Jump to content

கீழடி அகழாய்வும் தமிழர் நாகரீகமும் வரலாறும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கீழடி எவ்வளவு பரந்தது என்பது கண்டுபிடிப்பது இனியும் அவ்வளவு கடினம் இல்லை.

ஏனெனில், Ground-penetrating radar (GPR) என்பது இப்பொது பொதுவாக பாவிக்கப்படும் தொழில்  நுட்பம், புவிபௌதிகத்தை (Geophysics) ஆய்வதற்கு.

சிறு விமானத்தில் இருந்து இயக்கப்படலாம்.   

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • Replies 202
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்

கொடுமணல் அகழாய்வில் பெரிய முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிப்பு

 

கீழடியின் 6ஆம் கட்ட அகழாய்வின் போது சென்னிமலை அருகே நடைபெற்று வரும் அகழாய்வில் பெரிய அளவிலான முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டது. இதற்குள் இருந்த எலும்புகள் ஆய்விற்காக மதுரைக்கு கொண்டு செல்லப்பட்டது.

ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே கொடுமணல் கிராமத்தில் 2300 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மனிதர்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் இருந்ததால், பல்வேறு கட்ட அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. கொடுமணல் பகுதியில் கடந்த 4 மாதங்களாக அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த அகழாய்வில் அணிகலன்கள் தயார் செய்த தொழிற்சாலைகளும், வெள்ளி மற்றும் செம்பு நாணயங்கள், சூது பவள கல்மணிகள்,  வாள், சிறிய கத்திகள், மண்குவளை, மண் சாடிகள் உட்பட ஏராளமான பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

கல்லறைகள் இருந்த பகுதியை ஆய்வு செய்த போது, பெரிய அளவிலான மூன்று பானைகள் மண்ணில் புதைந்து கிடந்தன. இதில் ஒரு பானையை நேற்று(15) தொல்லியல் ஆய்வாளர்கள் ஆய்வு செய்தனர்.

மண் நிரம்பியிருந்த பானையில் மனிதனின் உடைந்த மண்டை ஓடுகள், கை, கால் எலும்புகள் போன்றன காணப்பட்டன.  இதன் சில மாதிரிகைளை டி.என்.ஏ பரிசோதனைக்காக ஆய்வுகூடத்திற்கு எடுத்துச் சென்றனர். இதனை ஆய்வு செய்தால் அவர்களின் தொடர்பு மாதிரிகளை அறிய முடியும் என நம்பப்படுகின்றது.

தற்போதைய ஆய்வில் செங்கற்கள் மூலம் கட்டமைக்கப்பட்ட தொழிற்கூடம் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் கல்மணிகளும், பிராமி எழுத்துக்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இந்த ஆறாம் கட்ட அகழாய்வுப் பணிகள் எதிர்வரும் 30ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.ilakku.org/கொடுமணல்-அகழாய்வில்-பெரி/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொடுமணல்: 100க்கும் மேற்பட்ட அரிய பொருட்கள் கண்டெடுப்பு – முக்கிய ஆவணம் என தகவல்

மணி நேரங்களுக்கு முன்னர்
கொடுமணல்

பட மூலாதாரம், TN Archeology Department

 

கொடுமணல் அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழியில் கிடைத்த மனித எலும்புகள் ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

ஈரோடு மாவட்டத்தின் சென்னிமலை அருகே நொய்யல் நதிக்கரையில் அமைந்துள்ள கொடுமணல் பகுதியில், மே 27 ஆம் தேதி முதல் தமிழக தொல்லியல் துறை அதிகாரிகள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மாணவர்கள் உட்பட நாற்பதுக்கும் மேற்பட்டோரைக் கொண்ட ஆராய்ச்சி குழுவினர் அகழாய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கொடுமணல்

பட மூலாதாரம், TN Archeology Department

 

இதில் சுடுமண்ணால் ஆன மணிகள், சங்கு வளையல்கள், பளிங்கு கற்கள், நாணயங்கள், முதுமக்கள் தாழி, சுடுமண் அடுப்பு, இரும்பு பொருட்கள் மற்றும் கொள்ளுப்பட்டறைகள் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இவற்றில் மனிதர்கள் வாழ்ந்த காலத்தை கணிக்க உதவும் மனித எலும்புகளை கொண்ட முதுமக்கள் தாழிகள் மிகமுக்கிய தொல்லியல் ஆவணமாக கருதப்படுகின்றன.

கொடுமணலில் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வுப் பணிகள் குறித்து தமிழக தொல்லியல்துறை திட்ட இயக்குனர் ரஞ்சித் பிபிசி யிடம் பேசினார்.

"கொடுமணலில் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வுப் பணியில் 100க்கும் மேற்பட்ட அரிய பொருட்கள் கிடைத்துள்ளன. இவற்றின் காலம் மற்றும் பிற தகவல்கள் உரிய ஆராய்ச்சிக்கு பின்னர் தான் தெரிய வரும். ஆனால், தற்போது கிடைத்துள்ள பொருட்களை ஆராயும்போது, இந்த பகுதியில் மக்கள் நாகரிகம் இருந்ததும், தொழிற்கூடங்கள் மற்றும் வர்த்தகம் நடைபெற்றதும் உறுதியாகியுள்ளது."

கொடுமணல்

பட மூலாதாரம், TN Archeology Department

 

"பல்வேறு வடிவம் மற்றும் அளவிலான இரும்பு, எஃகு ஆயுதங்கள் மற்றும் நெசவுத் தொழிலுக்கான பொருட்கள் கிடைத்துள்ளன. எனவே, பண்டைய காலத்தில் இப்பகுதி வர்த்தகத்திற்கான முக்கிய நகரமாக விளங்கியது உறுதி செய்யப்பட்டுள்ளது," என அவர் தெரிவித்தார்.

மேலும், சமீபத்திய அகழாய்வில் கிடைத்த பல்வேறு வகைகளைச் சேர்ந்த மூன்று முதுமக்கள் தாழிகளில், ஒன்றிலிருந்து கிடைக்கப்பெற்ற மனித மண்டை ஓடு, பல், கை மற்றும் கால் எலும்புகள் டி.என்.ஏ ஆய்விற்காக மதுரைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவித்தார் ரஞ்சித்.

கொடுமணல்

பட மூலாதாரம், TN Archeology Department

 

"முதுமக்கள் தாழியில் கிடைத்த மனித எலும்புகள் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் உள்ள ஆய்வு கூடத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளன. அங்கு அவை பாதுகாப்பாக கையாளப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்படவுள்ளது. இந்த ஆய்வு முடிவுகளின் அடிப்படையில் கொடுமணலில் மக்கள் வாழ்ந்த காலம் கணக்கிடப்படும்,"

"பழுப்புசாயம் பூசப்பட்ட கருப்பு மற்றும் சிவப்பு நிற பானை ஓட்டின் மேல்பகுதியில் தமிழ் பிராமி எழுத்துகள் கிடைத்துள்ளன. 'சம்பன்' என்ற எழுத்து பொறிக்கப்பட்ட சிறிய குவளை அகழாய்வுக் குழியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது,"

"இதேபோன்று சுமார் 100 தமிழ் பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட மட்கலங்கள் கிடைத்துள்ளன. இவற்றில் 'ஏகன்' என்றப் பெயர் சொல் பொறித்த மட்கலங்களின் ஓடுகள் இரண்டு கிடைத்துள்ளன. இங்கு கிடைத்துள்ள தமிழ் பிராமி எழுத்துகளில் மிகுதியானவை பெயர்ச்சொல்லாக கிடைத்துள்ளன. இவை சுமார் 2500 ஆண்டுகளுக்கு முற்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது," என தொல்லியல் துறை அதிகாரி ரஞ்சித் தெரிவித்தார்.

முதுமக்கள் தாழி எனும் ஈமச்சின்னங்கள்

கொடுமணல்

பட மூலாதாரம், TN Archeology Department

 

கொடுமணல் அகழாய்வில் கிடைத்த மனித எலும்புகளின் காலம் கி.மு 5 முதல் கி.மு 1ஆம் நூற்றாண்டாக இருக்கலாம் என கணித்துள்ளார் மூத்த தொல்லியல் ஆய்வாளர் பேராசிரியர் ராஜன்.

"முதுமக்கள் தாழி என்பது இறந்தவர்களுக்காக வைக்கப்படும் ஈமச்சின்னங்கள். தற்போதுவரை, வாழ்விடங்களில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வில் கிடைத்த பொருட்களை ஆய்வு செய்தபோது கொடுமணலில் கி.மு. 5 முதல் கி.மு 1ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மனிதர்கள் இருந்தது தெரியவந்துள்ளது. இப்போது, உயிரிழந்தவர்களை அடக்கம் செய்யும் இடத்தில் கிடைக்கப்பெற்றுள்ள முதுமக்கள் தாழிகளும் இந்த காலத்தை சேர்ந்தவையாகத்தான் இருக்கும். எனவே, அதே காலகட்டத்தைச் சேர்ந்த மனிதர்களின் எலும்புகளாத்தான் இவை இருக்கக்கூடும்" என்கிறார் ராஜன்.

