-
Tell a friend
-
Similar Content
-
Topics
-
Posts
-
இந்த மோடியை தடை செய்த நாடு, தன் சுயநலத்திற்காக தடையெடுத்து கம்பளம் விரித்து வரவேற்றார்கள், இவர்களை என்ன வென்று சொல்வது, தங்கள் சுயநலத்திற்காக யாரையும் எப்படியும் மாற்றும் இவர்களை என்னவென்று சொல்வது 🤣😅 இந்த காந்தி என்றுமே எழ முடியாது இனி😎
-
எல்லாமே இக்கரைக்கு அக்கரை பச்சை விளையாட்டு தான். டொலர் போனால் அல்லது ரசியா சீனாவிடம் பண அதிகாரம் போனால் உலகமக்கள் வாழ்வு செழிக்கும் என்ற உங்கள் கனவில் நான் தலையிட விரும்பவில்லை. எனக்கு அவர்கள் இதைவிட மோசமான வியாபாரிகள் மக்கள் ஐனநாயக விரோதிகள்.
-
அகநக அகநக முகநகையே முகநக முகநக முறுநகையே
-
நடுவரின் தீர்ப்பால் முடிவு மாறியதா? - மும்பை இந்தியன்ஸ் வெற்றிக்கு காரணமான 'திரில்லிங்' திருப்புமுனை பட மூலாதாரம்,GETTY IMAGES 27 மார்ச் 2023, 09:18 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பெண்கள் பிரீமியர் லீக் தொடர் நேற்றைய தினம் ஒரு திரில்லர் பாணியில் நடந்து முடிந்துள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணி அறிமுக பெண்கள் பிரீமியர் லீக் தொடரின் சாம்பியன் பட்டத்தை வென்று வரலாறு படைத்துள்ளது. ஒரு மாதத்திற்கு முன்னர் நடந்த டி20 பெண்கள் உலகக் கோப்பையை இந்திய ரசிகர்கள் அவ்வளவு எளிதில் மறந்திருக்க முடியாது. ஹர்மன் ப்ரீத் கவுர் தலைமையில் அபாரமாக விளையாடி வந்த இந்திய அணி, அரை இறுதியில் மெக் லானிங் தலைமையிலான ஆஸ்திரேலியாவிடம் ஐந்து ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. பின்னர் ஆஸ்திரேலியா கோப்பையை வென்றது. ஒரு மாதத்திற்குப் பின்னர் இது வேறோரு களம். மீண்டும் ஓர் அதி முக்கியமான போட்டியில் மெக் லானிங் மற்றும் ஹர்மன் ப்ரீத் தலைமையிலான அணிகள் மோதின. வீடியோ கேமா? சர்வதேச ஆட்டமா? கிரிக்கெட்டில் 17 ஆண்டுக்கு பின் தென் ஆப்ரிக்கா மீண்டும் அசாத்திய சாதனை7 மணி நேரங்களுக்கு முன்னர் பிரியங்கா காந்தியின் தீவிர அணுகுமுறை காங்கிரசை கரை சேர்க்குமா?5 மணி நேரங்களுக்கு முன்னர் சர்வதேச கால்பந்தில் மீண்டும் முத்திரை பதிக்கும் ரொனால்டோ - யூரோ தகுதிச்சுற்றில் சாதனைமேல் சாதனை4 மணி நேரங்களுக்கு முன்னர் ஹர்மன்ப்ரீத் கவுர் தனது தலைமையில் டி20 உலகக் கோப்பையை வெல்லத் தவறியபோதும், இந்த முறை மனம் துவளாமல் நேர்த்தியாக அணியை வழிநடத்தி கோப்பையை வெல்ல வழிவகுத்தார். நேற்றைய தினம் நடந்த பெண்கள் பிரீமியர் லீக் இறுதிப்போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. இந்தப் போட்டியில் ஏழு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை அணி வென்றது. ஆனால் இந்தப் போட்டியின் முடிவைத் தாண்டியும் நடுவரின் ஒரு தீர்ப்பு மிகவும் சர்ச்சை கிளப்பியுள்ளது. மும்பை பிரபோர்ன் மைதானத்தில் நேற்றைய தினம் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் மெக் லானிங் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். அதிரடி இளம் வீரர் ஷஃபாலி வர்மா, அனுபவம் வாய்ந்த கேப்டன் மெக் லானிங், துடிப்பான பேட்டர் ஜெமிமா, உலகத்தரம் வாய்ந்த ஆல்ரவுண்டர் மரிஜென் கப், பௌலிங் ஆல்ரவுண்டர் ஷீகா பாண்டே என டெல்லி வலுவான படையோடு களமிறங்கியது. அதிரடி பேட்ஸ்மேன்கள், அசத்தல் ஆல்ரவுண்டர்கள் ஃபுல் பார்மில் அணி என மும்பையும் சம பலத்தோடு