பிழம்பு

கீழடி அகழாய்வும் தமிழர் நாகரீகமும் வரலாறும்

Recommended Posts

விளையாட்டுகளில் கவனம் செலுத்திய கீழடி தமிழர்கள்.!

0.png

பொதுவாக ஒரு சமூகம் சிறந்த வாழ்வியலைக் கொண்டதாக இருக்கின்றது அல்லது இருந்தது என்பதினை அறிய அச்சமூதாயத்தின் வாழ்வியலின் வழிமுறைகளை அறிவதின் மூலம் தெரிந்து கொள்ளலாம்! அந்த வாழ்வியலில் உழைப்பு, உணவு, உறக்கம் போன்றவற்றோடு சேர்ந்து விளையாட்டும் மிக முக்கியமான ஒன்றாக அமைந்து விடுகின்றது.

இந்த நூற்றாண்டின் மிக உன்னதமான கண்டுபிடிப்பான கீழடி அகழாய்வுகளில் எத்தனையோ தகவல்கள் தினம் தினம் அன்றைய மக்களின் வாழ்வியலான கட்டடக்கலை, வணிகம், விவசாயத்திற்கான கால்நடை வளர்ப்பு, உணவுக்கான விலங்கு வளர்ப்பு போன்றவற்றை தன்னிடமிருந்த எச்சங்களை வெளிபடுத்திக் கொண்டிருப்பதின் வாயிலாக உலகிற்கு பறைசாற்றிக் கொண்டிருக்கின்றது. 

1.png

அந்த வகையில் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதைபொருட்களான வட்டச்சில்லுகள், ஆட்டக்காய்கள், சதுரங்கக் கட்டைகள் மூலம் அன்றைய சமுதாயம் பொழுதுபோக்கு அம்சங்களையும் சிறப்பாகக் கொண்டிருந்ததை அறிய முடிகின்றது.

பெண்களையும் சக மனிதராக கருதும் மனப்பான்மை 

2.png

கீழடி அகழாய்வுகளில் கிடைக்கப் பெற்ற பொருட்களில் அதிகமான வட்டச்சில்லுகள் 600 எண்ணிக்கையில் (தற்போதும் இவ்விளையாட்டு ‘பாண்டி’ என்ற பெயரில் விளையாடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது) கிடைத்திருக்கின்றது.

மேலும் தாய உருட்டி விளையாட்டுக்கான பகடைக்காய்களும் கிடைத்துள்ளன. இதன் மூலம் பெண்களையும் ஆண்களுக்கு சமமாகக் கருதும் மனப்பான்மை உடையவர்கள் கீழடி நகர நாகரீகத்தினர் என்பது அறிந்து கொள்ளலாம்.

பெண்களுக்கு ஆன்மா என்ற ஒன்று இருக்கின்றதா இல்லையா என்ற கேள்வி உலக நாகரீகத்தின் ஊற்றுக்கண்ணாகக் கருதபடும் கிரேக்கத்திலேயே எழுந்த அதே காலகட்டத்தில், தமிழ்ச் சமூகமான கீழடியில் பெண்களையும் சமமாகக் கருதி, அவர்களும் தங்கள் களைப்பு நீங்க விளையாட வேண்டும் என்ற அடிப்படையில் விளையாட்டுப் பொருட்களை இருப்பதைப் பார்க்கும்போது, நாங்கள் உலகத்திற்கே முன்மாதிரியாக வாழ்ந்த சமூகமாகவே இருந்திருக்கின்றோம் என்பதை உறுதிப்படுத்தி இருக்கின்றனர்.

சிறுவர்கள் மற்றும் பெரியவர்களுக்கான விளையாட்டுப் பொருட்கள் 


3.png

அகழாய்வில் சிறுவர்கள் கயிறு கட்டி விளையாடும் சுடுமண்ணாலான வட்டச்சுற்றிகள், வண்டி இழுத்து விளையாடும் சக்கரங்களும், பெரியவர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்தும் வகையில் விளையாடும் சதுரங்க விளையாட்டுக் காய்களும் பல்வேறு அளவில் 80 எண்ணிக்கையில் கிடைத்துள்ளன. இதன் மூலம் ஒரு நகர நாகரீகத்தினர் தன்னுடைய சக மாந்தர்கள் எப்படி தங்களின் வாழ்வியலின் பொழுதுகளை திறம்படக் கழித்திட வேண்டும் என்பதை கீழடி பாடம் நடத்துகின்றது.