கொடுமணலில் செப்டம்பர் மாத இறுதிவரை அகழாய்வுப் பணிகள் நடைபெறவுள்ளது. இதில், மேலும் பல பழங்கால பொருட்கள் கிடைக்க வாய்ப்பிருப்பதாக தொல்லியல் துறையினர் தெரிவிக்கின்றனhttps://www.bbc.com/tamil/arts-and-culture-54189244

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இயற்கை சீற்றத்தால் கீழடி அழிவுற்றிருக்குமா? – ஆய்வுகள் தொடங்கின

 

சிவகங்கை மாவட்டம் கீழடியில் ஆறாம்கட்ட அகழாய்வுகள் தமிழக தொல்லியல்துறையினர் சார்பில் நடைபெற்று வருகின்றன. இதுவரை நடைபெற்ற ஆய்வில் பல பழமையான பொருட்கள் பல மீட்கப்பட்டன. பானைகள், வடிகால் அமைப்பு குழாய்கள், தங்க நாணயங்கள், எடைக் கற்கள், மனித எச்சங்கள் போன்ற பல பொருட்கள் இங்கு மீட்கப்பட்டுள்ளன.

இவை 2600 ஆண்டுகள் பழமை வாய்தவை என கண்டறியப்பட்டுள்ளதுடன், இவற்றை உறுதிப்படுத்தும் ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இங்கு கிடைத்த பொருட்கள் சங்ககால தமிழர்கள் நாகரீகத்துடன் வாழ்ந்ததை நிரூபிக்கின்றன. இங்கு வாழ்ந்த மக்கள் எங்கு சென்றார்கள், இந்த நகரம் அழிந்ததற்கான காரணம் என்ன என அறிவதற்காக, நிலவியல் துறை ஆய்வாளர்கள் மூலம் ஆய்வுப் பணிகள் நேற்றுத் தொடங்கியுள்ளன.

டேராடூன் பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியரும் திருவாரூர் மத்திய பல்கலைக்கழக நிலவியல் துறைத் தலைவருமான பேராசிரியர் ஜெயம்கொண்ட பெருமாள் தலைமையில் இரு ஆராய்ச்சிக் கல்லூரி மாணவர்களுடன் நேற்று ஆய்வுப் பணிகள் தொடங்கின. இதற்காக கீழடியிலுள்ள நிலப்பரப்பிலிருந்து 13 மீற்றர் ஆழம் வரை பல்வேறு இடங்களில் மண் அடுக்கு மாதிரிகள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. இவற்றை வைத்து கீழடி நகரம் அழிந்ததற்கான காரணம் குறித்து ஆய்வு செய்யப்பட உள்ளது.

இந்த ஆய்வின் மூலம் இந்த நகரம் அழிந்ததற்கான காரணம் குறித்து ஆய்வு செய்யப்படவுள்ளதாகவும், கீழடி பகுதி கடல் உள்வாங்கியதால் அழிந்திருக்குமா, அல்லது சுனாமி போன்றவற்றால் அழிந்திருக்குமா, மக்கள் இடம்பெயர்ந்ததால் அழிந்திருக்குமா என ஆய்வு செய்யவுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இதற்காக கீழடியில் சர்ஃபேஸ் ஸ்கானர் என்ற நவீன லேசர் கருவி மூலம் அகழாய்வுப் பணிகள் நேற்று ஆரம்பிக்கப்பட்டன. இந்த லேசர் கருவிகள் தரை மட்டத்திலிருந்து 500 மீற்றர் ஆழத்திற்கு ஊடுருவி, கீழே பழங்கால கட்டிடங்கள், பொருட்கள் உள்ளதா என ஆய்வு செய்யும் திறன் கொண்டவை.

இதேவேளை வரும் செப்டெம்பர் இறுதியுடன் ஆறாம்கட்ட அகழாய்வுப் பணிகள் நிறைவு பெற்று, எதிர்வரும் ஜனவரியில் 7ஆம் கட்ட அகழாய்வுப் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

http://www.ilakku.org/இயற்கை-சீற்றத்தால்-கீழடி/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கீழடி அகழாய்வில் அகரத்தில் 20 அடுக்கு உறைகிணறு கண்டுபிடிப்பு

5.jpg

கடந்த பெப்ரவரி மாதம் 19ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட 6ஆம் கட்ட கீழடி அகழாய்வில் சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகில் உள்ள அகரம் என்ற இடத்தில் கடந்த வியாழக்கிழமை 20 அடுக்குகள் கொண்ட உறைகிணறு கண்டுபிடிக்கப்பட்டது.

கீழடி அகழாய்வில் கீழடியின் அருகிலுள்ள அகரம், கொந்தகை, மணலூர் ஆகிய இடங்களில் அகழாய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இப்பகுதியில் 3ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொன்மையான பொருட்கள், கட்டிட அமைப்புகள், சுவர்கள், வடிகால் வசதி, மனிதர்களின் எலும்புகள், விலங்கு வகை எலும்புகள் மற்றும் குறைந்த அடுக்குக் கொண்ட உறை கிணறுகள் கண்டுபிடிக்கப்பட்டன.

செப்டெம்பர் 30ஆம் திகதியுடன் இந்த அகழாய்வுப் பணிகள் நிறைவு பெறுகின்றன. இந்நிலையில் அகரத்தில் நடந்து வரும் அகழாய்வில் 20 அடுக்குகளுக்கும் மேல் உள்ள வட்ட வடிவான உறைகிணறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதுவரை 6ஆம் கட்ட அகழாய்வில் கிடைத்த உறைகிணறுகளின் உயரத்தை விட தற்போது இங்கு கிடைத்துள்ள உறைகிணறு அதிக உயரம் கொண்டதாக உள்ளது. இந்த உறைகிணறு கிடைத்த இடத்தில் தோண்டப்பட்டு வரும் குழியில் ஆழத்தின் அளவு அதிகரிக்கப்படும் போது, உறைகிணறின் அடுக்குகளும் உயருவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தொல்லியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

 

http://www.ilakku.org/கீழடி-அகழாய்வில்-அகரத்தி/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடல்கோளால் மூழ்கியதா கீழடி? | கீழடி அகழ்வாராய்ச்சி 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தங்ககாசு கண்டெடுப்பு ..👍

 

  • Thanks 2
Link to comment
Share on other sites

  • 4 months later...
  • கருத்துக்கள உறவுகள்

கீழடியில் ஏழாம் கட்ட அகழாய்வுப் பணிகள் துவக்கம் - மேலும் பல தொல்பொருட்கள் கண்டுபிடிக்க வாய்ப்பு

கீழடி

பட மூலாதாரம்,TAMIL NADU STATE ARCHEOLOGY DEPARTMENT

சிவகங்கை மாவட்டம் கீழடியில் ஏழாம் கட்ட அகழாய்வுப் பணிகளை தமிழக முதல்வர் காணொளிக்காட்சி மூலம் சென்னையிலிருந்து இன்று துவக்கிவைத்தார்.

கீழடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள இடங்களில் மேற்கொள்ளப்படவுள்ள ஏழாம் கட்ட அகழாய்வில் தமிழர் நாகரிகத்தை விளக்கும் வகையில் மேலும் பல்வேறு தொல்பொருட்கள் கண்டுபிடிக்க வாய்ப்புள்ளதாக தொல்லியல் துறை சார்பில் தெரிவிக்கப்படுகிறது.

வைகை நதி நாகரிகத்தை முழுமையான முறையில் ஆய்வு செய்யும் பொருட்டு கீழடி, கொந்தகை, அகரம் மற்றும் மணலூர் ஆகிய பகுதிகளில் தமிழக தொல்லியல் துறை அகழாய்வு பணிகளை மேற்கொண்டு வருகிறது.

2014 ஆம் ஆண்டு முதல் கீழடியில் அகழாய்வு ஆராய்ச்சிகள் செய்யப்பட்டு வருகிறது. இந்திய தொல்லியல் துறை சார்பில் நடைபெற்ற முதல் மூன்று கட்ட ஆய்வுகளில் 7818 தொல்பொருட்கள் வெளிக்கொணரப்பட்டன.

நான்காம் கட்ட அகழாய்வு முதல் தற்போது வரை தமிழ்நாடு அரசு தொல்லியல்துறை அகழாய்வுகளை மேற்கொண்டு வருகிறது.

நான்காம் கட்ட அகழாய்வில் 5820 தொல்பொருட்களும், ஐந்தாம் கட்ட அகழாய்வில் 900 தொல்பொருட்களும், கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் துவங்கிய ஆறாம் கட்ட அகழாய்வில் 913 தொல்பொருட்களும் வெளிக்கொணரப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.

