காட்சிப்படுத்தப்பட்டால், இங்குள்ள மாணவர்களுக்கும் பயனளிக்கும் மையமாக இந்த இடத்தை மாற்றமுடியும்,'' என்றார்.

மாநில தொல்லியல் துறை அமைச்சரின் பதில்

தொல்லியல் துறை அமைச்சர் மாபா பாண்டியராஜனிடம் கேட்டபோது உடனடியாக அந்த மையத்தை சரிசெய்ய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். ''முதுமக்கள் தாழி மையம் இருக்கும் நிலையை உணர்த்தும் படங்களை அனுப்புங்கள். உடனடியாக இந்த விவகாரத்தை கவனிப்பேன். தமிழகம் முழுவதும் அகழ்வாய்வு பணிகளில் கிடைத்த பொருட்களை காட்சிப்படுத்தும் வேலை நடந்துவருகிறது. நிச்சயம் இதை சரிசெய்யலாம்,'' என்று அமைச்சர் பாண்டியராஜன் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்

ஆங்கிலேயர் காலத்தில் தொடங்கிய அகழ்வாய்வு

ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் வழக்கு நடத்திவரும் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு ஆதிச்சநல்லூரில் 1902ல் அலெக்சாண்டர் ரியா என்பவரால் அகழ்வுப் பணிகள் தொடங்கியது என்றார்.

''ஆங்கிலேயர் காலத்தில் இருந்து இன்றுவரை உலகளவில் ஆதிச்சநல்லூர் பற்றி அறிந்துகொள்ள பலரும் ஆர்வமுடன் உள்ளனர். இந்த கிராமத்தில் கிடைத்த தொல்பொருட்கள் சிலவற்றை பெர்லின் நகரத்திற்கு ஒரு தொல்லியல் நிபுணர் கொண்டுசென்று அங்கு காட்சிப்படுத்தியுள்ளார். ஆனால் இந்தியாவில், அகழ்வு பணிகள் முடிந்து பன்னிரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் கூட மத்திய அரசின் தொல்லியல் துறை முதல்கட்ட அறிக்கையைக்கூட வெளியிடவில்லை,'' என்றார் காமராசு.

அகழ்வுப் பணிகளுக்காக 114 ஏக்கர் நிலம் ஆதிச்சநல்லூர் கிராமத்தில் கையகப்படுத்தப்பட்டுள்ளது என்று கூறிய அவர், ''2004 மற்றும் 2005ல் மத்திய அரசு நடத்திய அகழ்வு பணிகளில் என்ன தெரியவந்தது என்று எந்தத்தகவலும் வெளியிடப்படாமல் இருப்பதைக் சுட்டிக்காட்டி வழக்கு தொடர்ந்துள்ளேன்,'' என்றார்.

தொடர்ந்துள்ளேன்,'' என்றார்.

ஆதிச்சநல்லூர் முதுமக்கள் தாழி மையத்தில் மதுபாட்டில்கள்

அறிக்கை சமர்ப்பிக்க ஏன் தாமதம்?

அகழ்வுப்பணிகளை மேற்கொண்ட அதிகாரி சத்யமூர்த்தியை அணுகினோம். அவர் தான் ஓய்வு பெற்று பத்தாண்டுகள் ஆகின்றன என்றும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் முதல் கட்ட கண்டுபிடிப்புகள் பற்றிய ஆவணத்தை தொல்லியல் துறையில் சமர்ப்பித்துவிட்டதாக கூறினார்.

அகழ்வாய்வு ஆவணங்களை தயாரிப்பதில் இருந்த தாமதம் பற்றிக்கேட்டபோது, ''ஆதிச்சநல்லூரில் அகழ்வு பணிகளின்போது நூற்றுக்கணக்கான எலும்புக் கூடுகள் மற்றும் முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டன. எலும்புக்கூடுகளை ஆய்வு செய்து அதன் காலத்தை நிர்ணயம் செய்தவற்கு இந்தியாவில் நிபுணர்கள் இல்லாத காரணத்தால் இந்த ஆய்வு தகவல்களை வெளியிட தாமதம் நேர்ந்தது. நான் அனுப்பியுள்ள ஆவணத்தை சரிபார்க்க வெளிநாடுகளில் உள்ள நிபுணர்களிடம் அனுப்பியுள்ளார்கள்,'' என்று சத்யமூர்த்தி கூறினார்.

அகழ்வாய்வில் கிடைத்த துளையிட்ட மண்டைஓடு

சத்யமூர்த்தி அகழ்வு செய்து கண்ட பொருட்கள் பற்றி கேட்டபோது,''ஆதிச்சநல்லூரில் இருந்தவர்கள் பலவகையான இனக்குழுக்களை சேர்ந்த மக்கள் என்றும் அவர்கள் அருகில் இருந்த துறைமுக நகரத்தில் வணிகர்களாக இருந்திருக்க வாய்ப்புள்ளது என்று தெரிந்துகொள்ள முடிந்தது. ஆனால் இதுபோன்ற தகவல்களை ஆராய நிபுணர்கள் தேவைப்படுகிறார்கள்,'' என்றார் சத்யமூர்த்தி.

ஆதிச்சநல்லூர் முதுமக்கள் தாழி மையம்

அவர் மேலும் ஐதராபாத்தில் உள்ள நரம்பியல் மருத்துவர் ராஜா ரெட்டி ஆதிச்சநல்லூரில் கிடைத்த மண்டை ஓடு ஒன்றில் துளை இடப்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டதற்கு சான்று இருப்பதாக கூறியுள்ளார்.

இந்திய தொல்லியல் துறையின் சென்னை அலுவலகத்தில் ஆய்வறிக்கை சமர்ப்பிப்பதில் உள்ள தாமதத்திற்கான காரணங்களைக் கேட்டபோது, அதற்கான காரணங்கள் எதையும் குறிப்பிடாமல், ஆய்வு அறிக்கை ஒய்வு பெற்ற அதிகாரி சத்தியமூர்த்தியிடம் உள்ளதாக மூத்த அதிகாரி ஏஎம்வி சுப்ரமணியம் தெரிவித்தார்.

மேலும் முதல்கட்ட தகவல்கள் தொல்லியல் துறையின் ஆண்டறிக்கை 2003-04, 2004-05 ஆவணங்களில் இருப்பதாக கூறினார். ஆய்வு குறித்த தகவல்களை சத்தியமூர்த்தியிடம்தான் கேட்கவேண்டும் என்றும் தெரிவித்தார். ஆனால் ஓய்வுபெற்ற அதிகாரி சத்யமூர்த்தி ஆய்வறிக்கை தன்னிடம் இல்லை என்றும், அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன என்றும் கூறினார்.