நம்முடைய நிலை

கீழடியில் அதிக அளவில் கிடைத்துள்ள இந்தத் தொல்பொருட்களின் மூலம் தமிழர் வரலாறு நமக்கு பாடம் ஒன்றை நடத்துகின்றது.

நாகரீகமற்றவர்கள் எனக் கிண்டலடிக்கப்படும் ஆதி கால மக்கள் தத்தமது வாழ்வியலை சிறப்பாக அமைத்திருக்கின்றார்கள். அடிப்படைத் தேவைகளை பூர்த்தியாக்கி வாழ்வியலை செம்மையாக்கி வேலை, ஊண், உறக்கம், ஓய்வு என திட்டமிட்டு வாழ்ந்து, தமது எச்சங்களை பின்பு ஒரு காலத்தில் சிறப்பாக வெளிப்படும் வண்ணம் தரமாக்கி நமக்கு அறிவுப்பாடம் எடுத்திருக்கின்றனர்.

நாம் நமது அண்டை வீட்டில் வசிக்கும் நெடுநாள் குடியானவனையும் கூட அறியாது ஒரு அவசர கால வாழ்க்கையினை வாழ்ந்து நமது சிறப்பான வாழ்வினை அழித்துக் கொண்டு வருகின்றோம்.

இயந்திரத்தனமான கார்ப்ரேட் வாழ்வு, அதில் பிழைக்கத் தெரிந்தவனைத் தவிர மீதம் உள்ளவனை மிதித்துச் சென்றிடும் போக்கு, தமது பெற்றோர்களுக்கும் - பெற்றவர்களுக்கும் - கரம் பிடித்தவளுக்கும் சிறிது நேரம் கூட ஒதுக்க இயலாத நிலை என ஒவ்வொன்றாக நாம் இழந்து கொண்டிருக்கும் விசயங்கள் ஏராளம்.

- நவாஸ்

https://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/38710-2019-10-03-08-24-38

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

கீழடி சொல்லும் வரலாறு என்ன.?

 

 • Thanks 1

Share this post


Link to post
Share on other sites
On 10/9/2019 at 4:17 PM, புரட்சிகர தமிழ்தேசியன் said:

கீழடி சொல்லும் வரலாறு என்ன.?

 

அருமையான ஒரு காணொளி... கலந்து கொண்ட நான்கு அரசியல்வாதிகளும்,
ஆரோக்கியமான கருத்தை வெளிப்படுத்தியிருந்தது மகிழ்ச்சி.
வெங்கடேசன், ரவிக்குமார் போன்றோர்.. மத்திய அரசு... விடயத்தில் மெதுவாக நகர்வதை கூறியது சரியே...

பா.ஜ.க.வை சேர்ந்த ராகவன் இதில் அரசியல் செய்யாமல்....
தமிழர் அனைவரும் ஒருமித்து.... சம்பந்தப் பட்ட  மத்திய  அமைச்சர்களிடம்,
பிரச்சினைகளை... சொல்வதற்கு தானும் வருவதாக குறிப்பிட்டது, நல்ல விடயம்.   

அ.தி.மு.க., தி.மு.க. போன்றவை... ஜெயலலிதா, கருணாநிதிக்கு மணி மண்டபம் கட்டுவதை விட்டு விட்டு,
கீழடியில்.. இதுவரை கிடைத்த 15,000 பொருட்களை வைத்து  பாதுக்காக்க,
அரும் காட்சியகம்  கட்டுவதில் முனைப்பு காட்ட   வேண்டும்.

இவைகள் யாவும்.. தமிழக தமிழருக்கு மட்டுமல்ல.... 
உலகத் தமிழருக்கும் பொதுவான, பொருட்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

கீழடி அகழ்வாராய்ச்சியில், பழங்கால கல்திட்டை கண்டுபிடிப்பு...!

keezhadi-post.png

சிவகங்கை மாவட்டம், கீழடி இரண்டாயிரத்து 600 ஆண்டுகால வரலாற்றை சுமந்து நிற்குகிறது. தமிழரின் தொன்மையை பறைசாற்றும் கீழடியில், தோண்டத் தோண்ட தமிழரின் பழங்கால நாகரிகம் தலைகாட்டிக் கொண்டேயிருக்கிறது.