குறிப்பாக, கீழடியில் நடைபெற்ற ஆறாம் கட்ட அகழாய்வில் தமிழ் பிராமி எழுத்துகள் பொறிக்கப்பட்ட செவ்வண்ண பூச்சு பெற்ற மட்பாண்ட ஓடு, மணிகள், சுடுமண்ணால் ஆன முத்திரை, மாட்டினத்தைச் சார்ந்த விலங்கு ஒன்றின் விலா எலும்புடன் கூடிய முதுகெலும்பின் முழுமையான பகுதி, எடைக்கற்கள் மற்றும் செங்கல் கட்டுமானங்கள் ஆகியவை முக்கிய கண்டுபிடிப்புகளாக கருதப்படுகின்றன.

கீழடி அருகே அமைந்துள்ள கொந்தகையில் முதுமக்கள் தாழி, மனித எலும்புக்கூடுகள் மற்றும் மண்டை ஓடுகள் கண்டெடுக்கப்பட்டன.

அகரத்தில் மேற்கொண்ட அகழாய்வில் நுண் கற்காலத்தை சார்ந்த கத்திகள், 300 மில்லி கிராம் எடையுள்ள தங்க நாணயம், கரிமமயமான நெல், புகைப்பான் ஆகியவையும், மணலூரில் கட்டுமான அடையாளங்களும் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

அகழாய்வு பணிகளில் கண்டெடுக்கப்பட்ட தொல்பொருட்களின் காலத்தை அறிவதற்கான ஆராய்ச்சிகள் நடைபெற்று வருவதாக தொல்லியல் துறையினர் தெரிவிக்கின்றனர்.

இந்த அகழாய்வில் தாதுக்கள் மற்றும் மண் பகுப்பாய்வு, காந்த அளவி மதிப்பாய்வு, புவிசார்வியல் மதிப்பாய்வு, ஆளில்லா வான்வழி வாகன மதிப்பாய்வு, தொல்லியல் கோட்பாடு மற்றும் முறைகள், உலோகவியல் ஆய்வுகள், தொல் மரபணு பகுப்பாய்வு, பரிணாம வளர்ச்சி மற்றும் மருத்துவ மரபியல், மகரந்த பகுப்பாய்வு, எலும்புகளுக்கான AMS காலக்கணக்கீடு ஆகிய பணிகள் பல்வேறு ஆராய்ச்சி மற்றும் கல்வி நிறுவனங்களோடு இணைந்து தமிழக தொல்லியல் துறை மேற்கொண்டு வருகிறது.

கீழடி மட்டுமின்றி தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஆதிச்சநல்லூர், சிவகளை மற்றும் ஈரோடு மாவட்டத்தில் உள்ள கொடுமணல் ஆகிய பகுதிகளிலும் விரைவில் அடுத்த கட்ட அகழாய்வுப் பணிகள் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கீழடியில் ஏழாம் கட்ட அகழாய்வுப் பணிகள் துவக்கம் - மேலும் பல தொல்பொருட்கள் கண்டுபிடிக்க வாய்ப்பு - BBC News தமிழ்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
தமிழ் நாகரீகம்...
அப்போது புத்தர் பிறந்திருக்கவில்லை. அஜந்தாக் குகைகள் குடையப்பட்டிருக்கவில்லை.பெரும்பாலான மனித குழுக்களே நாடோடியாக திரிந்த காலம்....
// நகர வாழ்க்கை வாழ்ந்த தமிழர்கள்
கி.மு 580-ம் ஆண்டில் பயன்படுத்திய
சுடுமண்ணால் செய்யப்பட்ட கழிவு
நீர்போக்கி "பைப் லைன்" (Pipe line) மற்றும்
இரண்டடுக்கு கழிவு போக்கி!!ஒன்று
மூடி வைக்கப்பட்டுள்ளது!!!மற்றொன்று
திறந்த வடிகால்.....மேலும்,விரிவான
படங்கள் கீழடியில் இருந்து கிடைப் பெற்றுள்ளன!!!!
உலகில்,இன்றைய கால கட்டத்தில் கூட சிறந்த கழிவு நீர் போக்கிகளை அமைத்து செயல்படுத்தமுடியாமல் இருக்கும் சூழ்நிலையில்,மனிதன் நாடோடியாக திரிந்த காலத்தில் 2,600 வருடங்களுக்கு முன்னால் அறிவியலையும் மிஞ்சும் திட்டமிட்ட நகர அமைப்பு வாழ்க்கை முறையை என்னவென்று சொல்வது....
இன்று,உலகமே கீழடியில் தமிழர்களி்ன் நகர வாழக்கை அமைப்பை பார்த்து வியந்து அதிசயித்து நிற்கிறது....
கீழடித் தொல்பொருள்களின் காலம் கிமு ஆறாம் (கிமு 600) நூற்றாண்டு என்பது உறுதியாகிவிட்டது. அந்த உறுதிப்பாடு உயர்த்திப் பிடிக்கும் தமிழ்நிலத்தின் வரலாற்றுப் பெருஞ்சிறப்புகள் யாவை ?
1. அப்போது புத்தர் பிறந்திருக்கவில்லை. புத்தர் கிமு 563ஆம் ஆண்டுதான் பிறக்கிறார். கீழடித் தொல்லகம் புத்தர் காலத்திற்கும் முந்தி நிற்கிறது. இந்திய வரலாற்றின் முதற்பக்கங்கள் மொகஞ்சதாரோ, அரப்பா, அடுத்து புத்தர், மகாவீரர் என்று தொடங்கும். சான்றுகளைக் கேட்கும் வரலாறு இனி வாயடைத்து நிற்கும். இந்திய வரலாற்றின் முதற்பக்கங்களில் தமிழர் நாகரிகத்தைப் பற்றி இனிக் கூறியாகவேண்டும்.
2. அப்போது அஜந்தாக் குகைகள் குடையப்பட்டிருக்கவில்லை. அஜந்தாக் குகைகளில் புத்தமதச் செல்வாக்கு மிக்கிருப்பதால் அவை புத்தர் காலத்திற்குப் பிறகே பெரும்பாலும் குடையப்பட்டன. அதன் பழைமையான குகையினைக் கிமு இரண்டாம் நூற்றாண்டு வரைக்கும் ஏற்றுக்கொள்கின்றனர். கீழடிச் சான்றுகள் அவற்றுக்கும் முந்தியன.
3. கபாடபுரத்திற்கு நேர்ந்த கடல்கோளின் பின்னர் இன்றைய மதுரை நகரத்திற்குப் பாண்டியர்கள் இடம்பெயர்ந்தனர். அங்கே தோற்றுவித்து வளர்க்கப்பட்டதே கடைச்சங்கம். கடைச்சங்கத்தின் காலம் கிமு இரண்டாம் நூற்றாண்டு என்பதற்கே பலர் பல்வேறு குறுக்கு வழக்குகளோடு வருவர். சான்றெங்கே, ஆதாரம் எங்கே என்று நிற்பர். இப்போது கிமு ஆறாம் நூற்றாண்டுத் தமிழ் எழுத்துகள் தெளிந்த சான்றுகளாகிவிட்டன.
5. ஆதன், சாத்தன் ஆகிய பெயர்கள் நம் இலக்கண உரைகளில் தொடர்ந்து மேற்கோள் காட்டப்படுகின்றன. ஆதனின் தந்தை ஆந்தை எனப்படுவார். சாத்தனின் தந்தை சாத்தந்தை எனப்படுவார். பிசிர் என்ற ஊரில் வாழ்ந்த ஆதனின் தந்தையே பிசிர் ஆந்தையார் எனப்பட்டார். அகநானூறு, புறநானூறு, நற்றிணை ஆகிய சங்க இலக்கிய நூல்களில் பிசிராந்தையார் பாடிய ஆறு பாடல்கள் இடம்பெற்றிருக்கின்றன. அவர் யாராயினும் ஆதன் என்ற பெயர் வைக்கும் பழக்கம் தொல் தமிழரிடையே பரந்திருந்தது என்பது வெள்ளிடைமலை. ஆதன் என்பதற்கு உயிர் என்று பொருள். உயிரன்.
6. ஒடிய மாநிலம் புவனேசுவரம் உதயகிரிக் குகைகளின் நெற்றியில் பொறிக்கப்பட்டுள்ள காரவேலனின் கல்வெட்டு பதின்மூன்று நூற்றாண்டுகளாய் நிலவிய சேர சோழ பாண்டியர்களின் கூட்டாட்சி வலிமையைக் கூறுகிறது. “தமிர தேக சங்காத்தம்” என்பது அக்கல்வெட்டினில் உள்ள தொடர். ஒடிய மன்னன் காரவேலன் அசோகருக்குப் பிறகு அப்பகுதியினை ஆண்டவன். கிமு இரண்டாம் நூற்றாண்டினைச் சேர்ந்தவன். “அக்கல்வெட்டினில் இருப்பது பதின்மூன்று நூற்றாண்டுகள் இல்லை, வெறும் பதின்மூன்று ஆண்டுகளாகத்தான் இருக்கவேண்டும்” என்ற வழக்கும் ஓடியது. கீழடியில் பெருந்தமிழர் நாகரிகம் செழித்து வளர்ந்திருக்கும் நிலைமையைக் காண்கையில் காரவேலன் கல்வெட்டு கூறுவது பதின்மூன்று நூற்றாண்டுகளாகவே இருக்க வேண்டும்.
7. வைகை ஆறு இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்பு பேராறாக நிறைந்து ஓடியிருக்க வேண்டும். அதன் கரைவெளி எங்கும் பாண்டியப் பேரரசில் பெருவாழ்வு வாழ்ந்த குடிகளின் தடயங்களைக் கண்டெடுத்திருக்கிறோம்.
8. எழுத்துமுறை தோன்றுவதற்கு முன்பே பல்லாயிரம் ஆண்டுகளாகப் பேச்சுமுறை நிலவியிருக்க வேண்டும். மொழித்தோற்றத்தின் இளமைக் காலம் இன்னும் பல நூற்றாண்டுகள் பின்னோக்கிச் செல்லும். அனைத்தையும் கொண்டு கூட்டிப் பார்க்கையில் தமிழ் மொழியின் தொன்மையைப் பகரும் சான்றுகள் பல பல்லாயிரம் ஆண்டுகட்கு முந்தியவை என்பது தெளிவாக நம் கண்ணுக்கே தெரிகிறது.
9. கீழடியில் தங்க அணிகள் கிடைத்திருக்கின்றன. தொலைவுத் தேயங்களிலிருந்து வருவிக்கப்பட்ட மணிகள் கிடைத்திருக்கின்றன. மண்ணைக் கொண்டு பாண்டங்கள் செய்தல் என்னும் தொழில்நுட்பம் சிறப்படைந்திருக்கிறது. இருப்புப் பொருள்களும் பல்வேறு மாழைப் பொருள்களும் (உலோகம்) பயன்பாட்டுக்கு வந்திருக்கின்றன. தனிப்பான்மையான குடிவாழ்வின் தன்னிகரற்ற வரலாற்று வளர்ச்சி நிலைகள் இவை.
10. இன்றைய நிலைப்பாட்டிலிருந்து வரலாற்றினைப் பார்ப்பது தவறு. மதங்கள், சாதிகள், பழக்கவழக்கங்கள், பண்பாடுகள் என இன்று நாம் பற்றிப் பழகியிருக்கும் சிறுகண்களைக்கொண்டு பழைமையில் தேடுவது நன்றன்று. ஒற்றை நிலையில் ஒரு நிலத்தின் வரலாறும் அமையாது. காலப்போக்கில் அது பல்வேறு நிலைகளுக்கு முகங்கொடுத்தாக வேண்டும். நம் வரலாறெங்கும் அவ்வாறே நிகழ்ந்தது. எது எப்படியாயினும் அன்றைக்கும் இன்றைக்கும் இக்குடிவாழ்வின் பற்றுதலாக இருப்பது ஒன்றேயொன்று. அதுதான் முன்னைப் பழையதும் பின்னைப் புதியதுமான தமிழ்மொழி !
ஆனால் கொடுமையிலும் கொடுமைஇதைநாம் தமிழனுக்கே விளக்குவதுதான் கொடுமை
இதைப்புரிந்தாலும் வர்ணாசிரமத்திற்கு அடிமையாகஇருப்பதில் தான் சுகம் என்று நினைப்பது மாபெரும் கொடுமை.
நன்றி: கி.பிரியாராம் கிபிரியாராம்.//
 