கடந்தாண்டு பிரசுரமான கட்டுரையை மீண்டும் பகிர்ந்துள்ளோம்

https://www.bbc.com/tamil/india-41934390

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆதிச்சநல்லூர் - சிந்துவெளி இடையே வியத்தகு ஒற்றுமை - வெளியிடப்படாத ஆய்வு

முரளிதரன் காசிவிஸ்வநாதன்பிபிசி தமிழ்
பானைகள்

தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் 2004ஆம் ஆண்டுவாக்கில் நடந்த ஆய்வின் முடிவுகள் பதினைந்து ஆண்டுகள் கழிந்த நிலையிலும் இதுவரை வெளியிடப்படவில்லை. இந்த ஆய்வுகளில் தெரியவந்த தகவல்கள் என்னென்ன?

கீழடி ஆய்வு முடிவுகள் வெளியாவதற்கு சில நாட்கள் முன்பாக தமிழக தொல்லியல் துறை வெளியிட்ட ஒரு செய்திக் குறிப்பில், தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் அகழாய்வு செய்யும் திட்டமிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. கீழடி ஆய்வு முடிகள் வெளியிடப்பட்டபோதும், அடுத்ததாக அகழாய்வு செய்யப்படவிருக்கும் இடங்களின் பட்டியலிலும் ஆதிச்சநல்லூர் இடம்பெற்றிருந்தது.

தமிழக தொல்லியல் களத்தில் நீண்ட காலமாகவே விவாதிக்கப்பட்டுவரும் ஆதிச்சநல்லூர், தொல்லியல் வரலாற்றில் எவ்வளவு முக்கியமான இடம், இதற்கு முன்பாக ஆதிச்சநல்லூரில் செய்யப்பட்ட ஆய்வுகள் என்ன கூறுகின்றன?

ஆதிச்சநல்லூர் ஆய்வுகளின் துவக்க காலம்

தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி நதியின் வலதுபுற கரையில் அமைந்துள்ளது ஆதிச்சநல்லூர் புதைமேடு. இந்த இடத்தை முதல் முதலில் கண்டுபிடித்தவர் பெர்லின் அருங்காட்சியகத்தைச் சேர்ந்த டாக்டர் ஜாகர். 1876ஆம் ஆண்டில் இந்த இடத்தை அவர் கண்டுபிடித்தார். இங்கு அவர் விரிவாக ஆய்வுகளை நடத்தினாலும் ஆய்வின் முடிவுகள் வெளியிடப்படவில்லை.

இதற்குப் பிறகு இந்தியத் தொல்லியல் துறையின் தெற்கு வட்டத்தின் கண்காணிப்பாளராக இருந்த அலெக்ஸாண்டர் ரீ 1903-04ஆம் ஆண்டுகளில் இங்கு ஒரு மிகப் பெரிய ஆகழாய்வை மேற்கொண்டார். அவர் தாமிரபரணிக் கரையை ஆராய்ந்து, அங்கு 38 ஆராயப்பட வேண்டிய இடங்கள் இருப்பதாகக் குறிப்பிட்டார்.

ஆதிச்சநல்லூர்

ஆதிச்சநல்லூர் மேடு சுமார் 60 ஏக்கர் பரப்புக்கு விரிந்து பரந்திருக்கிறது. இதன் மையத்தில் அலெக்ஸாண்டர் ரீ தனது அகழாய்வைத் துவங்கினார். இங்கு முதுமக்கள் புதைக்கப்பட்டிருக்கும் "பானைகள் ஒரு மீட்டர் இடைவெளியில் இரண்டு அல்லது மூன்று மீட்டர் ஆழத்தில்" புதைக்கப்பட்டிருப்பதாகவும் அப்படியான ஆயிரக்கணக்கான பானைகள் அப்பகுதியில் இருப்பதாகவும் அவர் தனது அறிக்கையில் தெரிவித்தார்.

ஆனால், இந்த ஆய்வில் எத்தனை பானைகள் எடுக்கப்பட்டன என்பதை அலெக்ஸாண்டர் ரீ தெரிவிக்கவில்லை. இந்த ஆய்வின்போது அலெக்ஸாண்டர் ரீக்கு இரும்புப் பொருட்கள், ஆயுதங்கள், விளக்குகள் ஆகியவை கிடைத்தன. வெண்கலத்தில் செய்யப்பட்ட பல வடிவங்கள், அளவுகளிலான கிண்ணங்களும் இங்கே கிடைத்தன. சுடுமண் காதணிகள், தாலி, பட்டை தீட்டப்பட்ட கற்கள் ஆகியவையும் கிடைத்தன.

அலெக்ஸாண்டர் ரீ மேற்கொண்ட இந்த ஆய்வு மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. காரணம், அந்த காலகட்டத்தைச் சேர்ந்த ஓர் அகழாய்வு இடத்தில், பெரும் எண்ணிக்கையில் பொருட்கள் கிடைத்தது இங்குமட்டும்தான். அங்கு புதைக்கப்பட்ட மனிதர்களின் எலும்புக் கூடுகள் தவிர, பல வடிவங்களில் பெரும் எண்ணிக்கையில் பானைகள், இரும்பு ஆயுதங்கள், கிண்ணங்கள், வெண்கலத்தில் அணிகலன்கள், தங்கத்தாலான தலைப்பட்டிகள் ஆகியவை இங்கிருந்து அலெக்ஸாண்டர் ரீயால் கண்டெடுக்கப்பட்டன. தட்சசீலம் (Taxila), ரைர் (Rairh) போன்ற அகழாய்வுத் தலங்களில் கிடைத்ததைப் போன்ற உலோகத்தாலான முகம்பார்க்கும் பொருட்கள் (metal mirror) இங்கேயும் கிடைத்தன.

அலெக்ஸாண்டர் ரீ நடத்திய அகழாய்வின்போது கண்டுபிடிக்கப்பட்ட பெரும்பாலான பொருட்கள் எழும்பூர் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டன. அலெக்ஸாண்டர் ரீ காலத்திற்குப் பிறகு, பெரிதாக யாரும் ஆதிச்சநல்லூர் மீது ஆர்வம் காட்டவில்லை. இந்தியத் தொல்லியல் துறையின் ஆர்வம் பெருங்கற்கால இடங்களை நோக்கித் திரும்பியது.