கடந்த 2014 தொடங்கி 2017ம் ஆண்டு வரை நடந்த மூன்று கட்ட அகழ்வாராய்ச்சி பணியில், கிடைத்த ஒவ்வொரு பொருட்களும் ஆதி தமிழரின் பெருமையை வெளிச்சம் போட்டுகாட்டியது. முதல் மூன்று கட்ட அகழ்வாராய்ச்சி முடிந்த நிலையில், நான்கு மற்றும் ஐந்தாம் கட்ட அகழ்வாராய்ச்சி பணியை தமிழக தொல்லியல்துறை தொடர்ந்து நடத்தி வருகிறது. விரைவில் ஆறாம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் தொடக்கப்படவுள்ள நிலையில், 110 ஏக்கர் பரப்பளவில் அகழ்வாராய்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக தொல்லியல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதில் கட்டட தொழில்நுட்பம், வேளாண்மை, நெசவு உள்ளிட்டவற்றில் தமிழர்கள் மேம்பட்டவர்கள் என தெரியவந்துள்ள நிலையில், கீழடியில் பழங்கால மனிதர்கள் தங்குமிடமாக பயன்படுத்தும் கல்திட்டை கண்டறியப்பட்டுள்ளது. பாறைகளின் மறைவில் மழை, வெயில் போன்றவற்றிற்காக கல்திட்டை அமைத்து அதில் பண்டைய கால மனிதர்கள்  வசிப்பிடமாக பயன்படுத்தியிருக்கக்கூடும் என தொல்லியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

இதற்கிடையே கீழடியில் நடைபெற்று வரும் அகழ்வாராய்ச்சியை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பார்வையிட்டார். அப்போது, அங்கு நடைபெற்று வரும் ஆய்வு பணிகள் குறித்த விவரங்களை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.  தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, கீழடியில் கண்டெடுக்கப்பட்ட 16 ஆயிரம் பொருட்களை கொண்ட ஆய்வின் மூலமாக, எழுத்தறிவு பெற்ற மக்கள் வாழ்ந்து உள்ளதை அறிய முடிகிறது என குறிப்பிட்டார். அவ்வாறு கண்டறியப்பட்ட பொருட்களை, கீழடி பகுதியில் சர்வதேச தரத்தில் அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் எனவும், கீழடியை பாதுகாக்கப்பட்ட பகுதியாக, மத்திய அரசு அறிவிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

உலகின் முதல் நாகரிகம் தமிழர் நாகரிகம் மட்டுமே என்பதை உலகம் மக்கள் விரைவில் ஏற்றுக் கொள்வார்கள் எனவும் நம்பிக்கை தெரிவித்தார். கீழடி அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்று வரும் இடங்களை உள்நாடு மட்டுமின்றி வெளிநாட்டை சேர்ந்தவர்களும் ஆர்வமுடன் பார்வையிட்டு செல்கின்றனர். இதன்மூலம் கீழடியின் பெருமை சர்வதேச அளவிற்கும் பரவியுள்ளது என்கின்றனர் தமிழ் ஆர்வலர்கள்.

https://ns7.tv/ta/tamil-news/tamilnadu-editors-pick/11/10/2019/excavation-discovery-ancient-palette?fbclid=IwAR1h_asC4D1LKzygZULH0nsZL1dPINp17oM7kWsuHMJNqkMvp8KWkIOQGug