152515763_10225739890386587_4129975320221753828_o.jpg?_nc_cat=111&ccb=3&_nc_sid=8bfeb9&_nc_ohc=UfvcEgPfAkEAX8CIxV1&_nc_ht=scontent-lht6-1.xx&tp=7&oh=73050f66def83f348019d1e659002295&oe=6056D0BC
May be an image of outdoors
May be an image of outdoors

என் மொழிக்கு 
ஒரு நாடு இல்லை 
ஒரு கொடியில்லை 
பாராளுமன்றம் இல்லை 
ஆனால் தொன்மை உண்டு 
எல்லோர் மனங்களிலும் ஊடுருவுகிறது 
ஆதலால் தொடர்ச்சி உண்டு 
 

  • Like 1
Link to comment
Share on other sites

  • 2 months later...
  • கருத்துக்கள உறவுகள்
May be an image of outdoors
 
No photo description available.
 
May be an image of one or more people, people standing and outdoors
 
2,600 வருடங்களுக்கு முன்பே சிறந்த போர் வீரர்களாக திகழ்ந்த தமிழர்கள்!கீழடி அகழாய்வில் கிடைத்த முதுமக்கள் தாழியில் இரும்பு வாள்! - போர் வீரனுடையதாக இருக்கலாம் என தகவல்..
கீழடி அகழ்வாய்வு பணியில் தோண்ட தோண்ட வரலாற்று கலைப் பொருட்கள் கிடைத்த வண்ணம் உள்ளன.
 
கீழடியில் 7ம் கட்ட அகழாய்வு பணியில் கொந்தகையில் முதுமக்கள் தாழிகளுள் மனித எலும்புக்கூடுகளுடன் இரும்பினாலான கூர்மையான வாள் கண்டுபிடிக்கப்பட்டது. போர் வீரனுடைய முதுமக்கள் தாழியை இருந்து இருக்க வேண்டும் என தொல்லியல் துறையினர் கருத்து தெரிவித்தனர்.
 
சிவகங்கை மாவட்டம் கீழடி பகுதியில் கீழடி, அகரம், மணலூர் மற்றும் கொந்தகை ஆகிய 4 இடங்களில் 7ம் கட்ட அகழாய்வு பணிகள் நடந்து வருகின்றது . ஏழாம் கட்ட அகழாய்வு பணி கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்டது. இந்நிலையில் கொந்தகையில் தொல்லியல் துறையினர் அகழாய்வில் முதுமக்கள் தாழி கிடைத்தது.
 
இதுவரை கொந்தகையில் சுமார் 7 முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. கடைசியாக திறந்த முதுமக்கள் தாழியில் அதை திறக்கும்பொழுது மனித எலும்புக்கூடுகள், 30 சென்டி மீட்டர் நீளமுடைய இரும்பினாலான கூர்மையான வாள், கருப்பு சிவப்பு வண்ணம் கொண்ட கூம்பு வடிவ கிண்ணம், கருப்பு சிவப்பு வண்ணம் கொண்ட வட்ட வடிவ கிண்ணம் கிடைக்கப்பெற்றுள்ளது. ஒவ்வொரு முதுமக்கள் தாழியும் 4 அடி ஆழம் வரை உள்ளது இதில் கிடைத்துள்ள மனித எழும்புக்கூடுகள் வைத்து, ஆணா, பெண்ணா, குழந்தையா என்பது ஆராய்ச்சிக்கு பிறகே தெரியவரும் என்று தொல்லியல் துறையினர் கூறியுள்ளனர்.
 
முதுமக்கள் தாழி
தற்போது நடந்து வரும் 7ம் கட்ட அகழாய்வு பணியில் கீழடி , அகரம் ‌, கொந்தகை பகுதியில் நம் முன்னோர்கள் உழவுக்கு பயன்படும் கற்கருவி, முன்னோர்கள் ‌ பொழுதுபோக்குக்கு பயன்படுத்திய பகடைக்காய், மண் ஓடுகள் ,பாசிகள் கிடைத்துள்ளன .
கீழடி அகழ்வாய்வு பணியில் தோண்ட தோண்ட வரலாற்று கலைப் பொருட்கள் கிடைத்த வண்ணம் உள்ளன. தமிழர்களுக்கும் தமிழர் பண்பாட்டுக்கும் மேலும் சிறப்பு சேர்த்து கொண்டிருக்கிறது கீழடி அகழாய்வு.
 
இது குறித்து தொல்லியல் துறையினர் கூறுகையில் கொந்தகையில் கிடைத்துள்ள முதுமக்கள் தாழி ஒரு போர் வீரனாக இருந்து இருக்க வேண்டும் மேலும் இங்கு இறக்கும் போது அதுனுடன் வாள் வைத்து புதைக்கபட்டு இருக்க வேண்டும். இதனால் அப்போதே போர் புரிந்ததற்கு வாய்ப்பு இருப்பது தெரிய வருவதாக தெரிகிறது என்றனர். இந்த கிடைத்த எலும்புகள், வாள் முழுமையான ஆராய்ச்சிக்கு பிறகே தெரியவரும் என்றும். தொல்லியல் துறை வல்லுநர்கள் கூறினர்.
சிதம்பரநாதன் - மானாமதுரை செய்தியாளர்.
  • Like 1
Link to comment
Share on other sites

On 21/2/2021 at 11:32, Ahasthiyan said:
 
1. அப்போது புத்தர் பிறந்திருக்கவில்லை. புத்தர் கிமு 563ஆம் ஆண்டுதான் பிறக்கிறார். கீழடித் தொல்லகம் புத்தர் காலத்திற்கும் முந்தி நிற்கிறது. இந்திய வரலாற்றின் முதற்பக்கங்கள் மொகஞ்சதாரோ, அரப்பா, அடுத்து புத்தர், மகாவீரர் என்று தொடங்கும். சான்றுகளைக் கேட்கும் வரலாறு இனி வாயடைத்து நிற்கும். இந்திய வரலாற்றின் முதற்பக்கங்களில் தமிழர் நாகரிகத்தைப் பற்றி இனிக் கூறியாகவேண்டும்.
 