இதனால் அடுத்த 100 ஆண்டுகளுக்கு ஆதிச்சநல்லூர் பகுதி அகழாய்வாளர்களால் கண்டுகொள்ளப்படாத பகுதியாகவே இருந்ததது. இருந்தபோதும் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்திலேயே இதன் முக்கியத்துவம் உணரப்பட்டு இந்தியத் தொல்லியல் துறை அதனைப் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவித்திருந்தது.

ஆதிச்சநல்லூர்: ஒரு நூற்றாண்டுக்குப் பிறகு

அலெக்ஸாண்டர் ரீ தன் ஆய்வை முடித்து 100 ஆண்டுகளுக்குப் பிறகு, 2004-2005ல் மீண்டும் ஆதிச்சநல்லூரில் ஒரு அகழாய்வு துவங்கப்பட்டது. சென்னை மண்டலத்தின் தொல்லியல் துறை கண்காணிப்பாளராக இருந்த டி. சத்யமூர்த்தியும் அவரது குழுவினரும் இந்த ஆய்வை நடத்தினார்.

சத்யமூர்த்தி Image captionசத்யமூர்த்தி

600 சதுர மீட்டர் பரப்பளவிற்குள் நடத்தப்பட்ட இந்த ஆய்வின்போது, 160க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழி கண்டெடுக்கப்பட்டன. பல பானைகளில் மடக்கிவைக்கப்பட்ட நிலையில் புதைக்கப்பட்ட மனிதர்களின் முழு எலும்புக்கூடுகள் கிடைத்தன.

"அலெக்ஸாண்டர் ரீ ஆய்வை மேற்கொண்டபோது, கார்பன் டேட்டிங் முறைகள் கண்டுபிடிக்கப்படவில்லை. அவை வந்துவிட்ட நிலையில், ஆதிச்சநல்லூரின் காலத்தைக் கணிக்கலாம் என்ற எண்ணத்தில்தான் ஆதிச்சநல்லூரில் ஆய்வைத் துவங்கினேன்" என்கிறார் டி. சத்யமூர்த்தி.

ஆதிச்சநல்லூர் புதைமேடு என்பது தனிமங்களை வெட்டி எடுக்கும் சுரங்கமாக இருந்திருக்க வேண்டும். அங்கு வாழ்ந்த மனிதர்கள், தனிமங்கள் வெட்டப்பட்ட பள்ளத்தில் இறந்தவர்களைப் புதைக்க ஆரம்பித்திருக்க வேண்டும் என்கிறார் சத்யமூர்த்தி.

முதலில் அகழாய்வு நடத்தப்பட்ட இடம் புதைமேடாக இருந்தாலும் மனிதர்கள் வசித்த சிறிய இடமும் இந்த ஆய்வின்போது சத்தியமூர்த்தி குழுவினருக்குக் கிடைத்தது. துளையிடுவதற்கு மிகக் கடினமான சில அரிய மணிகள் ஆயிரக்கணக்காக அவர்களுக்குக் கிடைத்தன. பானையைச் சுடும் சூளை போன்றவையும் இந்த ஆய்வின்போது கண்டுபிடிக்கப்பட்டன.

இங்கு கிடைத்த பொருட்களை சில ஆய்வுகளுக்கு உட்படுத்தினார் சத்யமூர்த்தி. இந்த இடத்தின் காலத்தைக் கணிக்க ஆப்டிகலி ஸ்டிமுலேட்டட் லுமினிசென்ஸ் (Optically stimulated luminescence) முறை பயன்படுத்தப்பட்டது. அதில், இந்த இடத்தின் காலம் கி.மு. 700 எனக் கணிக்கப்பட்டது. ஆதிச்சநல்லூரிலிருந்து எடுக்கப்பட்ட 24 எலும்புக்கூடுகள் உடல்சார் மானுடவியல் (physical anthropology) ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. ஆஸ்திரேலியப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ராகவன் இதில் உதவ முன்வந்தார்.

ஆதிச்சநல்லூர்

அந்த ஆய்வில், ஆதிச்சநல்லூரில் வாழ்ந்தவர்கள் ஒரே மானுடவியல் இனக்குழுவைச் சேர்ந்தவர்களாக இல்லை என்பதும் பல்வேறு இன மக்கள் அங்கு வாழ்ந்துவந்ததும் தெரியவந்தது. ஆஸ்திரலாய்டுகள், மங்கலாய்டுகள் உள்ளிட்ட குறைந்தது மூன்று இனக்குழுக்கள் அங்கு இருந்திருக்கலாம் என சத்யமூர்த்தி தன் ஆய்வில் குறிப்பிட்டிருக்கிறார். தற்போதைய காலத்தில் உள்ள இனக்குழுவினர் அங்கு மிகக் குறைவு என்பது அவருடைய கருத்து. ஆதிச்சநல்லூர் அதனுடைய காலத்தில் ஒரு பெருநகரமாக இருந்திருப்பதாலேயே பல இனத்தைச் சேர்ந்தவர்கள் அங்கு வாழ்ந்திருக்கக்கூடும் என்கிறார் அவர்.

ஆதிச்சநல்லூரில் கிடைத்த சில மண்டை ஓடுகள் கச்சிதமாக வெட்டப்பட்டவையாகவோ, துளையிடப்பட்டவையாகவோ இருந்தன. இது அந்தக் காலத்தில் டிரப்பனேஷன் (trepanation) எனப்படும் தலையில் துளையிட்டு சிகிச்சை அளிக்கும் பழக்கம் அங்கு இருந்ததையே காட்டுகிறது என்கிறார் சத்யமூர்த்தி.

அலெக்ஸாண்டர் ரீ ஆய்வுசெய்தபோது இங்கு பெரும் எண்ணிக்கையில் வெவ்வேறுவிதமான பொருட்கள் இங்கே கிடைத்ததைப்போல, உலோகப் பொருட்களோ வேறு பொருட்களோ சத்யமூர்த்தி மேற்கொண்ட ஆய்வில் கிடைக்கவில்லை.

"காரணம், அலெக்ஸாண்டர் ரீ மிகப் பெரிய இடத்தில் ஆய்வை மேற்கொண்டார். எங்களுடைய ஆய்வுப் பகுதி மிகவும் சிறியது" என்கிறார் சத்யமூர்த்தி.

ஆதிச்சநல்லூர் - சிந்துச் சமவெளி நாகரீகம்: தொடர்பு உண்டா?