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


 • Topics

 • Posts

  • எனக்கென்னவோ கோத்தா தேர்தலில் வென்றால் கூட மட்டக்களப்பில் சஜித் தான் முன்னிலை வகிப்பார் என தோணுது. பார்க்கலாம். பிள்ளையான் முன்பே மகிந்த கோத்தா பக்கம். எனவே இத்தேர்தலில் அவரது ஆதரவாளர்களது வாக்குகள் பெரிய தாக்கம் செலுத்தாது. முன்பை போலவே இருக்கும். வியாழேந்திரன் கோத்தாவுக்கு ஆதரவளிப்பதற்காக எத்தனை பேர் கோத்தாவுக்கு வாக்களிப்பார்கள் என்பதில், ஒரு பகுதி வாக்குகள் கோத்தாவுக்கு செல்லலாம். ஹிஸ்புல்லாவுக்கு முஸ்லிம்கள் மத்தியில் ஆதரவு இருந்தாலும் ஜனாதிபதி வேட்பாளராக அவர் பெருமளவு வாக்குகளை பிரிக்கப்போவதில்லை, சிறுபகுதி வாக்குகளையே பிரிப்பார் என நினைக்கிறேன். 2010 தேர்தலில் மகிந்த வென்ற போது மட்டக்களப்பில், சரத் பொன்சேகா - 146,057 மகிந்த - 55,663 வாக்குகளை பெற்றிருந்தார்கள். இம்முறை என்ன நடக்கும் என பார்க்கலாம்.
  • எனக்கு நியாபகம் இருக்கு. அக்கினிக்கு எப்ப்டியோ தெரியா 😂. ஆனால் - கூட்டமைப்பில் நின்று கேட்டேன் ஆனால் அவர்கள் அந்தவேலைக்கு சரி வரமாட்டார்கள், எனவே தனியாக கிளம்பி விட்டேன் எனும் அவர் வாதத்திலும் நியாயம் உண்டே? வியாழேந்திரனின் ஆதரவுடன் கோட்ட வென்றால் - அது மட்டக்களப்பில் சேடம் இழுக்கும் தமிழ்தேசியத்துக்கு - பால் ஊற்றி கிரியை செய்தது போலவே இருக்கும். ஆனால் மக்களே தமிழ் தேசியத்தை விட்டு விலகி, தமக்கென ஒரு மாவட்ட தலைமையில் செயல்பட வேண்டும் என முடிவெடுத்தால், இல்லை என்று சொல்ல நாம் யார் ? மட்டக்களப்பின் தமிழ் அரசியல் ஒரு கவர் விடும் பாதையில் வந்து நிக்கிறது. ஒரு பக்கம் தமிழ் தேசிய அடிப்படையிலான உரிமை அரசியல். மறுவழி மாவட்ட-மைய அபிவிருத்தி அரசியல்.  பார்கலாம் மக்களின் முடிவை.
  • கல்யாணி, நீங்கள் தந்துள்ள விளக்கம் சரிதான் ஆனால் இந்த வார்த்தையை நீங்கள் பாவித்த களம் (context) தப்பு. Pipe dream என்பது நடந்த ஒரு விடயத்தை (ஆள் காணமல் போதல்) நடக்கவில்லை என மறுப்பதல்ல.  Pipe dream என்பது நடக்க முடியாத ஒரு விடயத்தை நடக்கும் என நம்புவது. தமிழில் இதற்கு தக்க வார்தைகளாக கானல் நீரை விடவும், “பகற்கனவு” அமையும் என்பதே என் கருத்து. BJP forming the government in Tamil Nadu will remain a pipe dream for the RSS. தமிழ்நாட்டில் பிஜேபி ஆட்சி அமைப்பதென்பது RSSற்கு வெறும் பகற்கனவாகவே நிலைக்கும். மொழி ஒரு கருவி, அறிவல்ல. ஆனால் எந்தக் கருவியையும் எப்படி கையாளுவது என்பதை கருவியோடு பரிச்சயம் உள்ளவர்களோடு பேசி அறிந்துதான் கையாள வேண்டும். கூகிளில் கார் ஓட்டுவது எப்படி என்ற புத்தகத்தை வாசித்துவிட்டு, கார் ஓட்ட முடியாதுதானே? மொழிகளும் அப்படித்தான்.
  • நாங்கள் மதத்தை அரசியலில் கலக்கமாட்டம்!!!
  • தூதுவராலயம் (embassy) என்றாலும் உயர் ஸ்தானிகராலயம்  (High commission) என்பதும் ஒன்று தான்! அமெரிக்க கண்ட நாடுகள் தூதுவராலயம் என்பதை, பிரித்தானிய ஆட்சியின் வழி வந்த பொது நலவாய நாடுகள் உயர்ஸ்தானிகராலயம் என அழைக்கின்றன! இது அமெரிக்க பிரிட்டிஷ் வழமை வேறுபாட்டின் விளைவு! கௌரவ தூதுவர் (honorary consul) என்பது சில நாடுகள், உள்நாட்டிலேயெ ஒரு பிரமுகரைத் தேர்ந்தெடுத்து அவரை தங்கள் நாட்டின் தூதுவர் போல செயற்பட வைப்பது! உதாரணமாக மொறீசியஸ் நாட்டின் கௌரவ தூதுவராக ஈஸ்வரன் என்ற இலங்கைப் பிரமுகர் இருந்தார் என நினைக்கிறேன். கொன்சலேற் என்பது நான் ஏற்கனவே சொன்னது போல தலைமைத் தூதுவராலயத்தை விட வேறு நகரங்களில் அமைந்திருக்கும் கிளைத் தூதரகங்கள். attache என்பது "தகுதி வாய்ந்த அதிகாரி" என நினைக்கிறேன். தூதுவரின் கீழ் பல attache கள் இருப்பர். பாதுகாப்பு, வணிகம் என ஒவ்வொரு துறைக்கும் இப்படி இருக்கும் அதிகாரிகளை attache என்பர்!