Sign in to follow this  
நவீனன்

சுவிஸில் தமிழரை சுட்டுக்கொன்ற சக தமிழர்

Recommended Posts

சுவிஸில் தமிழரை சுட்டுக்கொன்ற சக தமிழர்
 
சுவிஸில் தமிழரை சுட்டுக்கொன்ற சக தமிழர்
சுவிட்ஸர்லாந்தில் இரு தமிழர்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதலில் ஒருவர் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.
 
இந்த சம்பவம், நேற்று முன்தினம் அந்நாட்டின் சொலத்தூண் மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது.
 
சுவிஸ்வாழ் இலங்கை தமிழர்களுக்கு இடையில் இடம்பெற்ற வாய்தர்க்கம்  முற்றிய நிலையில் இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
 
துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான தமிழர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில்  உயிரிழ ந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் கூறியுள்ளனர்.
 
வவுனியா குருமன்காடு பகுதியை சேர்ந்த 29 வயதான கார்த்திக் பாலேந்திரன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக சுவிட்ஸர்லாந்து பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.

http://onlineuthayan.com/news/19464

http://www.blick.ch/news/schweiz/mittelland/taeter-auf-der-flucht-mann-am-bahnhof-solothurn-erschossen-id5658079.html

Share this post

Link to post
Share on other sites
சுவிஸிலும் துப்பாக்கி இவ்வளவு இலகுவாக கிடைக்குதா???
எவ்வளவு தான் சட்டங்களையும் எல்லைகளையும் அழுத்தினாலும்........??

Share this post

Link to post
Share on other sites
17 minutes ago, விசுகு said:
சுவிஸிலும் துப்பாக்கி இவ்வளவு இலகுவாக கிடைக்குதா???
எவ்வளவு தான் சட்டங்களையும் எல்லைகளையும் அழுத்தினாலும்........??

நம்ம தமிழரல்லோ 

இருந்தாலும் என்ன பிரச்சினையென்பது தெரியவில்லையா?? இன்னும் சுடுவதற்க்கான காரணம் என்னவோ

Share this post

Link to post
Share on other sites
2 minutes ago, விசுகு said:
சுவிஸிலும் துப்பாக்கி இவ்வளவு இலகுவாக கிடைக்குதா???
எவ்வளவு தான் சட்டங்களையும் எல்லைகளையும் அழுத்தினாலும்........??

விசுகு....
சுவிஸ்... ஐரோப்பிய ஒன்றியத்தில் இல்லை என்றாலும், 
ஐரோப்பிய ஒன்றியம் ஆரம்பித்த போது... சுவிஸ் தனது எல்லைக்குள், வரும் ஐரோப்பியர்களை கண்காணிக்கும் பணியை தளர்த்தியது.
இந்த ஒன்றியம் தொடங்கிய காலத்தில், பண்புள்ள  12 நாடுகளே இருந்தன, இன்று.... அது வீங்கிப் பெருத்து, 
மழைக்குக் கூட பள்ளிக்  கூடப் பக்கம்  ஒதுங்காத,  கிரிமினல் மக்களை கொண்ட....  28 நாடுகளும்  உள்ள போது....
துப்பாக்கி....  அந்த நாட்டுக்குள், வருவதை தவிர்க்க முடியாது.

  • Like 2

Share this post

Link to post
Share on other sites
15 minutes ago, முனிவர் ஜீ said:

நம்ம தமிழரல்லோ 

இருந்தாலும் என்ன பிரச்சினையென்பது தெரியவில்லையா?? இன்னும் சுடுவதற்க்கான காரணம் என்னவோ

முனிவர் ஜீ....
கொடுக்கல் வாங்கல், சீட்டு, மப்பு, பொம்பிளை... பிரச்சினை எண்டு ஆரம்பித்து இருக்கலாம்.
இல்லாவிட்டால்...  கமல் - ரஜனி,  அஜித் - விஜய், சிம்பு - தனுஸ்....  மாதிரியான சண்டையோ... தெரியாது.
எதுக்கும்.... மயூரன், தனது சுவிஸ்  செய்தியில்... என்ன சொல்லுகிறார் என்று, பொறுத்திருந்து பார்ப்போம்.

Edited by தமிழ் சிறி

Share this post

Link to post
Share on other sites
21 minutes ago, முனிவர் ஜீ said:

நம்ம தமிழரல்லோ 

இருந்தாலும் என்ன பிரச்சினையென்பது தெரியவில்லையா?? இன்னும் சுடுவதற்க்கான காரணம் என்னவோ

சுவிசில் சிறு குற்றங்களுக்கே (ரயிலில்  டிக்கற் இல்லாமல் பயணித்தல்) 

ஊருக்கு பார்சல் செய்து விடுவார்கள்.

அது தான் கேட்டேன்

இருவருடைய வாழ்க்கையும் முடிஞ்சுது...