ஆதிச்சநல்லூரில் தான் மேற்கொண்ட ஆய்வுகள் குறித்து Indus to Tamaraparani என்றொரு நீண்ட கட்டுரையைப் பதிப்பித்திருக்கிறார் சத்யமூர்த்தி. ஆனால், மொஹஞ்சதாரோ - ஹரப்பா நாகரீகத்துடன் ஆதிச்சநல்லூரை ஒப்பிடுவதில் பல பிரச்சனைகள் இருந்தன என்கிறார் அவர்.

ஹரப்பாவோடு ஒப்பிடும்போது ஆதிச்சநல்லூர் காலத்தால் மிகவும் பிற்பட்டது. ஹரப்பா கலாச்சாரத்தில் பெரும்பாலும் தாமிரத்தையே பயன்படுத்தினர். ஆனால், ஆதிச்சநல்லூரில் பெரும்பாலும் இரும்பு பயன்படுத்தப்பட்டிருந்தது.

ஆதிச்சநல்லூர்

ஆனால், ஹரப்பா - மொஹஞ்சதாரோவுடன் ஒப்பிடக்கூடிய ஒரு விஷயம் ஆதிச்சநல்லூரில் இருந்தது என்கிறார் சத்யமூர்த்தி. உலோகக் கலவைதான் அந்த அம்சம். ஹரப்பாவில் இருந்த உலோகப் பொருட்கள் அனைத்திலும் துத்தநாகம் ஆறு சதவீதமாக இருந்தது. ஆதிச்சநல்லூரில் கிடைத்த உலோகப் பொருட்களிலும் துத்தநாகம் அதே ஆறு சதவீதமாக இருந்தது.

தென்னிந்தியாவில் கிடைத்த வேறு உலோகப் பொருட்கள் எதிலும் இதே விகிதத்தில் துத்தநாகம் கலக்கப்பட்டிருக்கவில்லை. கொடுமணல், சங்கமகே போன்ற இடங்களில் கிடைத்த காசுகளிலும் துத்தநாகம் 0.1 சதவீதத்திற்கும் குறைவாகவே இருந்தது. தமிழகத்தில் மட்டுமல்ல, இந்தியத் துணைக் கண்டம் எங்கிலுமே செப்புக்காலத்தில் (Chalcolithic) உலோகக் கலவையில் துத்தநாகம் கலக்கப்பட்டிருக்கவில்லை.

இந்தக் கலவை ஹரப்பா -மொஹஞ்சதாரோ மற்றும் ஆதிச்சநல்லூருக்கு மட்டுமே உரியதாக இருந்தது என்கிறார் சத்யமூர்த்தி.

மற்றொரு ஒற்றுமை இங்கிருந்த பானைகளின் கனம். ஹரப்பா - மொஹஞ்சதாரோவில் கிடைத்த பானைகள் உயரமாக இருந்தாலும் அவற்றின் ஓடுகள் கனமற்று, மெலிதாக இருந்தன. ஆதிச்சநல்லூரில் உள்ள பானைகளும் மிக மெலிதாக இருந்தன. இந்தியாவின் பிற பெருங்கற்கால நினைவிடங்களில் கிடைத்த பானைகள் கனமான பக்கங்களை உடையவையாக இருந்தன.

"இவ்விதமான பானைகளைச் செய்வது மிக அரிது. ஈரமான களிமண்ணில் மெலிதான கனத்தில் மூன்றரையடி உயரத்திற்கு பானைகள் செய்யப்பட்டிருப்பது சாதாரணமானதல்ல. ஹரப்பாவிலும் ஆதிச்சநல்லூரிலும் இதைச் செய்திருந்தார்கள்" என்கிறார் சத்யமூர்த்தி.

ஆனால், இறந்தவர்களைப் புதைக்கும்விதத்தில் ஹரப்பா - மொஹஞ்சதாரோவுக்கும் ஆதிச்சநல்லூருக்கும் மிக முக்கியமான வேறுபாடு இருந்தது. சிந்துசமவெளி நாகரீகத்தில் இறந்தவர்களை படுத்தவாக்கில் புதைக்கும் வழக்கம் இருந்தது. ஆனால், ஆதிச்சநல்லூரில் இறந்தவர்கள் பானைக்குள் வைத்து புதைக்கப்பட்டனர்.

ஆதிச்சநல்லூர்

ஆதிச்சநல்லூரிலும் வழிபாட்டு உருவங்கள் ஏதும் கிடைக்கவில்லை. ஆனால், ஒரு பெண் நடனமாடுவதைப்போன்ற காட்சி ஒன்று கிடைத்தது. அருகில் ஒரு மரமும் மானும் இருந்தன. இதுபோன்ற நடனமாடும் பெண்ணின் உருவம் மொஹஞ்சதரோவிலும் கிடைத்தது என்கிறார் சத்தியமூர்த்தி.

இரு இடங்களிலும் கிடைத்த பாத்திரங்கள் வெவ்வேறு விதமாக இருந்ததையும் சத்யமூர்த்தி சுட்டிக்காட்டுகிறார். ஆதிச்சநல்லூரில் கிடைத்த பாத்திரங்கள் எல்லாமே கிண்ணங்களைப் போன்றவையாகவே இருந்தன. ஆனால், ஹரப்பா - மொஹஞ்சதாரோவில் தற்போது நாம் பயன்படுத்தும் தட்டுகள் போன்றவையும் கிடைத்தன. "இதைவைத்து அவர்களது உணவுப் பழக்கத்தை ஒருவாறு யூகிக்கலாம். இங்கே வசித்தவர்கள் நீர்ம நிலையில் இருந்த உணவுகளை சாப்பிட்டிருக்கக்கூடும். சிந்துவெளியில் இருந்தவர்கள் காய்ந்த உணவுப் பொருட்களை சாப்பிட்டிருக்கலாம் என்ற முடிவுக்கு வர முடியும்" என்கிறார் சத்யமூர்த்தி.

ஆதிச்சநல்லூரில் கிடைத்த பற்கள் இன்னும் ஆய்வுக்கு உட்படுத்தப்படவில்லையென்று கூறும் சத்யமூர்த்தி, அவற்றை ஆய்வுக்குட்படுத்துவதன் மூலம் அந்தக் கால மனிதர்களின் முழுத் தோற்றத்தையே பெற முடியும் என்கிறார். அதேபோல அவர்களது உணவுப் பழக்கவழக்கங்கள் குறித்தும் அறியமுடியும் என்கிறார் அவர். ஆதிச்சநல்லூரில் கிடைத்த பற்கள் தேயாத நிலையில் இருந்தவை என்கிறார் அவர்.

ஆய்வு முடிவுகள் இதுவரை வெளியிடப்படாதது ஏன்?