களம் கண்டது. லீக் போட்டிகளில் இந்த இரு அணிகளும் மோதிய இரு போட்டிகளில் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றிருந்தன. லீக் சுற்றுகள் முடிவில் இரு அணிகளும் விளையாடிய எட்டு போட்டிகளில் ஆறு வெற்றிகளோடு 12 புள்ளிகள் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. அதனால் இந்த இரு அணிகளுக்கு இடையேயான போட்டி மிகவும் எதிர்பார்ப்பைக் கூட்டியிருந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லி பேட்டிங்கை தொடங்கியது. முதல் ஓவரை மெக் லானிங் எதிர்கொண்டார். நட்சத்திர வீரர் நட் சிவர் ப்ரண்ட் பந்து வீசினார். ஐந்தாவது பந்தில்தான் முதல் ரன் எடுத்தார் லானிங். ஆறாவது பந்தை எதிர்கொண்ட ஷெஃபாலி வர்மா ஒரு ரன் எடுத்து பேட்டிங் முனைக்கு வந்தார். இப்போதுதான் அனல் பறக்கும் அந்த யுத்தம் ஆரம்பமானது. இந்த தொடரில் ஓவருக்கு ஆறு ரன்களுக்கும் கீழ் விட்டுக்கொடுத்த பந்துவீச்சாளர்களில் ஒருவரான இஸி வாங் பந்து வீச வந்தார். இந்தத் தொடரில் அபாரமான ஸ்ட்ரைக் ரேட் வைத்திருக்கும் அதிரடி பேட்டரான ஷெஃபாலி வர்மா வாங்கை எதிர்கொள்ளத் தயரானார். ஹாட்ரிக் எடுத்த நட்சத்திர பந்து வீச்சளராக உருவெடுத்திருந்த வாங், ஷெஃபாலிக்கு லெக் ஸ்டம்புக்கு வெளியே தனது முதல் பந்தை வீசினார். அந்த பந்தை லாங் ஆன் திசையில் விளாசினார் ஷெஃபாலி. பந்து சிக்சருக்கு சென்றது. அடுத்த பந்தையே பௌண்டரிக்கும் விளாசினார். இப்போது மூன்றாவது பந்து, ஹை ஃபுல் டாஸாக வீசினார் வாங், இடதுபுறம் நகர்ந்து லாகவமாக ஆஃப் சைடில் ஒரு ஸ்லைஸ் ஷாட் ஆடினார். அந்தப் பந்து மெலி கெர் கையில் தஞ்சமடைந்தது. பந்து இடுப்புக்கு மேல் ஃபுல் டாஸாக வந்தது என நம்பிய ஷெஃபாலி மற்றும் லானிங் உடனடியாக ரிவ்யூ செய்தனர். மூன்றாவது நடுவர் திரும்பத் திரும்ப அந்தப் பந்தின் ரீப்ளேவை பார்த்தார். பந்தை டிராக் செய்யும் தொழில்நுட்பம் அந்தப் பந்து இடுப்புக்கு மேல் வந்து, கீழே இறங்குவது போன்று தெரிந்தது. மூன்றாவது நடுவர் ஷெஃபாலி அவுட் என கள நடுவரின் தீர்ப்பை உறுதிப்படுத்தினார். பட மூலாதாரம்,GETTY IMAGES Twitter பதிவை கடந்து செல்ல, 1 காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது Twitter பதிவின் முடிவு, 1 களத்தில் இருந்த லானிங் மற்றும் ஷெஃபாலி இருவருமே அதிருப்தி அடைந்தனர். குறிப்பாக கேப்டன் லானிங் கள நடுவரிடமே அதிருப்தியை வெளிப்படுத்தினார். நடுவரின் தீர்ப்பு மும்பை இந்தியன்ஸுக்கு சாதகமாக சென்றதையடுத்து அந்தப் பந்து நோ பாலா இல்லையா என சமூக ஊடகங்களில் விவாதங்கள் எழுந்தன. பொதுவாக கிரிக்கெட் விதிகளின்படி, பந்து வீச்சாளர் வீசும் பந்து ஃபுல் டாஸாக பேட்டரின் இடுப்புக்கு மேல் சென்றால் அந்தப் பந்து நோ பாலாக அறிவிக்கப்படும். ஆனால் இந்தக் குறிப்பிட்ட பந்தில் இரு வகையான விவாதங்கள் எழுந்தன. எனினும் நடுவரின் முடிவு குறித்து பலர் சமூக ஊடகங்களில் அதிருப்தி தெரிவித்தனர். Twitter பதிவை கடந்து செல்ல, 2 காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது Twitter பதிவின் முடிவு, 2 Twitter பதிவை கடந்து செல்ல, 3 காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது Twitter பதிவின் முடிவு, 3 Twitter பதிவை கடந்து செல்ல, 4 காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக
-
Recommended Posts