• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Archived

This topic is now archived and is closed to further replies.

நவீனன்

வருகிறது ஆப்பிள் நைக் பிளஸ் ஸ்மார்ட் வாட்ச்

Recommended Posts

வருகிறது ஆப்பிள் நைக் பிளஸ் ஸ்மார்ட் வாட்ச்

ஆப்பிள் நிறுவனமும், நைக் நிறுவனமும் இணைந்து ஒரு ஸ்மார்ட் வாட்சை உருவாக்கியுள்ளனர். கிட்டதட்ட ஆப்பிள் 2 சீரியஸ் மாடல் வாட்ச்களைப் போலத்தான் இந்த வாட்சும் உருவாக்கப்பட்டுள்ளது. ஆப்பிள் வாட்ச் நைக் பிளஸ் என்று பெயரிடப்பட்ட இந்த வாட்ச் வருகின்ற 28-ம் தேதி முதல் இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது. பார்ப்பதற்கு நைக் ஸ்போர்ட்ஸ் பேண்டுகள் போலவே இதன் மாடலை உருவாக்கியுள்ளனர். ஆக்டிவிட்டி ரிங்க், இதயத்துடிப்பு லெவல், ஸ்டாப் வாட்ச்,  வெதர் அப்டேட்ஸ் அனைத்தும் இதில் உண்டு.

og-imgd_15150.jpg


இது போக நைக் ரன் பிளஸ் ஆப் ஒன்றையும் இதில் அறிமுகப்படுத்தியுள்ளனர். இதில் ரிமைண்டர்ஸ், நட்புகளுக்கு சேலஞ்ச் விடுவது, வானிலை முன்னறிவிப்பு போன்றவையும் உண்டு. மேலும், ஜிபிஎஸ் ட்ராக் வசதியும் உள்ளதாம். குறிப்பாக ஸ்மார்ட் ஃபோன் இல்லாவிடினும் ஜிபிஎஸ் ட்ராக் செய்ய முடியும் என்கிறார்கள்.


அதே போல், 50 மீட்டர்கள் ஆழம் வரை இதற்கு நீர் பாதிப்பு ஏற்படாது என்று கூறியுள்ளனர். 4 வகையான ரிஸ்ட்களுடன் 2 வகை மாடல்களை அறிமுகப்படுத்தியுள்ளனர். 38 மி.மீ, 42 மி.மீ என இரண்டு மாடல்கள். இவற்றில் 39 மி.மீ ரூ. 32,900-க்கும், 42 மி.மீ ரூ.34,900-க்கும் விற்பனைக்கு வர உள்ளது.

http://www.vikatan.com/news/information-technology/70492-apple-and-nike-to-introduce-new-smart-watch.art

Share this post


Link to post
Share on other sites