2004-2005ல் செய்யப்பட்ட ஆதிச்சநல்லூர் ஆய்வின் முடிவுகள் இன்னும் வெளியிடப்படவில்லை. என்ன காரணம்? "நான் 2006ல் ஓய்வுபெற்றுவிட்டேன். 2003ல் மத்திய தொல்லியல் துறை ஒரு உறுதியை அளித்தது. அதாவது தற்போதுவரை வெளியிடப்படாமல் இருக்கும் சுமார் 50 முடிவுகளையும் வெளியிட்டபிறகுதான் அடுத்த கட்ட ஆய்வுகளும் முடிவுகளும் வெளியிடப்படும் என்று நாடாளுமன்றத்திலேயே தெரிவித்தனர். இதனால், 2003க்கு பிறகு முடிக்கப்பட்ட ஆய்வுகளின் மீது கவனம் திரும்பவில்லை. 2010ல் மீண்டும் இது குறித்து மீண்டும் கேட்டேன். அவர்கள் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை. 2004-05ஆம் ஆண்டுக்கான ஆய்வறிக்கையில் இரண்டாவது பகுதிதான் மிக முக்கியமானது. அதில்தான் எலும்புக்கூடுகளை வைத்து பெறப்பட்ட மானுடவியல் தொடர்பான முடிவுகள் இருக்கின்றன. அதை நான் 2013லேயே முடித்துக் கொடுத்துவிட்டேன்" என்கிறார் சத்தியமூர்த்தி.

ஆனால், இந்த ஆய்வறிக்கையின் முதல் பாகம் இன்னும் தயாராகவில்லை. "இந்த முதல் பாகத்தை துறையைச் சேர்ந்தவர்களே எழுதலாம். அகழாய்வு செய்யப்பட்ட இடம் பற்றிய விவரங்கள், பானைகள், கிடைத்த பொருட்களை வைத்து கலாச்சார ரீதியான முடிவுக்கு வருவது அந்த அறிக்கையில் இருக்கும். அதற்கான விவரங்களை மின்னஞ்சலில் அனுப்பினால் நானே எழுதிவிடுவதாக சொன்னேன். ஆனால், நீதிமன்றம் தற்போது துறையில் இருப்பவர்களே எழுதலாம் என கூறியிருக்கிறது" என்றுகூறும் சத்தியமூர்த்தி தொல்லியல் துறை விரும்பினால், இரண்டாம் பகுதியை வெளியிடலாமே என்கிறார்.

ஆதிச்சநல்லூர் அகழாய்வில் கிடைத்த மண்பாண்டத்தில் காணப்படும் உருவம் Image captionஆதிச்சநல்லூர் அகழாய்வில் கிடைத்த மண்பாண்டத்தில் காணப்படும் உருவம்.

ஆதிச்சநல்லூரில் எடுக்கப்பட்ட மாதிரிகளை கால நிர்ணயம் செய்வதில் ஏன் தாமதம் ஏற்பட்டது? "C14 கால நிர்ணயம் செய்யும்வகையில் ஒதிஷாவில் ஒரு நிறுவனம் இருந்தது. அவர்கள் இதைச் செய்து தருவதாகச் சொன்னார்கள். அவர்களிடம் சில மாதிரிகளை அனுப்பினேன். அதற்குப் பிறகு நான் ஓய்வுபெற்றுவிட்டேன். ஆனால், அவர்களால் அதைச் செய்ய முடியவில்லை. அவர்கள் அந்த மாதிரிகளைத் திருப்பி அனுப்பிவிட்டார்கள். இப்போது நீதிமன்ற ஆணையின் பேரில் அந்த மாதிரிகள் வெளிநாட்டிற்கு அனுப்பப்பட்டு காலம் அறுதியிடப்பட்டிருக்கிறது. கி.மு. 900 என கணிக்கப்பட்டிருக்கிறது" என்கிறார் சத்யமூர்த்தி. அதாவது இது காலத்தால் 2,900 ஆண்டுகள் பழமையானது.

இது தவிர, ஆதிச்சநல்லூரில் எடுக்கப்பட்ட ஒரு எலும்புக்கூடு ஆந்த்ரபாலஜிகல் சர்வே ஆஃப் இந்தியாவுக்கு அளிக்கப்பட்டது. ஆனால், அதன் முடிவுகளும் இன்னும் வெளியாகவில்லை. "அது ஏன் ஆய்வுக்குட்படுத்தப்படவில்லை என்பது தெரியவில்லை" என்கிறார் சத்யமூர்த்தி.

கீழடி - ஆதிச்சநல்லூர் அகழாய்வுகள் சொல்வதென்ன?

"கீழடியில் கிடைத்த பொருட்களை கரிம ஆய்வுக்கு உட்படுத்தியதில் கிடைத்திருக்கும் காலம் குறிப்பிடத்தக்கது. ஆனால், ஆய்வுமுடிவுகளை முழுமையாகப் பார்க்க வேண்டும். ஆனால், ஆதிச்சநல்லூரின் காலம் இன்னும் பழமையானது" என்கிறார் சத்யமூர்த்தி. கீழடியில் கிடைத்த செங்கல்களின் அளவைப் பார்க்கும்போது அவை சங்ககாலத்தைச் சேர்ந்தவை என்று சொல்ல முடியும் என்கிறார் அவர்.

ஆனால், கீழடியில் கிடைத்திருப்பதைப்போல பெரும் எண்ணிக்கையிலான பானைக் கீறல்கள் ஆதிச்சநல்லூரில் கிடைக்கவில்லை. ஒரே ஒரு பானையின் உட்புறத்தில் மட்டும் கீறல்கள் இருந்தன. மேலும் கீழடியில் கிடைத்ததுபோன்ற கட்டடத் தொகுதிகள் ஏதும் ஆதிச்சநல்லூரில் கிடைக்கவில்லை என்கிறார் சத்யமூர்த்தி.

https://www.bbc.com/tamil/india-49829995

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாடு அரசு ஆய்வு அறிக்கை (ஆங்கிலம்)..

https://drive.google.com/file/d/16GkR4hmeGBPQLeFh4wljEvd7k5YzE4Mv/view

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

IMG_0755.JPG

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

2600 ஆண்டுகளுக்கு  முன், கிடைத்த இந்த... தாயக் கட்டையை பார்க்கும் போது...
ஒரு விளையாட்டில் கூட... தமிழன் எவ்வளவு முன்னேற்றமாக வாழ்ந்தவன். 