 

கீழடியிலுள்ள பிராமி எழுத்துக்களின் காலம் சரியாகக் கணிக்கப்பட வேண்டும். வடக்கில் உள்ள அசோக பிராமி எழுத்து ஆதாரங்கள் தென்னிந்திய பிராமியை விடத் தொன்மையானதாக இதுவரை கூறப்படுகின்றது. குறிப்பாக ஐராவதம் மகாதேவனின் கருத்துப்படி வடக்கிலிருந்தே தெற்கிற்குப் பரவியுள்ளது. கீழடி எழுத்துக்கள் அசோக காலத்தைவிடத் தொன்மையானதாக நிரூபிக்கப்பட்டால் இந்திய சரித்திரத்தின் ஒரு பகுதியை மாற்றவேண்டி வரும். இதேபோல் இலங்கையிலுள்ள பிராமி எழுத்துக்கள் நேரடியாகத் தமிழ்நாட்டிலிருந்து வந்ததாக நிறுவினால் சிங்கள வரலாற்றுப் புனைவுகளும் ஆட்டம் காணும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 26/4/2021 at 18:38, இணையவன் said:

 

 இதேபோல் இலங்கையிலுள்ள பிராமி எழுத்துக்கள் நேரடியாகத் தமிழ்நாட்டிலிருந்து வந்ததாக நிறுவினால் சிங்கள வரலாற்றுப் புனைவுகளும் ஆட்டம் காணும்.

அதற்குதானே இப்ப சிங்களம் ஒரு குழுவை இறக்கிவிட்டுள்ளது, எப்பவும் நிருபிக்க முடியாது

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

கீழடி 7-ம் கட்ட அகழ்வாராய்ச்சி - முன்னோர்கள் பயன்படுத்திய கண்ணாடி மணிகள் கண்டெடுப்பு

கீழடி 7-ம் கட்ட அகழ்வாராய்ச்சி - முன்னோர்கள் பயன்படுத்திய கண்ணாடி மணிகள் கண்டெடுப்பு

 

கீழடி 7-ம் கட்ட அகழ்வாராய்ச்சியின் போது, நம் முன்னோர்கள் ஆபரணமாக பயன்படுத்திய கண்ணாடி மணிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
பதிவு: ஜூன் 11,  2021 14:59 PM
சிவகங்கை,

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் யூனியனை சேர்ந்த கீழடி ஊராட்சியில், மத்திய அரசின் தொல்லியல் துறை சார்பில் கடந்த 2015-ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டு வரை 3 கட்டங்களாக அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்றன. இதில் பண்டைய தமிழர்கள் பயன்படுத்திய 7 ஆயிரத்து 878 பொருட்கள் கண்டறியப்பட்டன. 

அதனை தொடர்ந்து 2018-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை தமிழக அரசின் மாநில தொல்லியல் துறை சார்பில் 2 கட்டங்களாக அகழ்வாராய்ச்சி பணிகள் செய்யப்பட்டன. இதில் 6 ஆயிரத்து 720 பொருட்கள் கண்டறியப்பட்டன. இந்த 5 கட்ட அகழ்வாராய்ச்சி பணிகளும் கீழடி பகுதிகளில் மட்டுமே நடைபெற்றன.

இதையடுத்து கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய 4 இடங்களில் கடந்த 2020-ம் ஆண்டு பிப்ரவரி 19-ந்தேதி தொடங்கிய 6-ம் கட்ட அகழ்வாராய்ச்சியின் போது பிராமி எழுத்து உள்ள மண்பாண்ட ஓடு, சூது பவளம், சுடுமண்ணால் ஆன முத்திரையில் ஆமையின் வடிவமைப்பு, விலங்கின எலும்புகூடு, எடை கற்கள் உள்பட 900-க்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. 

6-ம் கட்ட ஆராய்ச்சி பணிகள் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 30-ம் தேதியுடன் முடிவடைந்தது. பின்பு அனைத்து பொருட்களையும் ஆவணப்படுத்துதல் பணி மட்டும் நடைபெற்றது. 6 கட்டங்களையும் சேர்த்து இதுவரை மொத்தம் 15 ஆயிரத்து 498 பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன.

இந்தநிலையில் கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய 4 இடங்களில் தற்போது 7-ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த அகழாய்வின் போது கீழடியில், நம் முன்னோர்கள் ஆபரணமாக பயன்படுத்திய கண்ணாடி மணிகள், தண்ணீர் குவளையின் முகப்பு பகுதி ஆகியவை கிடைத்திருக்கின்றன. இங்கு கிடைத்த பொருட்கள் அனைத்தும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்திற்கு ஆராய்ச்சிக்காக அனுப்பப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

 

https://www.dailythanthi.com/News/State/2021/06/11145937/Keeladi-7-Phase-Excavation--Discovery-of-glass-beads.vpf

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

கீழடி அகழாய்வில் சமதள மனித எலும்பு கூடுகள் கண்டெடுப்பு.!

Jun 26, 2021

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்
பிழை திருத்தம்
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று ..

199762955_4755628167832687_7839883878415

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கீழடி அகழாய்வில் மேலும் ஒரு மனித எலும்புக்கூடு கண்டெடுப்பு

கீழடி அகழாய்வில் மேலும் ஒரு மனித எலும்புக்கூடு கண்டெடுப்பு

கீழடி அகழாய்வில் மேலும் ஒரு மனித எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டுள்ளது.
பதிவு: ஜூலை 02,  2021 15:54 PM
கொந்தகை,

தமிழர்களின் நாகரிகத்தை உலகிற்கு பறை சாற்றும் கீழடியில் 7-ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்று வருகிறது. கீழடி அருகே உள்ள கொந்தகை பகுதியிலும் அகழாய்வு பணி நடபெற்று வருகிறது. 

இந்த நிலையில் கடந்த 26-ந்தேதி அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்றபோது மனித முழு உருவ எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டது. இந்த முழு உருவ எலும்புக்கூடு சுமார் 4 அடி நீளம் இருக்கும். இந்த முழு உருவ எலும்புக்கூடு முழுமையான ஆய்வுக்கு பிறகு தான் ஆணா -பெண்ணா எனவும் மேலும் எந்த நூற்றாண்டு காலத்தை சேர்ந்தது எனவும் தெரியவரும்.

இந்நிலையில், கொந்தகையில், இன்றும் அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்று கொண்டிருந்தது. அப்போது ஏற்கனவே கண்டெடுக்கப்பட்டுள்ள இடத்தின் அருகே முழு நீள அளவிலான மேலும் ஒரு மனித எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

3-வதாக கண்டுபிடிக்கப்பட்ட எலும்புக்கூட்டை தோண்டி எடுக்கும் பணியில் ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். மேலும் இந்த எலும்புக்கூடு எந்த நூற்றாண்டு காலத்தை சேர்ந்தது என ஆய்வுக்கு பின்னர் தெரியவரும் தெரிவித்தனர். கொந்தகையில், இதுவரை 13 முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

 

 

https://www.dailythanthi.com/News/State/2021/07/02155435/Further-human-skeleton-found-in-excavation-below.vpf

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
May be an image of outdoors and text that says 'NEWS 7 TAMI கொரோனா விழிப்போம் தடுப்போம்'
 
May be an image of text that says 'NEWS 7 TAMK கொரோனா விழிப்போம் -தடுப்போம்'
 
May be an image of outdoors
 
No photo description available.
 
May be an image of outdoors
 
கீழடியில்... ஒரே குழியில், 7 மனித எலும்புக் கூடுகள்!
 
சிவகங்கை மாவட்டத்தில் 7 ஆம் கட்ட அகழாய்வு கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய 4 இடங்களில் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், ஒரே குழியில் 7 மனித எலும்புக் கூடுகள் கிடைத்துள்ளன.
 
தொல்லியல் துறையின் 7 ஆம் கட்ட அகழாய்வு கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய 4 இடங்களில் கடந்த 2021 பிப்ரவரி மாதம் முதல் நடைபெற்று வருகிறது.
 
கொந்தகை அகழாய்வு பணிகளில் முதுமக்கள் தாழிகளும் எலும்புக்கூடுகளும் கிடைத்து வருகின்றன. சங்க காலத்திற்கு முற்பட்ட ஈமக் காடு என்பதால் கீழடி அகழாய்வில் கொந்தகை முக்கிய இடம் வகிக்கிறது.கொந்தகை அகழாய்வு பணிகளில் 5 க்கும் மேற்பட்ட குழிகள் தோண்டப்பட்டது. இதில் இதுவரை 10 க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள் கண்டறியப்பட்டுள்ளன. 2 முதுமக்கள் தாழிகளில் இருந்த மனித எலும்புக்கூடுகள் மதுரை காமராசர் பல்கலைக்கழகம் மூலம் மரபணு சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.
 