Share this post

Link to post
Share on other sites
28 minutes ago, முனிவர் ஜீ said:

இருந்தாலும் என்ன பிரச்சினையென்பது தெரியவில்லையா?? இன்னும் சுடுவதற்க்கான காரணம் என்னவோ

வியாபார போட்டி, அதனால் ஏற்பட்ட தகராறு என்று கேள்வி..:unsure:

Share this post

Link to post
Share on other sites

சுட்டு வீரசகாசம் செய்தவர் எனக்கு தெரிந்தவர்தான்.
சும்மா வாய் தர்க்கம் என்றுதான் சொல்கிறார்கள்.

சுவிஸில் பழைய யுகோசிலாவிய நாட்டு கார்கள் களவாக 
கொண்டுவந்து துப்பாக்கி விட்பர்கள் ...... அப்படி வந்தது ஒன்று இரண்டு 
தமிழர்களிடம் உலாவுகின்றது. 

  • Like 1

Share this post

Link to post
Share on other sites

வியாபார போட்டி உயிரை குடித்துவிட்டது.

Share this post

Link to post
Share on other sites
38 minutes ago, Maruthankerny said:

சுட்டு வீரசகாசம் செய்தவர் எனக்கு தெரிந்தவர்தான்.
சும்மா வாய் தர்க்கம் என்றுதான் சொல்கிறார்கள்.

சுவிஸில் பழைய யுகோசிலாவிய நாட்டு கார்கள் களவாக 
கொண்டுவந்து துப்பாக்கி விட்பர்கள் ...... அப்படி வந்தது ஒன்று இரண்டு 
தமிழர்களிடம் உலாவுகின்றது. 

உடனடிக் கருத்துக்கு  நன்றி.... மருது, 
உங்களிடமிருந்து... மேலதிக தகவல்களை,  எதிர் பார்க்கின்றோம்.
இல்லாவிட்டால்..... இதுக்கு, புலி முத்திரை குத்தி இருப்பார்கள்,

Share this post

Link to post
Share on other sites

இது போட்டி இல்லை...பொறாமை ?

  • Like 1

Share this post

Link to post
Share on other sites
29 minutes ago, MEERA said:

வியாபார போட்டி உயிரை குடித்துவிட்டது.

மரக்கறி, துணிமணி, நகை போன்ற வியாபாரமா?
அல்லது.... வேறு வியாபாரமா.. மீரா.

Share this post

Link to post
Share on other sites
7 hours ago, நவீனன் said:

வியாபார போட்டி, அதனால் ஏற்பட்ட தகராறு என்று கேள்வி..:unsure:

நன்றி உங்கள் தகவலுக்கு நவீனன்

(தமிழ் சிறிய, விசுகர்)

Share this post

Link to post
Share on other sites

தீபாளி மலிவு விறபனைக்கு கடையை வீடியோ எடுத்திருக்கிறார்கள் 

சுட்டவர் அந்த இடத்தில் பிரபல வீடியோ எடுப்பவர் (சோலோ வீடியோ)
அவர் வந்து சொல்லி இருக்கிறார் .... ஏன் வேற வீடியோ ?
நான் இருக்கிறேன் தானே இவற்றை நிறுத்த சொல்லி.

அந்த கடையும் முன்பு அவருக்கு சொந்தமானதுதான் 
பின்பு விற்று வேறு ஒருவர் வாங்கி இருக்கிறார். கடையை நடத்துபவரும் 
விற்றவரும் ஆரம்பத்தில் நன்றாக இருந்தாலும் பின்பு 
சில மன கசப்புகள் வந்திருக்கிறது.

அதன் காரணமாகவே வேறு ஒரு வீடியோ வந்து இருக்கிறது.

வாய் தர்க்கம் சற்று முத்திய போது ...

நீ ஆம்பளையாய் இருந்தால் இந்த இடத்தில் நான் இப்ப வாறன் என்று விட்டு 
சென்றவர் ..... கொடுத்த வாக்குறுத்திக்கு மாறாது 20 நிமிடத்தில் 
திரும்பி வந்திருக்கிறார்.

வந்தவர் உடனேயே சட சட என நான்கு ரவைகள் சுட்டிருக்கிறார் 
இன்னுமொருவர் இருவருக்கும் நன்பர் ..... அவர் தடுத்து இருக்கிறார் 
அவருக்கும் ஒரு ரவை பாய்ந்திருக்கிறது ..... அதிர்ஷ்டவசமாக அவருக்கு படவில்லை 
அவர் ஒரு கொணருக்குள் ஓடி இருக்கிறார் ...
மீண்டும் ஒரு ரவை சுட்டிருக்கிறார்.

பின்பு கடை கண்ணாடிகளை உடைத்துவிட்டு 
கடை நடத்துனரை உள்ளே சென்று சுட்டு இருக்கிறார் 
ரவைகள் முடிந்து விட்ட்தால் ...... அவருக்கு பாதிப்பில்லை.