ஒருவன்... ஒரு விளையாட்டை, தேர்ந்தெடுக்கும் போது...  
உணவில், வதிவிடத்தில், விலங்குகளிடம் இருந்து பாதுகாப்பு... என்று,
அனைத்தையும்... உறுதிப்  படுத்திய பின்னரே,
விளையாட ஆரம்பிப்பான்..  எனும் போது,  பெருமையாக உள்ளது.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கீழடி பரிதாபங்கள்.. 👍

டிஸ்கி :

கிசான் என்டா விவசாயி..

டேய்.! கிசான் என்டா யாமு.. ☺️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்து என்ன

கீழடியில் ஆய்வுகள் தொடரும்.. விரைவில் 6ம் கட்ட ஆய்வு.. தொடங்கி வைக்கும் முதல்வர்.. அதிரடி அறிவிப்பு!

கீழடியில் இதுவரை 5 கட்ட ஆய்வுகள் செய்யப்பட்டுள்ளது, விரைவில் 6வது கட்ட ஆய்வுகள் தொடங்கி நடத்தப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

மதுரை மாவட்டத்திற்கு தென்கிழக்கில் 15 கிலோ மீட்டர் தூரத்தில் சிவகங்கை மாவட்டத்தில் இருக்கிறது கீழடி கிராமம். இங்கு செய்யப்பட ஆய்வுகள் மூலம் 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த பொருட்கள் பல கண்டுபிடிக்கப்பட்டது.

ஆனால் அதன்பின் அங்கு அகழ்வாராய்ச்சி நிறுத்தப்பட்டது. பின் பல்வேறு அழுத்தங்களை அடுத்து தற்போது மீண்டும் அங்கு ஆராய்ச்சி தொடங்கி நடந்து வருகிறது.

இதையடுத்து டந்த இரண்டு வாரங்கள் முன்பு கீழடியில் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் இந்திய வரலாற்றையே மாற்றி எழுதும் அளவிற்கு அமைந்துள்ளது. ஆம் கீழடியில் கிடைத்த பொருட்களில் செய்யப்பட்ட கார்பன் ஆராய்ச்சியில் அதன் வயது 2600 வருடங்களுக்கு முந்தையது என்று கண்டுபிடிக்கப்பட்டது. அதாவது கிறிஸ்து பிறப்பதற்கு 600 வருடங்களுக்கும் முன்பு.

இது உலகையே வியப்பிற்கு உள்ளாக்கி உள்ளது. இந்த நிலையில் கீழடியில் தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். இதுவரை கீழடியில் 5 கட்ட ஆய்வுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த ஆய்வுகள் இதோடு முடியாது. அங்கு இன்னும் செய்ய வேண்டிய பணிகள் நிறைய உள்ளது.

அங்கு 6வது கட்ட ஆய்வுகள் தொடர்ந்து கீழடியில் மேற்கொள்ளப்படும். கீழடியில் 6வது கட்ட ஆய்வை முதல்வர் பழனிசாமி துவங்கி வைப்பார். இதற்கான பணிகள் தொடங்கப்பட உள்ளது. இதற்காக முதல்வருக்கு அழைப்பு விடுக்கப்படும்.

4 மற்றும் 5ம் கட்ட ஆய்வு பணிகளை செய்ய இதுவரை 1.5 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதேபோல் 6ம் கட்ட ஆய்வு பணிகளை மேற்கொள்ள கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்யப்படும். இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

Read more at: https://tamil.oneindia.com/news/chennai/keezhadi-civilization-research-will-continue-6th-phase-research-will-start-soon-364345.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காலத்தின் குரல் ..

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரே நாளில் கீழடியில் குவிந்த 10 ஆயிரம் பேர்.!

72533.jpg

சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெற்று வரும் ஆம் கட்ட அகழ்வாராய்ச்சியை இன்று ஒரேநாளில் பத்தாயிரம் பேர் பார்வையிட்டுளளனர்.

கடந்த ஜூன் 13 ஆம் தேதி துவங்கி நடைபெற்று வரும் ஐந்தாம் கட்ட அகழ்வராய்ச்சிப் பணிகளால் 2600 ஆண்டுகள் தொன்மையான மனிதர்கள் பயன்படுத்திய இரட்டைச்சுவர், நேர் சுவர், வட்டச்சுவர், நீர் வழிப்பாதை, தங்க அணிமணிகள், உள்ளிட்ட 750க்கும் மேற்பட்ட பொருட்கள் கீழடியில் கண்டறியப்பட்டுள்ளன.

பழந்தமிழர் பெருமையை உலகுக்கு உரைக்கும் வகையில் வெளிப்படும் கீழடி கண்டுபிடிப்புகளை நேரில் காண நாள்தோறும் ஏராளமானோர் வந்து செல்கிறார்கள். இன்று ஒரே நாளில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வந்து பார்வையிட்டுள்ளதாக தொல்லியல் துறையினர் தெரிவிக்கிறார்கள்.

http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/72533-more-than-10-thousand-people-visit-in-keezhadi-in-single-day.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

‘தமிழர் நாகரிகம் 2,600 ஆண்டுகள் பழமை வாய்ந்தது’