கடந்த சில நாள்களாக நடைபெற்று வரும் ஆய்வுப் பணிகளில் ஒரே குழியில் சமதள நிலையில் 7 மனித எலும்புக்கூடுகள் கண்டறியப்பட்டுள்ளது. மேலும், கதிரியக்கக்கரிமக் காலக்கணிப்பு (Carbon dating) ஆய்வுக்கு பின்னரே மனித எலும்புக் கூடுகளின் காலம் துல்லியமாக கணிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் வரலாறு: கீழடி அகழாய்வில் சுடுமண் விலங்கு பொம்மை கண்டுபிடிப்பு

  • ஆறு. மெய்யம்மை
  • பிபிசி தமிழுக்காக
2 மணி நேரங்களுக்கு முன்னர்
கீழடி

ஏழாவது கட்ட கீழடி அகழாய்வுப் பணியில் முதல் முறையாக ஒரு விலங்கு உருவ பொம்மை கண்டறியப்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகில் உள்ள கீழடியில் அகழாய்வு பணிகள் கீழடி, அகரம், மணலூர் மற்றும் கொந்தகை ஆகிய நான்கு அருகருகில் உள்ள இடங்களில் நடைபெறுகிறது.

ஐந்தாம் கட்டம் வரை கீழடியில் மட்டுமே நடந்துகொண்டிருந்த பணி ஆறாம் கட்டத்திலிருந்து 2-3 கீ.மீ தொலைவில் உள்ள மற்ற மூன்று தளங்களில்தொடங்கியது.

முழுவீச்சில் நடைபெற்று கொண்டிருக்கும் ஏழாவது கட்ட அகழாய்வு பணியில் சமீபத்திய கண்டுபிடிப்பாக சுடுமண்ணால் ஆன அடையாளம் தெரியாத ஒரு விலங்கின் உடல் பாகத்தின் உருவ பொம்மை அகரம் தளத்தில் கிடைத்துள்ளது.

 

அது அகலத்தில் பத்து சென்டிமீட்டருக்கு குறைவாகவும், நான்கு சென்டிமீட்டர் உயரத்தையும் கொண்டதாக இருக்கிறது என்று கூறுகிறார் தொல்லியல் துறை துணை இயக்குனர், கீழடி அகழாய்வின் இயக்குநருமான ஆர். சிவானந்தம்.

இந்த விலங்கு பொம்மையின் கால், தலை மற்றும் வால் பகுதிகள் கிடைக்கவில்லை. அவை கிடைத்தால்தான் அது என்ன விலங்கு என்று கூற இயலும். நான்காம் கட்டப் பணிகளின் போது சுடுமண்ணால் ஆன குதிரையின் முகம் கண்டுபிடிக்கப்பட்டது. அதற்கு பிறகு இப்போதுதான் ஒரு விலங்கு உருவ பொம்மை (animal figurine) கிடைத்துள்ளது, என்று கூறுகிறார்.

அகழாய்வு

பட மூலாதாரம்,TAMILNADU STATE ARCHEOLOGY DEPARTMENT

முந்தைய அகழாய்வுப் பணிகளின் போது வீட்டு விலங்குகளின் எலும்புகள் கண்டறியப்பட்டது. ஆடு, மாடு, மயில், கோழி, மான் மற்றும் காட்டு பன்றிகளின் எலும்புகள் நான்காம் கட்டத்தில் கிடைத்தது. சில எலும்பு மாதிரிகள் புனேயில் உள்ள டெக்கான் கல்லூரிக்கு சோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டதில் அவை ஜல்லிக்கட்டு காளைகளின் எலும்புகள் என்று தெரியவந்தது. அகரம் சங்ககால வாசிப்பிடமாகத் திகழ்ந்திருப்பதால், மக்கள் ஜல்லிக்கட்டு காளைகள் இறந்தவுடன் வீட்டின் அருகே புதைத்திருக்கிறார்கள், என்று கூறுகிறார் சிவானந்தம்.

கீழடி

பட மூலாதாரம்,@TTHENARASU

 
படக்குறிப்பு,

கீழடியில் கிடைத்த சுடுமண்ணால் ஆன பெண் முகத்தின் படத்தை அமைச்சர் தங்கம் தென்னரசு தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்திருந்தார்.

கண்டறியப்பட்ட விலங்கு எலும்புகளில் சுமார் 12 சதவீதம் திமில் உடைய ஜல்லிக்கட்டு காளைகள் உடையது, 40 சதவீதம் மாடு, எருது மற்றும் எருமைகள் உடையது. காட்டுப்பன்றி மற்றும் ஆடுகளின் எலும்புகளில் வெட்டு தடயங்கள் காணப்பட்டதால், அவை அசைவ உணவிற்காக அக்கால மனிதர்களால் பயன்படுத்தப்பட்டிருக்க கூடும், என்று சோதனை முடிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவை தவிர ஒரு விலங்கின் எலும்புக்கூடு ஒன்று ஆறாம் கட்ட அகழாய்வு பணியில் கிடைத்தது. அது சோதனைக்காக புனேவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதுவரை அரை டன் எடையுள்ள எலும்புகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. சோதனைக்கு அனுப்பப்பட்டது போக மற்ற பொருட்கள் அனைத்தும் மதுரையில் உள்ள தமிழ்ச் சங்கத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

ஏழாம் கட்ட அகழாய்வில் அகரத்தில் மட்டும் விலங்கு உருவ பொம்மை, சுடுமண்ணால் ஆன பெண் முகம், இரண்டு செம்பு நாணயங்கள், புகைப்போக்கி குழாய் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட பொருட்கள் கிடைத்துள்ளன. இதில் அதிக அளவில் கண்ணாடி, யானை தந்தம் மற்றும் சங்கினால் ஆன வளையல்கள் அடங்கும்.

Twitter பதிவை கடந்து செல்ல, 1

Twitter பதிவின் முடிவு, 1

சமீபத்தில் சுடுமண்ணால் ஆன பெண் முகத்தின் படத்தை தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்திருந்தார்.

"தமிழ்ப் பொண்ணு" இரண்டாயிரம் ஆண்டுகள் மறைந்திருந்து வெளிச்சத்திற்கு வந்திருக்கும் தமிழ் மகள், என்று அவர் அப்பதியில் தெரிவித்திருந்தார்.

https://www.bbc.com/tamil/india-57931986

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யூலை 29 ..வாணிப தொடர்பு .

IMG-20210730-080003.jpg

மவுரியர் கால வெள்ளி காசு கண்டெடுப்பு 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் வரலாறு: கீழடி உள்ளிட்ட பல இடங்களில் தோண்ட தோண்ட கிடைக்கும் பழந்தமிழர் பொருட்கள் - விரிவான தகவல்கள்

  • முரளிதரன் காசிவிஸ்வநாதன்
  • பிபிசி தமிழ்
31 ஜூலை 2021, 01:19 GMT
புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
கீழடியில் 104 செ.மீ. ஆழத்தில் கிடைத்த அரிவாள்.

பட மூலாதாரம்,DEPARTMENT OF ARCHAEOLOGY, TAMILNADU

 
படக்குறிப்பு,

கீழடியில் 104 செ.மீ. ஆழத்தில் கிடைத்த அரிவாள்.

தமிழ்நாட்டின் பல இடங்களில் மாநில தொல்லியல் துறை ஆய்வுகளை செய்துவருகிறது. நீண்ட வாள், வெள்ளிக்காசு, முதுமக்கள் தாழி என புதைந்துகிடந்த வரலாற்றின் எச்சங்கள் மாநிலத்தின் பல இடங்களிலிருந்தும் மேலெழ ஆரம்பித்துள்ளன.

2015ஆம் ஆண்டில் மதுரைக்கு அருகில் உள்ள கீழடியில் நடந்த அகழாய்வில் பெரும் கட்டடத் தொகுதிகள் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, தமிழ்நாட்டின் தொல்லியல் வரலாறு மற்றும் அகழாய்வுப் பணிகள் மீதான ஆர்வம் வெகுவாக அதிகரித்தது. ஆனால், கீழடி அகழாய்வை நடத்திவந்த இந்தியத் தொல்லியல் துறை, மூன்றாம் கட்ட அகழாய்வுகளுக்குப் பிறகு, தமிழ்நாட்டில் வேறு அகழாய்வுகளை நடத்தவில்லை. நடத்தப்பட்ட அகழாய்வின் முடிவுகளையும் வெளியிடவில்லை.

கிருஷ்ணகிரி மாவட்டம் மயிலாடும் பாறையில் கிடைத்த பானை.

பட மூலாதாரம்,DEPARTMENT OF ARCHAEOLOGY, TAMILNADU

 
படக்குறிப்பு,

கிருஷ்ணகிரி மாவட்டம் மயிலாடும் பாறையில் கிடைத்த பானை.

