Jump to content

மோகனின் கற்பனை பேட்டிகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கௌண்டமணி செந்தில் ஒரு கலந்துரையாடல்

--------------------------------------------------------------------------------

டேய் பச்சை மிளகாய் தலையா எங்கடா போயிட்டு வர்றே.

ஓட்டு போட்டுட்டு வந்தண்ணே.

ஏன்டா அந்த கருமத்தை போட்டே.

ஒரு சந்தேகம் அண்ணே.

எதை வேண்ணாலும் கேளு ஆனா கொழந்த எங்கேர்ந்து வந்துதன்னு மட்டும் கேக்காதே.

இல்லை அண்ணே எலெக்ஷன்னா என்ன அண்ணே.

அப்படி வாடி. இந்த ஆல்-இன்-ஆல் அழகுராஜாவோட அறிவைப்பத்தி தெரிஞ்ச ஒரே ஆள் நீதான்டா.

சொல்லுங்கண்ணே.

அது எலெக்ஷன் இல்லை கலெக்ஷன். காசு பண்ற வேலைடா லக்ஷ்மி வெடி வாயா.

அப்ப ஏன்ணே கையில கறுப்பு புள்ளி வெக்கறாங்க.

அப்படி கேளுடா. டேய் எத்தனை பேரை முட்டாள் பண்ணோம்னு ஒரு கணக்கு வேண்டாமா அதுக்கு தான்.

அப்ப 5 வருஷதுக்கு ஒரு தடவை ஆட்சி ஏன்ணே மாறுது.

டேய் நம்ம தமிழ் மக்களுக்கு அறிவே இல்லைடா. ஒரு கட்சியையே 20 வருஷம் ஆட்சி செய்யவுட்டா அவன் சொத்தை சுருட்டி சோர்ந்து போய் ஒரு வேளை நாட்டுக்கு நல்லது பண்ணுவான்டா. ஆனா நம்ம தமிழ் மக்கள் என்ன பண்றாங்க – 5 வருஷதுக்கு ஆட்சி மாத்தி விடறாங்க. அவன் 5 வருஷம் சம்பாதிச்ச காசை 5 வருஷம் செலவு பண்ணிட்டு மறுபடியும் வந்துடறான் கொள்ளை அடிக்க.

அதுக்கு என்ன பண்றது அண்ணே.

அதுக்கு நான் மதுரை வீரனுக்கு கெடா வெட்டி கூழு ஊத்தப் போறேன்.

கெடா வாங்கிட்டீங்களா.

டேய் நாட்டுக்காக சொந்த காசு போட்டு கெடா வாங்கறதுக்கு நான் என்ன உன்னை மாதிரி பேறிக்கா மண்டையனா.

அப்புறம்.

நான் கெடான்னு சொன்னது உன்னைத் தான்டா ஜார்ஜ் புஷ் வாயா.

கற்பனை கேள்வி பதில்கள்

--------------------------------------------------------------------------------

ஒரு நாள் ஆசிரியர் என்னை அழைத்து நம் பத்திரிக்கையில் கேள்வி பதில் பகுதி தொடங்கினால் என்ன என்று கேட்டார். நானும் என்னுடைய வழக்கமான குறும்புடன் ஐயா அதற்கு யாராவது கேள்வி கேட்க வேண்டும். அப்போது தான் நாம் பதில் எழுத முடியும் என்றேன்.

ஏம்ப்பா நீ தான் கற்பனை பேட்டியெல்லாம் எடுக்கிறாயே. கற்பனை கேள்வி பதில் தொடங்கேன் என்றார்.

அவர் சொன்னது நியாயமாக படவே இந்த கேள்வி பதில்.

கே: த்ரிஷாவின் இடையளவு என்ன? மன்னார்குடி கலியபெருமாள்.

ப: மன்னிக்கவும் நீங்கள் தவறான முகவரிக்கு இந்த கேள்வியை அனுப்பிவிட்டீர்கள். சற்று பொரும் குமுதத்தின் முகவரியை தருகிறேன்.

கே: சன் டிவி ஃபளாஷ்நியூஸில் சென்னையில் பயங்கரம் என்று படித்து பதறிவிட்டேன். என்னாச்சு?

திருகழுகுன்றம் செந்தில்.

ப: அதுவா ஒரு சைக்கிளும் ஒரு ரிக்ஷாவும் மோதி கொண்டுவிட்டது. இப்படியெல்லாம் செய்தால் தானே நீங்கள் 2 ரூபாய் கொடுத்து தமிழ் முரசு வாங்கி படிப்பீர்கள்.

கே: ஐயா ஒரு ஜோக்?

சென்னை சொக்கலிங்கம்.

ப: ஏம்ப்பா மெனக்கெட்டு தபால் நிலையம் போய் தபால் அட்டை வாங்கி இந்த மாதிரி கேள்விகளுக்கெல்லாம் காசை வீணடிக்கிறீர். போய் வேலையை பாருமய்யா.

கே: சமீபத்தில் நடந்த எம் எல் ஏ கொலையை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? சேத்தியாதோப்பு சேகர்.

ப: கொலை என்பது நிஜம். அதைப்பற்றி நினைத்து நான் எழுதினால் அது கற்பனை. என்ன நினைக்கிறார்கள் என்பதை படிக்க வேண்டுமானால் ஜூனியர் விகடன் வாங்கி படியுங்களேன்.