Editorial / 2019 ஒக்டோபர் 03 வியாழக்கிழமை, பி.ப. 02:18 Comments - 0

-எம்.காசிநாதன்

துரைக்கு “மீனாட்சி அம்மன்” பெருமை சேர்ப்பது போல், மதுரையிலிருந்து 13 கிலோமீற்றர் தொலைவிலும், வைகை நதிக்கு 2 கிலோமீற்றர் தொலைவிலும் இருக்கும் “கீழடி” தமிழ்நாட்டுக்கும் - இந்தியாவுக்கும் பெருமை தேடித்தந்துள்ளது. “தொல்லியல், மரபு குறித்த ஆர்வம் தமிழ்நாட்டில் தற்போது புத்தாக்கம் பெற்றுள்ளது” என்று “கீழடி” ஆய்வு பற்றி தமிழக அரசாங்கத்தின் சார்பில் வெளியிட்டுள்ள புத்தகத்தில், தனது துவக்கக் கருத்தை தெரிவித்திருக்கிறார். தொல்லியல் துறையின் முதன்மை செயலாளர், ஆணையாளராக இருக்கும் உதயசந்திரன். அவரது அரிய முயற்சி அனைவராலும் பாராட்டப்படுகிறது. பொதுவாக தமிழக அரசாங்கத்தின் கீழ் உள்ள தொல்லியல் துறை என்பது அரசாங்கத்துக்கு வேண்டாதவர்களுக்கு “போஸ்டிங்” கொடுப்பதற்காக வைத்துள்ள துறை என்பது தமிழகத்தில் உள்ள இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகளுக்கு மட்டுமின்றி, ஆட்சிக்கு வரும் எந்தக் கட்சிக்கும் தெரியும். ஆனால் ஐ.ஏ.எஸ் அதிகாரியான உதயச்சந்திரன் “தமிழர் பண்பாட்டு” வரலாற்றில் புதிய அத்தியாயத்தை எழுதியிருப்பது ஒவ்வொரு தமிழர் உள்ளங்களிலும் மகிழ்வை தந்திருக்கிறது.  “கீழடி” அகழ்வாராய்ச்சி ஆரம்பத்திலிருந்தே சர்ச்சையில் தத்தளித்துக் கொண்டிருந்தது. மத்திய அரசாங்கத்தின் தொல்லியல்துறை முதலில் ஆய்வு மேற்கொண்டு, அந்த ஆய்வைச் செய்த அதிகாரி திடீரென்று மாற்றப்பட்டது எல்லாம் சர்ச்சையானது. அது மட்டுமின்றி, பிறகு ஆய்வு தற்காலிகமாக நிறுத்தப்பட்டதே மிகப்பெரும் சர்ச்சையானது. தற்போது மதுரை நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சு. வெங்கடேசன் முதன் முதலில், கீழடி ஆய்வுகள் குறித்துப் பெரிய அளவில் விழிப்புணர்வை ஏற்படுத்த, பிறகு அரசியல் கட்சிகள் அனைத்துமே இதை தங்கள் கையில் எடுத்துக் கொண்டன. நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் “கீழடி” பற்றிய முழக்கம் கேட்கத் தொடங்கியது. “தமிழர் நாகரிகத்தை மறைக்க முயற்சி” என்று தமிழகத்தில் உள்ள கட்சிகள் எல்லாம் போர்க்குரல் எழுப்பின. இந்தச் சூழ்நிலையில்தான், 110 ஏக்கர் நிலப்பரப்பில் உள்ள கீழடியில் 4 மற்றும் 5ஆம் கட்ட ஆய்வுகளை உதயச்சந்திரன் தலைமையிலான தொல்லியல்துறை செய்து வருகிறது.  

தமிழக அரசாங்கமே இந்த ஆய்வை மேற்கொண்டு வரும் நிலையில், 4ஆம் கட்ட ஆய்வில் கிடைத்த அரும்பொருள்கள் குறித்து ஒரு தனி புத்தகத்தை மாநில தொல்லியல்துறை வெளியிட்டாது. இப்படி வெளியிட்டதற்காக தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சராக இருக்கும் பாண்டியராஜனுக்கும் தொல்லியல் துறை முதன்மை செயலாளராக இருக்கும் உதயச்சந்திரனுக்கும் தி.மு.க தலைவர் ஸ்டாலின் பாராட்டுத் தெரிவித்தார். அ.தி.மு.கவில் உள்ள ஓர் அமைச்சர் ஸ்டாலின் பாராட்டைப் பெற்றார் என்றால் அது கீழடி அகழாய்வில் மட்டும்தான் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த அளவுக்கு “தமிழர் நகரிகம்”, “பண்பாடு” தொடர்பான இந்தக் கீழடி ஆய்வில் அரசியல் கட்சிகள் “அரசியல் செய்யாமல்” தமிழர் சமுதாயத்தின் நகரிகத்தை முன்னிறுத்தி அரசியல் செய்ததைப் பார்க்க முடிகிறது. 

நான்காம் கட்ட ஆய்வில் கண்டெடுக்கப்பட்ட அரும்பொருள்கள் இன்றைக்கு தமிழர் நாகரிகத்தைக் கம்பீரமாக எழுந்து நிற்க வைத்துள்ளது. இதுவரை பண்டைய தமிழ்சங்கம், வணிக மையங்கள், உரோமாபுரி, பிற இந்திய மாநிலங்களுடன் தமிழ்நாடு கொண்டிருந்த வணிகத் தொடர்புகள் குறித்த ஆதாரங்கள் 40க்கும் மேற்பட்ட தொல்லியல்துறையின் அகழாய்வுகளில் கிடைத்தன. அந்த “40” ஆய்வுகளில் இருந்து இந்த “கீழடி” ஆய்வு முற்றிலும் வேறு விதமான அரிய தகவல்களை அள்ளிக் கொண்டு வந்து “கோபுரமாக” குவித்திருக்கிறது. தமிழர்களின் நாகரிகத்தின் அடையாளமாக - ஆதாரமிக்க சான்றுகளாக இன்றைக்கு கீழடி அகழ்வாராய்ச்சி முடிவுகள் வெளிவந்துள்ளன. 

கீழடி, நான்காவது அகழாய்வில் 5820 அரும்பொருள்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அவை அனைத்தும் ஆய்வுக்கு அனுப்பி அதன் முடிவுகளும் வந்துவிட்டன. “தமிழர், நாகரிகம் பண்டைய காலத்திலேயே வளர்ச்சி அடைந்த நாகரிகம்” என்பதை அறிவிக்கும் விதத்தில் 50க்கும் மேற்பட்ட தமிழ் பிரமி எழுத்துகள் பொறிக்கப்பட்ட மட்கல துண்டுகள் கீழடி ஆய்வில் தோண்டியெடுக்கப்பட்டுள்ளன. “கீழடி பண்பாடு 2,600 ஆண்டுகள் பழமை வாய்ந்தது” என்பது இந்த அகழாய்வில் கிடைத்துள்ள மிக முக்கியமான இந்திய வரலாற்றுக்கே பாடம் எடுக்கும் கண்டுபிடிப்பு. இதுவரை தமிழர்களின் நகரமயமாதல் கி.மு. 3 நூற்றாண்டை சேர்ந்தது என்றுதான் ஆதாரங்கள் இருந்தது. ஆனால் இப்போது கி.மு. 6 ஆம் நூற்றாண்டிலேயே தமிழர்கள் மத்தியில் “நகரமயமாதல்” இருந்துள்ளது என்பது ஆதாரபூர்வமாகக் காணப்பட்டுள்ளது. இதுவரை தமிழ்ப் பிரமி எழுத்துகள் கி.மு 5ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என்ற கூற்றுதான் இருந்து வந்தது. இப்போது அது கி.மு 6ஆம் நூற்றாண்டுக்குரியது என்பது உறுதி செய்யப்பட்டு தமிழ்ப் பிரமி எழுத்துகள் வரலாறு நூறாண்டுகளுக்கு முன்பு சென்றுள்ளது. கறுப்பு, சிவப்பு நிறப் பானைகளில் காணப்படும் இந்தப் பிரமி எழுத்துகள் வரலாற்று பொக்கிஷமாகக் கிடைத்திருப்பது தமிழர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழகம் கி.மு 3ஆம் நூற்றாண்டில்தான் எழுத்தறிவு பெற்ற சமூகமாக விளங்கியது என்று இதுவரை நம்பியிருந்தார்கள். ஆனால், கீழடி ஆய்வில் தமிழர்கள் கி.மு 6ஆம் நூற்றாண்டிலேயே எழுத்தறிவு பெற்ற சமூகமாக வாழ்ந்திருப்பது தெரியவந்துள்ளது. ஆகவே, தமிழர்களின் எழுத்தறிவு வரலாறு 300 ஆண்டுகள் முன்பு சென்றுள்ளதை இந்த ஆய்வு வெளிப்படுத்தியிருக்கிறது. சான்றோர்கள் வாழ்ந்த பூமி தமிழர் பூமி என்பது நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இங்கு கிடைத்த “கீறல்கள்” சிந்து சமவெளி நாகரிகத்துக்கு சமமாக இருக்கிறது என்ற அரிய தகலும் கிடைத்திருக்கிறது. 