இதற்குப் பிறகு எழுந்த கோரிக்கைகளால், நான்காம், ஐந்தாம், ஆறாம் கட்ட அகழாய்வுகளை மாநிலத் தொல்லியல் துறையே நடத்தி முடித்தது. இதற்குப் பின் கீழடியில் ஏழாம் கட்ட அகழாய்வை நடத்த முடிவுசெய்தபோது, கீழடி மட்டுமல்லாமல் ஆதிச்சநல்லூர், சிவகளை உள்ளிட்ட தமிழ்நாட்டின் தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த வேறு பல இடங்களிலும் அகழாய்வுகளை நடத்த மாநில தொல்லியல் துறை முடிவெடுத்தது.

கடந்த ஆண்டே கீழடி மட்டுமல்லாமல், அதன் அருகில் உள்ள சில ஊர்களிலும் அகழாய்வு நடத்தப்பட்டது. அதன்படி கீழடி தொகுப்பு (கீழடி, அகரம், கொந்தகை, மணலூர்), ஆதிச்சநல்லூர், கொற்கை, கங்கை கொண்ட சோழபுரம், கொடுமணல், மயிலாடும்பாறை ஆகிய ஏழு இடங்களில் அகழாய்வுப் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. மார்ச் மாதத்தில் துவங்கிய அகழாய்வு கொரோனா ஊரடங்கு காரணமாக மே 10ஆம் தேதி நிறுத்தப்பட்டது.

ஊரடங்கு காலகட்டம் முடிந்த பிறகு, ஜூன் மாத இறுதியில் இருந்து மீண்டும் அகழாய்வுப் பணிகள் நடந்துவருகின்றன. மழைக் காலம் துவங்குவதற்கு முன்பாக அகழாய்வுப் பணிகள் நிறைவடைய வேண்டும் என்பதால் தற்போது பணிகள் தீவிரமடைந்துள்ளன.

கீழடியைப் பொறுத்தவரை தொடர்ந்து தொல்லியல் பொருட்கள் கிடைத்துவரும் பகுதியாக இருந்து வருகிறது. 2019 -20ல் நடந்த அகழாய்வில் 25க்கும் மேற்பட்ட தாழிகள் உட்பட பல தொல்லியல் பொருட்களும் கலைப் பொருட்களும் கிடைத்தன.

கீழடிக்கு அருகில் உள்ள அகரத்தில் கிடைத்த மட்பாண்டங்கள்

பட மூலாதாரம்,DEPARTMENT OF ARCHAEOLOGY, TAMILNADU

 
படக்குறிப்பு,

கீழடிக்கு அருகில் உள்ள அகரத்தில் கிடைத்த மட்பாண்டங்கள்

இந்த முறை நடந்த அகழாய்வில் பல மணிகள், பானை ஓடுகள், கூரை ஓடுகள் போன்றவை கிடைத்திருக்கின்றன. இங்குள்ள தரைகள் செங்கல் கற்களால் அமைக்கப்பட்டிருக்கின்றன. இரு கற்களை இணைக்க களிமண்ணும் சுண்ணாம்பும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

அகரம் தளத்தில் நடந்த அகழாய்வில் சில நாட்களுக்கு முன்பாக சுடுமண்ணால் ஆன அடையாளம் தெரியாத ஒரு விலங்கின் உடல் பாகத்தின் உருவ பொம்மை கிடைத்தது. பத்து சென்டிமீட்டர் அலகமும் நான்கு சென்டிமீட்டர் உயரமும் கொண்ட அந்த பொம்மை எந்த விலங்கைக் குறிக்கிறது என்பது தெளிவாக தெரியவில்லை. மேலும் இதே அகரம் பகுதியில் 17ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த வீரராயன் காசுகளும் கிடைத்தன.

இந்த ஏழாம் கட்ட அகழாய்வில் அகரத்தில் மட்டும் விலங்கு உருவ பொம்மை, சுடுமண்ணால் ஆன பெண் முகம், செம்பு நாணயங்கள், புகைப்போக்கி குழாய் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட பொருட்கள் கிடைத்துள்ளன. கண்ணாடி, யானை தந்தம், சங்கு ஆகியவற்றால் ஆண அணிகலன்களும் அதிக எண்ணிக்கையில் கிடைத்துள்ளன.

ஆதிச்சநல்லூர்

ஆதிச்சநல்லூரில் அலெக்ஸாண்டர் ரீ ஆய்வு நடத்திய புதைமேடு சுமார் 114 ஏக்கர் பரப்பளவுடையது. அந்தப் பகுதி தற்போது பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கு ஆய்வுகள் நடத்த அனுமதியில்லை. ஆகவே அதற்கு அருகில் உள்ள பகுதியில் ஆய்வு நடத்த மாநில தொல்லியல் துறை அனுமதி பெற்றுள்ளது.

ஆதிச்சநல்லூர் புதைமேடு என்பது இறந்தவர்களை அடக்கம் செய்யும் இடமாகப் பயன்படுத்தப்பட்டுவந்த பகுதி. இதற்கு அருகில் மக்கள் வசித்த இடமாக கருதக்கூடிய பகுதியில் ஆய்வை நடத்த தொல்லியல் துறை விரும்பியது. அதில் பெரும்பகுதியில் மத்திய கால ஏரி ஒன்று இருக்கிறது. ஆகவே அருகில் உள்ள கிராமத்தில் அகழாய்வு நடந்துவருகிறது.

கீழடிக்கு அருகில் உள்ள அகரத்தில் கிடைத்த தங்கக் கம்பி.

பட மூலாதாரம்,DEPARTMENT OF ARCHAEOLOGY, TAMILNADU

 
படக்குறிப்பு,

கீழடிக்கு அருகில் உள்ள அகரத்தில் கிடைத்த தங்கக் கம்பி.

இங்கு இரண்டு மீட்டர் ஆழத்தில் பல பானை ஓடுகள் கிடைக்க ஆரம்பித்துள்ளன. ஆனால், அருகிலேயே ஏரி உள்ளதால், அகழாய்வுப் பள்ளங்களில் தெளிவாக பண்பாட்டு அடுக்குகளை அடையாளம் காண்பதில் சிரமம் இருக்கிறது. ஆதிச்சநல்லூரில் வாள், வேறு சில இரும்புப் பொருட்கள் கிடைத்தாலும் அலெக்ஸாண்டர் ரீயின் ஆய்வில் கிடைத்த அளவுக்கு பொருட்கள் கிடைக்கவில்லை.

சிவகளை

ஆதிச்சநல்லூருக்கு அருகில் உள்ள சிவகளையும் ஈமத் தாழிகள் புதைக்கப்பட்ட இடம்தான். இதுவும் ஆதிச்சநல்லூரும் தொடக்க இரும்பு காலத்தை அதாவது கி.மு. 8 முதல் கி.மு. 9 வரையிலான காலகட்டத்தைச் சேர்ந்தவை. ஆதிச்சநல்லூரையும் சிவகளையையும் ஒரே நிலப்பகுதியாகவும் கருத முடியும். இந்த சிவகளை புதைமேடு கிட்டத்தட்ட ஆயிரம் ஏக்கருக்குப் பரந்து கிடக்கிறது. இந்த அளவுக்கு மிகப் பெரிய புதைமேடு இருக்கிறதென்றால், அதற்கு அருகில் உள்ள பராக்கிரமபாண்டிய புரம், மூலக்கரை போன்ற பகுதிகளில் மனிதர்கள் வாழ்ந்த இடங்கள் இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

சிவகளையில் சிவகளைப் பரம்பு, பேட்மாநகரம், ஸ்ரீ மூலக்கரை ஆகிய இடங்களில் 15க்கும் மேற்பட்ட ஆய்வுக் குழிகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், ஒரே குழியில் 16 முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டன. இவற்றில் 5 தாழிகள் மூடியுடன் கண்டெடுக்கப்பட்டன. ஒட்டுமொத்தமாக இதுவரை சுமார் 40க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள் இங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

சிவகளையில் ஒரே இடத்தில் 16 முதுமக்கள் தாழிகள் கண்டறியப்பட்டுள்ளன.

பட மூலாதாரம்,DEPARTMENT OF ARCHAEOLOGY, TAMILNADU

 
படக்குறிப்பு,

சிவகளையில் ஒரே இடத்தில் 16 முதுமக்கள் தாழிகள் கண்டறியப்பட்டுள்ளன.

இவை தவிர, நூல் நூற்க உதவும் தக்கிளி, புகைப்பான், கருப்பு - சிவப்பு மண்பாண்டங்கள், பழங்கால மற்றும் இடைக்கால கருவிகள், எலும்புகள், நடுகற்கள் உள்ளிட்டவையும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

ஆதிச்சநல்லூரைப் போலவே இங்கும் மூன்று பண்பாட்டு அடுக்குகள் காணப்படுகிறன. இங்கு கிடைத்த ஈமத் தாழிகளில் கிடைத்த பொருட்களை ஓஎஸ்எல், டிஎல் டேட்டிங் செய்து பார்க்கும்போது ஒவ்வொரு பண்பாட்டு அடுக்கின் காலமும் தெளிவாகத் தெரியவருமெனத் தொல்லியல் துறை நம்புகிறது.