கே: தனுஷின் வீட்டில் ஏதாவது நல்ல செய்தியா?

திருப்பூர் தினகரன்.

ப: யோவ். இந்த மாதிரி விசயத்துக்குதான் விகடன்-ற ஒரு மாபெரும் பழைய பத்திரிக்கை இருக்கே என்னை ஏய்யா தொந்தரவு பண்றே!

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றாக உள்ளது, இரசித்தேன். :D

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

நான் றுசித்தேன்

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

நன்றாக உள்ளது, இரசித்தேன். <_<

நன்றி இரும்பொறை.

நான் றுசித்தேன்

நன்றி கவிதா. என் கதைகளும் படித்து தங்கள் கருத்துக்களை இடுங்கள்.

உங்கள் கற்பனை நன்றாக உள்ளது. சிரிக்கும்படியாக இருந்தது.

நன்றி விஜிவெங்கி.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

தனுஷூடன் ஒரு கற்பனை பேட்டி

--------------------------------------------------------------------------------

லியோ - வணக்கம்

தனு - ....

லியோ - வணக்கம்

துனு - நான் ரொம்ப அடக்கமானவங்க. நான் அதிகமா பேசமாட்டேன். எனக்கு பந்தாவெல்லாம் கிடையாது. நான் பேசவே மாட்டேங்க.

லியோ - சரி அதுக்கு வணக்கம் சொல்லலாமே.

தனு - நான் 14 வயசிலே வணக்கம் சொல்லனும்னு முடிவ பண்ணிட்டேங்க. எங்க அப்பா அப்பவே ஒரு நாள் நீ பெரிய வணக்கம் சொல்ற ஆளா வரப்போறாருன்னு சொல்லிட்டாரு. என் அண்ணன் தான் எனக்கு வணக்கம் சொல்ல கத்து கொடுத்தாரு. அப்பவெல்லாம் அவரோட சண்டை போடுவேன்.

லியோ - சரிங்க வணக்கம் சொல்லுங்க.

தனு - எனக்கு ரஜினி சாரை தெரியாதுங்க. ஆனா நான் வணக்கம் சொல்ற ஸ்டைலு ரஜினி சார் மாதிரி இருக்குன்னு சொல்றாங்க. இப்ப நான் அவர் பொண்ணை கல்யாணம் பண்ணிக்கிட்டதாலே அவரு மாதிரி வணக்கம் சொல்லலை. நான் எப்பவுமே ரஜினி சார் மாதிரி தான் வணக்கம் சொல்றேன்.

லியோ - சரிங்க இப்பவாவது வணக்கம் சொல்லுங்க.

தனு - சரி. வணக்கம். கேள்வி கேளுங்க.

லியோ - என்ன கேள்வி கேட்கறது. இருந்தது 30 நிமிஷம். அதுல வணக்கம் சொல்றதுக்கே இத்தனை நேரம் ஆயிடுச்சு. போய்யா.

சிம்புவிடம் கற்பனை பேட்டி

--------------------------------------------------------------------------------

லியோ - வணக்கம்.

சிம்பு - சொல்லமாட்டேன் வணக்கம். ஏன்னா நிருபருக்கும் எனக்கும் பிணக்கம்.

லியோ - ஐயோ என்னங்க நீங்க உங்க அப்பா மாதிரி ஆரம்பிச்சிட்டீங்க.

சிம்பு - உன் கண்ணு நொள்ளை. எங்க அப்பாவுக்கு நான் புள்ளை. கேளுடா கேள்விய இல்லாட்டா இடத்தை பண்ணு காலிய.

லியோ - உங்கள் அடுத்தப்படம்?

சிம்பு - லூசுப்பையா

லியோ - என்னங்க படம் பெயர் கேட்டா திட்டறீங்க.

சிம்பு - அதான்டா அடுத்த படம். புரிஞ்சுக்கடா நீ ஜடம்.

லியோ - உங்களுக்கு தனுஷூக்கும் ஆக மாட்டேங்குதாமே எதக்கு.

சிம்பு - அவன் கட்டிக்கிட்டா ஒரு பொண்ணே, அவ தான்டா என் கண்ணே

லியோ - அப்ப நயன்தாரா

சிம்பு - அது யாருடா நயன்தாரா, அவ தான் என் கால வார்ரா

லியோ - நீங்க படம் எடுக்கிற அளவுக்கு மெச்சூரிட்டி வர்லைன்னு பேசிக்கறாங்களே.

சிம்பு - எனக்கு தேவையில்லை மெச்சூரிட்டி, என் படம் பார்க்க வர்றவங்க லூஸு மெஜாரிட்டி

லியோ - இந்த வயசுல உங்கப்பா டூயட் பாடி ஆடினது சகிக்கலைன்னு சொல்றாங்களே. இதை தடுத்து தமிழ் திரை உலகத்தை காப்பத்தக் கூடாதா.

சிம்பு - அவர் தான்டா என் அப்பா, ஆடுவாருடா டான்சு டப்பா, இதெல்லாம் என்ன தப்பா, விஜயகாந்து ஆடினா பாக்குறியே நீ சுப்பா

லியோ - ஐயா ஆளை விடப்பா.

சிம்பு - போடங் ................... நீ என்ன பெரிய பிஸ்தா. நான் போய் சாப்பிடுவேன் பாஸ்தா.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

கற்பனைப் பேட்டிகள் நன்றாக உள்ளன. தொடருங்கள். :lol:

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.