தமிழர்கள் வளர்த்த விலங்குகள் பட்டியலில் திமில் காளை, எருமை, வெள்ளாடு, கலைமான், காட்டுப்பன்றி, மயில் போன்றவற்றின் எலும்புத் துண்டுகள் “கீழடி ஆய்வில்” கண்டறியப்பட்டுள்ளன. அப்படிக் கண்டெடுக்கப்பட்டுள்ள 70 எலும்புத் துண்டுகளில் திமில் காளை, எருமை, வெள்ளாடு போன்றவற்றின் எலும்பு துண்டுகள் 53 சதவீதம் என்று கணக்கிடப்பட்டுள்ளது மட்டுமின்றி, சில துண்டுகளில் வெட்டு காயங்கள் இருப்பது தமிழர்கள் அசைவப் பிரியர்களாகவும் இருந்திருக்கிறார்கள் என்பது தெரிய வந்திருக்கிறது. இதன் மூலம், சங்க கால சமூகம் வேளாண்மையை முதன்மைத் தொழிலாகக் கொண்டிருந்ததும், கால்நடை வளர்ப்பில் முக்கிய பங்கு வகித்ததும் தெரிய வந்திருக்கிறது. 

தமிழர் பெண்களின் வரலாறு பற்றியும் கீழடி ஆய்வில் பல முக்கியத் தகவல்கள் கிடைத்திருக்கின்றன. பெண்கள் தங்களை அலங்கரித்துக் கொள்ளும் கல் மணிகள், சுட்டு வளையல்கள், தந்த வளையல்கள் உள்ளிட்ட 4,000 பொருள்கள் இந்த ஆய்வில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்த அலங்காரப் பொருள்கள் சங்க கால சமூகம் வளமும் செழிப்பும் மிகுந்து விளங்கியதற்கு சான்றாவணங்களாக இருக்கின்றன. தமிழ்குலப் பெண்கள் விளையாடும் விளையாட்டுப் பொருள்களான வட்டச் சில்லுகள் ஏறக்குறைய 600 கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்த “வட்டச் சில்லு” தற்போது மதுரை வட்டாரத்தில் “பாண்டி” விளையாட்டு என்று பெண்கள் மத்தியில் மிகவும் பிரபல்யமாக இருக்கிறது. எல்லாவற்றுக்கும் மேலாக 80 சதுரங்க காய்களும் இந்தக் கீழடி அகல்வாய்வில் எடுக்கப்பட்டுள்ளன என்று விளையாட்டுத்துறையில் பழங்காலத் தமிழர்களின் ஆர்வத்தை எடுத்துரைப்பதாக அமைந்திருக்கிறது.

“கீழடி ஆய்வில் கிடைத்த அரும்பொருள்களைப் பத்திரப்படுத்த உலகத் தரத்தில் மத்திய அரசாங்கமே ஓர் அருங்காட்சியகத்தை அமைக்க வேண்டும்” என்ற கோரிக்கையை அனைத்து அரசியல் கட்சிகளும் முன்வைத்துள்ளன. இந்நிலையில், “150 மில்லியன் இந்திய ரூபாய் செலவில் அருங்காட்சியகம் ஒன்று உலக தரத்தில் அமைக்கப்படும்” என்று கீழடியில் ஆய்வு நடத்திய தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன் அறிவித்திருக்கிறார். அதே நாளில், எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினும் கீழடிக்குச் சென்று ஆய்வுப் பணிகளைப் பார்வையிட்டுள்ளார். “சங்ககாலம் கி.மு 3ஆம் நூற்றாண்டு அல்ல. கி.மு 6ஆம் நூற்றாண்டு” என்பதும், “கீழடி பண்பாடு காலம் கி.மு 6ஆம் நூற்றாண்டு” என்பதும் கீழடித் தமிழர்களுக்குத் தந்துள்ள மிகப்பெரிய பெருமை. தமிழர்களின் நாகரிகத்துக்குக் கிடைத்துள்ள மிக உறுதியான ஆதாரபூர்வமான சான்றிதழ். சாதி ரீதியாகவும் மத ரீதியாகவும் உணர்வுகளைத் தட்டியெழுப்பும் அரசியல் யுகத்தில், தமிழின நாகரிகத்தின் அடிப்படையில் “கீழடி” யின் பெருமை பேசப்படுகிறது.

ஒரு தொல்லியல் ஆய்வு இவ்வளவு பெரிய விழிப்புணர்வை தமிழகத்தில் ஏற்படுத்துமா என்று அனைவரும் வியப்படையும் வண்ணம் “தமிழர் நாகரிகம்” குறித்த விழிப்புணர்வு தமிழக மக்கள் மத்தியில் உத்வேகமாக கிளர்ந்து எழுந்துள்ளது.

இந்த உணர்ச்சிப் பெருக்குக்கு இரை போடும் விதமாக அரசியல் கட்சிகளும் கீழடி நோக்கி பயணம் மேற்கொள்கின்றன. 

 

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/தமிழர்-நாகரிகம்-2-600-ஆண்டுகள்-பழமை-வாய்ந்தது/91-239542

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குமரி கண்ட ஆய்வு தொடங்கபடுமா..? 👍

 

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 3 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 31 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.