கொற்கை

பாண்டிய நாட்டின் துறைமுக நகரமாக இருந்ததாகக் கருதப்படும் கொற்கையில் 1968ல் முதல்முதலாக ஆய்வு நடத்தப்பட்டது. தமிழ்நாடு மாநில தொல்லியல் துறை 1961ல் உருவாக்கப்பட்ட நிலையில் அந்தத் துறையின் சார்பில் முதல்முதலில் நடந்த அகழாய்வே இங்குதான் நடத்தப்பட்டது. இங்கு கிடைத்த பொருட்களை வைத்து, இந்த இடத்தின் காலம் என்பது கி.மு. 785 என கணிக்கப்பட்டிருக்கிறது. இடைச் சங்ககால பாண்டியர்களின் துறைமுக நகரமாக கொற்கை இருந்ததாகக் கருதப்படுகிறது.

இங்கு இப்போது நடத்தப்பட்டுவரும் அகழாய்வில், பல பானை ஓடுகள் கிடைத்திருக்கின்றன. மேலும் கடந்த வாரம் துளையிடப்பட்ட குழாய்கள் ஒன்பது அடுக்குகளாகக் கிடைத்திருக்கின்றன. இதற்குள் உள்ள பொருட்களை ஆய்வுசெய்த பிறகு, இவை எதற்காகப் பயன்படுத்தப்பட்டன என்பது தெரியவரக்கூடும்.

கீழடி அகழாய்வில் கிடைத்த தாயக் கட்டைகள். அப்பகுதி மக்களுக்கு ஓய்வு நேரம் இருந்திருப்பதையே விளையாட்டுப் பொருட்கள் காட்டுகின்றன.

பட மூலாதாரம்,DEPARTMENT OF ARCHAEOLOGY, TAMILNADU

 
படக்குறிப்பு,

கீழடி அகழாய்வில் கிடைத்த தாயக் கட்டைகள். அப்பகுதி மக்களுக்கு ஓய்வு நேரம் இருந்திருப்பதையே விளையாட்டுப் பொருட்கள் காட்டுகின்றன.

கங்கை கொண்ட சோழபுரம்

கங்கை கண்ட சோழபுரத்தில் முதலாம் ராஜேந்திரச் சோழனின் அரண்மனை அமைந்திருந்ததாகக் கருதப்படும் மாளிகை மேடு பகுதியில் தற்போது அகழாய்வு நடத்தப்பட்டுவருகிறது. இங்கு ஏற்கனவே நடந்த அகழாய்வில் சோழர் காலத்து அரண்மனையின் அடிப்பகுதியின் ஒரு பகுதி வெளிப்பட்டது. தற்போது, அரண்மனையின் அமைப்பைப் புரிந்துகொள்ளும் வகையில் ஏதாவது ஒரு பகுதியின் முழுமையையும் வெளிப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. இங்கு ஆங்கில எழுத்தான 'T' வடிவில் ஒரு பெரிய சுவர் கிடைத்துள்ளது.

மிகப் பெரிய ஆணிகளும் கிடைத்துள்ளன. "இந்த அளவுக்கு ஆணி பெரிதாக இருக்கிறதென்றால், அங்கு இருந்திருக்கக்கூடிய கதவு போன்ற மரப் பொருட்களின் உயரத்தையும் அகலத்தையும் புரிந்துகொள்ளலாம்" என்கிறார் மாநிலத் தொல்லியல் துறையின் துணை இயக்குனரான ஆர். சிவானந்தம். இங்குள்ள அரண்மனை இரட்டைச் சுவர்களால் கட்டப்பட்டிருப்பதாகக் கருதப்படுகிறது.

இந்த மாளிகை சுமார் ஒன்றரைக் கி.மீ. பரப்பளவுக்கு இருந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது. கங்கைகொண்ட சோழபுரம் கோவிலில் இருந்து 500 மீட்டர் தொலைவில் இந்த மாளிகையின் மதில் சுவர் காணப்படுகிறது. ஏற்கனவே 2008ல் இங்கு நடந்த அகழாய்வில் இந்த மதில் சுவர் கண்டுபிடிக்கப்பட்டது. இவை தவிர, கொக்கிகள், சீன நாட்டுப் பானை ஓடுகள் போன்றவையும் கிடைத்திருக்கின்றன. டெரகோட்டா உருவங்களும் கிடைத்திருக்கின்றன.

கொந்தகையில் கிடைத்துள்ள டெரகோட்டா பொம்மைகளின் தலைப்பகுதிகள்.

பட மூலாதாரம்,DEPARTMENT OF ARCHAEOLOGY, TAMILNADU

 
படக்குறிப்பு,

கொந்தகையில் கிடைத்துள்ள டெரகோட்டா பொம்மைகளின் தலைப்பகுதிகள்.

கீழடி அகழாய்வில் இந்த முறை கண்டறியப்பட்ட உறை கிணறு

பட மூலாதாரம்,DEPARTMENT OF ARCHAEOLOGY, TAMILNADU

 
படக்குறிப்பு,

கீழடி அகழாய்வில் இந்த முறை கண்டறியப்பட்ட உறை கிணறு

கொடுமணல்

கொடுமணல் அகழாய்வைப் பொறுத்தவரை, இங்கு பல முறை தஞ்சாவூர் பல்கலைக்கழகம், பாண்டிச்சேரி பல்கலைக்கழகம், இந்தியத் தொல்லியல் துறை, மாநிலத் தொல்லியல் துறை போன்றவை அகழாய்வுகளைச் செய்திருக்கின்றன. சுமார் 12 முறை இங்கு அகழாய்வு செய்யப்பட்டிருக்கிறது. இங்கு இதுவரை கிடைத்துள்ள பொருட்கள் எல்லாமே ஒரே காலகட்டத்தைச் சுட்டிக்காட்டுபவையாகவே இருக்கின்றன.

இங்கு இரண்டு விதமான தலங்கள் இருக்கின்றன. ஒன்று ஈமத் தலம். மற்றொன்று தொழில் நடைபெற்ற இடம். இங்கு பெரும்பாலும் மணிகள் செய்யப்பட்ட இடங்கள் அதிகம் கிடைத்திருக்கின்றன. இங்கு மணிகள் அறுக்கும் தொழிற்சாலைகளுக்கான உலைகள், காசுகள் போன்றவை கிடைத்திருக்கின்றன. ஒரு கிணறும் அதற்கு அருகில் இரண்டு பக்கமும் படிகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த இடத்தைப் பொறுத்தவரை கி.மு. 3ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 3ஆம் நூற்றாண்டுவரை சேர்ந்ததாக இருக்கலாம் என்கிறார் சிவானந்தம்.

மயிலாடும்பாறை

மயிலாடும்பாறை அகழாய்வில் கிடைத்த நீண்ட வாள்.

பட மூலாதாரம்,DEPARTMENT OF ARCHAEOLOGY, TAMILNADU

 
படக்குறிப்பு,

மயிலாடும்பாறை அகழாய்வில் கிடைத்த நீண்ட வாள்.

கிருஷ்ணகிரியில் உள்ள மயிலாடும்பாறையைப் பொறுத்தவரை, அந்தப் பகுதி புதிய கற்காலத்தைச் சேர்ந்ததாகக் கருதப்படுகிறது. அடுத்ததாகப் பெருங்கற்காலத்தைச் சேர்ந்த பொருட்களும் இங்கு கிடைத்துள்ளன. குறிப்பாக மிக நீளமான வாள் ஒன்று கிடைத்துள்ளது. இங்கு கிடைத்துள்ள பானைகள் பெரும்பாலும் சக்கரங்களைக் கொண்டு வனையாமல், கையால் வனையப்பட்டவையாக உள்ளன.

இந்த அகழாய்வு முடிந்த பிறகு, ஏற்கனவே நடந்த அகழாய்வின் முடிவுகளை வெளியிடுவதோடு, தொடர்ச்சியாக இடங்களைக் கண்டறிந்து அகழாய்வு நடத்த முடிவுசெய்திருப்பதாக மாநில தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்திருக்கிறார்.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர், வரலாறு கண்டு... அஞ்சுவது  ஏன்? 

 

 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

11.8.2021

 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

24-8-2021 

Screenshot-2021-08-24-15-36-09-535-com-a

கல் செக்கு .

Link to comment
Share on other sites

30 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

24-8-2021 

Screenshot-2021-08-24-15-36-09-535-com-a

கல் செக்கு .

இது கீழடி காலப்பகுதியில் இருந்திருக்க வாய்ப்பில்லை. இதில் இருப்பவை தமிழ் எழுத்துக்கள். 

Link to comment
Share on other sites




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.