பின்பு காரை எடுத்துக்கொண்டு போனவர் 
மறுநாள் போலீசில் சென்று சரண் அடைந்து விடடார். 

(ஊரில் பேச்சுவாக்கில் சொல்வார்கள் 10 பிள்ளை பெற்றவளுக்கு 1 பிள்ளை பெற்றவள் முக்கி காட்டின மாதிரி என்று. இதில் சுட்டவர் இப்போதான் முதல் பிள்ளை பெற்று இருக்கிறார். மற்றவர்கள் முள்ளிவாய்க்கால்லையும் விசுவாசம் காரணமாக இறுதிவரை உடன் இருந்து தலையை காத்தவர்கள். அடி சித்திரவதை கள் பின்பு விடுதலை ஆகி இப்போதான் கொஞ்சம் மீள்கிறார்கள் )  

  • Like 2

Share this post

Link to post
Share on other sites

ம்.ம்.ம்.......... வாள் வெட்டு முடிந்து இப்போ துப்பாக்கி...........!

Share this post

Link to post
Share on other sites
On 29.10.2016 at 9:30 PM, Maruthankerny said:

(ஊரில் பேச்சுவாக்கில் சொல்வார்கள் 10 பிள்ளை பெற்றவளுக்கு 1 பிள்ளை பெற்றவள் முக்கி காட்டின மாதிரி என்று. இதில் சுட்டவர் இப்போதான் முதல் பிள்ளை பெற்று இருக்கிறார். மற்றவர்கள் முள்ளிவாய்க்கால்லையும் விசுவாசம் காரணமாக இறுதிவரை உடன் இருந்து தலையை காத்தவர்கள். அடி சித்திரவதை கள் பின்பு விடுதலை ஆகி இப்போதான் கொஞ்சம் மீள்கிறார்கள் )  

ஹ்ம்ம்.... ஆ த்திரக் காரனுக்கு புத்தி மத்திமம்.
இனி.... குடும்பம், பிள்ளையை... கம்பிக்கு பின்னால் இருந்து காண வேண்டியது தான். :unsure:

Share this post

Link to post
Share on other sites

தான் ஆம்பிளை எண்டதை நிரூபிச்சுப் போட்டார்... சிங்கன்.. :rolleyes:

இனி கம்பி பின்னால் இருந்து... ஆறுதலா.....நிரூபித்த தனது ஆண்மையை நினைத்து பெருமிதம் கொள்ளட்டும். 

யாருக்காவது வெடி வைக்கும் நாள் வரும் என்று துவக்கு, களவா வாங்கும் போதே, தெரிந்திருக்கிறது. :unsure:

கிடைத்த அவகாசமான 20 நிமிஷங்கள் அவருக்கு.... பின் விளைவுகள் குறித்து சிந்திக்க போதுமானதாக இருந்திருக்கும்.

இருவரது தலைவிதி.... அன்று ஒருவர் இறக்க, கொன்றவர் சிறை செல்ல வேண்டியதாகி விட்டதே. tw_dissapointed_relieved:

Edited by Nathamuni
  • Like 1

Share this post

Link to post
Share on other sites
3 hours ago, Nathamuni said:

தான் ஆம்பிளை எண்டதை நிரூபிச்சுப் போட்டார்... சிங்கன்.. :rolleyes:

இனி கம்பி பின்னால் இருந்து... ஆறுதலா.....நிரூபித்த தனது ஆண்மையை நினைத்து பெருமிதம் கொள்ளட்டும். 

யாருக்காவது வெடி வைக்கும் நாள் வரும் என்று துவக்கு, களவா வாங்கும் போதே, தெரிந்திருக்கிறது. :unsure:

கிடைத்த அவகாசமான 20 நிமிஷங்கள் அவருக்கு.... பின் விளைவுகள் குறித்து சிந்திக்க போதுமானதாக இருந்திருக்கும்.

இருவரது தலைவிதி.... அன்று ஒருவர் இறக்க, கொன்றவர் சிறை செல்ல வேண்டியதாகி விட்டதே. tw_dissapointed_relieved:

ம்ம்ம்

கன கால பகைமை போலும்...

திட்டமிட்டு செய்தது   போலிருக்கு..

Share this post

Link to post
Share on other sites

சும்மா  கருத்து  எழுதினாலே  ஆள் அனுப்பி  வெருட்டுரம்  போனை  போட்டு  என்ன  கேமா  என  கேட்கிறம்  இதில  வியாபார போட்டி  அதுவும்  பொருளாதார பிரச்சினை  என்றால்  சும்மா  விட  முடியுமா  சொல்லுங்க அதுதான் போட்டுட்டம் .

நாங்களே  எல்லாம்  என  வாழ்த்து  சிலருக்கு பழகிவிட்டது அதை  மீறி  இன்னொன்று  வரும்  போது  அதை  ஏற்க மனசு  தடுக்கிறது .

Share this post

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this